Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தினா என்னும் வேதப்புரட்டனின் அபத்தங்கள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: தினா என்னும் வேதப்புரட்டனின் அபத்தங்கள்
Permalink  
 


Bro. Dino Wrote

//இயேசு, தம் மனிதவாழ்க்கைக்கு முன்னான வாழ்கையில், "சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறு" ஆக இருந்தார். (கொலேசயர் 1 :15 )  அவர் "கடவுளுடைய சிருஷ்டிப்பின் தொடக்கம்" (வெளிப் 3:14 ).  "தொடக்கம்" (கிரேக்கில், (அரக்கே) ) என்பதை இயேசு கடவுளுடைய சிருஷ்டிப்பைப்  'தொடங்கினவர்'  என்று பொருள் கொள்ளும்படி விளக்குவது சரியல்ல. யோவான், தன் பைபிள் எழுத்துக்களில் அரக்கே என்ற கிரேக்க சொல்லின் பற்பல உருவகைகளை 20 -க்கு  மேற்பட்ட தடவைகள் பயன்படுத்துகிறான். இவை எப்பொழுதும் "தொடக்கம்" என்ற இந்தப் பொதுவான பொருளையே கொண்டு இருகின்றன.  ஆம், இயேசு கடவுளுடைய காணக்கூடாத சிருஷ்டிகளின்  தொடக்கமாகக் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டார்.//

 

ஹலோ இதற்குதான் அப்போதிருந்தே சொல்லுகிறேன். ஆதாரம் இல்லாமல் எழுதாதீர்கள் என்று உங்களுக்கு மூலபாஷை தெரியுமா? அரக்கே என்பதற்கு என்ன Dictionary யை பாவித்து பொருள் எடுத்தீர்கள். எப்படி கிரேக்க சொல்லின் பற்பல உருவகைகளை 20 -க்கு  மேற்பட்ட தடவைகள் பயன்படுத்துகிறான் சொல்லுகிறீர்கள். எண்ணிப் பார்த்தீர்களா? நீங்கள் இந்த தகவல்களை ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்தது எங்ஙனம் என்று கூறுவீர்களாயின் நான் நன்றி உடையவனாக இருப்பேன். வேறு யாரின் குறிப்புகளிலிருந்தும் இதனை பயன்டுத்தியிருக்க கூடாது. ஏனென்றால் Citation & Reference இற்கு உங்கள் தள நிர்வாக எதிரியாச்சே! நானாவது இன்னார் சொன்னார் என பெயர், பக்க இலக்கம்  தருகிறேன். இவற்றின் விபரத்தை அறியத் தர முடியுமா? நான் பதித்த சர்வசிருஷ்டிக்கும் முந்தினபேறானவர் என்ற கட்டுரையை படித்துப் பாருங்கள். இதுவும் யெகோவா சாட்சிகளின் பதிவுகளிலிருந்து திருடியதுதான்.

 



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

Bro. Dino Wrote:

// சகோதரர் cad sahayam அருமையான பதிவுகளை கட்டூரை வடிவில் முன்வைக்கிறார். இவ்வளவு நாளும் கேள்விகள் கேட்டு வம்புக்கு இழுத்து பழகியவர்களின் , நிலைமை போய் கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்ல தெரியாது ஓடி ஒளியும் நிலை கள்ளப் போதகன் சில்சாமுகும் மற்றும் வசந்தகுமார் சிஷ்யர்களுக்கும் , என் நட்புத் தளமாகிய இறைவன் தளத்துக்கும் உருவாகி இருப்பது வேக்கக்கேடான விஷயம். ஐயா சில்சாம் என்ற கள்ளப் போதகரே, வழமை போல ரசலையும், யெகோவாவின் சாட்சிக் காரங்களையும் இழுக்காமல், மழுப்பாமல் சகாயம் கேட்ட கேள்விக்கு பதிலை சொல்ல முயற்சிக்கவும்.//

http://www.kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&topicID=41594764&p=3

சகோ. தினா அவர்களே. சகோ. சகாயத்திடம் நான் கேட்ட பரிசுத்த ஆவியானர் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் கண்டபடி Copy & Paste திருவிளையாடல் நடத்திக் கொண்டிருக்கிறார். வசன அடிப்படையில்தானே கேட்டேன். வசனம் இருந்தால் சரியாக தர வேண்டும் அல்லவா முதலில் மழுப்பாமல் பதில் அளிக்க சொல்லுங்கள். பின்னர் மற்றவற்றைப் பேசலாம் 



-- Edited by colvin on Tuesday 29th of March 2011 10:52:06 AM



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//நண்பர் கொல்வின் மற்றும் ஜோன் அவர்களே,  தங்களின் கேள்வியே வாசித்தேன். இந்த சாதாரண கேள்விக்கு பதில் தெரியாமலா உங்கள் எல்லோருடனும் வாதாட வந்து இருக்கிறேன்.  எனக்கு இந்த கேள்வுக்கு பதில் தெரியாது என்று உங்களுக்கு நிங்களே நினைத்துக் கொண்டால் அது உங்கள் அனைவரினதும் அறியாமை.  இந்த சாதாரண அடிப்படைக்  கேள்வியே கூட தெரிந்து கொள்ளாமால் நாம் வேத மாணாக்கர்களாக இருக்கிறோம்?.  உங்கள் கூத்து எப்படி இருக்கு தெர்யுமா?  ''கேட்கிறவன் கேனையனாக இருந்தால் கேள்விரகில் நெய் வடியுமாம்''   அப்படி தான் உங்கள் தளத்தில் எழுதும் அனைத்தும் கோமாளித்தனமான பதிவுகளும். . //


ரசலின் மாணவர்கள் நன்றாக மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்பது தெரியும். எந்த ஒரு பாபிலோனிய கதையும் சொல்லாமல், வேதத்தை மாற்றி எழுதாமல், மனித போதனையை போதிக்காமல் உங்கள் கூட்டத்தை சேர்ந்த ஒருவரும் இதுவரை பதில் சொல்லவில்லை. இதற்க்கு நேரடியான பதிலை உங்களால் கொடுக்கமுடியாது என்று தெரிந்தாலும் குறைந்தபட்சம் முயற்சி செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்


-- Edited by John on Wednesday 16th of March 2011 01:27:02 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

இவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது.

தேவதூதனுக்கு கால் இல்லை என்பதும் பெரிய தெய்வம் சிறிய தெய்வத்தைப் படைத்து அது உலகத்தைப் படைத்தது என்று சொல்லும் பபிலோனிய மதக்காரர்கள். இவர்களுக்கு வேதம் முக்கியமில்லை. வசனமும் பெரிதல்ல. ரசலின் நூல்கள்தான் வேதப்புத்தகம். இதில் இந்த விபரம் இல்லை போலும் அதான் அமைதியாக இருக்கிறார்கள்.

Copy & Paste நாயகர்கள். போப்பு பதவிக்காக அடிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கு


-- Edited by colvin on Tuesday 15th of March 2011 08:46:01 AM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

இதற்கு பதில்சொல்ல எந்த ஒரு வேதபுரட்டரும் தயாராய் இல்லையா?

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//நன்றி நண்பர் ஜோன் அவர்களே,  நீங்கள் ஒட்டு மொத்தமாக திருத்துவதை   இதே பாணியில் தான் விளக்கம் கொடுக்கிறிர்கள்.  வேதப்பதிவு பழைய ஏற்பாட்டு காலத்தில் இருந்தே இயேசு தேவனின் முதல் படைப்பு என்று தான்  நமக்கு போதிக்கின்றது.  இதை நான் காமாலைக் கண்களால் பார்த்தா என்ன?  குருட்டுக் கண்களால் பார்த்தா என்ன?  வேதம் எதை சொல்கிறதோ அதே சத்திய வாக்கு!!!.  உங்கள் நம்பிக்கை பாரம்பரியத்தை சார்ந்தது.  எமது நம்பிக்கை வேத அடிப்படையே சார்ந்தது. 

 //

இல்லை நண்பரே உங்கள் நம்பிக்கை ரசலை சார்ந்தது! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லையே?  "சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" என்றால் என்ன அர்த்தம்?

''தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்''  என்பதும் உண்மை கிழே உள்ள வசனமும் உண்மையென்றால்? ஒன்று இரண்டு தேவர்கள் இருக்க வேண்டும்(அது விபச்சாரம்) அல்லது ஒரே தேவனுக்குள் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட ஆள்த்ததுவம் இருக்கவேண்டும். ஒரு ஆள்த்தத்துவம் பிதாவாகிய தேவன் அவர் ஒருவரும் காணக்கூடாதவர் மற்ற்றொரு ஆள்த்தத்துவம் குமாரனாகிய  தேவன், தேவனை கண்டவர்கள் எல்லாம் அவரைத்தான் கண்டார்கள் (இது புதிய மற்றும் பழைய ஏற்பாட்டு பக்தர்களுக்கு பொருந்தும்)


  • உசியா ராஜா மரணமடைந்த வருஷத்தில், ஆண்டவர் உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கக்கண்டேன்; அவருடைய வஸ்திரத்தொங்கலால் தேவாலயம் நிறைந்திருந்தது. (ஏசாயா 6:1)

யோவான் ஏசாயா கண்டது இயேசுவின் மகிமையை என்று சொல்லுகிறார்.

  • ஏசாயா அவருடைய மகிமையைக்கண்டு, அவரைக் குறித்துப் பேசுகிறபோது இவைகளைச் சொன்னான். (யோவான் 12:41)

    அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன் என்று சொல்லி, அந்த ஸ்தலத்துக்கு பெனியேல் என்று பேரிட்டான் (ஆதியாகமம் 32:30)
  • ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; (யாத்திராகமம் 33:11)


 // ''இயேசு (தேவன் என்றல்ல ஆனால் )  தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது'' //

இந்த Bracket ல் நீங்கள் எழுதி இருப்பது தான் புரட்டுதல். இயேசு தேவனுடைய குமாரன் என்றால் அவர் தேவனில்லையா? அப்படியென்றால் இயேசு ஒரு மனிதனும் தான் அப்படியென்றால் அவர் தேவக்குமாரன் இல்லையா?

 நான் முன்னமே சொன்னபடி இயேசு நான் நல்லவன் என்று சொல்லாதே என்று சொன்னார் ஆகையால் அவர் கெட்டவரா? முதலில் யோவான் 1:3 விளக்குங்கள் பிறகு தொடரலாம்.

 



-- Edited by John on Friday 11th of March 2011 11:43:49 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//யோவான் 1 :18 - ல் பின்வருமாறு சொல்லிருகிறது. ''தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை.'' 14  ஆம் வசனம் ''அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்'' என தெளிவாக சொல்லிருகிறது. மேலும் ஆதியில் அவர் ''தேவனோடு'' இருந்தார் என்று 1  ஆம் 2  ஆம் வசனங்கள் சொல்கிறது. எவராவது ஒருவரோடும் அதே சமயத்தில் அந்த ஆள் ஆகவும் இருக்க முடியுமா? //


அதனால தான் தேவன் ஒன்றாய் இருந்தாலும் அவர் மூன்று ஆள்தத்துவத்தில் இருக்கிறார் என்று சொல்லுகிறோம். உங்களை போல இயேசு ஒரு தேவன் ஆனால் அவர் ஒரே தேவனில்லை என்று மனித போதனை போதிப்பது இல்லை. யோவான் 1:1 முதல் யோவான் 1:3 வரை உள்ள வசனங்களை மனித போதனையை வாசிக்காமல், இயேசு ஒரு துதன் என்கிற காமாலை கண்களை கழட்டிவைத்து விட்டு பார்த்தால் அவர் தேவன் என்றும் உருவாகப்படதவர் என்றும் தெரியும்.

உங்களை போல புரட்டர்களின் புத்தி தெரிந்துதான் ஆவியானவர் யோவானின் மூலம் கிழே கண்டவாறு வசனத்தை எழுதி இருக்கிறார்.

  • யோவான் 1:3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று என்று மாத்திரம் எழுதினால் புரட்டர்கள் உடனே "அது சரிதான் ஆனால் அவரை பிதா உண்டாக்கினார்" என்று சொல்லுவீர்கள் என்பது தெரிந்துதான் "உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை" என்றும் எழுதியிருக்கிறார். ஆனால் ரசலின் மனித போதனயை பின்பற்றும் பேதைகள் இன்னும் புரட்டிக்கொண்டு திரிகிறது!

தேவன் இயேசுவை சிருஷ்டிக்கவில்லை, மாறாக ஜெநிப்பித்தார் மனிதனால் ஜெநிப்பிக்க பட்ட ஒரு பிள்ளை எப்படி தகப்பனை போலவே "மனிதத்துவதில்" ஒரே மாதிரி  இருக்கிறதோ  அதே போல இயேசுவும் ஒரு முழுமையான தேவனே!

தேவன் ஒரு "ரோபோட்" மிகாவேலை அனுப்பினார் என்று சொல்லி அவருடைய அன்பை கேவலப்படுத்துகிற உங்கள் கண்களை தேவன் தாமே திறப்பராக!


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

இவர்களது தளங்களுக்கு இனி நான் செல்லப்போவதில்லை, அதனால் சில்சாம், உங்கள் தளத்திலேயே இவர்களுக்கு பதில் அளித்துவிடுகிறேன், எப்படியும் நிச்சயம் பார்ப்பார்கள். இயேசு தெய்வீகமானவர் என சொல்லும் இவர்கள் தொழத்தக்கவர் அல்ல என்கிறார்கள் என்ன முரணான எண்ணம், தெய்வீகமான ஒன்றை தொழுவது மனித இயல்பு, இயற்கை. எந்த தொழுகைக்கும் பாத்திரமில்லாத ஒன்று தெய்வீகமாக இருக்க வேண்டுவதில்லை.
ஐயா தினா, உங்கள் கரிசனைக்கு நன்றி, எனது நிலையில் எந்த மாற்றமும் இல்லை.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Dino@
நண்பர்
josephsneha அவர்களே,  தாங்கள் எழுதிய கருத்தில் இருந்தே புரிகிறது, இயேசுவை தெய்வமாக தொழுபவர் என்று.  அதாவது பழைய, பாரம்பரிய நண்பிக்கைகளை கொண்டுள்ளவர் என்று.  அதில் உங்களின் தவறு இல்லை. நான் கூட ஆரம்பத்தில் ரோமன் கத்தோலிக்க விசுவாசப் பிரிவை காலம் காலமாக கொண்டவன். அத்துடன் கொழும்பில் இருக்கும் ''கிறிஸ்துவுக்காக இளைஞ்சர் சங்கம்''  என்ற   ஒரு  சமய  கழகத்தின்  மூலம்
சத்தியம் என்றால் என்னவென்று அறிந்துகொண்டேன்.  அதாவது அன்று தான் பைபல் வாக்கியங்களையும்,இயேசு தொழத்தக்க தெய்வம் என்றும் அறிந்துகொண்டேன்.
மற்றும் ரோமன் கத்தோலிக்கம் இருந்த போதே இயேசு தொழத்தக்க தேவன்  என்ற அதே விசுவாசம். பின்பு வேதத்தை வாசிக்க வாசிக்க திருத்துவத்தின் ஒரு சில விஷயங்கள் ஆராய ஆரண்பித்த பின்பு தான் புரிந்துகொண்டேன். இயேசு
தொலத்தக்கவர் இல்லை என்பதும், மற்றும் அழியாத ஆத்துமா  இன்னும் பல;  வேதத்துக்கு மாறான கோட்பாடுகளை கொண்டு இருப்பதை. அதுமட்டும் இல்லாமல்  வாசித்து வேத ஆதாரப்படி இந்த சத்தியம்  சரியாக இருக்கா என்ற பின்பே  சத்தியத்தை ஏற்றுக்கொண்டேன்.  இயேசு கிறிஸ்து சொல்கிறார்:-


  • ''என்னை அனுப்பின பிதா ஒருவனை இழுத்துக்கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான்; கடைசிநாளில் நான் அவனை எழுப்புவேன்'." (யோவான் 6:44

ஆகவே தேவனின் தெரிவின் அடிப்படையிலே நாம் இருக்கிறோம். உங்களைப் போன்றே நாமும் இயேசுவை விசுவாசிக்கிறோம். ஆனால் அவர் தொழத்தக்க தெய்வம் என்று மட்டும் நாங்கள் விசுவாசிக்கமாடோம்.  இதற்கு மிக முக்கிய காரணம் வேதம் அவ்வாறு எமக்கு கற்பிக்கவில்லை. நீங்கள் கூட உங்களின் பாரம்பரிய விசுவாசத்தை ஒரு தடவை ஒதுக்கிவிட்டு எமது தளாத்தில் கொடுக்கும் வேதப்பதிவுகளை ஆராய்ந்து பார்த்து நலமானதை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றி



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

colvin wrote:
இனி மேலும் தங்களுடனோ, சகோ. கோவைபெரியன்ஸ் உடனோ விவாதம் செய்வது சரியல்ல என நினைத்து ஒதுங்கிக் கொள்கிறேன். இதனால் எனது பெறுமதியான கால நேரமே வீண்விரயமாகின்றது.
அன்பான சகோதர் கோல்வின் அவர்களுக்கு, சத்தியத்தினிமித்தம் உண்டான சங்கடங்களுக்காக வருந்துகிறேன்;இளம் வயதினரான தாங்கள் இந்த மட்டும் நிதானமாக இருப்பதே ஒரு வரமாகும்;தாங்கள் இதுவரை எந்த விதமான கீழ்த்தரமான தூஷணங்களிலும் ஈடுபடாததுடன் தங்களிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படியாவது பதிலளிக்க வேண்டும் என்பதோடு எதிர்தரப்பையும் ஆதாயப்படுத்தவேண்டும் என்ற நேர்மையும் துடிப்பும் தங்களிடம் இருந்தது; அதேநேரம் தாங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைத் தற்காத்துக் கொள்ளவேண்டுமே என்ற தவிப்பும் பொறுப்புணர்வும் தங்களிடம் காணப்பட்டது;தங்களைப் போன்ற இளைஞர்களுக்காக தேவனைத் துதிக்கிறேன்;தாங்கள் இதுவரை செய்து வந்த தியாகமான பணிகளுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்.

இது விவாதத்தின் மூலம் சாதிக்கும் காரியம் என்பதில் எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கையில்லை;அவரவருடைய மூளையில் இதற்காகவே குறிப்பிட்ட பகுதி வேலை செய்கிறதல்லவா?

எனவே ஒரு கட்டத்துக்கு மேல் இதுபோன்ற மாற்று நம்பிக்கையாளர்களிடம் வாதிடும் போது மனச்சோர்வு எனும் நோய்க்கு ஆளாகும் ஆபத்து உண்டு; அவர்களும் கூட இதேபோன்ற ஏதோ ஒரு மனநோயினால் பீடிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள்;சில மனநோயாளிகளுடன் வாதிடும் போது ஒரு கட்டத்தில் நாமும் அவர்களைப் போலவே மாறிவிடும் ஆபத்தும் உண்டு; நாம் இந்த எல்லையை தாண்டும் போது நமக்குள் வாசஞ்செய்யும் பரிசுத்தாவியானவராகிய சர்வ வல்ல தேவனாகிய கர்த்தருடைய ஆவியானவர் துக்கத்துடன் நம்மை எச்சரிப்பார்;நாம் உடனே இந்த அன்பின் சத்தம் கேட்டு அவரிடமாகத் திரும்பிவிட்டால் உடனடியாக எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நம்முடைய இருதயங்களையும் நிரப்பும் என்பது நிச்சயம்.

  • "நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்.
  • அப்பொழுது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.(பிலிப்பியர்.4:6,7)
இதற்கு ஒப்பீடாக கோழியையும் அதன் குஞ்சுகளையும் எடுத்துக்கொண்டால் அவற்றுக்கு தீங்கு செய்யும் பெரிய பறவைகள் வானத்தில் வட்டமிடும் போது கோழி தன் குஞ்சுகளை ஒரு விசேஷ சத்தம் எழுப்பி எச்சரிக்கும்;உடனே அவை கோழியின் சிறகுகளுக்குள் அல்லது பாதுகாப்பான மறைவிடத்தை நோக்கி ஓடி தப்பிக்கும்;இதுபோலவே பரி.ஆவியானவரும் நம்முடைய திராணிக்கு மீறிய சூழ்நிலைகளில் நம்மை எச்சரிக்கிறார்;நாம் கீழ்ப்படிந்தால் சமாதானம் பெறுகிறோம்;ஒன்றையும் வாதத்தினால் செய்துவிடமுடியாது என்பதே பரிசுத்தவான்களின் நிலையாகும்.
  • "ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள்."(பிலிப்பியர்.2:3)
இந்த வசனம் இருதரப்புக்கும் பொதுவானது;இதன்படி அவர்கள் நம்மை பரியாசம் செய்தாலும் நாம் அமைதி காத்துவருகிறோம்;நாம் இறையியல் ரீதியாக விவாதிக்கும் சூழ்நிலைகளில் அவர்கள் தேவையில்லாமல் தனிப்பட்ட முறையில் தாக்கி இழிவுபடுத்துகிறார்கள்;திரித்துவம் குறித்த விவாதத்துக்கும் நான் ஹோண்டா அக்கார்டு வாங்கி ஓட்டுவதற்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை; ஹோண்டா அக்கார்டு வாங்குவதற்குக் குறிப்பிட்ட ஒரு போதனையிலோ அல்லது தெய்வ வழிப்பாட்டிலோ இருக்கவேண்டிய கட்டாயமா என்ன? தனிப்பட்ட மனிதனில் குணாதிசயத்துக்கும் அவன் கைக்கொள்ளூம் போதனைக்கும் என்ன சம்பந்தம்? அதாவது மோசடியாளர்கள் எல்லா தரப்பிலும் எல்லா மார்க்கத்திலும் சமுதாயத்தின் எல்லா மட்டங்களிலும் இருக்கிறார்கள்;ஆனால் நம்முடைய வாதத்தினை திசைதிருப்பி நம்முடைய நம்பிக்கைகளை தகர்க்கும் முயற்சியாகத் தொடர்ந்து எதிர்தரப்பினர் போராடுவார்கள் அது அவர்கள் ஏற்றுக்கொண்ட களமாகும்;ஆனால் நாம் இன்னும் நிதானமாக முன்னேறி நம்முடைய நிலைகளை உறுதிபடுத்த வேண்டும்;அதற்கான  வாய்ப்புகள் நமக்கே அதிகமாகும்.

ஏனெனில் எதிர்தரப்புக்கு நம்மைவிட வேத வசனங்களை எடுத்து பயன்படுத்துவதில் பல சங்கடங்கள் உண்டு;எப்படியெனில் நாம் எடுத்தாளும் ஒரு குறிப்பிட்ட வசனத்தை அதன் நேரடிப் பொருளை எடுத்துக்கொண்டு அப்படியே நம்பி விசுவாசிக்கும் மார்க்கத்தில் இருக்கிறோம்;அவர்களோ அந்த குறிப்பிட்ட வசனத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் அதன் மூல பாஷையின் அர்த்தத்தையும் மூலப்பிரதியுடன் ஒப்பிட்ட பிறகே பயன்படுத்த முடியும்; இது எத்தனை பரிதாபமான நிலையல்லவா?

இதற்கு தான் ஏற்கனவே குறிப்பிட்டேன்...வேண்டாம்,அதான் அவர்களுக்கு கோபம் வருகிறதே....பொதுவாக சொல்லுகிறேன்...சான்றிதழின் அடிப்படையிலேயே ஒரு காரியத்தை நம்புவேன் என்று ஒருத்தன் சொன்னால் அவன் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது; நம்பிக்கையே வாழ்க்கையின் அடிப்படை..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
சகோ. தினாவிற்கு பதில்கள்
Permalink  
 


அன்பின் சகோதருக்கு

நான் கூறவருவது என்னவென்றால் ஒருவர் பற்றி ஆதாரமில்லாமல் எதுவும் சொல்லக் கூடாது.

சரி நீங்கள் கூறுவது உண்மை என வைத்துக் கொண்டாலும் அவர் கூறிய முரண்பாடான விடயஙகள் எவை? அவற்றுக்கு உங்கள் விளக்கம் என்ன என்பதை ஆதாரத்துடன் தெளிவாக முன்வையுங்கள்.

மிக முக்கியமானது கருத்துக்களை பற்றிய விமர்சனங்களாக இருக்க வேண்டுமே தவிர அது ஆசிரியர் பற்றிய விமர்சனமாக இருக்க கூடாது. எது எந்த ஆசிரியராக இருந்தாலும் சரியே. ரசல் என்றாலும் அப்படிதான். ரசல் பற்றிய நிறைய விபரம் இருந்தும் அவை பதிக்காமலிருந்தற்கான காரணம் அவற்றுக்குரிய ஆதாரம் என்னிடம் இன்மையே.

மற்றைது நான் யார் யாரின் கருத்துக்களை பதிக்கிறேன் என்பதை தெளிவாக Source இல் குறிப்பிட்டு விடுகிறேன். எனவே அந்த கருத்துக்களை வேறு யாருடனும் முடிச்சுப் போட வேண்டாம். அது அநாவசியமானது. தேவையற்றது. வேண்டுமானால் தாரளமாக நீங்கள் இவற்றினை சோதித்துப் பார்க்கலாம். அப்படி முரண்பாட்டால் நீங்கள் ஆதாரத்துடன் எழுத வேண்டும்.


இனி மேலும் தங்களுடனோ, சகோ. கோவைபெரியன்ஸ் உடனோ விவாதம் செய்வது சரியல்ல என நினைத்து ஒதுங்கிக் கொள்கிறேன். இதனால் எனது பெறுமதியான கால நேரமே வீண்விரயமாகின்றது.

ஆயினும் வரும் வாரங்களில் அவ்வாசரியரின் அதிகமான ஆக்கங்களை பதிவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.






__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: தினா என்னும் வேதப்புரட்டனின் அபத்தங்கள்
Permalink  
 


Dina Wrote
அவரை எனக்கு தெரியாது என்று யார் சொன்னது? அவர் கனடா, லண்டன், சுவிஸ் வந்து இருக்கும் போது இவர் அப்படி என்னதான் சொல்கிறார் என்று கேட்கவே மினக்கட்டு சென்றேன்.  இவர் கனடாவில் டொராண்டோ என்ற இடத்தில் யெகோவாவின் சாட்சி யார்? என்ற தலைப்பில் கொடுத்த விளக்கம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. அப்பவே தெரிந்து கொண்டேன் அவர் எழுதும் புத்தகம் எவ்வாறு இருக்கும் என்று

தினா தயவு செய்து உண்மையை சொல்லுங்கள். நான் மெயில் அனுப்பி விசாரிக்க இருக்கிறேன். இந்த கூட்டம் எப்போது நடைபெற்றது? உமது பதிவிலிருந்து குறிப்பிட்ட எல்லா நாட்டிற்கும் சென்று பிரசங்கம் கேட்டதாக தெரிகிறது. நீர் கூறும் தலைப்பு சரியானதுதானா? அந்த தலைப்பிலா பிரசங்கம் நடந்தது. சில ஒலிபதிவுகள் இணையத்தில் கிடைக்கின்றன. நீர் குறிப்பிடும் பிரகாரம் அவை இல்லை. தயவு செய்து நடைபெற்ற வருடம், மாதம், திகதியை குறிப்பிடவும். திகதி ஞாபகமில்லாது விட்டாலும் பரவாயில்லை. இதர விடயங்களைக் குறிப்பிடவும் . நான் மெயில் மூலமாகவோ அன்றேல் போன்மூலமாகவோ விசாரித்துக் கொள்கிறேன்.

செய்வீர் என உறுதியாக நம்புகிறேன்.


இன்னுமொரு கேள்வி எதற்காக ஆசிரியரின் கேள்விக்கு பதில் அளிக்காமல் அவரின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கிறீர்? பதில்  எழுதலாமே தினா? அப்படிப் பதிப்பது உலகமகா குற்றமா? கேள்விக்கு பதில் முக்கியம். அது யாருடைய ஆக்கத்தைப் பதிப்பதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை? எனது பெயரிலா பதித்தேன். இல்லைதானே!. ரசலின் ஆக்கம் என்றாலும் கண்டிப்பாக குறிப்பிடுவேன். எனது பெயரில் பதிக்க மாட்டேன்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

Dino Wrote
த்தோலிக்க லத்தீன் மொழிபெயர்ப்பு இவ்வாறு வாசிக்கின்றது:- ''உங்கள் மட்டிலும் சர்வேசுரன் தம்முடைய இரத்ததினால் தமக்குச் சொந்தமாக்கின தமது திருச்சபையே ஆளுவதற்கு இஸ்பிரித்துசாந்துவானவர்  உங்களை மேற்றிராணி மார்களாக இஸ்தாபித்து சர்வ மந்தையின்  மட்டிலும் எச்சரிக்கையாய் இருங்கள்'' ( UN ,KJ ,Dy , NAB இதைப் போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர் ) எனினும், NW - ல் முன்பகுதி பின்வருமாறு வாசிக்கிறது:- '' தம்முடைய சொந்தமானவரின் (குமாரனின் ) இரத்தம்:''' (TEV -ல் இதைபோன்று இருக்கிறது. 1953 -ல்  அச்சடித்த RS -ல் ''தம்முடைய சொந்த இரத்தத்தால்.''' என்று இருக்கிற போதிலும், அதன் 1971 -இன் பதிப்பில் '''தம்முடைய சொந்தக் குமாரனின் இரத்தத்தால்,'' என்றிருக்கிறது. RO மற்றும் DA -ல் வெறுமென '''தம்முடைய சொந்த இரத்தம்,'' என வாசிக்கப்படுகிறது)



உங்கள் அறிவு அவ்வளவுதான். யெகோவா சாட்சிகள் மற்றும் வேதப்புரட்டர்களும் வேதாகங்களை தங்கள் சொந்த விருப்பத்திற்கேற்ப மொழிபெயர்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் நீங்கள் குறிப்பிடும்ம்முடைய சொந்தக் குமாரனின் இரத்தத்தால் என்பது நல்லதொரு கிரேக்கமொழிபெயர்பு பிரதியை மொழி தெரிந்தவர்களுடன் உதவியுடன் பாரும். நீங்கள் சொல்லுவது உண்மையா பொய்யா என்று தெரியும்.

யொகோவா சாட்சிகள் மொழிபெயர்ப்பில் ஏகப்பட்ட பிழைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த நூல்களை வாசித்துப் பாரும் உண்மை உமக்கு புரியும்

R. Countess, The Greek Text of the New World Translation
H.H. Rowley, How not to Translate the Bible


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

Dino Wrote
உங்களுக்கு இந்தப் பதிவில் ஏன் இவ்வளவு குழப்பம். நீங்கள் ஒரு தடவை ஏன் நண்பன்  தேநீர்பூக்களிடம் இதே கேள்வியே கேட்டு இருக்கிறிர்கள். அவரும் இதற்க்கான பதிலை யோவான் 1: 1 ''வார்த்தை'' என்ற திரியில்  விளக்கமாக கொடுத்துள்ளார். தயவு செய்து வாசித்து பார்க்கவும்.


நான் கேட்டேன் என்று உங்களுக்கு எப்படி தெரியும் பேஸ்புக்கில் அவருடன் உரையாடல் நடத்தியது உண்மைதான். அவர்தான் பதில் அளிக்க முடியாமல் ஓடிப்போனார். பின்னர் மூலமொழைி அது இது என்றார். மூலமொழி பற்றிய அறிவில்லாமல் அதற்கு விளக்கம் கொடுக்க முடியாது அல்லவா?

அந்த வார்த்தை ஒரு தேவனாயிருந்தது. ஒரு மிஸிங் என்றார். மூலப்பிரதி ஆதாரம் கேட்டேன். தரவில்லை. சரி உள்ளபடி வசனத்தில் ஒரு என்று சேர்த்தால்  தேவன் பல தேவன்களை உண்டாக்கி வைத்திருப்பார் ஐயத்தை ஏற்படுத்துகிறது. சரி அப்படியே ஒரு டம்மி தேவனை உண்டாக்க வேண்டிய தேவை என்ன? ஒரு தேவனாயிருந்தது என்று சொன்னால் என்ன அர்த்தம் என்று விளக்குவீர்களா?  அலம்ப வேண்டாம்


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

இன்னொரு அபத்தம்

Dina Wrote
அவரை எனக்கு தெரியாது என்று யார் சொன்னது? அவர் கனடா, லண்டன், சுவிஸ் வந்து இருக்கும் போது இவர் அப்படி என்னதான் சொல்கிறார் என்று கேட்கவே மினக்கட்டு சென்றேன்.  இவர் கனடாவில் டொராண்டோ என்ற இடத்தில் யெகோவாவின் சாட்சி யார்? என்ற தலைப்பில் கொடுத்த விளக்கம் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. அப்பவே தெரிந்து கொண்டேன் அவர் எழுதும் புத்தகம் எவ்வாறு இருக்கும் என்று

அதுதான் ஐயா கேட்டேன். அப்படி என்ன சொன்னார். என்ன தவறை கண்டீர்கள். ஆதாரத்துடன் சொல்லுங்கள். யொகோவாவின் சாட்சி யார் என்ற விளக்கம் எந்த திகதியில் நடந்தது? அவர் சொன்ன கருத்துக்கள் என்ன? அதற்கான உங்கள் விளக்கங்கள் என்ன? சும்மா வார்த்தைகளால் அளம்ப வேண்டாம்.  அதற்குரிய விளக்கங்களையும் அதற்குரிய மறுப்புக்களையும் பதியுங்கள். உங்கள் ஆட்சேபத்தை ஆசிரியரிடம் தெரிவித்தீர்களா?

கனடா, சுவிஸ், லண்டன் எல்லாம் போனீங்களா? போன மாதமாவது ஞாபகமிருக்கா?  அந்த எல்லா நாட்டிற்கும் மெனக்கட்டு போய் அவரின் பிரசங்கங்களை கேட்டிருப்பீர்கள் . சரி நம்புகிறோம்.

ஆதாரத்துடன் கட்டுரை எழுதுவீர்கள் என நம்புகிறேன்.

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

தினா என்ற கள்ளப்போதகனுக்கு வசனத்திற்கு விளக்கம் சொல்லத் தெரியவில்லை. இயேசு தேவன் இல்லை என்று வசனம் பதித்தாராம் எந்த வசனங்களில் எங்காவது இயேசு தேவன் இல்லை என்று உள்ளதா? ஆனால் யோவான் 1:1 தெளிவாகவே சொல்லுகிறது. இயேசு தேவன் என்று.

சுயமாக வாசித்து சிந்திக்கத் தெரியாதவன் மற்ற ஆசிரியர்களை விமர்சிக்க வந்துட்டார். இதிலிருந்தே தெரியவில்லையா? இவ்வளவு தெளிவாக Title, Author Name கொடுத்தும் சுயபுத்தி கொஞசமும் இல்லாது உளறியுள்ளதை. இவரின் அறிவை வாசிக்கும் அனைவரும் உணர்ந்து கொள்ளட்டும்; சாத்தான் நினைப்பது எல்லாம் இவருக்குத் தெரியும். பபிலோனிய மதத்தவன் இப்படி தான் பேசுவான்.

வாழ்க தினா..!


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// அன்பு சகோதரர் டினோ அவர்களுக்கு,நமது சகோதரர் ரசல் தன்னை ஏழாம் தூதன் என்று சொல்லவில்லை , ஆனால் அவரை பின்பற்றி வந்த மற்ற சகோதரர்கள் தான் அவர் மீது கொண்ட பற்றுதலினால்(அவரிடம் இருந்த பணத்தின் )  அவரை ஏழாம் தூதன் என்று வர்ணிக்கிறார்கள்,

இப்போ யார் மேல குற்றம் சொல்றது??????????????????????????//

இப்ப தானய்யா நீங்களெல்லாம் சரியான ஆம்பளைங்க...இதத்தான இத்தனை காலமா வெளிப்படையாக அறிவிக்கச் சொல்லிப் போராடினேன்;இனிமேல் நீங்கள் தாராளமாக இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல என்று சொல்லலாம்;உங்களை நாங்கள் எதிர்க்கவே மாட்டோம்;ஏனெனில் நீங்கள் இரஸல் எனும் கள்ளப்போதகனுடைய செய்திகளால் கவரப்பட்டு இந்த நிலைக்கு வந்தவர்கள் என்பது ஊரறிந்த இரகசியமாகும்;எனவே நீங்கள் "வேதத்திலிருந்து, வேதத்திலிருந்து" என்று மீண்டும் மீண்டும் மூச்சுபிடிக்க வாதாடாமல் ரொம்ப சிம்பிளாக இரஸலின் வேதத்திலிருந்து என்று சொல்லிவிட்டு இராஜா மாதிரி போய்க் கொண்டிருக்கலாம்;அதற்கு மேல் உங்க பின்னால எவன் வந்தாலும் என்னைப் போன்றவர்களுக்கு அவர்களெல்லாம் அன்றாடம் என்னுடைய தலையிலிருந்து வீழ்ந்து இங்குமங்கும் அல்லாடும் தன் வேர்களை இழந்த மயிரைப் போன்றவர்கள்; என் பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்பட்டுப் போகும் என்று உங்களைக் குறித்தே இயேசுவானவர் சொல்லிச் சென்றார்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

தினா வேதரப்புரட்டனின் கோணல் புத்தியை வாசித்துப் பாருங்கள்...

ஆரம்பித்து விட்டார் கொல்வின் அவர்கள் அடுத்த படம் தயாரிக்க, சில்சாமின் தளத்தில் இருக்கும் மொத்த தயாரிப்பாளரும் ஒரே மாதிரி இருகனுவல். வசந்த குமார் என்ற மனிதரின் தவக்க புத்தி இவர்களையும் ஒட்டி விட்டது போல ::::: தமிழ் தளத்தில் கொல்வின் அவர்கள் எழுதும் கட்டுரைகூட வசந்தகுமாரின் பதிப்புக்கள் மாறியே இருக்கு. நான் நினைக்கிறேன் இவர் வேதத்தை வாசிப்பதை விட வசந்த குமார் தயாரிக்கும் படத்தை பார்த்து வளர்ந்தவராக இருக்குமோ !!!!! 

Colvin:-//ரசல் மட்டுமல்ல அவர்களைப் பின்தொடர்ந்து வந்த யொகோவா சாட்சி தலைவர்கள் பலரும் கள்ளத்தீர்க்கதரிசனங்கள் உரைத்துள்ளனர். அவற்றை ஆதாரத்துடன் பின்னர் பார்ப்போம். இன்று இவர்கள் மற்றவர்களை தூற்றுவது வேடிக்கை///

இந்தப்படம் இன்னும் புதிதாக  இருக்கு. பார்ப்போம் இன்னும் என்ன பொய் மலைகளை பொலியப் போறீங்க என்று. கொல்வின் இயேசு தொழத்தக்க தெய்வமா என்று விவாதிப்பதை விட்டுவிட்டு வசந்தகுமார், மற்றும் யெகோவாவின் சாட்சிகாரங்கள் பற்றிய பதிவுகள் இந்த விவாதத்துக்கு தேவை தானா? எதோ ஒன்றை திசை திருப்ப கொல்வின் அவர்கள் சில்சாம் என்ற கள்ளனுடன் சேர்ந்து நாடகம் நடத்துகிறார் என்று மட்டும் தெரிகிறது. உங்கள் நாடகத்தை தொடருங்கள் ::::....

ஹி..ஹி.. ஹி..இந்த கோணல்புத்திகாரனின் பதிவை வாசிக்கும் யாரும் உணர்ந்து கொள்வார்கள். நான் ஆசிரியர், பெயர், பக்க இலக்கம் இவற்றை அனைத்தையும் கொடுத்துள்ளேன். இப்படி எழுதுவன் எப்படிப்பட்ட புத்தியுள்ளவனாக இருக்க வேண்டும். சும்மா எழுதினால் சொல்லலாம். சகோ. வசந்தகுமார் என்ற எந்த பதிவிலாவது குறிப்பிட்டுள்ளேனா? அனைத்திற்கும் ஆசிரியர்களின் பெயர் குறிப்பிட்டுள்ளேன். அல்லவா. கண்ணைத் திறந்து நன்றாக பாருங்கள். Citation என்றால் என்ன என்பதை அறிந்துவிட்டு வாருங்கள். எப்படிதான் Theses செய்து University இல் Pass பண்ணினீர்களோ தெரியாது

இன்னும் நான் கேட்ட யோவான் 1) 1 இற்கு பதில் தர துப்பில்லை. இந்த இலட்சணத்தில்....... முதலில் ரசலின் நூலிருந்து எடுத்த விபரங்களை பக்க இலக்கங்களுடன் தரப் பழகுங்கள். அதன் பிறகு என்னுடன் பேச வாருங்கள்.  முதலில் ரசல் வேதப்புரட்டனின் ஆக்கங்கள் 7ம நாள் அட்வாந்து சபையிலிருந்து திருடப்பட்டது. அதை ஆதாரத்துடன் பதிந்துள்ளேன். வாசித்துப் பாருங்கள்.

யெகோவா சாட்சிகளின் விபரங்களை நான் பதித்தால் உங்களுக்கென்ன? சாத்தானுக்கு இயேசு தெய்வமில்லை என்று தெரியும் என்று பபிலோனியக் கதைகளை சொல்பவன் நான் அல்ல. நான் பதித்த கேள்விகளுக்கு பதில் தாருங்கள். நேற்று மாலையே தருவதாக சொல்லிவிட்டு ஓடிப்போனவர்தானே நீர். .?



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard