Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வஞ்சிக்கப்படாதிருங்கள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
வஞ்சிக்கப்படாதிருங்கள்
Permalink  
 


chillsam wrote:

 

dollar_bill_showing_new_world_order.gif


http://mihaicristu.wordpress.com/2011/05/17/what-is-the-illuminati/


http://www.google.com.bn/url?sa=t&source=web&cd=2&ved=0CEEQFjAB&url=http%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FIlluminati&rct=j&q=illuminati%20members&ei=kusGTpvXOsyMmQWDp82rDQ&usg=AFQjCNForeSBx0-lgh-EOg30S7ARrTIuZw&cad=rja


Camelot logo A letter from a
Norwegian politician

 

 http://www.projectcamelot.org/norway.html



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

 

dollar_bill_showing_new_world_order.gif


http://mihaicristu.wordpress.com/2011/05/17/what-is-the-illuminati/


http://www.google.com.bn/url?sa=t&source=web&cd=2&ved=0CEEQFjAB&url=http%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FIlluminati&rct=j&q=illuminati%20members&ei=kusGTpvXOsyMmQWDp82rDQ&usg=AFQjCNForeSBx0-lgh-EOg30S7ARrTIuZw&cad=rja



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 63
Date:
Permalink  
 

எல்லா தீர்கதரிசனமும் நிறைவேறியது என்று நான் (வெளி ) படித்ததாக நியாபகம் ,

மேலும்

தங்களின் Hero வின் மேல் நிறைய குற்றச்சாட்டுகள் நிலுவை 'ல் உள்ளது

பொறுத்திருந்து பாப்போம்


__________________
தேவனிடத்தில் பட்சாபாதமில்லை...
ரோமர் 2;11


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 32
Date:
Permalink  
 

சகோ. கொல்வின், அவர்களே.. நீங்கள் எந்த தலைவரை சொன்னீர்களோ தெரியலை..! ஆனால்..
புலிகள் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார்.. புலிகளின் படை அணிகளும் இருக்கிறது..
TV -யில் காட்டப்பட்ட உடலை கண்டு கலங்க வேண்டாம். இது எதிரிகளுக்கும் தெரியும்...
சரியான சமயத்தில் புலிகள்.. வருவார்கள்...!

__________________
karna


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கோல்டா... நீர் சாதுவின் கைக்கூலி என்பது எனக்குத் தெரியும்; ஆக்கப்பூர்வமான விவாதங்களைக் கெடுத்துக்கொண்டிருப்பதைவிட கொஞ்சம் அமைதியாக இருந்தால் உமக்கு நல்லது;நேரடியாக வந்துமோதினால் சேதாரம் பலமாக இருக்கும் என்பதால் நீர் பெண் பெயரில் நுழைந்து குழப்பம் விளைவிப்பதை இனியும் சகிக்கமுடியாது;திருடனுக்கு காரோட்டுபவனும் குற்றவாளியாவான்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

//என்ன செய்வது? நீங்க கொஞ்சம் நாங்க நேசித்த தலைவரை கொலை செய்யாமல் இருந்திருந்தால், உதவிக் கரம் சீனாவுக்காக இல்லாமல் உதவிக்காக் நீட்டி இருக்கலாம்.//

உங்கள் இராணுவம் இங்கு வந்து என்ன கொடுமைகள் எல்லாம் செய்தது தெரியுமா? வைத்தியசாலையில் புகுந்து வைத்தியர்களையும் நோயாளிகளையும் கொன்று போட்டது.

பெண்களை குடும்பத்தார் முன்னிலையிலேயே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியது.  (Rape)

எத்தனையோ அப்பாவி இளைஞர்கள் காணாமல் போயினர். பலர் துப்பாக்கிக்கு இரையாயினர்.

கொடுமைகள் சொல்லி மாளாது. அனைத்தையும் எழுத முடியவில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள்.

ராஜீவ் காந்தி என்ற ஒரு நபரை மட்டும் பிடித்துத் தொங்கிக் கொண்டிராதீர்கள். இன்னும் விசாரணை கூட சரியாக முடியவில்லை. ஏராளமான உள்ளுர் சாட்சிகளே விசாரிக்கப்படவில்லை.



//இலங்கையில் literacy rate 100% ஆ?

95% தொட்டுவிட்டது. அடுத்த சில வருடங்களில் 100% எட்டிவிடும். ஆனால் இன்னும் 10 ஆண்டுகள் போனாலும் இந்தியாவின் நிலை மாறாப்போவதில்லை.


Why Not? You first read his books. You will understand.

கீழே அவர்  எழுதியுள்ள தீர்க்கதரிசன அபத்தங்களை படிக்கவில்லையா? அவரின் ஒரு சில ஆக்கங்கள் நல்லவையே! அவரை குறைத்து மதிப்படுவதாக எண்ண வேண்டாம். சாதுவுடன் இருந்தால் இப்படிப்பட்ட நிலைதான் வரும் (கள்ளத்தீர்க்கதரிசனம் உரைப்பது)




__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

researcher என்று சொல்லுகிறீர்கள்? எந்த கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார்.

In the School of the Holy Spirit. ஆண்டவரின் பாதத்தில் அமர்ந்து படிப்பதற்கு ஈடாகுமா?

எரேமியா 9

23 ஞானி தன் ஞானத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; பராக்கிரமன் தன் பராக்கிரமத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்; ஐசுவரியவான் தன் ஐசுவரியத்தைக்குறித்து மேன்மைபாராட்டவேண்டாம்;

24. மேன்மைபாராட்டுகிறவன் பூமியிலே கிருபையையும் நியாயத்தையும் நீதியையும் செய்கிற கர்த்தர் நான் என்று என்னை அறிந்து உணர்ந்திருக்கிறதைக்குறித்தே மேன்மைபாராட்டக்கடவன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; இவைகளின்மேல் பிரியமாயிருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.


//good scholar என்று நீங்கள் தான் சொல்லுகிறீர்கள். இந்த தீரக்கதரிசனத்தை வாசிக்கும் யாராவது சொல்வார்களா?//

Why Not? You first read his books. You will understand.


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Chin பக்கத்தில் இருக்கிறபடியால் தானா இந்தியா வலிய ஓடி வருகிறது.

என்ன செய்வது? நீங்க கொஞ்சம் நாங்க நேசித்த தலைவரை கொலை செய்யாமல் இருந்திருந்தால், உதவிக் கரம் சீனாவுக்காக இல்லாமல் உதவிக்காக் நீட்டி இருக்கலாம்.


என்றாலும் தமிழ் மக்கள் படும் வேதனை, இரத்தக் கண்ணீர்தான் கொண்டு வருகிறது.

இலங்கையில் literacy rate 100% ஆ?

பாபாவை சாமியாக்கி கும்புடுகிறான். அம்மாபகவான் வேறு. நித்தியானந்தா என்ன சளைத்தவரா? பெண்அடிமைத்தனம், உலகிலே எயிட்ஸ் நோயாளிகள் அதிகமான நாடு

இப்படி பல வகையில் நாங்கள் பெருமை பட்டுக் கொள்ளலாம் !?

வேண்டாம் சகோ கொல்வின், அப்புறம் நானும் இலங்கை பற்றி நிறைய சொல்ல வெண்டி வரும்!!

சீனா-இந்திய போர் வந்தால் தமிழர்கள் சீன பக்கம்தான் சாய்வார்கள்.

என்ன ஒரு அன்பு??
எது எப்படியோ, உலகம் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்தால் நல்லது.




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

கள்ளத் தீர்க்கதரிசியின் அபத்தங்களை சுட்டிக் காட்டியுள்ளோம். வாசிக்கவில்லையா? திருமதி கோல்டா தெரியாமல்தான் கேட்கிறேன். நீங்கள் படித்தவர்தானே!. அவர் கூறிய தீரக்கதரிசனங்கள் சரியானதுதானா? பலித்ததா?


He is a good scholar and a researcher.

researcher என்று சொல்லுகிறீர்கள்? எந்த கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றார். good scholar என்று நீங்கள் தான் சொல்லுகிறீர்கள். இந்த தீரக்கதரிசனத்தை வாசிக்கும் யாராவது சொல்வார்களா?

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

China பக்கத்தில் இருக்கிறபடியால் தான் இந்தியா வலிய ஓடி வருகிறது. இது தெரியாதா உங்களுக்கு? உங்கள் இந்திய மக்களின் கல்வி அறிவு சதவீதம் என்ன? கொஞ்சம் சொல்லுங்களேன்!

பாபாவை சாமியாக்கி கும்புடுகிறான். அம்மாபகவான் வேறு. நித்தியானந்தா என்ன சளைத்தவரா? பெண்அடிமைத்தனம், உலகிலே எயிட்ஸ் நோயாளிகள் அதிகமான நாடு

இந்தியாவின் ஆதரவு தமிழர்களுக்குத் தேவையில்லை. நிகழ்காலத்தில் மட்டுமல்ல எதிர்காலத்திலும் இந்தியா தமிழர்களுக்கு எதிராகவே செயற்படும். இந்தியாவினால் உபாத்திரம் பட்டதே அதிகம். சீனா-இந்திய போர் வந்தால் தமிழர்கள் சீன பக்கம்தான் சாய்வார்கள்.

-- Edited by colvin on Saturday 26th of February 2011 03:32:42 PM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Vincent Selvakumar இன் எழுத்துக்கள் அறிவுப் பசி தீர்க்கும். அவர் ஜெபங்கள் பிரசங்கங்கள் ஆத்மீக பசி தீர்க்கும். He is a good scholar and a researcher.

இன்று Angel TV live telecst இல் அவர்தான் பேசுகிறார். மாலை 7 மணி இந்திய நேரத்திற்கு. பாருங்கள், குறை கண்டு பிடிக்கவாவது!


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

படிக்காத ஜனங்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் ஒன்றுதானே இந்தியா!

?? இப்படிப்பட்ட இந்தியாவின் support வேண்டும் என்று தானே போராடினீர்கள்?

இப்படியெல்லாம் பேசாதீர்கள். அப்புறம் ,World Cup Match இல் இலங்கை தோற்றுவிடும்!


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

இதோ கள்ளத்தீரக்க்தரிசனங்கள் குறித்தும் கள்ளத்தீர்க்கதரிசிகள் குறித்தும் வேதம் இப்படியாக நம்மை எச்சரிக்கின்றது.


கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்கள் ஆட்டுத்தோலைப் போர்த்துக்கொண்டு உங்களிடத்தில் வருவார்கள்; உள்ளத்திலோ அவர்கள் பட்சிக்கிற ஓநாய்கள்.(Matt 7:15 )

அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள்.(Matt 24:11)

ஏனெனில், கள்ளக்கிறிஸ்துக்களும் கள்ளத்தீர்க்கதரிசிகளும் எழும்பி, கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்க ளையும் அற்புதங்களையும் செய்வார்கள். (Matt 24:24)


பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றி யிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.(1John 4:1)


மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள்; சொப்பனம் காணப்பண்ணுகிற உங்கள் சொப்பனக்காரருக்குச் செவிகொடாமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.(Jer 29:8)








__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

\\இதோ நான் பெரிய சமுத்திரத்தைப் பார்க்கிறேன். அதில்பதின்மூன்று (13) தேவ துhதர்கள் கடலின் ஆழத்தில் நிற்கிறார்கள். அவர்களுடைய முழங்கால் அளவு தண்ணீர் இருக்கிறது. கர்த்தருடைய கை அசைவுக்காக காத்திருக்கிறோம்,விரல் அசைவு உண்டானவுடன் சமுத்திரத்தைக் கலக்கப்போகிறோம். சுனாமியால் நீங்கள் பார்த்த பேரழிவு கொஞ்சம்.ஒரே நேரத்தில் பல நாடுகளில் இந்த பேரழிவுகள் சம்பவிக்கப் போகிறது\\

உச்சபட்டச காமிடி. பபிலோனிய புராணக்கதைகளில்தான் இப்படிப்பட்ட சம்பவங்கள் வருகின்றன. இந்துப்புராணங்களிலும் இப்படிப்பட்ட கதைகளுக்கு பஞ்சம் இல்லை. உங்கள் நாட்டில் பல இந்து மெகா சீரியல்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இவற்றைப் பார்த்த பாதிப்பில் சொல்லியிருப்பீர்கள்.
எப்படித்தான் இப்படிப்பட்ட தீர்க்கதரிசனங்களை உங்கள் நாட்டவர்கள் நம்புகிறார்களோ தெரியாது!. படிக்காத ஜனங்கள் அதிகமாக இருக்கும் நாடுகளில் ஒன்றுதானே இந்தியா! அதான் இப்படியெல்லாம் உளருகிறார்கள்.


-- Edited by colvin on Saturday 26th of February 2011 01:03:48 PM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

//“வடக்கிலிருந்து”என தவறுதலாக சொல்லிவிட்டாரோ, இந்தியாவின் வடக்கே ரஷ்யா தான் இருக்கிறது.//

எப்படித்தான் இப்படி சாதாரண பொது அறிவே இல்லாமல் உளருகிறோர்களோ தெரியவில்லை. உலகத்தின் தேவன் தான் இந்தமாதியெல்லாம் பேச வைக்கிறான்..

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

அருமையான பதில்கள் சகோதரே!. இது போன்று குறி சொல்லுபவர்களின் தோலினை உரிக்க வேண்டிய அவசியம். அப்படியே போல் தினகரனின் 2011 தீர்க்கதரிசனங்கள் குறித்தும் எழுத இயலுமா? ஒரே அபத்தம். நான் செய்ய வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். தற்போது சில பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதால் செய்ய இயலவில்லை.

ஆயினும் சகோதரரே கண்டிப்பாக செய்யப்பட வேண்டும். இவர்களினால் மக்கள் வஞ்சிக்கப்பட்டுப் போகக் கூடாது.


கர்த்தரின் கரம் உங்களோடிருக்கும்.

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 9
Date:
Permalink  
 


ஜனவரி 1 - 2010அன்று ஏஞ்சல் டி.வியில்

சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் சொன்ன

தீர்க்கதரிசனங்கள்:


-->

வஞ்சிக்கப்படாதிருங்கள்

ஜனவரி 1 - 2010அன்று ஏஞ்சல் டி.வியில்

சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் சொன்ன

தீர்க்கதரிசனங்கள்:


1.தேசத்தை குறித்து:

உன் தேசத்திலே பிரிவினைகளின் ஆவிகள் தேசத்தைத் துண்டாட விரும்புகிறது.ஒரே மொழியை பேசுகிறவர்கள் இனத்தின் அடிப்படையில் பிரிக்கப்படப் போகிறார்கள்,அது உன் தேசம் முழுவதும் பற்றியெறியப் போகிறது. அநேக மாநிலங்கள் நிம்மதி இழக்கும்.அநேக அரசியல்வாதிகள் கடத்தப்படப் போகிறார்கள். சிலர் கொலை செய்யப்படுவார்கள்.

குறிப்பு:

இது வேறொன்றுமல்ல, தெலுங்கானா பிரச்சனை அந்த நேரத்தில் உச்சக்கட்டத்தில் இருந்ததால் அதை யூகித்து சொல்லப்பட்டது.

2.இஸ்லாமிய தீவிரவாதம் குறித்து:

அமெரிக்காவில் தீவிரவாதங்கள் கட்டவிழ்த்து விடப் போகின்றன. இங்கிலாந்தில் கட்டவிழ்த்து விடப்போகின்றன. ஐரோப்பா நாடுகளில் கட்டவிழ்த்து விடப்போகின்றன. அநேக வணிக வளாகங்கள் தகர்க்கப்படப் போகின்றன. அவைகளின் கண்கள் இந்திய தேசத்தின் மேல் விழுந்திருக்கிறது. வருகிற வருடத்தில் (2010)ல் உன் தேசத்தில் பல இடங்களில் தீவிரவாதம் கட்டவிழ்த்து விடப் போகிறது. மிக முக்கியமான நகரங்களை குறிவைத்து இருக்கிறார்கள். இந்த முறை நடத்தப்படப் போகிற தாக்குதல்கள் இதுவரை உலகத்திலேயே நடந்திராத மிகப் பெரியதாக்குதல்களாக இருக்கப்போகிறது. ஏராளமான கட்டிடங்கள் தகர்க்கப்படப் போகிறது.

குறிப்பு:

இது எதுவும் கடந்த வருடத்தில் நிறைவேறவில்லை என்பது நாம் அறிந்ததே.மேலும் ஐரோப்பா என்பது ஒரு நாடு அல்ல,ஏராளமான நாடுகளின் கூட்டணி.இதில் எங்கு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினாலும் தான் சொன்ன தீர்க்கதரிசினம் நிறைவேறிவிட்டதாக மார் தட்டிக் கொள்ளலாம்.

3.சபைகளைக் குறித்து:

வடக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் கொடிய கள்ள உபதேசங்கள் புறப்பட்டு வரும். அவர்கள் ஒன்பது(9) வருடங்களாகஆயத்தப்பட்டார்கள்.(என்ன கணக்கோ தெரியவில்லை). அவர்கள் இந்த வருடம்(2010)ல் புறப்படப் போகிறார்கள். ஒவ்வொரு நாடுகளுக்குள்ளும் கடந்து வரப் போகிறார்கள்.

குறிப்பு:

இது பொத்தாம் பொதுவான ஜோஸ்யம். எந்த வருடத்திலும் இதை சொல்லலாம். மேலும் வடக்கிலிருந்துஎன தவறுதலாக சொல்லிவிட்டாரோ, இந்தியாவின் வடக்கே ரஷ்யா தான் இருக்கிறது.

4.இயற்கையைக் குறித்து:

இதோ நான் பெரிய சமுத்திரத்தைப் பார்க்கிறேன். அதில்பதின்மூன்று (13) தேவ துhதர்கள் கடலின் ஆழத்தில் நிற்கிறார்கள். அவர்களுடைய முழங்கால் அளவு தண்ணீர் இருக்கிறது. கர்த்தருடைய கை அசைவுக்காக காத்திருக்கிறோம்,விரல் அசைவு உண்டானவுடன் சமுத்திரத்தைக் கலக்கப்போகிறோம். சுனாமியால் நீங்கள் பார்த்த பேரழிவு கொஞ்சம்.ஒரே நேரத்தில் பல நாடுகளில் இந்த பேரழிவுகள் சம்பவிக்கப் போகிறது. இந்த வருஷத்தின் முடிவுக்குள்ளாகவா என்று நீங்கள் நினைக்கிறீர்கள், நான் இந்த குறிப்பிட்ட காலத்திற்குள் என்று சொல்லவில்லை. ஒருவேலை அடுத்த மாதமே நடந்தாலும் நடக்கலாம், ஒருவேளை அது அடுத்த வருஷத்திலே நடந்தாலும் நடக்கலாம், ஆனாலும் சீக்கிரமே நடக்கப் போகிறது.

குறிப்பு:

கர்த்தருக்கே சுனாமி எப்பொழுது வரும் என்று தெரியாமல் தடுமாறுவது போலக் காணப்படுகிறது. இனி எந்த வருடத்தில் சுனாமி போன்ற பேரழிவுகள் வந்தாலும் நான் 2010ல் சென்ன தீர்க்கதரிசனம் நிறைவேறிவிட்டது எனசகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் மேடையில் முழங்குவார்.

5.கொள்ளை நோய்கள் குறித்து:

இந்த வருஷத்திலே (2010ம்ஆண்டு) ஏழு (7) புதிய வகை காய்ச்சல்கள் உன் தேசத்திலே வரப்போகிறது. அது சீனா தேசத்திலிருந்து புறப்படப்போகிறது, ஆப்பிரிக்கா தேசத்திலிருந்து ஒரு (1) காய்ச்சல் புறப்படப்போகிறது. அதன் ழூலம் ஜனங்கள் திரளாய் மரிக்கப்போகிறார்கள். உன் தேசத்தை நோக்கி அது தீவிரமாய் கடந்து வருகிறது. ஏழு (7) காய்ச்சல்களில்மூன்று (3) காய்ச்சல்கள் பிள்ளைகளைத் தாக்கும். அநேக குழந்தைகள் அதில் மரிக்கப் போகிறார்கள்.

குறிப்பு:

இது சுத்தமான வடிகட்டிய பொய் என்பது 2011ம் ஆண்டில் தெரிந்துவிட்டது.

6.போர்களைக் குறித்து:

உன் தேசத்தின் எல்லைகள் சூழ போர் மேகம் நின்று கொண்டிருக்கின்றன.இரண்டு காரியங்கள் மூலம் போர் வர ஆயத்தப்படுகிறது. உன் தேசத்தின் உள்ளேயிருந்தும்,வெளியிலிருந்தும் தாக்குதல் வரப் போகிறது.வெளியில் இருந்து தாக்கும் போதுஅவர்களுடைய ஆதரவாளர்கள் உள்ளே இருந்து தாக்குவார்கள். உன் தேசம் தடுமாறப் போகிறது.

குறிப்பு:

பொத்தாம் பொதுவான தீர்க்கதரிசனம். குறிப்பிட்டு எந்த நாட்டிலிருந்து ஆபத்து வருகிறது என்று சொல்லாமல் தப்பித்துக் கொள்வது புரியும்.

7.நீரினால் ஏற்படும் பிரச்சனைகளைக் குறித்து:

குடிக்கும் தண்ணீர் மூலமாக பிரச்சனை வரப்போகிறது. அமெரிக்காவின் ஒரு மாகாணத்திலிருந்து அது தோன்றப் போகிறது. ஏராளமான ஜனங்கள் இந்த புதிய வியாதியினால் மரிக்கப் போகிறார்கள்.

குறிப்பு:

மற்றும் ஒரு பொய், “ஒரு மாகாணம்என்று சொல்வதில் இருந்தே அது கர்த்தர் சொல்லவில்லை என்பது தெரிகிறது. அமெரிக்காவின் மக்கள் இது பற்றி சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்களிடம் விளக்கம் கேட்க வேண்டும்.

8.குழந்தைகளைக் குறித்து:

குழந்தைகள் கொத்து கொத்தாக மரிக்கப் போகிறார்கள். அநேகர் விபத்துக்கள் மூலமாகவும், கொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டும்,கொள்ளை நோய் மூலமாகவும் மரித்துப்போவார்கள். அது இந்த வருஷத்திலேயே (2010)ல் சம்பவிக்கப்போகிறது. இரட்சிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்குள்ளே அதிகமாய் வரப்போகிறது.

குறிப்பு:

குழந்தைகள் மரிக்கப் போகிறார்கள் என்று சொன்னால் கூட பரவாயில்லை. இரட்சிக்கப்பட்டவர்களின் குடும்பத்திலேயே வரப்போகிறதுஎன்று சொன்னால் இரட்சிக்கப்பட்டது தப்பா? இரட்சிக்கப்பட்ட குடும்பதில் கர்த்தர் பாதுகாப்பை எடுத்து விடுவாரா?


9.பொருளாதாரம் குறித்து:

உன் தேசத்தின் பொருளாதாரத்தை முடக்கிப்போடும்படி முரட்டு இனத்தார் கள்ளப் பணத்தை அச்சடித்து விடப் போகிறார்கள். அநேக நாடுகளுக்குள்ளே இதை செய்யப் போகிறார்கள்.

குறிப்பு:

அவர் முரட்டு இனத்தார் என இஸ்லாமியர்களை மனதில் வைத்த கூறுகிறார். கள்ளப் பனப் புழக்கம் என்பது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாக பலநாடுகளில் இருக்கும் பிரச்சனை.

10.பொல்லாத ஆவிகள் குறித்து:

இந்தியாவிலும் இன்னும் சில நாடுகளிலும் ஏராளமான நரபலிகள் கொடுக்கப்படப் போகின்றன. அநேக மந்திரவாதிகள் எழும்பப் போகிறார்கள். பிசாசைத் தேடுகிறவர்கள் அதிகரிப்பார்கள். சாத்தானுடைய ஜனங்கள் திரளாய் தேசங்களுக்குள் ஊடுருவப் போகிறார்கள்.

குறிப்பு:

இது தீர்க்கதரிசனமா? அல்லதுதகவலா?



இந்தத் தீர்க்கதரிசனங்களைத்தான் ஜனவரி 1ம்தேதி 2010ல் ஏஞ்சல் டி.வியில் சகோ.வின்சென்ட் செல்வகுமார் அவர்கள் ஒரு மணி நேரத்திற்க்கும் மேலாக மூச்சுவிடாமல் பேசினார். பார்த்த அநேகர் ஆகா நம்மிடையே ஒரு தீர்க்கதரிசி தோன்றியிருக்கிறார் என எண்ணி ஆனந்தப்பட்டிருப்பார்கள்.ஆனால் யாரும் அவைகள் நிறைவேறியதா என்பதைக் குறித்து சற்றும் கவலைப்படாமல் அடுத்த தீர்க்கதரிசனச் செய்தியைக் கேட்க ஆவலாய் இருப்பார்கள்.

சகோ.வின்சென்ட் செல்வகுமார் கூறும் தகவல்கள் எல்லாம் அன்றாட நிகழ்வுகள், விஞ்ஞானம், அரசியல், பொருளாதார நிலைமையை கணித்து கூறுவதை அறியலாம்.மேலும் அவை எல்லா காலத்திற்கும் பொருந்தும் என்பதையும் அறியமுடியும்.

மேலும் பல விஷயங்கள் தவறானதாகவும், பொய்யாகவும் இருப்பதைப் புறிந்து கொள்ள முடியும். சாத்தானின் வருகையின் அடையாளம் குறித்து 2தெசலோனிக்கேயர் 2:12 கூறுகிறது அவர்கள் பொய்யை விசுவாசிக்கத்தக்கதாகக் கொடிய வஞ்சகத்தை தேவன் அவர்களுக்கு அனுப்புவார். வஞ்சிக்கிறவனின் அடையாளம் குறித்து நீதிமொழிகள் 14:25 கூறுகிறது வஞ்சனைக்காரனோ பொய்களை ஊதுகிறான். ஆகவே வஞ்சிக்கப்படாதிருங்கள்.

சத்தியத்தின் மேல் பிரியப்படாமல் இருக்கும் விசுவாசிகள் எளிதாக இந்த வஞ்சகத்தில் சிக்கிக் கொள்வார்கள். போதகர்கள் தங்கள் சபை விசுவாசிகளை எச்சரித்து வேத வசனத்தின்படி எல்லாவற்றையும் சோதித்துப் பார்க்க அவர்களை வலியுறுத்த வேண்டும்.

ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினால் சொல்லும் காரியம் நடவாமலும்,நிறைவேறாமலும் போனால்,அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்த தீர்க்கதரிசி அதைத் தன் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்படவேண்டாம்.” - உபாகமம் 18:22

----------------------------------------------------------------------------------------



-- Edited by senthil on Saturday 26th of February 2011 08:31:56 AM

-- Edited by senthil on Saturday 26th of February 2011 12:39:22 PM


__________________
SENTHIL KUMAR
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard