Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எங்கே போகிறது பெந்தெகொஸ்தே இயக்கம்..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
எங்கே போகிறது பெந்தெகொஸ்தே இயக்கம்..?
Permalink  
 


அரசியலில் பெந்தெகொஸ்தே தலைவர்கள்...இது தேவையா... உங்களையெல்லாம் ஆவியானவரா நடத்துகிறார் ?

552750_250026731781305_442544198_n.jpg

 குறிப்பு: இந்த சுவரொட்டிகள் சென்னை ராஜ்பவன் சுற்று சுவரில் ஒட்டப்பட்டுள்ளது. அது சுவரொட்டிகளை ஒட்ட தடைசெய்யப்பட்ட பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. சட்டத்தை மீறுவதில் இயேசுராஜாவின் ஊழியர்கள் முன்னணியில் இருப்பது உலகறிந்த விஷயம் தானே..!!! biggrin



-- Edited by chillsam on Tuesday 24th of July 2012 09:28:32 PM

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Bro Chillsam: இந்த தேர்தலில் ஆளும்கட்சி நிச்சயமாகவே மண்ணை கவ்வப்போகிறது; இதனை தீர்க்கதரிசனமாகவே அறிவிக்கிறேன், என்று சொல்லும் துணிச்சல் எனக்கு இல்லை;ஏனெனில் எனக்கு தூதர்களை தரிசிக்கும் பழக்கம் இல்லை;ஆனால் அதனை எனது ஆவியில் உணர்கிறேன்;அது அப்படியே வாய்க்கும் பட்சத்தில் என்னோடு இடைப்பட்டது ஆவியானவரே என்பதும் எனது சொந்த யூகம் அல்ல என்பதும் விளங்கும்


pgolda Wrote@Tcs on 13-05-2011 18:53:19:
தீர்க்கதரிசி சில்சாம் வாழ்க!
திமுக தலைவர்களின் காலில் விழுந்த அனைத்து முண்ணனி முக்கிய கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் முகத்திலும் கரி பூசிய ஆண்டவருக்கு நன்றி! ஒருவருக்கும் ஒரு வெளிப்பாடும் இல்லை போல் தெரிகிறது!


// தீர்க்கதரிசி சில்சாம் வாழ்க! //

சாதுஜியையும் விஞ்செண்டையும் வானளாவ புகழுவோர்க்கும் மற்றோர்க்கும் இந்த எளியவனின் கூற்று கிண்டலாக இருக்கிறது;இன்னும் மற்ற நண்பர்கள் இதைக் குறித்து ஏதும் சொல்லாதிருப்பது ஏமாற்றமளிக்கிறது;தீர்க்கதரிசனம் என்பது மிரட்டலோ அல்லது பசப்பு வார்த்தையோ அல்ல,அது மனந்திரும்புவதற்கான அவகாசத்துடன் கூடிய கரிசனத்துடன் தரிசனமாக வெளிவரும்;அது சொல்லப்பட்ட வண்ணமாகவே நிறைவேறும்;அது முகதாட்சண்யமின்றி வெளிப்படும்.

உதாரணமாக, எலியா தீர்க்கதரிசி தேசத்தை ஆளும் இராஜாவான ஆகாபின் முகத்துக்கு நேராக மழையைக் குறித்தும் அதுபோலவே ஏசாயா எசேக்கியா இராஜாவின் மரணத்தைக் குறித்தும் யோவான் ஸ்நானன் ஏரோது இராஜாவின் தவறான நடத்தையைக் குறித்தும் நேருக்கு நேராக சொன்னார்கள்;இந்த காலத்து தீர்க்கதரிசிகளோ காகம் எச்சமிடுவதைப் போல எதையாவது உதிர்த்துவிட்டு காணாமற் போகிறார்களே..!

இது என்னை நான் உரசிப் பார்த்துக்கொள்ள எனக்கு நானே வைத்துக்கொண்ட அக்கினி பரீட்சையாகும்;இதுமாத்திரமல்ல,இந்த தேர்தல் காலத்தில் சுமார் 40 இடத்துக்கும் மேலாக தெள்ளத்தெளிவாக நான் போதித்து வந்த இடங்களில் இந்த செய்தி அறிவிக்கப்பட்டு அது என்னிடம் பதிவுசெய்யப்பட்ட கோப்பாக இருக்கிறது;ஆனாலும் மற்ற சில்லறை வியாபாரிகளைப் போல அதனைப் பிரபலப்படுத்தி காசு பார்க்கும் எண்ணம் எனக்கில்லை;உங்களுக்கு தேவைப்பட்டால் உயிருள்ள சாட்சிகளும் இருக்கிறார்கள்;இவையெல்லாம் இந்த தேர்தல் சம்பந்தமாக மட்டுமல்ல,ஒவ்வொரு தனிப்பட்ட காரியத்தையும் குறித்து ஆண்டவர் எனக்கு அறிவித்து வருவதாலேயே நான் எந்த மனுஷனையும் நம்புகிற‌தில்லை..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

vijay76 Wrote on 05-03-2011 16:23:20:

சகோதரரே! தங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தங்களது துணிவைப் பார்த்து அதிகமாக உற்சாகப் படுத்தப்படுகிறேன்.

//மேய்ப்பர் சாம் சுந்தரம் அவர்கள் செய்தியளிக்க மறுத்தாலும் தனது ஸ்தாபனத்தின் தலைமை போதகரான தாமஸ் ராஜ் அவர்களை அனுப்பி வைத்திருந்தார்;மேலும் அந்த மாலை வேளையில் சபையின் ஆராதனையை இரத்து செய்து இந்த கூட்டத்துக்கு ஆதரவளித்ததாகவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது;தானே கொலை செய்யக்கூடாது, ஆனால் ஆள் வைத்து செய்யலாம் என்பது போல இருக்கிறது உங்கள் கருத்து;இரட்டை நிலை எப்போதுமே யாருக்குமே ஆபத்தானது நண்பரே..!//

எனக்கு இந்த செய்தி தெரியாது, பாஸ்டர் அவர்கள் மறுத்துவிட்டது மாத்திரமே பேஸ்புக் நண்பர் ஒருவர் மூலம் அறியப்பெற்றேன். ம்ம்ம்...கிடைத்த கொஞ்ச ஆறுதலும் இல்லாமல் போய் விட்டது. தாங்களது வீடியோவுக்காக நன்றி!

நண்பரே,மேய்ப்பர் சாம் சுந்தரம் ஐயா அவர்களைக் குறித்த நன்மதிப்பு எப்போதும் எனக்கு உண்டு;ஆனாலும் ( முதுமை காரணமாகவோ பல்வேறு உடல் உபாதைகள் காரணமாகவோ) தலைவர்கள் ஒரு கட்டத்துக்கும் மேல் சென்ற பிறகு தனது மந்தையைக் கட்டுப்படுத்தும் சக்தியை இழந்துவிடுகிறார்கள் என்பதற்கு உன்னத நோக்கங்களுக்காக ஸ்தாபிக்கப்பட்ட அப்போஸ்தல கிறித்தவ சபையே ஒரு சிறந்த அண்மைக்கால உதாரணம்;இவர்களைப் பார்த்து ஏஜி சபையின் தலைவர்கள் பாடம் கற்றுக்கொண்டு வேதத்துக்கு விரோதமாகப் போனாலும் சரி என்று தனது மந்தையை மிருகத்தனமாக ஆளத் துவங்கிவிட்டார்கள்.

  • "உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாய் அல்ல, மனப்பூர்வமாயும், அவலட்சணமான ஆதாயத்திற்காக அல்ல, உற்சாக மனதோடும், சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்."(1.பேதுரு.5:2,3)
எப்போது நவீன உபகரணங்கள் சபைக்குள் நுழைந்ததோ அப்போதே சபையின் ஒருமனப்பாடு குலைந்துபோனது;எப்போது மேடைகள் அலங்கரிக்கப்பட்டு விசேஷித்த நாற்காலிகள் போடப்பட்டதோ அப்போதே பெருமையும் பொறாமையும் முளைவிடத் துவங்கியது;மேலே இருப்பவன் தன்னுடைய நிலையைக் காத்துக்கொள்ளப்படும் பிரயாசமும் கீழே இருப்பவனின் எப்படியாவது மேலே ஏறிவிடவேண்டும் என்ற அவசரமும் தேவப் பிரசன்னத்தை இரண்டாம் பட்சமாகி விட்டது;எப்போது சபை ஆராதனைகள் வீடீயோ எடுக்கப்படத் துவங்கியதோ அப்போதே தலைவர்கள் நடிக்கத் துவங்கினார்கள்;அவர்களிடம் மனதிலிருந்து பேசும் தன்மையும் உண்மையை மாத்திரமே பேசவேண்டும் பொறுப்புணர்வு மறைந்துபோனது;இந்த அவலட்சணங்களையெல்லாம் பார்த்து மூத்த தலைவர்கள் பெருமூச்சு விடுவதைத் தவிர வேறொன்றும் செய்யமுடியாது;என்ன ஒரு விசேஷமென்றால் கொஞ்சம் நீண்ட பெருமூச்சு விடும்போது அவர்களுடைய மூச்சே நின்றுபோகிறது;அதற்குப் பிறகு காத்திருக்கும் கொக்குகளுக்கு இன்னும் கொண்டாட்டம் தான்;இப்படி போய்க் கொண்டிருக்கிறது இந்த தலைமுறை.

பலரும் அறிந்தவண்ணமாக உண்மை பக்தனான பக்தசிங் ஐயா அவர்களும் தனது அடுத்த கட்டத்தலைவர்களால் அடித்து தாக்கப்பட்டார் என்றும் அதன் காரணமாகவே அவர் மனம் மருகி மரணமடைய நேர்ந்தது என்று சொல்லுவார்கள்;அவ்வளவு ஏன் தனது சொந்த மகனாலேயே கடுமையாக நடத்தப்பட்ட அவமானம் தாங்காமலே அண்மையில் ஒரு பிரபலத் தலைவர் நோய்வாய்பட்டு பின்னர் மரணமடைந்ததாக நம்பகமான வட்டாரத் தகவல்கள் மூலம் அறிகிறோம்;எனக்கு அருமையான நண்பரே, இந்த அவலநிலை மாற நாம் குறிப்பிடத்தகுந்த எதையாவது செய்தாக வேண்டும்;அதற்கு முதலாவது தேவையானது கருத்தொற்றுமையே;அடுத்து (தலைவர் இல்லாத ) குழு முயற்சி.

கிறித்தவத்தில் தேவையானது எழுப்புதல் அல்ல,புரட்சி என்பதாக இன்று காலையில் ஆவியானவர் அடியேனுடன் பேசினார்; அதனை தளத்தில் பதிவு செய்திருக்கிறேன்;அந்த புரட்சி வெடிக்கவேண்டிய முக்கியமான இரண்டு களங்கள் உண்டு;ஒன்று காணிக்கை சம்பந்தமான தவறான அபிப்ராயங்கள் மற்றும் போதனை சார்ந்த முக்கிய காரியங்கள்;ஒரு காரியத்தை சரியாகத் துவங்கி தவறாகப் போகும் தருணங்கள் மனுக்குலத்தின் மிகப் பெரிய அவமானமாகும்;ஆனாலும் அதனைப் பொருட்படுத்தாமல் கௌரவத்துக்காகத் தொடர்ந்து செல்லாமல் நின்று பின்னிட்டுப் பார்த்து (பக்தன் யோபுவின் மனைவியைப் போலல்ல‌..) மீண்டும் முதலில் இருந்தே துவங்கும் மனோதைரியமே இன்றைய உடனடி தேவை; இல்லையேல் நாம் மொத்தமாக விற்கப்படுவோம்;அடிமைகளாக கொண்டு போக‌ப்பட்ட சுதந்தரவாளிகளுக்குள் தானியேல் போன்ற பக்தர்களும் இருந்தார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது..!

  • "வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்."(எரேமியா.6:16)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

சகோதரரே! தங்கள் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. தங்களது துணிவைப் பார்த்து அதிகலமாக உற்சாகப் படுத்தப்படுகிறேன்.

//மேய்ப்பர் சாம் சுந்தரம் அவர்கள் செய்தியளிக்க மறுத்தாலும் தனது ஸ்தாபனத்தின் தலைமை போதகரான தாமஸ் ராஜ் அவர்களை அனுப்பி வைத்திருந்தார்;மேலும் அந்த மாலை வேளையில் சபையின் ஆராதனையை இரத்து செய்து இந்த கூட்டத்துக்கு ஆதரவளித்ததாகவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது;தானே கொலை செய்யக்கூடாது, ஆனால் ஆள் வைத்து செய்யலாம் என்பது போல இருக்கிறது உங்கள் கருத்து;இரட்டை நிலை எப்போதுமே யாருக்குமே ஆபத்தானது நண்பரே..!//

எனக்கு இந்த செய்தி தெரியாது, பாஸ்டர் அவர்கள் மறுத்துவிட்டது மாத்திரமே பேஸ்புக் நண்பர் ஒருவர் மூலம் அறியப்பெற்றேன். ம்ம்ம்...கிடைத்த கொஞ்ச ஆறுதலும் இல்லாமல் போய் விட்டது. தாங்களது வீடியோவுக்காக நன்றி!




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Chillsam:

//அந்தோ பரிதாபம்..! நல்ல முன்மாதிரியாக விளங்கிவரும் அப்போஸ்தலரும் மேய்ப்பருமான MK.சாம் சுந்தரம் அவர்களது பெயர் ஒரு அரசியல்வாதியின் காலடியின் கீழ் பிரசுரிக்கப்பட்டிருப்பது மனவேதனை உண்டாக்குகிறது; அவரையும் சேர்த்து வீழ்த்திவிட்டார்களே..!//



vijay76 Wrote@Tcs on 05-03-2011 14:54:03:

விழாவில் பாஸ்டர் சாம் சுந்தரம் அவர்கள் செய்தியளிக்க மறுத்துவிட்டதாக அறிந்தேன். மனதுக்கு சற்று ஆறதல்!!!

நண்பரே,மேய்ப்பர் சாம் சுந்தரம் அவர்கள் செய்தியளிக்க மறுத்தாலும் தனது ஸ்தாபனத்தின் தலைமை போதகரான தாமஸ் ராஜ் அவர்களை அனுப்பி வைத்திருந்தார்;மேலும் அந்த மாலை வேளையில் சபையின் ஆராதனையை இரத்து செய்து இந்த கூட்டத்துக்கு ஆதரவளித்ததாகவும் இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது;தானே கொலை செய்யக்கூடாது, ஆனால் ஆள் வைத்து செய்யலாம் என்பது போல இருக்கிறது உங்கள் கருத்து;இரட்டை நிலை எப்போதுமே யாருக்குமே ஆபத்தானது நண்பரே..!

ஒரு வேண்டுகோள்: தாங்கள் யௌவன ஜனம் தளத்தைப் பார்வையிட்டாலும் அதில் தங்கள் கருத்துக்களைப் பதிக்கிறதில்லையே,அதற்கு ஏதாவது விசேஷ காரணமோ என் மீது ஏதேனும் வருத்தமோ இருக்கிறதா? ஆனாலும் பரவாயில்லை,இதனைப் பெரிதுபடுத்தவேண்டாம்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

பெந்தெகொஸ்தே திருச்சபைகளின் மாமன்ற சென்னைப் பேராயத்தின் துவக்க விழாவானது மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் திரு.முக.ஸ்டாலின் அவர்களது நல்லாசியுடன் சிறப்பாக நடைபெற்றது;அதைக் குறித்த நேரடி ரிப்போர்ட் யௌவன ஜனம் தளத்தின் சர்வதேச வாசகர்கள் மற்றும் தள நண்பர்களின் கவனத்துக்காக சமர்ப்பிக்கப்படுகிறது.

Pls Follow the link:


http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=41417061&p=3


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

சிஎஸ்ஐ சபைகளில் உள்ளது போல சினாட் வைத்து செயல்படுவது பெந்தெகோஸ்தே சபைகளின் ஒற்றுமை அல்லது அங்கீகாரம் கிடைப்பதற்காக என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இன்று அரசு படிவங்களில்(Forms) கிறிஸ்தவர் என்றால் பெந்தெகோஸ்தே என்று குறிப்பிடும் வசதி கிடையாது.

ஒன்றை நாம் நினைவில் வைத்துக் கொள்வது நல்லது. சி.எஸ்.ஐ சபைகளும் இதே நோக்கத்துடன் தாம் இணைக்கப்பட்டன/ 1950 களுக்கு முன்பு சி.எஸ் ஐ என்ற ஒரு அமைப்பே கிடையாது. ஆங்கிலிக்கன், சிஎம் எஸ், லுத்தரன், மற்றும் பல மிஷன் களின் பெயரிலேயே அவை இயங்கி வந்தன. இவைகளுக்கு வழங்கப்பட்ட பொதுவான பெயர் புராட்டஸ்டாண்டு அல்லது சீர்திருத்த சபைகள் என்பதே. இந்திய சுதந்திரத்திற்குப் பின் பல சபைத் தலைவர்களின் முயற்சியால் இவை எல்லாம் ஒருங்கிணைந்து சி.எஸ் ஐ சபைகள் ஆயின. இதற்கு எதிர்ப்புகளும் ஆதரவும் காணப்பட்டது.

அந்த கால கட்டத்தில் வாழ்ந்த பரமானந்தம் ஐயர் என்ற பரிசுத்தவான் (இவர் சென்னை ராயபுரம் சபையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் குருத்துவ பணியாற்றினார்.) எல்லா சபைகளும் இணைவது சமரசத்திற்கும், குழு மனப்பான்மைக்கும், அதிகாரப் போட்டி, பொறாமைகள் மற்றும் சண்டைகள் ஆகியவற்றிற்கே அழைத்துச் செல்லும் என்று அச்சப்பட்டார். அவர் சொன்ன சிறிது நாட்களிலேயே சிஎஸ்.ஐ சபை தேர்தல்களில் அடிதடி, வெட்டுக்குத்து, கடத்தல் எல்லாம் சபையில் நடந்தது. இன்றும் நடந்து கொண்டிருக்கிறது. பரமானந்தம் ஐயருக்குள் எழுந்த அதே பயமே எனக்கும் எழுகிறது. சீக்கிரத்தில் பெந்தெகோஸ்தே சபை தலைவர் தேர்தல்களில் நாம் அடிதடி வெட்டுக்குத்து போன்றவற்றைக் காணலாம்.

கடைசியாக மிகவும் முக்கியமான ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். தனித்து சீர்திருத்த சபைகள் இயங்கின காலத்தில் அனேகர் கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார்கள். அனைத்து இன மக்களிடமும் மனமாற்றம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆனால் சிஎஸ்.ஐ என்ற அமைப்பு உண்டான நாள் முதற்கொண்டு தலைவர்களின் நோக்கம் ஆத்தும ஆதாயத்தை விட்டு விலகி பதவி சுகத்தை தேடிச் சென்றது. சபை வளர்ச்சி குன்றியது. காலப்போக்கில் முழுவதுமாக வளர்ச்சி தடைபட்டு விட்டது. உங்கள் பகுதிகளில் உள்ள சிஎஸ்.ஐ சபைகள் எத்தனை ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது என்று பாருங்கள். கடந்த 50 வருடங்களாக கட்டப்பட்ட சிஎஸ்.ஐ சபைகளுடன் 1950களுக்கு முந்தைய 50 வருட காலத்தில் கட்டப்பட்ட சபைகளின் எண்ணிக்கையை ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவுக்கு வித்தியாசம் இருக்கும். இதே போலத்தான் வருங்காலங்களில் பெந்தெகோஸ்தே சபைகளிலும் நடைபெறும் வாய்ப்பு காணப்படுகிறது.

கர்த்தருக்கு ஸ்தோத்திரம். இயேசு கிறிஸ்து இரத்தஞ்சிந்தி சம்பாதித்த தமது சபையை (கிறிஸ்தவர்களை) காக்க வைராக்கியங்கொண்டிருக்கிறார். பாதாளத்தின் வாசல்கள் சபையை மேற்கொள்வதில்லை.

// சீக்கிரத்தில் பெந்தெகோஸ்தே சபை தலைவர் தேர்தல்களில் நாம் அடிதடி வெட்டுக்குத்து போன்றவற்றைக் காணலாம். //

அற்புதம், நீங்கள் எந்த ஊரிலிருக்கிறீர்களோ அல்லது எந்த காலத்திலிருக்கிறீர்களோ தெரியவில்லை; இந்த சினாட் உருவாகக் காரணமே பதவிப் போட்டிதானே..?

இன்றைக்கு சென்னையைப் பொருத்தவரையிலும் பரிசுத்தாவியானவரே திரித்துவத்துவமாக பிரிந்து செயல்படுகிறார்; "கணங்களுக்குள் உட்கணங்கள்" என்று கணக்குப் பாடத்தில் படித்தோமே அதுபோலவே இந்த மூன்று ஆவி குழுக்களுக்குள்ளும் எண்ணற்ற உட்பிரிவுகள் உண்டு; மூன்று பிரதான குழுக்கள் யாதெனில் முதலாவது குழு பிஸப் தயானந்தன் அவர்களுடையது; இது தற்போது சில மோசடிகளால் வெளிநாட்டு சப்போர்ட் குறையவும் பணப் பிரச்சினையால் பெலவீனமாக உள்ளது; அடுத்து சிஸ்வா பிரகாஷ் அவர்களுடையது;அவரும் ஒரு சினாட் வைத்து அதற்கு பிஸப்பாக இருக்கிறார்;அம்மா ஆட்சி வந்தால் பதவியைப் பிடிக்க நிதானமாகக் காயை நகர்த்திக் கொண்டிருக்கிறார்; இறுதியாக மிகவும் பலம் வாய்ந்ததாகக் காட்டிக்கொள்ளும் சென்னை போதகர்கள் ஐக்கியம் (???);
இந்த குழு தான் தற்போது முக.ஸ்டாலினுக்கு விழா எடுக்கிறது;ஆமாம்,பின்னே ஆண்டவருக்காக விழா எடுக்கிறாங்க? போகிற காலத்திலே- அதாவது ஆட்சி பறிபோகும் சூழ்நிலையிலுள்ள ஒரு ஆளும்கட்சியின் ஆதரவுடன் எந்த (...) எவனாவது விழா எடுப்பானா? ஆமா நடத்துறது, ஆவியானவரு தான பழியைத் தூக்கி அவரு மேல போட்டுறவேண்டியது தான்..!

இந்த மூன்று குழுக்களுக்குள் இங்குமங்கும் சென்று வால் பிடித்து செத்த மீன்களுக்காக‌ அதாவது கருவாட்டுத் துண்டுகளுக்காகக் கோள் சொல்லும் எலிகள் பல உண்டு;உண்டு கொழுத்த பெருச்சாளிகளும் உண்டு;இந்த மூன்று குழுக்களும் வெவ்வேறு நாட்களில் நடத்தும் ஊழியர் கூட்டத்துக்குச் சென்றால் தேசத்துக்காக அழுது பெருமூச்சு விட்டு ஜெபிக்கிறார்களோ இல்லையோ அவரவர் சுயபெருமையையும் எதிர்க் குழுவைக் குறித்த அக்கப்போர்களையும் நிறைய கேட்கலாம்;எவனாவது வெளிநாட்டு ஆசாமி வந்து கடைவிரித்தால் அவனிடம் ஒருவர் மீது ஒருவர் போட்டுக்கொடுத்து தட்டிப்பறிக்க இருக்கவே இருக்கிறது,இமெயில்; இதன் காரணமாகத் தற்போது வெளிநாட்டு பணவரவு ரொம்ப குறைந்துபோனது;இவர்களுடைய மோசடிகளால் வெளிநாட்டு வருமானம் பெருமளவு குறைந்துபோனதால் இவர்கள் கைசெலவுக்காகக் கண்டுபிடித்திருக்கும் புதிய வழி தான் அரசியல் பலம்.

அதாவது நேர்மையானவர்கள் தூய்மையானவர்கள் என்ற போர்வையில் இங்குமங்கும் சுற்றி காக்கா பிடித்து நில பேரங்களிலும் தொழில் பேரங்களிலும் கட்டப்பஞ்சாயத்து செய்துவருகிறார்கள்;எல்லாவற்றுக்கும் மேலாக ஆவியை விற்றுப்போட்டு கறுப்புப் பணங்களின் பாதுகாவலர்களாகவும் வலம் வருகிறார்கள்;சிலர் பினாமிகளாகவும் சிலர் தொழில் அதிபர்களாகவும் சிலர் கடத்தல்காரர்களாகவும் தங்கள் மேலிடத்துக்கு உண்மையுடனும் விசுவாசத்துடன் ஊழியம் செய்கிறார்கள்;இன்னும் சில மேலிடத்து இரகசியங்களையெல்லாம் எழுதினால் அது நம்முடைய விசுவாசத்துக்கே இடறலாக இருக்கும்;இவர்களுடைய படாடோப வாழ்க்கை முறையையும் வினைல் பேனர்களில் இவர்கள் சிரிக்கும் கள்ளசிரிப்பையும் பார்த்து புளங்காகிதம் அடையும் ஆட்டுமந்தைகளாக இவர்களுடைய விசுவாசிகள் இருக்கின்றனர்; அரசியல்வாதிகள் லாரி அனுப்பி கூட்டம் சேர்ப்பது போலவே இவர்களும் ஒவ்வொரு பகுதிக்கும் லாரிகளையும் பேருந்துகளையும் அனுப்பி கூட்டஞ் சேர்த்து தங்கள் முதலாளிகளை மனங் குளிரப்பண்ண ஆயத்தமாகி விட்டார்கள்;இதற்கான பணத் தேவைகளை யார் சந்திக்கிறார்கள்? அது தானே இரகசியம்..? உஷ்....!

"பகலில் பக்கம் பார்த்து பேசு; இரவில் அதையும் பேசாதே.." என்கிறாள்,எனது பாட்டி..!

நாகமானை சந்திக்க மறுத்த அந்த எலிசா எங்கே,இன்றைக்கு நாகமான்களின் புண்களைக் கழுவி குடிக்க ஆயத்தமாகும் தற்கால எலிசாக்கள் எங்கே..? ஆமா,நாய் வித்த காசு குரைக்குமா என்ன‌..?

drpethuru Wrote@Tcs on 27-02-2011 05:24:40:

//
பெந்தேகோஸ்தே மாமாமன்றமே,

இந்த விழாவினை நடத்துவதாக இருந்தால், மார்ச் 1- தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் நடத்தியாக வேண்டும் என்று ஒருவேளை தேர்தல் கமிஷன் உன்னை நிர்ப்பந்தித்தாதா? //

மார்ச்.1-ந் தேதி தளபதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள்;அதை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து
ப் பாடி அவர் மனதைக் குளிரப்பண்ணவும் கர்த்தருடைய நாமத்தினால் அவரை ஆசீர்வதிக்கவுமே விழா நடைபெறுகிறது என்பதை மரு.பேதுரு அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

drpethuru Wrote@Tcs on 27-02-2011 05:24:40:

Synod of Pentecostal Churches India என்று Google search-ல் தேடினால் ஒரேயொரு link தான் கிடைக்கிறது. அதில் உள்ள விவரங்களின் படி பார்த்தால், அதன் நோக்கங்களெல்லாம் நல்லாதான் இருக்கும் போல தெரியுது.

////The objectives of the synod formation includes to coordinate all the Pentecostal Churches, organisations, fellowships, which were functioning according to the teachings and experiences of the early apostolic churches, and to develop unity among them.

The formation would also assist all members in administration to improve the infrastructure, developing various projects for a holistic development of the church, the release added.///


ஆனா, இவங்களுக்கு இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அழைக்க வேறு ஆட்களே கிடைக்கவில்லையா?

சரி, அப்படியே மரியாதை நிமித்தமாக அழைத்திருந்தாலும் கூட, அவர்களுடைய போட்டோவை போட்டுத்தான் ஆக வேண்டுமா?

சரி.. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளுகிறார் என்றால் அவரது போட்டாவை மட்டும் போட்டால் போதாதா? அவரது அப்பாவுக்கு இங்கே என்ன வேலை?

அப்படியே போட்டாலும் அவரது முகம் மட்டும் தெரியும் போட்டோ போதாதா?

அவரது கட்சியினரையும் மிஞ்சும் அளவிற்கு இந்த போஸ் தேவை தானா?

இவர்களுடன் பொறுப்பாளர்களின் போட்டோகளையும் போட்டு விட்டால், தங்கள் அந்தஸ்து, மரியாதை குறைந்து விட்டதாக எண்ணி மான நஷ்ட வழக்கா தொடர்ந்து விடப் போகிறார்கள்?

பின்னர் ஏன் இந்த பாரபட்சம்?

உள்நோக்கம் என்று சொல்வதைவிட, வேறு எந்த நோக்கமென்று சொல்லமுடியும்?

வேறு ஒரு சகோதரர் வினவின படி, அழைப்பிதழ் மஞ்சள் நிறமாக இருப்பதன் பின்னணி என்ன?

அழைப்பிதழில் குறைந்த பட்சம் ஒரு சிலுவை அடையாளமாவது இருக்கக் கூடாதா?

ஒருவேளை சிலுவை அடையாளம் பாரம்பரிய Mainline சபைகளுக்குரியது என கூறிக் கொண்டால், பெந்தேகோஸ்தேயின் புறாச் சின்னத்தையாவது வரைந்திருக்கலாம் அல்லவா?

....

.....

....

இது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் மனதில் உதிப்பதால் தான், இதனை பகுத்தறிவுள்ள (பகுத்தறிவை விட்டுவிடுங்கள்... Common Sense உள்ள ) எந்த கிறிஸ்தவனும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.



பெந்தேகோஸ்தே மாமாமன்றமே,

இந்த விழாவினை நடத்துவதாக இருந்தால், மார்ச் 1- தேர்தல் அறிவிப்புக்கு முன்னர் நடத்தியாக வேண்டும் என்று ஒருவேளை தேர்தல் கமிஷன் உன்னை நிர்ப்பந்தித்தாதா?

சகோ. சில்சாம் சொன்ன மாதிரி உன்னைப் பற்றி உரியவர்களுக்கு (கிறிஸ்தவர்களுக்கு--- குறிப்பாக பெந்தேகோஸ்தேயினருக்கு) உரிய முறையில் (பத்திரிக்கைகள்---குறிப்பாக, கிறிஸ்தவ பத்திரிக்கைகள் (உனக்கு பத்திரிக்கைகளுக்கா பஞ்சம்?), குறைந்த பட்சம் ஒரு வெப்சைட் மூலமாவது) சொல்லி உரிய ஆதரவை பெற்று முன்னேறுவதை விட்டுவிட்டு, பின்னர் யாருடைய அங்கிகாரத்துக்காக இந்த அவசரக் கோலம்?

நீ கண்டிப்பாக பதிலளிக்க மாட்டாய் என்பது எல்லாருக்கும் தெரியும்.

காலம் உனக்கு பதிலளிக்கும்.

பிதாவே என்னை மன்னியும்!



மரு.பேதுரு அவர்களின் குமுறலுக்கு பதில் சொல்ல பெந்தெகொஸ்தே இயக்கத்தின் பிரதிநிதிகள் யாரும் இங்கே வரப்போவதில்லை;காரணம் அவர்களெல்லாம் "கருமமே கண்ணாயினர்..." ஆனாலும் தள நண்பர்கள் தங்கள் கருத்துக்களை நேர்த்தியாக இங்கே பதித்து வைப்போம்;அவர்கள் எப்போது இங்கே வந்து பார்க்கிறார்களோ பார்க்கட்டும்;இதுவரை தங்கள் கருத்துக்களை முன்வைத்த நண்பர்களுக்கு நன்றி.

இந்த தலைப்பானது இன்று மாலையில் நடைபெறும் ஒரு குறிப்பிட்ட தேர்தல் முன்னோட்ட கூட்டத்துக்கு மட்டும் எதிரானது அல்ல; இந்த தலைப்பின் கீழே பெந்தெகொஸ்தே இயக்கமானது தோன்றியது முதல் வழுவிப்போன தருணங்களையும் தடம் மாறிய தடயங்களையும் நிதானமாக ஆராய்ந்து ஒரு சுயபரிசோதனை செய்ய இருக்கிறோம்; நாம் ஏன் சுயபரிசோதனை செய்யவேண்டும் என்கிறீர்களா? நம்மில் ஒவ்வொருவரும் ஏதோ ஒருவகையில் அவர்களோடு சம்பந்தபட்டிருக்கிறோம்;மேலும் கிறித்துவின் சபையில் எப்போதெல்லாம் சீர்திருத்தம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் அதனை நிறைவேற்றவேண்டிய கருத்தொற்றுமையினை உருவாக்கக்கூடிய க(த‌)ளத்தில் நிற்கிறோம்;கிறித்து சபையில் பெந்தெகொஸ்தே இயக்கத்தின் தேவை என்ன? பெந்தெகொஸ்தே இயக்கம் சாதித்தது என்ன? சமுதாயத்தில் பெந்தெகொஸ்தே இயக்கத்தினால் உண்டான பாதிப்புகளும் மாற்றங்களும் என்னென்ன? பெந்தெகொஸ்தே இயக்கத்தினால் சபைகளுக்குள் நிகழ்ந்த மாற்றங்கள் என்ன என்பதையெல்லாம் ஆராய்ந்தால் என்ன? இன்றைக்கு விக்கிரகாராதனைக்காரர்கள் என்று சொல்லப்படுகிற கத்தோலிக்கர்களும் கரிஸ்மேடிக் குழுக்களையும் அன்பியத்தையும் உருவாக்கி சபைக்கு வெளியே அதனை ஊக்குவித்து நடத்த காரணம் என்ன? குழந்தை ஞானஸ்நானத்தை மட்டுமே இன்னும் வைராக்கியமாக நடத்திக்கொண்டிருக்கும் சீர்திருத்த சபையாரும் தங்கள் ஆலய வளாகத்தில் ஞானஸ்நானத் தொட்டியை ஒரு மாற்று ஏற்பாடாக கட்டவேண்டிய சூழ்நிலை உருவானது எப்படி? சபைக் கட்டிடத்துக்கு வானளாவிய கோபுரங்களையும் மணிகூண்டுகளையும் கட்டி அதன் உச்சியில் சிலுவையை நிறுத்திய பாரம்பரிய சபைகளுக்கு இணையாக பெந்தெகொஸ்தே இயக்கத்தின் போதனைகளைக் கைக்கொள்ளும் ஆவி மார்க்கத்தாரும் தங்கள் ஆலயக் கட்டிடத்தின் உச்சியில் சிலுவையை நிறுத்தக்காரணம் என்ன? மனைவிமாருடைய தாலிக்கொடி முதலான நகைகளை கழற்றிவீசீய பெந்தெகொஸ்தே போதகர்கள் தமது பிள்ளைகளுக்கு நகை போட்டுவிட்ட காரணம் என்னவோ? ஆவி இறங்கும்போது சபையாரெல்லாம் அலைபாய்ந்து தலைசுற்றி விழும்போது போதகர்களின் பிள்ளைகள் மட்டும் கற்சிலையாக இங்கும் அங்கும் கண்களை சுழற்றிக்கொண்டும் தங்கள் மொபைல் போன்களை நோண்டிக்கொண்டிருக்கும் ஆவி எப்படிப்பட்டது? இப்படியாக ஒவ்வொரு விசுவாசியினுடைய உள்ளத்திலும் எண்ணற்ற அனுபவம் சார்ந்த கேள்விகள் எழக்கூடும்;அத்தனை கேள்விகளையும் இந்த ஒரே தலைப்பின் கீழ் தொகுக்கலாமே? பிறகு அதிலிருந்து தனித்தனி திரியாகப் பிரியக்கூடிய சிறப்பான கேள்விகளுக்கு கட்டுரைகளை உருவாக்கி நம்முடைய மார்க்கத்தில் விழிப்புணர்வை உண்டாக்கமுடியும்;முயற்சிப்போம்.

இறுதியாக ஒரு மில்லியன் டாலர் (?) கேள்வி... மு.க.ஸ்டாலினின் உற்ற நண்பரான பால் தினகரன் அவர்கள் இங்கே தலைகாட்டாத மர்மம் என்ன‌?

மற்றபடி நண்பர்கள் யாரும் இந்த திரியையாகிலும் திசைதிசைதிருப்பும் வெற்றுக்கருத்துக்களால் சிதைத்துவிடாமல் கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும்;நிர்வாகத்தினரும் யாருடைய அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் நடுநிலையினைக் கடைபிடிக்கவேண்டும்.

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&topicID=41359325&p=3


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

robin Wrote@Tcs on 25-02-2011 20:36:53:

//இவற்றுக்கு பதிலாக பாஸ்டர்களை அரசே தத்தெடுத்துக்கொண்டு அவர்களுக்கு சம்பளம் தரட்டும்;குடியிருப்புகள் கட்டித் தரட்டும்..//

இதை மட்டும் எதிர்க்கிறேன்.

நண்பர்கள் தற்போதய சூழலைக் கருத்தில் கொண்டு எதிர்க்கிறீர்கள்; எனக்குங் கூட இது முழுமையான தீர்வாகத் தோன்றவில்லை; சோர்வின் விளிம்பில் நின்று இயலாமையின் விரக்தியில் நின்று இவ்வாறு யோசித்தேன்; அரசாங்கம் எல்லாவற்றையும் பிடுங்கிக்கொண்டு இவர்களைத் தெருவில் விட்டால் என்ன செய்வார்களோ என்ற பரிதவிப்பில் அவ்வாறு எழுதினேன்;நான் எழுதியது எதுவுமே சத்தியத்துக்கு உட்பட்டது அல்லவே; அவர்கள் சத்தியத்துக்கு வெளியே சென்று செயல்படுவதால் நானும் அதன் விளைவுகளை உலகப்பிரகாரமாக சிந்தித்தேன்; மரத்தின் மீது அமர்ந்துகொண்டு அமர்ந்திருக்கும் கிளையையே தறிப்பது போலல்லவா எழுதியிருக்கிறேன்; எப்போது சபையில் அரசியல் நுழைந்துவிட்டதோ அப்போதே அங்கு ஆவியானவரின் ஆளுகை என்பது ரெண்டாம் பட்சமாகிவிடுகிறது; பிறகு அதன் நிலை என்னவாகும் என்ற கற்பனையே எனது எழுத்தில் வடிக்கப்பட்டிருக்கிறது.

சபை எப்போது ஆதி நிலைக்குச் செல்லப்போகிறதோ, ஊழியர்களை நோக்கி எப்போது தேசத்தின் தலைவர்களெல்லாம் அலறியடித்துக்கொண்டு ஓடிவரப்போகிறார்களோ..? அந்த நாளே சபையின் உண்மையான உயிர்மீட்சியின் நாளாகும்..! குல்லாக்களும் துப்பட்டாக்களும் பறந்துபோகும்;சன்பல்லாத்துக்களெல்லாம் ஓடிப்போவார்கள்;தேவ இராஜ்யம் விரைந்து கட்டப்படும்;அவரே அதைக் கட்டுவார்..! (எசேக்கியேல்.34)

இன்று மதியம் எனது மாமியார் என்னிடம் கேட்டார்,"ஏம்பா,முக.ஸ்டாலின் வாராரே அந்த கூட்டம் என்றைக்கு நடக்கிறது?... அவ்ளோ பெரிய மனுஷன் ஆண்டவர் கிட்ட வர்றாருன்னா ஆண்டவர் மேல பயம் இருக்கிறதென்றுதானே அர்த்தம்" என்பதாக.நான் சொன்னேன், "மாமி, ஆண்டவர் மேல பயம் இல்லே, தேர்தல் வரப்போகும் பயமாக்கும்,சிறுபான்மையினரின் ஓட்டைக் கவரவே அவர் வருகிறார்;அவரிடம் மானங்கெட்டுப்போய் பணம் வாங்கி அந்த கூட்டத்தை அவருக்காகவே நம்ம ஆட்கள் கூட்டுறாங்க" என்றேன்;விசுவாசியின் நிலைமை இப்படி இருந்தா எப்ப நாம கரை சே
ருவது?

நோட்டீஸைக்கூட கவனமாகப் பார்த்து முதல்வருக்கு இராசியான மஞ்சள் நிறத்தில் வடிவமைத்திருக்கிறார்கள் பாருங்கள்;இதுவே அம்மாவாக இருந்தால் பச்சை கலரில் நோட்டீஸ் பளபளத்திருக்கும்;"உமக்குப் பிரியமானதைச் செய்ய எனக்குக் கற்றுத்தாரும்" என்று உலகத்தைப் பார்த்து பாட கற்றுக்கொண்டதன் விளைவுதானே இது..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

mycoimbatore Wrote on 25-02-2011 20:07:09:

https://lh6.googleusercontent.com/_J09Bmr1LTcc/TWbGxZFCcMI/AAAAAAAAA-8/8p6i8OHjuhs/s512/Pentecost%20in%20Chennai..JPG

இந்த படத்தின் தொடுப்பையாவதும் கிளிக்செய்து அந்த நோட்டீசை மக்கள் பார்க்கட்டும்.
பெந்தேகோஸ்தே மானம் கப்பல் ஏறியது.இனி இவர்களும் இன்னொரு பெயர் கிறிஸ்தவ சபையாக மாறிவிட்டது.சில்சாம் அவர்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியவையே.ஆனால் அதை எந்த ஓட்டு கட்சிகளும் செய்ய தயாராகப்போவதில்லை.
Pentecost%20in%20Chennai..JPG

அந்தோ பரிதாபம்..! நல்ல முன்மாதிரியாக விளங்கிவரும் அப்போஸ்தலரும் மேய்ப்பருமான MK.சாம் சுந்தரம் அவர்களது பெயர் ஒரு அரசியல்வாதியின் காலடியின் கீழ் பிரசுரிக்கப்பட்டிருப்பது மனவேதனை உண்டாக்குகிறது; அவரையும் சேர்த்து வீழ்த்திவிட்டார்களே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

கத்தோலிக்கம் மற்றும் சிஎஸ் ஐ பிரிவின் தலைவர்களைக் காட்டிலும் ஆள்பலமும் அதிகாரபலமும் மிக்கவர்களாக எதற்கும் துணிந்தவர்களாக வலம்வரும் பெந்தெகொஸ்தே தலைவர்கள் தங்களிடம் மக்கள் கொட்டிக்கொடுக்கும் கோடிக்கணக்கான ரூபாய் காணிக்கை பணத்துக்கு ஒழுங்கான கணக்கு வழக்குகளை சமர்ப்பிப்பதில்லை;சபையாரின் எந்த சுகதுக்கங்களிலும் பங்கேற்கிறதில்லை;கல்வி மற்றும் திருமணத்துக்கான பொருளாதாரத் தேவைகளை சந்திக்க ஒரு நிதியம் போன்ற அமைப்பு கிடையாது;இன்னும் உயிர்போனால் புதைக்கக்கூட மண்இல்லை;இந்த லட்சணத்தில் தசமபாகத்தையும் கட்டிட நிதிக்கான பணவசூலையும் பற்றி மட்டும் வாரந்தவறாமல் பிரசங்கம் பண்ணுகிறார்கள்;ஆத்தும ஆதாயத்தைக் குறித்தோ கிறித்தவ குணாதிசயத்தைக் குறித்தோ சகோதர சிநேகத்தைக் குறித்தோ மறந்தும் உபதேசிக்கிறதில்லை.

பாரம்பரியத்தை விட்டு வாருங்கள் என்ற அறை(?)கூவலை நம்பி இவர்கள் பின்சென்ற மெயின் லைன் (CSI,ECI,Lutheren,Baptist..etc) சபைகளைச் சார்ந்த குடும்பத்தார்  தங்களுடைய சொந்த விருப்புவெறுப்புகளை மறந்து மீண்டும் தங்கள் தாய் சபையுடன் இணையவேண்டும்; அரசியல் சாக்கடையை நோக்கி இறங்கிவிட்ட பெந்தெகொஸ்தே சபைகளைவிட்டு உடனே வெளியேறி தங்களைக் காத்துக்கொள்ளவேண்டும்.

இசிஐ ஸ்தாபனத்தின் தலைவரான எஸ்றா சற்குணம் அவர்களும் கூட கட்சி சார்பெடுத்து செயல்பட்டது;ஆனாலும் அவர் ஒருபோதும் தனது சபையினரை ஒன்றிணைத்து இதுபோல விழா நடத்தியதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

எகிப்தில் உண்டான புரட்சிக்கு ஃபேஸ்புக் மூலம் ஒரு சகோதரி விடுத்த அறைகூவலே காரணம் என்று சொல்லப்படுகிறது;அதுபோன்றதொரு புரட்சியை கிறித்துவின் சரீரமாகிய சபைக்காக வைராக்கியங் கொண்ட கிதியோன்களால் சாதிக்கமுடியும் என்று நம்புகிறேன்.

இந்த செய்தியையும் அது இடம்பெற்றுள்ள "யௌவன ஜனம்" தளத்தின் தொடுப்பையும் ஒவ்வொருவரும் தத்தமது நண்பர்கள் வட்டத்தில் கடத்திச்செல்ல வேண்டுகிறேன்;மேலும் இதனை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடவும் வேண்டுகிறேன்.

http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=41359325

பெந்தெகொஸ்தே ஊழியர்கள் ஆளுங்கட்சியிடம் கோடிக்கணக்கான ஊழல் பணத்தை வாங்கி தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டு தேர்தல் நேரத்தில் ஆளுங்கட்சிக்கு ஆதரவான ஒரு  அலையை உருவாக்கும் சூழ்ச்சியான நோக்கத்துடனே செயல்பட்டு இந்த விழாவை எடுத்திருப்பதாக பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டுகிறேன்..!

இந்த இழிசெயலுக்கான விலையை நிச்சயம் அவர்கள் கொடுத்தாகவேண்டும்;இதன்காரணமாக விசுவாசிகளுக்கு சமுதாயத்தில் உண்டாகப்போகும் நெருக்கத்துக்கும் பதில் சொல்லியாகவேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

pgolda Wrote on 25-02-2011 15:30:40:
இந்த தேர்தலில் ஆளுங்கட்சி தோற்று விட்டால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை.

இந்த தேர்தலில் ஆளும்கட்சி நிச்சயமாகவே மண்ணை கவ்வப்போகிறது; இதனை தீர்க்கதரிசனமாகவே அறிவிக்கிறேன், என்று சொல்லும் துணிச்சல் எனக்கு இல்லை;ஏனெனில் எனக்கு தூதர்களை தரிசிக்கும் பழக்கம் இல்லை;ஆனால் அதனை எனது ஆவியில் உணர்கிறேன்;அது அப்படியே வாய்க்கும் பட்சத்தில் என்னோடு இடைப்பட்டது ஆவியானவரே என்பதும் எனது சொந்த யூகம் அல்ல என்பதும் விளங்கும்.

ஆனாலும் தற்போதைய கட்சியின் தொடராதோ என்ற ஏக்கமும் இருக்கிறது;அதற்குக் காரணம் இந்த கட்சியின் ஆட்சி பொதுவாகவே கிறித்தவர்களுக்கெதிராக செயல்படாது என்பதாகப் பரவியிருக்கும் அபிப்ராயமே;ஆனாலும் சபையானது உயிர்மீட்சியடைய வேண்டுமானால் நிச்சயமாகவே அதற்கு உபத்திரவங்கள் அவசியம் என்று உணர்கிறேன்.
  • முதலில் சினிமாத்தனமான திரள் கூட்ட ஆர்ப்பாட்டங்கள் நிறுத்தப்படவேண்டும்.
  • ஹீரோ வொர்ஷிப் (Hero Worship) தடுக்கப்படவேண்டும்.
  • கிறித்தவ சபைகளுக்கென்று இந்து அறநிலையத்துறை போன்ற ஒரு பொதுவான துறை அமைக்கப்பட்டு அனைத்து வரவு செலவுகளும் அரசாங்கத்தால் கண்காணிக்கப்படவேண்டும்.
  • கொள்ளை போய்க்கொண்டிருக்கும் சபையின் சொத்துக்கள் இனி விற்கப்படமுடியாத வண்ணம் கிறித்தவ அறநிலையத் துறையின் வசம் ஒப்படைக்கப்படவேண்டும்.
  • இந்து மடாதிபதிகளைப் போல சபைகளை ஆட்டிப்படைக்கும் பிஷப்புகளின் அதிகாரமாகிய கொம்பு முறிக்கப்படவேண்டும்.
  • இவற்றுக்கு பதிலாக பாஸ்டர்களை அரசே தத்தெடுத்துக்கொண்டு அவர்களுக்கு சம்பளம் தரட்டும்;குடியிருப்புகள் கட்டித் தரட்டும்.
  • வருடத்துக்கு இரண்டு முறை கணக்கு வழக்குகளை தணிக்கை செய்யட்டும்.
  • தனியார் ஸ்தாபனங்களிடம் குவிந்துகிடக்கும் சபை மக்களின் கோடிக்கணக்கான ரூபாய்களும் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஒரே அமைப்பின் கீழ் அல்லது நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்படவேண்டும்.
  • அனைத்து சபைகளும் அனைத்து கிறித்தவர்களுக்கும் சொந்தமாக வேண்டும்.
  • கிறித்தவ தலைவர்களின் சிடி, புத்தகம் போன்றவற்றுக்கு முறையாக விற்பனை வரி வசூலிக்கப்பட்டு வரி ஏய்ப்பு தடுக்கப்படவேண்டும்.
  • டிவி போன்ற மீடியா நிகழ்ச்சிகளை நடத்தும் ஊழியர்களிடம் கேளிக்கை வரி வசூலிக்கப்படவேண்டும்.
இவ்வளவு நன்மையான (???) காரியஙகளையும் கிறித்தவத்துக்கு ஆதரவான அரசு ஒருபோதும் செய்யவே செய்யாது;அதனை நிறைவேற்ற யேசபேலைப் போன்று ஆளுபவர்களே தேவை;அப்போது தான் எலியாக்களை அடையாளங் காணமுடியும் என்கிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

Sis.Golda wrote://இந்த தேர்தலில் ஆளுங்கட்சி தோற்று விட்டால் என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை//

இவர்கள் இப்போதும்கூட ஆளுங்கட்சியுடன் இல்லை ஆளுபவர் கட்சியிலிருக்க விரும்புகிறவன் நாசியில் சுவாசமுள்ள மனுஷனையும் அவர்கள் உருவாக்கின அமைப்புகளையும் சார்ந்துகொள்ள மாட்டான். இவர்கள் இரண்டு தீமைகளைச் செய்தார்கள்; ஜீவத்தண்ணீர் ஊற்றாகிய கர்த்தரை விட்டுவிட்டார்கள்; தண்ணீர் நிற்காத தொட்டிகளாகிய வெடிப்புள்ள தொட்டிகளை தங்களுக்கு வெட்டிக்கொண்டார்கள் மண்குதிரையாகிய எகிப்தை நம்புகிறார்கள்.

பரிசுத்த ஆவியை குறித்துப் பிரசங்கிக்க இவர்களுக்கு என்ன இருக்கிறது? அன்னாவும் காய்பாவும் ஏரோதையும், பிலாத்துவையும் சார்ந்துகொண்டு தங்கள் ஆன்மீக வாழ்க்கையை ஓட்டினர்கள். பவுலும் பேதுருவும் பரிசுத்த ஆவியரைச் சார்ந்துகொண்டு சுவிசேஷத்தினிமித்தம் ஏரோதுக்கும் சீசருக்கும் எதிரிகளாகிப் போனார்கள்.

இவர்கள் இதற்க்கு முன்னும் ஆளுங்கட்சியில் இல்லை. இப்போதோ அதிகாரபூர்வமாக எதிர்கட்சியில் இணைந்துவிட்டார்கள். 

 



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
Permalink  
 

எனக்கு தெரிந்த ஒரு பெந்தெகொஸ்தே பாஸ்டரின் பெயராவது இதில் இல்லாமல் இருக்கும் என எதிர்பார்த்தேன், அடங்கொக்கமக்கா, எல்லா பெரும்லா போஸ்டரில் வழியுது. கிறிஸ்தவ சபை அரசியல் இயக்கத்தோடு தொடர்புடையதாக இருப்பது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை தெரிஞ்சே தான் கோதவுல குதிக்கிறாவளா? எப்படியோ புஷ்பராஜ் அங்கிளுக்கும், அகஸ்டின் ஜெபக்குமார் அங்கிளுக்கும் போட்டு தாளிக்க செம மேட்டரு சிக்கியிருக்கு.... ம்ம் கெளம்புங்க.....


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

Pentecost%20in%20Chennai..JPG

இன்றைய "பெந்தெகொஸ்தே" இயக்கத்தினரின் செயல்பாடுகள் நம்மை 'பேந்த பேந்த' விழிக்க வைக்கிறது; என்ன சொல்வதென்றே தெரியவில்லை; எல்லோரிடமும் விநியோகிக்கச் சொல்லி என்னுடைய கரத்தில் திணிக்கப்பட்ட சில நூறு நோட்டீஸுகளை யாருக்கும் கொடுக்க மனமில்லை; நான் சந்திக்கும் விசுவாசிகளுக்கு கொடுப்பதற்காகவே அவை என்னிடம் தரப்பட்டது;ஆனால் விசுவாசிகள் யாருக்கும் கொடுப்பதற்கு எனக்கு தைரியமில்லை.

ஆனாலும் நான் புலம்புவதற்கு இதுபோன்றதொரு வடிகால் இருப்பதால் இங்கே போட்டுவைக்கிறேன்;இந்த நோட்டீஸைப் பார்த்துவிட்டு நண்பர்களை நான் அழைப்பதாகவும் நாமெல்லாரும் அங்கே சந்திப்போமா என்று சொல்வதாகவும் தயவுசெய்து எண்ணிவிடவேண்டாம்;ஒண்ணும் சொல்றதுக்கில்லே;மொத்தத்துலே நிலைமை சரியில்லை'னு மட்டும் தோணுது;"பணம் பாதாளம் வரைக்கும் பாயும்" என்பார்கள்;ஆனால் இங்கே சபைக்குள் பாய்ந்த பணம், அதனை பாதாளத்துக்கே அனுப்பிவிடும் போலிருக்கிறதே..?

பெரிதாக சினாட் அமைத்துவிட்டதாகப் பீத்திக்கொள்ளும் கறுப்பு பணமுதலைகள் இதுவரை தாங்கள் அமைத்துள்ளதாகச் சொல்லும் அமைப்பைக் குறித்த விவரங்களையறிய சாதாரண வெப்சைட்டைக் கூட உருவாக்கவில்லை; இந்த சினாட் அமைக்கப்பட்டதன் நோக்கங்களையும் அவசியங்களையும் தங்கள் சபையினருக்காவது முறைப்படி அறிவித்தார்களா என்றால் அதுவும் இல்லை;ஏற்கனவே கடந்த வருடத்தில் ஆர்ப்பாட்டமாக நடந்த மாநாட்டின் பலன் என்ன என்றும் தெரியவில்லை;.

இதுவரை அரசியல் வாசனை அறியாத அப்பாவிப் போதகர்களையும் சேர்த்து மொத்தமாக விற்றுப்போட முயற்சிக்கும் இவர்களுடைய செயல் கிராம சபைகளுக்கே பாதகமாக அமையப்போகிறது;ஏனெனில் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் எடுக்கும் இந்த ஆர்ப்பாட்டமான விழாவினால் தேவநாமம் மகிமையடையப் போவதில்லை; அரசியல்வாதிகளுக்கும் பெந்தெகொஸ்தே இயக்கத்தினரின் சினாட் துவக்கவிழாவுக்கும் என்ன சம்பந்தமோ தெரியவில்லை;இதனால் எதிர்கட்சியின் விரோதத்தையும் நாம் சம்பாதிக்கப்போகிறோம்; இதன்விளைவு தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தெரியவரும்.

ஏனெனில் ஆட்சிமாற்றம் பரவலாக எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போதய கட்சியின் ஆளுமை முடிவுக்கு வந்தபிறகு இன்றைய எதிர்கட்சி ஆளுங்கட்சியாக மாறினால் ஏற்கனவே நம்மீது எரிச்சல் கொண்ட அதன் தலைமையினால் நாம் பழிவாங்கப்படுவோம் என்ற ஆபத்து நம் தலைமேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்தியைப் போல இருக்கிறது.

ஆவியினால் நடத்தப்படுவதாகச் சொல்லிக்கொள்ளும் பெந்தெகொஸ்தே தலைவர்களை இதுபோன்ற செயல்பாடுகளில் எந்த ஆவி நடத்துகிறதோ? இவர்கள் ஊழியம் செய்வது யாருக்கோ?

ஏற்கனவே கிறிஸ்மஸ் விழாவில் நடந்த கூத்துக்கள் போதாதா? நம்ம ஆட்களின் வழிசலைப் பார்த்து முதல்வர் கேட்டது என்ன,"இது கிறிஸ்மஸ் விழாவா, கோரிக்கை விழாவா" என்று கேட்டார்;ஜெபமும் இல்லாமல் இறைச் செய்தியும் இல்லாமல் உலகத்தாருடைய விழாவைவிட மிகவும் மோசமாக அந்த விழா அமைந்திருந்ததாகப் மூத்த விசுவாசிகளெல்லாம் வருத்தப்பட்டார்கள்;இப்போதோ இந்த ஆர்ப்பாட்டம்..!

நான் சொல்றத வேகமாக கண்ண மூடிண்டு சொல்லுங்க‌...ஒருவேளை நாம் தப்பிக்க வாய்ப்புண்டாகும்..!
  • "துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும்,
  • கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.
  • அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
  • துன்மார்க்கரோ அப்படியிராமல், காற்றுப் பறக்கடிக்கும் பதரைப்போல் இருக்கிறார்கள்.
  • ஆகையால் துன்மார்க்கர் நியாயத்தீர்ப்பிலும், பாவிகள் நீதிமான்களின் சபையிலும் நிலைநிற்பதில்லை.
  • கர்த்தர் நீதிமான்களின் வழியை அறிந்திருக்கிறார்; துன்மார்க்கரின் வழியோ அழியும்." (சங்கீதம்.1:1 - 6)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard