Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மதியீனமான முடிவெடுத்ததில் சிறந்தவர் யார்,ஏவாளா,சாராளா..?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: மதியீனமான முடிவெடுத்ததில் சிறந்தவர் யார்,ஏவாளா,சாராளா..?
Permalink  
 


arputham:

appu.jpg

// ஒரு முழுமையான கண்ணோட்டத்துடன் நாம் வேதாகமத்தை அணுகும்போது நம் குறைகளை வேதம் களையும். குறைபாடுடைய கண்ணோட்டத்துடன் வேதாகமத்தை அணுகினால் களைகளே பெருகும்.//

இது கவிதையா தத்துவமா...பேஷ்..பேஷ்..ரொம்ப நன்னாருக்கு...
நானும் ஒண்ணு சொல்லிவைக்கிறேனே...நாம் ஒரு முழுமையானதொரு கண்ணோட்டத்துடன் வேதாகமத்தை அணுகினால் நம்முடைய குறைகளை வேதம் களையும்; குறைகளைக் களையும் வேதத்தில் நாம் குறைகாண முற்பட்டால், அது நம்மை களையும் அல்லது நம் மனம் வேதத்தைக் களையும்; இதன் பிற்பகுதியானது பரிதாபம்..!

இந்த விவாதத்தை நம்மை நாம் ஆராய்ந்துபார்க்கும் நோக்குடனோ வேதத்தின் உண்மைகளை வெளிக்கொணரும் நோக்குடனோ ஆராயாமல் ஆணாதிக்கம் மற்றும் பெண்ணடிமைத்தனம் என்ற நோக்கிலும் தனிநபர் தாக்குதல் மற்றும் விமர்சனத்திலும் கொண்டு சென்றதால் இதனை முடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

pgolda Wrote on 08-02-2011 17:43:16:

I understand that Brother Chillsam is very precious to you Tamilchr brother(s).
Keep it up.

நமக்கன்பான புதிய உறுப்பினர் கோல்டா அவர்களுடைய அதே நிலையில் நானும் இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தேன்; எனவே கோல்டாவின் உணர்வுகள் எனக்கு நிச்சயம் புரிகிறது; என்னுடைய போராட்டகுணமும் கண்மூடித்தனமான பிடிவாதகுணமும் கோல்டாவிடம் காணப்படுவதன் காரணமாகவே அவர் பெண் அல்ல, என்றேன்; யாரும் நம்புவதாக இல்லை; ஆனால் அதேநேரம் கோல்டா அவர்கள் அதனை மறுக்கவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும்; அவ்வளவு ஏன் கோல்டா என்பவர் நானாகக் கூட இருக்கலாம்; இந்த தளமானது சுறுசுறுப்பாக இருக்க நானே ரெட்டை வேடம் போடுகிறேனோ என்னவோ? போகட்டும், என்னை எவ்வளவு தான் திட்டினாலும் நான் அதனைப் பொருட்படுத்துவதில்லை; நான் போராடுவதெல்லாம் சத்தியத்துக்காக மாத்திரமே என்பது என்னைக் கூர்ந்து கவனிப்போருக்கு நிச்சயமாகவே தெரியும்.

இந்த தளத்தில் முன்பு ஆர்வமாக இருந்த பல மூத்த உறுப்பினர்கள் தற்போது விவாதங்களில் பங்கேற்கிறதில்லை; இந்த நிலையில் ஆர்வமாக இருக்கும் புதிய உறுப்பினர்களும் சோர்ந்துபோகக்கூடாது என்று வேண்டுகிறேன்; நண்பர் சேகர் சாமுவேல் மற்றும் சகோதரி கோல்டா ஆகிய இருவரும் புதியவர்களாக இருந்தாலும் அவர்களது பங்களிப்பு விலைமதிப்பில்லாதது ஆகும்.

சகோ.கோல்டா அவர்கள் என்னை திட்டி ஏதோஎழுதியிருக்கிறார்; நல்லவேளையாக நான் அதனைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை; ஆனாலும் கோல்டா அவர்களுக்காக என்னுடைய தளத்தின் வாசல் திறந்தே இருக்கிறது; அவருடைய வசதிக்காகவே இந்த விவாதத்தை என்னுடைய தளத்திலும் துவக்கியிருக்கிறேன்; நீங்கள் என்னை எவ்வளவு திட்டினாலும் நான் அவற்றை நீக்கமாட்டேன் என்றும் உறுதிகூறுகிறேன்,போதுமா?

இந்த திரியைத் துவக்கிய நண்பர் ஜாண்சன் அவர்களின் நோக்கத்தை சிதைப்பது போல எதுவும் எழுதிவிடக்கூடாதே என்று தான் அடியேன் அமைதியாக இருந்தேன்; மற்றபடி அவர் முன்வைத்த பிரச்சினையை நண்பர்கள் கொண்டு சென்ற திசையே தவறாகும்; இதனை "எல்லாம்" அறிந்த நிலையிலிருந்து நான் குறிப்பிடவில்லை; அந்த நாகரீகத்தையும் இந்த தளத்திலிருந்தே கற்றுக்கொண்டேன்; எனவே கோல்டா அவர்கள் உணர்ச்சிவயப்படாமல் இந்த விவாதத்தின் பொருளை உணர்ந்து ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்த ஒத்துழைக்குமாறு வேண்டுகிறேன்; வேதகால பெண்டிரைக் குறித்து ஆராயும்போது குறிப்பிடும் உதாரணமும் கூட வேத வார்த்தைகளை மையமாகக் கொண்டே அமைந்திடவேண்டும்; அப்போது தான் நம்முடைய நோக்கத்தை அடையமுடியும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

chillsam Wrote on 08-02-2011 04:36:25:

தேவனுடைய தீர்மானத்துக்கும் நியமத்துக்கும் மாறாக துணிந்து முடிவெடுப்பதில் ஆதிமுதலே பெண்கள் முன்னணியில் இருந்தனர் அல்லது அப்படிப்பட்ட ஆபத்தான தீர்மானங்களை ஆண்கள் எடுக்கக் காரணமாக இருந்தனர்.

sekarsamuel:

சகோ.சில்சாம் உங்களின் வார்த்தைகள் முழுப் பழியையும் பெண்கள் மீது போடுவதாக உள்ளது. துக்ளக் ஆசிரியர் “சோ” போல பேசக் கூடாது. ஆணில்லாமல் பெண்ணில்லை, அதேவேளையில் பெண்ணில்லாமல் ஆணில்லை. இதே அணுகுமுறைதான் ஒரு பிரச்சனையிலும். தேவன் பெண் மட்டுமே பிரச்சனைக்குக் காரணம் என்று தேவன் நினைத்திருந்தால், ஏன் எல்லாருக்கும் தேவன் தண்டனை கொடுத்தார். மகளின் தவறை அவளுடைய தகப்பனிடத்திலும், மனைவியின் தவறை கணவனிடமும் விசாரிப்பேன் என்று தேவன் ஏன் சொன்னார். வேதாகமம் எல்லாருடைய தவறுகளையும் சுட்டிக்காட்டுகிறது. பெண்களின் தவறுகளையும் சுட்டுகிறது, ஆண்களின் தவறுகளையும் சுட்டுகிறது. பெண்களே பிரச்சனைக்குக் காரணம் என்று தேவன் நினைத்திருந்தால் அவர் முழு உலகத்தியும் அழிப்பதற்குப் பதிலாக பெண்களை மட்டும் அழித்திருக்கலாமே!

இந்த டாபிக்கில் பேசலாம் பேசலாம் பேசிக்கொண்டே இருக்கலாம். ஏனெனில் இது பெண்கள் சம்பந்தப் பட்டதல்லவா! ஆனால் அவர்களே விவாதம் போதும் என்று சொன்ன பின்பு ஆளில்லாத இரயிலை இழுக்க வேண்டுமா?

chillsam:

தமிழ்க் கிறித்தவ தளத்தில் இதனை விவாதிக்க உங்களுக்கு விருப்பமில்லாவிட்டாலும் யௌவன ஜனம் தளத்தில் விவாதிக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்; நான் அங்குமிங்கும் அலைபாய்வது உங்களுக்குத் தெரிந்திருக்கும்; இதனால் கடுமையாக உழைத்தும் காப்பி பேஸ்ட் செய்து காலத்தை ஓட்டுபவன் என்ற அவப்பெயருக்கும் உடையவனாகிறேன்..!

நான் காப்பி பேஸ்ட் செய்வது யாருடைய எழுத்தையோ அல்ல, நான் பகிர்ந்துகொண்ட என்னுடைய கருத்துக்களையே; காரணம், மற்ற தளங்களில் என்னுடைய கருத்து திருத்தப்படவோ நீக்கப்படவோ வாய்ப்புண்டு; எனவே கோல்டா போன்றவர்கள் கூறுவது போல நான் நீக்கிவிட்டு ஓடுவது போலத் தெரிந்தாலும் ஒரு எழுத்தும் மாற்றாமல் அப்படியே என்னுடைய தளத்தில் சேமித்து வருகிறேன் என்பதை வாசக நண்பர்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: பெரிய பாவம்..!
Permalink  
 


// மதிகேடு நிறைந்த மனைவி யார்? ஏவாளா, ஆகாரா? //

pgolda Wrote on 05-02-2011 14:28:04:

இப்படியெல்லாம் எழுதுபவர்கள்தான் மதிகேடு நிறைந்தவர்கள்! இப்படிப்பட்ட ஆண்களைத் திருமணம் செய்து அவர்களுக்கு வாழ்வளிக்கும் பெண்கள் இன்னும் அதிக மதிகேடு உள்ளவர்கள்!!


Chillsam:

இந்த திரியில் சகோ.கோல்டா அவர்கள் பதிவுசெய்த முதல் வரிகளை கவனியுங்கள்


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

sekarsamuel Wrote on 08-02-2011 04:09:15:

சகோ.சில்சாம் இந்த மேடையில் சகோ.கோல்டா அவர்கள் ஆணா பெண்ணா என்பது அல்ல தலைப்பு. விவாதிக்கிறவர்கள் ஆணாக இருந்தால் ஒரு கருத்து, பெண்ணாக இருந்தால் ஒரு கருத்து என்ற பாகுபாடே வேதத்தினடிப்படையில் இருக்கக் கூடாது என்று கருதுகிறேன்.


சரி,ஒப்புக்கொள்ளுகிறேன்.

sekarsamuel Wrote on 08-02-2011 04:09:15:


இந்த விவாதத்தின் தலைப்பை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? வேதாகமத்துக்கு மிஞ்சின சகோ.ராவங்ஜான்சனின் கருத்தை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா? பரபரப்பை உண்டுபண்ணவேண்டும் என்று நினைத்து கலவரத்தை தூண்டக் கூடாது அல்லவா!


தலைப்பு சற்று கடுமையாக இருந்தாலும் எடுத்துக்கொண்ட விவாதப் பொருள் தேவையற்றதல்ல;ஆனால் இந்த திரியில் சகோ.கோல்டா அவர்கள் பதிவுசெய்த வரிகளை கவனியுங்கள்;அது எந்த அளவுக்கு பண்புள்ளதாக அமைந்தது? வேத கால சம்பவத்தைக் குறித்த ஒரு விவாதத்தை சமகாலத்துக்குக் கொண்டு வருவதால் அவர் சாதித்தது என்ன‌?

ஆனால் நண்பர் ஜாண்சன் அவர்கள் இந்த விவாதத்தை வேதத்துக்கு மிஞ்சின கருத்துடன் எடுத்துக்கொண்டதாக நான் கருதவில்லை;ஏனெனில் ஏவாள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாய் என்ற பெயர் பெற்றவள்,மனுக்குலத்தின் மரணத்துக்குக் காரணமான ஒரு முடிவெடுத்ததில் வீழ்ந்தது மாத்திரமல்ல,தன் கணவனையும் வீழ்த்தினாள்.

இந்த அவலநிலையை சரிசெய்ய தேவன் மேற்கொண்ட மாற்று ஏற்பாடான ஆபிரகாமின் குடும்பத்தில் சாராள் எனும் மற்றொரு தாய் அவளாகவே ஒரு தீர்மானம் எடுத்து தன் கணவனை ஆகார் என்ற அடிமைப் பெண்ணுடன சேர்த்துவைத்து அதன்காரணமாக மாபெரும் குழப்பம் ஏற்படக் காரணமானாள்.

இந்த பிரச்சினை ஏவாள் மற்றும் சாராளுடன் மாத்திரம் முடிந்துபோகவில்லை,அது அடுத்தடுத்த சந்ததியிலும் தொடர்ந்தது; தேவனுடைய தீர்மானத்துக்கும் நியமத்துக்கும் மாறாக துணிந்து முடிவெடுப்பதில் ஆதிமுதலே பெண்கள் முன்னணியில் இருந்தனர் அல்லது அப்படிப்பட்ட ஆபத்தான தீர்மானங்களை ஆண்கள் எடுக்கக் காரணமாக இருந்தனர் என்பதே மனுக்குல வரலாறு;இதில் வேதத்திலிருந்தே உலகப் பிரகாரமான ஒரு உதாரணம்,யோவான் ஸ்நானனின் தலைசீவப்பட்ட கொடூர நிகழ்ச்சியாகும்.

sekarsamuel Wrote on 08-02-2011 04:09:15:



பெண்ணியம், சம உரிமை எல்லாம் கூடாது என்று நீங்கள் சொன்னது உங்கள் சொந்தக் கருத்தே, வேதாகமத்தின் கருத்து அல்ல. வேதாகமத்தின் அடிப்படையில் ஒரு ஆண் அல்லது பெண் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள். இல்லையேல் உங்களின் கருத்துக்கும் ஒரு ஆணாதிக்கவாதியின் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லாது போய்விடும். என் தகுதியை மீறி எதாவது சொல்லியிருந்தால், தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பெண்ணியம்,சம உரிமை பேசுவ‌தெல்லாம் வேதத்துக்கு விரோதமான கருத்தே;அது சாத்தானின் போதகம்;உதாரணம் லோத்துவின் பெண்கள்; ஆணின் மீது ஆதிக்கம் செலுத்த ஒருபோதும் வேதம் அனுமதிக்கவில்லை; ஆனால் அவன் உன்னை ஆண்டுகொள்ளுவான் என்பதே பெண்ணுக்கான முதல்செய்தி;இதுகுறித்து விரிவாக விவாதிக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்.

sekarsamuel Wrote on 08-02-2011 04:09:15:



வேதாகமத்தின் அடிப்படையில் ஒரு ஆண் அல்லது பெண் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள். இல்லையேல் உங்களின் கருத்துக்கும் ஒரு ஆணாதிக்கவாதியின் கருத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லாது போய்விடும். என் தகுதியை மீறி எதாவது சொல்லியிருந்தால், தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

சொல்லியிருக்கிறேன், தொடர்ந்து பேசுவோம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

மதியீனமான முடிவெடுத்ததில் சிறந்தவர் யார்,ஏவாளா,சாராளா என்று தமிழ்க் கிறித்தவ தளத்தில் ஒரு விவாதம்...அதில் நாம் இட்டுள்ள பின்னூட்டம்...


chillsam Wrote on 07-02-2011 22:14:33:

கோல்டா என்னைப் பொருத்தவரையிலும் பெண்மணி கிடையாது;அவரும் நம்மில் ஒருவர் தான் என்பது என்னுடைய கணிப்பு; ஒருவேளை திருநங்கைகளுக்கு ஆதரவாக ஊர்வலம் போன முற்போக்குவாதிகளின் வகையினராக‌ இருக்கலாம்..!

sekarsamuel:

சகோ.சில்சாம் சகோ.கோல்டா அவங்களே நான் ஒரு பெண் என்று சொல்லும்போது நீங்க நம்பலன்னா என்ன பண்றது. மனிதர்களை நம்புங்க.... பிரதர் அதுதான் வாழ்க்கை. உங்க கணிப்பி ஒரு பக்கம் இருக்கட்டும். உங்க ஆராய்ச்சி எல்லாம் என்னாச்சு?

chillsam:

நண்பரே,வாழ்க்கையிலே பல ஆராய்ச்சிகள் நடக்கிறது, இதில் நீங்க எதைச் சொல்றீங்க? நான் பொதுவாகவே ஆர்ப்பாட்டமாகத் துவங்குவேன், ஊக்கமளிப்போரும் ஆர்வம் காட்டுவோரும் இல்லாவிட்டால் அமர்ந்துவிடுவேன்; ஆனாலும் நான் சோர்ந்து போகக்கூடாது என்பதற்கு தங்களது விசாரிப்பு ஊக்கமாக இருக்கிறது.

சகோ.கோல்டா அவர்களைக் குறித்து நான் ஏதோ போகிற போக்கில் சொல்லவில்லை,நண்பரே; எனக்குப் பெண்களின் இயல்பும் பண்பும் நன்கு தெரியும்; அதிலும் கிறித்தவ சகோதரிகள் ஒருபோதும் பெண்ணியம் சம்பந்தமான விவாதங்களில்- அதிலும் சத்தியத்தில் முதிர்ச்சியடைந்தவர்கள் ஈடுபடமாட்டார்கள்; கோல்டா சத்தியத்தில் தேறியவர்- எந்த சத்தியத்தில் என்று கேட்கவேண்டாம், ஆனால் தான் பெண் என்று எல்லோரையும் நம்பவைக்க வரட்டு வாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்; மூத்த உறுப்பினரும் பண்பாளருமான நண்பர் ராவங்க் ஜாண்சன் அவர்களை வரம்புமீறி விமர்சிக்கிறார்; ஏனோ வழக்கம்போல மற்ற உறுப்பினர்கள் அமைதி காக்கின்றனர்; நண்பர் ஜோ அவர்களின் முயற்சியும் எடுபடவில்லை.

இந்த திரியின் விவாதமே நம்முடைய முன்னோர்களைக் குற்றஞ்சாட்டுவதோ அல்லது நம்முடைய சுகதுக்கங்களில் உடன்பயணிக்கும் சகோதரிகளை இழிவுபடுத்துவதோ அல்ல; அது வேதத்தின் சத்தியத்தை ஆராய்வதாகவே இருக்கும்; அதன்மூலம் நமக்கான எச்சரிப்பின் பாடத்தைக் கற்கலாமே? அதைவிட்டு விட்டு ஜாண்ஸன் அவர்கள் சொந்த பிரச்சினையையே விவாதப்பொருளாக்குகிறார் என்ற ரீதியில் கருத்துகூறுவதன் ஆபத்து என்னவென்றால் நாம் விவாதிக்கும் எல்லா பிரச்சினைக்கும் இப்படிப்பட்ட காரணங்களைக் கூறி எந்த ஒரு விவாதத்தையும் நீர்த்துப்போகச் செய்யமுடியும்.

மதியீனமான முடிவுகளை எடுப்பதில் அன்றும் இன்றும் முதலிடம் பெண்களுக்கே என்பதில் எந்த சந்தேகமுமில்லை; ஆண்களும் மதியீனமான முடிவுகளை எடுக்கலாம்;ஆனாலும் இந்த காரியத்தில் பெண்ணினத்தை விஞ்ச யாராலும் முடியாது;மற்றபடி பெண்ணியம் சம உரிமை இவையெல்லாம் வேண்டாத வீண்பேச்சாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
மதியீனமான முடிவெடுத்ததில் சிறந்தவர் யார்,ஏவாளா,சாராளா..?
Permalink  
 


இன்று காலை தமிழ் ஆராதனையில் போதகர் ரெவ்சாம் அவர்களது போதனையிலிருந்து...

ஆதாம் பாவம் செய்தான்,எனவே அவன் சந்ததியாரும் பாவிகளாயினர்; அவன் சந்ததியினர் பாவிகளானதற்கு ஆதாமின் பிள்ளைகளாக இருப்பது  மாத்திரமே காரணம் அல்ல‌, அந்த பாவத்துக்காக தேவன் ஏற்படுத்திய பலியையே புறக்கணிக்கும் பெரிய பாவத்தை செய்யும்போதுதான் பாவிகளாகின்றனர்.

ஆதாம் செய்த பாவத்தைவிட பெரிய பாவம் அந்த பாவத்துக்கான தேவனுடைய தீர்வைப் புறக்கணிப்பதே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard