Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: அடக் கடவுளே…!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
RE: அடக் கடவுளே…!
Permalink  
 


http://thiruchchikkaaran.wordpress.com/2011/03/04/oh-my-lord/


மேலே கொடுக்கப்பட்ட திரியில் திருச்சிக்காரனின், அட கடவுளே!!! என்ற கட்டுரை இருக்கிறது. வழக்கம் போல அரைகுறையாக, காழ்ப்புணர்ச்சி நிறைந்தவராய் இந்த கட்டுரையை எழுதி இருக்கிறார். அவரின் தளம் பல இந்துக்கள் வந்துபோகும் இடமாக இருப்பதால், அங்கே நாம் சத்தியத்தை பகிர்ந்துகொள்ள கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்கிறோம். அங்கே இது வரை வந்த பின்னூட்டங்களை நண்பர்கள் பார்த்து பயனடைவார்களாக.

SANKAR says: March 4, 2011 at 10:32 pm
//இப்படி பல முரண்பாடான கோட்பாடுகளை ஒன்றாக்கி மக்களின் தலையிலே கட்டியவர்கள், “அப்படியே ஒத்துக்க போ” என்று சொல்லி விட்டனர்//
அருமை .
இன்னும்1. தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள்2.பாவம் போக்க பலி கொடுத்தல்3.சடங்குகள்,சம்பிரதாயங்கள்போன்றவறை பற்றியும் கூறுங்கள்.


Reply thiruchchikkaaran says: March 4, 2011 at 10:46 pm
வாங்க சங்கர் சார்,உங்களுடைய வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பல கட்டுரைகள் வர இருக்கின்றன.


Reply raja says: March 7, 2011 at 6:03 am
தாங்கள் சொல்வது போல் பைபிள் கோட்பாடுகள் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன. கொலை செய்யாதிருப்பாயாக என்று ஒரு இடத்தில் சொல்லும். இன்னொரு இடத்தில் பிற இனத்தவர்களை உனக்கு ஒப்புக்கொடுத்தேன் அவர்களை கொல். அவர்களுடைய சொத்துக்களை பங்கு போட்டுக்கொள் என்று சொல்லும். மோசேக்கு கர்த்தர் போட்ட அபத்தமான கட்டளை வசனங்களை இந்தியர்களுக்கு இயேசு சொன்னது போல் விளம்பரம் செய்வார்கள். ஆனால் ஆழ்ந்து படித்தால் சம்பந்தமே இருக்காது. உதாரணமாக என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்ற வரிகள் இஸ்ரவேலா்களை மோசே பாலும் தேனும் ஓடும் நாட்டுக்கு கூட்டிச் செல்வதாக கர்த்தா் மோசேயிடம் கூறிய வார்த்தைகள். இதை தங்கள் வாகனங்களிலும் வீட்டிலும் எழுதி விளம்பரம் செய்கின்றனா்.வசனங்களை தங்கள் வசதிக்கு தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொண்டு வயிறு பிழைக்கிறார்கள். பொய் சொ்லலாதிருப்பாயாகா என்று ஒரு வசனம். மற்றொன்று கிறிஸ்துவை பிரசங்கம் செய்வதற்காக பொய் சொல்லலாம் என்று. இதை மட்டும் எல்லா பாதிரிகளும் தவறாமல் செய்கிறார்கள்.பைபிளின்படி ஆதாம் ஏவாளின் எழுபத்தி ஆறாவது தலைமுறையில் இயேசு பிறக்கிறார். இதைக் கணக்கிட்டால் ஆதாம் ஏவாள் தோன்றி பத்தாயிரம் ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் உலகம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன என்று விஞ்ஞானம் கூறுகிறது. இந்த ஒரு விஷயத்திலேயே பைபிள் முழுக்க கற்பனை என்ற முடிவுக்கு வந்து விடலாம். ஆனால் இன்னும் இதேகதையைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பைபிளின் அபத்தங்களை http://www.evilbible.com என்ற தளத்தில் பாருங்கள்.


Reply thiruchchikkaaran says: March 7, 2011 at 9:17 am
ஐயா, வெறும் அபத்தம் மட்டும் அல்ல, மனிதத்துக்கு ஆபத்தும் கூட. அப்பட்டமான மத சகிப்புத் தன்மை இன்மையை, மத வெறியை , இனவாத இனவெறியை, பிற மதங்களைக் கண்டித்து அழிக்க வேண்டும் என்கிற ஆவேசத்தை வெளிப் படுத்தும் கருத்துக்கள் உள்ளன.


Reply thiruchchikkaaran says: March 7, 2011 at 9:27 am
விவிலியத்தில் உள்ள, இனவாத இனவெறி , மதவாத மத வெறி வெறும் அபத்தம் மட்டும் அல்ல, ஆபத்தும் கூட. அதே நேரம் நாம் எந்த ஒருமதத்தையும் ஆக்க பூர்வமாக அணுகுகிறோம்.விவிலியத்ததில் சொல்லப் பட்டுள்ள கருத்து ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்க்கிறோம். பெரும்பாலான கருத்துக்கள், மத சகிப்புத் தன்மையை அழித்து, மத வெறியை பரப்பும் வகையிலும், இனப் படுகொலையை புனிதப் படுத்தும் வகையிலும் உள்ளன. அவற்றை சுட்டிக் காட்டி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். அவற்றில் இயேசு கிறிஸ்து சொன்னதா க உள்ள சில நல்ல கருத்துக்களும் உள்ளன. அவற்றை முன்னிலைப் படுத்தி அவர்கள் மனதில் மத சகிப்புத் தன்மை மேம்படுமபடி செய்து கிறிஸ்தவர்களை நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வருவதே நமது நோக்கம்.


Reply Ashok kumar Ganesan says: March 7, 2011 at 8:05 pm
//உதாரணமாக என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்ற வரிகள் இஸ்ரவேலா்களை மோசே பாலும் தேனும் ஓடும் நாட்டுக்கு கூட்டிச் செல்வதாக கர்த்தா் மோசேயிடம் கூறிய வார்த்தைகள். இதை தங்கள் வாகனங்களிலும் வீட்டிலும் எழுதி விளம்பரம் செய்கின்றனா்.//
அப்படியென்றால், கீதை என்பது முழுக்க முழுக்க போர்களத்தில் நின்ற அர்ஜுனனுக்கு மட்டும்தானோ?



Reply Ashok kumar Ganesan says: March 7, 2011 at 9:03 pm
நல்ல வேலை திருச்சிக்காரன், நீங்கள் அரசு தரப்பு வழக்கறின்ஞராக இல்லை. இருந்திருந்தால் எத்தனையோ அப்பாவிகளை குற்றம் சாட்டி, பல அப்பாவிகளை தண்டித்திருப்பீர்கள், உமக்கு வேண்டிய ஆட்களை புனிதர்களாக காட்டி இருப்பீர்கள்.“லார்ட்” என்று எழுதி இருப்பது நக்கலடிக்கதானே? சரி, போகட்டும் நீங்கள் ஒத்துக்கொள்ளமாட்டீர்கள்.
//ஆதம், ஏவாள் ஆகியோர் முதலில் நிர்வாணியாக இருந்து, பிறகு உடை அணிய ஆரம்பித்தனர் //
இதில் என்ன பிரச்னை, நம் குழந்தைகளும் அவ்வாறே.

//லார்ட் அனுமதில் இல்லாமல் பழத்தை பறித்து சாப்பிட்டு விட்டனர் என்றும் சொல்லி, அதனால் கோவப் பட்ட லார்ட் அவர்களை தோட்டத்தில் இருந்து விரட்டிய, கடவுளை கண்டிப்புக்காரராக காட்டும் கடவுள் கோட்பாடு!//
கண்டிப்பில்லாத தகப்பன் ஏது? மேலும், பழம் தின்றது சாதாரண காரியம் தானே என்று காட்ட துடிக்கும் உங்கள் புத்திசாலித்தனம் தெரிகிறது (அத்தகைய புத்திசாலித்தனம் எங்கிருந்து வரும் என்றும் தெரியும்). ஆனால், எந்த ஒரு குற்றத்திற்கும் அதன் நோக்கத்தை வைத்தே அது ஆராயப்படவேண்டும்.

//என்னை மட்டுமே, வழி பட வேண்டும்//
தன் மனைவி தன்னிடம் மாத்திரமே மனைவியாக இருக்கவேண்டும் என்றும், தன் பிள்ளைகள் தன்னையே தகப்பனாக அறிக்கை செய்யவேண்டும் என்றும் இருப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்.

//பிற இனங்களை அழிக்கலாம்//
பாவத்தை பற்றி நீர் அறிந்திருக்க வில்லை. மனிதனை தேவனித்தளிருந்து பிரித்து வைக்ககூடிய வல்லமை பாவத்திற்கு மாத்திரமே உண்டு. அத்தகைய பாவம் மக்கள் மத்தியில் பெருக்கெடுக்கும் போது, பாவத்தை அழிக்க, அந்த பாவம் பெருகியுள்ள மக்களில் ஒரு கூட்டமும் அழிக்கப்படும் (காலில் நோயுற்ற மனிதனை காக்க, அந்த நோய்தீர்க்க மருந்தில்லாத பட்சத்தில், அவன் காலை மருத்துவர் நீக்குவதில்லையா?). இப்பொழுது பாவத்தின் பரிகாரியான கிறிஸ்துவின் ரத்தம் பாவத்தை போக்கும் அருமருந்தாக உள்ளது. அதனால், கிறிஸ்துவின் மரணத்தின் பொருட்டு பாவத்தை போக்க யாரும் அழிக்கப்பட தேவை இல்லை.உமது மற்ற கேள்விகளுக்கும் பதில் வரும். இப்பொழுது நேரமில்லை.
அசோக்


Reply sivanadiyaan says: March 7, 2011 at 10:29 pm
இது கலிகாலம் சாமி,தெரியாமலா நம் முன்னோர்கள் இந்த கலியை வகுத்துள்ளனர். கலி தன வேலையை செய்கிறது.


Reply sivanadiyaan says: March 7, 2011 at 10:33 pm
//என்னை மட்டுமே, வழி பட வேண்டும்//
தன் மனைவி தன்னிடம் மாத்திரமே மனைவியாக இருக்கவேண்டும் என்றும், தன் பிள்ளைகள் தன்னையே தகப்பனாக அறிக்கை செய்யவேண்டும் என்றும் இருப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்.
//////நண்பர் அசோக்குக்கு,யார் கணவன்? ஆதியிலே இருந்து உள்ளவனா? பாதியில் வந்து நான் தான் உன் கணவன் என்று சொல்பவரா?யார் தகப்பன் நினைவு தெரிந்த நாள் முதல் தகப்பனாக உள்ளவனா?இடையிலே வந்து நான்தான் உன் தகப்பன் என்று கூரிகொல்பவரா?


Reply sivanadiyaan says: March 7, 2011 at 10:55 pm
பாவிகள் என்று யாரும் இங்கு இல்லை, ஒருவரை பாவி என்று கூற அடுத்தவர்க்கு எந்த உரிமையும் இல்லை.பாவி என்பது ஒருவன் தான் செய்யும் செயலால் மட்டுமே.எதுவுமே செய்யாதவனுக்கு எங்கிருந்து பாவம் வரும்.ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்று ( பாவம்) எப்படி வரும்.கடவுளை பணியாத ஒருவன் எப்படி பாவி ஆவான்? தன்னை கண்டுக்காமல் அவன் போக்கில் யாருக்கும் எந்த தொந்தரவும் இன்றி போகும் ஒருவனை உள்ளூர் தாதா வலிய வம்பிழுத்து அடிப்பது போன்றது தான் தன்னை பணியாத மனிதனை நரகில் தள்ளும் கடவுளின் செயலும்.அப்படி செய்யும் கடவுள் கடவுளே அல்ல,தாதா.ஒருவன் என்றோ எதோ ஒன்று செய்திருந்தால் அதனுடைய எதிர்வினை அந்த ஒருவனை என்றாவது ஒருநாள் வந்தடைய வாய்ப்பு உண்டு,அல்லது எதுவும் எப்போதும் செய்யாமல் இருக்கும் போது பாவம் என்ற ஒன்று எப்டி வரும்?


Reply Ashok kumar Ganesan says: March 8, 2011 at 5:28 am
நண்பர் சிவனடியான்,நியாயமான கேள்வி. பரிசுத்த வேதம் கூறுகிறது, மனிதகுலம் முழுமையும் வழிதப்பி போயிற்றுடென்று. மக்கள் அனைவரும் தாங்கள் யாருடைய பிள்ளைகள் என்பதை மறந்து/ மறுத்து, எண்ணம் போல் வாழ்கிறார்கள். தாங்கள் யாரிடத்தில் சுகமாய் இருப்பதாய் நம்புகிறார்களோ, அவ்விடத்தின் அதிபதியை தன் தகப்பன் என்று அழைக்க துவங்கிவிட்டார்கள். தேவன் இயேசு மூலமாய் அவர்களை மன்னித்து, தன் பிள்ளைகளாய், தன்னிடம் சேர்த்துக்கொண்டு, நித்திய காலமும் தன்னுடன் வாழ அழைக்கிறார்.மேலும், இந்த தந்தை மகன், மணவாளன் மணவாட்டி, போன்றவை நம் புரிதலுக்காக, நம் வாழ்க்கை முறையிலிருந்து எடுக்கப்பட்டதே. (படைத்தவனுக்கு பெண்டேது பிள்ளயேது என்ற பாடலை கேட்டிப்பீர்கள்). So, please dont take things literally.இது அழைப்பு மட்டுமே, கட்டாயம் அல்ல. நரகத்தை பற்றிய உபதேசம் எச்சரிப்பு மட்டுமே, பயமுறுத்தல் அல்ல. இது உங்களுக்கு வேறு விதமாய் தோன்றினால், நாங்கள் பொறுப்பல்ல. மேலும் கேள்விகளை எதிர்பார்க்கிறோம்.நன்றி,அசோக்


Reply Ashok kumar Ganesan says: March 8, 2011 at 9:04 am
முதலில் நாம் “பாவி”க்கான விளக்கத்தை பார்போம்.உங்கள் விளக்கத்தின் படி “ஒருவன் பாவம் செய்வதால் பாவி ஆகிறான்”.வேதம் கூறும் விளக்கத்தின்படி “ஒருவன் பாவியாய் இருப்பதால் பாவம் செய்கிறான்”. என் இந்த கேள்விக்கு நீங்கள் பதில் தாருங்கள். ஒரு மரம் வாழைமரமாய் இருப்பதால் வாழைக்கனி தருகிறதா? அல்லது வாழைக்கனி தருவதால் அது வாழைமரமா? உங்களுடைய விளக்கத்தின் படி “வாழைப்பழம் தருவதால் அது வாழைமரம் என்கிறீர்கள்”.மேலும் நீங்கள் சொர்க்கம்(அ) வீடுபேறு என்பதை ஒரு “வெற்றிகொப்பை” போல கருதுகிறீர்கள். நல்லபடியாய் வாழ்ந்தவன் அந்த கோப்பையை அடைவான் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் அது ஆண்டவனுடைய வீடு. தனக்கு பிரியமான பிள்ளைகளை, தன்னுடன் நல்லுறவில் உள்ள பிள்ளைகளை அவர் தன் வீட்டில் அனுமதிக்கிறார். கிறிஸ்துவத்தில் வீடுபேறு என்பது ஆண்டவரிடம் நாம் கொண்டுள்ள உறவை சார்ந்துள்ளது. No one deserves HEAVEN. அவரது கிருபையால் மாத்திரமே நாம் அதை அடையமுடியும். Do you think that you deserve HEAVEN? Your mind knows the truth irrespecitive of the answer that you give in this forum.Reply sivanadiyaan says: March 8, 2011 at 10:21 amமன்னிக்கவும்,சொர்க்கம் என்ற ஒரு தனியான நகரத்தில் எனெக்கு நம்பிக்கை இல்லை.வீடு பேரு அல்லது முக்தி நிலை என்பது என் இலக்கு என்று நீங்களாக நினைத்து கொள்ள வேண்டாம்.வீடு பேறு என்பது ஆத்மாவின் இயல்பான நிலை. இப்போது இங்கு வாழ்வது எல்லாம் தற்காலிக நிலை இங்கு செய்யும் செயல்களுக்கு விளைவுகளை தீரும் வரை இங்கு இருக்க வேண்டியது ஆன்மாவின் இயல்பு.தன்னை தான் உணர்ந்தவன் இயல்பான தன்னிலையை அடைகிறான்.தனியான ஒரு நகரம் அதனை அடைவதற்கு முயற்சி எல்லாம் கிடையாது. அது உங்கள் வழக்கத்தில் தான்,என்ன செயல் என்ன குற்றம் செய்திருந்தாலும் இறைவனை பணிந்து பணிந்த ஒரே காரணத்தால் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு (equal and opposite reaction ஐ பொய்யாக்கி) அவன் தயவால் மட்டுமே அந்த நகரத்தை சென்று அடைவது என்பது..இங்கே வினை விதைத்தவனுக்கு வினை,திணை விதைத்தவனுக்கு திணைஉப்பு குடித்தால் தண்ணீர் குடித்தே தீர்க்க வேண்டும்.இட்டார்க்கு இட்ட பலன் சேர்ந்தே தீரும்
////வேதம் கூறும் விளக்கத்தின்படி “ஒருவன் பாவியாய் இருப்பதால் பாவம் செய்கிறான்/////
அப்படி ஒருவன் எதனால் பாவியாய் இருக்கிறான்? அல்லது படைக்கபடுகிறான்.படைக்கும் போதே ஒருவனை பாவமற்றவனாய் படைக்க உங்களின் வேதம் காட்டும் கடவுளால் இயலாதா


Reply Ashok kumar Ganesan says: Your comment is awaiting moderation. March 8, 2011 at 12:24 pm
//மன்னிக்கவும்,சொர்க்கம் என்ற ஒரு தனியான நகரத்தில் எனெக்கு நம்பிக்கை இல்லை.//
சிவனடியான், நாம் நம்புவதாலோ / நம்பாததாலோ ஏதாவது மாறிவிடுமா என்ன? மேலும் உங்கள் கேள்விகளை, உங்கள் கேள்வி கேட்கும் பாங்கினை நான் பாராட்டுகிறேன்.
//இப்போது இங்கு வாழ்வது எல்லாம் தற்காலிக நிலை இங்கு செய்யும் செயல்களுக்கு விளைவுகளை தீரும் வரை இங்கு இருக்க வேண்டியது ஆன்மாவின் இயல்பு.//
அப்போ முதல் முறை, இங்கு எப்படி வந்தோம்?
//தன்னை தான் உணர்ந்தவன் இயல்பான தன்னிலையை அடைகிறான்.//
அதைதான் நானும் சொல்கிறேன். நீங்கள் யாருடைய பிள்ளை, அல்லது யாருடைய மணவாட்டி என்பதையும், நீங்கள் ஏன் இந்த நிலையில் இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் உண்மையில் அறிந்தால், நீங்கள் சொல்லும் அந்த ஆன்மாவின் இயல்பான தன்னிலையை, வீடுபேரை அடையலாம்.
//தனியான ஒரு நகரம் அதனை அடைவதற்கு முயற்சி எல்லாம் கிடையாது. அது உங்கள் வழக்கத்தில் தான்//
கிரியையால் நாம் வீடுபேறு அடியமுடியாது என்றே வேதம் கூறுகிறது.
//என்ன செயல் என்ன குற்றம் செய்திருந்தாலும் இறைவனை பணிந்து பணிந்த ஒரே காரணத்தால் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு (equal and opposite reaction ஐ பொய்யாக்கி) அவன் தயவால் மட்டுமே அந்த நகரத்தை சென்று அடைவது என்பது..இங்கே வினை விதைத்தவனுக்கு வினை,திணை விதைத்தவனுக்கு திணைஉப்பு குடித்தால் தண்ணீர் குடித்தே தீர்க்க வேண்டும்.இட்டார்க்கு இட்ட பலன் சேர்ந்தே தீரும்//
குற்றங்கள் பல புரிந்து, பின்பு ஆண்டவன் கருணையால் மனம் திருந்தி இறைசேவை செய்தவர்கள் கதைகள் இந்துத்துவத்தில் இல்லாதது போல பேசுகிறீர்கள்.
//அப்படி ஒருவன் எதனால் பாவியாய் இருக்கிறான்? அல்லது படைக்கபடுகிறான்.படைக்கும் போதே ஒருவனை பாவமற்றவனாய் படைக்க உங்களின் வேதம் காட்டும் கடவுளால் இயலாதா//
மனிதர்களுள் தேவன் “படைத்தது” ஆதாமை மாத்திரமே. அவன் பாவமின்றி படைக்கபட்டான். மீதி அனைவரும், அவனில் இருந்து தோன்றியவர்கள். ஆதாம் செய்த மீறுதலின் நிமித்தம், பாவம் இந்த உலகில் நுழைந்தது. பிறகு அவனில் இருந்து தொன்றிவர்களுக்கு பாவமே இயல்பான குணமாகியது. மனிதன் பாவமற்றவனாக மாறவே இயேசு இந்த உலகிற்கு அனுப்ப பட்டார்.கேள்விகள் வரவேற்க்கப்படுகிறது,
அசோக்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


அருமை நண்பர் அசோக் அவர்களுக்கு ஒரு பணிவான‌ வேண்டுகோள்:

தாங்கள் சற்று சிரமம் பாராது ஒவ்வொரு பின்னூட்டத்தையும் இடைவெளி விட்டு பதித்தால் வாசிக்க எளிதாக இருக்கும்;தற்போது நான் செய்துவிடுகிறேன், இனி நீங்கள் செய்தால் போதும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

http://thiruchchikkaaran.wordpress.com/2011/03/04/oh-my-lord/

மேலே கொடுக்கப்பட்ட திரியில் திருச்சிக்காரனின், அட கடவுளே!!! என்ற கட்டுரை இருக்கிறது. வழக்கம் போல அரைகுறையாக, காழ்ப்புணர்ச்சி நிறைந்தவராய் இந்த கட்டுரையை எழுதி இருக்கிறார். அவரின் தளம் பல இந்துக்கள் வந்துபோகும் இடமாக இருப்பதால், அங்கே நாம் சத்தியத்தை பகிர்ந்துகொள்ள கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்கிறோம். அங்கே இது வரை வந்த பின்னூட்டங்களை நண்பர்கள் பார்த்து பயனடைவார்களாக.

SANKAR says: March 4, 2011 at 10:32 pm//இப்படி பல முரண்பாடான கோட்பாடுகளை ஒன்றாக்கி மக்களின் தலையிலே கட்டியவர்கள், “அப்படியே ஒத்துக்க போ” என்று சொல்லி விட்டனர்//அருமை .இன்னும்1. தெரிந்து கொள்ளப்பட்ட மக்கள்2.பாவம் போக்க பலி கொடுத்தல்3.சடங்குகள்,சம்பிரதாயங்கள்போன்றவறை பற்றியும் கூறுங்கள்.Reply thiruchchikkaaran says: March 4, 2011 at 10:46 pmவாங்க சங்கர் சார்,உங்களுடைய வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மிக்க நன்றி. தொடர்ந்து பல கட்டுரைகள் வர இருக்கின்றன.Reply raja says: March 7, 2011 at 6:03 amதாங்கள் சொல்வது போல் பைபிள் கோட்பாடுகள் முன்னுக்குப்பின் முரணாகவே உள்ளன. கொலை செய்யாதிருப்பாயாக என்று ஒரு இடத்தில் சொல்லும். இன்னொரு இடத்தில் பிற இனத்தவர்களை உனக்கு ஒப்புக்கொடுத்தேன் அவர்களை கொல். அவர்களுடைய சொத்துக்களை பங்கு போட்டுக்கொள் என்று சொல்லும். மோசேக்கு கர்த்தர் போட்ட அபத்தமான கட்டளை வசனங்களை இந்தியர்களுக்கு இயேசு சொன்னது போல் விளம்பரம் செய்வார்கள். ஆனால் ஆழ்ந்து படித்தால் சம்பந்தமே இருக்காது. உதாரணமாக என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்ற வரிகள் இஸ்ரவேலா்களை மோசே பாலும் தேனும் ஓடும் நாட்டுக்கு கூட்டிச் செல்வதாக கர்த்தா் மோசேயிடம் கூறிய வார்த்தைகள். இதை தங்கள் வாகனங்களிலும் வீட்டிலும் எழுதி விளம்பரம் செய்கின்றனா்.வசனங்களை தங்கள் வசதிக்கு தேவைக்கேற்ப பயன்படுத்திக்கொண்டு வயிறு பிழைக்கிறார்கள். பொய் சொ்லலாதிருப்பாயாகா என்று ஒரு வசனம். மற்றொன்று கிறிஸ்துவை பிரசங்கம் செய்வதற்காக பொய் சொல்லலாம் என்று. இதை மட்டும் எல்லா பாதிரிகளும் தவறாமல் செய்கிறார்கள்.பைபிளின்படி ஆதாம் ஏவாளின் எழுபத்தி ஆறாவது தலைமுறையில் இயேசு பிறக்கிறார். இதைக் கணக்கிட்டால் ஆதாம் ஏவாள் தோன்றி பத்தாயிரம் ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆனால் உலகம் தோன்றி பல லட்சம் ஆண்டுகள் ஆகிவிட்டன என்று விஞ்ஞானம் கூறுகிறது. இந்த ஒரு விஷயத்திலேயே பைபிள் முழுக்க கற்பனை என்ற முடிவுக்கு வந்து விடலாம். ஆனால் இன்னும் இதேகதையைத்தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். பைபிளின் அபத்தங்களை http://www.evilbible.com என்ற தளத்தில் பாருங்கள்.Reply thiruchchikkaaran says: March 7, 2011 at 9:17 amஐயா, வெறும் அபத்தம் மட்டும் அல்ல, மனிதத்துக்கு ஆபத்தும் கூட. அப்பட்டமான மத சகிப்புத் தன்மை இன்மையை, மத வெறியை , இனவாத இனவெறியை, பிற மதங்களைக் கண்டித்து அழிக்க வேண்டும் என்கிற ஆவேசத்தை வெளிப் படுத்தும் கருத்துக்கள் உள்ளன.Reply thiruchchikkaaran says: March 7, 2011 at 9:27 amவிவிலியத்தில் உள்ள, இனவாத இனவெறி , மதவாத மத வெறி வெறும் அபத்தம் மட்டும் அல்ல, ஆபத்தும் கூட. அதே நேரம் நாம் எந்த ஒருமதத்தையும் ஆக்க பூர்வமாக அணுகுகிறோம்.விவிலியத்ததில் சொல்லப் பட்டுள்ள கருத்து ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்க்கிறோம். பெரும்பாலான கருத்துக்கள், மத சகிப்புத் தன்மையை அழித்து, மத வெறியை பரப்பும் வகையிலும், இனப் படுகொலையை புனிதப் படுத்தும் வகையிலும் உள்ளன. அவற்றை சுட்டிக் காட்டி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறோம். அவற்றில் இயேசு கிறிஸ்து சொன்னதா க உள்ள சில நல்ல கருத்துக்களும் உள்ளன. அவற்றை முன்னிலைப் படுத்தி அவர்கள் மனதில் மத சகிப்புத் தன்மை மேம்படுமபடி செய்து கிறிஸ்தவர்களை நல்லிணக்கப் பாதைக்கு கொண்டு வருவதே நமது நோக்கம்.Reply Ashok kumar Ganesan says: March 7, 2011 at 8:05 pm//உதாரணமாக என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் என்ற வரிகள் இஸ்ரவேலா்களை மோசே பாலும் தேனும் ஓடும் நாட்டுக்கு கூட்டிச் செல்வதாக கர்த்தா் மோசேயிடம் கூறிய வார்த்தைகள். இதை தங்கள் வாகனங்களிலும் வீட்டிலும் எழுதி விளம்பரம் செய்கின்றனா்.//அப்படியென்றால், கீதை என்பது முழுக்க முழுக்க போர்களத்தில் நின்ற அர்ஜுனனுக்கு மட்டும்தானோ?Reply Ashok kumar Ganesan says: March 7, 2011 at 9:03 pmநல்ல வேலை திருச்சிக்காரன், நீங்கள் அரசு தரப்பு வழக்கறின்ஞராக இல்லை. இருந்திருந்தால் எத்தனையோ அப்பாவிகளை குற்றம் சாட்டி, பல அப்பாவிகளை தண்டித்திருப்பீர்கள், உமக்கு வேண்டிய ஆட்களை புனிதர்களாக காட்டி இருப்பீர்கள்.“லார்ட்” என்று எழுதி இருப்பது நக்கலடிக்கதானே? சரி, போகட்டும் நீங்கள் ஒத்துக்கொள்ளமாட்டீர்கள்.//ஆதம், ஏவாள் ஆகியோர் முதலில் நிர்வாணியாக இருந்து, பிறகு உடை அணிய ஆரம்பித்தனர் //இதில் என்ன பிரச்னை, நம் குழந்தைகளும் அவ்வாறே.//லார்ட் அனுமதில் இல்லாமல் பழத்தை பறித்து சாப்பிட்டு விட்டனர் என்றும் சொல்லி, அதனால் கோவப் பட்ட லார்ட் அவர்களை தோட்டத்தில் இருந்து விரட்டிய, கடவுளை கண்டிப்புக்காரராக காட்டும் கடவுள் கோட்பாடு!//கண்டிப்பில்லாத தகப்பன் ஏது? மேலும், பழம் தின்றது சாதாரண காரியம் தானே என்று காட்ட துடிக்கும் உங்கள் புத்திசாலித்தனம் தெரிகிறது (அத்தகைய புத்திசாலித்தனம் எங்கிருந்து வரும் என்றும் தெரியும்). ஆனால், எந்த ஒரு குற்றத்திற்கும் அதன் நோக்கத்தை வைத்தே அது ஆராயப்படவேண்டும்.//என்னை மட்டுமே, வழி பட வேண்டும்//தன் மனைவி தன்னிடம் மாத்திரமே மனைவியாக இருக்கவேண்டும் என்றும், தன் பிள்ளைகள் தன்னையே தகப்பனாக அறிக்கை செய்யவேண்டும் என்றும் இருப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்.//பிற இனங்களை அழிக்கலாம்//பாவத்தை பற்றி நீர் அறிந்திருக்க வில்லை. மனிதனை தேவனித்தளிருந்து பிரித்து வைக்ககூடிய வல்லமை பாவத்திற்கு மாத்திரமே உண்டு. அத்தகைய பாவம் மக்கள் மத்தியில் பெருக்கெடுக்கும் போது, பாவத்தை அழிக்க, அந்த பாவம் பெருகியுள்ள மக்களில் ஒரு கூட்டமும் அழிக்கப்படும் (காலில் நோயுற்ற மனிதனை காக்க, அந்த நோய்தீர்க்க மருந்தில்லாத பட்சத்தில், அவன் காலை மருத்துவர் நீக்குவதில்லையா?). இப்பொழுது பாவத்தின் பரிகாரியான கிறிஸ்துவின் ரத்தம் பாவத்தை போக்கும் அருமருந்தாக உள்ளது. அதனால், கிறிஸ்துவின் மரணத்தின் பொருட்டு பாவத்தை போக்க யாரும் அழிக்கப்பட தேவை இல்லை.உமது மற்ற கேள்விகளுக்கும் பதில் வரும். இப்பொழுது நேரமில்லை.அசோக்Reply sivanadiyaan says: March 7, 2011 at 10:29 pmஇது கலிகாலம் சாமி,தெரியாமலா நம் முன்னோர்கள் இந்த கலியை வகுத்துள்ளனர். கலி தன வேலையை செய்கிறது.Reply sivanadiyaan says: March 7, 2011 at 10:33 pm//என்னை மட்டுமே, வழி பட வேண்டும்//தன் மனைவி தன்னிடம் மாத்திரமே மனைவியாக இருக்கவேண்டும் என்றும், தன் பிள்ளைகள் தன்னையே தகப்பனாக அறிக்கை செய்யவேண்டும் என்றும் இருப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்.//////நண்பர் அசோக்குக்கு,யார் கணவன்? ஆதியிலே இருந்து உள்ளவனா? பாதியில் வந்து நான் தான் உன் கணவன் என்று சொல்பவரா?யார் தகப்பன் நினைவு தெரிந்த நாள் முதல் தகப்பனாக உள்ளவனா?இடையிலே வந்து நான்தான் உன் தகப்பன் என்று கூரிகொல்பவரா?Reply sivanadiyaan says: March 7, 2011 at 10:55 pmபாவிகள் என்று யாரும் இங்கு இல்லை, ஒருவரை பாவி என்று கூற அடுத்தவர்க்கு எந்த உரிமையும் இல்லை.பாவி என்பது ஒருவன் தான் செய்யும் செயலால் மட்டுமே.எதுவுமே செய்யாதவனுக்கு எங்கிருந்து பாவம் வரும்.ஒன்றுமில்லாததிலிருந்து ஒன்று ( பாவம்) எப்படி வரும்.கடவுளை பணியாத ஒருவன் எப்படி பாவி ஆவான்? தன்னை கண்டுக்காமல் அவன் போக்கில் யாருக்கும் எந்த தொந்தரவும் இன்றி போகும் ஒருவனை உள்ளூர் தாதா வலிய வம்பிழுத்து அடிப்பது போன்றது தான் தன்னை பணியாத மனிதனை நரகில் தள்ளும் கடவுளின் செயலும்.அப்படி செய்யும் கடவுள் கடவுளே அல்ல,தாதா.ஒருவன் என்றோ எதோ ஒன்று செய்திருந்தால் அதனுடைய எதிர்வினை அந்த ஒருவனை என்றாவது ஒருநாள் வந்தடைய வாய்ப்பு உண்டு,அல்லது எதுவும் எப்போதும் செய்யாமல் இருக்கும் போது பாவம் என்ற ஒன்று எப்டி வரும்?Reply Ashok kumar Ganesan says: March 8, 2011 at 5:28 amநண்பர் சிவனடியான்,நியாயமான கேள்வி. பரிசுத்த வேதம் கூறுகிறது, மனிதகுலம் முழுமையும் வழிதப்பி போயிற்றுடென்று. மக்கள் அனைவரும் தாங்கள் யாருடைய பிள்ளைகள் என்பதை மறந்து/ மறுத்து, எண்ணம் போல் வாழ்கிறார்கள். தாங்கள் யாரிடத்தில் சுகமாய் இருப்பதாய் நம்புகிறார்களோ, அவ்விடத்தின் அதிபதியை தன் தகப்பன் என்று அழைக்க துவங்கிவிட்டார்கள். தேவன் இயேசு மூலமாய் அவர்களை மன்னித்து, தன் பிள்ளைகளாய், தன்னிடம் சேர்த்துக்கொண்டு, நித்திய காலமும் தன்னுடன் வாழ அழைக்கிறார்.மேலும், இந்த தந்தை மகன், மணவாளன் மணவாட்டி, போன்றவை நம் புரிதலுக்காக, நம் வாழ்க்கை முறையிலிருந்து எடுக்கப்பட்டதே. (படைத்தவனுக்கு பெண்டேது பிள்ளயேது என்ற பாடலை கேட்டிப்பீர்கள்). So, please dont take things literally.இது அழைப்பு மட்டுமே, கட்டாயம் அல்ல. நரகத்தை பற்றிய உபதேசம் எச்சரிப்பு மட்டுமே, பயமுறுத்தல் அல்ல. இது உங்களுக்கு வேறு விதமாய் தோன்றினால், நாங்கள் பொறுப்பல்ல. மேலும் கேள்விகளை எதிர்பார்க்கிறோம்.நன்றி,அசோக்Reply Ashok kumar Ganesan says: March 8, 2011 at 9:04 amமுதலில் நாம் “பாவி”க்கான விளக்கத்தை பார்போம்.உங்கள் விளக்கத்தின் படி “ஒருவன் பாவம் செய்வதால் பாவி ஆகிறான்”.வேதம் கூறும் விளக்கத்தின்படி “ஒருவன் பாவியாய் இருப்பதால் பாவம் செய்கிறான்”. என் இந்த கேள்விக்கு நீங்கள் பதில் தாருங்கள். ஒரு மரம் வாழைமரமாய் இருப்பதால் வாழைக்கனி தருகிறதா? அல்லது வாழைக்கனி தருவதால் அது வாழைமரமா? உங்களுடைய விளக்கத்தின் படி “வாழைப்பழம் தருவதால் அது வாழைமரம் என்கிறீர்கள்”.மேலும் நீங்கள் சொர்க்கம்(அ) வீடுபேறு என்பதை ஒரு “வெற்றிகொப்பை” போல கருதுகிறீர்கள். நல்லபடியாய் வாழ்ந்தவன் அந்த கோப்பையை அடைவான் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் அது ஆண்டவனுடைய வீடு. தனக்கு பிரியமான பிள்ளைகளை, தன்னுடன் நல்லுறவில் உள்ள பிள்ளைகளை அவர் தன் வீட்டில் அனுமதிக்கிறார். கிறிஸ்துவத்தில் வீடுபேறு என்பது ஆண்டவரிடம் நாம் கொண்டுள்ள உறவை சார்ந்துள்ளது. No one deserves HEAVEN. அவரது கிருபையால் மாத்திரமே நாம் அதை அடையமுடியும். Do you think that you deserve HEAVEN? Your mind knows the truth irrespecitive of the answer that you give in this forum.Reply sivanadiyaan says: March 8, 2011 at 10:21 amமன்னிக்கவும்,சொர்க்கம் என்ற ஒரு தனியான நகரத்தில் எனெக்கு நம்பிக்கை இல்லை.வீடு பேரு அல்லது முக்தி நிலை என்பது என் இலக்கு என்று நீங்களாக நினைத்து கொள்ள வேண்டாம்.வீடு பேறு என்பது ஆத்மாவின் இயல்பான நிலை. இப்போது இங்கு வாழ்வது எல்லாம் தற்காலிக நிலை இங்கு செய்யும் செயல்களுக்கு விளைவுகளை தீரும் வரை இங்கு இருக்க வேண்டியது ஆன்மாவின் இயல்பு.தன்னை தான் உணர்ந்தவன் இயல்பான தன்னிலையை அடைகிறான்.தனியான ஒரு நகரம் அதனை அடைவதற்கு முயற்சி எல்லாம் கிடையாது. அது உங்கள் வழக்கத்தில் தான்,என்ன செயல் என்ன குற்றம் செய்திருந்தாலும் இறைவனை பணிந்து பணிந்த ஒரே காரணத்தால் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு (equal and opposite reaction ஐ பொய்யாக்கி) அவன் தயவால் மட்டுமே அந்த நகரத்தை சென்று அடைவது என்பது..இங்கே வினை விதைத்தவனுக்கு வினை,திணை விதைத்தவனுக்கு திணைஉப்பு குடித்தால் தண்ணீர் குடித்தே தீர்க்க வேண்டும்.இட்டார்க்கு இட்ட பலன் சேர்ந்தே தீரும்////வேதம் கூறும் விளக்கத்தின்படி “ஒருவன் பாவியாய் இருப்பதால் பாவம் செய்கிறான்/////அப்படி ஒருவன் எதனால் பாவியாய் இருக்கிறான்? அல்லது படைக்கபடுகிறான்.படைக்கும் போதே ஒருவனை பாவமற்றவனாய் படைக்க உங்களின் வேதம் காட்டும் கடவுளால் இயலாதாReply Ashok kumar Ganesan says: Your comment is awaiting moderation. March 8, 2011 at 12:24 pm//மன்னிக்கவும்,சொர்க்கம் என்ற ஒரு தனியான நகரத்தில் எனெக்கு நம்பிக்கை இல்லை.//சிவனடியான், நாம் நம்புவதாலோ / நம்பாததாலோ ஏதாவது மாறிவிடுமா என்ன? மேலும் உங்கள் கேள்விகளை, உங்கள் கேள்வி கேட்கும் பாங்கினை நான் பாராட்டுகிறேன்.//இப்போது இங்கு வாழ்வது எல்லாம் தற்காலிக நிலை இங்கு செய்யும் செயல்களுக்கு விளைவுகளை தீரும் வரை இங்கு இருக்க வேண்டியது ஆன்மாவின் இயல்பு.//அப்போ முதல் முறை, இங்கு எப்படி வந்தோம்?//தன்னை தான் உணர்ந்தவன் இயல்பான தன்னிலையை அடைகிறான்.//அதைதான் நானும் சொல்கிறேன். நீங்கள் யாருடைய பிள்ளை, அல்லது யாருடைய மணவாட்டி என்பதையும், நீங்கள் ஏன் இந்த நிலையில் இருக்கிறீர்கள் என்றும், நீங்கள் உண்மையில் அறிந்தால், நீங்கள் சொல்லும் அந்த ஆன்மாவின் இயல்பான தன்னிலையை, வீடுபேரை அடையலாம்.//தனியான ஒரு நகரம் அதனை அடைவதற்கு முயற்சி எல்லாம் கிடையாது. அது உங்கள் வழக்கத்தில் தான்//கிரியையால் நாம் வீடுபேறு அடியமுடியாது என்றே வேதம் கூறுகிறது.//என்ன செயல் என்ன குற்றம் செய்திருந்தாலும் இறைவனை பணிந்து பணிந்த ஒரே காரணத்தால் குற்றங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு (equal and opposite reaction ஐ பொய்யாக்கி) அவன் தயவால் மட்டுமே அந்த நகரத்தை சென்று அடைவது என்பது..இங்கே வினை விதைத்தவனுக்கு வினை,திணை விதைத்தவனுக்கு திணைஉப்பு குடித்தால் தண்ணீர் குடித்தே தீர்க்க வேண்டும்.இட்டார்க்கு இட்ட பலன் சேர்ந்தே தீரும்//குற்றங்கள் பல புரிந்து, பின்பு ஆண்டவன் கருணையால் மனம் திருந்தி இறைசேவை செய்தவர்கள் கதைகள் இந்துத்துவத்தில் இல்லாதது போல பேசுகிறீர்கள்.//அப்படி ஒருவன் எதனால் பாவியாய் இருக்கிறான்? அல்லது படைக்கபடுகிறான்.படைக்கும் போதே ஒருவனை பாவமற்றவனாய் படைக்க உங்களின் வேதம் காட்டும் கடவுளால் இயலாதா//மனிதர்களுள் தேவன் “படைத்தது” ஆதாமை மாத்திரமே. அவன் பாவமின்றி படைக்கபட்டான். மீதி அனைவரும், அவனில் இருந்து தோன்றியவர்கள். ஆதாம் செய்த மீறுதலின் நிமித்தம், பாவம் இந்த உலகில் நுழைந்தது. பிறகு அவனில் இருந்து தொன்றிவர்களுக்கு பாவமே இயல்பான குணமாகியது. மனிதன் பாவமற்றவனாக மாறவே இயேசு இந்த உலகிற்கு அனுப்ப பட்டார்.கேள்விகள் வரவேற்க்கப்படுகிறது,அசோக்

__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard