Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யோபுவும் நக்கீரனும்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: யோபுவும் நக்கீரனும்
Permalink  
 


Ashokkumar wrote:
ஆம் சகோதரரே, திருச்சிக்காரன் மற்றும் சில (அமெரிக்க வாழ்) இந்து நண்பர்ளே இந்த சிந்தனைக்கு காரணம். நான் அந்த தளத்தின் குப்பைகளை இங்கே கொண்டு வரவேண்டுமா என்று யோசிக்கிறேன். வேண்டுமானால் பின்னுட்டங்களை மட்டும் இங்கு போடுகிறேன். கட்டுரைகள் என்ற பெயரில் அவர் உளறுவதை இங்கும் நாம் பதிய வேண்டுமா? திருச்சிக்காரனின் எழுத்துக்களும், எண்ணங்களும் அதற்க்கு தகுதியுள்ளவையா? ஆனால், ஒரு விஷயம், திருச்சிக்காரன் நம் தளத்தை கவனிக்கிறார். நாம் இங்கு எழுதும் விஷயங்கள் அங்கு அவர் தளத்தில் பிரதிபலிக்கிறது. அங்கு வரும் ஏதாவது ஒரு ஆத்துமா, இந்த விஷயங்களை கேட்டு தேவனை அறிந்துகொண்டு ஆக்கினைக்கு தப்பாதா என்பதே என் அவா.

அன்புடன்,

அசோக்


அருமை நண்பர் அசோக் அவர்களின் எண்ணம் சரியானதே;ஆனாலும் நம்முடைய பதிலுரைகளின் சில பகுதிகள் நமக்கே ஆச்சரியமாக இருக்கும்; அவை சிதறிப் போகாமல் சேமிக்கப்பட வேண்டும் என்பதே என்னுடைய அவா;அப்படியானால் மற்றவருடைய கட்டுரையை முழுவதும் காப்பி பேஸ்ட் பண்ணவேண்டிய அவசியம் இல்லை;நான் ஏற்கனவே செய்திருப்பது போல நாம் எந்த குறிப்பிட்ட வரிகளுக்கு பின்னூட்டமிட்டோமோ அதையும் இடம்பெற்றிருக்கக்கூடிய தலைப்பையும் தொடுப்புடன் பதிக்கவேண்டும்; அதையும் குறிப்பிட்ட ஒரு உபதளத்தின் (Sub-forum)கீழ் தனித் தனி  திரியாகத் தொகுக்க வேண்டும்;பிற்காலத்தில் கர்த்தருக்கு சித்தமானால் இவற்றையெல்லாம் இணைத்து ஒரு தனி தளமாக்கலாம் என்பது எனது நீண்ட கால யோசனையாகும்; அதற்கு அடுத்த கட்டத்தில் இதிலுள்ள தனிப்பட்ட வாதங்களையெல்லாம் தவிர்த்து தணிக்கைசெய்து தனித்தனி கட்டுரையாகவும் மாற்றலாம்;இவையெல்லாம் எனது மனதிலுள்ள நீண்ட காலதிட்டங்களாகும்;முயற்சிப்போம்,அதுவே திருவினையாகும்..!

N.B:-ஆனாலும் நாம் இருவரும் பேசிவைத்துக்கொண்டே அங்கிருந்து விலகினதை மறந்துவிட்டீர்களே..?




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

உங்கள் ஊக்கத்திற்கு நன்றி சகோ.கொல்வின். பொதுவாக இந்துக்கள் மேல் எனக்கு தனி பிரியமுண்டு. முரட்டு பிடிவாதத்தை மட்டுமே கொண்டு, சுயநீதியை மட்டுமே பேசிகொண்டிருந்த என்னையும் ஆண்டவர் தன் அன்பால் ரட்சித்தார். அந்த அன்பை, ரட்சிப்பை, மேலும் பல இந்து நண்பர்கள் அடையவே போராடுகிறேன்.

இந்துக்கள் தங்கள் மார்க்கத்தை தீவிரமாக பின்பற்ற முயற்சித்தாலே, அது போலியான மார்க்கம் என்று தெரிந்து கொள்வார்கள். ஆனால், அந்த மார்க்கம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் சுயமே பெரிது, அஹம் பிரம்மாஸ்மி, போன்ற மாயையான மனநிலை, உண்மையை ஏற்றுக்கொள்ள அவர்களை அனுமதிப்பதில்லை. தங்கள் புராணங்களில் உள்ள அசிங்கங்களை அடையாளம் கண்டால்கூட, அந்த அசிங்கங்களை மாத்திரம், மற்றவர்கள் கலப்படம் செய்துவிட்டார்கள், மற்றபடி எங்கள் புராணங்கள் நல்லவையே என்று கூறுகிறார்கள்.

பத்மபுராணம் போன்றவை, இந்துத்துவத்தின் தொலை உரித்து, அவைகளின் அசிங்கங்களை காட்டுகிறது. இதைப்பற்றி நாம் எழுதியும் உள்ளோம்.

மேலும், அவர்களை குற்றப்படுத்துவது என் நோக்கமல்ல. அவர்களும், மெய்யான ஒளியை அறிவதே என் நோக்கம்.

நன்றி,

அசோக்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சமீபகாலமாகதான் உங்களின் ஆக்கங்களை வாசிக்கத் தொடங்கினேன். தெளிவாக அருமையாக எழுதுகிறீர்கள். .

திருச்சிகாரனின் பதிவுகளை Copy & Paste செய்ய வேண்டிய

அவசியமில்லை. அவரின் தொடுப்புக்களை கொடுத்தாலே போதுமானது. உங்களின் ஆதங்கம் சரியானதே.

சிவன் பிரம்மாவின் சாபத்தினால் பூவுலகில் பிச்சையெடுக்கும் தமிழ் படங்கள் கூட அக்காலகட்டங்களில் வெளிவந்திருந்தன. தொலைக்காட்சியில் கூட சமீபத்தில் ஒளிபரப்பினார்கள். சிவனுக்கு பார்வதி, கங்கா என இருமனைவிகள். சிவன், விஷ்ணு, பிரம்மா, இவர்களிடையே எப்போதும் குரோதமும் போட்டியும் உண்டு.

Bro. Ashokkumar Wrote
//அங்கு வரும் ஏதாவது ஒரு ஆத்துமா, இந்த விஷயங்களை கேட்டு தேவனை அறிந்துகொண்டு ஆக்கினைக்கு தப்பாதா என்பதே என் அவா.

கண்டிப்பாக பிரதர்
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.(Prov 23:18)

ஒன்று அல்ல பல ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படுவார்கள் என்பது உறுதி. இவற்றுக்காக தேவனிடம் பிரார்த்திப்போம்.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

ஆம் சகோதரரே, திருச்சிக்காரன் மற்றும் சில (அமெரிக்க வாழ்) இந்து நண்பர்ளே இந்த சிந்தனைக்கு காரணம். நான் அந்த தளத்தின் குப்பைகளை இங்கே கொண்டு வரவேண்டுமா என்று யோசிக்கிறேன். வேண்டுமானால் பின்னுட்டங்களை மட்டும் இங்கு போடுகிறேன். கட்டுரைகள் என்ற பெயரில் அவர் உளறுவதை இங்கும் நாம் பதிய வேண்டுமா? திருச்சிக்காரனின் எழுத்துக்களும், எண்ணங்களும் அதற்க்கு தகுதியுள்ளவையா? ஆனால், ஒரு விஷயம், திருச்சிக்காரன் நம் தளத்தை கவனிக்கிறார். நாம் இங்கு எழுதும் விஷயங்கள் அங்கு அவர் தளத்தில் பிரதிபலிக்கிறது. அங்கு வரும் ஏதாவது ஒரு ஆத்துமா, இந்த விஷயங்களை கேட்டு தேவனை அறிந்துகொண்டு ஆக்கினைக்கு தப்பாதா என்பதே என் அவா.

அன்புடன்,

அசோக்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அருமையானதும் எளிமையானதுமான ஒப்பீடு நண்பரே...நல்லதொரு சிந்தைனையைத் தூண்டும் பதிவுக்குப் பாராட்டுகள்; தங்களுடைய இந்த சிந்தனைக்கு திருச்சிக்காரன் போன்றவர்களுடனான விவாதம் காரணமாக இருந்ததா? ஏனெனில் இது என்னுடைய சொந்த அனுபவம்; தாங்கள் தற்போதும் அவர்களோடு வாதிடுவதாக அறிகிறேன்;அப்படியானால் தங்களுடைய விலைமதிப்பில்லாத விவாதக் கருத்துக்களை அவர்களுடைய தொடுப்புகளுடனோ அல்லது மேற்கோளுடனோ இங்கே சேமிக்கலாமே..? நான் அந்த பக்கம் வந்து ரொம்ப நாள் ஆகிறது...ஆண்டவர் பாத்திரத்தின் உட்புறத்தை சுத்தமாக்கு என்றாரே...அதுபோல இங்கேயே எனக்கு வேலை சரியாக இருக்கிறது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

நக்கீரன்

திருவிளையாடல்!!! இது நமது தமிழ் திரையுலகில் மிக பிரபலமான படம். திருவிளையாடர்ப்புராணம் என்ற தமிழ் இலக்கிய நூலில் இருந்து எடுக்கப்பட்ட கதைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட படம். நான் இந்த புராணத்தை குறிப்பிடாமல், திரைப்படத்தை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், இன்றைய மக்கள் பெரும்பாலும் தங்கள் அறிவை வளர்க்க திரைப்படங்களையே நம்பி உள்ளனர். எந்த ஒரு புத்தகத்தையும் ஆய்ந்து படிப்பது இல்லை.இதில் நக்கீரன் என்ற கதாபாத்திரம் ஒரு முக்கிய பாத்திரம். பல இந்துக்கள் தங்களை நக்கீரன் வாரிசாக நினைத்து பெருமை பேசுகின்றனர். முதலில் இந்த கதை சுருக்கத்தை நான் கூறிவிடுகிறேன்.

பாண்டிய மன்னனுக்கு பெண்களின் கூந்தலில் உள்ள நறுமணம் இயற்கையா அல்லது செயற்கையா என்று ஒரு கேள்வி எழுகிறது. இதை அவர் மருத்துவ ஞானமுள்ளவர்களிடம் கேட்காமல் மொழிவளம் நிறைந்த புலவர்களிடம் ஏன் கேட்கிறார் என்று புரியவில்லை. வறுமையில் வாடும் ஒரு தருமி (நம்ம நாகேஷ்) என்ற பக்தனுக்கு, புலவர் உருவத்தில்  வந்த சிவன்( நம்ம சிவாஜி கணேசன்), "பெண்களின் கூந்தல் மனம் இயற்கையே" என்று பாடல் எழுதி தருகிறார். அந்த பாடலின் ஆசிரியர் தருமிதான் என்று பொய்யும் சொல்லும்படி சொல்கிறார் அந்த இறைவன்(???). ஆனால் அவையில், நக்கீரன் அந்த பாடல் தவறென்று கூற, நொந்து போன தருமி அதை புலவர் உருவத்தில் உள்ள சிவனிடம் முறையிட, அவைக்கு வருகிறார் சிவன். வந்திருப்பது இறைவன்(?) என்பதை அறிந்தும் நக்கீரன் தன வாதத்தில் உறுதியாக நிற்க, கோவம் கொண்ட சிவன் நக்கீரனை எரித்துவிடுகிறார். பிறகு அனைவரும் கெஞ்ச, நக்கீரனை சோதிக்கவே அப்படி செய்ததாக கூறி மீண்டும் நக்கீரனை உயிர்ப்பிக்கிறார் சிவன். இதுவே கதை.

இந்த கதையில் இந்துக்களின் ஆன்மீக அறிவை நாம் நன்கு அறியலாம். அவர்கள் ஏன் மெய்யான தேவனை ஏற்றுக்கொள்ளகூடாத மனநிலையை அடைகின்றனர் என்று அறிந்து கொள்ளலாம்.
இறைவன் பொய் சொல்லக் கூடியவன் என்று நம்புகின்றனர் (இந்த கதையில் சிவன் தருமியை பொய் சொல்ல தூண்டுகிறார்). இறைவனைக்காட்டிலும் தனக்கு அதிகம் தெரியும் என்று நம்புகின்றனர். "தான்" என்ற அகம்பாவத்தை, "மனிதன் எல்லாம் அறிந்தவன்" என்ற கர்வத்தை, இந்து மதம் ஊக்குவிக்கிறது. (இந்த கதையில் இறைவனை (?) காட்டிலும் தனக்கு அதிகம் தெரியும் என்று நக்கீரர் நம்பிகிறார், அதை சரி என்றே இந்துமதம் கூறுகிறது). இதனால், மனிதனே முக்கியம், இறைவன் இரண்டாம்பட்சமே என்ற எண்ணம் பலரை நரகத்திர்க்குள்ளாக வழிநடத்துகிறது.

இறைவனை கூட நம்பாதே, நீ உன்னையே நம்பு என்பதே இந்துக்களின் ஆன்மீகமாயிற்று. இதில் சிரிப்பிற்குரிய காரியமென்னவென்றால் நக்கீரன் ஒரு மொழி பண்டிதன், மருத்துவனோ அல்லது கூந்தல் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு தொழிலை உடையவனோ அல்ல. தனக்கு சம்பந்தமில்லாத ஒரு விஷயத்தில், தான் யூகித்ததே சரி என்று எல்லாம் வல்ல இறைவனிடம் (?) சண்டையிடுவதை ஊக்குவிக்கிறது இந்து மத ஆன்மிகம்.

யோபு

யோபுவின் சரித்திரம், பழைய ஏற்பாட்டில் உள்ள மிகப்பழமையான புத்தகம். இதில் யோபு நீதிமானென்று தேவனே சாட்சி கொடுக்கிறார். அனைத்து ஆசிர்வாதகளுடன் வாழ்ந்த அவன், அவனுடைய சோதனை காலத்தில், அனைத்தையும் இழந்து, பிள்ளைகளையும் ஒரே நாளில் இழந்து, நோயுற்று, பெண்டாட்டி மற்றும் நம்பர்களால் குற்றம் சாட்டப்பட்ட போதும். இறைவன் அவனுடன் பேச ஆரம்பித்தவுடன், அவரே நீதிபரர், சர்வமும் அவருடையது, அவன் இதுவரை அனுபவித்த நன்மை அனைத்தும் தேவ இரக்கத்தால் வந்ததென்று அறிந்தான். மேலும் இறைவனால் இன்பத்தை அனுபவித்த அவன், அவருக்காக துன்பத்தையும் அனுபவிக்க தயார் என்று அறிவித்தான். பிறகு தேவன், அவன் இழந்ததை இரண்டத்தனையாக கூட்டிகொடுத்தார்.  அவனை இந்நாள்வரை சாட்சியாக வைத்தார்.

தனக்கு இப்பொழுது நிகழ்வது நன்மையாக தோன்றுகிறதோ தீமையாக தோன்றுகிறதோ, இறைவனுக்கு எது சரி என்று தெரியும், என்று யோபு புத்தகம் சொல்லுகிறது.


முழுமையான சரணடைதலே கிறிஸ்துவ ஆன்மீகமாக உள்ளது.


__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard