golda wrote:அவர் தாடி பற்றி ஒரு ஆதாரமும் இன்றி துணிகரமாக பொய் சொல்லி விட்டோமே என்று மனம் பதைக்கவில்லையா?
நான் பொய் சொல்லவில்லை,கோல்டா; நீங்கள் அவருடைய ஆதரவாளர் தானே, சாதுவின் அப்பாயிண்ட்மெண்ட்டை வாங்கிக்கொண்டு வாருங்கள் நாம் இருவரும் சென்று நேரடியாகவே பார்த்துவந்துவிடுவோம்.சாதுஜியின் தாடி முழுவதும் நரைத்ததா, போலியா என்பதை இங்கிருந்து சோதிக்கும் வித்தை எனக்குத் தெரியாது.
திருமணம் செய்துகொள்ளாத ஒரே காரணத்தினால் ஒருவர் புனிதராகி விடமாட்டார்;அப்படியானால் விடுதலை சிறுத்தைகள் இயக்கத் தலைவர் திருமாவளவன் சாதுவைக் காட்டிலும் பல்லாயிரம் மடங்கு உயர்ந்த நிலையில் இருக்கிறார் எனலாம்;ஏனெனில் அவர் ஒரு உலக மனுஷனாக இருந்தாலும் இந்த ஆட்களைப் போல போலியான வெளிப்பாடுகளால் ஏழை எளிய மக்களை ஏமாற்றவில்லை;சாதாரண மக்களின் அன்றாட பிரச்சினைகளுக்காகத் தெருவில் நின்று போராடுகிறார்;குறுகிய காலத்தில் திரள்கூட்டத்தைச் சேர்த்திருக்கிறார்.
ஆனால் சாதுஜியைப் போன்ற மோசடிப் பேர்வழிகள் ஏழை மக்களின் கோடிக்கணக்கான ரூபாய்களை சுருட்டி சன்டிவி , ஏர்டெல் போன்ற பகல் கொள்ளையரிடம் கொடுத்தது போக தங்களுக்கு சுகபோக வாழ்க்கையை அமைத்துக்கொண்டனர்;இவர்கள் கிறித்துவுக்காக சாதித்தது ஒன்றுமில்லை.
எருசலேம் நகரில் தான் தூதன் இறங்குவான் எத்தனை மாயையான பொய்ப் போதகம் தெரியுமா? அது பெரும்பான்மை இஸ்லாமியரின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுற்றுலா நகரம் என்பதையும் அங்கே எருசலேம் தேவாலயம் இருந்த இடத்தில் தற்போது அல் அஸ்கா எனும் மசூதி இருப்பதையும் மறைத்துவிட்டு அது புனித நகரம் என்று சொல்லி ஜனங்களை வஞ்சிக்கிறார்களே,இது நியாயமா?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//விபச்சாரம் பண்றான்,சாராயம் குடிக்கிறான் என்று தூஷிக்கிறார்கள்//
ஆனால் இப்படியெல்லாம் இங்கு யாரும் சொல்லவில்லையே!?
ஆம் நண்பரே, சாதுஜி இவ்வாறாகப் புலம்பிக் கொண்டிருந்தபோது , "இதெல்லாம் வேற நடக்கிறதா, எனக்குத் தெரியாம போச்சே" என்றுதான் தோன்றியது; இவர்களெல்லாம் எதற்கும் துணிந்தவர்களாக்கும்; எல்லாவற்றுக்கும் மேலான தமாஷான வாதம் என்னவென்றால், "தவறு செய்பவன் ஆதாரம் வைத்துக்கொண்டா செய்வான்?" என்று அவர் கேட்டது தான் உச்சக்கட்டம்; ஆம்,அந்த தைரியத்தில் தானே காலம் ஓடிக்கொண்டிருக்கிறது? ஏன் சாமியார் நித்தியானந்தா கூட தான் அகப்படும் வரைக்கும் மாத்திரமல்ல, இன்றைக்கும் கூட தன்னை உத்தமனாகவே காட்டிக்கொள்ளுகிறார்; அவரும் கூட தன்மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளெல்லாம் பொறாமையின் காரணத்தினால் கூறப்படுபவை என்கிறார். எல்லாவற்றுக்கும் ஆதாரம் கேட்கும் சாதுஜி தான் தூதர்களை தரிசிப்பது குறித்து மட்டும் எந்த ஆதாரமும் தருகிறதில்லையே? ஏன் அந்த தூதர்களை அவர் மற்றவர்களுக்குக் காட்டுகிறதில்லை?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
குற்றஞ்சாட்டுவதை யாரும் விரும்புகிறதில்லை;தான் குற்றஞ்சாட்டப்படுவதாக குற்றஞ் சொல்லுபவரும் கூட இன்னொருவரை குற்றஞ்சாட்டி அவரை இழித்தும் பழித்தும் பேசி தான் குற்றமில்லாதவன் என்பதை நிரூபிக்கப் போராடுவதை நம்முடைய அன்றாட வாழ்வில் காணமுடியும்;இதில் குழந்தையிலிருந்து முதியோர் வரைக்கும் யாருமே விதிவிலக்கல்ல;சாதாரண மனிதர்களுக்கு இதெல்லாம் சகஜம் தான்;ஆனால் முற்றுந்துறந்ததாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் சாதுக்களுக்கும் சன்னியாசிகளுக்கும் இது தகுமா? இன்று காலையில் ஏதேனும் நல்ல வார்த்தை அல்லது ஆலோசனை கிடைக்குமா என்று ஆவலுடன் ஏஞ்சல் டிவியைப் பார்த்தேன்;பிரபல சினிமா படத்தின் தலைப்பான "நெஞ்சினிலே" எனும் பெயரில் சாதுவின் வழக்கமான "அக்கப்போர்" நிகழ்ச்சி போய்க் கொண்டிருந்தது;உடனே சுறுசுறுப்பாகி நிமிர்ந்து உட்கார்ந்தேன்;இதில் தான் எப்போதும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சாதுஜி பகிர்ந்துகொள்ளுவது வழக்கம்;இந்த நிகழ்ச்சி முன்பு "நினைத்துப் பார்க்கிறேன்" என்ற பெயரில் வந்துகொண்டிருந்தது; இதில் தான் ஞானஸ்நானம் குறித்தும் திருவிருந்தைக் குறித்தும் பொதுவான கிறித்தவ விசுவாசத்துக்கு விரோதமான கருத்துக்களை சாதுஜி அவர்கள் ஒரு சமயம் பகிர்ந்துகொண்டார்; இன்றைய நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் அதாவது நான் நிகழ்ச்சியை கவனித்த சமயத்தில் பிள்ளைகளைப் பெற்றோர் எப்படி தேவபக்தியில் வளர்க்க வேண்டும் என்பதைக் குறித்து சொல்லிக்கொண்டிருந்தார்;அதில் ஒரு தாயார் தனது பிள்ளைகளுக்காக செய்ததைக் குறித்து பெருமையாகச் சொல்லும்போது அந்த தாயாருக்கு சிலை வைக்கவேண்டும்;அந்த அளவுக்கு அந்த தாயார் தனது பிள்ளையின் வெற்றிக்காகப் பாடுபட்டார்,ஆனால் இன்னொரு பாட்டி சபையில் அல்லேலூயா ஆமென் துள்ளி குதிப்பவர்கள் தனது பிள்ளைகளுக்காக எந்த கரிசனையும் கொள்ளவில்லை என்று குறைபட்டுக்கொண்டார். 'டக்'கென ட்ராக் மாறுகிறது,தொடர்ந்து ஆனந்து கேட்கிறார், ஐயா இந்த காலத்திலே வாலிபர்களிடம் ஒரு பெரிய பிரச்சினை,அவர்கள் ஆண்டவரிடம் வருவதில்லை, கேட்டால் நீங்களெல்லாம் யோக்கியமா, நாங்கள் அங்கே வந்து உங்களைப் போலாக வேண்டுமா', என்கிறார்கள். சாதுஜி சொல்கிறார், "நீ அதை ஏன் பார்க்கவேண்டும்,வேதம் சத்தியம் தானே அதைப் பின்பற்றி நீ நல்லவனாக இரு;ஏன் சாத்தானின் பிள்ளையாக இருக்கிறாய் "என்றார்;தொடர்ந்து சொன்னது,"என்னையும் கூட வாலிபர்கள் தவறான வழிக்கு அழைத்தபோது நான் சொன்னது என்ன தெரியுமா,"என் வழி, தனீ.. வழி"(ரஜினி ஸ்டைலில்..) என்றேன்;நான் ஆண்டவரை ஏற்றுக்கொண்டு அவருடைய வழியைப் பின்பற்றத்துவங்கிய பிறகும் நான் யாருடனும் சேராமல் இருப்பதால் பலரும் நீ சரியில்லை என்று குற்றஞ்சாட்டுகிறார்கள், நீ சரியாக இருக்கிறாயா,குறை சொல்றவன் நல்லவன் கிடையாது,நல்லவன் குறை சொல்லுகிறது கிடையாது;நல்லவன் யார்,வேதத்தின் படி நடப்பவனே நல்லவன்,வேதம் என்ன சொல்லுகிறது,யார் மீதாவது குறை இருந்தால் சம்பந்தப்பட்டவரிடம் தனியாகப் போய் சொல்லு,அடுத்து மூப்பரிடம் சொல்லு,அடுத்து சபையில் சொல்லு,அதற்குப் பிறகும் கேட்காவிட்டால் கைகழுவி விட்டுவிடவேண்டும்;அதைவிட்டு விட்டு குறைகளைக் குறித்து ஊடகங்களில் பிரச்சாரம் செய்வது சரியா,வசனத்துக்குப் புறம்பாக நடந்துகொண்டு ஆண்டவர் நடத்துவதாக எப்படி சொல்லலாம்? சாதுவைக் குறித்து வேடம் போடுகிறார் என்று பலரும் சொல்லுகின்றனர்.ஆனால் அன்பு பாவங்களை மூடும்,மறைக்காது,மூடுதல் என்பது தனியே சென்று டீல் பண்ணுவது;இதை விட்டுவிட்டு நேராக இருந்து பார்த்தது போல ஆதாரம் இருப்பதாகச் சொல்லி மிரட்டுவது,ஆதாரத்தைக் காட்டச் சொன்னால் எஸ்கேப்,பாரு ஆனந்து நீ பெற்றெடுத்த உன் மகள் ஹெப்சிபாவை நீ பெறவில்லை,அது தத்தெடுத்தது என்றால் நீ சும்மா இருப்பாயா,அதுபோலவே இந்த சாது வேடம் போடுறான்,விபச்சாரம் பண்றான்,சாராயம் குடிக்கிறான் என்று தூஷிக்கிறார்கள்,பொதுமக்கள் மத்தியில் தங்கியிருக்கும் நான் எப்படி பாவம் செய்யமுடியும்,விபச்சாரம் செய்யும் நான் சாட்சிக்கு மூன்றாவது ஒரு ஆள் வைத்துக்கொண்டா அதைச் செய்வேன்,என்னை மட்டுமில்லாமல் மதிப்பிற்குரிய தேவமனிதர் வின்சென்ட் செல்வகுமார் அவர்களையும் இப்படியே தூஷிக்கிறார்கள்.நாங்கள் இப்படியெல்லாம் இருந்தால் ஆண்டவர் எங்கள் ஊழியத்தை அங்கீகரிக்கும் வண்ணமாக எங்கள் ஊழியத்தில் வெளிப்படுவாரா? புத்தாண்டு ஆராதனையில் இப்படியே என்னருகில் தூதர்கள் வந்து நின்றனர்;இது புகைப்படத்திலும் பதிவாகியிருக்கிறது;கூடவே ஆண்டவரும் யூத ராஜ சிங்கமாக வந்து சிங்காசனத்துடன் நிற்கிறார்; இதனை பலரும் கண்ணால் பார்த்த சாட்சியும் இருக்கிறது;வேடம் போடும் ஒருவனுடன் ஆண்டவரே வந்து நின்று இப்படி அங்கீகரிப்பாரா? ஆனந்து: ஆண்டவரையே பிசாசு என்றார்களே சாது:அப்படி பேசக் காரணமென்ன? பொறாமை தான்;தன்னைவிட்டு கூட்டம் அங்கே போய்விட்டதே, தன் ஊழியம் படுத்துவிட்டதே என்ற பொறாமை...சினிமா டைரக்டர் பாலசந்தரின் பாராட்டு விழாவில் நடிகர்கள் சொன்னது," நடிகர்களுக்குள் போட்டி இருக்கிறது, ஆனால் பொறாமை இல்லை" என்றனராம் இந்த உணர்வு ஊழியர்களிடம் இல்லையே;ஆனால் ஊழியர்கள் பொறாமையினால் ஏஞ்சல் டிவி பார்க்கக்கூடாது என்கின்றார்கள். இராஜபாளையத்தில் ஒரு பாஸ்டர் கூட்டத்தில் ஏஞ்சல் டிவியைப் பார்க்கக்கூடாது என்றுகட்டுப்பாடு போடுகிறார்களாம்;கேபிள் ஆபரேட்டரிடம் சென்று ஏஞ்சல் டிவியை கட் பண்ணச் சொல்லுகிறார்களாம்.; அப்படியானால் மற்ற டிவியைப் பார்த்து குட்டிசுவராக போகலாமா? இப்படித்தான் ஒரு பாஸ்டர் தனது செய்தி நேரம் முழுவதும் ஏஞ்சல் டிவியை ஏன் பார்க்கக்கூடாது என்று பேசிமுடித்தார்;நம்மை நேசிக்கும் ஒரு தாயார் அவரிடம் போய் கேட்டதுக்கு அவர் சொன்னாராம், சாதுஜியை பார்க்க அப்பாயிண்மெண்ட் கேட்டேன் தரவில்லை,அப்புறம் என் மகனுக்கு ஒரு வேலை கேட்டேன் தரவில்லை' என்பதாக; இதுதான் அந்த விரோதத்துக்குக் காரணம்; 2.தீமோத்தேயு.3 தான் இப்படி நிறைவேறுகிறது." என்பதாகப் பேசியவற்றையெல்லாம் தட்டெழுத்து செய்து கொண்டு வர எனக்கு பெலனில்லை;ஆனால் அதனை பதிவு செய்து வைத்து இருக்கிறேன்.இங்கே சிரமப்பட்டு எழுதியுள்ளவை அவர் பேசியவற்றின் சாராம்சமே;அவர் சொன்னவற்றின் கருத்து மாறிவிடாத வண்ணம் மிகுந்த கவனத்துடனே எழுதியிருக்கிறேன்;மேலும் சாதுஜியின் இந்த நிகழ்ச்சியை கவனித்தவர்களுக்கு நான் எழுதியவற்றின் நேர்மையுணர்வு நிச்சயமாகவே தெரியவரும் என்று நம்புகிறேன்;இனி இதைக் குறித்த என்னுடைய கருத்து... இன்று அவர் பகிர்ந்துகொண்டவை அனைத்துமே புலம்பல் இரகம் தான்;இங்கே கோல்டா என்பவருடனான உரையாடலில் என்னென்ன வார்த்தைகளை நான் என்னுடைய தரப்பு வாதமாக வைத்தேனோ அவற்றையெல்லாம் சாதுஜியும் எடுத்துச்சொல்லி பகிரங்கமாக தன்னை குறைகூறுபவர்களை அவர் சாடியபோது எனக்கே பயமாக இருந்தது;ஒரு பெரிய ஆளுடன் தேவையில்லாமல் மோதிவிட்டோமோ என்று;அந்த அளவுக்கு நம்முடைய தளத்தின் ஒவ்வொரு வரியையும் படித்த பாதிப்பு அவருடைய பேச்சில் இருந்தது. சாதுஜி சொல்லுகிறார்,'குறைகூறுபவன் நல்லவன் அல்ல', என்று;ஆனால் இவர் தனது ஊழியத்தின் ஆரம்பத்தில் சர்ச்சைக்குரிய போதனைகளை உபதேசித்தபோது ஏற்கனவே இருந்த ஊழியங்களையும் ஊழியர்களையும் குறைகூறவில்லையா? குறைகளைத் தனியே சென்று சுட்டிக்காட்ட இவர் என்ன என்னருகில் உட்கார்ந்து கொண்டு அல்லேலூயா ஆமென் என்று சொல்லிக்கொண்டிருக்கும் சாதாரண விசுவாசியா? மூப்பர்களிடம் சென்று சொல்ல இவர் எந்த மூப்பருக்கு எந்த காலத்தில் அடங்கியிருந்தார்? சபையில் சொல்ல இவர் எந்த சபையில் அங்கமாக இருக்கிறார்? சபைகளை உடைப்பதற்காகத் தானே இவர்கள் கடந்த பத்துவருடமாக திட்டமிட்டு மீடியா மிருகத்தின் பெலத்தோடு முன்னேறி வருகிறார்கள்? இவர்கள் மீது சாதாரண கிராம ஊழியனுக்கு ஏன் பொறாமை வராது? சாது சாதுவாக இருந்தால் இவர் மீது எறும்பு கூட ஊர்ந்து செல்லப் போவதில்லை; நீ பனை மரத்தின் நின்று பாலைக் குடித்தாலும் பார்க்கிறவன் நீ குடிப்பது கள் என்றே சொல்லுவான். இங்கே நாம் விவாதிக்கும் எந்தவொரு கருத்தும் உள்நோக்கமில்லாமலும் தெளிவடைவதற்காகவும் மாத்திரமே பகிர்ந்துகொள்ளப்படுகிறது; அவற்றுக்கான ஒரே சோர்ஸ் ஏஞ்சல் டிவி மாத்திரமே;ஏஞ்சல் டிவியில் பொதுவான கிறித்தவ விசுவாசத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய எதை பகிரங்கமாகக் குறிப்பிடுகிறார்களோ அதைக் குறித்தே கேள்வி எழுப்புகிறோம்;மற்றபடி இவர்கள் பண்ணைவீடு வாங்கினாலோ விபச்சாரம் செய்தாலும் நமக்குப் பொறாமையில்லை;சாராயம் குடித்தாலும் அதைக் குறித்து நமக்குக் கவலையில்லை. மேலும் இந்த காரியத்தில் சாதுஜி கூறியவண்ணமாக குறைகூறுவோர் கடைபிடிக்கவேண்டியதான நான்கு வழிமுறைகளையும் கடைபிடித்து வருகிறோம்.ஐந்தாவது வழிமுறை என்பது கிடையாது என்கிறார்;ஆனால் அதையே அவர் செய்கிறாரே? அந்த ஐந்தாவது வழிமுறை என்ன, குறைகளைப் பிரச்சாரம் செய்யக்கூடாதாம்..! முதலில் குறைகூறுவோர் கடைபிடிக்கவேண்டிய நான்கு வழிமுறைகளைக் குறித்து பார்த்துவிடுவோம்.
யார் மீது குறை காண்கிறோமோ அவரை தனியே சென்று கண்டிக்கவேண்டும்.
மூப்பரிடம் புகார் செய்யவேண்டும்.
சபையில் அறிவிக்கவேண்டும்.
விட்டு விலகவேண்டும்.
இதில் குறைசொல்லப்படுபவர் பெரிய ஆளாக இருந்தால் ரெண்டு சாட்சிகளுடன் அதாவது அந்த ஆள் மூப்பராக இருக்கும்பட்சத்தில் ரெண்டு சாட்சிகளுடன் நிரூபிக்கவேண்டும்;இதில் சாதுஜி மீது என்னைப் போன்ற சாமான்யமான ஆள் குறைகூறினால் நானல்ல, சாதுஜியே என்னை அழைத்து விசாரித்து வேண்டும்;அவர் அழைத்து நான் வராவிட்டால் மட்டுமே மூப்பரிடம் என்னைக் குறித்து புகார் செய்யவேண்டும்;அடுத்து ஏஞ்சல் டிவி எனும் தன்னுடைய சபையில் அதனை அவர் அறிவிக்கவேண்டும்;அதன்பிறகு என்னை விட்டு விலகவேண்டும். ஏனெனில் சாதுஜி, மூப்பர்கள் தலைவர்கள் வரிசையில் நிற்கிறார்; என்னைப் போன்றவர்களோ தொண்டர்கள் வரிசையில் நிற்கிறோம்; சாதாரணமானவர்களான நாங்கள் அவரைப் பார்க்கமுடியுமா? எனவே இமெயில் (e-mail) எனப்படும் மின்னஞ்சல் மூலம் விளக்கம் கோரி கடிதம் அனுப்புகிறோம்;மேலும் அவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு விளக்கம் கேட்கிறோம்;மேலும் பதிலுக்காகப் பொறுமையாகக் காத்திருக்கிறோம்;ஆனால் எங்களைப் புறக்கணித்துவிட்டு அவங்க பாட்டுக்கு அவங்க வேலைய செய்தால் அடுத்து அதைக் குறித்த விளக்கத்தை சபைத் தலைவர்களிடம் கேட்கிறோம்,பிரபல போதகரும் சாதுஜியின் கூட்டாளியுமான ராஜன் ஜாண் அவர்களிடம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டாலும் சரியான பதில் கிடைக்கவில்லை;'சாது வெளிநாட்டில் இருக்கிறார், பார்க்கமுடியாது, எப்ப வருவாரென்று தெரியாது ஆகிய பொறுப்பில்லாத பதில்களே கிடைக்கிறது;அதேநேரம் ஏஞ்சல் டிவியின் துருபதேசங்களும் தொடருகிறது என்றால் மீடியா மிருகத்தின் நட்பு கிடைத்திட வாய்ப்பில்லாத சாதாரண சபையார் என்ன செய்யமுடியும்? ஆண்டவர் அவரவருக்குக் கொடுத்துள்ள சபையில் தான் இதைக் குறித்து அறிவித்து ஜனங்களை எச்சரிக்கவேண்டும்;எச்சரிப்பது என்பது மூன்றாவது வழிமுறையோ ஐந்தாவது வழிமுறையோ அதனைத் தவறு என்று வேதம் சொல்லவே இல்லை;சபைக்குள் இருக்கும் வேறுபாடுகளைக் களைய வேதம் சொல்லும் ஆலோசனைகளை எப்படி சாதுஜியின் ஏஞ்சல் டிவிக்காக செயல்படுத்த முடியும் என்று தெரியவில்லை.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)