Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: லெந்து கால தியானக் கட்டுரைகள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: லெந்து கால தியானக் கட்டுரைகள்
Permalink  
 


  • உத்தமமான சேவகன்

24 மார்ச் 2011 (வியாழன்) வே.வ: லூக்கா 12:35-48

இந்த அழகான வியாழனில், வேதாகத்தில் விதைத்தல். என்பதன் பொருள் என்ன என்பதை ஆராய்வோம். இன்றைய வாசிப்பு தொடங்கி, கர்த்தர் நம்மிடத்தில் அவருடைய ராஜ்யத்திற்காக உத்தமமுள்ள சேவகத்தை எதிர்ப்பார்க்கிறார். இதன் பொருள், நமது எஜமானர் நம்பிக்கையோடு ஒப்புவித்த பொறுப்பை உண்மையோடு நிறைவேற்றுவது என்று அறிவோம். மேலேயுள்ள வேத வசனத்தில் குறிக்கப்பட்டுள்ளது போல், நமது எஜமானர் ஜாக்கிரதையோடும், பொறுப்போடும், உண்மையோடும் நமக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார். தமது இரண்டாம் வருகையைப் பற்றி உபதேசிக்கும் போதே அவர் இந்தச் சேவகத்தைப் பற்றிக் குறிப்பிடுகிறார். பேதுருவைப் போல் குழம்பிப் போகாமல், கர்த்தர் நம்மிடம் எதிர்ப்பார்க்கிற பொறுப்புணர்ச்சியைப் பற்றி தெளிவடைய வேண்டும்.

இந்த நவீன காலத்தில், சூழ்நிலைக்கு ஏற்றவாறு நாம் விதவிதமான தோற்றத்திற்கு நம்மை மாற்றியமைத்துக் கொள்கிறோம். தேவைப்படும் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும்தான் கிறிஸ்தவ சாயலைத் தரித்துக் கொள்கிறோம்.

பிறர் பார்க்கும் போது விசுவாசத்தின் வீரராக காட்சியளிக்கையில், யாரும் அறியா தருணத்தில் பாவகரமான காரியத்தில் ஈடுபடுகிறோம். விசுவாசத்தில் நாம் இரட்டை வேடம் தரிக்கிறோம்! ஓர் உத்தம்மான சேவகன், தன் வாழ்வின் ஒட்டுமொத்த்த்திலும் பரலோக தந்தை பேரானந்த்த்தோடு ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில், தன் எல்லா வாழ்க்கை அம்சத்திலும் நம்பகத் தன்மையை வெளிப்படுத்துவான்.

கர்த்தர் நமக்குக் கிருபையின் சுவிசேஷத்தை இலவசமாக ஈந்துள்ளார். ஒரு குடும்பத்தையும், சபையையும், பணியாளர்களையும், செல்வத்தையும், சுற்றுச் சூழலையும் நமது பொறுப்பில் நம்பிக் கொடுத்திருக்கிறார்! கர்த்தரின் ஈகையைக் காத்துக் கொள்வதில் நாம் எந்தளவுக்கு உண்மையுள்ளவர்களாய் இருக்கிறோம்?

தியானிக்கும் தருணம்

“பிரசித்தியோடு திகழ்வதை விட விசுவாசமாய் இருப்பதே மேலானது” (தியடோர் ரூஸ்வெல்ட்)


ஜெபங்கள்

பரம பிதாவே, நீர் என்னை சகல விதமான ஆவிக்குரிய, வாழ்வின் நன்மையான
காரியங்களால் ஆசீர்வதித்துள்ளீர். உமது அழைப்புக்கு உத்தமனாய் திகழ வழிநடத்தும். உமது கிருபையை துஷ்பிரயோகம் செய்திருந்தாலோ, உமது ஈகையைப் பொறுப்பின்றி பயன்படுத்தியிருந்தாலோ என்னை மன்னியும். உத்தம்மான சேவகனாகத் திகழ உமது பரிசுத்த ஆவியினால் என்னைப் பலப் படுத்தும். இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறேன். ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஆதாயப் படுத்துவோம்;ஆராதிக்க வேண்டாம்..!


23 மார்ச் 2011 (புதன்) வே.வ: லூக்கா 12:13-21

உலக ஆஸ்தியில் நாம் பாதுகாப்புக்காக சார்ந்திருப்பதை இயேசு எச்சரிக்கிறார். உன்னுடைய பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உன் இருதயமும் இருக்கும். என்று கூறுகிறார் (லூக்கா 12:21) .

கின்னஸ் என்ற ஓர் எழுத்தாளர், “ஆதாயப்படுத்திக் கொள்வதற்குப் பாத்திரராய் இருக்கிறோம், ஆராதிப்பதற்கு அல்ல!” என்று எழுதியிருக்கிறார்.

இந்த முழு வேத வசனமும் மனித பேராசையை விமர்சிக்கிறது.

ஐஸ்வரியம் நிறைந்த விவசாயி தேவனை அல்லாமல் தானாகவே பாதுகாப்பைத் தேடிக் கொள்ள முயல்கிறான். அதனால்தான் ஆண்டவர் அவனை மூடனே என்கிறார்! நாம் பூமியிலே சேகரித்து வைக்கும் ஆஸ்தியை மரித்த பின்பு கூடவே எடுத்துச் செல்ல முடியுமா? நாம் நியமித்த வாரிசுகள் தாம் அதனை அனுபவிக்கிறார்கள் என்பதை உறுதி செய்ய முடியுமா? அப்படியே அவர்களுக்குக் கிடைத்தாலும் அவர்கள் அந்த ஆஸ்தியை ஞானமாகப் பயன்படுதுவார்கள் என்று உறுதி செய்ய முடியுமா? எல்லா கேள்விகளுக்குமே நேர் மாறான பதில்கள்தாம் கிடைக்கும். “அப்போது நீ சேகரித்தவை யாருடையதாகும்? (12:20B) என்று இயேசு கேட்கிறார்.

இந்த விவசாயி, தன் ஜீவனுக்கான திட்டத்தில் ஆண்டவரைப் புரக்கணிப்பது மட்டுமல்லாமல், பிறருக்கு பாதகமான விளைவுகள் ஏற்படும் வகையிலும் செயல்படுகிறார். அவனுடைய தீர்மானத்தால், வலிமை குறைந்த விவசாயிகள் தோல்வியை எதிர்கொண்டு பட்டினியால் வாடக் கூடும்.

நமது உலக ஆஸ்தி பிறருடைய தேவைகளை நசுக்கிப் போடுவதோடு, தேவனுக்கு அப்பாற்பட்ட பாதுகாப்பை நாட முற்படும்போது – எச்சரிக்கையாய் இருங்கள்! கிறிஸ்தவர்களாகிய நாம், நமது ஜீவனையும் ஆஸ்தியையும் அவருடைய ராஜ்ய மேன்மைக்காகவே பயன்படுத்த வேண்டும். (காண்க: 12.21) நமது நிதரிசன வாழ்வுக்கான தேவைகளை ஆராய்தறிந்து எதிர்காலத்திற்குரிய பரலோக தகுதிகளை ஆதாயப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நம்மை ஆண்டவரிடத்தில் ஜீவனுள்ள காணிக்கையாகப் படைக்கும்போது, தேவனுடைய பார்வைக்கு நாம் செல்வந்தர்களாகத் திகழ்கிறோம்.

தியானிக்கும் தருணம்

பரலோக ராஜ்யத்தின் மகிமைக்காக உன் ஜீவியத்தின் முதன்மையும் முக்கியமுமான காரியத்தில் கவனம் செலுத்துகிறாயா?


ஜெபங்கள்

எங்கள் பிதாவாகிய கர்த்தாவே, உம்முடைய ராஜ்யத்திற்காக வாழவும் பிறர் நலனில் அக்கறை செலுத்தவும் என் உள்ளத்தைப் பக்குவப்படுத்தும். என் ஜீவியத்தை சுதந்திரப்படுத்திக் கொள்ளும் அதே வேளையில், உம்முடைய ஈவை பரலோக ராஜ்யத்திற்காக ஆதாயப்படுத்திக் கொள்ளவும் உதவியருளும். ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஓர் ஏழைக் கைம்பெண்ணின் காணிக்கை

22 மார்ச் 2011 (செவ்வாய்) வே.வ: மாற்கு 12:41-44

மாற்கு 12.41-44-ல் இயேசு ஒரு கைம்பெண்ணை தியாமான காணிக்கையாளர்களுக்கு ஒப்படுகிறார். மற்றெல்லாரையும் விட இவளே அதிகமான காணிக்கை வழங்கியதாக் கூறப்படுகிறது (மாற்கு 12:43) அவள் வழங்கிய இரண்டு செப்புக் காசு செல்வந்தர்கள் வழங்கியதற்கு முன்பாக அற்பமானவைதான். ஆனால், அவளுடைய நிலைமையில் அது மிகப் பெரிய மதிப்பைக் கொண்டிருக்கிறது. தனக்கு இருந்த்தில் மிஞ்சியது அந்த இரண்டு காசுகள் மட்டும்தான் – தனக்கு இருந்தவை எல்லாவற்றையும் கொடுத்து விட்டாள்! (மாற்கு 12:44). ஓர் ஏழைக் கைம்பெண்ணான அவள் வேலையில்லாமலும் சுயேச்சையான வருமானம் இல்லாமலும் இருந்திருப்பாள். எனவே, அந்த காசுகளுக்கு ஈடான வருமானத்தை மீட்டுக் கொள்வதற்கு வேறு வழியே இல்லை. தனக்கு இருந்த எல்லாவற்றையும் கொடுத்த பிறகு, தனது அடுத்த வேளை ஆகார தேவைக்கு எங்கே போவாள்?


தேவாலயத்திற்கு வந்து போகிறவர்கள், தங்கள் செல்வத்தைப் பிறருக்கு காட்டும் தோரணையில் காணிக்கை செலுத்தியிருப்பார்கள். ஆனால், அந்த கைம்பெண்ணோ ஆராவாரம் இல்லாமல், தன் காணிக்கையைச் செலுத்தினாள். இந்தத் தெள்ளந் தெளிவான வேறுபாடு கர்த்தருக்குக் காணிக்கை செலுத்துவதில் செல்வந்தர்களின் மனநிலையையும் கைம்பெண்ணின் மனநிலையையும் வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.


இந்த வேத வசனம், முழு இருதயத்தோடும், சுயநலன் கருதாமலும், வழங்கப்படும் காணிக்கையின் மதிப்பை, காசுகளுக்கு உலகம் கொடுக்கும் மதிப்பை விடப் பெரிதாக இயேசு மதிக்கிறார். அவளுடைய காணிக்கை தேவன் தன் தேவைகளைப் பார்த்துக் கொள்வார் என்ற விசுவாசத்தோடு தன்னையே பூரணமாகத் தேவனிடத்தில் கொடுத்து விட்டாள் என்பதைக் காட்டுகிறது. அந்த இரண்டு செப்புக் காசுகளும் அவளுடைய சீடத்துவத்தையும் ஆவிக்குரிய மன நிலையையும் வெளியரங்கப்படுத்தி விட்டது.


நமது காணிக்கை நமது உள்ள யோசனைகளை வெளிப்படுத்துகிறது. நமது உள்ளம் எதற்கு அதிக மதிப்பைத் தருகிறது என்பதைப் புரிய உதவுகிறது. எனவே, அடுத்த முறை நமது பணத்தைச் செலவு செய்யும்போது, சீர்தூக்கிப் பார்ப்போம். காணிக்கை செலுத்தும் வாஞ்சை உலக கவலைகளில் இருந்து பிரித்து, நித்திய ஆசீர்வாதத்தைத் தருவதோடு, அழியாத இலட்சியமான பரலோக சிந்தனைக்கு உயர்த்துகிறது.


தியானிக்கும் தருணம்


நீ எப்போது தேவ காரியத்திற்கு அல்லது தேவைப்படும் ஒருவருக்கு அளவில்லாமல் கொடுத்தாய்? பிறர் அறியாமலும் உணராமலும் நாம் காணிக்கை செலுத்துவோமா?


ஜெபங்கள்


பரலோக பிதாவே, நீர் வெகுமதியாக தந்தவைகளுக்காக ஸ்தோத்தரிக்கிறோம் – ஜீவனையும், நேரத்தையும், தாலந்தையும், ஆஸ்திகளையும் தந்தீர். எங்களுக்கு உண்டான எல்லாம் உம்மிடத்தில் இருந்து வந்தவை. உம்முடைய ஈவுகளை ஞானத்தோடு வழங்கவும் தயாளத்தோடு பகிர்ந்து கொள்ளவும் உதவும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

உன் காணிக்கையை ஏறெடுத்து வா

21 மார்ச் 2011 (திங்கள்) வே.வ: மல்கியா 3:8-12

மல்கியா தீர்க்கதரிசியின் காலத்தில், இஸ்ரவேலர்கள் தம்மைச் சூரையாடியதாகக் குற்றஞ் சாட்டியுள்ளார் (3.8,9). இது ஒரு விபரீதமான குற்றச்சாட்டு. இஸ்ரவேலர்களுக்கு, தாங்கள் எவ்வாறு கர்த்தரைக் கொள்ளையடித்தார்கள் என்பதை அறியமுடியவில்லை (3. பதில்: மல்கியா தீர்க்கதரிசியின் காலத்தில் இஸ்ரவேலர்கள் தேவனை சூரையாடியதாக குற்றஞ் சுமத்துகிறார் (3:8, 9) இது ஒரு கடுமையான குற்றச்சாட்டு. ஆனால், இஸ்ரவேலர்களுக்கோ, அவர்கள் எப்படி தேவனைச் சூரையாடினார்கள் என்பதை உணர்ந்து கொள்ள முடியவில்லை (3. பதில்: ஆசரிப்புக் கூடாரத்திற்குச் செலுத்த வேண்டிய தசம பாகத்தையும் நன்கொடைகளையும் சுருக்கிக் கொண்டார்கள் (மீட்டுக் கொள்ளுதல்) – தானியம், திராட்சரசம், எண்ணெய், முதலாவதாக காய்க்கும் கனிவகைகள்). இந்தத் தசமபாகக் காணிக்கைகள் ஆசரிப்புக் கூடாரத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும். லேவியர்களாகிய ஆசாரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்பவை ஆகும் – இவை முறையே செலுத்தப் பட்டால்தான் ஆசாரியர்கள் தங்கள் தொழிலைக் கவனிக்கமுடியும். இஸ்ரவேலர்கள் இந்த்த் தசமபாகத்தை அலட்சியப்படுத்தியதால் ஆசரிப்புக் கூடாரப் பணிகளைச் செய்ய வேண்டிய லேவியர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளைச் சந்திக்க வயல்களுக்குச் சென்று விவசாயம் செய்தனர். நெகேமியா காலத்திலும் இதே நிர்பிசாரம் காணப்பட்டது. (நெக.13:10-14) எனவே, தேவன் இஸ்ரவேலர்களிடம் எரிச்சலை வெளிப்படுத்தினார்.

ஆனாலும் கர்த்தர் இஸ்ரவேலர்களிடம் பொருமையையும் கிருபையையும் வெளிப்படுத்துகிறார். தம்முடைய கிருபையை அனுபவிக்கத் தம்மை சோதித்துப் பார்க்குமாறு இஸ்ரவேலர்களுக்குச் சவால் விடுகிறார். “நீங்கள் மனஸ்தாப்ப்பட்டு உங்கள் தசம பாகத்தைச் செலுத்தினால், என்னுடைய சாபத்தை அகற்றுவேன்” என்று கூறுகிறார். “தானியங்களை அழித்துப் போடும் பூச்சுப் புழுக்களை தடுத்து நிறுத்துவேன், வானங்களின் பலகணிகளைத் திறந்து, இடங் கொள்ளாத மட்டும் தானியங்களை விளைவிக்கும் வகையில் மழையைக் கொட்டுவேன்; எல்லா தேசத்தாரும் என்னுடைய ஆசீர்வாத்த்தைக் கண்டு ஆச்சரியப்படுவார்கள் என்கிறார் (3:10-12).

நம்முடைய கர்த்தரைப் பற்றிய எப்படிப்பட்ட வர்ணனை இது! ஆனால் நாமும் அவருடைய ஆசீர்வாத்த்தில் கிடைத்த பெலனின் தசமத்தை அவருக்குக் கொடுக்க வேண்டும். தமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நமக்குத் தந்தருளினதன் மூலம் அவருடைய தயாளத்தை வெளிப்படுத்தியது போல, நாமும், அதற்கு ஈடான செயலின் மூலம் அத்தகைய தயாளத்தைப் பிரதிபலிக்க வேண்டும். (எபே.1:3). நிச்சயமாகவே, நம்மால் ஆன அனைத்தையும் அவருக்குத் திரும்பக் கொடுக்க விரும்புவோம். நமது பணம் மட்டுமன்றி, ஜீவனையும்கூட கொடுக்க விரும்புவோம் (ரோமர் 12.1). தேவனும், அதற்குப் பதிலாக மேலும் நம்மை ஆசீர்வதிக்கக் காத்திருக்கிறார். சரீரம் அல்லது பொருள் வசதியில் மட்டும் நம்மை ஆசீர்வதிக்கிறவர் அல்லர். ஆவியின் பிரகாரமும் அது அமையலாம். நமது உண்மையுள்ள உள்ளத்தோடு வழங்கும் யாவற்றுக்கும் நம்மை ஆசீர்வதிப்பார் என்றும் நம்பலாம். மேலும் நம்மைப் பயன்படுத்தி தேவன் தமது மகிமையைப் பிறருக்கு வெளிப்படுத்தவும் கூடும்.

தியானிக்கும் தருணம்

நீயும் தேவனைச் சூரையாடுகிறாயா?

ஜெபங்கள்

பரமண்டலங்களில் இருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய தயாளத்திற்காக உம்மைத் துதிக்கிறோம். எங்கள் திருநாடாகிய மலேசியாவில் எங்கள் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். மேலும் அதிகமாகத் தர வாஞ்சையாகவும் உள்ளீர். சிறப்பாக உம்முடைய திருக்குமாரன் இயேசுவுக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். அவர் மூலமாகவே நாங்கள் ஆவியின் பிரகாரம் ஆசீர்வதிக்கப் பட்டோம். அதனை எங்கள் தயாள ஈகையின் மூலம் வெளிப்படுத்த உதவியருளும். செல்வத்தினால் மட்டுமன்றி எங்கள் ஒட்டு மொத்த ஜீவியத்தையும் ஆசீர்வதியும். உமது ஆசீர்வாத்த்தை வாஞ்சிப்பதோடு, உம்முடைய நற்கிரியைகளைப் பறைசாற்றுவதன் மூலம், இன்னும் அநேகர் உமதண்டைக் கிட்டிச் சேரவும் ஜெபிக்கிறோம். ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

  • கர்த்தரின் இல்லத்திற்கான ஒப்பந்தம்

20 மார்ச் 2011 (ஞாயிறு) வே.வ: எஸ்ரா 7:14-20

எஸ்ரா 7ல் காணப்படுவதுபோல், பெர்சியா தேசத்து அரசன் ஆசாரியனாகிய எஸ்ராவுக்கு விதித்தத் தீர்மானம் யூதா தேசத்தில் ஒரு மார்க்கப் புரட்சியை ஏற்படுத்துவதில் முக்கியமான அத்தியாயமாகக் காணப்படுகிறது: ஓர் அந்நிய அரசாங்கம் தங்கள் பொக்கீஷத்தில் இருந்தும் சுய விருப்பக் காணிக்கையில் இருந்தும் இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருக்கு ஆலயத்தைக் மீளக் கட்டுவதற்கும் நிதி வழங்குகிறது!

ஆயினும், ஆலயத்தை மீளக் கட்டும் பணி, நாடு கடத்தப்பட்டப் பின்னர் அசாத்தியமான சமூக அரசியல் குழப்பங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த போது மேற்கொள்ளப் பட்டது. இஸ்ரவேலர்களுக்குள்ளேயே ஏழை – பணக்கார்ர், ஆசாரியர் – லேவியர் என்ற பிரிவினை ஏற்பட்டிருந்த்து.. அவரகள் சமாரியர்களின் பகைமைக்கு ஆளாகியிருந்த நிலையில், ஏதோமியரிடம் இருந்து ஓயாத மிரட்டல்களையும் சந்தித்து வந்தனர். மேலும், சமுதாய சீர்திருத்தவாதியான எஸ்ரா, இஸ்ரவேலர்களை பரிசுத்தர்களாக உயர்த்துவதில் கவனம் செலுத்தினார். ஆனால், அந்நிய அரசாங்கத்தின் அனுமதியும் ஒத்துழைப்பும் அதற்குத் தேவைப்பட்டது. தேவாலயத்தை மீளக் கட்டுவதும் சமூக – மார்க்க சீர்திருத்தத்தை உண்டு பண்ணுவதும், எதிர்ப்பார்த்த்தை விட மிக சிக்கலான காரியமாக்க் காணப்பட்டது.

ஆனால் ஒன்று நிச்சயம்: இந்தப் பிரச்சனைகள் மத்தியில் தேவாலயம் மீளக் கட்டப்படுவது உத்திரவாதப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரவேலர்களின் தேவன், தகர்த்தப்பட்ட தேவாலயத்தைக் கட்டுவதற்கு அற்புதமான முறையில், எதிர்ப்பாராத வகையில் காரியங்களை வாய்க்கப் பண்ணினார்: ஓர் அந்நிய ராஜாவின் மூலமும் அவரின் விருப்பத்தின் பேரிலும்.

மலேசியாவில் வாழும் கிறிஸ்தவர்களும் இஸ்ரவேலர்கள் இரண்டாவது தேவாலயக் காலக்கட்டத்தில் சந்தித்து வந்த உபத்திரவங்களுக்கு ஈடான பிரச்சனைகளையே எதிர்நோக்குகின்றனர். சபைத் தலைவர்களுக்கும் மாநில அரசாங்கத்திற்கும் இடையிலான உறவு உணர்ச்சிப்பூர்வமாக இருந்தாலும், சபை வட்டத்திற்குள் அவை மிக எச்சரிக்கையாகவே கையாளப்படுகின்றன. நாம் இப்பிரச்சனையைச் சாதகமாகப் பார்ப்பதோடு, அவருடைய ஜனங்களை எழுப்புவதற்கு ஆக்கப்பூர்வமான வகைகளைக் கையாள்வார் என்பதை அறிந்து கொள்வம். அவ்வாறு நடந்து கொள்வதால், சபைகளுக்கும் உலகத்திற்கும் உறவுகள் எப்போதும் புதுப்பித்துக் கொள்ளப் பட்ட நிலையில் இருக்கும்.

தியானிக்கும் தருணம்

தேவாலயத்தைக் கட்டுவதற்கு தேவன் அந்நியர்களையும் பயன்படுத்தியிருக்கிறார் என்றால், என்னை அவர் எப்படிப் பயன்படுத்தக் கூடும்? ஆலயத்தைக் கட்டுவதற்கு நான் அவருடைய சொந்த ஜனமாயிற்றே? உடன்படிக்கை உறவுக்கு அப்பாற்பட்ட மனிதர்களையும் இஸ்ரவேலர்களின் ஆசீர்வாத்த்திற்குப் பயன்படுத்தினால், பிறர் ஆசீர்வதிக்கப்படுவதற்குத் தம் சொந்த ஜனங்களை எப்படிப் பயன்படுத்தக்கூடும்?



ஜெபங்கள்

அன்புள்ள கர்த்தாவே, உமது சமாதானத்தின் கருவிகளாக நாங்கள் திகழட்டும். எங்கள் அயலார்களிடத்தில் பிரிவினை ஏற்பட்டால், நாங்கள் உமது சமாதானத்தைக் கூறி அவர்களுக்கு உதவட்டும. அறியப்படாத சமாதானத்தில் இருந்துகூட உமது வல்லமையான சமாதானத்தின் மான்பை அவர்களுக்கு அறிவிக்கட்டும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

பணிவிடையில் விதைப்போம்::>நேசிக்கும் தேவனும் உன் குடும்பமும்


19 மார்ச் 2011 (சனி) வே.வ: உபாகமம் 6:1-9
  • “இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்” (உபா.6:4)
-இந்த வசனத்தை நீதிமானாகிய ஷீமா என்ற யூதன் அனுதினமும் ஓதுகிறான் என்பதை நாம் அறிவோம். இதன் மையக் கரு, நமது தேவனாகிய கர்த்தர் சர்வ வல்லமையானவர். அவர் மனம் இறங்கி, இஸ்ரவேலர்களை எகிப்திலிருந்து விடுதலையாக்கினார். அடிமைப் படுத்தப்பட்ட அத்தேசத்தில் இருந்து, ‘பாலும் தேனும் ஓடுகிற கானான் தேசத்தை அவர்களுக்குத் தந்தருளினார் (6.3).

வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தில் பிரவேசிக்கப் போகிறோம் என்ற நம்பிக்கையில், மோசே, அறியாமையில் மூழ்கியிருக்கிற தேவ ஜனங்களிடம் அவருடைய கட்டளைகளுக்குப் பணிந்து, அனைத்துக் காரியங்களும் கைகூடும்படி, பயபக்தியோடு வாழ வேண்டும் என்று ஆலோசிக்கிறான் (6.1-2). தங்கள் பிள்ளைகள் மீது உள்ள கடப்பாடுகளையும் கண்கானிப்பையும் நினைவுறுத்துகிறார். கர்த்தரின் வழியில் குடும்பத்தாரை நடத்துவதன் மூலம் அவர்களை நேசிக்க வேண்டும் என்று நினைவுறுத்துகிறார். பிள்ளைகள் உள்ளத்தில் கர்த்தரின் கட்டளைகள் ஆழமாகப் பதியும் அளவுக்கு, அவர்கள் அதிகாலையில் எழுந்தது முதல், இரவில் படுக்கைக்குச் செல்லும் வரைக்கும் பேச வேண்டும். அதாவது, அவர்களின் அன்றாட வாழ்வில் அப்பியாசங்களில் அதுவும் ஒன்றாக அமைய வேண்டும். கர்த்தரின் தீர்மானங்களை நினைத்தருளும் பொருட்டு, அடையாளங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சுறுக்கமாக, யூத பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் உபதேசிக்க வேண்டும். அவர்கள் தங்கள் கடமையில் தவறாதவர்களாகவும், ஒழுக்கமுடையவர்களாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க வேண்டும்.


அவ்விதமே, நாமும் முதலாவது கடமையாகக் கர்த்தரை நேசிப்பதோடு, தொடர்ந்து, நமது பிள்ளைகளுக்கும் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் விசுவாசத்தை உபதேசித்து, அவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும். நமது பிள்ளைகள், நம்முடைய பொறுப்பில் தேவனால் ஒப்படைக்கப் பட்டவர்கள். எனவே, கர்த்தருடைய சித்தத்தையும் வழிகளையும். நமது வாழ்வின் கடமையாக உபதேசிக்க வேண்டும். நல்லவரான கர்த்தரைப் பற்றி பிள்ளைகள் முதலாவது கேள்விப்படும்போது, அவர்கள் தொடர்ந்து அவருடைய அனுபவத்தில் வளர்வார்கள். பிரதியுத்திரமாக, தங்கள் பிள்ளைகளுக்கும் அதே கடமையைத் தொடர்வார்கள்.


தியானிக்கும் தருணம்


எந்த அளவுக்கு முழு இருதயத்தோடும், முழு பெலத்தோடும், கர்த்தரின் கட்டளைகளையும் அவரின் சிலாக்கியங்களையும் நமது பிள்ளைகளுக்கு. உபதேசித்து வந்திருக்கிறோம்? நீங்கள் பிள்ளைகளை அறியாதவர்களாய் இருந்தால், மற்ற பிள்ளைகளையாவது ஆன்மீகத்தில் வளர்க்கலாம் அல்லவா.

ஜெபங்கள்

பரலோகத் தந்தையோ, எனது பிள்ளைகளை உம்மிடம் பயபக்தியுள்ளவர்களாய் வளர்க்க வாஞ்சையையும், வைராக்கியத்தையும் தரவேண்டுமென்று வேண்டுகிறேன். என் ஜீவியம் அவர்களுக்கு ஒரு நல்ல சாட்சியாகத் திகழ்ந்து, அதன் மூலம் அவர்கள் உம்மைத் தேவனாகக் கண்டு, தங்கள் ஆண்டவராகவும் இரட்சகராகவும் சொந்த வாழ்க்கையில் ஏற்றுக் கொள்ள கிருபை தாரும். ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

விசுவாசத்தின் ஜெபங்கள்

18 மார்ச் 2011 (வெள்ளி) வே.வ: மத்தேயு 26:36-44

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்திய இரவிலே என்ன நடைபெறப் போகிறது என்பதை அறிந்ததால் அவர் துக்கப்பட்டு வியாகுலப்பட்டார். வேதனை நிறைந்த அந்த சமயத்திலே தனக்கு அருமையானவர்கள் தன் அருகே இருக்க வேண்டுமென விரும்பினார். (26:38) ஆனாலும் அவர்களை விட்டுச் சிறிது தூரம் சென்று (26:39) பரலோக தந்தையிடம் தன் வியாகுலத்தைத் தெரிவிக்கிறார்.

இயேசு கிறிஸ்து இந்தப் பாத்திரம் தன்னை விட்டு நீங்க வேண்டும் என்று மறு முறை ஜெபித்தார். (26:39,42,44). ஆனாலும் ஒவ்வொரு முறையும் தன் சித்தப்படி நடைபெறாமல் பிதாவின் சித்த்த்திற்கே தம்மை ஒப்புவித்தார். அவருடைய வேண்டுதலைப் பிதாவிடம் தெரிவித்தார். ஆனாலும் இறுதியில் பிதாவின் சித்தமே நிறைவேற வேண்டுமென கேட்டுக் கொண்டார். சில நண்பர்கள் இதனை ‘மாறுபாடான அறிக்கை’ என்று விமர்சிப்பர்; அல்லது ‘விசுவாசமின்மையை’த் தெளிவாகப் பிரதிபலிக்கிறது என்றும் கூறுவர்.. ஆனாலும் இது ஓர் உண்மையான விசுவாசம் – நமது விண்ணப்பத்தை பிதாவானவர் அறிந்து கொள்வதற்கு மட்டுமல்லாமல், விளைவுகள் இன்னதென்று நம்மை விட அவருக்கே நன்கு தெரியும் என்பதை நாமும் அறிந்திருக்கிறோம் என்பதை இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.


தந்தையின் விருப்பத்தையே திருக்குமாரன் ஏற்று தம்மைப் பலியாக ஒப்புவிக்க வேண்டியதாய் இருந்த்து. அவ்வண்ணமே, திருக்குமாரனும் கீழ்ப்படிதலோடு, விசுவாசிகளாகிய நமது பாவங்கள் மன்னிக்கப்படும் பொருட்டு, சிலுவையில் அறையப்படும் பொருட்டு, சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தார். மேலோட்டமாக வாசித்தால் இயேசுவின் வியாகூலம் நிரம்பியிருந்த்து (26:38) என்று காண்பீர்கள்.. பலர் மரிக்கும் தருவாயில் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் வெளிப்படுத்துகிறார்கள். ஆனால், இயேசுவோ, தேவனுடைய பாத்திரத்தில் அருந்த வேண்டியதாய் இருந்த்தால் வியாகூலப் பட்டார் (26:39) – பாவத்தை எதிர்த்துப் போராட்டுவது அது.. இயேசு தனது உயிரை இழக்கப் போவதில்லை. ஆனால், நமது சார்ப்பாக பாவ மன்னிப்பைப் பெரும் பொருட்டு, எல்லா தண்டனைகளின் வேதனைகளையும் ஏற்றுக் கொண்டார். இது நிச்சயமாக தாங்க முடியாத வியாகூலத்தைத் தந்திருக்கும்.


ஜெபிக்கும்போது நாமும் இயேசவைப் போல் விசுவாசத்தோடு ஜெபிப்போமாக – நமது தேவைகளை பிதாவின் சித்த்த்தின் படி நிறைவேறும் படியாக ஒப்புக் கொடுத்து விடுவோம். அதே வேளையில், பிதாவுக்குக் கீழ்ப் படிந்து, திருக்குமாரன் இயேசு சிலுவையில் அறையப்படுவதற்குப் ஒப்புக் கொடுத்த தியாகத்தை மனதில் பதித்துக் கொள்வோம்.


தியானிக்கும் தருணம்


எந்த அளவுக்கு உன்னுடைய விருப்பத்தை தேவனுடைய சித்த்த்திற்கு ஒப்புக் கொடுக்கத் தயாராய் இருக்கிறாய்? கர்த்தரின் சித்தம் நமது ஜீவியத்தில் நிறைவேற வழிவிடும் அளவுக்கு அவரை விசுவாசிக்கிறாயா?

ஜெபங்கள்


இயேசுவின் சிலுவை தியாக முன்னுதாரணத்திற்காக ஸ்தோத்தரிக்கிறோம், கர்த்தாவே. எங்கள் பாவத்தின் நிமித்தம், அவர் உமது சித்த்த்தின் படி தம்மை ஜீவ பலியாக ஒப்புவித்தார். நாங்களும் அவ்வண்ணமே எங்கள் சிலுவையைச் சுமந்து உமது பாதையில் ஜீவிக்க வழிநடத்தும். ஆமென்.

தனி தியானம்: பரிசீலிக்க நேரத்தை ஒதுக்குங்கள்

  • உன் தனி ஜெபத்தைப் பற்றி கர்த்தர் உன் உள்ளத்தில் உணர்த்தியது என்ன?
  • உன் ஜெப ஜீவியத்தை மேம்படுத்த எத்தகைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைக் கடைபிடிக்க முடியும்?
  • உன் சொந்த சபையில் ஒரு ஜெப வீரனாகத் திகழ நீ என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளாய்?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

எஜமானரின் உள்ளம்

17 மார்ச் 2011 (வியாழன்) வே.வ: லூக்கா 18:9-14

பரிசேயர் – ஆயக்காரரை இயேசு உவமானமாகக் கூறியது தன்னைத் தானே நீதிமானாக உயர்த்திக் கொண்டவனுக்கும் வெறுக்கப்படுகிற பாவிக்கும் இடையிலான முரண்பாட்டுக்கும் மேலான உபதேசமாகும். இது அவர்களின் மனோசுபாவத்தைக் காட்டுகிறது. குறிப்பாக தங்கள் ஜெபம் மற்றும் தேவனை அணுகும் முரண்பாடான மனோசுபாவத்தைக் காட்டுகிறது. இருவரின் ஜெபங்களையும் நுணுகி ஆராய்ந்து பார்த்தால், தேவனை அவர்கள் அணுகும் விதமும் ஜெபத்தின் பாவனையும் மாறுபட்டிருப்பதை உணரலாம். பரிசேயன் ஆயக்காரனையும் பிற பாவிகளையும் தன்னோடு ஒப்பிடுவதன் மூலம் தன்னைத் தானே உயர்த்துகிறான். தான் ஒரு நீதிமான் என்று கருதி, தன்னைத் தானே துதித்துப் பாடுகிறான். தன்னைத் தானே பாராட்டிக் கொள்வதும் தேவ சமூகத்தில் நிற்பதற்குத் தானாகவே தகுதிப் படுத்திக் கொள்வதும் அந்த ஜெபத்தில் காணப்படுகிறது. தேவனின் வார்த்தைக்குச் செவி சாய்க்க தான் சித்தமாய் இல்லை என்று வெளிப்படுத்துகிறான். மறு பக்கமோ, ஆயக்காரன் தன் உள்ள ஆழத்தில் இருந்து மனங் கசந்து, தன் பாவத்தை அறிக்கை செய்து, தேவ கிருபைக்காக மன்றாடும் வகையில் ஜெபிக்கிறான். இது அடக்கத்தின் வெளிப்பாடு. தேவன் தமது கிருபையையும் அன்பையும் வெளிப்படுத்தத் தேவைப்படும் இறைஞ்சல்.


இந்த ஆயக்காரனின் தாழ்மையான ஜெபமே தேவ உறுவுக்குப் பாத்திரமானது என்று இயேசு பறை சாற்றுகிறார். தற்பெருமையின் நிமித்தம் பரிசேயனின் ஜெபம் நிராகரிக்கப்பட்டது. நமது உத்தமமும் நற்கீர்த்தியும் அல்ல; நமது பாவத்தைக் குறித்த எச்சரிக்கை உணர்வே தேவ கிருபையைக் கிட்டிச் சேர்க்கிறது.

தியானிக்கும் தருணம்

தேவனுக்கு முன்பாக ஜெபிக்க வரும் போது நமது மன சுபாவம் என்ன? நமது சொந்த ஜெபத்தையே நாம் கேட்கிறோமா?



ஜெபங்கள்

கர்த்தாவே, அனுதினமும் மனத் தாழ்மையோடு ஜீவிக்க்க கற்றுத் தாரும். உமது நாமத்திலே ஜெபிக்கிறோம். ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

Thanks for this beautiful message brother



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

விடாப் பிடியான விண்ணப்பம்

16 மார்ச் 2011 (புதன்) வே.வ: லூக்கா 18:1-8

இன்று நாம் வாழும் இவ்வுலகில் நம்மைச் சுற்றிலும் குற்றச் செயல்கள், அநீதி, இன, மத கலவரம் மற்றும் சண்டை ச்ச்சரவுகள் அதிகரித்து வருவதை காண்கிறோம். நேர்மை வீழ்ச்சியுற்று, தீமை வெற்றி பெறுவதைப் போன்று நாம் காணும் போது, நீதிக்கு இடமில்யோ என்று நாம் திகைத்துப் போகிறோம். சிலர் நம்பிக்கையின்றியும் போய் விடுகிறார்கள். ஆனால், இன்றைய வேதபாடம் கர்த்தர் தம் மக்களின் நீதிக்காக கட்டாயமாக உதவிகரம் நீட்டுவார் என்பதைத் தெளிவாக விளக்குகின்றது.


இந்த உவமை, நியாயாதிபதி ஒரு விதவையின் இடைவிடாத வேண்டுகோளுக்குச் செவிசாய்ப்பதை விளக்குகின்றது. ஆனால் கர்த்தர் தமது பிள்ளைகளின் சத்தத்திற்கு நிச்சயமாக செவிகொடுப்பார் அல்லவா? இந்த உவமையின் மூலமாக நாம் அறிவது என்னவென்றால் நேர்மையான நமது விண்ணப்பத்தைக் கர்த்தர் கேட்டு, தமது ஜனங்களைத் தப்புவிக்கவும் செய்வார். இந்த உவமை நமக்கு ஓர் ஆறுதலையும் தருகிறது. விசுவாசத்திலும் ஜெபத்திலும் தரித்திருக்கும் நாம் இயேசு கிறிஸ்துவின் சீஷர்களாக அழைக்கப்பட்டிருக்கிறோம்.

எனவே, தற்கால உபத்திரவங்கள் நம்மை சஞ்சலப்படுத்தக் கூடாது. ஜெப ஊழியங்கள் கட்டாயமாக நடைபெற வேண்டும். துன்பமான சூழ்நிலை இருந்த போதிலும் கர்த்தர் தமது நீதியின்படி தமது ஜனங்களின் சத்தத்திற்குப் பதிலளித்து நியாயம் செய்வார். ஆனால் அது கர்த்தரின் நேரத்திலும் கர்த்தரின் வழியிலும் நடைபெறும், மனித ஞானத்தினாலாவது மனித யோசனையிலாவது அல்ல.

தியானிக்கும் தருணம்

கர்த்தர் தாமதிக்காமல், அவருடைய காலத்தில் நியாயம் செய்வார் என்று நம்புகிறீர்களா?


ஜெபங்கள்

சர்வ வல்லமையுள்ள கடவுளே, உம்மில் நான் நம்பிக்கை வைக்க எனக்குப் போதித்தருளும். நியாயத்திற்கு உமது ஜனங்களின் விண்ணப்பத்தைக் கேட்க நீர் எப்பொழுது ஆயத்தமாக இருக்கிறீர் என்பதை உணரச் செய்யும். ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

உம்முடைய ராஜ்யம் வருவதாக

15 மார்ச் 2011 (செவ்வாய்)
வே.வ: லூக்கா 11:1-13

அந்த சீஷனின் கேள்விக்கு இயேசுவின் பதில் எதுவாக இருக்கும் என்று எதிர்பாப்ப்போம் அல்லவா? நாம் அமர்ந்திருக்க வேண்டுமா? முழங்கால் படியிடவா? 30 நிமிடங்கள் ஜெபம் செய்வதா? சில ஆராதனை ஒழுங்கு முறைமைகளைக் கடைபிடிப்பதா? இயேசுவின் மறுமொழி மிக ஆழமானது.

அவரது முதல் பதில் ஜெபத்திற்குக் கொடுக்கப்படும் விசேஷத் தன்மையை நமக்கு வெளிப்படுத்துகிறது. “பிதாவே” என்று அழைக்கும் அந்த ஜெபம் சர்வ வல்லமை பொருந்திய தேவன் நமக்கு அன்பைக் காட்டும் தந்தையாக நினைவு படுத்துகின்றது. அவர் நமது தினசரி வாழ்க்கையில் பங்கு பெறுவதுடன் அவரது பிள்ளைகளாகிய நம்முடன் அன்பான உறவு கொள்ளவும் தேடி வருகிறார்.

அவரது பிள்ளைகள் எப்படி ஜெபிக்க வேண்டும்? முதலாவது நம் உள்ளத்தில் கர்த்தருக்கு இடம் கொடுத்து, வாழ்க்கையில் அவரது நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவதாகும். அவர் மக்களின் இருதயத்தைத் தன் பக்கமாகத் திருப்பி, அவர் தூய கடவுள் என்று அறிமுகப்படுத்துவார். இது அவரது மகிமை பொருந்திய இராஜ்யம் வரும் என்கிற வாக்குத் தத்ததை நமக்கு நிறைவேற்ற ஏதுவாக இருக்கும். இது தான் இந்த உலகமும் நாமும் இறுதி நாட்களில் அவரது மகிமையைக் காணும் காலமாகும்.

எனவே, நாம் அவரிடம் நமது தேவைகளைக் கேட்போம். நமது தினசரி தேவைகளை அவரிடத்தில் கூறுவோம். சோதனை காலங்களில் பாவத்திற்கு உட்படாமல் நம்மைப் பாதுகாக்க நாம் பிறரை மன்னிக்கக் கூடிய குணங்களைப் பெறவும் நாம் ஜெபிப்போம்.

மேலும் பரலோகக் கதவை விடாமல் துணிவுடன் தேடவும், தட்டவும் நாம் கேட்போமாக. பாவிகளாகிய நாம் நமது பிள்ளைகளுக்கு நல்லதைக் கொடுக்கும் போது பரம தந்தையான அவர் நமக்குப் “பரிசுத்த ஆவியைக்” கொடுப்பது நிச்சயம் என்று இயேசு கிறிஸ்து உறுதியளிக்கிறார். பரிசுத்த ஆவியாகிய இநுத வரம் கர்த்தரின் இராஜ்யத்தில் அவரோடு நாம் எப்பொழுதும் வாழும் அந்த நம்பிக்கைக்காக ஜெபிக்க உதவுகிறது.

தியானிக்கும் தருணம்

இயேசு கிறிஸ்து இந்த ஜெபத்தைப் போதிக்கும் போது, நாம் வீண் வார்த்தைகளைப் பேசமாமல். நமது. வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறது. நீங்கள் எதனைக் கடைபிடிக்கப் போகிறீர்கள்?

ஜெபங்கள்

எங்கள் பிரியமான பரலோகத் தந்தையே, நாங்கள் எவ்வாறு ஜெபத்தில் பங்கு பெற வேண்டும் என்றும், ஒருவருக்கொருவர் உற்சாகப்படத்தி ஜெபிக்க உதவி செய்யும். அறியாதவர்களிடம் உம்மைப் பற்றி அறிவித்து அவர்களுக்காக ஜெபித்து உமது இராஜ்யத்தின் நோக்கத்தை நிறைவேற்ற எங்களுக்கு உற்சாகமான ஆவியைத் தாரும்.. அநேகர் உம்மை மகிமைப்படுத்த ஜெபிக்கிறோம். எங்களது தினசரி தேவைகளுக்காகவும், மன்னிப்பிற்காகவும் உம்மையே நாங்கள் நன்றியுடன் சார்ந்திருக்க்க் கிருபை செய்யும். இந்த மன்னிக்கும் தன்மையை நாங்கள் உம்மிடம் பெற்றுக் கொண்டது போல், எங்களின் பகைவர்களையும் நாங்கள் மன்னிக்கும் பண்பை எங்களுக்கத் தாரும். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

யோபுவின் ஜெபங்கள் – கர்த்தாவே, கிருபையாய் இரும்!

14 மார்ச் 2011 (திங்கள்) வே.வ: யோபு 1:1-5

வேதத்தில் காணப்படும் யோபு ஒரு சிறந்த சரித்திரப் புருஷன்; அவன் மாசற்றவனும் தெய்வ பக்தியுமுள்ளவர். 1:1இல் காணப்படும் யோபுவின் குணாதிசயங்கள் உபாகமத்தில் காணப்படும் தேவ மனிதரைப் போன்று இருக்கும். யோபு குற்றமற்றவர் (உபா.18:13) நேர்மையானவர் (யோபு 32.4) அவர் கடவுள் பயமுள்ளவர் (உபா.4:10) மேலும் தீமையை வெறுப்பவர் (உபா.5:32-33)

கர்த்தர் யோபுவை நல்லவனாகவும் தேவ மனிதனாகவும் ஆசீர்வாதத்திற்கு ஏற்றவனாகவும் கருதுகிறார். எனவே, யோபுவின் ஆஸ்திகள் பத்து பத்தாக விவரிக்கப்படுகின்றது. இது கர்த்தரின் முழுமையான ஆசிர்வாத்த்தை வெளிப்படத்துகிறது. பத்து பிள்ளைகள். பத்தாயிரம் ஆடுகளும் ஒட்டகங்களும், பத்தாயிரம் ஏர்மாடுகளும் கழுதைகளும் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது (யோபு 1:1-3).

யோபு 1.4-5இல், யோபு தனக்காக அல்ல, தன்னுடைய பிள்ளைகளுக்காக சர்வாங்க தகனபலிகளைச் செலுத்துவது வழக்கம் என்று கூறப்பட்டுள்ளது. தனது பிள்ளைகள் தங்கள் உள்ளத்தில் கர்த்தருக்கு விரோதமாகப் பாவம் செய்திருப்பார்கள் என்று நினைத்து இப்பலிகளை யோபு செலுத்தினார் (யோபு 1:5). ஐசுவரியம், ஐக்கியம் மற்றும் கொண்டாட்டம் சூழ்நிலைக்கு எற்றவாறு நம் வாழ்க்கையில் நடைபெறும். ஆனால், இப்படிப்பட்டக் கொண்டாட்டங்களில் கர்த்தருக்கு விரோதமாக பாவம் செய்யாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். யோபுவின் தகன பலி செலுத்துதல் ஒருவரின் ஜெப வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாகும்.

யோபு தமது பிள்ளைகளுக்காக ஜெபித்தது போன்று நாமும் நமது பிள்ளைகள் கர்த்தரின் வழியில் தவறாமல் நடக்க ஜெபங்களை ஏறெடுப்போமாக. யோபு தனது வாழ்க்கையை ஒரு ஜெப வாழ்க்கையாக அமைத்தது போன்று நாமும் ஒவ்வொரு நாளும் “எனது இந்த வெற்றியான மகிழ்ச்சி நிரம்பிய வாழ்க்கை கர்த்தருக்குப் பிரியமற்றதாக இருக்குமோ?” என்று கேட்டுக் கொள்வோமாக. கர்த்தாவே இரங்கும் !

தியானிக்கும் தருணம்

யோபுவைப் போன்று நான் எவ்வாறு மற்றவர்களுக்காக ஜெபிக்கிறேன். இன்றைக்கே அப்படிச் செய்ய நாம் என்ன முயற்சிகளைச் செய்கிறோம்?

ஜெபங்கள்

கர்த்தாவே, இரங்கும் ! பிறர் உம்மை அறிந்து கொள்ள அவர்களுக்காக நான் ஜெபிக்கக் கிருபை செய்யும். இரட்சிப்படைய வேண்டியவர்களை இரட்சியும். சோதனைக்குட்பட்டவர்களைப் பெலப்படுத்தும். அவர்களைத் தீமைகளிலிருந்து விடுவித்து உமது பிரசன்னத்தினால் ஆற்றித் தேற்றும், ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தேவனே, என் தேவனே என்னை மன்னியும்!


13 மார்ச் 2011 (ஞாயிறு) வே.வ: தானியேல் 9:1-19

கர்த்தரின் வார்த்தைக்கு நாம் எப்படி செவி சாய்க்க வேண்டும் என்பதை அறிந்து கொள்வதற்குத் தானியேல் சிறந்த விளக்கத்தைத் தருகிறார். எரேமியா தீர்க்கதரிசியின் வசனங்களை வாசித்து, அதற்கு இணங்கி ஊக்கமாகவும் தாழ்மையாகவும் செவி சாய்க்கிறான். இஸ்ரவேலர்கள் 70 ஆண்டுகள் சிறைபிடிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள் என்பதை வாசித்தறிந்தவுடன் அவன் மிகவும் சஞ்சலமும் வேதனையும் அடைகிறான் (தானி. 9:2; காண்க: எரேமியா 25:11-12; 29:10. இரட்டிலும் சாம்பலிலும் உபவாசத்தோடு அமர்ந்து கொண்டு, இஸ்ரவேலர்கள் தேவனுக்கு விரோதமாக பாவஞ் செய்து அவருடைய கட்டளைகளுக்கு விலகிப் போனார்கள் என்று அறிக்கை செய்கிறான் (தானியேல் 9:3-10) . தேவ வார்த்தைகளைத் தங்களுக்கு எடுத்துக் கூறிய தீர்க்கதரிசிகளை இஸரவேலர்கள் அலட்சியப்படுத்தியுள்ளனர். எனவே, உடன்படிக்கையின் பிரகாரம் கர்த்தர் இஸ்ரவேலர்களைத் தண்டிக்கிறார். அவர்கள் பாபிலோனியர்களிடத்தில் அடிமைப்பட்டுப் போனார்கள் (தானி.9:11-14, லேவி.26:27-45; உபா.28:64-68) .


இப்போதோ, தானியேல், கிருபைக்காக இறைஞ்சுகிறேன்: இஸ்ரவேலர்களின் நீதியின் நிமித்தம் அல்லாமல் கர்த்தரின் நீதியின் நிமித்தமாக அந்த மன்றாட்டு அமைகிறது (9:7, 14, 16, 18), அதுவும் அவருடைய நியாயத் தீர்ப்பையும், சீராக்கத்தையும் சார்ந்தே அமைகிறது (9:16). எனவே, தானியேல் இஸ்ரவேலர்களோடு, தாழ்மையோடும் குற்றவுணர்வோடும் தங்கள் பாவங்கள் நிமித்தம் அவமானத்தால் போர்த்தப்பட்டதாக ஜெபிக்கிறான் (9:
8). மனஸ்தாபத்திற்குப் பிறகு உறவு புதுப்பிக்கப்படும் என்பதை அவன் அறிந்திருக்கிறான் (1 ராஜாக்கள் 8:33-34, 46-51). எனவே, தேவன் நாடு துறந்த நிலையில் இஸ்ரவேலர்கள் அனுபவிக்கிற பாடுகளில் இருந்து மிக விரைவில் விடுதலை தர வேண்டும் என்று கர்த்தரிடம் மன்றாடுகிறான். இஸ்ரவேலர்கள் மீண்டும் எருசலேத்தில் குடியமர்ந்து, அதன் மூலம் அவருடைய நாமம் மகிமைப்பட வேண்டும் என்று அவன் ஜெபிக்கிறான். (9:17-19).

கிறிஸ்தவர்களாகிய நாமும் கூட, நம்முடைய பாவங்களுக்காக, தேவ சமூகத்தில் மனஸ்தாப்ப் பட்டால், ஆண்டவர் மனந்திரும்புதலைத் தருவார் (2கொரி.7:10) நம்முடைய பாவங்களை அறிக்கையிட்டால், நீதியும் இறக்கமும் நிறைந்த கர்த்தர் நம்மை மன்னிப்பார் (1யோவான் 1:9).


தியானிக்கும் தருணம்


தேவனிடம் அறிக்கை செய்து மன்னிப்பு கேட்க வேண்டிய பாவங்கள் ஏதாவது உன்னிடத்தில் உண்டா?

ஜெபங்கள்


பரலோகப் பிதாவே, நீர் நீதி நிறைந்த ஆண்டவராய் இருப்பதற்காக உம்மை த் துதிக்கிறோம். பாவங்கள் தண்டிக்கப்படாமல் விட்டுவிடுபவர் நீரல்லர். உம்முடைய நீதியின் நிமித்தமும் கிருபையின் நிமித்தமும் நீர் எங்களை மன்னித்து விட்டதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம். நாங்கள் உமக்கு விரோதமாகப் பாவஞ் செய்ததை அறிக்கையிடுகிறோம். அவற்றிற்காக மனத் தாழ்மையாய் மன்னிப்பை வேண்டுகிறோம். பாவங்கள் நிமித்தம் தண்டிக்கப்பட வேண்டிய நாங்கள், அவற்றிற்குத் தம் சிலுவை மரணம் மூலம் கிரயம் செலுத்திய இயேசுவுக்காக நன்றி செலுத்துகிறோம். அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தெய்வாம்சம் பொருந்திய ராஜாவின் ஜெபம்

12 மார்ச் 2011 (சனி) வே.வ: 2 ராஜாக்கள் 19:14-19

அசீரியர்கள் யூதேயாவின் தேசத்தைத் தாக்கும் போது எசேக்கியா தேசத்தை ஆண்டு வந்தான். தேவன், ஏசாயா தீர்க்கதரிசியின் மூலம் தாம் அசீரியர்கள் திரும்ப விரட்டுவார் என்று வாக்களித்துள்ளார். ஆனால், அசீரியர்களோ, கர்த்தராகிய ஆண்டவரை நம்ப வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கிறார்கள். தேசங்கள் தத்தம் தேவர்களை நம்பியிருந்தாலும், அவற்றையெல்லாம் தோற்கடிக்கச் செய்த்தே இவர்களது இந்தத் துணிகரத்திற்குக் காரணம்.

அந்த எச்சரிக்கைக் கடித்ததை தேவாலயத்திற்கு எடுத்துச் சென்று, எசேக்கியா இஸ்ரவேலர்களின் தேவனாகிய யேகோவாகிய தேவனுக்கு முன்பாக விரித்துப் போடுகிறான் (19:14). இஸ்ரவேலர்களின் தேவனாகிய கர்த்தரின் மகத்துவத்தை அறிக்கை செய்கிறான். சகலத்தையும் படைத்தவராய் இருப்பதால், யாவற்றையும் ஆள்பவர் என்று யேகோவாவை அறிக்கையிடுகிறான். பிற தெய்வங்களைப் போன்று யேகோவாவும் அவர்களைக் காப்பாற்ற முடியாது என்று அசீரியர்கள் கேலி செய்ததை எசேக்கியாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை (19:16) பிற தேசத்தாரை அசீரியர்கள் தோற்கடிக்க முடிந்ததற்குக் காரணம், அவர்களின் தெய்வங்கள் வெறும் விக்கிரங்கள்தாம் (19:17-18). ஆனால், யேகோவாவோ, உண்மையான கடவுள். எனவே, அவர் ஆண்டவர் என்று தன் தேசத்தார் அறிந்து கொள்ளும் பொருட்டு, தேசத்தை எதிரிகளின் தாக்குதலில் இருந்து காத்தருள வேண்டுகிறான். (19:19). நாமும் எசேக்கியாவைப் போல் ஜெகிகிறோமா? நாம் ஒரு நிர்பந்தமான நிலைமைக்குத் தள்ளப்படும் போது, யேகோவாதான் உண்மையான தேவன் என்று ஜனங்களுக்கு அறியச் செய்வோமா! தேவன் உண்மையாகவே எசேக்கியாவின் ஜெபத்திற்கு செவிசாய்த்து, அவனுடைய ஜனங்களை அசீரியர்களிடம் இருந்து விடுவித்தார். அதே தேவன், இன்னொரு நிலைமையில், பாவத்தில் மூழ்கிப் போன தம் ஜனங்களை, எதிரிகள் மூலம் அழித்து, தண்டித்தார். அவர் சகலத்தையும் ஆளுபவராக இருப்பதால், தம் சொந்த ஜனம் உட்படா, யாராலும அவரைக் கையடக்கப் படுத்த முடியாது.


எசேக்கியாவைப் போன்ற தெய்வாம்சம் பொருந்திய அரசனின் மன்றாட்டின் மூலம் இஸ்ரவேலர்களை இரட்சித்த்து, பரிபூரணமும் தெய்வாம்சமும பொருந்திய ஓர் அரசனே நம்மையும் இரட்சிக்க முடியும் என்பதை நினைவுறுத்துகிறது – அவர்தான் இயேசு கிறிஸ்து. இயேசு, நமக்காகப் பிதாவினிடத்தில் பரிந்து மன்றாடுகிறார். இயேசுவுக்குச் சொந்தமானவர்கள் இறுதி நாளின் நியாயத் தீர்ப்பில் இருந்து விடுவிக்கப் படுவார்கள். தேசங்கள் அனைத்துக்கும் பிதாவாகிய தேவனின் மகிமையில் ஆண்டவராய் இருக்கிறார் என்பதை அறியும்.


தியானிக்கும் தருணம்


உன் ஜெபத்திற்கு உண்டான காரணத்தைச் சிந்தித்துப் பார். அவருடைய சம்பூரணம் அறியப்படும் பொருட்டு, எசேக்கியாவைப் போல் ஆண்டவரை மகிமைப் படுத்தி ஜெபிக்கிறோமா? ‘உம்முடைய நாமம் பரிசுத்தப் படுவதாக’ என்று நம்மாலும் கூற முடியமா?

ஜெபங்கள்


எங்களுக்காக எப்போதும் பரிந்து பேசுகிற சம்பூரணம் நிறைந்த இயேசுவுக்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறோம்,ஆண்டவரே. ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தேவாலயத்திற்காக ஓர் விண்ணப்பம்


11 மார்ச் 2011 (வெள்ளி) வே.வ: 1 ராஜாக்கள் 8:22-54


மாபெரும் தேவாலயம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் சாலமோன் ராஜா அது தொடர்பாக ந விரிவான ஜெபத்தை ஏறெடுக்கிறான். தேவனின் பிள்ளைகளாகிய நமக்கு அந்த ஜெபங்கள் மூன்று முக்கியமான காரியத்தை நினைவுறுத்துகிறது.


முதலாவது, தேவாலயம் கட்டி முடிக்கப்பட்டது மனித முயற்சியைப் பாராட்டுவதற்குப் பதிலாக, கர்த்தர் உண்மையுள்ளவர் என்பதைக் காட்டுகிறது. மனித வெற்றிக்கு அப்பாற்பட்ட கிருபை கர்த்தரின் உடன்படிக்கையில் உள்ளது என்பதை சாலமோன் கூறுகிறார்
(1 ராஜாக்கள் 8:23). வானளாவிய கட்டிடம் எழுப்பப்படுவதற்கு கர்த்தரே பிரதான பங்காற்றுகிறார் என்பதைப் புரிந்து கொள்ள மனதளவிலும் ஆன்மீகத்திலும் தரிசனம் தேவை. அதே தரிசனம் கர்த்தரின் உடன்படிக்கைக்குக் கீழ்ப்படியவும் தேவைப்படுகிறது. (1 ராஜாக்கள் 8:25-26).

இரண்டாவது, தேவாலயம் எவ்வளவு பெரிய மகிமையைக் கொண்டிருந்தாலும், கர்த்தரை அதில் அடக்கியாள முடியாது. அந்த தேவாலயம் எழுப்பப்படுவதற்குத் தேவையான ஒவ்வொரு காரியத்திலும் பிரயாசம் கூடிய அதே ராஜா, “தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?” என்று பாடுகிறான். (1 ராஜாக்கள் 8:27). சாலமோன் போன்ற ஒரு ராஜா இப்படித் தன்னைத் தாழ்த்துவதைக் கண்டு நான் வியப்படைகிறேன். உண்மையாகவே, கர்த்தர் மனித கரத்தால் எழுப்பப்பட்ட ஸ்தலத்தில் வாசம் செய்யத் தேவையில்லை. அவருக்கு மனித உதவி எதுவும் தேவைப்படாது. அவருடைய நாமத்தினால் எழுப்பப்பட்ட ஸ்தலத்தில் வாசம் செய்கிறார் என்பதற்கு நமக்கு ஆதாரம் தேவைப்படுவதாலேயே (மனித அறியாமை) அவர் அங்கு வருகையளிக்கிறார்.

மூன்றாவது, எல்லா ஜனங்களுக்கும் கர்த்தர் கிருபையையும் ஆசீர்வாதத்தையும் அருள தேவாலயம் பயன்படுகிறது. கர்த்தரைத் சொந்த அனுபவத்தில் காண முடியாதவர்களுக்கும் இது தேவை.

(1 ராஜாக்கள் 8: 41-42). கர்த்தரின் உடன்படிக்கை உறவுக்குள் வராத ஜனங்களுக்காகவும் சாலமோன் ஜெபிக்கிறார். அவர்களுடைய ஜெபங்களையும் கேட்டருள வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறார்! தேவனுடைய ஜனங்கள் உலகத்தாருடன் தொடர்பு வைத்துக் கொள்வதற்கு இது உத்திரவாதம் தருகிறது. அவ்விதம் மட்டுமே, உலகத்தார் கர்த்தரை அறிந்து கொண்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்த முடியும் (1 ராஜாக்கள் 8:43).

தியானிக்கும் தருணம்


எல்லா ஜனங்களும் கர்த்தரை அறிந்து கொண்டு அவரிடம் பக்தியை வெளிப்படுத்துவதற்கு தேவாலயம் அழைக்கிறது. ஆனால், ஓர் ஆலயம் எழுப்பப்படும் போது, அதன் சுவர்கள் கிறிஸ்தவர்களை உலகத்தாரிடமிருந்து பிரித்திருக்கிறதா?

ஜெபங்கள்


கர்த்தாவே, ஆலய சுவர்களுக்கு அப்பாலும், எங்களுடைய தரிசனத்தைப் படரச் செய்யும். உம்முடைய பிரசன்னம் தேவைப்படும்இடத்துக்கும், உம்முடைய கிருபை தேவைப்படும் மூலை முடுக்குகளுக்கும், உம்முடைய ஆசீர்வாதங்கள் பொழியப்பட வேண்டிய இடங்களுக்கும் எங்கள் கவனத்தைத் திருப்ப உதவியருளும். ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தேவனோடு மல்லுக்கட்டுதல்
(ஒரு புதிய ஆரம்பம்)

10 மார்ச் 2011
(வியாழன்) வே.வ: ஆதியாகமம் 32:22-32


யாக்கோபின் வரலாறு மனித பலவீனம் மற்றும் பாவத்தைக் குறித்த பதிவாகும். தன் சகோதரனாகிய ஏசாவை வஞ்சித்த யாக்கோபு ஆரானுக்குத் தப்பியோடினான் (ஆதியாகமம் 27:41-28:10). சில காலம் கழித்து யாக்கோபு தாயகம் திருமபினான். தன் சகோதரனாகிய ஏசாவின் ஊருக்குப் புறப்பட்டு, யாப்போக்கு என்ற ஆற்றின் துறையைக் கடக்கும்போது அவன் வாழ்வில் ஒர போராட்டம் ஏற்பட்டது..


இந்த வேத பகுதியில் பல ஆவிக்குரிய பயனான காரியங்களைக் காண முடிகிறது.


24வது வசனத்தில் “யாக்கோபு பிந்தித் தனித்திருந்தான்” என்று கூறப்பட்டுள்ளது. ஜெபத்தில் பிந்தித் தனித்திருப்பது (தனிமையான ஜெபம்) அவசியமானது. இதே போலொத்த உதாரணத்தை இயேசுவும் வெளிப்படுத்தினார். “அவர் ஜனங்களை அனுப்பிவிட்ட பின்பு, தனித்து ஜெபம்பண்ண ஒரு மலையின்மேல் ஏறி, சாயங்காலமானபோது அங்கே தனிமையாயிருந்தார் (மத்.14.23). இயேசுவானவர் தனித்து ஜெபம் பண்ண தமது சீடர்களை அனுப்பிவிட்டார்.


நாம் கர்த்தரோடு உறவாடவே படைக்கப்பட்டிருப்பதால், அதில் மிகுந்த அக்கறை காட்டினால், அவருடைய பிரசன்னத்தை மட்டுமல்லாமல், வல்லமையையும் கூட்டிச் சேர்க்கிறது. தனது பெலவீனத்தில் மத்தியிலும் அவன் கர்த்தரோடு மல்லுக்கட்டினான். தனக்கு உண்டான காயங்களையும் வேதனைகளையும் வெளிப்படுத்தினான். யாக்கோபுவிற்குச் செவி சாய்த்தது போலவே, இயேசுவானவர் நமக்கும் வாஞ்சையோடு செவிசாய்க்கிறார். அவருக்கே மிகச் சரியான காரியம் தெரியும்.. நமது கவலைகளை அவரிடம் முறையிட்டால், கர்த்தர் நாம் செய்யவேண்டியதைக் காட்டுவதோடு, தம்மால் மட்டுமே ஆகக் கூடியத்தையும் வெளிப்படுத்துவார். நமது குழப்பத்தை அவர் புரிந்து வைத்திருக்கிறார். நமது குழப்பத்தை அவரிடம் ஒப்படைத்து விட்டு அவருடைய சமாதானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நமது கவலைகளை கர்த்தருடைய வல்லமையான கரங்களில் சமர்ப்பித்து விட்டால், அவரால் மட்டுமே வழங்கக்கூடிய சாந்தியை நாம் உணர்வோம்.


யாக்கோபு பிடிவாதமாய் இருந்தான். “நான் போகட்டும், பொழுது விடிகிறது” யாக்கோபு “நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய உம்மைப் போகவிடேன்”, என்றான். அவன் தனது விண்ணப்பத்தில் தெளிவாய் இருந்தான். அவன் ஆசீர்வாதத்தைக் கேட்டான்.

மீண்டும் யாக்கோபு பிடிவாதத்தைக் காட்டினான். “உமது பெயரைக் கூறும்” இந்த வேதப் பகுதியானது, “அங்கே அவனை ஆசீர்வதித்தார்” என்று கூறி முடிவடைகிறது (32.29). இறுதியில் கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார். யாக்கோபு மன்னிக்கப்படுகிறான். தன் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டவனாய் அவன் தோன்றுகிறான். பாவ வாழ்வை விட்டு, விசுவாசத்தில் பணிவுடையவனாக மாறுகிறான்..

“.....நான் தேவனை முகமுகமாய்க கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்” (32.30). என்று யாக்கோபு கூறுகிறான். எத்துணை அருமையான முடிவு….. “தேவனை முகமுகமாய் காண நாம் வாஞ்சிக்கிறோமா”?


தியானிக்கும் தருணம்


இந்த தபசு காலத்தில் தனிமையிலும் அசைவற்றும் இருக்க நேரத்தை ஒதுக்குவாயாக. ஜெபத்தில் பொறுமையாய் இருங்கள். யாக்கோபைப் போல் விண்ணப்பத்தில் தெளிவுடையவர்களாய் இருங்கள். “கர்த்தரை முகமுகமாய் காணும்” அனுபவத்தை நீங்களம் பெறக்கூடும்.


ஜெபங்கள்

கர்த்தவே, நீர் என்னண்டை வருவதற்கு நான் பாத்திரன் அல்லன். ஆனால், நீர் வாக்கருளின படி, என் உள்ளத்தில் வாசம் செய்து, என் சரீரத்தைச் சுகப்படுத்தும், ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


“கர்த்தாவே, இன்னும் கொஞ்சம் இரக்கம் காட்டும்”


9 மார்ச் 2011 (சாம்பற் புதன்) வே.வ: ஆதியாகமம் 18:16-33


நம்மால் தேவனோடு பேரம் பேசக் கூடுமா? இது ஒரு வஞ்சப் புகழ்ச்சியான நிலைமை – ஒரு புறம் தேவன் ஏகாதிபதி என்றும் அவரின் சித்தத்தை யாரும் மாற்றலாகது என்றும் கூறப்பட்டிருக்கிறது. மறுபுறம் ஒரு மாற்றம் உண்டாகும் அளவுக்கு ஜெபத்தில் அவரிடம் வற்புறுத்திக் கேட்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. (P.U.S.H.).

ஆதியாகமம் 18ல், ஆபிரகாம் தேவனிடம் மன்றாடி கேட்டுக் கொண்டதின் நிமித்தம், லோத்து பிழைத்துக் கொண்டான் என்று காணப்படுகிறது. – “கர்த்தாவே, பத்து நீதிமான்கள் அங்கே காணப்பட்டாலோ என்றான்.” ஆபிரகாம் யார் என்று நாம் நுணுகி ஆராய்வ்து சிறப்பாய் இருக்கும். ஆபிரகாம், தேவனின் கண்களில் கிருபை பெற்ற மனிதனாய் காணப்பட்டான் (18:3); அவன் தேவனோடு பயணிக்கிறவனாய் இருந்தான் (18:16); கர்த்தருடைய நம்பிக்கைக்குப் பாத்திரனாய் இருந்தான்; தேவனின் தோழனாய் இருந்தான் (18:17); கர்த்தரின் திட்டத்திற்குக் கீழ்ப்படிதல் உள்ளவனாயும் தன் பிள்ளைகளை நீதி நியாயத்திற்குக் கட்டுப்படுகிறவர்களாய் நடந்து கொள்ள கட்டளையிட்டவனாயும் இருந்தான். (வ19); சோதோம் பட்டணத்திற்காக தேவனின் திட்டத்தில் தலையிட்டு, அங்குள்ள நீதிமான்களுக்காக மன்றாடியிருக்கிறான் (18:23); கர்த்தர் நீதியான காரியத்தை மட்டும் செய்வார் என்ற நம்பிக்கையுடையவனாயும் இருந்தான் (18:25).


ஆபிரகாம் தேவனிடத்தில் பேரம் பேசவில்லை. மாறாக தன் உறவுக்காரனாகிய லோத்துக்காகவும் அவன் குடும்பத்துக்காகவும் கருணையோடு மன்றாடினான். அவனின் கரிசணை, தேவன் எப்படி தீர்ப்பையும் மீட்பையும் வழங்கி, நியாயமாக நடந்து கொள்வார் என்பதைப் புரியச் செய்தது. அவனின் வினா, தேவனின் அளவற்ற அறிவையும் ஞானத்தையும் மறுதலிப்பதாக அமையாது. மாறாக, தேவன் எப்படி நிலைமைகளைக் கையாள்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளும் வழியாகும். பத்து நீதிமான்கள் இருந்தாலும் அப்பட்டணத்தைச் சங்கரிப்பதில்லை என்று கர்த்தர் வாக்கறருளின பிறகு, ஆபிரகாம் தொடர்ந்து பேரம் பேசுவதை சிரமமின்றி நிறுத்திக் கொண்டான். இவ்விடம், தனது சகோதரரின் குமாரனான லோத்து. பிழைத்துக் கொண்டான் என்று நம்பியதோடு, பூலோகத்தாரின் நியாயாதிபதியாகிய கர்த்தர். (18.25) நீதியும் நியாயமுமானவர் என்பதையும் அறிந்து கொண்டான்.


தியானிக்கும் தருணம்


இவ்வுலக காரியங்களிலும், உன்னிமித்தமும் உன் ஜெபத்திலும் கர்த்தர் நீதியும் நியாயமுமாக நடந்து கொள்கிறார் என்று. நீ கருதுகிறாயா?

ஜெபங்கள்


பரலோக கர்த்தாவே, புரிந்து கொள்வதற்கான ஞானத்தையும், விசுவாசிப்பதற்கான உள்ளத்தையும் உம்மைப் பின்பற்றுவதற்கான பாதையையும் ஈந்தருளும். இவ்விதமாய் என் ஜெபத்திலும் நடவடிக்கையிலும் பிறருக்கு ஆசீர்வாதமாக அமைய வழிவகுத்தருளும். எங்கள் சகோதரர்கள் மற்றும் எங்கள் பிரதான ஆசாரியரும் வாதாடுகிறவருமாகிய எங்கள் கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் ஜெபத்திலும் பங்கு பெறுகிறோம். ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தமிழ் கிறித்தவ தளத்தில் நண்பர் ராவன்க் ஜாண்சன் அவர்கள் பதித்துள்ள லெந்து கால தியானக் கட்டுரைகளை அன்றாடம் நம்முடைய தளத்தில் பதிக்க ஏவப்பட்டேன்;இது நல்லெண்ண அடிப்படையில் செய்யப்பட்டதால் இதற்கான உரிமையை நானே எடுத்துக்கொண்டேன்;வாசகர் படித்து பயன்பெறுவார்களாக‌.

தபசு கால தியானம்

தபசு 2011
:- கிறிஸ்துவிலும் அருட்பணியிலும் ஐக்கியப்படுவோம்

நமது அத்தியட்சாதீனம் அடுத்த தசாப்தத்திற்கான (2011 – 2020) கிறிஸ்துவிலும் அருட்பணியிலும் ஐக்கியப்படுவோம் என்ற கருப்பொருளை நிர்ணயித்துள்ளது. அருட்பணியில் ஐக்கியப்படுவோம் என்ற ஆக்ககரமான. செயல்திட்டத்தின் மூலம், அனைவரையும் கிறிஸ்துவில் ஐக்கியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கருப்பொருள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

I. கிறிஸ்துவில் ஐக்கியப்படுவோம்

பல முகங்களும் வண்ணங்களும் கொண்ட இவ்வுலகில், ஜனங்கள் கவலையிலும் பிரிவினையிலும் மூழ்கியிருப்பதைக் காண்பது அதிர்ச்சியைத் தருகிறது. கர்த்தர் நம்மை நிறத்தாலும் இனத்தாலும் பிரிவு படுத்திதான் படைத்திருக்கிறார். ஆனால், நமது இனத்திற்காகவும், கொள்கைக்காகவும், தோல் நிறத்திற்காகவும், சமயத்திற்காகவும், இறை நம்பிக்கைக்காகவும், சமய வர்க்கத்திற்காகவும் குடியுரிமைக்காகவும், மொழிக்காகவும் சண்டையிட்டுக் கொள்வதின் மூலம் அவரின் திட்டத்தை அழித்துப் போடுவதை அவர் காண விரும்ப மாட்டார். நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மீதான விசுவாசத்தின் மூலம் சர்வ வல்லமையுள்ள ஆண்டவர் நமக்கு மன்னிப்பையும், சுயாதீனத்தையும், பரிசுத்தத்தையும் தந்து நம்பிக்கையை உண்டாக்கியிருக்கிறார். வெளிப்படுத்தல் 7.9, “இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்ததும், ஒருவனும் எண்ணக்கூடாததுமான திரளான கூட்டமாகிய ஜனங்கள், வெள்ளை அங்கிகளைத் தரித்து, தங்கள் கைகளில் குருத்தோலைகளைப் பிடித்து, சிங்காசனத்திற்கு முன்பாகவும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகவும் நிற்கக்கண்டேன்”, என்று கூறி நம்மை உற்சாகப்படுத்துகிறது.

II.அருட்பணியில் ஐக்கியப்படுவோம்

ஒரே தரிசனத்தைப் பகிர்ந்து கொண்டு, இனம் – மொழி, திருச்சபை வர்க்கம், பயின்ற பள்ளி என்ற பிரிவினையைப் பாராமல், செயல்படுவதன் மூலம் திண்ணமாக வெற்றியடைவோம் என்று நம்புகிறோம். நம்முடைய பிரதான தரிசனம், கர்த்தருடைய திட்டத்தின் படி சரியான தருணத்தில் அருட்பணியை மேற்கொள்வதாகும். அத்தியட்சாதீனத்தில் பணியாற்றும் நாங்கள், கிருபை – சமாதானம் – சந்தோஷம் – நம்பிக்கை – ஒருமைப்பாடு ஆகிய அடிப்படையில் விதைகளை விதைப்பதன் மூலம் கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்டு கனிகளைத் தரமுடியும் என்று நம்புகிறோம்.
>பேராயர் எங் மூன் ஹிங் தபசு 2011



புஷ்டியான ஆசீர்வாத அறுவடைக்காக...

ஜெபத்தில் ………… பணிவிடையில் …………
அருட்பணியில் ………… சீடத்துவத்தில் …………

விதைகளை விதைப்போம்..!
ஜெபத்தில் விதைப்போம்..!!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx



மேற்கு மலேசிய அத்தியட்சாதீனம்- 2011
ஆசிரியர்:மறைதிரு டாக்டர் தான் ஜின் ஹுவாட்

உதவி:
திருமதி குளோ ராஜேந்திரன்
திரு. அலன் சொங்

தமிழ் மொழியாக்கம்:
மறைதிரு டேவிட் ராஜையா (ஆலோசகர்)
திரு. வி.பி.ஜான்சன் விக்டர் (தலைமை)
திருமதி டப்னி ஜோசப்
திரு. ஜே.ஜி.ராபின்சன் விக்டர்
குமாரி வதனா விக்டர்
திருமதி ஜெபமாது விக்டர் (ஒப்பச்சர்)


வெளியீடு:
மேற்கு மலேசிய ஆங்கிலிக்கன் அத்தியட்சாதீனம்
The Anglican Diocese of West Malaysia
16, Jalan Pudu Lama,
50200 Kuala Lumpur. Malaysia
அலைபேசி:. 603-20312728/20313213
அலை நகலி: 603-20313225
மின்னஞ்சல்:. anglican@streamyx.com
அகப்பக்கம்: www.anglicanwestmalaysia.org.my


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 3 | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard