Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: பின்பற்றத்தகுந்த மாதிரிகள் இல்லையா அல்லது தேவையில்லையா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
பின்பற்றத்தகுந்த மாதிரிகள் இல்லையா அல்லது தேவையில்லையா?
Permalink  
 


இது தமிழ் கிறித்தவ தளத்தின் ஒரு குறிப்பிட்ட விவாதத்தில் அடியேன் பதித்த பின்னூட்டமாகும்;இதைக் குறித்த மேலதிக கருத்துக்கள் வரவேற்கப்படுகிறது...

Quote:
//பூரணமான ஊழியர் அல்லது பூரணத்தை பற்றி சரியாக போதிக்கிற ஊழியர் இந்தியாவில் யாராவது இருக்கிறார்களா? அல்லது ஒருவரும் இல்லையா? என சொல்ல வேண்டுகிறேன். குறைந்த பட்சம் ஒருவரது பெயரையாவது சொல்ல வேண்டுகிறேன்.//

சந்தோஷ் அவர்களின் கோரிக்கையை நான் ஏற்றுக்கொண்டு உதவிசெய்ய முயற்சிக்கிறேன்;நான் குறிப்பிட நினைக்கும் சில தலைவர்களை யாருக்கும் தெரியாது;எனவே அவர்கள் பெயரைக் குறிப்பிடுவதே அவசியமற்றது; ஆனாலும் அனைவராலும் அறியப்பட்டவர்களும் அறியப்பட விரும்பாதவர்களுமான இரண்டு பிரதான தலைவர்களை நான் அறிவேன்;அவர்கள் தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை;தாங்கள் அழைக்கப்பட்ட அழைப்பில் இறுதிவரை நிலைத்திருக்கிறார்கள்;தங்களைப் பிரபலப்படுத்திக்கொள்ள வாய்ப்புகளைப் புறக்கணித்தார்கள் அல்லது மறுத்தார்கள்,அவர்களுடைய ஐக்கியத்திலிருந்து இதுவரை முறைகேடும் தேவதூஷணமும் தேவனுடைய நாமத்துக்கு அபகீர்த்தியை உண்டுபண்ணும் காரியங்களும் வெளியாகவில்லை;இந்த இரு தலைவர்களும் முன்மாதிரியான ஜீவியத்தினால் பலரையும் நீதிக்கு நேராக நடத்தி வருவது மட்டுமல்லாது ஊழியத்தில் வாரிசு முறையைத் தவிர்த்து அடுத்த கட்டத் தலைவர்களை உருவாக்குவதில் வெற்றிக்கண்டுள்ளார்கள்;இந்த தலைவர்களிடத்தில் ஜாதி உணர்வோ வட்டார உணர்வோ இருப்பது போலத் தெரியவில்லை;பண விவகாரங்களிலும் இதுவரை நேர்மையைக் கடைபிடித்து வருகிறார்கள்; மேலும் அவர்களுடைய ஊழியத்தை வியாபாரமாக்கவில்லை;இதற்கு உதாரணமாக அவர்களுடைய செய்திகள் அடங்கிய ஒலி ஒளி பேழைகள் சாதாரண விலையிலேயே விற்பனை செய்யப்படுகிறது;பல்வேறு ஊழிய திட்டங்களை அறிவித்து மீடியாக்களில் பணம் கேட்பதில்லை.

இப்படி இந்த இரு பரிசுத்தவான்களைக் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம்;எனக்கு அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை;நான் அவர்களுடைய எந்த போதனையையும் இன்னும் ஒரு மணிநேரம் கூட முழுதாக கவனித்ததோ அவர்களுடைய புத்தகங்களைப் படித்ததோ இல்லை;ஆனாலும் நான் இவர்களைப் பற்றிய எனது பொதுவான அபிப்ராயத்தை இங்கே கர்த்தருக்கு மகிமையாகப் பகிர்ந்து கொள்ளுகிறேன்;ஆனால் இவர்களுடனும் இவர்களுடைய ஊழியத்துடனும் நெருங்கிய தொடர்பிலிருந்து அவர்களால் ஞான போதகத்தைப் பெற்று வளர்ந்தோர் அதைக் குறித்து வெளிப்படையாக சொல்லுகிறதில்லை;அதற்கான காரணத்தை அறியேன்;ஒருவேளை இவ்விருவரும் ஆவியில்லாதவர்கள் என்று மற்றவர்களால் ஒதுக்கப்பட்டது தான் காரணமோ என்னவோ? ஆவி என்பது திரள்கூட்டத்தைக் கூட்டி உணர்ச்சிவயப்படவைப்பது என்று பரவலாக நம்பப்படுகிறது;அந்த வகையில் இவர்களிடம் அதிகப்பட்ச தாழ்மை இருந்தாலும் இவர்கள் ஆவியின் அபிஷேகம் பெறாதவர்கள் என்றும் அந்நிய பாஷை போன்ற பெந்தெகொஸ்தே அனுபவத்துக்கு தூரமானவர்கள் என்றும் மற்ற தலைவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டதால் இவர்களுடன் தொடர்பிலிருந்தவர்களாகத் தம்மைக் காட்டிக்கொள்ள சிலர் அஞ்சுகிறார்கள்;ஆனாலும் கர்த்தர் நம்முடைய தலைமுறைக்காகக் கொடுத்துள்ள நல்ல‌ தலைவர்களின் முன்மாதிரியான ஜீவியத்தைக் குறித்து பேசுவதையும் பின்பற்றுவதையும் நாம் தவிர்ப்பதைக் குறித்து நிச்சயமாகவே வருத்தப்படுவார்.

அடியேன் எந்த உள்நோக்கமுமில்லாமல் குறிப்பிட விரும்பிய அந்த இரு தலைவர்கள் யாரென்று அறிய மனதுண்டா? அவர்களைக் குறித்தும் விவாதிப்போம் என்று யாரும் சொல்லாதிருந்தால் சொல்லுகிறேன்,ஒரு தலைவர்.சகோ.ஜோஷுவா டானியேல்; அடுத்தவர் சகோ.சாக் பூணன்;

2.jpgimages?q=tbn:ANd9GcT79vA1ipcfKGvwLlCBY2_gM2RTL42SeyxssQbGyy0GVSsEd9Tk

இவர்கள் இருவரும் கடந்த 40 வருடத்துக்கும் மேலாக ஊழியம் செய்தும் இதுவரை ரெவரெண்ட் பட்டமோ டாக்குடரு பட்டமோ பிஸப்பு பட்டமோ போட்டுக்கொள்ளாமலும் கோட்டு சூட்டு டையைப் போட்டுக் கொண்டு மிரட்டாமலும் இருந்து காரியத்தில் கண்ணாக இருக்கும் கண்ணான தலைவர்கள் ஆவர்;இவர்களைக் குறித்த இனிமையான அனுபவங்களை தோழ‌ர்கள் அவசியம் பகிர்ந்துகொள்ளலாம்;இவர்கள் நான் தூரத்திலிருந்து இரசித்து மனதார நேசித்து பின்பற்றத் துடிக்கும் தலைவர்களாவர்.


மேலும் கர்த்தரிடத்தில் சேர்ந்தவர்களில் பரிசுத்த ஜீவியத்துக்கு முன்மாதிரியாகிய விளங்கிய பக்தசிங் ஐயா மற்றும் பிசாசுகள் அஞ்சி நடுங்கிய ஜீவானந்தம் ஐயா அவர்களையும் குறிப்பிடலாம்.

பக்தசிங் ஐயா
பக்தசிங் ஐயா

அவர்களுடைய பதிமானங்களும் அடிச்சுவடுகளும் இந்த மண்ணிலிருந்து இன்னும் மறையாத காரணத்தினால் அவர்களும் நிச்சயமாகவே நாம் பின்பற்றத் தகுந்த மாதிரிகளில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஆவர்;மேலும் பிராமண சமுதாயத்திலிருந்து மலர்ந்து மறைந்திருந்தே கிறித்துவுக்காக வாசம் வீசும் (?) சாமுவேல் கணேஷ் அவர்களும் குறிப்பிடத்தகுந்த மாதிரியாவார்;அவர் மற்றவர்களைப் போல தனது பழைய மார்க்க நம்பிக்கையினை வியாபாரமாக்காமலும் தான் புகழைடைய அதனைப் பயன்படுத்தாமலுமிருந்து சுத்த சுவிசேஷத்தை அறிவித்தவர்களில் சிறப்பானவர்;அடைப்புக்குறிக்குள்ளிருக்கும் கேள்விக்குறிக்கான காரணம் ஐயா அவர்கள் பல வருடங்களாகவே இருதய நோயினால் அவதிப்பட்டு வந்தார்;அவருடைய தற்போதய நிலை தெரியவில்லை,என்பதே;அவரைக் குறித்து அறிந்த தோழர்கள் அவரைக் குறித்த அண்மைய தகவலைப் பகிர்ந்துகொள்ளலாம்.


இப்படி குறிப்பிடத்தகுந்த மாதிரிகள் இருப்பினும் அவர்களைக் குறித்து திறந்த மனதுடன் சாட்சிகூறி தேவனை மகிமைப்படுத்த சிலர் தயங்குவதற்கான காரணம் என்னவோ நான் அறியேன்;ஆனாலும் அவரவர் தங்கள் தங்கள் தனித்தன்மையைக் காண்பிக்க எண்ணும் சுயமே இதற்குக் காரணமாக இருக்குமோ என்று யோசிக்கிறேன்;ஏனெனில் தேவன் ஒருபோதும் தம்முடைய ஜனத்தை நடத்தும் தலைவர்களையும் மேய்ப்பர்களையும் தராமலிருந்ததே இல்லை;ஆனாலும் நான் எனக்கு யாரும் முன்மாதிரியே இல்லை அல்லது தேவையில்லை;இயேசுவே எனக்கு முன்மாதிரி;ஆவியானவரே என்னை நடத்துகிறார் என்பது சரியானது அல்ல என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 3 4 5 | Page of 5  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard