இந்த பதிவை குறித்து எனக்கு தெரிந்ததை பதித்துள்ளேன்
வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே
இப்பாடலாசிரியர் ”தேவனுக்கேற்ற நற்கிரியை தன்னிடத்தில் இல்லையே என்று தன் வெறுமை நிலையை உணர்ந்து, தேவனிடத்தில் தன்னைத் தானே தாழ்த்தி அறிக்கை செய்கிறார்.” என்பது போலவே உள்ளது.
வெறுமையான பாத்திரம் என்று பாடக்கூடாது என்பவர்கள் ஒன்று தங்களின் நிலையை அறியாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது ஏற்கனவே முற்றும் நிரம்பி வழியும் பாத்திரமாக இருக்க வேண்டும். அவரவர் அனுபவம் மற்றும் நிலையை பொருத்தது.மற்றபடி அப்படி பாடக்கூடாது என்று சொல்வது தவறு.
//வெறுமையான பாத்திரம் நான் என்று பாடி அழுதுகொண்டிருந்தால் ஆண்டவருக்கு கஷ்டமாக இருக்கும்;//
உண்மையில் தேவனிடத்தில் நம் நிலைமையை உள்ளதன்படியே சொல்வது தான் நல்லது. அப்பொழுது தான் தேவனுக்குள் நாம் வளர முடியும்.தேவனும் அதைத் தான் எதிர்பார்க்கிறார். வெறுமையான பாத்திரம் நான் என்று ஒருவர் தன் நிலையை உணர்ந்து தேவசமூகத்தில் சொல்லி அவரின் உதவி கேட்கும் போது ஆண்டவர் மிகவும் மகிழ்ந்து நமக்கு உதவுகிறார். தன் நிலையை ஒருவர் உணராமல் தாவீது இப்படி சொல்லியிருக்கிறார், ஆபிரகாம் இப்படி சொல்லியிருக்கிறார் எனவே அது எனக்கும் தான் என்ற எண்ணதில் இருந்தால் நம் குறைவுகளை நாம் அறிய முடியாது.குறையிருந்தாலும் அதனை களைய முயற்சிக்காமல் பாசிடிவாக யோசித்து நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வோம்.
//தாவீதைப் பாருங்க,23 ம் சங்கீதத்திலே என் பாத்திரம் நிரம்பி வழிகிறது என்கிறார்,நாமோ இதுபோல வெறுமையான பாத்திரம் என்று பாடிக்கொண்டிருக்கிறோம்//
”என் சத்துருக்களுக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு பந்தியை ஆயத்தப்படுத்தி,என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர். என் பாத்திரம் நிரம்பி வழிகிறது.”
தன் எதிரிகளுக்கு முன்பாக தேவன் தன்னை எவ்வளவாக உயர்த்தியிருக்கிறார் என்பதாகவே உள்ளது. 23ம் சங்கீதம் தாவீது தனது சொந்த அனுபவத்தில் உணர்ந்து எழுதியது.
அருமை நண்பர் ஜாண் அவர்களே,என்னுடைய உணர்வுகளை உள்வாங்கி ஆய்ந்தறிந்த அருமையான ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறீர்கள்;அடியேன் சுமார் 3 மணிநேரம் அமர்ந்து எழுதிய ஒவ்வொரு வரியையும் வாசித்த பாதிப்பு உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது;நன்றி நண்பரே..! அந்த ஊழியர் யார் என்று அறியும் ஆவல் நண்பர்களுக்கு உண்டா..? அதனை வெளியிடுவதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இது கொடுமையிலும் கொடுமை. இப்போதெல்லாம் பாடலின் நடுவே ராகத்தோடு அந்நியபாஷை பேசி வெளியிடும் காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ஆகையால் இது போல அர்த்தமுள்ள பாடல்கள் தவறாக தெரிகிறது. இது "புது யுகம்" என்று அழைக்கப்படும் "நியூ ஏஜ்" போதனை. "நீ எப்படி உன்னை பற்றி நினைக்கிறாயோ, அறிக்கை செய்கிறாயோ அப்படியே நீ மாறிவிடுவாய்" என்று சாத்தான் அதியாகமத்தில் சொன்ன பொய்யை நம்பவைக்கும் முயற்ச்சி!
வெறுமையான பாத்திரம் நான் என்று தேவனுக்கு முன்பாக ஒத்து கொள்ளக்கூடாதபடி சாத்தான் கண்களை கூருடாக்கினதே காரணம்.
நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. (யோவான் 15:5)
போன்ற வசனங்களை தவறாக போதிப்பவர்கள். கட்டப்பட்டவராக இருந்த பவுல் கொடிய வேதனையின் மத்தியில் எனக்கு கிறிஸ்துவுக்காக பாடுபட, மரிக்க பெலனுண்டு என்று சொன்னதை நம் வியாபாரிகள் திரித்து கூறுவது எல்லா கூட்டங்களிலும் நடக்கின்ற ஒன்று.
-- Edited by John on Wednesday 9th of March 2011 03:29:58 AM
தவறை சுட்டி காட்டியமைக்கு நன்றி நண்பரே...தவறுக்கு வருந்துகிறேன்;நான் தட்டும் வேகத்தில் கண்ணில் புகைபறக்க- சுண்டுவிரல் முதலாக ஒத்துழைக்க மறுக்க- வலிகளும், வேதனைகளும், சொந்த சோகங்களும் அதிகம்;அவற்றை நினைத்து மருகுவதைவிட இங்கே உங்களையெல்லாம் சந்திப்பதை எனது காயங்களுக்கு வடிகாலாக நினைக்கிறேன்;எப்படியிருந்தாலும் தவறு, தவறு தான்... இனி இதுபோல நேராதவண்ணம் பார்த்துக்கொள்ளுகிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இன்று (06.03.2011@11am) ஒரு சபையின் ஆண்டு விழாவுக்குச் சென்றிருந்தேன்; சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தவரின் செய்தி நேரம்:
மனிதர் பொதுவாகவே பேசிக்கொண்டிருந்தார்;அவருடைய பிரசங்க மேடையைப் பார்த்தபோது தெரிந்தது,அவரிடம் இன்றைக்கு செய்யவேண்டிய பிரசங்கத்தைக் குறித்த எந்த திட்டமுமில்லை. அதற்கு அத்தாட்சியாக அவருடைய வேதப்புத்தகமானது காற்றிலே கலைந்து பறந்துகொண்டிருந்தது; எந்த பிரசங்கக் குறிப்புகள் டைரியோ சீட்டுகளோ அங்கே இல்லை; எனவே சொந்த அறிவில் ஏதோ பேசப்போகிறார் என்பது தெளிவானது; கேட்டால் என்ன சொல்லுவார் ஆவியானவரே பேசப்போகிறார் என்று சொல்லுவார். நானும் இன்னும் சில ஊழியர்களும் பொறுமையாக உட்கார்ந்திருந்தோம்; சத்தம் பலமாக இருந்ததே தவிர இன்னும் சப்ஜெக்ட்டுக்கு வரக்காணோம்; "கிறித்தவர்களாகிய நமக்கு ஜெபம் முக்கியம்,விசுவாசம் முக்கியம் " என்பதாகப் பேசிக்கொண்டே வந்தவர் திடீரென சொன்னார்,"நாம் எப்பப் பார்த்தாலும் பயமாக இருக்குது,குறைவாக இருக்குது என்று சொல்லிக் கொண்டே இருக்கக்கூடாது, வெறுமையான பாத்திரம் நான் என்று பாடி அழுதுகொண்டிருந்தால் ஆண்டவருக்கு கஷ்டமாக இருக்கும்;தாவீதைப் பாருங்க,23 ம் சங்கீதத்திலே என் பாத்திரம் நிரம்பி வழிகிறது என்கிறார்,நாமோ இதுபோல வெறுமையான பாத்திரம் என்று பாடிக்கொண்டிருக்கிறோம், இதுபோன்ற பாடல்களையெல்லாம் மாற்றவேண்டும், அவர் நம்மை வெறுமையாக வைத்திருக்கவில்லை; பிலிப்பியர்.3:19 - ல் என்ன வாசிக்கிறோம், அவர் நம்முடைய குறைவுகளையெல்லாம் மகிமையாக நிறைவாக்குவார், அதாவது அந்த வசனம் தமிழில் தவறாக மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது; அதாவது இந்த உலகில் நாம் கஷ்டப்பட்டு தான் ஆகவேண்டும்,வேறு வழியில்லை,நாம் பரலோகத்துக்குப் போன பிறகே நம்மை நிரப்புவார் என்று போதிக்கப்பட்டிருக்கிறோம்;ஆனால் அது எப்படியிருக்க வேண்டுமென்றால், ஆண்டவர் தம்முடைய அளவற்ற ஐசுவரியத்திலிருந்து மகிமையாக நிரப்புவார் என்பதாக இருக்கவேண்டும்; இதற்கு நீங்கள் நல்ல கிங் ஜேம்ஸ் (KJV) பைபிளில் படித்தால் தான் புரியும்..." என்று சொல்லிக்கொண்டே எங்களை ஆதரவோடு பார்த்தார்;எங்களுக்கு அவ்வளவாக தெரியாததால் அமைதியாக இருந்தோம்;நான் மட்டும் துடுக்காக ரிச்சஸ் இன் குளோரி (riches in Glory) என்பதன் அர்த்தப்படி அது மகிமையிலுள்ள ஐசுவரியம் என்பதாகவே இருக்கவேண்டும் என்ற கருத்தைச் சொன்னேன்; ஆனால் அவரோ விடாமல், "எனவே நாம் இந்த உலகில் வறுமையோடு கஷ்டத்திலே நோயிலே கஷ்டப்படுவது தேவ சித்தமல்ல,என்பதை உணரவேண்டும்" என்பதாக சொல்லிவிட்டு,அப்படியே எலியா நம்மைப் போல பாடுள்ள மனுஷனாக இருந்தும்...என்று துவங்கி ஜெபத்தைக் குறித்த செய்திக்கு பறந்துவிட்டார்;"ஜெபமுள்ள வாழ்க்கை , ஜெயமுள்ள வாழ்க்கை; பயமும் ஜெயமும் ஒன்று சேராது;எலியா முழங்கால் பெலத்தினால்- அதாவது ஜெபத்தினால் அரசாங்கத்தையே அசைத்தான்" போன்ற தத்துவங்களையும் சொன்னார்; எல்லாம் நன்றாகத் தான் இருந்தது; ஆனாலும்அவ்வப்போது டல்லடிக்கும் போதெல்லாம் மூச்சுக்கு ஒரு அல்லேலூயா போட்டார்; ஆக ஜனங்கள் எந்த அளவுக்கு போஷிக்கப்பட்டார்களோ நாம் அறியோம்;ஆனாலும் தற்கால விசுவாசிகளுக்கு இதுவே போதுமாக இருக்கிறது;இல்லாவிட்டால் இவரைப் போன்றவர்களைப் போஸ்டர் அடித்து கூப்பிடமாட்டார்களே..!
என்னைப் பொறுத்தவரை இந்த அனுபவம் இன்றைய அனுபவத்தை எழுதுவதற்கு உதவுகிறது; ஆம்,அந்த ஊழியர் சர்ச்சை கிளப்பினாரே, "வெறுமையான பாத்திரம் நான் " என்று பாடக்கூடாது என்று;அது சரியா? அதுவும் போக நான் ச்சும்மா இருக்கக்கூடாதா,என்னை அழைத்த பாஸ்டர் தெரியாமல் என்னை இறுதி ஜெபத்துக்காக அழைக்க, நான் படபடப்புடன் , ஆனால் தைரியமாக, வெறுமையான பாத்திரம் பாடலைப் பாடி ஜெபித்தேன்; "ஆண்டவரே நாங்கள் எப்போதும் உம்முடைய நன்மையைப் பெறத் தகுதியாக்கும், எங்களை வெறுமையாக்கி அர்ப்பணிக்கிறோம், நீர் எங்களை உமது நன்மையால் ஒவ்வொரு நாளும் நிரப்பும், இந்த சபையானது அடுத்த வருடத்துக்குள் சொந்த கட்டிடத்தில் கூட உதவிசெய்யும், ஒவ்வொரு விசுவாசியையும் பொறுப்புள்ள தலைவர்களாக உயர்த்தும்;செய்தியளித்த உம்முடைய தாசனுக்காக நன்றி செலுத்துகிறோம்,அவரை இன்னும் வல்லமையாக பயன்படுத்தும்" என்பதாக ஒரு சாதாரண ஜெபத்தையே செய்து முடித்தேன்;ஆனாலும் அந்த செய்தியாளரின் முகத்தை நீங்கள் பார்க்கணுமே, முகத்தில் அத்தனை வெறுப்புடனும் எரிச்சலுடனும் என்னைக் கடந்து என்னருகில் இருந்த ஊழியருக்கு கைகொடுத்து வாழ்த்தினார்;பிறகு நானே என்னைத் தாழ்த்தி அவருக்குக் கைக்கொடுத்து வாழ்த்திவிட்டு அமைதியாக வெளியேறிவிட்டேன்.
என்னுடைய ஜெபத்துக்குப் பிறகு ஆசீர்வாதம் போட வந்த மற்றொரு முற்போக்கு ஊழியர் (நல்ல நாமகரணம் அல்லவா?) என்னிடம் வேகமாக வந்து, "ஐயா, இனிமேல் வெறுமையான பாத்திரம் என்றெல்லாம் பாடாதீங்க, அது அந்த காலம்... இப்போது ஆண்டவர் நம்மை முழுமையாக நிரப்பிவிட்டார்" என்று எனக்கு புத்திசொன்னார்; நான் சிரித்துக்கொண்டே சொன்னேன், "பாஸ்டர், அப்படி முழுவதும் நிரம்பினாலும் பிரச்சினை தான், ஏனெனில் முழுவதும் நிரம்பின பாத்திரம் கவிழ்க்கப்படும் ஆபத்து அதிகம் என்றேன்", அவரோ விடாமல், "அதெப்படி நிரப்பறது ஆண்டவரல்லவா,கவிழாமல் பார்த்துக்கொள்ளுவார்" என்றார்; நான் சொன்னேன், "ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு பக்தனுடைய தனிப்பட்ட அனுபவமாகும்,இதில் எந்த பாடலையும் திருத்தவேண்டும் என்று சொல்வது தவறு" என்பதாக.
இப்படியே, எனக்காய் ஜீவன் விட்டவரே பாடலில் வரும் ஒரு சரணத்தையும் குறித்து இந்த மேதாவிகள் இகழ்ந்து, இப்படியெல்லாம் பாடக்கூடாது என்று சொல்லுவதுண்டு;அந்த அடி இப்படியாக வரும்,"மனிதர் கைவிட்டாலும் மாமிசம் அழுகி நாறிட்டாலும் ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும் ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும், இயேசு போதுமே" என்பதாக;இந்த ஒரு பாடல் மூலம் எத்தனையோ ஆயிரங்கள் ஆறுதல் பெற்றனர்,நம்பிக்கை பெற்றனர், கிறித்துவிடம் வந்தனர்;இந்த பாடலை இயற்றியவர் சுமார் 40 வருடங்களாக எந்த விளம்பரமும் இல்லாமல் ஊழியம் செய்து இன்றுவரை எளிமையான வாழ்க்கை வாழும் அண்ணன் பிரகாஷ் ஏசுவடியான் ஆவார்; அவருடைய இந்த பிரபலமான இந்த பாடல் அவருடைய சொந்த அனுபவத்திலிருந்து எழுதப்பட்டதாக அவரே சாட்சி பகர்ந்திருக்கிறார்.
ஆனால் இந்த முற்போக்கு ஊழியர்களோ எடுத்தேன், கவிழ்த்தேன் என்று மேடைகளில் முழங்குகிறார்களே தவிர தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் அவற்றை பயிற்சித்து பார்க்கிறார்களா என்றால் அது ஒரு மிகப்பெரிய கேள்விகுறியாகும்; இவர்களெல்லாருமே வங்கிகளிலும் மார்வாடிகளிடமும் கையெழுத்து போட்டு ஜாமீன் பத்திரங்களும் சமர்ப்பித்து கடன் வாங்கி பேர் புகழுக்காக அலைந்து திரிந்து கார்,பங்களா போன்ற வசதிகளை நாடி தேடி பெற்று சிடி போட்டு விற்று பணம் பார்த்து ஊழியத்துக்கு இவ்வளவு என்று காணிக்கை கேட்டு பெற்று சாதாரண மனிதர்களைப் போன்ற சுகதுக்கங்களுடன் போராட்டத்தில் வாழ்பவர்கள் தான்; இவர்களில் பெரும்பாலானவர்களின் பேச்சை கேட்கும் போது ஒரு எண்ணம் என் மனதில் உதிக்கும், இவர்கள் தன் மனைவியிடம் பேசமுடியாதவற்றையெல்லாம் மேடையில் வந்து பேசி மற்றவர்களின் மனைவிமாருக்கு உபதேசிக்கின்றனர்; ஏனெனில் இவர்களுடைய கூட்டத்தில் பெண்களே அதிகம் இருக்கின்றனர்; இவர்கள் தங்கள் பிரசங்கத்தில் அதிகம் புத்தி சொல்லுவதும் பெண்களுக்கே; இந்த முற்போக்கு ஊழியர்களுக்கெல்லாம் அண்மைக்கால தலைவரும் தரிசனப் புருஷருமாக விளங்குபவர் போதகர் சாம் செல்லதுரை அவர்களே;அவரிடம் அரைகுறையாகக் கேட்டு, அவசரமாக வளர்ந்து பிரசங்கம் பண்ண வந்துவிட்ட இவர்களைப் போன்றவர்களால் ஆகாயத்தில் சிலம்பம் பண்ணும் விசுவாசிகள் பெருகிவிட்டனர்; இது சபைக்கு வந்த பேராபத்தாகும்.
1.வெறுமையான பாத்திரம் நான் வெறுத்துத் தள்ளாமலே நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம் இயேசுவை போற்றிடுதே என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே
2.விலைபோகாத பாத்திரம் நான் விரும்புவாரில்லையே விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே தடைகள் யாவும் நீக்கி என்னைத் தம்மைப் போல் மாற்றிடுமே உடைத்து என்னை உந்தனுக்கே உடைமையாக்கிடுமே
3.மண்ணாசையில் நான் மயங்கியே மெய்வழி விட்டகன்றேன் கண்போன போக்கைப் பின்பற்றினேன் கண்டேனில்லை இன்பமே காணாமல்போன பாத்ரம் என்னைத் தேடிவந்த தெய்வமே வாழ்நாளெல்லாம் உம்பாதம் சேரும் பாதையில் நடத்திடுமே -மேற்கண்ட இந்த அர்ப்பணப் பாடலில் எந்த வரியைக் குறைசொல்ல இயலும்? இதை எப்படி மாற்றமுடியும்? இதற்கும் 23-ம் சங்கீதத்தில், என் பாத்திரம் நிரம்பி வழிகிறது என்று தாவீது சொல்வதற்கும் என்ன தொடர்பு? அந்த அறிக்கையை இந்த பாடலின் வரி எப்படி பாதிக்கிறது? எனக்கு ஒன்றும் புரியவில்லை;எனக்கு அருமையான தள நண்பர்களும் வாசகர்களுமே சொல்லட்டும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)