Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கேட்பவரும் கொடுப்பவரும்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
கேட்பவரும் கொடுப்பவரும்
Permalink  
 


அற்புதமான மூன்று சத்தான கேள்விகளைக் கேட்டிருக்கிறீர்கள்,எபி;'கேட்கிற எவனும் பெற்றுக்கொள்கிறான் ' எனும் வேத வாக்கின்படி தாங்கள் நிச்சயமாக தள நண்பர்களிடமிருந்து நல்லதொரு பதிலைப் பெற்றுக்கொள்ள வாழ்த்துகிறேன்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

அருமையான கட்டுரை. கிறிஸ்தவ வாழ்வில் ஜெபம் முக்கியமானது. ஒரு பிரச்சனையிலிருந்து விடுபட ஜெபிப்பது அவசியம். ஆயினும் எனக்குள் இருக்கும் சந்தேகத்தை கேட்கிறேன். தெரிந்தவர்கள் சரியான பதிலை பதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். தேவன் அந்த பிரச்சனையிலிருந்து என்னை நிச்சயம் விடுவிப்பார் என்று விசுவாசிக்கும் ஒருவர் கண்டிப்பாக அதற்காக ஜெபம் செய்ய வேண்டுமா? இந்த இடத்தில் ஜெபத்தின் பங்கு என்ன? விசுவாசத்தின் பங்கு என்ன?

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கடந்த மாதம் 26-ந்தேதியன்று மாலையில் ஒரு வீட்டுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன்;அவ்வமயம் செய்தி நேரத்துக்கு முன்பதாக பலரும் கடந்த வாரத்தில் கர்த்தர் தங்களுக்கு செய்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர்;குறிப்பாக ஒரு சகோதரிக்கு ஏற்பட்ட பெலவீனத்தைக் குறித்து சகோதரிகளாக இணைந்து ஜெபித்ததாகவும் த‌ற்போது அவர்கள் சுகம் பெற்றதை அறிந்து கர்த்தரை மகிமைப்படுத்துவதாகவும் கூறினார்கள்;அப்போது எனக்குள் தோன்றிய எண்ணங்களை இங்கே பகிர்ந்துகொள்ளுகிறேன்.



எந்தவொரு சுகவீனத்திலும் அல்லது தேவையிலும் தவிப்பவருக்கு மனதுருகி உதவிசெய்பவர் பரிசுத்த ஆவியானவரே;அதற்கான ஆதாரமாக விளங்குபவர் பிதாவாகிய தேவன்;ஏனெனில் அவரே சிருஷ்டிகளின் பிதாவானவர்;அவரிடம் தமது இரத்தத்தை முன்வைத்து நமக்காக வேண்டுதல் செய்பவர் பிரதான ஆசாரியராகிய இயேசுகிறித்து; இதுவே தேவத்துவ பீடத்தைக் குறித்த‌ நம்முடைய பார்வையாகும்.

images?q=tbn:ANd9GcSpSHVHv7KFdudd8HvRjyYAIxsYiPK9SPp80GFHmxTsuLQYVhAi1A

அப்படியானால் இங்கிருந்து மனிதர்களாகிய நாம் செய்யும் ஜெபங்களுக்கு அவர் உடனே பதில் தருவதான நம்பிக்கை எப்படி ஏற்படுகிறது;நாம் ஜெபித்த ஒருவருக்கு எந்தவொரு நன்மையான காரியம் சம்பவித்தாலும் அதில் மறைமுகமாக உரிமை கொண்டாடுவது போல நான் ஜெபித்தேன், ஆண்டவர் அற்புதம் செய்தார், அதற்காக ஆண்டவருக்கு மகிமை செலுத்துகிறேன் என்று (சிலர் சொல்லுவதில்லை) கூறுவது எப்படி? என்னத்தான் மனிதர்களாகிய நாம் வேண்டுதல் செய்தாலும் அதனை நிறைவேற்றுபவர் கர்த்தர்தானே?

images?q=tbn:ANd9GcQKHnAmjzVoeTDsD76B31vnHk9TJqJ4Kqw9Uj7Ibqmzk8NO3RQt

இந்த காரியத்தில் சரியானதொரு போதனையைப் பெற்றுக்கொள்ள மனதைத் தாழ்த்தினால் பரிசுத்த ஆவியானவர் கற்றுத்தருவார்; அதன்மூலம் நாம் தெய்வீக ஐக்கியத்தில் நம்முடைய பங்கினைப் புரிந்துகொண்டு செயலாற்ற ஏதுவாக இருக்கும்;அப்போது நாம் சாதாரண மனிதர்கள் மாத்திரமல்ல என்பதும் சர்வ வல்லவருடைய மேலான ஸ்தாபனத்தில் முக்கிய பங்காற்ற வேண்டிய உறுப்பினர்கள் என்பதும் விளங்கும்.

images?q=tbn:ANd9GcQBi-M2tfrSy38NYdD-pk-QjIxdZCkMa6LdhOdTeRslkHxXC6qu-A

சத்தியத்தை விளங்கிக்கொள்ள மூன்று எளிமையான பகுதிகளாக இதனைப் பிரித்துக்கொள்ளுவோம்;

பிரச்சினை
பிரச்சினையில் தவிப்பவர்
பிரச்சினையிலிருந்து விடுவிப்பவர்.


இந்த மூன்று காரியத்தில் ஒவ்வொன்றும் மற்ற இரண்டுடன் சம்பந்தப்பட்டிருக்கிறது;அதன்படி பிரச்சினையானது அதற்குக் காரணமான‌ சத்துரு மற்றும் ஏதோ ஒரு வகையில் அதில் சிக்கிக்கொண்டவருடைய பங்கு;இரண்டாவது பிரச்சினையில் சிக்கிக்கொண்டவரின் தவிப்புக்கு சத்துருவின் சூழ்ச்சியும் தேவனுடைய நோக்கமும் காரணமாக இருக்கிறது; அடுத்து அந்த குறிப்பிட்ட
பிரச்சினையிலிருந்து விடுவிப்பவர் பாதிக்கப்பட்டவரைப் பிரச்சினையிலிருந்து விடுவிக்க இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்;ஒன்று பிரச்சினையில் சம்பந்தப்பட்டவர் தேவன் மீது வைக்கும் விசுவாசம் மற்றும் பரிந்துபேசும் ஒருவர்.

உதாரணத்துக்கு நம்முடைய அன்றாட வாழ்வில் குற்றஞ்சாட்டப்பட்ட‌ ஒரு நபரை ஜாமீன் எடுக்க ரெண்டு பேரை கோர்ட்டார் கோருவார்கள்;ஒன்று சொந்த ஜாமீன் மற்றும் மற்றொருவரின் ஜாமீன்;இதுபோலவே எந்தவொரு பிரச்சினையிலும் சிக்கியிருப்பவரை விடுவிப்பது தேவனுடைய நோக்கமானாலும் சம்பந்தப்பட்டவரின் பங்கு மற்றும் அவரோடு சம்பந்தப்பட்டவரின் பங்கு இதில் முக்கியமாகிறது; இதன்படி பிரச்சினையிலிருந்து ஒருவரை விடுவிக்க ஆயத்தமாக இருக்கும் தேவன் தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணவும் மகிமையை அனுப்பவும் வேண்டுதல் செய்யும் மனிதர்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்.

images?q=tbn:ANd9GcT4OF11oiz0x2UkWPy57UBxqjXr4azBPO-2_JpTMD6_wEtta1Mj

"நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன்.."
(சகரியா.12:10)


அந்த மனிதர்களும்கூட‌ அன்றாட சுகதுக்கங்களில் மற்ற மனிதர்களைப் போல வாழ்ந்துகொண்டிருந்தாலும் அவர்களுக்குள் ஊற்றப்பட்டுள்ள விசேஷித்த விண்ணப்பத்தின் ஆவியினால் தேவனால் அறியப்பட்டு அபிஷேகிக்கப்பட்டவர்களாக அதாவது விண்ணப்பஞ் செய்வதற்காகவே நியமிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள்; இவர்கள் செயல்படலாம் செயல்படாமலும் இருக்கலாம்; அது அவர்களுடைய சுய சித்தம் சார்ந்ததாக இருக்கிறது; செயல்படும் அலுவலருக்கும் செயல்படாத அலுவலருக்கும் அரசாங்கம் என்னவிதமான மரியாதை செய்யுமோ அதுவே இவர்களுக்கும் தேவனால் செய்யப்படும்.

இதன்படி கேட்பவர் இல்லாவிட்டால் கொடுப்பவருக்கு சித்தம் இருந்தும் பெற்றுக்கொள்ள‌முடியாத பரிதாபநிலையே ஏற்படும்; தேவையுள்ளவர் மிகுந்த தன்னடக்கத்துடன் சொல்லுவார், "அந்த ஆண்டவருக்கு சித்தமிருந்தால் அவரே செய்யட்டும்" என்பதாக; செய்ய ஆயத்தமாக இருக்கும் ஆண்டவர் சொல்லுவார், "அவனுக்கு விருப்பமிருந்தால் அவனே கேட்கட்டும்"
என்பதாக.

images?q=tbn:ANd9GcSt9yeWyiEVdBHR6XqLlwd6rRXWjJohr9dLdlQQds8R0ME3VWcU

"கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்;ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும்."
(மத்தேயு.7:7,8)


கேட்பவர் இல்லாவிட்டால் கொடுப்பவரும் இல்லை;கொடுப்பவர் இல்லாவிட்டால் கேட்பவரும் இல்லை;இவ்விரண்டு பேருக்கு மத்தியில் விண்ணப்பிப்பவரின் பங்கு விசேஷமானது;விண்ணப்பஞ் செய்கிறவன் இல்லாவிட்டால் ஆண்டவருக்கு மகிமையுண்டாவது எப்படி?

"ஒருவரும் இல்லையென்று கண்டு, விண்ணப்பம் பண்ணுகிறவன் இல்லையென்று ஆச்சரியப்பட்டார்." (ஏசாயா.59:16)

கொடுப்பவர் ஒருவரானாலும் அவர் தருவதற்குக் காரணமாக ரெண்டு அமைப்புகள் உண்டு;ஒன்று தேவையை உணர்ந்த அமைப்பு;இன்னொன்று தேவையை உணர்
(ந்து)த்தும் பரிந்துபேசும் அமைப்பு.

கேட்பதில் குறைந்தது ரெண்டு வகையுண்டு;ஒன்று பிரச்சினையிலிருந்து விடுபடும் அவசரத்தில் கேட்பது;மற்றது வழக்கமான உயர்வுக்காக கேட்பது.இதில் முதல் காரியத்துக்கே அதிக முக்கியத்துவமும் பரிந்துபேசும் ஜெபமும் தேவைப்படுகிறது; எந்தவொரு பிரச்சினையிலும் சிக்கிக்கொண்டவரை ஆண்டவர் விடுதலை செய்யவே விரும்புகிறார்; ஆனாலும் பரிந்துபேசுவோரின் விண்ணப்பத்தினால் காரியம் விரைந்து நிறைவேறும்;அதன்மூலம்
பரிந்து விண்ணப்பிப்பவருக்கும் நிச்சயமாகவே கனமுண்டாகும்.

எனவே தேவையுள்ளவருக்கு ஜெபித்ததன் பலனை அடைந்தோர் ஆனந்தத்துடன் அதைக் குறித்து மேன்மைபாராட்டி நான் கேட்டேன் கர்த்தர் கொடுத்தார் என்று மேன்மைபாராட்டமுடியும்;இதன்மூலம் ஜெபத்தைக் கேட்கிற கர்த்தர் ஒருவர் இருப்பதைக் குறித்த விசுவாசம் மற்றவருக்குள்ளும் பெருகும் என்பது நிச்சயம்.

"ஜெபத்தைக் கேட்கிறவரே, மாம்சமான யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்." (சங்கீதம்.65:2)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard