Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: லெந்து கால தியானக் கட்டுரைகள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: லெந்து கால தியானக் கட்டுரைகள்
Permalink  
 


ஒரு சீஷனின் வாய்மொழி அறிக்கைகள்

11 ஏப்ரல் 2011 (திங்கள்) வே வ: மாற்கு 8:27-38

இந்த வேத பகுதியில், பரிசுத்த மாற்கு, “இயேசுவின் நிஜமான ரூபத்தை இரண்டாவது முறை எழுதியுள்ளான். இதற்கு முன்பு மாற்கு 6:14ல் இதே போன்ற ஓர் அறிக்கையை எழுதியுள்ளான்.

ஒரு சில சீஷர்கள், இயேசுவை யோவான் ஸ்நானன் என்றும் வேறு சிலர், இயேசு மரித்தோரிலிருந்து எழுந்து வந்தவர் என்றும், மற்றும் சிலர், இயேசுவை எலியா என்றும் அறிக்கையிட்டனர்.

மாற்கு 8ல், சீஷர்கள் அதைப் போன்ற ரூப அடையாளங்களை இயேசுவிக்குக் கொடுததார்கள். இயேசுவை இஸ்ரவேலின் ஒரு தீர்க்கதரிசியென்றும் பரலோகத்திற்குச் சென்ற எலியா என்றும், இயேசுவின் ரூபத்தில் பூலோகத்திற்கு வந்தார் என்றும் கூறினார்கள். இவைகளில் இயேசுவுக்கு முழு திருப்தி இல்லை. மறுபடியும் தன் சீஷர்களிடம் அதே கேள்வியைக் கேட்கிறார். “நீங்கள் என்னை யார் என்று கருதுகிறீர்கள்?” (8:29). உடனே, பேதுரு, “நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று முதுல் முறையாக விசித்திரமாக இயேசுவின் ரூப அடையாளங்களை அறிக்கையிட்டான். மறுக்ஷனமே, இயேசு பேதுருவையும் மற்ற சீஷர்களையும் தம் சுய ரூப அடையாளத்தை யாரிடமும தெரிவிக்க் கூடாது என்று கட்டளையிடுகிறார் (8:30).

உடனே, வசனம் 31ல் இயேசு, முதல் முறையாக தன்னுடைய பாடுகள், மரணம் போன்றவற்றைப் பற்றி சம்பாஷிக்கத் தொடங்கினார். ஆனால், இயேசுவின் சிலுவை மரணம் என்ற பாடுகள் நிறைந்த சுய ரூப அடையாளத்தைப் பேதுருவால் ஏற்றுக் கொள்ள முடீயவில்லை, அறிக்கையிடவும் முடீயவில்லை. ஆகவேதான் வசனம் 33ல், இயேசு பேதுருவைக் கண்டித்து உணர்த்துகிறார். சிலுவையில் பாடுபட்டு மரணத்தை ருசி பார்த்த பிறகுதான் இயேசு கிறிஸ்துவாக முடியும் என்று பேதுருவை உணர்த்திருகிறார். இதே சுய ரூப அடையாங்களின் முக்கியத்துவத்தை தான், இயேசு தான் உயிர்த்தெழுந்த பிறகு நாற்பது நாட்களாக தன் சீஷர்களுக்குக் கற்றுக் கொடுத்தார் என்று லூக்கா 24.26 கூறுகிறது.

தியானிக்கும் தருணம்

இன்று இயேசு உங்களிடம் இக்கேள்விகளைக் கேட்கிறார், “கடவுள் யார்?” “சத்தியம் என்றால் என்ன?”, “நான் யார்?” என்ன பதில் உங்களால் கூறக்கூடும? இயேசுவின் சுய ரூப அடையாளமாகிய பாடுகள், மரணம் மற்றும் அதுனோடே வரும் மகிமையை உங்கள் பதில்களில் காணக்கூடுமா?

ஜெபங்கள்

உன்னத தேவனின் மைந்தனாகிய இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக. குருசில் தொங்கி, விண்ணுலக கிரீடம் பூண்டு எனக்காக மரித்தீரே, உன்னதத்தின் கிரீடம் தந்தீரே, நான் உமக்கு செவி சாய்த்து, நன்றியுள்ள இருதயத்தோடே உம்மைக் கிட்டி சேர்ந்து உயத்திடுவேன். ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஒரு சீஷனுக்கு முன் இரு திசை பாதைகள்

10 ஏப்ரல் 2011 (ஞாயிறு) வே வ: மத்தேயு 7:13-29

இவ்வசனங்கள் மலைப் பிரசங்களுள் முன்னுரை. பலர், இவ்வசனங்கள் கிறிஸ்துவ ஜீவியத்தின் அடிப்படை தத்துவம் என்று எண்ணுகிறார்கள். ஆனால் அது தவறு! உண்மையில் இவ்வசனங்கள் நம் அன்றாட ஜீவியத்தில் காணப்படும் இரு வெவ்வேறான அல்லது எதிர்மறையான நிலைமைகளில் எதைத் தெரிந்து கொள்கிறோம் என்பதைக் குறித்துப் பேசுகிறது. உதாரணத்திற்கு, மத்தேயுவில் இயேசுவானவர் இரு வகையான நீதி அல்லது நெறி (16:1-18), இரு வசை சொத்துகள் (6:19-23), இரு வெவ்வேறான தலைமைத்துவம் (6:24), இரு வெவ்வேறான கவலைகள் (6:25-34) போன்றவற்றைக் குறித்துப் பிரசங்கித்தார். இவைகள் அனைத்தும் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தத்துவம் கிடையாது. மாறாக எதைத் தெரிந்தெடுக்கப் போகிறீர்கள் என்பதைக் குறித்துப் பேசுகிறார். ஆகவேதான், இயேசுவானவர் தன்னுடைய பிரசங்கத்தை இன்னும் மூன்று உதாரணத்தோடு முடிக்கிறார்: கடினமான பாதையா அல்லது சுலோபமான பாதையா (17:13-14) உண்மையான போதகனா அல்லது பொய்ப் போதகனா (7:15-23), மற்றும் நிலையான அஸ்திபாரமா அல்லது வலுவற்ற அஸ்திபாரமா?

ஏன் இயேசுவானவர் இப்படிப் பிரசங்கித்தார்? இயேசுவானவர்க்குத் தெரிந்த்தும் அதைத் தடுக்கவும் முன்னெச்சரிக்கையாய் செய்யாதார். சீஷர்கள் பிரசங்கத்தைக் கேட்டுவிட்டு இது ஒரு நல்ல பிரசங்கம் என்று சொல்லிவிட்டு போய் விடாதபடிக்கும் மற்றும் இயேசுவானவர், சீஷர்கள் ஒரு தீர்மானம் எடுக்க எத்தனிக்கும் வகையில் இப்பிரசங்கத்தை அமைந்திருந்தார். ஆம், அதே கேள்விகளையும் நம்மை நோக்கிக் கேட்கிறார். “எவ்வழியை நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்? நாம் பரலோக இராஜ்யம் சென்று சேர்வம் சேராத்தும் நாம் இன்று எடுக்கும் தீர்மானத்தில்தான் இருக்கிறது.

தியானிக்கும் தருணம்

யோசுவா 24 15, இன்றைக்கு நீங்கள் யாரை சேவிக்கத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள்

ஜெபங்கள்

அன்புள்ள இயேசுவானவரே, மாயையான இவ்வுலகைப் பின்பற்றி, அதின் நீரோட்டத்தோடே அடித்துச் செல்லப்படாமல் எதிர்த்து நீந்த கிருபை புரிந்து என்னை ஆண்டிடும். தைரியம், விசுவாசம், இவைகளைத் தாரும். உமது நாமம் மகிமைப்படுவதாக. ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுங்கள்

9 ஏப்ரல் 2011 (சனி) வே வ: மத்தேயு 6:19-34

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள் என்ற கட்டளை நமது ஜீவியத்தில் என்ன பொருளைத் தருகிறது? தேவனுடைய ராஜ்யத்தை நாம் தலையாய நோக்கமாகக் கொள்ள வேண்டும். “உமது வார்த்தை எனக்குக் கட்டளையாகவும், உமது ஆவி எனது வழிகாட்டியாகவும், உமது மகிமை எனது சிந்தையை ஆட்கொள்வதாகவும் இருப்பதாக” – இது ஒரு ஐயத்தை ஏற்படுத்துகிறது. தேவனுடைய மகத்துவம் எனது தலையாய நோக்கமாக இருக்கிறதா? என்பது அந்த ஐயம். அதிகாலையில் துயில் எழும்போது, தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துவதற்காக நான் என்ன செய்ய வேண்டும்? என்ற கேள்வியை நமக்காக கேட்கிறோமா?

மத்தேயு 6:19-34ல் இடம் பெறும் வசனங்கள் சந்தேகம் இல்லாமல், செய்யத் தகாத காரியங்களைச் சுட்டுகிறது. பூமியிலே உங்கள் பொங்கீஷத்தைச் சேகரிக்க வேண்டாம்; உன் ஜீவனைக் குறித்து கவலைப் பட வேண்டாம்; அண்ண ஆகாரத்தைக் குறித்தும், ஆடையைக் குறித்தும், சரீரத்தைக் குறித்தும், எதிர் காலத்தைக் குறித்தும கவலைப் பட வேண்டாம் என்றும் இந்த வசனங்கள் கட்டளை இடுகின்றன. எவற்றைக் குறித்து நாம் கவலைப் பட வேண்டும் என்று தெளிவாகச் சுட்டப்படுவதால், அவற்றைப் புரிந்து கொள்வதும் எளிதாக உள்ளது. எனவே, மத்தேயு 6:33ன் முதல் பகுதியில் கவனத்தைச் செலுத்தி விட்டு; அதன் பிற்பகுதியைப் புறக்கணித்து விடுகிறோம். ‘அப்போது இவைகள் எல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும்’ – பரலோக காரியங்களில் உங்கள் தலையாய கவனத்தைச் செலுத்துங்கள் என்பது இதன் பொருள். நாம் பரலோகக் காரியங்களைக் குறித்துக் கவலைப் பட்டால், தேவன் நமது கவலைகளைப் போக்குவார் என்றும் கொள்ளலாம். இவை எல்லாம் நமக்குத் ‘தானாகக்’ கிடைத்து விடும் என்பது பொருளல்ல; தேவனுடைய கரங்கள் நம்முடைய தேவைகளில் அசைவாடும் .

தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுதல் என்பது நமது யோசனைகளைப் பற்றிய காரியமாகும். ரோமர் 12:2ல், ‘நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந் தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத் தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்’ என்ற வசனத்திற்கொப்ப, நாம் தேவனுடைய சித்த்த்தோடு பொறுந்தி நமது மனதைப் புதிதாக்கிக் கொள்ள வேண்டும். தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவது என்றால், அவருக்கான பணிவிடையில் ஈடுபடுவது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, நாம் தேவனுடைய பணிவிடைகளில் கவனம் செலுத்த வேண்டும். காசு பணத்தையும் ஆதாயத்தையும் கணக்குப் பார்க்காமல், அவருடைய பணிவிடையாளர்களாக இந்த உலகுக்குச் சேவை செய்ய வேண்டும்.

தியானிக்கும் தருணம்

நாம் மறுரூபமாக்கப் படுவதற்குத் தயாராக உள்ளோமா? நமது நடவடிக்கைகள் தேவனுடைய மகத்துவத்தைப் பிரதிபலிக்கிறதா?

ஜெபங்கள்

பரலோக தந்தையே, நாங்கள் எப்பொழுதும் நமது ராஜ்யத்தையும் நீதியையும் தலையாய நோக்கமாகக் கொண்டு ஜீவிக்க்க் கிருமை தாரும். ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

சீடத்துவத்தில் விதைப்போம் => சீடர்களின் குணாதிசயங்கள்

8 ஏப்ரல் 2011 (வெள்ளி) வே வ: மத்தேயு 5:1-16

“பரமானந்தம்” என்று பிரபலமாக வர்ணிக்கப்படுகிற இந்த வேத பகுதி, இயேசு சீடர்களுக்கு மலையில் பிரசங்கித்தவை ஆகும். கிறிஸ்தவ சீடத்துவ பண்புகளை இது விளக்குகிறது

இந்த வேதப் பகுதி சீடர்களிடம் காணப்பட வேண்டிய பண்புநலன்களையும் அவர்களுக்கு அருளப்படுகிற ஆசீர்வாதங்களையும் விளக்குகிறது. ஆசீர்வாதத்தைப் பெற்று களிகூறுகிறவர்கள் அல்லது பரமானந்தத்திற்குரிய வாழ்வைப் பெற்றவர்கள் சீடர்கள்.

இந்தப் பரமானந்த வசனங்கள் ஒவ்வொன்றும் இரண்டு பகுதிகளாகத் தோன்றுகின்றன. முதல் பகுதி, உண்மையான சீடத்துவத்தின் தன்மைகளைக் கூறுகிறது; பிற்பகுதி அவர்களுக்குப் பாத்திரமான வெகுமதியைக் கூறுகிறது. உண்மையான சீடர்களுக்கு நிகழ் காலத்திலும் எதிர்காலத்திலும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்று வெளிப்படுத்தும் வகையில் இந்த வசனங்கள் அமைந்துள்ளன.

தேவ ராஜ்யத்தை நோக்கி சீடர்கள் இங்கே, இப்பொழுது பின்வரும் செம்மைப்படுத்தும் பண்பு நலன்களை வெளிப்படுத்த வேண்டும்: 1) ஆவியில் தாழ்மை (5:3), தத்தம் ஆவியின் பெலவீனத்தைக் கண்டுணர்ந்து தேவனை சார்ந்திருத்தல்; 3) மனித மீறுதல்களின் நிமித்தம் துயரப்படும் பண்பு நலன். இவை போக, சாந்த குணம், நீதியின் மேல் பசிதாகம், இரக்கம், இருதய சுத்தம், சமாதானப்படுத்துதல், நீதியின் நிமித்தம் துன்பப்படுதல் ஆகியவையும் உண்மையான சீடத்துவத்தின் பண்புகளில் அடங்கும். இந்தப் பண்பு நலன்களைத் தரித்திருக்கிறார்வர்கள் மாம்சமான ஜீவியத்தில் ஈடுபட்டிருப்போரை விட முற்றிலும் மாறுபட்டிருப்பார்கள்.

ஆண்டவரின் சீடர்கள் உண்மையில் இந்தப் பண்பு நலன்களைத் தரித்திருந்தால், அவர்கள் உலகின் உப்பாகவும் வெளிச்சமாகவும் பிரகாசிப்பார்கள் (5:13-14). சமுதாயத்தில் காணப்படும் சீர்கேடுகளுக்கு விரோதமாகக் கரிப்புடையவர்களாகவும், அதே நேரத்தில் தெய்வீக நன்னெறியாளர்களாகவும் திகழ்வார்கள். பிரகாசிக்கிற அவர்கள், துன்மார்க்கமான செயல்களை பகிங்கரப்படுத்துவதோடு, ஜோதியின் ராஜாரீக அங்கத்தினர்களாகவும் வாழ்வார்கள். எனவே, நாமும் ஜோதிகளாகப் பிரகாசித்து, தெய்வாம்சமான வாழ்வை வெளிப்படுத்துவதன் மூலம் இந்த உலகத்தார் அதைக் கண்டு நமது பரலோக பிதாவை மகிமைப் படுத்துவார்களாக (5:16).

தியானிக்கும் தருணம்

என்றாவது நீ பரலோக ராஜ்ய கோட்பாடுகளை அணுசரிக்க முயன்று, அது கடினம் என்று உணர்ந்துள்ளாயா? அல்லது கடினம் என்று கருதியதால், விட்டுவிட்டாயா? ‘மாம்சமான மனிதர்கள்’ பரலோக ராஜரீகத்தின் ஜோதியை உன்னில் காணக் கூடுமா?

ஜெபங்கள்

ஆண்டவரே, உம்மை மகிமைப்படுத்தும் வகையில், உமக்குப் பிரியமான ஜீவியத்தை வாழ வழிகாட்டும. அதன் மூலம், உலகுக்கு உப்பாகவும் ஒளியாகவும் திகழ்ந்து, இயேசு கிறிஸ்துவின் உண்மையான சீடருக்குரிய பண்பு நலனை வெளிப்படுத்த கிருபை தாரும், என் ஆண்டவரே. ஆமென் .



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நமது ஜீவ வரலாற்றைக் கூறுவோம்

7 ஏப்ரல் 2011 (வியாழன்) வே வ: அப். 26:1-31

பவுல் எருசலேமில் கைது செய்யப்பட்டதில் இருந்து, யூத விசாரணை மன்றத்தில் நிறுத்தப்பட்டது, பேலிக்ஸ், பொர்க்கியுபெஸ்து, அகிரிப்பா, கடைசியா ரோமர்கள் முன் தோன்றியது வரை அவன் சிறை பிடிக்கப்பட்ட கதை தொடங்குகிறது. எல்லா நிலைமைகளிலும் இரண்டு முரண்பாடான நிலைமைகளைக் காண்கிறோம் – அடுக்கடுக்காக மாறுகின்ற நிலைமை; தன் சொந்தக் கதையைக் கூறுவதில் பவுலின் உறுதியான தன்மை. (சூழ்நிலைக்கு ஏற்றவாறு பவுல் தன் அனுபவத்தைத் திரித்துக் கூறவில்லை). அக்ரிப்பா ராஜா முன் தன்னைத் தற்காத்துப் பேசும்போது, பவுல் தனது விசுவாசப் பயணத்தில் தனக்கு ஏற்பட்ட விசித்திரமான சம்பவத்தை விவரிக்கிறார். அதே அதிகாரத்தில், பவுலின் மனமாற்றம் மூன்றாவது முறையாகக் கூறப்படுகிறது. (காண்க அப்போஸ்தலர் 9:1-19; 22:2-21).

வாய்மொழியாகக் கூறப்படும் அவனது கதையில் மூன்று காலக்கட்டத்தைப் பார்க்கிறோம். பரிசேயராகச் செயல்படுவதற்குத் தான் பெற்ற பயிற்சி, ஆதி விசுவாசிகளை அவன் துன்புறுத்தியது, தமஸ்கு சாலையில் அவன் மனமாறியது ஆகியவை அந்த மூன்று காலக்கட்டம் ஆகும். அவனுடைய எல்லா ஊழியப் பயணங்களிலும், தான் புறஜாதியாருக்கு அப்போஸ்தலராக பணியாற்ற அழைக்கப் பட்டிருக்கிறான் என்பதை முழு இருதயத்தோடு நம்பியிருந்தான் .

அருட்பணியைப் பற்றி நாம் ஒரு முக்கியமான காரியத்தை இவ்விடம் கற்றுக் கொள்கிறோம் – நமது ஜீவியத்தில் கர்த்தர் வழங்குகிற தீர்ப்பு, தனியாளாகவும் சபையாகவும் இந்த உலகுக்குத் திரும்பத் திரும்ப நமது வாழ்க்கைப் பயணத்தைக் கூறிக் கொண்டே இருப்பது. நமது கதை மிக்க் கவர்ச்சியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை (பெரும்பாலும் அப்படி அமைவதில்லை). ஆனால், அந்த நமது வாக்கில் சத்தியம் வெளிப்பட வேண்டும். நாம் யாருக்காக அழைக்கப் பட்டிருக்கிறோம் என்ற விஷயத்தில் நம்பகத் தன்மை காணப்பட வேண்டுமே ஒழிய, பிறருடைய ஆலோசனைக்குச் செவி சாய்க்க வேண்டும் என்பதல்ல.

பவுல் மனமாற்றம் அடைவதற்கு முந்திய மற்றும் பிந்திய ஜீவியத்தை ஒரு. தொகையாகவே காண்கிறோம். அவனுடைய தோற்றம் முந்தியது போலவே மாறாமல் அமைந்திருந்தது. – வாஞ்சை நிறைந்த பரிசேயன் அதே வேளையில் உணர்ச்சிப் பூர்வமான நிருபருமாக இருக்கிறார். இதுபோன்று நாமும் நமது வாழ்வில் மேலான நோக்கத்தையுடைய ஆண்டவரிடம் வாஞ்சையுடையவர்களாகச் செயல்படும்போது, அசாத்தியமான ஆற்றலை வெளிப்படுத்த முடியும்.

தியானிக்கும் தருணம்

நமது ஜீவ வரலாற்றில் நாம் எந்தளவுக்கு வசதியாக இருக்கிறோம்? எந்த ஜீவ வரலாற்றை உலகுக்கு சொல்லப் போகிறோம்?

ஜெபங்கள்

கர்த்தாவே, உமக்காக பூரணமாக ஜீவித்து, நாங்கள் படைக்கப்பட்ட உன்னதமான நோக்கத்தை வெளிப்படுத்துவதோடு, எங்கள் ஜீவ வரலாற்றை உண்மையோடு உலகுக்கு பறைசாற்ற பெலன் தாரும். உமது நாமத்தினாலே நாங்கள் ஜெபிக்கிறோம். ஆமென்.


தனி தியானம்: பரிசீலிப்பதற்கு நேரத்தை ஒதுக்குங்கள்

1. உன் குடும்பத்தினரிடமோ, உறவினர்களிடமோ, பனிமனை நண்பர்களிடமோ எப்போது கடைசியாக சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொண்டாய்?

2. பிறருக்குச் சுவிசேஷத்தைச் செம்மையாகப் பகிர்ந்து கொள்ளும் பொருட்டு, எப்படி உன்னை ஆயத்தப்படுத்திக் கொள்ளப் போகிறாய்?

3. உனக்குப் நன்குப் பழக்கமான இருவருக்காகத் தொடர்ந்து ஜெபிக்கவும். இவ்வாண்டில் அவர்களுக்கு நற்செய்தி கூறுவதற்கு அணுகூலம் ஏற்பட ஜெபத்தில் கேட்டுக் கொள்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

புறஜாதியாரை எதிர்க்கொள்ளுதல்


6 ஏப்ரல் 2011 (புதன்) வே.வ: அப். 17:16-34

1. சமுதாயத்திற்குள் பிரவேசித்தல் Presence (அப். 17:16-21)
பவுல் ஏதேனுக்குச் சென்ற போது, அவர் புறஜாதியார் பலரை சந்தையில் காண்கிறார். அவர்களுள் பல ரகத்தவர் காணப்பட்டனர், சிலருக்கு அவருடைய உபதேசம் புரியவில்லை. பலர் அதில் கவனம் செலுத்தி விசாரிக்கத் தொடங்கினர். நாமும் இப்படிப் பட்டோர் பலரைச் சந்திக்க்க் கூடும். அவர்கள் நமது விசுவாசத்தைக் கேலி செய்து நகைக்கவும் கூடும். அதே நேரத்திதல் யாராவது நமது சாட்சியை அறிந்து கொள்வதற்குத் தங்கள் உள்ளத்தை ஆயத்தப்படுத்தவும் கூடும்.

2. சமுதாயத்தில் பறை சாற்றுதல் (Proclaiming) (அப். 17:22-31)
அத்தேனர் விக்கிரக ஆராதனைகளில் ஈடுபடுவதைக் கண்டு, “நீங்கள் மிகுந்த தேவபக்தி உள்ளவர்களென்று கண்டேன்”, என்று பாராட்டி சுவிசேஷத்தைப் பறை சாற்றுகிறார் (அறியப்படாத தெய்வம் என்று அவர் உணர்ந்திருக்கிறார்). பின்னர், அவர்கள் பேதமையில் ஆராதிக்கிற ஆண்டவரைப் பற்றிப் பேசப் போவதாக அறிவிக்கிறான் (எட்டிப் பிடித்தல்). தொடர்ந்து, அந்த ஆண்டவர் இந்த உலகத்தைப் படைத்து, மனுகுலத்தை ஒரு மனுஷரிடத்தில் இருந்து பெருகச் செய்து, அவர்கள் அனைவரையும் போஷிக்கிறார் என்று வாதம் புரிகிறார். அவருடைய சாயலில் உருவாக்கப்பட்ட நாம், அவரை பொன்னாலும் பொருளாலும் உருவாக்கப்பட்ட விக்கிரகங்களால்கூட படைத்து ஆராதிக்க்க் கூடாது என்று நினைவுறுத்துகிறார். நாம் மனிதர்களையோ, விக்கிரகங்களையோ அல்லாமல் அவரையே ஆராதிக்க வேண்டும், என்கிறார் (சரியாக அணுகி பிரச்சனையைக் கையாள்தல்).


3. சமுதாயத்தை வலியுறுத்துதல் (Persuading) (அப். 17:32-34)
பின்னர் அவர்களுடைய அறியாமை ஒரு முடிவுக்கு வந்து விட்டது என்று வாதிடுகிறார். அந்த மரணத்தில் இருந்து உயிர்ப்பிக்கப்பட்டு, பிரிதொரு நாளில் நம்மை நியாயந் தீர்க்க வருகிற மனுஷரைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்ளும் தருணம் வந்து விட்டது என்றும் வாதிடுகிறார். அப்போதுதான் இறுதி நியாயத் தீர்ப்பு ஏற்படும் .

இச்செய்தியைக் கேட்டு மக்கள் பற்பல தீர்மானத்திற்குள் வருகின்றனர். விசுவாசிக்க மறுக்கும் கூட்டம் – காத்திருந்து பார்ப்போம் (மதில்மேல் பூனை) என்ற பாவனையுடைய கூட்டம் – செவி சாய்க்கும் கூட்டம் (விசுவாசித்தல்) என்று தற்கால சபையாரைப் போன்று அவர்களும் வெவ்வேறு வழியில் தங்கள் மாற்றத்தை வெளிப்படுத்தினர். விசுவாசித்தோரில் சிலருடைய பெயர்கள் குறிக்கப்படுவதோடு அந்த அதிகாரம் நிறைவு பெறுகிறது.

தியானிக்கும் தருணம்

அறிவியல், பன்மைத்துவம், சார்புவாதம் என்ற தன்மைகளைக் கொண்ட இந்த நவ நாகரீக சமுதாயத்தில் சுவிசேஷம் பொறுத்தமானதாக இருக்கிறதா?

ஜெபங்கள்

கர்த்தாவே, பேதமையிலும் தவறான வழிகாட்டுதலிலும் வழிதப்பிப் போன ஆத்துமாக்களிடத்தில் நாங்கள் அக்கறை காட்ட உதவிடும். அவர்களைச் சென்றடையத் தக்கதான திறந்த வாசல்களைக் காட்டியருளும். காழ்ப்புணர்ச்சியற்று அன்போடும் அக்கறையோடும் அவர்களிடத்தில் நீர் எங்களுக்குத் தந்த சத்தியத்தைப் பகிர்ந்து கொள்ள ஞானத்தைத் தாரும். ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

புறஜாதியானுக்கு தேவ ராஜ்யத்தில் பங்குண்டா?

5 ஏப்ரல் 2011 (செவ்வாய்) வே.வ: அப்.10:24-48

இரட்சிப்பு யூதருக்குச் சொந்தமானது. ஆதியிலே கிறிஸ்தவர்களாக மாறிய யூதரும், அப்போஸ்தலனாகிய பேதுருவும் கூட, பரவலாகக் கூறப்பட்டு வந்த இந்த வார்த்தைகளை நம்பினார்.

கொர்நேலியுவின் சரித்திரம் இந்தத் தவறான அபிப்பிராயத்தை அகற்றிப் போடுகிறது - கொர்நேலியுவைச் சந்திக்கப் போவதற்குமுன் பேதுரு ஒரு தரிசனம் கண்டார். ஒரு பெரிய துப்பட்டி வானத்திலிருந்து தன்னிடத்தில் வருகிறதைக் கண்டான். யூதருடைய சட்டத்தின்படி சுத்தமானதும், அசுத்தமானுதுமான யாவும் அதில் இருந்தன. ‘அடித்துப புசி’ என்று பேதுருவுக்குச் சொல்லப் பட்டது. அதற்குப் பேதுரு, அப்படியல்ல, அசுத்தமான யாதொன்றையும் நான் எப்போதும சாப்பிட்டதில்லை என்று கூறினார் (அப் 10:14). தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக எண்ணாதே என்ற ஒரு சத்தம் கேட்டது (10:15) இவ்வாறு ஒரு முறை சத்தம் கேட்ட பின்பு அந்தக் கூடு திருமபி வானத்தைதுககு எடுத்துக் கொள்ளப் பட்டது. பேதுரு குழப்பமடைந்தார்.

இந்தக் குழப்பத்திற்கான பதில், பரிசுத்த ஆவியானவர் பேதுருவை கொர்னலியுவுடன் வந்த மனிதனைக் காண அனுப்பிய போது கிடைத்தது. கொர்னலியும் ரோம பட்டாளத்தில் நூற்றுக்கு அதிபதியாக இருந்தான். அவன் பேதுருவைத் தன் வீட்டுக்கு அழைத்திருந்தான். கொர்னலியுவுக்கும் ஒரு தரிசனம் உண்டாயிற்று. அதனைப் பேதுருவுடன் பகிர்ந்து கொண்டான். இத்தருணத்தில், தேவன் பட்சபாதம் உள்ளவரல்லர் என்றும் சகல ஜாதிகளையும் ஏற்றுக் கொள்கிறார் என்பதையும் பேதுரு உணர்நது கொண்டான். (அப். 10:34f). பேதுரு இயேசுவைக் குறித்த நற்செய்தியை உபதேசிக்கும் போது ஓர் அற்புதமான காரியம் நடைபெற்றது – பரிசுத்த ஆவியானவர் கொர்னலியுவின் குடும்பத்தார் மீது இறங்கி, பல பாஷைகளைப் பேசியதோடு தேவனையும் துதித்தார்கள் (10:44-46). யூதக் கிறிஸ்தவர்களும் பேதுருவோடு அதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தனர்.

பல சந்தர்ப்பங்களில் ஆண்டவர் நம்முடைய பட்சபாதத்தில் அடையாளங்கள் மூலமும் அற்புதங்கள் மூலமும் இடை மறிக்கிறார். இவ்விடம், ஆண்டவர் திட்டமான முறையில் பேதுருவால் பிற்காலத்தில் மறுக்க முடியாத வகையில் பிழையில்லாமல் செயல்படுகிறார். ‘ஆதலால் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசித்திருக்கிற நமக்குத் தேவன் வரத்தை அநுக்கிரகம் பண்ணினது போல அவர்களுக்கும் அந்த வரத்தையே அநுக்கிரகம் பண்ணியிருக்கும் போது தேவனைத் தடுக்கிறதற்கு நான் எம்மாத்திரம்?’ (அப். 11:17-18). இது பேதுருவின் சிந்தனை முறையை மாற்றியமைத்த்து. ‘ஜீவனுக்கேற்ற மனந்திரும்புதலைப் புறஜாதியாருக்கும் அருளுகிறவராய் இருக்கிறார்’.

தியானிக்கும் தருணம்

தேவ ராஜ்யத்தில் இடம் பெற வேண்டியவர்களைக் குறித்து நாம் எந்த வகையில் காழ்ப்புணர்ச்சி கொண்டிருக்கிறோம்?

ஜெபங்கள்

எங்கள் பரலோகத் தந்தையே, உமது பரலோக நோக்கத்திற்கு விரோதமான. காழ்ப்புணர்ச்சிகளை ஆராய்ந்தருளும். என்னை மன்னித்தருளுவதோடு, மந்தையில் சேரா ஆத்துமாக்களைக் குறித்து நீர் சிந்திப்பது போலவே நாங்களும் சிந்திக்க எங்களைப் பக்குவப்படுத்தும். இயேசுவின் நாமத்திலே ஜெபிக்கிறேன். ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

தேவ கிருபை பெற்ற உபதேசகர்

4 ஏப்ரல் 2011 (திங்கள்) வே.வ: அப். 9:1-22

யாராவது ஒருவர் உன்னிடம் வந்து, “தேவன் என்னுடன் பேசி, நான் முழுநேர ஊழியமாக அவருக்குச் சேவை செய்ய வேண்டுமென்று கட்டளை கொடுத்தார்”, என்று சொல்வாரானால், நீ அதை நம்புவாயா? தேவன் தாமாகவே நமது வாழ்வில் குறுக்கிட்டு நாம் அவருக்காக ஊழியம் செய்ய வேண்டும் என்று கட்டளையிடுவாரா?

இன்று வாசிக்கும் பகுதியில் அப்போஸ்தலனாகிய பவுலின் குணப்படுதலானது, சரித்திரத்தில் கிரியை செய்து, புற ஜாதிகளுக்கு நற்செய்தியை அறிவிக்கும்படி கட்டளை கொடுத்த ஜீவனுள்ள தேவனுக்கு சாட்சி பகவர்தாக இருக்கிறது. இந்தக் குணப்படுத்தல் அபூர்வமானதும் விசேஷித்ததுமாக இருககிறது. ஏனென்றால் சவுல், “கர்த்தருடைய சீஷரைப் பயமுறுத்திக் கொலை செய்யும்படி” (9:1) தமஸ்குவுக்குப் போய்க் கொண்டிருந்தான். கிறிஸ்தவ மார்க்கத்தைச் சேர்ந்தவர்களைக் கண்டு பிடித்து அவர்களைக் கைதிகளாக எருசலேமுக்குக் கொண்டுவரப் போவதற்காகவே தமஸ்குவுக்குப் போய்க் கொண்டிருந்தான் (9:2). சிலுவையிலறையப் பட்ட கிறிஸ்துவைப் பற்றிய செய்தியை தேவ தூஷணமாகக் கருதினான். யூத மார்க்கத்திற்கு மாறுபட்டதாக இருப்பதினால் இதை வேரோடு பிடுங்கி அழித்து விட நினைத்தான். உபா. 21:23ன் படி தூக்கிலே போடப்பட்டவன் தேவனால் சபிக்கப் பட்டவன். இவர் மேசியாவாக இருகக முடயாது என்று சவுல் கருதினான்.

பேதுரு இது குறித்துச் சிந்தித்துக கொண்டிருந்த போது, கொர்நேலியு என்ற நூற்றுக்கதிபதி அனுப்பிய 3 பேருடன் போகும் படி ஒரு தரிசனம் கண்டு அதைப் பேதுருவுடன் பகிர்ந்து கொண்டார். இந்தச் சந்திப்பின் மூலமாக, தேவன் பட்சபாதம் காண்பிப்பவர் அல்லர்; ஆனால் எல்லா இன மக்களையும் ஏற்றுக் கொள்ளுகிறார் என்பதைப் பேதுரு அறிந்து கொண்டார் (10:34). பேதுரு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பிரசங்கித்த போது, ஒரு வியப்பான காரியம் நடந்தது- அங்கு கூடி வந்து வசனத்தைக் கேட்ட யாவர் மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார். அவர்கள் பல பாஷைகளைப் பேசினார்கள்.

தியானிக்கும் தருணம்

உன் ஜீவியத்தைப் பற்றிய தவறான எண்ணத்தைப் போக்குமளவுக்கும் கிறிஸ்துவுக்காய் சாட்சி பகறுமளவுக்கும் தேவ கிருபை விந்தையான முறையில் உன் அனுபவத்தைக் கடந்து சென்றதுண்டா?

ஜெபங்கள்

பரலோகத் தந்தையே, உம்மை நேசிக்கும் அனைவரும் மனப்பூர்வமான அர்ப்பனம் நிறைந்த உள்ளத்தோடு உம்மை வணங்க வேண்டும் என்ற வாஞ்சையோடு, அன்பையும் கிருபையையும் பொழிந்தருள்வதற்காக உம்மை ஸ்தோத்தரிக்கிறேன். உமது கிருபையைத் தந்து, உம்மைக் காணும் அளவுக்கு என் கண்களைத் திறந்தருளும். நீர் இருக்கின்ற வண்ணமாய் காணத் தக்கதாகவும் நீர் விரும்புகின்ற காரியத்தைக் காணத் தக்கதாயும் எனக்குக் கிருபை அருளும். தகுதியற்ற ஊழியக்காரனாகிய என் உள்ளத்தையும் திறந்தருளும். அவ்விதமாய் உமக்கு சாட்சியாகவும் உமது கட்டளைக்குச் செவி சாய்க்கவும் கிருபை தாரும். என் பாதையில் என்றென்றும் வழிநடத்தும். இயேசவின் நாமத்தினாலே,. ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

"வனாந்தர மார்க்கமாய் போ.."

3 ஏப்ரல் 2011 (ஞாயிறு) வே.வ: அப். 8:26-40

பிலிப்பு சில எல்லைகளைக் கடநது சென்று ஊழியம் செய்தார். யூதர் செல்லக்கூடாத சமாரியாவுக்குச் சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்த போது அவர் பூகோள ரீதியாகவும், இன ரீதியாகவும் உள்ள எல்லைகளைக் கடந்து விட்டார். (8:5) எத்தியோப்பியனாகிய ஒரு மந்திரியைப் பிலிப்பு சந்திக்கும்படி தேவன் தாமே ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். நாகமானை தேவன் குணமாக்கிய போது எலிசாவின் வாழ்க்கையில் எலிசாவின் வாழ்க்கையில் இது போன்ற சம்பவத்தை இந்தச் சந்திப்பு எதிரொலிகக்கிறது. இது லூக்கா 4:24-27 வசனங்களில், புற ஜாதியாரும் சுவிசேஷத்தை ஏற்றுக் கொள்வார்கள் என்று இயேசு தீர்க்கதரிசனமாக் கூறிய வார்த்தைகளில் நிறைவேறுதலாகக் காணப்படுகிறது.

எத்தியோப்பிய மந்திரி புறஜாதியானவன் என்பது மட்டுமல்ல. ராஜஸ்திரியாகிய கநதாகே என்பவளுக்கு மந்திரியும் அவளுடைய பொக்கிஷம் எல்லாவற்றுக்கும் தலைவனும்யிருந்தான். தான் வாசிப்பதன் கருத்தை அறியாமலே அவன் ஏசாயா தீர்க்கதரிசியின் ஆகமத்தை வாசித்துக் கொண்டிருந்தான். யாரைக் குறிந்து இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது என்று அவன் கேட்டபோது பிலிப்பு இந்த வாய்ப்பைப் பயன்படுததிக் கொண்டு இயேசுவைக் குறித்து அவனுக்குப் பிரசங்கித்தான். அவன் ஞானஸ்நானம் பெற விருமபியபோது, நீர் முழு இருதயத்தோடும் விசுவாசித்தால் எந்தத் தடையுமில்லை என்று கூறி அவனுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்.

வனாந்தரமான பாதையிலும் கூட சுவிசேஷமாகிய விதை விதைக்கப் பட்டது. இந்த விசுவாசத்தோடு அவன் எத்தியோப்பியாவிற்குத் திரும்பிச் சென்றான். தன்னுடைய வாழ்க்கையையும் செல்வாக்கையும் கிறிஸ்தவுக்காக உபயோகித்தான். பிற்காலத்தில் எத்தியோப்பியா கிறிஸ்தவ நாடாக மாறினது. (சங் 68:31) சுவிசேஷத்திற்குள்ளாக அனைவரும் சேர்த்துக கொள்ளப்படுவார்கள் என்பதை இது உறுதி படுத்துகிறது. முழு இருதயத்தோடும் இயேசு. கிறிஸ்துவை விசுவாசிக்கிற எவரும் எவ்விதமான வேறுபாடுமின்றி வரவேற்கப் படுகிறார்கள் .

தியானிக்கும் தருணம்

தக்க சமய வாய்கிற போதெல்லாம் இன அந்தஸ்து போன்றவற்றைப் பாராமல் எவரோடும் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ள பிலிப்பு ஆயத்தமும் விருப்பமும் உள்ளவராக இருந்தார். இந்தத் தன்மையானது இயேசுவைப் பின்பற்றும் யாவரிலும காணப்பட வேண்டியது மிக அவசியம். இன்று யாராவது, நான் கிறிஸ்தவத்திறகு என்ன செய்ய வேண்டும் என்று உன்னிடம் கேட்டால் நீ அவர்களுக்குப் பதில் கூற ஆயத்தமா? (2தீமோ 4:2) அப்படியென்றால் நீ என்ன கூறுவாய்?

ஜெபங்கள்

கர்த்ததாவே, என்னுடைய வாழ்க்கையில் நீர்தாமே அமைத்துத் தாரும். எதிர்பாராத சந்திப்புகளை நான் அடையாளம் கண்டு கொள்ளவும், உம்மில் நான் வைத்துள்ள நம்பிக்கையின் காரணம் என்ன என்று என்னிடம் கேட்பவர்களுக்குச் சரியான பதில் கூறும்படி நான் எப்பழுதும் ஆயத்தமாயிருககும் படியாகவும் எனக்கு உதவி செய்தருளும் (1பேதுரு 3:15). இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்ளுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

பகிரங்கமான அறிக்கை…

2 ஏப்ரல் 2011 (சனி) வே வ: அப்போஸ்தலர் 7:1-53

முந்தின அதிகாரத்தில் தனக்கு விரோமாகச் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஸ்தேவன் பதிலளிப்பதை இந்தப் பகுதியில் வாசிக்கிறோம். அப்போஸ்தலர் நடவடிகளின் புத்தகத்தில் எழுதப் பட்டுள்ள மிக விரிவான பேச்சு இது. தனக்காக வாதாடுவதற்குப் பதிலாக ஸ்தேவன் இந்த வாய்ப்பைத் தன் பேச்சைக் கேட்டுக கொண்டிருந்தவர்களைக் குற்றம் சாட்டும படியாக உபயோகித்தார். பழைய ஏற்பாட்டில் காணப்படுவது போல் இவர்களும் தங்கள பிதாக்கள் போலவே திரும்பத் திரும்பத் தேவனுக்குக் கீழ்ப்படியாதவர்களாக இருக்கிறார்கள் என்று எடுத்துக் கூறினார். (7:51-53) ஸ்தேவன் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பியிருந்தால், அவ்விதமாகப் பேசியிருக்க மாட்டார். அவர் பேசியதைக் கேட்ட மக்கள் கோபமடைந்து அவரை நகரத்துக்குப் புறம்பே தள்ளிக் கல்லெறிந்து கொன்றார்கள்
(7:54-60).

ஸ்தேவானுக்குத் தன்னைத் தானே காப்பாறிக் கொள்ள வேண்டும் என்ற உள் நோக்கம் இல்லை. ஆனால், இயேசு கிறிஸ்துவுக்கு உண்மையுள்ள சாட்சியாக இருக்க வேண்டும் என்ற வாஞ்சையே அவனுக்கிருந்தது. அவனுடைய சாட்சி கிறிஸ்தவ மதத்தை ஆதரித்து அதன் சார்பாக வாதாடுவது போல் இருந்தது. நீதிபரராகிய இயேசுவின் வருகையானது, பாவம் மன்னிக்கப்படும் படியாக தேவாலயம் சென்று பலி செலுத்த வேண்டும் என்ற பழக்கத்தை அவசியம் அற்றதாக்கி விட்டது. ஸ்தேவன் தனக்கு விரேதமான குற்றச்சாட்டில் நிரபராதியாக இருந்தார் என்று சொல்வது உண்மை என்ற போதிலும், அவர் கிறிஸ்து என்ன செய்திருக்கிறார் என்பதைக் கொண்டு பழைய ஏற்பாட்டின் செய்தியைப் புது விதமான விளக்கம் கூறிப் போதித்தார். இந்தப் புதிய விளக்கம் உண்மையானது என்பதற்கான சாட்சி, ஸ்தேவானுடைய வாழ்க்கையிலேயே காணப்படுகிறது.

ஸ்தேவன் விசுவாசமும பரிசுத்த ஆவியும் நிறைந்தவர் என்று இவர் பரிசுத்த ஆவியினால் வழி நடத்தப்படுகிறார் என்றும் லூக்கா தமது அப்போஸ்தலருடைய நடவடிகளில் 3 முறை குறிப்பிட்டிருக்கிறார். (6:10, 7:55) பரிசுத்த ஆவியானவரின் வருகையானது, தேவாலயம் சென்று யூத முறைப்படி பலி செலுத்திப் பாவ மன்னிப்புப் பெற வேண்டிய பழக்கத்தைத் தேவையற்றதாக்கி விட்டது.

தியானிக்கும் தருணம்

இந்த உலகம் நீதி, நியாயமற்றது என்பதை ஸ்தேவன் நமக்கு நினைவூட்டுகிறார். இது பாவம் செய்வதை விரும்புவதினால் கிறிஸ்துவின் அதிகாரத்துககுள்ளாக வருவதை விருமபுவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ற விதமாக சுவிசேஷத்தை நாம் பகிர்ந்து கொள்ளும் போதும், சிலர் செய்தியை ஏற்றுக் கொள்ளாததைக் குறித்து நாம் நினைக்கக் கூடாது. நாம் சொல்வதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அறிந்த போதிலும், மக்கள் தங்கள் பாவங்களை உணர்ந்து கொள்ளத் தக்கதாக சுவிஷேத்தை அறிவிக்க நாம் ஆயத்தமா?

ஜெபம்

கர்த்தாவே இன்றைய தினம் நான் என்னை முற்றிலுமாக உமக்கு ஒப்புக் கொடுக்கிறேன். எந்த சூழ்நிலையிலும் நான் உமக்கு உண்மையுள்ள சாட்சியாக இருககும்படி என்னை உமது பரிசுத்த ஆவியினால் நிரப்பி நீர் விரும்பும் வண்ணமாக உம்மைப் பின்பற்றும் சீஷனாக என்னை மாற்ற வேண்டுக்ஷமன்று வேண்டிக் கொள்ளளுகிறேன். ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

புறப்பட்டுப் போய் சீஷராக்குங்கள்

1 ஏப்ரல் 2011 (வெள்ளி) வே வ: மத்தேயு 28:16-20

தாம் உயிர்த்தெழுந்தபின், இயேசு கிறிஸ்து கலிலேயாவில் உள்ள ஒரு மலையில் தமது சீஷர்களைச் சந்தித்தார். (28 10, 16-17) இயேசு தமக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு, “நீங்கள் புறப்பட்டுப் போய் சகல ஜாதிகளையும் சீஷராக்குங்கள்” என்ற பிரதான கட்டளையைக் கொடுத்தார். இந்தப் புதிய சீஷர்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டு, தேவனுடைய கட்டளைகள் அனைத்துககும் கீழ்ப்படிய வேண்டுமென்று போதிக்கப் பட வேண்டும்.

இந்தக் கட்டளை, சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொண்ட ஆவிக்கேற்ற பிரகாரம் காணாமற் போன மக்களை ரட்சிப்பதற்கு மட்டுமல்ல, இதற்கும் மேலாக இந்தப் பகுதியின் முக்கிய திறவுகோல் என்னவென்றால், இவர்களை இயேசு கிறிஸ்துவுக்கு சீஷர்களாக்க வேண்டும் எனபதே. இந்தக் குறிப்பை நாம் கவனியாமற் போனால், அது இந்தக் கட்டளையின் முழுமையான விளைவையும் நாம் இழந்து போவதாக இருக்கும்

கிறிஸ்துவுக்குள் புதிதான விசுவாசிகளைக் கொண்டு வருவதுடன் திருச்சபை நிறுத்தி விடக் கூடாது (இதையும் செய்ய வேண்டும்). பெயரளவில் மட்டுமல்லாமல், உண்மையாகவே தேவனுடைய வார்த்தையின் போதனைகளுக்குக் கீழ்ப்படிகிற சீஷர்களாக்குவதில் எந்தச் சிரமமும் பாராமல் நாம் தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.

இந்தப் பகுதி முழுவதிலும் எதிரொலிக்கும் கருப்பொருள் முழுமையான கீழ்ப்படிதல் என்பதே. ஏனென்றால் உலகத்தின் பாவங்களுக்காக இயேசு சிலுவையில் மரிக்க வேண்டும் என்ற, தேவனுடைய சித்த்த்திற்கு இயேசு மரண பரியந்தம் கீழ்ப்படிந்தார். வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரத்தையும் தேவன் அவருக்குத் தந்தருளினார். கலிலேயாவில் குறிப்பிட்ட ஒரு மலைக்கு வரும்படி இயேசு கூறியதற்குக் கீழ்ப்படிந்து சென்றதினால், அவர்கள் திருச்சபையின் வளர்ச்சிக்கு ஆதாரமான மையமாக விளங்கும் இந்தப் பிரதான கட்டளையைப் பெற்றுக் கொண்டார்கள். தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் சீஷர்களாக்குவதே இந்தக் கட்டளை.

இந்த்த் தபசு நாட்களின் தியானத்தில் நாம் இயேசு கிறிஸ்துவின் உண்மையும் கீழ்ப்படிதலுமுள்ள சீஷர்களாக்கும்படி கற்றுக் கொள்வதற்கு நாம் தேவனுக்கு முன்பாய் தாழ்மையுடன் முயற்சி செய்வோமாக. அதே வேதாகமத்தில் நாம் ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் வெளியில் சென்று எல்லா ஜாதிகளையும் சீஷர்களாக்குவோமாக.

நாம் கீழ்ப்படிதலுடன் மற்றவர்களுக்கு சுவிசேஷத்தை எடுத்துச் செல்லும் போது இயேசு எப்போதும் நம்மோடு இருக்கிறார் என்ற உறுதி நமக்குள்ளது

தியானிக்கும் தருணம்

சீஷராக்குங்கள் என்ற பிரதான கட்டளைக்கு நாம் கீழ்ப்படிந்திருக்கிறேனா? இதைச் செய்வதற்கு எனக்குத் தடையாக இருப்பது என்ன?

ஜெபங்கள்

நான் இயேசுவின் உம்ணமையான சீஷன் ஆகும் படியும், அவருக்காக மற்றவர்கள் சீஷராக்கவும் நான் கற்றுக் கொள்ளும் படி என் வாழ்க்கையை முற்றிலுமாக உமக்கு ஒப்புக் கொடுக்க உதவி செய்தருளும். கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

தேவ வார்த்தை உன் வாழ்வில் வேரூன்றியுள்ளதா?

31 மார்ச் 2011 (வியாழன்) வே.வ: மத்தேயு 13:18-23

இன்று நாம் தியானிக்கும் பகுதி, இதே அதிகாரத்தில் இயேசு கற்பித்த உவமையை விவரித்துக் கூறுகிறது. தாம் உவமைகளாகப் பேசுவதின் காரணத்தை இயேசு தமது சுவிசேஷகர்களுக்கு விளக்கமாகக் கூறியிருககிறார். அதாவது, ஆவிக்குரிய காரியங்களைக் கேட்டும் அதற்குக் கீழ்ப்படிய மனதுள்ளவர்களே அவற்றைப் புரிநதுணர்ந்து அந்த அறிவினால் தங்கள் ஜீவியம் மாற்றப்பட அனுமதிப்பார்கள்.

இந்த உவமையின் கருத்து தெளிவாக உள்ளது. விதைகள் விதைக்கப்பட்ட இடங்களில் 4 வித்தியாசமான நிலங்கள் உள்ளன. விதைப்பவர் இயேசு கிறிஸ்து. விதைகள் இயேசுவின் வார்த்தைகள். போதனைகளைக் குறிக்கின்றன. அந்த நிலங்கள், நம் இருதயங்கள் செய்தியைக் ஏற்றுக் கொள்ளும் தன்மையைப் பிரதிபலிக்கின்றன. சிலருக்கு இயேசுவின் வார்த்தைகள் வழியருகே மட்டுமே விழுவதாக இருக்கின்றன. பெருமை, அகங்காரம்,. சுய திருப்தி, பொய்யான மதம் போன்றவை பரலோக ராஜ்யத்தின் காரியங்களை அறிந்து கொள்ள முடியாதபடி தடை செய்கின்றன. தேவனுடைய சத்தியம் உள்ளத்தில் வேர் கொள்வதற்கு முன்பே பொல்லாங்கன் வந்து அவற்றைப் பறிந்துக் கொள்கிறான்.

சிலலுக்கு இந்த விதை கற்பாறையான நிலத்தில் விழுகிறது. தேவனுடைய வார்த்தை முதலாவது சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்ளப் படுகிறது. இருந்தபோதிலும் கட்டொழுங்கை ஏற்றுக் கொள்ளவோ அல்லது சீஷத்துவம், தியாகம், உக்கிராணத்துவம் ஆகியவற்றின் கிரயத்தைச் செலுத்த மணமில்லாமல் விசுவாசத்தில் குன்றி ஆவிக்குரிய வளர்ச்சி இல்லாமல் இடறலடைவான் (13:20,21).

சிலருக்கு இந்த விதை உழுது பண்படுத்தப்படாத நிலத்தில் விழுகிறது. உலகக் கவலையும் ஐசுவரியத்தின் மயக்குதலும் தேவனுடைய வார்த்தையை இவர்கள் உள்ளத்திலிருந்து அகற்றிப் போடுகின்றன. இதிலே களைகளும் முட்களும் நிறைந்திருப்பதினால் விதைகள் வேல் விட்டு வளர்ந்து பலன் தர முடியாமற் போகிறது

தியானிக்கும் தருணம்

உங்களுடைய வாழ்க்கையில் எந்த வகையான நிலத்தைப் பண்படுத்திப் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அது கடிமான நிலமா? முட்கள் நிறைந்த நிலமா அல்லது வழியருகேயுள்ள நிலமா? அல்லது நல்ல கனிகொடுத்து பலன் கொடுக்கும் செழிப்பான நல்ல நிலமா?

ஜெபங்கள்

தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னைச் சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும். (சங்கீதம் 139 23)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கர்த்தருடைய வார்த்தையை கூறத் தயங்கின சுவிசேகன் புதுபபிக்கப் பட்டான்

30. மார்ச் 2011 (புதன்) வே.வ: யோனா 3:1-10

அசீரியர்களுக்கு மனந்திரும்புதலைக் குறித்த செய்தியைப் பிரசங்கிக்க யோனா விருப்பமில்லாதவனாக இருந்ததைக் குறித்து நாமும் அவனுக்காக அனுதாபப் படலாம். இந்த அசீரியர் இஸ்ரவேலின் பரம எதிரிகளாக இருந்ததுடன் இவர்கள் மிகவும் கொடியவர்களும், அக்கிரமக்காரரும், பொல்லாதவர்களுமாயிருந்தார்கள். (யோனா 1:2, 3:8,10) முடிவாக, கிமு. 722ல் அசீரிய ராஜா சமாரியாவைக் கைப்பற்றி இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறையாகக் கொணடு போனான். நினிவேக்கு வரப்போகும் அழிவைக் குறித்த செய்தியை அசீரியாவின் தலைநகரமாகிய நினிவேக்கு எடுத்துச் செல்வதற்கு நானும் கூட மனமில்லாதவனாகதான இருந்திருப்பேன். ஒரு வேளை அவர்கள் மனந்திரும்பி இரட்சிக்கப்பட்டு விட்டால்! எனவே யோனா மறுத்து விட்டான். ஆனால், தேவன் ஒரு மீனை உபயோகித்து மறுபடியும் உத்தரவிடுகிறார் (யோனா 3:1-2).

தேவன் எத்தன்மையுடையவர் என்பதை யோனா அறிந்திருந்ததே (4:2) அவனுடைய தயக்கத்திற்கு முக்கியக் காரணமாக இருந்தது. நினிவேயின் மக்கள் அக்கிரமக்காரராக இருந்த போதிலும், வரப்போகும் அழிவைக் குறித்து செய்தியை அறிந்தால், அந்த மக்கள் மனஸ்தாப்படவும், தேவன் தமது கோபத்தை விட்டுத் திரும்பி அவர்கள் பேரில் இரக்கம் காண்பிக்கவும் வாய்ப்பு உள்ளது என்பதை யோனா அறிந்திருந்தான் (3:9-10) .

ஆனால் இதுவே நமது தேவனுடைய தன்மை. அவர் இரக்கமும, மன உருக்கமும, நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையுமுள்ளவருமாய் இருக்கிறார் (4:2, யாத் 34:6). அவர் நீதியும் நியாயமுமான தேவனாக இருந்த போதிலும் அவர், உண்மையாகவே தங்கள் பாவத்தைக் குறித்து மனஸ்தாபப் படுபவர்களுக்கு இரக்கமும மன உருக்கமும் பாராட்டுவதில் மகிழ்ச்சியாயிருக்கிறார் (3:5-8) சில நேரங்களில், உலகிலுள்ள பாவத்தை நாம் காணும்போது, மக்கள் மனந்திரும்பி இரட்சிக்கப்படும் படியாக இயேசுவில் விசுவசம் வைக்கும்படி அவர்களை அழைப்பதற்கு நாமும் கூடத் தயக்கமுள்ளவர்களாக இருக்கலாம். ஆனால், நாமும் முன்னே தேவனுக்குச் சத்துருக்களாக இருந்தோம். (கொலோ. 1:2) ஆனால் இப்பொழுது அவருடைய இரக்கம், மன உருக்கத்தை நம் வாழ்வி அறிந்தவர்களாக இருக்கிறோம். நம்முடைய இந்த அனுபவம், நாம் மலேசியாவிலும் அதற்கப்பாலுள்ள எல்லா மக்களோடும் இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் படியாக நம்மை ஊக்குவிப்பாராக

தியானிக்கும் தருணம்

இழந்து போன மக்கள் பேரில் தேவன் காண்பிக்கும் மன உருக்கத்தை நீயும் பகிர்ந்து கொள்கிறாயா? நீ விரும்பாத மக்களுக்கு சுவிசேஷத்தை அறிவிப்பதில் யோனாவைப் போல நீ எவ்விதத்தில் தயக்கம் உள்ளவனாக இருக்கிறாய்?

ஜெபங்கள்

அன்புள்ள பரம தகப்பனே, நீர் கிருபை மிகுந்த தேவனும், இரக்கமுள்ளவரும, கோபம் கொள்வதில் தாமதமாகவும், மாறாத அன்பு நிறைந்தவராகவும் இருப்பதற்காக உம்மைத் துதிக்கிறேன். நான் உமக்கு விரோதமாகப் பாவம் செய்த போதிலும, உமது குமாரனாகிய இயேசு கிறிஸ்துவில் நீர் எனக்குக் காண்பித்துள்ள இரக்கத்துககாக உமக்கு நன்றி செலுத்துகிறேன். சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்வதில் இது வரையிலும நான் காண்பித்த தயக்கத்துக்காக என்னை மன்னித்தருளும். உம்மை அறியாத மக்களுக்கு நான் தைரியத்துடனும் உண்மையோடு இரட்சிப்பின் செய்தியை நாங்கள் அறிவிக்க எங்களுக்கு உதவி செய்தருளும். இயேசுவின் நாமத்தில் வேண்டிக் கொள்ளுகிறோம். ஆமென்



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அருட்பணியில் விதைப்போம்:- அறுவடையோ மிகுதி


29 மார்ச் 2011 (செவ்வாய்) வே வ: மத்தேயு 9:35-38

இயேசுவானவர் இந்த உலக ஜனங்களை ‘அறுவடை‘ செய்யப்பட வேண்டியவர்களாக ஒப்பிட்டுப் பேசுகிறார். அவர் பரலோக ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியை உபதேசித்த்தோடு, எல்லா விதமான நோய்களையும் குணப்படுத்தினார்; மத்தேயு 5:1-9:34ல், இயேசுவானவர் தமது அதிகாரத்தைச் சொல்லாலும் செயலாலும் தெள்ளந் தெளிவாக விளக்குகிறார். மத்தேயு 9:35 முதல் 10:42 வரை.

இப்பகுதியில், இயேசுவானர் தமது சீடர்களுக்கு அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல நோய் நொடிகளையும் நீக்கவும் அதிகாரம் கொடுக்கிறார். (10:1-4). கூட்டத்தார் மீது அவர் பரிவு காட்டியதால், இயேசு தமது சீடர்களுக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்தார்.

இந்தக் கூட்டத்தாரை இரண்டு விதமாக தெளிவு படுத்தி விவரிக்கலாம். முதல் தரப்பினர் மேய்ப்பன் இல்லா மந்தைகளைப் போல சிதறடிக்கப் பட்டவர்கள். பழைய ஏற்பாட்டின் படி இவர்களை அரசியல் தலைமைத்துவம் வற்றிய கூட்டத்தார். ஆனால், இந்த வேத பகுதியில் இவர்கள் ஆவிக்குரிய பராமரிப்பையும் ஊட்டத்தையும் இழந்தவர்கள். இரண்டாவது தரப்பினர், வதைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆதறவற்று வாடுகிறர்கள். இவர்கள் காக்கப்படாமல் வலிமை மிகுந்தவர்களால் தாக்கப்பட்டு அழிந்து போகிறார்கள்.

இவர்கள் ஆவியின் பிரகாரம் வழிதப்பிச் சென்று, காவலுக்கு விலகியும் இருப்பதால், இவர்களை உடனடியாகச் சென்றடைந்து மீட்க வேண்டியுள்ளது. இதைத்தான் அறுவடை என்று வர்ணிக்கப்படுகிறது. இயேசு இந்த உவமான அடிப்படையில் அறுவடையோ மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம் என்று (9:37) என்று வர்ணிக்கிறார். பின்னர் அறுவடையின் அரசன் மேலும் அதிகமான பணியாட்களை இந்த அறுவடை நிலத்துக்காக அணுப்பும் படி ஜெபிக்க சீடர்களைக் கேட்டுக் கொள்கிறார் (9:38).

இன்றும், இயேசுவின் காலத்தைப் போலவே, அறுவடை மிகுதியாக இருக்கும் நிலையில், வேலையாட்சகள், சொற்பமானோர்தாம் இருக்கிறார்கள். மலேசியாவில் கிறிஸ்தவ ஜனத்தொகை 9 % மாத்திரமே. இன்னும் 15 ஆண்டுகளில் நமது அத்தியட்சாதீனத்தின் பாதிக்கு மேற்பட்ட குருமார்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்று விடுவார்கள். எனவே, சபைக்கு உள்ளேயும், தேவ ராஜ்யத்திற்கு வெளியேயும் உள்ள ஆத்துமாக்களுக்குப் பணிவிடை செய்யும் ஊழியர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்.

இப்படியிருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? மலேசியாவில் காணப்படுகிற ‘அறுவடை வயல்களில்’ உபயோகப் படுத்தப் படுவதற்கு சீடர்களாகிய நாம் தயாராகிக் கொள்ள வேண்டும். ஆண்டவரின் அழைப்பு உங்களுக்குக் கிடைக்கிறது என்றால், ஆங்கிலிக்கன் சபைகளில் முழு நேரப் பணியாளர்களாக பணி புரிவதற்கு முன் வர வேண்டும். பரலோக ராஜ்ய சுவிசேஷம் இன்னும் சென்றடையாத ‘வயல்களுக்கு’ மேலும் அதிகமான ஊழியக் காரர்களை தேவன் அனுப்ப வேண்டும் என்று ஜெபிக்கவும் வேண்டும்.

தியாணிக்கும் தருணம்

அறுவடையோ மிகுதி. இந்த அறுவடை வயல்களில் இறங்கி வேலை செய்ய நீ ஆயத்தமா?சபையில் முழு நேர ஊழியராகவோ, உன்னைச் சூழ்ந்துள்ளோரிடத்தில் சுவிசேஷத்தைப் பகிர்ந்து கொள்ளவோ, ஆண்டவர் உன்னை அழைக்கும் சத்தம் கேட்கிறதா?

ஜெபங்கள்

உமக்காக் காத்திருக்கும் நிலையில் நீர் எங்களோடு பேசும் ஆண்டவரே. உமது அறுவடை வயல்களில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வாஞ்சையோடு அறிய எங்கள் உள்ளத்தைத் திறந்தருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கர்த்தருக்குச் செய்வது போல் உத்தமத்தோடு ஊழியஞ் செய்வாயாக


28 மார்ச் 2011 (திங்கள்) வே.வ: கொலோசேயர் 3:22-25

கொலோசேயர் 3:22-25-ல், பவுல் ஊழியக்காரர்கள் அணுசரிக்க வேண்டிய விதிமுறைகளை உபதேசிக்கிறார். எஜமானர்கள் தங்களைக் கண்கானிக்கும் போது மட்டுமல்லாமல் எல்லா காரியங்களிலும் கீழ்ப்படிதலாய் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார். “பந்தா காட்டுதல்” என்பது, எஜமானர்களின் மனம் குளிரும் வகையில், அவர்கள் கண்கானிக்கும் நேரம் மட்டும் வேலை செய்தல் என்பதாகும். பவுலைப் பொறுத்தவரை, ஊழியக்கார்ர்கள் நுனிப்புல் மேய்வதுபோல், எஜமானர்களின் பாராட்டைப் பெறுவதற்கோ, கடிந்து கொள்ளுதலைத் தவிர்ப்பதற்கோ வேலை செய்யக்கூடாது.

கர்த்தரை ஆண்டவர் என்று அழைப்பது, அவரை மகிமைப்படுத்தும் வகையில், அவருடைய பாதையில் பக்தி விநயமாக நடப்பதாகும். தெய்வ பக்தியானது, ஒரு காலக்கட்டத்தில், அற்பமான உலக ரீதியான அச்சத்தை முறித்துப போடும். புறஜாதியார், தங்கள் மாம்ச எஜமானர்கள் ஏவுகிற அனைத்துக் காரியத்திற்கும் அஞ்சுகிறவர்களாக இருப்பர். கிறிஸ்தவ ஊழியக்காரர்களும் அவ்வண்ணமே மாம்ச எஜமானர்களுக்குக் கீழ்ப்படிதலைக் காட்டுவார்கள். ஆனால், அதன் நோக்கம் வேறு விதமாக இருக்கும்.

கிறிஸ்தவர்கள் மாம்சமானவர்களுக்கு மட்டும் பணிவிடை செய்வது கிடையாது. 23வது வசனம், மாம்சமான எஜமானருக்குச் செய்யும் பணிவிடைகள் கர்த்தருக்காகவே செய்ய வேண்டும் என்று சூட்சுமமாகக் கூறுகிறது. அப்படிப்பட்ட கீழ்ப்படிதலை தயக்கமில்லாமல் முழு உள்ளத்தோடு அணுசரிப்போமா? இது ஒரு கனமான கேள்வி. நமது பதிலின் கனம் அதன் வார்த்தையிலும் கனமானது. எஜமானருக்குச் செய்கிற கடமை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், நாம் அதைக் கிறிஸ்துவின் மகிமைக்காகவே செய்கிறோம். கிறிஸ்துவே அந்தக் கடினமான வேலையை நமக்காகச் செய்வது போன்ற ஆதரவோடன்றி, அவருக்காகவே செய்கிறோம் என்றுணரத் தொடங்குவோம். எல்லா எஜமானருக்கும் ஜனாதிபதியாய் இருக்கிற அவர் நமது ஊழியத்தை அங்கீகரிப்பார்

தியானிக்கும் தருணம்:-

ஒவ்வொரு பிரச்சனைகளின் கருவும் நமது உள்ளத்தின் பிரச்சனைகளே, காரியங்களை முறுமுறுக்காமல் முழு உள்ளத்தோடு நிறைவேற்ற வேண்டும். மனிதருக்கு அல்லாமல் கர்த்தருக்கே செய்கிறோம் என்ற பாவனை உள்ளத்தில் உதிக்க வேண்டும். கிறிஸ்தவர்களுக்கு ஒருமித்த உண்மையான உள்ளம் அவசியம். அதுவே நமது ஆண்டவரைப் பிரியப்படுத்தும்; அதுவே கர்த்தருக்கு ஏற்புடைய ஊழியம்

ஜெபங்கள்:-

கர்த்தர், ஊழியஞ் செய்யத் தக்கதான உள்ளத்தைத் தந்து என்னை மாற்றியருளும். அதன் மூலம் உத்தம்மான உள்ளத்தோடு உமக்கு ஊழியஞ் செய்வேன். உண்மையும் உத்தமுமான உள்ளத்தை எனக்குத் தாரும். ஆமென்.

தனி தியானம்: சித்தையோடு சீர்தூக்கிப் பார்க்கவும்

  • 1. நல்ல ஊழியக்காரனாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குப் பணிவிடை செய்யும் போது கர்த்தர் உன்னிடத்தில் எப்படிப் பிரியப்படுகிறார்?
  • 2. இவ்வாண்டில் கர்த்தருக்கு நல்ல ஊழியக் காரனாகத் திகழ என்னென்ன திட்டங்களை வகுத்துள்ளாய்?
  • 3. உன் நேரத்தையும் தாலந்தையும், அறியப்படாத ஆற்றல்களையும் ஆண்டவருடைய ராஜ்யத்திற்காக முதலீடு செய்ய ஜெபிக்கவும். இன்றே செயல்படவும்!

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

விலையேறப் பெற்ற உறவு

27 மார்ச் 2011 (ஞாயிறு) வே வ: கலாத்தியர் 6:1-10

உறவுகளை நாம் பேணி காக்காவிடில், அது நாளடைவில் நளிவடைந்து சேதமுற்றும் போகும். அழிவின் எல்லைக்கே அது சென்று விடும். அப்போஸ்தலர் பவுல் இந்த அபாயத்தைப் பற்றி எச்சரிப்பதோடு, உறவுப் புத்தாக்கத்திலும் கணிவிலும் எப்போதும் நிலைத்திருக்கும்படி வற்புறுத்துகிறார். எந்த மனிதரும் பாவத்திற்கு அந்நியமானவன் அல்லன். எனவே, அந்த உறவுக்கு இயேசுவின் நாமத்தில் புதிப்பிப்பது கிறிஸ்தவர்களின் கடமையும் ஆகும். அதற்கு முதன்மையான தேவை நாம் மனிதர்களை மதிக்க வேண்டும் முறிந்து போன உறவுகளைப் புதுப்பிக்கவே பிதாவானவர் இயேசு கிறிஸ்துவை அனுப்பினார். இதுவே, பிதாவினிடத்தில் இருந்து மனுகுலத்திற்கு அன்பாகப் பாய்கிறது. இயேசு நமக்காக செய்த காரியமானது, பிற அனைவருக்கும் குறிப்பாக கிறிஸ்தவ விசுவாசிகளுக்கு வெளிப்படுத்த வேண்டிய அன்பின் அவசரத்தை உணர்த்துகிறது

மேற்கண்ட அன்பின் தேவையை வலியுறுத்துவதில், பவுல் ஒரு பிரபஞ்ச சத்தியம் இருக்கிறது. நாம் ஆவிக்குரிய விதைகளை விதைத்தால், அதற்குத் தகுந்த ஆவிக்குரிய நன்மையையும் பேரின்பத்தையும் அனுபவிப்போம். மாறாக, மாம்சமான சுய நலத்தையும், மன்னியாமையையும் விதைத்தால், நல்ல கனிகளையல்லாமல் வேதனையையும் மனக் கசப்பையையும்தான் அனுபவிப்போம். புறஞ் சொல்லுவது நல்லுறவை முறித்துப் போடும். இந்தப் பிரபஞ்ச சத்தியம் பொல்லாங்கான விளைவுகள் இருக்கின்றன என்பதையும் உணர்த்துகின்றன.

ஒரு பொறுப்பில்லாத வாகனமோட்டி, சாலையில் செல்லும் ஒருவனைக் கொன்று போடுகிறான். இயேசுவின் நாமத்தில் அவனை மன்னிப்பது சாத்தியம் என்றாலும், போன உயிரை மீட்க முடியாது. நாமும் உறவைப் பேணிக் காப்பதில் பொறுப்பில்லாமல் நடந்து கொண்டிருப்போம். நமது நடவடிக்கைகளால் நொறுங்கிப் போன உள்ளங்களை கிறிஸ்துவின் செரிமானம் இல்லாமல் அந்த உள்ளங்களைப் பொறுத்த முடியாது. எல்லாரையும் நேசிக்கும் முயற்சியில் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும்; அது நொறுங்குண்ட உள்ளத்தை பொறுத்தி விடும்.

தியானிக்கும் தருணம்

நமது ஆண்டவராகிய இயேசு, தமது பூலோக ஊழியத்தில் பரிசுத்த ஆவியின் வல்லமையினால், நன்மையானவற்றைச் செய்ததோடு, ஜனங்களையும் குணப்படுத்தினார். (அப்போஸ்தலர் 10:38). எவ்வகையில் நாம் உறவுகளை மதிக்கலாம்; ஜனங்களுக்கு நன்மையானவற்றைச் செய்யலாம்?

ஜெபங்கள்

பிதாவே, உமது அன்பில் நான் எப்போதும் நெருங்கியிருக்க ஜெபிக்கிறேன். பிறர் நலனில் அக்கறை காட்டும் கருணை உள்ளத்தை எனக்குத் தாரும். ஆமென்



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

‘கர்த்தர் என்னை நம்புகிறார்!’

26 மார்ச் 2011 (சனி) வே வ:. மத்தேயு 25:14-30

கிறிஸ்துவின் இரண்டாம் வருகை மட்டும் நாம் வாழ வேண்டிய விதத்தை இந்த உவமானம் நினைவுறுத்துகிறது.

எஜமானர் தமது தாலந்துகளை ஊழியக்காரரிடத்தில் அவரவர் திறமைக்கேற்ப கொடுத்து விட்டுப் பயணமானார். கர்த்தர் ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்திற்குப் பொறுப்பாக்கி விட்டுச் சென்றார். (ஆதியாகமம் 2:15). அவ்வண்ணமே, இரட்சிப்புக்குட் பட்ட உங்களையும் என்னையும் தமது உடமைகளுக்கு பொறுப்பாக்கி இருக்கிறார். இதனை பப் கிராஸ், ‘நமது சுவாசம், நாளங்களில் பாயும் இரத்தம், செவிப் புலம் கர்த்தர் நமக்குத் தந்த முதலீடுகள்’ என்று கூறுகிறார். செல்வமோ, அந்தஸ்தோ, அனுபவமோ, ஆதிக்கமோ, அறிவோ – நமக்கு உண்டான யாவுமே கர்த்தருக்கே சொந்தம். இதை நாம் உணர்ந்து கொண்டால், இந்தத் தாலந்துகளை கர்த்தரை மகிமைப் படுத்த பயன்படுத்துவோம்.

அடுத்து, அந்த ஊழியக்காரர்கள் பொறுப்புணச்சி கொண்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப் பட்டது. முதல் இரண்டு ஊழியக்காரர்கள் தங்கள் தாலந்துகளை முதலீடு செய்த நிலையில், மூன்றாவது ஊழியக்காரனோ, புதைத்து வைத்தான். முதலுடு செய்வதற்கு, தங்கள் சௌரியமான நிலைமையை விட்டு வெளியேறி, கடின உழைப்பில் ஈடுபட வேண்டும். கர்த்தருக்கான ஊழியத்தில் நாம் இணைப் பணியாளர்கள். நம்மைச் சூழ்ந்துள்ள மக்களுக்கு கிறிஸ்துவின் நாமத்தினால் கடமை செய்யும் பொறுப்பு நமக்குண்டு.

நெடுங் காலத்திற்குப் பிறகு எஜமானர் திரும்ப வருகிறார். ஊழியக்கார்ர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை எந்த அளவுக்கு நிறைவேற்றியுள்ளார்கள் என்பதை அறிய விரும்புகிறார். முதல் இரண்டு ஊழியக்காரர்களின் முயற்சியின் நிமித்தம் பாராட்டப்படுகிறார்கள். மூன்றாவது ஊழியக்காரனோ, ‘சோம்பல் நிறைந்த பொல்லாதவன்’ என்று திட்டப்படுகிறான். நாமும், அவ்வண்ணமே நிறைவேற்றப்பட்ட பொறுப்புகளை விசாரிக்கும் பொருட்டு கர்த்தரின் நியாயத் தீர்ப்பின் பாரிசத்திற்கு முன்பு நிறுத்தப்படுவோம்.

கர்த்தருடைய தாலந்துகளைப் பெற்றுக் கொண்ட நாமும், அவருடைய தெய்வீக நோக்கத்தைப் புரிந்து கொண்டவர்களாய், அந்தத் தாலந்துகளுக்குப் பொறுப்பாளிகளாக இருப்போம். ‘கர்த்தரின் மகிமையை வெளிப்படுத்தவே நாம் உயிரோடிருக்கிறோம்’ என்று மெக்ஸ் லுக்காடோ கூறுகிறார்.

தியானிக்கும் தருணம்

உனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட தாலந்தை எப்படிப் பயன்படுத்தப் போகிறாய்? முதலீடு செய்யப் போகிறாயா? புதைக்கப் போகிறாயா?

ஜெபங்கள்

கர்த்தாவே, எனது தாலந்துகளை அறிந்து கொள்ளவும் அதை உமக்காக ஆதாயப்படுத்திக் கொள்ளவும், அதன் மூலம் உமது பரிசுத்த நாமத்திற்கு மகிமையைச் சேர்க்கவும் வேண்டுகிறேன். இயேசுவின் நாமத்தினாலே, ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ebi wrote:

ஒவ்வொரு கட்டுரையும் அருமையாக இருக்கின்றன.


இதன் முழு புகழ்ச்சியும் முதலாவது கர்த்தருக்கும் அடுத்ததாக அதனை நேர்த்தியாக மொழிபெயர்த்து பதித்த தமிழ் கிறித்தவ தளத்தின் நண்பர் ராவங்க் ஜாண்சன் அவர்களையுமே சாரும்;நெடுந்தொடராக இருந்த இதனை ஒரு நண்பரின் கோரிக்கையின் பேரில் தினமும் தனித்தனியாகப் பிரித்து பதித்தது மட்டுமே என்னுடைய பங்கு..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

ஒவ்வொரு கட்டுரையும் அருமையாக இருக்கின்றன.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்

25 மார்ச் 2011 (வெள்ளி) வே.வ: 2 கொரிந்தியர் 9:6-15

இங்ஙனம், எருசலேமில் ஒடுக்கப்பட்டு வாடும் கிறிஸ்தவர்களுக்கு உற்சாகமாய் கொடுக்கும் படி பவுல் கொரிந்தியர்களை ஊக்குவிக்கிறார். இந்த நிதி திரட்டும் பணி ஏற்கனவே தொடக்கப்பட்டாலும், இன்னும் நிறைவடையாத நிலையில் இருந்தது.

இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிக்கையிடுகிற விசுவாசிகளிடத்தில் காணப்படுகிற கீழ்ப்படிதலே உற்சாகமாய் கொடுக்கத் தூண்டுகிறது (9:13) முன்னதாக பவுல், மக்கெதோனியா கிறிஸ்தவர்கள் தர்மசகாயமாய் காணிக்கை செய்வதற்கு முன்பு, தங்களையே முதலாவது கர்த்தரிடத்தில் அர்ப்பணித்துக கொண்டார்கள் என்று குறிப்பிடுகிறார் (2கொரி 8:5). இந்தக் கீழ்ப்படிதலின் நிமித்தம் விசுவாசிகள் தயாளத்தோடும், உற்சாகத்தோடும், உண்மையோடும், திராணிக்கு மிஞ்சியும் தர்ம ஊழியஞ் செய்தார்கள் .

விசுவாசிகளிடத்தில் உள்ளவையெல்லாம் தேவனிடத்தில் இருந்து வந்தது என்று நினைவுறுத்தினார். எல்லா நிலைமைகளிலும் தர்ம ஊழியஞ் செய்ய, கர்த்தர் நம்மை செல்வத்தால் ஆசீர்வதிப்பார் (9:11). தயாளத்தோடு தர்மம் செய்யும்போது, நாம் பொங்கியெழுந்து தேவனை ஸ்தோத்தரித்துத் துதிப்பதோடல்லாமல் மிதமிஞ்சிய பலனையும் அனுபவிப்போம் (9:6).

பவுலின் நிரூபத்தில், முழுமையான நோக்கத்தையும் புரிந்து கொண்டோமேயாயானல், கர்த்தரே மகா தயாள தர்ம சகாயர் என்பதை அறிந்து கொள்வோம். அவர் தமது ஒரே குமாரனாகிய ஜென்மிக்கப்பட்ட இயேசு கிறிஸ்துவை மனித புத்திக்கு எட்டாத தர்மமாகத் தந்தார். (யோவான் 3:16)

இன்று, நாம் தயாளத்தோடு தர்மம் செய்கிறோமா அல்லது கணக்குப் பார்த்து தர்மம் செய்கிறோமா என்று நம்மை நாமே கேட்க வேண்டியுள்ளது.

கஞ்சத் தனம் காட்டாமல் கர்த்தருக்கு தயாளத்தோடு வழங்குவோம். நம்முடைய கிறிஸ்தவ ஜீவியத்தில் கீழ்ப்படிதல் காணப்பட்டு தர்ம கிருபையை ஆதாயப்படுத்திக் கொள்வோமாக (2 கொரி. 8 7b).

பவுல் அருளிய உற்சாகம் நம்மை தயாளத்தோடும், உற்சாகத்தோடும், உண்மையோடும் வழங்க வழிநடத்துவதாக (9:7b).

தியானிக்கும் தருணம்

நான் தேவனிடத்தில் தயாள குணம் கொண்டவனா? நான் உற்சாகமாக்க் கொடுக்கிறேனா? அப்படி இல்லை என்றால் ஏன் என்னை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடாது?

ஜெபங்கள்

கர்த்தாவே, தயாளத்தோடு வழங்கும் பொருட்டு, சுயநலம் கருதும் என்னுடைய ஜீவியத்தை. சுயநலம் கருதாதே சிந்தைக்கு மாற்றியமைத்தருளும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன், ஆமென்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard