// இன்னும் ஒரு முக்கியமான கருத்துகூட இங்கு விடுபட்டிருக்கிறது என்று கருதுகிறேன்; அதாவது "மனுஷர்களை சோதிப்பதற்காக இறைவன் வேண்டுமென்ற சாத்தானை தனது பினாமிபோல உருவாக்கி, உலகில் எல்லா தீமைகளையும் செய்ய அனுமதித்தார்" என்பது போன்ற ஒரு கருத்து அநேகரிடையே நிலவுகிறது. இந்த கருத்தையும நாங்கள் ஏற்க்கவில்லை. நமது இறைவனை பற்றி வேதம் சொல்லும்போது:
சங்கீதம் 145:8கர்த்தர் இரக்கமும் மனஉருக்கமும், நீடிய சாந்தமும் மிகுந்த கிருபையும் உள்ளவர்.
சங்கீதம் 103:8கர்த்தர் உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர்
அதாவது இறைவன் "மிகுந்த இரக்கம் மற்றும் மனதுருக்கம் நிறைந்தவர்". லாசரு மரித்தபோது கண்ணீர்விட்டு அழுதவர் நம் இயேசு. அவ்வாறு இருக்கையில் இன்று உலகில் நடக்கும் கொடுமைகள் குண்டுவெடிப்புகள் கைகாலற்ற நிலை, கண்பார்வையற்ற நிலை இவற்றுடன் அவதிப்ப்படும்படி ஜனங்களை தானே வேண்டுமென்றே அனுமதித்தார் என்ற கருத்தையும் நம்மால் ஏற்க்க முடியவில்லை. இறைவன் சர்வவல்லவர்! ஆனால் சாத்தான் யோபுவை சோதிக்க சொன்னபோது, ஒரு நிர்பந்ததின் அடிப்படையில் கர்த்தர் அவனுக்கு துன்பங்களை அனுமதித்தார். அதேபோல் இன்று உலகில் நடக்கும் எல்லா துன்பங்கள் துயரங்களையும் இறைவனின் விருப்பத்தின் பேரில் செய்யப்படாமல் எதோ நிர்பந்தத்தின் அடிப்படயிலேயே செய்யப்படுகிறது என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் இறைவன் நியாயக்கேடில்லாத மிகுந்த நீதியுள்ளவர்:
"கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர்நீதியும் செம்மையுமானவர்."(உபாகமம் 32:4)
இவ்வளவு விளக்கமாக இறைவனின் நீதி தன்மைபற்றி வேதம் சொல்லும்போது, "பொய்யனும் பொய்க்கு பிதாவாகிய" சாத்தான் என்னும் ஒருவனை தனது திட்டங்களை நிறைவேற்றும் பினாமியாக இறைவன் நிச்சயம் வைத்திருக்க மாட்டார் என்றே நம்புகிறோம். //
விஷயம் ஒன்றுமில்லை,நாம் அவரைக் கண்டுகொள்ளாமல் அவரைக் கண்டுகொள்ள ஆள் இருக்காது;அதனால் நம்மைத் தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கிறார்;ஆனால் அவரை எதிர்கொள்வதற்கு நான் வேறொரு தனிப்பட்ட திட்டத்தை வைத்திருக்கிறேன்;அவர் ஆபத்தில்லாத எதிரியைப் போலிருந்தாலும் உடன்பிறந்தே கொல்லும் வியாதியைப் போன்றவர் என்பதை அனைவரும் விரைவில் அறிந்துகொள்ளுவோம்;நம்முடைய தளத்தை இனி பார்வையிடுவதில்லை என்று அவர் தீர்மானம் எடுத்து 24 மணிநேரத்துக்குள் தன் மனதை மாற்றிக்கொண்டிருக்கிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு குழம்பி போயிருக்கிறார் என்பதை அறியலாம்.
ஜெகஜ்ஜால கில்லாடி என்பார்களே அதில் சுந்தர் ஜெகஜெகஜால கில்லாடியாக்கும்;அடித்தும் அடிக்காமலும் தொட்டு தொடாலும் பட்டும் படாமலும் சைக்கிள் கேப்பில் ஏரோப்ளேன் ஓட்டுபவர்;"இன்னும்ஒரு முக்கியமான கருத்துகூட" என்று எழுதுவதே அவருடைய தந்திரமான அணுகுமுறைக்கு ஒரு உதாரணமாகும்..!
இப்போதைக்கு அவருடைய கருத்தை இங்கே போட்டு வைக்கிறோம்;விரைவில் இதிலுள்ள ஆபத்தான விஷ(ய)ங்களை எடுத்துவைப்போம்.
யோபுவைக் குறித்த விவாதத்திலும் சரி , யாருக்கு பலி செலுத்துகிறோம் என்ற விவாதத்திலும் சரி,கர்த்தர் தீமையை உண்டாக்கினாரா என்ற வரம்புமீறிய விவாதத்திலும் சரிசுந்தரின் கருத்துக்கள் கண்டனத்துக்குரியதாக இருந்தது;ஆனாலும் அந்த ஆளை கண்டுக்கிடாம விட்டா தானே திருந்திருவாரென்றே நாம் அவர் பக்கம் போகாதிருந்தோம்; தற்போதோ ரெண்டாவது round ஓட்ட நினைச்சிகிட்டு அரைச்ச மாவையே அரைக்கிறார்;ஆனால் மற்றொரு புறம் ஒன்றும் தெரியாத அப்பாவியைப் போல எனக்குக் கற்றுக்கொடுங்கள் நண்பரே என்று வேஷம் போடுகிறார்; அதனை உணர்ந்தே நான் அமைதியாக இருந்தேன்;மேலும் நான் ஒன்றும் உன்னைக் கேட்கவில்லை உன்னோடு ஒரு சமரசமுமில்லை என்று சொல்லுவதைப் போலவே இதோ இந்த புதிய விளக்கமானது அமைந்திருக்கிறது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அன்புள்ள தள சகோதர சகோதரிகளே நான் ஏற்கெனவே பலமுறை குறிப்பிட்டுள்ளபடி நான் யாரும் சொல்லியோ அல்லது யாருடைய நிர்பந்தத்தின் அடிப்படயோலோ இயேசுவை ஏற்றுக்கொள்ளாமல். மிகப்பெரிய பிரச்சனையில் மாட்டி சாவின் விளிம்பில் இருந்த என்னை, ஒரு வேதாகம புத்தகத்தின் மூலம் தேவன் என்னை சந்தித்து அபிஷேகித்த்தால் , கிரிஸ்த்தவம்தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து இயேசுவை ஏற்றுக்கொண்டு கிறிஸ்தவனாக இருக்கிறேன்.
"ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு, ஞானஸ்தானம் பெற்று பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை பெற்று, இயேசுவின் கற்பனைகளுக்கு கீழ்படிந்து பரிசுத்தமாக வாழ்வதுதான்" கிறிஸ்த்துவ விசுவாசம் என்று நான் கருதிக்கொண்டு இருக்கிறேன். இந்நிலையில் எனது விசுவாசத்தின் அடிப்படையில் ஆவியானவர் துணையுடன் வேதத்தை ஆராய்ந்தும் எனது அனுபவத்தின் அடிப்படையிலும் நான் எழுதும் அனேக கருத்துக்கள் "கிறிஸ்த்தவ விசுவாசத்துக்கு எதிரானது" என்பது போன்ற கருத்துடன் பலரால் விமர்சிக்கபடுகின்றன. ஆனால் ஒரே விசுவாசம் என்று சொல்லி இருக்கும் சகோதரர்களுக் கிடையேகூட சிலபல கருத்துக்களில் ஒற்றுமை இல்லாத நிலையே இருக்கிறது.
எனவே " அடிப்படை கிறிஸ்த்தவ விசுவாசம் என்றால் என்ன?" என்பது குறித்து அறிந்துகொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன். உலக தோற்றத்தில் இருந்து முடிவு வரை கிறிஸ்த்தவ விசுவாசம் என்ன சொல்கிறது என்பதை அறிந்து கொண்டால் என்னை நான் சரிபார்த்துகோள்ள எதுவாக அமையும் என்று கருதுகிறேன். எனவே தள சகோதரர்களில் யாராவது அவர்கள் சபையில் போதிக்கப்பட்ட அல்லது அவர்கள் அறிந்த கிறிஸ்த்தவ விசுவாசம் என்ன? என்பதை சுருக்கமாக விளக்கினால் எனக்கு பயனுள்ளதாக இருக்கும். அல்லது அதுபற்றிய செய்தி எந்த தளத்தில் இருக்கிறது என்று தொடுப்பு கொடுத்தால் கூட நான் படித்து அறிந்து கொள்ளலாம். சகோ. சந்தோஷ் அவர்கள் தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் இது குறித்து ஒரு கேள்வியை முன்வைத்திருந்தார்கள். நல்ல சமயத்தில் எழுப்பபட்ட அந்த கேள்விக்கு பதில் வரும் நாமும் உண்மையை அறிந்துகொள்ளலாம் என்று எதிர்பார்ப்புடன் இருந்தேன். ஆனால் அந்த கேள்விக்கு இதுவரை யாராலும் பதில் சொல்லப்படவில்லை. எனவே அன்பானவர்களே "கிறிஸ்த்தவ விசுவாசத்தை" பற்றி சுருக்கமாகவும் முழுமையாகவும் யாராவது எனக்கு சற்று விளக்குங்களேன்!
மேற்காணும் கேள்வியை எழுப்பி விளக்கம் கோரியிருப்பவர் இறைவன் எனும் தளத்தை நிறுவி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவுகளைக் கொடுத்திருக்கும் சுந்தர் என்பவர் ஆவார்;அவருடைய தற்போதைய நிலையானது மெய்யாகவே ஒரு சுயபரிசோதனைக் கட்டமாக இருக்குமானால் அதனை யௌவன ஜனம் தளமானது மனதார வரவேற்று அவருக்கு நேசக்கரம் நீட்டுகிறது;இதுபோல அறிந்துகொள்ளும் பாவனையுடனும் ஆர்வத்துடனும் யார் வந்தாலும் அவர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளை இன்முகத்துடன் செய்துவருகிறோம்;ஆனால் தீர்மானமாக எதையாவது வெளிப்பாடு என்ற பெயரில் அறிவித்தால் அதனைக் கடுமையாக எதிர்த்து வருகிறோம்;சுந்தர் எழுப்பியிருக்கும் இந்த கேள்விக்கு நாம் அளிக்கும் பதில் அவருக்கு திருப்தியை அளித்து அவரும் நம்மை நண்பராக ஏற்றுக்கொள்வாரானால் அதைவிடப் பெரிய சந்தோஷம் நமக்கு எதுவும் இருக்கமுடியாது.
சுந்தரின் கேள்விக்கு பதிலளிக்க முதலில் நண்பர்கள் முயற்சிக்கட்டும், தொடர்ந்து நான் பதிலளிப்பேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)