இங்கே யாரையும் தனிப்பட்ட முறையில் பொறம்போக்கு என்றோ விபச்சாரி என்றோ வேசியின் மகன் என்றோ பரதேசி என்றோ திருடன் என்றோ துருபதேசவாதி என்றோ அல்லது வேறெந்த தூஷணமான வார்த்தைகளினாலோ மனதைப் புண்படுத்தும் நோக்கத்துடன் குறிப்பிடவில்லை என்பதை உளத் தூய்மையுடன் அறிவிக்கிறேன்.
ஆனால் எங்களை அதுபோல தூஷிப்பவர்களை இயேசுவானவர் காட்டிச் சென்ற மாதிரியின்படி மன்னித்து ஏற்றுக்கொள்ள எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
இந்த அறிவிப்புக்குப் பிறகும் மேற்கண்ட தூஷணமான வார்த்தைகளால் பாதிக்கப்பட்ட யாராவது இருப்பாரானால் அவர் இந்த வார்த்தைகள் தன்னைக் குறித்தே எழுதப்பட்டது என்று அதற்கு உரிமை கோருவாரானால் அதற்கு இவற்றை எழுதிய சில்சாம் ஆகிய நானோ யௌவன ஜனம் தளமோ எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது என்பதைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
என் மனச்சாட்சி: பிரதர் அன்பு57, இந்த மதியீனர், அறிவீனர், பேதையர், மடையர் போன்ற வார்த்தைகளை நீ பயன்படுத்தாமலிருக்கலாமே! தன் சகோதரனை “மூடன்” என்பவன் எரிநரகத்துக்கு ஏதுவாயிருப்பான் என இயேசு சொல்றார்ல? இயேசுவின் போதனைகளைப் போதிக்கிற நீ, மூடன் என்ற வார்த்தைக்கு சமமான வார்த்தைகளைச் சொல்லலாமா? அன்பு57: பிரதர் மனச்சாட்சி, மத்தவங்க மடத்தனமா, sorry இது ரொம்ப மோசமான வார்த்தையோ, அப்போ மதியீனமானு சொல்லவா, sorry அதுவும் மோசமானதுதான், அப்போ அறிவீனமானு சொல்லட்டா, வேண்டாம் அதுவும் மோசமானதுதான்னு சொல்றீயா, அப்போ பேதையர்னு சொல்லவா, வேண்டாம் அதுகூட நல்லாலேங்கறீயா, அப்போ அறியாமையிலிருப்போர்னு சொல்லவா? மனச்சாட்சி: ஆமா பிரதர், அப்படியே சொல்லு. இதுதான் வம்பில்லாத வார்த்தை. அறியாமையிலிருப்போர் -ங்கிற வார்த்தையும் மடையர்-ங்கிற வார்த்தையும் சமமான வார்த்தைதான் உனக்கும் எனக்கும் சில விபரமறிஞ்சவங்களுக்கு மட்டுந்தான் தெரியும். அறியாமையிலிருக்கிற மத்தவங்களுக்குத் தெரியாது. எனவே, “அறியாமையிலிருப்போர்”னே சொல்லிக்கோ பிரதர். அன்பு57: சரி பிரதர்! நான் என்ன சொல்ல வர்றேன்னா, மத்தவங்க அறியாமையில் கேட்கிற மாதிரி நீயும் கேட்கக் கூடாதுனுதான். சகோதரனை மூடனே-னு சொல்றவன் எரிநரகரத்துக்கு ஏதுவாயிருப்பான்னு இயேசு சொல்றதை நான் மறுக்கலை. ஆனா இயேசு யாரைக் குறித்து அதில் சொல்றார்னு கொஞ்சம் கவனமா படி பிரதர். மனச்சாட்சி: ஆரம்பிச்சிட்டீயா? இப்படி வசனங்களைப் போட்டு வியாக்கியானம் செய்றதைத்தானே “வேதப்புரட்டுன்னு” சில புத்திசாலிகள் சொறாங்க. ஆனா, நீ அதை விடமாட்டேன்கறீயே. சரி, சரி நீ என்னதான் சொல்ல வர்றே? சொல்லு. அன்பு57: பிரதர், எந்த வசனமானாலும், அதை வியாக்கியானம் பண்ணித்தான் புரிஞ்சிக்கணும். இல்லாட்டி போனா, வேதாகமம் முழுசும் முரண்பாடான கருத்தாகத்தான் தோற்றமளிக்கும். இப்போ, மூடனே-னு சொல்றதைப் பத்தி இயேசு சொன்னதையே எடுத்துக்குவோமே. இயேசு சொன்னது ஒருபுறமிருக்க, 1 கொரிந்தியர் 15:36-ல் பவுல் சிலரைப் பாத்து புத்தியீனனே-ங்கிறார். அப்போ மூடனே-னு சொல்லக்கூடாது, புத்தியீனனே-னு சொல்லலாம்னு அர்த்தமா? மனச்சாட்சி: அதெப்படி பிரதர்? மூடன், புத்தியீனன் எல்லாமே ஏறக்குறைய ஒரே அர்த்தம்தானே? நீ கூட மூடனே-னு ஒரு இடத்திலயும் சொல்லலியே. அதனால, மதியீனன், அறிவீனன்னு சொன்னதையெல்லாம் ஏத்துக்க முடியுமா? அன்பு57: நிச்சயமா முடியாது பிரதர். மூடன்-னு சொல்றதும் ஒண்ணுதான், புத்தியீனன்னு சொல்றதும் ஒண்ணுதான். இப்போ சொல்லு, இயேசு சொன்னதுக்கு எதிராத்தானே பவுல் சொல்றார்? அப்போ வேதாகமம் முரணானதுன்னு சொல்லலாமா? மனச்சாட்சி: முடியாது பிரதர். சரி, இப்போ இயேசு சொன்ன வசனத்துக்கு உன் விளக்கத்தைச் சொல்லு. அன்பு57: பிரதர், சகோதரனை மூடன்னு சொல்றவன் எரி நரகத்துக்கு ஏதுவாயிருப்பான்னு சொன்ன இயேசு அடுத்த சில வசனங்களில் என்ன சொல்றார்னா: ஆகையால், நீ பலிபீடத்தினிடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறைஉண்டென்று அங்கே நினைவுகூருவாயாகில், அங்கேதானே பலிபீடத்தின் முன் உன் காணிக்கையை வைத்துவிட்டுப் போய், முன்பு உன் சகோதரனோடே ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து. எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடாமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடாமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாய் அவனுடனே நல்மனம் பொருந்து. பொருந்தாவிட்டால், நீ ஒரு காசும் குறைவின்றிக் கொடுத்துத் தீர்க்குமட்டும் அவ்விடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று, மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன். - அப்படீன்னு சொல்றார். இவ்வசனங்களை கொஞ்சம் நிதானமா படிச்சுப்பார். நியாயாபதியினிடத்தில் போற அளவுக்கு சகோதரனிடம் குறை இருந்ததுதானா என்ன அர்த்தம்? அவங்க 2 பேருக்கும் தனிப்பட்ட முறைல ஏதோ தகறாறு இருக்குன்னுதானே அர்த்தம்? மனச்சாட்சி: ஆமா, பிரதர். அதனாலதான் சமரசம் பண்ணிட்டு காணிக்கை வைன்னு இயேசு சொல்றார். அன்பு57: இப்போ புரியுதா? சகோதரனை மூடன்னு அவன் ஏன் சொல்லியிருப்பான்னு? மனச்சாட்சி: ஆமா பிரதர். தனிப்பட்ட தகறாறுல கோபப்பட்டு, அக்கோபத்தின் விளைவாக, சகோதரனின் உணர்வைத் தூண்டி இழிவுபடுத்தணுங்கிற நோக்கத்தில அவனை மூடனேனு சொல்றதைத்தான் இயேசு கண்டிக்கிறார். அதாவது அவன் மூடனேனு சொல்றது, சகோதரனின் மூடத்தனத்தைச் சொல்லி அவனை உணரவைக்கிறதுக்காக இல்லாம, தனிப்பட்ட தகறாறுல சகோதரன் மீது வந்த கோபத்தை தணிக்கிறதுக்கும், சகோதரனின் உணர்வைத் தூண்டுறதுக்குமா இருக்குது. அன்பு57: இப்போ சொல்லு பிரதர். நான் என்னுடைய தனிப்பட்ட தகறாறுலயா யாரையாவது மதியீனன், அறிவீனன்னு சொல்றேன்? ஒண்ணு, வசனத்தைச் சொல்லவிடாம, எதுக்கெடுத்தாலும் ஏடாகூடமா எதையாவது சொல்லி நான் செய்கிற தேவப்பணியை தடை செய்றவங்களை அப்படிச் சொல்றேன்; இல்லே, நான் சொல்றதை சரியா புரிஞ்சிக்காம அறிவீனமா வியாக்கியானம் பண்ணி, எனது பணியை தடைசெய்றவங்களை அப்படிச் சொல்றேன். இப்படிச் சொல்லி அவங்களது அறிவீனத்தை உணத்துறதும் என் தேவப்பணியின் ஒரு பகுதிதான். மத்தேயு 7:26-ல புத்தியில்லாத மனுஷன்னு ஒருத்தனை இயேசு சொல்றாரே, அந்த புத்தியில்லாதவனுக்கும் மத்தேயு 5:22- இயேசு சொல்ற மூடனுக்கும் கிரேக்க பாஷையில் moros -ங்கிற ஒரே வார்த்தைதான் பயன்படுத்தப்பட்டிருக்கு. மத்தேயு 7:26-ன்படியான புத்தியில்லாத மனிதரிடம், அவர்களின் புத்தியீனத்தைச் சொல்லி உணரவைப்பது என் தேவப்பணியில் ஒன்றுதானே? அதனால்தான் அப்படியெல்லாம் கடின வார்த்தைகளைப் பயன்படுத்துகிறேன். என் ஜனங்கள் அறிவில்லாமையால் சங்காரமாகிறார்கள், கெட்டுப்போகிறார்கள் என வேதவசனம் கூறுகிறது. எனவே ஜனங்களின் அறிவில்லாமையை எடுத்துக்காட்டி போதிப்பது என் கடமை. அவர்களின் அறிவில்லாமையில் சில, எனது தேவப்பணிக்கு இடறலாக சில சமயம் இருப்பதால், அவற்றையும் நான் சொல்லத்தான் வேண்டியதுள்ளது. அப்படிச் சொல்லும்போது, நான் தனிப்பட்ட காரணத்திற்காக அவர்களை அறிவீனன் எனச் சொல்வதாக மற்றவர்களுக்குக் காணப்படும். ஆனால் உண்மை அதுவல்ல. மனச்சாட்சி: நீ சொல்றதும் சரிதான் பிரதர். ஆனா மத்தவங்களுக்கு இது புரியலியே. அது சரி, அவங்கதான் அறியாமையில் இருக்காங்களே, அவங்களுக்கு எப்படி புரியும்? எது எப்படியோ போகட்டும் பிரதர். உங்கிட்ட ரகசியமா சொல்றேன். நீ இந்த மதியீனன் அறிவீனன் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தாம, அறியாமையிலிருப்பவன் அப்படினு பாலிஷா சொல்லிக்கோயேன். அன்பு57: அதாவது மறைமுகமா மதியீனன்னு சொல்லு, நேரடியா சொல்லாதேங்கிற. சரி, சரி நீ சொல்றதையும் கொஞ்சம் consider பண்ணிப்பாக்கறேன். சில்சாமின் மனசாட்சி சொல்லுகிறது: இதுக்கு தாண்டா குளவிக்கூட்டில கைய வைக்காதேன்னு சொன்னேன்;இப்ப பாரு எவ்வளவு பெரிய பிரச்சினையாயிடுத்து,அவனுங்க மனசாட்சியைப் பேசவிடமாட்டானுங்க, சுயத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறவங்க'ங்கிறத இப்ப புரிஞ்சிண்டியா..?
"ஆகிலும், ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்." (1.தீமோத்தேயு.4:1)
இப்படி மனசாட்சிக்கே உபதேசிக்கிற சூடுண்ட பொய்யரின் மாயமான உபதேசத்துக்கு விலகி ஒடவே உனக்கு நான் கற்றுக்கொடுக்கிறேன்,என்கிட்ட இன்னொருத்தர் இருக்கிறார்,அவர் ஆவியில்லை,காற்று இல்லை,ஏதோ ஒரு சக்தியில்லை,சர்வ வல்ல தேவனின் நேரடி பிரதிநிதியாவார்;எனவே நீ பயப்படாதே நான் ஏதாவது தப்பா செய்தாலும் அவர் உன்னை தப்பா நடத்தவே மாட்டார்;அவனுங்க கிட்ட இவர் கிடையாது;அவர வெறும் காத்து'னு நெனச்சிகிட்டு கோட்டையை விட்டுட்டு ஆட்டையப் போட்டுண்டிருக்கானுங்க...நீ கவலைப்படாதே நாம எப்படியாவது கரையேறிடுவோம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
இவர்களைக் குறித்து நான் எழுதியதில் எந்த தவறும் இல்லை என்று நிரூபிப்பதைப் போல அம்பு விடுகிறார்,அநித்திய சீவல்...
நான் என்ன எழுதியிருந்தேன்,அதன் நோக்கம் என்ன,என்னுடைய உள்ளத்தின் பாரம் என்ன என்பதைக் குறித்து கிஞ்சித்தும் கவனத்தில் கொள்ளாமல் என்னை மேலும் இழிவுபடுத்தும் ஒரே நோக்கத்துடன் மல்லாந்து கொண்டு எச்சில் உமிழ்வதைப் போல சுற்றி வளைத்து உலகத் தாய்மார்களின் கற்பைக் குறித்து விலாவாரியாக அலசி ஆராய்ந்து போஸ்ட்மார்ட்டம் செய்து தான் கிறித்துவையும் அதுபோலவே பரிசோதிக்க அஞ்சமாட்டேன் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
நான் எழுத வந்த நோக்கம் அனைவரும் அறிந்த வண்ணமாக, இயேசுவைக் குறித்த தெய்வத்தை ஆராய்வதற்கு சாதாரண மனிதர்களான நமக்கு எந்த தகுதியும் இல்லை,இதில் விசுவாசம் ஒன்றே போதுமானது, என்பதே; இவர் விலாவாரியாக எழுதி தன் தாயைக் கேவலப்படுத்தியது போல நான் எழுதாமல் ஒரே வரியில் அனைத்தும் மூடி புதைத்து தேவையானது, விசுவாசம் ஒன்றே என்று முடித்திருக்கிறேன்.
அப்படியும் ஒருவன் மீறி கேள்வி கேட்பான் என்றால், அதுபோல தான் பெற்ற தாயை கேவலப்படுத்தும் மனிதன் இருக்கப்போவதில்லை, இருந்தாலும் அவன் பிள்ளை இல்லை;இயேசுவைக் குறித்து கேள்வி எழுப்புபவனும் அந்த வகையைச் சேர்ந்தவனாகவே இருப்பான் என்று முடித்திருக்கிறேன்.
இந்த படுபாவி மனுஷன் நான் அந்த வகையைச் சேர்ந்தவனே,என்று வெட்கமில்லாமல் ஒப்புக்கொண்டு வாதத்தை வேறு திசையில் வளர்த்துக்கொண்டிருக்கிறார்...பார்க்கலாம்..!
//இது பாமரனுக்கும் புரியும்வண்ணமாக அடியேன் யோசித்து எழுதிய உள்நோக்கமில்லாத கருத்தாகும்;இதை எதிர்த்து கேள்வி கேட்பவன், (மேசியாவின்) எதிரி ஆவான்;அவனைக் குறித்தே நான் மிகுந்த வேதனையுடன் குறிப்பிட்டேன்,"நீ பெற்ற தாயையே (ஏன் பெற்றாய்,எவனுக்கு பெற்றாய் என்றும் ) கேள்வி கேட்கக்கூடியவன்" என்று..!//
இவ்வுலகத்தார் ஒருவரோடொருவர் சண்டையிடும்போது, எதிராளியின் தன்மான உணர்வைத்தூண்டி இழிவுபடுத்தும் வண்ணமாக “டேய், தே...யா மகனே (நடத்தை கெட்டவளின் மகனே)” எனச் சொல்வார்கள். ஆனால் எதிராளியை இப்படிச் சொல்லி வசைபாடுவது எத்தனை முட்டாள்தனமானது, வக்கிரமானது என்பதை சொல்பவனும் அறியமாட்டான், கேட்பவனும் அறியமாட்டான்.
ஏனெனில் அடுத்தவனை “நடத்தை கெட்டவளின் மகனே” என்று சொல்கிற அவனேகூட “நடத்தை கெட்டவளின் மகனாக” இருக்கவும் வாய்ப்புண்டு; அதேவேளையில் எவனை “நடத்தை கெட்டவளின் மகனே” எனச் சொன்னானோ அவன் “நடத்தை கெட்டவளின் மகனாக” இல்லாதிருக்கவும் வாய்ப்புண்டு.
இவ்விஷயத்தில் “யாருக்கும்” விதிவிலக்கு கிடையாது. இதை எனது இளம்பிராயத்திலேயே நான் அறிவேன். அந்நாட்களிலேயே நான் இப்படி நினைப்பதுண்டு: “இது என்ன முட்டாள்தனமாக அடுத்தவனைப் பார்த்து “நடத்தை கெட்டவளின் மகனே” என்கிறார்கள்? சொல்பவன் “நடத்தை கெட்டவளின் மகன் அல்ல” என்பதும் தெரியாது; அல்லது சொல்லப்படுவன் “நடத்தை கெட்டவளின் மகன்தான்” என்பதும் தெரியாது; இப்படியிருக்க இவர்கள் ஏன் ஒருவரையொருவர் இப்படி மடத்தனமாகத் திட்டுகிறார்கள்” என நான் நினைப்பதுண்டு.
மொத்தத்தில் இம்மாதிரிச் சொல்கிற யாராக இருந்தாலும், அவர் ஒரு மதியீனர் என்பது மட்டுந்தான் உண்மையாக இருக்குமேயொழிய, ஒருவனை “நடத்தை கெட்டவளின் மகனே” எனச் சொல்வதும் உண்மையாகிப் போவதில்லை; ஒருவன் தன்னை “நடத்தை கெட்டவளின் மகன் அல்ல” என நினைப்பதும் உண்மையாகிப் போவதில்லை.
இவ்வுண்மையின் அடிப்படையில் பார்க்கையில், ஒருவன் தனது தாயை “நடத்தை கெட்டவள் அல்ல” என நம்புவதும் முட்டாள்தனமாகிவிடும்; ஏனெனில், ஒருவனின் தாய் “நடத்தை கெட்டவளா, இல்லையா” என்பது அத்தாய்க்கும் தேவனுக்கும் மட்டுமே தெரியுமேயன்றி வேறு யாருக்கும் தெரியாது. அது மட்டுமல்ல, ஒருவன் தனது தாயென நம்பிக்கொண்டிருப்பவள், உண்மையிலேயே அவனது தாய்தானா இல்லையா என்பதுகூட யாருக்கும் நிச்சயமாகத் தெரியாது. அத்தாய்க்கு பிரசவம் பார்த்த மருத்துவச்சிக்கு மட்டுமே அது தெரியுமேயொழிய, அத்தாய்க்குக் கூட திட்டமாகத் தெரியாது. எனவே இவ்விஷயத்தில் நாம் நம்புகிற எதுவும் மாயையாகிப் போக வாய்ப்புள்ளதால், இவ்விஷயத்தில் எதையும் நம்பித்தான் ஆகவேண்டுமென்ற கட்டாயம் கிடையாது; அப்படி நம்புவோரில் அனேகரது நம்பிக்கை பொய்த்துப்போக வாய்ப்புண்டு என்பதே உண்மை.
இயேசுவைக்கூட அன்றைய யூதர்கள், தச்சனாகிய யோசேப்பின் குமாரன் என்றுதான் நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் உண்மையில் அவர் யோசேப்பின் குமாரன் அல்ல என்பது மரியாளுக்கும் யோசேப்புக்கும் தேவனுக்கும் தேவதூதருக்கும் பிசாசுக்கும் மட்டுந்தான் தெரியும். இயேசுவை யோசேப்பின் குமாரன் என அன்றைய யூதர்கள் தவறாக நம்பியதை சில்சாம் ஏற்கப்போகிறாரா, அல்லது இயேசு யோசேப்பின் குமாரன் அல்ல எனும் உண்மையை சில்சாம் ஏற்கப்போகிறாரா?
எந்தவொரு விஷயத்திலும் நம்பிக்கை என்பது முக்கியமல்ல; உண்மைதான் முக்கியம். நாம் நம்புகிற ஒரு விஷயம் பொய்யாக இருக்க வாய்ப்புள்ளதென்றால், அவ்விஷயத்தில் முழு நம்பிக்கை வைக்காதிருப்பதே அறிவுடைமையாகுமேயொழிய, உணர்வு பூர்வமாக “மூடநம்பிக்கை” வைப்பது அறிவுடைமையல்ல.
குழந்தைப்பேறு இல்லாத எத்தனையோ பெற்றோர், பச்சிளங்குழந்தையை தத்தெடுத்து, தங்கள் குழந்தையாக வளர்ப்பதை நாம் அறிவோம். அக்குழந்தைக்கு தன்னை வளர்க்கும் பெற்றோர் தனது நிஜமான பெற்றோர் அல்ல எனும் உண்மை தெரியாவிடினும் அவர்களையே நிஜமான பெற்றோராக அது கருதிக் கொண்டிருக்கும். இம்மாதிரி குழந்தையைப் பொறுத்தவரை, அக்குழந்தையின் தந்தை யார் என்பது மட்டுமல்ல, தாய் யார் என்பதும் தெரியாது. இதெல்லாம் உலகத்தில் சகஜமாக நடக்கக்கூடிய காரியங்கள்.
எனவே எந்தவொரு மனிதனும் தான் பெற்றோராகக் கருதுபவர்தான் தனது உண்மையான பெற்றோர் என 100-க்கு 100 நம்பவேண்டிய அவசியமில்லை. மாறாக, “உண்மை எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும், அந்த உண்மையால் தனக்குப் பெருமையுமல்ல, இழிவுமல்ல” எனக் கருதுவதுதான் அறிவுடைமையாகும்.
என்னைப் பொறுத்தவரை எனது தாய் “நடத்தை கெட்டவளா, இல்லையா” என்பதுபற்றிய கவலையே எனக்கு இல்லை. எனது தாய் “நடத்தை கெட்டவளாக” இருக்கவும் வாய்ப்புண்டு, “இல்லாதிருக்கவும்” வாய்ப்புண்டு என்பதை நான் நன்கறிவேன். எனது தாய் என்கிற ஒரே காரணத்திற்காக அவரை “உத்தமியாக” நினைப்பதும், மற்றவரின் தாயை எளிதில் “நடத்தை கெட்டவளாகக்” கருதுவதும் எத்தனை மதியீனம் என்பதை நான் நன்கறிவேன்.
தனது தாய் “உத்தமி” என நம்புகிற சில்சாம், உலகிலுள்ள அத்தனை பேரின் தாயும் “உத்தமிதான்” என நம்புவாரா? நிச்சயம் மாட்டார். அப்படி நம்ப வேண்டிய அவசியம் எனக்கில்லை என்றுதான் சொல்வார். ஆம், இவ்விஷயத்தில் தனக்கொரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம் என்ற பாரபட்ச சிந்தையில்தான் சில்சாம் இருப்பார். ஆனால் என்னைப் பொறுத்தவரை, எனது தாயானாலும் சரி, வேறு யாரின் தாயானாலும் சரி, அவர்கள் “உத்தமியா, இல்லையா” எனக் கேள்வி கேட்கவும் மாட்டேன், அதைக் குறித்து தவறான நம்பிக்கை வைத்துக்கொள்ளவும் மாட்டேன்.
எனது தாயானாலும் சரி, வேறு யாரின் தாயானாலும் சரி, அவர் “நடத்தை கெட்டவளாகவோ அல்லது உத்தமியாகவோ” இருந்தால் அதன் பொருட்டு அவருக்குத்தான் “இழிவோ அல்லது பெருமையோ” தவிர அவரது பிள்ளைக்கு அல்ல எனும் உண்மையை நான் நன்கறிவேன்.
இந்த உண்மையை அறியாதவர்கள்தான், தனது தாயின் “நடத்தையின்மேல்” நம்பிக்கை வைத்து அதுகுறித்து மேன்மைபாராட்டுவார்கள்.
எனது தாயானாலும் சரி, வேறு யாரின் தாயானாலும் சரி, அவர் “நடத்தை கெட்டவளாகவே ” இருந்தால்கூட அவரையும் ஏற்றுக்கொள்ள என் மீட்பராகிய இயேசு தயாராயிருக்கும்போது, நான் ஏன் அவரை இழிவாக/மட்டமாகக் கருதவேண்டும், நான் ஏன் அவரைப் புறக்கணிக்க வேண்டும்?
எப்பேற்பட்ட பாவியாக (நடத்தை கெட்டவளாக)இருந்தாலும் அவரை மட்டமாகக் கருத நான் யார்? நான் என்ன பாவமில்லாதவனா? எனவே மதியீனன் சில்சாமுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன்: எனது தாய் “நடத்தை கெட்டவளா, இல்லையா” என்ற கேள்வியை நான் ஒருபோதும் எழுப்பவும் மாட்டேன்; அவர் “உத்தமிதான்” என 100-க்கு 100 நம்பிக்கை வைத்து, அதில் திருப்திப்படவுமாட்டேன். ஏனெனில் அந்த நம்பிக்கை தவறாகிப் போக வாய்ப்புண்டு என்பதை நான் நன்கறிவேன்; எனவே, அம்மாதிரி முட்டாள்தனமாக நம்புவதன்மூலம் நான் போலியாக திருப்திப்பட்டுக்கொண்டிருக்க மாட்டேன்.
உண்மையில், எனது தாய் எனக்கு 2 வயது ஆவதற்கு முன்பாகவே மரித்துப்போனார். எனக்கு விபரம் தெரிந்தபிறகு, எனது தாயின் நடவடிக்கையை நான் பார்த்தால்தானே, அவர் “உத்தமியா, நடத்தை கெட்டவளா” என்பதை ஓரளவாவது எடை போட முடியும்? அப்படியிருக்க, நான் எப்படி எனது தாயை “உத்தமியென்றோ, நடத்தை கெட்டவளென்றோ” நம்ப முடியும்?
எனக்கு மிகமிக அறிமுகமானவர்களில் சிலரது தாய், “வெளிப்படையாக நடத்தை கெட்டுத் திரிவதை” நானறிவேன், அதை அத்தாயின் மகனும் நன்கறிவார். அம்மாதிரி மகன் ஒருவர், சில்சாமின் பதிவைப் படித்தால் எத்தனை வேதனையடைவார்? சில்சாமின் பதிவால் எனக்கு எந்த வேதனையுமில்லை, ஏனெனில் சில்சாம் நினைப்பதுபோன்று உணர்வுபூர்வமானன் நான் அல்ல. ஆனால் ஒருவர் உணர்வுபூர்வமானவராக இருந்து, அவரது தாய் நடத்தை தவறியவளாகவும் இருந்தால், சில்சாமின் பதிவு அவரை எத்தனை வேதனைக்குள்ளாக்கும்?
சில்சாமின் பதிவு, பிறரது உணர்வைத் தூண்டி இழிவுபடுத்தும் உலகத்தாரின் வார்த்தைகளேயன்றி, விபச்சாரிகளையும் ஏற்றுக்கொண்ட இயேசுவைப் பின்பற்றும் ஒரு நல்ல கிறிஸ்தவரின் வார்த்தைகளல்ல. கிறிஸ்துவின் உபதேசத்தை மீறி நடக்கிற எவனுக்கும் வாழ்த்துதல் சொல்பவன், அவனது துர்க்கிரியைகளுக்கும் பங்குள்ளவனாகிறான் என 2 யோவான் 1:11 கூறுகிறது. சில்சாமுக்கு வாழ்த்து தெரிவித்து அவரது (அட்டு) ஊழியத்தை ஆசீர்வதிக்கிறவர்களுக்கு இவ்வசனத்தை நினைவூட்டுகிறேன்.
ஒருவரின் பிறப்பின் அடிப்படையில் அவர்களை இழிவாகக் கருதுகிற இந்த சில்சாம், அவரே ஒரு “விபச்சாரக்காரன்” என்பதை அறியாதவராக இருக்கிறார்.
உலகத்திற்கும் தேவனுக்கும் ஊழியஞ்செய்பவர்களை இயேசு கடிந்துகொண்டார். உலகத்துக்கு சினேகிதனாக இருப்பவன் தேவனுக்குப் பகைஞராகிறான் என்று சொல்லி, அப்படிப்பட்டவர்களை விபச்சாரர் என யாக்கோபு கூறினார் (யாக்கோபு 4:4).
சில்சாமோ, தேர்வு எழுதும் மாணவர்களுக்காக விரதமிருந்து ஜெபித்து, தன்னை உலகத்துக்கு சினேகிதனாவும் உலகத்துக்கு ஊழியஞ்செய்பவனாகவும் காட்டியுள்ளார். ஒருவேளை இவர் தேவனுக்கு ஊழியஞ்செய்யவில்லை எனச் சொன்னால், இவரை நான் “விபச்சாரக்காரன்” எனச் சொல்லமாட்டேன். ஆனால், தான் தேவனுக்கும் ஊழியஞ்செய்வதாக இவர் கூறினால், நிச்சயம் இவரும் ஒரு “விபச்சாரக்காரனே”.
இயேசு ஜனங்களைப் பார்த்து “பொல்லாத விபச்சார சந்ததியார்” எனச் சொன்னதற்குக் காரணம், எல்லோரது தாய்மார்களும் விபச்சாரம் செய்தவர்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. வேறு எந்த அர்த்தத்தில், என்பதையறிய பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.
யோவான் 8:37 நீங்கள் ஆபிரகாமின் சந்ததியாரென்று அறிவேன்; ஆனாலும் உங்களுக்குள்ளே என் உபதேசம் இடம்பெறாதபடியால், என்னைக் கொலைசெய்யத் தேடுகிறீர்கள். 38 நான் என் பிதாவினிடத்தில் கண்டதைச் சொல்லுகிறேன், நீங்களும் உங்கள் பிதாவினிடத்தில் கண்டதைச் செய்கிறீர்கள் என்றார். 39 அதற்கு அவர்கள்: ஆபிரகாமே எங்கள் பிதா என்றார்கள். இயேசு அவர்களை நோக்கி: நீங்கள் ஆபிரகாமின் பிள்ளைகளாயிருந்தால் ஆபிரகாமின் கிரியைகளைச் செய்வீர்களே. 40 தேவனிடத்தில் கேட்டிருக்கிற சத்தியத்தை உங்களுக்குச் சொன்ன மனுஷனாகிய என்னைக் கொல்லத் தேடுகிறீர்கள், ஆபிரகாம் இப்படிச் செய்யவில்லையே. நீங்கள் உங்கள் பிதாவின் கிரியைகளைச் செய்கிறீர்கள் என்றார். அதற்கு அவர்கள்: நாங்கள் வேசித்தனத்தினால் பிறந்தவர்களல்ல; ஒரே பிதா எங்களுக்குண்டு, அவர் தேவன் என்றார்கள். 42 இயேசு அவர்களை நோக்கி: தேவன் உங்கள் பிதாவாயிருந்தால் என்னிடத்தில் அன்பாயிருப்பீர்கள். ஏனெனில் நான் தேவனிடத்திலிருந்து வந்திருக்கிறேன்; நான் சுயமாய் வரவில்லை, அவரே என்னை அனுப்பினார்.
அன்றைய யூதர்களிடம் இருந்த புரிந்துகொள்தல்கூட இன்றைய சில்சாமிடம் இல்லை. இயேசுவானவர் என் பிதா, உங்கள் பிதா எனச் சொன்னதும், அவர் தங்களது மாம்சப்பிரகாரமான பிதாவைக் குறித்துச் சொல்லவில்லை என்பதைப் புரிந்துகொண்ட யூதர்கள், முதலில் தங்கள் பிதா ஆபிரகாம் என்றனர்.
பின்னர் இயேசு, அவர்கள் ஆபிரகாமின் பிள்ளைகளுமல்ல, தேவனின் பிள்ளைகளுமல்ல என்று சொல்லி, அவர்கள் பிசாசின் பிள்ளைகள் என்பதை மறைமுகச் சொன்னார். இதன் மூலம் இயேசு தங்களை விபச்சாரச் சந்ததி எனச் சொல்வதை அவர்கள் புரிந்துகொண்டனர். அதாவது தேவனின் பிள்ளைகளான அவர்கள், பிசாசுக்கும் பிள்ளைகளாக இருப்பதாக இயேசு சொன்னதைப் புரிந்துகொண்டு, தாங்கள் வேசித்தனத்தால் பிறந்தவர்கள் அல்ல என்றும், தங்களது ஒரே பிதா தேவனே என்றும் கூறினர்.
இங்கு அவர்கள் தங்கள் மாம்சப்பிரகாரமான தகப்பனின் அடிப்படையில், தாங்கள் வேசித்தனத்தால் பிறந்தவர்கள் அல்ல என வாதிடவில்லை. தேவன், பிசாசு எனும் 2 பிதாக்கள் தங்களுக்குக் கிடையாது, தேவன் ஒருவர் மட்டுமே தங்கள் பிதா என்ற அடிப்படையில்தான் தாங்கள் வேசித்தனத்தால் பிறந்தவர்கள் அல்ல என அவர்கள் வாதிட்டனர்.
எனவே விபச்சார சந்ததி என இயேசு அவர்களைச் சொன்னால், அவர்களின் மாம்சப்பிரகாரமான பிறப்பின் அடிப்படையில் அப்படிச் சொல்லாமல், அவர்களை பிசாசின் பிள்ளைகளாகக் கருதித்தான் அப்படிச் சொன்னார் என்பதை அன்றைய யூதர்கள் நன்கறி்ந்திருந்தனர். ஆனால், நம் மதியீன சில்சாமோ, பொல்லாத விபச்சார சந்ததியினர் என இயேசு சொன்னதன் அர்த்தத்தைப் புறக்கணித்துவிட்டு, தான் மாம்சப்பிரகாமாக இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தியதை இயேசுவின் வார்த்தைகளுக்கு ஒப்பாகச் சொல்லி தனது செயலை நியாயப்படுத்துகிறார்.
// என் தாய் தகப்பனை தூஷித்து எழுதும் ஒரு ஏளனத்தை விடவா... நான் இதை எழுதுவது அனுதாபம் தேடிக்கொள்வதற்கு அல்ல, என் நிலையில் இன்னொருத்தன் இருந்தால் அவன் எப்படி இதற்கு பதில் கொடுத்திருப்பான் என்பதை தாங்கள் புரிந்துக்கொள்ளவே!! உங்கள் காதுகளுக்கு சொல்ல விரும்புவது என்னவென்றால் என் தகப்பன் 2004ல் மரித்து விட்டார், இப்படி பட்ட ஒரு கேள்வி எனக்கு என் போதனையினால் தானே வந்திருக்கிறது!! இதை போல் ஒரு கேள்வியை நான் கேட்டிருக்கிறேனா!! ஆனாலும் நீங்கள் சில்சாமின் போதகத்தை நம்புவதால், நான் இப்படி எழுதியதற்கும் நிச்சயமாகவே ஏதாகிலும் வித்தியாசமாக தான் எழுதுவீர்களே தவிர, வேறு என்ன செய்வீர்கள்!! //
மேற்கண்ட வரிகள் கோவை பெரியன்ஸ் தளத்தின் இளங்கோ அவர்களுடையது;அவர் புலம்புவதுபோல நான் அவருக்கெதிராக இந்த குறிப்பிட்ட தாக்குதலைத் தொடுக்கவில்லை;அவர் மிக சமீபத்தில் தான் (2004) தன் தகப்பனாரை இழந்திருக்கிறார்;நானோ எனது 13 வது வயதிலேயே தந்தையை இழந்து (1982) லேயே அனாதையாக்கப்பட்டவன்;தகப்பனுடைய ஏக்கமும் தாயின் அருமையும் எனக்கு நன்கு தெரியும்;எனது தாய்,தந்தையைவிட சமுதாயத்தில் நான் சந்திக்கும் முதியவர்களை மிகவும் மதித்து நேசிக்கிறேன். எனவே இந்த வரிகளால் புண்பட்டிருக்கக்கூடிய இளங்கோ அவர்களிடம் எனது வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
ஐந்து பிள்ளைகளான எங்களை கரைசேர்க்க எனது தாயார் பட்டபாடுகள் எனக்கும் எனது இரட்சகருக்கும் மட்டுமே தெரியும்;இந்த நிலையிலிருந்து தாயின் அருமை உணர்ந்தவனாக யோசித்தே கேட்கிறேன்,எனது இரட்சகரை நோக்கி பணிந்துகொள்ளுவதற்கு எனக்கு உரிமையில்லாத காரணம் என்ன? அவர் தொழத்தக்கவரல்ல என்பது தானே? அவ்வாறு நிரூபணம் இல்லாத காரணத்தினால் அவர் தொழத் தக்கவரல்ல எனில் எனது பிறப்பே வீணானது என்கிறேன்;இதைவிட மேலான அக்கினி பரீட்சைக்கு யாரால் வரமுடியும்? காரியத்தின் உள்ளக்கிடக்கையைப் (intention) புரிந்துகொள்ளாமல் "ச்சும்மா" ஸீன் போடக்கூடாது,ஆமா..!
// நான் கோட்பாடு ரீதியான வேண்டுமென்றால் காட்டமாக எழுதியிருக்கலாம், ஆனால் சில்சாமை போன்று குடும்பத்தை தாக்கி எழுதினது கிடையாது //
இது என்மீது சுமத்தப்படும் மற்றொரு குற்றச்சாட்டு;அவர்கள் பொத்தாம்பொதுவில் எம்மைக் குறித்து, வேலைக்குப் போகாமல் குடும்பமே ஊர்ப் பணத்தில் பிழைக்கிறீர்களே என்ற ரீதியில் அருவருப்பான வர்ணனைகளுடன் தூஷித்து எழுதி ஒரு வருடத்துக்கு மேலாகிறது;அதுவும்கூட கோட்பாடு ரீதியிலான விமர்சனமா? இப்படி என்னைப் போன்றோர் தூஷிக்கப்படக் காரணம் என்ன? இவர்களுடைய நூதனமான உபதேசத்தை ஏற்றுக்கொள்ளாத ஒரே காரணம் தானே? இது எங்களுக்கு தேவையா? ஆம்,தேவை தான் என்றால் நான் எழுதியது உங்களுக்கு தேவையானதே..!
ஏனெனில் உங்கள் குடும்பங்களைக் குறித்து எதுவும் அறிந்திருக்கவில்லை;ஆனால் நீங்கள் எழுதுபவற்றில் என்னைக் குறித்து தனிப்பட்ட முறையில் அறிந்த பாதிப்பு தொடருகிறது;நான் உங்கள் குடும்பத்தைக் குறித்து அல்ல, இதுபோன்ற போதனை உங்கள் சந்ததியாருக்கு நல்லதல்ல என்று நானும் கோட்பாடு ரீதியிலே எழுதியுள்ளேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சில்சாம் என்ற நபரைக் குறித்த தனிப்பட்ட விமர்சனங்களுக்கு நான் எப்போதுமே தன்னிலை விளக்கம் கொடுப்பதையோ அனுதாபம் தேடுவதையோ விரும்புகிறதில்லை; "தூற்றுவோர் தூற்றட்டும், போற்றுவோர் போற்றட்டும்" என்று இரண்டையும் சமமாக பாவித்து தேங்கி நிற்கும் குட்டையாக அல்லாது ஓடிக்கொண்டிருக்கும் ஓடையாக சென்றுகொண்டிருக்கிறோம்;ஆனாலும் நாம் ஏற்றுக்கொண்ட ஆரோக்கிய உபதேசத்துக்கு விரோதமான கருத்தை எப்பேற்பட்ட பிரபலமான மனிதர் பரப்பினாலும் அதற்கு நம்முடைய எதிர்ப்பை வலுவாகப் பதிப்பதை நமது தாய்க்கு செய்யும் கடமையாகக் கருதி செய்துவருகிறோம்.
நம்முடைய (மேசியாவின்) எதிரி தளமான அநித்திய சீவல் தளத்தில் நம்மைக் குறித்து ஓயாத அலம்பல் நடைபெறுகிறது;அண்மையில் "சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்" என்ற தலைப்பில் நம்மேல் இருக்கும் வெறுப்பையெல்லாம் சேர்த்து காரசாரமான ஒரு கட்டுரையைத் தீ(தி)ட்டியிருக்கிறார், பொரியவர் அம்பு அவர்கள்;நல்லவேளை நாம் அவர் கையில் சிக்கவில்லை;சிக்கியிருந்தால் அவ்வளவு தான் கைமா பண்ணியிருப்பார் போல..!
எந்தவொரு மாற்றுக்கருத்தையும் எதிர்கொள்ளுவதற்கு முதலில் சகிப்புத்தன்மை வேண்டும்;தர்க்கசாஸ்திரம் தெரிந்திருக்கவேண்டும்;தர்க்கம் செய்வது தவறல்ல;பவுல் அப்போஸ்தலனே தர்க்கித்து பிரசங்கித்தான் என்று வாசிக்கிறோம்;ஆனாலும் தர்க்கத்தில் மூர்க்கத்தனம் இருக்கவே கூடாது;பொறுமை, நிதானம், மாற்றான் வலிமை,எதிரியின் உணர்வு இந்த அனைத்தையும் கவனத்தில் கொண்டே மோதவேண்டும்.
குருட்டுத்தனமான விவாதங்கள் இருதரப்பு வாசகர்களையும் சோர்வடையச் செய்துவிடும்; இங்கே எழுதும் யாரும் தனக்காக எழுதவில்லை; வாசகருக்காகவே எழுதுகிறோம்; வாசகருக்கு நாம் அறிவிக்கும் செய்தியின் உண்மைத் தன்மைக்கும் நேர்மைக்கும் நாம் பொறுப்பாளிகள் என்பதை மறந்துவிடக்கூடாது;மேலும் நாம் விவாதிப்பது தேவ காரியமாதலால் இதில் நம்முடைய சொந்த விருப்பு வெறுப்புகளையும் சுயத்தையும் ஒழித்துவிட்டு தேவனுக்காக மாத்திரமே எழுதுகிறோம் என்ற உணர்வுடன் எழுதவேண்டும்.
பெரும்பாலும் வசனங்களைத் தவறாகவே வியாக்கியானம் செய்து பழகிவிட்டதால் நாம் ஏற்கனவே அறிந்துள்ள வசனத்தின் கருத்து வெளிப்படும் வண்ணம் பொதுவாக எழுதினாலே போதும்;தேவைப்பட்டால் வாசகரின் கோரிக்கையின் பேரில் வசனத்தைக் கொடுக்கலாம்;ஆனால் இத்தனை நடைமுறைகளையும் கவனத்தில் கொள்ளாது கிறித்தவ விசுவாசத்தைக் குலைக்கும் ஒரே திட்டத்துடன் ஒரு சிலர் கைகோர்த்து செயல்படுகிறார்கள் எனில் அதனை எப்படி எதிர்கொள்வது?
(மேசியாவின்) எதிரி பச்சோந்தியைப் போல அவ்வப்போது நிறம் மாறிக்கொண்டே இருக்கிறான்;அவர்களுக்குள்ளேயே பல மோதல்கள் இருக்கிறது;ஆனால் அவ்வப்போது சுதாரித்துக்கொள்ளவும் புதிய ஆட்களைக் கவரவும் என்னைப் போன்ற அப்பாவிகளையும் அவ்வப்போது சீண்டிக்கொண்டே இருக்கிறார்கள்;அடியேன் கடந்த சில நாட்களாக இவர்களைக் குறித்து எதுவும் எழுதுவதில்லை என்பதை எனது வாசக நண்பர்களும் தளத்தின் சகோதரர்களும் நன்கு அறிவார்கள்;ஆனாலும் அவர்களுக்குள் ஆரம்பித்த ஒவ்வொரு விவாதத்திலும் என்னுடைய எழுத்துக்களை மேற்கோள் காட்டி எனது கருத்துக்களை சிதைப்பதையும் பொதுவான கிறித்தவ விசுவாசத்தைக் குறித்து கேள்விக் கணைகளைத் தொடுத்து சாதாரண மக்களைக் கலங்கப்பண்ணுவதையும் பார்த்துக்கொண்டும் அமைதியாகவே இருந்தோம்.
ஆனாலும் ஒரு குறிப்பிட்ட நண்பர் மிகுந்த கலக்கத்துடன் நேற்று மாலையில் என்னைத் தொடர்பு கொண்டார்; "இப்படியெல்லாம் அநியாயமா எழுதுறாங்களே, இதை எப்படி தடுப்பது,அவர்கள் எழுப்பும் இதுபோன்ற (உதாரணமாக திரித்துவம் சம்பந்தமாக..) கேள்விகளுக்கு என்ன விளக்கம் சொல்லலாம்" என்று கேட்டார்;அவர் கேட்ட தோரணையானது எனக்கே அச்சமாக இருந்தது;எங்கே இவரும் வஞ்சிக்கப்பட்டு விடுவாரோ என்று; ஆதியில்- ஏதேனில்- ஏவாளை வீழ்த்த சாத்தானானவன் என்ன யுக்திகளைக் கையாண்டானோ அதே யுக்திகளையே இந்த மோசடியாளர்களும் கையாண்டு வருகின்றனர்;இவர்களை எப்படி சமாளிப்பது?
இதுவரை நம்முடைய மார்க்க அறிஞர்களின் போதனைக்குக் கீழ்ப்படிந்து எதிர்த்து கேள்வி கேட்காமல் கேட்டதை அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டு அவர்களுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றிவருகிறோம்;இதுவே ஒரு தேர்ந்த மாணவனின் அடையாளமாகும்;அதையே ஆண்டவரும் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறார்;எதிர்ப்பது, கேள்வி கேட்பது, கலகம் செய்வது, பிரிந்துபோவது இவையெல்லாம் பிசாசின் குணமாகும்;கிறித்துவின் குணமோ கேட்பதும் விசுவாசிப்பதும் கீழ்ப்படிவதும் அர்ப்பணிப்பதும் சத்தம் கேட்டு சித்தம் செய்து அடங்கியிருப்பதுவும் மாத்திரமே;இதற்கு மிஞ்சினது அக்கிரமமாகும்.
ஆனால் அடங்காதவர்களும் கீழ்ப்படியாதவர்களும் கலகம் செய்பவர்களுமாகிய சில கிழவர்கள் (கிழவிகளின் வீண்பேச்ச என்று பவுலடிகள் குறிப்பிடுவது போல..) ஒன்றுக்கும் உதவாத பழங்கதைகளைப் பேசி சபைகளை சிதறடிக்கின்றனர்;அவர்களைக் குறித்து பவுலடிகள்,
"ஒருவன் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ஆரோக்கியமான வசனங்களையும், தேவபக்திக்கேற்ற உபதேசங்களையும் ஒப்புக்கொள்ளாமல், வேற்றுமையான உபதேசங்களைப் போதிக்கிறவனானால்,அவன் இறுமாப்புள்ளவனும், ஒன்றும் அறியாதவனும், தர்க்கங்களையும் வாக்குவாதங்களையும் பற்றி நோய்கொண்டவனுமாயிருக்கிறான்; அவைகளாலே பொறாமையும், சண்டையும், தூஷணங்களும், பொல்லாத சம்சயங்களுமுண்டாகி,கெட்ட சிந்தையுள்ளவர்களும் சத்தியமில்லாதவர்களும் தேவபக்தியை ஆதாயத்தொழிலென்று எண்ணுகிறவர்களுமாயிருக்கிற மனுஷர்களால் உண்டாகும் மாறுபாடான தர்க்கங்களும் பிறக்கும்; இப்படிப்பட்டவர்களை விட்டு விலகு." (1.தீமோத்தேயு.6:3,4,5)
எனவே இவர்களுடைய ஒரு கேள்விக்கும் நாம் பதிலைத் தேடி இவர்களைப் போல அலைபாய வேண்டிய அவசியமே இல்லை; "ச்சும்மா வாயை மூடிக்கொண்டிரு" என்று அதட்டினாலே போதும்; இயேசுவானவர் தம்முடைய சீஷர்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய ஒரே காரியம் , என்னைப் பின்பற்றிவா (follow me..!) என்பதே; அவரைப் பின்பற்றிச் சென்ற சீடர்களுக்கு என்னென்ன அனுபவங்கள் வாய்த்ததோ அவை நமக்கும் நிச்சயமாகவே வாய்க்கும்,வாய்க்கவேண்டும்,வாய்த்திருக்கிறது..!
அதுவே நாம் கற்றுக்கொண்ட ஒரே பாரம்பரியமாகும்; அன்றைக்கு இயேசுவைப் பின்பற்றிய சீடர்கள் மேய்ப்பர்களாக உயர்ந்தபிறகு ஆண்டவரே சொன்னபடி அவர்கள் ஆடுகளை மேய்த்தார்கள்.
"மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்." (யோவான்.21:17)
அந்த ஆடுகள் வளர்ந்து மேய்ப்பனாக உயர்ந்தது;அவர்களுக்கும் ஆடுகள் கிடைத்தது;எங்கெல்லாம் கலகக்காரன் நுழைந்தானோ அங்கெல்லாம் சங்காரம் விளைந்தது;உதாரணம்:அனனியா -சப்பீராள்.
இப்படியாக மேய்ப்புப்பணியையும் குருத்துவத்தையும் கீழ்ப்படிதலையும் அடங்கியிருந்து கற்றுத் தேறுவதையும் வேதமே போதிக்கிறது;இதற்கு பரிசுத்த புருஷர்கள் பலரையும் உதாரணமாகக் குறிப்பிடலாம்;பழைய ஏற்பாட்டில் மோசே-யோசுவா; புதிய ஏற்பாட்டில் பவுல் - தீமோத்தேயு; இவர்களெல்லாம் தனது தலைமைக்கும் தன்னை நடத்தியவர்களுக்கும் கட்டுப்பட்டார்கள்;அவர்களெல்லாம் தாந்தோன்றிகளாக செயல்படவில்லை; ஆனால் வேதத்திலேயே தாந்தோன்றிகளும் இருந்தனர்;அவர்கள் காளான்களைப் போலத் தோன்றி மறைந்தார்கள்.
"யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாச விஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள்.
ஆனாலும், இவர்கள் அதிகமாய்ப் பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும். " (2.தீமோத்தேயு.3:8,9)
விசுவாசம் கேள்வியினால் வரும் என்பதை பலரும் தவறாகப் புரிந்துகொண்டு கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்;ஆனால் விசுவாசம் என்பது சொல்லப்படுவதை கேட்பதாலும் அதனால் இருதயத்தில் உருவாகும் நம்பிக்கையினாலும் மட்டுமே வரும் என்று வேதம் சொல்லுகிறது;விசுவாசம் என்பது நம்பப்படுகிறவைகளின் உறுதியும் காணப்படாதவைகளின் நிச்சயமுமாம்.
இந்த பாரம்பரியத்தில் வளர்ந்தவர்களிடம் போய் எடக்கு மடக்காகக் கேள்வி கேட்டுகொண்டிருந்தால் எப்படி பதில் சொல்லுவார்கள்;தாங்கள் கற்பிக்கப்பட்டதையே சொல்லுவார்கள்;அதைக் கேட்டு "ஐயய்யே ஷேம் ஷேம் பப்பி ஷேம்" என்று அவர்களை கிண்டல் செய்வது,அவர்கள் நேசிக்கும் தலைவர்களையும் முன்னோர்களையும் தூஷித்து தரம் தாழ்த்திப் பேசுவது இவையெல்லாம் பிசாசின் குணங்களே.
இந்த தேசத்தில் கிறித்தவர்களே சிறு மந்தையாக இருக்கிறோம்; இதிலிருந்து இவர்களுக்கென ஒரு சிறுமந்தை வேண்டுமாம்;அதைச் செய்யவே தலைவர் இரஸ்ஸல் பணித்தாராம்; ஜாதி சங்கத்தார் கேட்பதுபோல உள் ஒதுக்கீடு கேட்கிறார்கள் போலும்..!
ஏனய்யா பரந்துவிரிந்த பாரத தேசத்தில் கிறித்துவை அறியாத கோடிக்கணக்கான மக்கள் உண்டே அங்கு சென்று நீ ஆத்தும ஆதாயம் செய்யலாமே என்றால் அதை மறுத்து அவர்களெல்லாம் ஆயிரம் வருட அரசாட்சியில் ஒரே லாட்'லே வந்துடுவாங்க, எங்க ஊழியம் கிறித்தவர்கள் மத்தியில் தான் என்கிறார்கள்; மேலும் பாவிகள் என்று யாருமே இல்லை; இயேசு உலக இரட்சகர் என்பதாலும் பாவ மன்னிப்புக்கான கிரயம் ஒரேதரம் செலுத்தப்பட்டு விட்டதாலும் சுவிசேஷம் என்பதெல்லாம் வேண்டாத வேலை; இப்போது உடனே செய்யவேண்டியது, இயேசுவை தெய்வமாக தொழுவோரை யெகோவா பக்கம் திருப்பி அவருடைய எல்லையில்லாத அன்புக்கும் மன்னிப்புக்கும் நடத்தவேண்டும்;அதையே இயேசுவும் செய்தார்,ஆனால் பாபிலோனிய வேசி சபைகள் தேவையில்லாமல் இயேசுவை தெய்வமாக்கி விட்டது; இதனால் பாவிகள் பெருகிப்போய் பாவமன்னிப்புக்காக நிற்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது; பாவிகளும் இல்லை பாவமன்னிப்பும் தேவையில்லை; பாவமே இல்லாததால் அதற்கு தண்டனையாக ஆக்கினைத் தீர்ப்பு என்பதோ நரகம் என்பதோ இல்லவே இல்லை என்று முழுப்பூசணிக்காயைகைப்பிடி சோற்றில் மறைத்து கைப்பிடி சுவற்றில் பிரதான தூதனைக் கொண்டு குதிரை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்; போதுமா, இவர்களைக் குறித்த விளக்கம்..?
அந்த மகா புத்திசாலிகள் இவற்றையெல்லாம் மறைத்துவிட்டு முதுகுக்குப் பின்னால் கத்தியையும் முகமெல்லாம் கள்ளச் சிரிப்புமாக வளையவந்து இளங் கன்னியரைக் கெடுத்துப்போடுவதைக் கண்டு சகிக்கமுடியாமலே அடியேனைப் போன்றோர் சொந்த சோகங்களையும் சுக துக்கங்களையும் மறந்துவிட்டு களத்தில் நின்று போராடிக்கொண்டிருக்கிறோம்;எனது அடுத்த கட்ட பணியாக இந்த விழிப்புணர்வு செய்தியையும் இவர்களைக் குறித்த விவரங்களுடன் அச்சிட்டு அனைத்து சபையினருக்கும் விநியோகிக்கப் போகிறேன்.
காரியம் இப்படியாயிருக்க, பொத்தாம்பொதுவில் என்னைக் குறித்து, "சில்சாம் எனும் விக்கிரகாராதனைக்காரனின் மதியீனங்கள்" என்று எழுதி பெரிதாக விவாதித்தால் நான் பயந்துவிடுவேனா என்ன? நான் விக்கிரகாராதனைக்காரனா இல்லையா என்பதைக் குறித்து மதிப்பீடு செய்ய உன்னை யார் நியமித்தது? நீ யெகோவா சாட்சிக்காரன் என்றாலும் நான் அப்படியல்ல என்று அவரையே மறுதலிக்கிறாய், சரி இயேசுவைத் தொழுகிறாயா என்று கேட்டால் பிசாசைப் போல அலறித் துடிக்கிறாய்; நீயெல்லாம் பைபிளை வாசித்து அதற்கு வியாக்கியானம் செய்யணும் அதை நாங்க கேட்கணும், இல்ல?
கிறித்துவை தெய்வமாகத் தொழுவோர் மட்டுமே கிறித்தவர்கள் என்று அகராதியே சொல்லுகிறது;வேதமும் அதையே முன்னுரைக்கிறது; ஆண்டவரும் வேதம் முழுவதும் தம்மைக் குறித்தே எழுதப்பட்டது என்று சொன்னார்;மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாகிய கர்த்தருடைய கிரியைகளை வேதம் முழுவதும் பார்க்கிறோம்;அவருடைய அற்புத செயல்களை டென் கமாண்ட்மெண்ட்ஸ் (Ten Commandments) முதல் பாஷன் அஃப் தி கிரைஸ்ட் (Passion of the Christ) வரை இன்னும் கருணாமூர்த்தி எனும் தமிழ் திரைப்படம் வரை கண்ணின் காட்சிகளிலும் பார்த்துவிட்டோம்; அதரிசனமான தேவனை திரைப்படங்களில் காட்டும் போது அவருடைய குரலைப் போன்ற கற்பனையான கம்பீரமான குரல் காட்சியின் பின்னணியில் ஒலிக்கும்;ஆனால் அவரே மனு உருவெடுத்து நன்மை செய்கிறவராக சுற்றித் திரிந்தபோது நடந்த சம்பவங்களை ஒரு நடிகர் மூலம் கண்டு மகிழ்ந்தோம்.
இதெல்லாம் பாவமில்லையா? தேவாதி தேவனின் குரலை ஒரு சாதாரணமான மனுஷன் இமிடேட் செய்யமுடியுமா? அல்லது இயேசுவைப் போல ஒருவன் நடிப்பது சரியாக இருக்குமா? இதெல்லாமும் தவறுதான் என்று நீர் சொன்னால் உம்ம வீட்டில் இருக்குக்கூடிய போட்டோ ஆல்பங்களையெல்லாம் தீயிட்டு கொளுத்தும்;அதையெல்லாம் கும்பிடவா செய்து வைத்திருக்கிறீர்? இதையும் நாங்கள் எதிர்க்கிறோம் என்று நீர் சொல்லுவீரானால் அடுத்து உம்ம பாஸ்போர்ட் ரேஷன் கார்டு எலக்ஷன் கார்டு எல்லாத்தையும் எடுத்துபோட்டு கொளுத்த வேண்டியதாகும்; அப்ப தான் உங்க வீட்டுல இருக்கிறவங்க உங்களை முழு பைத்தியம்'னு நம்புவாங்க;அதுவரை நீங்க அரை கிறுக்கு தான்,சரியா?
தற்காலத்தில் விஷுவல் மீடியாவின் வல்லமையை எதிர்கொள்ளவும் அதனைப் பயன்படுத்தி இன்னும் அநேகரைக் கிறித்துவிடம் சேர்க்கவும் இதுபோன்ற திரைப்படங்கள் பெரும் பங்காற்றியது;இன்னும் விழிப்புலன் இழந்தோர்க்கு (Blind People) ப்ரெயில் எழுத்திலும் ஒலி வடிவிலும் வேதாகமம் வழங்கப்படுகிறது;அப்படியானால் செவிப்புலன் இழந்தோர்க்கு எப்படி நற்செய்தி அறிவிப்போம்? அதற்கு உதவுவதே சித்திரங்கள்.
சித்திரங்களும் சரி மண் பொம்மைகளும் சரி தொழுது சேவிக்கும் நோக்கில் செய்யப்படவில்லை;சத்தியத்தைக் கற்பிக்கும் நோக்கத்திலேயே செய்யப்பட்டது;இது ஞாயிறு பள்ளியிலேயே துவங்கிவிட்டது; குழந்தைகளுக்கு கர்த்தருடைய செயல்களைக் கதைவடிவில் சொல்ல சித்திரங்களே பேருதவியாக இருக்கிறது;அந்த பிஞ்சு மனதில் இறை அச்சத்தையும் பக்தியையும் உருவாக்க இதைவிட சிறந்த வழி ஏதுமில்லை; காரணம் நாம் வாழும் தேசமே விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறது; அதிலிருந்து இளம் உள்ளங்களின் கவனத்தை மாற்றுவது அத்தனை எளிதான காரியமல்ல.
எனவே ஒரு சிறுவன் அல்லது சிறுமியின் இருதயத்தில் விசுவாசம் பெருகி அவர்கள் இயல்பாக ஆவியான தேவனைத் தொழுது சேவிக்கக் கற்பதற்கு முன்பதாக அவர்களுடைய பிஞ்சு உள்ளத்தின் சிந்தனைகளை ஒருங்கிணைக்க சித்திரக் கதைகள் உதவுகிறது;பிறகு கண்ணை மூடி பிரார்த்தனை செய்யும்போது இயல்பாகவே மனக்கண் முன்பாக தான் சித்திரக் கதையில் பார்த்த கேட்ட காட்சிகளுக்குள் மனம் செல்லும்;அதனை ஒருமுகப்படுத்தி அவர்கள் ஜெப வாழ்க்கையில் தேர்ச்சி பெற நாட்களாகும்;இன்னும் மனிதன் இயல்பாகவே கற்பனை வளமிக்கவன் என்பதால் மனதை சூன்யமாக வைத்துக்கொண்டு அவனால் சிந்தையை ஒருமுகப்படுத்தி வேண்டுதல் செய்வது என்பது இயலாத காரியம்;அவன் மனத்திரையில் வானமோ சிங்காசனமோ சூரியனோ வெளிச்சமோ இப்படி ஏதாவதொரு பொருள் தோன்றும், தோன்றவேண்டும்; அவனே ஆரோக்கியமான மனிதன்;
அதற்கு மாறாக ஒரு விக்கிரகத்தை சாத்தி வைத்து அதற்கு விளக்கேற்றி கண்ணை மூடாமல் அந்த விக்கிரகத்தை உற்றுப்பார்த்து ஒருவன் கைகூப்பி நின்றாலோ அல்லது எங்காவது தனது அபிமான தெய்வத்தின் உருவத்தைக் காணும்போது அவன் கையானது அவன் வாய்க்கு அருகில் செல்ல அவன் தன்னுடைய கட்டைவிரலை முத்தி செய்தால் அதுவே விக்கிரகாராதனை அல்லது தேவனுக்கு விரோதமான செய்கையும் நியாயாதிபதிகளால் விசாரிக்கப்படும் அக்கிரமமுமாக எண்ணப்படும்.
"நான் பொன்னின்மேல் என் நம்பிக்கையை வைத்து, தங்கத்தைப்பார்த்து: நீ என் ஆதரவு என்று நான் சொன்னதும்,
என் ஆஸ்திபெரியதென்றும், என் கைக்கு மிகுதியும் கிடைத்ததென்றும் நான் மகிழ்ந்ததும்,
சூரியன் பிரகாசிக்கும்போதும், அல்லது சந்திரன் மகிமையாய்ச் செல்லும்போதும், நான் அதை நோக்கி:
என் மனம் இரகசியமாய் மயக்கப்பட்டு, என் வாய் என் கையை முத்தி செய்ததுண்டானால்,
என்னை அறிவீனன் என்றும் மதியீனன் என்றும் இகழ்ந்து பொரியவர் அம்பு அவர்கள் எழுதிய உண்மைக்கு மாறான ஒரு கட்டுரைக்கும் நான் விக்கிரகாராதனை செய்பவன் என்ற பொய்ப் பிரச்சாரத்துக்கும் தகுந்த பதிலை நாகரீகமான முறையில் கொடுத்திருக்கிறேன்;இது எனக்கன்பான நண்பர்கள் கொல்வின் மற்றும் ஜோசப் ஸ்னேகா ஆகியோருக்கு திருப்திகரமாக இருக்குமானால் தயவுசெய்து சில வரிகள் குறிப்பிடவும்; மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும் தயங்காமல் எழுதவும்;ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நான் நெனச்சேன் நீங்க எழுதிட்டீங்க...நன்றி நண்பர் கொல்வின் அவர்களே..!
என்னுடைய கடினமான எழுத்துக்களுக்காகவும் இதினிமித்தம் தங்களுக்கு உண்டான சங்கடங்களுக்காகவும் மனதார வருந்துகிறேன்,நண்பரே;உங்கள் மனம் புண்படாமல் நான் எழுதவேண்டுமென்று என்னுடைய வேகத்தைக் குறைத்துக்கொண்டால் பிறகு அவர்களுக்கு பதில் சொல்லவே ஆளில்லாது போகும்;பவுல் அப்போஸ்தலனும் அவர்கள் வாயை அடக்கவேண்டும் என்றே சொல்லியிருக்கிறார்; தயவுசெய்து என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள். "பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்." (நீதிமொழிகள்.19:25) "அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்." (தீத்து.1:11)
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
மும்மூர்த்திகளுக்கு ஒரு பகிரங்க சவால்...முக்கியமாக பெரியவர் அன்பு58 (57? இது 2011 அல்லவா, அதான்) முன்பாக இந்த சவாலை வைக்கிறேன்;உங்கள் தளத்தில் நான் நுழையலாமா? முறைப்படி மீண்டும் அழைப்பு விடுத்தால் அங்கு வந்தே சந்திக்கிறேன்;ஆனால் உங்களுக்கு அந்த தைரியம் இல்லையென்பது எனக்குத் தெரியும்;அப்படியானால் நீங்கள் பெருந்தன்மையுடன் நடந்துகொண்டு என்னை மறைமுகமாகவோ நேரடியாகவோ குறிப்பிட்டு எழுதுவதை நிறுத்துங்கள்.
என் வேலையை நான் செய்கிறேன்,உங்கள் வேலையை நீங்கள் செய்யுங்கள்;உங்களுடைய வேலை என்பது ஓநாயைப் போல மந்தைகளை சிதறடிப்பது தானே;என்னுடைய வேலையோ உங்களைப் போன்ற ஓநாய்களை தோலுரிப்பது தானய்யா,அதுதான் ஏற்றுக்கொண்ட முழுநேரப் பணியாகும்;இதற்காக நான் எவனிடமும் சல்லிக்காசு பெற்றதில்லை;நான் ஒரு மேடைப்பாடகன், எனக்கு பார்வை தந்த தேவனைப் பாடி சம்பாதித்துப் பிழைத்து உங்களைப் போன்ற குருடர்களின் பொய்ப் போதகத்திலிருந்து அப்பாவிகளைக் காப்பாற்ற சபதெமெடுத்திருக்கிறேன்;உங்கள் தூக்கத்தைக் கெடுக்கவே நான் உறங்காமலிருக்கிறேன்..!
செருப்பு தைத்து ஊழியம் செய்த போதகர் வில்லியம் கேரியின் பாரம்பரியத்தையே நான் பின்பற்றுகிறேன்;அவர் போதகரா, இல்லை உங்கள் இரஸல் போதகரா? வில்லியம் கேரி இயேசுவைத் தொழுதால் நானும் தொழுவேன்,உங்களுக்கு ஏன் எரிச்சலாக இருக்கிறது? இயேசுவை தெய்வமாகத் தொழுவதைக் குறித்து மட்டுமே உங்களுக்கு தைரியமிருந்தால் வெளிப்படையாக விவாதியுங்கள்; திரித்துவத்தைக் குறித்துப் பேச உங்களுக்கு எந்த தகுதியும் இல்லை;ஏனெனில் மிருகத்துக்கு ஆத்துமா என்பது இல்லை என்பது தெரிந்தும் நீங்கள் மனிதனுக்குள்ளிருக்கும் ஆத்துமா என்பதை மறுத்து மிருகத்தைப் போலிருப்பவர்கள். ஒரு மாவட்ட கலெக்டர் மக்கள் ஊழியன் என்பது பொதுவான நோக்கமாக இருப்பினும் அவனுடைய பதவியைக் குறிக்கும்போது கலெக்டர் என்று மரியாதையுடன் குறிப்பிடுவதுபோலவே நாங்கள் எங்களைப் போதித்து நடத்திய முன்னோர்களையும் முதியவர்களையும் மரியாதையுடன் போதகர் அல்லது மேய்ப்பர் என்று குறிப்பிடுகிறோம்;நான் எங்க தாத்தாவை தாத்தா என்று குறிப்பிடாமல் உங்களையா தாத்தா என்று கூப்பிடவேண்டும்? இன்னா, தாத்தா பேரனை விட முட்டாளாக இருக்கிறாயே..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
பெரியவர் அன்பை மிக உயர்வாக எண்ணியிருந்தேன். அவரின் வயதுக்கு நாம் அவர் எத்தகைய கருத்து கொண்டவரைாக இருப்பினும் கண்டிப்பாக மரியாதை கொடுக்க வேண்டும்.
தமிழ்கிறிஸ்தவர்கள் தளத்தில் அவருக்கு சில இடர்பாடுகள் ஏற்பட்டபோதெல்லாம் குரல் கொடுத்திருக்கிறேன்.
ஆனால் கொஞ்சமும் பொறுப்பில்லாம் மற்றவர்களுக்கு உபதேசம் செய்து கொண்டு தகாத வார்த்தைப் பிரயோகங்களை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறார். தேவனிடம் பக்தியுள்ளவர்களிடமிருந்து இப்படிப்பட்ட பரிகாச வார்த்தைகள் ஒருபோதும் வரவே வராது. மற்றவர்களின் வார்த்தைப் பிரயோகங்கள் குறித்து தனது தளத்தில் எழுதும் அவர் தனது மகனின் வயதில் உள்ள ஒருவருக்கு மதியீனன் என்றும் பேதை என்றும் எழுதுவது கண்டிக்கத்தக்க செயல்.
எனது வன்மையான கண்டணத்தை பெரியவர் அன்புக்குத் தெரிவி்த்துக் கொள்கிறேன்
தமிழ்கிறிஸ்தவர்கள் தளத்தினையும் அதன் நிர்வாகிகளையும், அங்கு வரும் சகோதர்களையும் தூஷிப்பதும் கண்டிக்கத் தக்க செயலே! அங்கு பதிவிடுகிறவர்களும் அப்படியே எம்மை தூஷித்துவிட்டு தங்களை சுற்றவாளிகளாக காட்டுகிறார்கள்.
\\என்னை அறிவில்லாதவன் என்றோ மதியில்லாதவன் என்றோ அவர்கள் குறிப்பிட அஞ்சுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு;அதைக் குறித்து பிறகு எழுதுவேன்.//
அறிவில் + ஆதவன், மதியில் +ஆதவன் அறிவில் உயர்ந்தவன் என்ற மற்றுமொரு பொருளும் உண்டு நண்பரே
நம்முடைய இந்த எழுத்துக்கள் எதிரிகளின் கூடாரத்தில் கலக்கத்தை உண்டுபண்ணியிருக்கிறது;குடிப்பதற்கு வாங்கிய டீயைக்கூடப் பருகாமல் அதில் ஈ விழுந்து கிடக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்;இந்த ஒரு பின்னூட்டமானது மேசியாவின் எதிரி புதிய திரியைத் துவங்குமளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது;அதன் விவரங்களையறிய தொடுப்பைத் தொடரவும். யேகோவா சாட்சிக்காரரே..... நீங்கள்.....தான் அவர்களா?
மதியீனம், அறீவினம் -எனும் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என்றே தெரியாத மடையர்களாக சில பெரியவர்கள் செயல்படும் போது மனம் பதறுகிறது,இவர்களையெல்லாம் எப்படி நம்புவது எப்படி பின்பற்றுவது , என்று; ஈனம் அல்லது ஈனச் செயல் என்ற வார்த்தையை சேர்த்தவுடனே மதி என்பதும் அறிவு என்பதும் தரம் தாழ்ந்துபோகிறதே; மதி என்பதும் அறிவு என்பதும் ஞானத்திலிருந்து பிறக்கும் உபச் சொற்களாகும்;அத்துடன் ஈனம் என்ற வார்த்தையைச் சேர்க்கவேண்டிய அவசியமென்ன? நான் எழுதுவது முட்டாள்தனமான கருத்தாக இருந்தால் முட்டாள் என்றோ மூடன் என்றோ குறிப்பிடலாம்;ஆனால் இந்த பெரியவர் பூரண சற்குணர் என்பதால் அந்த வார்த்தையைக் குறிப்பிடமாட்டார்;அந்த வார்த்தைகள் இவரை எரிநரகத்துக்கு பங்காளியாக்கிவிடுமோ என்ற பயம்;ஆனால் அதையே உல்டா பண்ணி அறிவீனன் என்றும் மதியீனன் என்றும் குறிப்பிட்டால் தெய்வக் குத்தம் இல்லையென்று இந்த பூ விழுந்த கண்ணனுக்கு நினைப்பு..! ஆனால் மூடன் அல்லது முட்டாள் என்ற வார்த்தையை விட ஈனன் என்ற வார்த்தையே பயங்கரமானது என்பதை இந்த படுபாவி அறியாதிருக்கிறான்; ஈனன் என்பவன் யார் தெரியுமா,அதற்கு ஒரு எளிமையான உதாரணம், மரத்தில் தூக்கப்பட்டு சபிக்கப்பட்டவனாக தொங்குபவனே;அதுபோன்ற பயங்கரமான தண்டனையையே ஜீவாதிபதியான இயேசுவானவர் ஏற்றுக்கொண்டதனால் என்னுடைய ஈனநிலைமைகளை மாற்றிவிட்டார்; என் மீட்பர் உயிரோடிருக்கிறார் என்று பக்தன் யோபுவினால் புகழப்பட்டவரை நான் அனுதினமும் எனது ஆவியில் தரிசித்து சுத்த மனசாட்சியுடன் அவரையே சேவிக்கிறேன்;இதைக் கண்டு பொறாமைக் கொண்ட சத்துரு என்மீது ஈனமான காரியங்களைச் சாட்டி நான் செய்யும் ஒவ்வொரு காரியத்துடனும்ஈனன் என்ற வார்த்தையை இணைத்து குறிப்பிடுவதைக் கண்டு ஆனந்தமடைகிறேன்; காரணம்,கிறித்துவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூறும் இந்த தவக்காலத்தில் அவர் ஏற்றுக்கொண்ட சிலுவையின் ஈனத் தன்மையுடன் இணைத்து என்னைக் குறிப்பிடுவது நான் செய்த பாக்கியமாகும்; நீ என்னை ஈனன் என்று தூஷிப்பதால் நீ என்னை தூஷிக்கவில்லை;என்னை மீட்டுக்கொண்டவரையே தூஷிக்கிறாய்;உனக்குரிய பலன் அங்கிருந்தே வருவதாக;தரித்திரனையே தூஷிக்கக்கூடாது என்று கரிசனை கொண்ட தெய்வம் உன்னை சும்மா விடுவாரா என்ன?
என்னை அறிவில்லாதவன் என்றோ மதியில்லாதவன் என்றோ அவர்கள் குறிப்பிட அஞ்சுவதற்கு மற்றொரு காரணமும் உண்டு;அதைக் குறித்து பிறகு எழுதுவேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)