Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். (யோவான் 10.30)


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். (யோவான் 10.30)
Permalink  
 


வேதப்புரட்டர்கள் என்று பாவித்தால் மீண்டும் அதையே நமக்குப் பாவிப்பார்கள். கிறிஸ்துவை அறிக்கை பண்ணாதவர்கள், வேதத்திற்கு புறம்பாக பேசுபவர்கள் அனைவரும் வேதப்புரட்டர்களே. யெகோவா சாட்களும் வேதப்புரட்டர்களே! எனவே நாம் நீங்கள் கூறுகிற பிரகாரம் அவர்கள் யெகோவா சாட்கள் சபையை சாராது விட்டாலும் யெகோவா சாட்கள் என்ற குறிப்பிடலாம். அப்போதுதான் அந்த வார்த்தையை மீண்டும் நமக்கெதிராக பாவிக்க மாட்டார்கள். அத்துடன் இலகுவாக இவர்கள் யார் என்பதை வெளிப்படுத்த இயலும். தன்னை யெகோவா சாட்சிகள் என கூறிக்கொள்வதில் தான் பெருமைப்படுவதாக பெரியவர் குறிப்பிட்டிருந்தார் எனவே தாராளமாக இவ்வண்ணமே விளித்துக் கொள்ளலாம்.

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

நீங்க சொன்னா சரியாகவே இருக்கும் கொல்வின்,இனி அவர்களை "வேதப்புரட்டர்கள்" என்றே விளிப்போம்; இந்த வார்த்தையையும் அவர்கள் நம்மை நோக்கிச் சொல்லமுடியுமல்லவா? நம்மைத் திருப்பிச் சொல்ல முடியாத ஒரு பெயரைத் தேடிக் கொண்டிருக்கிறேன்;யெகோவா சாட்சிகள் என்றே குறிப்பிடலாமா?

மேலும் அவர்கள் தங்களை இனி கிறித்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்துவோம்;ஏனெனில் கிறித்துவை தொழத்தக்கவராக ஏற்றுக்கொள்பவர் மாத்திரமே தங்களைக் கிறித்தவர்கள் என்று அறிவித்துக் கொள்ளமுடியும் என்ற எனது ஒரே அறிவிப்பில் தற்போது அவர்கள் தடுமாறி வீழ்ந்திருக்கிறார்கள் என்ப‌து எனது போராட்டத்தில் நான் அடைந்த ஒரு பெரிய திருப்புமுனையான வெற்றியாகும்.


இனி அவர்கள் எங்கெல்லாம் தங்களைக் கிறித்தவர்கள் என்று எழுதி அறிவிக்கிறார்களோ, அங்கெல்லாம் என்னுடைய நினைவு அவர்களுக்கு நிச்சயமாக வரும் என்பது நிச்சயம்;நானும் செல்லுமிடமெல்லாம் இந்த ஒரே நிபந்தனையின் மூலம் ஒருவருடைய விசுவாசத்தை சோதிக்கப் பயிற்சித்து வருகிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

நான் சரியாகத்தான் சொல்லுகிறேன் பிரதர். பரிசேயர்களுக்கு இயேசு சொன்னதின் பொருள் நன்றாக விளங்கியிருக்கிறது. அதனால்தானே  தேவனுக்கு உன்னை ஒப்பாக்குகிறாய். தேவதூஷணம் சொல்கிறாய் என்று சொன்னார்கள். ஆனால் இந்த வேத புரட்டர்களுக்கு இவையெல்லாம் புரிவதில்லை.

அவர்களை பரிசேயர்கள் என்று சொன்னால் இயேசுக்கிறிஸ்துவின் கூற்றை  விளங்கிக் கொண்டுள்ளார்கள் என அர்த்தம். எனவே இப்பதத்தை அவர்களுக்கு கொடுப்பது தவறு என்கிறேன்.

வேதத்தில் சொல்லப்பட்டவற்றுக்கு மாற்றாக சொல்லுபவர்கள். அதாவது வேதத்தை புரட்டுகின்றவர்கள். இவர்களை யாருக்கும் பாதகமில்லாமல் வேதப்புரட்டர்கள் என அழைப்பதே சாலப் பொருந்தும்



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

colvin wrote:
ஆயினும் அவர்களை பரிசேயர்கள் என்றுகூட கூறமுடியாது.

கொல்வின் அவர்கள் நம்முடைய முன்னாள் நண்பர்களை இப்படி சிக்கலில் ஆழ்த்தக்கூடாது;அவர்கள் தங்களைப் பரிசேயர் என்று அழைத்துக்கொள்ளும் உரிமையைக்கூட‌ நீங்கள் தராவிட்டால் அவர்கள் தங்கள் எப்படித்தான் அழைத்துக்கொள்ளுவார்கள்;அல்லது நாம் அவர்களை எப்படி குறிப்பிடலாம் என்றும் சொல்லுவீர்களா?

உதாரணமாக, நான் இந்தியன், தமிழன், கிறித்தவன் அல்லது கிறித்துவின் சீடன் என்று என்னைச் சொல்லிக்கொள்வதுபோல ஒரு கௌரவமான பெயரை அவர்களுக்கு சூட்டிவிடுங்களேன்.

கண்டிப்பாக கள்ள உபதேசிகள் என்றோ கள்ள சகோதரர்கள்
என்றோ கள்ள வேலையாட்கள் என்றோ துருபதேசக்காரர்கள் என்றோ (மேசியாவின்) எதிரிகள் என்றோ கிறித்துவின் பகைஞர் என்றோ தூஷண வார்த்தைகளால் அவர்களைக் குறிப்பிட்டு விடாதிருங்கள்; ஏனெனில் அவர்கள் நம்மை அதே வார்த்தைளால் திருப்பி அர்ச்சிக்கத் துவங்கிவிடுகிறார்கள்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். (யோவான் 10.30)
Permalink  
 


நன்றி சகோதரே..! ஆயினும் அவர்களை பரிசேயர்கள் என்றுகூட கூறமுடியாது. அவர்களாவது இயேசு தன்னை தேவன் என்று அவ்வசனங்களின் மூலம் கூறுகிறார் என்பதை புரிந்து கொண்டனர்.

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்ற கருத்தை சரியாக விளங்கிக் கொண்டதால்தான் அங்கிருந்தவர்கள் அவர் மீது கல்லெறிய கற்களை கையில் எடுத்தனர். இயேசு தான் தேவன் என்று அவ்வசனங்களின் மூலம் வெளிப்படுத்தியமையே இதற்குக் காரணம். இது வேதப்புரட்டர்களுக்கு விளங்குதில்லை.
  • நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிற படியினால் உன்மேல் கல்லெறிகிறோம் (யோவான் 10.33)
இந்த வார்த்தைகளே போதும், இயேசு அந்த இடத்தில் என்ன அர்த்தத்தில் கூறியிருப்பார் என்பதை எந்த பாமரனும் இலகுவில் ஊகிப்பான்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். (யோவான் 10.30)
Permalink  
 


அருமையான விளக்கம்! ஆனால் இது "காவல் கோபுரத்தில்" நிற்கும் பரிசேயர்களுக்கு தெரியாது  

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம். (யோவான் 10.30)
Permalink  
 


நூல்: கர்த்தரின் வார்த்தையில் கடினவரிகள்
(யோவான் சுவிஷேசத்திலுள்ள இயேசுகிறிஸ்துவின் கடின வரிகளுக்கான விளக்கங்கள்)
ஆசிரியர் : சகோ. வசந்தகுமார்
வெளியீடு : இலங்கை வேதாகமகக் கல்லூரி

இயேசுகிறிஸ்துவின் வார்த்தைகளில், அவர் தம்மை பற்றி  வெளிப்படுத்திய விடயங்களும் உள்ளன. எனினும், இவற்றில் சில  கூறுகள், அநேகரால் புரிந்து கொள்ள முடியாத கடினமான  வசனங்களாகவே உள்ளன. இதனால், இவை தவறான முறையினால்  வியாக்கியானம் செய்யப்பட்டும் வந்துள்ளது. இத்தகைய ஒரு கூற்று,  யோவான் 10ம் அதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வதிகாரத்தின்  30ம் வசனத்தில் இயேசுக்கிறிஸ்து , நானும் பிதாவும்  ஒன்றாயிருக்கிறோம் (
யோவான் 10:30) என்று தெரிவித்துள்ளார். இவ்வசனத்தை  ஆதாரமாக்க  கொண்டு சில கிறிஸ்தவர்கள் பிதாவாகிய தேவனும்  குமாரனாகிய இயேசுக்கிறிஸ்துவும் வெவ்வேறானவர்கள் அல்ல  என்றும், ஒரு தெய்வமே இரு பெயர்களினால் குறிப்பிடப்பட்டுள்ளார்  என்றும் கருதுகின்றனர்.(1)  பிதாவும் குமாரனும்   வெவ்வேறானவர்கள் என்பதற்குப் புதிய ஏற்பாட்டில் இருவரும்  வேறுபடுத்திக் காட்டப்பட்டுள்ள பல பகுதிகள் உள்ளன.  உதாரணத்திற்கு இயேசுக்கிறிஸ்வின் ஞானஸ்நானத்தின்போது அவர்  பூமியில் இருக்கும்போது பிதா வானத்திலிருந்து பேசினார். மேலும்  பூமியிலிருக்கும் இயேசுக்கிறிஸ்து பிதாவோடு ஜெபத்தில் தொடர்பு  கொண்டார். (யோவான் 17.1). இதைப்போன்ற பல வேதப்பகுதிகள்  புதிய ஏற்பாட்டில் உள்ளபோதிலும் இயேசுக்கிறிஸ்து நானும் பிதாவும்  ஒன்றாயிருக்கிறோம் என்று கூறியது அநேகருக்கு குழப்பத்தை  ஏற்படுத்தியுள்ளது.

இயேசுக் கிறிஸ்துவின் கூற்றை நாம் சரியான விதத்தில் விளங்கிக்  கொள்வதற்கு, இவ்வாக்கியம் மூலமொழியில் எவ்வாறு உள்ளது  என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால்  இயேசுக்கிறிஸ்துவின் இந்த கூற்றை நாம் சரியாக விளங்கிக்  கொள்வதற்கு, இவ்வாக்கியம் மூலமொழியில் எவ்வாறு உள்ளது  என்பதை அறிந்திருக்க வேண்டியது அவசியம்.. ஏனென்றால்  இக்கூற்றானது மூலமொழியில் உள்ள விதமாக தமிழில்  மொழிபெயர்க்கப்படவில்லை. மூலமொழியில் “ஒன்றாயிருக்கிறோம்“  எனும் வார்த்தையானது ஒன்றன்பால் பதமாகவே உள்ளது.(2)  (அதாவது heis என்னும் ஆண்பால்பதம் அல்ல. hen எனும்  ஒன்றன்பால் பதமே உபயோகிக்கப்பட்டுள்ளது) உண்மையில் இப்பதம்  ஆண்பால் பதமாயிருந்தாலேயே “ஒன்றாயிருக்கிறோம்“ அல்லது  ஒருவராயிருக்கிறோம் என்று மொழிபெயர்க்கலாம். ஆனால் பிதாவும்  இயேசுக்கிறிஸ்துவும் ஒருநபர் அல்ல(3) . அவர்கள் இருவர். இதனால்  இயேசுக்கிறிஸ்து ஆண்பால் பதத்தை உபயோகிக்காமல் ஒன்றன்பால்  பதத்திலேயே பேசியுள்ளார். எனவே “ஒரு நபர் என்பதல்ல. ஒரு  பொருள் என்பதே இதன் அர்த்தமாகும்.(4)  சில கிறிஸ்தவர்கள்  ஒன்றன்பால் பதம் உபயோகிக்கப்பட்டதைக் கருத்திற் கொண்டாலும்  அவர்கள் இயேசுக்கிறிஸ்துவின் கூற்றை,, அவரும் பிதாவும் ஒரே  நபரல்ல. ஆனால் ஒரே சித்தமுடையவர்கள் என்று விளக்குகின்றனர்.  “பிதாவும் குமாரனும் சிந்தையிலும் நோக்கத்திலும் செயலிலும்  ஒன்றாயிருக்கிறார்கள்“(5) என்பதே இவர்கள் இயேசுகிறிஸ்துவின்  கூற்றுக்கு கொடுக்கும் விளக்கமாகும். இதற்கும் முன்னுள்ள  வசனங்களைக் கருத்திற் கொள்ளும்போது இயேசுக்கிறிஸ்துவின்  இத்தகைய கூற்றுக்கு இத்தகைய அர்த்தம் உள்ளதென்பதும் அவர்  இவ்வுலகில் வாழும்போது பிதாவின் சித்தத்தின்படியே செயற்பட்டு  வந்தார் என்பதும் உண்மை என்றாலும் இயேசுக்கிறிஸ்துவின்  வார்த்தைகள் இதைவிட மேலான தெய்வீக இரகசியத்தை  வெளிப்படுத்துகின்றன. 

நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம் என்னும் கூற்றினூடாக  இயேசுக்கிறிஸ்து என்ன கூறினார் என்பதை அவருடைய  வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் சரியாகப் புரிந்து  கொண்டனர். இதனால்தான் உடனடியாக அவர்மீது எறியும்படி  அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டனர். (யோவா 10.31) உண்மையில்  நானும் பிதாவும் ஒரே சிந்தையுடையவர்கள் என்று சொன்னதற்கு  யூதர்கள் அவரைக் கல்லெறிந்து கொல்ல முற்பட்டார்கள் என்று  சொல்வது அர்த்தமற்றது. ஏனென்றால் தேவனுடைய சித்தத்தின்படி  செயல்படுவது கல்லெறிந்து கொல்லப்படக்கூடியளவிற்கு  பயங்கரமான தேவதூஷணம் அல்ல. தேவசித்தத்தை அடைவதே யூத  மார்க்கத்தின் முக்கிய இலக்காயிருந்தது(6).  யூதர்கள்  இயேசுக்கிறிஸ்துவைக் கல்லெறிந்து கொல்ல முற்பட்ட  சந்தர்ப்பங்களை அவதானித்துப் பார்க்கும்போது, அவர் தம்மை  தேவன் என்று கூறுவதை அவர்கள் புரிந்து கொண்டனர் என்பதை  அறிந்திடலாம்.  நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல்  கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னைத் தேவன் என்று  சொல்லி, இவ்விதமாகத் தேவதூஷணஞ் சொல்லுகிற படியினால்  உன்மேல் கல்லெறிகிறோம் (யோவான் 10.33) என்றே யூதர்கள்  குறிப்பிட்டுள்ளனர். இதிலிருந்து நானும் “பிதாவும்  ஒன்றாயிருக்கிறோம்“ என்னும் கூற்றின் மூலம் இயேசுக்கிறிஸ்து  தாம் தேவன் என்பதை கூறுகிறார் என்பதை யூதர்கள் அறிந்து  கொண்டனர் என்பது தெளிவாகின்றது. இது அவர்களுக்கு  தேவதூஷணமாயிருந்த்து. இதனால்தான் பழைய ஏற்பாட்டு  நியாயப்பிரமாணத்தில் சொல்லப்பட்ட விதமாக, தேவதூஷணம்  சொன்ன இயேசுக்கிறிஸ்துவிற்க மரண தண்டனை கொடுப்பதற்காக  (லேவி 24.16) அவர் மீது எறிவதற்குக் கல்லுகளை எடுத்துக்  கொண்டனர்.

இயேசுக்கிறிஸ்துவின் கூற்றில் “ஒன்றாயிருக்கிறோம் என்னும்  சொற்பிரயோகம் மூலமொழியில் ஒன்றன்பால் .பதமாக இருப்பதனால்,  இதை ஒரு பொருளுடையவர்களாய் இருக்கிறோம் என்றே  மொழிபெயர்க்க வேண்டும். எனவே, இயேசுக்கிறிஸ்துவும் தேவனும்  ஒரே தெய்வீகச்சாரம் அல்லது தன்மை உடையவர்கள்“(7)  என்பதே  இவ்வசனத்தின் அர்த்தமாகும். அதாவது பிதாவாகிய தேவன்  தெய்வீகத் தன்மை அல்லது சாரமுடையவராயிருப்பது போலவே  இயேசுக்கிறிஸ்துவும் தெய்வீகத் தன்மையுடையவராய் இருக்கிறார்  என்பதையே அறியத் தருகிறார். “இயேசு கிறிஸ்துவும் தேவனும் இரு  நபர்களாக உள்ளபோதிலும் ஒரே தன்மையுடையவர்களாய்  இருக்கின்றனர்  அதாவது, பிதாவைப் போலவே இயேசுக்கிறிஸ்துவும்  தெய்வீகத் தன்மைகளுடைய தேவனாய் இருக்கிறார்.(8)

Citation & Endnote
(1) கிறிஸ்தவ இறையியிலில் தேவன் பன்மை நிலையில்  அதாவது ஒரு தேவன் மூவராக இருக்கிறார் என்றும் திரித்துவ  உபதேசம் மானிட அறிவினால் கிரகிக்க முடியாத தெய்வீக  இரகசியமாகவுள்ளது. கிறிஸ்தவர்கள் மூன்று தெய்வங்களை  வழிபடாமல் ஒரு தெய்வத்தையே வழிபடுகின்றபோதிலும், அந்த ஒரு  தெய்வம் மூவராயிருக்கிறார் என்பது மானிட மொழியில் விளக்கப்பட  முடியாத ஆனால் நிஜமான தற்பாரியமாயுள்ளது.
(2) அதாவது heis என்னும் ஆண்பால்பதம் அல்ல. hen எனும்  ஒன்றன்பால் பதமே உபயோகிக்கப்பட்டுள்ளது
(3) D.A. Carson, John : The Pillar New Testament Commentary, P 394
(4) L.Morris, Expository Reflections n the Gospel of John, P391
(5) F.F Bruce, The Gospel of John, P. 233
(6) A.Fernando, The Supremacy of Christ pp. 49-50
(7) J. McDowell & B. Larson, Jesus : Biblical Defense of his Deity P94
(8) W. Hendriksen New Testament Commentary : John P. 126

-- Edited by colvin on Monday 21st of February 2011 11:26:20 AM

__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard