அந்த முன்னுரை கட்டுரையில் எந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை நண்பரே!. ஆயினும் ஒரு தவறான கருத்து வாசருக்கு சென்றுவிடக்கூடாது என்பதில் ஆசிரியர் முனைப்பாக உள்ளார். அவர் எழுதாத கருத்திற்கு அவர் பொறுப்பாளி அல்லர். முன்னுரையை தவறாக எழுதியவரே அவற்றுக்கு பொறுப்பு அவற்றிலுள்ள அடிக்குறிப்புகள் நீக்கப்பட்ட நிலையில் அவற்றை பிரசுரித்திருப்பதும் வேதஆய்வில் ஈடுபட்டிருக்கும் மற்றும் ஆசிரியரின் கருத்துக்கு சாதகமான பாதகமாக கருத்துக்களை ஆய்வு செய்ய இருப்பவர்களுக்கும் சற்று பின்னிடைவுதான். இந்த நூல் மரணத்தின் மறுப்பக்கம் என்ற நூலின் தொடர்ச்சியாகும். ஏற்கனவே அதற்கான தரவிறக்க சுட்டியை முன்னர் இப்பக்கத்தில் இணைத்திருந்தேன்.
பொதுவாக ஆசிரியரின் நூல்களை அனுமதி பெற்றே பிரசுரிக்க வேண்டும். ஆயினும் கட்டுரையை வெளியி்ட்ட ஜாமக்காரன் ஆசிரியரை பாராட்ட வேண்டும் அல்லாதுவிட்டால் இப்படியொரு கட்டுரையை படிக்கும் சந்தரப்பம் கிடைத்திருக்குமா? நானும் கூட அப்படிதான் ஆசிரியரி்ன் அனுமதி பெறாமலேயே பல கட்டுரைகளை பிரசுரித்துள்ளேன்.
அன்புக்குரிய நண்பரே,தங்கள் பாராட்டுக்கு நன்றிகள்..! நம்முடைய தளப் பக்கத்தின் வலது கீழுள்ள "Oldest first" எனும் வாய்ப்பை தெரிவு செய்தால் நீங்கள் விரும்புவதுபோல இந்த கட்டுரையின் பக்கங்கள் அமைந்திருக்கும்;மேலும் இந்த நீண்ட கட்டுரையை ஏக சமயத்தில் ஒரே பதிவாக பதிக்க இயலாமையும் ஒரு காரணம். இந்த கட்டுரையில் என்னை வருத்தப்படுத்திய ஒரு காரியமாவது,வேத ஆராய்ச்சியாளர் வசந்தகுமார் அவர்களின் புத்தகத்தை எடுத்து வெளியிட்டிருக்கும் ஜாமக்காரன் ஆசிரியர் அதற்கு (அனுமதி பெற்றாரா என்பது நாம் அறியாதது..) தவறானதொரு முன்னுரையைக் கொடுக்கிறார்; அதனை மறுத்து மிக நாகரீகமான முறையில் எழுதியுள்ள வசந்தகுமார் அவர்களின் கட்டுரைக்கு ஜாமக்காரன் கொடுத்துள்ள முன்னுரையில் இந்த கட்டுரையை வசந்தகுமார் அவர்களே முன்வந்து எழுதியது போன்றதொரு தோற்றத்தில் எழுதியிருக்கிறார்;இது சரியா என்று எனக்குத் தெரியவில்லை..!
//(கடந்த ஜாமக்காரனில் மரித்த ஆவி கிரியை செய்யுமா? என்ற கட்டுரை எழுதியDr.வசந்தகுமார் (இங்கிலாந்து) அவர்கள் அவர் எழுதிய கட்டுரையின் இடையே எழுதப்பட்ட லூசிபர்-பிசாசு என்று குறிப்பிட்டதற்கு மறுப்பு கூறி விளக்கமும் எழுதியுள்ளார்)//
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அருமையான கட்டுரையை வெளியிட்டுள்ளீர்கள். பரலோகம் போய்வந்தேன் என கதையளக்கும் போதகர்களுக்கும் பரலோககமிட்டியில் தினகரன் உள்ளார் என்று சொல்பவர்களுக்கும் மரித்த புனிதர்களிடம் ஜெபிப்பவர்களுக்கும் ஆவிகளிடம் குறி கேட்பவர்களுககும் இன்னும் அநேகம கேள்விகளுக்கு பதில் கொடுககும் வண்ணம் ஆசிரியர் பதில் எழுதியுள்ளமை பாராட்டத்தக்கது.
ஆயினும் ஒரு சிறுகுறை உங்கள் கட்டுரை கீழிருந்து மேல்நோக்கி வாசிக்க வேண்டியுள்ளது.Default ஆக எப்படி பக்கம் தோன்றுகிறதோ அவ்வண்ணமே கட்டுரையை வெளியிடல் நலம்.
(கடந்த ஜாமக்காரனில் மரித்த ஆவி கிரியை செய்யுமா? என்ற கட்டுரை எழுதிய Dr.வசந்தகுமார் (இங்கிலாந்து) அவர்கள் அவர் எழுதிய கட்டுரையின் இடையே எழுதப்பட்ட லூசிபர்-பிசாசு என்று குறிப்பிட்டதற்கு மறுப்பு கூறி விளக்கமும் எழுதியுள்ளார்)
எனது புத்தகத்தை முழுமையான ஜாமக்காரனில் பிரசுரித்து, தற்காலத்திற்கு மிகவும் அவசியமான வேதாகம சத்தியத்தை அதிகமானவர்கள் அறிந்துக்கொள்ள உதவியதற்கு முதலில் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனது கட்டுரையை அறிமுகப்படுத்தும்போது ஜாமக்காரன் பிப்ரவரி 2009 இதழில் 11ம் பக்கத்தில் "தேவனுக்கு மூன்று முக்கிய தூதர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர்.லூசிபர். இந்தப் பெயரை நம் வேதபுத்தகத்தில் எந்த மொழிபெயர்ப்பிலும் குறிப்பிடவில்லை. ஆனால் மூலப்பாஷை வேதப்புத்தகத்தில் மட்டும் லூசிபர் என்று பெயரைக் குறிப்பிட்டே எழுதப்பட்டுள்ளது" என்று என் கட்டுரையின் இடையே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள். ஆனால் இது தவறாகும். எபிரேய மற்றும் கிரேக்கலூசிபர் என்பது லத்தீன் மொழிச்சொல். லத்தீன் மொழிபெயர்ப்பு வேதாகமத்திலேயே இப்பெயர் உள்ளது. மேலும், இப்பெயரின் அர்த்தம் "விடிவெள்ளி" என்பதாகும். ஆதிசபைப் பிதாக்களும் அவர்களைப் பின்பற்றி பாரம்பரியச் சபைகளும் தீரு மற்றும் பாபிலோனிய அரசர்களைப்பற்றிய எசேக்கியல் 28:11-15, ஏசாயா 14:12-15 என்னும் வேதப்பகுதிகளை (எசே 28:11-12, ஏசா 14:4) சாத்தானுடைய வீழ்ச்சியைப்பற்றிய குறிப்பாக வியாக்கியானம் செய்ததினால், இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் "விடிவெள்ளி" (ஏசா 14:12) சாத்தான் என்னும் கருத்து கிறிஸ்தவர்கள் மத்தியில் உருவானது. மேலும், கி.பி.4ம் நூற்றாண்டிற்குப் பின்னர் லத்தீன் மொழிபெயர்ப்பே சபையின் உத்தியோகபூர்வமான வேதாகமமாக இருந்ததினால் இம்மொழிபெயர்ப்பில் உள்ள லூசிபர் என்னும் சொல் சாத்தானுடைய பெயராகப் பிரபலமடைந்து, பழைய ஏற்பாடு எழுதப்பட்ட எபிரேய மொழியில் தேவதூதர்களுடைய பெயர்கள் தேவனைக் குறிக்கும் "ஏல்" என்னும் எபிரேயச் சொல்லுடனேயே முடிவடையும். இதனால்தான் பிரதான தூதர்களாக வேதத்தில் உள்ள இரு தூதர்களுடைய பெயர்களும் இச்சொல்லுடன் "காபிரியேல்", "மிகாயேல்" என்று முடிவடைகின்றன. யூதர்களுடைய நம்பிக்கையின்படி மொத்தம் ஏழு பிரதான தூதர்கள் உள்ளபோதிலும், அவற்றில் இரு தூதர்களுடைய பெயர்கள் மட்டுமே வேதத்தில் உள்ளன. எனவே லூசிபர் மொழி வேதப்பிரதிகளில் இப்பெயர் இல்லை. என்பது வேதத்தில் சாத்தானுக்கு கொடுக்கப்பட்ட பெயர் அல்ல. இது ஆதிசபைப் பிதாக்களின் வியாக்கியானத்தை அடிப்படையாகக்கொண்டு வேதாகமத்தின் லத்தீன் மொழிபெயர்ப்பிலிருந்து உருவாக்கப்பட்டுள்ள பெயராகவே உள்ளது.
விடிவெள்ளி அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்னர் தோன்றும் பிரகாசமுள்ள நட்சத்திரமாக (வீனஸ் கிரகம்) இருப்பதனால், ஏசாயா 14:12ல் பாபிலோனிய அரசன் "அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளி" என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இத்தகைய அர்த்தத்துடன் 2பேதுரு 1:19ல் விடிவெள்ளி (லத்தீனில் லூசிபர்) என்னும் சொல் உபயோகிக்கப்பட்டுள்ளது. வெளிப்படுத்தல் 22:16ல் இயேசுகிறிஸ்துவும் "விடிவெள்ளி" என்று அழைக்கப்பட்டுள்ளார். லத்தீன்லூசிபர் என்னும் சொல்லே உள்ளது. வெளிப்படுத்தல் 2:28லும் விடிவெள்ளி என்னும் சொல் உள்ளது. லூசிபர் என்பது கிறிஸ்தவர்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ள சாத்தானுடைய பெயராயிருந்தாலும் வேதாகமத்தில் இப்பெயர் சாத்தானுக்கு கொடுக்கப்படவில்லை. வேதாகமத்தில் "பிசாசு" (மத் 4:1), "சர்ப்பம்" (2கொரி 11:3), "வலுசர்ப்பம்" (வெளி 12:7), "இப்பிரபஞ்சத்தின் தேவன்" (2கொரி 4:4), "இந்த உலகத்தின் அதிபதி" (யோவா 12:31,16:11), "சோதனைக்காரன்" (மத் 4:3), "பொல்லாங்கன்" (மத் 13:19, 1யோவா 5:18,19), "ஆகாயத்து அதிகாரப் பிரபு" (எபே 2:2), "பெயல்செபூல்" (மத் 12:24) என்னும் பெயர்கள் சாத்தானுக்கு உள்ளன. வேதாகமத்தில் இவ்விடத்திலும்
என்னுடைய புத்தகங்களைப்பற்றிய அறிவிப்பை ஜாமக்காரனில் குறிப்பிடுவதற்கும் என்னுடைய நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். தற்போது இருக்கும் புத்தகங்களின் விபரம்:
மதுரையில் உள்ள என் புத்தகங்கள் அனைத்தும் இலங்கையிலும் உள்ளன. சில புத்தகங்கள் சென்னை ELS புத்தகசாலையில் உள்ளன. ஐரோப்பாவில் உள்ளவர்கள் என்னிடம் நேரடியாக 004420828146 என்னும் தொலைப்பேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு புத்தகங்களைப் பெற்றிடலாம். இங்கு குறிப்பிடப்படாத என்னுடைய ஏனைய புத்தகங்கள் தற்போது விற்பனைக்கு இல்லை.
மேலதிக வேதாகம விளக்கங்களுக்கு விபரங்களுக்கு என்னுடன் தொடர்புகொள்ள www.tamilbibleresearchcentre.com என்னும் இணைய தளத்தைப் பார்க்கவும்.
-டாக்டர்.வசந்தகுமார். இங்கிலாந்து.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இப்போதுய கிறிஸ்தவ உலகில் பல கிறிஸ்தவ ஊழியர்கள், பிரசங்கிமார்கள், இந்த பிசாசின் கையாட்களாக செத்துப்போனவர்களோடு பேசுவதாகவும், பரலோகம், நரகம் போய்வருவதாகவும் அங்குள்ள மோசேயோடும், பேதுருவோடும், மரித்துப்போன ஊழியர்களோடும் பேசியதாகவும், மரித்த பலர் பூமிக்கு இறங்கிவந்து தன்னோடுபேசி போவதாகவும் பல கட்டுக்கதைகளை கூறி இவர்களும் பிசாசைப்போல தங்களை தேவனுக்கு சமமானவர்களாக காட்டி பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள்.
அதுபோலவே தாங்கள் பிரசங்கிக்கும் மேடையிலேயே இயேசுவை வேலைக்காரனைப்போல் அழைத்து நிற்க வைப்பதாகவும், அவரும் ஒரு அடிமைப்போல இவர்கள் யாரை குறிப்பிடுகிறார்களோ அவர்களிடம் சென்று அவர்களை ஆசீர்வதிப்பதுபோலவும், சுகமாக்குவதைப்போலவும் பொய்கதைகளை கூறி பொதுமக்களை மிகவும் தைரியமாக ஏமாற்றி ஜனங்களின் பணத்தையும், காணிக்கை என்ற பெயரில் சுருட்டிக்கொண்டு போகிறார்கள். பெரும்பாலான கிறிஸ்தவர்கள், பொதுமக்கள் இவர்களிடம் ஏமார்ந்து போகிறார்கள். பொதுமக்கள் மட்டுமல்ல, பிஷப்மார்களும், குருமார்களும், பாஸ்டர்மார்களும் இவர்கள் வஞ்சக வலையில் அகப்பட்டுள்ளார்கள்.
இந்த கட்டுரை ஒரளவு விழிப்புணர்வை உண்டாக்கும் என்று நம்புகிறேன்.
சில குறிப்பிட்ட சபைகளில் செத்துப்போனவர்களை பரிசுத்தமுள்ளவர்கள் என்று மனிதர்களே நற்சான்றிதழ் கொடுத்து அந்த செத்துப்போனவர்களோடு இனி ஜெபம் செய்யலாம். அவர்கள் உங்களுக்கு ஆசீர்வாதத்தை கடவுளிடமிருந்து வாங்கிக்கொடுப்பார்கள் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். அப்படி சமீபத்தில் அறிமுகப்படுத்திவர்கள்தான் சகோதரி.அல்போன்சா, மதர்.தெரசா என்பவர்கள் ஆவார்கள்.
அப்படியே மரித்துப்போன சகோ.தினகரன் அவர்கள் இயேசுவுக்கு ஆலோசனைக் கொடுக்கும் கமிட்டியில் ஒருவராக பரலோகத்தில் வீற்றிருக்கிறார் என்று விளம்பரப்படுத்தியதை கவனித்திருப்பீர்கள். இது வேத வசனத்துக்கு முற்றிலும் விரோதமானது. இவர்கள் யாவரும் மரித்தவர்கள் இவர்கள் யாரோடும் நாம் தொடர்புக்கொள்ளவோ அவர்களிடமிருந்து உதவியோ பெறமுடியாது. பிர 9:5, சங் 88:10, யோபு 14.
உபா 18:10ல் செத்துப்போன ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்கள் சபிக்கப்பட்டிருப்பார்கள். செத்துப்போன ஆவிகள் செத்துபோன நபர்களுடையதல்ல, அவைகள் பிசாசினுடையவை ஆகும். எனவே ஜாக்கிரதை! ஜாக்கிரதை!!
மரித்தோரின் ஆவிகள் இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்பதை அறியத்தரும் வேதாகமத்தில், மரித்தோர் இவ்வுலகத்திற்கு வந்து மக்களுக்கு ஆலோசனைகள் கொடுத்து அவர்களை ஆசீர்வதித்ததுப்பற்றிய எவ்வித சம்பவங்களும் இல்லை. இதனால், ஆவிக்குரிய ஆலோசனைகளுக்கும், வழிநடத்துதல்களுக்கும் மரித்த பக்தர்களிடமும் நம்முடைய மூதாதையரிடமும் மன்றாடுவதில் எவ்வித பயனும் இல்லை. வேதாகமம் சுட்டிக்காட்டுவதுபோல பிசாசின் ஆவிகளே மரித்தோரைப்போலக் காட்சியளித்து மக்களை வஞ்சித்து வருவதனால், மரித்தோரின் ஆவிகளைக் கொண்டுவருவதாகக் கூறும் நபர்களிடம் செல்வதையும், அவர்கள் செய்யும் காரியங்களில் ஈடுப்படுவதையும் வேதாகமம் கடுமையான பாவங்களாகக் கருதி அவற்றைத் தடைசெய்துள்ளது.
1. வேதாகமமே நம்முடைய ஆவிக்குரிய வழிகாட்டி:
கிறிஸ்தவர்களாகிய நாம் மரித்தோரின் ஆவிகளிடமிருந்து அல்ல, தேவனுடைய வார்த்தையான வேதாகமத்திலிருந்தே ஆவிக்குரிய வழிநடத்துதலையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். இதனால்தான், ஏசாயா என்னும் தீர்க்கதரிசி பின்வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அவர்கள் உங்களை நோக்கி அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திலும், முணுமுணென்று ஓதுகிற குறிக்காரரிடத்திலும் விசாரியுங்கள் என்று சொல்லும்போது, ஜனங்கள் தன் தேவனிடத்தில் விசாரிக்கவேண்டியதல்லவோ? உயிருள்ளவர்களுக்காகச் செத்தவர்களிடத்தில் விசாரிக்கலாமோ? வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும். இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால் அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை (ஏசா 8:19-20).
நாம் ஏற்கனவே பார்த்தபடி, அஞ்சனம் பார்ப்பவர்கள் தங்களுக்குள் குடியிருக்கும் பிசாசுகளின் உதவியுடனேயே செயல்படுகின்றனர். இவர்கள் கொண்டுவரும் பிசாசுகளின் ஆவிகளுடைய பேச்சுக்களையே "முணுமுணென்று ஓதுகிறதாக" ஏசாயா குறிப்பிட்டுள்ளார். உண்மையில், மரித்தோரின் ஆவிகளிடத்தில் ஆலோசனை பெற முற்படுபவர்கள் பிசாசின் ஆவிகள் முணுமுணுக்கும் சத்தத்தையே கேட்பார்கள். அவர்களுக்குத் தெளிவான விளக்கங்கள் எதுவும் கிடைப்பதில்லை. இதனால் அவர்களுக்கு "விடியற்காலத்து வெளிச்சமில்லை" என்று ஏசாயா குறிப்பிட்டுள்ளார். தேவனுடைய வார்த்தையே "நம் கால்களுக்குத் தீபமும் பாதைக்கு வெளிச்சமுமாய் இருப்பதனால்" (சங் 119:105). தேவனுடைய வார்த்தையைக் கருத்திற்கொள்ளாமல் "பிசாசின் ஆவிகளிடத்தில் குறிகேட்கச் செல்பவர்கள் இருளில் பாதை தெரியாமல் தடுமாறுகிறவர்களாகவே இருப்பார்கள்". ஏனெனில் "மரித்தோரின் ஆவிகளிடத்தில் ஆலோசனைப்பெறச் செல்வது இருட்டுக்குள் செல்வதாகவே உள்ளது". உண்மையில், வேதாகமத்தின் வெளிச்சத்தைத் தவிர, ஆவிக்குரிய ஆலோசனைகளுக்கும் வழிநடத்துதல்களுக்கும் வேறு வெளிச்சங்கள் எதுவும் உலகில் மனிதருக்கு இல்லை. இதனால் "தேவனுடைய வார்த்தையை நிராகரிப்பது ஆவிக்குரிய இருளில் நம்மை மூழ்கடித்துவிடும்". மரித்தோருக்கு எதுவும் தெரியாதிருப்பதனால் (பிர 9:5) அவர்களிடமிருந்து எவ்வித வெளிச்சமும் நமக்கு கிடைப்பதில்லை.
மரித்தோரின் ஆவிகளிடத்தில் ஆலோசனை பெறவேண்டும் என்று மற்றவர்கள் கூறும்போது "நாம் மரித்தோரின் ஆவிகளிடமல்ல, தேவனிடமே விசாரிக்கவேண்டும்" என்று ஏசாயா கூறுகின்றார். உயிருள்ளோர் அவருக்காக மரித்தோரிடத்தில் விசாரிப்பது பைத்தியக்காரத்தனமானது என்பதை ஏசாயா இவ்வசனத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். "மரித்தோர் ஒன்றும் அறியார்கள்" என்று பிரசங்கி 9:5 கூறுவதனால், அவர்களிடம் ஆலோசனை கேட்பது அர்த்தமற்றது. "நாம் மரித்த மனிதர்களிடமல்ல, ஜீவனுள்ள தேவனிடமே ஆலோசனை பெறவேண்டும்". ஏசாயாவின் கூற்றில் "வேதம்" "சாட்சி ஆகமம்" என்னும் இரு சொற்களும் தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தையே குறிக்கின்றன. "வேதம்" என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல் வேதாகமத்தில் தேவன் கொடுத்துள்ள அறிவுறுத்தல்களைக் குறிக்கின்றது. தேவன் வேதாகமத்தில் தம்மைப்பற்றிய சத்தியத்திற்கு சாட்சியாயிருப்பதனால், அவருடைய வார்த்தையான வேதம் இங்கு "சாட்சி ஆகமம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. "தேவனிடத்தில் விசாரிக்கவேண்டும்" என்று 9ம் வசனத்தில் குறிப்பிட்டுள்ள ஏசாயா, இதற்காக வேதத்தையும், சாட்சி ஆகமத்தையும் கவனிக்க வேண்டும் என்று 10ம் வசனத்தில் தெரிவித்துள்ளார். இதிலிருந்து, தேவனிடத்தில் விசாரிப்பது என்பது, அவருடைய வார்த்தையான வேதாகமத்தை ஆராய்ந்து பார்க்கும் செயலாகவே உள்ளது. எனவே நாம் மரித்தவர்களின் ஆவிகளிடத்தில் அல்ல, தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தின் மூலமே நமக்கு அவசியமான தேவ ஆலோசனையையும் வழிநடத்துதலையும் பெற்றுக்கொள்ளவேண்டும்.
2. பரலோகத்திற்கு எவரும் போய்வருவதில்லை:
தற்காலத்தில் தேவனுடைய ஆலோசனையும் வழிநடத்துதலும் அவருடைய வார்த்தையான வேதாகமத்தின் மூலமே நமக்கு கிடைக்கின்றது என்பதைப் பல கிறிஸ்தவர்கள் அறியாதவர்களாக இருக்கின்றனர். இதனால், இவர்கள் தாங்கள் வாழும் பிரதேச மக்களுடைய பழக்கவழக்கங்களின்படி மரித்தோரின் ஆவிகளிடத்திலும், பரலோகத்திற்கு அல்லது நரகத்திற்குப் போய்வந்ததாகக் கூறி மக்களை வஞ்சிக்கும் நபர்களிடமும் ஆலோசனை பெறுவதற்காகச் செல்கின்றனர். மரித்தோரின் ஆவிகளிடத்திலிருந்து எவ்வித ஆலோசனையையும் பெறமுடியாது என்பதை அறியத்தரும் வேதாகமம், பரலோகத்திற்கு அல்லது நரகத்திற்குப் போய் வருபவர்கள் இவ்வுலகத்தில் இருப்பதாகவும் கூறவில்லை. இயேசுகிறிஸ்துவின் காலத்திலேயே பரலோகத்திற்குப் போய்வந்ததாகக் கூறி மக்களை வஞ்சிக்கும் நபர்கள் இருந்ததினால், பரலோக சத்தியங்களை அறிந்துக்கொள்ளக்கூடிய விதமாக எவரும் பரலோகத்துக்குப் போய்வரவில்லை என்பதை அவர் யோவான் 3:13ல் தெரிவித்துள்ளார். இவ்வசனத்தில் "பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனுமில்லை" என்னும் சொற்பிரயோகம் மூலமொழியில் இதுவரையில் எவரும் பரலோகத்துக்குச் செல்லவில்லை என்னும் அர்த்தமுடையதல்ல, பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் பரலோகத்தில் இருக்கின்றனர் என்னும் வேதாகம சத்தியத்தை இவ்வாக்கியம் முரண்படுத்தவுமில்லை. ஏனெனில் மூலமொழியில் இவ்வாக்கியம் "மறுபடியும் திரும்பிவரும் விதத்தில் எவரும் பரலோகத்திற்குச் செல்லவில்லை" என்னும் அர்த்தத்திலேயே உள்ளது. இயேசுகிறிஸ்துவினுடைய காலத்தில், பரலோகத்திற்குப் போய்வந்த பரிசுத்தவான்களைப்பற்றிய கதைகள் யூதர்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தன. அதேப்போல அக்கால கிரேக்கர்கள் மத்தியிலும் வேறு உலகங்களுக்குச் சென்று மக்களுக்கு தெய்வச் செய்திகளைக் கொண்டுவரும் நபர்களைப்பற்றிய கதைகள் இருந்தன. இதனால், இவ்வாறு எவரும் பரலோகத்திற்குப் போய்வரவில்லை என்பதை இயேசுகிறிஸ்து யோவான் 3:13ல் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேதாகமத்தில் பவுல், யோவான் என்போர் பரலோகத்திற்குச் சென்றுள்ளதைப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் (2கொரி 12:1-4, வெளி 4:1-2) இவைகள் யோவான் 3:13ல் உள்ள இயேசுகிறிஸ்துவின் கூற்றுக்குப் பின்னர் நடைபெற்ற சம்பவங்களாக இருப்பதோடு, இவைகள் வேதாகம சத்தியத்தை வெளிப்படுத்துவதற்காக தேவனால் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பான அனுபவங்களாக உள்ளன. மேலும், வேதாகம சத்தியங்கள் அருளுப்படுவது, வெளிப்படுத்தல் புத்தகத்தோடு நிறைவுபெற்றதினால் அதன்பின்னர் தெய்வீக சத்தியங்களை அறிந்துகொள்வதற்காகப் பரலோகத்திற்கு சென்றுவரும் சிறப்பான வரத்தை எவரும் பெறவில்லை. வேதாகமத்தின் கடைசிப் புத்தகமான "வெளிப்படுத்தின விசேஷத்தோடு" மனிதருக்கான தேவனுடைய வெளிப்படுத்தல் நிறைவு பெற்றதனால்தான், "இந்தப் புத்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளைத் தேவன் அவன்மேல் கூட்டுவார்" (வெளி 22:18) என்னும் எச்சரிப்புடன் இப்புத்தகம் முடிவடைகிறது. சில சில கிறிஸ்தவர்கள் இவ்வெச்சரிப்பை வேதாகமத்தின் கடைசிப் புத்தகத்திற்கு மட்டுமானது என்று வரையறை செய்தாலும் தேவன் நமக்கு கொடுத்துள்ள வேத வசனங்களுக்கு மேலதிகமாக புதிய விஷயங்களைச் சேர்க்கக் கூடாது என்னும் எச்சரிப்பு வேதாகமத்தில் பல தடவைகள் கொடுக்கப்பட்டுள்ளது (உபா 4:2, 12:32, நீதி 30:6) இதனால், வெளிப்படுத்தல் 22:18லுள்ள எச்சரிப்பு, இப்புத்தகத்திற்கு பின்னர் வேதாகமத்திற்கு மேலதிகமாக எதுவும் சேர்க்கக்கூடாது என்பதை அறிவுறுத்தும் கட்டளையாகவும் உள்ளது. உண்மையில், வேதாகமத்தின் கடைசிப் புத்தகத்தோடு மனிதருக்கான தேவனுடைய வார்த்தை வெளிப்படுத்தப்படுவது நிறைவுபெற்றது. அதன்பின்னர், நாம் புதிய செய்திகளுக்காகப் பரலோகத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறவர்களாக அல்ல, தேவன் நமக்கு கொடுத்துள்ள பரிசுத்த வேதாகமத்தை ஆராய்ந்து படிக்கிறவர்களாகவும் எழுதியபடி நடக்கிறவர்களாகவும் இருக்கவேண்டும் என்பதே தேவனுடைய சித்தமும், அவர் நிர்ணயம் பண்ணியுள்ள திட்டமுமாயுள்ளது. இதனால்தான், இயேசுகிறிஸ்து இவ்வுலகத்தைவிட்டுச் செல்வதற்கும் முன்பு, புதிய செய்திகளுக்காகப் பரலோகத்தைப் பார்த்துக்கொண்டிராமல் தாம் கற்பித்த யாவையும் மற்றவருக்குப் போதிக்கும்படி தம்முடைய சீஷருக்குக் கட்டளையிட்டார். (மத் 28:20).
3. வேதாகமம் தேவனுடைய இறுதிவார்த்தை:
இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு கற்பித்தவைகள் அனைத்தும் வேதாகமத்தில் உள்ளன. இயேசுகிறிஸ்து பழைய ஏற்பாட்டை எழுதப்பட்ட தேவனுடைய வார்த்தையாகக் கருதி, தம்முடைய உபதேசங்கள் அனைத்திற்கும் அதையே ஆதாரமாகக் கொண்டிருந்தார். அவர் போதித்த காரியங்கள் அனைத்தும் புதிய ஏற்பாட்டில் எழுதப்பட்டுள்ளன. இவ்விரு ஏற்பாடுகளும் மனிதருக்கான தேவனுடைய வார்த்தையாக இருப்பதனால், நம்முடைய வாழ்வுக்கு அவசியமான தெய்வீக ஆலோசனைகள் அறிவுறுத்தல்கள் அனைத்தையும் கொண்டுள்ளன. இதனால் நாம் வேதாகமத்திற்கு அப்பால் வேறு வெளிப்படுத்தல்களையும் செய்திகளையும் தேடியலைவது அர்த்தமற்றது. வேதாகமத்திலுள்ள புத்தகங்கள் எழுதப்படும் வரை பல்வேறு முறைகளில் மனிதர்களோடு தொடர்புக்கொண்டு, அவர்களுக்கு அவசியமான ஆலோசனைகளை அளித்துவந்த தேவன் அதன்பின்னர் வேதாகமத்தின் மூலமே மனிதர்களோடு பேசுகிறவராக இருக்கின்றார். ஏனெனில், வேதாகமமே மனிதருக்கான தேவனுடைய இறுதி வார்த்தையாக உள்ளது. இதைப்பற்றி எபி 1:1-2ல் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பூர்வ காலங்களில் பங்கு பங்காகவும் வகைவகையாகவும் தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார் (எபி 1:1-2).
இவ்வசனங்களில் "பூர்வ காலங்களில்" என்பது பழைய ஏற்பாட்டுக் காலத்தையும் "இந்தக் கடைசி நாட்கள்" என்பது புதிய ஏற்பாட்டுக் காலத்தையும் குறிக்கின்றது. உலக சரித்திரத்தைப்பற்றிய வேதாகமக் காலகட்டங்களின்படி இயேசுகிறிஸ்துவின் முதலாம் வருகைக்கும் இரண்டாம் வருகைக்கும் இடைப்பட்ட காலமே கடைசி காலமாயுள்ளது. எனவே நாம் இப்பொழுது கடைசி காலத்தில் வாழ்கின்றோம். இது கடைசி காலம் என்பதை 1யோ 2:18ல் நேரடியாகவே அறியத்தருகின்றது. எபிரேயர் 1:2ன்படி, இக்கடைசி காலத்தில் தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலமே நம்மோடு திருவுளம் பற்றி உள்ளார் (அதாவது பேசியுள்ளார்). ஆனால் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பங்கு பங்காகவும் வகை வகையாகவும் நம்முடைய பிதாக்களோடு பேசியுள்ளார். எபிரேயர் நிரூபம் யூதக்கிறிஸ்தவர்களுக்கே எழுதப்பட்டுள்ளமையால், இவ்வசனத்தில் "நம்முடைய பிதாக்கள்" என்பது யூதர்களின் பிதாக்களான பழைய ஏற்பாட்டுக்கால பக்தர்களையே குறிக்கின்றது. தேவன் இவர்களோடு தீர்க்கதரிசிகள் மூலமாகப் பேசியுள்ளார். அதுவும் பங்கு பங்காகவும் (அதாவது பகுதி பகுதியாகவும்), வகைவகையாகவும் (அதாவது, வித்தியாசமான முறைகளிலும்) பேசியுள்ளார். அதாவது, பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தேவன் மக்களோடு பேசும்போது தம்மைப்பற்றிய சகல விஷயங்களையும் ஒரே நேரத்தில் முழுமையாக வெளிப்படுத்தாமல் படிப்படியாக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கொஞ்சம் கொஞ்சமாக, ஆனால், வித்தியாசமான முறைகளில் வெளிப்படுத்தினார். சில சந்தர்ப்பங்களில் அவர் நேரடியாக மக்களுக்குக் காட்சியளிப்பதன் மூலம் அல்லது தரிசனங்கள், கனவுகள் மூலம் பேசினார். (ஆதி 28:13, ஏசா 1:1, 6:1) சில வேளைகளில் தேவன் பேசும் சத்தத்தை மாத்திரம் மனிதர் கேட்டனர் (உபா 4:11-12, 4:15, 5:1-24) ஆனால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தீர்க்கதரிசிகளின் மூலமே தேவன் மனிதர்களோடு பேசினார். இவையனைத்தும் பழைய ஏற்பாட்டில் உள்ளன. ஆனால், இக்கடைசி காலத்தில் தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலம் தம்மை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளதோடு (யோவா 1:18, 14:9) அவர் மூலமாகவே நம்மோடு பேசியுள்ளார் (யோவ 12:49-50). இதுவே எபிரேயர் 1:1-2ல் நமக்கு அறியத்தரும் சத்தியமாகும்.
நாம் கடைசி காலத்தில் வாழ்வதனால், தற்காலத்தில் தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலமாகவே நம்மோடு பேசுகின்றார். எனினும், இது வேதாகமத்தின் மூலமாக நடைபெறும் பேச்சாகவே உள்ளது. ஏனெனில் பழைய ஏற்பாட்டுக் காலத்தில் தீர்க்கதரிசிகள் மூலமாகத் தேவன் பேசியவைகள் அனைத்தும் எழுத்துவடிவம் பெற்றுள்ளதைப்போலவே, அவர் இயேசுகிறிஸ்துவின் மூலமாகப் பேசியவைகள் அனைத்தும் புதிய ஏற்பாட்டில் எழுத்துவடிவம் பெற்ற புத்தகங்களாக உள்ளன. மேலும் எபி 1:2ல் "இந்த கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் "திருவுளம்பற்றினார்" என்னும் வாக்கியத்தில் திருவுளம்பற்றினார்" என்பது மூலமொழியில் "தொடர்ச்சியாக நடைபெறுகின்ற பேச்சை" அல்ல, "ஒரு தரம் பேசி முடிக்கப்பட்ட விஷயத்தையே" குறிக்கின்றது. அதாவது, பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பல்வேறுவிதமான முறைகளில் வெளிப்படுத்தப்பட்டு வந்த மனிதருக்கான தேவனுடைய வார்த்தை, இயேசுகிறிஸ்துவில் முழுமையும் இறுதி நிலையையும் அடைந்தது. இதனால் இயேசுகிறிஸ்துவின் மூலம் பேசப்பட்ட விஷயங்கள், "பழைய ஏற்பாட்டுக்கால வெளிப்படுத்தலின் தொடர்ச்சியாகவும்" மனுக்குலத்திற்கான தேவனுடைய இறுதி வார்த்தையாகவும் "முழுமையான வெளிப்படுத்தலாகவும் உள்ளது".
தேவன் இயேசுகிறிஸ்துவின் மூலம் பேசியவைகள் அனைத்தும் புதிய ஏற்பாட்டில் உள்ளன. இயேசுகிறிஸ்து இவற்றைத் தம்முடைய அப்போஸ்தலர்களின் மூலம் எழுதியுள்ளார். இதற்காக அவர் தம்முடைய சீஷர்களில் பன்னிருவரைத் தெரிவுசெய்து அவர்களுக்கு "அப்போஸ்தலர்" என்று பெயரிட்டு (லூக் 6:13-16). அவர்களுக்குத் தம்முடைய அதிகாரத்தையும் கொடுத்ததோடு (மாற் 3:13-15, மத் 10:40, லூக் 10:16). அவர்களை எப்பொழுதும் தம்மோடு வைத்திருந்து அவர்களுக்குத் தெய்வீக காரியங்களை அறிவித்து வந்தார் (மாற் 4:10-11, மத் 13:11, அப் 1:3). மேலும், தாம் போதித்தவைகளைப் பிற்காலத்தில் அவர்களுக்கு நினைவூட்டுவதற்காகப் பரிசுத்த ஆவியானவரை அருள்வதாகவும் அவர்களுக்கு வாக்களித்தார் (யோவா 14:26). இது இயேசுகிறிஸ்துவினுடைய அப்போஸ்தலர்களுக்கு கொடுக்கப்பட்ட சிறப்பான ஒரு ஆசீர்வாதமாகும். இதனால்தான், இயேசுகிறிஸ்துவோடு இருந்த காலத்தில் அவருடைய போதனைகளை சரியான விதத்தில் புரிந்துகொள்ளாமலிருந்த அப்போஸ்தலர்கள் பிற்காலத்தில் அவற்றைச் பரிசுத்த ஆவியானவர் மூலமாக சரியான விதத்தில் புரிந்துக்கொண்டனர் (யோ 2:19-22, 12:16, 20:9). மேலும், இயேசுகிறிஸ்து தம்முடைய அப்போஸ்தலர்களுக்கு போதித்தவைகளைப் பிற்காலத்தில் பரிசுத்த அவர்களுக்கு நினைவூட்டியதினால் அவர்கள் அவற்றைப் புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களாக எழுதியுள்ளனர். புதிய ஏற்பாட்டில் அதிகளவு புத்தகங்களை எழுதியுள்ள பவுலும் இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலனாக, ஏறக்குறைய மூன்று வருஷகாலம் அவரோடு இருந்து (கலா 1:15-16), தேவ வெளிப்படுத்தல்களைப் பெற்றிருந்தார் (கலா 1:12, 1கொரி 11:23, 2:10, 2:12-13, எபே 3:2-3). புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களை எழுதியவர்களில் மாற்குவும், லூக்காவும் இயேசுகிறிஸ்துவின் அப்போஸ்தலர்களாக இராதபோதிலும், இவர்களில் மாற்கு அப்போஸ்தலனாகிய பேதுருவின் சீஷனாக இருந்ததினால் (1பேது 5:13), பேதுருவின் பிரசங்கங்களை ஆதாரமாகக் கொண்டே இவர் தன்னுடைய சுவிசேஷத்தை எழுதியுள்ளதை ஆதி சபைப் பிதாக்களின் குறிப்புகள் அறியத்தருகின்றன. லூக்காவின் ஆராய்ச்சி அப்போஸ்தலனாகிய பவுலிடமிருந்து அறிந்துக்கொண்ட விஷயங்களையே ஆதாரமாகக் கொண்டிருந்தது. புதிய ஏற்பாட்டுப் புத்தகங்களை எழுதிய ஏனைய நபர்களில் யூதாவும், யாக்கோபும் இயேசுகிறிஸ்துவின் சகோதர்களாகவும், ஏனையவர்கள் அவருடைய அப்போஸ்தலர்களாகவும் உள்ளனர். இதனால் புதிய ஏற்பாட்டிலுள்ள 27 புத்தகங்களும் இயேசுகிறிஸ்துவின் மூலமாக மனிதருக்கு அருளப்பட்ட தேவனுடைய வெளிப்படுத்தலாகவே உள்ளன.
மனிதருக்கான தேவனுடைய வெளிப்படுத்தல் இயேசுகிறிஸ்துவில் முழுமையும் முடிவும் அடைந்தன என்னும் சத்தியத்தை யோவான் 16:13ஐ முரண்படுத்துவதாக நமக்குத் தென்படலாம். ஏனெனில் இவ்வசனத்தில் இயேசுகிறிஸ்து "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" என்று தம் சீஷரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் இவ்வாக்குத்தத்தம், இயேசுகிறிஸ்துவில் முழுமையடையும் தேவனுடைய வெளிப்படுத்தலைப் புரியவைக்கும் செயலாக உள்ளதே தவிர, புதிய விஷயங்களை அறிமுகப்படுத்துவதைப் பற்றியதாக இல்லை. ஏனெனில் பரிசுத்த ஆவியானவரின் போதனை, ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை நினைவூட்டும் பணியாகவே இருக்கும் என்பதை யோவான் 14:26ல் இயேசுகிறிஸ்து தெரிவித்துள்ளார். இதனால்தான் "என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்" என்று யோவான் 14:26ல் அவர் வாக்களித்துள்ளார். இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்குப் போதித்த சகல காரியங்களையுமே இவ்வசனத்தில் அவர் "எல்லாவற்றையும்" என்று குறிப்பிட்டுள்ளார். இயேசுகிறிஸ்து போதித்தவற்றைச் சீஷர்கள் சரியாகப் புரிந்துக்கொள்ளாமல் இருந்ததினால் (யோவா 2:22, 12:16). பரிசுத்த ஆவியானவர் அவற்றை அவர்களுக்குப் போதிப்பார் என்று அவர் இவ்வசனத்தில் வாக்களித்துள்ளார். இங்கு "போதித்தல்" புதிய காரியங்களை அறிவிப்பதை அல்ல, இயேசுகிறிஸ்து ஏற்கனவே போதித்தவற்றை விளக்கிக்கூறுவதாகவே உள்ளது. உண்மையில் யோவான் 14:26ல் கூறியதையே இயேசுகிறிஸ்து யோவான் 16:13ல் மறுபடியுமாகத் தம் சீஷர்களுக்கு சுட்டிக்காட்டிள்ளார். அதாவது, இயேசுகிறிஸ்து இவ்வுலகில் மனிதனாக வாழ்ந்த காலத்தில் தம்முடைய சீஷர்களுக்குப் போதித்தவற்றையே, பிற்காலத்தில் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு விளக்கிக் கூறுவதாக அவர் தெரிவித்துள்ளார். தேவனைப் பற்றிய சகல காரியங்களையும் இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்தியிருந்ததினால் (யோவ 15:15) அதன் பின்னர் பரிசுத்த ஆவியானவர் புதிய காரியங்கள் எதையும் அறிவிக்கவேண்டியதாயிருக்கவில்லை.
இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுக்கு வெளிப்படுத்தியவைகளையே பிற்காலத்தில் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு நினைவூட்டினார் என்பதை யோவான் 16:13ல் சிறப்பான விதத்தில் அறியத்தருகின்றது. இவ்வசனத்தில் "சகல சத்தியத்திற்குள்ளும்" என்னும் சொற்பிரயோகம் மூலமொழியில் "புதிய காரியங்கள்" என்னும் அர்த்தத்தைத் தருவதில்லை. இயேசுகிறிஸ்துவே சத்தியமாக இருப்பதனால் (யோவ 14:6), பரிசுத்த ஆவியானவர் இதைவிட மேலதிகமாகப் புதிய சத்தியத்தை வெளிப்படுத்துவதில்லை. உண்மையில், "இயேசுகிறிஸ்துவில் இருக்கும் சத்தியம் (எபே 4:21) முழுமையாக விளக்கிக்கூறப்படுவதே சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தப்படுவதாக யோவான் 16:13ல் குறிப்பிடப்பட்டுள்ளது". அதாவது, "இயேசுகிறிஸ்துவினால் வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை முழுமையாகப் புரிந்துக்கொள்ளமுடியாமல் இருந்த சீஷர்களுக்குப் பரிசுத்த ஆவியானவர் அச்சத்தியத்தை விளக்கிக்கூறுவார் என்பதே சகல சத்தியத்திற்குள்ளும் நடத்தப்படுவதாக யோவன் 16:13ல் குறிப்பிடப்பட்டுள்ளது". இதனால்தான் பரிசுத்த ஆவியானவர் "தம்முடைய சுயமாய் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்" (யோவ 16:13-14) என்று இயேசுகிறிஸ்து தெரிவித்துள்ளார். இயேசுகிறிஸ்து இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளதுபோல "பரிசுத்தஆவியானவர் சுயமாகப் பேசுவதில்லை" என்பதனால் அவர் தன்னிச்சையாகப் புதிய போதனைகளை அறிமுகப்படுத்துவதில்லை. இயேசுகிறிஸ்துவினால் சீஷருக்கு வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தையே பரிசுத்த ஆவியானவர் போதிப்பார். இதனால்தான், "அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார்" என்று இயேசுகிறிஸ்து தெரிவித்துள்ளார். உண்மையில், பரிசுத்த ஆவியானவர் அறிவிக்கும் "சகல சத்தியங்களுக்கும் இயேசுகிறிஸ்து போதித்தவைகளாகவே உள்ளன". இவையனைத்தும் புதிய ஏற்பாட்டில் உள்ளன.
இயேசுகிறிஸ்துவினால் சீஷருக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளையே பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு அறிவிப்பார் என்றே யோவான் 14:26,16:13-14 என்னும் வசனங்கள் கூறினாலும், அவர் "வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்" என்னும் வாக்கியம், பரிசுத்த ஆவியானவர் புதிய விஷயங்களையும் வெளிப்படுத்துவார் என்னும் எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தலாம். ஆனால், இவ்வாக்கியத்தில் இயேசுகிறிஸ்து சொல்லமுற்படும் விஷயத்தை நாம் விளங்கிக் கொள்வதற்கு, இதற்கு முன் உள்ள வசனத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ள காரியத்தை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் "சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்" என்று இயேசுகிறிஸ்து கூறுவதற்கு முன்பு, "இன்னும் அநேகங் காரியங்களை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதாயிருக்கிறது. அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்" (யோவா 16:12) என்று அவர்களுக்குச் சுட்டிக்காட்டியுள்ளார். "யோவான் 13 முதல் 16 வரையிலான அதிகாரங்கள், சிலுவை மரணத்திற்கு முன்பு இயேசுகிறிஸ்து தம்முடைய சீஷர்களுடன் உரையாடிய வார்த்தைகளாக இருப்பதனால், தமக்கு நேரிடப்போகும் பாடுகளினதும் மரணத்தினதும் கொடூரத்தையே சீஷர்களினால் தாங்கிக் கொள்ள முடியாத காரியங்களாக அவர் யோவான் 16:12ல் குறிப்பிட்டுள்ளார்". யோவான் 13:19,14:29-30, 16:4ல் அவர் தம்முடைய மரணத்தைப்பற்றிய ஒரு சில விஷயங்களை அவர்களுக்கு அறிவித்திருந்தபோதிலும், அதற்குமேல் எதையும் அவர்களால் தாங்கிக் கொள்ளமுடியாது என்பதை அறிந்திருந்தார். இதனால் தமக்கு நேரிடவிருக்கும் பாடுகள், மரணம், உயிர்தெழுதல் என்பவற்றின் அவசியத்தையும் இவற்றின் சிறப்பம்சங்களையும் அவர் சீஷர்களுக்கு விபரமாக விளக்கிச் சொல்லவில்லை. இவற்றைப் பரிசுத்த ஆவியானவர் அவர்களுக்கு விளக்கிக்கூறுவார் என்று இயேசுகிறிஸ்து தெரிவித்துள்ளார். இயேசுகிறிஸ்து இவ்வுலகில் மனிதனாக வாழ்ந்த காலத்தில் தம்முடைய மரணத்தைப்பற்றி கூறியவற்றைச் சீஷர்கள் புரிந்துக்கொள்ளவில்லை (யோவா 2:19-22). இதனால், இவற்றைப் பரிசுத்த ஆவியானவர் விளக்கமாகப் போதிப்பார் என்றே இயேசுகிறிஸ்து யோவான் 16:12-13ல் தெரிவித்துள்ளார். எனவே, பரிசுத்த ஆவியானவர் அறிவிக்கும் "வரப்போகிற காரியங்கள்" என்பது, எதிர்கால சம்பவங்களோ புதிய வெளிப்படுத்தல்களோ அல்ல. "அவை இயேசுகிறிஸ்துவினுடைய வாழ்வில் வரப்போகும் பாடுகள் மரணம் உயிர்த்தெழுதல் என்பவற்றையும் அவற்றின் சிறப்பம்சங்களையுமே குறிக்கின்றன". இதனால்தான், பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற பின்பே சீஷர்கள் இயேசுகிறிஸ்து தம்முடைய பாடுகளையும், மரணத்தையும் உயிர்த்தெழுதலையும்பற்றி கூறியவற்றைப் புரிந்துக்கொண்டனர் (யோவ 2:22, 12:16).
4. வேதாகமத்தின் மூலமே தேவன் பேசுகிறார்:
மனிதருக்கான தேவனுடைய வெளிப்படுத்தல் இயேசுகிறிஸ்துவில் முழுமையும் முடிவும் அடைந்ததினாலும், இவ்வெளிப்படுத்தல் அவருடைய வார்த்தையான வேதாகமத்தில் எழுதப்பட்டு இருப்பதனாலும், தற்காலத்தில் அவர் வேதாகமத்தின் மூலமே நம்மோடு பேசுகிறவராக இருக்கின்றார். இச்சத்தியத்தை வேதாகம சரித்திரம் சிறப்பான விதத்தில் நமக்கு அறியத்தருகின்றது. இஸ்ரவேல் ஜனங்களோடு பேசுவதற்காக நாற்பது வருஷங்களாக மோசேயோடு நேரடியாகப் பேசி வந்த தேவன், அதன் பின்னர் யோசுவாவோடும் நேரடியாகப் பேசியது உண்மை என்றாலும், மோசேயுடன் நேரடியாகப் பேசிய அளவிற்குத் தேவன் யோசுவாவோடு நேரடியாகப் பேசவில்லை. ஏனெனில், தேவன் மோசேயோடு நேரடியாகப் பேசியவைகள் அனைத்தும் நியாயப்பிரமாணப் புத்தகமாக (அதாவது, பழைய ஏற்பாட்டின் முதல் 5 புத்தகங்கள்) எழுதப்பட்டிருந்ததேயாகும். இதனால், மோசேயின் மரணத்தின் பின்னர் யோசுவாவை இஸ்ரவேல் மக்களின் தலைவனாக்கிய தேவன் (யோசு 1:1-2). "நான் மோசேயோடே இருந்ததுபோல, உன்னோடும் இருப்பேன். நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னை கைவிடுவது மில்லை" (யோசு 1:5) என்று யோசுவாவுக்கு வாக்களித்ததோடு, மோசேயினால் எழுதப்பட்ட நியாயப்பிரமாணப் புத்தகத்தின்படி வாழும்படி அறிவுறுத்தினார். இதனால்தான், யோசுவா 1:7-9ல் தேவன் பின்வருமாறு யோசுவாவிடம் கூறினார்.
என் தாசனாகிய மோசே உனக்குத் கற்பித்த நியாயப்பிரமாணத்தின்படியெல்லாம் செய்யக் கவனமாயிருக்கமாத்திரம் மிகவும் பலங்கொண்டு திடமனதாயிரு. நீ போகும் இடமெல்லாம் புத்திமானாய் நடந்துக்கொள்ளும்படிக்கு, அதைவிட்டு வலது இடதுபுறம் விலகாதிருப்பாயாக. இந்த நியாயப் பிரமாண புத்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய், அப்பொழுது புத்திமானாயும் நடந்துக்கொள்ளுவாய். நான் உனக்குக் கட்டளையிடவில்லையா? பலங்கொண்டு திடமனதாயிரு. திகையாதே, கலங்காதே, நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார் (யோசு 1:7-9).
போகும் இடமெல்லாம் கூடவே இருப்பதாக வாக்களித்த தேவன், மோசேயோடு பேசிய விதமாகவே உன்னோடும் பேசுவேன் என்று யோசுவாவுக்கு கூறவில்லை. மாறாக, மோசேயினால் எழுதப்பட்ட புத்தகத்தைச் சுட்டிக்காட்டி "இந்த நியாயப்பிரமாண புத்தகம் உன் வாயை விட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக்கொண்டிருப்பாயாக" (யோசு 1:8) என்றே கூறினார். ஏனெனில், தேவன் மோசேயோடு பேசியவைகள் எழுதப்பட்ட புத்தகமாக இருந்ததினால், அவற்றை மறுபடியுமாக யோசுவாவோடு நேரடியாகப் பேசவேண்டியதாயிருக்கவில்லை. மேலதிகமாக தேவைப்படும் காரியங்களை மாத்திரமே தேவன் யோசுவாவோடு நேரடியாகப் பேசினார். இதைப்போலவே, வேதாகமத்தின் சகல புத்தகங்களும் எழுதப்பட்டு ஒன்றாகத் தொகுக்கப்படும் வரை பல்வேறு விதமான முறைகளில் மனிதர்களோடு நேரடியாகப் பேசிவந்த தேவன், அதன் பின்னர், எழுதப்பட்ட தம்முடைய வார்த்தையான வேதாகமத்தின் மூலமே மனிதரோடு பேசுகிறவராக இருக்கின்றார். எனவே, நமக்குத் தேவையான ஆலோசனைகளுக்காகவும், தேவ வழிநடத்துதலுக்காகவும் நாம் எங்கும், எவரிடமும் செல்லவேண்டியதில்லை. நமக்குத் தேவையான சகல ஆலோசனைகளும் அறிவுறுத்தல்களும் நம்மிடம் இருக்கும் வேதாகமத்திலேயே உள்ளன. இதனால் வேதாகமம் பின்வருமாறு கூறுகிறது:
நான் இன்று உனக்கு வித்திக்கிற கட்டளை உனக்கு மறைபொருளும் அல்ல, அது உனக்குத் தூரமானதும் அல்ல, நாங்கள் அதைக் கேட்டு, அதின்படி செய்யும்பொருட்டு, எங்கள் நிமித்தம் வானத்துக்கு ஏறி, அதை எங்களுக்குக் கொண்டுவருகிறவன் யாரென்று நீ சொல்லத்தக்கதாக, அது வானத்திலுள்ளதும் அல்ல, நாங்கள் அதைக்கேட்டு, அதின்படி செய்யும் பொருட்டு, எங்கள் நிமித்தம் சமுத்திரத்தைக் கடந்து, அதைக் கொண்டுவருகிறவன் யார் என்று நீ சொல்லத்தக்கதாக, அது சமுத்திரத்திற்கு அப்புறத்திலுள்ளதும் அல்ல. நீ அந்த வார்த்தையின்படியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது. (உபா 30: 11-14).
தேவன் தம்முடைய ஜனங்களுக்கு சமீபமாயிருப்பதை உபாகமம் 4:7-8ல் அறியத்தந்த மோசே, இவ்வசனங்களில், தேவனுடைய வார்த்தை மக்களுக்கு சமீபமாயிருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றார். எனினும், உபா 4:7-8ல் "தேவனுடைய வார்த்தை மக்களுக்கு சமீபமாயிருப்பதினாலேயே தேவனும் அவர்களுக்கு சமீபமாயிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது". அக்காலத்தில் மனிதர்கள் தேவனுடைய வார்த்தையை முழுமையாக மனனம் செய்யவேண்டியவர்களாயிருந்தனர் (உபா 6:6). இதனால் தேவனுடைய வார்த்தை அவர்களுக்கு மிகவும் சமீபமாய் "அவர்களுடைய வாயிலும் இருதயத்திலும் இருப்பதாக" 14ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 11ம் வசனத்தில் "கட்டளை" என்பது தேவனால் கொடுக்கப்பட்ட சகல அறிவுறுத்தல்களையும் குறிக்கின்றது. அக்காலத்தில் வேதாகமத்தின் முதல் ஐந்து புத்தகங்கள் மாத்திரமே இருந்தபோதிலும், தற்பொழுது நம்மிடம் மனிதருக்கு அவசியமான தேவனுடைய சகல அறிவுறுத்தல்களையும் கொண்ட முழுமையான வேதாகமம் நம்முடைய சொந்த மொழியிலேயே உள்ளது.
தேவனுடைய அறிவுறுத்தல்களும் ஆலோசனைகளும் மறைப்பொருளாக இல்லாமல், வேதாகமத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், நமக்கு அவசியமான தேவ செய்தியைப் பெற்றுக்கொள்வதற்கு எவரும் பரலோகத்துக்குச் சென்று அதை நமக்காக எடுத்துக்கொண்டு வரவேண்டியதில்லை என்பதைப் 12ம் வசனம் சுட்டிக்காட்டுகிறது. இதேபோல சமுத்திரத்தைக் கடந்து சென்று இன்னுமொரு நாட்டிலிருந்து அச்செய்தியை எவரும் கொண்டுவரவேண்டியதுமில்லை என்பதை 13ம் வசனம் அறியத்தருகின்றது. ஆனால் தற்காலத்தில், கிறிஸ்தவர்கள் தங்களுக்கான தேவ செய்திக்காகப் பரலோகத்திற்கு சென்று வருவதாகக் கூறுபவர்கள், அல்லது வேறு நாட்டிலிருந்து வருகிறவர்கள், இல்லையென்றால் மரித்தோரிலிருந்து வருகிறவர்கள் யாராவது இருக்கின்றனரா என்று தேடியலைகின்றனர். ஆனால் தேவ ஆலோசனைக்கு இத்தகைய மனிதர்கள் எவரும் தேவையில்லை என்றே உபா 30:11-14 கூறுகிறது. "தேவனுடைய வார்த்தையைத் தேடி நாம் எங்கும் அலைந்து திரியவேண்டியதில்லை". "கடும்முயற்சியும், புனித யாத்திரைகளும் இதற்கு அவசியமில்லை". "சிறப்பான வரம் பெற்றவர்களினால்தான் தேவனுடைய வார்த்தையை நமக்குப் பெற்றுத்தரமுடியும் என்று அவர்களிடம் செல்லவேண்டிய அவசியமும் இல்லை". ஏனெனில், தேவனுடைய வார்த்தை அவர் அருளிய வேதாமகத்திலேயே உள்ளது. இதை நாம் அனுதினமும் வாசித்துவந்தால். நம்முடைய வாழ்வுக்கான தேவனுடைய வழிநடத்துதலும் ஆலோசனையும் எப்பொழுதும் நமக்கு கிடைக்கும். நம்முடைய வாழ்வும் ஆசீர்வாதமானதாய் இருக்கும். "தேவன் தம்முடைய வார்த்தையை வேதாகமத்தில் நமக்குக் கொடுத்துள்ளதினால் தேவனுடைய வார்த்தையைப் பெறுவதற்காக நாம் எதுவும் செய்யத்தேவையில்லை. வேதாகமத்தை அன்றாடம் வாசித்து அதன்படி வாழ்வதே நாம் செய்யவேண்டிய ஒரேயொரு காரியமாக உள்ளது".
ஆவிக்குரிய ஆலோசனைகளுக்கும் தேவனுடைய வழிநடத்துதலுக்கும் நம்மிடமிருக்கும் வேதாகமம் போதுமானதாக உள்ளது. மரித்தோரின் ஆவிகள் நமக்கு எவ்வித ஆலோசனையும் கொடுப்பதில்லை என்பதனால், மரித்தோரை வழிகாட்டும் தெய்வங்களாகக் கருதுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. மேலும், பிசாசுகளே மரித்தோரைப்போல வேஷமிட்டு மக்களை வஞ்சித்து வருவதனால், மரித்தோரிடம் ஆலோசனைக்காகச் செல்பவர்கள் தவறான வழிகளிலேயே செல்கின்றனர். தேவன் நமக்கு அவசியமான சகல அறிவுறுத்தல்களையும் வேதாகமத்தில் கொடுத்துள்ளதினாலும், தற்காலத்தில் தேவன் வேதாக மத்தின் மூலமே நம்மோடு பேசுவதனாலும், நாம் ஆவிக்குரிய ஆலோசனைகளுக்காக வேதாகமத்தையே ஆராய்ந்து பார்க்கவேண்டும். உண்மையில் நாம் வேதாகமத்தைத் திறக்கும்போது, தேவனும் நம்முடன் பேசுவதற்காகத் தம்முடைய வாயைத் திறக்கின்றார். ஏனெனில், வேதாகமத்தின் இரு ஏற்பாடுகளுமே அவர் நம்மோடு பேசுவதற்காக உபயோகிக்கும் அவருடைய உதடுகளாயுள்ளன.
மரித்தோரின் ஆவிகளினால் மனிதர்களோடு தொடர்புக்கொண்டு அவர்களுக்கு ஆலோசனையளிக்க முடியும் என்னும் தவறான உபதேசத்திற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டப்படும் வேதப்பகுதி 1சாமுவேல் 28:3-25 ஆகும். இவ்வசனங்களில், இஸ்ரவேல் ராட்சியத்தின் முதலாவது அரசனான சவுல் என்பவனோடு மரித்துப்போன தீர்க்கதரிசியாகிய சாமுவேலின் ஆவி பேசியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மரித்தோரின் ஆவிகளினால் உயிரோடிருக்கும் மனிதருக்கு ஆவிக்குரிய ஆலோசனையும், வழிநடத்துதலும் கொடுக்கமுடியும் என்று சிலர் வாதிடுகின்றனர். மரித்தோரின் ஆவிகளினால் மறுபடியும் இவ்வுலகத்திற்கு வரமுடியாது என்னும் வேதாகமப் போதனையை முரண்படுத்தும் விதத்தில் இச்சம்பவம் இருப்பதாகப் பலர் எண்ணுவது வழக்கம். வேதாகமத்தில் இதற்கு ஒப்பான அல்லது இதைப்போன்ற வேறு சம்பவங்கள் எதுவும் இல்லை. மேலும் இது தெளிவற்ற ஒரு பகுதியாக, வாசிப்பவருக்குப் பல குழப்பங்களை ஏற்படுத்தும் விதத்தில் உள்ளது. உதாரணத்திற்கு, தன்னிடம் வந்திருப்பது சவுல் என்பதை அஞ்சனம் பார்க்கும் பெண் எப்படி அறிந்துக்கொண்டாள் என்பது இவ்வசனங்களில் சரியான விதத்தில் குறிப்பிடப்படவில்லை. அதேபோல, அஞ்சனம் பார்க்கும் பெண் உண்மையிலேயே மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்புக்கொண்டாளா? என்பதையும் இச்சம்பவம் அறியத்தரவில்லை. இதனால் இச்சம்பவம் கிறிஸ்தவ உலகில் அதிக சர்ச்சைக்குரிய ஒரு பகுதியாக உள்ளது.
எனவே, மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா என்பதை அறிந்து கொள்வதற்கு இச்சம்பவத்தை இவ்வாத்தியாயத்தில் ஆராய்ந்துப்பார்ப்போம். இதற்கு வேதாகம சம்பவங்களை வியாக்கியானம் செய்யவேண்டிய முறையை நாம் முதலில் அறிந்திருக்கவேண்டியது மிக அவசியம்.
1. வேதாகம சம்பவங்களின் வியாக்கியானம்:
வேதாகத்திலுள்ள சம்பவங்களை, வேதாகம உபதேசங்களை அடிப்படையாகக்கொண்டே வியாக்கியானம் செய்யவேண்டும் என்பதை நாம் முதலில் அறிந்திருக்கவேண்டும். இந்நூலின் முதலாம் அத்தியாயத்தில் நாம் பார்த்த விதமாக, மரித்தோரின் ஆவிகள் மறுபடியும் இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்றும், பிசாசின் ஆவிகளே இவ்வுலகில் உலாவுகின்றன என்றும், இவைகளே மரித்தோரைப்போல காட்சியளிக்கின்றன என்றும் வேதாகமம் கூறுவதனால், மரித்த சாமுவேலின் ஆவி சவுலிடம் வந்திருக்க முடியாது. உண்மையில் சாமுவேலைப்போல தோற்றமளித்த பிசாசின் ஆவியே சவுலோடு பேசியது. பிசாசு ஒளியின் தூதனுடைய வேஷம் தரித்து வருவதாக வேதாகமம் கூறுவதனால் (2கொரி 11:14). அவனால் மரித்த மனிதர்களைப்போலத் தோற்றமளிக்கவும், மரித்தவர்களின் ஆவிகள் பேசுவதுபோல பேசவும் முடியும். மேலும், நாம் ஏற்கனவே முதலாம் அத்தியாயத்தில் பார்த்தப்படி 1சாமுவேல் 28:7ல் "அஞ்சனம் பார்க்கும் ஸ்திரீ" என்பது மூலமொழியில் "குறிசொல்லும் பிசாசையுடைய பெண்" என்றே உள்ளது. இப்பெண் பிசாசுகளுடன் தொடர்புக்கொள்ள கூடியவளாக இருந்தாளே தவிர, மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்புக்கொள்ளக்கூடிய ஆற்றலும், தகுதியும் இவளுக்கு இருக்கவில்லை. இதனால் பிசாசின் ஆவியே இப்பெண்ணுடைய அஞ்சனம் பார்க்கும் செயலின் மூலம் சாமுவேலின் தோற்றத்தில் வந்துள்ளது. இதை அறியாத சவுல், உண்மையிலேயே மரித்த சாமுவேலின் ஆவி வந்துள்ளதாக எண்ணினான். மேலும் அஞ்சனம் பார்க்கும் பெண் கொண்டுவந்த ஆவியை சவுல் தன் கண்களினால் பார்க்கவில்லை. அப்பெண் கூறியவற்றை ஆதாரமாகக் கொண்டே வந்திருப்பது சாமுவேலின் ஆவி என்று அவன் எண்ணினான் (1சாமு 28:13-14). அவன் ஆவி பேசியதை மாத்திரமே கேட்டான். ஆவியை நேரடியாகக் காணவில்லை. அதேபோல சவுல் ஆவியோடு நேரடியாகப் பேசவுமில்லை. அஞ்சனம் பார்க்கும் பெண்ணூடாகவே பேசினான். ஏனெனில் அஞ்சனம் பார்ப்பவர்கள் கொண்டுவரும் ஆவிகளுடன் மனிதரால் நேரடியாகப் பேசமுடியாது. இதனால், சவுல் பிசாசின் ஆவியுடன் பேசும்போது சாமுவேலிடம் பேசுவதாகவே நினைத்துப் பேசினான். இதைப்பற்றி 13ம் 14ம் வசனங்களில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ராஜா அவளைப் பார்த்து: நீ பயப்படாதே, நீ காண்கிறது என்ன என்று கேட்டான். அதற்கு அந்த ஸ்திரீ: தேவர்கள் பூமிக்குள்ளிலிருந்து ஏறி வருகிறதைக் காண்கிறேன் என்று சவுலுக்குச் சொன்னாள். அவருடைய ரூபம் என்ன என்று அவளைக் கேட்டான். அதற்கு அவள்: சால்வையைப் போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகிறான் என்றாள். அதினாலே சவுல் அவன் சாமுவேல் என்று அறிந்துக்கொண்டு, தரை மட்டும் முகங்குனிந்து வணங்கினான் (1சாமு 28:13-14).
"நீ காண்கிறது என்ன?" என்னும் கேள்விக்கு, "தேவர்கள் பூமிக்குள்ளிலிருந்து ஏறி வருகிறார்கள்" என்றும், "அவருடைய ரூபம் என்ன? என்னும் கேள்விக்கு, சால்வையைப்போர்த்துக்கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன்" என்றும் கொடுக்கப்பட்ட பதிலை அடிப்படையாகக் கொண்டே சாமுவேலின் ஆவி வந்துள்ளது என்று எண்ணி, அதனோடு சவுல் பேசினான். இதனால், சவுலோடு சென்ற இருவருக்கும் (1சாமு 28:8) அவன் சாமுவேலோடு பேசுவதாகவே தென்பட்டது. இதனாலேயே 1சாமுவேல் 28ம் அதிகாரத்தில் ஆவி பேசும்போது சாமுவேல் பேசுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1சாமுவேல் 28ம் அதிகாரத்தை வாசிக்கும்போது, மரித்துப்போன சாமுவேலே சவுலோடு பேசியதாக நமக்குத் தென்பட்டாலும், மரித்தோரின் ஆவிகள் மறுபடியும் இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்று வேதாகமம் கூறுவதனால், மரித்த சாமுவேலின் ஆவியினால் சவுலிடம் பேசியிருக்கமுடியாது. பழைய ஏற்பாட்டின் சரித்திரப் புத்தகங்கள், குறிப்பாக அரசர்களின் வாழ்க்கை வரலாற்றை அறியத்தரும் சாமுவேல் ராஜாக்கள், நாளாகமம் என்னும் புத்தகங்கள், ஏற்கனவே எழுதப்பட்டிருந்த சரித்திரப் குறிப்புகளையும் நூல்களையும் ஆதாரமாகக்கொண்டு எழுதப்பட்டவைகளாகும். இதனால்தான், நாளாகமப் புத்தகத்தை எழுதியவர், தான் உபயோகித்த சரித்திரப் புத்தகங்களின் விபரங்களைப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். உதாரணத்திற்கு தாவீதின் கால சரித்திரத்தை எழுதிமுடிக்கும்போது, தாவீதைப் பற்றிய முழுமையான சரித்திரம் எப்புத்தகங்களில் உள்ளன என்பதை 1நாளாகமம் 29:29-30ல் அறியத்தந்துள்ளார். இதைப்போல, ஏனைய அரசர்களின் வாழ்க்கை வரலாறுகள் எங்கிருந்து எடுக்கப்பட்டன என்பதை அறியத்தரும் பல குறிப்புகள் நாளாகமப் புத்தகத்தில் உள்ளன. (1நாளா 9:1, 2நாளா 9:29,12:15,13:22,16:11,20:34,32:32,33:18-19,35:27).சாமுவேலின் புத்தகத்தில் இத்தகைய ஒரு குறிப்பு மாத்திரமே உள்ளபோதிலும் (2சாமு 1:18), இப்புத்தகத்தை எழுதியவர் ஏற்கனவே எழுதப்பட்ட சரித்திரக் குறிப்புகளை உபயோகித்துள்ளார் என்பதை மறுப்பதற்கில்லை.
தாவீதினுடைய மகன் சாலொமோனுடைய காலத்திற்கும் பின்பே சாமுவேலின் புத்தகம் எழுதப்பட்டுள்ளமையால், ஏறக்குறைய 100 வருஷத்திற்கும் முற்பட்ட சரித்திரத்தை ஏற்கனவே எழுதப்பட்ட சரித்திரப் புத்தகங்களை ஆதாரமாகக் கொண்டே எழுதியிருக்க முடியும். வேதாகமம் தேவனுடைய ஆவியினால் ஏவப்பட்டு எழுதப்பட்ட புத்தகம் என்பது உண்மை என்றாலும், சில சந்தர்ப்பங்களில் (குறிப்பாக சரித்திரப் புத்தகங்களில்) ஆவியின் ஏவுதல் ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகங்களை உபயோகிப்பதையும் உள்ளடக்கியுள்ளது. புதிய ஏற்பாட்டில் லூக்காவின் சுவிசேஷமும் இவ்வாறே எழுதப்பட்டுள்ளது. (லூக் 1:1-4). இதனால் சவுலும், அவனோடு அஞ்சனம் பார்க்கும் பெண்ணிடம் சென்ற இருவரும் மாத்திரம் அறிந்திருந்த விஷயம், அவர்களுடைய அனுபவத்தின்படி சாமுவேலின் ஆவி பேசியதாக எழுதப்பட்டிருந்த சரித்திரக் குறிப்பை ஆதாரமாகக் கொண்டே 1சாமுவேல் 28ம் அதிகாரம் எழுதப்பட்டுள்ளது. இதனாலேயே சாமுவேலின் ஆவி சவுலுடன் பேசியதாக இவ்வதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கானானிய மார்க்கத்தின் செல்வாக்கு காரணமாக, அஞ்சனம் பார்ப்பவர்களினால் மரித்தோரின் ஆவிகளைக் கொண்டு வரமுடியும் என்று அக்காலத்தில் இஸ்ரவேல் மக்களும நம்பியதினால், அவர்களுடைய சரித்திரக் குறிப்புகளில் இச்சம்பவம் சாமுவேலின் ஆவி வந்தாகவே எழுதப்பட்டுள்ளது. இத்தகைய குறிப்புகளை ஆதாரமாகக் கொண்டே 1சாமுவேல் 28ம் அதிகாரம் எழுதப்பட்டுள்ளது. இதனால், வேதாகமத்தின் உபதேசப் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டே சரித்திரப்பகுதிகளை வியாக்கியானம் செய்யவேண்டும் என்பதை நாம் ஒருபோதும் மறக்கலாகாது.
2. வேதாகம சத்தியத்தின் விளக்கம்:
தற்காலத்தில் சில வேத ஆராய்ச்சியாளர்கள், தேவன் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மாத்திரம், மரித்த சாமுவேலின் ஆவியை சவுலோடு பேசுவதற்காகக் கொண்டுவந்தார் என்று எண்ணுகின்றனர். எனினும், இது யூதமதப் போதகர்களின் விளக்கமாகவே உள்ளது. ஆனால் இது வேதாகமம் போதிக்கும் சத்தியம் அல்ல. மரித்தோரிடம் ஆலோசனை கேட்கச்சென்ற சவுலுக்குத் தேவன் கோபத்தில் கொடுத்த பதிலாக இது இருப்பதாகவும் சிலர் கூறுகின்றனர். ஆனால் இந்த பாகத்தில் தேவன் சாமுவேலின் ஆவியைக் கொண்டுவந்தார் என்று 1சாமுவேல் 28ம் அதிகாரம் கூறவில்லை. அஞ்சனம் பார்க்கும் பெண்ணுடைய செயலின்மூலமே சாமுவேலைப்போல தோற்றமளித்த ஒரு ஆவி வந்தது (1சாமு 28:11-12). மேலும், தேவன் சாமுவேலின் ஆவியைக் கொண்டுவந்தார் என்று கூறுவது, தேவனுடைய தன்மையும், வேதாகம உபதேசத்தையும் முரண்படுத்தும் விளக்கமாகவே உள்ளது. தேவ வழிநடத்துதலைப் பெறுவதற்காக மரித்தவர்களிடம் விசாரிக்கும்முறையைத் தேவன் கடுமையாகக் கண்டித்துள்ளதோடு, இத்தகைய பழக்கத்தை முழுமையாகத் தடை செய்துள்ளார். "அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடவேண்டாம்" (லேவி 19:31) என்றும், "செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவர்கள் உங்களிடத்தில் இருக்கவேண்டாம்" (உபா 18:11) என்றும் கட்டளையிட்ட தேவன், இத்தகைய செயலுக்குத் தாம் எதிர்த்து நிற்பதாகத் தெரிவித்துள்ளதோடு (லேவி 20:6), இதில் ஈடுபடுகிறவர்களுக்கு மரணதண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் அறிவித்துள்ளார் (லேவி 19:27, யாத் 22:18), உண்மையில் அஞ்சனம் பார்ப்பதும் மரித்தவர்களிடத்தில் குறிகேட்பதும் தேவன் தடைசெய்துள்ள பாவங்களாகவே வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன (2இராஜ 21:6,2 நாளா 33:6). எனவே தேவன் தாம் வெறுக்கும் பாவமான ஒரு செயலின் மூலம் சாமுவேலின் ஆவியைச் சவுலோடு பேசவைத்தார் என்று தர்க்கிப்பது, தேவனே தாம் வெறுக்கும் பாவத்தைச் செய்துள்ளதாகக் கூறுவதாகவே உள்ளது. தாம் தடை செய்த காரியத்தைத் தாமே செய்யும் அளவுக்குத் தேவன் முரண்பாடானவர் அல்ல என்பதை நாம் மறக்கலாகாது. எனினும், தேவன் சகலத்தையும் தம்முடைய கட்டுப்பாட்டின்கீழ் வைத்திருப்பதனால், சவுலுக்கு என்ன செய்தி அச்சமயம் கொடுக்கப்படவேண்டுமோ, அதை மாத்திரம் பேசுவதற்குப் பிசாசுக்கு அனுமதி கொடுத்தார். தேவனுடைய அனுமதிக்கும் அப்பால் பிசாசினால் எதுவும் செய்யமுடியாது என்பதை யோபுவின் சரித்திரம் அறியத்தருகின்றது (யோபு 1:12). உண்மையில், இஸ்ரவேலைச் சபிக்கச் சென்ற பிலேயாமைத் தேவன் அவனுடைய விருப்பத்தின்படி பேசவிடாதிருந்ததைப்போலவே இங்கும் செய்துள்ளார்.
1சாமுவேல் 28:6ல், "சவுல் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்போது கர்த்தர் அவனுக்குச் சொப்பனங்களினாலாவது, ஊரீமினாலாவது, தீர்க்கதரிசிகளினாலாவது மறுவுத்தரவு அருளவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையில் "சொப்பனங்கள்", "ஊரீம்", "தீர்க்கதரிசிகள்" என்பனவே தேவன் அக்காலத்தில் மனிதர்களிடம் பேசுவதற்காக உபயோகித்து வந்த முறைகள் ஆகும். இவற்றினூடாகச் சவுலோடு பேச மறுத்த தேவன், அஞ்சனம் பார்க்கிற ஒரு பெண்ணுடைய செயலின் மூலம் மரித்துப்போன சாமுவேலை எழும்பிவரச் செய்து அவனோடு பேசினார் என்று கூறுவது அர்த்தமற்றது. உண்மையிலேயே தேவன் சவுலோடு பேச விரும்பியிருந்தால், அவன் அவரிடத்தில் விசாரித்தபோது அவனுக்கு பதிலளித்திருப்பார். சவுல் தேவனுடைய வார்த்தையைத் தேடியபோது மவுனமாயிருந்த தேவன், அவர் தடைசெய்துள்ள காரியத்தைச் செய்திருந்தபோதும் அதன் மூலம் அவனோடு பேசினார் என்று கூறுவது அர்த்தமற்றது. மேலும், ஆரம்பத்தில் தேவனுடைய கட்டளையின்படி அஞ்சனம் பார்க்கிற சூனியக்காரர்களைக் கொன்றுபோட்ட சவுல் (1சாமு 28:9), இப்பொழுது அஞ்சனம் பார்க்கும் ஒரு பெண்ணிடம் சென்றது, தான் தேவனுடைய கட்டளைக்கு விரோதமான ஒரு காரியத்தை அவன் செய்கிறான். ஆகவே அது அவன் செய்த ஒரு பாவமாகவே உள்ளது. எனவே, இத்தகைய காரியத்தில் தேவனுடைய செயல் இருப்பதாகக் கூறமுடியாது.
சாமுவேலின் ஆவியைத் தேவன் கொண்டுவந்தார் என்று கருதுபவர்களில் சிலர், இது அஞ்சனம் பார்க்கும் பெண்ணுடைய செயலின் மூலமாக வரவில்லை என்றும் வாதிடுகின்றனர். அதாவது, அஞ்சனம் பார்க்கும் பெண் தன்னுடைய செயலை முடிப்பதற்கும் முன்பே தேவன் சாமுவேலின் ஆவியைக் கொண்டுவந்துவிட்டார் என்று இவர்கள் கருதுகின்றனர். இதனால்தான், சாமுவேலின் ஆவியைக் கண்டபோது அப்பெண் அதிர்ச்சியடைந்தாள் என்று இவர்கள் கூறுகின்றனர். பிசாசின் ஆவியையுடைய பெண், அவ்வாவியின் மூலம் செய்பவற்றைக்கண்டு அதிர்ச்சியடையவேண்டியதில்லை என்பது உண்மை என்றாலும், இவர்கள் கூறுவதுபோல அப்பெண், தான் கொண்டுவந்த சாமுவேலைப்போல தோற்றமளித்த ஆவியைக்கண்டு அதிர்ச்சியடையவில்லை. நாம் ஏற்கனவே பார்த்தப்படி நம்முடைய வேதாகமங்களில் இப்பகுதி தெளிவற்றதாகவே உள்ளது. ஆனால் பழைய ஏற்பாட்டின் சில கிரேக்க மொழி பிரதிகளில் 12ம் வசனத்தில் "சாமுவேலைக்கண்ட மாத்திரத்தில்" என்பது "சவுலைக் கண்டமாத்திரத்தில்" என்று உள்ளது. உண்மையில், இதுவே மூலமொழியின் சரியான அர்த்தமாகவும் தெளிவற்ற இவ்வசனத்தைத் தெளிவுப்படுத்தும் மொழிபெயர்ப்பாகவும் உள்ளது. இல்லையென்றால் சாமுவேலின் ஆவியைப் பார்த்தவுடன் அப்பெண் தன்னிடம் வந்த மனிதன் சவுல் என்பதை அறிந்துக்கொண்டாள் என்று 12ம் வசனம் கூறுவதாகவே நாம் கருதவேண்டும். எனினும், இது எவ்வித அர்த்தமுமற்ற குழப்பமான வசனமாகவே இருக்கும். ஏனெனில், சாமுவேலின் ஆவியைப் பார்த்து சவுலை அடையாளம் காண்பது நடைமுறையில் சாத்தியப்படாது. ஆனால் "சவுல் வேஷம் மாறி வேறு வாஸ்திரம் தரித்தவனாய்" (1சாமு 28:8), அதாவது ராஜ வஸ்திரத்தை அணியாமல் வேறு ஆடைகளுடன் அஞ்சனம் பார்க்கும் பெண்ணிடம் சென்றதினால், ஆரம்பத்தில் அவன் யார் என்பதை அப்பெண்ணால் அறிந்துக்கொள்ள முடியவில்லை. ஆனால், அவள் அஞ்சனம் பார்க்கும் செயலை ஆரம்பித்தபோது, தனக்குள் இருக்கும் பிசாசுகளின் மூலம் தன்னிடத்தில் வந்திருப்பது சவுல் என்பதை அறிந்துக்கொண்டதோடு, அவன் தன்னைக் கொல்லுவதற்காகவே வந்திருக்கின்றான் என்று எண்ணி அதிர்ச்சியடைந்தாள். இதனால்தான், மாறுவேஷத்தில் அஞ்சனம் பார்க்க வந்த சவுலிடம் அப்பெண், "சவுல் அஞ்சனம் பார்க்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், தேசத்தில் இராதபடிக்கு நிர்மூலமாக்கின செய்தியை நீர் அறிவீரே. என்னைக் கொன்றுபோடும்படி நீர் என் பிராணனுக்குக் கண்ணி வைக்கிறது என்ன?" என்று கேட்டவள் (1சாமு 28:9) தன்னிடத்தில் வந்தவன் சவுல் என்பதை அறிந்தபோது அதிர்ச்சியடைந்தாள் (1சாமு 28:12). எனவே சாமுவேலின் ஆவியைத் தேவன் கொண்டுவரவுமில்லை. அதைக் கண்டு அப்பெண் அதிர்ச்சியடையவுமில்லை.
சவுலினுடைய மரணத்திற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக அவன் அஞ்சனம் பார்த்த செயல் இருப்பதை 1நாளாகமம் 10:13-14 அறியத்தருகின்றது. "அவன் கர்த்தருடைய வார்த்தையைக் கைக்கொள்ளாமலும், கர்த்தரைத் தேடாமலும், அஞ்சனம் பார்க்கிறவர்களிடத்திற்குச் சென்றதினால், கர்த்தர் அவனைக் கொன்றார்" என்று 1 நாளா 10:13-14ல் குறிப்பிடப்பட்டுள்ளது. நியாயப் பிரமாணத்தின்படி, அஞ்சனம் பார்ப்பது மரண தண்டனைக்குரிய பாவமாக உள்ளது (லேவி 20:6). இதனால், அஞ்சனம் பார்க்கச் சென்று 24 மணித்தியாலங்களுக்குள் சவுல் மரணமடைந்தான். அஞ்சனம் பார்க்கிறவர்களையெல்லாம் நாட்டைவிட்டு அகற்றும் பணியைச் செய்யவேண்டியவனாயிருந்த சவுலே அஞ்சனம் பார்க்கச் சென்றதினால் தேவன் அவனை இவ்விதமாகத் தண்டித்துள்ளார். எனவே, அஞ்சனம் பார்க்கும் பெண்ணின் செயலின் ஊடாகத் தேவன் சாமுவேலின் ஆவியைக் கொண்டு வந்திருந்திருந்தால் சவுல் அஞ்சனம் பார்க்கச் சென்றதற்காகத் தேவன் அவனைக் கொல்வது அர்த்தமற்ற செயலாக இருப்பது மட்டுமல்ல, இது தேவன் முரண்பாடுடையவர் என்பதற்கான ஆதாரமாகவும் இருக்கும். மக்கள் அஞ்சனம் பார்ப்பதையும் மரித்தவர்களின் ஆவிகளுடன் தொடர்புக்கொள்ள முற்படுவதையும் தேவன் பாவமான செயல்களாகக் கருதியதினாலேயே, இத்தகைய காரியத்தைச் செய்த சவுலை அவர் தண்டித்துள்ளார். எனவே, அஞ்சனம் பார்க்கும் செயலுக்கு உதவும் விதத்தில் தேவன் மரித்துப்போன சாமுவேலின் ஆவியைக் கொண்டு வந்தார் என்று கூறமுடியாது.
அஞ்சனம் பார்க்கும் பெண் கொண்டுவந்த ஆவி சாமுவேலைப்போல பேசியதினாலும், அந்த ஆவி கூறியவைகள் அடுத்த நாள் சவுலின் வாழ்வில் நடைபெற்றதினாலும் சாமுவேலின் ஆவியே வந்திருக்கவேண்டும் என்று சிலர் கருதுகின்றனர். ஆனால் ஒளியின் தூதனைப்போல வேஷமிட்டு மக்களை ஏமாற்றும் பிசாசினால் சாமுவேலைப்போல தோற்றமளித்து அவனைப்போல பேசமுடியாது என்று இவர்கள் எண்ணுவது அர்த்தமற்றது. பிசாசின் ஆவிகள் மனிதரை வஞ்சிப்பவைகளாய் இருப்பதனால், மரித்த சாமுவேலின் ஆவியே வந்துள்ளது என்னும் எண்ணம் சவுலுக்கு ஏற்படும் விதத்தில் பிசாசின் ஆவி பேசியது. மனிதர்கள் உயிருடன் இருக்கும்போது அவர்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதைப் பிசாசுகள் அறிந்திருப்பதனால், அவர்களுடைய மரணத்தின் பின்னர் அவர்களைப்போல பிசாசுகளினால் நடிக்கக் கூடியதாயுள்ளது. இதனாலேயே அஞ்சனம் பார்க்கும் பெண் கொண்டு வந்த ஆவி சாமுவேலைப்போல தோற்றமளித்தது. மேலும், அஞ்சனம் பார்க்கிறவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கப்படும் என்பதை வேதாகமத்தின் மூலமும் (லேவி 20:6) சவுலுக்கு என்ன நடக்கும் என்பதை சாமுவேல் உயிரோடிருந்த போது முன்னிறிவித்த தீர்க்கதரிசனத்தின் மூலமும் அறிந்திருந்த பிசாசு, தேவக்கட்டளையை மீறி அஞ்சனம் பார்க்கும் சவுலுக்கு அத்தண்டனை கிடைக்கும் என்பதை அறிவித்தது. உண்மையில், சாமுவேல் உயிரோடிருந்தபோது கூறியவற்றையே இச்சம்பவத்தில் அஞ்சனம் பார்க்கும் பெண் கொண்டுவந்த ஆவி சவுலுடன் பேசியுள்ளது. மேலும், பிசாசின் ஆவிகள் எதிர்காலத்தில் நடப்பவைகளை அறியும் அறிவுடையவைகளாகவே உள்ளன. இதனால், சவுலுக்கு என்ன நடக்கும் என்பதை பிசாசின் ஆவியினால் கூறக்கூடியதாயிருந்தது. எனவே "அஞ்சனம் பார்க்கும் பெண் கொண்டுவந்த ஆவி, மறுநாளில் சவுல் மரணமடைவதை முன்னிறிவித்ததினால், சாமுவேலின் ஆவியே வந்திருக்கவேண்டும்" என்னும் தர்க்கம் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.
அஞ்சனம் பார்க்கும் பெண் கொண்டுவந்த ஆவி சாமுவேலினுடையது அல்ல என்பதை உறுதிப்படுத்தும் சில குறிப்புகளும் 1 சாமுவேல் 28ம் அதிகாரத்தில் உள்ளன. அஞ்சனம் பார்க்கும் பெண், "தேவர்கள் பூமிக்குள்ளிலிருந்து ஏறிவருவதைக்" (1சாமு 28:13) காண்பதாகவே கூறினாள். மரித்தோரின் ஆவிகளை வேதாகமம் தேவர்கள் என்று அழைப்பதில்லை. அஞ்சனம் பார்க்கும் செயல் பிசாசின் ஆவிகளினால் செய்யப்படுவதினால், அப்பெண், தனக்கு உதவிடும் பிசாசுகளைத் தேவர்கள் என்று குறிப்பிட்டுள்ளாள். மேலும், அப்பெண் குறிப்பிட்டுள்ள விதமாக மரித்தோரின் ஆவிகள் பூமிக்குள் இருப்பதில்லை. அவை தேவனிடம் செல்வதாகவே வேதாகமம் கூறுகிறது (பிர 12:7,3:21). எனவே, தேவனிடம் சென்ற சாமுவேலின் ஆவியை அஞ்சனம் பார்க்கும் பெண் "பூமிக்குள் இருந்து வருவதாகக்" கண்டிருக்க முடியாது. மேலும், அஞ்சனம் பார்க்கும் பெண் கண்ட உருவம், சாமுவேல் இவ்வுலகத்தில் வாழ்ந்தபோது இருந்த தோற்றத்திலேயே இருந்தது. "சால்வையைப் போர்த்திக் கொண்டிருக்கிற ஒரு முதிர்ந்த வயதான மனுஷன் எழும்பி வருகின்றான்" என்றே அப்பெண் கூறினாள் (1சாமு 28:14). எனவே இது பரலோகத்திலிருந்து வந்த சாமுவேலின் ஆவி அல்ல. சாமுவேல் பூமியில் வாழ்ந்தபோது எத்தகைய தோற்றத்தில் இருந்தாரோ, அத்தகைய தோற்றத்தில் வந்த பிசாசின் ஆவியாகவே உள்ளது.
3. மறுரூபமலையில் மரித்தோரின் மகிமை:
மரித்தோரின் ஆவிகளினால் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரமுடியும் என்று கூறுபவர்கள் சுட்டிக்காட்டும் இன்னுமொரு வேதப்பகுதி, மறுரூபமலையில் மோசேயும் எலியாவும் இயேசுகிறிஸ்துவுடன் காட்சியளித்த சம்பவமாகும் (மத் 17:1-9, மாற் 9:2-8, லூக் 9:28-36). ஆனால் இது மரித்தோரின் ஆவிகள் பூமிக்கு வந்த சம்பவம் அல்ல. ஏனெனில், எதிர்காலத்தில் வரவிருக்கும் பரலோக ராஜ்யத்தின் மகிமையான நிலையை இயேசுகிறிஸ்து தம் சீஷருக்குக் காண்பித்த சிறப்பான ஒரு நிகழ்வாகவே மறுரூபமலைச் சம்பவம் உள்ளது. அதாவது, பரலோக ராஜ்யத்தில் இயேசுகிறிஸ்துவுடன் நாம் எப்படி இருப்போம் என்பதை அறியத்தருவதற்காக மறுரூபமலையில் இயேசுகிறிஸ்து மகிமையடைந்தவராகக் காட்சியளித்ததோடு, பரலோகத்திலிருக்கும் இருவரோடு அவர் பேசுகிறவராகவும் காணப்பட்டார். இதனால்தான் இச்சம்பவமானது, "இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்". (மத் 16:28, மாற் 9:1, லூக் 9:27) என்னும் இயேசுகிறிஸ்துவின் அறிவிப்பைத் தொடர்ந்து நடைபெற்றுள்ளது. இயேசுகிறிஸ்துவின் இக்கூற்றுக்கும் அவர் மறுரூபமாகியதற்கும் இடையில் இருக்கும் தொடர்பை நமக்கு அறியத்தருவதற்காகவே, "அவர் இவ்வாறு கூறி ஆறு நாளைக்குப் பின்னர் இச்சம்பவம் நடைபெற்றாகச் சுவிசேஷப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது" (மத் 17:1, மாற்கு, லூக் 9:28).
உண்மையில், இயேசுகிறிஸ்து தம்முடைய ராஜ்யத்தில் வரும்போது எப்படி இருப்பார் என்பதை மறுரூபமலையில் அவருடைய மூன்று சீஷர்கள் கண்டனர். அவர் தம்முடைய பன்னிரு சீஷருக்கும் கூறிய விதமாக, அதாவது அவர் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன் அவருடைய சீஷர்களில் சிலர் மரிப்பதில்லை என்று கூறியவிதமாக, அவருடைய சீஷர்களில் மூவர் மரிப்பதற்கும் முன்னர் இயேசுகிறிஸ்து தம்முடைய ராஜ்யத்தில் எவ்வாறு வருவார் என்பதை மறுரூபமலையில் கண்டனர். எனவே, மறுரூபமலை சம்பவத்தை மரித்தோரின் ஆவிகள் பூமிக்கு வருவதற்கு ஆதாரமாக எடுக்கமுடியாது. மறுரூபமலையில் மரித்த மோசேயும், எலியாவும் காட்சியளித்தது உண்மை என்றாலும், இவர்கள் மனிதர்களோடு தொடர்பு கொள்ளவில்லை. இவர்கள் இயேசுகிறிஸ்துவிடமே பேசிக்கொண்டிருந்தார்கள். உண்மையில் மரித்தோரின் ஆவிகள் இவ்வுலகத்திற்கு வந்ததைப்பற்றி வேதாகமத்தில் எவ்வித சம்பவமும் இல்லை. இது நடைமுறையில் சாத்தியப்படாது என்றே வேதாகமம் கூறுகிறது.
(தொடரும்...)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்கமுடியுமா என்பதை அறிந்து கொள்வதற்கு, மரணத்தின் பின்னர் அவைகள் எங்கு செல்கின்றன என்பதை நாம் அறிந்திருக்கவேண்டியது அவசியம். அப்பொழுது அவைகளினால் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வந்து மனிதரை ஆசீர்வதிக்கமுடியுமா இல்லையா என்பதை நம்மால் அறிந்துக்கொள்ளமுடியும். மரணத்தின் பின்னர் மனிதருடைய சரீரம் மண்ணில் அடக்கம் பண்ணப்படுகின்றது அல்லது எரிக்கப்படுகின்றது. வேதாகம காலத்தில் மரித்தோரின் சரீரங்கள் அடக்கம் பண்ணப்பட்டதினால் அவைகள் மண்ணுக்குச் செல்வதாக வேதாகம் கூறுகின்றது. உலகின் முதல் மனிதனுடைய மரணத்தைப்பற்றி தேவன் கூறும்போது "நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்" (ஆதி 3:19) என்று குறிப்பிட்டுள்ளார். இதைப்போலவே, பிரசங்கி 3:20ல் "எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது. எல்லாம் மண்ணிலே உண்டாகிறது. எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது" என்றும், சங்கீதம் 146:4ல் "அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்" என்றும் நாம் வாசிக்கிலாம்.
மரணத்தின் பின்னர் மண்ணுக்குச் செல்லும் சரீரம் அழிந்துபோனாலும் சரீரத்தைவிட்டுப் பிரிவடையும் ஆவி (சங் 146:4, பிர 12:7, யாக் 2:26) அழியாது என்றே வேதாகமம் கூறுகிறது. "ஆத்துமாவைக்கொல்ல வல்லவர்களாயிராமல் சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்" (மத் 10:28, லூக் 12:4-5) என்னும் இயேசுகிறிஸ்துவின் கூற்றில் "ஆத்துமா" என்னும் சொல் மரணத்தின் பின்பும் உயிரோடிருக்கும் மனிதனுடைய ஆவிக்குரிய பகுதியைக் குறிக்கின்றது. எனவே, மனிதனுடைய ஆவிக்குரிய பகுதி அழியாது என்பதை இயேசுகிறிஸ்து இவ்வசனத்தில் அறியத்தந்துள்ளார். மனிதனில் "சடப்பொருள் பகுதி" "ஆவிக்குரிய பகுதி" என்னும் இரண்டு பிரதான பகுதிகள் உள்ளன. தேவன் மனிதனை சிருஷ்டித்தபோது, மண்ணினால் அவனுடைய சரீரத்தைச் செய்து, அதற்கு தம்முடைய ஜீவசுவாசத்தைக் கொடுத்தார் (ஆதி 2:7). இதனால் மனிதன் சடப்பொருள் பகுதியையும், ஆவிக்குரிய பகுதியையும் உடையவனாக இருக்கின்றான். மனிதனின் சடப்பொருள் பகுதியில் மாம்சம், எலும்பு, இரத்தம் போன்றவை உள்ளன. ஆவிக்குரிய பகுதியில் மனிதனின் ஆவியும், ஆத்துமாவும் உள்ளன (1தெச 5:23) மனிதனின் சடப்பொருள் பகுதியான சரீரமும் ஆவிக்குரிய பகுதியும் பிரிவடைவதே மரணமாகும்.
மனிதன் மரிக்கும்போது, அவனுடைய பகுதியான ஆவியும், ஆத்துமாவும் சடப்பொருள் பகுதியான சரீரத்தை விட்டுச்செல்கின்றன (2 கொரி 5:8, பிலி 1:23) இதனால்தான் வேதாகமத்தின் சில பகுதிகளில் மரணத்தின்போது ஆத்துமா சரீரத்தைவிட்டு செல்வதாகவும், ஏனைய பகுதிகளில் ஆவி சரீரத்தைவிட்டுச் செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு மரணத்தின்போது ஆவி சரீரத்தைவிட்டுப் பிரிந்து செல்வதாகப் பிரசங்கி 12:7, சங் 146:6, யாக்கோபு 2:26 என்னும் வசனங்கள் கூறுகையில், ஆதியாகமம் 35:18, லூக்கா 12:20, அப்போஸ்தலர் 7:59 என்னும் வசனங்களில் ஆத்துமா பிரிவடைந்து செல்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைப்போலவே, மரித்த பிள்ளை உயிர்ப்பிக்கப்பட்டபோது, "பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பிவந்தது. அவன் பிழைத்தான்" என்று 1 இராஜா 17:22ல் கூறுகிறது.
மனிதனுடைய ஆவிக்குரிய பகுதியில் ஆவியும், ஆத்துமாவும் இருக்கின்ற போதிலும் இவை எப்பொழுதும் ஒன்றாகவே உள்ளன. இதனால்தான் வேதாகமத்தின் மனிதன் "சரீரமும் ஆவியும்" (1கொரி 5:5, 2கொரி 7:1) என்று அல்லது "சரீரமும், ஆத்துமாவும்" (1கொரி 7:34, மத் 10:28) என்று குறிப்பிடப்பட்டுள்ளான். இவ்வசனங்களில் "சரீரமும் ஆவியும்" முழுமனிதனையும் குறிப்பிடுவதுபோலவே "சரீரமும் ஆத்துமாவும்" முழுமனிதனையும் குறிக்கின்றது. இதைப்போலவே மரித்தவர்கள் ஆத்துமாக்களாக (வெளி 6:9) அல்லது "ஆவிகளாக" (1பேது 3:19) இருப்பதாக வேதாகமம் கூறுகிறது. மரணத்தின்பின் உயிருடனிருக்கும் மனிதனுடைய ஆவியையும் ஆத்துமாவையும் உள்ளடக்கிய ஆவிக்குரிய பகுதியைக் குறிப்பிட்ட "மரித்தோரின் ஆவி" என்னும் சொல் இந்நூலில் உபயோகிக்கப்பட்டுள்ளது. சரீர மரணத்தின்பின் இந்த ஆவிக்கு என்ன நடக்கின்றது என்று இவ்வத்தியாத்தில் ஆராய்ந்து பார்ப்போம்.
மனிதருடைய மரணத்தின் பின்னர் அவர்களுடைய ஆவி இவ்வுலகத்தைவிட்டுத் தேவனிடம் செல்வதாக வேதாகமம் கூறுகிறது. பழைய ஏற்பாட்டில் பிரசங்கியின் புத்தகத்தில் மரணத்தின்போது மனிதருடைய ஆவி "உயர ஏறுவதாகவும்" (பிர 3:21) "தேவனிடத்திற்குச் செல்வதாகவும்" (பிர 12:7) குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, சரீரத்தைப்போல அவைகள் மண்ணுக்குச் செல்லாமல், மேலே தேவனிடத்திற்குச் செல்கின்றன என்று பிரசங்கி கூறுகிறார். சகல மனிதருடைய ஆவிகளும் மரணத்தின் பின்னர் தேவனிடம் செல்வதாகப் பிரசங்கி கூறுவது நமக்கு குழப்பத்தை ஏற்ப்படுத்தலாம். ஆனால் மரணத்தின் பின்னர் மனிதருக்கு நியாயப் தீர்ப்பு இருப்பதனால் (பிர 12:14, எபி 9:27) சகல மனிதரின் ஆவிகளும் தேவனிடம் செல்வதாகப் பிரசங்கி குறிப்பிட்டுள்ளார். மேலும், மரணத்தின் பின்பான வாழ்வைப்பற்றி பழைய ஏற்பாட்டில் பொதுவான விஷயங்கள் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டுள்ளன. புதிய ஏற்பாட்டிலேயே மரணத்தின் பின்னர் தேவனை அறிந்தவர்களுக்கும் அவிசுவாசிகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தெளிவாகக் காண்பிக்கப்பட்டுள்ளது.
மரணத்தின் பின்னர் தங்களுடைய ஆவி தேவனிடம் செல்லும் என்னும் நம்பிக்கையுடன் பழைய ஏற்பாட்டுக் பக்தர்கள் இருந்துள்ளதை சங்கீதம் 73:23-25 அறியத்தருகின்றது. "உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி, முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்" (சங் 73:24) என்னும் சங்கீக்காரனின் கூற்று, மரணத்தின் பின் அவன் தேவனோடு பரலோகத்தில் இருப்பதைப்பற்றிய அறிவிப்பாகவே உள்ளது. ஏனெனில் "மகிமையில் ஏற்றுக்கொள்வீர்" என்னும் சொற்பிரயோகம், "பரலோகத்தில் வரவேற்கப்படுவதையே" குறிக்கின்றது. தேவனோடு சஞ்சரித்துக் கொண்டிருந்த ஏனோக்கைத் தேவன் தம்மோடு இருக்கும்படி எடுத்துக் கொண்டதும் (ஆதி 5:24, எபி 11:5) தீர்க்கதரிசியாகிய எலியா பரலோகத்திற்குச் சென்றதும் (2இராஜ 2:11) இதை உறுதிப்படுத்தும் சம்பவங்களாக உள்ளன. "நான் கர்த்தருடைய வீட்டியே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்" என்று தாவீது கூறும்போது தான் தேவனுடன் நித்திய காலமாக இருப்பதைப்பற்றியே அவன் குறிப்பிட்டுள்ளான். மேலும் "நான் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிறேன் என்று தேவனால் உங்களுக்கு உரைக்கப்பட்டிருக்கிறதை நீங்கள் வாசிக்கவில்லையா?" என்று கேட்ட இயேசுகிறிஸ்து. (மத் 22:31) ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்போர் சரீரப்பிரகாரமாக மரித்தாலும், அவர்கள் ஆவிக்குரிய பிரகாரம் உயிரோடு பரலோகத்தில் இருப்பதை அறியத்தரும் விதத்தில், "தேவன் மரித்தோருக்கு தேவனாயிராமல், ஜீவனுள்ளோருக்குத் தேவனாயிருக்கிறார்" என்று அடுத்த வசனத்தில் குறிப்பிட்டுள்ளார் (மத் 22:32). இதிலிருந்து இவர்களுடைய ஆவிகள் பரலோகத்தில் தேவனுடன் இருக்கின்றன என்பது தெளிவாகின்றது. மேலும், எபி 12:1ல் பழைய ஏற்பாட்டு பக்தர்கள் அனைவரும் "மேகம் போன்ற திரளான சாட்சிகளாகப் புதிய ஏற்பாட்டு விசுவாசிகளைப் பார்த்துக் கொண்டிருப்பதாகச்" சித்தரிக்கப்பட்டுள்ளதும் அவர்கள் பரலோகத்தில் தேவனுடன் இருப்பதற்கான ஆதாரமாக உள்ளது. மறுரூபமலையில் மோசேயும், எலியாவும் காட்சியளித்ததும் (மத் 17:3). இவர்கள் தேவனுடன் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
புதிய ஏற்பாட்டில் லாசருவையும், ஐசுவரியவானையும் பற்றிய உவமையில் தேவனை அறிந்தவர்களும் அவரை அறியாதவர்களும் வெவ்வேறு இடங்களுக்குச் செல்வதை இயேசுகிறிஸ்து சுட்டிக் காட்டியுள்ளார். (லூக் 16:19-31). இவ்வுமையின்படி மரணத்தின் பின்னர் லாசருவின் ஆவி "ஆபிரகாமின் மடிக்கும்" ஐசுவரியவானின் ஆவி "பாதாளத்திற்கும்" செல்கின்றன (லூக் 16:22-23). யூதர்களுடைய மொழிவழக்கில் "ஒருவருடைய மடியில் இருப்பது" மிகவும் நெருக்கமான உறவைக் குறிப்பிடும் முறையாகும். எனவே மரணத்தின்பின் லாசரு ஆபிரகாமுடன் மிகவும் நெருக்கமாக இருக்கக்கூடிய இடத்திற்குச் சென்றுள்ளான். யூதர்களுடைய நூல்களில் ஆபிரகாமின்மடி பரலோகத்தைக் குறிப்பிடும் சொற்பிரயோகமாகவே உள்ளது. ஆபிரகாம் பரலோகத்தில் இருப்பதனால், ஆபிரகாமுடன் மிகவும் நெருக்கமாக இருக்க கூடிய இடத்திற்குச் சென்ற லாசரு உண்மையில் தேவனிடத்திற்கே சென்றுள்ளான். இயேசு கிறிஸ்து இவ்வுமையில் சொல்லும் சத்தியத்தை ஆதாரமாகக் கொண்டு "ஆபிரகாமின் மடி" என்பது பிற்காலத்தில் பரலோகத்திற்கான பெயர்களில் ஒன்றாக மாறியது. எனவே தேவனை அறிந்தவர்கள் மரிக்கும்போது அவர்களுடைய ஆவி தேவனிருக்கும் பரலோகத்திற்கே செல்கின்றது என்பது தெளிவாகின்றது.
பழைய ஏற்பாட்டைப்போலவே (பிர 3:21, 12:7) புதிய ஏற்பாடும் மரித்தோரின் ஆவிகள் தேவனிடம் செல்வதாகவே கூறுகின்றது. இதனால்தான் "தேகத்தைவிட்டுப் பிரிந்து இயேசுகிறிஸ்துவுடன் இருக்க ஆசைப்பட்ட" (பிலி 1:23) பவுல், "இந்த தேகத்தைவிட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார் (2கொரி 5:8). வேதாகமத்தில் "கிறிஸ்துவுடனேகூட இருத்தல்" என்னும் சொற்பிரயோகம் மரணத்தின் பின்னர் அல்லது, இயேசுகிறிஸ்துவின் வருகையின் பின்னர் விசுவாசிகள் அவருடன் இருப்பதற்கே உபயோகிக்கப்பட்டுள்ளது. எனவே "சரீரத்தைவிட்டுப் பிரிந்து கிறிஸ்துவுடனிருத்தல்" என்னும் சொற்பிரயோகம் மரணத்தின்பின் இயேசுகிறிஸ்துவோடு இருப்பதையே குறிக்கின்றது. இதனால்தான், ஸ்தேவான் என்னும் பக்தன் மரிக்கும்போது, தன்னை வரவேற்பதற்காக இயேசுகிறிஸ்து பரலோகத்தில் இருப்பதைக் கண்டதோடு, கர்த்தராகிய இயேசுவே என் ஆவியை ஏற்றுக்கொள்ளும் என்று இயேசுகிறிஸ்துவிடம் தன்னை அர்ப்பணித்தான் (அப் 7:55-56,59). மேலும் "இயேசுகிறிஸ்து மறுபடியும் வரும்போது, அவருக்குள் மரித்தவர்களும் அவரோடுகூட வருவதாக" 1தெசலோனிக்கேயர் 4:14 கூறுவதனால், இயேசுகிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் தற்பொழுது அவரிடமே இருக்கின்றனர் என்பது தெளிவாகின்றது. இதனால்தான், கிறிஸ்துவுக்குள் மரித்து தற்பொழுது தேவனுடன் இருப்பவர்களையும், உலகிலிருக்கும் பக்தர்களையும் உள்ளடக்கியதாக கிறிஸ்தவ சபை இருப்பதை எபேசியர் 3:14ல் அறியத்தருகின்றது. சபையானது "பரலோகத்திலும் பூலோகத்திலுமுள்ள முழுக்குடும்பமாக" இவ்வசனத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளது. நீதிமான்களின் ஆவிகள் பரலோகத்தில் தேவனிருக்கும் இடத்தில் இருப்பதாகவே எபிரேயர் 12:22-23 கூறுகிறது. இதனால்தான் கிறிஸ்தவர்கள் தேவனை ஆராதிப்பதற்காகக் கூடிவரும்போது, அவர்கள் பரலோகத்தில் தேவனுடைய பிரசன்னத்திற்கு மட்டுமல்ல, அங்கிருக்கும் "பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகளின் பிரசன்னத்திற்கும்" வந்துள்ளதை இவ்வசனங்கள் அறியத்தருகின்றன. உண்மையில் மரித்த பழைய ஏற்பாட்டு பக்தர்களினதும், கிறிஸ்தவர்களினதும் ஆவிகளே எபிரேயர் 12:22-23ல் "பூரணராக்கப்பட்ட நீதிமான்களுடைய ஆவிகள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய ஏற்பாட்டின்படி, இயேசுகிறிஸ்துவுக்குள் மரிப்பவர்களின் ஆவிகள் அவர் இருக்கும் பரலோகத்திற்குச் செல்கையில், அவரை அறியாதவர்களின் ஆவிகள் பாதாளத்திற்குச் செல்கின்றன என்பதை லாசருவையும் ஐசுவரியவானையும் பற்றிய உவமை அறியத் தருகின்றது (லூக் 16:22,23) தமிழ் வேதாகமத்தில் பாதாளம் என்னும் சொல் இரு ஏற்பாடுகளிலும் ஒரே அர்த்தமுடையதாக இல்லை. ஏனெனில் பழைய ஏற்பாட்டில் "ஷியொல்" என்னும் எபிரேயச் சொல்லைத் தமிழில் "பாதாளம்" என்று மொழி பெயர்த்தவர்கள், புதிய ஏற்பாட்டில் "ஹேதீஸ்" என்னும் கிரேக்கச் சொல்லையே பாதாளம் என்று குறிப்பிட்டுள்ளனர். பழைய ஏற்பாட்டில் "ஷியொல்" என்பது மரித்தோரின் சரீரங்கள் செல்லும் "கல்லறையை" அல்லது "புதைக்குழியைக்" குறிக்கின்றது. இதனால் ஆங்கில வேதாகமத்தில் இச்சொல் "கல்லறை" என்னும் அர்த்தத்தில் Grave என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உண்மையில் மரித்தவர்களின் சரீரங்கள் செல்லுமிடமே பழைய ஏற்பாட்டில் "ஷியொல்" (தமிழில் பாதாளம்) என்று அழைக்கப்பட்டுள்ளது. இதனால்தான் வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டில் மரித்தவர்கள் "பாதாளத்தில் இறங்குவதாகவும்" (ஆதி 37:35, 42:38, 44:29,44:31, எண் 16:30). மரணத்தின் பின் துன்மார்க்கர் மட்டுமல்ல, நீதிமான்களும் பாதாளத்திற்குச் (மூலமொழியில் ஷியொல்) செல்வதாகவும் பழைய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. (ஏசா 38:10, ஆதி 37:35,42:38, எண் 16:30, யோபு 17:13-16,24:19-20,21:13, 24:19, சங் 31:17). பழைய ஏற்பாட்டில் பாதாளம் மரித்தோரின் சரீரங்கள் வைக்கப்படும் கல்லறையாக இருப்பதினாலேயே அங்கு புழுக்களும், பூச்சிகளும் இருப்பதாகவும் வேதாகமம் கூறுகிறது. (ஏசா 14:11, யோபு 17:13-14, 24:19-20). எனவே பழைய ஏற்பாட்டில் "ஷியொல்" (தமிழில் பாதாளம்) என்னும் சொல் மரித்தோரின் சரீரங்கள் செல்லும் இடமான கல்லறையை அல்லது புதைக்குழியையே குறிக்கின்றது. ஆனால் புதிய ஏற்பாட்டின் தமிழ் மொழிபெயர்ப்பில் பாதாளம் என்னும் சொல், (மூலமொழியில் "ஹேதீஸ்" என்னும் சொல்) துன்மார்க்கரின் ஆவிக்குரிய பகுதி செல்லுமிடத்தைக் குறிக்கின்றது. எனவே மரணத்தின்பின் தேவனை அறியாதவர்களின் ஆவிகள் ஹேதீஸ் என்னுமிடத்திற்குச் செல்கையில், தேவனை அறிந்தவர்களின் ஆவிகள் தேவனிடம் செல்கின்றன என்பதே வேதாகமம் அறியத்தரும் சத்தியமாகும்.
மரித்தோரின் ஆவிகள் எங்கு செல்கின்றன என்பதைக் தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தின் மூலம் அறிந்துக்கொண்ட நாம், அவ்வாவிகளினால் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரமுடியுமா என்பதையும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்கவேண்டியது அவசியம். இவ்வுலகத்தைவிட்டுச் செல்லும் மரித்தோரின் ஆவிகளினால் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரமுடியாது என்றே வேதாகமம் கூறுகிறது. இயேசுகிறிஸ்து லாசருவையும், ஐசுவரியவானையும் பற்றிய உவமையில் இதைப்பற்றி நேரடியாகவே குறிப்பிட்டுள்ளார். இவ்வுமையில் லாசரு என்பவனுடைய ஆவி மரணத்தின் பின்னர் ஆபிரகாமின் மடிக்கும், ஐசுவரியவானின் ஆவி பாதாளத்திற்கும் செல்கின்றன. பாதாளத்தில் இருக்கும் ஐசுவரியவான் தன்னுடைய வேதனை காரணமாக லாசருவை அனுப்பும்படி பரலோகத்தில் இருக்கும் ஆபிரகாமிடம் கேட்கின்றான் (லூக் 16:23-26). ஆனால் ஆபிரகாமோ, மரித்தோரின் ஆவிகளினால் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து எவ்விதத்திலும் வெளியே செல்லமுடியாது என்பதை அறியத்தந்துள்ளார். இதை ஐசுவரியவானுக்குச் சுட்டிக்காட்டும் ஆபிரகாம், இவ்விடத்திலிருந்து உங்களிடத்திற்குக் கடந்துபோகவும், அவ்விடத்திலிருந்து எங்களிடத்திற்கு கடந்து வரவும் மனதுள்ளவர்களுக்குக் கூடாதபடி, எங்களுக்கும் உங்களுக்கும் நடுவே பெரும்பிளப்பு உண்டாக்கப்பட்டிருகிறது என்றான். (லூக் 16:26). மரணத்தின்பின் மரித்தோரின் ஆவிகள் எங்கு செல்கின்றனவோ, அங்கிருந்து அவைகளினால் வெளியே வரமுடியாது என்பதையே ஆபிரகாமின் வார்த்தைகள் அறியத்தருகின்றன. மூலமொழியில் இவ்வாக்கியத்தித்தின் இலக்கண அமைப்புமுறை, இது தேவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. எனவே மரித்தோரின் ஆவிகள் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வருகின்றன என்று கூறுவது தேவனால் ஏற்படுத்தப்பட்டுள்ள செயல்முறையையே முரண்படுத்தும் தவறான ஒரு போதனையாகவே உள்ளது. மரித்தோரின் ஆவிகள் மறுபடியும் இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்பதை மாத்திரமல்ல, அவ்வாவிகளை மறுபடியும் இவ்வுலகத்திற்கு அனுப்புவது தேவனுடைய சித்தம் அல்ல என்பதையும் லாசருவையும், ஐசுவரியவானையும் பற்றிய உவமை அறியத்தருகின்றது. மரணத்தின் பின்னர் லாசருவினால் தான் இருக்கும் இடத்திற்கு வரமுடியாது என்பதை அறிந்துக்கொண்ட ஐசுவரியவான் (லூக் 16:24-26), அவனைத் தன்னுடைய தகப்பன் வீட்டுக்கு அனுப்பும்படி ஆபிரகாமிடம் கேட்டான் (லூக் 16:27-28). ஐசுவரியவானின் இக்கோரிக்கைக்கு ஆபிரகாம் கொடுத்த பதில், உலகிலிருப்போருக்கு சத்தியத்தை அறிவிப்பதற்கு மரித்தோரை அனுப்புவது தேவனுடைய சித்தம் அல்ல என்பதைத் தெளிவாகக் காண்பிக்கின்றது. இதனால்தான், தன்னுடைய சகோதரர்கள் தானிருக்கும் இடத்திற்கு வந்து வேதனைப்படாதபடி அவர்களை எச்சரிப்பதற்காக அவர்களிடம் லாசருவை அனுப்பும்படி கேட்ட ஐசுவரியானுக்கு, அவர்களுக்கு மோசேயும் தீர்க்கதரிசிகளும் உண்டு. அவர்களுக்கு அவர்கள் செவிகொடுக்கட்டும் என்று ஆபிரகாம் கூறினார் (லூக் 16:29). ஆபிரகாமின் கூற்றில் மோசேயும் தீர்க்கதரிசிகளும் பழைய ஏற்பாட்டையே குறிக்கின்றது. ஏனெனில் அக்காலத்தில் பழைய ஏற்பாடானது "மோசேயினதும், தீர்க்கதரிசிகளினதும் ஆகமங்கள்" என்று (லூக்கா 24:27,24:44, அப் 28:23) அல்லது "நியாயப்பிரமாணமும், தீர்க்கதரிசிகளும்" (லூக் 16:16, யோவ 1:45) என்று அழைக்கப்பட்டது. இதிலிருந்து மரித்தோரின் ஆவிகள் மூலமாக அல்ல, எழுதப்பட்டுள்ள தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தின்மூலம் சுவிசேஷம் அறிவிக்கப்படுவதே மனிதரைத் தேவன் சந்திக்கும்முறை என்பது தெளிவாகின்றது. மரித்தோரை மறுபடியும் இவ்வுலகத்திற்கு அனுப்பவுது தேவனுடைய சித்தம் அல்ல என்பதனால், மரித்தோரின் ஆவிகளினால் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரமுடியாது. இதனால்தான், தேவன் பல தடவைகள் தம்முடைய தூதர்களை இவ்வுலகத்திற்கு அனுப்பியுள்ளபோதிலும், அவர் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மரித்தோரின் ஆவிகளை இவ்வுலகத்திற்கு அனுப்பிள்ளதாக வேதாகமத்தில் எவ்வித குறிப்பும் இல்லை.
மரித்தோர் மறுபடியும் இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்பதை 2 சாமு 12:15-23ல் குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் சிறப்பான விதத்தில் அறியத்தருகின்றது. இச்சம்பவத்தில் தேவனுடைய தண்டனை காரணமாக மரிக்கும் நிலையை அடைந்த தன்னுடைய பிள்ளைக்காக ஏழு நாட்கள் உபவாசித்து ஜெபித்த தாவீது, பிள்ளை மரித்த பின்னர் ஜெபிப்பதைவிட்டுவிட்டான். மேலும், பிள்ளை மரிக்கும்வரை எதுவும் சாப்பிடாமல் வேதனையோடு இருந்தவன், பிள்ளை மரித்தபின்னர் ஆலயத்திற்குச் சென்று தேவனை வழிபட்டதோடு சாப்பிடவும் செய்தான். இதற்குக் காரணம், பிள்ளை உயிரோடிருக்கும் வரை தேவனால் அப்பிள்ளையைக் காப்பாற்ற முடியும் என்னும் நம்பிக்கையுடனிருந்த தாவீது, பிள்ளை மரித்த பின்னர், அது மறுபடியுமாகத் தன்னிடம் வராது என்பதை அறிந்திருந்தயோகும். இதனால், அவன் பிள்ளைக்காக ஜெபிப்பதை நிறுத்திவிட்டான். 2சாமு 12:15-23ல் இதைப்பற்றி பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பொழுது கர்த்தர் உரியாவின் மனைவி தாவீதுக்குப் பெற்ற ஆண்பிள்ளையை அடித்தார். அது வியாதிப்பட்டுக் கேவலமாயிருந்தது. அப்பொழுது தாவீது அந்தப் பிள்ளைக்காகத் தேவனிடத்தில் பிரார்த்தனைப்பண்ணி, உபவாசித்து, உள்ளேபோய் இராமுழுவதும் தரையிலே கிடந்தான். அவனைத் தரையிலிருந்து எழுந்திருக்கப்பண்ண, அவன் வீட்டிலுள்ள மூப்பரானவர்கள் எழுந்து, அவனண்டையில் வந்தாலும், அவன் மாட்டேன் என்று சொல்லி, அவர்களோடே அப்பம் சாப்பிடாமல் இருந்தான். ஏழாம் நாளில், பிள்ளை செத்துப்போயிற்று. பிள்ளை செத்துப்போயிற்று என்று தாவீதின் ஊழியக்காரர் அவனுக்கு அறிவிக்க ஐயப்பட்டார்கள். பிள்ளை உயிரோடிருக்கையில், நாம் அவரோடே பேசுகிறபோது, அவர் நம்முடைய சொற்கேட்கவில்லை. பிள்ளை செத்துப்போயிற்று என்று அவரோடே எப்படிச் சொல்லுவோம்? அதிகமாக வியாகுலப்படுவாரே என்று பேசிக் கொண்டார்கள். தாவீது தன் ஊழியக்காரர் இரகசியமாய்ப் பேசிக்கொள்கிறதைக் கண்டு பிள்ளை செத்துப்போயிற்று என்று அறிந்து, தன் ஊழியக்காரரை நோக்கி: பிள்ளை செத்துப்போயிற்றோ என்று கேட்டான். செத்துப்போயிற்று என்றார்கள். அப்பொழுது தாவீது தரையைவிட்டு எழுந்து, ஸ்நானம் பண்ணி, எண்ணெய் பூசிக்கொண்டு, தன் வஸ்திரங்களை மாற்றி, கர்த்தருடைய ஆலயத்திலே பிரவேசித்து, பணிந்துக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்து போஜனம் கேட்டான். அவன் முன்னே அதை வைத்தபோது புசித்தான். அப்பொழுது அவன் ஊழியக்காரர் அவனைநோக்கி: நீர் செய்கிற இந்தக் காரியம் என்ன? பிள்ளை உயிரோடிருக்கையில் உபவாசித்து அழுதீர். பிள்ளை மரித்த பின்பு, எழுந்திருந்து அசனம் பண்ணுகிறீரே என்றார்கள். அதற்கு அவன்: பிள்ளை இன்னும் உயிரோடிருக்கையில், பிள்ளை பிழைக்கும்படிக்கு கர்த்தர் எனக்கு இரங்குவாரோ, எப்படியோ, யாருக்குத் தெரியும் என்று உபவாசித்து அழுதேன். அது மரித்திருக்கிற இப்போது நான் உபவாசிக்கவேண்டியது என்ன? இனி நான் அதைத் திரும்பிவரப் பண்ணக்கூடுமோ? நான் அதினிடத்துக்குப்போவேனே அல்லாமல், அது என்னிடத்திற்குத் திரும்பி வரப்போகிறது இல்லை என்றான். 2 சாமு 12:21-23.
தாவீதின் செயல்களும் அவனுடைய பேச்சும், மரித்தோரைப்பற்றி அவன் அறிந்திருந்த வேதாகம சத்தியத்தை அடிப்படையாக் கொண்டிருந்தன. மரித்தோரினால் மறுபடியும் இவ்வுலகத்திற்கு வரமுடியாது என்பதைக் தாவீது அறிந்திருந்தினால், பிள்ளை மரிக்கும்வரை அழுது புலம்பி உபவாசத்துடன் ஜெபித்தான். ஆனால், பிள்ளை மரித்தவுடன் ஜெபிப்பதை நிறுத்திவிட்டான். மரித்தோர் "திரும்பி வராத வழியே போகிறவர்களாகவும்" (யோபு 16:22) போனால் "திரும்பி வராத தேசத்துக்குப் போகிறவர்களாகவும்" (யோபு 10:21) இருப்பதைத் தாவீது அறிந்திருந்தான். இதனால்தான், "மரித்த பிள்ளை சென்ற இடத்திற்கு நான் செல்வேனேயல்லாமல் அப்பிள்ளைத் என்னிடத்திற்கு வராது" என்று அவன் கூறினான். "உலகத்திலிருப்பவர்கள் மரித்தோரிடம் செல்வார்களே தவிர, மரித்தோர் இவ்வுலகத்திற்கு வரமாட்டார்கள்" என்பதை அவன் அறிந்திருந்தான்.
வேதாகம காலத்தில் மரித்த ஒரு சிலர் உயிர்ப்பிக்கப்பட்டது உண்மை என்றாலும், அவர்கள் மறுபடியுமாக மரித்தார்கள். மேலும், இவை தேவனுடைய வல்லமை வெளிப்பட்ட அற்புதச் சம்பவங்களாகவே உள்ளன. இவை வழக்கமாக நடைபெறும் காரியம் அல்ல. "சாதாரண இயற்கை விதிமுறைகளுக்கும் அப்பால் தேவன் செய்யும் காரியமே அற்புதம்" என்பதனால் அற்புதச் சம்பவங்களை வழமையாக நடைபெறும் சாதாரண செயல்களாகக் கருதுவது தவறாகும். இதனால், வேதாகமத்தில் மரித்தோர் உயிர்ப்பிக்கப்பட்ட சம்பவங்களை, மரித்தோரின் ஆவிகள் இவ்வுலகத்திற்கு வருவதற்கான ஆதாரமாக எடுக்கமுடியாது. மரணத்திலிருந்து உயிர்ப்பிக்கப்பட்டவர்கள் ஆவிகளாக அல்ல சரீரங்கள் உடனேயே இவ்வுலகத்திற்கு வந்தனர். உண்மையில் இயேசுகிறிஸ்து மறுபடியும் வரும்போது அவருக்குள் மரித்தவர்கள் அவரோடு இவ்வுலகத்திற்கு வருவார்கள் (1தெச 4:14). அதுவரையில் மரித்தவர்களோ, இல்லையென்றால் அவர்களுடைய ஆவிகளோ இவ்வுலகத்திற்கு வருவதில்லை. ஏனென்றால் அவைகள் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரமுடியாத நிலையில் உள்ளன. மேலும், அவற்றை இவ்வுலகத்திற்கு அனுப்புவதும் தேவனுடைய சித்தம் அல்ல.
மனிதருடைய மரணத்தின் பின்னர் அவர்களைவிட்டுப் பிரிவடையும் ஆவிகள் எவ்வித செயற்பாடுகளும் அற்ற நிலையில் இருப்பதாகவும் வேதாகமம் கூறுகின்றது. இதனால் அவைகளினால் உயிரோடிருப்பவரை ஆசீர்வதிக்கவோ அல்லது அவர்களுக்கு ஆலோசனையளிக்கவோ முடியாது. மரணத்தின் பின்னர் தேவனிடம் செல்லும் நீதிமான்களின் ஆவிகள் "இளைப்பாறுதலடைவதாகவும்", பாதாளத்திற்குச் செல்லும் துன்மார்க்கரின் ஆவிகள் "வேதனைப்படுவதாகவும்" இயேசுகிறிஸ்து லாசருவையும், ஐசுவரியவானையும் பற்றிய உவமையில் தெரிவித்துள்ளார். (லூக் 16:25). இதுவே மரணத்தின் பின்னர் மரித்தோரின் ஆவிகளுக்குத் தேவன் நிர்ணயம் பண்ணியுள்ள நிலையாக உள்ளது. இதனால், இந்நிலையைமீறி அவற்றினால் செயற்படமுடியாது.
3. பிசாசுகளின் ஆவிகளே இவ்வுலகத்தில் உலாவுகின்றன.
மனிதர்கள் மரிக்கும்போது அவர்களுடைய சரீரத்தைவிட்டுச் செல்லும் ஆவிகள் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்பது தேவனுடைய வார்த்தையான வேதாகமம் நமக்கு அறியத்தரும் சத்தியமாகும். இது உண்மை என்றால் மரித்தோரின் ஆவிகள் தங்களோடு தொடர்புகொள்வதாகவும், ஆலோசனைகள் தருவதாகவும் கூறுகிறவர்களின் அனுபவங்கள் எத்தகையவை என்பதை நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம். மரித்தோரின் ஆவிகள் இவ்வுலகத்திற்கு வருவதில்லை என்று வேதாகமம் கூறுவதனால், எவராலும் மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்புக்கொள்ளவும் முடியாது. உண்மையில் அவைகள் மரித்தோரின் ஆவிகள் அல்ல. பிசாசின் ஆவிகளே. இவ்வுலகத்தில் உலாவுவதாக வேதாமம் கூறுகிறது. "உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைத்தேடிச்சுற்றித் திரிகிறான்" என்பதை அறியத்தரும் வேதாகமம் (1பேதுரு 5:8), அவன் "ஒளியின் தூதனுடைய வேஷத்தைத் தரித்துக்கொள்வான்" (2கொரி 11:14) என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. மேலும், சாத்தான் அற்புதங்கள் செய்யும் ஆற்றல் உள்ளவனாகவும் இருப்பான் என்றும் வேதாகமம் கூறுகிறது (மத் 24:24, 2தெச 2:9). எனவே சாத்தானும் அவனுடைய தூதர்களான பிசாசுகளுமே மரித்தோரின் உருவத்தில் மனிதர்களிடம் வந்து அவர்களை வஞ்சிக்கின்றன (1தீமோ 4:1) என்பதே தேவனுடைய வார்த்தையான வேதாகமம் நமக்கு அறியத்தரும் உண்மையாகும். "பிசாசுகளினால் மரித்தோரைப்போல தோற்றமளிக்கமுடியும் என்றாலும், அவைகளினால் மரித்தோரை இவ்வுலகத்திற்கு கொண்டுவரமுடியாது". ஏனென்றால் மரித்தோரின் ஆவிகள் மீது பிசாசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. தேவனுடைய கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் மரித்தோரின் ஆவிகளுடன் பிசாசுகளினால் தொடர்புக்கொள்ளமுடியாது. ஆனால், அவைகள் மரித்தோரைப்போல காட்சியளித்து மக்களை வஞ்சிக்கின்றன.
மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்புக்கொள்வதாகக் கூறுபவர்கள் உண்மையில் பிசாசின் ஆவிகளின் உதவியுடனேயே செயற்படுகின்றனர். இவர்களுடைய செயல்கள் மூலம், பிசாசின் ஆவிகள் மரித்தோரின் உருவத்தில் வந்து மக்களை வஞ்சிக்கின்றன என்றே வேதாகமம் கூறுகிறது. வேதாகமத்தில் மரித்தோரின் ஆவிகளிடம் தொடர்புக் கொள்வதாகக் கூறுபவர்களை "அஞ்சனம் பார்ப்பவர்கள்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வேதாகமத்தின் மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள எபிரேயச் சொல் KJV.ஜேம்ஸ் அரசனின் ஆங்கில வேதாகமத்தில் Having familiar spirits என்று விளக்கமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் "கீழ்ப்படிவுள்ள அல்லது பணிவிடை செய்கின்ற பிசாசுகளை தன் உபயோகித்துக்கு வைத்திருத்தல்" ஆகும். உண்மையில், இத்தகைய மனிதர்களுக்குள் பிசாசுகள் குடியிருப்பது வழக்கம். இவர்களுக்குள் நல்லஆவிகள், அதாவது பரிசுத்த ஆவியோ அல்லது தேவதூதர்களோ இருப்பதில்லை. தீய ஆவிகளான பிசாசின் ஆவிகளே இவர்களுக்குள் இருக்கும். உண்மையில் அஞ்சனம் பார்ப்பவர்கள் தங்களுக்குள் குடியிருக்கும் பிசாசுகளின் உதவியுடனேயே செயற்படுகின்றனர். இதனால்தான் 1 சாமுவேல் 28:7ல் "அஞ்சனம் பார்க்கும் ஸ்திரீ" என்பது மூலமொழியில் "குறிசொல்லும் பிசாசையுடைய பெண்" என்று உள்ளது. ஜேம்ஸ் அரசனின் ஆங்கில வேதாகமத்தில் a women that hath a familiar spirit அதாவது, "பணிவிடைச் செய்யும் பிசாசையுடைய பெண்" என்று இவ்வாக்கியம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பில் இத்தகைய அர்த்தம் நேரடியாக வெளிப்படும் விதத்திலேயே இவ்வாக்கியம் உள்ளது. எனவே, மரித்தோரின் ஆவிகளிடம் தொடர்பு கொள்வதாகக் கூறுபவர்கள் பிசாசுகளின் உதவியுடன் செயல்படுகிறார்கள் என்றே வேதாகமம் கூறுகிறது. உண்மையில், அஞ்சனம் பார்ப்பவர்கள் மரித்தோரின் ஆவிகளை அல்ல, மரித்தோரைப்போல நடிக்கக்கூடிய பிசாசுகளையே மனிதர் காணும்படிச் செய்கின்றனர். வேதாகமத்தில் "செத்தவர்களிடத்தில் குறிகேட்டல்" என்னும் சொற்பிரயோகமும் (உபா 18:11) பிசாசுகளிடத்தில் குறிகேட்பதையே குறிக்கின்றது. அஞ்சனம் பார்ப்பவர்கள், தாங்கள் மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்பு கொள்வதாகக் கூறி மற்றவர்களை ஏமாற்றுகிறவர்களாக உள்ளனர். ஏனெனில், இவர்களால் தேவனிடமிருக்கும் மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்புக்கொள்ளமுடியாது. உண்மையில், இத்தகைய செயல்கள் பிசாசின் செல்வாக்கிற்கு உட்ப்பட்டவைகளாகவே உள்ளன. அஞ்சனம் பார்ப்பவர்கள் மரித்தோரின் ஆவிகளிடத்தில் அல்ல, பிசாசுகளின் ஆவிகளிடமே தொடர்பு கொள்கின்றனர். இதனால் இத்தகைய செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று கூறும் தேவன், இவற்றுக்கு மரணதண்டனை கொடுக்கப்படவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
அஞ்சனம் பார்க்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள், அவர்களாலே தீட்டுப்படவேண்டாம். நான் உங்கள் தேவனாகிய கர்த்தர். (லேவி 19:31).
அஞ்சனம் பார்கிறவர்களையும், குறிசொல்லுகிறவர்களையும் பின்தொடர்ந்து சோரம்போக எந்த ஆத்துமா அவர்களை நாடுகிறானோ, அந்த ஆத்துமாவுக்கு விரோதமாக எதிர்த்து நின்று, அவனைத் தன் இனத்தில் இராதப்படிக்கு அறுப்புண்டு போகப்பண்ணுவேன். (லேவி 20:6).
அஞ்சனம் பார்க்கிறவர்களும், குறிசொல்லுகிறவர்களுமாயிருக்கிற புருஷனாகிலும், ஸ்திரீயாகிலும் கொலை செய்யப்பட வேண்டும். (லேவி 20:27).
மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்புக்கொள்ள முற்படுவது தேவன் வெறுக்கும் ஒரு காரியமாகவே உள்ளது. இதற்குக் காரணம் இவை பிசாசின் வஞ்சிக்கும் செயல்களாக இருப்பதேயாகும். உண்மையில் உலகிலிருக்கும் எந்த ஒரு மனிதனாலும் மரித்தோரின் ஆவிகளுடன் தொடர்புக்கொள்ள முடியாது. பிசாசுகளே மரித்தோரைப்போல தோற்றமளித்து, மரித்தோரைப்போல பேசி மக்களை வஞ்சித்து வருகின்றன. இதனால் தம்முடைய ஜனங்கள் இத்தகைய வஞ்சனைகளில் அகப்பட்டுத் தவறான வழிகளில் செல்வதைத் தடுப்பதற்காகத் தேவன் இதற்கு எதிராகக் கடுமையான கட்டளைகளைக் கொடுத்துள்ளார்.
(தொடரும்...)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கிறிஸ்தவர்கள் மத்தியில் நீண்ட காலமாக இருந்து வரும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் ஒன்று, மரித்த மனிதர்களின் ஆவிகளைப்பற்றியதாகும். அதாவது, "மரித்த உறவினர்கள், மூதாதையர்களின் ஆவிகளினால் உயிரோடிருக்கும் மனிதர்களுக்கு ஆலோசனைகளும், ஆவிக்குரிய வழிநடத்துதல்களும் கொடுத்து அவர்களை ஆசீர்வதிக்க முடியுமா?" என்பது பொதுவாக கிறிஸ்தவர்கள் மத்தியில் இருக்கும் சர்ச்சைக்குரிய ஒரு கேள்வியாகவே உள்ளது. சில கிறிஸ்தவர்கள், தாங்கள் வாழும் இடங்களிலுள்ள பாரம்பரிய நம்பிக்கைகளினதும் பிற மதச்சிந்தனைகளினதும் செல்வாக்கிற்கு உட்பட்டவர்களாக, மரித்தோரின் ஆவிகள் தங்களோடு தொடர்புக்கொள்வதாகவும், தங்களுக்கு மரித்தோரின் ஆவிகளின் மூலம் ஆலோசனைகளும் வழிநடத்துதல்களும் கிடைப்பதாகவும் கூறிவருகின்றனர். மரித்தோரின் ஆவிகள் தங்களுடைய வாழ்வில் அற்புதங்கள் செய்வதாகவும் சிலர் தெரிவித்துள்ளனர். கிறிஸ்தவர்கள் மத்தியில், மரித்த பக்தர்கள் கனவில் வருவதுப்பற்றியும், நேரடியாகக் காட்சியளிப்பது பற்றியும், அவர்கள் உயிரோடிருப்பவர்களுக்குப் பலதரப்பட்ட ஆசீர்வாதங்களையும், ஆலோசனைகளையும் அருள்வதைப் பற்றியும் பலவிதமான பாரம்பரியக் கதைகளும் உள்ளன. எனவே, மரித்தோரின் ஆவிகளினால் மறுபடியுமாக இவ்வுலகத்திற்கு வரமுடியுமா? என்பதற்கும், அவைகளினால் உயிரோடிருப்பவர்களுக்கு நன்மையளிக்க முடியுமா? என்பதற்கும் வேதாகமத்தில் ஏதாவது ஆதாரங்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்துப்பார்க்க வேண்டியது அவசியமாயுள்ளது.
கிறிஸ்தவ உபதேசங்கள், நம்பிக்கைகள், நடத்தை முறைகள் அனைத்திற்கும் ஆதாரமாக இருப்பது தேவனுடைய வார்த்தையான பரிசுத்த வேதாகமமே! எனவே, வேதாகமத்திற்கு முரணான எந்த ஒரு நம்பிக்கையும் உபதேசமும், நம்பகமானதும், சரியானதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதும் அல்ல. நாம் சகல உபதேசங்களையும், நமக்கு கொடுக்கப்படுகின்ற ஆலோசனைகளையும் வேதாகமத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து பார்க்கவேண்டும். இது வேதாகமம் நமக்கு கொடுத்துள்ள ஒரு முக்கியமான கட்டளையாகும். இதனால்தான் "பிரியமானவர்களே, உலகத்திலே அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால் நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனால் உண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்" (1யோவா 4:1) என்று அறிவுறுத்தும் வேதாகமம், சொல்லப்படும் தீர்க்கதரிசனங்கள் எல்லாம் நிதானிக்கப் படவேண்டும் என்றும் கூறுகிறது (1கொரி 14:29). எனவே தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தை அடிப்படையாகக்கொண்டு தீர்க்கதரிசனங்களைச் சோதித்துப் பார்த்து நலமானதை ஏற்றுக்கொள்ளவும் பொல்லாங்காய்த் தோன்றுகிறவைகளை நிராகரிக்கவும் நாம் அறிந்திருக்கவேண்டும் (1தெச 5:20,22). இத்தகைய தன்மை ஒருவனுக்கு இல்லாதிருந்தால், அவனுடைய கிறிஸ்தவ விசுவாசம் உண்மையானதாக இராது. ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஆவிக்குரிய நிஜத்தையும் போலியையும் வேறு பிரித்து அறியக்கூடிய ஆற்றுலுள்ளவனாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஆவிகளை சோதித்தறியும்படி வேதாகமம் கட்டளையிட்டுள்ளது. உண்மையில், இத்தகைய மனிதர்களே மெய்யான கிறிஸ்தவர்களாக இருப்பார்கள். இதனால்தான், பிரசங்கிக்கப்பட்ட தேவ வசனத்தை மனோவாஞ்சையாய் ஏற்றுக்கொண்டு காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்தவர்கள் நற்குணசாலிகளாக இருந்தார்கள் என்பதை அப்போஸ்தலர் 17:11 அறியத்தருகின்றது. இவ்வசனத்தில் "ஆராய்ந்து பார்த்தல்" என்பதற்கு மூலமொழியில் உபயோகிக்கப்பட்டுள்ள சொல், நீதிபதி வழக்கை விசாரித்து உண்மையைக் கண்டறிவதைக் குறிப்பிடும் சொல்லாக உள்ளது. எனவே, ஒரு நீதிபதியைப்போல, தேவனுடைய வார்த்தையான வேதாகமத்தின்மூலம், மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்கவும், அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கவும் முடியுமா? என்று இந்நூலில் ஆராய்ந்து பார்ப்போம்.
(தொடரும்...)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மரித்த ஆவிகளைக்குறித்து வாசகர்கள் வாசிக்குமுன் பிசாசைக்குறித்து நீங்கள் அறியவேண்டும்.
தேவனுக்கு மூன்று முக்கிய தூதர்கள் இருந்தார்கள். ஒருவன் பெயர். லூசிபர். இந்த பெயரை நம் வேதபுத்தகத்தில் எந்த மொழிபெயர்ப்பிலும் குறிப்பிடப்படவில்லை. ஆனால் மூலபாஷை வேதபுத்தகத்தில் மட்டும் லூசிபர் என்று பெயரை குறிப்பிட்டே எழுதப்பட்டுள்ளது.
முதலாம் தூதன் தான் லூசிபர்
இரண்டாம் தூதனின் பெயர் காப்பிரியேல்
மூன்றாம் தூதனின் பெயர் மிகாயேல்
லூசிபர் என்ற தூதனை ஏதேன் தோட்டத்தில் காவல்காக்க வைத்த விவரம் எசே 28:11-15ல் காணலாம். அப்போது லூசிபர் தன் உள்ளத்தில், தன்னை தேவனுக்கு சமமாக்க முயற்சித்ததையும் அது தேவனுக்கு கோபம் உண்டாக்கியதையும் ஏசா 14:11-15ல் வாசிக்கலாம். அதனால் தேவன் லூசிபர் என்ற தூதனையும் அவனோடு உள்ள தூதகணங்களையும் பரலோகத்திலிருந்து தள்ளிவிட்டார்.
துரத்திவிடப்பட்ட லூசிபர் என்ற தூதன்தான் பிசாசு அல்லது தேவனுக்கு எதிரானவன் - சத்துரு - அதர்மமூர்த்தி - எதிர்கிறிஸ்து - அந்திகிறிஸ்து என்றெல்லாம் அழைக்கப்படுகிறான். தான் பரலோகத்திலிருந்து தள்ளப்பட்டதால் தேவன்மேல் கோபம்கொண்டு தேவன் உண்டாக்கிய மனிதர்களை தேவனிடமிருந்து பிரிக்க பல வஞ்சக ஏற்பாடுகளை செய்துகொண்டு இருக்கிறான். அப்படி மக்களை ஏமாற்ற செய்யும் முயற்சிகளில் ஒன்றுதான். செத்துப்போன ஆ(வி)த்துமாக்களின் பெயரில் ஊழியர்கள் மூலமாக மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதாகும்.
இப்போது தமிழ்நாட்டில் இந்த ஊழியங்கள்தான் அதிகமாக காணப்படுகிறது. இதனால் எத்தனை ஆயிரம் மக்கள் பயந்துக்கொண்டும், தைரியமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா? இந்த கட்டுரையை எழுதியவர் லண்டனில் உள்ள வேத ஆராய்ச்சி செய்யும் Dr.M.S.வசந்தகுமார் என்பவர் ஆவார். இவர் எழுதிய இந்த மரித்தோரின் ஆவிகளினால் மனிதரை ஆசீர்வதிக்க முடியுமா? என்ற கட்டுரை உங்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று இதை வெளியிடுகிறேன். இனி மற்ற விவரங்களை தொடர்ந்து வாசியுங்கள். எல்லா கிறிஸ்தவர்களும் அறிந்து கொள்ளவேண்டிய முக்கிய செய்தி. ஆகையால் இந்த ஆராய்ச்சி கட்டுரையை தொடர் கதையைப்போல் துண்டுதுண்டாக வெளியிடாமல் முழுமையாக நீங்கள் படித்து அறிய வேண்டும் என்பதற்காக அதிக பக்கங்களை இந்த ஆராய்ச்சி கட்டுரைக்கு என்று ஒதுக்கியிருக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)