Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: "பாப்டிஸமு" - தெலுங்கிலிருந்து ஒரு அனுபவம், ஒரு பாடம்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: "பாப்டிஸமு" - தெலுங்கிலிருந்து ஒரு அனுபவம், ஒரு பாடம்..!
Permalink  
 


Chillsam Wrote
எனவே நான் விரும்பும் நல்ல தியானங்களை எழுதாமல் விரும்பாத சர்ச்சைக்குரிய காரியங்களையே எழுதுவதற்கு தூண்டப்படுகிறேன்; காரணம்,நான் விரும்புகிற நன்மையான காரியங்களை எழுதாமலும் விரும்பாத தீமையான காரியங்களை எழுதவும் தூண்டும் ஒருவித மாயை கிறித்தவ தளத்தில் உலவுகிறது;அதனைத் தடுக்கும் சக்தி எனக்கில்லை;ஒன்று செய்கிறேன்,இனி நானே எதையும் செய்யாமல் நண்பர்களிடமே தீர்ப்பை விட்டு விடுகிறேன்;நான் கடினமாகவும் முரட்டுத்தனமாகவும் எழுதுவதாக என்னைக் குற்றஞ்சாட்டும் முன்னர் நான் பாடுபட்டு எழுதியவற்றுக்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம் என்ன என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்;ஏனெனில் நீங்களே எனது மனசாட்சி..!



எப்போதும் சர்ச்சைக்குரிய விடயங்கள் குறித்தே மனித மனம் ஈர்க்கப்படும். இது மனித சுபாவம். இயேசு, சாத்தான் என்று இரு தலைப்புகளிட்டு பதிவு எழுதினால் சாத்தான் பதிவே அதிகம் படிக்கப்படும் பதிவாக இருக்கும். பலர் ஆட்சேபம் தெரிவித்தாலும் இதுதான் உண்மை. யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள்

நானும் காஷ்மீரில் இயேசுவின் கல்லறை என்ற பதிவை தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் பதிந்திருந்தேன். விசுவாச அடிப்படையில் பார்த்தால் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு இக்கட்டுரை பிரயோஜனமற்ற ஒன்று. பலர் கண்டனம் தெரிவித்தார்கள். தனிப்பட்ட ரீதியிலும் சிலர் அறிவுறுத்தினார்கள். அதுவும் தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்திலும் என் தளத்தில் மட்டுமே பதித்தேன். அப்படியிருந்தும் அது அதிக ஹிட்டுக்களை பெற்றது என் தளத்திலும் இதுவே முதன்மையாக இன்றுவரை இருக்கிறது.

எனவே எது எப்படி இருந்தாலும் ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன். இப்படிப்பட்ட ஆக்கங்களையே விரும்பியோ விரும்பாமலோ அதிகமானார் படிக்கின்றனர்.  மனித மனது அப்படிப்பட்டது. ஆனால் ஒப்புக்கொள்ள மனம் வருவதில்லை.

உங்கள் ஆதங்கமும் அப்படிப்பட்டதுதான். சர்ச்சைக்குரிய விடயங்களை எழுதும்போது  அதிக பார்வையாளர்களை கவனத்தை இழுத்துக் கொள்ளுகிறது. இது தவிர்கப்பட முடியாததொன்று.

தலைப்பை சர்சைக்குரிய விடயமாக மாற்றி எழுதிப் பாருங்கள் உண்மை புரியும்.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

Chillsam Wrote
கர்த்தருடைய வார்த்தைகளை தியானிக்கவும் வியாக்கியானம் செய்யவும் மொழி எப்போதுமே உதவாது என்பதுடன் மொழியறிவு மாத்திரமே போதாது என்பதையும் ஆவியானவரே உணர்த்துகிறவர்,போதிக்கிறவர், நடத்துகிறவர் என்பதை அறிவோமாக‌.

எக்கருத்தின் அடிப்படையில் இதனை பதித்தீர்கள் என விளங்கவில்லை. கருத்தினை எடுத்துரைக்க மொழியே மிகச் சிறந்த சாதனம். வாசித்தால்தானே தியானிக்க முடியும்? நாம் வாசிக்கும் வேதாகமம் எளிதான தற்கால மொழிநடையில் இருக்க வேண்டும் அப்போதுதான் இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கும் என்பது என கருத்து.

மொழியறிவு மாத்திரமே போதாது என்பது உண்மைதான். வாசிப்பவர்கள் எல்லோரும் சரியான கருத்தினை விளங்கிக் கொள்கிறார்கள் என்றும் கூறமுடியாது. அப்படியிருந்தால் ஏன் இவ்வளவு சர்ச்சைகள், மாற்றுக் கருத்துக்கள் உருவாக வேண்டும். உண்மையில் நீங்கள் குறிப்பிடும் பிரகாரம் ஆவியானவரே உணர்த்துகிறவர்,போதிக்கிறவர், நடத்துகிறவர் வேதத்தில் புரியாத கருத்துக்களை ஆவியானவரின் வழிநடத்தலுடன் வாசித்தால் புரியும்.





__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
"பாப்டிஸமு" - தெலுங்கிலிருந்து ஒரு அனுபவம், ஒரு பாடம்..!
Permalink  
 


Chillsam Worte

தமிழ் மொழியை மாத்திரமே சுற்றிசுற்றி வரும் எனக்கு தெலுங்கு மொழியின் மீது புதிய ஆசைவந்துவிட்டது;தெலுங்கு மொழியில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு என்ன,அதிலும் நம் தமிழ் வேதாகமத்தைப் போல வெவ்வேறு மொழிபெயர்ப்புகள் உண்டா?தெலுங்கு வேதாகத்தை யார் முன்னின்று மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்? இதுபோன்ற வேற்றுமொழி வார்த்தைகளை மொழிபெயர்க்காமல் அப்படியே போடும் அவசியம் ஏன் ஏற்பட்டது? போன்றவற்றையெல்லாம் அறியும் ஆர்வம் மேலிட்டது;எனக்குத் தெரிந்த அளவில் இதுபோன்ற சிந்தனையைத் தூண்டும் கேள்விகளை அவர்களிடம் எழுப்பிவிட்டு நீங்கள் எழும்பி இதைப்போல வேதத்தை ஆராய்ந்து படித்து போதித்தால் அனைவரையும் கவரலாம்;மேலும் நீங்கள் சத்தியத்தில் தெளிவடையமுடியும் என்றேன்.


உண்மையில் வேதாகமத்தை மொழிபெயர்த்தவர்கள் யார்? அவர்களின் பணி எத்தகையது? எவ்வாறெல்லாம் மொழிபெயர்த்தார்கள் என அறிந்திருப்பது மிக நல்லது. சிலருக்கு இது அவசிமற்ற விடயமாக தெரியலாம். நம் வேதாகமத்தை மொழிபெயர்த்தவர்கள் இது தேவனின் வார்த்தை கவனமாக மொழிபெயர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதனை மொழிபெயர்த்துள்ளனர்.

இந்தியாவில் இது தொடர்பாக நிறைய நூல்கள் வெளிவந்திருக்கும் என நம்புகிறேன்.
இலங்கையில் உள்ளவர்கள் சகோ. வசந்தகுமார் அவர்கள் எழுதிய புனித வேதாகமத்தின் புனித வரலாறு என்ற நூலினை பார்க்கலாம். இது சற்று பழைமையான நூல் கடைகளில் தற்போது விற்பனைக்கு கிடைப்பதில்லை.

இந்நூலில் பெரும்பாலான அனைத்து விடயங்களையும் ஆராய்ந்துள்ளார்.  வேதாகமம் தொகுக்கப்பட்ட வரலாறு யார் யார் எக்காலப்பகுதிகளில் எழுதினார்கள். பழைய பிரதிகள் தற்போது வைக்கப்பட்டள்ள இடங்கள்? தள்ளுபடியாகமங்கள், அவை ஏன் வேதத்தில் இடம்பெறவில்லை? இந்திய மொழிகளில் வேதாகம வரலாறு. அதில்  தெலுங்கு மொழியின் வரலாற்றையும் எழுதியுள்ளார்கள்.

தமிழ்மொழியில் வேதாகமத்தின் வரலாறு சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. அக்கால மொழிபெயர்ப்பு. புள்ளியிடாத நிலையில் (அக்கால தமிழ் எழுத்துக்கள்) தமிழ்எ ழுதுப்பிரதிகளும் படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.

படங்களை பார்க்கும்போதே தமிழ்மொழியில் வேதாகமத்தை  மொழிபெயர்ப்பதற்கு  எவ்வளவு சிரமப்பட்டிருப்பார்கள் என புரிகிறது. நமது மொழியும் வளைந்து கொடுக்காமல் அவ்வளவு சிரமப்படுத்தியிருக்கிறது என நினைக்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. தமிழுக்கு தற்போதைய புள்ளியிடல் முறை மற்றும் எழுத்து சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியவர் பெஸ்கி முனிவர் தானே!

தொடர்வேன். ...



-- Edited by colvin on Saturday 26th of February 2011 09:45:37 AM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: "பாப்டிஸமு" - தெலுங்கிலிருந்து ஒரு அனுபவம், ஒரு பாடம்..!
Permalink  
 


சகோதரரே கருத்துக் கூறாமல் இருந்ததற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். தலைப்பு தெலுங்குடன் சம்பந்தப்படிருந்ததால்தான் பக்கத்தினை திறக்கவில்லை இன்றுதான் வாசி்த்தேன் சிந்திக்கத்தக்க விடயங்களை பதித்துள்ளீர்கள். சில விடயங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்

Chillsam Wrote
நான் சொன்னேன் பிரச்சினை அதுவல்ல,தமிழில் கூட நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் கலந்திருக்கிறது;ஆனால் நமக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ஆங்கில மொழி வார்த்தை எப்படி உள்ளே நுழைந்தது? அப்படியானால் நம்முடைய வேதத்தை மொழிபெயர்த்தவர்கள் அதனைச் சரியாக மொழி பெயர்க்கவில்லை என்றுதானே அர்த்தம் என்று கேட்டுவிட்டு பஞ்சிங்காக சொன்னேன்;"ஆம்,நம்முடைய முன்னோர்களான‌ மொழி அறிஞர்களின் நேர்மைக்கு இதுவே உதாரணம்" என்றேன்;


வேதத்தை மொழிபெயர்த்தவர்கள் அக்காலநடைமுறைகளைக் கையாண்டுதான் மொழிபெயர்த்துள்ளார்கள். அக்காலமக்கள் அதிகமாக பாவித்த சொற்கள் வடசொற்களாக இருந்தது. எனவேதான் எமது பழையதமிழ்வேதாகமத்திலும் வடசொற்களின் ஆக்கிரமிப்பு அதிகம் இருந்தது. இதனை திருத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வியுற்றமைக்கும் பத்திரிகைகளும் (நல்ல சமாரியன்) மோனஹன் குழுவினரின் முயற்சி தோல்வியுற்றமைக்கு மக்களின் பழகிப்போன மொழிநடையும் காரணமாக இருந்தன. அக்காலங்கட்டங்களில் சொல்லப்படும் செய்தி எத்தகைய மொழிநடையை கையாண்டால் சிறப்பாக இருக்கும் என்பதற்கே  அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தன.

இப்போதும் கூட திருவிவிலியம் மூலமொழியின் சரியான அர்த்தத்தைத் தரும் வண்ணம் எளிமையாக மொழிபெயர்க்கப்பட்டிருப்பினும் அதனை பயன்படுத்துவோர் எத்தனை பேர். உண்மையில் இது உள்ளவற்றில் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாகும்.
எனவே ஒருமொழிபெயர்ப்பு வெற்றிகரமாக இருக்க வேண்டுமெனில் விசுவாசிகளும் அதனை பயன்படுத்த தயங்ககூடாது. குறிப்பாக சபைத்தலைவர்கள் அதற்கு வழிகாட்ட வேண்டும். பதிவிடுபவர்களும் புதியமொழிபெயர்ப்புகளை பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதனை விட சிறந்த மொழிபெயர்ப்புகளைக் கொண்டு வர முடியும்

தொடர்வேன்........




__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கொல்வின், ஜோசப்சிநேகா, விஜய் மற்றும் பார்வையாளராக மட்டும் வந்துசெல்லும் எனதருமை சகோதரர் அற்புதம் போன்றவர்களுடைய கவனத்துக்கு ஒரு காரியத்தைக் கொண்டுவருகிறேன்;

கடந்த 25 ந்தேதி இரவு விடியவிடிய விழித்திருந்து சில கட்டுரைகளையும் பல பின்னூட்டங்களையும் பதித்தேன்;அவற்றில் முக்கியமானது இரண்டு கட்டுரைகள்;ஒன்று "பாப்டிஸமு" எனும் தெலுங்கு பைபிளின் வார்த்தை சம்பந்தமாகவும் மற்றொன்று சென்னையில் நடைபெறும் பெந்தெகொஸ்தே மாநாடு சம்பந்தமான விழிப்புணர்வு கட்டுரையும் பதிக்கப்பட்டது;இரண்டும் அடுத்தடுத்து பதிக்கப்பட்டவை ஆனால் ஒரு ஹிட் ஆனதற்கும் (214) மற்றது வெறும் 24 பார்வையாளர்களுடன் ஃபிளாப் ஆனதற்கும் காரணம் என்ன? அப்படியானால் வாசகரின் கவனம் பாடங்களைக் கற்றுக்கொள்வதைவிட சர்ச்சைக்குரிய காரியங்களில் தான் அதிகமாக ஈர்க்கப்படுகிறது;

அவ்வளவு ஏன்,தேர்ந்த வாசகர்களும் எழுத்தாளர்களுமான நீங்களும் கூட நான் மிகவும் ஆர்வத்துடன் எழுதிய‌ பாப்டிஸமு என்ற வார்த்தை என்னை கிளர்ச்சியடையச் செய்த அனுபவத்தைக் குறித்து இதுவரை ஒன்றுமே சொல்லவில்லையே? இது எப்படிப்பட்ட மனப்பான்மையோ புரியவில்லை..!


எனவே நான் விரும்பும் நல்ல தியானங்களை எழுதாமல் விரும்பாத சர்ச்சைக்குரிய காரியங்களையே எழுதுவதற்கு தூண்டப்படுகிறேன்; காரணம்,நான் விரும்புகிற நன்மையான காரியங்களை எழுதாமலும் விரும்பாத தீமையான காரியங்களை எழுதவும் தூண்டும் ஒருவித மாயை கிறித்தவ தளத்தில் உலவுகிறது;அதனைத் தடுக்கும் சக்தி எனக்கில்லை;ஒன்று செய்கிறேன்,இனி நானே எதையும் செய்யாமல் நண்பர்களிடமே தீர்ப்பை விட்டு விடுகிறேன்;நான் கடினமாகவும் முரட்டுத்தனமாகவும் எழுதுவதாக என்னைக் குற்றஞ்சாட்டும் முன்னர் நான் பாடுபட்டு எழுதியவற்றுக்கு நீங்கள் கொடுத்த அங்கீகாரம் என்ன என்பதை சற்று சிந்தித்துப்பாருங்கள்;ஏனெனில் நீங்களே எனது மனசாட்சி..!

என்னடா இவன் ரோமர்.7:20 ‍‍- 24 -ஐ உல்டா பண்ணி எதையோ எழுதறானே என்று யோசிக்கிறீங்கல்லே,ஆமா,அதே தான்,அது எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு வேத‌ பகுதியாகும்...! என்னுடைய மனதில் தோன்றிய ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன்;தவறாக‌ இருந்தால் நண்பர்கள் பொறுத்துக்கொள்ளவும்.இது என் மனதின் நெடுநாளைய பாரமாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
"பாப்டிஸமு" - தெலுங்கிலிருந்து ஒரு அனுபவம், ஒரு பாடம்..!
Permalink  
 


நேற்று மாலையில் நான் கலந்துகொண்ட ஒரு வீட்டு ஜெபக்குழு ஊழியத்தில், நான் சற்று தாமதமாகச் சென்றதால் அவர்களுக்குள் ஒரு சகோதரன் வேதத்திலிருந்து ஏதோ ஒரு ஆலோசனையைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

அது கடந்த எட்டு வருடங்களாகச் சென்று உதவிசெய்துவரும் பணித்தளமாகும்;அந்த குடியிருப்புப் பகுதி முழுவதுமே நகராட்சி வேலையிலிருக்கும் துப்புரவு பணியாற்றும் சாதாரண மக்கள் வாழும் பகுதியாகும்;எனவே அங்கே வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் தெலுங்கு மொழியை தாய்மொழியாகக் கொண்டவர்கள்;ஆனாலும் 
தமிழ் மாத்திரமே அறிந்த அடியேனைக்  கடந்த எட்டு வருடங்களாக நேசித்து வேதத்தை என்மூலம் கற்கிறார்கள்; ஃபெல்லோஷிப் (Laymen fellowship), ஏழாம் நாள் (Seventh day Adventist), பாப்டிஸ்டு (Baptist) உட்பட அனைத்து ஸ்தாபனத்தாரின் கவனமும் பதிக்கப்பட்டிருக்கும் இந்த பகுதியில் அடியேன் எந்த மார்க்கபேதக் குழுவையும் தாக்காமல் பரிசுத்த வேதாகமத்தை மாத்திரமே சார்ந்திருந்து சத்தியத்தை சத்தியமாகச் சொல்லிவருவதால் அந்த மக்கள் என்மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர்;அடியேன் பிரதிபலன் எதிர்பாராது அங்கே தியாகத்துடன் பணிபுரிவதால் கர்த்தர் என்னை வேறுவழிகளில் ஆசீர்வதித்து வருகிறார்.

அங்கே வரும் துருபதேசக்காரர்களில் மார்மன்ஸ் மற்றும் யெகோவா சாட்சிகள் (JW & Bible Students) உட்பட யாருமே அவர்களிடம் எதையும் சொல்லி கவர்ந்துவிடமுடியாது;அவர்களில் யார் அங்கே நுழைந்தாலும் உடனே என்னைத் தொடர்புகொண்டு கேட்பார்கள்;நான் சொல்லும் சில ஆலோசனைகளின்படி அந்த மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தவிப்பார்கள்;மேலும் என்னை அழைக்கச் சொல்லி நான் வரும்வரை அவர்களைக் காத்திருக்கச் சொல்லுவேன்;ஆனால் அவர்களோ தப்பித்தோம், பிழைத்தோம் என்று ஓடுவது அடிக்கடி நிகழும் ஒரு நிகழ்வாகும்;இத்தனைக்கும் அந்த மக்களுக்கென்று வலுவான சபை ஐக்கியமும் உண்டு;ஆனாலும் வேத ஆராய்ச்சியில் உதவவும் ஜெப உதவிக்கும் ஆலோசனைக்கும் அந்த மக்கள் என்னை ப‌யன்படுத்தி வருகிறார்கள்.


அப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட பகுதியின் வீட்டு ஜெபக்குழுவில் பெற்ற அனுபவத்தையே இங்கே பகிர்ந்துகொள்ளுகிறேன்;நான் உள்ளே தாமதமாக நுழைந்து முழங்காலிட்டு ஜெபித்துக்கொண்டே அங்கு பகிர்ந்துகொள்ளப்படும் வசனத்தை கவனித்தேன்;அதற்குள் நான் வந்துவிட்டதால் பேசிக்கொண்டிருந்தவர் அவசரமாக முடித்துவிட்டார்; கூட்டத்தையும் இன்னும் சுமார் முப்பது நிமிடத்துக்குள் முடிக்கவேண்டும்; நான் எப்போதுமே எனக்கு முன்பாகப் பேசி அமர்பவரையொட்டியே எனது ஊழியத்தைச் செய்வது வழக்கம்;அது சாட்சியோ, அனுபவமோ, செய்தியோ இதுவே என்னுடைய பாணி;அதன்படி அவர்கள் தெலுங்கு மொழியில் தியானித்துக் கொண்டிருந்ததாலும் எனக்கு தெலுங்கு அவ்வளவாகத் தெரியாததாலும் அந்த  வேதப்பகுதி எது என்று கேட்டேன்,நான் கவனித்ததை சரிபார்த்துக்கொள்ளவும் அதனையொட்டி எனது கருத்துக்களைச் சொல்லவும்;அவர்களை மீண்டும் அந்த வேதபகுதியை வாசிக்கச் சொன்னேன்;அது...
  • "இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கையில் வசனத்தைக் கேட்டவர்கள் யாவர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.
  • அவர்கள் பல பாஷைகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழுகிறதையும்,
  • பேதுருவோடேகூட வந்திருந்த விருத்தசேதனமுள்ள விசுவாசிகள் கேட்கும்போது, பரிசுத்த ஆவியின் வரம் புறஜாதிகள்மேலும் பொழிந்தருளப்பட்டதைக்குறித்துப் பிரமித்தார்கள்.
  • அப்பொழுது பேதுரு: நம்மைப்போலப் பரிசுத்த ஆவியைப் பெற்ற இவர்களும் ஞானஸ்நானம் பெறாதபடிக்கு எவனாகிலும் தண்ணீரை விலக்கலாமா என்று சொல்லி,
  • கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாள் அங்கே தங்கும்படி அவனை வேண்டிக்கொண்டார்கள்." (அப்போஸ்தலர்.10:45 - 48)
மேற்கண்ட வேதபகுதியில் தமிழிலுள்ள‌ ஞானஸ்நானம் என்ற வார்த்தையை தெலுங்கில் வாசித்தபோது அது வித்தியாசமாக இருந்தது எனது சிந்தையைத் தூண்டியது;எனக்குத் தெலுங்கு மொழி தெரியாவிட்டாலும் இப்படி என்னைக் கவர்ந்த பல வார்த்தைகள் தெலுங்கிலிருந்தே எடுத்து வியாக்கியானம் செய்து போதித்திருக்கிறேன்;அதன்படி இன்று நான் கவனித்த வார்த்தை என்னவென்றால் தமிழ் வேதாகமத்தில் ஞானஸ்நானம் எனும் வார்த்தையானது தெலுங்கில் "பாப்டிஸமு" எனப்படுகிறது;இங்கே தெலுங்கு மொழியினை அறிந்த வாசகர்களின் பார்வைக்காக‌ அந்த வசனத்தை தெலுங்கு மொழியிலேயே பதித்திருக்கிறேன்;கவனிக்கவும்.

  • "అందుకు పేతురు మనవలె పరిశుద్ధాత్మను పొందిన వీరు బాప్తిస్మము పొందకుండ ఎవడైనను నీళ్ళకు ఆటంకము చేయగలడా అని చెప్పి "
  • "Can any man forbid water, that these should not be baptized, which have received the Holy Ghost as well as we?" (అపో. కార్యములు - Acts.10:47)
நான் அந்த மக்களைக் கேட்டேன், "பாப்டிஸமு" என்று வாசித்தீர்கள்;இதே வார்த்தை தமிழில் ஞானஸ்நானம் என்று இருக்கிறதே, அப்படியானால்  "பாப்டிஸமு" என்பது தெலுங்கு வார்த்தையா என்று கேட்டேன்;தெரியாது என்றார்கள்;ஆம்,அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை;ஏனெனில் இதுவரை அவர்களுக்குச் சொல்லப்படவில்லை என்பதை அவர்களே ஆச்சர்யத்துடன் ஒப்புக்கொண்டார்கள்;யாருடைய சிந்தையிலும் இந்த கேள்வியானது உதிக்கவுமில்லை;ஏனெனில் அவர்களுக்கு ஊழியர்களைக் கேள்விகேட்டு பழக்கமில்லை;நான் சொன்னேன்,"ஏதேதோ கேள்விகளைக் கேட்டு சபையில் குழப்பத்தை உண்டாக்குவதை நிறுத்திவிட்டு இதுபோல பக்திவிருத்தியுண்டாக்கக்கூடிய கேள்விகளை நீங்கள் அதிகம் கேட்கவேண்டும்", என்பதாக‌;

சரி,எனக்குத் தெரிந்தவரையிலும் நீங்களே ஒப்புக்கொண்டது போலவும்  "பாப்டிஸமு" என்பது தெலுங்கு வார்த்தையல்ல;சரி,இதே வசனத்தை ஆங்கிலத்தில் வாசித்தால் அங்கே என்ன இருக்கிறது? அங்கே பாப்டைஸ்ட் என்று இருக்கிறதல்லா,இதன் மூலம் நான் அறிவது என்ன,தெலுங்கு மொழியில் ஒரு அந்நிய மொழியின் வார்த்தை கலந்திருக்கிறது;மொழிக்காக அவனவன் அடித்துக்கொள்ளும் உலகத்தில் நம்முடைய மொழியில் இதுபோல ஒரு அந்நிய மொழியின் வார்த்தை இடம்பெறலாமா, என்று கேட்டால் அந்த வீட்டின் தலைவர் சொன்னார்,தெலுங்கில் நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் கூட இருக்கிறது',என்பதாக;

நான் சொன்னேன் பிரச்சினை அதுவல்ல,தமிழில் கூட நிறைய சமஸ்கிருத வார்த்தைகள் கலந்திருக்கிறது;ஆனால் நமக்கு சிறிதும் சம்பந்தமில்லாத ஆங்கில மொழி வார்த்தை எப்படி உள்ளே நுழைந்தது? அப்படியானால் நம்முடைய வேதத்தை மொழிபெயர்த்தவர்கள் அதனைச் சரியாக மொழி பெயர்க்கவில்லை என்றுதானே அர்த்தம் என்று கேட்டுவிட்டு பஞ்சிங்காக சொன்னேன்;"ஆம்,நம்முடைய முன்னோர்களான‌ மொழி அறிஞர்களின் நேர்மைக்கு இதுவே உதாரணம்" என்றேன்;


சரி இந்த பகுதியிலுள்ள  "பாப்டிஸமு" என்ற வார்த்தையின் பொருளைத் தெலுங்கிலேயே மற்றொரு வசனத்தின் மூலம் அறியாலாமென்று ரொம்ப வேகமாக கலாத்தியர்.3:27 ஐ வாசிக்கச் சொன்னேன்;நானே அதிரும் வண்ணமாக அங்கேயும்  "பாப்டிஸமு" என்ற வார்த்தையே இருந்தது;அதனைக் கீழே வாசகரின் கவனத்துக்காகக் கொடுத்திருக்கிறேன்;
  • " క్రీస్తు లోనికి బాప్తిస్మముపొందిన మీరందరు క్రీస్తును ధరించుకొనియున్నారు."
  • "For as many of you as have been baptized into Christ have put on Christ."( గలతియులకు - Galatians.3:27 )
தமிழ் மொழியை மாத்திரமே சுற்றிசுற்றி வரும் எனக்கு தெலுங்கு மொழியின் மீது புதிய ஆசைவந்துவிட்டது;தெலுங்கு மொழியில் வேதாகமம் மொழிபெயர்க்கப்பட்ட வரலாறு என்ன,அதிலும் நம் தமிழ் வேதாகமத்தைப் போல வெவ்வேறு மொழிபெயர்ப்புகள் உண்டா?தெலுங்கு வேதாகத்தை யார் முன்னின்று மொழிபெயர்த்து வெளியிட்டார்கள்? இதுபோன்ற வேற்றுமொழி வார்த்தைகளை மொழிபெயர்க்காமல் அப்படியே போடும் அவசியம் ஏன் ஏற்பட்டது? போன்றவற்றையெல்லாம் அறியும் ஆர்வம் மேலிட்டது;எனக்குத் தெரிந்த அளவில் இதுபோன்ற சிந்தனையைத் தூண்டும் கேள்விகளை அவர்களிடம் எழுப்பிவிட்டு நீங்கள் எழும்பி இதைப்போல வேதத்தை ஆராய்ந்து படித்து போதித்தால் அனைவரையும் கவரலாம்;மேலும் நீங்கள் சத்தியத்தில் தெளிவடையமுடியும் என்றேன்.

  • " నమి్మ బాప్తిస్మము పొందినవాడు రక్షింపబడును; నమ్మని వానికి శిక్ష విధింపబడును."
  • "He that believeth and is baptized shall be saved; but he that believeth not shall be damned."( మార్కు - Mark 16:16) )
மேற்கண்ட வசனத்திலும் கூட  "பாப்டிஸமு" என்றே தெலுங்கில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அறிகிறேன்;ஏன் இவ்வாறு அந்நிய மொழியின் வார்த்தையானது தெலுங்கில் கலந்திருக்கிறது என்பதைக் குறித்து எனது கருத்தைப் பொதுவாகச் சொல்லி மேலும் இதுபோன்று என்னென்ன வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறதோ அதையும் நீங்கள் தான் ஆராயவேண்டும் என்றும் கூறி ஜெபித்து விடைபெற்றேன்.

"பாப்டிஸமு" என்ற வார்த்தையைக் குறித்து நான் சொன்னது,இது ஆங்கிலத்திலிருந்து தருவிக்கப்பட்ட சொல்லாக இருந்தாலும் இது கிரேக்க வார்த்தையிலிருந்து பயணித்து வருகிறது;அதன் பொருள் மூழ்குதல் என்பதாகும்;அதற்கு இணையான வார்த்தையானது தெலுங்கில் கிடைக்கவில்லையோ என்று பார்த்தால் எபேசியர் 5:26 -ல் வரும் (தாம் அதைத் திருவசனத்தைக் கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், ) முழுக்கினால் எனும் வார்த்தை தெலுங்கில் "உத்தக ஸ்நானமு" என்று போட்டிருக்கிறது;அப்படியானால் ஞானஸ்நானம் அல்லது  "பாப்டிஸமு" எனும் வார்த்தைக்கு இணையான தெலுங்கு வார்த்தை கிடைக்கவில்லையா அல்லது முழுக்கு என்றோ திருமுழுக்கு என்றோ குறிப்பிடுவதுபோல தெலுங்கு வார்த்தையான "உத்தக ஸ்நானமு" என்ற வார்த்தையையே போட்டிருக்கலாமே, ஏனென்றால் "பாப்டிஸமு" என்ற வார்த்தையின் பொருளானது "உத்தக ஸ்நானமு" என்பதைவிட வித்தியாசமாகவும் உயர்ந்ததாகவும் இருந்திருக்கிறது;மேலும் "உத்தக ஸ்நானமு" என்ற வார்த்தைக்கான கிரேக்க வார்த்தையானது சாதாரண குளியலுக்கு ஒப்பாக இருந்திருக்கவேண்டும்;ஒருவேளை தெலுங்கு மொழிபெயர்ப்பாளர்கள் கிரேக்கத்தை கவனத்தில் கொள்ளாவிட்டாலும்கூட ஆங்கிலத்திலேயே இந்த வித்தியாசம் இருக்கிறது;ஆங்கிலத்தில்,"தண்ணீர் முழுக்கினால்" அல்லது "உத்தக ஸ்நானமு" எனும் வார்த்தை "washing of water" என்றே குறிப்பிடப்படுகிறது;
  • "That he might sanctify and cleanse it with the washing of water by the word,"(Eph 5:26)
அப்படியானால் "பாப்டிஸமு" அல்லது "baptism" எனும் ஆங்கில வார்த்தையானது விசேஷித்த ஒரு செயலைக் குறித்ததாக இருந்திருக்கவேண்டும்;ஏனெனில் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் "baptism" எனும் வார்த்தையே கிரேக்கத்திலிருந்து கடத்தப்பட்டிருக்கிறது; இப்படிப்பட்ட விசேஷித்த சொல்லை மொழிபெயர்க்கும் ஞானம் தமிழ் மொழிபெயர்ப்பாளர்களுக்கு மட்டும் வாய்த்தது எப்படியோ,அதிசயம் தான்;அதில் ஏதேனும் உள்நோக்கங்கள் இருந்திருக்கலாமோ என்று யோசித்தேன்;ஏனெனில் ஞானஸ்நானம் எனும் வார்த்தையே தமிழுக்கு அந்நியமாக இருப்பது மாத்திரமல்ல,அது தெளித்து விட்டாலே போதும் எனும் கொள்கைக்கும் ஆதரவான வார்த்தையாக இருக்கிறது; ஞானத்தையடைவதே நோக்கம்,அது வார்த்தையினாலேயே வரும் என்று திருமுழுக்கைத் தவிர்ப்பவர்க்கும் ஆதரவாக இருக்கிறது;ஆனால்  "baptism" எனும் வார்த்தைக்கான சரியான பொருளை அறிவது தற்போது நமக்கு எளிதான காரியம் அல்லவா?

G907
βαπτίζω
baptizō

Thayer Definition:

1) to dip repeatedly, to immerse, to submerge (of vessels sunk)
2) to cleanse by dipping or submerging, to wash, to make clean with water, to wash one’s self, bathe
3) to overwhelm

இதன்படி "baptizō" எனும் கிரேக்க வார்த்தையே ஆங்கிலத்தில்  "baptism"
என்றும் தெலுங்கில் "பாப்டிஸமு" என்றும் வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்; இதன் பொருள் என்னவென்றால் ஒரு பாத்திரமானது தண்ணீரில் முழுவதும் மூழ்குவதைப் போல என்று அறிகிறோம்; வெறுமையான ஒரு பாத்திரமானது தண்ணீரின் மேற்பரப்பில் நிலையில்லாமல் அசைந்துகொண்டிருக்கும்;அதனை ஒரு அழுத்து அழுத்தினால் அது உள்ளே ஓடி மூழ்கி நிற்கும் அல்லவா? அதுபோலவே கர்த்தரை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் ஒரு ஆத்துவானது தன்னைத் தான் வெறுமையாக்கி கிறித்துவின் மாதிரியாக ஜீவிக்க ஒப்புக்கொடுப்பதற்கு அடையாளமாக தண்ணீரில் மூழுகி எழும்பவேண்டும் என்று அறிகிறோம்.இனியும் "baptism" எனும் வார்த்தையை ஞானஸ்நானம் என்று கூறி ஏதோ ஒரு அலங்காரமான கவித்துவமான கலைச்சொல்லைப் போல ஆக்கிவிடாமல் அதன் தீவிரத்தை உணர்ந்து அது திரளான நீர்நிலைக்கு அருகில் சென்று கிறித்துவைக்குறித்த சாட்சியை அறிவித்து கீழ்ப்படிதலின் அடையாளமாக மூழுகி எழுதல் என்ற பொருளில் உணர்வோமாக‌; "baptism" சம்பந்தமான அனைத்து அச்சங்களையும் சர்ச்சைகளையும் தவிர்ப்போமாக‌.

கர்த்தருடைய வார்த்தைகளை தியானிக்கவும் வியாக்கியானம் செய்யவும் மொழி எப்போதுமே உதவாது என்பதுடன் மொழியறிவு மாத்திரமே போதாது என்பதையும் ஆவியானவரே உணர்த்துகிறவர்,போதிக்கிறவர், நடத்துகிறவர் என்பதை அறிவோமாக‌.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard