Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெட்கப்பட்டுப்போன கோவை பெரியன்ஸ்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: வெட்கப்பட்டுப்போன கோவை பெரியன்ஸ்
Permalink  
 


சாத்தானின் வாய் கோவை வெறியனின் உளறல்களுக்கான நண்பர் மைகோவையின் பதில்கள்


கிறிஸ்துவுக்குள் அன்பான நண்பர்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள்.நான் நமது தளத்தில் வெளியிட்ட பதிலுக்கு விபச்சாரக்காரன் ரசலின் கழிவுகளான கழிசடை சரக்கின் புது மார்க்கெட்டிங் கம்பனியின் ஏஜண்ட் ஈராஸ் ஆகிய பெரியன்ஸ் ஆகிய வேதாகம மாணாக்கர்களாக இருந்த யேகோவாவின் சாட்சிகள் அமைப்பின் ஞானக்குழந்தை பதில் என்று சொல்லி சில வாந்திகளை எடுத்துள்ளார் அதை கண்டிப்பாக நாம் ஆராய வேண்டும்.வேத வெளிச்சத்தில் இந்த இருளின் சாத்தானின் உபதேசிகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.

//மைக்கோவை என்பவர் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் போப் பதவியை வகிப்பராவார் என்பது அங்கே பதியும் அனைவருக்கும் தெரியும் என்பதில் மாற்று கருத்தில்லை!! //


தமிழ் கிறிஸ்தவ தளத்தின் ஒரு பழைய உறுப்பினர் நான்.மேலும் நிர்வாகிகள் குழுவினரின் எல்லா சட்டதிட்டங்களுக்கும் உட்பட்டவன்.பல நிலைகளில் என்னுடைய பதிவுகள் கூட நிர்வாகிகளால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.இதுவும் அனைவருக்கும் தெரியும்.


//கிறிஸ்துவத்தில் விஷவிதை தூவிய கத்தோலிக்கர்களின் திரித்துவ உபதேசத்தை விடாமல் பிடித்தவர்களாக மூன்று கடவுள் ஆனால் மூன்று என்று வேதம் சொல்லாததால் அதை எப்படி சமாளிக்கலாம் என்று யோசித்து, மூன்று தான், ஆனால் ஒன்று தான் என்கிற ஒரு புதிய வெளிப்பாட்டை கண்டு பிடித்து, அதை எப்படி எல்லாம் வேதத்திற்கு தொடர்பில்லாமல் விளக்கலாமோ அப்படி எல்லாம் முயற்சித்து வருகிறார்கள்!!இப்பொழுது வந்திருக்கும் தமிழ் கிறிஸ்தவ தளத்தின் போப் திரு மைகோவை அவர்கள்!!//

வேதாகமத்தின் வரலாறு கூட தெரியாத இந்த ஞான சூனியங்களை என்னவென்று சொல்லுவது.முவ்வொருமை கோட்பாட்டின் தொடக்கத்துக்கும் கத்தோலிக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை கிறிஸ்தவ வரலாற்றை உண்மையாக படித்த அனைவருக்கும்
தெரியும்.இந்த தெய்வீக கோட்பாடு வேதத்தின் அடிப்படை கோட்பாடாகும்.இதை பழையேற்பாட்டு பரிசுத்தர்களே அறிந்திருந்தார்கள்.

ஆனால் திரித்துவம் என்ற பெயரை கிறிஸ்துவுக்கு பின் இரண்டாம் நூற்றாண்டில் வாழ்த சபை பிதாவே அறிவித்தார்.அந்த தெய்வீக இரகசியமானது வேதத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.தேவ ஆவியை பெறாதவர்களுக்கு இது புரிவதில்லை என்பது ஆச்சரியமல்ல.

வேதம் இதைதான் இப்படி சொல்லுகிறது

மத்தேயு 11:27 சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது. பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்.

இதை எல்லோருக்கும் புரியவைக்கவே திரித்துவம் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தப்பட்டது.ஆனால் இந்த பதம் உபயோகிக்காவிட்டால் மட்டும் தேவனின் மூன்று ஆள் தத்துவங்கள் இல்லை என்றாகிவிடாது.முழு வேதாகமமுமே அவரின் இந்த தன்மையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

நீயூட்டன் பற்றிய ஒரு கருத்தை சகோதரர் அவரகள் பதித்திருந்தார்கள்.அவர் புவீஇர்ப்பு விசைய கண்டுபிடித்த பிறகுதான் அந்த செயல்பாடு இருந்தது என்பதல்ல அதற்கு முன்பே புவீஈர்ப்புவிசை இருந்தது.ஆனால் நீயூட்டன் கண்டுபிடிப்பதற்கு முன்பாக புவீஈர்ப்பு விசை இல்லை என்று சொல்கிறவர்கள் எப்படிப்பட்ட கோமாளிகளாக இருப்பார்களோ அது போலவே தேவனின் பன்மை ஆள் தத்துவத்தை மறுக்கும் சூன்யங்களும் இருக்கிறார்கள்.

மேலும் நிசயா விசுவாச பிரமாணத்தை என்னமோ கத்தோலிக்க சபை ஏற்படுத்தியது என்ற ரீதியில் அடிப்படை அறிவில்லாத அறிவுஜீவிகள் எழுதியிருப்பதிலேயே இவர்களின் வேதாகம வரலாற்றை குறித்த அறிவை அறிந்துகொள்ளலாம்.

நிசயா கோட்பாட்டு என்பது எதோ புதியது என்பது போல் காட்ட முயல்கின்றனர் கிறிஸ்தவ விரோதிகள்.ஆனால் அது பழையேற்பாட்டு தீர்கதரிசிகளால் விசுவாசிக்கப்பட்டு,ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவால் விவரிக்கப்பட்டு ,அப்போஸ்தலர்களால் பறைசாற்றப்பட்டு,சபை பிதாக்களால் போதிக்கப்பட்டு,கிறிஸ்தவர்களால் அப்பியாசிக்கபடும் ஒன்று ஆகும்.

கிறிஸ்தவத்தில் பக்கவழியாய் நுழைந்த ஓநாய்களை அடையாளம் காட்ட ஆதி கிறிஸ்தவ சபையார் செய்த ஜெபம்,மற்றும் முயற்சியின் பலனாக புதுப்பிக்கப்பட்டதே நிசயா பிரமாணம்.



//இவர்களில் ஒருவரும் ஒரே பெயர் கொண்ட சபைக்கு போவது கிடையாது, இவர்களின் சபை ஒரு வேளை ஒரே ஊரிலிருந்தாலும் ஒரு சபையின் ஆடு (சாதாரன விசுவாசிகளை இந்த ஞானவான்கள் அழைக்கும் செல்ல சொல்) மற்ற சபைக்கு சென்று விடாமல் வேளிப்போட்டு காக்கும் மெய்ப்பர் என்கிற போதகர் ஒருவரை நியமித்து வைத்திருப்பார்கள்!! அவர் சத்தியத்தை போதிக்கிறாரோ இல்லையோ, தன் சபையின் ஆடு வேறு சபைக்கு (கன்வென்ஷன், மாநாடு, விழாக்கள், பெருவிழாக்கள் தவிர) சென்று விடக்கூடாத படி நடத்த சாமர்த்தியம் உள்ளவராக இருக்கிறார் (என் சபை மாத்திரமே உன்னை பரலோகத்திற்கு கூட்டி செல்லும், மற்ற சபைகளில் என்னமோ இயேசுகிறிஸ்துவை போதிப்பது இல்லை என்பது இவர்களின் என்னம்) என்பது உண்மை என்பது ஒரே தெருவில் இருக்கும் 20 சபைகள் வெளிப்படுத்தும் நிஜம்!! இப்படி பட்ட இவர்கள் ஒரே வேத புத்தகத்தை வைத்துக்கொண்டு வித்தியாசமான தரிசனம், வித்தியாசமான கனவு, வித்தியாசமான போதனை, பரலோக விஸிட், நரக விஸிட், இயேசுவை பார்த்து பேசிகிறது, பரிசுத்த ஆவியான "தேவனை" பார்த்து பேசுவது (இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்) போன்றவற்றை சூப்பராக கதைகளுடனும், காவியங்களோடும், பேச்சு திறனுடன் பேசி (சில சமயம் மிரட்டிக்கூட தான்) சபை மாறிவிடாமல் வைத்திருப்பார்கள்!!//

இதை எழுதும் இந்த நபரும் இது போன்ற ஒரு சபையிலேயே அங்கம் வகிக்கிறார்.இவருக்கும் தனியாக ஒரு சபை கிடையாது.இவருக்கு இந்த போதனையை அளித்த விபச்சாரக்காரன் ரசலின் அடியார்கள் வேதாகம மாணாக்கர்கள் என்ற பிரிவில் இருந்து பிரிந்து பிளாட்பாம்காரர்களாக அஸ்திபாரம் எதுவும் இல்லாமல் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.அதில் இவர்களும் பிளட்பாமில் கடைவைத்து(கோவை பெரியன்ஸ்) நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் இவர்கள் கடைக்குவரும் ஆட்களை அல்லது இவர்கள் பிடிக்கும் ஆட்களை இவர்கள் மேலே சொல்லியுள்ள அத்தனை தகுதியுமுள்ள சபைகலேயே அங்கத்தினராக இருக்க ஊக்கப்படுத்துகிறார்கள்.

சபைகளில் தவறுகள் இல்லை என்று நான் சொல்லவரவில்லை.ஆனால் அதை சொல்லும் யோக்கியதை இந்த விபச்சாரக்காரன் ரசலின் அடியார்களுக்கு இல்லை என்பதே என்னுடைய கருத்து.

சபைகள் மறுமலர்ச்சி அடைய வேண்டும் என்பதே எங்களுடைய வாஞ்சையும்,ஏக்கமுமாகவே உள்ளது.


//ஒரே விசுவாசம், ஒரே வேதம், ஒரே ஞானஸ்நானம், ஒரே விசுவாசப்பிரமானம், ஒரே இயேசு கிறிஸ்து, எல்லாவற்றுக்கும் மேல் வேதத்தில் இல்லாத திரித்துவத்தில் ஒன்றுப்பட்டவர்களான இவர்கள், தங்கள் ஆடுகள் மேலே சொன்ன அனைத்தும் கொண்டிருக்கும் மற்றோரு சபைக்கு செல்ல தடை விதிப்பார்கள் இந்த பரலோகம் கூட்டி செல்லும் ஏஜண்டுகள்!!//

திரித்துவம் இல்லை என்று ஆரம்பித்த இந்த விபச்சாரக்காரன் ரசலின் அடியார்கள் இன்று உலகில் மட்டும் இல்லை தமிழகத்தில் கூட மாவட்டத்துக்கு மாவட்டம் சுக்கு நூறாகியுள்ள இவர்கள் ஒருவனை அடுத்த சபைக்கு மட்டும்மல்ல ஆண்டவரிடம் கூட செல்ல தடைவித்தித்து ஒருவர் இன்னொருவரை காட்டிக்கொடுத்து பிழைப்போட்டுகின்றனர் இந்த ஒட்டுமொத்த நரக ஏஜண்டுகள்.

//சரி இனி விஷயத்திற்கு வருவோம்!! நான் ஜனவரி 16, 2011ல் எழுதிய ஒரு பதிவிற்கு நிதானமாக என்ன எல்லாம் எழுதலாம் என்று திரித்து எழுதுவதற்கு நேரம் எடுத்துக்கொண்டு சுமார் ஒன்னறை மாதம் சென்ற பிறகு சகுனம் பார்த்து பதிவை தந்திருக்கிறார் மைகோவை அவர்கள்!! இவர் எப்படி வேண்டுமென்றாலும் திரித்து எழுதும் சுக்தந்திரம் இவருக்கு இருக்கு என்றால் அதற்கு சரியான மறுப்பு தெரிவிக்கும் அதிகாரம் எனக்கும் இருக்கிறது!!//

ஒரு சில கழிசடைத்தளங்களுக்கு தினந்தோரும் செல்லும் பழக்கம் எனக்கு இல்லை.அதற்கான தேவையும் எனக்கு இல்லை.நண்பர் கோல்வின் அவர்கள் எனக்கு இந்த தொடுப்பை அனுப்பினார்.அதன் பிறகு ஓரிரு நாளில் என்பதிவை நான் பதித்துவிட்டேன்.எதையும் யாரும் திரித்து எழுதக்கூடாது என்பதற்காகவே வீடியோ எடுக்கிறோம் என்று சொன்னோம்.ஆனால் அதை பார்த்தவுடனே நீங்கள் தெரித்து எழுந்தீர்களே அன்றைக்கே புரிந்துவிட்டோம் உங்களின் இழிநிலை.



//நான் ஈராஸ் என்று மாத்திரம் இல்லை, இன்னும் ஒருசில வேறு பெயர்களில் இவர்களின் "புனிதமான" தளத்தில் எழுத முயற்சித்தேன்!! இவர்களுக்கு பிடிக்காத எந்த ஒரு விஷயமும் இவர்களுக்கு விஷம் தான் வேதவசனங்கள் உட்பட!! என் பதிவுகளை வைத்து விட்டு இவர் இப்படி எழுதியிருந்தால் நியாயம்!! கொஞ்சமும் பண்பில்லாதவர்களாக நான் கஷ்டப்பட்டு எழுதிய அனைத்தையும் இவர்கள் எங்கே போட்டார்கள் என்பது இவர்களுக்கு தான் தெரியும்!! ஆக என் பதிவு இல்லாமல் இவர் எதுவேண்டுமென்றாலும் எழுதலாம் என்பது இவர்களுக்கு கைவந்த கலையாச்சே!! //

உன்மையாகவே புனிதமான வேத சத்தியங்களை எடுத்து சொல்லும் தளமே.அதில் விபச்சாரக்காரன் ரசலின் காலை கழுவிக்குடிக்கும் அடியார்கள் இந்த தளத்தை குப்பை கூடையாக மாற்ற அனுமதி மறுக்கப்பட்டது சரியே.


//வசனம் யார் சொல்லுவதில்லை, கத்தோலிக்கர்கள் தொடங்கி மார்மோன், ஒன்லி ஜீசஸ், யெகோவா சாட்சிகள் போன்ற எத்துனையோ சபைகள் வசனம் எழுதத்தான் செய்கிறார்கள், ஆனால் அர்த்தம் தெரியாம எழுதுகிறார்கள்!! "நீ சாகவே சாவாய்" என்றால், ஆவிக்குறிய மரணம் என்கிற அர்த்தம் கொள்வோர்களிடம் வேறு என்ன அர்த்தத்தை எதிர்ப்பார்க்க முடியும்!! இப்படி வசனம் என்ன முழு வேதத்தையும் பதிவுகளாக தந்தாலும் அந்த வசனங்களின் அர்த்தம் தெரிந்தால் தானே!!//

சரிதான் உங்களை போன்ற வேதம் ஓதும் சாத்தான்களும் வசனத்தை தானே எடுத்துக்கொண்டு வருகிறீர்கள்.ஆனால் உங்கள் தலைவனை தான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வசனத்தால் துரத்தினாரே.



//நானும் பிதாவும் ஒன்றாக இருக்கிறோம் என்று இயேசு கிறிஸ்து சொன்னதை வைத்துக்கொண்டு கிறிஸ்துவும் பிதாவும் ஒருவரே என்று அர்த்தம் கொள்ளும் இந்த திரித்துவர்கள், அதே யோவான் எழுதிய மற்றோரு வசனமான,

யோவான் 17:11 நான் இனி உலகத்திலிரேன், இவர்கள் உலகத்திலிருக்கிறார்கள்; நான் உம்மிடத்திற்கு வருகிறேன். பரிசுத்த பிதாவே, நீர் எனக்குத் தந்தவர்கள் நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு, நீர் அவர்களை உம்முடைய நாமத்தினாலே காத்துக்கொள்ளும்.

யோவான் 17:21 அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், பிதாவே, நீர் என்னை அனுப்பினதை உலகம் விசுவாசிக்கிறதற்காக, நீர் என்னிலேயும் நான் உம்மிலேயும் இருக்கிறதுபோல அவர்களெல்லாரும் நம்மில் ஒன்றாயிருக்கவும் வேண்டிக்கொள்ளுகிறேன்.

அங்கே ஒன்றாக இருக்கிறோம் என்று இயேசுவும் பிதாவும் ஒருவரே என்று சாதிக்கும் இவர்கள் அவர்களெல்லாரும் ஒன்றாயிருக்கவும், நம்மைப்போல ஒன்றாயிருக்கும்படிக்கு என்பதையும் இவர்கள் அனைவரும் ஒருவரே என்று எடுத்துக்கொள்வார்களா!! இல்லையே, இது வேறு ஒன்றாயிருப்பதும், அது வேறு ஒன்றாயிருப்பது என்பதை தான் சொல்லுவார்கள்!! இது தான் இவர்கள் தமிழ் கிறிஸ்தவ தளத்தில் எனக்கு கொடுத்த வசனங்கள் ஆகும்!!//

படைப்பாளனுடன் இணைக்கப்படும் படைக்கப்படும் வஸ்துக்களுக்கு ஒரு வரைமுறை உண்டு.படைப்பாளனுடன் இணைந்தாலும் படைக்கப்பட்டவர்கள் தொழுதுகொள்ளப்பட மாட்டார்கள்.மாறாக படைப்பாளரை தொழுதுகொள்ளுவார்கள்.

இந்த சாதாரண சத்தியம் கூட தெரியாத பேலியாளின் பிள்ளைகளை பற்றி பேச என்ன உள்ளது.







//மண்ணிக்கனும் மைகோவை அவர்களே, வேத வசனத்தின்படியான விசுவாச அறிக்கை கொடுத்திருக்கிறேன், சமயம் கிடைத்தால் வாசித்து எந்த விசுவாசம தவறானது என்று பிறகு முடிவு செய்யுங்கள்!! ஒரே திரித்துவத்தை போதிக்கும் கத்தோலிக்கர்கள் விக்கிரக ஆராதனை சபையார், அதே திரித்துவத்தை சொல்லும் மர்மோன்ஸ் கள்ள உபதேசக்காரர்கள், அதே திரித்துவத்தை சொல்லும் பெந்தகோஸ்தேக்காரர்கள் மாத்திரம் சரியான விசுவாசம் கொண்டவர்கள் என்பது சற்று வேடிக்கையாக தான் இருக்கிறது!!//

நான் மேலே சொன்ன பதில்தான் இதற்கும்.

இது பழையேற்பாட்டு தீர்கதரிசிகளால் விசுவாசிக்கப்பட்டு,ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவால் விவரிக்கப்பட்டு ,அப்போஸ்தலர்களால் பறைசாற்றப்பட்டு,சபை பிதாக்களால் போதிக்கப்பட்டு,கிறிஸ்தவர்களால் அப்பியாசிக்கபடும் ஒன்று ஆகும்.அதனால் இந்த விசுவாசமே சரியானதாகும்.



//இதில் பதற என்ன இருக்கிறது!! பேசியதை எப்படி வேண்டுமென்றாலும் திரிக்கலாம் என்பதற்காக தான் நாங்கள் வேண்டாம் என்று சொன்னோமே தவிர இதில் பதற ஆரம்பித்தார்கள் என்பது உங்களின் வழக்கமான அதிகபடியான வார்த்தைகள்!! வசனம் போதிப்பவர்களை உங்களை போன்றோர் சத்துருக்களாக பார்ப்பதால் நாங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியமே!!//

வீடியோ எடுத்தால் திரிக்கலாம் என்பது கொஞ்சம் விகல்பமாக இல்லை.வேண்டுமானால் கட் செய்யலாம்.நீங்கள் பேசுவதை அதிகப்படுத்த முடியுமா.நீங்கள் பேசுவதைக் குறித்த நம்பிக்கை உங்களிடம் இல்லை.அதனால் தான் அதை மறுத்தீர்கள்.





//அந்த கேள்வி மரணத்தை குறித்து தான்!! வேதத்தில் இல்லாத "ஆவிக்குறிய மரணம்" அதன் பின் "சரீர மரணம்" என்றெல்லாம் பழகியிருக்கும் இவர்களுக்கு வசனம் சொன்னால் எப்படி இவர்களுக்கு விளக்கமாக இருக்கும்!! !!//

ரோமர் 8:5 அன்றியும் மாம்சத்தின்படி நடக்கிறவர்கள் மாம்சத்துக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்; ஆவியின்படி நடக்கிறவர்கள் ஆவிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.

I கொரிந்தியர் 2:13 அவைகளை நாங்கள் மனுஷஞானம் போதிக்கிற வார்த்தைகளாலே பேசாமல், பரிசுத்த ஆவி போதிக்கிற வார்த்தைகளாலே பேசி, ஆவிக்குரியவைகளை ஆவிக்குரியவைகளோடே சம்பந்தப்படுத்திக்காண்பிக்கிறோம்.

I கொரிந்தியர் 2:14 ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்.

மேலே சொல்லியுள்ள வசனங்களின் படி ஜென்ம சுபாவத்தின் அடிமைகளாக இருக்கும் இவர்களுக்கு ஆவிக்குரிய அர்த்தங்கள் கண்பிப்பாக புரியப்போவதில்லை.




//ஒன்றான மெய்தேவனை, ஒருவரே சாவாமை உள்ள தேவனை எப்படி தான் இவர்கள் மூன்றாக திரித்துவமாக காட்டி அப்படிப்பட்ட ஒரு தேவதூஷனத்தில் சந்தோஷமாக இருக்கிறார்களோ!! அதான் வசனம் இவர்களுக்கு புரியாது, ஒன்றான மெய்தேவன் என்றோ, ஒருவரே சாவாமை உள்ளவர் என்றால் ஒருவர் தான், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கிடையாது!! //

எபிரெயர் 7 அதிகாரம் 3. இவன் தகப்பனும் தாயும் வம்சவரலாறும் இல்லாதவன்; இவன் நாட்களின் துவக்கமும் ஜீவனின் முடிவுமுடையவனாயிராமல், தேவனுடைய குமாரனுக்கு ஒப்பானவனாய் என்றென்றைக்கும் ஆசாரியனாக நிலைத்திருக்கிறான்.

இந்த இடத்தில் மெல்கிசேதேக்கு என்பவரை பற்றிய வசனத்தை தான் வாசித்தோம்.இவருக்கும் நாட்களின் துவக்கமும் இல்லை ஜீவனின் முடிவுமில்லை என்று வேதம் சொல்லுகிறது.அப்படியானால் சாவாமையுள்ள இரண்டு கடவுள்கள் என்று சொல்லவருகிறார்களா இந்த ஞானிகள்.



//வேதமே இவர்களுக்கு இருட்டான ஒரு புத்தகம் தான், கருப்பு நிறத்தில் ஒரு அட்டை போட்டு அதை அப்படியே இருட்டாக தான் வைத்திருக்கிறார்கள்!! வேத வெளிச்சம் என்று சொல்லுகிறீர்களே மைகோவை அவர்களே, எந்த வெளிச்சத்தில் உங்களுக்கு தேவன் மூன்றாக இருக்கிறார் என்று சொல்லுகிறது என்பதை வசனத்துடன் அடுத்த பதிவில் காண்பிக்கும் தைரியம் இருக்கிறதா!! பாரம்பரிய கதைகள் எல்லாம் வேண்டாம், வசனம் மாத்திரமே வேண்டும்!! ஒன்றான மெய் தேவன் என்று வேதம் சொல்லுகிற மாதிரி, திரியேக தேவன் என்றோ திரித்துவ தேவன் என்றோ ஒரே ஒரு வசனம் காண்பியுங்கள், நீங்கள் வேத வெளிச்சதில் இருப்பவர்கள் தான் என்று நானும் சொல்லுகிறேன்!!//

ஏசாயா 45:23 முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.

என்று மாறாத பிரமாணம் சொன்ன தேவனின் வார்த்தை எப்பொழுதும் மாறாததே என்று விசுவாசிக்கிறவர்கள் நாங்கள்.

ரோமர் 14:11 அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

பிலிப்பியர்
2 அதிகாரம்:6. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

8. அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

9. ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

திருவிவிலியம்
பிலிப்பியர்
2:6 கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.

7 ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி,

8 சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.

9 எனவே கடவுளும் அவரை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளினார்.

10 ஆகவே இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;

11 தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக "இயேசு கிறிஸ்து ஆண்டவர்" என எல்லா நாவுமே அறிக்கையிடும்.


தீத்து 2:133 மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது




//ஆத்துமா சாவதில்லை என்பது தான் விட்டலாச்சாரியார் மாத்திரம் அல்ல, இன்னும் மற்ற எல்லா மார்க்கங்களும் போதிக்கிறது!! உங்களை போன்றோருக்கு தான் வேதத்தை தவிர மற்ற எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு போதிக்கும் திறமை இருக்கிறதே!! வேதத்தின்படி பார்த்தோமென்றால் யார் விட்டலாச்சாரியர், யார் சாமியார் என்பது தெளிவாகிவிடும்!! தேவையில்லாத குற்றசாற்று!!

ஆமாங்க மைகோவை அவர்களே, ஆத்துமா அழிந்து போகும் என்பது தான் வேதம் சொல்லுகிறது, ஆனால் அது உங்களுக்கு விட்டலாச்சாரியர் கதையாக அல்லவா இருக்கிறது!! நாங்க கொடுக்க வேண்டிய வசனத்தை இப்படி நீங்களே கொடுத்தால் எப்படி!!//

சரீரம் + ஆவி = ஆத்துமா
ஆத்துமா - ‍ ஆவி = சரீரம்


இதற்கான வசனத்தை அன்று சொன்னது போலவே வார்த்தையும் வசனமும் மாற்றாமல் இன்றும் சொல்லுகிறேன்!!

ஆதி 2:7. தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்

பூமியின் மண்ணிலிருந்து உருவாக்கிய சரீரத்தில் உயிர் இல்லை, ஆகவே அங்கே ஆத்துமா என்று சொல்லப்படவில்லை, ஆனால் அந்த பூமியின் மண்ணினாலே உருவாக்கிய சரீரத்தில் ஜீவசுவாசத்தை ஊதினார் தேவன், அதன் பிறகே மனிதன் ஜீவன் உள்ள ஆத்துமாவானான் என்று வேதம் இத்துனை தெளிவாக சொல்லுகிறது, நீங்கள் என்னமோ வேத வெளிச்சத்தில் வாழுவதாக சொல்லி வருகிறீர்களே!! இருட்டில் இருந்துக்கொண்டு வெளிச்சத்தில் இருக்கிறோம் என்கிற மமதையில் இருக்க வேண்டாம், உங்களை போன்று வேதத்தை திரிப்பவர்களை குறித்து தான்,//

I பேதுரு
3 அதிகாரம்:19. அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.

20. அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்;

மேலே உள்ள வசனத்தில் நோவாகாலத்து மனிதர்களின் ஆவிகள் இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு பின் சந்தித்து பிரசங்கம் செய்வதை கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் அறியலாம்.இந்த அருமையான வசனம் இந்த கட்டுக்கதை ஆசாமிகளின் வார்த்தைகளை அபத்தமாக்குகிறது.சரிரத்தைவிட்டு ஆவி வெளியேறினால் அது இல்லாமல் போய்விடும் என்று சொல்லும் இந்த ஞான சூன்யங்கள் இந்த வசனங்களை கண்டுகொள்ளுவதில்லை.

II பேதுரு 2 அதிகாரம்:4. பாவஞ்செய்த தூதர்களை தேவன் தப்பவிடாமல், அந்தகாரச் சங்கிலிகளினாலே கட்டி நரகத்திலே தள்ளி நியாயத்தீர்ப்புக்கு வைக்கப்பட்டவர்களாக ஒப்புக்கொடுத்து;

9. கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையினின்று இரட்சிக்கவும், அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்.

நரகம் என்பது ஆக்கினைக்கு உள்ளாகும் இடம்.அழிவுமட்டுமே உள்ளது என்றால் ஒரு மனிதன் மரித்ததும் எல்லாம் முடிந்துவிடும்.பிறகு நியாயத்தீர்ப்பு எதற்கு.நீயாயத்தீர்ப்பு என்பது தண்டனை கொடுப்பதற்காகத்தான்.இது கூட அறியாத அறிவிலிகளாக இருப்பது ஆச்சரியமே.



//என்று தெளிவாக தான் சொல்லியிருக்கிறார்!! ஆனால் நாள் வருகிறது, கிறிஸ்துவின் அரசாட்சியில் மூவோர் தேவன், திரித்துவ தேவன், திரியேக தேவன் எல்லாம் நாங்கள் நம்பிக்கொண்டு இருந்த விட்டலாச்சாரியர் கதைகள் தான் என்று அந்த ஒன்றான மெய்தேவனை தெரிந்த பிறகு உங்களுக்கு நிச்சயமாக புரியும்!! இப்பொழுது உங்களுக்கு இது எல்லாம் புரியாதப்படிக்கு வேதத்தில் இருக்கிறது!! அவ்வளவே!! நான் அன்று பேசிய ஒன்றையும் திரித்து பேசவில்லை, இதே வசனங்களை தான் அன்றும் சொன்னேன், இன்றும் சொல்லுகிறேன்!!//

II பேதுரு
3 அதிகாரம்:16.................................கல்லாதவர்களும் உறுதியில்லாதவர்களும் மற்ற வேதவாக்கியங்களைப் புரட்டுகிறதுபோலத் தங்களுக்குக் கேடுவரத்தக்கதாக இவைகளையும் புரட்டுகிறார்கள்.

17. ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து,

18. நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.



//அடேங்கப்பா, என்ன ஒரு மேட்டிமைப்பா உங்களுக்கு எல்லாம்!! வேத பண்டிதர்கள் அல்லவா நீங்கள்!! இவர்கள் எங்களுடன் வயதில் சின்னவர்களாக இருப்பது உண்மையே, ஆனால் வசன ஆதாரங்கள் அல்ல, பாரம்பரியத்தை வைத்து வாதாடுவதில் கில்லாடியாக இருப்பவர்கள் அய்யா நீங்களும் உங்கள் கூட்டனியும்!! இப்பவும் நீங்கள் எழுதிய பதிவில், ஏதோ சகரிய 12:10ஐ தவிர வேறு எந்த வசனத்தை தான் எழுதியிருக்கிறீர்கள், அன்று பேசியதை தான் சொல்லுகிறேன்!! //

ஏசாயா 45:23 முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.

என்று மாறாத பிரமாணம் சொன்ன தேவனின் வார்த்தை எப்பொழுதும் மாறாததே என்று விசுவாசிக்கிறவர்கள் நாங்கள்.

ரோமர் 14:11 அந்தப்படி: முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் தேவனை அறிக்கைபண்ணும் என்று என் ஜீவனைக்கொண்டு உரைக்கிறேன் என்பதாய்க் கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது.

பிலிப்பியர்
2 அதிகாரம்:6. அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

7. தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார்.

8. அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார்.

9. ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.

தீத்து 2:133 மகிழ்ச்சியோடு எதிர்நோக்கியிருப்பது நிறைவேறும் எனக் காத்திருக்கிறோம். நம் பெருமைமிக்க கடவுளும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவின் மாட்சி வெளிப்படப்போகிறது

ஏசாயா 48:11. என்னிமித்தம், என்னிமித்தமே அப்படிச் செய்வேன்; என் நாமத்தின் பரிசுத்தம் எப்படிக் குலைக்கப்படலாம்? என் மகிமையை நான் வேறொருவருக்குங்கொடேன்.

12. யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும் நான் பிந்தினவருமாமே.

13. என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும்.

15. நான், நானே அதைச் சொன்னேன்; நான் அவனை அழைத்தேன்; நான் அவனை வரப்பண்ணினேன்; அவன் வழி வாய்க்கும்.

16. நீங்கள் என் சமீபத்தில் வந்து நான் சொல்வதைக் கேளுங்கள்; நான் ஆதிமுதற்கொண்டு அந்தரங்கத்தில் பேசவில்லை; அது உண்டான காலந்துவக்கி அங்கே நான் இருந்தேன்; இப்பொழுதோ கர்த்தராகிய ஆண்டவரும், அவருடைய ஆவியும் என்னை அனுப்புகிறார்.

இதற்கு மேலும் பல வசனங்களும் விளக்கங்களும் உண்டு.இவைகள் அனைத்து கேட்டு உணருகிறவர்களுக்குத்தான்.



//எங்க கூட வந்த வயதில் மூதவரான அங்கிள் அவர்கள் நிச்சயமாக எங்களை சத்தம் போட்டார், நீங்கள் வேத பண்டிதர்கள் என்பற்காக அல்ல, மாறாக வேத சூனியர்களான உங்களுடன் வாதாடுவது நேரத்தின் விரியமே என்பதால் தான்!! //


கூட வந்த வயதில் மூதவரான அங்கிள் என்ன சொன்னார் என்பது மறுநாள் நாங்கள் அவரிடம் தொலைபேசியில் கேட்டு தெரிந்துகொண்டோம்.அதையும் பதிவு செய்துள்ளோம்.



//யார் குழப்பத்தில் இருக்கிறார்கள், யார் விட்டலாச்சாரியம் பேசுகிறார்கள், ஒன்றான மெய்தேவனை திரியேக தேவனாக திரித்து பேசுபவர்கள் நிச்சயம் மிகவும் சீக்கிரம் கிறிஸ்துவின் ராஜியத்தில் புரிந்துக்கொள்வார்கள், ஏனென்றால் எல்லாரும் சத்தியத்தை அறிகிற அறிவை அடையவேண்டும் என்பதே தேவனின் சித்தமே அன்றி, உங்களின் விட்டலாச்சாரிய கதை போல், அனைவரையும் தூக்கி நரகம் என்கிற மற்றோரு மாயஜாலத்திலும், பிற மதங்களில் இருந்து கடன் வாங்கிய ஒரு இடத்தில் போடுவது அல்ல என்பதை கூடுதலாக உங்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்!!//

II பேதுரு
2 அதிகாரம்:17. இவர்கள் தண்ணீரில்லாத கிணறுகளும், சுழல்காற்றினால் அடியுண்டோடுகிற மேகங்களுமாயிருக்கிறார்கள்; என்றென்றைக்குமுள்ள காரிருளே இவர்களுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

18. வஞ்சகமாய் நடக்கிறவர்களிடத்திலிருந்து அரிதாய்த் தப்பினவர்களிடத்தில் இவர்கள் அகந்தையான வீண்வார்த்தைகளைப் பேசி, மாம்ச இச்சைகளினாலும் காமவிகாரங்களினாலும் அவர்களைத் தந்திரமாய்ப் பிடிக்கிறார்கள்.

19. தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம்பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.




//மரணத்தில் ஆத்துமா இடம் மாறுவதில்லை, மாறாக ஆத்துமா தான் மரிக்கிறது!! சரீரத்தை இயக்கிக்கொண்டிருக்கும் ஆவி வெளியேறினவுடன் மரணம் சம்பவிப்பது அனைவரும் அறிந்ததே!!//

I பேதுரு
3 அதிகாரம்:19. அந்த ஆவியிலே அவர் போய்க் காவலிலுள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார்.

20. அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்;

மேலே உள்ள வசனத்தில் நோவாகாலத்து மனிதர்களின் ஆவிகள் இயேசு கிறிஸ்துவின் உயிர்தெழுதலுக்கு பின் சந்தித்து பிரசங்கம் செய்வதை கேட்கக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் அறியலாம்.இந்த அருமையான வசனம் இந்த கட்டுக்கதை ஆசாமிகளின் வார்த்தைகளை அபத்தமாக்குகிறது.சரிரத்தைவிட்டு ஆவி வெளியேறினால் அது இல்லாமல் போய்விடும் என்று சொல்லும் இந்த ஞான சூன்யங்கள் இந்த வசனங்களை கண்டுகொள்ளுவதில்லை.



//நீங்களோ அல்லது மைகோவையோ தருகிற இதே போதனையில் தான் நானும் வளர்ந்தவன், ஆனால் தப்பு என்று தெரிந்த பின்பு வெளியேறுவது தான் நியாயமே தவிர, அதில் உட்கார்ந்துக்கொண்டு அதான் இத்துனை கோடி ஜனங்கள் இதை பின் பற்றுகிறார்களே, இதி என்ன தவறு இருக்க முடியும் என்றால் அதைவிட முட்டாள்தனமானது ஒன்றுமே கிடையாது!!//

II பேதுரு
2 அதிகாரம்
:21. அவர்கள் நீதியின் மார்க்கத்தை அறிந்த பின்பு தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பரிசுத்த கற்பனையை விட்டு விலகுவதைப்பார்க்கிலும் அதை அறியாதிருந்தார்களானால் அவர்களுக்கு நலமாயிருக்கும்.

22. நாய் தான் கக்கினதைத் தின்னவும், கழுவப்பட்ட பன்றி சேற்றிலே புரளவும் திரும்பினது என்று சொல்லப்பட்ட மெய்யான பழமொழியின்படியே அவர்களுக்குச் சம்பவித்தது.

II பேதுரு
3 அதிகாரம்:18. நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக. ஆமென்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

நண்பர் ஈராஸ் அவர்களின் புலம்பலை கோவை பெராயன்ஸ் தளத்தில் கண்டேன் அதை இங்கே பதித்து அதற்கான பதிலை இங்கு தருகிறேன்.

//நண்பர் ஈராஸ் எழுதியது..........................மைகோவை சந்தித்து சத்தியத்தை பகிர்ந்துக்கொள்ளலாம் என்று தான் சென்றோம், ஆனால் அவர்களின் வீட்டில் ஒரு அணி திரண்டு, என்னையும் என்னுடன் வந்தோரையும் எப்படி எல்லாம் தனிப்பட்ட முறையில் தாக்கினார்கள் என்றும் கண்டிப்பாக வெட்கத்துடன் தான் எழுதுகிறேன்!! இவர்களின் பண்பு இது தான் என்று நிச்சயமாக வெட்கப்படுகிறேன்!! வசனம் இவர்களுக்கு தெரியாது, பாரம்பரியத்தை வைத்தே பேசினார்கள்!! சுய விளம்பிரத்திற்காக வீடியோ எடுக்கலாம் என்று எல்லாம் சொன்னார்கள், தேவயானதை எடிட் செய்து அவர்களுக்கு சாதகமாக தையாரிக்கலாம் என்கிற தந்திரம் எல்லாம் எங்களுக்கு தெரிந்தே அதை வேண்டாம் என்று தடுத்து நிறுத்தி விட்டோம்!! அநாகரிகமாக கொச்சை படுத்துவோருடன் நாங்கள் விவாதத்திற்கு சென்றோம் என்று நிச்சயமாக வெட்கப்படுகிறோம், மற்றபடி சட்க்ஹ்திய வசம் இவர்களிடத்தில் இல்லாமலேயே இவர்கள் இத்துனை துனிச்சலாக தங்கலை கிறிஸ்தவர்கள் என்ரு அறிக்கை செய்கிறார்கலே என்பதிலும் வெடக்கப்படுகிறேன்!! இவர்கள் கடந்த 20 வருடங்கலாக இப்படி தான் வருவோரை வெட்கப்படுத்தவார்கள் என்பதை மாத்திரம் புரிந்து கொண்டேன்!!

இவகளே ஒப்புக்கொள்கிறது என்னவென்றால் திரித்துவத்தில் இவர்கள் தெளிவில்லாதவர்களாக இருந்தாலும், பாரம்பரியம் சொல்லுவதினால் கட்டாயத்தின் பெயரில் இவர்கள் அந்த திரித்துவம் என்கிற துருபதேசத்தில் நிலைத்து நிற்க வேண்டியதாக இருக்கிறது, இதில் இவர்களுக்கு பெருமை வேறு!! காணாதவரை விசுவசிப்பது வேறு, இல்லாததை விசுவசிப்பது மூடத்தனம் என்பதை மைகோவை அவர்கள் அறிந்தால் நன்றாக இருக்கும்!!

முதலில் திரித்துவத்தையே சரியாக வசனத்துடன் சொல்லுங்கள், பிறகு இன்னும் ஆழமானதை பேசலாம்!! நேர்மையான விவாதம் நடத்துவது என்றால் என்னவென்றே உங்களுக்கு எல்லாம் தெரியாது!! ஏனென்றால் உங்கள் விசுவாசத்திற்கு பாரம்பரியம் தான் சாட்சியாக இருக்கிறதே தவிர, வசனங்கள் இல்லை//

அன்பு நண்பர் மைகோவை தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் எழுதியது

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். கடந்த ஓரிரு வருடத்துக்கு முன் நடைபெற்ற ஒரு சம்பவத்தை நான் இதுவரை விரிவாக இங்கு பதியவில்லை.ஆனால் ஈராஸ் என்ற பெயரை முன்பு கொண்டிருந்த பெராயன்ஸ் நண்பர் பெயரில் தற்பொழுது அறியப்படுகிறவர் தன்னுடைய தளத்தில் வெட்கப்படுத்திய மைகோவை என்று அந்த சம்பவத்தை எழுதியுள்ளதால் அந்த சந்திப்பைக்குறித்த ஒரு சில விசயங்களை சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

நண்பர் ஈராஸ் அவர்கள் நம்முடைய தளத்தில் கடந்த வருடங்களில் உறுப்பினராக இருந்து விஷவிதைகளை(தவறான உபதேசங்கள்) தூவிக்கொண்டிருந்தார்.இதை அறிந்த நம்முடைய தள நண்பர்கள் அவருக்கு பல வழிகளில் வேத வசனங்களை எடுத்து சொல்லியும் அவர் தன்னுடைய நிலையில் மாறவேயில்லை.பிறகு அவர் கோவையை சேர்ந்தவர் என்பதை நாம் அறிந்துகொண்டோம்.அதன் பிறகு நண்பர் ஒருவர் மூலமாக அவரை தொடர்புகொண்டு அவருடைய தவறான விசுவாசத்தை குறித்து கேள்விகள் எழுப்பினோம்.அவர் அதற்கு பதிலாக ஒரு சில விசயங்களை பேசினார்.உடனே நான் அவரை நேரடியாக ஒரு இடத்தில் சந்தித்து பேசலாம் என்று அழைத்தேன்.

எங்களின் இல்லத்திற்கு அவரும் ,அவருடன் ஒரு வாலிபரும்,ஒரு வயதில் முதிர்ந்த ஒரு அங்கிள் அவர்களும் வந்திருந்தார்கள்.எங்கள் வீட்டில் அவருக்கு எதிரில் நானும்,என் சகோதரரும்,என் சகோதரரின் நண்பர் ஒருவருமாக மூன்று பேர் கூடி இருந்தோம்.

அவர்கள் மூன்று பேர் வந்தவுடன் நாங்கள் பேசுவதை யாரும் மாற்றி சொல்லிவிடக்கூடாது என்பதற்காக நாம் வீடியோ எடுத்துக்கொள்ளுவோம் என்று நினைத்து வீடியோ எடுக்க ஆயத்தமானோம்.அதற்குள் நண்பர் ஈராஸ் அவர்களும் அவரோடுகூட வந்த நண்பரும் பதற ஆரம்பித்தார்கள்.நாங்கள் உங்களுடன் பேச தயாராக இல்லை.இது போன்ற வீடியோ எல்லாம் வேண்டாம் என்று புறப்பட எத்தனித்தார்கள்.வெண்ணை திரண்டு வரும்பொழுது பானை உடைக்ககூடாது என்று நாங்களும் வீடியோவை அனைத்துவிட்டு அவர்களுடன் பேச ஆரம்பித்தோம்.

ஆரம்பம் முதலே ததுக்க பிதுக்க என்று ஆரம்பித்த அவர்கள் நாம் கேட்ட ஒரு கேள்விக்கும் சரியான வசன விளக்கங்களை தர இயலவில்லை.முடிவில் தேவன் மூன்று ஆள் தத்துவத்தில் எப்படி செயல்படுகிறார் என்பதை வேத வெளிச்சத்தில் காட்டினோம்.அதற்கும் அவர்களிடம் பதிலில்லை.

குறிப்பாக சகரியாவின் புஸ்தகத்தில் 12:10 ஆம் அதிகாரத்தில் நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப் பார்த்து, ஒருவன் தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன் தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள்.) என்று சொல்லப்படும் வசனம் பிதாவாகிய தேவன் சொல்லுகிறார் என்று சொன்ன அவர்கள் பிதா எப்பொழுது குத்தப்பட்டார் என்ற கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் திணறினர்.

பின்பு ஆத்துமா என்பது மரணத்திற்கு பிறகு இல்லை.அது மனிதன் மரித்தவுடன் காணாமல் போய்விடும் என்று விட்டலாச்சாரியாரின் கதை எல்லாம் சொன்னார்கள்.அதுவும் தவறு என்று பல வசன ஆதாரங்களுடன் விளக்கப்பட்டது.ஆத்துமா என்று ஒன்று இல்லை என்றால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து

மத்தேயு 10:28ல் ..............சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.)

என்று சொல்லுகிறாரே அப்படியானால் ஆத்துமா வேறு சரீரம் வேறு என்று இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளுகிறோம் இல்லையா என்று கேட்டபொழுது பதில் சொல்ல முடியாமல் எச்சில் விழுங்கினார்கள்.

இப்படி எங்களுடைய கலந்துரையாடல் போய்கொண்டிருந்த பொழுது திடீர் என்று இவர்களுடன் வந்த அந்த அங்கிள் மிகவும் கோபத்துடன் ஈராஸ் அவர்களையும் அவருடன் கூட வந்த சகோதரனையும் பார்த்து கடிந்துகொண்டார்.நம்மைவிட வயதில் குறைந்தவர்களாக இருந்தாலும் இந்த சகோதரர்கள் வைக்கும் வசன ஆதாரங்களுக்கு நம்மால் பதில் அளிக்க முடியவில்லை.இதில் நாம் எதற்கு இப்படியெல்லாம் வரவேண்டும் என்று சாட ஆரம்பித்தவர் ஒரு நிலையில் எழுந்து எங்களிடம் வருத்தம் தெரிவித்துவிட்டு கிளம்பி சென்றுவிட்டார்.

அதன் பிறகு அருமை நண்பர்கள் இருவரும் மிகவும் கோபத்துடன் பேசினர்.நாங்களும் அவர்களுக்கு பதில் அளித்தோம்.ஆனால் முடிவில் நாங்கள் கேட்ட கேள்விகளுக்கு வேறு மொழிபெயர்ப்பில் பார்த்து பதில் சொல்லுவதாக சொல்லி நடையை கட்டினர்.

ஆனால் நண்பர் ஈராஸ் அவர்கள் மைகோவை எங்களை வெட்கப்படுத்தினார் என்றெல்லாம் எழுதியுள்ளார்.ஆனால் உண்மை அதுவல்ல.அவர்களின் கொள்கை சரியில்லை என்பதை ஆண்டவர் அவர்களின் உள்ளதில் தெளிவுபடுத்தியும் தங்களின் கொள்கையை விடாமல் பிடித்து தொங்குவதால் ஆண்டவரே அவர்களை வெட்கப்படுத்தினார்.எந்த கேள்விகளுக்கும் சரியான பதில் அளிக்காமல் திக்கி திணறி தங்கள் ஆதரவாக அழைத்து வந்தவரே தங்கள் திட்டிசென்றது அவர்களுக்கு வெட்கத்தை உடுத்தியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.


மீண்டும் இங்கு ஒரு விசயத்தை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இது போன்ற குழப்பமான உபதேசம் கொண்டுள்ள சகோதரர்கள் அனைவருக்கும் பகிரங்கமாக நான் விடும் அழைப்பு இதுதான்.முதலில் உங்கள் கொள்கைகளை வெளிப்படையாக அறிவியுங்கள்.எங்கள் கொள்கையை நாங்களும் அறிவிக்கிறோம்.அதன் பிறகு பொதுவான ஒரு இடத்தில் உங்கள் நம்பிக்கையை அடிப்படையாக கொண்ட விசுவாசிகள் சிலர் திருத்துவ உபதேசத்தை அடிப்படையாக கொண்ட நாங்கள் அறிந்த விசுவாசிகள் சிலரை முன்னிலையாக கொண்டு வேத வசன ஆதாரத்துடன் கலந்துரையாடுவோம்.நீங்களும் வீடியோ எடுங்கள்,நாங்களும் வீடியோ எடுக்கிறோம்.எது உண்மை எது வேத உபதேசம் என்பதை மக்கள் புரிந்துகொள்ளட்டும்.

இதை ஏற்றுக்கொள்ளும் நண்பர்கள் தங்கள் அடிப்படை உபதேசங்களை இங்கு முழுமையாக பதிக்க வேண்டும்.அதவாது உங்கள் உபதேசம் என்ன?இது யாரால் தோற்றுவிக்கப்பட்டது அல்லது யாரால் தொடரப்பட்டது.உங்கள் சபை கூடுதல் விவரம் ஆகியவை முதலில் அறிவித்து விட்டு எஙகளுக்கு அழைப்புவிடுங்கள்.நாங்கள் உங்களுடன் பேச ஆயத்தமாக இருக்கிறோம்.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard