இன்று பெரும்பாலான கிறிஸ்தவ நிகழ்ச்சிகளை பார்த்தாலும் சரி பத்திரிகைகளை வாசித்தாலும் சரி சாட்சிகளே பாதி இடத்தை நிரப்பியிருக்கும். ஒருவரின் கூட்டத்தில் 100 பேர் குணமாகிட்டார்கள் என்று செய்திவந்தால் இன்னொருவர் 150 என்பார் இப்படியே இன்றொருவரின் கூட்டத்தில் அதிகரித்துக் கொண்டே செல்லும். முடிவிராது. எல்லாம் சுயவிளம்பரங்களுக்காக செய்யப்படுபவைதான். இதனால் காணிக்கை, தசமபாகம், விரும்பியதொகைகளை கொடுத்தல் என்று பெரிய Collection வரும். Business உம் நன்றாக நடக்கும்.
இவற்றில் பெரும்பாலும் பொய்சாட்சிகளாகவே இருக்கும். சில மிகைப்படுத்தப்பட்டவையாக இருக்கும். உண்மையில் இப்படிப்பட்ட காரியங்கள் தேவ சாபத்தையே வரவழைக்கும் என்பதை மறந்து விடுகின்றனர்.
சாட்சி செல்வதில் தவறேதும் இல்லை. தேவனுக்கு சாட்சியாக இருக்கும்படியே அழைக்கப்ட்டிருக்கிறோம். (ஏசா 43:10) அனைத்துக் காரியங்களிலும் நாம் தேவனுக்கு சாட்சியாக இருக்க வேண்டும்
இவற்றில் பல போலியனவை என பத்திரிகைகள் பலவற்றில் செய்திகள் வெளிவருகின்றன. எயிட்ஸ் வியாதி குணமாகியது. நேரானகால் நிமிர்ந்தது என பொய்யாக சாட்சி சொல்லுகிறார்கள். பின்னர் உண்மையில் இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறவில்லை என அறிகிறோம்.
இயேசுவை ஒரு வேலைக்காரனைப் போல் சித்தரித்து எங்கு சென்று குணமாகினதை காண்கிறேன். இந்த சகோதரனை குணமாக்கியதை காண்கிறேன் என கூறுவதும் சாட்சி சொல்ல வேண்டும் என்ற அடிப்பமையிலும் சுயபெருமைக்காகவும், காசு பண்ணுவதற்காகவும்மான் என்பதில் ஐயமில்லை
இந்த தலைப்பை குறித்து ஆவியானவரே என்னை எழுதச்செய்தார் என்று நம்புகிறேன். கிறிஸ்தவ விசுவாசிகள் மத்தியில் இப்பொழுது சாட்சி பகர்தல் என்பது ஒரு குழப்பமான விஷயமாகிவிட்டது. ஆண்டவரை மேன்மைப் படுத்த வேண்டிய சாட்சிகள் இப்பொழுது மனிதனை மேன்மைப்படுத்த பயன் படுத்தப்படுகிறது.
சாட்சி கொடுப்பதை குறித்து தற்போதைய சபைத் தலைவர்களும் அதிகம் பிரசங்கிப்பதில்லை. கிறிஸ்தவர்கள் (என்னையும் சேர்த்து), தங்கள் சாட்சி மற்றவர் மத்தியில் ஒரு ஆச்சர்யத்தை ஏற்ப்படுத்த வேண்டும் என்று சில விஷயங்களை மிகைப்படுத்தவும் தொடங்கிவிட்டனர் (நானே இதை செய்திருக்கிறேன், எனக்கு நெருங்கிய சிலர் இதை செய்வதை பார்த்திருக்கிறேன்). ஆவியானவர், அந்த மிகைப்படுத்தலை குறித்து நம்மிடம் (மெல்லியகுரலில்) பேசினாலும், தேவ மகிமைக்காகதானே இதை செய்கிறோம் என்று சமாதானம் செய்துகொள்கிறோம். மிகைப்படுத்துதலும் ஒருவகை பொய்தானே. அந்த பொய்யால் ஆண்டவர் மகிமை படுவாரா? உள்ளதை உள்ளபடி கூறவேண்டியதுதானே. இப்படி மிகைப்படுத்த முனைவது ஆண்டவரின் மகிமையை குறைப்பதாகதானே அர்த்தம்.
சாட்சி பகர்வதில் பலருக்கு பல பிரச்சனைகள். தனக்கு தேவன் மூலம் நிகழ்ந்த அற்ப்புதம் ஒரு வெளிமனுஷருக்கு பல சமயம் புரியாமல் போகலாம். ஆனால், அங்கே உண்மை தகவலை பரிமாறி தேவனுக்கு நன்றி செலுத்துவது மாத்திரமே நம் கடமை. தனக்கு நடந்த நிகழ்ச்சியில் தேவனுடைய கரம் இருந்தது என்று மற்றவர் விளங்கிக்கொள்ள வேண்டி அதை மிகை படுத்துவது, திரித்து கூறுவது போன்ற செய்கைகள், நம் தேவனுக்கு மகிமையை கொண்டு வராது.
சில சாட்சிகளில் நமக்கு அனைத்து தகவலும் இருப்பதில்லை (தெரியாமல் இருக்கலாம் அல்லது மறந்து போயிருக்கலாம்). அப்படிப்பட்ட சூழ்நிலையில் சாட்சி அரைகுறையாய் இருந்தாலும் பரவாயில்லை, சுவாரசியமாயில்லை என்றாலும் தனக்கு தெரியாததை, தெரியாது என்று ஒத்துக்கொள்ளவேண்டும். யூகித்து ஏதோ ஒரு பொய்யை கூறுவது சாட்சியல்ல.முக்கியமாக, ஒரு சாட்சி எப்போதும் சுவாரசியமாக இருக்க வேண்டும் என்பதல்ல, உண்மையானதாக இருக்கவேண்டும்.
நீங்கள் மற்றவருடன் பகிர்ந்த சாட்சி, பின்னர் மற்றவரால் மிகைப்படுத்தப்பட்டாலும், நாம் உடனே குறுக்கிட்டு அதை சரி செய்ய முனையவேண்டும். நாம் உண்மையாய் இருக்கும் பட்சத்தில், சுவாரசியமற்றது என்று நாம் கருதும் ஒரு சாட்சியத்தை வைத்து தேவன் பலத்த காரியங்களை செய்ய வல்லவராய் இருக்கிறார்.
சிலருடைய சாட்சிகள் உண்மையில் சுவாரசியமானவை என்பதை நான் ஒப்புகொள்கிறேன். ஆனால், அப்படியே அனைவருக்கும் நடக்கவேண்டிய அவசியம் இல்லை.மிகைப்படுத்தப்பட்ட சாட்சிகள் பலருடைய வாழ்வில் பெருத்த பாதிப்பை உண்டு பண்ணி இருக்கிறது.
பலர் தேவமகிமைக்காக (??) தங்கள் ரட்சிப்பின் சாட்சியத்தையே மிகை படுத்துகிறார்கள். பல மூத்த (?) விசுவாசிகள் கூட இதை ஊக்குவிப்பது வருத்ததிற்குரியது. சுவாரசியமான சாட்சிகளால் நிறையப்பேர் ரட்சிப்புக்கு வருவார்கள் என்ற நம்பிக்கையும் இதற்க்கு காரணம். மனோத்தத்துவ ரீதியில், இத்தகைய பொய்களால் யாரையும் ரட்சிப்புக்கு வழிநடத்த முடியாது. "சாத்தியம் உங்களை விடுதலையாக்கும்" என்ற வசனத்திர்க்கேற்ப, எளிமையான, உண்மையான சாட்சிகள் அநேகரை இரட்சிப்புக்குள் வழிநடத்தும்.
நண்பர்கள் தங்கள் கருத்தினையும் முன் வைக்கலாம்;நன்றி..!