Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யௌவன ஜனத்தின் மீது அதிரடி தாக்குதல்:"சகாயம்" தேவை..!


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
யௌவன ஜனத்தின் மீது அதிரடி தாக்குதல்:"சகாயம்" தேவை..!
Permalink  
 


என்னுடைய ஜெபம் உங்களோடு  இருக்கும். குமாரன்கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.

எலிசாவைத் தேடி எதிரிகள் ஒலிமுகவாசலுக்கு வந்தபோது எதிரிகளை இராஜ சமூகத்திலேயே கொண்டு சென்று நிறுத்தி அவர்களுக்காக வாதாடி அவர்களை ராஜமரியாதையுடன் நடத்தியவர் எலிசா தீர்க்கதரிசி ஆவார்;அவர்தம் பாரம்பரியத்தில் வந்த நாமும் கூட அவ்வாறே நடந்துகொள்ளுவோம்; நம்முடைய (மேசியாவின்) எதிரிகளை இயேசு ராஜாவின் சன்னிதானத்தில் நிறுத்தி அவருடைய நடத்துதல்படி நடத்தவே பிரயாசப்படுகிறோம்;அவர் இவர்களை அழித்துப்போடாதபடிக்கும் மன்றாடுவோம்;அவர்கள் காலம் வரும் வரைக்கும் தப்பிப்பிழைத்திருக்க சிபாரிசு செய்வோம்..!

சிபாரிசு:
செய்ய நீர் மத்தியச்சரோ ? or நீர் மேசியா


math.24: "For many shall come in my name, saying, I am Christ; and shall deceive many".





__________________
yes


Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 14
Date:
RE: யௌவன ஜனத்தின் மீது அதிரடி தாக்குதல்:"சகாயம்" தேவை..!
Permalink  
 


என்னுடைய ஜெபம் உங்களோடு  இருக்கும் 

குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
யௌவன ஜனத்தின் மீது அதிரடி தாக்குதல்:"சகாயம்" தேவை..!
Permalink  
 


எலிசாவைத் தேடி எதிரிகள் ஒலிமுகவாசலுக்கு வந்தபோது எதிரிகளை இராஜ சமூகத்திலேயே கொண்டு சென்று நிறுத்தி அவர்களுக்காக வாதாடி அவர்களை ராஜமரியாதையுடன் நடத்தியவர் எலிசா தீர்க்கதரிசி ஆவார்;அவர்தம் பாரம்பரியத்தில் வந்த நாமும் கூட அவ்வாறே நடந்துகொள்ளுவோம்; நம்முடைய (மேசியாவின்) எதிரிகளை இயேசு ராஜாவின் சன்னிதானத்தில் நிறுத்தி அவருடைய நடத்துதல்படி நடத்தவே பிரயாசப்படுகிறோம்;அவர் இவர்களை அழித்துப்போடாதபடிக்கும் மன்றாடுவோம்;அவர்கள் காலம் வரும் வரைக்கும் தப்பிப்பிழைத்திருக்க சிபாரிசு செய்வோம்..!

இராஜாக்கள்.6:8 To 23
  • அக்காலத்தில் சீரியாவின் ராஜா இஸ்ரவேலுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணி, இன்ன இன்ன ஸ்தலத்திலே பாளயமிறங்குவேன் என்று தன் ஊழியக்காரரோடே ஆலோசனைபண்ணினான்.
  • ஆகிலும் தேவனுடைய மனுஷன் இஸ்ரவேலின் ராஜாவினிடத்தில் ஆள் அனுப்பி: இன்ன இடத்துக்குப் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; சீரியர் அங்கே இறங்குவார்கள் என்று சொல்லச்சொன்னான்.
  • அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா தேவனுடைய மனுஷன் தன்னை எச்சரித்து, தனக்குக் குறித்துச்சொன்ன ஸ்தலத்திற்கு மனுஷரை அனுப்பிப்பார்த்து எச்சரிக்கையாயிருந்து, இப்படி அநேகந்தரம் தன்னைக் காத்துக்கொண்டான்.
  • இந்தக் காரியத்தினிமித்தம் சீரிய ராஜாவின் இருதயம் குழம்பி, அவன் தன் ஊழியக்காரரை அழைத்து: நம்முடையவர்களில் இஸ்ரவேலின் ராஜாவுக்கு உளவாயிருக்கிறவன் யார் என்று நீங்கள் எனக்கு அறிவிக்கமாட்டீர்களா என்று கேட்டான்.
  • அப்பொழுது அவன் ஊழியக்காரரில் ஒருவன்: அப்படியில்லை; என் ஆண்டவனாகிய ராஜாவே, நீர் உம்முடைய பள்ளி அறையிலே பேசுகிற வார்த்தைகளையும் இஸ்ரவேலிலிருக்கிற தீர்க்கதரிசியாகிய எலிசா இஸ்ரவேலின் ராஜாவுக்கு அறிவிப்பான் என்றான்.
  • அப்பொழுது அவன்: நான் மனுஷரை அனுப்பி அவனைப் பிடிக்கும்படி, நீங்கள் போய் அவன் எங்கே இருக்கிறான் என்று பாருங்கள் என்றான்; அவன் தோத்தானில் இருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டது.
  • அப்பொழுது அவன் அங்கே குதிரைகளையும் இரதங்களையும் பலத்த இராணுவத்தையும் அனுப்பினான்; அவர்கள் இராக்காலத்திலே வந்து பட்டணத்தை வளைந்துகொண்டார்கள்.
  • தேவனுடைய மனுஷனின் வேலைக்காரன் அதிகாலமே எழுந்து வெளியே புறப்படுகையில், இதோ, இராணுவமும் குதிரைகளும் இரதங்களும் பட்டணத்தைச் சுற்றிக்கொண்டிருக்கக் கண்டான்; அப்பொழுது வேலைக்காரன் அவனை நோக்கி: ஐயோ, என் ஆண்டவனே, என்னசெய்வோம் என்றான்.
  • அதற்கு அவன்: பயப்படாதே; அவர்களோடிருக்கிறவர்களைப்பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் என்றான்.
  • அப்பொழுது எலிசா விண்ணப்பம்பண்ணி: கர்த்தாவே, இவன் பார்க்கும்படி இவன் கண்களைத் திறந்தருளும் என்றான்; உடனே கர்த்தர் அந்த வேலைக்காரன் கண்களைத் திறந்தார்; இதோ, எலிசாவைச்சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளாலும் இரதங்களாலும் அந்த மலை நிறைந்திருக்கிறதை அவன் கண்டான்.
  • அவர்கள் அவனிடத்தில் வருகையில், எலிசா கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணி: இந்த ஜனங்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்யும் என்றான்; எலிசாவுடைய வார்த்தையின்படியே அவர்களுக்குக் கண்மயக்கம் உண்டாகும்படி செய்தார்.
  • அப்பொழுது எலிசா அவர்களை நோக்கி: இது வழி அல்ல; இது பட்டணமும் அல்ல; என் பிறகே வாருங்கள்; நீங்கள் தேடுகிற மனுஷனிடத்தில் நான் உங்களை வழிநடத்துவேன் என்று சொல்லி, அவர்களைச் சமாரியாவுக்கு அழைத்துக் கொண்டுபோனான்.
  • அவர்கள் சமாரியாவில் வந்தபோது, எலிசா: கர்த்தாவே, இவர்கள் பார்க்கும்படிக்கு இவர்கள் கண்களைத் திறந்தருளும் என்றான்; பார்க்கும்படிக்குக் கர்த்தர் அவர்கள் கண்களைத் திறக்கும்போது, இதோ, அவர்கள் சமாரியாவின் நடுவே இருந்தார்கள்.
  • இஸ்ரவேலின் ராஜா அவர்களைக் கண்டபோது, எலிசாவைப் பார்த்து: என் தகப்பனே, நான் அவர்களை வெட்டிப்போடலாமா என்று கேட்டான்.
  • அதற்கு அவன்: நீர் வெட்டவேண்டாம்; நீர் உம்முடைய பட்டயத்தாலும், உம்முடைய வில்லினாலும் சிறையாக்கிக்கொண்டவர்களை வெட்டுகிறீரோ? இவர்கள் புசித்துக் குடித்து, தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போகும்படிக்கு, அப்பமும் தண்ணீரும் அவர்களுக்கெதிரில் வையும் என்றான்.
  • அப்பொழுது அவர்களுக்குப் பெரிய விருந்துபண்ணி, அவர்கள் புசித்துக் குடித்தபின்பு, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் ஆண்டவனிடத்துக்குப் போய்விட்டார்கள்; சீரியரின் தண்டுகள் இஸ்ரவேல் தேசத்திலே அப்புறம் வரவில்லை.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இந்த தளத்தில் பதிக்கப்படும் ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பிலேயே நம்முடைய இறைக் கொள்கை என்னவென்பது அறியப்படும்;அதுபோலவே வேற்றுமையான உபதேசத்திலிருந்து வருவோரின் கட்டுரை முழுவதையும் வாசிக்காமலே ஓரிரு வரிகளை வாசித்தவுடனே அவர் எந்த வட்டாரத்திலிருந்து வந்திருக்கிறார் என்பதை யூகிக்கும் வல்லமையையும் கிருபையையும் சர்வவல்லவர் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

அந்த வகையில் சில மணிநேரம் முன்பாக ஒரே நண்பர் மூலம் நம்முடைய தளத்தின் மீது பல்முனைத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருப்பதாகக் கருதுகிறோம்;இதனை எளிதில் சமாளிக்கும் ஆற்றல் நம்முடைய தளத்துக்கு நிச்சயமாக உண்டு; மற்றவர்களைப் போல அச்சுறுத்தவோ தூஷிக்கவோ அவர்தம் பதிவுகளை நீக்கவோ மாட்டோம்;அருவருப்பான கீழ்த்தரமான முயற்சிகளில் எதிர்தரப்பினர் இறங்காதவரைக்கும் நாம் அவர்களை கௌரவமாகவே நடந்துவோம்.

ஆனாலும் அவர் ஒரு நாகரீகத்துக்காகவேனும் தன்னை முறைப்படி அறிமுகப்படுத்திக்கொண்டு நண்பர்களை வாழ்த்தி- வாழ்த்துக்களுடன் தனது பணியை ஆரம்பித்திருந்தால் மகிழ்ந்திருப்போம்; அருமை நண்பர் சகாயம் அவர்கள் நம்மீது தாக்குதல் தொடுத்திருப்பதாக ஏன் வெளிப்படையாக தெரிவித்தேன் என்றால் அவர் பதித்திருக்கும் அத்தனை கட்டுரையும் விவாதங்கள் பகுதியிலேயே இருக்கிறது.

ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் என்பது போல இவர் ஒட்டுமொத்த தமிழ் கிறித்தவத்தின் நிலைமைக்கு ஒரு முன்னுதாரணமாக விளங்குகிறார்;நாம் நமது சபையினரை சத்தியத்தில் நடத்துவதற்கு பதிலாக அவர்களை உலகப் பிரகாரமான ஆசீர்வாதங்களுக்கு நேராக நடத்தியதன் விளைவே சத்தியத்தின் வாஞ்சையுள்ள ஆர்வமுள்ள சகோதரர் தவறான ஒரு பானத்தைப் பருகவும் மாய்ந்துபோகவும் காரணமானது;இவருக்கு பதில் சொல்லாமல் விட்டால் போதும் அல்லது இந்த பதிவுகளை நீக்கிவிட்டால் போதும், நம்முடைய யௌவன ஜனம் தளம் பரிசுத்தமாகி விடும்;ஆனால் அது பூனை தன் கண்ணை மூடிக்கொண்டு இந்த உலகம் முழுவதும் இருட்டாக இருப்பதாக (அதிகப்) பிரசங்கம் செய்தது போலவே இருக்கும்;எனவே நண்பர் சகாயம் அவர்கள் முன்வைத்திருக்கும் மாறுபாடான கருத்துக்களுக்கு உரிய பதிலைக் கொடுப்பதில் சகோதரர்கள் விரைந்து பணியாற்றுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்;நம்முடைய அன்பு நண்பர் சகாயம் அவர்களும் தன்னை முறைப்படி அறிமுகப்படுத்திக்கொள்ளவும் நட்புடன் வேண்டுகிறேன்.

தற்போதைக்கு அவர் கொடுத்துள்ள விவரங்களின்படி அவரைக் குறித்த அறிமுகம் இதுதான்,இதனைத் தொடர்ந்தே அவர் தன்னுடைய தரப்பை இங்கே பதிக்கலாம்.

cad sahayam

Full Name     abraham deva sahayam

Gender     M


Location     trichy


Birthday     Wed Apr 16 12:00:00 1980


Country Name     India


Messages Posted     25

Status     Active

Member Since     Sat Mar 12 04:42:13 2011


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard