31. அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
32. அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாக பிரிக்கிறது போல அவர்களை அவர் பிரித்து,
33. செம்மறியாடுகளைத் தமது வலது பக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடது பக்கத்திலும் நிறுத்துவார்.
34. அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
36. வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.
37. அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவர்களாகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவர்களாகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்?
40. அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
42. பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன் நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை;
43. அந்நியனாயிருந்தேன் நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்கவரவில்லை என்பார்.
44. அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதியுள்ளவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவிசெய்யாதிருந்தோம் என்பார்கள்.
45. அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
46. அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.
வேதத்தில் மிக வித்தியாசமாக இருக்கும் இந்த பகுதியினால் அனேகர் குழப்பமடைவது உண்டு. இதை வைத்து நித்திய ஜீவனை அடைய இயேசுவை அறிய வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை, சில கிரியைகள் செய்தால் மட்டுமே போதுமானது என்று சிலர் போதிக்கவும் இடம் உண்டு.
ஆகவே இந்த வசனம் சொல்ல வரும் உண்மையான செய்தி என்ன என்பதை ஆராய்வது முக்கியமானதாக இருக்கிறது. மத்தேயு 25 முழுவதுமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்க்குரிய செய்தியாகும். அது இயேசுவின் இரண்டாம் வருகையின் போது நடக்க கூடிய நிகழ்வுகள்.
இயேசுவின் ரகசிய (இரண்டாம்) வருகையின் போது,
1. அவரை உண்மையாக பின்பற்றினவர்கள் எடுத்து கொள்ளப்படுவார்கள்
2. அரைகுறையாய் இருக்கும் விசுவாசிகள் தாங்கள் எடுத்து கொள்ளப்படாததை கண்டு, தேவனை அடைய வேண்டும் என்பதற்காக வைராக்கியம் கொண்டவர்களாக மாறுவார்கள். ஆனால் இவர்கள் அந்தி கிருஸ்துவினால் மிகுந்த துயரத்திற்குள்ளாவார்கள். இவர்களில் அனேகர் இரத்த சாட்சியாக மரிப்பார்கள்.
3. இரண்டாவதாக சொல்லப்பட்ட மக்கள் அந்திகிருஸ்துவினால் துன்பமடையும் போது, மிக ரகசியமாக அவர்களுக்கு சிலர் (மற்ற மதத்தை சேர்ந்தவர்கள்) உதவி செய்வார்கள். துன்பமடைபவர்களுக்கு உணவும், உடையும், இருப்பிடமும் கொடுத்து அவர்களை பாதுகாப்பார்கள்.
கிருத்துவர்களுக்கு உதவி செய்வதின் மூலம் தங்களுக்கு துன்பமும், உயிர் சேதமும் வரக்கூடிய வாய்ப்பு இருந்தும் இவர்கள் கிருத்துவர்களுக்கு உதவுவார்கள்.
இவர்களுக்கு உதாரணம் : இஸ்ரவேலில் பிறக்கு ஆண் குழந்தைகள் அனைவரையும் கொல்ல சொல்லி பார்வோன் உத்தரவிட்ட பின்னும், குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவச்சிகள்.
தனது ஜனங்களுக்கு நன்மை செய்த மருத்துவச்சிகளை தேவன் அன்று ஆசிர்வதித்தது போலவே, நியாயத்தீர்ப்பு நாளில் அந்திகிருஸ்துவின் ஆட்சியின் போது தங்கள் உயிரையும் பாராமல் கிருஸ்துவர்களுக்கு உதவி செய்த ஒரு கூட்டத்தினருக்கு நித்திய ஜீவனை அவர் தருவார். இதுவே இந்த வசனங்கள் சொல்லும் செய்தியாகும்.
இந்த மூன்று கூட்டத்தினரையும் பழைய ஏற்பாட்டு காலத்திலும் காணலாம். அது
அந்தி கிருஸ்துவுக்கு உதாரணம் : யேசபேல்
முதல் கூட்ட ஜனத்துக்கு உதாரணம் : எலியா
அவர்கள் பேசிக்கொண்டு நடந்துபோகையில், இதோ, அக்கினிரதமும் அக்கினிக் குதிரைகளும் அவர்கள் நடுவாக வந்து இருவரையும் பிரித்தது; எலியா சுழல்காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப்போனான். (2.இராஜா.2.11)
யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான். (1.இராஜா 18:3 & 4)
13. (ஒபதியா எலியாவிடம் சொன்னது) யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோடுகிறபோது, நான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறு பேரை ஒவ்வொரு கெபியிலே ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, பராமரித்துவந்த என்னுடைய செய்கை என் ஆண்டவனுக்கு அறிவிக்கப்படவில்லையோ?
14. இப்போதும் என் ஆண்டவன் என்னைக் கொன்றுபோடும்படியாக, நீர்: இதோ, எலியா வந்திருக்கிறான் என்று போய் அவனுக்குச் சொல் என்று சொல்லுகிறீரே என்றான்.
4. இந்த மூன்று கூட்ட ஜனத்தை தவிர நான்காவது ஒரு கூட்டமும் உண்டு. அதுதான் இஸ்ரவேலிலே எடுத்து கொள்ளப்படும் ஒரு லட்சத்து நாற்பத்து நான்காயிரம் பேர். இவர்களுக்கு உதாரணம் :
18.ஆனாலும் பாகாலுக்கு முடங்காதிருக்கிற முழங்கால்களையும், அவனை முத்தஞ்செய்யாதிருக்கிற வாய்களையுமுடைய ஏழாயிரம்பேரை இஸ்ரவேலிலே மீதியாக வைத்திருக்கிறேன் என்றார்.
மத்தேயு 25.40 ல் இயேசு கிருஸ்து சிறியவர், சகோதரர் என இரண்டு பதங்களை பயன்படுத்துகிறார். இயேசுவின் சகோதரன் என்னும் பதம் தேவனுடைய சித்தத்தை செய்பவர்களையே குறிக்கும் அன்றி ஏழைகளை குறிப்பிடும் சொல் அல்ல. ஆகவே இவர்கள் கிருஸ்துவர்கள் என அறியலாம். சிறியவன் என்ற பதத்தை தன் சீடர்களை, விசுவாசிகளை குறிக்க அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (மத்தேயு 10.42)
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும். (மத்தேயு 18.6)
10. இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்பொழுதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஆகவே இந்த வசனங்கள் இயேசு கிருஸ்துவின் இரண்டாம் வருகையின் போது நடக்க கூடிய காரியங்களை பற்றி, அப்போது எழும்பும் ஒபதியாக்களை பற்றி சொல்லும் வசனங்கள் என அறியலாம்.
ஏழைகளுக்கு செய்யும் கிரியைதான் முக்கியமானது அதுவே ஒருவருக்கு நித்திய ஜீவனை தரும் என இந்த வசனங்களை வைத்து ஒருவர் சொல்ல முடியாது.