அருமை நணபர் ஜாண் அவர்களே, தங்கள் பிரயாசங்களுக்குரிய பலனை ஆண்டவர் நிச்சயமாகவே தருவார்; நம்முடைய எளிமையான முயற்சிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ள எதிர்வல்லமைகள் தற்போது நமக்குள் ஒருவித மனச்சோர்வை உண்டாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை உணர்கிறேன்.
ஆனாலும் கடந்த வாரங்களில் தாங்களும் நண்பர் கோல்வின் அவர்களும் வைராக்கியத்துடன் எழுந்து செய்தவை போற்றுதற்குரியது;அது தமிழ் கிறித்தவ இணையத்தில் முதலீடு செய்யப்பட்ட ஜீவ விதைகளாகும்; அதற்குரிய பலன்கள் வருங்காலங்களில் விளங்கும்.
தாங்கள் தமிழில் தட்டச்சு செய்வது யூனிகோடு (Unicode) முறையில் என்றால் அது சற்று எளிதாக இருக்கும்;அது ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதற்கு ஒப்பானது;அதாவது ஒரு குறிப்பிட்ட தமிழ் வார்த்தையை ஆங்கில எழுத்துக்களால் எழுதுவதைப் போன்றது அல்லவா? அது எளிமையானது;ஆனாலும் விரல்களில் சோர்வு உண்டாகிறது என்பது உண்மையே;மேலும் (முழுநேரமும் தொழிலாக) கணிணி முன்பாக அமர்ந்து பணிசெய்யும் சகோரர்களுக்கே உண்டாகும் மற்ற சரீர பெலவீனங்களும் உண்டு. கர்த்தர் தாமே உங்களை பெலப்படுத்துவாராக..!
நான் ஒரு தொடராக சிருஷ்டிப்பு முதல் கிறிஸ்தவ வாழ்க்கை வரை எழுதலாம் என்று எண்ணியிருந்தேன் ஆனால் இப்படி ஒரு பதிவு இறைவன் தளத்தில் பதியப்பட்டதால் கிறிஸ்தவ வாழ்கையை பற்றி மாத்திரம் சுருக்கமாக எழுதிவிட்டு மற்றவற்றை பிறகு தொடரலாம் என்று எண்ணுகிறேன்.
ஆபிரகாமின் வாழ்க்கையை கூர்ந்து கவனித்தால் கிறிஸ்தவ வாழ்க்கை என்றால் என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ளலாம். ஆபிரகாம் ஒரு கல்தேயன் (Chaldean who are Pagans) அதாவது சந்திரனை வணங்கக்கூடியவன். தேவன் அவனை அழைப்பதற்கு முன்பு அவனுக்கென்று ஒரு தகுதியும் இல்லை. தேவன் தம்முடைய சொந்த தீர்மானத்தின் படி அவனை அழைத்தார்.
பிள்ளைகளை நரபலி கேட்கும் தேவர்களிடம் இருந்த வந்தவனிடம் தான் நரபலி கேட்கும் தேவன் அல்ல மாறாக, உன்னுடைய மீறுதலை சரிக்கட்ட, சொந்த ஜீவனையே கொடுக்கும் தேவன் என்று நிரூபித்தார். பழைய ஏற்பாட்டின் கால வழக்கப்படி உடன்படிக்கை செய்யும் இருவர் ஒரு மிருகத்தையோ அல்லது பறவையையோ இரண்டாக துண்டித்து அதன் நடுவே நடந்து செல்லவேண்டும். இதன் அர்த்தம் என்னவென்றால், முதலில் உடன்படிக்கையை மீறுகிறவன் அந்த பறவையை போல அல்லது மிருகத்தை போல இரண்டாக துண்டிக்கப்பட வேண்டும்.
என் முகத்துக்குமுன் பண்ணின உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றாமல், என் உடன்படிக்கையை மீறின மனுஷரை நான் துண்டங்களின் நடுவாகக் கடந்துபோகும்படி அவர்களை இரண்டாகத் துண்டித்த கன்றுக்குட்டியைப்போல் ஆக்குவேன். எரேமியா 34:18
ஆனால் தேவனும் ஆபிரகாமும் உடன்படிக்கை செய்த போது தேவன் மாத்திரம் அதன் நடுவே கடந்து சென்றார் அப்படியென்றால் ஆபிரகாம் (அல்லது அவனுடைய பிள்ளைகளாகிய நாம்) உடன்படிக்கையை மீறினாலும் கொல்லப்பட்டது தேவனே!
சூரியன் அஸ்தமித்துக் காரிருள் உண்டானபின்பு, இதோ, புகைகிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே கடந்துபோகிற அக்கினிஜுவாலையும் தோன்றின. (ஆதியாகமம் 15:17)
தேவனால் அழைக்கப்பட்ட ஆபிரகாம் தான் எங்கே போகிறோம் என்று கூட தெரியாமல் தன்னை அழைத்த தேவனை மாத்திரம் நம்பி, தன்னை அந்நியனும், பரதேசி என்றும் அறிக்கையிட்டு விட்டு வந்த தேசத்தை நினைக்காமல் தேவன் தருவேன் என்று வாக்குத்தத்தம் பண்ணின தேசத்தை வாஞ்சித்தான்.
விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான். (எபிரெயர் 11:8)
அவனுடைய வாழ்நாளில் அவன் தேவன் அவனுக்கு வாக்குத்தத்தம் பண்ணின சந்ததியை காணவில்லை. அவன் விசுவாசத்தில் நற்சாட்சி பெற்றும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட்தை அடையவில்லை
இவர்களெல்லாரும், வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவைகளை அடையாமல், தூரத்திலே அவைகளைக் கண்டு, நம்பி அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டு, விசுவாசத்தோடே மரித்தார்கள். (எபிரெயர் 11:13)
ஏனென்றால் அந்த சந்ததி ஈசாக்கின் மூலமாக இல்லாமல் கிறிஸ்துவின் மூலம் உருவாக்கப்பட்டது.
ஆபிரகாமுக்கும் அவனுடைய சந்ததிக்கும் வாக்குத்தத்தங்கள் பண்ணப்பட்டன; சந்ததிகளுக்கு என்று அநேகரைக்குறித்துச் சொல்லாமல், உன் சந்ததிக்கு என்று ஒருவனைக்குறித்துச் சொல்லியிருக்கிறார், அந்தச் சந்ததி கிறிஸ்துவே. (கலாத்தியர் 3:16)
ஆகையால் கிறிஸ்தவ வாழ்கை இரட்சிக்கப்பட்டதில் இருந்து மரிக்கும் வரை தேவன் பேரில் உள்ள அன்பினால் வைக்கும் விசுவாசம். அந்த விசுவாசம் என்பது " நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது." அதாவது இல்லாதவைகளை இருக்கிறவைகளை போல அழைக்கிற தேவனை விசுவாசிக்கிறேன் என்பவன் கிழே காண்கிற குணாதிசியங்களை கொண்டு இருப்பான் :
"பரம தேசத்திற்கு போகிற நிச்சயத்தில் ஆபிரகாமை போல லோத்து விடம் எதை வேண்டுமானாலும் நீ எடுத்துகொள் என்று சொல்லுவான்"
"செங்கடல் முன்னாள் இருந்தாலும் , பார்வோன் பின்னே சேனையோடு நின்றாலும் கானானை மறக்கமாட்டான்."
"நெடிய ஏனாக்கிய புத்திரரை பர்ர்த்து நான் ஒரு வெட்டுக்கிளி என்று சொல்லமாட்டன்"
அதிக கல்விகற்ற பவுல் எப்படி கொஞ்சம் கூட வெட்கமோ, கூச்சமோ இல்லமால் தன்னை கிறிஸ்துவின் நிமித்தம் பைத்தியக்காரன் என்று அறிக்கையிட்டு , கல்லால் அடிக்கப்பட்டு, வாளால் அறுப்புன்டாலும் வெட்கப்படவில்லை
மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது (ரோமர் 5:5)
ஏனென்றால் கிறிஸ்தவன் இயேசு கிறிஸ்துவை தொழுதுகொண்டு அவரைப்போல மாறும்படி அழைக்கப்படதினாலே, அவர் எப்படி நம்மோடு இருப்பதை சந்தோசம் என்று எண்ணி சிலுவையை அவமானமாக எண்ணவில்லையோ
அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார். (எபிரெயர் 12:2)
அதே போல இயேசுவின் நாமத்திற்காக அடிக்கபடுவதை பாக்கியமாக எண்ணுபவன் கிறிஸ்தவன்
அப்போஸ்தலரை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக் குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள். அவருடைய நாமத்துக்காகத் தாங்கள் அவமானமடைவதற்குப் பாத்திரராக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாய் ஆலோசனை சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்.. (அப்போஸ்தலர் 5:40-41)
கிறிஸ்தவ விசுவாசம் என்பது தேவன் பேரில் வைக்கும் அன்பு மற்றும் விசுவாசம் அந்த அன்பு , விசுவாசத்தின் காரணமாக பாவத்தை வெறுப்பதும் அவருடைய கட்டளையை கைக்கொள்வதுமே!
கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே(I தீமோத்தேயு 1:5)
அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. (ரோமர் 13:10)
நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம். கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியைசெய்கிற விசுவாசமே உதவும். (கலாத்தியர் 5:4-6)
அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. (ரோமர் 13:10)
கட்டளையை ஒருவன் கைகொள்ள முடியவில்லை என்றால் அவன் சோதித்து அறியவேண்டியது "உண்மையிலே நான் இயேசுவை நேசிகிறேனா?" அப்படி நேசிக்க முடியவில்லை என்றால் உண்மையிலே நேசிக்கிற ஒரு உடன் விசுவாசி அல்லது மேய்ப்பனுடைய உதவியை நாடலாம் அதற்கும் மேலே கதவை அடைத்து விட்டு வேதத்தை திறந்து யோவான் சுவிசேஷத்தையும் , நிருபத்தையும் வாசித்து அழுது தேவ ஆவியானவரிடத்தில் இயேசுவை நான் நேசிக்கும் படியாக என் கண்களை திறங்கப்பா என்று கெஞ்சலாம் ஏனென்றால் "ஆவியின் கனியே அன்பு , தேவ ஆவியானவர் கண்களை , இருதயத்தை திறக்காவிட்டால் பக்கம், பக்கமாக வேதத்தை கரைத்து குடித்து இருந்தாலும் இயேசுவை நேசிக்க முடியாது" கொரிந்தியர் 13 அதிகாரத்தில் உள்ளது போல எல்லாம் வெறுமையாய் இருக்கும்
ஆனால் ஒரு போதும் (NEVER AND EVER) கிரியையில் இருந்து தொடங்கக்கூடாது பெரும்பாலான சமயங்களில் நாம் பதறி "நான் என்னை சரி செய்து கொள்ளவேண்டும்" , 'இதை செய்யவேண்டும் அதை செய்யக்கூடாது" என்று ஒரு பட்டியல் வைத்து கொண்டு பாவ வியாதியின் கிரியையை (Symtoms) நோக்கி கவனத்தை திருப்பி தேவனை நேசியாமை , விசுவாசியாமை போன்ற மூலத்தை (Root) விட்டுவிடக்கூடும். இயேசு அதைதான் பேதுருவிடம் கேட்டார்
இயேசு சீமோன் பேதுருவை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா என்றார். (யோவான் 21:15)
அவனுடைய அன்பை உறுதி செய்தபின்பு அவனுக்கு கட்டளை கொடுக்கிறார்
அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார். (யோவான் 21:17)
இன்னும் நிறைய எழுதலாம் ஆனால் தமிழில் தட்டச்சு செய்வது மிகக்கடினமாக இருப்பதால் இத்துடன் நிறுத்துகிறேன்.
John:- //கீழ்க்கண்ட தலைப்புகளில் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன். //
Sundal:- கிறிஸ்தவ விசுவாசம் என்றால் என்னவென்பதை விவரித்து சொல்வதற்கு பலர் தயங்கும்போது சகோ. ஜான் அவர்கள் கிறிஸ்த்தவ விசுவாசம் என்ற தலைப்பில் கீழ்கண்ட பத்து பாயின்ட்களை பதிவிட்டுள்ளார்கள். நீண்ட நாட்களாக தேடிய கிறிஸ்த்தவ விசுவாசத்துக்கு பதில் கிடைத்து விட்டது.
சகோ. ஜான் wrote in யௌவன ஜனம்
சுருங்க சொல்லின் "பிதா"-"குமாரன்" இருவரும் ஒருவர் மேல் ஒருவர் கொண்ட அன்புக்காக, மனுஷர்களையும் எல்லா ஜீவனையும் படைத்து இத்தனை பாடுகள் துன்பங்களுடே நடத்திக்கொண்டு இருக்கிறார். சிறு குழந்தைக்கு விளையாட்டு சாமான் வாங்கி கொடுப்பது போல, பிதா தன் குமாரன்மேலுள்ள அன்பால் மனிதர்களையும் இந்த உலகத்தையும் படைத்து கொடுத்தார் என்பதுபோல் இந்த கருத்து உள்ளது.நமது தளத்துக்கு வரும் சகோதரர்கள் இன்னும் ஏதேனும் விடுபட்டிருந்தாலோ அல்லது மாற்று கருத்து இருந்தாலோ தங்களுக்கு தெரிந்ததை பதிவிடலாம்
Chillsam:- நண்பர் ஜாண் அவர்கள் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளார்,இவையெல்லாம் தாம் எழுத அல்லது விரைவில் தியானிக்க இருக்கும் தலைப்புகள் என்பதாக;ஆனால் இதனை கவனியாதது போல சிலர் வேண்டுமென்றே கிண்டலும் கேலியுமாக ஒரு கருத்தை தனது தளத்தில் எழுதியிருக்கிறார்கள்; நாம் இதுவரை யாருடைய கருத்தை எடுத்து பயன்படுத்தினாலும் அதற்குரிய தொடுப்பைத் தரும் நல்ல முன்மாதிரியைக் கடைபிடித்து வருகிறோம்;ஆனால் சிலர் கொஞ்சமும் சங்கோஜமில்லாமல் நமது தளத்தின் கருத்துக்களைத் தழுவியும் தொட்டும் தொடாமலும் எழுதுவதுடன் நமது தளத்தின் தொடுப்பைத் தருகிறதில்லை;இதன் மூலம் அவர்கள் கசப்பான பிச்சிலும் பாவக் கட்டிலும் இருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது..!
கண்ணா, உயர உயர பறந்தாலும் ஊர் கோழி பருந்தாகவும் முடியாது; ஓடி ஓடி ஆடினாலும் வான்கோழி மயிலாகவும் முடியாது...தெரியும்'லே..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அற்புதமான பொருள் சார்ந்த தலைப்புகள்,ஜாண்;ஆவலுடன் காத்திருக்கிறோம்; இயன்ற மட்டும் சிறுசிறு குறில், நெடில், துணை எழுத்து பிழைகளைத் திருத்தியிருக்கிறேன்;இயன்றமட்டும் இதில் உதவிசெய்வேன்;தைரியமாகத் தொடருங்கள்.
என்னுடைய அறிவு குறைவுள்ளது,நான் சொல்லும் கருத்துக்கள் சில என்னுடையவை பல வேத அறிஞர்களின் போதனைகள்;வேதத்திற்கு புறம்பாக இருந்தால் தயவுசெய்து சுட்டுமாறு வேண்டுகிறேன்.கீழ்க்கண்ட தலைப்புகளில் தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.
1. தேவன் தம்முடைய குமாரனை நேசித்து அவர்மேல் கொண்டிருந்த அன்பால் எல்லாவற்றையும் உருவாக்கினார்.
2. குமாரன் பிதாவை நேசித்து அவர்மேல் கொண்டிருந்த அன்பால் எல்லாவற்றையும் சகித்து, தன்னுடைய அன்பை கீழ்ப்படிதலின் மூலம் வெளிப்படுத்தினார்.
3. மனிதனை தேவன் உருவாக்கினதின் நோக்கமே அவர்கள் தங்களுடைய விருப்பத்தின்படி தம்முடைய குமாரனை நேசித்து அவருக்கு கீழ்ப்படிந்து இருக்க வேண்டும் என்பதே.
4. சாத்தானுக்கு நன்றாய் தெரியும், தேவன் தோற்கடிக்க முடியாதவர் என்று; ஆனாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாவிட்டாலும், அவனுடைய நோக்கம் அவருடைய படைப்பை பிரித்து, குமாரனுக்கு பிதா கொடுக்க இருந்த கனத்தையும் மகிமையையும் குலைப்பதே.
5. மனிதன் சுயாதீனமாய் படைக்கப்பட்டாலும், அவன் தேவனை எல்லா விஷயங்களிலும் சார்ந்து இருக்கவே (உதாரணம்: இயேசு மாம்சிகத்தில் பிதாவை சார்ந்து இருந்தது போல) அழைக்கப்பட்டவன். ஆனால் அவன் தனக்கு தேவன் கொடுத்த சுயாதீனத்தை பிசாசிடம் இழந்து ஜீவவிருட்சத்தின் கனியை புசிக்காதபடி துரத்தப்பட்டான். தேவனைப் போல ஆக வேண்டும் என்ற அவனுடைய இச்சை அவனுள் பாவத்தை பிறப்பித்தது. பாவம் என்றால் என்ன?
6. மனிதனின் கீழ்ப்படியாமையால் தேவன் அவர்களை பாவத்திற்கு ஒப்புக்கொடுத்தார். இருந்தாலும் குமாரன் மீதும், மனிதன் மீதும் கொண்டிருந்த நேசத்தால் பாவனையாக மீட்பின் வழியையும் உண்டாக்கினார். மனிதன் தேவனிடம் இழந்து போன உறவை தேவன் திரும்பவும் அவனுக்கு பெற்று தர சித்தம் கொண்டார்.
7. மனிதன் பாவத்தால் தேவனின் எதிரியானான், தேவன் அவருடைய சுபாவத்தின் படி மனிதர்களை அழிக்கவேண்டும், ஆனால் அவர் அப்படி செய்யாததினால் தேவன் அநீதியுள்ளவரானாரா?
8. தேவனுடைய கிருபை என்றால் என்ன? ஒரேபேறான குமாரனுடைய ரத்தத்தால் தேவனிடத்தில் நாம் இழந்து போன உறவு எப்படி சரி செய்யப்பட்டது?
9. தேவனுக்கு எதிரியாய் இருந்த மனிதன் எப்படி தேவனிடத்தில் ஒப்புரவாகமுடியும்?
10. ஒப்புரவான மனிதன் எப்படி வாழ வேண்டும்?
-- Edited by John on Friday 4th of March 2011 09:48:17 PM