விசுவாசத்தை வர்த்திக்கச் செய்யும் அருமையான நிகழ்ச்சி... இதே காரியத்தை கல்யாண வீட்டில் மீதமான பிரியாணி உணவுடன் ஒப்பிட்டுக் கூறி "யோவான் மூணு பதினாறு சொன்னா கிடைக்குங் கறிச் சோறு " என்பதாக எனது சிறுவயது பிராயத்தில் ஞாயிறு பள்ளியில் சொன்ன ஞாபகம் இருக்கிறது. ஆனால் இக்காலத்தில் சில ஊழியர்கள் தங்கள் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கவே சமூக சேவையாற்றுவதாக பிரச்சாரம் செய்கிறார்கள்;அதிலும் காசு பார்ப்பது கேவலம்..!
பகிர்ந்துகொண்ட நண்பர் கொல்வின் அவர்களுக்கு நன்றி..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
தேவன் தன் தேவைகள் அனைத்தையும் சந்திப்பார் எனும் விசுவாசத்துடன் இவ்வுலகில் வாழ்ந்தவர் ஜோர்ஜ் முல்லர் என்பவராவார். (1805-1898) இங்கிலாந்திலுள்ள பிரிஸ்டல் என்னுமிடத்தில் அநாதைப் பிள்ளைகளைப் பராமரித்து வந்த இவர் தேவனை மட்டுமே நம்பி வாழந்தார். நூற்றுக்குமதிகமான அநாதைப் பிள்ளைகளைப் பராமரித்து வந்த ஜோர்ஜ் முல்லர் எவரிடமும் தன் அநாதை விடுதிக்குப் பணம் தரும்படி கேட்கவேயில்லை. தேவன் தன் பராமரிப்பிலுள்ள பிள்ளைகளை எப்படியும் போஷிப்பார் எனும் உறுதியான விசுவாசத்துடன் அவர் வாழ்ந்து வந்தார்.
ஒருநாள் காலையில் பிள்ளைகளுக்கு சாப்பிடுவதற்கு எதுவுமே இருக்கவில்லை. ஆனால் தேவன் எப்படியும் அன்றைய காலை ஆகாரத்தைத் தருவார் என விசுவாசித்த ஜோர்ஜ் முல்லர், பிள்ளைகள் அனைவரையும் உணவு மண்டபத்தில் இருக்கச் செய்து, “அன்பின் தேவனே, நீர் எமக்கு இன்று தரப்போகின்ற உணவுக்காக நன்றி“ என்று ஜெபித்தார்.
ஜோர்ஜ் முல்லர் ஜெபித்து முடித்த உடன் பேக்கரியிலிருந்து புதிய பாண் (Bread) வந்து சேர்ந்தது. பானைக் கொண்டு வந்தவன் “இரவில் தேவன் என்னோடு பேசி காலையில் கொடுக்கும்படிச் சொன்னார்“ என்று ஜோர்ஜ் முல்லரிடம் தெரிவித்தான்.
அன்றைய தினம் காலையில் வழமைப்போல் விற்பனைக்காக பால் கொண்டு சென்ற ஒருவனது வண்டி உடைந்தமையால், இனிமேல் தன்னால் பாலை விற்கமுடியாது என்பதை அறிந்து அதை ஜோர்ஜ் முல்லரின் அநாதை விடுதிக்குக் கொடுத்தான். சிங்கக்குட்டிகள் தாழ்ச்சியடைந்து பட்டினியாயிருக்கும்; கர்த்தரைத் தேடுகிறவர்களுக்கோ ஒரு நன்மையுங் குறைவுபடாது. (சங். 34.10) என்பதற்கு ஜோர்ஜ் முல்லரின் வாழ்க்கை சிறந்த உதாரணமாய் உள்ளது. கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார். உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார். (சங்.37:4-5)