கர்த்தராகிய இயேசு கிருஸ்துவின் நாமம் இரு பகுதிகளை உடையது. ஒன்று இயேசு மற்றொன்று கிருஸ்து.
இயேசு என்பவர் கர்த்தராகிய தேவன் மற்றும் நம்மை படைத்தவர் ஆகையால் அவரை தாய் என்றோ தந்தை என்றோ அழைக்கலாம் அது சரியானதே.
ஒரு வேளை தாயன்பையோ அல்லது தந்தை அன்பையோ அறியாமல் ஒருவர் அவரது மாமாவால் வளர்க்கப்பட்டும், காக்கப்பட்டும் இருந்தால் இயேசுவை மாமா என்றும் கூட அழைக்கலாம். இதெல்லாம் உணர்வு பூர்வமான விஷயம்.
கர்த்தரை குறைந்த பட்சம் மனிதனாக கூட இல்லாமல் உயிரற்ற பொருளான கேடகமாகவும், கோட்டையாகவும் கூட பக்தர்கள் பார்த்திருக்கின்றனர். இப்படி அவரை பார்ப்பதும் சரியானதே.
இயேசுவின் நாமத்தின் அடுத்த பகுதியான கிருஸ்து என்பதின் மூலம் அவர் நமக்கு மூத்த சகோதரராகவும், நண்பராகவும் இருக்கிறார். ஏனெனில் நாமும் ஒரு நாளில் கிருஸ்துவாக மாற வேண்டும் என்பதே பிதாவாகிய தேவனின் விருப்பமும், சித்தமும் ஆகும்.
அவர் எப்படி பிதாவின் ஆவியானவருக்கு தன்னை ஒப்புக் கொடுத்தாரோ, அந்த ஆவியினாலேயே காரியங்களை செய்தாரோ அது போல நாமும் ஆவியானவரோடு கூட இயேசுவின் நாமத்தை தொழுது கொண்டு, அதன் மூலம் பிதாவாகிய தேவனை தொழுது கொள்ள வேண்டும்.
இவ்வாறு இயேசுவைப் போல பிதாவாகிய தேவனின் சித்தம் செய்து, அவருக்கு சகோதரராக அதாவது கிருஸ்துவாக மாற முயற்சிப்பதே கிருஸ்துவ வாழ்க்கை.
கிருஸ்து நமது மூத்த சகோதரர் என்பதும் அவரைப் போல நாம் மாற வேண்டியதே கிருஸ்துவ வாழ்க்கையின் இலட்சியம் என்பதும் இன்றுள்ள அனேக போதகர்களால் மறைக்கப்படுகிறது. இயேசு கிருஸ்துவை இயேசுவாக காண்பிப்பதில் மட்டுமே அவர்கள் விருப்பமாய் இருக்கின்றனர்.
இவ்வாறு கிருஸ்துவை காண்பிக்காத போதகர்கள் சொல்வதை தவறு என்று சொல்லும் கூட்டமும். இயேசு கிருஸ்துவின் நாமத்தை தொழுது கொள்வதின் மூலம், பிதாவாகிய தேவனின் ஆவியை பெற்றுக் கொள்வதையும் அந்த ஆவியின் மூலம் காரியங்களை செய்வதை பற்றியும் போதிப்பதில்லை.
இவர்களுடைய நோக்கம் என்னவெனில் போதகர்கள் சரியாக சொல்லும் ஒரு பாதியையும் நிறுத்த வைத்து மக்களை தேவனிடமிருந்து பிரிக்க வேண்டும் என்பதே.
சரி கத்தாம சொல்லுறேன் தம்பி இயேசு கிறிஸ்து ரட்சிக்கப்பட்டவர்களை பிள்ளைகள் என்று சொன்னால் நாம் அவரை என்ன சொல்லி கூப்பிடலாம்?
நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ,நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார். ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; (எபிரெயர் 2:13-14)
இயேசு நித்திய பிதாவாம் அப்போ பிள்ளைங்க எப்படி அவரை கூப்பிடலாம்?
நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும் (ஏசாயா 9:6)
என்ன தம்பி ஒரு சின்ன லாஜிக் கூட தெரியாம கேக்கறீங்களே..? நம்ம அப்பாவின் நண்பர்கள் நமக்கு அப்பா மாதிரிதானே,அதுக்காக இயேசுவை தாத்தா என்றா சொல்லமுடியும்..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)