Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரித்துவம் என்ற உபதேசம் சரியானதா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
திரித்துவம் என்ற உபதேசம் சரியானதா?
Permalink  
 


அருமையாக பதில் கொடுத்த சகோ. John இற்கு மனமார்ந்த பாராட்டுக்கள். திரித்துவத்தை எப்படி விளங்கி வைத்துள்ளார்கள் என்பதை பதிவிலியே நிரூபித்து விட்டார்கள்.

\\ஏற்கனவே திருத்துவம் வணக்கம் உலகத்தில் இருந்தது.
. எகிப்து –      - ஓசீரியஸ்,  இஸிஸ்   , நிப்திஸ்
2. பாபிலோன் - சீயூஸ்    ,   ஹீரா      ,  ரீயா
3. ரோமாபுரி – -  ஜீபிடர்    ,   தியானா , மொர்குரி
4. ஜப்பான் -     - பான்       ,   போ         ,  பூ
5. இந்தியா-    -  சிவன்     ,   பிரம்மா   , விஷ்ணு.
6. ஜெர்மனி  -   தோர்         ,  வெட்டன் ,வ்ரிட்கோ.
\\

இது ஒன்றே போதும். மேலே காட்டியவை அனைத்தும் தனித்தனி தெய்வங்கள். இவைகளிடையே போட்டியும் பொறாமையும், சண்டையிட்டுக் கொள்ளுதலும் இருந்தது. இவைகள் பற்றிய கதைகளை படிப்போருக்குத் தெரியும். ஆனால் கிறிஸ்தவத்தின் தேவன் ஒருவரே. ஆயினும் திரியேக தேவனாயிருக்கிறார்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

Bro. ebi Worte
//அடிப்படை சரியாக இருப்பின் அனைத்தையும் சரியாக விளங்கிக்கொள்ளமுடியும். //

ஆமா பிரதர் அடித்தளம் சரியாக இடப்படாத கட்டிடம் எப்படி விழுந்து சுக்குணுராகுமோ,இதுபோன்றுதான் இவர்களின் கொள்கைகளும். விளங்கிக் கொள்வதில் இவர்களுக்கு பிரச்சினை இருப்பாக தெரியவில்லை. வேதவசனங்களை புரட்ட வேண்டும் என்று எண்ணியே புரட்டுகிறார்கள்
  • கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.(மத்தேயு.7:15)
  • மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆட்டுத்தொழுவத்துக்குள் வாசல்வழியாய்ப் பிரவேசியாமல், வேறுவழியாய் ஏறுகிறவன் கள்ளனும் கொள்ளைக்காரனுமாயிருக்கிறான். (யோவான்.10:1)
இவர்களைக் குறித்துதான் வேதம் எச்சரிக்கின்றது

மூலபாஷை பற்றி பொய் கூறி ரசல் நீதிமன்றத்தில் கண்டிக்கப்பட்டார். அதுபோல்தான் இவர்களும்.

போலியாக மூலபாஷை குறித்து பேசுவார்கள்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

யூதர்கள் வசனங்கள் அனைத்தையும் அறிந்து ஆராய்ந்து கரைத்து குடித்திருந்தார்கள். ஆயினும் அதன் விளைவாகவே உண்மையான மேசியா தங்கள் முன் இருந்தும் அவரை ஏற்றுக்கொள்ளாமல் போனார்கள். ஆயினும் மேசியாவோடு பழகி அவரை அறிந்து கொண்டவர்கள் அவரை யார் என்று உணர்ந்து தெரிந்துகொண்டார்கள். ஏனோ அது தான் எனக்கு நியாபகத்திற்கு வருகிறது. கிறிஸ்துவைப் பற்றின அடிப்படையே தவறாக உள்ளவர்களிடம் என்ன(கேள்விக்கு என்ன பதில்) சொன்னாலும் எடுபடாது. அடிப்படை சரியாக இருப்பின் அனைத்தையும் சரியாக விளங்கிக்கொள்ளமுடியும்.

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//திரித்துவம் தப்புனா கிறித்துவமும் தப்பு தானே அண்ணா

எந்த ஊருயா உமக்கு இதஎல்லாம் உட்காந்து யோசிபிங்களோ

உமக்கு நரகம் தான் நிச்சயமா கிடைக்கும் , நாம நரகத்துல மீட் பண்ணலாம்
//

ரொம்ப சரியாய் சொன்னிங்க தம்பி சபாஷ்!!

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

///
  • அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கினார்.(பிலி 2:6-11)
… கீழ் படிந்தவராகி தம்மைத்தாமே தாழ்த்தினார்.

இயேசுவானவார், சாத்தானைப்போல் கொள்ளையாடி தேவனுக்கு சமமாய் இருக்க எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, மரண பரியந்தம் கீழ்படிந்தபடியால் தேவனே ஓர் விஷேச மகிமைக்கு உயர்த்தினார்.
//


இங்கே லூசிபர் எதற்கு வருகிறான்? அவன் தேவனுக்கு கீழாக இருந்து பெருமையால் மேலாக வேண்டும் என்று நினைத்தான். இயேசு சமமாக இருந்து (சமமாக இருப்பதை என்று வசனம் சொல்லுகிறது என்றால் அவர் சமமாய் இருந்தார் என்று அர்த்தம்) பாவியாகிய நம்மை மீட்க்க அடிமையின் ரூபம் எடுத்தார். திரும்ப இன்னொரு முறை இந்த லூசிபர் புராணம் பாடாதீர்கள்.

//கி.பி. 325-க்கு பிறகு (Nicea counsil) நிசியா கவுன்சிலில் முடிவெடுக்கப்பட்ட மூன்று தெய்வ வணக்கம் (or) திரியேக தேவத்துவம், திருத்துவம் என்ற வணக்கம் துவங்கப்பட்டது//

இது பச்சை பொய்! காவல் கோபுரம் மற்றும் (மேசியாவின்) எதிரிகளின் வழக்கமான உளறல்!! இயேசுவினுடைய சீஷர்கள் திரித்துவத்தை நம்பினவர்கள் தான். யோவான் 1:1- ல் அழகாக தேவன் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஆள்தத்துவதில் இருக்கிறார் என்பதை எழுதியிருக்கிறார். முதலாம் மற்றும் இரண்டாம் நூற்றாண்டு சீஷர்கள் திரித்துவத்தை பற்றி எழுதியிருக்கிறார்கள்.

சில சாம்பிள்
:

Irenaeus (115 AD-190AD).   ரோமர் 9:5 ஐ இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவதை நிரூபிக்க உபயோகப்படுத்தினார்.

Polycarp (70-155/160).  Bishop of Smyrna.  Disciple of John the Apostle.

"O Lord God almighty... I bless you and glorify you through the eternal and heavenly high priest Jesus Christ, your beloved Son, through whom be glory to you, with Him and the Holy Spirit, both now and forever" (n. 14, ed. Funk; PG 5.1040).

Justin Martyr (100?-165?).  He was a Christian apologist and martyr.

"For, in the name of God, the Father and Lord of the universe, and of our Savior Jesus Christ, and of the Holy Spirit, they then receive the washing with water" (First Apol., LXI).

Irenaeus (115-190).  As a boy he listened to Polycarp, the disciple of John.  He became Bishop of Lyons.

"The Church, though dispersed throughout the whole world, even to the ends of the earth, has received from the apostles and their disciples this faith: ...one God, the Father Almighty, Maker of heaven, and earth, and the sea, and all things that are in them; and in one Christ Jesus, the Son of God, who became incarnate for our salvation; and in the Holy Spirit, who proclaimed through the prophets the dispensations of God, and the advents, and the birth from a virgin, and the passion, and the resurrection from the dead, and the ascension into heaven in the flesh of the beloved Christ Jesus, our Lord, and His manifestation from heaven in the glory of the Father ‘to gather all things in one,' and to raise up anew all flesh of the whole human race, in order that to Christ Jesus, our Lord, and God, and Savior, and King, according to the will of the invisible Father, ‘every knee should bow, of things in heaven, and things in earth, and things under the earth, and that every tongue should confess; to him, and that He should execute just judgment towards all...'" (Against Heresies X.l)

//ஏற்கனவே திருத்துவம் வணக்கம் உலகத்தில் இருந்தது.//

இது அடுத்த பொய்!"Triune" மற்றும் "Triad" கு உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். "Triad" என்பது முன்று தேவன்களை குறிக்கும். அதாவது "Polytheism". இன்னும் சொல்லப்போனால் , இயேசுவை :ஒரு" தேவன் என்று சொல்லுவதின் மூலம் நீங்கள் தான் "paganism" மை கிருஸ்தவத்தில் புகுத்துகிறீர்கள். இந்து புராணங்களில் உள்ள "Creation Theory" யின் படி, விஷ்ணு (the Real ultimate God) வின் தொப்புள் கொடியில் இருந்து மலர்ந்த தாமரைப்பூவில் பிரம்மா உருவாக்கப்பட்டு, நிற்குண பிரமனில் இருந்து படைக்கப்பட்டது உலகம் என்று போகிறது. இந்த கதையை சாத்தானிடம் இருந்து பெற்ற புரட்டர்கள் இதை கிருஸ்தவத்திலும் நுழைத்து இயேசுவானவர் உருவாக்கப்பட்டவர் (பிரம்மா போல) என்று சொல்லி திரிகிறார்கள்.


மற்ற உங்களுடைய அபத்தங்களுக்கு நிறைய முறை பதில் சொல்லியாயிற்று. அவற்றிற்கு பதில் கொடுத்தபிறகு தொடர்ந்து பேசலாம்.


http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=38107451&p=3

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=41581310&p=3

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=41313246&p=3




__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

திரித்துவம் தப்புனா கிறித்துவமும் தப்பு தானே அண்ணா

எந்த ஊருயா உமக்கு இதஎல்லாம் உட்காந்து யோசிபிங்களோ

உமக்கு நரகம் தான் நிச்சயமா கிடைக்கும் , நாம நரகத்துல மீட் பண்ணலாம்

__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 72
Date:
Permalink  
 

1. “திரியேக தேவன்” என்ற உபதேசம் சத்திய வேதாகமத்திற்கு நேர் விரோதமானது.2. “ திரியேக தேவன்” என்னும் வார்த்தையே bible-ல் கிடையாது.1இராஜா.8:23;  இஸ்ரயேலின் தேவனாகிய யாவே கடவுளே, மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை. சங் 86:8;  ஆண்டவரே தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை. சங் 113:5;  உன்னதங்களில் வாசம் பண்ணுகிற நம்முடைய தேவனாகிய யாவேகடவுளுக்குச் சமமானவர் யார்?யாத்  15:11;  யாவே கடவுளே , தேவர்களில் உமக்கு ஒப்பானவர் யார்?எசா 46:9;  நானே தேவன் . வேறொருவரும் இல்லை. நானே தேவன் எனக்கு சமானமில்லை. 2சாமு.7:22;  தேவர்க்கு நிகரானவர் இல்லை.ஏசா 40:25 ;  இப்படியிருக்க , என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்?எனக்கு யாரை நிகராக்குவீர்கள் ? என்று பரிசுத்தர் சொல்கிறார்.ஏசா 46:5;  யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?


சத்திய வேதம் இவ்வாறு சொல்லியிருக்க சரிசமானவர்கள் சமநித்தியர் என்று கூறுவது பொய் உபதேசம்.

லூசிபர்” என்னும் தேவதூதனைப்பற்றி ….
ஏசா 14:14;  நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்.உன்னதமானவர்க்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
லூசிபர் என்னும் தேவதூதன் உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்று பெருமைப்பட்டதால் அவனே தேவனுக்கு விரோதியான சாத்தானும் பிசாசுமானவன்.


இயேசு கிறிஸ்துவைப்பற்றி…..
பிலி 2:6-11;  அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும் தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத் தாமே வெறுமையாக்கினார். 
… கீழ் படிந்தவராகி இதம்மைத்தாமேதாழ்த்தினார்.
• இயேசுவானவார், சாத்தானைப்போல் கொள்ளையாடி தேவனுக்கு சமமாய் இருக்க எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, மரண பரியந்தம் கீழ்படிந்தபடியால் தேவனே ஓர் விஷேச மகிமைக்கு உயர்த்தினார்.

கிறிஸ்துவத்தில் திருத்துவம் தொடங்கப்பட்டது எப்போது?

கி.பி. 325-க்கு பிறகு (Nicea counsil) நிசியா கவுன்சிலில் 
முடிவெடுக்கப்பட்ட மூன்று தெய்வ வணக்கம் (or) திரியேக தேவத்துவம், திருத்துவம் என்ற வணக்கம் துவங்கப்பட்டது

. 
ஏற்கனவே திருத்துவம் வணக்கம் உலகத்தில் இருந்தது.

1. எகிப்து –      - ஓசீரியஸ்,  இஸிஸ்   , நிப்திஸ்
2. பாபிலோன் - சீயூஸ்    ,   ஹீரா      ,  ரீயா
3. ரோமாபுரி – -  ஜீபிடர்    ,   தியானா , மொர்குரி
4. ஜப்பான் -     - பான்       ,   போ         ,  பூ
5. இந்தியா-    -  சிவன்     ,   பிரம்மா   , விஷ்ணு.
6. ஜெர்மனி  -   தோர்         ,  வெட்டன் ,வ்ரிட்கோ.

 “தேவன் ஒருவரே”

1தீமோ.1:17 ; நித்தியமும் அழிவில்லாமையும் (சாகாமை) அதரிசனமுமுள்ள ராஜனுமாய் (invisible king) “ஒருவரே” ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு கனமும் , மகிமையும் சதா காலங்களிலும் உண்டாயிருப்பதாக . ஆமென்.

சங் 83:17;  யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் “ஒருவரே” பூமியனைத்தின் மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி.

1தீமோ. 2:5 ;  “தேவன் ஒருவரே” தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.

யோவா 17:3;  “ ஒன்றான”மெய் தேவனாகிய (only true God) உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்”

1தீமோ 6:16 ;  “ஒருவராய் ” சாகாமையுள்ளவரும் , சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும்….

உபா 32:39;40; நான் நானே அவர் ,”என்னோடே வேறே  தேவன் இல்லை.”( சாகாதவர்)

ஏசா 45:5-9;   நான்,யேகோவா ; வேறொருவர் இல்லை. என்னைத்தவிர தேவன் இல்லை. 
சங் 136:4;  “ஒருவராய்” பெரிய அதிசயங்களைச் செய்கிவரைத் துதியுங்கள்.

உபா 6:4;  இஸ்ரவேலே கேள்.நம்முடைய தேவனாகிய கர்த்தர், ஒருவரே கர்த்தர்

மல் 2:10  நம் எல்லோருக்கும் ஒரே பிதா இல்லையோ? ஓரே தேவன் நம்மை சிருஷ்டித்ததில்லையோ?

ரோம. 3:29-30;  தேவன் யூதருக்கு மட்டுமா தேவன்  ? புறஜாதிகளுக்கும் தேவனல்லவா? 
  ஆம். புறஜாதிகளுக்கும் அவர் தேவன் தான்.….  நீதிமானாக்கிற தேவன் ஒருவரே.

ஆக உலக மக்கள் அனைவருக்கும் யூத கடவுளாகிய யேகோவாவே மெய்யான கடவுள்.  அவர் ஒருவரே

யாரை தொழுது கொள்ள வேண்டும்?

யோவா14:1;தேவனிடத்தில் விசுவசமாயிருங்கள்.என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்.

1தீமோ.2:5; தேவன் ஒருவரே ,தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே.”

எனவே ஒரே தேவனாகிய யாவே கடவுளை ஒரே மத்தியஸ்தரான இயேசு கிறிஸ்து வழியாகத் தொழுது கொள்ள வேண்டும்.

கொலோ 1:14-16; குமாரன் வழியாக சகலத்தையும் சிருஷ்டித்த தேவன்.

1பேது 1:19-20 ; குமாரன் வழியாக இரட்சிப்பை உண்டாக்கிய தேவன்.

எபே 1:4-12;  குமாரன் வழியாகவே தன்னை தொழுது கொள்ள வேண்டும் என சித்தம் வைத்துள்ளார்.

யோவா 14:6 ; நானே விழி யோவா.10:9;  நானே  வாசல். 

                                                              இதை இயேசு

யோவா  16:23; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்கு தருவார்.

                                                               • பவுல் இதை
 ரோமர்.16:27 ; தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாயிருக்கிற தேவனுக்கு இயேசு     கிறிஸ்துவின் மூலமாய் என்றென்றைக்கும் மகிமை உண்டாவதாக. ஆமென்.

கொலோ 3:17; வார்த்தையினாலாவது கிரியை யினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியங்கள்.

• இயேசு கூட ஒரே தேவனை மட்டுமே தொழுது கொள்ள சொல்கிறார்.
 

மத் 7:6; உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. 7:8; 7:9; 

 மத் 4:10 உன் தேவனாகிய யாவே கடவுளை பணிந்து கொண்டு ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக. 

 யோவா 4:21-23 “ பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வரும் ”

ஏசா 42:8 என் மகிமையை வேறொருவனுக்கும் என் துதியை விக்கிரகங்களுக்கும் கொடேன்.

சங் 29:1 யாவே கடவுளுக்கு மகிமையும் வல்லமையையும் செலுத்துங்கள். 
யேகோவாவுக்கே அதை செலுத்துங்கள். நாளா 16:28.

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்றார். யோவா 10:30 ; இதன் அர்த்தம் என்ன?

யோவா 10:26-30; சரீரப்பிரகாரம் பிதா, குமாரன் இவரும் தனிப்பட்ட ஆட்களாயிருந்தாலும், தேவனுடைய பிள்ளைகளாகிய விசுவாசிகள் அனைவரையும் பாதுகாத்து அவர்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்கும் கிரிகையில் இயேசு பிதாவோடு ஐக்கியப்பட்டு ஒன்றாயிருக்கிறார்.

யோவா 17:11; பரிசுத்த பிதாவே , நீர் எனக்கு தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு…

யோவா 17:21-23; அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே நீர்  என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறது   போல  அவர்களெல்லாம்      நம்மில்    ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.  
 நாம் ஒன்றாயிருக்கிறது போல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி…..

“ ஒருமைப்பாட்டில்” அவர்கள் தேறினவர்களாய் இருக்கும்படிக்கும்….
 நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும் படி வேண்டிக் கொள்கிறேன். 
 பிதாவும், குமாரனும் ஒருமைப்பாட்டில் ஒன்றாயிருப்பது போல சபையார் அனைவரும் பிதாவினுடைய , குமாரனுடைய (நம்மில்) ஒருமைப்பாட்டில் ஒன்றாயிருக்க இயேசு ஜெபித்தார்.

ANS : யோவா 17:21;
 ஒருமைப்பாட்டில் நீர் என்னிலேயும் நாம் உம்மிலேயும்  இருக்கிறது போல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக் கொள்கிறேன்.

நானும் , பிதாவும் என்று கூறும் போது 2 பேரைக் குறிக்கிறது. 
ஒருமைப்பாடு: ஒரே சிந்தை , ஓரே எண்ணம்.

1கொரி. 3:5-8; நடுகிறவனும் நீர்பாச்சுகிறவனும் ஒன்றாயிருக்கிறார்கள். 
    அப்படியானால் பவுலும் அப்பெல்லோவும் ஒரே ஆளா?

மத் 19:5-6;  கணவனும் மனைவியும் ஒரே மாமிசமாயிருக்கிறார்கள். ஒரே ஆளா? எபே 5:31;
 
என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்? யோவா 14:9;

பிலிப்பு என்னும் சீஷன் இயேசுவிடம் “பிதாவை எங்களுக்குக் காண்பியும்” என்று கேட்டான்.

யோவா 1:18; பிதாவை ஒருவனும் ஒருகாலும் கண்டதில்லை.

யாத் 33:20;  ஒரு மனுஷனும்  என்னைக் கண்டு உயிரோடுயிருக்க கூடாது என்றார். 
(யோவா.5:37; கொலோ.1:18; 1தீமோ.6:16-17)
 ஆகிய வசனங்கள் பிதா அதரிசனமானவர் என்று கூறக்கூடியதாக உள்ளது.

யோவா 14:7; என்னை அறிந்தீர்களானால் என் பிதாவையும் அறிந்திருப்பீர்கள். இது முதல் நீங்கள் அவரை அறிந்தும் அவரை கண்டும் இருக்கிறீர்கள். யோவா 8:19;

எபே 1:17-19;  இயேசு கிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர். தம்மை நீங்கள், அறிந்து கொள்வதற்காக…
 தாம் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி …
 தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும் ,நீங்கள்அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்க வேண்டுமென்று வேண்டிக்கொள்கிறேன்.

இயேசு பிதாவுக்கு “நித்திய பிதா” (Everlating father)என்னும் 
பெயர் ஏன் கொடுக்கப்பட்டது?  ஏசா 9:6;
 

ஜீவன் கொடுக்கிறவர் - Father

1. பரம பிதாவின் குமாரன் ஆதாம்.
2. தற்காலத்தில் உள்ள சகல மனித ஜாதியாருக்கும் பிதா.
3. பிதாவாகிய ஆதாம், பாவம் செய்து , தனக்கும் தன் சந்ததியார் அனைவருக்கும் மரணத்தை வரப்பண்ணினார்.

ரோம 5:12;  இப்படியாக, ஒரே மனுஷனாலே பாவமும் பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்தது போலவும்….)

பரலோகத்திலிருந்து வந்த தேவகுமாரன் இயேசு. கடைசி ஆதாம்.

(1கொரி. 15:45; முந்தின மனுஷனாகிய ஆதாம் ஜீவாத்துமாவானான்.பிந்தின ஆதாம் உயிர்பிக்கிற ஆவியானார்.)
பிந்தின ஆதாமாகிய இயேசு ,முந்தின ஆதாம் மற்றும் அவன் சந்ததியார் அனைவருக்காக தன் ஜீவனைக் கொடுத்து அவர்களை உயிரோடே எழுப்பி,அவர்களுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கும் உயிர்பிக்கிற ஆவியானார்.

இக்காரணத்தினாலே நித்திய பிதா என்ற நாமம் இயேசுவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. 
ரூதரஆம், மாபெபட், ரோமன் கத்தோலிக்கியரின் டூவே (D way)என்னும் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் 
Father of Futurity  – “எதிர் கால பிதா”
Father of the World to come  “ இனி வரப்போகும் யுகத்தின் பிதா” 
என்று சரியாய் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

“எதிர்காலபிதா
இயேசுவின் இரண்டாம் வருகையையொட்டி இனிவரப்போகும் புதிய யுகத்தில் இயேசு மரித்தோரை எழுப்பி ஜீவனை கொடுக்கப்போகும் திட்டத்தின் நிமித்தம் இப்படி       மொழிபெயர்த்துள்ளனர்.

 “நித்திய பிதா 
வரப்போகும் யுகத்தில் இயேசுவின் மூலம் ஜீவனை பெற்றுக்கொண்ட ஆதாமின் சந்ததியார் அனைவரும் நித்திய காலத்திற்கு (நித்திய ஜீவனை)பெற்றுக் கொள்வதால் நித்திய காலத்திற்கு இயேசு பிதாவாக இருப்பதால் நித்திய பிதா என்று பெயர்கொடுக்கப்பட்டுள்ளது.

சங் 45:16 ; உமது பிதாக்களுக்கு பதிலாக உமது குமாரர்கள் இருப்பார்கள்.

1. பரம பிதாவின் குமாரன் இரண்டாம் ஆதாமாகிய இயேசு. 
2. இனிவரும் யுகத்தில் உள்ள சகல ஜாதியாருக்கும் பிதா.
3. பிந்தின ஆதாமான இயேசுவின் வழியாக அனைவரும் நித்திய ஜீவனை பெற்றுக்கொண்டு நித்திய காலத்திற்கும் உயிரோடே இருப்பார்கள்.

ANS:

           ஆதாம்                                                                     இயேசு

சகலஜாதியாரும்மரித்ததால்             சகலஜாதியாரும் ஜீவனைபெற்றுக்கொண்டு நித்திய

 நித்திய பிதாவாகயிராமல்                 காலத்திற்கும் உயிரோடே இருப்பதால்  நித்திய

தற்காலத்தில் மட்டும் பிதா               காலத்திற்கும் பிதாவாகிறார். SO.நித்திய பிதா

 எபே. 4:30;   “அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப்பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்”

• பரிசுத்த ஆவி  - வல்லமையைக் குறிக்கும்
சில இடங்களில் பரிசுத்த ஆவி - தேவனுடைய சிந்தையை குறிக்கும்.
எப்படியெனில்,

• தங்களுடைய சுய சிந்தனையை விட்டு விட்டு, தேவனோடு உடன்படிக்கை பண்ணினவர்கள், பரிசுத்த ஆவியை பெறுகிறார்கள்.

• இப்படி மாமிச பிரகாரமான சிந்தனை நீக்கப்பட்டு, தெய்வீக சிந்தனை கொடுக்கப்படுகிறது.

இப்படி தெய்வீக சிந்தனையைப் பெற்றவர்கள் மாமிச சிந்தனைக்கு அடிமையாகி, ஆவிக்கேற்ற கிரிகையை அவர்கள் செய்யும்போது தெய்வீக சிந்தனையை (பரிசுத்த ஆவியை) துக்கப்படுத்துகிறார்கள்.

பிதாவாகிய தேவனே, மாம்சத்தில் அவதரித்தார் என்று காட்ட ஓர் தவறான மொழிபெயர்ப்பு உண்டு. அதாவது”தேவனே மாம்சத்திலே வெளிப்பட்டார்.” 1தீமோ 3:16.இதை எல்லாத்திருத்திய வேதாகமங்களில் “அவர்” (அதாவது கிறிஸ்து) “மாம்சத்தில்வெளிப்படுத்தப்பட்டார் ” என்று சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. see any english bible

1யோவான் 5:7யில் (பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே; இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள், பரலோகத்திலே) என்று பிராக்கட்டுக்களுக்குள்  காணப்படும் இந்த வசனம், திரியேகத் தத்துவத்தை ஸ்தாபிக்க ஏதோ ஒரு குருவானவரால்  வேதாகமத்தில் கி.பி.500க்கு பிறகு தவறாகசேர்க்கப்பட்டுவிட்டது.

ஆனால் இந்த வசனம் கி.பி.மூன்றாம் நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வெகு பூர்வ கிரேக்க வேதாகமங்களில் இல்லாததால் இப்போது அச்சிடப்படும் எல்லா திருத்திய மொழிபெயர்ப்புகளிலும் இந்த வசனம் நீக்கப்பட்டிருக்கிறது. 

தேவனுடைய வேதாகமத்தில் “ஒன்றும் கூட்டவும், ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்” என்ற கட்டளைக்கு நேர் விரோதமாய்ச் சேர்க்கப்பட்ட வசனம். நியாயப்படி இப்போது அது நீக்கப்பட்டிருக்கிறது உபா 4:2, வெளி 22:18-19.

ஒன்றான மெய்த்தேவனாகிய யாவே கடவுள் , அவர் அனுப்பிய அவருடைய நேச குமாரன் இயேசு கிறிஸ்து நமது இரட்சகர்; பரிசுத்த ஆவி, தேவனிடமிருந்து வரும் உன்னத பலன் என்று வேதாகமம் திட்டவட்டமாய் கற்பிக்கிறது.

 



__________________
yes
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard