Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வெளியே இருக்கும் எதிரிகளும் உள்ளே இருக்கும் துரோகிகளும்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: வெளியே இருக்கும் எதிரிகளும் உள்ளே இருக்கும் துரோகிகளும்
Permalink  
 



// சகோ.சில்சாம் அவர்களே! இக்கட்டுரை அப்பன் பெயர் இல்லாத பிள்ளையாக அல்ல, ஆக்கியோனுடைய பெயருடனேயே எனது தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் (கு)தர்க்கவாதிகள் என்னை விவாதத்துக்குள் இழுக்க வேண்டுமென்றே இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்து “யாரோ எழுப்பிய கேள்விகள்” என்ற போர்வையில் யுத்தத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். //


நண்பர் விஜய் அவர்களை என்னுடைய வரிகள் காயப்படுத்தி இருந்தால் தயவுசெய்து பொறுத்துக்கொள்ளவும்;ஆனாலும் நிலைமையின் தீவிரத்தை உணர்த்தவே இவ்வாறு குறிப்பிடவேண்டியதானது;என்னைப் பொறுத்தவரையிலும் நான் யாருடைய எழுத்தை மேற்கோள் காட்டினாலும் அவருடைய கருத்து எனக்கு எதிராக இருந்தாலும் சம்பந்தப்பட்டவருடைய பெயருடனும் அதற்குரிய தொடுப்புடனும் குறிப்பிடும் வழக்கத்தைக் கடைபிடிக்கிறேன்.

உதாரணத்துக்கு நான் உங்களுடன் விவாதித்த தசமபாகம் சம்பந்தப்பட்ட கட்டுரையின் ஆங்கில மூலத்தையும் கண்டுபிடித்து அதன் தொடுப்பைக் கொடுத்தது தங்களுக்கு நினைவிருக்கலாம்;மேலும் தேடுபொறி (Search engine)யின் (Google)உதவியுடன் எந்த கட்டுரையின் ஏதாவது இரண்டு வரிகளைப் போட்டு தேடினாலும் அதன் மூலத்தைக் கண்டுபிடித்துவிட முடியும்;எனவே யார் எழுதினார் என்றே தெரியாத கட்டுரை என்று ஒன்றையும் குறிப்பிடுவது சாத்தியமல்ல;இது முழுக்க முழுக்க (மேசியாவின்) எதிரிகளின் சூழ்ச்சியாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
வெளியே இருக்கும் எதிரிகளும் உள்ளே இருக்கும் துரோகிகளும்
Permalink  
 


அன்பு சகோதரர்கள் சில்சாம் மற்றும் ராஜ்குமார் அவர்களுக்கும் மற்ற சகோதரர்கள் அனைவருக்கும் எழுதிக் கொள்ளுவது. நமது கிறிஸ்தவத்தில் காணப்படும் மாய்மாலங்களையும் அறியாமையையும் நமது ஆவிக்குரிய குடும்பத்துக்கு எடுத்து இயம்பும் பொருட்டு எழுதப்பட்ட “மனதை நெருடும் பத்து கேள்விகள்” என்ற கட்டுரையானது சில (கு)தர்க்கவாதிகளின் கையில் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட தொடங்கி இருப்பது புரிகிறது. அதைத் தெரியப்படுத்திய சகோ.சில்சாம் அவர்களுக்கு நன்றி!

சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்;(யோவேல்2:1) என்பதே ஆண்டவருடைய வார்த்தையாய் இருக்கிறது. நோயாளிக்கு அவன் நோயை உணர்த்திக்காட்டாமல் மருந்தை அவன் கையில் கொடுத்தால் அவனுக்கு மருந்தின் அருமை புரியாது. இதைத்தான் ஆண்டவர் ஆவிக்குரிய சீக்காளியான லவோதிக்கேயா சபைக்கு செய்தார்,

நீ நிர்ப்பாக்கியமுள்ளவனும், பரிதபிக்கப்படத்தக்கவனும், தரித்திரனும், குருடனும், நிர்வாணியுமாயிருக்கிறதை அறியாமல், நான் ஐசுவரியவானென்றும், திரவியசம்பன்னனென்றும், எனக்கு ஒருகுறைவுமில்லையென்றும் சொல்லுகிறபடியால்;

நான்: நீ ஐசுவரியவானாகும்படிக்கு நெருப்பிலே புடமிடப்பட்ட பொன்னையும், உன் நிர்வாணமாகிய அவலட்சணம் தோன்றாதபடிக்கு நீ உடுத்திக்கொள்வதற்கு வெண்வஸ்திரங்களையும் என்னிடத்திலே வாங்கிக்கொள்ளவும், நீ பார்வையடையும்படிக்கு உன் கண்களுக்குக் கலிக்கம்போடவும் வேண்டுமென்று உனக்கு ஆலோசனை சொல்லுகிறேன். (வெளி 3:17,18)

இக்கட்டுரையை எழுதிய போது தயக்கத்துடனேயே தொடங்கினேன். ஏனெனில் “கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கல்லெறிகிறாய்” என்ற குற்றச்சாட்டு சகோதரர்கள் நடுவிலிருந்தே புறப்படக்கூடும் என்ற உணர்வுதான். ஆனாலும் யாரைப் பிரியப்படுத்த ஊழியம் செய்கிறோம்? மனிதனையா? கர்த்தரையா? இந்தக் கேள்வியே என்னை இக்கட்டுரை எழுதத்தூண்டியது.

சகோ.சில்சாம் அவர்களே! இக்கட்டுரை அப்பன் பெயர் இல்லாத பிள்ளையாக அல்ல, ஆக்கியோனுடைய பெயருடனேயே எனது தளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தத் (கு)தர்க்கவாதிகள் என்னை விவாதத்துக்குள் இழுக்க வேண்டுமென்றே இந்த ஆயுதத்தைக் கையில் எடுத்து “யாரோ எழுப்பிய கேள்விகள்” என்ற போர்வையில் யுத்தத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். ஏற்கனவே “ஆதிக்கிறிஸ்தவர்களுக்குத் தெரியாத உண்மைகள்” என்ற கட்டுரையில் என்னை திரித்துவம் குறித்த விவாதத்துக்குள் இழுக்க முனைந்தார்கள். நான் அவர்களோடு விவாதம் செய்ய உடன்படவில்லை. அவர்களது நோக்கம் புரிகிறது. இதற்கு அவர்களது பதில் “நாங்கள் உன்னை விவாதத்துக்குள் இழுக்க முயலும் அளவுக்கு நீ ஒன்றும் பெரிய ஆள் இல்லை” என்பதாக இருக்கும் என்பதையும் நான் அறிந்திருக்கிறேன்.

நான் இவர்களைத் தவிர்க்கக் காரணம் இவர்களோடு பேசுவது நேர விரயம் அவ்வளவே! அவர்களுக்கும் அதுதான் நோக்கமே! நாம் யாருக்கு ஊழியம் செய்ய வேண்டுமோ அவர்களுக்கு நாம் ஊழியம் செய்யக்கூடாதபடிக்கு நம்மைத் திசைதிருப்பி நமது நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சப் பார்க்கிறார்கள். இவர்கள் அலங்கம் கட்ட முயன்ற நெகமியாவைத் திசைதிருப்ப முயன்ற தோபியா, சன்பல்லாத்து போன்றவர்கள். அவர்களது நோக்கம் நெகமியாவை திசை திருப்ப வேண்டும் என்பது மாத்திரமே!

கீழ்க்கண்ட வேத பகுதியை தியானித்துப் பாருங்கள் நெகமியா 6:2-4:

நான் வாசல்களுக்கு இன்னும் கதவுபோடாதிருக்கையில், சன்பல்லாத்தும், கேஷேமும் ஆள் அனுப்பி: நாம் ஓனோ பள்ளத்தாக்கில் இருக்கிற கிராமங்கள் ஒன்றில் ஒருவரையொருவர் கண்டு பேசுவோம் வாரும் என்று கூப்பிட்டார்கள்; அவர்களோவென்றால், எனக்குப் பொல்லாப்புச் செய்ய நினைத்தார்கள்.

அப்பொழுது நான் அவர்களிடத்திற்கு ஆட்களை அனுப்பி: நான் பெரிய வேலையைச் செய்கிறேன், நான் வரக் கூடாது, நான் அந்த வேலையைவிட்டு உங்களிடத்திற்கு வருகிறதினால் அது மினக்கட்டுப்போவானேன் என்று சொல்லச்சொன்னேன்.

அவர்கள் இந்தப்பிரகாரமாக நாலுதரம் எனக்குச் சொல்லியனுப்பினார்கள்; நானும் இந்தப்பிரகாரமாகவே அவர்களுக்கு மறுமொழி அனுப்பினேன்.

நமக்கு முன்னே ஒரு மாபெரும் பணியிருக்க இவர்களோடு யுத்தம் செய்து மினக்கெடுவானேன்!!

இவர்களுக்கு நாம் செய்ய வேண்டியது இவர்களை உதாசீனம் செய்வது மாத்திரமே! நெகெமியா இவர்களோடு போராடிக்கொண்டிருந்திருப்பானானால் அலங்கத்தைக் கட்டியிருந்திருக்க மாட்டான். இவர்கள் நம் எதிரிகள்தான் நாம் போராட வேண்டிய எதிரிகள் அல்ல அலட்சியம் பண்ணி கடந்து போக வேண்டிய எதிரிகள். காரணம் தமிழ் கிறிஸ்தவம் இவர்களை ஓரளவுக்கு அறிந்து வைத்திருக்கிறது.  நமது உண்மையான எதிரிகள் டிவியில் உட்காந்து பரலோகக் கதை பேசிகொண்டிருக்கிறார்கள். பொருளாதார செழிப்பை உபதேசித்து மணவாட்டியை ”உலகப் பொருள்”என்னும் கள்ளப் புருஷனுக்கு கூட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், பரிசுத்த ஆவியர் பெயரால் குரங்கு வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். புதுப்புது ”திட்டங்களைக்” கண்டுபிடித்து ஜனங்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். சபையை மேய்க்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தங்களைத் தாங்களே மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் கிறிஸ்தவம் அவர்களை நம்பி அவர்கள் பின்னால் போய்க் கொண்டிருக்கிறது. இவர்களுக்கு விரோதமாகவே நாம் மக்களை எச்சரிக்க வேண்டும் என்று நம்புகிறேன். இக்கட்டுரையால் தனிப்பட்ட முறையில் தங்களுக்கு ஏற்ப்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்.



-- Edited by vijay76 on Monday 14th of February 2011 01:36:54 PM

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: வெளியே இருக்கும் எதிரிகளும் உள்ளே இருக்கும் துரோகிகளும்
Permalink  
 


நண்பர் விஜய் அவர்கள் கிறித்து சபையின் எழுப்புதலுக்காக ஏங்குபவர்;அவருடைய எழுத்துக்கள் அதனை வாசிக்கும் யாருக்கும் ரெண்டுவித பாதிப்பைக் கொண்டுவரும்;ஒன்று இவரைத் தூக்கியெறியச் செய்யும்;அல்லது வாசிப்பவர் தூக்கியெறியப்படுவார்;இது கொஞ்சம் பழைய கருத்து தான் எனினும் இந்த கருத்து உருவாகக் காரணமான  (எழுப்புதல் தாமதிப்பதேன்..?) புத்தகங்களை விஜய் அதிகமாகப் படித்திருப்பதால் அவர் அந்த புத்தகமாகவே மாறிவிட்டார் போலும்;நாம் இதைவிட பெரிய ஆளையெல்லாம் பார்த்துவிட்டோமல்லவா,இதெல்லாம் நமக்கு சாதாரணம்; அது அப்போ., இது இப்போ., அப்புறம் எப்போ..? என்று மேட்டிமையான கண்களுடன் கேட்டுப் பழகியவர்கள்;

ஒரு திருமண வீட்டில் எச்சில் இலையை எடுக்க ஒரு பணியாளை நியமித்தார்களாம்;அந்த வேலையாள் இலைகளை வேகமாக எடுத்து அடுத்த பந்திக்கு ஆயத்தம் செய்யாமல் அந்த எச்சில் இலைகளை எண்ணிக் கொண்டிருந்தானாம்;வேலைக்குப் பணித்தவன் வந்து சத்தம் போட்டான்,"ஏண்டா, இலையை எடுடா என்றால் அதை எண்ணிக்கிட்டிருக்கிறாயா" என்று..!

அதுபோலவே கிறித்தவ உலகின் மந்தத் தன்மையைப் போக்க பந்தம் கொளுத்திப் போராடும் எம்மைப் போன்ற சிறியவர்களை எள்ளி நகையாடிப் பகடி செய்யும் அகதிகள் பெருகிவிட்டனர்;அவர்கள் எமது கருத்துக்கு மரியாதை தராவிட்டாலும் போகட்டும்,மாற்றத்துக்காக ஏங்கி பெருமூச்சுடன் எழுதும் எங்களை மனமடிவாக்காமலிருக்கலாமே? பிரச்சினை இருப்பதால் தானே கூவுகிறோம்,பிரச்சினையை சரி செய்ய ஒத்துழைக்காமல் அதைக் குறித்து பேச நீ யார் என்பது எவ்வளவு மோசமான மந்தத்தன்மையல்லவா? தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் ஆக வேண்டியதைப் பார்க்காமல் பந்தத்தின் த‌ன்மையைக் குறித்து ஆராய்ச்சி செய்வது மடமையல்லவா?

விஜய் அவர்களுடன் நமக்கு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவருடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு நாம் அவருக்கு தார்மீக ஆதரவு அளித்து வருகிறோம்;ஆனால் அவருடைய புரட்சிகரமான கருத்துக்கள் கள்ள உபதேசிகளின் வாய்க்கு அவலாகி விட்டதை எண்ணி மனம் பதறுகிறது.

விஜய் அவர்களின் "மனதை நெருடும் 10 கேள்விகள்" எனும் கட்டுரையானது பல்வேறு தளங்களில் வைத்து விவாதிக்கப்படுகிறது;அதைக் குறித்த ஒரு கவன ஈர்ப்பைக் கொண்டு வரவிரும்பி இங்கே நம்முடைய தள நண்பர்களிடம் அதைக் குறித்து நாம் பகிர்ந்துகொள்ளுகிறோம்.

தொடர்வது விஜய் அவர்களின் தளத்தில் நாம் பதிவிட்டிருக்கும் ஒரு எச்சரிக்கை...


நண்பர் விஜய் அவர்களுக்கு,தங்களுடைய இந்த பத்து கேள்விகள் அடங்கிய கட்டுரையானது அப்பன் பெயர் தெரியாத பிள்ளையைப் போல அங்குமிங்கும் சிதைந்து திரிந்துகொண்டிருக்கிறது;நீங்கள் உடனடியாக செய்யவேண்டியது தங்கள் கட்டுரைகளைக் குறித்த கண்டிப்பான அறிவிப்பு;இதனால் வீணான குழப்பங்களையும் சர்ச்சைகளையும் நீங்கள் தவிர்க்கலாம்;நீங்கள் எழுதிய நோக்கமானது மறை(று)க்கப்பட்டு எதிரிகளுக்கு அவல் போலாகிவிட்டதை சற்று கவனியுங்கள்..!


http://kovaibereans.activeboard.com/forum.spark?aBID=128972&p=3&topicID=41124215

http://eternal-life.activeboard.com/forum.spark?aBID=134761&p=3&topicID=41118228

http://www.tamilchristians.com/index.php?option=com_ccboard&view=postlist&forum=10&topic=2064&Itemid=287


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

தங்கள் ஆதரவுக்கும் புரிதலுக்கும் நன்றி,சகோதரரே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

chillsam wrote:
எதிரிகளோடு மோதுவதைவிட உள்ளிருந்து கொல்லும் வியாதியாக சபையை சீரழித்துக்கொண்டிருக்கும் துரோகிகளை கருவறுக்க ஆயத்தப்படுகிறேன்;


 இரண்டுமே இரண்டு கண்களைப் போல இரண்டையுமே செய்யுங்கள் என்னுடைய ஆதரவு நிச்சயம் உண்டு,



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
வெளியே இருக்கும் எதிரிகளும் உள்ளே இருக்கும் துரோகிகளும்
Permalink  
 


கிறித்தவ மார்க்கத்துக்கு எதிராக ரெண்டு பிரச்சினைகள் இருக்கிறது;அதில் ஒன்று உள்ளேயும் மற்றது வெளியேயும்;வெளியே இருக்கும் பிரச்சினை என்னவென்றால் பைபிள் எனப்படும் நமது பரிசுத்த வேதாகமத்தைக் குறித்தும் அதன் நம்பகத்தன்மையைக் குறித்தும் இடைவிடாமல் சர்ச்சைகளைக் கிளப்பிக்கொண்டிருக்கும் அறிவுஜீவிகள்;இந்த உலகளாவிய மாபெரும் அமைப்புக்கு இஸ்லாம் தலைமைபீடமாக விளங்குகிறது;அதன் முரட்டுத்தனம் மற்றும் துஷ்டத்தனமானது கடந்த சுமார் 1400 வருடங்களாக கிறித்தவத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வருகிறது.

அடுத்து உள்ளிருந்து ஓயாமல் போராடிக் கொண்டிருக்கும் துரோகி யாரென்றால் வேதத்தைக் குறித்த இறையியல் கொள்கைகளையும் மூல உபதேசத்தையும் திரித்து போதித்து ஜனங்களைக் குழப்பிவரும் துருபதேசக்குழுக்களே;வெளியிலிருப்பவன் எதிரி என்றால் உள்ளேயிருப்பவன் துரோகியாவான்.

இயேசுவை சிலுவையிலறைந்தது எதிரிகள் என்றால் அவரைக் காட்டிக்கொடுத்தவர்கள் துரோகிகள் அல்லவா? அடியேன் துருபதேசக்காரர்களை துரோகிகளாகவே பார்க்கிறேன்;எதிரியின் நோக்கத்தையும் அவனுடைய வேகத்தையும் எளிதில் கணிக்கவும் புரிந்துகொள்ளவும் முடியும்;ஆனால் துரோகியை எப்படி இனங் காண்பது,அவனுடைய சூழ்ச்சியை எப்படி அறிவது?

எனவே நான் இணையதளத்தில் வெளிப்படையாகத் தெரியும் எதிரிகளோடு மோதுவதைவிட உள்ளிருந்து கொல்லும் வியாதியாக சபையை சீரழித்துக்கொண்டிருக்கும் துரோகிகளை கருவறுக்க ஆயத்தப்படுகிறேன்;கர்த்தர் தாமே அடியேனை மறைத்துக்கொண்டு வெளிப்படுவாராக‌..!

எனவே இந்த இரண்டு காரியங்களில் நாம் எச்சரிக்கையுடன் செயல்பட்டு நம்முடைய கிறித்தவ விசுவாசத்தில் வேரூன்றி வளரவேண்டும்; ஒன்று,வேதாகமத்தின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் எதிர்க்குழுக்களின் பிரச்சாரத்துக்கு தக்க பதிலடி கொடுக்க சத்தியத்தில் தெளிவுபெறவேண்டும்;மற்றது,கிறித்தவ விசுவாசத்தையே கேள்விக்குறியாக்கும் மூல உபதேசத்துக்கு விரோதமான இறையியல் கொள்கைகளையும் வேதப்புரட்டுகளையும் செய்துவரும் மார்க்க பேதகர்களுக்கு முன்பாக நிமிர்ந்து நிற்க ஆரோக்கிய உபதேசத்தில் தேற்றப்பட்டு தேற வேண்டும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard