Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: " கோவை வெறியன்" தலைதெறிக்க திடீர் ஓட்டம்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: " கோவை வெறியன்" தலைதெறிக்க திடீர் ஓட்டம்..!
Permalink  
 


எச்சில் இலை காற்றில் பறந்து சில சமயம் கோபுர உச்சிவரைக்கும் பறக்குமாம், ஆனாலும் கோபுரம்,கோபுரம்தான்,எச்சில் இலை,எச்சில் இலைதான், என்பார்களே அதுபோல கோவை வெறியன் எனும் (மேசியாவின்) எதிரியும் அவனுடைய கூட்டாளிகளும் நாம் எவ்வளவு இணக்கமாகவும் பண்பாகவும் நிதானமாகவும் எழுதினாலும் நம்மை மூர்க்கத்தனமாக எதிர்ப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர்;ஏனெனில் அவர்கள் வளர்ந்த விதம் அப்படியாக இருக்கும்; இந்நிலையில் (மேசியாவின்) எதிரிகளுக்குள்ளேயே முட்டலும் மோதலும் வெடித்தது; பெரியவர் அன்பு அவர்களுடன் மோதினார்கள்; ஒருகட்டத்தில் வாயை விற்று வேறு எதையோ புண்ணாக்கிக்கொள்ளுவதைப் போல அலி 2 ஒரு வெற்று வாய்ச் சவடால் விட்டான்,தான் தன்னுடைய தளத்தையே மூடிவிடுவதாக; நாமும் ஒரு சனியன் ஒழியப்போகிறது என்று மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்தோம்; ஆனால் அடித்தானே ஒரு பல்டி தனியாக அடித்தாலும் பரவாயில்லை ரெண்டு நாய்களும் போட்டி போட்டுக்கொண்டு பல்டியடிக்கிறான்கள், மானத்தை விற்றுப்பிழைக்கும் இந்த நாய்கள் தாங்கள் தங்களுடைய சவால்படியே தற்போது தளத்தை மூடிவிட்டார்களாம்; எப்படியெனில் சிலருக்கு மட்டும் அந்த தளம் மூடியிருக்குமாம், ஆனாலும் என்னைப் போன்றவர்களுக்கே இந்த தளம் தெரிகின்றால் எல்லோருக்கும்தானே தெரியும்..?

இது சம்பந்தமான விவரங்களையறிய தொடுப்பைத் தொடரவும்.

http://chillsam.activeboard.com/t43857255/topic-43857255/

இந்த மாயாவிகளின் தளத்தை தெரியாமல் செய்வது எப்படி என்று இந்த கள்ளப் பிறவிகள் கொஞ்சம் சொல்லிக்கொடுத்தால் நலமாயிருக்கும்; இதையெல்லாம் விட்டுவிட்டு கண்ணை மூடிக்கோ தளம் தெரியாது, மீண்டும் கண்ணைத் திறந்து பார்த்தால் தளம் தெரியும் என்பது போல கண்ணாமூச்சி ஆடுவார்களானால் அது கொஞ்சமும் நேர்மையல்ல..!

 
சோல்:

//வேதத்தை ஆராய்ந்து தேவனால் எல்லாரையும் இரட்சிப்பது என்பது இயலாத காரியம் என்று ஒரு மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்ததற்கு பாராட்டுக்கள். இனி உமக்கும் இத்தளத்துக்கும் யாதொரு சம்பந்தமுமில்லை. உம்மைப் பொருத்தவரை இத்தளம் மூடியாகிவிட்டது.//

எந்த விதமான துருபதேசக்காரர்களுக்கும் இந்த தளம் மூடியதாக தான் இருக்கும் சகோதரரே!! கண்கள் கட்டி போட ஒருத்தன் இருக்கும் போது ஆழமானதை புரிந்துக்கொள்ள கஷ்ட்டம் தான்!! தேவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று சாத்தானை தவிர வேறு ஒருவனும் போதிக்க முடியாது!! அதை தான் அவன் காலம் காலமாக செய்துக்கொண்டிருக்கிறான்!!

கிறிஸ்து எல்லாருக்காகவும் தன்னை மீட்கும் பொருளாக ஒப்புக்கொடுத்தார் என்று வசனம் சொல்லியும், தேவனின் கிருபையினால் அவர் எல்லாருக்காகவும் மரணத்தை ருசி பார்தார் என்று வசனம் சொன்னாலும் பிசாசின் போதனையை பொறுத்தவரையில் தேவனாலும் சரி கிறிஸ்துவினாலும் சரி, எல்லாரையும் இரட்சிக்க முடியாது!! கிறிஸ்து இரத்தம் சிந்தியது வீன் தான்!! அடேங்கப்பா, என்ன கண்டுபிடிப்பு!!

விடுங்க பிரதர், இவங்கெல்லாம் இப்படி தான் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று தேவன் நியமித்திருக்கிறார், என்ன செய்ய முடியும்!!

2 தெசலோனிக்கர் 2. 12. அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தைத் தேவன் அவர்களுக்கு அனுப்புவார்.

தேவன் அனுப்பிய வஞ்சகத்தில் இருப்போருக்கு தேவனால் ஒன்றும் செய்ய முடியாது என்று நம்பினால் என்ன செய்ய முடியும்!!

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இது இந்த திரியின் விளைவாக "கோவை வெறியன்" மனதால் பாதிக்கப்பட்டு கொட்டியிருப்பது;

பயந்து ஓடிப்போவதற்கு நான் ஒன்றும் சில்சாமின் தளத்தில் எழுதவில்லை, இந்த தளத்தில் எழுதுவது எழுதாமல் இருப்பது என் சுதந்திரம் என் விருப்பம்!! யாருடன் தர்க்கம் செய்யவேண்டும், யாருடன் செய்யக்கூடாது என்பதை முடிவு செய்பவன் நான்!! சில்சாம் என்கிற கள்ள மார்க்கத்தான் சொல்லுவது போல் பயந்து அல்ல மாறாக அங்கே இருக்கும் ஒரு கலப்பட கூட்டனியிடமிருந்து விலகுவதை வேதத்தின்படி சரி என்று முடிவு செய்து தான் அந்த பிசாசின் சந்ததியாருடன் விலகியிருக்க விரும்புகிறேன்!! சில்சாம் இந்த தளத்தில் பதிந்து பெட்டைத்தனமாகவும் பேடித்தனமாகவும் தன் பதிவுகளை நீக்கிவிட்டு ஓடியதன் பெயர் தான் ஓடுகாலித்தனம் என்று அந்த பிசாசின் தூதனும் அவனின் சகாக்களும் அறிய வேண்டும்!!

இந்த ஓநாய்களை விட்டு விலகும்படி எனக்கு வெளிப்பட்ட வசனங்கள்:

அப்போஸ்தலர் 19:8. பின்பு பவுல் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டுவந்தான். 9. சிலர் கடினப்பட்டு அவிசுவாசிகளாகிக் கூட்டத்திற்கு முன்பாக இந்த மார்க்கத்தை நிந்தித்தபோது, அவன் அவர்களை விட்டு விலகி, சீஷரை அவர்களிலிருந்து பிரித்துக்கொண்டு, திறன்னு என்னும் ஒருவனுடைய வித்தியாசாலையிலே அநுதினமும் சம்பாஷித்துக்கொண்டுவந்தான்

Acts 19: 8And he went into the synagogue and for three months spoke boldly, persuading and arguing and pleading about the kingdom of God. 9But when some became more and more stubborn (hardened and unbelieving), discrediting and reviling and speaking evil of the Way [of the Lord] before the congregation, he separated himself from them, taking the disciples with him, and went on holding daily discussions in the lecture room of Tyrannus from about ten o'clock till three.

மேலும் இந்த கூட்டனி சார்ந்திருக்கும் விசுவாசங்கள் என்னை இவர்களை விட்டு விலக செய்தது:

I தெசலோனிக்கேயர் 4:3 நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாகவேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது. அந்தப்படி, நீங்கள் வேசிமார்க்கத்துக்கு விலகியிருந்து,

வேசிமார்க்கத்தில் இருந்துக்கொண்டு வாய் சவடால் விட்டு கொண்டிருக்கும் கொல்வினிடமிருந்து விலகுவதற்கு தேவன் தாமே இந்த வசனத்தை தந்தார்!!

I தீமோத்தேயு 4:7 சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.
I தீமோத்தேயு 5:15 ஏனெனில் இதற்குமுன்னே சிலர் சாத்தானைப் பின்பற்றி விலகிப்போனார்கள்.
II தீமோத்தேயு 2:16 சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;
II தீமோத்தேயு 2:18 அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடுகிறார்கள்.

தினகரன் பரலோகத்தில் கிறிஸ்துவிர்கு ஆலோசனை சொல்லிக்கொண்டிருக்கிறார் என்கிற விசுவாசத்தில் இருக்கும் சில்சாமிடம் தர்க்கம் செய்யாமல் விலகுவது தான் எனக்கு சரி என்ரு பட்டது!!

1 தீமோ 5:13. அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.

இது சில்சாம் எனும் கள்ள போதகனுக்கும், சாத்தானின் கையாளுமாக இருப்பவனுக்கும் அதிகமாக பொருந்துகிற ஒரு வசனம்!!

பெட்டைத்தனமாகவும், பேடித்தனமாகவும் இந்த தளத்திலிருந்து பதிவுகளை நீக்கி ஓடி போன சில்சாமிற்கு என்னை விமர்சிக்கும் தகுதி கிடையாது!! வேசி சபையில் விக்கிரகங்களுடன் இருக்கும் கொல்வின் வெளிநாட்டிலிருந்து வரும் பிச்சயான காணிக்கையில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு சபையில் இருப்பதை மறக்க வேண்டாம்!!

தேவன் எனக்கு தேவையான வேலையை தந்திருக்கிறார்!! நானும் என் வீட்டாரும், என் குடும்பத்தாரும் அதிலிருந்து சாப்பிட்டுகொள்கிறோம்!! காணிக்கை என்கிற பெயரில் போதகன் என்று சொல்லிக்கொண்டு வீடு வீடாக திரிபவன் அல்ல நான்!! அப்படி பட்ட பிச்சையை வாங்கி பிழைப்பு நடத்துபவரிடம் கொல்வின் கொக்கரிப்பு இருக்கட்டும்!! என்னை குறித்தோ என் குடும்பத்தை குறித்தோ நான் வெளிநாட்டவரிடம் எந்த ஒரு தொடர்பும் இல்லாதவனாக இருந்தும் பிசாசின் ஏவுதளில் இப்படியாக எழுதியிருக்கும் கொல்வின், உனக்கு இதுவே இறுதியான எச்சரிக்கை!! தசமபாகம், காணிக்கை, வெளிநாட்டு பணம் இதற்காக ஒன்றும் நான் வரவில்லை, என் சொந்த பணத்தில், என் நிற்றி வியர்வை நிலத்தில் சிந்தி உழைக்கும் வருமானத்தில் பிழைப்பு நடத்துகிறேன்!! என்னை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் முன் என்னை அறிந்துக்கொண்டு எழுதுவது உமக்கு நலம்!!


விக்கிரக சபையில் இருப்பவனே தேவனுக்கு பயந்து யாரையும் விமர்சனம் செய்!!


பலரையும் கடித்து பட்சிக்கும் கொடிய விஷமுள்ள பாம்புகளை பாம்பாட்டிகளை வைத்து பிடித்து வந்து அவைகளைக் கோபப்படுத்தி அதன் வாயிலிருந்து விஷத்தைக் கொட்ட வைத்து அதைக் கொண்டே பாம்புகடிக்கான மருந்தை தயாரிப்பார்களாம்;அதுபோலவே நாமும் இவர்களை  இயன்றமட்டும் கோபப்படுத்தும் திருப்பணியை செய்துவருகிறோம்;

இவர்களுடன் நட்புபாராட்டுவது பெரிய விஷயமே இல்லை;நாளைக்கே ஏதாவது புனைப்பெயரில் இவர்கள் தளத்தில் நுழைந்து இவர்களைப் பாராட்டினால் போதுமானது;என்ன ஒரே ஒரு நிபந்தனை எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது;அப்போது தானே அப்பாவிகளை வளைத்துப் போடமுடியும்..!

இவர்களெல்லாம் நொம்ப நேர்மையாளர்களைப் போல நெற்றி வேர்வை நிலத்தில் விழ பாடுபட்டு சம்பாதிப்பதெல்லாம் பொய்யிலும் கடைந்தெடுத்த பொய்யாகும்;ஏனெனில் இவர்களின் தலைவரான இரஸல் தான் முதன்முதலில் 19ம் நூற்றாண்டிலேயே ஆசீர்வாத கோதுமை விற்றவர்;அந்த இரத்தம் இவருடைய உடம்பிலும் ஓடிக்கொண்டிருக்கிறது; பிச்சையெடுக்கிறதுக்குக் கூட சாமர்த்தியம் வேண்டுமே;அந்த சாமர்த்தியம் அவங்க அளவுக்கு நமக்கு இல்லையே? தடிதடியான புத்தகங்களை அச்சடித்து உலகமெங்கும் விநியோகிக்கிறார்களே,அவையெல்லாம் மந்திரம் போட்டா அச்சிடுகிறார்கள்? அதற்கெல்லாம் எங்கிருந்து பணம் வருகிறது? பத்து பேர் கூடுமிடத்தில் ஆகக்கூடிய நியாயமான செலவுகளை யார் பொறுப்பேற்கிறார்? காணிக்கை கேட்பதில்லையே தவிர கொடுத்தால் வாங்கிக் கொள்ளுவார்கள்; கேட்டு வாங்குவது தவறானால் கொடுத்தால் வாங்குவதும் தவறுதானே? எடுக்கறது பிச்சை,இதுல கொஞ்சமும் வெட்கமில்லாமல் நீ கொடுக்க வேண்டாம் நானே எடுத்துக்கொள்ளுவேன் என்பது கேடுகெட்ட கௌரவ பிச்சையாம்..!

(தொடரும்...)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

//உங்களைப் போன்ற கி.....களுக்கு பல தடவை சொல்லிவிட்டேன்.//

என்ன கொல்வின்,நீங்களுமா..? நன்றாக இருக்கிறது உங்கள் குறும்பு..! ஆமாம்,மேற்கண்ட "கி.....களுக்கு" என்பதை எப்படி புரிந்துகொள்வது "கிறித்தவர்களுக்கு" என்பதாகவா அல்லது "கிறுக்கன்களுக்கு" என்பதாகவா? எப்படியோ நல்லாருக்கு'ங்க‌..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

\\நான் ரஸ்ஸலை போன்று கருத்து எழுதினால் நான் ரஸ்ஸலின் சீஷனாம், இவர்கள் வஸந்த்குமாரின் எழுத்தை காப்பி பேஸ்ட் செய்வது இவர்களுக்கு உண்டான தைரியமா!! நாம் என்ன ரஸ்ஸலை விவாதிக்கவா இந்த விவாத மேடையை அமைத்திருக்கிறோம்!! என்னமோ இவர்கள் சொல்லிவருவதெல்லாம் இவர்களுக்கு ஏதாவது ஒரு மனிதனிடம் இருந்து கிடைக்காமல் வானத்திலிருந்து வந்தது என்கிற நினைப்பு!!//


உங்களைப் போன்ற கி.....களுக்கு பல தடவை சொல்லிவிட்டேன். Referece & Citation உடன் எழுதுங்கள் என்று. ரசலின் எழுத்துக்களை பதிப்பதில் ந்தத் தவறும் இல்லை. தலைவனின் பெயர் பதிக்காமல் உங்கள் சொந்த ஆக்கம் போல் பதிப்பது கண்டிக்கத்தக்கது. தை விட கேவலமானது அதை ஏற்றுக் கொள்ள மறுப்பது.

உங்களுக்கு சகோ.வசந்தகுமாரில் என்ன இருக்கிறதோ எனக்குத் தெரியாது. அவரும் எந்த விடயத்தையும் தான் எங்கிருந்திருந்து பெற்றேன் என தெளிவாக எழுகிறார். உங்கள் தலைவரின் நூல்களையும் பக்க இலக்கங்களுடன் மேற்கோள் காட்டியிருக்கிறார். நூலகவிதிகளை எவ்வளவு தூரம் கடைபிடித்து எழுத வேண்டுமா எத்தனை சிறப்பாக செய்துள்ளார். ஆசிரியர் மேற்கோள்  காட்டிய கருத்துக்கள் அவருடையதன்று ஏற்கனவே
இறையியலாளர்களால் ஆராய்ச்சி செய்து  முடிக்கப்பட்ட ஒன்றை மேற்கோள் காட்டியுள்ளார். இதனை எத்தனை தடவை எழுதினாலும் உமது அறிவுக்கு புரிவதில்லை. பல்கலைக்கழகத்தில் எப்படிதான் Theses முடித்தீரோ தெரியாது.


ஆசிரியரின் கட்டுரைகளை Copy & paste செய்யவில்லை. அவரின் நூல்களில் இருந்துதான் Type செய்து இங்கு பதிக்கிறேன். உங்களுக்கு
Copy & paste இற்கும் Type செய்வதற்குமான வித்தியாசம் தெரிவதில்லை.

மற்றைய இறையியலாளர்களின் கருத்துக்களையும் ஆதாரத்துடன் பதித்துள்ளேன். பாருங்கள். ஏதோ நான் இந்த ஆசிரியரின் கருத்துக்களி்ல் தொங்கிக் கொண்டிருப்பதாக நினைப்பு. உங்களை அதிகம் பாதித்த ஆசிரியர் என்ற ரீதியில் வருங்காலத்தில் அநேக ஆக்கங்களை பதிப்பேன். சிரியரின் மதிப்பை உணரச் செய்தி உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்


அடுத்து இயேசுக்கிறிஸ்து மிக்காவேல் தூதராக இருந்தாரா என பார்த்து விடுவோம்.

சகோ. சில்சாம் உங்கள் தகவல்களுக்கு மிக்க நன்றி. இவர் மட்டும் அல்ல இவரைப் போன்ற இன்னும் சிலரும் உள்ளனர். தங்கள் பொய்கள் மெய்பிக்கப்பட்டு விட்டதை நினைத்து கவலை அவர்களுக்கு வெளிநாட்டிலிருந்துதான் காசு கொட்டுகிறதே!. காணிக்கை ஏன் வாங்க வேண்டும். இதை விட்டாலும் வேறு பிழைப்பு ஏது? ஆத்துமாக்களை வஞ்சித்துப் போடும் இத்தகையவர்களின் முகத்திரைகளை கிழித்தமைக்காக மிக்க நன்றி உங்கள் பயணம் தொடரட்டும். கர்த்தரின் கரம் உங்களேடிருக்கும்.  


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

"கோவை வெறியன்" நம்முடனான வாதத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்;அதுகுறித்த அவர்களது அறிவிப்பு...

இயேசு "கிறித்துவை" தெய்வமாக தொழுவோர் தான் கிறிஸ்தவர்கள் என்கிற ஒரு புதிய மார்க்கத்தை உருவாக்கியிருக்கும் சில்சாம் மற்றும் அவரின் சீஷர்களுடன் இனியும் கிறிஸ்துவத்தை குறித்து விவாதிக்க மனமில்லை!! வேத வசனங்களை விவாதிப்போமென்றால் அவர்களுக்கு ரஸ்ஸலை விவாதிக்க தோன்றுகிறது!! என் கருத்து ரஸ்ஸல் கருத்துடன் ஒத்து போவதால் நான் ரஸ்ஸலை பின்பற்றுபவனாக இவர்கள் அவர்தூரு(..?) பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்!! வசனத்தை சொன்னால் இவர்கள் ரஸ்ஸலை சொல்லுகிறார்கள்!! ஆக விவாதம் விவாதமாக இல்லாமல் ஒருவர் மேல் ஒருவர் சேற்றை பூசி விடுவது போல் இருக்கிறது!!


பிதாவை கணப்படுத்த முடியாதவர்கள், கிறிஸ்துவிற்கே எல்லா துதியும் கணமும் மகிமையும் என்று இவர்கள் ஜெபிப்பதினால் இவர்கள் ஒரு புதிய மார்க்கத்திற்கு அஸ்திபாரம் போட்டிருப்பது தெரிகிறது!! இவர்களுடன் பேசுவது என் தேவனின் நாமத்தையும் வேதம் சொல்லுகிறப்படி பிதா அல்ல மாறாக குமாரனான கிறிஸ்து இயேசுவின் நாமம் தூஷிக்க ப்படுவதால் இவர்களுடன் விவாதத்தை நிறுத்திக்கொள்கிறேன்!! இவர்களிடம் விலகியிருந்து நான் எந்த நோக்கத்திற்காக இந்த தளத்தை ஆரம்பித்தேனோ அதனை தொடர விரும்புகிறேன்!! எப்படி வேறு மதத்தாரோடு அல்லது வேற்று மார்க்கத்தாரோடு இந்த தளத்தில் விவாதம் இது வரை செய்ததில்லையோ, இனியும் சில்சாம் தலைமையிலான இயேசுசாமியை தெய்வமாக தொழும் இந்த புதிய வேற்று மார்க்கத்தாருடன் விவாதிக்க இனியும் மனமில்லை!!

நான் ரஸ்ஸலை போன்று கருத்து எழுதினால் நான் ரஸ்ஸலின் சீஷனாம், இவர்கள் வஸந்த்குமாரின் எழுத்தை காப்பி பேஸ்ட் செய்வது இவர்களுக்கு உண்டான தைரியமா!! நாம் என்ன ரஸ்ஸலை விவாதிக்கவா இந்த விவாத மேடையை அமைத்திருக்கிறோம்!! என்னமோ இவர்கள் சொல்லிவருவதெல்லாம் இவர்களுக்கு ஏதாவது ஒரு மனிதனிடம் இருந்து கிடைக்காமல் வானத்திலிருந்து வந்தது என்கிற நினைப்பு!!

இவர்கள் இவர்களின் தூஷனங்கலை தொடரட்டும், ஏனென்றால் கள்ள தீர்க்கதரிசிகளும், கள்ள கிறிஸ்துக்களும் தோன்றும் காலம் இது!! மனுஷக்குமாரன் வரும் போது விசுவாசத்தை காண்பாரோ என்கிற வார்த்தைகள் நிறைவேறும்படியாக இவர்கள் தொடர்ந்து இவர்களின் விசுவாசத்தால் உலகத்தை நிறப்பட்டும்!!

  • "பரிசுத்தமானதை நாய்களுக்குக் கொடாதேயுங்கள்; உங்கள் முத்துகளைப் பன்றிகள்முன் போடாதேயுங்கள்; போட்டால் தங்கள் கால்களால் அவைகளை மிதித்து, திரும்பிக்கொண்டு உங்களைப் பீறிப்போடும்."(மத்தேயு 7:6)

இயேசு கிறிஸ்து சொன்ன இந்த வசனம் எத்துனை சத்தியமானது என்பது இந்த புதிய மார்க்கத்தார் நிரூபித்திருக்கிறார்கள்!!

  • "மூடனை உரலில் போட்டு உலக்கையினால் நொய்யோடே நொய்யாகக் குத்தினாலும், அவனுடைய மூடத்தனம் அவனை விட்டு நீங்காது."(நீதிமொழிகள் 27:22)
இந்த வசனத்தின்படியும் அவர்களின் மூடத்தனம் தெரிந்துவிட்டதால் இனியும் அவர்களை நொய்யாக குத்தினாலும் அவர்களின் மூடத்தனம் நீங்காது என்பதை புரிந்துக்கொண்டு நியாயத்தீர்ப்பின் நாட்களில் அவர்களுக்கு எது தெரிவிக்க பாடு படுகிறேனோ அதை கற்று கொள்வார்கள் தேவ அன்பு என்னவென்று அறியாத அந்த கூட்டத்தார்!! நன்றி!! (யாருக்கோ.?)

"கோவை வெறியன்" இப்படியாக அறிவித்தாலும் நமக்கு அதுபோன்ற விலகியோடும் வழக்கம் இல்லாததால் கர்த்தருடைய பெலத்துடன் தொடர்ந்து போராடுவோம்;"எல்லோரையும் சொல்லுமாம்,பல்லி தான் சென்று கழுநீர் பானையில் விழுமாம்" என்பார்கள், சொல்வழக்காக; அதுபோலவே என்னைப் போன்றவர்களை ஓடுகாலி என்று தூஷித்தவர்கள், நண்பர் ஜாண் போன்ற முகம் தெரியாத புதியவர்களையெல்லாம் கொஞ்சமும் நாகரீகமில்லாமல் மிரட்டியவர்கள் தற்போது அவர்களுடைய ஆப்த போதகர் இரஸ்ஸல் அவர்களுடைய வண்டவாளங்களை எடுத்து வைக்கத் துவங்கியதும் தடுமாறி "அப்பீட்டு" விட்டு ஓடப் பார்க்கிறார்.

அவ்வளவு சீக்கிரம் விட்டுட மாட்டோமே; எவ்வளவு சவால்கள்... எவ்வளவு அவதூறுகள்... அத்தனை லேசில் மறந்துபோகுமா என்ன‌..? உங்க ஆட்கள் என்ன எழுதினாலும் சரி,அதனை வேத வெளிச்சத்தில் வைத்து தொடர்ந்து போஸ்ட்மார்ட்டம் செய்வோம்;அதன் மூலம் உங்கள் கூட்டத்தின் சூழ்ச்சிகள் அம்பலமாகும்;அநேகர் எச்சரிக்கப்பட்டு தங்கள் ஆத்துமாக்களைக் காத்துக் கொள்ளுவார்கள்;இதற்கொரு அடையாளமாக உங்கள் தளத்தை பார்வையிடுவோரின் எண்ணிக்கையானது வேகமாக உயர்ந்து வருகிறதை கவனியுங்கள்;இதினிமித்தமாக நீங்கள் மகிழ்ந்துவிடவேண்டாம்;அநேகருக்கு உங்களைக் குறித்து எச்சரித்து உங்களை நன்றாகப் படித்துக் கொள்ளச்சொல்லி நானே அனுப்பியிருக்கிறேன்;இதன் விளைவு என்ன தெரியுமா? நீங்கள் கோவையில் மட்டுமல்ல, தமிழ் கூறும் நல்லுலகில் எங்குமே தலையெடுக்க முடியாது;எல்லோரும் உங்களைப் பரிசோதித்து அறிந்திருப்பதால் நீங்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள்;சில்சாம் எனும் ஒரு சிற்றெறும்பு உங்கள் காதுகளுக்குள் புகுந்து கடந்த ரெண்டு வருடங்களாக செய்துவரும் தொல்லையைத் தாங்காமலும் தூங்காமலும் தவிப்பதைப் பார்த்து சிற்றெறும்புகளின் தேவன் மகிழ்ந்து கொண்டிருக்கிறார், ஐயா..!

உங்களது மரண வாக்குமூலத்தை அதாவது இந்த இறுதி அறிக்கையையாவது வரிக்குவரி விமர்சிக்க முய்ற்சிக்கிறேன்...தயவுசெய்து உங்கள் விரதத்தை விட்டுவிட்டு மீண்டும் களத்துக்கு வந்துவிடாதீர்கள்..!

// இயேசு "கிறித்துவை" தெய்வமாக தொழுவோர் தான் கிறிஸ்தவர்கள் என்கிற ஒரு புதிய மார்க்கத்தை உருவாக்கியிருக்கும் சில்சாம் மற்றும் அவரின் சீஷர்களுடன் இனியும் கிறிஸ்துவத்தை குறித்து விவாதிக்க மனமில்லை!! //

கர்த்தருடைய நாமமான இயேசுகிறிஸ்து எனும் நாமத்தில் உள்ள கிறிஸ்து எனும் வார்த்தையில் "ஸ்" எனும் எழுத்தைத் தவிர்ப்பதற்கான காரணத்தை ஏற்கனவே விளக்கியும் அதனைப் புறக்கணித்துவிட்டு அதனை ஒரு குற்றமாக பாவித்து அப்படியானால் பாஸ்டர் என்பதற்கு "பாடர்" என்று குறிப்பிடுவாயா என்று மடத்தனமாக மடக்கினார்,கோவை வெறியன்;ஏன் "ஸ்" பதிலாக "த்" எனும் எழுத்தைப் போடலாமே? தற்போது மீண்டும் கிறித்து என்று நான் எழுதியதையே ஹைலைட் பண்ணியிருக்கிறார்;நான் அவர் கூறுவது போல தமிழ் புலவன் அல்ல,ஆனால் தமிழை நேசிப்பவன்;அதன் காரணமாக தமிழ் கிறித்தவ கீர்த்தனைகளில் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில் தனி விருப்பத்தின் பேரில் அதுபோல குறிப்பிடுகிறேன்;இதில் எந்தவிதமான குழப்பமோ வைராக்கியமோ எனக்குக் கிடையாது; உதாரணத்துக்கு "ஸ்தோத்திரம் செய்வேனே" பாடல் "தோத்திரம் செய்வேனே" என்று பாடப்படுகிறது;இதில் என்ன தவறு? நீங்கள் பாடாமல் பாடாவதியாகிப் போகும் நிர்மூடரும் குருடருமாக இருப்பதால் ஆதிவிசுவாசத்திலிருந்தும் அனுபவத்திலிருந்தும் பாடப்படும் பாடல்களை வெறுக்கிறீர்கள்;நாங்கள் பாடல்கள் மூலமே விசுவாசத்தை வளர்த்தோம்;மரித்தவர்களும் மௌனத்தில் இறங்குகிறவர்களும் கர்த்தராகிய இயேசுகிறித்துவை துதிக்கமாட்டார்கள் என்பது உண்மை தானே..?

பாஸ்டர் என்பதோ கிறிஸ்து என்பதோ தமிழ் வார்த்தையல்ல;இரண்டுமே வேற்றுமொழி வார்த்தை தானே;மேலும் கிறிஸ்து என்பது கிரேக்க மொழியில் வழங்கப்பட்டதாகும்;"மேசியா" எனும் எபிரெய மொழி வார்த்தைக்கு கிரேக்க மொழியில் கிறிஸ்து என்று வழங்கப்பட்டது.
  • "அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்."(யோவான்.1:41)
மேற்கண்ட வசனத்தின்படி நாம் அறிவது யாதெனில் மொழியின் அடிப்படையில் வேதம் நமக்குக் கொடுக்கப்படவில்லை;அதன் பொருள் என்ன, அது நம்முடைய உணர்வில் ஏற்படுத்தும் பாதிப்பு அல்லது மாற்றம் என்பதே முக்கியம் ஆகும்;ஆனால் வேதத்தைத் திரித்து புரட்டும் கள்ளப் போதகர்களின் வழிவந்தோரே சர்வ வல்லவரை நாமகரணங்களுக்குள்ளும் மொழிக்குள்ளும் அடக்கியாள நினைக்கின்றனர்;இவர்களுடைய மிரட்டல்களுக்கு கட்டுப்படவேண்டிய அவசியம் அவருக்கு இல்லை;சர்வ வல்லவரின் தெய்வத்துவ ஐக்கியத்திற்குள் (Triune or Trinity in Unity) துணிகரமாக நுழைந்து, ஹலோ மிஸ்டர் பிதா,நீங்கள் மட்டுமே பிதா,இப்ப என்ன பண்றீங்கன்னா உங்க கிட்ட இருக்கிற டாப் மோஸ்ட் தூதன் மூலம் உலகத்தையும் மனுஷனையும் உண்டாக்கறீங்க,நீங்க உண்டாக்கின மனுஷன் பாவம் செஞ்சுடறானா,அத சரி பண்றதுக்காக அந்த தூதனை  மனுஷனாக்கி உலகத்துக்குள் அனுப்பி பலிகொடுக்கறீங்க,ஓகேவா..."என்று சர்வ வல்லவருக்கே கிளாஸ் எடுக்கிறார்கள்;அந்த அக்கிரமத்துக்கு துணையாகவே அவருடைய விசேஷித்த நாமத்தை வைத்து குழப்பம் விளைவிக்கிறார்கள்.

குறிப்பிட்ட நாமத்தைச் சொல்லி கூப்பிடுவது என்பது மனிதனுக்கு தான் அவசியமே ஒழிய சர்வவல்லவருக்கு அல்ல என்பதை சாதாரண மக்கள் அறியவேண்டும்;ஆனாலும் நாம் யாரை நோக்கி கூப்பிடுகிறோமோ அவரைக் குறித்த அறிவு நமக்கு இருந்தாக வேண்டும்;அப்போது தான் அர்த்தத்தையும் நோக்கத்தையும் உணர்ந்து ஜெபிக்கமுடியும்.

உதாரணத்துக்கு கணக்கு பாடத்தில் ஒரு குறிப்பிட்ட வரைபடத்தை வரையும் மாணவன் ஒரு வேற்று காகிதத்தில் முதன்முதலாக ஒரு புள்ளி வைத்து அதிலிருந்து குறிப்பிட்ட அளவை நிர்ணயித்து மற்றொரு புள்ளி வைத்து இரு புள்ளிகளையும் இணைக்கும் ஒரு கோட்டுத் துண்டை வரைகிறான்;அந்த கோட்டின் ஒரு முனைக்கு "அ" என்றும் மற்றொரு  "ஆ" என்றும் பேரிடுகிறான்;அதை இன்னும் வளைத்து நெளித்து பல்வேறு உபகரணங்களின் உதவியுடன் அழகான ஒரு வரைபடத்தை வரைந்து முடிக்கிறான்;ஒவ்வொரு மூலைக்கும் ஒவ்வொரு ஒரு அடையாளக் குறியும் ஒரு பெயரும் அந்த வரைபடத்துக்கு பொதுவான பெயரும் வைத்தால் அது எல்லா மொழியிலும் ஒன்று போலவே இருக்குமா என்ன?

சரி இந்த மாணவனே இவ்வுலகைப் படைத்த இறைவன் என்று வைத்துக்கொள்ளுவோம்;அந்த வெற்று காகிதத்தைப் போலவே இந்த உலகம் இருந்தது;அழகான வரைபடத்தை வரைந்த மாணவன் யாராக இருக்கவேண்டும் என்று வரைபடம் சொல்லமுடியுமா அல்லது அந்த வரைபடத்தின் ஏதோ ஒரு மூலைக்கு மாணவன் தன் பெயரைக் கொடுக்க முடியுமா? ஆனால் அனைத்தையும் வரைந்து முடித்தபிறகு அந்த படமானது தன்னால் வரையப்பட்டது என்பதை அந்த மாணவன் நிச்சயமாக எழுதுவான்;ஒரு வரைபடமானது எப்படி சிந்தை மற்றும் செயல் இணைந்த ஒரே மாணவனால் உருவாக்கப்படுகிறதோ அப்படியே இந்த உலகமும் சிந்தை மற்றும் செயல் இணைந்த சர்வவல்ல தேவனால் உருவாக்கப்பட்டது;அவர் தமக்குள்ளிருந்து தம்மை தாமே இயக்கினார்;தமக்குள்ளிருந்து நம்மையும் உருவாக்கினார்;வார்த்தையாகிய இயேசுவானவரையும் நாம் அவருக்குள்ளிருந்தே அறிகிறோம்; இந்த விந்தையான சிந்தையில்லாத சிலரே மந்தைகளை சிதறடிக்கிற நிந்தைகளாக மாறிப்போயினர்.

இந்த வேதப்புரட்டர்க
ள் கொஞ்சமும் பொது அறிவு கூட இல்லாமல் மாணவன் வரைந்த படத்திலிருந்த "அ" அதாவது "ஆல்பா" என்று வைத்துக் கொள்ளுவோம் அதுவே "இயேசு" என்று அவதூறு செய்கிறார்கள்;நாங்களோ எழுதியவரே இயேசுவானவர் என்கிறோம்;அவருடைய சிந்தையாக பிதாவானவர் இருக்கிறார்;அவருடைய செயலாக இயேசுவானவர் இருக்கிறார்.இப்படியாக உங்கள் இருத்துவத்தில் ஒரு முடிவுக்கு வாருங்கள்; அதற்கு அடுத்த பாடத்தில் திரித்துவத்தின் திருத்துவத்தை நீங்கள் அறியும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

சாதாரண ஒரு மாணவன் வரையும் வரைபடத்துக்கே இவ்வளவு விஸ்தாரமான‌ நோக்கமும் அர்த்தங்களும் செய்முறைகளும் இருக்குமானால் சர்வ வல்லவரைக் குறித்து சாதாரண மண்புழுவை விட பரிதாபமான நிலையிலிருக்கும் நான் என்ன சொல்லி விளக்கிவிட முடியும்;ஆனால் துணிகரத்தின் காரணமாகவும் மதியீனத்தின் மயக்கத்திலும் வேதப் புரட்டர்கள் சர்வ வல்லவரின் செயல்களுக்கு புதுப்புது அர்த்தங்களைக் கற்பித்து அதற்குள் சர்வ வல்லவரை அடக்கியாள நினைக்கின்றனர்;ஆனால் அவர் இவர்களைப் பைத்தியமாக்குவார்;இவர்களெல்லாம் வெட்கப்பட்டு பிரமிப்பார்கள்.
  • "...ஞானிகளை வெட்கப்படுத்தி, அவர்கள் அறிவைப் பைத்தியமாகப் பண்ணுகிறவர்."(ஏசாயா.44:25)
உங்கள் ஞானமே உங்கள் மார்க்கத்தாரை சூன்யமாக்கும்;உங்கள் அறிவே உங்களைப் பைத்தியமாக்கும்;நீங்கள் எங்களோடு வாதிடும் தார்மீக தகுதியே உங்களுக்கு இல்லையே;நீங்கள் இயேசுவை மறுதலிக்கும் இஸ்லாமியரை விட ஆபத்தானவர்கள்;கிறித்தவத்தைக் குறித்த அடிப்படையறிவுமில்லாமல் போதிக்க வந்துவிட்டீர்கள்;அதன் காரணமாகவே என்னைப் போன்றவர்கள் ஏதோ அறிந்தது தெரிந்ததைக் கூட நண்பர்களுடன் பகிர முடியாமல் தடுக்கப்பட்டிருக்கிறோம்; நிந்திக்கிறவனுக்கும் தூஷிக்கிறவனுக்கும் முன்பாக தேவ இரகசியங்களைப் பகிர்ந்துகொள்வதே ஆபத்தானதாகும்; ஏனெனில் நீங்கள் வருங்கோபத்துக்கு தப்பிக்கவே கூடாது;மகத்துவங்களை தூஷிக்கும் உங்களைப் போன்ற குருடர்கள் பார்வையடையவே கூடாது;கதறுங்கள்... கூப்பிட்டுச் சொல்லுங்கள், "தாவீதின் குமாரனே எங்களுக்கு இர‌ங்கும்" என்பதாக;அவர் இழுத்துக்கொள்ளாவிட்டால் நீங்கள் பிதாவினிடத்தில் சேரவே முடியாது;ஏனெனில் அவர் பிதாவின் சரிபாகமாக இருக்கிறார்.

உணவு
க் குழாய் சேதாரமானவர்களுக்கு மூக்கின் வழியாகவோ வயிற்றில் ஓட்டை போட்டோ திரவ உணவை ஊற்றுவார்கள்;அதுபோலவே வழியான இயேசுவை வாயினால் அறிக்கையிடாமல் அவரை மறுதலிக்கும் உங்கள் நிலையும் இருக்கிறது;உங்கள் கூட்டத்தார் மாம்சத்தை போஷித்து காப்பாற்றும் வாயின் வழியாக உணவை அனுப்பாமல் அதனை எப்படியாவது வயிற்றுக்குள் திணிக்கப்பார்க்கும் மதியீனர்களைப் போலவே இருக்கிறீர்கள்.
  • "நீதிமான் தனக்குத் திருப்தியாகப் புசிக்கிறான்; துன்மார்க்கருடைய வயிறோ பசித்திருக்கும்." (நீதிமொழிகள்.13:25)
என்னையும் நீங்கள் தள்ளுகிறபடியினால் என்னைவிட மோசமான முட்டாள் மூலம் சர்வ வல்லவர் உங்களோடு போராடுவார்;இந்த யுத்தம் அவருடையது ஜெயமும் அவருடையதே..!
  • "பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான்.
  • அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனை செய்கிறான்.
  • அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டு பண்ணுகிறான்.
  • ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
  • ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
  • அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை,
  • துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங் கால்,
  • அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டு பண்ணுதல் ஆகிய இவைகளே.
  • என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
  • அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள்.
  • நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.
  • கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதக சிட்சையே ஜீவவழி." (நீதிமொழிகள்.12 To 23)

(தொடரும்...)



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard