பின்வரும் குறிப்பிட்ட கட்டுரையானது நான் கடந்துவந்த அனுபவமாகும்; இதைக் குறித்த பாராட்டையும் ஆலோசனையையும் வாழ்த்தையும் தவிர மற்ற எல்லாம் பின்னூட்டமாக வந்து சேர்ந்து அது ஒரு பெரிய விவாதமாகவே சென்றுகொண்டிருப்பதால் இந்த அனுபவத்தின் முக்கியத்துவத்தைக் கருதி இதனை மறுபதிப்பு செய்கிறேன்;இதனைத் தொடர்ந்து தளத்தின் மேற்பார்வையாளனான நான் எதிர்பார்ப்பது தள நண்பர்களின் பல்வேறு அனுபவங்கள் மற்றும் இதுபோன்ற இரகசிய கிறித்தவர்களின் சிலிர்க்க வைக்கும் இனிமையான அனுபவங்கள் மாத்திரமே;தயவுசெய்து அனுபவங்கள் பகுதியில் பதிக்கும் கட்டுரையை விவாதமாக்க வேண்டாம்;ஆனாலும் அதன் பாதிப்பில் எழும் கருத்துக்களைத் தனி திரியாகத் துவங்கி அதற்குரிய பகுதியில் பதிக்குமாறு வேண்டுகிறேன்;தள நண்பர்கள் துவக்கும் எந்தவொரு கட்டுரை அல்லது விவாதத்தையும் பிழைதிருத்தவும் அதற்குரிய பிரிவில் சேர்க்கவும் நான் பொறுப்பேற்றுக் கொள்ளுகிறேன்.
Posted On Wed Feb 2 10:43:10 2011 சென்னையிலுள்ள மகளிர் விடுதியில் தங்கி மின்புத்தகப் பதிப்பாளர் (e-publishing) அலுவலகத்தில் பணிபுரியும் சகோதரிகளை அறிவேன்; அவர்களில் ஒவ்வொருவரும் தென் மாவட்டத்தின் ஒவ்வொரு பகுதியைச் சேர்ந்தவர்கள்;அவர்களுக்கு கடந்த ரெண்டு வருடமாக நற்செய்தி மற்றும் ஆலோசனை கூறி பிரார்த்தனையில் உதவி செய்கிறேன். அவர்களில் ஒரு சகோதரிக்கு வரும் 13-ந்தேதி திருமணமாகப் போகிறது;அவர்களுடைய திருமணத்துக்கு முன்பதாக சத்தியத்தை அறிந்துள்ள அவர்கள் அதற்குக் கீழ்ப்படிந்து ஞானஸ்நானம் எனப்படும் திருமுழுக்கு எடுக்க விரும்பினார்கள். பாரம்பரிய இந்து குடும்பத்தைச் சேர்ந்த அந்த சகோதரி இயேசுகிறித்துவை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டாலும் அவர்களால் வீட்டை விட்டு வெளியேற முடியாது;ஒரு இளம்பெண் விசுவாசத்தினிமித்தம் வீட்டை விட்டு வெளியேறி, பாதுகாப்பான- கௌரவமான ஒரு வாழ்க்கையை அமைத்துக்கொள்வது என்பது மிகவும் சிரமமான காரியம் எனும் நடைமுறையான உண்மையை அறிந்த நான் அவர்களை வீட்டைவிட்டு வெளியேறிவர ஊக்கப்படுத்தாமலும் தனது விசுவாசத்தினிமித்தம் திருமணத்தைத் தள்ளிப்போட அனுமதிக்காமலும் அவர்கள் சரியான வயதில் திருமண வாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பினேன். நான் அவர்களுக்காக ஜெபித்துச் சொன்ன அடையாளங்களின்படியே ஒரு வரன் அமைந்து திருமணத்துக்கு ஆயத்தமாகிறார்கள்;இதனிடையே அவர்கள் தனது சாட்சியை சபைக்கு முன் அறிவிக்கவும் திருமண வாழ்க்கைக்கு முன்பதாக தன்னைப் பரிசுத்தமாக்கிக் கொள்ளவும் விரும்பினார்கள். அவர்களை என்னிடம் அறிமுகப்படுத்திய மற்றொரு சகோதரியோ ஞானஸ்நானம் எனப்படும் திருமுழுக்கைக் குறித்து அச்சப்பட்டு, 'திருமுழுக்கு எடுத்தபிறகு அவள் இந்துமுறைப்படியான திருமணத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் உட்படுத்தப்பட வேண்டியதாகுமே, இதனால் கர்த்தரை மறுதலித்த குற்றம் நிகழுமே' என்றார்கள். நான் மிகத் தெளிவாக அவர்களுக்குச் சொன்னது என்னவென்றால், "மற்றவர்களைக் குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன்.அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள். என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன." (1.கொரிந்தியர்.7:12 - 14) -எனும் பவுலடிகளின் ஆலோசனையின் படி திருமுழுக்கு என்பது விசுவாச வாழ்க்கைக்கான ஆரம்பமே தவிர அது ஒரு முடிவல்ல;இதில் நம்மைக் குற்றப்படுத்தவும் தண்டிக்கவும் யாருக்கும் அதிகாரமில்லை;ஏனெனில் நியாயாபதி கர்த்தரே, அவரோ மிகுந்த கிருபையுள்ளவர்;எனவே விசுவாசத்தை ஒரு அக்கினி போல அவியாமல் காத்துக்கொண்டு, நாம் இருக்கும் சூழ்நிலைக்குள்ளிருந்தே நிதானமாக முன்னேறி முழு குடும்பத்தையும் கிறித்துவுக்காக ஆதாயப்படுத்தமுடியும் ' என்றேன். என்னுடைய ஆலோசனையானது அந்த சகோதரிகளுக்கு ஏற்புடையதாகவும் திருமணத்துக்கு முன்பதாக திருமுழுக்கு எனும் கட்டளையை நிறைவேற்றிட அந்த சகோதரி விரும்பியதாலும் நான் அந்த சகோதரி ஞானஸ்நானம் எனும் திருமுழுக்கு எடுப்பதற்கான காரியங்களை குறித்து ஆலோசித்தேன். தற்காலத்தில் திருமுழுக்கு எடுப்பது என்பது அத்தனை சாதாரணமான காரியமல்ல;இது சம்பந்தமாக பல அனுபவங்கள் வழியாக அடியேன் கடந்துபோனதுண்டு.இப்போதும் அதேவிதமான சோதனைகள் வந்தது; அதாவது ஒரு ஆத்துமா ஞானஸ்நானம் எடுக்க முதலில் அவசியமானது விசுவாசம் மட்டுமல்ல, தண்ணீரே மிகமிக அவசியமானதாகும். ஏனெனில் பொது இடத்தில் ஞானஸ்நானம் கொடுக்கும்போது பல்வேறு பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதாகிறது;இதனால் ஏதாவது ஒரு சபையில் அந்த வளாகத்தில் கட்டப்பட்ட தொட்டியில் ஞானஸ்நானம் கொடுக்கலாமெனில் பல சபைகளில் தண்ணீர் நிறைப்பது பிரச்சினையாகும்; அதிலும் ஒரே ஒரு ஆத்துமாவுக்காக ஒரு தொட்டி தண்ணீரை வீணாக்க பலரும் விரும்புகிறதில்லை;மேலும் ஞானஸ்நானம் எடுக்கும் ஆத்துமாவால் தன்னுடைய சபைக்கும் தன்னுடைய ஊழியத்துக்கும் என்ன பயன் என்றே பல ஊழியர்கள் யோசிக்கின்றனர்;இதுபோன்ற பிரச்சினைகளை சமாளிக்க பல சபைகளில் மாதத்துக்கு ஒருமுறையே ஞானஸ்நானம் கொடுக்கப்படுகிறது;இன்னும் வாராவாரம் ஞானஸ்நானம் கொடுக்கக்கூடிய சபைகளிலும்கூட போன உடனே ஞானஸ்நானம் கொடுத்துவிடமாட்டார்கள்; அவர்களுக்கென்று இருக்கும் ஒழுங்கின்படி குறிப்பிட்ட சில வாரங்களுக்கு ஞானஸ்நானம் சம்பந்தமான போதனைகள் கொடுக்கப்பட்ட பிறகே ஞானஸ்நானம் தருவார்கள்; என்னைப் போன்ற தன்னார்வப் பணியாளர்கள் மூலம் ஆதாயப்படுத்தப்படும் ஆத்துமாக்கள் ஆங்கீகரிக்கப்படுவதில் நடைமுறை சிரமங்கள் இருக்கிறது; இத்தனைக்கும் என்னால் பராமரிக்கப்படும் புதிய விசுவாசிகளை எனக்கென்று சொந்தமாக சபை இல்லாததால் அந்தந்த பகுதிகளில் இருக்கும் சபைகளுக்கே ஆராதனைக்காக அனுப்புகிறேன். கிறித்துவுடன் அறையப்பட்ட வலதுபக்கக் கள்ளனுக்குக் கிடைத்த பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்குமா என்ன, என்னுடைய முயற்சியில் சற்றும் மனந்தளராது அந்த சகோதரியின் விருப்பத்தை நிறைவேற்ற ஒரு மிஷினரி ஸ்தாபனத்தைத் தொடர்புகொண்டேன்; கடந்த ஐந்து வருடங்களாகவே அவர்களுடைய ஸ்தாபனத்தின் மூலம் நடைபெறும் வருடாந்திர குடும்ப விழாவில் நடைபெறும் பணித்தள விசுவாசிகளின் ஞானஸ்நான ஆராதனையில் என்னுடைய முயற்சியினால் ஆதாயப்படுத்தப்பட்டோருக்கும் திருமுழுக்கு பெறச் செய்வது என்னுடைய வழக்கமானதால் திருமுழுக்கு பெறவிரும்பிய சகோதரியிடம் மிகவும் நம்பிக்கையுடன் கடந்த 26- ம் காலையில் ஆயத்தமாகி வந்து விடும்படி சொல்லிவிட்டேன்.அதற்கு முன்பதாக மிஷினரி ஸ்தாபனத்தின் பொறுப்பாளர்களிடம் சகோதரியின் பெயர் விவரத்தையும் அவர்கள் சம்பந்தமான சாட்சியையும் சொல்லி லிஸ்ட்டில் அவர்கள் பெயரைச் சேர்க்கச் சொல்லியிருந்தேன்,அவரும் சரி என்றார்; ஆனால் 25-ம் தேதி பின்னிரவில் அதாவது ஞானஸ்நான ஆராதனைக்கு முந்திய நாள் மிஷினரி ஸ்தாபனத்தின் இயக்குநர் தொடர்பு கொண்டு 'வெளியாட்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்க இயலாது,ஏனெனில் பணித்தள விசுவாசிகளுக்காகவே விசேஷமாக ஒழுங்குசெய்யப்பட்டுள்ளதால் அதில் வேறு யாரும் ஞானஸ்நானம் பெறுவதை சிலர் விரும்பவில்லை;தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள், நாங்கள் செய்யும் ஊழியத்தில் உண்மையுடையவர்களாக இருக்க விரும்புகிறோம் ' என்றார்; 'சரி,அண்ணே நான் வேறு வாய்ப்பை யோசிக்கிறேன், நமக்கென்று இருக்கும் கொள்கைகளைக் காப்பாற்றுவதே முக்கியமல்லவா,' என்று கூறி விடைபெற்றேன். அடுத்து அதே நாளில் நான் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த மற்றொரு சபையின் போதகரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவர் மிகுந்த சந்தோஷத்துடன் ஒப்புக்கொண்டு வரச் சொன்னார். (தொடரும்...) ebi On Wed Feb 9 15:25:17 2011 அந்த சகோதரிக்கு ஞானஸ்நானம் கொடுக்கப்பட்டதா? மீதியையும் சொல்லுங்களேன்... chillsam On Thu Feb 10 08:16:55 2011
இத.. இத.. இதத்தான் நான் எதிர்பார்த்தேன்...இதோ வந்துட்டன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)