அந்த கால ஊழியர்கள் தேவ சித்தம் அறிந்து தேவனைப் பிரியப்படுத்த போராடினார்கள்.இந்த காலத்திலோ ஆளுங்கட்சியின் கடைக்கண் பார்வை தங்கள் மீது படாதா என்று ஏங்கி உலக அரசியல் மாயைதனில் ஊழியர்கள் சிக்கியிருக்கிறார்கள். இவர்கள் மூலம் பாவிகள் இரட்சிக்கப்படுகிறார்களோ இல்லையோ இவர்களைப் போன்றார் சந்திப்பின் நாளில் காணப்படுவ்து அரிதான காரியமாக இருக்கும் என்றே தோன்றுகிறது.
சென்னை போதகர்களைப் பிடித்துள்ள இந்த அரசியல் மாயையினால் பெந்தெகொஸ்தே சபைகள் ஆளுங்கட்சிக்கு கொடிபிடிப்பதில் போட்டிபோடுகிறார்கள். இதோ கடந்த ஆட்சியில் அவலட்சணமானதொரு மாநாட்டை நடத்தி தேவனுடைய பரிசுத்த நாமத்தை வீணிலே வழங்கினார்கள் என்றால் இந்த ஆட்சியில் இவர்களுக்கு எதிர்குழுவினர் ஒரு சம்பந்தமில்லாத போஸ்டர் மூலம் தங்களுக்கு ஒரு அரசியல் சாயம் பூசிக்கொள்ள முயற்சிக்கிறார்கள். இந்த இரு கூட்டத்தாரிடமும் திருச்சபையினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் மாமன்ற சென்னைப் பேராயத்தின் துவக்க விழாவானது மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திரு.முக.ஸ்டாலின் அவர்களது நல்லாசியுடன் சிறப்பாக நடைபெற்றது;அதைக் குறித்த நேரடி ரிப்போர்ட்யௌவன ஜனம் தளத்தின் சர்வதேச வாசகர்கள் மற்றும் தள நண்பர்களின் கவனத்துக்காக சமர்ப்பிக்கப்படுகிறது. கூத்தும் கொண்டாட்டமும்
கூத்தும் கொண்டாட்டமும்-Part.2
வந்துட்டாருய்யா...வந்துட்டாரு..!
எப்படியாவது ஜெயிக்க வெச்சுருங்க,சாமிங்களா..!
வண்டி கட்டி வந்தோமுல்ல..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)