பரலோகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளின் அமைப்பின் மற்றொரு பிரதியே இந்த பூமி என்கிறார்; அதாவது இந்த பூமியிலுள்ள அனைத்து ஜீவன்களில் ஒரிஜினல் பரலோகத்தில் இருக்கிறதாம். எந்த அடிப்படையில் இவ்வாறு சொன்னார் என்பதை இந்த் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருப்போரே விளக்கிடவேண்டும்.
இப்படி அவர் சொன்னது போல் எனக்கு ஞாபகமில்லை!
மதிப்பிற்குரிய தோழி கோல்டா அவர்களே,
நான் பொய் சொல்லுகிறதில்லையென்பதற்கு தேவன் சாட்சியாக இருக்கிறார்; ஜீவராசிகள் என்று நான் எழுதினாலும் அவர் சொன்னது மிருகங்கள் என்ற வார்த்தை ஆகும்; மேலும் கடலுக்கும் காது உண்டு,ஏனென்றால் அது ஆண்டவருடைய கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததே;அதற்கு வாய் உண்டு, ஏனெனில் சத்தமிடுகிறதே,நம்மைப் போன்ற காது,கண்ணும் அதற்கு இல்லாவிட்டாலும் அதுவும் ஒரு ஜீவன் தான்,அதன் அமைப்புதான் வேறாக இருக்கிறது என்றெல்லாம் சொன்னார்;தற்போது இந்த நிகழ்ச்சிகளை இணையத்திலிருந்து டௌன்லோடு (Download) செய்ய இயலவில்லை என்பதால் உங்களுக்கான நிரூபணத்தை என்னால் தரமுடியாமைக்கு வருந்துகிறேன்; டௌன்லோடு (Download) செய்வதைத் தடைசெய்வதிலிருந்தே இவர்கள் குற்றவாளிகள் என்பதும் பக்கா வியாபாரிகள் என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது அல்லவா?
பொதுவாக வேத வல்லுனர்கள் சொல்லுவது என்ன,வேதம் மனித மொழியில் மனிதனுடைய புரிதலுக்காக எழுதப்பட்டது;அதனை வார்த்தையின்படியான பொருள் கொண்டு வியாக்கியானம் செய்யக்கூடாது என்பதே;ஆனால் சாதுவைப் போன்றவர்களோ ஒருபுறம் வார்த்தையின்படியான பொருளைக் கொள்ளக்கூடாது என்பதனை ஏற்றுக்கொண்டாலும் மறுபுறம் அதே தவறை செய்து காணாதவைகளில் துணிகரமாக நுழைந்து அதுவும் நேரடியாகப் பார்த்ததுபோல ரீல் சுற்றுகிறார்கள்;இது மிகவும் அநியாயம் என்பதை ஒப்புக்கொள்ளுவீர்கள் என்று நம்புகிறேன்;இதனால் சாதுவைப் போன்ற கூட்டத்தார் அடையும் பலன் என்ன தெரியுமா,தங்களை சாதாரண மக்களைவிட சூப்பர் நேச்சுரல் பியிங் ஆகக் காட்டிக்கொள்ளுவதே;அதற்கு தான் வெள்ளை தாடி காவி வேடமெல்லாம்..!
தான் செய்ய விரும்பும் அனைத்தையும் செய்ய உத்தரவாதமாக அல்லாவை முன்னிறுத்தி அநத பெயரால் அனைத்தையும் சாதித்தார் முகமது என்றால் அதில் சற்றும் வேறுபடாமல் இவர்கள் இயேசுவின் நாமத்தில் அனைத்து அக்கிரமங்களையும் செய்துவருகிறார்கள்;நாம் சொல்லும் எதிர்கருத்து பற்றிய அறிவும் இவர்களுக்கு இருக்கிறது;எனவே அதையும் தவறாமல் குறிப்பிட்டு நம்மை இப்படியெல்லாம் குற்றஞ்சொல்லுவார்கள்,இவங்களோடு இவ்வளவு காலம் பழகுகிறோமே நமக்குத் தெரியாதா என்று சொல்லிக்கொண்டு அதற்கும் ஒரு சமாளிப்பைப் போட்டு வைக்கிறார்கள்; எப்படியெனில் சினிமாத்தனமான களையெடுக்கும் கண்ணம்மா பாடலினால் தேவ நாமம் மகிமைப்பட்டதா,அதன்மூலம் இயேசுவின் நற்செய்தி சொல்லப்பட்டதா என்று சிலர் குறைகூறுகிறார்களாம்; அதற்கு பதிலாக இவர் தன்னைப் புகழ்ந்து ஒருத்தி எழுதிய கடிதத்தை வாசித்துவிட்டு இதுபோதாதா என்று எக்களிக்கிறார்;அப்படியானால் இவரைப் புகழ்ந்தால் தேவனைப் புகழ்ந்தது போலாகுமா என்பதை அவர் தான் சொல்லவேண்டும்;மேலும் அண்மையில் கல்பாக்கத்தில் 1300 வாலிபர்களைக் கூட்டி இறக்கிய அப்பிசேக்க (அந்நிய)அக்கினி முகாமில் கலந்துகொண்ட ஆல்வின் அவர்கள் கூடியிருந்த இளைஞர்களை ஈர்க்கும் வண்ணமாக "சிங்கம்ல" என்று அசிங்கமாகவும் சினிமாத்தனமாகவும் கூவினாராம்;உடனே இளைஞர்களெல்லாம் ஆர்ப்பரித்தார்களாம்;ஆம்,உலகம் தன்னுடையதை சிநேகிக்கும் என்று ஆண்டவர் சொல்லவில்லையா? உலகத்துக்கொத்த வேடம் தரியாதே என்று பவுலடிகள் எழுதவில்லையா? பொதுவாகவே மனிதனுக்கு நூதனமாகவும் சுவாரசியமாகவும் பேசுவோர் மீது ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு;பவுலடிகளையும் இவ்வாறே மார்ஸ் மேடைக்கருகில் நின்றோர் ஆவலுடன் நோக்கினர்;அவரோ இரட்சிப்பின் சுவிசேஷத்தை மட்டுமே சொன்னார் அல்லவா? அந்த ஆளு ஒரு மாங்கா மடையன், சாக்ரடீஸ் மற்றும் பிளாட்டோ போன்றவர்களின் தத்துவங்களையும் மாவீரன் அலெக்ஸாண்டர் போன்றவர்களின் வீரதீர பராக்கிரமங்களையும் கொஞ்சம் எடுத்துவிட்டிருந்தாரானால் முழு ரோமையும் அன்றே கைப்பற்றியிருக்கலாமே என்பார்கள் தற்கால அடிப்பொடி அடியவர்கள்..!
பரலோகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளின் அமைப்பின் மற்றொரு பிரதியே இந்த பூமி என்கிறார்; அதாவது இந்த பூமியிலுள்ள அனைத்து ஜீவன்களில் ஒரிஜினல் பரலோகத்தில் இருக்கிறதாம். எந்த அடிப்படையில் இவ்வாறு சொன்னார் என்பதை இந்த் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருப்போரே விளக்கிடவேண்டும்.
இப்படி அவர் சொன்னது போல் எனக்கு ஞாபகமில்லை!
பரலோக மாதிரியின்படி தான் ஆசாரிப்புக் கூடாரம் அமைக்கப்பட்டது என்று ஒரு முறை சொல்லியிருக்கிறார்.அதாவது ஆசரிப்புக் கூடாரத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் பரலோகத்தில் இருக்கிறது. அதெல்லாம் பரலோகில் உள்ள ஒரு இடம் என்று சொல்லியிருக்கிறார். ஆசாரியர்கள் தங்களை சுத்திகரிக்கும் தண்ணீர் தொட்டி போல் அங்கும் சுத்திகரிக்கும் தண்ணீர் கடல்(கண்ணாடிக் கடல்?) உண்டு. பூமியிலிருந்து பரலோகம் செல்லும் ஆத்துமாக்கள் இதில் மூழ்கி ஒரு இறுதி சுத்திகரிப்பு செய்து கொள்ளுமாம். அது போல், இரத்த சாட்சியாக மரித்த ஆத்துமாக்கள் பரலோகத்திலுள்ள பலி பீடத்தின் அருகில் வைக்கப்பட்டிருப்பார்களாம். இப்படி இவரும், இவர் போன்ற ஊழியரும் சொல்லியிருக்கிறார்கள்!
நான் இன்று அதைப் பார்க்கவில்லை. மறு ஒளிபரப்பு தானே போய்க் கொண்டிருக்கிறது.
இதை நான் முன்பு கேட்ட போது , கார சாரமா ஒரு மெயில் அனுப்பி வைக்க வேண்டும் என்று நினைத்தேன். செய்ய வில்லை. புறம்பான இருள் என்பது பரலோகத்தின் outer layer என்று ரிக் ஜாய்னர் சொல்கிறார். சாதுவின் நண்பர் ஜோ ஸ்வீட் என்பவரும் அப்படித்தான் ஏஞ்சல் டீவியில் சொன்னார். சாது தன் நண்பரின் வெளிப்பாடை ஏற்றுக் கொண்டு ,நம்பி அப்படி சொல்கிறார் என்று நினைக்கிறேன். தப்பா சொல்கிறோமோ என்ற உணர்வு வந்ததால் நிறுத்திக் கொண்டாராக இருக்கும்.
அவரிடத்தில் “Human Errors" இருக்கத்தான் செய்கிறது.சிலதை மறந்து மாத்தி சொல்லி விடுகிறார். சிலதை தப்பா சொல்லி விடுகிறார். உம்: எய்ட்ஸ் வியாதி கொசுவால் பரவும் என்று சொன்னார். கரடி சாதுவான மிருகம் என்று சொன்னார். இப்படி எனக்கே நிறைய தப்பு கண்ணில் படுவதால், I take whatever he says with a pinch of salt!
சில விஷயங்களை சிறப்பாக விளக்குகிறார். சில வெளிப்பாடுகள் அருமையாக இருக்கிறது. மனிதன் என்பதால் சில குறை இருந்தாலும், அவர் அழைக்கப்பட்ட தீர்க்கதரிசி என்பது மாறாதது!
இன்று 24.08.2011 இரவு 11:20 மணி:ஏஞ்சல் டிவியில் சாதுஜி ஆனந்துவுடன் உரையாடுகிறார்;"புறம்பான இருளில்..." என்று ஆண்டவர் சொன்னாரே அது இவ்வளவு நாளும் நரகம் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்;ஆனால் புறம்பான இருள் என்பது நரகமோ பாதாளமோ அல்ல அது பரலோகத்திலேயே இருக்கும் மற்றொரு பகுதி என்கிறார்,சாது; மேலும் விளக்குவதற்கு அவருடைய ஆவி தடுப்பதால் அத்துடன் நிறுத்திக்கொண்டார். பரலோகத்திலுள்ள அனைத்து ஜீவராசிகளின் அமைப்பின் மற்றொரு பிரதியே இந்த பூமி என்கிறார்; அதாவது இந்த பூமியிலுள்ள அனைத்து ஜீவன்களில் ஒரிஜினல் பரலோகத்தில் இருக்கிறதாம். எந்த அடிப்படையில் இவ்வாறு சொன்னார் என்பதை இந்த் நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருப்போரே விளக்கிடவேண்டும்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Bro Chillsam: எருசலேமில் நடந்து, நேரடி ஒளிபரப்பான (2007) ஓப்பன் ஹெவன் தீர்க்கதரிசன மாநாட்டின் உச்சக்கட்டத்தில் தூதர்களெல்லாம் இறங்கி வந்ததாகவும் அதற்கு அத்தாட்சியாக அந்த இடத்தில் ஏராளமான பிராய்லர் கோழியின் வெண்ணிற சிறகுகள் சிதறிக்கிடந்ததாகவும் அறிவித்தார்களே அப்போதே இவர்களை உங்களைப் போன்றவர்கள் விலக்கியிருக்க வேண்டாமா? அந்த செய்தி இப்போதும் இணையத்தில் இருக்கிறது; உங்களுக்குத் தேவையானால் எடுத்து தருகிறேன்.
Golda: அந்த நேரடி ஒளிபரப்பை நான் பார்க்கவில்லை. ஆவிக்குரிய அனுபவங்கள் எல்லாமே பொய் என்று சொல்வதும் மிகத் தவறு.
சகோதரி கோல்டா அவர்களே,
இப்படி விட்டேத்தியாக கருத்து கூறுவதைவிட நீங்கள் அமைதியாக இருந்தால் சிலர் சிந்திக்கவேனும் வாய்ப்புண்டாகும்;ஏனெனில் நான் ஒவ்வொன்றையும் பயந்து பயந்து ஆனால் ஆதாரத்துடனே எழுதுகிறேன்;நான் சாதாரணமானவன், அவர்களோ கோடிகளில் புரளும் கேடிகள்;
மெத்தபடித்த நீங்களே தேடியெடுத்து அறியக்கூடிய தகவல்களின் மேலோட்டமான (Outline) குறிப்புகளையே நான் பதிவிட்டிருக்கிறேன்; இன்னும் தேவைப்பட்டால் இரண்டு லிங்குகளைக் கொடுத்துள்ளேன்;அதில் ஒன்று இதுபோன்ற மோசடி ஊழியர்களைத் தோலுரிக்கும் நல்லதொரு ஆரோக்கிய உபதேச தளம்;மற்றது நான் குறிப்பிட்ட 2007 வருடத்தில் எருசலேமில் ஏஞ்சல் டிவி நடத்திய தீர்க்கதரிசன மாநாட்டின் அறிக்கை;இதை படித்தபிறகாவது உங்களுக்கு தெளிவுபிறக்குமோ என்னவோ நான் அறியேன்,பராபரமே..!
நான் குறிப்பிட்டுள்ள ஆரோக்கிய உபதேச விழிப்புணர்வு தளத்தில் நம்ம ஊர்க்காரான டிஜிஎஸ் அவர்களைக் குறித்து குறிப்பிட்டுள்ளதை மட்டும் இங்கே ஒட்டிவைக்கிறேன்...
// D. G. S. Dhinakaran an Indian evangelist of “Jesus Calls ministry” travels into the spirit world regularly, and describes in his book, “Sometimes I have seen Jesus discussing the events that are happening in' this world with His apostles in heaven.” On Benny Hinn’s program he explained how he spoke to Paul, Peter and God the Father in heaven. //
மற்றதை வாசகர் அங்கேயே சென்று படிக்கட்டும்;யாராவது கோரினால் அதனை மொழிபெயர்த்து உதவ ஆயத்தமாக இருக்கிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Bro Chillsam: எருசலேமில் நடந்து, நேரடி ஒளிபரப்பான (2007) ஓப்பன் ஹெவன் தீர்க்கதரிசன மாநாட்டின் உச்சக்கட்டத்தில் தூதர்களெல்லாம் இறங்கி வந்ததாகவும் அதற்கு அத்தாட்சியாக அந்த இடத்தில் ஏராளமான பிராய்லர் கோழியின் வெண்ணிற சிறகுகள் சிதறிக்கிடந்ததாகவும் அறிவித்தார்களே அப்போதே இவர்களை உங்களைப் போன்றவர்கள் விலக்கியிருக்க வேண்டாமா? அந்த செய்தி இப்போதும் இணையத்தில் இருக்கிறது; உங்களுக்குத் தேவையானால் எடுத்து தருகிறேன்.
Golda: அந்த நேரடி ஒளிபரப்பை நான் பார்க்கவில்லை. ஆவிக்குரிய அனுபவங்கள் எல்லாமே பொய் என்று சொல்வதும் மிகத் தவறு.
Bro Chillsam:சாதுஜி எனக்கு நெருக்கமானவர்களுக்கு என் பெயரைக் குறிபிட்டு ஒரு மெயில் அனுப்பி , எனக்கு அவர் ஏஞ்சல் டிவியில் வாய்ப்பு தராத காரணத்தினாலேயே நான் அவரைக் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்வதாக தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்;
நீங்க அவ்வளவு பாப்புலரா??
Bro Chillsam:ஆனால் ஒரே ஒரு லாபம் என்னவென்றால் நான் மீண்டும் மீண்டும் ஏஞ்சல் டிவிக்கு போன்செய்து விசாரித்ததால் என்மூலம் எச்சரிக்கப்பட்ட பலரும் அங்கிருந்து வெளியேறி அந்த டீம் கலைந்தது;
அப்படி என்ன எச்சரித்தீர்கள்?
Bro Chillsam:என்ன, ஆனந்தை காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் இப்போதும் எனக்கு உண்டு; ஆனால் அதற்குக் காரணம் அவர் அப்பாவி என்பதல்ல, அவருடைய தரிசனம் என்னவென்றால், எப்படியாவது ஒரு நாளில் சாதுஜிக்கு தத்துப்பிள்ளையாக மாறி ஏஞ்சல் டிவியின் முதலாளியாக வேண்டும் என்பதே; ஏனெனில் அவருடைய காதல் மனைவியின் மீது சாதுஜிக்கு கொள்ளைப்பிரியமாம்;அடிக்கடி அவரைக் குறித்தே விசாரிப்பதை நீங்கள் நிகழ்ச்சிகளில் கவனித்திருக்கலாம்.
அருமை சகோதரி கோல்டா அவர்களின் கருத்துக்களுக்காக நன்றி;இதையே நானும் எடுத்துக்கொண்டு போராடுகிறேன்;பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு சில அடையாளங்கள் மூலமே ஒரு குறிப்பிட்ட நபரை அடையாளம் காணமுடியும்; அடுத்ததாக நாம் உடனே செய்யவேண்டியது என்ன, அந்த குறிப்பிட்ட நபரைவிட்டு வெளியேறவும் அதைக் குறித்த எச்சரிப்பை அனைவருக்கும் செய்யவும் வேண்டும்;பாம்புடன் எத்தனை காலம் பாசமாகப் பழகினாலும் அதற்கு ஒருபோதும் கால் முளைக்காது;கழுகுடன் நீங்கள் குடியிருந்தாலும் இறக்கை முளைக்காது.
எருசலேமில் நடந்து, நேரடி ஒளிபரப்பான (2007) ஓப்பன் ஹெவன் தீர்க்கதரிசன மாநாட்டின் உச்சக்கட்டத்தில் தூதர்களெல்லாம் இறங்கி வந்ததாகவும் அதற்கு அத்தாட்சியாக அந்த இடத்தில் ஏராளமான பிராய்லர் கோழியின் வெண்ணிற சிறகுகள் சிதறிக்கிடந்ததாகவும் அறிவித்தார்களே அப்போதே இவர்களை உங்களைப் போன்றவர்கள் விலக்கியிருக்க வேண்டாமா? அந்த செய்தி இப்போதும் இணையத்தில் இருக்கிறது; உங்களுக்குத் தேவையானால் எடுத்து தருகிறேன்.நான் எதையும் வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் நான் சொல்லும் ஒவ்வொன்றிலும் உண்மை இருக்கிறது என்பதை மட்டுமாவது நம்புங்கள்.
சாதுஜி எனக்கு நெருக்கமானவர்களுக்கு என் பெயரைக் குறிபிட்டு ஒரு மெயில் அனுப்பி , எனக்கு அவர் ஏஞ்சல் டிவியில் வாய்ப்பு தராத காரணத்தினாலேயே நான் அவரைக் குறித்து அவதூறு பிரச்சாரம் செய்வதாக தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்;ஆனால் அவரிடம் விளக்கம் கேட்டு நான் அனுப்பிய மெயில்களுக்கு எந்த பதிலும் அனுப்பவில்லை;என்பதுடன் ஒரு மாதத்துக்கும் மேலாக போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோதும் ஒருவரும் சரியான பதிலை எனக்குக் கொடுக்கவில்லை;சினிமாக்காரர்களைப் போல, சாதுஜி ஊரில் இல்லை, ஷூட்டிங்கில் இரூக்கிறார் போன்ற பதில்களே கிடைத்தது;ஆனால் ஒரே ஒரு லாபம் என்னவென்றால் நான் மீண்டும் மீண்டும் ஏஞ்சல் டிவிக்கு போன்செய்து விசாரித்ததால் என்மூலம் எச்சரிக்கப்பட்ட பலரும் அங்கிருந்து வெளியேறி அந்த டீம் கலைந்தது;என்ன, ஆனந்தை காப்பாற்ற முடியவில்லையே என்ற வருத்தம் இப்போதும் எனக்கு உண்டு; ஆனால் அதற்குக் காரணம் அவர் அப்பாவி என்பதல்ல, அவருடைய தரிசனம் என்னவென்றால், எப்படியாவது ஒரு நாளில் சாதுஜிக்கு தத்துப்பிள்ளையாக மாறி ஏஞ்சல் டிவியின் முதலாளியாக வேண்டும் என்பதே; ஏனெனில் அவருடைய காதல் மனைவியின் மீது சாதுஜிக்கு கொள்ளைப்பிரியமாம்;அடிக்கடி அவரைக் குறித்தே விசாரிப்பதை நீங்கள் நிகழ்ச்சிகளில் கவனித்திருக்கலாம்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கோல்டா போன்று சாதுஜிக்கு "நெருக்கமானவர்கள்" தயவுசெய்து அந்த ஆளிடம் இதைக்குறித்து கேட்டு சொல்லவும்;அதாவது, தூதர்கள் மனு உருவெடுத்து இளங்கன்னியரை அனுபவித்து செல்வதாக சொல்லுகிறீரே,அதனை ஆம் என்றே வைத்துக்கொண்டு யோசிப்போம்,அப்படியானால் மரியாளுக்கும் காபிரியேல் தூதனுக்கும் ஏதாவது கனெக்ஷன் இருந்திருக்குமோ என்று (மேசியாவின்) எதிரிகள் யோசிக்கமாட்டார்களா? வெறும் வாயை மென்றவர்களுக்கு அவலைப் பரிசாகக் கொடுப்பது போல இருக்கிறதே, உங்களுடைய கருத்து..! உண்மையாக சொல்லுங்க, ப்ளீஸ், இதை ப்ரன்ஹாம் தானே முதன்முதலில் கண்டுபிடித்து போதித்தார்..?
இது நான் இன்று ஏஞ்சல் டீவீக்கு அனுப்ப இருந்த மெயில். நீங்க பார்ப்பதால் ஒன்றும் மோசமில்லை. என்ன ஒற்றுமை பாருங்கள். நானும் அவல் உபயோகப்படுத்தியிருக்கிறேன்!
---
கற்பு:
ஒரு வாலிபர் முகாமில், ஒரு வாலிபப் பெண் இறந்து விட்டதாகவும், அவளுடைய பெற்றோர், அவள் கன்னி கழியாமல் கற்புக்கரசியாக பரலோகம் சென்றாள் என்று சொல்லி ஆறுதலைடைந்தார்கள் என்று சொன்னீர்கள். அது ஒரு விசேஷம் தானே என்று சொன்னீர்கள். இதில் என்ன விசேஷம் இருக்கிறது என்று எனக்கு சுத்தமாக புரியவில்லை. கல்யாணம் ஆனவர்கள் கற்புக்கரசிகள் கிடையாதா? கற்பு என்றால் ஒரே சினேகம் என்பதுதான் வேதத்தின்படியான சரியானஅர்த்தம். Side q: அத்துடன் ஒரு வாலிபன் இறந்திருந்தால் இப்படி வசனம் பேசியிருப்பார்களா? கன்னித்தன்மையும்,கற்பும் ஆணுக்குக் கிடையாதா??
ஜாதி:
ஒரு ஜாதிக்கும் இன்னொரு ஜாதிக்கும் பழக்க வழக்கத்தில் வித்தியாசம் இருப்பதால் , ஜாதி விட்டு ஜாதி திருமணம் செய்வது கஷ்டம், ஒத்து வராது என்று ஒருவர் எழுதியதாகவும், இந்த விளக்கம் சரியாகப் படுகிறது என்றும் சொன்னீர்கள். என்ன அநியாயம் இது! இப்படியெல்லாம் சொல்லி ஜாதி வைத்து மனிதர்களைப் பிரிக்கும் அசிங்கத்தை ஆதரிக்க வேண்டுமா? இருதயம் திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமாய் இருக்கிறது. ஜாதியை விட மனமில்லா மனது எப்படியெல்லாம் காரணம் கண்டு பிடிக்கிறது பாருங்கள்.
ஒரே ஜாதியிலும், ஒருவர் போல் இன்னோருவர் கிடையாது. இந்த வேறுபாடு தான், பல திருமணங்களில் பிரச்சினை கொண்டு வருகிறது. ஒரு குடும்பம் போல் இன்னோரு குடும்பம் கிடையாது. ஒரு ஊர் போல் இன்னோரு ஊர் கிடையாது.ஒரு மாநிலம் போல் இன்னோரு மாநிலம் கிடையாது .ஒரு நாடு போல் இன்னோரு நாடு கிடையாது. அப்ப யாரைத்தான் திருமணம் செய்வது??
பழக்க வழக்கத்தில் வித்தியாசம் இருந்தால் தான் என்ன? Adjust பண்ணிக் கொள்ள முடியாதா? அந்த அளவுக்கு சகிப்புத் தன்மையற்றவர்களா கிறிஸ்தவர்கள்?
இவங்கள்லாம் வேற ஜாதி. பாவ ஜாதி. நான் பூமிக்குப் போக மாட்டேன் என்று இயேசு கிறிஸ்து சொல்லியிருந்தால் நம் கதி என்னவாகி இருக்கும்? அவர் பரலோக கலாச்சாரத்தை விட்டு, பாவ கலாச்சாரத்திற்கு வரவில்லையா? மாற்றுக் கலாச்சார இடங்களுக்கு/நாடுகளுக்கு மிஷினரிகள் போக வில்லையா? நீங்க நேபாளம் போக வில்லையா? ஆபிரகாம் எங்கே போகிறோம் என்று தெரியாமல் ஆணடவர் சத்தம் கேட்டு கிளம்ப வில்லையா?
ஜாதி அசிங்கம், கொடுமை, கேவலம். தயவு செய்து எந்த காரணத்தை வைத்தும் இதை ஆதரிக்காதீர்கள். இது கண்டிப்பாக ஆண்டவருக்கு பிரியமற்ற காரியம். இது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிரானது.
கிறிஸ்தவ பிராமணா சேவா சங்கம், தலித் கிறிஸ்தவ அமைப்பு என்றெல்லாம் ஜாதியுடன் கூடிய அமைப்புகள் எந்தளவுக்கு கிறிஸ்துவுக்கு மகிமை கொண்டு வருகிறது என்று தெரியவில்லை.கிறிஸ்தவ பிராமணா சேவா சங்கம் நடத்துபவர்கள், பிராமணர்கள்(உயர் ஜாதி இந்துக்கள்) மக்கள் மத்தியில் ஊழியம் செய்ய ஆண்டவர் அழைத்திருக்கிறார் என்று சொன்னார்கள். செய்யட்டும். அதற்கு “பிராமண” என்ற பெயர் தேவைதானா? இரட்சிக்கப்படும் வரை தான் உயர் ஜாதி பிராமணர்கள். இரட்சிக்கப்பட்ட பின் எல்லோரும் இயேசுவின் பிள்ளைகள் - அனைவரும் சமம் என்ற வெளிப்பாட்டிற்குள் வர வேண்டாமா? எல்லோரும் ஒரே குடும்பம், ஒரே சரீரத்தின் அங்கம் என்றால் ஒரே ஜாதிதானே எல்லோரும்!
இப்படிப் பட்ட மோசமான இந்திய/இந்து கலாச்சார மனப்பான்மையிலிருந்து வெளியே வருவதுதான் சரி.
நோவாவின் காலம்: லூக் 17:27
நோவாவின் காலத்தில் தேவ தூதர்கள்-மனிதர்கள் கலப்பில் இராட்சதர்கள் பிறந்து பூமியைக் கொடுமையினால் நிரப்பினார்கள். அது போலவே கடைசி காலத்திலும் நடக்கும் என்று ஆணித்தரமாக அடித்து அரைமணி நேரம் பேசினதை ஏஞ்சல் டீவீ யில் பார்த்தேன். இது ஒரு controversial topic அல்லவா. எல்லோராலும் இந்த உபதேசத்தை ஏற்றுக் கொள்ள முடியாதே. இதை எதற்காக நீங்க இவ்வளவு நேரம் செலவழித்து பேச வேண்டும். These type of teachings may push many away from you and angel tv. இப்படிப்பட்ட காரியங்களை நீங்க ”நெஞ்சினிலே” நிகழ்ச்சியில் பேசுவது ஓகே. ஆனால் ஒரு சீரியஸான செய்தியில் பேசுவது சரிதானா? நீங்கள்லாம் (கள்ள தீர்க்கதரிசியான?) பிரன்ஹாம் கோஷ்டி என்று ஒரு கூட்டம் (???) உங்களைப் பற்றி தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டை ஏஞ்சல் டீவீ மூலம் வஞ்சிக்க கிளம்பி விட்டீர்கள் என்றும் சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் வாய்க்கு மெல்ல அவல் இப்படி நீங்களே கொடுக்க வேண்டுமா?
லூக் 17:27 வசனமானது ஆவிக்குரிய காரியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உலகம் உலகம் என்று உலகப் பிரகாரமான படிப்பு, வேலை, கல்யாணம், சாப்பாடு, வீடு கட்டுவது போன்ற காரியங்களிலேயே முழு கவனமும் செலுத்தி, அழிந்து போகும் மனப்பான்மையை குறிப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. நான் இம்மைக்காக மட்டும் வாழ்வது பரிதாபத்திற்குரியது என்று சொல்லும் பல வசனங்கள் வேதத்தில் இருக்கிறதே. பவுலும் கூட 1 கொரி 7: 29,32 இல் காலம் கடைசியாக இருப்பதால், திருமணம் குடும்ப வாழ்க்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் ஆண்டவருக்கு பிரியமாய் வாழ்வதற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் படி சொல்கிறார். இப்படி சொல்வதால் திருமணம் தவறு என்று அவர் சொல்வதாக எடுத்துக் கொள்ள முடியாது.
அது போல் லூக் 17:27 க்கு வேறு அர்த்தம் கண்டு பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒருவேளை அப்படி ஒரு அர்த்தம் இருப்பதாக ஆண்டவர் உங்களுக்கு வெளிப்படுத்தியிருந்தால், பொதுவான அர்த்தத்தோடு , உங்களுக்குக் கிடைத்த வெளிப்பாட்டையும் , இரண்டையும் சேர்த்து (???) சொல்வது மிகவும் நல்லது. அப்பதான் அது ஒரு balanced செய்தியாக இருக்கும்.
இந்த திரியில் விவாதிக்கப்பட்ட அதே செய்தியை இன்று காலையில் (10.04.2011@6am) ஏஞ்சல் டிவியில் அநேகர் பார்த்திருக்கலாம்; அதாவது திரள்கூட்ட மக்கள் கூடியிருந்த ஒரு பொதுகூட்டத்தில் (பெங்களூரு போன்ற கன்னட பிரதேசம்..?) கன்னடத்தில் மொழிபெயர்க்க சாதுஜி தமிழில் முழங்கினார்.
நோவாவின் நாட்களில் நடந்தது போலவே மனுஷகுமாரனுடைய நாட்களிலும் நடக்கும் என்ற வேதவசனத்தை எடுத்துக்கொண்டு வரிவரியாக விளக்கிக்கொண்டே வந்து மிக சாமர்த்தியமாக மேட்டரை உள்ளே நுழைத்தார்;ஜனங்கள் அதிர்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தனர்;இது ஏற்கனவே நாம் எழுதி எச்சரித்தது தான், ஆனாலும் மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.
அதாவது தூதர்களைக் குறித்து காற்றுகளாகவும் அக்கினியாகவும் ஆவியாகவும் மாத்திரமே அறிந்திருக்கிறோம்;ஆனால் அவர்கள் மனுஷ ரூபத்தையும் எடுத்துக்கொள்ளும் வல்லமை பெற்றவர்கள்; இதன் காரணமாக அவர்கள் மனுஷ குமாரத்திகளைக் கண்டு இச்சைக்கொண்டு அவ்வப்போது மனுஷரூபம் கொண்டு வந்து இளங்கன்னியரோடு சம்யோகம் செய்து செல்வதுண்டு;இதன் காரணமாகவே பண்டைய காலத்தில் இராட்சதர்கள் பிறந்தார்கள்;அதுபோலவே மனுஷ குமாரனுடைய காலம் எனப்படும் தற்காலத்திலும் நடைபெறப்போகிறது; எனவே 12 ,13 வயதிலேயே பருவமெய்தும் இளம் கன்னிப்பெண்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென சாதுஜி மிகுந்த அக்கறையுடன் இருக்கவேண்டும் எச்சரிக்கிறார்; ஆனால் அவரிடமே எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென அங்கே பணிபுரிந்து வெளியேறிய இளம்வாலிபர்கள் எச்சரிக்கின்றனர்; யாரைத் தான் நம்புவதோ..?
இந்த அருவருப்பான கள்ள உபதேசத்தின் விளைவாக என்னென்ன ஐயங்களெல்லாம் தோன்றும் என்பதற்கும் இதுபோன்ற உபதேசங்கள் எதிரியின் வாய்க்கு எப்படி அவலாக மாறும் என்பதற்கும் உதாரணமாக ஒரு கேள்வியை முன்வைக்கிறேன்; கோல்டா போன்று சாதுஜிக்கு "நெருக்கமானவர்கள்" தயவுசெய்து அந்த ஆளிடம் இதைக்குறித்து கேட்டு சொல்லவும்;அதாவது, தூதர்கள் மனு உருவெடுத்து இளங்கன்னியரை அனுபவித்து செல்வதாக சொல்லுகிறீரே,அதனை ஆம் என்றே வைத்துக்கொண்டு யோசிப்போம்,அப்படியானால் மரியாளுக்கும் காபிரியேல் தூதனுக்கும் ஏதாவது கனெக்ஷன் இருந்திருக்குமோ என்று (மேசியாவின்) எதிரிகள் யோசிக்கமாட்டார்களா? வெறும் வாயை மென்றவர்களுக்கு அவலைப் பரிசாகக் கொடுப்பது போல இருக்கிறதே, உங்களுடைய கருத்து..! உண்மையாக சொல்லுங்க, ப்ளீஸ், இதை ப்ரன்ஹாம் தானே முதன்முதலில் கண்டுபிடித்து போதித்தார்..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நோவாவின் நாட்களைப் போலவே இந்நாட்களிலும் தேவதூதர்கள் வந்து - அதாவது மனுஷ ரூபத்தில் வந்து இளம்பெண்களுடன் "சம்யோகம் " செய்து செல்வதாக ஏஞ்சல் டிவியில் காலங் கார்த்தால சாதுஜி செக்ஸ் பாடம் எடுக்கிறாரே; ஒரு பெண் என்று சொல்லிக்கொள்ளும் உம்மால் இதனை ஏற்றுக்கொள்ள முடிகிறதா? இதற்கு வேத ஆதாரம் உண்டா? இதையா கடைசி கால வெளிப்பாடுகள் என்கிறீர்கள்? அதிலிருந்து தப்பிக்கொள்ளவே அபிஷேகப் பெருவிழாக்களை (எருசலேமிலும்) ஆங்காங்கு நடத்துகிறாராமே? ஒரு பாவமுமறியாத 14 ,15 வயது சிறுமிகளைக் கூட தூதன் சும்மா விடமாட்டானாமே, உண்மையா?
இப்படி தான் கோல்டா வாதங்களை திசைதிருப்பிக் கொண்டிருக்கிறார்; அடியேன் அவரிடம் நேரடியாகக் கேட்ட கேள்விக்கு உரிய பதிலைத் தராமல் அதைத் தவிர்க்கும் வண்ணமாகவும் என்னை அவமானப்படுத்தும் நோக்கத்துடனும் ஆங்கிலத்தில் ஏதோ ஒரு கண்றாவியைப் பதித்திருக்கிறார்;ஆங்கிலம் தெரியாத ஒருவனிடம் சற்றும் பொறுப்பில்லாமல் ஆங்கிலத்தில் பேசுவதைப் போன்ற ஒரு மடத்தனம் எதுவும் இருக்கமுடியாது.காப்பி பேஸ்ட் செய்வதிலும் ஒரு நாகரீகம் தேவை என்பதை புதிய பதிவர்கள் கவனத்தில் கொள்வது நல்லது;நிர்வாகத்தார் உடனே இதில் தலையிட்டு ஆவன செய்யவேண்டுகிறேன்.எனக்கு தகுந்த பதில் கிட்டும்வரை இந்த கேள்வியையே மீண்டும் மீண்டும் கேட்பேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
Jesus_My_Love:-அப்புறம் angel டிவியில் தமிழ் படம் எல்லாம் போட போறான்களாம் உங்களுக்கு எதாவது தெரியுமா ?(நண்பர் ஒருவர் சொன்னார் )
pgolda Wrote@Tcs on 02-03-2011 18:34:10:
எந்த படம் - மைனாவா? ஏற்கெனவே கடைசி கால நியாயத்தீர்ப்புகள் சம்பந்தமான, வேதம் சம்பந்தமான ஆங்கில படங்களை தமிழில் டப் செய்து போட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.எதையும் பார்க்காமல் தான் இந்த பேச்சு பேசுறிங்களா?!
Vijay@Tcs:-போதுமான வசன ஆதாரமுமின்றி தற்கால வேத விற்பன்னர்களின் கருத்தைப் பிரதிபலிக்கும் கடைசி காலத்தைக் குறித்த அத்தகைய திரைப்படங்களே மக்களை வஞ்சிக்கப் போதுமானவை. அதற்கு ”மைனா”-வே தேவலாம்.
chillsam:-ஏஞ்சல் டிவியில் போட்ட படங்களிலேயே அதிகமாக இளம் உள்ளங்களின் மனதைப் பாதித்தது,"ஹைவே டு ஹெவன்" எனும் படத் தொடர் தான்; அதில் தேவதூதர்கள் மனித ரூபத்தில் மக்களோடு மக்களாக வாழ்ந்து தாங்கள் கொண்டு செல்லவேண்டிய ஒரு ஆத்துமாவுக்காக கடுமையாகப் போராடுவார்; மிகுந்த விறுவிறுப்புடனும் பரபரப்புடனும் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தாலும் வேதத்துக்கு முற்றிலும் புறம்பானதும் தள்ளுபடியாகமங்களிலும் கிரேக்க பாரம்பரிய கிழவிகளின் கதைகளிலும் மட்டுமே அறியப்பட்ட கதையாகும். சாதுவும் கிழத் தோற்றத்தில் ஏமாற்றப் புறப்பட்டுள்ளதால் அவருக்கு இது ஏற்புடையதாக இருக்கிறது;கள்ளப் பிசாசு போலவே ஒரு ஆள் அவ்வப்போது தோன்றி தான் ஜூபிடர் கிரகத்துக்குப் போய் வந்ததாக (கனவில் அல்ல,மெய்யாலுமே...!) ஆங்கிலத்தில் ரீல் சுற்றுவான்;இந்த அக்கிரமமெல்லாம் தமிழர்கள் தூங்கும் இரவு நேரத்தில் தான் அதிகமாக நடக்கும்; இவர்கள் கையில் மீடியா சிக்கிக்கொண்டதே அன்றாடம் எத்தனை ஆயிரங்கள் வஞ்சிக்கப்படும் என்று மனமெல்லாம் பதறுகிறது; போதாக்குறைக்கு இங்கே கோல்டா போன்ற காலி டால்டா டின்களின் சத்தம் வேறு தாங்க முடியவில்லை..! ஏஞ்சல் டிவியைப் போன்றதொரு மோசடி சேனலுக்காக நாங்கள் ஒருபோதும் ஜெபிக்கவில்லை;அந்த கூட்டத்தார் 70% மோசடியாளர்கள் மற்றும் 30% ஏதோ பரவாயில்லை என்ற அளவில் இருக்கிறது..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
//ஆவிக்குரிய வாழ்வில் வளரவே விவாதிக்கிறோமே தவிர, விவாதத்தில் ஜெயித்து அதில் திருப்தியடைய அல்ல. //
உண்மை.
//தவிரவும் நான் எழுதியிருப்பதே புரியவில்லை என்கிறீர்கள் பின்னர் நான் மாட்டிகொண்டதாக சொல்லுவது எப்படி?//
நான் சொல்ல வந்தது, சுவிசேஷம், நிருபங்கள் போல வெளி. விசேஷமும் சபைக்கும், சபையிலுள்ள விசுவாசிகளுக்கும் தானே எழுதப்பட்டது. அதை ஏன் யாருக்கோ எழுதியது போல் பார்க்க வேண்டும்? எல்லோரும் எல்லா நேரமும் தரிசனங்களை, அனுபவங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதில்லையே.
//இப்பத்தான் காபிரியேல் கூட காஃபி சாப்ட்டுட்டு வர்றேன்!” என்ற வெற்று தோரணையெல்லாம் அதில் இல்லை//
வெத்து வேட்டுக்களை விட்டுத் தள்ளுங்க. நல்ல தாழ்மையான ஊழியக்காரர்களை ஏற்றுக் கொள்ளுங்க.
Chillsam:-நாங்கள் சொல்லவருவது யாதெனில் வேதம் என்பது எழுதி முடிக்கப்பட்ட ஒன்று;அதிலிருந்தோ அதனை ஒட்டியோ பேசி அந்த வசனத்தை உறுதிபடுத்துவது போல அதாவது அதனை விளங்கிக்கொள்வது போல ஒரு ஊழியன் செயல்படலாமே தவிர ஏற்கனவே எழுதி முடிக்கப்பட்ட ஒன்றுடன் சேராத ஒன்றையும் யாரும் சொல்லக்கூடாது;அது வானத்திலிருந்து வந்து சொன்ன தூதனே ஆனாலும் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்..!
"நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்."(கலாத்தியர்.1:8 )
சாதுஜி மற்றும் டொக்லோனி போன்ற வெத்து வேட்டுகளை விட்டுத் தள்ளச் சொன்னால்தான் கோல்டா போன்றவர்களுக்கு கோபம் வருகிறதே..? புதிய ஏற்பாட்டு சபைக்கு வாக்களிக்கப்பட்ட பரி.ஆவியானவரே ஒருவனை நடத்திச் செல்வாரே தவிர ஒரு தூதன் வாக்களிப்படவில்லை; கனவிலும் தரிசனத்திலும் தூதன் வெளிப்பட்டு எதையோ சொன்னதாகச் சொல்லுவோர் முதலில் பார்க்கவேண்டியது மனநல மருத்துவரையே என்பதை துணிவுடன் சொல்லிக் கொள்ளுகிறேன்; தனிப்பட்ட அனுபவங்களை ஒருபோதும் போதனையாக்க இயலாது; அது கிறித்துவின் தியாகத்தையே கேலிக்குரியதாக்கும் செயலாகும்; இதற்கு மேலும் கோல்டா போன்றவர்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளுக்கு வக்காலத்து வாங்கி போராடிக் கொண்டிருந்தால் நான் அந்த கள்ளத்தீர்க்கதரிசிகளின் அந்தரங்கக் காரியங்களை அரங்கத்திற்குக் கொண்டுவர வேண்டியதாகும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கோல்டா... நீர் சாதுவின் கைக்கூலி என்பது எனக்குத் தெரியும்;ஆக்கப்பூர்வமான விவாதங்களைக் கெடுத்துக்கொண்டிருப்பதைவிட கொஞ்சம் அமைதியாக இருந்தால் உமக்கு நல்லது;நேரடியாக வந்துமோதினால் சேதாரம் பலமாக இருக்கும் என்பதால் நீர் பெண் பெயரில் நுழைந்து குழப்பம் விளைவிப்பதை இனியும் சகிக்கமுடியாது;திருடனுக்கு காரோட்டுபவனும் குற்றவாளியாவான்..! ஒரு வேளை நீங்கள் எந்த சபைக்கும் மேய்ப்பனுக்கும் கட்டுபடாதவராக இருக்கலாம்;உங்களுக்கு நீங்களே ஆலயமாகவும் இருக்கலாம்;ஆனால் இங்கே ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறது.
----
pgolda Wrote on 28-02-2011 19:16:11:
இப்படி இஷ்டத்திற்கு என்னைப் பற்றி எழுதுவது என்ன ஒழுங்கு? என்னை தினமும் தூஷித்தால் தான் தங்களுக்கு தூக்கம் வருமா?
ஒரு செய்தியை முழுமையாகப் போட்டுவிட்டு link கொடுத்தால் நல்லது. (பாதி போட்டு) தூண்டில் போட்டு வாடிக்கையாளர்களை தன் தளத்திற்கு இழுப்பது என்ன ஒழுங்கு?
நான் எழுதுவது இவ்வளவு கஷ்டத்தை உங்களுக்கு கொடுத்தால், ஏன் உங்க board இல் எழுதுவதை அனுமதிக்கிறீர்கள்? Please remove my name from your board. Thanks.
நான் பெண் என்று நம்ப கஷ்டமாக இருக்கிறது. பரவாயில்லை. அதனால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. நான் இரண்டு கொம்பும், ஒரு வாலும் உள்ள வேற்று கிரக வாசியாக இருந்தாலும் தான் என்ன? என்ன எழுதுகிறேனோ, அதை attack பண்ணுவதை விட்டு விட்டு, why do you attack me personally? இது என்ன ஒழுங்கு?
வாதங்களை திசைதிருப்புவது போல சிறுபிள்ளைத்தனமான காமெண்டுகள் அடிப்பது,இதுவரை எடுத்துக்கொண்ட பிரச்சினைக்கும் தீர்வைச் சொல்லாமல் நிர்வாகத்தார் கேட்டுக்கொண்டபிறகும் தன்னிச்சையாக செயல்படுவது முன்னாள் நண்பர்களை ஒருமாதிரியாகவும் விவரமாக எழுதுவோரை ஒரு மாதிரியாகவும் நடத்தி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபடுவது என்று இத்தனை ஒழுங்கீனங்களையும் ஒரு பெண்மணி நிச்சயம் செய்யமாட்டார்;நீர் யாராக இருந்தாலும் எனக்கு கவலையில்லை;உம்மை எதிர்த்து எழுதும் அளவுக்கு நீர் இதுவரை எதையும் சாதித்துவிடவில்லை;நீர் யார் உம்முடைய விசுவாசம் என்ன என்பது கூட எனக்குத் தெரியாது;ஆனால் நீர் சாதுஜியின் கையாள் என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்;பார்ப்போம்.
லின்க் கொடுத்து என்னுடைய தளத்துக்கு யாரையும் இழுக்க வேண்டுமென்று எனக்கு அவசியமில்லை;நான் இங்கே வியாபாரம் எதுவும் பண்ணவில்லை;நானே ஆதிக்கம் செலுத்துவது போன்ற தோற்றம் ஏற்படாதிருக்கவும் சர்ச்சைக்குரிய காரியங்களை இங்கே பதிக்க அஞ்சுவதாலும் மட்டுமே லிங்க் கொடுக்கிறேன்;ஆனால் நீங்கள் கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு லிங்க் கொடுப்பதை நிச்சயமாக எதிர்ப்பேன்;அந்த எரிச்சலில் என்மீது பாயவேண்டாம். நீர் ஆரம்பித்து வைத்த இந்த திரிக்கு உபயோகமாக ஏதாவது நல்ல ஆரோக்கியமான விஷயம் இருந்தால் எடுத்துவைத்து இந்த திரியை மூடுவதற்கு உதவிசெய்யும்..! நோவாவின் நாட்களைப் போலவே இந்நாட்களிலும் தேவதூதர்கள் வந்து - அதாவது மனுஷ ரூபத்தில் வந்து இளம்பெண்களுடன் "சம்யோகம் " செய்து செல்வதாக ஏஞ்சல் டிவியில் காலங் கார்த்தால சாதுஜி செக்ஸ் பாடம் எடுக்கிறாரே; ஒரு பெண் என்று சொல்லிக்கொள்ளும் உம்மால் இதனை ஏற்றுக்கொள்ள முடிகிறதா? இதற்கு வேத ஆதாரம் உண்டா? இதையா கடைசி கால வெளிப்பாடுகள்என்கிறீர்கள்? அதிலிருந்து தப்பிக்கொள்ளவே அபிஷேகப் பெருவிழாக்களை (எருசலேமிலும்) ஆங்காங்கு நடத்துகிறாராமே? ஒரு பாவமுமறியாத 14 ,15 வயது சிறுமிகளைக் கூட தூதன் சும்மா விடமாட்டானாமே, உண்மையா?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நீங்கள் ஏதோ வால்பாறையிலும் கடத்தூரிலும் நடந்த செய்திகளைக் காட்டுகிறீர்கள் இது இன்று நேற்று நடப்பது அல்ல, காலம் காலமாக நடந்துவருகிறது....மேலும் வேதத்தில் சொல்லப்பட்ட அந்த வசனத்தில் பூமியின் மக்கள் தொகையில் காற்பங்கு அழியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அப்படியானால் எத்தனை பெரிய அளவில் அது நடக்கவேண்டுமென்று யூகிக்க முடிகிறதா?
pgolda Wrote on 17-02-2011 19:09:46:
கடைசி காலத்தில் அதிகம் நடக்கும். துஷ்ட மிருகங்கள் என்பதை - தீவிரவாதிகள், bio -terrorism, கொல்லும் கிருமிகள் plagues, killer animals and birds என்றும் எடுத்துக் கொள்ளலாம். முடிவு ஆரம்பம் என்று சொல்லலாம்.
மண்ணாங்கட்டி...அதைச் சொல்ல சில புல்லுறுவிகள் எங்களுக்கு அவசியமில்லை;இது ஏற்கனவே எசேக்கியேல் தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டது தான்;அவ்வளவு ஏன்,இன்றைக்கு ஒரு லிட்டர் பாலைவிட அதிக விலை கொடுத்து தண்ணீரை வாங்கிக்கொண்டிருக்கிறோமே அதுகூட எரேமியா தீர்க்கனால் உரைக்கப்பட்டதே;கள்ளத்தீர்க்கர்களின் கூச்சலும் அவர்தம் துதிபாடிகளில் எச்சில் சாரலும் கொஞ்சம் நின்றதானால் நாங்கள் எங்களுக்கு கிடைத்த இந்த காலத்திலாவது வேதத்தை வாசிக்க ஆர்வமாக இருக்கிறோம்.
"ஆகையால், கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் மனுஷரையும் மிருகங்களையும் நாசம்பண்ணும்படி எருசலேமுக்கு விரோதமாகப் பட்டயம், பஞ்சம், துஷ்டமிருகங்கள், கொள்ளைநோய் என்னும் இந்நான்கு கொடிய தண்டனைகளையும் அனுப்பும்போது எவ்வளவு அதிக சங்காரமாகும்? " (எசேக்கியேல்.14:21) "அந்தப் பட்டணத்தார் மனோவாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு, காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்ந்துபார்த்ததினால், தெசலோனிக்கேயில் உள்ளவர்களைப்பார்க்கிலும் நற்குணசாலிகளாயிருந்தார்கள்." (அப்போஸ்தலர்.17:11)
கடந்த நூற்றாண்டில் போப்பு மார்க்கத்தின் கட்டுபாடு காரணமாக பைபிளை வாசித்தறிய முடியவில்லை; இடைபட்ட காலத்தில் எப்படியோ விடுதலை பெற்று பலரும் தியாகத்துடனும் அர்ப்பணத்துடனும் பரிசுத்த வேதாகமத்தை சொந்த செலவில் அச்சடித்து ஒரு அரசாங்கத்தின் மூலமோ அல்லது சபையின் உதவியுடனோ அல்லாமல் கோடிக்கணக்கில் அவரவர் மொழியில் மொழிபெயர்த்து விநியோகித்தனர். இன்றைக்கும் எனக்குத் தெரிந்த ஒரு முதிர்ந்த அனுபவமுள்ள பெரியவர் ஒருவர் தான் பணிபுரிந்த ஒரு உலகளாவிய இயக்கத்திலிருந்து ஓய்வு பெற்றபிறகு தன்னுடைய நண்பர்கள் மற்றும் பழக்கமானோர் வட்டாரத்திலிருந்து நன்கொடை பெற்று முழு விலைக்கு பைபிளை வாங்கி பாதி விலைக்கு கிராம சபைகளுக்கு கொடுத்து வருகிறார்;அவருக்கு எல்லாம் தெரிந்திருந்தாலும் அவர் எதையும் பேசுவதில்லை;பைபிள் கொடுப்பது ஒன்று எனக்கு கொடுக்கப்பட்ட தரிசனம்;மற்றவற்றை கர்த்தர் பார்த்துக்கொள்ளுவார் என்பது அவருடைய விசுவாசம்.
தற்போதுள்ள பரிதாப நிலை என்னவென்றால் கையிலே வேதத்தை வைத்துள்ள ஒரு ஆத்துமா தான் சுயமாக வேதத்தை வாசித்தறிவது தடைசெய்யப்பட்டு மீண்டும் மனுஷ போதகங்களும் சொந்த வியாக்கியானங்களும் தனிப்பட்ட அனுபவங்களுமே திணிக்கப்படுகிறது; "அது முத்திரிக்கப்பட்டிருக்கிறது,அதை வாசிக்காதே, நான் சொல்லுவதை வாசி, இங்கே இருக்கும் இதை வாசி, அங்கே இருக்கும் அதை வாசி,அதற்கு இது தான் அர்த்தம், இதற்கு அது தான் அர்த்தம்", என்று பிதற்றும் பிடரி தெறித்த பெரு வயிற்று சோம்பேறிகள் பெருகிவிட்டனர்; இந்த அவலநிலை மாறவும் இதுபோன்ற திருடர்களிடமிருந்து வேதப்புத்தகம் மீட்கப்படவும் மீண்டும் ஒரு சுதந்தரபோராட்டத்தை செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
புரட்சி வெடிக்கும், ஏற்ற பணியை செய்துமுடிப்போம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ராட்சத பறவைகளுக்கு எச்சரிக்கையாக இருக்கும்படி அந்த செய்தியில் கூறப்பட்டுள்ள்து.இதற்கும் வெளி.6 ஆம் அதிகாரத்திற்கும்...... ?????????
pgolda Wrote on 15-02-2011 21:09:15:
அந்த வசனத்தில் (வெளி 6: 8 ) துஷ்ட மிருகங்கள் மனிதர்களைக் கொல்லும் என்று இருக்கிறதல்லவா. (அதை எழுத்தின் படியே மிருகங்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.) அப்படிப் பட்ட காரியங்கள் இக் காலத்தில் அதிகம் நடக்கிறது.
எனவே, அதான் இது!
சில செய்திகள்: அன்று சிறுத்தை; நேற்று கரடி:திருமலையில் தொடர்கிறது பீதி
ஸ்ரீவி.,யில் சிறுத்தை, புலி நடமாட்டம் வனப்பகுதிக்குள் ஆட்கள் செல்ல தடை; வால்பாறையில் காட்டு யானை அட்டகாசம்: பள்ளிக்கூடம் சேதம் வால்பாறையில் யானை தாக்கி 3 பெண்கள் சாவ
முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் முதலில் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை நடைபெறவேண்டும். அதன் பிறகு நடக்கும் குழப்பங்களைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு சமாதானபிரபு போல(வெள்ளைக் குதிரை?)(வெளி6:2). அந்திக்கிறிஸ்து எழும்ப வேண்டும்...
அடுத்து மோசமான கலகங்கள் அதாவது முத்திரை இட்டுக்கொள்ளாத தன் குடும்ப உறுப்பினர்களையே காட்டிக்கொடுப்பதும், ஒருவருக்கு விரோதமாக ஒருவர் எழும்பி சமாதாணம் இல்லாமை உண்டாகவேண்டும் (வெளி6:4)
அடுத்து பஞ்சம், ஒரு ரூபாய்க்கு ஒருபடி கோதுமை. ஒரு ரூபாய்க்கு 3 படி வாற்கோதுமை என்றும் விற்கப்படுவது தடுக்கப்படுவதால் உண்டாகும் பஞ்சம். இதை அனுமானிப்பது கடினம் சகோ அற்புதம் அவர்கள் சொன்னது போல தீர்க்க தரிசனங்கள் நிறைவேறினால் மட்டுமே அதை நம்மால் அனுமானிக்க முடியும் அதுவரை அது தேவன் மட்டுமே அறியும் இரகசியம் (வெளி:6:6,7,8 )
நீங்கள் ஏதோ வால்பாறையிலும் கடத்தூரிலும் நடந்த செய்திகளைக் காட்டுகிறீர்கள் இது இன்று நேற்று நடப்பது அல்ல, காலம் காலமாக நடந்துவருகிறது....
மேலும் வேதத்தில் சொல்லப்பட்ட அந்த வசனத்தில் பூமியின் மக்கள் தொகையில் காற்பங்கு அழியும் என்று சொல்லப்பட்டிருக்கிறது அப்படியானால் எத்தனை பெரிய அளவில் அது நடக்கவேண்டுமென்று யூகிக்க முடிகிறதா?
// முதலில் ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள் முதலில் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகை நடைபெறவேண்டும். //
இரகசிய வருகை...இதில் தான் பல்வேறு உபதேசக் குழப்பங்கள் பரவியிருக்கிறது..!
பாரம்பரிய சபை என்று சொல்லப்படுகிற சிஎஸ்ஐ இயக்கமானது கடந்த 50 வருடங்களில் தனது போதனைகளை கத்தோலிக்க உபதேசத்தின் பாதிப்பு இல்லாமல் செய்திருந்தால் பெந்தெகொஸ்தே இயக்கமும் அதிலிருந்து பிரிந்து சிதறிய பல்வேறு குழுக்களும் தோன்றியிருக்காது; ஏனெனில் இரகசிய வருகையைக் குறித்தும் அதற்கு ஆயத்தப்படுத்தப்படுவது குறித்தும் பாரம்பரிய சபைகள் போதிக்கவில்லை; மாறாக இயேசுகிறித்துவின் ஒரே இரண்டாம் வருகையைக் குறித்து மட்டுமே பாரம்பரிய சபைகள் போதித்து வந்தது.
ஆனால் பெந்தெகொஸ்தே இயக்கத்தினரின் எழுச்சிக்குப் பிறகு தாமதமாக விழித்துக்கொண்ட பாரம்பரிய சபைகள் தங்கள் பிடிவாதமான கொள்கைகளை கொஞ்சம் தளர்த்திக் கொண்டு சபையில் "கைதட்டுவது", "அல்லேலூயா" போடுவது மற்றும் முழுக்கு ஞானஸ்நானம் போன்றவற்றை அனுமதித்தது; ஆனால் கிறித்துவின் வருகையைக் குறித்த போதனையில் இன்றைக்கும் திருச்சபையின் மூல உபதேசக்கொள்கையின் படி "இரகசிய வருகை" என்பது கிடையாது;அது இன்னும் தீர்க்கப்படாத சர்ச்சையாகவே தொடருகிறது.
இதனிடையே ப்ரன்ஹாம் எனும் ஒரு போதகர் வெளிநாட்டில் எழும்பி மாறுபாடானவற்றை போதித்து பலரையும் வஞ்சித்தார்;இன்றைக்கு சுமார் 50 வருடத்துக்கும் முன்னரே நம்ம ஊரு பாலாசீர் லாறீ என்பவர் அவரை சந்தித்து அவருடைய கரத்தால் மறுஞானஸ்நானம் பெற்றுக்கொண்டு அவரிடத்திலிருந்து சூக்ஷமங்களைக் கற்றுக்கொண்டு இங்கே வந்து அவற்றைப் பயன்படுத்தி பெரும்புகழ் பெற்றார்;அவருடைய அதே டெக்னிக்குகளைப் பயன்படுத்தி புகழ்பெற்றவரே காலஞ்சென்ற டிஜிஎஸ் அவர்களும்;இதைக் குறித்து இன்னும் எழுதிக்கொண்டே போகலாம்.
அப்பேற்பட்ட ப்ரன்ஹாமின் போதனைகளையே இன்றைக்கு ஏஞ்சல் டிவியின் முதலாளிகள் மனப்பாடம் செய்து ஒப்பித்து வருகின்றனர்; ஆனாலும் ப்ரன்ஹாம் என்பவரைக் குறித்து ஏற்கனவே சபையினர் எச்சரிக்கப்பட்டுவிட்டதால் வெளிப்படையாக அவரை முன்னிறுத்துவதில்லை; ஆனாலும் அவருடைய கழுகு சிங்கமுகம் முதலான ஒவ்வொரு அடையாளத்தையும் பயன்படுத்துகின்றனர்.
ஏஞ்சல் டிவியின் போதனையில் ப்ரன்ஹாமின் உபதேசம் இல்லையென்றும் இரகசிய வருகையை ஏற்பதாகவும் சொல்லுங்கள், நான் எழுதியவற்றையெல்லாம் மறுபரிசீலனை செய்ய ஆயத்தமாக இருக்கிறேன்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகோதரி கோல்டா, சகோ. சில்சாம் சாதுவைப் பற்றி கூறுவது உண்மைதான். நான் முன்னர் சாதுவின் பிரசங்கங்கள் , நிகழ்ச்சிகளை பார்ப்பதுண்டு. தற்போது நிறுத்திவிட்டேன். ஏனென்றால் பிரசங்கங்களில் ஓயாது பொய்களைக் கூறிக் கொண்டிருக்கிறார். நீங்கள். ஜாமக்காரன் இதழைப் படித்தால் தெரியும். அத்துடன் சகோ. சில்சாமின் இத்தகைய பணி போற்றுதற்குரியது. இதேவண்ணமாக தினகரன் அன் கோ குடும்ப பொய்யுரைகளையும் கொண்டுவர வேண்டும்.
நாம் ஆதரவு தரவுவதால் தான் இப்படிப்பட்ட துணிகர பொய்களை அவர்களால் சொல்ல இயலுகிறது. நாம் எந்தவித உதவிகளையும் அவர்களுக்கு செய்ய கூடாது. மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஊட்ட வேண்டும்.
ஒரு மிகப்பெரிய சர்வதேச மோசடி கும்பலுக்கு எதிராக முதல் அடியை இன்று எடுத்து வைக்கிறேன்;கர்த்தர் தாமே அடியேனை பெலப்படுத்துவாராக. மேற்கண்ட படத்தில் காணப்படும் நபர் யார், அவருடைய போதனையானது கடந்த 60 வருடங்களில் கிறித்துவின் மணவாட்டி சபையில் ஏற்படுத்திய பாதிப்புகள் என்னென்ன என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்தால் டாக்டர் பட்டமே வாங்கிவிடலாம்;அந்த அளவுக்கு இந்த சப்ஜெக்ட் மகா ஆழமானதும் அகலமானதுமாகும்;தற்கால தமிழ் கிறித்தவ வட்டாரத்தை அதிர்ச்சியடையச் செய்யும் அந்தரங்கமான சூழ்ச்சியான உபதேசங்களை அடியேன் விவரமாகப் பகிர்ந்துகொள்ளப்போகிறேன்.இந்த போதகத்தைக் குறித்தும் தன்னைத் தானே தீர்க்கதரிசியாக அறிவித்துக் கொண்ட இந்த வெளிநாட்டுப்பூனையைக் குறித்தும் அனைத்துப்போதகர்களுக்கும் தெரியும்;ஆனாலும் ஏதோ ஒருவித அச்சத்தினால் அவரவர் ஒதுங்கிச் சென்றதால் அது ஆலமரமாக விழுதுவிட்டுப் படர்ந்து ஏஞ்சல் டிவி வரைக்கும் வந்து சபை முழுவதையுமே கவிழ்த்துப் போடப்பார்க்கிறது;என்னைப் போன்ற வளரும் நிலையிலிருப்போர் இவர்களுடன் அனுசரித்துப் போயிருந்தால் நல்லநிலையை அடைந்திருக்கலாம் பாதுகாப்புடனும் வலம் வந்திருக்கலாம்;ஆனால் சத்தியத்துக்காக நிற்க சிலராவது வேண்டுமே என்ற பதைப்பில் அனைத்தையும் உதறிவிட்டு எனது ஜீவனையும் அருமையாக எண்ணாமல் இதோ வந்திருக்கிறேன். எனது அன்புக்குரிய வாசகர்கள் வீணாகக் குழப்பமடையாதிருக்க இந்த குறிப்பிட்ட நபரைக் குறித்த விவரத்தை அறியும் தொடுப்பைக் கொடுத்திருக்கிறேன்;அதனைப் பொறுமையாக வாசித்துவிட்டு சத்திய வேதத்துடன் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு இஸ்லாமை ஸ்தாபித்த முகமது அவர்களையும் சற்று கவனத்தில் கொண்டு தற்காலத்திலும் இதேபோல ரீல் சுற்றி, வேடமிட்டு மக்களை மயக்கிவரும் சாதுஜியுடனும் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்த்துவிட்டு தயவுசெய்து தங்கள் கருத்துக்களை மெய்யான அக்கறையுடன் பகிர்ந்துகொள்ளவும்;தயவுசெய்து திருப்பி அடிக்கும் பாணியோ அரட்டையடிக்கும் தோரணையோ வேண்டவே வேண்டாம்..!
நீங்கள் என்னுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்ளாவிட்டாலும் பரவாயில்லை;என்னை மட்டுப்படுத்தும் செயல்களை செய்யவேண்டாம்; இங்கே ஒவ்வொரு எழுத்தும் நிதானத்துடன் எழுதப்படுகிறது;யார்மீதும் சேற்றை வாரி வீசவேண்டும் என்ற தீய எண்ணம் எனக்கு துளியும் கிடையாது;உங்கள் சாதுவுக்கு முறைப்படி மெயில் மூலம் விளக்கம் கேட்டு அதற்கு நாளது தேதி வரையிலும் எந்தபதிலும் வராத காரணத்தினாலேயே இங்கே தொடர்ந்து எழுதுகிறேன்;எனக்கு யாரைக் குறித்தும் பயமில்லை;யாருடைய தயவும் எனக்குத் தேவையுமில்லை; எனக்கு தகுந்த பதிலளிக்க திராணியில்லாத சாதுஜி தனது டிவியில் எனது வரிகளைக் குறிப்பிட்டு புலம்பித் தீர்க்கிறார்,சபிக்கிறார்;அது சரியா? நாம் பேசுவது கிறித்தவ விசுவாசம் தொடர்பானதாக இருந்தாலும் நான் வேதவசனங்களை மிகவும் நேசித்து மதிக்கிற காரணத்தினால் அதனைத் தேவையில்லாமல் குறிப்பிடுகிறதில்லை;ஆனால் நான் எழுதியுள்ள நியாயமான கருத்துக்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு பகல் கொள்ளையனும் பொய்யனுமாகிய ஒரு மோசடி கூட்டத்துக்கு சாமரம் வீசுவதற்காக என்னை பொய்யன் வசனத்தால் என்று குறிப்பிடுவது கொஞ்சமும் நியாயமில்லை. உங்கள் செயலானது சாதுஜியின் அனைத்து துருபதேசங்களையும் நான் பகிரங்கப்படுத்தவே என்னைத் தூண்டுகிறது;இதன் விளைவுகள் முழுவதும் உங்களையே சாரும்;மனதார பொய் தன்னை சொல்லவேண்டா என்று முதுமொழி இருக்க, தன்னெஞ்சறிவது பொய்யற்க என்று குறளும் உரைக்க சத்திய வேதத்தை கையில் வைத்துக்கொண்டு தூதர்களைக் குறித்து பொய்களைப் பரப்பிக்கொண்டிருக்கும் சாதுஜியின் அண்டப்புளுகு மூட்டைகளை மறைக்க சாதாரண மனிதனான என்னை தரந்தாழ்த்துகிறீர்களா? நான் பக்கம் பக்கமாக எழுதியுள்ள ஒன்றுக்கும் பதில் சொல்லத் திராணியில்லாத நீங்கள், சாதுஜி வெள்ளை தாடி வேடம் போடுகிறார் என்று சொன்னதற்கு மாத்திரம் நிரூபணம் கேட்டு நெருக்குகிறீர்களே,நான் அதை நிரூபிக்க ஆயத்தமாக இருப்பதைக் கூறியும் என்னை பொய்யன் என்று எப்படி கூறலாம்? சரி சாதுஜியின் தாடிமுடி மெய்யான நரைமுடி தான் என்று கண்டுபிடித்தபிறகு என்ன செய்வதாக உத்தேசம்? அவருடைய போதனைகளைக் குறித்து அல்லவா நாம் விவாதித்துக்கொண்டிருக்கிறோம்? பொய்யனுக்கு பொய்ப் பல் கட்டினாலும் அவன் பொய்யை தான் பேசுவான் என்பதை நீங்கள் நினைவில் நிறுத்தவேண்டும்;என்னுடைய பொய்யினால் சாதுவுக்கு எந்த இழுக்கும் ஏற்படாது,ஆனால் அந்த ஆள் இடைவிடாமல் செய்துகொண்டிருக்கும் பொய்ப் போதகங்களால் சபை முழுவதும் கவிழ்க்கப்பட்டுப் போகும் என்பதை உணரவும்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)