Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நண்பர் ஜாண் அவர்களின் பொன்னான பின்னூட்டங்கள்...இயேசுவை தொழலாமா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: நண்பர் ஜாண் அவர்களின் பொன்னான பின்னூட்டங்கள்...இயேசுவை தொழலாமா?
Permalink  
 


colvin wrote:

சகோ. ஜான் அவர்களின் பதில்களினாலும் கேள்விகளினாலும் வேதபுரட்டர்கள் சிக்கி தவிப்பதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.மிக அற்புதமாக வாதங்களை முன்வைத்த சகோ. ஜான் அவர்கள் நிச்சியம் பாராட்டுக்குரியவரே.எனது பங்கிற்கும் நானும் கட்டுரைகளை பதிவேன்

சகோ. ஜான் முடிந்தால் colvin100@gmail என்ற முகவரியுடன் என்னுடன் தொடர்பு கொள்ளுங்களேன். அல்லது தங்களின் மின்னஞ்சல் முகவரியையாவது அறியத் தாருங்களேன். சில விடயங்களை தங்களுடன் பேச வேண்டியுள்ளது. நீங்கள் செய்யும் ஊழியங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவன் அளவில்லாமல் ஆசிர்வதிப்பார்

சகோ. சில்சாம் அவர்களே,சகோதரர்கள் கோவை பெரியன்ஸ் அன்பு அவர்களுடனான அனைத்து விவாதங்களையும் சேகரித்து உங்கள் தளத்தில் பாதுகாப்பாக வைத்திருங்கள். ஒருவேளை அவற்யெல்லாம் அவர்கள் நீக்கவும் கூடும். அப்படி நீக்கும் பட்சத்தில் அது எமக்கு இழப்பே. நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.


இந்த திரியின் இரண்டாவது பின்னூட்டத்தில் இடம்பெற்ற கொல்வின் அவர்களுடைய வரிகளை மேலே காண்கிறோம்;இதில் அவர் நம்முடைய தளத்தின் புதிய உறுப்பினரும் ஆரோக்கிய உபதேசத்தைப் பின்பற்றுபவருமான ஜாண் அவர்களை வரவேற்று வாழ்த்துகிறார்;அடுத்து என்னைக் குறித்தும் சிலவரிகளை எழுதுகிறார்;இதனை வாசித்த சிலர் கொல்வின் என்னையும் என் குடும்பத்தையும் வாழ்த்துவதாக தவறாக நினைத்துக்கொண்டு "சில்சாம்" போன்ற மோசமான ஒருவனை எப்படி மற்றவர்கள் வாழ்த்தலாம் என்று நியாயம் கேட்கிறார்கள்.

ஒரு பின்னூட்டத்தைக் கூட சரியாக வாசித்து புரிந்துகொள்ள இயலாதவர்கள் எப்படி பழமையான அந்நிய மொழியில் வழங்கப்பட்டு மொழிபெயர்க்கப்பட்ட பரிசுத்த வேதாகமத்தைப் புரிந்துகொள்ளமுடியுமோ, தெரியவில்லை..!


// வேசியின் மகன் என்று சொல்லியிருக்கிறார் அதற்கு தாங்கள் எழுதுவது, தேவன் உங்களையும் (சில்சாமையும்) சில்சாமின் குடும்பத்தையும் இப்படி பட்ட ஒரு ஊழியத்தை செய்ய ஆசீர்வதிக்கட்டும் என்று!! //

வேதவசனத்தை தான் திரிக்கிறார்கள் என்றால் சாதாரண மனுஷனின் வார்த்தைகளைவிட திரிக்கிறார்களே; நான் மீண்டும் புரியும்படி சொல்லுகிறேன், கிறித்துவின் தெய்வத்துவத்தையோ யெகோவா தேவனுடனான அவருடைய உறவையோ ஆராய்ந்து கொச்சைப்படுத்த எவனுக்கும் அதிகாரமில்லை;அப்படி ஆராய்பவன் தன் தாயின் கருவறையை ஆராய முயற்சிப்பவன் என்று ஏற்கனவே எழுதியிருக்கிறேன்;மேலும் அண்மையில் எழுதியது,கிறித்துவை தொழத்தக்கவரா இல்லையா என்று ஆராய்ந்து தொழத்தக்கவரல்ல என்று அறிவிப்பவன், தன் பிறப்பைக் குறித்து ஐயம் கொண்டு தன் தாயிடம் விசாரிப்பவனைவிட கொடூரமானவன் என்று;அவரை ஏற்காமல் அவரைக் குறித்து நிரூபணமும் அடையாளமும் கேட்பவன் விபச்சார சந்ததி என்றும் வேசியின் மகன் என்றும் வேதமே கூறுகிறது; நான் யாரையும் தனிப்பட்ட முறையில்
அவ்வாறு கூறவில்லை;ஆனாலும் தொடர்ந்து தியாலஜி எனப்ப்படும் இறையியல் கொள்கையில் புகுந்து சர்ச்சைக்குரிய கொள்கைகளை அறிவிக்க உரிமைகோரும் விதண்டாவாதிகள் என்னை இழிவுபடுத்த நான் கிறித்துவின் வைராக்கியத்துடன் வெளியிட்ட கருத்தினை திரித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதைக் குறித்து அழுது ஒப்பாரி வைத்த கோவை வெறியன் இளங்கோ அவர்களிடம் வருத்தம் தெரிவிப்பது போன்ற பாவனையில் ஒரு சில வரிகள் எழுதியிருந்தேன்;அதனை அவர் கவனத்தில் கொண்டது போலத் தெரியவில்லை;முதன்முதலாக சட்டசபைக்குள் நுழைந்த முமு அம்மு அவர்கள் தலைவிரி கோலமாக "சீன்" போட்டது போலவே கோவை வெறியனும் எனக்கெதிராக எப்படியாவது ஒரு கண்டன தீர்மானத்தை
கொண்டுவந்து கவனஈர்ப்பு தீர்மானத்தை வாசிக்கச்செய்து என்னை சஸ்பெண்ட் செய்து தனிமைப்படுத்த எண்ணுகிறார்.


நீ என்னை மிருகம் என்று சொன்னாலும் சரி,பிசாசு என்று சொன்னாலும் சரி, கோமாளி என்று சொன்னாலும் சரி,ஊளையிடும் ஓநாய் என்று சொன்னாலும் சரி,மதியீனன்
என்று சொன்னாலும் சரி, அறீவீனன் என்று சொன்னாலும் சரி அவற்றுக்கெல்லாம் நான் கோபப்பட்டு விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கமாட்டேன்;ஆனால் நீ கிறித்துவை மறுதலித்தும் -"கிறித்தவன்" என்று மாயம் செய்துகொண்டு யாரையாவது வளைத்துப்போடலாம் என்று எண்ணினால் அங்கே முதல் எதிரியாக வந்து நான் நிற்பேன்; உனக்கு சாமர்த்தியம் இருந்தால் என்னை மிதித்துவிட்டு என் மந்தைக்குள் நுழையலாம்; கிறித்துவை உடையவனே கிறித்தவன் எனப்படுபவன்;கிறித்துவை வெறும் காற்றைப் போலவோ புகையைப் போலவோ பாவிக்காமல் ஒரு நபராக ஏற்றுக்கொண்டால் மட்டுமே கிறித்துவின் சாயல் உனக்குள் வரும்;ஆளுபவர் ஆண்டவர், உண்டாக்கினவர் கர்த்தர், உனக்குள் நிறைந்திருந்தால் தேவன்; இதையறியாத கண்செருகிப்போன குருடனுடன் நாங்கள் போராடிக் கொண்டிருக்கவில்லை; உன்னுடைய கள்ளப்போதகம் மற்ற யாரையும் பாதிக்காதிருக்கவே போராடிக்கொண்டிருக்கிறோம்.

யௌவன ஜனம் தளத்தை உருவாக்கி நிர்வகிப்பதைத் தவிர எனக்கு இதில் ஒரு மேன்மையும் இல்லை;ஆனால் வீணான காழ்ப்புணர்ச்சியினாலும் பொறாமையினாலும் இங்கு எழுத வரும் நண்பர்களை சிறுமைப்படுத்தி நான் அவர்களுக்கு தலைவன் போலவும் நான் அவர்களை ஆட்டுவிப்பது போலவும் பிதற்றுவது விஷமமான செயலாகும்;இது இந்த தளத்தில் எழுதுவோரை அச்சுறுத்துவதைப் போன்ற சாத்தானின் பிரித்தாளும் சூழ்ச்சியாகும்;நான் தனிப்பட்ட முறையில் கோவை பெரியன்ஸ் இளங்கோ அவர்களிடமும் நித்திய ஜீவன் தளத்தின் அன்பு அவர்களிடமும் வேண்டி கேட்டுக்கொள்வது யாதெனில் நாம் இங்கும் அங்கும் மறைந்திருந்து தாக்கிக்கொள்ளவேண்டாம்; இது வீணான சோர்வையும் பிரச்சினையையுமே வளர்க்கும்; உங்களுக்கு ஆட்சேபணையில்லாவிட்டால் நீங்கள் உங்கள் நியாயங்களை இங்கேயே வந்து சொல்லலாம்; இந்த தளத்தின் வாசல் உங்களுக்கும் திறந்தே இருக்கிறது; பிரிந்துபோகிறவன் தன் இஷ்டப்படி செய்யப்பார்க்கிறான் என்கிறது,வேதம்; நீங்களாகவே விரும்பி தனித்துசெயல்பட்டு உங்கள் போதனைகளை எழுதுவதில் எல்லா உரிமையும் உங்களுக்கு இருப்பதைப் போலவே எங்கள் வாசலைக் காத்துக்கொள்ளும் உரிமை எங்களுக்கும் உண்டு;நீங்கள் என்னைப் போன்றவர்களைப் பொருட்படுத்தாவிட்டால் உங்கள் மதிப்பு உயருமே தவிர குறையப்போவதில்லை;அல்லது ஆதாயப்படுத்த வேண்டுமானாலும் அதற்குரிய முயற்சிகளைத் துவங்குங்கள்;அதைவிட்டு பாஸ்டர் போதகர் தலைவர் என்றெல்லாம் நான் என்னைக் குறித்து அறிவிக்காத பட்டங்களையெல்லாம் சூட்டி மகிழ்வதால் உங்களை யாரும் புகழமாட்டார்கள்;மேலும் ஆரோக்கிய உபதேசத்துக்கு ஆதரவான நண்பர்கள் ஒருங்கிணைந்து செயல்படக்கூடாது என்ற குறுமதியுடன் செயல்பட்டு கலகமூட்டும் வேலைகளை நிறுத்திவிடுங்கள்.

இறுதியாக நான் சொல்லிக்கொள்ள விரும்புவது யாதெனில் மேற்கோள் காட்டப்பட்ட கொல்வின் அவர்களுடைய வரிகளில் அவர் என்னை வாழ்த்தி ஆசீர்வதிக்கவில்லை என்பதையும் அந்த வாழ்த்து புதிய நண்பர் ஜாண் அவர்களுக்கே சொல்லப்பட்டது என்பதையும் அறியவேண்டுகிறேன்;நன்றி..!
  • "இது உமது கரம் என்றும், கர்த்தாவே, தேவரீர் இதைச் செய்தீர் என்றும், அவர்கள் அறிவார்களாக.அவர்கள் சபித்தாலும், நீர் ஆசீர்வதியும்; அவர்கள் எழும்பினாலும் வெட்கப்பட்டுப்போவார்களாக; உமது அடியானோ மகிழக்கடவன்."(சங்கீதம்.109:27,28)
யார் என்னை ஆசீர்வதித்தாலும் சரி, சமாதானம் கூறினாலும் சரி அதற்கு நான் தகுதியுடையவனாக இருந்தால் மட்டுமே அது எனக்கு வந்து பலிக்கும் என்பதையே நான் முழுவதுமாக நம்புகிறேன்;ஏனெனில் கர்த்தருடைய நாமத்தினால் யார் என்னை ஆசீர்வதித்தாலும் அவர்களது பரிந்துரையினை நிறைவேற்றி மகிழ்பவர் ஆவியானவரே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
நண்பர் ஜாண் அவர்களின் பொன்னான பின்னூட்டங்கள்...இயேசுவை தொழலாமா?
Permalink  
 


Bereans@:

இயேசுவை தோமா ஆண்டவரே, தேவனே என அழைத்ததாகச் சொல்லி, அதை வைத்து இயேசுவைத் தொழத்தக்கவர் என்கிறீர்கள்.

முதலில் ஆண்டவர் என்ற பதத்தைப் பார்ப்போம். தோமா இயேசுவை ஆண்டவனே என அழைத்ததைப்போல, பவுலையும் சீலாவையும் சிலர் “ஆண்டவன்மாரே” என அழைத்துள்ளனர்.

அப்போஸ்தலர் 16:29,30 ... பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்து, அவர்களை வெளியே அழைத்துவந்து: ஆண்டவன்மாரே, இரட்சிக்கப்படுவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்றான்.

இந்த “வார்த்தை ஒற்றுமையை” மட்டும் சொல்லி நான் விவாதத்தை வைக்கவில்லை. தோமா இயேசுவைச் சொன்ன “ஆண்டவன்” என்ற வார்த்தைக்கும் பவுலையும் சீலாவையும் சிலர் சொன்ன “ஆண்டவன்மாரே” என்ற வார்த்தைக்கும் கிரேக்கில் kurios எனும் ஒரே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டுள்ளது.

பவுலையும் சீலாவையும் ஆண்டவன்மாரே என அழைத்தவர்கள், “பவுலுக்கும் சீலாவுக்கும் முன்பாக விழுந்தனர்” என்றும் வசனம் சொல்கிறது. பவுல், சீலாவுக்கு முன்பாக விழுந்து ஆண்டவன்மாரே என அழைத்தவர்களை, பவுலோ சீலாவோ கண்டிக்கவுமில்லை.

இதனால் பவுலும் சீலாவும் தொழத்தக்கவர்கள் என்றாகிவிடுமா?

அடுத்து, தேவனே என தோமா இயேசுவை அழைத்ததைப் பார்ப்போம். இயேசுவை தேவன் என பல வசனங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை. ஆனால் இயேசுவுக்கும் ஒரு தேவன் இருக்கிறார் என்றால் அது, பிதாவாகிய தேவன் மட்டுமே. பிதாவாகிய தேவனை “என் தேவனே” என இயேசு அழைத்ததை மறுக்கமாட்டீர்கள் என நம்புகிறேன். இதிலிருந்து நாம் அறியவருவது, இயேசுவானவர் நமக்குத் தேவனாக இருந்தாலும், இயேசுவுக்கும் நமக்கும் பொதுவான “ஒரே தேவன்” பிதாவாகிய தேவன் மட்டுமே. அவரை தேவாதி தேவன் என வேதாகமம் பல வசனங்களில் கூறுகிறது.

உபாகமம் 10:17 உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல. (யோசுவா 22:22; சங்கீதம் 136:2; தானியேல் 11:36 வசனங்களையும் படியுங்கள்)

அந்த தேவாதி தேவன் தான் “ஒரே தேவன் (unique God)” என அழைக்கப்படத்தக்கவர். பிதாவாகிய தேவனே அந்த ஒரே தேவன் எனப் பின்வரும் வசனத்தில் பவுல் கூறுகிறார்.

1 கொரி. 8:6 பிதாவாகிய ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது; அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். இயேசுகிறிஸ்து என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு; அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.

பிதாவாகிய இந்த ஒரே தேவனையே ஆராதிக்கும்படி மத்தேயு 4:10-ல் இயேசு கூறுகிறார்.


{ நண்பர்களே, இந்தியாவின் அப்போஸ்தலனான தோமையர் இயேசுவை, "என் ஆண்டவரே,என் தேவனே" விளித்து பணிந்ததை இயேசுவானவர் தொழத்தக்க தெய்வமே என்பதற்கு ஆதாரமாக மேற்கோள் காட்டுகிறோம்;ஆனால் அதையும் (மேசியாவின்) எதிரிகள் தள்ளிவிட்டு தப்புத்தாளமும் திருகுதாளமும் போடுவதைப் பார்த்து சோர்ந்துபோகாமலும் விலகிப்போகாமலும் அதற்குரிய சரியான பதிலை நேர்த்தியாகப் பதிக்க வேண்டுகிறேன்;அவன் எதையாவது பேசட்டும்,அவனைக் கண்டுகொள்ளாமல் விட்டாலே போதும் என்ற மனப்பான்மை இனி உதவாது;நாம் எதிர்ப்பதற்காக மாத்திரமல்ல,தற்காப்புக்காகவும் எதிர்க்கவேண்டும் என்கிறேன்;ஏனெனில் கிறித்தவ சபைகளின் தாறுமாறுகளின் காரணமாகவும் ஊழியர்களின் முறைகேடுகளின் காரணமாகவும் இடறலடைந்த பலரையும் இந்த ஓநாய்கள் வேகமாக வீழ்த்திவருகிறது;எனவே நம்முடைய நம்பிக்கையை நாம் உறுதியுடன் அறிக்கையிடுகிறதில் கவனமாக இருத்தல் வேண்டும். }


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: நண்பர் ஜாண் அவர்களின் பொன்னான பின்னூட்டங்கள்...இயேசுவை தொழலாமா?
Permalink  
 


Bereans@:

//"அதி" "அல்பா" போன்ற வார்த்தைகளின் அர்த்தங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். "ஆதிக்கு முன்பாக ஒரு நேரம்(???) இருந்தது அப்போது இயேசு உருவாக்கப்பட்டார் பின்பு அவர் உருவாக்கப்பட்ட எல்லாவற்றையும் உருவாக்கினார் என்கிற 'கதை' எப்படி உருவானது என்று தெரியவில்லை. "அல்பா" என்பது கிரேக்கத்தில் முதல் எழுத்து ஆனால் இவர்களை பொறுத்தவரை "அல்பா" வுக்கு முன்னமே ஒரு எழுத்து கண்டுபிடித்து இருக்கிறார்கள்.//


இயேசு கிறிஸ்து சொல்லுவதை கேளுங்கள் (உங்களுக்கு வசனம் புரிகிறதோ இல்லையோ, வசனம் இருக்கிறது), இங்கு ஒரு மாதிரியும் அங்கே ஒரு மாதிரியும் பதியும் திரு ஜான் அவர்களே,

வெளி 3:14. லவோதிக்கேயா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர் சொல்லுகிறதாவது;

கிறிஸ்து இயேசு தாம் தேவனின் சிருஷ்டிக்கு ஆதியாக இருக்கிறார் என்பதை உங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லையா, அல்லது உங்களின் பகட்டு கோட்பாடுகள் உங்கள் கண்களை மறைத்து இதை வாசிக்கவே மறுக்கிறதா!! யெகோவா தேவன் அநாதி தேவனாக இருக்கிறார் என்பது என் வேதம் எனக்கு சொல்லுகிறது, உங்கள் இயேசுசாமியின் வேதம் என்ன சொல்லுகிறது என்பது எனக்கு தெரியாது!! உங்களுக்கு கதையாக தோன்றுவது எல்லாம் சத்தியம், அது உங்களுக்கு புரியாது அல்லது முன்பு எழுதியது போல் புரிய மறுக்கிறீர்கள்!! அவ்வளவே!!

I hope you understand what Eternal or Eternity means and What does it mean when the verse reads there was a Beginning for Christ!! Jehovah God is Eternal or Self Existent but Christ had a Beginning as it reads in John 1:1!!

//இயேசு பிதாவுக்கு சமம் என்று கிழே உள்ள வசனத்தில் வசிக்கிறோம்.//

பவுல் இப்படியாக எழுதுகிறார்:

1 கொரி 15:27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது. 28. சகலமும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்ப்படுத்தினவருக்குக் கீழ்ப்பட்டிருப்பார்.

நீங்கள் காட்டிய வசனம்:

பிலிப்பியர் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

ஆதாம் தேவனின் ரூபத்தில் தான் படைக்கப்பட்டான் என்று வேதத்தில் இருப்பதை நம்புகிறீர்களா!! அப்படி என்றால் பாவம் செய்வதற்கு முன் வரை ஆதாம், கிறிஸ்து, பிதா எல்லாம் ஒருவரே என்று தான் போதித்துவருகிறீர்களா!!

சமம் என்றாலே இருவரை குறித்து தான் பேச முடியும்!! முதலில் நீங்கள் முடிவு செய்ய வேண்டியது என்னவென்றால், இயேசுவும் பிதாவும் ஒன்றா அல்லது இருவரா!! சமம் என்று கேள்வி எழுப்பியதால் அங்கே இருவர் இருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது!! ஆனால் இருவராக இருப்பது உங்கள் திரித்துவ கோட்பாட்டிற்கு விரோதமானதாக இருக்குமே!! பரவில்லையா!! நீங்கள் இந்த தளத்தில் உங்கள் பதிவுகளை முடித்துவிட்டாலும், உங்களுக்கு ஆராத்தி எடுத்து வரவேற்த்த "அந்த" தளத்தில் கூட இதற்கு பதில் எழுதலாம்!! சமம் என்றால் Equal. And Equality can be always between two or more people!! When Christ himself did not take the opportunity to make himself EQUAL to God His Father, why you trinitarians are bend upon to make them EQUAL!! One is Eternal (the Father) and one had a Beginning (Jesus Christ) and there is a biiiiiiiiig difference between Eternal and Beginning!! One cannot die (the Father) and one came in Flesh to die (Christ Jesus) and you say that Father came in Flesh and so The one who cannot die under any circumstances died when he came as flesh!! Now since the verse says, God cannot die, How do the trinitarians confess that Christ (Father in case of Trinitarians) died!!

//தேவன்னுக்குள் "ஆள்தத்துவங்கள்" இல்லை ( I , You relationship)  என்றால், படைப்புக்கு முன்பு  அவருக்கு "அன்பு" என்றால் என்ன என்பது தெரிய வாய்ப்பில்லை. அன்பு கூறுவதற்கு குறைந்த பட்சம் 2 "Personality" ஆவது வேண்டும்.//

என்ன, நீங்களே ஒன்றை எழுதி அதற்கு நீங்களே புத்திசாலித்தனமாக பதில் கொடுத்துவிட்டதாக நினைப்பா!! தேவன் என்கிறவர் ஆளத்துவம் இல்லாதவர் என்று யார் சொன்னது!! குறைந்த பட்சம் 2 பேர் ஒன்றாக இருந்தால் தான் அன்பு தெரியும் என்றால் சரி, ஆனால் அந்த குறைந்த பட்சம் 2 பேர் ஒருவரே என்பது அபத்தமான கருத்து!! ஆனால் உங்களுக்கு இது தான் சர்க்கரை!!

//நீங்கள் என்னை குருடன் , மதியினன் என்று சொல்லுங்கள் கவலை இல்லை. ஏன் என்றால் என் இயேசு தேவனை ஆராதிக்காமல் திரிந்த நாட்களில் நான் அப்படிதான் இருந்தேன்//

உங்களை குருடன் மதியீனன் என்று எழுதியதற்கு உங்களிடம் இப்படிப்பட்ட ஒரு ரியாக்ஷன், அதே போல் நண்பரே என்று உங்களை சொல்லி உங்களிடம் விவாதம் செய்த போது உங்கள் போதகர் சில்சாம் நாங்கள் ஏதோ உங்களை காட்டு மிறாண்டி தனமாக தாக்கியதாக் எழுதியிருப்பது எல்லாம் ரொம்பவும் சரியானதா!! இதை குறித்து உங்களிடத்தில் கேட்டேனே, அதற்கும் பதில் தரவில்லை!! ஏன் தர்மசங்கடமா?? ஆனால் உங்கள் போதகர் பேசிய வசைவுகள் உலக பிரகாரமான ஒரு குடிக்காரன் குடியில் மூழ்கி பேசியது போன்ற‌ வார்த்தைகள், என் அப்பா அம்மாவை குறித்தான இழிவான, தரம்கெட்ட வார்த்தைகள் எல்லாம் உங்கள் காதுகளில் தேனாக தானே இருந்திருக்கிறது!! அதற்கு நன்றி தெரிவித்து தானே எழுதியிருக்கிறீர்கள்!! மெய்யாலுமே தப்பு கணக்கு போட்டு விட்டேன் உங்களை குறித்து!! ஆனால் இனம் இனத்தோடு சேருவது போல், இந்த தளத்தில் இனி பதிவுகளை தராமல் தரம் கெட்ட எழுத்துக்களை ஆதரித்து அதற்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தாரோடு தங்களின் ஐக்கியம் நன்றாக இருக்கட்டும்!!

//நான் அது போல எழுத ஒரே காரணம், நான் திரும்ப, திரும்ப கேட்டும் நீங்கள் இருவரும் மறந்தும் கூட அந்த 24 மூப்பர்களும் , மரியாளும், பேதுருவும் , கானானிய பெண்ணும்..இன்னும் பலரும் செய்தது போல "இயேசுவின் பாதத்தில்" நாங்கள் பணிவோம் என்று சொல்லவில்லை. இயேசுவின் பாதத்தில் விழக்கூடாது என்று சொல்லுகிற ஒரே "தேவன்"  இயேசு தேவனுடைய மகிமையை நீங்கள் காணக்கூடாத படி கண்களை குருடக்குகிற  இந்த பிரபஞ்சத்தின் தேவனாகிய சாத்தான் தான். இந்த பொய்யை சத்தியமாக போதிக்கிறவன் பொய்யும் பொய்க்கு பிதாவுமான பிசாசு தான்.//

பாதத்தில் விழுந்தார்கள் என்பதை என்னமோ ஆராதிப்பது போல் சொல்லுகிறீர்கள்!! இன்றும் பாஸ்டர் கால்களில் விழுகிறார்கள், பெற்றவர்களின் கால்களில் விழுகிறார்கள், அதை எல்லாம் அவர்களுக்கு செலுத்தும் ஆராதனையாகி விடுமா!! ஏன் கிறிஸ்து கூட தான் அப்போஸ்தலர்களின் பாதம் கழுவ, அவர்களின் கால்களை தொட்டார், அப்படி என்றால் கிறிஸ்துவும் அப்போஸ்தலர்களை ஆராதித்தார் என்று அர்த்தம் எடுப்பீர்களோ!! இயேசு தேவனுடைய பாதத்தில் விழுந்தால் தான் அவருக்கு  மகிமை என்று எந்த வசனம் உங்களுக்கு சொல்லியிருக்கிறது!! மரியாள், பேதுரு, கானானிய பெண் இவர்கள் எல்லாம் இயேசுவின் பாதத்தில் விழுந்தவுடன் அவருக்கு மகிமை வந்ததா!! இல்லை, மாறாக அவர் தன் மகிமையை தன் பிதாவிடத்தில் தான் கேட்க்கிறார்!!

யோவான் 5:41 நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை.

அவர் வேண்டாம் என்று சொல்லுவதை போதிப்பது உங்கள் பழக்கம்!!

யோவான் 8:54 இயேசு பிரதியுத்தரமாக: என்னை நானே மகிமைப்படுத்தினால் அந்த மகிமை வீணாயிருக்கும், என் பிதா என்னை மகிமைப்படுத்துகிறவர், அவரை உங்கள் தேவனென்று நீங்கள் சொல்லுகிறீர்கள்.

யோவான் 12:28 பிதாவே, உமது நாமத்தை மகிமைப்படுத்தும் என்றார். அப்பொழுது: மகிமைப்படுத்தினேன், இன்னமும் மகிமைப்படுத்துவேன் என்கிற சத்தம் வானத்திலிருந்து உண்டாயிற்று. (கிறிஸ்துவே பிதாவின் மகிமையே விரும்புகிறவராக இருக்கிறார்!! நீங்கள் எல்லாம் எந்த வேத புத்தகத்தை வைத்திருக்கிறீர்கள் என்று தெரியவில்லையே)

யோவான் 14:13 நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன்.

யோவான் 15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.

யோவான் 17:2 பிதாவே, வேளை வந்தது, நீர் உம்முடைய குமாரனுக்குத் தந்தருளின யாவருக்கும் அவர் நித்தியஜீவனைக் கொடுக்கும்பொருட்டு மாம்சமான யாவர்மேலும் நீர் அவருக்கு அதிகாரங்கொடுத்தபடியே, உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்.

யோவான் 17:4 பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.

யோவான் 17:5 பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே உம்மிடத்தில் எனக்கு உண்டாயிருந்த மகிமையினாலே இப்பொழுது நீர் என்னை உம்மிடத்திலே மகிமைப்படுத்தும்.

ஐய்யா, கிறிஸ்து இயேசு தன் மகிமையை குறித்து தம் பிதாவிடத்தில் தான் கேட்டாரே தவிர, நீங்கள் என்னுவது போல் அவர் காலில் விழுந்தால் அவரை மகிமைப்படுத்துவோம் என்பது கிடையவே கிடையாது!! அவர் இந்த பூமியில் வந்ததே பிதாவை மகிமைப்படுத்த தான் என்பது இத்துனை வசனங்களில் விளங்கவில்லை என்றால், மெய்யாகவே குருடாகி விட்டீர்கள் அல்லது கண்களில் களிம்பத்தை பூசிக்கொண்டு வேதத்தை வாசிக்கிறீர்கள்!!

யோவான் 8:50 நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை; அதைத் தேடி நியாயந்தீர்க்கிறவர் ஒருவர் இருக்கிறார்.

புரியுதா யார் காலில் விழுந்து யாருக்கு நீங்கள் மகிமையை தருகிறீர்கள் என்று!! தெரியாவிட்டால் அதையும் காண்பிக்கிறேன்,

மத் 4:9. நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான். 10. அப்பொழுது இயேசு: அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

இப்படி பாதத்தில் விழுவதை மகிமை என்று நினைப்பவன் பிசாசு ஒருவனே, அதையா செய்கிறீர்கள்!! அதற்கு உடனே இயேசு கிறிஸ்து சொல்லுவதை தான் நாங்கள் செய்கிறோம்!! அப்பாலே போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று சொல்லி வருகிறோம், அவர்களும், இப்படி பட்ட பொக்கிஷமான தளங்களை விட்டு, தரம் கெட்டு எழுதும் ஒரு கள்ள போதகனின் தளத்தில் அந்த மிருகம் எழுதியதற்கு கைத்தட்டி நன்றி செலுத்துகிறார்கள்!!

லூக்கா 7:38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

இந்த வசனத்திற்கு அர்த்தமும் அதே பகுதியில் இருப்பது கண்களிலை மூடியவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை!!

லூக்கா 7:47 ......இவள் மிகவும் அன்புகூர்ந்தாளே. .....

அவ்வளவே, அவள் மிகவும் அன்புகூர்ந்தாள்!! பாதத்தில் விழுந்தது அன்பினால், ஆராதிக்கவோ, தொழுதுக்கொள்ளவோ இல்லை!!

//நண்பர் "பெரெயன்ஸ்" . "Laws of Logic" (Law of Identity , Law of Non-Contradiction, Law of the excluded middle) இல்லை என்றால் பைபிள் ரொம்ப சின்னதாக இருக்கும். "இதை செய்", "அதை செய்யாதே" என்பது மட்டும் தான் இருக்கும். "ஆகையால்", "ஆனபடியால்" போன்ற விளக்கங்கள் இருக்காது. பவுலின் எல்லா நிருபங்களிலும் இதை பார்க்கலாம். தங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் ஒரு வசனத்தை சொல்லுகிறேன்//

பைபிள் மெய்யாலுமே ரொம்ப சின்னது தான், அதை பூதாகர வடிவம் கொடுத்தது உங்களை போன்ற போதகர்களால் தான்!! நீங்கள் கொடுத்த வசனம் எல்லாம் சரி தான், ஆனால் அதற்கும் யோவான் 3:1க்கும் என்ன தொடர்பு என்பது தான் புரியவில்லை!!

யோவான் 3:1. யூதருக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.

தாங்கள் கொடுத்த வசனம்.

ரோமர் 11:6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே.

//"இப்படி இயேசுவின் பாதத்தில் விழவேண்டும் என்பதற்கு வேதத்தில் எந்த கட்டளையும் கிடையாது!! " கட்டளை மாத்திரம் பின்பற்றுவதற்கு நீங்கள் பரிசேயரா? இயேசுவின் பாதத்தை மரியாள் ஏன் முத்தம் செய்தாள் என்று தெரியுமா?

நிச்சயமாக தொழுதுக்கொள்ள தான் என்று நீங்கள் நினைத்தீர்கள் என்றால் தவறு!! அதே லூக்காவில் 47ம் வசனம் வாசியுங்கள்!!

மேலும் சீஷனாக இருப்பவன் கிறிஸ்து போதித்த (கிறிஸ்துவின் கட்டளைகள் தான் வேறு என்ன) அனைத்தையும் பின்பற்றுவான்!!

மத் 28:20. நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்;

உங்களுக்கு எப்படியோ தெரியவில்லை, கிறிஸ்துவின் கட்டளையை பின்பற்றுவதால் நாங்கள் பரிசேயர் என்றால், இருந்துவிட்டு போகிறோம்!! கிறிஸ்து சொல்லாத ஆராதனையை நீங்கள் செய்வது எந்த தேவனை திருப்திப்படுத்த என்பதை தெரிந்துக்கொள்ளலாமா??

அவர் உயிரோடு எழுந்தவர்களில் முதல் பேரனாவார். கிழே உள்ளவசனம் அதை தெளிவாய் சொல்லுகிறது

அவர் ஆதியில் இருந்தது தான் முதற்பேறானவர், உயிர்தெழுந்த போது தான் முதற்பலனானார்!! முதற்பேறானாவர் என்றால் முதல் குழந்தை என்று அர்த்தம், முதலில் பெற்று எடுத்தது என்று அர்த்தம்!! ஆனால் உயிர்த்தெழுதல் என்று ஒன்று நடைப்பெறும், அதை அனைவரும் நம்பும்படியாக, அந்த பலனை அனைவரும் காணும்படியாக, அவர் (கிறிஸ்து) உயிர்த்தெழுதலில் முதல்பலனானார்!!

I கொரிந்தியர் 15:20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

ரோமர் 8:29. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

1 கொரி 15:20 சொல்லுவது முதற்பலனை குறித்து, கொலோ 1:15 சொல்லுவது முதற்பேறானவரை குறித்து, அதையே தான் ரோம் 8:29ம் சொல்லுகிறது!! உங்களின் புரிந்துக்கொள்ளுதலையே நீங்கள் போதியுங்கள்!! முதற்பேறானவர் என்றால் முதற்பலனானவர் என்பது அபத்தமான ஒரு ஒப்பீடு!!

{மேற்கண்ட பிதற்றலுக்கு வரிக்கு வரி பதில் கொடுக்க நினைப்பவர்கள் வரிகளை மேற்கோள் காட்டி இங்கேயே பதிக்கலாம்;அல்லது தனி திரியாகத் துவங்கியும் விவாதிக்கலாம்...}




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
நண்பர் ஜாண் அவர்களின் பொன்னான பின்னூட்டங்கள்...இயேசுவை தொழலாமா?
Permalink  
 


ஜான் தாங்கள் முன்வைத்துள்ள கருத்துக்கள் ஆழமாகவும் அருமையாகவும் உள்ளன; தங்களின் பணி தொடர வாழ்த்துக்கள்..!


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
RE: நண்பர் ஜாண் அவர்களின் பொன்னான பின்னூட்டங்கள்...இயேசுவை தொழலாமா?
Permalink  
 


அன்பு சகோதரர் சில்சாமுக்கு ரொம்ப நன்றி! நான் செய்ய நினைத்ததை நிங்கள் எனக்காக செய்ததற்கு நன்றி.

இவர்களும் தேவனை நேசிக்காத கட்டளைக்கு போலியாய் கீழ்படிகிற பரிசேயர்களே! பவுல் பரிசேயர்களுக்கு சொன்ன வசனம் இவர்களுக்கும் பொருந்தும்.

தீத்து 1:11 அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.

நம்முடைய சபைகளிலும் சிறிதளவாவது "Aplogetics" போதிக்க வேண்டும் அப்படியென்றால் தான் நாம் பேதுரு சொன்னது போல "Defend" பண்ண முடியும். யோவான் சொன்ன வசனங்கள் இவர்களுக்கு 100% பொருந்தும்

2 யோவான் 7-11 " மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான். "

அன்பு சகோதரர் கொல்வின் நீங்கள் என்னை "johnjebaraj@gmail.com" என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளாலாம். நான் நிறைய தெரிந்தவன் அல்ல, நாம் எல்லாரும் சேர்ந்து கற்கலாம்,. பிலேயாமின் கழுதையை பேசச்செய்த தேவன் என்னையும் உபயோக படுத்துவார். அல்லேலுயா!!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஆம்,நண்பரே, அடியேன் அதனை என் ஆவியில் உணர்ந்தே இங்கே ஒவ்வொரு எழுத்தையும் சேமித்து வருகிறேன்;இதுவும் இலவச தளமானதால் நம்முடைய படைப்புகளுக்கு உத்தரவாதமோ பாதுகாப்போ இல்லை;எனவே நமக்கென தனி (domain or website) வெப் சைட் உருவாக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

Thank You n God Bless You..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. ஜான் அவர்களின் பதில்களினாலும் கேள்விகளினாலும் வேதபுரட்டர்கள் சிக்கி தவிப்பதை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.

மிக அற்புதமாக வாதங்களை முன்வைத்த சகோ. ஜான் அவர்கள் நிச்சியம் பாராட்டுக்குரியவரே.

எனது பங்கிற்கும் நானும் கட்டுரைகளை பதிவேன்

சகோ. ஜான் முடிந்தால் colvin100@gmail என்ற முகவரியுடன் என்னுடன் தொடர்பு கொள்ளுங்களேன். அல்லது தங்களின் மின்னஞ்சல் முகவரியையாவது அறியத் தாருங்களேன். சில விடயங்களை தங்களுடன் பேச வேண்டியுள்ளது.


நீங்கள் செய்யும் ஊழியங்களையும் உங்கள் குடும்பத்தையும் தேவன் அளவில்லாமல் ஆசிர்வதிப்பார்

சகோ. சில்சாம் அவர்களே!
சகோதரர்கள் கோவை பெரியன்ஸ் அன்பு அவர்களுடனான அனைத்து விவாதங்களையும் சேகரித்து உங்கள் தளத்தில் பாதுகாப்பாக வைத்திருங்கள். ஒருவேளை அவற்யெல்லாம் அவர்கள் நீக்கவும் கூடும். அப்படி நீக்கும் பட்சத்தில் அது எமக்கு இழப்பே. நான் சொல்ல வருவது உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
நண்பர் ஜாண் அவர்களின் பொன்னான பின்னூட்டங்கள்...இயேசுவை தொழலாமா?
Permalink  
 


திரித்துவ திரியில் நீங்கள் பதிலளிக்க விரும்பாததால் இந்த புது திரியில் கேட்கிறேன். நீங்கள் முன்னமே கொடுத்த பதிலின் அடிப்படையில் எனக்கு எழுகிற கேள்விகள் இவைகள்.

...ஆக இயேசு தேவன்தான் ஆனால் தொழதக்கவர் இல்லை என்றால் "எந்த"  தேவன் தொழதக்கவர்? எப்படி "பிதா" ஆகிய தேவனை தொழலாம் என்கிறீர்கள்?

"யேகோவா" என்பதின் அர்த்தம் "நான் நானே" (IAM that IAM). யார் இந்த நான் நானே? அது பிதாவுக்கு மட்டும்தான் பொருந்துமா அல்லது குமாரனுக்கும் பொருந்துமா?

மிகாவேல் தேவனால் உருவாக்கப்பட்டவரா?

அவருடைய காலில் விழலாமா?

பரலோகத்தில் தேவோனோடு ஆளுகை செய்கிற மூப்பர்களுக்கு எப்படி இந்த அடிப்படை (தங்களுக்கு தெரிகிற) உண்மை கூட  தெரியாமல் காலில் விழுந்தார்கள்?

தேவ துதனுடைய காலில் விழலாம் என்றால் ஏன் ஒரு தூதன் அதுகூட தெரியாமல் யோவானை கடிந்து கொள்ளவேண்டும்?.


அன்பு சகோதரரே. நான் latreuo மற்றும் proskuneo ஆகிய 2 வார்த்தைகளை குறித்து இப்போது பேச விரும்பவில்லை. நீங்கள் நான் இதற்க்கு முந்திய பதிவில் கேட்ட கேள்விகளுக்கு உரிய பதிலை கொடுத்தால் நலமாய் இருக்கும்

மத்தேயு 4:10 ல் உள்ள  "தேவனாகிய கர்த்தரை" என்பது பிதாவை குறிக்கிறது என்று எப்படி முடிவு செய்தீர்கள்? இயேசுவும் தேவன் என்றும் கர்த்தர் என்றும் அழைக்கபடுகிறார் ஆகையால் அது "திரித்துவ" தேவனை குறிக்கிறது என்பதே சரியானது

//யெகோவா என்கிற இந்த நாமம் பிதா ஒருவருக்கே பொருந்தும்!! குமாரன் என்றாலே அவருக்கு ஒரு ஆரம்பம் இருக்க வேண்டும்!! அதை தான் யோவான் 1ம் அதிகாரம் மற்றும் நீதிமொழிகள் 8ம் அதிகாரம் மிகவும் தெளிவாகவும், அழகாகவும் சொல்லியிருக்கிறதே!!//

இயேசுவும் "நான்" என்று சொல்லியிருகிறாரே   யோவான் 8:58  "அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான்...."

வெளி 1:11.  நான் அல்பாவும் ஓமெகாவும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்...

வெளி 1:17. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல்வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்;

இயேசு உருவாக்கப்படவராக இருந்தால் அவர் எப்படி "அல்பா" ஆக முடியும். பொய் சொல்லுகிறரா?

யோவான் 1:3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

மேலே உள்ள வசனமும் உண்மை, நீங்கள் சொல்லுவதும் உண்மை (இயேசு உருவாக்கப்பட்டவர்) என்றால் இயேசு தன்னை தானே படைத்துக்கொண்டார் என்று கொள்ளலாமா?

//தேவ தூதர்களுக்கோ மற்ற ஆவி ஜீவிகளுக்கோ, நம்மை போன்று சரீரம் இல்லாததினால், அவர்களுக்கு நிச்சயமாக "கால்" கிடையாது!!//

எந்த வசனத்தின் அடிப்படையில் இதை கூறுகிறீர்கள்?

"வெளி 1:17. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்;". இல்லாத பாதத்தில் யோவான் எப்படி விழுந்தார்?

//"தேவ தூதன் மாத்திரம் இல்லை, யாருடைய காலிலும் விழக்கூடாது என்பது தான் சரி!! தேவ தூதனுக்கு தெரிந்ததினால் தான் யோவான் கடிந்துக்கொள்ளப்பட்டார்!!"//

இயேசு அப்படி யோவானை கடிந்து கொள்ளாததால் அவர் தேவதூதன் இல்லை என்கிறேன்.  நீங்க பரலோகத்திற்கு போனால் யோவான் இயேசுவின் பாதத்தில் விழுந்தது போல் விழமாட்டேன் என்று சொல்லுகிறீர்களா? யோவான் செய்தது சரியாய் தவறா?

"இது வரை மூப்பர்கள் யாரும் அங்கே இல்லை!! அப்படி இருந்திருந்தால், யோவான் 3:13 வசனம் தப்பாக இருக்கும்!!"


பரலோகத்தில் மூப்பர்கள் இருக்கிறார்கள் என்பது எப்படி பரலோகத்திற்கு ஒருவனும் ஏறிபோகவில்லை என்பதை தவறாக்கும்?

John
Member
orangestar.gif

Posts: 20
Date: yesterday

யோவான் 8:58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். அப்பொழுது அவர்மேல் எறியும்படி கல்லுகளை எடுத்துக்கொண்டார்கள்.

சும்மா இயேசு "நான்" என்று சொன்னதற்காகவா இயேசு மேல் கல்லெறிந்தார்கள்?


யோவான் 10:33 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்.

அவரோட நேரடியாக உரையாடினவர்களுக்கு நன்றாக புரிகிறது அவர் தன்னை "தேவன்" என்று சொல்லுகிறார் என்பது. நீங்கள் காவல் கோபுரத்தை படித்து விட்டு இல்லை என்று மறுக்கிறீர்கள்.

யோவான் 1:3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

உண்டானதெல்லாம் இயேசுவலே உண்டாயிற்று என்றால் அவர் உண்டாக்க பட்டவர் இல்லை என்பதை கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?

//"தேவ தூதன் மாத்திரம் இல்லை, யாருடைய காலிலும் விழக்கூடாது என்பது தான் சரி!! தேவ தூதனுக்கு தெரிந்ததினால் தான் யோவான் கடிந்துக்கொள்ளப்பட்டார்!!"//

இயேசு அப்படி யோவானை கடிந்து கொள்ளாததால் அவர் தேவதூதன் இல்லை என்கிறேன்.  நீங்க பரலோகத்திற்கு போனால் யோவான் இயேசுவின் பாதத்தில் விழுந்தது போல் விழமாட்டேன் என்று சொல்லுகிறீர்களா? யோவான் செய்தது சரியாய் தவறா?



"யோவான் 10:33 யூதர்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: நற்கிரியையினிமித்தம் நாங்கள் உன்மேல் கல்லெறிகிறதில்லை; நீ மனுஷனாயிருக்க, உன்னை தேவன் என்று சொல்லி இவ்விதமாக தேவதூஷணஞ் சொல்லுகிறபடியினால் உன்மேல் கல்லெறிகிறோம் என்றார்கள்."

ஒரு விவாதத்துக்கு யூதர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள் என்றால் இயேசு உடனே இல்லை என்று மறுத்து இருக்க வேண்டுமே? ஆனால் அவர் மறுக்கவில்லையே. நீங்கள் இயேசுவையே ஒரு பொய்யை மறுக்காத குற்றம் செய்தவர் என்று தீர்கிறீர்கள்.

மாற்கு 7:25 அசுத்த ஆவிபிடித்திருந்த ஒரு சிறுபெண்ணின் தாயாகிய ஒரு ஸ்திரீ அவரைக்குறித்துக் கேள்விப்பட்டு, வந்து அவர் பாதத்தில் விழுந்தாள்.

லூக்கா 5:8 சீமோன் பேதுரு அதைக்கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.

லூக்கா 8:41 அப்பொழுது ஜெபஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பேருள்ள ஒருவன் வந்து, இயேசுவின் பாதத்தில் விழுந்து பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே குமாரத்தி மரண அவஸ்தையாயிருந்தபடியால்,

யோவான் 11:32 இயேசு இருந்த இடத்தில் மரியாள் வந்து, அவரைக் கண்டவுடனே, அவர் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான் என்றாள்.


மேலே உள்ள 4 வசனங்களிலும் பயம் இல்லை. இயேசு பாதத்தில் விழுந்தவர்களை கண்டிக்கவும் இல்லை. நீங்கள் அவருடைய பாதத்தில் விழுவீர்களா என்பதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவே இல்லை.

//உண்டானதெல்லாம் இயேசுவால் உண்டாயிற்று என்பதால் அவர் உண்டாக்கப்பட்டவர் இல்லை என்று எப்படி புரிந்து கொள்ள முடியும்!! //

இது ஒரு "Basic Logic". உண்டானதெல்லாம் இயேசுவால் உண்டாயிற்று என்றால் அவர் உண்டாக்கப்பட்டவர் இல்லை. இதற்கு ஆங்கிலத்தில் "Law of Non-Contradiction" என்று சொல்லுவார்கள். இயேசுவும் உண்டானவர் என்றால் அவர் எல்லாவற்றையும் உண்டாகினவறாய் இருக்கமுடியாது. இல்லை என்றால் அவரை அவரே உண்டாக்கி கொண்டார் என்றும் வரும்.

கொலோசெயர் 1:16. ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; பரலோகத்திலுள்ளவைகளும் பூலோகத்திலுள்ளவைகளுமாகிய காணப்படுகிறவைகளும் காணப்படாதவைகளுமான சகல வஸ்துக்களும், சிங்காசனங்களானாலும், கர்த்தத்துவங்களானாலும், துரைத்தனங்களானாலும், அதிகாரங்களானாலும், சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது.

The Irony is நீங்கள் இயேசு தேவன் என்று தவறாக என்னிகொண்டிருக்கிற மிகாவேலை உருவாக்கினவரும் இயேசு தேவனே !

இதற்கு அர்த்தம் கொடுத்தீர்களென்றால் இதை குறித்து மேலும் தொடரலாம், இல்லாவிட்டால் புரிய முடியவில்லை என்று இல்லை, புரிய கூடாது என்கிற மனதோடு தான் விவாதத்தில் பங்கு கொள்கிறீர்கள்!!



உண்மையிலே நிங்கள் என்னுடைய கடைசி கேள்விகளுக்கு  Atleast உங்களுக்கு திருப்தி வருகிற அளவுக்காவது பதிலளித்துவிட்டீர்கள் என்று தோன்றுகிரதா? உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை. என்பது உண்மையிலே புரியவில்லை என்பதை என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை


John
Member
orangestar.gif

Posts: 20
Date: 59m ago

//சும்மா மனிதர்கள் எழுதிய சில காகித புத்தகங்களின் "Law of Non-Contradiction" எனக்கு தேவையில்லை!! //

நண்பர் "பெரெயன்ஸ்" . "Laws of Logic" (Law of Identity , Law of Non-Contradiction, Law of the excluded middle) இல்லை என்றால் பைபிள் ரொம்ப சின்னதாக இருக்கும். "இதை செய்", "அதை செய்யாதே" என்பது மட்டும் தான் இருக்கும். "ஆகையால்", "ஆனபடியால்" போன்ற விளக்கங்கள் இருக்காது. பவுலின் எல்லா நிருபங்களிலும் இதை பார்க்கலாம். தங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் ஒரு வசனத்தை சொல்லுகிறேன்

ரோமர் 11:6 அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால், கிரியையானது கிரியையல்லவே.

இந்த வசனம் உங்கள்ளுக்கு புரிந்தால் யோவான் 3:1 ம் புரியும்

அதே போல பாட திட்டத்தில் இருந்து கணிதத்தை நீக்கிவிடலாம். நீங்கள் என்னை மறுத்து ஒருவார்த்தை சொன்னாலும் "Law of Non-Contradiction" ஐ உபயோகிக்கிறீர்கள் ஆகையால் இதற்க்கு நிங்கள் பதிலளிப்பது சந்தேகமே

"இப்படி இயேசுவின் பாதத்தில் விழவேண்டும் என்பதற்கு வேதத்தில் எந்த கட்டளையும் கிடையாது!! "
கட்டளை மாத்திரம் பின்பற்றுவதற்கு நீங்கள் பரிசேயரா? இயேசுவின் பாதத்தை மரியாள் ஏன் முத்தம் செய்தாள் என்று தெரியுமா?

//
இந்த வசனத்தை புரிந்துக்கொள்ள ஒன்றும் பெரிய கஷ்டம் இல்லையே!! மிகாவேலின் பெயர் அர்த்தத்தையும், கொலோ 1:15ஐ கொண்டும் தான் இருவரும் ஒருவரே என்கிறதை நான் பதிந்திருக்கிறேனே தவிர வேறு ஒன்றும் இல்லை!! சாத்தானின் தலையை நசுக்குபவர் கிறிஸ்து என்றும், தானியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷத்தில் அதை செய்வது மிகாவேல் என்று இருப்பதால் என் புரிந்துக்கொள்ளுதலில் தவறு இல்லை //
பவுலுக்கு இது தெரியாதது துரதிஷ்டமே! இயேசுதான் மிகாவேல் என்று எழுதுவதை விட்டு விட்டு " ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன்: என்று எழுதுவரா?

ரோமர் 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்

//முந்தின பேறானவர் என்றால் என்னவென்று உங்களிடத்தில் பதில் வராமல் இருப்பதில் ஒரு ஆச்சரியமும் இல்லை!! //
நீங்கள் என்னுடைய யோவான் 1:3 க்கு பதில் சொல்லாததால் நான் இதை நிறுத்தி வைத்து இருந்தேன். அதுவும் நான் நேசிக்கும் , ஆராதிக்கும் என் அன்பு தேவன் இயேசு சொல்லிகொடுத்தது தான்.

மத்தேயு 21:27 இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, அவர்: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.

அவர் உயிரோடு எழுந்தவர்களில் முதல் பேரனாவார். கிழே உள்ளவசனம் அதை தெளிவாய் சொல்லுகிறது

I கொரிந்தியர் 15:20 கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார்.

ரோமர் 8:29. தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும்பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்;

John
Member
orangestar.gif

Posts: 20
Date: 18m, 42s ago

"அதி" "அல்பா" போன்ற வார்த்தைகளின் அர்த்தங்களை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். "ஆதிக்கு முன்பாக ஒரு நேரம்(???) இருந்தது அப்போது இயேசு உருவாக்கப்பட்டார் பின்பு அவர் உருவாக்கப்பட்ட எல்லாவற்றையும் உருவாக்கினார் என்கிற 'கதை' எப்படி உருவானது என்று தெரியவில்லை. "அல்பா" என்பது கிரேக்கத்தில் முதல் எழுத்து ஆனால் இவர்களை பொறுத்தவரை "அல்பா" வுக்கு
முன்னமே ஒரு எழுத்து கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

யோவான் 1:1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

யோவான் 1:3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.


ஆதியிலே வார்த்தை "இருந்தது" (In the Beginning the word WAS). நேரம், கருப்பொருள், சக்தி (Time, Matter, Energy) இவையெல்லாம் உருவாக்கப்பட்டவை. தேவன் நேரத்திற்கு வெளியே இருக்கிறார். வார்த்தையான இயேசு தேவனும் நேரத்திற்கு வெளியே இருப்பதால் தான் "In the beginning the Word WAS". இது வரை இதற்க்கு ஒரு  உருப்படியான பதிலும் இல்லை.

இயேசு "மகா தேவன்"

தீத்து 2:13 "நாம் நம்பியிருக்கிற ஆனந்த பாக்கியத்துக்கும், மகா தேவனும் நமது இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய மகிமையின் பிரசன்னமாகுதலுக்கும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்படி நமக்குப் போதிக்கிறது."

இயேசு நித்திய பிதா

ஏசாயா 9:6 அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு

இயேசு சர்வத்திற்கும்மேலான தேவன்

ரோமர் 9:5 பிதாக்கள் அவர்களுடையவர்களே; மாம்சத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும்மேலான தேவன். ஆமென்

இவ்வளவு வசனங்கள் இருந்தாலும் 'வசனத்தின்'(???) படி செயல்படுகிற இவர்கள் இயேசுவை தொழமாட்டார்கள்.

யேகோவா தேவன் சொல்லுகிறார்:

ஏசாயா 46:5 யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?

இயேசு பிதாவுக்கு சமம் என்று கிழே உள்ள வசனத்தில் வசிக்கிறோம்.

பிலிப்பியர் 2:6 அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல்,

சமம் என்றால் என்ன? தேவனுக்கு சமமாக தேவனை தவிர வேறு யாராவது இருக்கிறார்களா? இதுவரை பதில் இல்லை

தேவன்னுக்குள் "ஆள்தத்துவங்கள்" இல்லை ( I , You relationship)  என்றால், படைப்புக்கு முன்பு  அவருக்கு "அன்பு" என்றால் என்ன என்பது தெரிய வாய்ப்பில்லை. அன்பு கூறுவதற்கு குறைந்த பட்சம் 2 "Personality" ஆவது வேண்டும்.

யோவான் 17:24. பிதாவே, உலகத்தோற்றத்துக்கு முன் நீர் என்னில் அன்பாயிருந்தபடியினால்...


//உங்களைப் போன்ற குருடர் காட்டுகிற வழியின் பின்னே இத்தள அன்பர்கள் யாராவது செல்லவிரும்பினால், அதை நான் தடுக்கப்போவதில்லை. ஒரு குருடன் காட்டுகிற வழியை அவர்கள் நம்புவதை தேவனே அனுமதித்திருக்கும்போது, அதைத் தடுக்க நான் யார்? எனவே உங்கள் சத்தியங்களை நீங்கள் இங்கு பதிவது பற்றி எனக்கு எந்த ஆட்சேபனையுமில்லை.....முதலில் இம்மாதிரி மதியீனருக்கு உங்கள் உபதேசத்தைச் சொல்லுங்கள்; அதன்பின், உங்கள் மதியீன தீர்ப்பின்படி lucifer-ஐ தேவனாகக் கொண்டுள்ள எங்களுக்கு உங்கள் உபதேசத்தைச் சொல்லுங்கள்.//

நீங்கள் என்னை குருடன் , மதியினன் என்று சொல்லுங்கள் கவலை இல்லை. ஏன் என்றால் என் இயேசு தேவனை ஆராதிக்காமல் திரிந்த நாட்களில் நான் அப்படிதான் இருந்தேன்

நான் அது போல எழுத ஒரே காரணம், நான் திரும்ப, திரும்ப கேட்டும் நீங்கள் இருவரும் மறந்தும் கூட அந்த 24 மூப்பர்களும் , மரியாளும், பேதுருவும் , கானானிய பெண்ணும்..இன்னும் பலரும் செய்தது போல "இயேசுவின் பாதத்தில்" நாங்கள் பணிவோம் என்று சொல்லவில்லை. இயேசுவின் பாதத்தில் விழக்கூடாது என்று சொல்லுகிற ஒரே "தேவன்"  இயேசு தேவனுடைய மகிமையை நீங்கள் காணக்கூடாத படி கண்களை குருடக்குகிற  இந்த பிரபஞ்சத்தின் தேவனாகிய சாத்தான் தான். இந்த பொய்யை சத்தியமாக போதிக்கிறவன் பொய்யும் பொய்க்கு பிதாவுமான பிசாசு தான்.


மரியாள் இயேசு சிலுவை சுமக்கும் முன்னமே அவருடைய பாதத்தை கண்ணிரால் கழுவி , ஸ்திரிகளின் மகிமையாகிய தன் தலை முடியால் துடைத்தாள் என்றால், என் அன்பு தேவன், மா பாவி எனக்காக சிலுவை சுமந்தபின்பு அவருடைய பாதத்தில் விழக்கூடாது என்று சொல்லுகிற "எந்த தேவனும்" எனக்கு தேவை இல்லை.

லூக்கா 7:38 அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசினாள்.

இப்போது விரும்பி நீங்கள் உங்கள் முழங்கால்களை முடக்காவிட்டால் நீங்கள் ஆராதிக்காத என் சத்திய பிதா தாமே முழங்கால்களை  இயேசுவின் பாதத்தில் முடக்குவார்.


இதுதான் உங்களுடைய தளத்தில் என்னுடைய கடைசி பதிவு.




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard