Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: யெகோவா சாட்சிகளின் தலைவன் இரஸல் குறித்த இரகசியங்கள்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: யெகோவா சாட்சிகளின் தலைவன் இரஸல் குறித்த இரகசியங்கள்..!
Permalink  
 


விக்கிபீடியாவின் இந்த பதிவினை பாருங்கள்

யெகோவாவின் சாட்சிகள் (Jehovah's Witnesses) என்போர் திரித்துவக் கொள்கையற்ற புத்துலக நம்பிக்கையுடைய கிறித்தவ மதப் பிரிவினராவர். இம் மதத்தில் ஏழு மில்லியன் பேர் இணைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இம் மதத்தினர் தங்களுக்கென்று தனியாக ஒரு விவிலியமொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளனர். உலகின் தற்போதைய பிரச்சினைகளுக்கெல்லாம் ஒரே தீர்வு “இறுதி நாளில் உலகம் அழிந்து தேவனின் அரசு நிறுவப்படுவதே” என்பது யெகோவாவின் சாட்சிகளின் மைய நம்பிக்கை ஆகும்.

‌யெகோவாவின் சாட்சிகள் வீடு வீடாக வந்து தங்கள் கொள்கைகளைப் பரப்புவதில் முனைப்புடன் செயல்படுபவர். காவற்கோபுரம் (the watch tower) மற்றும் விழித்தெழு (Awake) போன்ற இதழ்களை வழங்குவர்.

யெகோவாவின் சாட்சிகள் கிறிஸ்துமஸ், ஈஸ்டர் போன்ற கிறித்தவ மதப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில்லை. தங்கள் பிறந்தநாளைக் கூட அவர்கள் கொண்டாட மாட்டார்கள். அது மட்டுமன்றி உயிருக்குப் போராடும் நிலையில் கூட இவர்கள் இரத்த தானத்தை ஏற்பதில்லை; நாடுகளின் இராணுவங்களில் சேருவதில்லை; நாட்டுக் கொடிகளை வணங்குவதில்லை; நாட்டுப்பண் பாடுவதுமில்லை. இது போன்ற செயல்களால் இவர்கள் பல நாட்டு நீதிமன்றங்களோடு வழக்காட வேண்டியுள்ளது. ஐக்கிய அமெரிக்கக் குடியரசின் முதல் அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தமே இவர்களால் தான் ஏற்பட்டது.


இந்திய உச்சநீதிமன்றத்தில் யெகோவாவின் சாட்சி வழக்கு

1985 ஆம் ஆண்டு சூலை இம்மதத்தைச் சேர்ந்த நாட்டுப் பண்ணைப் பாட மறுத்ததால் கேரள மாநிலப் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டது. அக்குழந்தையின் தந்தை வி.ஜே. இம்மானுவேல் உச்ச நீதி மன்றத்தில் மேல் முறையிட்டார். 1986, ஆகஸ்டு 11 ஆம் நாளில் உச்ச நீதிமன்றம் குழந்தையைப் பள்ளியில் சேர்க்க உத்தரவிட்டனர். அத்தீர்ப்பில் இருந்த சில வரிகள்: 'நமது பாரம்பரியம் சகிப்புத்தன்மையைப் போதிக்கிறது. நமது தத்துவம் சகிப்புத்தன்மையைக் கற்றுத்தருகிறது. நமது அரசியலமைப்புச் சட்டமும் சகிப்புத் தன்மையைக் கற்பிக்கிறது. நாம் அதை நீர்த்துப் போகச் செய்ய வேண்டாம்'




__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

யேகோவா சாட்சி என்று ஒரு கூட்டம் இருப்பது தெரியும்.
ஆனால்,இங்கு தான் அவர்களைப் பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன் :)


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 


தேசிய கீதம் பாடக் கூடாது என்றும் சொல்கிற கூட்டமோ? ராணுவத்தில் சேர்ந்து பணி செய்வது ஓகே யா? 


சகோதரி கோல்டா யெகேவா சாட்கள் யாரும் இராணுவத்தில் பணியாற்றுவதில்லை என்பதை தாங்கள் அறிய மாட்டீர்களா? பிறிதொரு பதிவில் இதைப்பற்றி எழுத எண்ணி இருந்தேன். யுத்தம் செய்வதை யொகோவா சாட்சிகள் ஏற்றுக் கொள்வதில்லை. இவர்களின் பொருட்டே சில நாடுகளின் சட்டங்களின் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமும ஏற்பட்டது.

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Brother Colvin
தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவது தவறு


தேசிய கீதம் பாடக் கூடாது என்றும் சொல்கிற கூட்டமோ? ராணுவத்தில் சேர்ந்து பணி செய்வது ஓகே யா?

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

Rutherford இன் சில அபத்தமான போதனைகள்
கிறிஸ்தவர்கள் கிறிஸ்மஸ் பண்டிகையை ஆசரிக்க கூடாது
சிலுவையை அடையாள சின்னமாக உபயோகிக்கக் கூடாது
தேசிய கொடிக்கு மரியாதை செலுத்துவது தவறு
(Source : D. Harris, Awake to the Watch Tower p. 21)
தானே யெகோவாவின் வாயாக இருப்பதாகவும், தன்னிடமே தற்காலத்திற்காக தேவவார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
(Source : J.F. Rutherford, Why Serve Jehovah? p. 62)


Nathan Homer Knoor (1905-197)
  • இவர் 1905 ஆம் ஆண்டு ஏப்ரல் 23ம் திகதி பென்சில்வேனியா மாநிலத்திலுள்ள பெத்லகேம் என்னுமிடத்தில் ஒல்லாந்து சீர்த்திருத்தசபை பெற்றோருக்குப் பிறந்தார்.
  • 1923 இல் யெகோவா சாட்சிகளுடன் இணைந்து கொண்டார்
  • 1942 இல் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்
  • இவருடைய காலத்தில்தான் புதிய வேதாகம மொழிபெயர்ப்பும், கிரேக்க - ஆங்கில சமமொழி வேதாகமமும் (Kingdom Interlinear Translation of the Greek Scriptures) வெளியிடப்பட்டன.
  • 1942 காலப்பகுதியிலிருந்து யெகோவா சாட்சிகளின் புத்தகங்கள் எழுத்தாளருடைய பெயரின்றி வெளிவர ஆரம்பித்தது (Source : R.M. Bowman, Jehovah's Witnesses, p.11)

  • 1975 ஆம் ஆண்டுடன் ஆதாமும் ஏவாளும் சிருஷ்டிக்கப்பட்டு 6000 ஆண்டுகள் பூர்த்தியாகிவிடும் அவ்வாண்டே உலகமுடிவின் ஆண்டாக இருக்கும் என்றும் அத்தோடு அர்மகெதோன் யுத்தம் ஆரம்மாகும் எனவும் கூறப்பட்டது. இதனை நம்பிய பல அங்கத்தினர்கள் தங்கள் சொத்துக்களை விற்று முழுநேர ஊழியப்பணியில் ஈடுபட்டனர். ஆனால் 1975 அப்படியேதும் நடைபெறாததால் பலர் யெகோவாவின் சாட்சிகள் சங்கத்திலிருந்து விலகினர்.

  • 1977 இல் இவர் மரணமடைந்தார்.

Frederick W. Franz (1893 - 1992)

  • Nathon இற்குப் Frederick W. Franz (1893 - 1992) தலைவரானார்.
  • 1893 இல் கென்டக்கியிலுள்ள கொவிங்டன் எனுமிடத்தில் பிறந்தார்
  • இவர் யெகோவா சாட்சிகளின் சிறந்த இறைவாக்கினர்களுள் ஒருவர் என கருதப்பட்டவர்.
  • 1954 இல் ஸ்கொட்லாந்தில் நடைபெற்ற நீதிமன்ற வழக்கொன்றில் தான் எபிரேய மொழியில் பாண்டித்தியம் பெற்றவரென சத்தியபிரமாணம் செய்தும் விசாரணையின்போது ஆங்கில மொழியில் கொடுக்கப்பட்ட ஆதி. 1:4 ஐ கிரேக்கமொழியில் மொழிபெயர்க்க முடியாதவராக இருந்தார் (Source : Scottish Court Sessions , Douglas Walse V. James Latseim Clyde, Cs 258/2788(November 1954) Pursuer;s Proof, pp 7,61, 342-343, uoted in R. Enroth, A Guide to Cults and New Religious, p 104)
  • 1922 இல் இவர் மரணமடைந்தார். இவருக்குப் பின் Milton G.Henschel தலைவரானார்.




 
 


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//இதுபோன்ற இயக்கங்கள் வீடுவீடாக சென்று பிரசாரம் செய்து மக்களை வஞ்சித்துப் போடுகிறார்கள்.  அவர்களைக் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்ட வேண்டும். இதுவே எமது ஆத்மபாரம்.//


Keep up the Good work Bro. Colvin. இவர்கள் போவதும் வேதத்தில் இருந்து இவர்கள் கள்ளப்போதகம் எப்படி தவறானது என்று புரிந்து கொள்ளமுடியாத அப்பாவி கிறிஸ்தவர்களின் வீட்டிற்க்கே!  கிழே உள்ள வசனம் இவர்களுக்காக எழுதப்பட்டதுதான்

  • சீர்கேடான வீண்பேச்சுகளுக்கு விலகியிரு; அவைகளால் (கள்ளப்போதகர்களான) அவர்கள் அதிக அவபக்தியுள்ளவர்களாவார்கள்;அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப்போலப் (like Cancer) படரும்..(II தீமோத்தேயு 2:16-17)

 



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

மிக மிக அருமையான தகவல்களைப் பகிர்ந்து வரும் சகோ கோல்வின் அவர்களுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் இந்த பயனுள்ள பணி

__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Brother MyCoimbatore:

//விபச்சாரக்காரர்களின் முகமூடிகளை கிழித்துள்ளீர்கள்.//


விபச்சாரக்காரர் என்பது உலகத்தை நேசிக்கும் கிறிஸ்தவர்களைக் குறிக்கும் வார்த்தை.
இவர்கள் கிறிஸ்தவர்கள் அல்ல. அந்தி கிறிஸ்துவின் ஆவி உடையவர்கள்.
எனவே அந்தி கிறிஸ்தவர்கள் என்று அழைக்கலாம்!

சில சமயம் இவர்கள் பேசுவதை கேட்டால் திக் திக் என்கிறது.
எத்தனை பேரை இப்படி பேசி ஏமாற்றி நரகத்திற்கு நேராக கொண்டு செல்கிறார்களோ என்று.

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

என்னை உற்சாகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சகோ. எபி அவர்களே

மற்றும் சகோ. மைகோவை, சகோ. விஜய் இத்தொடரை எழுதுவதற்கு என்னை பெருமளவு உற்சாகமூட்டிய சகோ. சில்சாமிற்கும் என் இதயம் கனி்ந்த நன்றிகள்.

யெகோவா சாட்சிகளின் உருவான விதம், அவர்களின் கொள்கைள். கோட்பாடுகள், விநோதமான பழக்கவழக்கங்கள் குறித்தும் வரும் வாரங்களில் எழுதுகிறேன். இக்காரியங்களுக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்

இந்த இயக்கம், இதுபோன்ற இயக்கங்கள் வீடுவீடாக சென்று பிரசாரம் செய்து மக்களை வஞ்சித்துப் போடுகிறார்கள்.  அவர்களைக் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஊட்ட வேண்டும். இதுவே எமது ஆத்மபாரம்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

கொல்வின் உங்கள் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. அறியாத நிறைய விசயங்களை தருகிறீர்கள். பயனுள்ள பதிவுகள்

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

இவர்களைத் தொடர்ந்து அடுத்த அடுத்த தலைவர்களான Nathan Homer Knor (1905-1977), Frederick W. Franz குறித்த பதிவுகளை ஒரே பதிவில் பார்த்துவிட்டு யொகோவா சாட்சிகளின் கொள்கைகள், அவர்களின் வளர்ச்சி குறித்து படிப்படியாக பார்ப்போம்.

இவர்களின் சில விநோதமான கொள்கைகள்
பிறந்தநாள் கொண்டாட்டத்தை தடை செய்துள்ளமை
இரத்தம் ஏற்றிக் கொள்வதை தடுத்துள்ளமை
தடுப்பூசி போடுவதை தடுத்துவிட்டு பின்னர் அனுமதித்தமை.
இயேசு பிறப்பை முன்னர் கொண்டாடிவிட்டு தற்போது கேலி செய்கின்றமை. இயேசு அக்டோபர் மாதம் பிறந்தார் என கூறுதல்)
சிலுவைப்பலியை முக்கியமற்றதாக கருதுதல்


இன்னும் இவை போன்றன ஆராயப்படும்.




__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

யொகோவா சாட்சிகளின் இரண்டாவது தலைவரான Joseph Franklin Rutherford 1861 November 8 ஆந்திகதி  அமெரிக்காவின் மிஸ்சூரி மாநிலத்திலுள்ள மோர்கன் நகரத்தில் பிறந்தார்

அவர் ஆரம்பத்தில் பெப்டிஸ்ட் சபையைச் சேர்ந்தவரராக இருந்தார். பாரம்பரிய போதனைகளை வெறுப்பவராக காணப்பட்டார்

Booneville என்னுமிடத்தில் வக்கீலாகவும் நீதிபதியாகவும் பணிபுரிந்துள்ளார்.

ரசலின் நூல்களை 1894 இல் வாசித்தபின் 1906 இல் ரசலின் குழுவோடு இணைந்து கொண்டார்.

ரசலின் மரணத்திற்கு பின்பு 1917 இல் இதன் தலைவரானார். (Source Anonymous, Jehovah's Witness in the Divine Purposes pp 65-66)

யெகோவாவின் சாட்சிகள் இரை எசக்கியேல் 9:1-11 இல் முன்னறிவிக்கப்பட்ட ஏழாவது தூதனாக கருதினார்கள். (Source J.H. Gerstner, The Teaching of Jehovah's Witness p17)

தற்காலத்தில் தானே யெகோவாவின் வாயாக இருப்பதாகவும், தன்னிடமே தற்காலத்துக்கான தேவவார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளதாவும் இவர் தெரிவித்தார். (Source : J.F. Rutherford, Why Serve Jehovah? , p62)

1931 இல் ஓகாயோ மாநிலத்திலுள்ள கொலம்பஸ் எனும் இடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஏசாயா 43:12ஐ அடைப்படையாகக் கொண்டு தனது இயக்கத்திற்கு “யெகோவா சாட்சிகள்“ என்று பெயரிட்டார்
(Source : M.Cole, Jehovah's Witness P. 101)


இவரின் காலத்திலேயே வீடுவீடாக சென்று சுவிஷேசம் அறிவிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.

ரசலை விட இவர் 20 மடங்கு (சுமார் 100 புத்தகங்கள்) அதிகமாக எழுதியுள்ளார்  (Source D.J.Hesselgrave, ed., Dynamic Religious Movements, p176)

1921-1940 இடைப்பட்ட காலத்தில் 337,000,000 அச்சிடப்பட்டுள்ளதோடு (Souce : C.S. Braden, They Also Believe, p., 363) 1941 வரை இவரது புத்தகங்கள் 80 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (Source : W. Martin, The Kingdom of the Cults p.68)

இவரின் காலத்திலேயே யெகோவாவின் சாட்சிகள் பாரிய வளர்ச்சிடைந்தார்கள்.

புதிய தலைவர் Rutherford ஆரம்பத்தில் எதிர்நோக்கிய மிகப் பெரிய சிக்கல் ரசலின் நிறைவேறாத தீர்க்கதரிசனத்தை எவ்வாறு விளக்குவது என்பதாகும். இயேசு 1914 ம் ஆண்டு மறுபடியும் வந்து தமது ஆயிர வருட அரசாட்சியை ஆரம்பிப்பார் என்றே ரசல் போதித்து வந்தார். ஆனால் 1914 ஆம் ஆண்டு இயேசுக்கிறிஸ்துவின் மறுவருகைக்குப் பதிலாக உலகம் அதுவரையில் கண்டிராத கொடிய முதலாவது உலக மகா யுத்தம் ஆரம்பமானது இதனால் 1914 ஆம் ஆண்டு உலகின் முடிவு சட்டரீதியாக சம்பவித்து என விளக்கினார். இயேசுக்கிறிஸ்து ராஜாவாக அவ்வருடம் முடிசூட்டி ராட்சியத்தைப் பரலோகத்தில் ஆரம்பித்தார் என்றும் அவரது ஆயிரவருட ராட்சியம் பூமிக்கு வருவதற்கு சிறிது காலம் செல்லும் என்றும் கூறியதோடு, அதுவரைக்கும் தீயசக்திகள் தங்களுக்கு கொஞ்சகாலமே இருப்பதை அறிந்து அதிதீவிரமாக நீதியோடு போராடுவதாகவும் 1914இல் ஆரம்பமான உலக யுத்தம் இதையே காட்டுகிறது என்றும் இவ்வுயத்தம் உலகமுடிவில் நடக்கும் அர்மெகெதோன் யுத்தத்தை நோக்கிச் செல்லுகிறது என்றும், அதன் முடிவில் இயேசுக்கிறிஸ்துவின் இராட்சியம் பூமியில் தாபிக்கப்படும் என்றும் விளக்கினார் (Source D.J.Hesselgrave, ed., Dynamic Religious Movements, p176)

1917 July மாதம் வெளிவந்த Millenial Dawn எனும் புத்தகத்தின் 7வது தொகுதி குழுவினரிடைய ஏற்படுத்திய சர்ச்சை காரணமாக அங்கத்தினரின் 20% (4000 பேர்) பிரிந்து போயினர். ரசல் எழுதிய நூல்களில் திரிபை ஏற்படுத்தியமையே காரணமாக கருதப்படுகிறது. (Source: D.Harris, Awake to the Watch Tower, p20-21)

இவர் உரைத்த  (கள்ள)தீர்க்கதரிசனங்கள்
1920 இல் வெளிவந்த Millions Now Living will Never Die எனும் நூல்
1925இல் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்போர் உயிர்த்தெழுவார்கள்.
1941 Childrens எனும் நூலில்
அர்மகெதோன் யுத்தம் நடைபெறும் அது முடியும்வரை திருமணம் முடிக்கவேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். (Source : D. Harris Awake to the Watch Tower p21)

1930 இல் கலிபோனியா மாநிலத்திலுள்ள San Diego எனுமிடத்தில் உயிர்தெழும் உயிர்த்தெழும் பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் வாழ்வதற்கு வீடு ஒன்றை வாங்கினார்.

1942 இல் இவர் மரணமடைந்தார்.







__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Newbie>>>வருக..வருக..!

Status: Offline
Posts: 4
Date:
யெகோவா சாட்சிகளின் தலைவன் இரஸல் குறித்த இரகசியங்கள்..!
Permalink  
 


chillsam wrote:
நமது அன்புக்குரிய சகோதரரும் "மைகோவை அண்ணா" என்று தமிழ் கிறித்தவ தளத்தின் நண்பர்களால் அதிக நேசத்தோடு அழைக்கப்படுபவருமான அருமை நண்பர் மைகோவை அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்;முதலில் பதிவிலேயே முத்தான கருத்தைப் பதித்தமைக்கு நன்றி..!

தாங்கள் தமிழ் கிறித்தவ தளத்தில் பதித்த கோவை பெரியன்ஸுக்கான பதிலை எடுத்து இங்கே பதிக்கலாமா..?

கிறிஸ்துவுக்குள் அன்பான போதகர் அவர்களுக்கு உங்களின் அன்பு உபசரிப்புக்கு நன்றி. எல்லா இடங்களிலும் பதிவிட ஆசைதான் ஆனால் என்னுடைய நேரக்குறைவினால் இங்கு வரமுடியவில்லை. அதிலும் இந்த தொடுப்பை கண்டுபிடிக்க நான் ஒரு போராட்டமே நடத்திவிட்டேன்.
என் பதிவுகள் பிரயோஜனமாக இருந்தால் தாராளமாக பதியுங்கள்
கோல்வின் உங்களின் ஊழியம் மிகவும் அருமை. விபச்சாரக்காரர்களின் முகமூடிகளை கிழித்துள்ளீர்கள்.
நான் ஒரு தெலுங்கு வீடியோவை இங்கு தர ஆசைப்படுகிறேன்.இது இந்த பதிவுக்கு பொருத்தம் இல்லாவிட்டால் அதை வேறு இடத்துக்கு மாற்றவும்.





-- Edited by mycoimbatore on Thursday 10th of March 2011 07:16:07 PM

__________________
இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

vijay76 wrote:
அப்படியே வில்லியன் மரியன் பிரன்ஹாம் என்ற பிரகஸ்பதியின் தோலையும் உரித்தால் நலமாக இருக்கும்.

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=41100070&page=0

அருமை நண்பர் விஜய் அவர்களே,என்ன இப்படி கேட்டுட்டீங்க‌...ப்ரன்ஹாம் எனக்கு மிகவும் பிடித்தமான தலைவர் ஆவார்;ச்சும்மா சொல்லக்கூடாது... சூப்பர் ஆள் தெரியுமா? அவரைக் குறித்து ஏற்கனவே எழுதத் துவங்கிவிட்டேன்;அதன் விவரத்தை அறிய மேற்காணும் தொடுப்பை சொடுக்கவும். இது இரஸல் குறித்த விவரங்களை மட்டுமே தொகுக்கும் திரியானதால் இத்துடன் நிறுத்துகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

மிகவும் அருமையான தகவல்கள். நான் இந்த அமைப்பைக் குறித்தும் அவர்களது துர் உபதேசம் குறித்தும் அறிந்துகொள்ள நினைத்திருந்தேன். எனக்கு பல புதிய தகவல்களைத் தந்த சகோ.கொல்வின் மற்றும் சகோ.சில்சாம் ஆகியோருக்கு நன்றிகள்! அப்படியே வில்லியன் மரியன் பிரன்ஹாம் என்ற பிரகஸ்பதியின் தோலையும் உரித்தால் நலமாக இருக்கும்.

-- Edited by vijay76 on Tuesday 8th of March 2011 05:25:23 PM


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: யெகோவா சாட்சிகளின் தலைவன் இரஸல் குறித்த இரகசியங்கள்..!
Permalink  
 


ஒன்றை சரியாக வாசித்துக் கூட விளங்கிக் கொள்ள முடியவில்லை. இங்கு நான் என்ன ஆங்கிலத்திலா பதிந்துள்ளேன். தமிழில் தானே பதிந்துள்ளேன். மற்றவர்களின் ஆக்கங்களையெல்லாம் தனது பெயரில் Copy & Paste செய்யத் தெரியும். அதற்குரிய Source ஐ குறிப்பிடத் தெரியாது

இத்தகையவர்களுடன் வாதம் செய்யாதிருப்பதே புத்திசாலித்தனம்.

தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.(Prov 10:23)


விவேகியானவன் அறிவோடு நடந்துகொள்ளுகிறான்; மூடனோ தன் மூடத்தனத்தை வெளிப்படுத்துகிறான்.(Prov 13:16)




__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

colvin wrote:
ரசல் மட்டுமல்ல அவர்களைப் பின்தொடர்ந்து வந்த யொகோவா சாட்சி தலைவர்கள் பலரும் கள்ளத்தீர்க்கதரிசனங்கள் உரைத்துள்ளனர். அவற்றை ஆதாரத்துடன் பின்னர் பார்ப்போம். இன்று இவர்கள் மற்றவர்களை தூற்றுவது வேடிக்கை.

இவருக்கு அடுத்த தலைவரான Joseph Franklin Rhtherford (1869-1942) பற்றி பார்ப்போம். அடுத்த வாரம் வரை சற்று பொறுத்திருங்கள். இவரை யெகோவா சாட்சிகள் எசேக்கியேல் 9:1-11 இல் முன்னறிவிக்கப்பட்ட சபைக்கான ஏழாவது தூதனாக கருதுகிறார்கள்.

(Source : J.H. Gerstner, The Teachings of Jehovh's Witnesses, p-17)




அன்பு சகோதரர் கோல்வின் அவர்களுக்கு,தாங்கள் மேற்காணும் வரிகளின் படி இரஸல் என்பவரை ஏழாம் தூதனாக அவருடைய அடியவர்கள் கருதுவதாகக் கூறினீர்களா என்ன? அவருக்குப் பின் வந்த ரூதர் போர்டு என்பவரைத் தானே அவரது அடியவர்கள் ஏழாம் தூதனாகக் கருதினார்கள்? எப்படியோ இதனால் (மேசியாவின்) எதிரிகள் நல்லதொரு ஸ்டேட்மெண்ட் விட்டிருக்கிறார்கள்,அது என்னை மிகவும் கவர்ந்தது;என்னுடைய மகிழ்ச்சியைக் கண்டவாறு வெளிப்படுத்தியிருக்கிறேன்..!

// அன்பு சகோதரர் டினோ அவர்களுக்கு,நமது சகோதரர் ரசல் தன்னை ஏழாம் தூதன் என்று சொல்லவில்லை , ஆனால் அவரை பின்பற்றி வந்த மற்ற சகோதரர்கள் தான் அவர் மீது கொண்ட பற்றுதலினால்(அவரிடம் இருந்த பணத்தின் )  அவரை ஏழாம் தூதன் என்று வர்ணிக்கிறார்கள்,

இப்போ யார் மேல குற்றம் சொல்றது??????????????????????????//


Chillsam:-இப்ப தானய்யா நீங்களெல்லாம் சரியான ஆம்பளைங்க...இதத்தான இத்தனை காலமா வெளிப்படையாக அறிவிக்கச் சொல்லிப் போராடினேன்;இனிமேல் நீங்கள் தாராளமாக இயேசுவை தொழத்தக்க தெய்வமல்ல என்று சொல்லலாம்;உங்களை நாங்கள் எதிர்க்கவே மாட்டோம்;ஏனெனில் நீங்கள் இரஸல் எனும் கள்ளப்போதகனுடைய செய்திகளால் கவரப்பட்டு இந்த நிலைக்கு வந்தவர்கள் என்பது ஊரறிந்த இரகசியமாகும்;எனவே நீங்கள் "வேதத்திலிருந்து, வேதத்திலிருந்து" என்று மீண்டும் மீண்டும் மூச்சுபிடிக்க வாதாடாமல் ரொம்ப சிம்பிளாக இரஸலின் வேதத்திலிருந்து என்று சொல்லிவிட்டு இராஜா மாதிரி போய்க் கொண்டிருக்கலாம்;அதற்கு மேல் உங்க பின்னால எவன் வந்தாலும் என்னைப் போன்றவர்களுக்கு அவர்களெல்லாம் அன்றாடம் என்னுடைய தலையிலிருந்து வீழ்ந்து இங்குமங்கும் அல்லாடும் தன் வேர்களை இழந்த மயிரைப் போன்றவர்கள்; என் பிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்பட்டுப் போகும் என்று உங்களைக் குறித்தே இயேசுவானவர் சொல்லிச் சென்றார்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
யெகோவா சாட்சிகளின் தலைவன் இரஸல் குறித்த இரகசியங்கள்..!
Permalink  
 


என்னை உற்சாகப்படுத்தி வரும் சகோ. மைகோவை மற்றும் சகோ. சில்சாமிற்கு மிக்க நன்றி... இந்த தலைப்பை மாற்ற சொல்லி கேட்க நினைத்திருந்தேன். விடயத்திற்கு சற்றும் பொருத்தமில்லாருந்தது. மாற்றியமைக்கு மிக்க நன்றி, மற்றும் அந்த பிரமிட்டு படத்தை போட்டு அசத்தி விட்டீர்கள்.

இங்கு தரப்பட்ட விபரங்கள் பல்வேறு நூல்களிலிருந்து திரட்டப்பட்டவை. அவை (Author Name, Title Name, Page No) ஆசிரியர் பெயர், தலைப்பு, பக்க இலக்கம் ஆகியவற்றுடன் தரப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளவர்கள் சம்பந்தப்பட்ட நூல்களை படித்து தெரிந்து கொள்ளலாம். இன்னும் அநேக வி்டயங்கள் உள்ளபோதும் அவற்றுக்குரிய நூல் மேற்கோள் ஆதாரங்கள் (Citation) இல்லாதபடியால் பதிக்க இயலவில்லை. அவ்வாறு பதிப்பதும் முறையன்று.

ரசல் மட்டுமல்ல அவர்களைப் பின்தொடர்ந்து வந்த யொகோவா சாட்சி தலைவர்கள் பலரும் கள்ளத்தீர்க்கதரிசனங்கள் உரைத்துள்ளனர். அவற்றை ஆதாரத்துடன் பின்னர் பார்ப்போம். இன்று இவர்கள் மற்றவர்களை தூற்றுவது வேடிக்கை; இவருக்கு அடுத்த தலைவரான Joseph Franklin Rhtherford (1869-1942) பற்றி பார்ப்போம். அடுத்த வாரம் வரை சற்று பொறுத்திருங்கள். இவரை யெகோவா சாட்சிகள் எசேக்கியேல் 9:1-11 இல் முன்னறிவிக்கப்பட்ட சபைக்கான ஏழாவது தூதனாக கருதுகிறார்கள்.

(Source : J.H. Gerstner, The Teachings of Jehovh's Witnesses, p-17)

குறுகிய காலத்திற்குள்ளே இப்பதிவு இவ்வளவு வரவேற்பைப் பெறும் என்று எண்ணியதில்லை. உற்சாகப்படுத்தி வரும் அனைவருக்கும் என் நன்றிகள். அடுத்த திங்கள் வரை சற்றுப் பொறுத்திருங்கள்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: யெகோவா சாட்சிகளின் தலைவன் இரஸல் குறித்த இரகசியங்கள்..!
Permalink  
 


colvin wrote:
ரசலின் (யெகோவா சாட்சிகளின்) பெரும்பாலான போதனைகள் ஏழாம் நாள் அட்வாந்து சபையின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளதாக The American Religions (p77-81 by G.Melton) கூறுகிறது
இதை வாசிக்கும் வாய்ப்பு பெரியவர் அன்பு அவர்களுக்குக் கிடைத்தால் அவர் நிச்சயமாக சந்தோஷக் கூத்தாடுவார்;ஏனெனில் அவர் ஆரம்பத்தில் ஏழாம் நாள்காரரோ என்று  நினைக்குமளவுக்கு என்னையே தடுமாறச் செய்தார்; அதன்பிறகே கர்த்தருடைய பெரிதான கிருபையால் நான் முன்வைத்த ஒரே ஒரு கேள்வியில் அனைத்தும் வெளியர‌ங்கமானது... அந்த கேள்வி இன்றைக்கு தமிழ் கிறித்தவ இணையத்தின் பிரபலமாகிவிட்ட கேள்வி..."இயேசு தொழத்தக்க தெய்வமா?" என்பதே; நம்முடைய (மேசியாவின்) எதிரிகளே கூட தற்போது சவாலான இந்த கேள்வியை ஏற்றுக்கொண்டு அதற்கே பதிலளித்து வருகின்றனர்; வெளியரங்கமாக்குகிறதெல்லாம் வெளிச்சமாயிருக்கிறது..!

 



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

அருமை நண்பர் கோல்வின் அவர்களே,தங்களது பிரயாசங்களுக்கு மதிப்பளிக்கும் வண்ணமாக இந்த திரியின் தலைப்பைப் பின்வருமாறு மாற்றியிருக்கிறேன்..."யெகோவா சாட்சிகளின் தலைவன் இரஸல் குறித்த இரகசியங்கள்..!"

உங்கள் தகவல்களைப் பார்க்கும்போது எனக்கு ஒப்பீடு தோன்றியது;அது என்னவென்றால் அவங்க அடித்தளம் போட்டு ஒரு கட்டிடம் கட்டிகிட்டிருக்காங்களா...எல்லோரும் கட்டிடத்தின் மேல் தளத்தில் பரபரப்பாக வேலை செஞ்சுக்கிட்டிருக்க, நீங்க என்ன பண்றீங்க, கட்டிடத்தின் அடித்தளத்திலிருந்து வேகமாக இடிச்சிகிட்டே வர்றீங்க‌... ஆஹா... ஓஹோ... அற்புதம் தான் போங்க‌...என்று காலஞ்சென்ற இரஸல் கூட இப்ப இருந்தா உங்கள பாராட்டுவாரு..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

1 2  >  Last»  | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard