Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் அன்பு தெய்வம் இயேசுவை தொழமறுக்கும் பரிசேயர்களுக்கு பதில்கள்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: என் அன்பு தெய்வம் இயேசுவை தொழமறுக்கும் பரிசேயர்களுக்கு பதில்கள்
Permalink  
 


// கிறிஸ்துவின் சரீரம் என்னவாயிற்று என்று வேதம் சொல்லாத போது அதை குறித்து ஆறாய எனக்கு அவசியம் இல்லை!! ஆனால் கிறிஸ்து சரீரத்தில் உயிர்த்தெழுந்தார் என்று சொல்லுபவன் வேத பார்வையில் கள்ள போதகனே!!//

எத்தனை மேலோட்டமான மதியீனமான கருத்து பாருங்கள்...இதுபோன்ற மௌடீகமான ஆசாமிகளால் தான் கொலைக்காரர்களே உருவாகிறார்கள் போலும்...இயேசுவை சிலுவையில் அறைந்த முறையிலிருந்து அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் உட்பட அனைத்தையுமே கேள்வி கேட்கும் இவனே நல்ல போதகனாம்,நாமெல்லாம் கள்ளப் போதகர்களாம்...இது எப்படி இருக்கு..? இவனுக்கு எப்படி விளங்கவைப்பது என்றே புரியவில்லை..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
என் அன்பு தெய்வம் இயேசுவை தொழமறுக்கும் பரிசேயர்களுக்கு பதில்கள்
Permalink  
 


நல்ல பதில்கள் சகோ. ஜோசப்! வழக்கம் போல ரசல் கூட்டம் இயேசுவின் சரிரம் காத்துல கரைஞ்சு போச்சு என்று புளுகும். 1 கொரி 15-ஐ வழக்கம் போல தவறாக திரித்து கொக்கரிக்கும். அதற்கு மேலே பவுல் எழுதியுள்ள ஆவிக்குரிய 'சரிரம்' என்ன என்பதை வசதியாக மறந்து விடும்.
 
 
இன்னொரு உபரி தகவலும் சொல்லுகிறேன். ஸ்தோயிக்கர்கள் (Peopl Who practiced Stoicism during Paul's Time) ஆவி உயிரோடு எழுவதை விசுவாசிப்பவர்கள். ஹிந்து மார்கத்தில் உள்ள யோகா போல Asceticism Practice பண்ணுபவர்கள். பவுல் இயேசு கிறிஸ்து ஆவியில் உயிரோடு எழுந்தார் என்று சொன்னால் அவர்கள் கிண்டல் செய்ய அவசியமே இல்லையே!
 
பவுல் அகிரிப்பாவிடம் இயேசுவின் உயிர்த்தெழுதலை குறித்து பேசும் போது அது எல்லாருக்கும் தெரிந்த விஷயம் என்று பேசுகிறார்.
  • இந்தச் சங்கதிகளை ராஜா அறிந்திருக்கிறார்; ஆகையால் தைரியமாய் அவருக்கு முன்பாகப் பேசுகிறேன்; இவைகளில் ஒன்றும் அவருக்கு மறைவானதல்லவென்று எண்ணுகிறேன்; இது ஒரு மூலையிலே நடந்த காரியமல்ல. (அப்போஸ்தலர் 26:32)
யூதர்களும் கூட இயேசுவின் கல்லறை வெறுமையை இருந்தது என்று ஒப்புக்கொண்டு, அவருடைய சீஷர்கள் சரீரத்தை திருடிக்கொண்டு போனதாய் Talmud ல் எழுதிவைத்து இருக்கிறார்கள். ஆவியில் புத்தர் எழுந்தார் என்று புத்தனுடைய சிஷனும் சொல்லலாம். முஹம்மது எழுந்தான் என்று ஒரு முஸ்லிம் சொல்லலாம். என்னடா அத்தாட்சி என்றால் "நான் பார்த்தேன்" என்பான். இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலையும் அது போல ரசலின் சீஷர்கள் கேவலப்படுத்துகிறார்கள்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 258
Date:
RE: என் அன்பு தெய்வம் இயேசுவை தொழமறுக்கும் பரிசேயர்களுக்கு பதில்கள்
Permalink  
 


இயேசு சரீரத்தில் உயிர்த்தெழாவிட்டால் நிச்சயம் மரணத்தின் மீதான் வெற்றி நிரூபிக்கப்பட்டிருக்காது. இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள் மூன்று நாளில் அதை எழுப்புவேன் என இயேசு சொன்னது தன் சரீரத்தை தான். இந்த விளங்காத ஏரியனிஸ்டு ரசலின் கூட்டம் இயேசுவின் உயித்தெழுதலை அம்புலிமாமா, விட்டலாச்சாரியா ரேஞ்ச்சுக்கு ஒப்பிட்டு உளறிக்கொண்டிருக்கிறது. 

 

//பி.கு. இதை வாசித்தவுடன் கலெக்ஷன் கள்ள போதகனின் புதிய சீஷர்கள் என்னமோ இதை போல் ஒரு எழுத்தை பார்க்காத மாதிரி போய் எல்லா தளங்களிலும் கூப்பாடு போடுவார்கள்!!//

ஆமாய்யா நீங்கள்  எழுதிய பதிவை பார்த்து உங்களது தளத்திலேயே பதில் எழுதலாம் என்று தான் நினைத்தேன் ஆனால் ஏற்கனவே உமது நாகரீகம் தான் ரொம்ப பிரபலமாயிற்றே, நீர் இங்கு வந்து இந்த பதிவை பார்ப்பீர் என தெரிந்து தான் இந்த தளத்தில் எழுதுகிறேன்

இயேசுவின் சரீர உயிர்தெழுதலுக்கு பின்

 

1) இயேசு சாப்பிட்டார் (லூக்கா 24:42-43) ஒருவேளை இயேசு ஆவியாய் இருந்தால் எப்படி சாப்பிட்டிருக்க முடியும்

2) மத்தேயு 28:9 இயேசுவின் ஆவியாக மட்டும் இருந்திருந்தால் அவரது பாதங்க்களை எப்படி தழுவியிருக்க முடியும், கொஞ்ச்சம் யோசிங்க்ணா...

3) தோமாவுக்கு காண்பித்தது (யோவான் 20:25) , ஒருவேளை அது இயேசுவின் சரீரமாக இல்லாமல் இருந்திருந்தால் தனது கையில் உள்ள ஆணி பாய்ந்த காயம் இருந்திருக்காது

4) யோவான் 20:19-20

 

இயெசுவின் உயித்தெழுந்த சரீரத்துக்கு கதவையும் தாண்டி வரும் ஆவிக்குரிய தன்மையும், ஏனையோர் சாப்பிடும் அதே முறையில் உணவு சாப்பிடும் மாம்சத்திற்குரிய தன்மையும் இருந்தது. இதுவே மரணத்திற்கு பின் உயிர்த்தெழுந்த சரீரத்தின் தன்மை. அதன் வாயிலாக தான் இயேசு தனது காயங்க்களை காண்பித்தார்.

 

போங்க்க போய் உங்க ரசல் விட்டுட்டு போன மூல பாஷையில் ஏதாவது நூதனமாக எழுதி வச்சுட்டு போயிருப்பார். பாத்து வழக்கம் போல் சத்தியத்தை புரட்டுங்க...



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

பாம்பை விஷம் கோபப்படுத்தி விஷத்தை உமிழச் செய்வார்கள்;பிறகு அந்த விஷத்தைக் கொண்டே பாம்பின் விஷத்தால் பாதிக்கப்பட்டோரை குணமாக்குவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம்;அதுபோலவே நம்முடைய தரத்தைத் தாழ்த்திக்கொண்டு சாக்கடைக்குள் புரண்டு கொண்டிருக்கும் கோவை எருமைகளை எப்படியாவது மீட்டெடுக்க முயற்சித்து வருகிறோம்;இதன் பாதிப்பும் அதுகள் தெளிக்கும் சேற்றினால் நம்முடைய ஆடைகளெல்லாம் கறைபடுகிறது;ஆனாலும் இதன் முழுபலனும் தற்போது தெரியவராது;ஆனாலும் நமக்குள் ஊடுறுவியிருக்கும் ஒரு விகாரமான கூட்டத்தை எப்படியேனும் பகிரங்கப்படுத்தும் பணியை சிரமேற் கொண்டு செய்துவருகிறோம்.

அவ்வப்போது இதுபோல பட்டு தெறிப்பது போல அபூர்வமாக தங்கள் கொள்கைகளை எடுத்துவிடுவார்கள்;இதைக் கொண்டே இவர்களை நாம் வித்தியாசப்படுத்தி அறியமுடியும்;உதாரணத்துக்கு இதோ அந்த கோவை வெறியன் அறிவித்திருக்கும் அறிவிப்பை பாருங்கள்,அவன் சொல்லுகிறான்,

// மடத்தனமாக கிறிஸ்து சரீரத்துடன் உயிர்த்தெழுந்தார் என்று எழுதி கிறிஸ்தவத்தின் மானத்தை வாங்க வேண்டாம்!! இதற்கெல்லாம் ரஸ்ஸல் தேவையில்லை, வேத புத்தகமே போதும்!! உமக்கு ரஸ்ஸலை குறித்து ஒன்றும் தெரியாது, உமக்கு தெரிந்ததெல்லாம் மஞ்சல் பத்தரிக்கை நடத்தும் கலெக்ஷன் கள்ள போதகனும் அவனின் உபதேசங்களுமே!! அடுத்தவர்களின் அந்தரங்கத்தை விமர்சிப்பவனை மஞ்சல் பத்திரிக்கை நடத்துபவன் என்று எழுதுவதில் ஒரு தவறும் இல்லை!! //

இயேசுவானவர் மாம்சத்தில் உயிர்த்தெழவில்லை;சரி,அப்படியானால் அவருடைய சரீரம் எங்கே போனது என்றும் சொல்லலாமல்லவா? சொல்லமாட்டான்,அவனுடைய வேதப் புரட்டு கிளாஸுக்கு வந்தா தான் சொல்லிக்கொடுப்பானாம்..!

இதைக் கண்டிக்க விரும்பும் நண்பர்களும் சத்தியத்தை அறிந்த சகோதரர்களும் உடனே இதற்குரிய பதிலைப் பதிக்கவும்;மற்றதை பிறகு பார்ப்போம்...



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// உமக்கு எத்துனை முறை வேதமாணவர்கள் மற்றும் யெகோவா சாட்சிகளின் விக்கி தொடுப்பை கொடுத்தாலும் அதை வாசிக்க தெரியாமல் உமக்கு இருக்கும் வேத அறிவை போல் தான் வரலாற்றின் அறிவு என்பதை மீண்டும் மீண்டும் நிரூபனம் செய்கிறீர்!! 1874-ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு கூட்டம் 1931-ல் உருவான ஒரு கூட்டத்தாரிடமிருந்து பிரிந்தார்கள் என்பதை உம்மை போன்ற அவதூரு பரப்பும் அறிஞர்களிடம் தான் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும்!! //

கொல்வின் அவர்களே நம்முடைய (மேசியாவின்) எதிரிகள் என்பதால் நாம் அவர்களை நம்முடைய எழுத்துக்களால் துன்புறுத்தக்கூடாது,சரியா..? பாருங்கள், பெயல்செபூலின் சேனைவீரன் எத்தனை வருத்தப்படுகிறார்..! இனி அவர்கள் பிரிந்தார்கள் என்று நீங்கள் குறிப்பிடுவதைத் தவிர்க்கவும்;சில கொள்கை மற்றும் சொத்து விவகாரங்கள் காரணமாகப் பிரிந்தது போன்று தோற்றமளித்தார்களே தவிர அவர்கள் ஆரம்பம் முதல் ஒன்றாகவே இருக்கிறார்களாம்,அவர்களை நடத்திச் செல்லும் பிரபஞ்சத்தின் தேவனின் அன்புக்கும் பாசத்துக்குமுரிய பிள்ளைகளாக‌... அவன் ரொம்ப அன்புள்ளவனாம், அவனுக்கு கோவமே வராதாம், வருமா பின்னே, இன்னும் எவ்வளவு பேரை வஞ்சிக்கணும்..!

ஆட்டை கொலை பண்ணிட்டு கொளுத்துவாங்க; ஆனால் பன்றிகளைக் கொளுத்திட்டு தான் கொலை பண்ணுவாங்களாம்... இவர்களுடைய பிரபஞ்சத்தின் தேவனும் இவர்களைக் கொளுத்திட்டு கொலை பண்ணப்போறான், பாருங்க‌..! அதற்காகவே இவர்களிடம் நரகமெல்லாம் இல்லை நீங்க உங்க இஷ்டம் போல ஜாலியா இருங்க என்று பிரபஞ்சத்தின் தேவன் சொல்லிவைத்திருக்கிறான்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
என் அன்பு தெய்வம் இயேசுவை தொழமறுக்கும் பரிசேயர்களுக்கு பதில்கள்
Permalink  
 


  • பிதாவானவர் மரித்தோரை எழுப்பி உயிர்ப்பிக்கிறதுபோல, குமாரனும் தமக்குச் சித்தமானவர்களை உயிர்ப்பிக்கிறார். (யோவான் 5:21)

மற்ற தீர்க்கதரிசிகளும், அப்போஸ்தலர்களும் சொல்லுவது போல "இதோ தேவன் சொல்லுகிறார்" (Thus says the Lord) என்று இயேசு சொல்லாததின் காரணம், அவரே தேவன்; எந்த ஒரு காரியத்தையும் அவர், அவராகவே செய்யமுடியும்.

//நான் செய்வேன் என்றாலும் அவரின் பிற வார்த்தைகளை பாருங்கள், அவர் சுயமாக எதையும் செய்யாமல், பேசாமல் இருந்து எல்லாவற்றையும் பிதாவிடத்திலிருந்து தான் செய்கிறார் என்கிற வசனங்களை வாசித்தும் உங்கள் சுயத்தை விட்டு விடுங்கள் //

"அறிவு கொழுந்து" மாதிரி பேசாதிங்க! ஒருவசனத்தை இயேசுவினுடைய தேவத்துவத்திற்கு ஆதாரமாய் காண்பிக்கும் போது இன்னொரு வசனத்தில் அவர் பிதாவை சார்ந்து இருப்பதை சுட்டிகாட்டி அவர் தேவனில்லை என்று மறுப்பது மடமை! . உங்களுடைய Formula படி நிறைய இடத்தில அவர் தன்னை மனுஷகுமாரன் என்று அழைத்துக்கொண்டார் ஆகையால் அவர் தேவக்குமரான் இல்லை என்று ஆகி விடாது. அவர் மனிஷகுமாரன் and also  தேவகுமாரன். அது போல அவர் மனுஷிகத்திலே (நம் எல்லோருக்கும் மாதிரியாக)  பிதாவை சார்ந்து இருந்தார் அதே சமயம் அவர் முழுமையான தேவன்

//"பள்ளமெல்லம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும்" என்பதெல்லம் கிறிஸ்து இயேசு வந்தவுடன் நடைபெறவில்லை, மாறாக அது நடக்கும் ஒரு காலம் இருக்கிறது!!//

இது "கடஞ்சு எடுத்த பரிசேயத்தனம்" இல்லாம வேறு என்ன?. கர்த்தருடைய வருகைக்கு முன்பு வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்பது தீர்கதரிசனம்.  அந்த சத்தம் யோவான் ஸ்நானகன் என்றால் யாரு கர்த்தர் என்று கேட்டால், இவர்களுடைய பரிசேயத்தனம் என்னவெல்லாம் பேசுது பாரு? சரி யாருடைய உயிருக்கு 30 வெள்ளி காசு விலை நிர்ணயித்தார்கள்?

  • தேவத்துவம் பத்தி ஒருசத்தமும் இல்லை. அவருக்குள் தேவத்துவம் பரிபூரனமாய் இருக்கிறது என்று ஒப்புகொன்டகி விட்டது ஆனால் அவர் என் இன்னும் சின்ன 'ஒரு' தேவனாக இருக்கிறார் என்று தெரியவில்லை
  • சர்வத்திற்கும் மேலான தேவன் யாருன்னு இன்னும் சொல்லவில்லை; மகா தேவன் யாருன்னு இன்னும் சொல்லவில்லை; உங்களுடைய கிறிஸ்தவத்தில் எந்தனை தேவன் (சொல்லவே கூசுது) என்ற கேள்விக்கு பதில் இல்லை.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: என் அன்பு தெய்வம் இயேசுவை தொழமறுக்கும் பரிசேயர்களுக்கு பதில்கள்
Permalink  
 


Bro. John Wrote
மறுபடியும் பதில் தெரியாததால் மழுப்பல். நல்ல திட்ட மட்டும் கை ஓடிய type பன்னதெரியும் ஆனால் எதாவது ஒறைக்கிற மாதிரி கேள்வி கேட்டால் மழுப்ப மட்டுமே தெரியும். சர்வத்திற்கும் மேலான தேவன் என்றால் யார்? மகா தேவன் என்றாலும் யார்? என்று நல்லா தெரியும் ஆனா வெளில சொல்லிட்டா அவர்கள் சேவிக்கும் "பிரபஞ்சத்தின் தேவன்" கோவிச்சுகுவார்.


இவர்களுக்கு வேதம் புரிவதில்லை. வசனமும் தெரிவதில்லை. ரஸலின் நூல்களே வேதப் புத்தகம் இவர்களுக்கு. அதை சொல்லுவற்கோ வெட்கம். யெகோவா சாட்சிகளிலிருந்து பிரிந்து வந்தவர்களாயிற்றே.

எப்போதும் ரஸலின் போதனைதான்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

நெத்தியடி பதில்கள் சகோதரரே. தொடர வாழ்த்துக்கள்

/தேவன் என்றால் என்னவென்று உங்களுக்கு புரியாதவரையில் உங்களை போன்றோருக்கு எப்படி பதில் கொடுத்தாலும் உங்களுக்கு அது செரிக்காது!! கொல்வின் அவர்களுக்கு தெரிவதெல்லாம் இலங்கை வேதாகம கல்லூரியின் வஸந்தகுமார் அவர்களின் எழுத்துக்கள் மாத்திரமே!! அந்த பண்டிதரிடமே தங்களின் கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்களே!! //

ஹா...ஹா...ஹா...

ரஸலின் போதனைகளை சிறிது மாற்றியும் அப்படியேயும் வெட்கமில்லாமல் எழுதும் உங்களை விட ஆசிரியர் எவ்வளவோ மேல் ஏற்கனவே Citation & Reference பற்றிய விபரம் போதவில்லையோ. விக்கிவீடியாவில் பார்க்கவில்லையா?

இன்னும் நல்ல உரக்க ஆசிரியரின் பெயரை உச்சரியுங்கள். காரணமில்லாமல் ஆசிரியரின் பெயரை உச்சரிப்பதைப் பார்த்தால் ஏதோ விடயம் இருக்கிறது என்பது புரிகிறது. வரும் காலங்களில் அதிகமாக பதிவேன்.

தேவதூருக்கு காலில்லை என்று சொல்லும் உங்களைப் போன்றவர்கள் பபிலோனிய புராணக் கதைகளைப் பின்பற்றுபவர்கள். ரசல் தேவலாம்.

ரஸலின் புத்தகம் தானே உங்களுக்கு வேதப் புத்தகம் அதை சொல்வதில் என்ன தயக்கம்






__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
என் அன்பு தெய்வம் இயேசுவை தொழமறுக்கும் பரிசேயர்களுக்கு பதில்கள்
Permalink  
 


//முதலாவது தேவன் என்கிற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் உங்களுடன் விவாதிக்கலாம்!! மேலும் இயேசு கிறிஸ்துவிடம் அல்ல, இயேசு கிறிஸ்து கற்பித்தப்படி பிதாவிடத்தில் தான் ஜெபிக்க வேண்டும்!! அதை தான் பரிசேயத்தனமாக நீங்கள் பின்பற்றி வருகிறீர்களே!!

எல்லா துதியும் கனமும் மகிமையும் உமக்கு (பிதா) ஒருவருக்கே செலுத்துகிறோம், எங்கள் கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஜெபம் கேளும் எங்கள் நல்ல பிதாவே!!
//

ஸ்தேவான் யாரிடத்தில் ஜெபித்தான்?
கிழே உள்ள வசனங்களை எதற்க்காக?

என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்.  (யோவான் 14:14).

கொரிந்துவிலே கிறிஸ்து இயேசுவுக்குள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாயும், பரிசுத்தவான்களாகும்படி அழைக்கப்பட்டவர்களாயுமிருக்கிற தேவனுடைய சபைக்கும், எங்களுக்கும் தங்களுக்கும் ஆண்டவராயிருக்கிற நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தை எங்கும் தொழுதுகொள்ளுகிற அனைவருக்கும் எழுதுகிறதாவது (1 கொரி 1:2)

////    * "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் (YAWH) பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும் " (ஏசாயா 40:3)
* "பள்ளமெல்லம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும் "(ஏசாயா 40:4)
* "கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று." (ஏசாயா 40:5)//

இந்த வசனங்களில் சொல்லப்பட்ட யாவும், தேவனை அறிந்துக்கொள்ள இயேசு கிறிஸ்துவின் மூலமாக செய்யப்படப்போகும் காரியத்தை சொல்லப்பட்டிருக்கிறது!! சொன்னால் நம்பவா போகிறீர்கள்!!

//

என்ன ஒரு மாய்மாலம்??? யோவான் வழியை யாருக்கு ஆயத்தம் பண்ணினான் என்று 5 வயது குழந்தைக்கு தெரியும். இந்த பரிசேயர்களுக்கு அந்த நேரத்தில் "Selective Amniesia" வந்து எல்லாம் மறந்துடிச்சு.
"அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள்"  என்று எழுதியிருக்கிறதே , யாராந்த தேவன் என்று கேட்டால் மளுப்புதுங்க. ஒழுங்கா நெஞ்சிலே கைவைத்து பதில் சொல்லுங்கள். யோவான் யாருக்கு வழியை செவ்வை பண்ணினான்?

ஏதோ இயேசு மகிமை இல்லாமல் வந்து மகிமையை சம்பாதித்தது போல பினாத்திக்கிட்டு திரிஞ்சதுங்க, வசனம் தெளிவாய் சொல்லுது அவர் வரும்போது தேவனின் முழுமகிமையோடு வந்தார் (கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும்). சினாய் மலையில் தேவனால் மோசேக்கு மறுக்கப்பட்ட அவருடைய முகத்தின் மகிமையை அவன் மறுரூபமலையிலே இயேசு கிறிஸ்துவின் முகத்தில் கண்டு ஆனந்தித்தான்.

 இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச்சொன்ன தேவன் இயேசுவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப்பண்ணும்பொருட்டாக... (II கொரிந்தியர் 4:6)

//முதலாவது தேவன் என்கிற ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தால் உங்களுடன் விவாதிக்கலாம்!!//

ஏன் நீங்கள் அதை சொல்லலாமே? தேவன் என்றால் அர்த்தம் என்ன, இயேசு யார்? அவர் தேவன்தான் ஆனால் தேவனில்லை(?) போன்ற உங்கள் அறிவுபூர்வமான (?) வாதங்களை எடுத்து வையுங்களேன்.

//பாட்டு பாடியே இயேசுவை அப்பா என்று ஆக்கிவிட்டவர்கள் இருக்கிறார்கள்!! பிதாவால் மரிக்க முடியாது என்கிறது வசனம்!! பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கும் இயேசு கிறிஸ்துவிடம் போய் கண்ணீர் சிந்த நீங்கள் என்ன உங்கள் மாம்சத்தில் பரலோகம் போவீர்கள் என்று நினைப்பா?? இயேசுவை அப்பா என்று பிதாவிற்கு முன்பு சொல்லுவதே பிதாவை தூஷிப்பதாகும்!!//

இயேசுவை நித்திய பிதா என்று ஏசாயா சொன்னது தூஷணமா?

கிழே உள்ள வசனத்தை சொன்னது யார்?

  •  நான் அவரிடத்தில் நம்பிக்கையாயிருப்பேன் என்றும்; இதோ, நானும், தேவன் எனக்குக் கொடுத்த பிள்ளைகளும் என்றும் சொல்லியிருக்கிறார்.(எபிரெயர் 2:13)
  • ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும் (எபிரெயர் 2:14)

பரிசேயர்களுக்கு இயேசுவை தூதனகத்தான் தெரியும்.

//தேவன் என்றால் என்னவென்று உங்களுக்கு புரியாதவரையில் உங்களை போன்றோருக்கு எப்படி பதில் கொடுத்தாலும் உங்களுக்கு அது செரிக்காது!! கொல்வின் அவர்களுக்கு தெரிவதெல்லாம் இலங்கை வேதாகம கல்லூரியின் வஸந்தகுமார் அவர்களின் எழுத்துக்கள் மாத்திரமே!! அந்த பண்டிதரிடமே தங்களின் கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்களே!! //

மறுபடியும் பதில் தெரியாததால் மழுப்பல். நல்ல திட்ட மட்டும் கை ஓடிய type பன்னதெரியும் ஆனால் எதாவது ஒறைக்கிற மாதிரி கேள்வி கேட்டால் மழுப்ப மட்டுமே தெரியும். சர்வத்திற்கும் மேலான தேவன் என்றால் யார்? மகா தேவன் என்றாலும் யார்? என்று நல்லா தெரியும் ஆனா வெளில சொல்லிட்டா அவர்கள் சேவிக்கும் "பிரபஞ்சத்தின் தேவன்" கோவிச்சுகுவார்.
 


 



-- Edited by John on Tuesday 1st of March 2011 09:09:55 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: என் அன்பு தெய்வம் இயேசுவை தொழமறுக்கும் பரிசேயர்களுக்கு பதில்கள்
Permalink  
 


Anbu@
தங்களை நீதிமான்களென நம்பி, பிறரை அற்பமாகக் கருதுவதும், பாவிகளோடு பழகுவதைக்கூட அற்பமாகக் கருதுவதும் பரிசேயத்தனமே!


  • "தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
  • இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.
  • பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.
  • வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் தசமபாகம் செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்."(லூக்கா 18:9-12 )
  • "பரிசேயர் அதைக் கண்டு, அவருடைய சீஷர்களை நோக்கி: உங்கள் போதகர் ஆயக்காரரோடும் பாவிகளோடும் போஜனம்பண்ணுகிறதென்னவென்று கேட்டார்கள்."(மத்தேயு 9:11)
இன்றைய திரித்துவவாதிகளுக்கு ஒரு அபார நம்பிக்கை. இயேசுவை ஏற்றுக்கொண்டு அவரைத் தொழுவதனால் தாங்கள் அனைவரும் நீதிமான்களென்றும், இயேசுவை ஏற்றுக்கொள்ளாத அனைவரும் மாபாவிகளென்றும் நம்புவதே அந்நம்பிக்கையாகும்.

அது மட்டுமல்ல, வெளிப்படையான ஒரு பாவமான விபச்சாரத்தை செய்தவர்களை மிகமிக மட்டமாகக் கருதுவதும் அவர்களுக்கு வாடிக்கையாகும். இவர்கள் தங்கள் இருதயத்தில் செய்கிற விபச்சாரத்தையெல்லாம் சற்றும் நினைத்துப்பாராமல், சரீரத்தில் விபச்சாரம் செய்தவர்களை மிக மட்டமாகக் கருதி, அவர்களை தூஷிக்கவும் செய்வார்கள்.

விபச்சாரர்களை மட்டுமின்றி விபச்சாரரின் சந்ததிகளையும் ஏளனமாக தூஷிப்பார்கள். கேட்டால், இயேசுகூட “பொல்லாத விபச்சார சந்ததியினர்” என்று சொல்லியுள்ளாரே எனச் சொல்லி தங்களை நியாயப்படுத்திக் கொள்வார்கள். இயேசு சொன்ன “விபச்சாரம்” எது என்பதையெல்லாம் சற்றும் சிந்தியாமல், விபச்சாரரையும் அவர்களின் சந்ததியையும் ஏளனம்செய்வது சில திரித்துவவாதிகளின் பொழுதுபோக்காகும்.

இப்படியெல்லாம் செய்வது பரிசேயத்தனமே என்பதை அவர்கள் சற்றும் உணர்வதில்லை. மாறாக, “இயேசுவைத் தொழாதிருப்பதுதான் பரிசேயத்தனம்” என்று தாங்களாகவே ஒரு விதியை வகுத்துக்கொண்டு, இயேசுவைத் தொழுகிற தங்களைக் குறித்து மேன்மைபாராட்டுவார்கள்.

பெரியவர் அன்பு அவர்களே, நீங்க ரொம்ப பெரியவரென்று நினைத்தேன்; உங்களிடம் கொஞ்சமேனும் நியாய உணர்வு இருக்குமோ என்றும் நம்பினேன்;நீங்கள் இத்தனை கீழ்த்தரமான சிந்தையுள்ளவர் என்பதை நினைத்தால் மிகவும் வெட்கமாக இருக்கிறது;உம‌க்கு இன்னும் பெண்ணாசை போகவில்லையென்பது உமது எழுத்துக்களில் நன்கு தெரிகிறது;உமக்கு விபச்சாரிகளுடனும் அதிக தொடர்பு இருக்கும் போலிருக்கிறது;அதன் காரணமாகவே அடியேன் தத்துவார்த்த ரீதியில் சொன்னதொரு மேற்கோளை இப்படி பிரித்துப்போட்டு மேய்ந்துகொண்டிருக்கிறீர்கள்;சத்தியத்தை மேய்ந்துகொள்ளுங்கள், இரட்சிக்கப்படுவீர்கள்;"இயேசு தெய்வமல்ல" என்று சொல்லும் உங்களையெல்லாம் உயிரோடு வைத்திருப்பதே தேவகிருபை தான்..!

  • "அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்."(லூக்கா.19:27)

இராஜாவாகிய தாவீது தன் மகனும் இஸ்ரவேலின் இராஜாவுமான சாலமோனுக்கு இராஜ்யபாரம் நிலைபெறவும் உறுதிப்படவும் கொடுத்த கட்டளையைப் போலவே உங்கள் ஆட்களையும் வெட்டிப்போட கட்டளை பிறக்கும்;உங்களை வெட்டிப்போடும் ஆளும் சீக்கிரத்தில் வருவான்;அதுவரை பொழுதுபோக எங்களோடு பேசிக்கொண்டிருங்கள்..!

  • "அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.
  • பின்பு, எருசலேமுக்கு விரோதமாக வந்திருந்த எல்லா ஜாதிகளிலும் மீதியான யாவரும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவைத் தொழுதுகொள்ளும்படிக்கும், கூடாரப்பண்டிகையை ஆசரிக்கும்படிக்கும், வருஷாவருஷம் வருவார்கள்."(சகரியா.14:9 & 16)
உங்களிடம் கற்றுக்கொள்ள எங்களுக்கு ஒன்றுமில்லை;நீங்கள் எங்கள் இராஜாவை தூஷித்து சிறுமைப்படுத்துவதை நிறுத்தினால் உங்களுக்கு கோடி புண்ணியமாகும்;உங்கள் சந்ததியாரும் இம்மண்ணில் சுகமாய் வாழுவார்கள்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 


சர்வத்திற்கும் மேலான தேவன் என்றால் யார் என்று சொல்லவே இல்லியே?

மகா தேவன் என்றாலும் யார் என்று இன்னும் சொல்லவே இல்லியே?




எதற்கெடுத்தாலும் மூலபாஷை என்று சொல்லுபவர்கள் அதற்குரிய சரியான அர்த்தத்தை  மூலபாஷையின் பிரகாரமே தரவேண்டும். மூலபாஷை பாண்டித்தியம் உண்டு அல்லவா? மனிதப் போதனைகளைத் தரக்கூடாது.

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

//பரிசேயருக்கு உண்டானது மாம்சத்தினின்படியான கட்டளை!! விபச்சாரம் செய்யாதிருப்பாயாக என்பது அவர்களுக்கு உண்டான கட்டளை ஆனால் ஒரு ஸ்திரியை இச்சயுடன் பார்த்தாலே விபச்சாரம் செய்தாகிவிட்டது என்பது கிறிஸ்துவின் கட்டளை!! அங்கேயும் கட்டளை தான்,//

//இப்படி இயேசு கிறிஸ்து சொன்னதை தான் கைக்கொள்ளும்படி அழக்கப்பட்டிருக்கிறேன்!!//

இது வரை ஒழுங்காக இதை பின்பற்றி இருக்கிறீர்களா? எத்தனை கட்டளையை ஒழுங்காய் கடைபிடித்தால் பாஸ் மார்க் என்று தெரியுமா?

//பரலோகம் சென்று விடுவேன் என்கிற வாஞ்சை இருக்கலாம், ஆனால் பரலோகம் செல்வது என்னமோ, கண்ணீர் சிந்துவதால் அல்ல,//

நான் பரலோகம் செல்வதே என் இயேசு தேவனின் பாதத்தில் அமர்ந்து ஆனந்த கண்ணிர் சிந்தி "என்னிடத்தில் என்ன இருந்தது என்று என்னக்காக மரித்தீர் அப்பா" என்று கேட்கத்தான்

//பிதா என்பது personality என்று தேவன் என்பது Essence என்று "பொருத்திப்பார்க்காவிட்டால்" இந்த வசனம் சரியாக மற்ற வசனங்களோடு ஒத்து போகாது என்று போதிக்கும் உங்களுக்கு இப்படி பொருத்தி பார்த்து தான் அர்த்தம் கொள்ள வேண்டும் என்று எந்த மனிதன சொல்லி தந்தான்!! மனித போதனைகளின் கிடங்காக இருந்துக்கொண்டு நான் மனித போதனையை பின்பற்றுகிறேன் என்று சொல்லுவதை காட்டிலும் அபத்தம் ஒன்றும் இல்லை!! நான் எந்த கட்டளையும் மீறவில்லை, வசனத்தை இயேசு கிறிஸ்து சொன்னபடி வாசியுங்கள்:
//

உங்க அளவுக்கு தேவனுடைய வசனத்தை மாற்றி எழுத எனக்கு தைரியம் இல்லாததால் தான்

//தேவனாக இருக்கும் கர்த்தர் என்றே இருக்கிறதே தவிர,. வெறுமனே கர்த்தர் என்று இல்லை!!//

இயேசுவும் ஒரு தேவன் தானே! அவர் தானே ஒரே கர்த்தர் அப்புறம் எப்படி வேறு ஒரு தேவனாகிய கர்த்தர் வந்தார்?


சர்வத்திற்கும் மேலான தேவன் என்றால் யார் என்று சொல்லவே இல்லியே?

மகா தேவன் என்றாலும் யார் என்று இன்னும் சொல்லவே இல்லியே?


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. ஜான். தர்க்கரீதியில் வேத அடிப்படையில் கேள்விகள் முன்வைக்கப்பட்டிருப்பது  சிறந்தது. உங்கள் முயற்சி பாராட்டத்தக்கது.

Bro. Chillsam Wrote
இவர்களுடன் பேசுவதே வீணான முயற்சி' என்று விலகி நிற்கும் மற்ற தோழர்களும் இணைந்து போராடினால் நாம் இங்கே இணையதளத்தின் தமிழ் கிறித்தவ பதிவுகளில் ஆரோக்கிய உபதேசத்தை பெருமளவு சேமிக்க முடியும்;அது வருங்காலத்தில் இன்னும் அதிகமானோர்க்கு பயனுள்ளதாக அமையும் என்பது நிச்சயம்
.

இனி விவாதத்தில் ஈடுபடுவது இல்லை என்று தற்போதைக்கு முடிவெடுத்திருக்கிறேன். நாம் சொல்லுவதை  அவர்கள் நிச்சயம் கேட்கப்போவதில்லை. ஆயினும் சத்தியத்தை  சொல்ல வேண்டியது எமது கடமை. சில கட்டுரைகளை பதிக்கலாம் என எண்ணியுள்ளேன்.

அடுத்து வரும் வாரங்களில் பதிக்கிறேன்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
என் அன்பு தெய்வம் இயேசுவை தொழமறுக்கும் பரிசேயர்களுக்கு பதில்கள்
Permalink  
 


//தற்போது இந்த அருமையான வகுப்புகள் நடந்துக்கொண்டிருக்கும் இடம் மாற்றப்பட்டிருக்கிறது!! விருப்பமானவர்கள் இந்த வேத வகுப்பகளில் கலந்துக்கொள்ள வேண்டுமென்றால் கீழ் காணும் முகவரிக்கு வரலாம்!! தொடர்ந்து வேத பாடங்களில் பங்கு பெற்று தெளிவு பெறுங்கள்:

வேத பாடம் பிரதி ஞாயிறு மாலை 5.30க்கு தொடங்கும் இடம்:

XXXXXXXXXXXXXXXXXXXXX
XXXXXXXXXXXXXXXXXX
XXXXXXXXXXXXXXX
XXXXXXXXXXXX
XXXXXXXXX


வேதப்பாடங்கள் முற்றிலும் இலவசம்!!//

விரைவாக, இலவசமா சாத்தானிடம் சரணடைய ஒரு வாய்ப்பு! பரிசேய வேதம் கற்க விரும்புபவர்கள் தாராளமாய் போய் வஞ்சிக்கப்படலாம்


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

நீங்கள் "Selective" ஆக பதிலளிக்காமல் விட்டவைகள்.

இயேசு தேவனில்லை என்றால், அவரிடம் ஜெபிக்கலமா ?

இயேசு சொல்லுகிறார்:

  • "...முந்தினவரும் பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவருமானவர் சொல்லுகிறதாவது.."(வெளி 2:8)
  • "நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்."(வெளி 22:13)

யேகோவா தேவன் சொல்லுகிறார்:

  • "நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்."(ஏசாயா 44:6)
இதற்கு இந்த பரிசேயகூட்டம் என்ன விளக்கம் சொல்லுமோ?

கீழே கொடுக்கப்பட்ட வசனங்கள் யோவான் ஸ்நாநகனை குறித்தவை என்பது எல்லாருக்கும் தெரியும். யோவான் ஸ்நாநகன் வழியை ஆயத்தம் பண்ணின கர்த்தர் யார்? தேவன் யார்?  கர்த்தரின் மகிமை யார்?

  • "கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் (YAWH) பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும் " (ஏசாயா 40:3)
  • "பள்ளமெல்லம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவை சமமாக்கப்படும் என்றும் "(ஏசாயா 40:4)
  • "கர்த்தரின் மகிமை வெளியரங்கமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று." (ஏசாயா 40:5)



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
Permalink  
 

பரிசேயர்கள் தியானிக்க- பதிலளிக்க வேண்டிய வசனங்கள்:

Only God is our Savior (Isa 43:11)
Jesus is our Savior (Tit 2:13; 2 Pet 1:1)

God is our only Rock (Isa 44:8, Ps 18:2, 94:22)
Jesus is our Rock (1 Cor. 10:4)

Only God can forgive sins (Luke 5:21)
Jesus forgives sins (Luke 5:20)

God is our owner (Isa. 54:5)
Jesus is our only owner (Jude 4)

God is the horn of salvation (2 Sam 22:3)
Jesus is the horn of salvation (Luke 1:68-69)

Paul is a slave of God (Tit 1:1)
Paul is a slave of Jesus (Rom 1:1)
No man can slave for two masters (Mat 6:24)

God is the King of Israel (Isa 44:6)
Jesus is the King of Israel (Mat. 27:42, John 1:49)

God is a stone of offense and a stumbling block (Isa 8:14)
Jesus is a stone of offense and a stumbling block (1 Pet 2:8)

God was valued at 30 pieces of silver (Zech 11:12-13)
Jesus was valued at 30 pieces of silver (Mat 26:14-16)

To God, every knee will bow and tongue confess (Isa 45:22-23)
To Jesus, every knee will bow and tongue confess (Phil 2:10-11)



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: என் அன்பு தெய்வம் இயேசுவை தொழமறுக்கும் பரிசேயர்களுக்கு பதில்கள்
Permalink  
 


//ஆனால் நான் விசுவாசிக்கிற எல்லாமே நேரடியாக வேதத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது!! வேதத்தில் இல்லாததை தான் நான் ஒரு போதும் தினிக்கவில்லை, இருப்பதையே விரிவாக சொல்லி சொல்லுகிறேன்!! ஆனால் வேதத்தில் இல்லாத உங்களின் சொந்த போதனையான "இயேசுவை தொழுதுக்கொள்பவனே பரலோகத்திற்கு போக முடியும்"//

ரெண்டு தேவர்கள் உண்டு என்று எங்கே சொல்லப்பட்டு இருக்கிறது?  இயேசு "ஒரு தேவன்" (a god) என்றால் அவர் உண்மையான தேவனா அல்லது பிசாசா?

 நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிர தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார்.

//இது போல் ஆயிரம் பேர் ஆயிரம் படங்கள் காண்பிக்கலாம், ஆனால் இந்த படங்களில் ஒன்றும் என் வேத வசனத்திற்கு ஈடாகாது, ஒரு வேளை இந்த படம் வேத வசனங்களை சுட்டி காண்பித்திருந்தால் கூட யோசிக்கலாம்!! வசனமே இல்லாத இது போன்ற ஒரு வெறுமையான படங்கள், ஏற்கனவே திரித்துவத்தில் ஊறி போனவர்களுக்கு தான் தேனாட்டும் இருக்கும், என்னை போல் வேதத்தை நம்புவோருக்கு இது ஒரு சாதாரன வரைப்படம்!!//

உங்களுடைய வேத நம்பிக்கையின் லட்சணம்தான் அழகாக தெரிகிறதே! எல்லாரும் பரலோகம் போவார்கள் என்பது எந்த வேதத்தின் நம்பிக்கை? ரிக் வேதமா?
 
//இன்று கிறிஸ்துவத்தின் அடிப்படையாக கருதுகிற திரித்துவத்தை தாங்கள் அவவியமில்லாத கோட்பாடு என்று சொல்லிவிட்ட கையோடு, அவசியம் இல்லை தான், ஆனால் விசுவாசித்தே ஆகவேண்டிய கோட்பாடு என்கிறீர்கள்!! தயவு செய்து நிலையான ஒரு நிலையைல் இருந்து யோசித்து பாருங்கள்!!//

A poor illiterate man may not even understand what is trinity he may not even know there is some one called God the Father but he knows Jesus, Confessed his sins, Accpeted the alien righteousness which comes thru the cross then he is saved (without know there is a Father God exist). This is what i meant "non essential". I don't think you have that option though...

நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை. (யோவான் 15:22)

உங்களுடைய "கிறிஸ்தவ" மதத்தில், நான் முன்னமே சொன்னது போல "greek" தெரிந்தால் தான் இரட்சிப்பு


//Part of Action NOT Part of Plan  என்பதை சொல்லுவதற்கு திட்டமான வசனம் உங்களிடத்தில் இல்லை!! ஆனால் இயேசு கிறிஸ்து செய்த எல்லாவற்றையும் பிதா சொல்லிய பிரகாரமே, அவர் செய்தா, பேசினார் என்று இருக்கும் போது நீங்கள் முன்னமே யூகித்திருக்கும் " Part of Action NOT Part of Plan" என்பது தவறாகிவிடுகிறது!!
//

நீங்கள் என்ன சொல்லுகிறீகள் என்பது உங்களுக்கே புரிகிறதா? வானத்தை விரிக்கும்போது இயேசுவும் இருந்தார். ஒன்று நான் கட்டளையிட குமாரன் வானத்தை விரித்தார் என்று சொல்லியிருக்கலாம் அல்லது நாங்கள் இருவராய் இருந்தோம் என்றும் சொல்லியிருக்கலாம். "ஒருவராய்" என்றால் ஒன்று பிதா பொய் சொல்லவேண்டும் அல்லது இருவரும் "Essence" இல் ஒன்றாய் இருப்பதால் தேவன் அவ்வாறு சொல்லியிருக்கவேண்டும்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
என் அன்பு தெய்வம் இயேசுவை தொழமறுக்கும் பரிசேயர்களுக்கு பதில்கள்
Permalink  
 


//ஆனால் வேதத்தில் அப்படி ஒரு கட்டளை அதாவது இயேசுவின் பாதத்தில் விழுந்து கண்ணீரால் கழுவி முத்தம் செய்தால் தான் இரட்சிப்பு என்று இருந்திருந்தால் நிச்சயமாகவே செய்வேன்!! //

ரட்சிப்பின் பாக்கியமே இயேசுவின் பாதத்தில் அமர்வதுதான், உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றால் பரலோகம் நிச்சயம் போரடிக்கும்.  உங்களை பரிசேயன் என்று சொல்ல தேவன் எனக்கு கொடுத்த வெளிப்பட்டுக்காய் நன்றி செலுத்துகிறேன் ஏனென்றால் பரிசேயர்களும் இது போலவே கட்டளையின் படி தங்கள் பெற்றோர்களை நேசித்தார்கள், கொர்பான் கொடுத்தார்கள்  கிறிஸ்து அவர்களை மெச்சிக்கொள்ள வில்லை

  • எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. (மாற்கு 7:10)
  • நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் (மாற்கு 7:11)

    மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக் குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். (மாற்கு 7:7)


தேவனிடத்தில் பரிசேயர்களாகிய நீங்கள் எப்படி அன்பு கூறுவிர்கள்?

 இயேசு அவனை நோக்கி: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்புகூருவாயாக (மத்தேயு 22:37)


 
//
1 கொரி. 8:6-ல் “பிதாவாகிய ஒரே தேவன்” என பவுல் தெளிவாகச் சொன்னதை எடுத்துச் சொன்ன பின்னரும், “ஒரே தேவன் பிதாதான்
” என நிரூபிக்கவில்லை எனச் சொல்வதிலிருந்து இவர்களின் கண்கள் எவ்வளவாய் மறைக்கப்பட்டுள்ளன என்பதை நான் புரிந்துகொண்டேன்.

பிதாவாகிய ஒரே தேவன் எனும் சொற்றொடருக்கும் ஒரே தேவன் பிதாதான்
எனும் சொற்றொடருக்கும் என்ன வித்தியாசம் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.//

பிதா என்பது personality, தேவன் என்பது "Essence" என்று பொருத்திப்பார்க்காவிட்டால் இந்த வசனம் சரியாக மட்ற வசனங்களோடு ஒத்துபோகாது .  ஒரே தேவன் பிதா என்றால், ஒரே கர்த்தர் கிறிஸ்து தான்,  "உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக" என்ற கட்டளையை நீங்கள் ஏன் மிறுகிறீர்கள்? ஒரே கர்த்தர் இயேசுவென்றால் அவரை ஏன் ஆராதிக்க மறுக்கிறீர்கள்?  கிழே உள்ளவசனத்தில் உள்ள ஒரே கர்த்தர் யார்? 

 
 இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்.(உபாகமம் 6:4)

//மனிதனின் குமாரன் பரிபூரணமாக மனிதத்துவம் உள்ள மற்றொரு மனிதனாகத்தான் இருப்பான். அதுபோல் தேவனுடைய குமாரனாகிய இயேசுவும் பரிபூரணமாக தேவத்துவம் உள்ள மற்றொரு தேவனாகத்தான் இருப்பார்//

அப்ப In "Essence" or "Nature" ஒரு மனிதனும் அவனுடைய மகனும் ஒன்றுதான். அது போல இயேசுவும் , பிதாவும் In Essence ஒன்றுதான். இதைத்தான் நான் மொதல இருந்து சொல்லிக்கிட்டு இருக்கேன்

//சரி, “ஒரே தேவன்” என்பது பிதா மட்டுமல்ல குமாரனாகிய இயேசுவும் “ஒரே தேவன்” என்றே வைத்துக்கொள்வோமே! அத்தோடு, பிதாவும் குமாரனும் தனித்தனி ஆள்த்தத்துவமுள்ளவர்கள் என்றும் சொல்லிக் கொள்வோமே! இதனால் யாருக்கும் எந்தக் கஷ்டமும் இல்லை. ஆனால் என்ன, இக்கூற்றை ஒரு காமெடியைப் படிப்பதுபோல படிக்கவேண்டும், அவ்வளவே.//

உங்கள்ளுக்கு "காமடியாய்" தோன்றுவது எனக்கு புதிராக இல்லை ஏனென்றால்

  •  ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான். (I கொரிந்தியர் 2:14)

நீங்கள் சொல்லுவது எனக்கு காமடியாய் தோன்றவில்லை ஆனால் "அருவருப்பாய்" இருக்கிறது. கிறிஸ்தவத்தில் ரெண்டு தேவன்கள் என்பதை கேட்பதற்கே காது கூசுகிறது! தேவன் தெளிவாய் சொல்லுகிறார்  

எனக்கு முன் ஏற்பட்ட தேவன் இல்லை, எனக்குப்பின் இருப்பதும் இல்லை.
(ஏசாயா 43:10)


//மரித்த இயேசுவாகிய தேவனை, உயிரோடெழுப்பியது பிதாவாகிய தேவன் என்பதை மறந்துவிட வேண்டும்//

இயேசு அவரே எழும்பினார் என்றும் சொல்லலாம். இவை எல்லாம் திரித்துவதிற்கு உள்ள அதாரங்கள். தேவனும் எழுப்பினார் என்று இருக்கிறது, இயேசுவும் நானே கொடுப்பேன் , திரும்ப எடுத்துகொள்வேன் என்று சொல்லுகிறார்

  •  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார். (யோவான் 2:19)
  • ஒருவனும் அதை என்னிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளமாட்டான்; நானே அதைக் கொடுக்கிறேன், அதைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு (யோவான் 10:18)

//பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை//

பரலோகத்திலிருக்கிற பிதாவின் சித்தம் அவருடைய குமாரனை அவரை கனம்பன்னுவது போல எல்லாரும் கணம் பண்ணுவதே!

  •  குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம்பண்ணாதவனாயிருக்கிறான். (யோவான் 5:23)
  •  அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர்தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். (யோவான் 5:22)

நீங்கள் நிச்சயமாக குமாரனையும் கனம்பண்ணவில்லை அவருடைய பிதாவையும் கனம்பண்ணவில்லை.



-- Edited by John on Monday 28th of February 2011 03:10:06 AM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: என் அன்பு தெய்வம் இயேசுவை தொழமறுக்கும் பரிசேயர்களுக்கு பதில்கள்
Permalink  
 



எல்லா கேள்விகளுக்கும் விரைவில் பதில் தருகிறேன். இப்போது ஒரு சில சந்தேகங்கள்

//இயேசு கிறிஸ்து இப்படி ஒரு கட்டளையை கொடுக்கவில்லை!! அப்போஸ்தலர்கள் இதை செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை!! மேலும் மரியாளை பின்பற்ற நான் அழைக்கப்படவில்லை, மாறாக, கிறிஸ்துவையும் அவர் அப்போஸ்தலர்கள் மூலமாக கிடைத்த வார்த்தைகளின்படி நடக்கவே அழைக்கப்பட்டிருக்கிறேன்!! வேதம் இப்படி இருக்க, இந்த 2000 வருடத்தின் கள்ள போதகர்களும், கள்ள தீர்க்கதரிசிகளும் கிறிஸ்துவத்தை வேதத்தின் படி அனுகாமல் பாரம்பரியமாகவும், உணர்வு பூர்வமாகவும் சொல்லியதின் விளைவே உங்களின் இந்த கேள்வி!! //

மரியாளை போல இயேசுவின் பாதத்தை கண்ணீரால் கழுவி முத்தம் செய்வீர்களா? என்ற கேள்விக்கு ஆம், இல்லை என்று ஏன் பதில் தர மறுக்கிறீர்கள்? நீங்கள் செய்கிற எல்லாம் வேதத்தில் அப்படி ஒரு கட்டளை இருக்கிறதா என்று பார்த்து தான் செய்வீர்களா?  மரியாள் அப்படி செய்தது தவறா?


//மனிதனின் குமாரன் பரிபூரணமாக மனிதத்துவம் உள்ள மற்றொரு மனிதனாகத்தான் இருப்பான். அதுபோல் தேவனுடைய குமாரனாகிய இயேசுவும் பரிபூரணமாக தேவத்துவம் உள்ள மற்றொரு தேவனாகத்தான் இருப்பார். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை. தேவத்துவம் பரிபூரணமாக இருப்பதாலோ, அவரும் “ஒரு தேவனாக” இருப்பதாலோ, அவரே “ஒரே தேவன் (Unique God)” ஆகிவிடமுடியுமா?//

கிறிஸ்தவத்தில் மொத்தம் எந்தனை தேவன்கள்(?) இருக்கிறார்கள்?


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கிறித்துவின் பகைஞரான இவர்களுடைய விதண்டாவாதங்களப் பொறுக்கமுடியாமல் விலகினால், "ஓடுறான், ஓடுகாலி " என்று தூஷிப்பார்கள்; சரி,இப்படி பரியாசம் செய்கிறார்களே என்று நின்று பிடித்தாலும் மோசடி செய்யும் ஊழியர்களுடன் இணைத்துப் பேசி அவமானப்படுத்துவார்கள்;இதற்கு அஞ்சியே சத்தமாகப் பேசி சமாளிக்கவேண்டியதாகிறது;ஆனாலும் நம்முடைய அருமை  (ஜாண்) நண்பரின் தர்க்க சாஸ்திரம் சார்ந்த அணுகுமுறைக்கு முன்னால் (மேசியாவின்) எதிரிகள் நிச்சயமாகவே மண்ணைக் கவ்வுவார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்;'இவர்களுடன் பேசுவதே வீணான முயற்சி' என்று விலகி நிற்கும் மற்ற தோழர்களும் இணைந்து போராடினால் நாம் இங்கே இணையதளத்தின் தமிழ் கிறித்தவ பதிவுகளில் ஆரோக்கிய உபதேசத்தை பெருமளவு சேமிக்க முடியும்;அது வருங்காலத்தில் இன்னும் அதிகமானோர்க்கு பயனுள்ளதாக அமையும் என்பது நிச்சயம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard