Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வில்லியம் மரியன் ப்ரன்ஹாம் கள்ளத்தீர்க்கதரிசியா..?


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: வில்லியம் மரியன் ப்ரன்ஹாம் கள்ளத்தீர்க்கதரிசியா..?
Permalink  
 


chillsam wrote:

சகோதரி கோல்டா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:நீங்கள் கழுகைக் குறித்து பதித்திருக்கும் சந்தோஷ் அவர்களின் கட்டுரையை தனி திரியாக பதிக்க வேண்டுகிறேன்;இந்த திரியில் ப்ரன்ஹாம் எனும் கள்ள தீர்க்கதரிசியைக் குறித்து மட்டுமே கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன;தயவுசெய்து வாதத்தினை திசைதிருப்பும் வண்ணமான கருத்துக்களைத் தவிர்க்கவும்;நன்றி.


 OK. I deleted it.

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

சகோதரி கோல்டா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள்:நீங்கள் கழுகைக் குறித்து பதித்திருக்கும் சந்தோஷ் அவர்களின் கட்டுரையை தனி திரியாக பதிக்க வேண்டுகிறேன்;இந்த திரியில் ப்ரன்ஹாம் எனும் கள்ள தீர்க்கதரிசியைக் குறித்து மட்டுமே கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன;தயவுசெய்து வாதத்தினை திசைதிருப்பும் வண்ணமான கருத்துக்களைத் தவிர்க்கவும்;நன்றி.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


கிறிஸ்துவுக்குள் பிரியமான சகோதரர்களே இங்கே கள்ள உபதேசக்காரர்களைப் பற்றி எழுதுவதற்கு தனிப்பட்ட எந்த முகாந்திரமும் எனக்கு கிடையாது. கிறிஸ்துவின் சபை வஞ்சிக்கப்பட்டுவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை உணர்வுடனும் , கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்டவர்களைக் காணும்போது அடையாளங்கண்டு விலக வேண்டும் என்பதற்காகவுமே எழுதுகிறேன். இவர்களை விட்டு விலக வேண்டும் என நான் கூறக் காரணமென்னவெனில்” இவர்கள் எப்பொழுதுமே மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவார்கள்” வசனத்தின் வெளிச்சத்தின் காரியங்களை ஆராயாமல் தங்கள் தலைவரின் உபதேச வெளிச்சத்திலேயே தர்க்கிப்பார்கள். ஏறக்குறைய 1999ஆம் வருடத்திலிருந்தே நான் இவர்களைப் பற்றி அறிந்தும், ஆராய்ந்தும் அவ்வப்போது போராடிக் கொண்டும் வருகிறேன். ஏனெனில் என்னைச் சுற்றிலும் இவர்கள் இருந்தார்கள்.

பிரென்ஹாம் - அறிமுகம்
பிரென்ஹாம் ஒரு கத்தோலிக்கக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அத்துடன் அவருக்கு தொடர்பு இருக்கவில்லை. 22ஆவது வயதில் மனம் திரும்புதலின் அனுபவத்தைப் பெற்று பாப்திஸ்து சபையில் உதவிப் போதகராக சில காலம் கழித்து நியமிக்கப் பட்டார். பெண்கள் பிரசங்கிபது குறித்து தனது போதகருடன் எழுந்த கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து விலகி தனி ஊழியம் செய்ய ஆரம்பித்தார்.
சுகமளிக்கும் ஊழியங்களைச் செய்ய ஆரம்பித்த பிரென்ஹாம் அவர்கள் பெரும்பாலும் One ness Pentecostal Church என்று அழைக்கப்படுதும் ஒருத்துவத்தைப் போதிக்கும் சபைகளைலேயே பெரிதும் ஊழியம் செய்தார். 1946ல் ஒரு தேவ தூதன் தோன்றி உலகம் முழுவதிலும் நற்செய்தி அறிவித்து, சுகமளிக்கும் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று இவரிடம் சொன்னதாக அறிவித்தார். இவரது கூட்டங்களில் நடந்த அற்புதங்களைக் கண்டு போஸ்வொர்த் போன்ற பிரபலமான ஊழியர்கள் கூட இவருடன் சேர்ந்து கொண்டனர்.

1950ஆம் வருடங்களில் இவர் ஒருத்துவ உபதேசத்தைப் பிரசங்கித்து திரித்துவ உபதேசம் தவ்று என்று கூற ஆரம்பித்தார். பிற்காலங்களில் சுகமளிக்கும் கூட்டங்களுக்கு இவர் முக்கியத்துவம் கொடுக்க வில்லை. 1963ல் ஏழு தூதர்கள் இவரைச் சந்தித்து வெளிப்படுத்தல் புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் ஏழு முத்திரைகளைக் குறித்து பேசி, அதை பிரென்ஹாம் அவர்கள் உடைக்க வேண்டிய முத்திரை குறித்தும் சொன்னதாக இவர் கூறிக் கொண்டார்.
பிரென்ஹாமைப் பின்பற்றுபவர்களுக்கு இந்த ஏழு முத்திரைகளைப் பற்றிய உபதேசம் மிகவும் முக்கியமானது ஆகும். இதற்குப் பின் பிரென்ஹாம் தன்னை தேவனுடைய தீர்க்கதரிசி என்று அழைத்துக் கொண்டார். கர்த்தரின் வருகைக்கு முன் வரப் போகிற எலியாவின் ஆவியையுடைய தீர்க்கதரிசி நான் தான் என்று அறிவித்தார். பின்னாட்களில் இவரைப் பின்பற்றுபவர்களில் ஒரு பிரிவினர் பிரென்ஹாமை கிறிஸ்து என்றே அழைத்தனர். இன்றும் அவர்கள் உண்டு.

பிரென்ஹாமைப் பின்பற்றுபவர்கள் Followers of the Message என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் ஒரு போதும் ஆத்தும ஆதாயப் பணி செய்வதில்லை. ஏற்கனவே கிறிஸ்தவர்களாக இருப்பவர்கள் தான் இவர்கள் இலக்கு.

1963ஆம் ஆண்டு ஒரு விபத்தில் பிரென்ஹாம் மரித்தார். அதை திட்டமிட்ட கொலை என்று இவருடைய கூட்டத்தினர் கூறுவர்.


அடுத்து இவர்களின் முக்கியமான உபதேசங்களையும் அதன் குறைகளையும் காண்போம்......

Chillsam:-அற்புதம் அவர்கள் நல்லதொரு ஆரம்பத்தைக் கொடுத்திருக்கிறார்;இந்த கூட்டத்தார் தங்கள் உபதேசத்தை கடைவிரிக்கும் முன்பதாக எப்படி துவங்குவார்கள் என்றால் வேதவார்த்தைகளெல்லாம் முத்திரிக்கப்பட்டிருக்கிறது;அதனை அறியவேண்டுமானால் அவரால் அனுப்பப்பட்ட ஒரு ஊழியன் அதாவது தீர்க்கதரிசி தேவை என்பார்கள்;உதாரணமாக ஈசாக்கிடம் ரெபேக்காள் சேர்க்கப்பட்டதைப் போல ஒரு தாழ்மையான ஊழியன் உண்மையான ஊழியன் தேவையாம்;அதுவே ப்ரன்ஹாம்.(இன்னும் வரும்) அற்புதம் அவர்கள் சற்று கௌரவத்தைவிட்டு இதனை யௌவன ஜனம் தளத்திலும் பதித்தால் எனது வேலைப்பளு சற்று குறையும் என்றெண்ணுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

வில்லியம் மரியன் ப்ரன்ஹாம் சம்பந்தமாக தமிழ் கிறித்தவ தளத்தில் அற்புதம் அவர்கள் துவக்கியிருக்கும் திரியும் அதில் பதிக்கப்பட்ட நம்முடைய கருத்தும்...

கர்த்தருக்குள் பிரியமான தமிழ் கிறித்தவத் தளத்தின் தோழர்களே,

நம்முடைய அருமை நண்பர் அற்புதம் அவர்கள் ஒரு முக்கியமான நிலையை மேற்கொண்டு தனது முயற்சிகளைத் துவக்கியிருப்பது குறித்து அதிக மகிழ்ச்சி;ஆனாலும் இதுகுறித்த எச்சரிக்கும் பணியினை கடந்த சில வருடங்களாகவே அடியேன் மேற்கொண்டு வருவது அனைவரும் அறிந்ததே;அதிலே குறிப்பாக ப்ரன்ஹாம் எனும் கள்ளத்தீர்க்கதரிசியைக் குறித்த ஒரு கட்டுரையை ஏற்கனவே துவங்கியிருக்கிறேன் என்பதையும் அவருடைய போதனைகளையே நூற்றுக்கு நூறு ஸ்வீகரித்துக்கொண்டு ஏஞ்சல் டிவியானது பரப்பிவருகிறது எனும் அதிர்ச்சிகரமான உண்மைகளையும் ஏற்கனவே எழுதிவருகிறேன்; இதனால் அடியேன் தனிப்பட்ட முறையில் சந்திக்க நேர்ந்த சவால்களும் சங்கடங்களும் மிக அதிகம்;ஆனாலும் இந்த காரியத்தில் தொடர்ந்து முன்னேறவே உறுதிபூண்டிருக்கிறேன்; இன்னும் சில மாதங்களில் கர்த்தருக்கு சித்தமானால் ஒவ்வொரு கள்ள உபதேசமாக எடுத்துக்கொண்டு அது இன்றைக்கும் தமிழ் கிறித்தவ வட்டாரத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை ஆராயப்போகிறோம்;இந்த காரியத்தில் அற்புதம் போன்ற நண்பர்களுடைய ஒத்துழைப்பை எதிர்நோக்கியிருக்கிறேன்.

ஏஞ்சல் டிவியின் கள்ள உபதேசங்கள்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


நிச்சயமாக தங்கள் கருத்துக்கும் அலோசனைக்கும் நன்றி சகோதரரே உண்மையில் மிகுந்த மகிழ்ச்சியோடு ஒரு மணவாட்டியின் தாகத்தோடு செய்து முடித்தேன். இனி மரிக்கவும் பயப்படமாட்டேன். நன்றி


chillsam Wrote on 08-03-2011 19:35:05:

மணவாட்டியா..? ஜாக்கிரதை, ப்ரன்ஹாம் ஆட்கள் வளைத்துப்போட்டு விடுவார்கள்... நீங்கள் ஞானஸ்நானம் பெற்றபோது திரித்துவ தேவனைக் குறிக்கும் நாமமான பிதா குமாரன் பரிசுத்தாவி என்பதை கூற கவனித்தீர்களா? கழுகு படம் போட்ட ஏதாவது புத்தகம் கொடுத்தார்களா..?

rajkumar_s Wrote on 08-03-2011 22:10:32:

ஐயா ரொம்ப உணர்ச்சி வசப்படாதீர்கள் எங்கள் சபை ஆயர் தான் ஞானஸ்நானம் கொடுத்தார். கழுகு படம் போட்டெல்லாம் ஒன்றும் வாங்கவில்லை, அடியேன் சில சமயம் மத்தியவானில் வரும் மணவாளனோடு நடக்கும் ஆட்டுக்குட்டியானவரின் கலியான விருந்து பற்றி கனவு காண்பதுண்டு அதில் பங்கு கொள்ள என் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு தடை விலகும் போதும் அகமகிழ்வதுண்டு அதைத்தான் சொன்னேன்.

Chillsam:-அன்பரே உணர்ச்சிவயப்பட்டது நானல்ல,நீங்களே..! வேதத்தில் மணவாட்டியைக் குறித்த போதனையானது தனிப்பட்டவரைக் குறிக்காது;அது கிறித்துவின் இரத்தத்தால் மீட்கப்பட்டவராகிய உலகளாவிய சபையைக் குறிக்கும்; ஆனால் தற்காலத்தில் பலரும் தங்களைத் தாங்களே மணவாட்டி என்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர்; தேவ இராஜ்யத்தில் நாம் அனைவரும் பிள்ளைகள் என்பதே சரியான போதனையாகும்.மணவாட்டி போதனை நல்லது தான்,அதைக் கெடுத்துப்போட்டார்கள்;எனவே பிள்ளைகள் என்பதையாவது காத்துக்கொள்ளுவோம்; அந்தகாலத்திலே ஊருக்குப் பொதுவான இடத்தில் சங்கு ஊதும் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும்;அது இயங்கும்போது இத்தனை மணிநேரம் என்பதை ஊரார் அறிந்துகொள்ளுவார்கள்;ஆனால் தன் கையில் கடிகாரம் கட்டியிருப்பவன் அதைக் குறித்து ஏளனம் செய்யமுடியாது;மாறாக தனது நேரத்தை அதைவைத்து சோதித்துக் கொள்ளுவான்; நான் அனைவருக்கும் பொதுவானவன், சங்கு ஊதுகிறேன், கேட்பவர் கேட்கட்டும், ஏளனம் செய்யாதீர்கள்..!

அண்மையில் ஒரு துக்ககரமான செய்தியைக் கேள்விபட்டேன்; வேலையில்லாத ஒரு கிராமத்து வாலிபர் வேலை தேடி சென்னையை நோக்கி வந்தார்;ஒரு பாஸ்டர் அந்த வாலிபனுக்கு தங்க இடமும் உணவும் உடையும் தந்து பிள்ளையைப் போல வளர்த்தார்;தனது கடும் உழைப்பினால் படித்து முன்னேறி இன்றைக்கு அந்த வாலிபர் குறிப்பிட்ட ஒரு நகரத்தில் காவல்துறையில் ஆய்வாளர் பணியில் இருக்கிறார்;வேலுவாக சென்னைக்கு வந்தவர் அந்த பாஸ்டரின் ஊழியத்தால் இம்மானுவேலாக மாறி நல்லமுறையில் திருமணமும் முடிந்து இரண்டு அருமையான பிள்ளைகளும் பிறந்த நிலையில் அந்த சகோதரர் விசுவாசத்திலிருந்து தடுமாறி ப்ரன்ஹாம் கூட்டத்தாரின் கள்ள உபதேசத்துக்கு பலியாகி மறு ஞானஸ்நானம் எடுத்திருக்கிறாராம்;அவருடைய தற்போதைய நிலை என்னவென்று தெரியவில்லை;இவையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதுபோல இருந்தாலும் இதனை நாம் அலட்சியப்படுத்தினால் ஊழியர்கள் மீதும் ஊழியங்கள் மீதும் பெருகி வரும் சலிப்பின் காரணமாக பலரும் வஞ்சிக்கப்படக்கூடும்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=41410392&p=3
vijay76 wrote:
அப்படியே வில்லியன் மரியன் பிரன்ஹாம் என்ற பிரகஸ்பதியின் தோலையும் உரித்தால் நலமாக இருக்கும்.

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=41100070&page=0


அருமை நண்பர் விஜய் அவர்களே,என்ன இப்படி கேட்டுட்டீங்க‌...ப்ரன்ஹாம் எனக்கு மிகவும் பிடித்தமான தலைவர் ஆவார்;ச்சும்மா சொல்லக்கூடாது... சூப்பர் ஆள் தெரியுமா? அவரைக் குறித்து ஏற்கனவே எழுதத் துவங்கிவிட்டேன்;அதன் விவரத்தை அறிய மேற்காணும் தொடுப்பை சொடுக்கவும்.

அவரைக் குறித்து விரிவாக எழுத சில‌ சங்கடங்கள் காரணமாக மிகவும் யோசித்து வருகிறேன்;ஏனெனில் அந்த கால பாலாசீர் லாறியின் மகாத்மியங்களுடன் துவங்கும் இந்த காதையானது காலஞ்சென்ற டிஜிஎஸ் ஐயாவைக் கடந்து  தற்கால மோகன்.சி.லாசரஸ் வரையிலும் வந்து இடிக்கும்;அதில் நான் அத்தனை சீக்கிரம் கைவைப்பது குளவிக்கூட்டில் கைவைப்பது போலாகிவிடும் என்பதால் தகுந்த ஆயத்தங்களை செய்து வருகிறேன்;ஏனெனில் யெகோவா சாட்சிகளைவிட இவர்களே திட்டமிட்டு நேர்த்தியாகப் பரவி சபைகளை ஆக்கிரமித்திருக்கிறார்கள்; பாரம்பரிய சபைகளே இவர்களுடைய இலக்கு;ஆனாலும் பெந்தெகொஸ்தேயினரின் அபிமான சப்ஜெக்டான மணவாட்டி சபையே இவர்களது மையமான போதனை;யெகோவா சாட்சியினரைப் போலவே இவர்களுக்கும் திரித்துவம் என்பது பிடிக்காது;மறு ஞானஸ்நானத்தை ஊக்குவித்து அதனை வேகமாக நிறைவேற்றி வருபவர்கள் இவர்கள்;சுருக்கமாகச் சொன்னால் இப்படி சொல்லலாம்.,

"குமாரனைப் புறக்கணிப்போர் யெகோவா சாட்சியினர்","
பிதாவைப் புறக்கணிப்போர் ப்ரன்ஹாம் கூட்டத்தினர்"

அன்பான‌ சகோதரர் கோல்வின் எழுதியது போல ஏழாம் நாள் காரரின் பாதிப்பு யெகோவா சாட்சிகளின் போதனைக்கு அடித்தளமாக இருப்பதுபோலவே ஒன்லி ஜீசஸ் (Only Jesus) எனப்படும் போதனையின் பாதிப்பு ப்ரன்ஹாம் கூட்டத்தாரிடம் இருக்கும்.கர்த்தருடைய பெரிதான கிருபையினால் கடந்த 20 வருடத்துக்கு மேலாக ப்ரன்ஹாமைக் குறித்து வரிக்கு வரி படித்து ஆய்ந்து வைத்திருக்கிறேன்;எனவே தகுந்த ஆயத்தங்களைச் செய்துகொண்டு களத்தில் இறங்குவேன்;ஆனாலும் ஒரு க்ளூ என்னால் தரமுடியும்,ப்ரன்ஹாமின் போதனைகளை நீங்கள் உடனே அறியவிரும்பினால் தவறாமல் ஏஞ்சல் டிவி பார்க்கவேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
வில்லியம் மரியன் ப்ரன்ஹாம் கள்ளத்தீர்க்கதரிசியா..?
Permalink  
 


இது ஏற்கனவே வேறொரு திரியில் பின்னூட்டங்களூடே துவங்கப்பட்ட கட்டுரையாகும்;அது திசைமாறிச் சென்றுவிட்ட காரணத்தால் நமது தளத்தின் நண்பர் விஜய் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் மறுபதிப்பு செய்யப்படுகிறது;இந்த புதிய தலைப்பில் ப்ரன்ஹாம் கூட்டத்தாருடன் தொடர்பு உடைய நண்பர்கள் தாங்கள் அறிந்த காரியங்களைப் பகிர்ந்துகொள்ளலாம்; மேலும் கேள்விகள் இருந்தாலும் கேட்கலாம்; நிதானமாகவே முன்னேறுவோம்.

halo.jpg?thumbnail=jpg&maxwidth=100
WilliamBranhamBanner.jpg

ஒரு மிகப்பெரிய சர்வதேச மோசடி கும்பலுக்கு எதிராக முதல் அடியை இன்று எடுத்து வைக்கிறேன்;கர்த்தர் தாமே அடியேனை பெலப்படுத்துவாராக‌. மேற்கண்ட படத்தில் காணப்படும் நபர் யார், அவருடைய போதனையானது கடந்த 60 வருடங்களில் கிறித்துவின் மணவாட்டி சபையில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்னென்ன என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்தால் டாக்டர் பட்டமே வாங்கிவிடலாம்;அந்த அளவுக்கு இந்த சப்ஜெக்ட் மகா ஆழமானதும் அகலமானதுமாகும்;தற்கால தமிழ் கிறித்தவ வட்டாரத்தை அதிர்ச்சியடையச் செய்யும் அந்தரங்கமான சூழ்ச்சியான உபதேசங்களை அடியேன் விவரமாகப் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.இந்த போதகத்தைக் குறித்தும் தன்னைத் தானே தீர்க்கதரிசியாக அறிவித்துக் கொண்ட இந்த வெளிநாட்டுப்பூனையைக் குறித்தும் அனைத்துப்போதகர்களுக்கும் தெரியும்;ஆனாலும் ஏதோ ஒருவித அச்சத்தினால் அவரவர் ஒதுங்கிச் சென்றதால் அது ஆலமரமாக விழுதுவிட்டுப் படர்ந்து ஏஞ்சல் டிவி வரைக்கும் வந்து சபை முழுவதையுமே கவிழ்த்துப் போடப்பார்க்கிறது;என்னைப் போன்ற வளரும் நிலையிலிருப்போர் இவர்களுடன் அனுசரித்துப் போயிருந்தால் நல்லநிலையை அடைந்திருக்கலாம் பாதுகாப்புடனும் வலம் வந்திருக்கலாம்;ஆனால் சத்தியத்துக்காக நிற்க சிலராவது வேண்டுமே என்ற பதைப்பில் அனைத்தையும் உதறிவிட்டு எனது ஜீவனையும் அருமையாக எண்ணாமல் இதோ வந்திருக்கிறேன்.

எனது அன்புக்குரிய வாசகர்கள் வீணாகக் குழப்பமடையாதிருக்க இந்த குறிப்பிட்ட நபரைக் குறித்த விவரத்தை அறியும் தொடுப்பைக் கொடுத்திருக்கிறேன்;அதனைப் பொறுமையாக வாசித்துவிட்டு சத்திய வேதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு இஸ்லாமை ஸ்தாபித்த முகமது அவர்களையும் சற்று கவனத்தில் கொண்டு தற்காலத்திலும் இதேபோல ரீல் சுற்றி, வேடமிட்டு மக்களை மயக்கிவரும் சாதுஜியுடனும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு தயவுசெய்து தங்கள் கருத்துக்களை மெய்யான அக்கறையுடன் பகிர்ந்துகொள்ளவும்;தயவுசெய்து திருப்பி அடிக்கும் பாணியோ அரட்டையடிக்கும் தோரணையோ வேண்டவே வேண்டாம்..!

logo.jpg

http://branham.org/content/AboutUs/williambranham_pg3.aspx


(தொடரும்...)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard