Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எங்கே போகிறோம்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: எங்கே போகிறோம்..?
Permalink  
 


chillsam Wrote on 03-03-2011 18:58:23:

திருமுழுக்கு எடுக்கும் நீங்கள் அதனை உங்கள் சபைக்கும் முறைப்படி தெரிவிக்கவேண்டும்;


சபை போதகரிடம் பேசியதால் தான் வழி பிறந்தது

chillsam Wrote on 03-03-2011 18:58:23:

7ம் நாளில் ஆராதிப்போர்
சனிக்கிழமைகளிலேயே திருமுழுக்கு தருவார்கள்;மேலும் உங்களுக்கு திருமுழுக்கு தருவோர் கிறித்து போதித்த வண்ணமாக "பிதா குமாரன் பரிசுத்தாவியின்" நாமத்திலும் நீர் சபையார் முன்பாகச் சொன்ன சாட்சியின் படியும் உமக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்" என்பதாக உரைக்கவேண்டும்; நீங்கள் திருமுழுக்கு எடுக்கும் சமயத்தில் கொடுப்பவரைத் தவிர குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர் இருக்கவேண்டும்; அரசாங்க சட்டப்படி நீங்கள் நிலையை அறிவித்து சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்; ஏனெனில் தற்போது இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்துகொண்டிருப்பது தெரிந்ததே..!


உங்கள் ஆலோசனைக்கு நன்றி, நிச்சயமாக நான் முன்பே சொன்னபடி சபைகளின் கட்டுகளுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தான் எடுக்கிறேன்.

என்னோடு இன்னும் அனேகர் எடுக்கிறார்கள் காவிரி ஆற்றில் தான் எடுக்கிறேன் (அதற்குள் கொஞ்சமாவது தண்ணீர் வரவேண்டும்)

கொடுப்பவரின் விசுவாச அறிக்கை எது என்பதை நன்கு ஆராய்ந்தே எடுக்கலாம் என முடிவு செய்தேன்.

chillsam Wrote on 03-03-2011 18:58:23:

இறுதியாக நான் பங்கேற்ற பேய்களின் பாத்திரம் என்பது எது என்பதை தயவுகூர்ந்து தெரிவித்தால் நல்லது;நன்றி..!


நான் தாங்களைச் சொல்லவில்லை, சபை நாகரீகமெல்லாம் கருதாமல் தவறு என்றால் இது தவறு இதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள் என்கிற பொருளில் தான் சொல்லியிருந்தேன். நன்றி


Quote:
// சபை போதகரிடம் பேசியதால் தான் வழி பிறந்தது //

தாங்கள் முன்பு குறிப்பிட்டது போல சிஎஸ்ஐ சபையின் ஐக்கியத்தில் திடப்படுத்தப்பட்டு நற்கருணையில் பங்கேற்று வரும் நீங்கள் கிறித்துவ விசுவாசத்தின் அடுத்த நிலைக்கு முன்னேறுவதைக் குறித்து சபையின் குருவானவருக்கு முறைப்படி அறிவிக்கவேண்டும் என்கிறேன்;அல்லது இனி அந்த சபைக்குச் செல்லமுடியாத நிலை ஏற்படலாம்;அல்லது கர்த்தரின் கட்டளைப்படி திருமுழுக்கு எடுத்த நீங்கள் கீழ்ப்படியாத சபை பாரம்பரியத்துக்குள் மீண்டும் சென்று மாயம் பண்ணவேண்டிய நிலை வரலாம்..!

Quote:
// நான் தாங்களைச் சொல்லவில்லை, சபை நாகரீகமெல்லாம் கருதாமல் தவறு என்றால் இது தவறு இதை மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள் என்கிற பொருளில் தான் சொல்லியிருந்தேன் //

எனது வரிகளை மீண்டும் வாசித்துப் பாருங்களேன்;நானும் அதையே எழுதியிருக்கிறேன்;போராடவேண்டும் என்று எழுதியதுடன் இவனுக்கு வேற இல்லையா என்று பலரும் சலித்துக்கொள்ளும் அளவுக்கு போராடிக் கொண்டிருக்கிறேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

chillsam Wrote@Tcs on 02-03-2011 23:33:08:

உதாரணத்துக்கு நண்பர் அற்புதம் அவர்களை போதகர் ஸ்தானத்தில் வைத்து மரியாதை செலுத்தும் திரு.இராஜ்குமார் அவர்கள் முழுக்கு ஞானஸ்நானத்துக்கு விரோதமாகவும் தெளிப்பு ஞானஸ்நானத்துக்கு ஆதரவாகவும் பேசுகிறார்;

rajkumar_s Wrote on 03-03-2011 17:48:04:

இந்த குற்றச்சாட்டை வன்மையாக மறுக்கிறேன், தெளிப்பு மற்றும் முழுக்கு ஞானஸ்நானம் பற்றி சரியான தெளிவில்லாமல் இருந்தேன், ஆனாலும் முழுக்கு ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று எப்போதோ முடிவெடுத்து விட்டேன். ஆனால் ஒரு சில தெளிவில்லாத நிலையினால் தள்ளிப் போட்டுக்கொண்டு வந்தேன். ஆனால் எப்போதுமே முழுக்கா தெளிப்பா எது சரி என்று யோசித்தது கூட இல்லை,

நீங்கள் எத்தனை பேர் நம்புவீர்களோ தெரியாது சரியான சமயத்தில் தள நண்பர்கள் மூலம் சரியான விளக்கங்கள் கொடுக்கப்பட்டது, அதோடு மட்டுமல்லாமல் ஞானஸ்நானம் எடுத்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பையும் தேவன் எனக்கு உருவாக்கிக் கொடுத்திருக்கிறார். கர்த்தருக்கு சித்தமானால் வரும் சனிக்கிழமை முழுக்கு ஞானஸ்நானம் எடுப்பேன்.

கிறிஸ்துவோடு செய்து கொள்ளப்படும் இந்த புதிய உடன்படிக்கையில் தேவன் என்னை அசுத்தத்திற்கு விளக்கி காத்துக்கொள்வாராக‌.ஆமென்,

சில்சாம் அவர்கள் நான் ஞானஸ்நானத்திற்கு எதிராகப் பேசிய ஆதாரங்களை வெளியிடவேண்டும், அல்லது அவர் பொய் சொல்லுகிறார் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். நன்றி

chillsam Wrote on 02-03-2011 23:33:08:

சபை நாகரீகத்துக்காக இதுபோன்ற போக்கை நாம் கண்டும் காணாமல் இருந்தாலும் நியாயத்தீர்ப்பு நாளில் நம்மில் பலர் தலைகுனிந்து நிற்கும் நிலை வரலாம்.

rajkumar_s Wrote on 03-03-2011 17:48:04:

நீங்கள் மனுசனையா திருப்திப்படுத்தப் பார்க்கிறீர்கள்? சபை நாகரீகம் கருதி சில்சாம் அவர்கள் அமைதியாக நடந்து கொண்டார் என்று அந்த மவுனம் நியாயத்தீர்ப்பின் நாளில் வந்து சாட்சி கொடுத்து உங்களை பரலோகத்துக்கு அனுப்பிவைக்க recommend ‍ செய்யுமா என்ன?

கிறிஸ்துவின் நண்பராக்க வேண்டும் என்று சொல்லும் தாங்கள் பேய்களின் பாத்திரத்தில் பாணம் பன்னுவதை சபை நாகரீகம் கருதி கண்டுகொள்லாமல் விட்டு விட்டு, சகோதரா கர்த்தரின் பந்தியில் வா என்று பாடுவீர்களா?

// கர்த்தருக்கு சித்தமானால் வரும் சனிக்கிழமை முழுக்கு ஞானஸ்நானம் எடுப்பேன். //

This is Good News to me n God Bless You..! சனிக்கிழமையன்று திருமுழுக்கு எடுக்கும் நீங்கள் அதனை உங்கள் சபைக்கும் முறைப்படி தெரிவிக்கவேண்டும்; இதனால் பலரும் சத்தியத்துக்குக் கீழ்ப்படிய தூண்டப்படுவார்கள்; தங்கள் மனசாட்சியும் இதனால் சுத்தமாகும்; ஞானஸ்நானத்துக்கு எதிராக நீங்கள் எழுதியவை எங்கும் மறைந்திருக்கவில்லை; அதை நீங்களே வாசித்து அறிந்துகொள்ளலாம்; ஆனாலும் தற்போதுள்ள நல்ல மனநிலையைக் காத்துக் கொள்ளவும்; மற்றவற்றைப் பிறகு பேசிக்கொள்ளலாம்; மேலும் சனிக்கிழமை திருமுழுக்கு எடுப்பதற்கு ஏதேனும் விசேஷ காரணமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்; ஏனெனில் 7ம் நாளில் ஆராதிப்போர் சனிக்கிழமைகளிலேயே திருமுழுக்கு தருவார்கள்;மேலும் உங்களுக்கு திருமுழுக்கு தருவோர் கிறித்து போதித்த வண்ணமாக "பிதா குமாரன் பரிசுத்தாவியின்" நாமத்திலும் நீர் சபையார் முன்பாகச் சொன்ன சாட்சியின் படியும் உமக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன்" என்பதாக உரைக்கவேண்டும்; நீங்கள் திருமுழுக்கு எடுக்கும் சமயத்தில் கொடுப்பவரைத் தவிர குறைந்தது இரண்டு அல்லது மூன்று பேர் இருக்கவேண்டும்; அரசாங்க சட்டப்படி நீங்கள் நிலையை அறிவித்து சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்; ஏனெனில் தற்போது இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்துகொண்டிருப்பது தெரிந்ததே..!

இறுதியாக நான் பங்கேற்ற பேய்களின் பாத்திரம் என்பது எது என்பதை தயவுகூர்ந்து தெரிவித்தால் நல்லது;நன்றி..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

arputham Wrote@Tcs on 03-03-2011 00:19:40:

பலவேளைகளில் நாம் வழி தவறிப் போகிறோம் என்பது உண்மைதான் (அதுதானே ஜென்ம சுபாவம்) ஆனாலும் தேவன் நம்மை தம் நோக்கத்துக்காக உருமாற்றுவதிலும் உரமேற்றுவதிலும் கருவிலிருந்தே தம் கிரியையை செய்து கொண்டிருக்கிறார். ஆகவே நாம் இங்கே முறையாக பதிந்து வைப்பவை எதுவும் வீணாகப் போகாது. நாளை நமக்கே கூட அவை தேவைப்படலாம். சமீப காலங்களில் இரண்டாவதாக ஒரு தொடுப்பு மூடப்பட்டமைக்கு காரணம் அந்த தொடுப்பைத் துவங்கிய்வர் தாம். வேற என்ன சொல்வது? கிறிஸ்தவர்களாகிய நம்மிடம் பல்வேறு சபைப் பிரிவுகள், உபதேச வித்தியாசங்கள் உண்டு என்றாலும், வேதாகமத்தில் அடிப்படையில் எது சரி என்பதையே இங்கு மார்ஸ் மேடையில் விவாதிக்க நம் தளம் சுதந்திரம் தருகிறது. இந் நோக்கத்திற்கு மாறாக தனி நபர் தாக்குதல் மற்றும் வேதாகமத்திற்கு எதிராகச் செல்லும் போது அதற்கு கொடுக்கப்படும் பதில்களை மதிக்காமல் தள உறுப்பினர்(கள்) இருக்கும் போது வேறு வழியின்றி விவாதம் முடித்து வைக்கப்படுகிறது.

சகோ.சில்சாம் உங்கள் ஆதங்கம் புரிகிறது. அதற்கு சீக்கிரத்தில் ஒரு கட்டுரை கடைசி காலம் குறித்து தளத்தில் வெளியிடப்படும்.

Chillsam:-அனுசரணையுடன் கூடிய விளக்கத்துக்கு நன்றி நண்பரே...நாம் அனைவரும் கூடிக் களிக்கும் தள நண்பர்களின் ஐக்கிய கூடுகை என்னவானது? தள நண்பர்களுடன் மின்னஞ்சல் தொடர்பு பேணப்படுகிறதா? இந்த வருடத்துக்கான புதிய திட்டங்கள் மற்றும் இலக்குகள் ஏதேனும் ஆலோசிக்கப்பட்டுள்ளதா? நாம் அனைவரும் இணைந்து,"நாடு கடந்த தமிழீழ அரசு" போல ஒரு அரசை கிறித்துவுக்காக உருவாக்கினால் என்ன? ஜெபத்துக்கு ஒரு அமைச்சர், மிஷினரி ஊழியத்தைக் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க ஒரு அமைச்சர், குடும்ப நலனுக்காக ஒரு அமைச்சர், இளைஞர் நலனுக்காக ஒரு அமைச்சர் என்று ஒரு அமைச்சரவையுடன் கூடிய நேர்த்தியானதொரு அரசை வாசகர்களுடைய ஒத்துழைப்புடன் தேர்ந்தெடுத்தால் என்ன?

இது இந்த மாலைப் பொழுதில் என் மனதில் சுடச்சுட தோன்றிய தற்போதய யோசனையாகும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

தமிழ் கிறித்தவ தளத்தில் அண்மையில் மற்றுமொரு திரி பூட்டப்பட்டுள்ளது..!

கடைசிக் கால வெளிப்பாடுகள் by pgolda on 24-01-2011 15:17:27 Replies: 289 Views: 6309

இது தள நண்பர்களின் சாதனையா அல்லது அவர்களுக்கு வந்த சோதனையா..? நாம் விவாதிக்க உபயோகமான எந்த பொருளும் கிடைக்கவில்லையோ என்னவோ, நாமும் விடாமல் இந்த ஒரு திரியையே திரித்துக்கொண்டிருக்க ஆர்வமுள்ள வாசகரும் இன்றைக்காவது ஏதேனும் நல்ல விஷயத்தைக் கற்றுக்கொள்ளலாமே என்று ஆவலுடன் வந்து ஏமாற்றமடைந்து போயிருப்பார்; இந்த பாவம் நம்மீதே சுமரும்.

ஏனெனில் இந்த ஒரு கட்டுரையின் பார்வையாளர் எண்ணிக்கை மட்டுமே சுமார் (6300) ஆகும்; அந்த கட்டுரையின் விவரங்களைப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது;இத்தனை பேர் (289) பங்கேற்று இத்தனை வாசகர்கள் பார்வையிட்ட ஒரு கட்டுரையில் தீர்மானமாக எதையும் சொல்ல முடியவில்லை; இந்த கட்டுரையைத் துவக்கிய கோல்டா அவர்களே இதற்கு முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும்;அவர்கள் இதையும் ஒரு விவாதமாக்கிவிட வேண்டாம்.

வெறும் கல்லைப் போலிருந்த என்னைப் போன்றோரை செதுக்கிய ( வேலை முடியவில்லை; இன்னும் தொடருகிறது...) சிற்பிகள் இங்கே பலர் உண்டு; அப்படிப்பட்ட இந்த தளத்தில் யாருக்காகவும் பார்க்காமல், இதுவே சரியான கிறித்தவ விசுவாசம் என்று தீர்மானிக்கக்கூடிய சகோதரர்கள் உடனே ஒவ்வொரு திரிக்கும்- அதாவது கட்டுரைக்கும் நியமிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலகெடுவுக்குள் எந்தவொரு கட்டுரையும் முடிக்கப்படவேண்டும்; துருபதேசங்கள் களையெடுக்கப்பட வேண்டும்; நட்பைவிட கிறித்தவ விசுவாசத்துக்கே முதலிடம் தரவேண்டும்.

உதாரணத்துக்கு நண்பர் அற்புதம் அவர்களை போதகர் ஸ்தானத்தில் வைத்து மரியாதை செலுத்தும் திரு.இராஜ்குமார் அவர்கள் முழுக்கு ஞானஸ்நானத்துக்கு விரோதமாகவும் தெளிப்பு ஞானஸ்நானத்துக்கு ஆதரவாகவும் பேசுகிறார்;சபை நாகரீகத்துக்காக இதுபோன்ற போக்கை நாம் கண்டும் காணாமல் இருந்தாலும் நியாயத்தீர்ப்பு நாளில் நம்மில் பலர் தலைகுனிந்து நிற்கும் நிலை வரலாம்.

அம்பேத்கார் சொன்னதாக ஒரு சொற்றொடரை கவனிக்க நேர்ந்தது, அவர் சொல்லுகிறார்,"என்னை விட என் நாடு பெரியது;என் நாட்டை விட எனக்கு என் சமுதாயம் பெரியது",என்பதாக.

நானும் சொல்லுவேன்,"எனக்கு என் குடும்பத்தைவிட நண்பர்களே முக்கியம்; என் நண்பர்களைவிட நான் கிறித்துவின் நண்பனாகத் தொடர்வது அதிமுக்கியம்;அதைவிட முக்கியமானது,எனது நண்பர்களை கிறித்துவின் நண்பர்களாக்குவது..!" மற்றபடி இதுபோன்ற கட்டுரைகளால் நம்முடைய சமுதாயத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டுவர இயலாது; இதனால் யாருக்கும் பயனும் இராது என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard