Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: துளித் துளியாக விஷம்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
துளித் துளியாக விஷம்..!
Permalink  
 


No.3. இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை...!

ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு அதனைத் தவறாக வியாக்கியானம் செய்து அதற்கு சம்பந்தமில்லாத் இன்னொரு வசனத்தின் மூலம் அதனை உறுதிப்படுத்த முயற்சிக்கும் (மேசியாவின்) எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்க இந்த திரியில் "துளித் துளியாக விஷம்..!" என்ற தலைப்பில் (மேசியாவின்) எதிரிகளால் தவறாகக் கையாளப்படும் வசனங்களை எடுத்து ஆராய்ந்துவருகிறோம்; இந்த வரிசையில் மூன்றாவதாக அவர்களால் அடிக்கடி எடுத்துக்காட்டப்படும் வசனத்துக்குரிய விளக்கத்தை நமக்கிருக்கும் குறைந்த அறிவிலும் கொடுக்கப்பட்ட வெளிச்சத்திலும் ஆராய்வோமாக;இந்த சிறுவிளக்கைப் போன்ற வெளிச்சம் கூட இல்லாமல் தடுமாறும் (மேசியாவின்) எதிரிகளின் கண்கள் திறக்கப்பட்டு அவர்களும் சத்தியத்தை அறியவே வாஞ்சிக்கிறோம்.

  • // 1 கொரி 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

இது இயேசுவின் தெய்வத்துவத்தை மறுக்க யெகோவா சாட்சி கூட்டத்தார்  எடுத்தாளும் மற்றொரு  வசனமாகும்;இந்த வியாக்கியானத்தை ஏற்போரும் யெகோவா சாட்சி என்றே கருதப்படுவர்.

// இந்த அறிவு எல்லாரிடத்திலும் இருக்க வேண்டிய அவசியமுமில்லை...//

வசனம் ஓகே,வியாக்கியானம்..? நான் முயற்சிக்கிறேன், 7- ம் வசனத்தில் கூறப்படும் அறிவு முதலாம் வசனத்திலிருந்தே துவங்குகிறது;எனவே இங்கே இயேசுகிறிஸ்து தொழத்தக்க தெய்வமல்ல என்று நிரூபிப்பதற்காக இது சொல்லப்படவில்லை என்பது தெளிவு.

இயேசுவானவரின் தெய்வத்தன்மையை மறுதலிக்கும் (மேசியாவின்) எதிரிகள் நாணயத்தின் இருபக்கம் போலவும் கண்ணாடியின் பிரதி பிம்பம் போலவும் இருக்கும் மையக்கருத்தை நோக்காமல் வசனத்தைத் திரிப்பதையே வேத ஆராய்ச்சி என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

விஷயத்துக்கு வருவோம், மேற்காணும் வசனப்பகுதியிலுள்ள மற்றொரு உண்மை என்ன என்று பார்ப்போம்; எந்த அறிவு எல்லோரிடத்திலும் இல்லை என்கிறார்,பவுல்?

7- ம் வசனம் முழுமையும் படித்தாலே பொருள் விளங்கும்.

  • "ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை. சிலர் இன்றையவரைக்கும் விக்கிரகத்தை ஒரு பொருளென்று எண்ணி விக்கிரகத்துக்குப் படைக்கப்பட்டதைப் புசிக்கிறார்கள்; அவர்களுடைய மனச்சாட்சி பலவீனமாயிருப்பதால் அசுசிப்படுகிறது."

இது முழுக்க முழுக்க விக்கிரகத்துக்கு படைப்பவைகளைப் புசிப்பதைக் குறித்த பிரச்சினையை அலசுகிறது என்பது வெளிப்படையாகவே தெரிகிறது; ஆனாலும் இதிலுள்ள மற்ற உட்கூறுகளையும் உற்று நோக்க நாம் ஆயத்தமாக இருக்கிறோம்; மூலபாஷையின் உதவியின்றியே முதலில் பொதுவான கருத்தின்படி ஆராய்ந்தால், (மேசியாவின்) எதிரிகளுக்கு ஆதரவான சேதி இதில் ஒன்றுமில்லை. 6 -ம் வசனத்தை தவறாக வியாக்கியானம் செய்யும் நோக்கத்துடன் அவர்கள் 7- ம் வசனத்தின் முதல் பகுதியை மட்டும் கவனத்தில் கொள்ளுவதை கவனிக்கவேண்டும்;

ஆனால் 6- ம் வசனத்திலேயே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேன்மையை பவுலடிகள் மிக அழகாக எடுத்துரைக்கிறார்; பவுலடிகள் (மேசியாவின்) எதிரிகளில் ஒருவராக ( இருந்தார், தான் பாவி என்றுணர்ந்து மனந்திரும்பினார்...) இருந்திருந்தால் இந்த வசனத்தை எப்படி எழுதியிருப்பார்,என்று பார்ப்போம்.

  • பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். கிறிஸ்து என்னும் ஒரே ஈடுபலி நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.

ஆம், (மேசியாவின்) எதிரிகள் இயேசுவானவரை சிறுமைப்படுத்தும் வண்ணமாக ஓயாமல் ஈடுபலி என்று தானே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்? ஆனால் பவுலடிகளோ அவரை மேன்மைப்படுத்தும் வண்ணமாக இயேசுகிறிஸ்து எனும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு என்று சொல்லுகிறார் அல்லவா? இயேசுகிறிஸ்து இன்னொரு கர்த்தர் அல்ல, ஒரே கர்த்தர்; கர்த்தர் எனும் பதமானது பிதாவாகிய தேவனைக் குறிக்க மட்டுமே பயன்படுத்தப்படுவது மரபு; ஆனால் கர்த்தர் என்ற பதமானது இயேசுவானவருக்கு பயன்படுத்தப்படுவதைக் குறித்து (மேசியாவின்) எதிரிகள் கண்டுகொள்ளுகிறதில்லை; அவர்களுடைய நிலையை வலுவாக்கிக்கொள்ளவேண்டுமானால் இதுபோன்று முள்ளைப் போல குத்திக்கொண்டிருக்கும் வசனங்களையெல்லாம் திருத்தவேண்டும்;அது இயலாத காரணத்தால் தவறாக மொழிபெயர்க்கப்பட்டது என்றோ மூலப்பிரதியில இல்லாமல் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டது என்றோ சொல்லி தங்களுக்குத் தாங்களே குழிவெட்டிக்கொள்ளுகிறார்கள்;

பிழையான ஒரு புத்தகத்தை நீங்கள் ஏன் அவ்வளவு சிரமப்பட்டு வாசிக்கிறீர்கள்? பிழையே இல்லாத தூய்மையான புத்தகம் ஒன்று பிரபலமாக இருக்கிறதே, அங்கே போகலாமல்லவா, ஏன் எங்க பிராணனை வாங்கறீங்க?

ஒரே எனும் பதம் ஏற்கனவே பிரபல வேத வல்லுனர்கள் மற்றும் மொழியறிஞர்களின் கூற்றுப்படி ஒன்று என்ற எண்ணைக் குறிக்காது; அப்படியே அந்த ஒரே என்பது ஒன்று என்ற எண்ணையே குறிக்கும் என்று (மேசியாவின்) எதிரிகள் வாதாடுவார்களானால் அந்த ஒன்று இன்னொன்றாகவே இருக்கும்; அந்த இன்னொன்று இன்னது என்பதை வாசகரின் தீர்மானத்துக்கே விடுகிறேன்;

  • // 1 கொரி 8:6. பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம். 7. ஆகிலும், இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.//

மீண்டும் //இந்த அறிவு எல்லாரிடத்திலும் இல்லை.// என்ற கூற்றின் மறுபக்கத்தை நோக்குகிறேன்; மேற்காணும் வசனத்தில் நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய இன்னொரு காரியம், "அவராலே சகலமும்" மற்றும் "அவர் மூலமாய்ச் சகலமும்" எனும் வார்த்தைகள்; இதையெல்லாம் கவனிக்கும் அறிவும் கூட எல்லாரிடத்திலும் இல்லை என்கிறேன்.

நாம் விவாதிக்கும் இந்த வசனத்தைவிட்டு வெளியே செல்ல எனக்கு விருப்பமில்லை; ஆனாலும் மிகவும் முக்கியமானதொரு வசனம் நினைவுக்கு வருவதால் அதனை கவனிப்போம்,

  • கொலோசெயர் 1:16 ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

மேற்கண்ட வசனத்தில் "சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும்" என்ற வார்த்தைகளை கவனிக்கவேண்டுகிறேன்; "அவராலே சகலமும்" மற்றும் "அவர்மூலமாய்ச் சகலமும்" எனும் வார்த்தைகளுடன் இணைத்து தியானித்தால் இயேசுவானவரின் தெய்வத்தன்மை மிக எளிதாக தெரியவரும்; பிதாவாகிய தேவனும் சரி, அவரால் அனுப்பப்பட்ட குமாரனும் சரி ஒருபோதும் தொழுகையையோ விழுந்து பணிவதையோ பிரதானப்படுத்தவில்லை; மாறாக அன்றும் இன்றும் இருவருமே கீழ்ப்படிதலையும் செவிகொடுத்தலையும் மாத்திரமே விரும்புகிறார்கள்; அதனை நிறைவேற்ற தேவ அன்பு வேண்டுமே? அந்த அன்பு இயேசுவில் தானே வெளிப்பட்டது? நம்மை நேசிப்பவரால் கொடுக்கப்பட்ட ஒரு பரிசை நாம் நேசிப்போமல்லவா? அந்த அன்பில் நிற்கவே இயேசுவானவர் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட பரிசுத்தாவியாகிய வேறொரு தேற்றரவாளனை அனுப்பினார்..!

  • யோவான் 14:16 நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார்.

மேற்காணும் வசனத்திலுள்ள "வேறொரு" என்ற வார்த்தையிலேயே தேவத்துவத்தின் மூலக்கூறுகள் விளங்குகிறது; விளங்காதவர்களுக்கு எப்படி விளங்கும்? இதில் பிதா இருக்கிறார், பேசுகிறவர் இயேசுவானவர், வாக்களிக்கப்பட்டவர் பரிசுத்தாவியானவர்; இன்னும் என்ன திரித்துவத்தின் திருத்துவத்துக்கு விளக்கம் வேண்டும்? இந்த ஃபார்முலாவின் படி படித்தாலே புதிய ஏற்பாடு விளங்கும். பிதாவை ஏதோ ஆர்டிக் அண்டார்டிக் பிரதேசத்திலுள்ள பனிக்கட்டி போல கற்பனை செய்துகொண்டிருப்பவர்களுக்கு இந்த சத்தியங்கள் ஒருபோதும் விளங்காது; ஏனெனில் பிசாசானவன் அவர்களுடைய மனக்கண்களை குருடாக்கி வைத்திருக்கிறான்.

இந்த கட்டுரையானது ஃபேஸ்புக் தளத்திலும் பதிக்கப்பட்டுள்ளது.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


(மேசியாவின்) எதிரிகள் சற்றும் அறிவில்லாமல் தேவத்துவத்தை கணிதத்தில் தேடுகிறார்கள்;நாம் இதுபோன்று ஏதாவது உதாரணத்தைச் சொன்னால் உடனே மறுப்பவர்கள் தங்கள் வசதிக்காகவும் எப்படியாவது வேதத்தை மறுக்கவும் அதுகூறும் சத்தியத்தைப் பொய்யாக்கவும் இயன்றமட்டும் முயற்சித்து வருகிறார்கள்;ஆனால் வேதத்துக்காக நிற்பது போலவும் அதன் மாணவர் என்பதாகவும் நாடகமாடுகின்றனர்;ஒரு மாணவன் தன்னை  தான் மாணவன் என்று சொல்லிக்கொண்டால் மட்டும் போதாது;அவன் தன் ஆசிரியனால் மாணவன் என்று புகழப்படவேண்டும்..!

கையில் ஒரு நோட்டை எடுத்துக்கொண்டு எந்த வேலைக்கும் போகாமல் மாநகரப் பேருந்துகளில் கல்லூரி மாணவர் என்ற போர்வையில் சுற்றி வந்து இளம்பெண்களை சூறையாடும் சமுதாயத்தில் கலகங்களையும் கலவரங்களையும் உண்டாக்கும் குண்டர்களைவிட கேவலமானவர்கள் இவர்கள்; இவர்களை எங்காவது பார்த்தால் கல்லால் அடிக்கவேண்டும்;சாகக் கிடந்தாலும் இயேசுவே தெய்வம் என்று சொல்லும் வரைக்கும் பச்சைத் தண்ணீர் கூடக் கொடுக்கக்கூடாது..!

நாம், ஒரு ஊரிலே ஒரு ஒண்ணு இருந்துச்சாம் என்ற கதையில் சொல்ல வந்ததைப் புரிந்துகொள்ள முடியாத ஞானஸூன்யங்கள் அதை வைத்து வேறு கணக்கைப் போட்டு காட்டுகின்றன;அதாவது,

1+1+1=1 "ஒன்று"  என்று முட்டாள்தனமாக திரித்துவவாதிகள் போதிக்கின்றனராம்;இதுக்கு தான் அமாவாசை இருட்டுல ஒண்ணுக்கு போகக் கூடாது'ன்னு கிராமத்திலே சொல்லுவாங்க;நீங்க சொல்ற ஒண்ணுக்கு நாங்க போகலே;நாங்க சொல்ற ஒண்ணு வேற கணக்கு,அது வேதக்கணக்கு; அதாவது 1x1x1=(?) இப்ப கூட்டி கழிச்சு பாரு தம்பி கணக்கு சரியா வரும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

No.2. தேவன் ஒருவரே,இயேசு தேவன் அல்ல‌..!

ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு அதனைத் தவறாக வியாக்கியானம் செய்து அதற்கு சம்பந்தமில்லாத் இன்னொரு வசனத்தின் மூலம் அதனை உறுதிப்படுத்த முயற்சிக்கும் (மேசியாவின்) எதிரிகளின் சூழ்ச்சியை முறியடிக்க இந்த திரியில் "துளித் துளியாக விஷம்..!" என்ற தலைப்பில் (மேசியாவின்) எதிரிகளால் தவறாகக் கையாளப்படும் வசனங்களை எடுத்து ஆராய்ந்துவருகிறோம்; இந்த வரிசையில் இரண்டாவதாக அவர்களால் அடிக்கடி எடுத்துக்காட்டப்படும் வசனத்துக்குரிய விளக்கத்தை நமக்கிருக்கும் குறைந்த அறிவிலும் கொடுக்கப்பட்ட வெளிச்சத்திலும் ஆராய்வோமாக;இந்த சிறுவிளக்கைப் போன்ற வெளிச்சம் கூட இல்லாமல் தடுமாறும் (மேசியாவின்) எதிரிகளின் கண்கள் திறக்கப்பட்டு அவர்களும் சத்தியத்தை அறியவே வாஞ்சிக்கிறோம்.
  • "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." (யோவான்.17:3)
இது இயேசுவின் தெய்வத்துவத்தை மறுக்க யெகோவா சாட்சியினர் எடுத்தாளும் மற்றொரு  வசனமாகும்; இந்த வசனம் அமைந்துள்ள சூழலை கவனித்தால் இது தேவனுடைய தன்மையைக் கூறுவதற்காக  சொல்லப்படவில்லை என்பதும் இது அவரைத் தவிர மெய்யான தெய்வம் வேறொருவருமில்லை என்பதைக் கூறவே சொல்லப்பட்டது என்பதும் தெளிவாக விளங்குகிறது;ஆனாலும் விதண்டாவாதத்துக்காக தேவனுக்குள் இயேசு இல்லை, அவர் வேறு, இவர் வேறு என்று தெய்வத்தை மனுஷ ஞானத்தினால் கூறுபோட (மேசியாவின்) எதிரிகள் துணிகரமாக முயற்சித்ததன்  விளைவாக இந்த வசனமானது சர்ச்சைக்குரியதாகிறது.

எனவே தர்க்கரீதியாகவும் ஒப்புமைகள் மூலமும் நம்முடைய நிலையை விளக்க முயற்சிக்கிறோம்;ஆனால் அதையும் பரியாசம் செய்யும்  (மேசியாவின்) எதிரிகள் இப்படியெல்லாம் உலகப் பிரகாரமான உதாரணங்கள் மூலம் திரித்துவத்தைத் திணிக்கக்கூடாது என்கின்றனர்; ஆனால் உண்மையென்னவென்றால் மனிதனுக்காக மனித மொழியில் தரப்பட்ட பரிசுத்த வேதாகமமானது ஒப்புமைகளாலும் உவமைகளாலும் உதாரணங்களாலும் நிறைந்திருந்து திருஷ்டாந்தங்களாகவும் மறைபொருளாகவும் தரிசனங்களாகவும் சொப்பனங்களாகவும் மாத்திரமே தரப்பட்டுள்ளது;இவர்கள் வெளி உதாரணங்களைப் புறக்கணிப்பதால் வேதத்தின் மீது அக்கறை கொண்டவர்களைப் போல காட்டிக்கொண்டாலும் உண்மை அதுவல்ல;அவர்களுடைய நோக்கம் வேதத்தை மறுதலிப்பதே; அதன்காரணமாகவே நாம் பொருள் விளக்கக் கூறும் அனைத்து உதாரணங்களையும் புறக்கணிக்கின்றனர்.

உதாரணமாக ஆரம்பக்கல்விக்காக ஆயத்தமாகும் ஒரு குழந்தையிடம் "அ" எனும் வார்த்தையைக் கற்பிக்க அந்த எழுத்தில் துவங்கும் "அம்மா" என்ற வார்த்தையைச் சொன்னால் இந்த கூட்டத்தார் சொல்லுவார்கள்,
"அம்மா" என்ற வார்த்தையின் மூலமாக எல்லாம் "அ" எனும் வார்த்தையை அறியமுடியாது என்பதாக‌.

வேதியியல் பாடத்தில் குறிப்பிட்ட ஒரு திரவத்தின் தன்மையை எடுத்துக்கூற பரிசோதனைக் கூடமும் அதற்கான உபகரணங்களும் கற்பவரும் கற்பிப்பவரும் அவசியந்தானே;அவர்கள் ஆராய்ச்சிக்காக எடுத்துக்கொள்ளும் ஒரு குறிப்பிட்ட திரவத்தை எடுத்துக்கொண்டு அதற்குரிய முறைகளின்படி அதிலுள்ள மூலக்கூறுகளை ஆராய்வார்கள்;முடிவில் அதைக்குறித்த விளக்க அறிக்கை சமர்ப்பிக்கப்படும்.

அதுபோலவே வேதமே எல்லாவற்றுக்கும் எல்லாமுமான ஒரே ஆதாரமாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை;ஆனாலும் அதிலுள்ள ஒரு குறிப்பிட்ட காரியத்தை விளக்க தேவன் தாம் உண்டாக்கின சிருஷ்டிகளை இந்த அண்டத்தில் சாட்சிகளாக வைத்திருக்கிறார்;அதைக்கொண்டு அவரை
க் குறித்து அறிய முயற்சிப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?

எனவே தேவன் எனும் ஒரே மெய்ப்பொருளின் மூலக்கூறுகளை ஆராய்ந்தால் அதில் இயேசுவும் ஒரு பாகமாக இருக்கிறார்;தேவனுடைய தன்மையில் அவருடைய கட்டுக்கடங்காத வல்லமையும் ஒரு முக்கிய பாகமாக இருக்கிறார்;ஆவியானவர் தேவனுடைய தன்மையிலேயே இருந்து செயல்படுவதால் அவரையும் ஒரு ஆள்தத்துவத்தில் குறிப்பிடுகிறோம்; ஏனெனில் அவருக்கெதிரானவற்றுக்கும் அவருக்கும் (He is not just a foe..!) கிரியையில் மிகப்பெரிய வித்தியாமுண்டு அல்லவா?

(மேசியாவின்) எதிரிகளுக்கு தண்ணீர் உதாரணம் பிடிக்காவிட்டால் காபி,டீ உதாரணம் வேண்டுமானால் சொல்லி புரியவைக்கலாம்;உதாரணம் சொல்லுவதே புரிய வைக்கும் நோக்கத்தில் தான் எனில் அதையே சொல்லக்கூடாது என்றால் எப்படி தான் விளங்கிக்கொள்ளமுடியுமோ?


இவர்கள் வீட்டில் மூட்டை மூட்டையாக அரிசியை வாங்கி வைத்துக்கொண்டு குடும்பமாக உட்கார்ந்து அப்படியே சாப்பிடுவார்கள் போலும்..! நாங்களெல்லாம் அடுப்புமூட்டி உணவை சமைத்து சாப்பிடுவோராக்கும்;அரிசி எனும் ஒரு சாதாரண தானியத்தை விதைப்பதிலிருந்து அது வீட்டுக்கு வரும்வரை அது எத்தனை விதம் விதமான கட்டங்களைக் கடந்துவருகிறது? அதைவிட அந்த தானியத்தை மனிதனுக்கு உணவாக அளித்த கர்த்தர் விளங்கிக்கொள்ள முடியாதவராகவும் மனுஷ ஞானத்துக்கும் புரிதலுக்கும் அப்பாற்பட்டவராக இருக்கிறார்.

எனவே அவரை அறிய முயற்சித்த பக்தர்களுக்கு அவர்கள் வாழ்ந்த சூழலில் இருந்த பொருட்கள் மூலமே தம்மை வெளிப்படுத்துகிறார்;மோசேக்கு அக்கினியில் தம்மை வெளிப்படுத்தினார்;யோசுவாவுக்கோ தண்ணீரில்; தாவீதுக்கோ நிலத்தில்; இப்படியாக மலையிலும் காடுகளிலும் பல்வேறு இயற்கை சூழலிலும் தேவாதி தேவனுடைய தன்மையை பக்தர்கள் அறிந்தார்கள்;ஆனாலும் அவற்றையெல்லாம் அவர்கள் தெய்வமாக்கவில்லை என்பது பரிசுத்த வேதாகமத்தின் தனிச்சிறப்பாகும்; இயற்கைக்கு மேற்பட்ட செயற்கரியவைகளைச் செய்த தங்கள் தலைவர்களைக் கூட தேவனுடைய பிள்ளைகள் ஒருபோதும் பணிந்து கொண்டதில்லை; அடிமைகளாக இருந்தபோதும்கூட எதிரிகள் பலசாலிகளாகவும் அதிகாரமுடையவர்களாகவும் இருந்தபோதும் அவர்களுக்கு சாதாரண வணக்கம் கூட வைத்ததில்லை;இதற்கு எஸ்தரின் புத்தகத்தில் நாம் வாசிக்கும் மொர்தெகாய் ஒரு சிறந்த உதாரணமாகும்.

அப்படியிருக்க மரியின் மைந்தனாக அவதரித்த இயேசுவை நாம் எப்படி ஆராதிக்கமுடியும்? யார் இதுபோன்றதொரு மார்க்கத்தை தோற்றுவித்தது? மாம்சத்தில் வந்த இயேசுவை எப்படி ஒன்றான மெய்த் தேவனான யெகோவா தேவனுக்கு சமமாக வைத்து அறியமுடியும்? என்று   (மேசியாவின்) எதிரிகள் குழம்புகிறார்கள்; ஆனால் இவர்களுடைய இந்த குழப்பத்துக்கு தீர்வாகவே (இயேசு இவர்களுக்கும் சேர்த்து அன்றைக்கே ஜெபித்த அன்பைப் பார்க்கணுமே..) கீழ்க்கண்ட வசனம் அமைந்துள்ளது.

  • "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." (யோவான்.17:3)
இந்த வசனத்தை இப்படியாக யோசிப்போம்...
  • எது நித்திய ஜீவன்? அறிவதே.
  • எதை அறிவது? தேவனையும் அவர் அனுப்பியவரையும்.
  • அறிவது என்றால் என்ன? உணர்வது,தியானிப்பது, யோசிப்பது, சிந்திப்பது, நிதானிப்பது ஆகியவை சம்பந்தமானது.
  • ஏன் அறியவேண்டும்? அப்போது தான் நித்தியஜீவனைப் பெறமுடியும்.
  • நித்திய ஜீவன் எதற்கு? அழியாமலிருப்பதற்கு.
  • ஏன் அறியவேண்டும்? நிறைய போலிகளும் இங்கே இருக்கிறது.
எனவே போலிகளிலிருந்து நிஜமானவரை- அதாவது மெய்ப்பொருளை அடைவதே அறிவு, என்பதாக குறள் வாக்கியமும் எடுத்துக்கூறுகிறது;எனவே இந்த வசனத்தின் மூலம் நமக்குக் கிடைக்கும் முதலாவது உண்மை என்னவென்றால் அவர் ஒருவரே மெய்யான தேவன் என்பதாகும்;

இந்த வசனமானவது ஆங்கிலத்தில் இன்னும் தெளிவாக இருக்கிறது,
  • "And this is life eternal, that they might know thee the only true God, and Jesus Christ, whom thou hast sent."(Joh 17:3)
"the only true God"- எனும் அறிக்கையின் அடிநாதமானது,அவர் ஒருவர் என்பதையல்ல,அவர் ஒருவரே உண்மையானவர் என்பதாக இருக்கிறது;இதை எப்படி புரிந்துகொள்ளலாமென்றால்,"You are the only true God" என்பதாகவே புரிந்துகொள்ளவேண்டும்;அவர்களும் இப்படியே வசனத்தின் உள்ளுறுப்புகளையெல்லாம் வைத்து நம்மை நம்பவைக்க‌ (மோசடியான விதத்தில்) வசனத்தை திரித்து திருப்புகிறார்கள்; நாமோ உளத்தூய்மையுடன் சத்தியத்துக்காகப் போராடுகிறோம்.

இயேசுவின் தெய்வத்தன்மையே கேள்விக்குரியதாகி அதனை நம்மால் நிரூபிக்கமுடியாவிட்டால் அவர் சிந்திய இரத்தத்தில் என்ன விசேஷம் இருக்கமுடியும்?

இதன் பின்னணியில் இயேசுவானவர் தன்னை யாராவது தேவனாக்கிவிடுவார்களோ என்று பயந்து இந்த விண்ணப்பத்தை ஏறெடுப்பது போல (மேசியாவின்) எதிரிகள் குழந்தைத்தனமாக யோசிக்கிறார்கள்;ஆனால் இயேசுவானவர் ஜெபித்த நோக்கம் தேவன் ஒன்றானவர் என்பதை தேவனுக்கே அறிவிப்பதல்ல;ஒன்றான மெய்யான தேவனை, நீர் ஒன்றானவர் என்று தேவனுக்கே அறிவிப்பதற்கு என்ன அவசியம் இருக்கமுடியும்? அல்லது இது மற்றவர் முன்பாக புத்திபுகட்டவோ உபதேசிக்கவோ செய்த ஜெபமும் அல்ல, இது முழுக்கமுழுக்க பிதாவுக்கும் குமாரனுக்குமான உரையாடல் ஆகும்; ஆம்,ஜெபம் என்பதே உரையாடல் தானே? நாம் ஜெபித்தாலும் என்ன சொல்லுவோம், இப்படியே நீங்க ஒருத்தர் தான் மெய்யான தேவன் ஆண்டவரே என்று ஜெபிக்கிறோம் அல்லவா,அதில் நாம் சொல்லும் முக்கிய செய்தி, தேவன் ஒருவர் என்பதா அல்லது மெய்யானவர் என்பதா? மெய்யானவர் என்று ஏன் சொல்லவேண்டும்? மற்ற போலிகள் நிறைய இந்த உலகில் உண்டு; இயேசு அவர்களில் ஒருவரல்ல,அவர் பிதாவில் இருப்பவர் என்பதை அறிந்திருக்கிறோம்;எனவே இந்த வசனம் அதாவது இயேசுவானவர் ஜெபித்த இந்த வரிகளும் அது எழுதப்பட்ட நோக்கமும் இயேசுவானவர் தேவன் அல்ல என்பதையல்ல,அவர் மாத்திரமே மெய்யான தேவன் என்பதையே நமக்கு உணர்த்துகிறது;அதன் காரணமாகவே இதே யோவான் தனது முதலாம் நிருபத்தில் இவ்வாறு எழுதி முடிக்கிறார்.
  • "...அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து என்னப்பட்ட ...இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்." (1.யோவான்.5:20)
தேவனாக இல்லாதவரை ஏன் தேவன் என்றோ அதிலும் நித்திய ஜீவன் என்றும் சொல்லவேண்டும்;ஆமாம,இதுக்கு இன்னொரு புது விளக்கத்தையும் (மேசியாவின்) எதிரிகள் சொல்லுவார்கள்;"பொய்க்கு பொய் சிங்காரம்" என்று கிராமத்தார் சொல்லுவார்கள்;அதுபோல  (மேசியாவின்) எதிரிகள் ஒரு தவறான வியாக்கியானத்தை நிலைநிறுத்த பல தொடர் தவறுகளைச் செய்து தீர்மானமான ஒரு நிலைக்கு வந்துவிட்டார்கள்;அவர்கள் இதுபோன்ற நீண்ட விளக்கங்களைப் பொறுமையாகப் படிப்பது கூட இல்லை.

எனவே நான் அவர்களுக்காக இவற்றை எழுதவில்லை;அவர்களுக்கு தேவையெல்லாம் அதிரடி தான்;ஏனெனில் அடியேன் இதுபோல நிதானமாக விளக்க முயசித்தபோதெல்லாம் அதனைப் புறக்கணித்து பரியாசம் செய்து இதெல்லாம் திரித்துவவாதிகள் பொய்ப் போதகம் என்றும் வேசி சபையின் உபதேசம் என்றும் கீழ்த்தரமான வார்த்தைகளால் அவர்கள் முந்தி நம்மை தூஷித்தார்கள்;நான் செல்லும் சபையை வேசி சபை என்று சொல்லும் நீ மட்டும் கற்புக்கரசனாகி விடமுடியுமா? வேசி என்பது பெண்பால் சொல் தானே;சபையை பெண்ணுக்கு உருவகப்படுத்தி தானே சொல்லுகிறாய்? அதற்கு மட்டும் நேரடிப் பொருள் கொள்ளக்கூடாது நான் சொல்வதற்கு மட்டும் எழுத்தின்படியான பொருள் எடுப்பேன் என்பது என்ன வகை சபையின் பாரம்பரியமோ ?

  • "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்." (யோவான்.17:3)
எனவே ஒன்றான மெய்த்தேவன் என்பது அவர் ஒன்று எண்ணுக்குரியவர் என்பதைக் குறிக்காமல் அவர் மாத்திரமே என்பதைக் குறிப்பதாகக் கொள்ளவேண்டும்;அவர் மாத்திரமே எனும் போது அவருக்குள் இயேசுவும் இருப்பதை உணரவேண்டும்;ஏனெனில் ஒன்றை, "ஒன்று" என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை;இதற்காக யோசித்தபோதே நான் குட்டி கதை போல குறும்பாக யோசித்து பதித்த கருத்து வெளிப்பட்டது; (ஒரு ஊரில் ஒரு ஒண்ணு இருந்துச்சாம்...)

ஒரு மாணவனுக்கு எண்களைக் கற்பிக்க வேண்டுமானால் கரும்பலகையில் ஒன்று என்று எண்ணாலும் எழுத்தாலும் எழுதி "இதுவே (1) ஒன்று " என்று சொல்லலாம்;ஆனால் சர்வ வல்லவரிடம் ஜெபிக்கும் இயேசுவானவர் அவரைப் பார்த்து அவருக்கே கற்றுக்கொடுப்பதைப் போல, ஆண்டவரே நீங்க மூணு கிடையாது, ஒன்று தான் என்று சொல்லவில்லை,மாறாக நீர் ஒருவர் மாத்திரமே உண்மையானவர்,மற்றவை போலிகள் என்கிறார்;தொடர்ந்து அவருக்குள் இருக்கும் தம்முடைய நிலையையும் உறுதிபடுத்துகிறார்;

  • "பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்." (யோவான்.17:5)
ஏனென்றால் அந்த காலத்தில் யாரும் ஒன்றுக்கும் மேற்பட்ட தேவனைக் குறித்து பேசிக் கொண்டிருக்கவில்லை;மாறாக இயேசுவின் தெய்வத்தன்மையைக் குறித்தே கேள்வி எழுப்பிக்கொண்டிருந்தனர்; தற்காலத்திலும் அதே பாபிலோனிய ஆவியின் ஆளுமையில் இருந்துகொண்டு, அவன் தைரியம் - அந்த பாழாய்ப் போன பழைய பாம்பாகிய பிசாசு நம்மை பாபிலோனிய மார்க்கம் என்றும் வேசியின் சபை என்றும் தூஷிக்கின்றான்; ஒருத்தன் பொண்டாட்டியை தூஷித்தால் அவளுடைய புருஷன் சும்மா விடுவானா, அப்படியே நீ கிறித்துவின் மணவாட்டி சபையை தூஷித்துக் கொண்டிருக்கிறாய், உனக்குத் தகுந்த மரியாதை செய்யப்படும்;உன் பங்கு உனக்கும் உன் சந்ததிக்கும் நிச்சயமாகவே கிடைக்கும்.

நாம் ஒருபோதும் தேவனை மூன்றாகப் பார்க்கவே இல்லை;அவரை ஒன்றாகவே பார்க்கிறோம்;எனவே இயேசு சொன்ன ஒன்றான மெய்த்தேவன் என்பதையும் மனப்பூர்வமாக விசுவாசிக்கிறோம்;இயேசு இல்லாவிட்டால் பிதா ஒன்றாக இயலாது என்பதையும் இயேசு இணைந்தபிறகே ஒன்றாக இருக்கிறார் என்பதையும் அவரை கூறுபோட்டு வெவ்வேறாக்கப் பார்ப்பவர்களே  (மேசியாவின்) எதிரிகள் என்பதையும் (மேசியாவின்) எதிரிகள் முந்தி அறியவேண்டியது.

மற்றபடி நியாயமான இந்த வாதத்தையெல்லாம் புறக்கணித்துவிட்டு ஜைனுல் ஆபிதீன் மாதிரி நேரடி விவாதத்துக்கு அழைப்பதால் மாத்திரமே  (மேசியாவின்) எதிரிகள் வேதமாணவர்கள் ஆகிவிடமுடியாது;அவர்கள் காலாகாலத்துக்கும் பேந்த பேந்த முழிக்கும் பேதமாணவர்களே என்பதை கிறித்துவின் உண்மை அடியவர்கள் அறியவேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

ஒரு ஊரில் ஒரு ஒண்ணு இருந்துச்சாம்;அந்த ஒண்ணு இன்னொரு ஒண்ணுகிட்ட போய் நாம் ஒண்ணா இருக்கலாமான்னு கேட்டுச்சாம் ; இன்னொரு ஒண்ணு , ஒண்ணு கிட்ட நானும் ஒண்ணு , நீயும் ஒண்ணு நாம இரண்டு பேரும் ஒண்ணாவெ இருக்கலாமே'னுச்சாம் அப்புறம் ஒண்ணும் ஒண்ணும் ஒண்ணா இருந்திச்சாம் இதுல வேற ஏதாவது ஒண்ணு இருக்கா? வேற ஒண்ணும் இல்லை..!

இந்த கதைய எதுக்காக சொன்னேன் என்பதை நாளைக்கு சொல்லுவேன்...இந்த பேதமாணவருடைய தொல்லை தாங்கமுடியாம நமக்கு பைத்தியம் பிடிக்காத குறை..அதான் இதுமாதிரியெல்லாம் கதை எழுத, ஸாரி உட வேண்டியாதாகிறது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

யெகோவா சாட்சிகள் மற்றும் வேதாகம மாணவர் எனும் மார்க்கபேத குழுவினரின் மாயங்களை வெளியரங்கமாக்கிக் கொண்டுவருகிறோம்; இது சம்பந்தமான கட்டுரைகள் தனிதளத்தில் தொகுக்கப்பட்டு வருகிறது; ஆனாலும் இவை நீண்டதாகவும் ஏகப்பட்ட வாதப் பிரதிவாதங்களுடன் உணர்ச்சிகரமானதாகவும் இருப்பதால் வாசகரின் கவனத்துக்குச் சென்றுசேர வேண்டிய செய்தியானது அவர்களை அடைகிறதா, என்பதில் பல நண்பர்களும் ஐயம் கொள்ளுகின்றனர்; எனவே துளித் துளியாக விஷம் எனும் இந்த திரியில் அவர்கள் மார்க்கபேதத்தையும் துருபதேசத்தையும் தோற்றுவிக்கப் பயன்படுத்தும் முக்கிய வசனங்களைக் குறிப்பிட்டு அதற்குரிய சரியான விளக்கத்தைக் கொடுக்க முயற்சிக்கிறோம்;ஆர்வமுள்ள தளநண்பர்கள் தங்கள் பங்களிப்பை இந்த திரியில் வழங்கலாம்;இந்த திரியில் விவாதத்தை இயன்ற மட்டும் தவிர்ப்போம்.

No:1.இயேசுவை "கர்த்தாவே, கர்த்தாவே" என்று கூப்பிடக்கூடாது..!

இயேசுவானவரின் தெய்வத்தன்மையை மறுக்கும் யெகோவா சாட்சியினர் அதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுவது கீழ்க்கண்ட வசனமாகும்;இஸ்லாமியரும் கூட இதே வசனத்தை மேற்கோள் காட்டி இயேசுவின் இறைத் தன்மையை மறுக்கின்றனர்.
  • "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை." (மத்தேயு.7:21)
இயேசுவின் இறைத்தன்மையை மறுப்பது என்றால் என்ன?

இந்த பூமியிலிருந்து
நாம் பிழைக்கும் நாளெல்லாம் பிரார்த்தனையின் மூலம்  ஆத்மசாந்தி (Peace of mind) பெற விழைகிறோம்;அப்படிப்பட்ட ஆத்மசாந்தி (Peace of mind) பெறுவதற்காக தேவபக்தியுள்ளவர்களான நாம் கூடி வருகையில் "இறைவா" என்று அழைத்து விண்ணப்பித்தால் போதுமா,அல்லது குறிப்பிட்ட ஏதாவதொரு பெயரைச் சொல்லி கூப்பிட்டுச் சொல்லவேண்டுமா?

இதைக் குறித்து ஆண்டவர் சொன்னது என்ன?

  • "என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன்." (யோவான்.14:14)
-என்று தமது சீடர்களிடம் சொல்லுகிறார்;இது இனி நடைபெறப்போவதான சூழலில் சொல்லப்பட்ட வாக்கியமாதலால் இன்று வரை நாம் அதனைப் பயன்படுத்தி இறைவனை நோக்கி பிரார்த்தித்து வருகிறோம்;இறைவனை நோக்கி பிரார்த்திக்கும் போது ஏதாவது ஒரு குறிப்பிட்ட ஒரு நாமத்தை அதாவது பெயரை உச்சரித்தே ஆகவேண்டுமா, எனில் அது கட்டாயமில்லை; ஆனாலும் நாம் யாரை நோக்கி பிரார்த்திக்கிறோம்,என்ற உணர்வு அவசியம் தானே?

அதன்படி இயேசு சொல்லுகிறாராம், "என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவனை நான் கேட்கமாட்டேன்" என்பதாக;இது வேதப்புரட்டர்களின் கூற்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை;ஏனெனில் என்னை நோக்கி கூப்பிடாதே
(மத்தேயு.7:21) என்றவர் வேறொரு இடத்தில் (யோவான்.14:14) என் பெயரைச் சொல்லி கூப்பிடு என்பாரா?

அவருடைய திருப் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டு நமது விண்ணப்பங்களை அவரிடம் சொல்லுவதற்கு நம்மைத் தூண்டும் நூற்றுக்கணக்கான வசனங்கள் இருக்க, வேதப்புரட்டர்களோ அவரை நோக்கி கூப்பிடவேண்டாம் என்று அவரே சொல்லிவிட்டார் என்பது எத்தனை பெரிய மோசடி அல்லவா?

  • "பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை." (மத்தேயு.7:21)

மேற்கண்ட வசனத்தின் சூழமைவை (Context) கவனித்தால் இயேசு சொல்ல வந்த காரியத்தின் மையநோக்கமானது, அவரைக் கூப்பிட்டு புகழ்ந்து அவருடைய பெயரில் செய்யும் விண்ணப்பங்களைத் தடுப்பது அல்ல; மாறாக, அவருடைய பெயரைக் கூப்பிட்டு காரியங்களை ஆற்றியும் அவருக்கு உண்மையாக இல்லாதோரைக் கண்டிப்பதே இயேசுபெருமானின் நோக்கமாக இருந்துள்ளது.

இதனை மறு(றை)த்து இயேசுவானவர் தம்மை, கர்த்தாவே கர்த்தாவே என்று அழைப்பதையே கண்டிக்கிறார் என்பது சூழ்ச்சியான போதகமாகும்; ஏனெனில் தொடர்ந்து வரும் வசனங்கள் அந்த கருத்தை ஆமோதிக்கவில்லை;அதையும் கவனிப்போம்.

  • "அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
  • அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்." (மத்தேயு.7:22,23)
மேற்கண்ட வசனத்தில் ஆண்டவர் சொல்வது என்ன?

இங்கே அவர் முதலாவது தமது அதிகாரத்தை நிறுவுகிறார் (
அந்நாளில்- அநேகர்- என்னை- நோக்கி...); அடுத்து அவரை நோக்கி, "கர்த்தாவே! கர்த்தாவே! " என்று அழைத்ததைக் கண்டிக்காமல் அவர்தம் அக்கிரமச் செய்கைகளையே கண்டிக்கிறார்; ஏனெனில் அந்த அக்கிரமச் செய்கைக்காரர் அவருடைய நாமத்தினால் செய்தவற்றின் விளைவின் நினைவோடு அங்கே செல்கிறார்கள்;இங்கே அந்த அக்கிரமச் செய்கைக்காரர் இருந்தபோது இயேசுவின் நாமத்தில் எதையெல்லாம் செய்தார்களோ அத்தனையும் வாய்த்தது; கடவுளுடைய திருநாமம் அதனால் மகிமைப்பட்டது; ஆனாலும் அவருடைய திருநாமத்தைச் சொல்லி அதிசயச் செயல் செய்தவர்களின் அந்தரங்க வாழ்க்கை மோசமாக இருந்தது; அது அற்புத அதிசயங்களை அனுபவித்த ஜனங்களுக்குத் தெரியாது, ஆனாலும் சிருஷ்டிகரும் மீட்பருமாகிய இயேசுகிறித்துவுக்குத் தெரியும்; எனவே, அக்கிரம செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சபிக்கிறார்.

இதன்மூலம் கற்றுக்கொள்ளக்கூடியது என்ன‌?

நாம் கூப்பிட்டு தொழக்கூடிய ஒரே திருப்பெயர் இயேசு எனும் நாமமே; அந்த நாமத்தை பிதாவும் அங்கீகரித்துள்ளார்;ஏனெனில் குமாரன் சுயமாக ஒன்றையும் செய்கிறதில்லை;அவர்மூலம் பொழிந்தருளப்பட்ட ஆவியானவரும் சுயமாக ஒன்றையும் செய்கிறதில்லை;இம்முவரும் ஒருவராயிருக்கிறார்கள்; இறைவனின் ஆள்தத்துவத்திலும் மகிமையடைந்தவர்  இயேசுவே; ஏனெனில்,

  • "தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்." (வெளிப்படுத்தல்.5:9,10 )
தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலித்த அவபக்தியுள்ளவர்களைக் கண்டித்த இயேசுவையே, "தேவன் இல்லை" என்பது எத்தனை கொடூரமான வியாக்கியானம் அல்லவா? காலம் கொடியதாக இருக்கிறது; ஜாக்கிரதையுடன் திருவசனத்தைக் கைக்கொள்ளுவோமாக‌.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard