சாக்லெட் என்பது நம்மெல்லாருக்கும் மிகவும் விருப்பமான ஒரு பண்டமாகும்; "சாக்லெட்" என்று சொன்னவுடனே, அதனைத் தருகிறோமோ இல்லையோ, அடங்காத குழந்தைகூட அடங்கிவிடும்;அழுதுகொண்டிருக்கும் கைக்குழந்தைக்கூட இனிப்பான ஒரு பொருளை அதன் நாவில் தடவினால் அழுகையை நிறுத்திவிட்டு, இனிப்பை சுவைக்கத் துவங்கிவிடும்.
குழந்தை வளர்ப்பில் ஒரு தாயின் பங்கைக் குறித்து நாம் நன்கு அறிவோம்; ஒரு குழந்தையானது வளரும் பருவத்தில், ஒரு கட்டிடத்தை கட்டுவது போல, அதிக ஊட்டச்சத்துள்ள திட்டமிட்ட உணவைக் கொடுத்து அதன் உள் கட்டமைப்பை பெலப்படுத்தும் வண்ணமாக வளர்த்தெடுப்பதில் தாயானவள் அதிக கவனம் செலுத்துவாள். ஆனால் அந்த குழந்தையைக் கொஞ்சுவதற்கு வரும் உறவுகள் அறிந்தோ அறியாமலோ இனிப்பை எப்படியாவது அறிமுகப்படுத்திவிடுவர்; தாயானவளோ ஒருபோதும் தனது குழந்தைக்கு இனிப்பான சாக்லெட் போன்ற உணவுகளைக் கொடுக்க விரும்பவே மாட்டாள்.
ஆனால் குழந்தையோ, தாயின் நெய் பருப்பு சாதத்தை விட சாக்லெட் இனிப்புக்கே அதிக முக்கியத்துவம் தரும்;இதனைக் கண்டு தாயின் மனம் பதறினாலும் ஒரு கட்டத்தில் தாயும்கூட குழந்தையின் விருப்பத்துக்கேற்ப, "நீ இந்த நெய் பருப்பு சாதத்தை சாப்பிட்டால் தான் உனக்கு அம்மா சாக்லெட் தருவேனாம்" என்று எப்படியாவது சத்துள்ள உணவை தனது குழந்தைக்கும் ஊட்டிவிட முயற்சிக்கிறாள்.
குழந்தை வளர, வளர தானே அடம்பிடித்து சாக்லெட் இனிப்பை அளவில்லாமல் சாப்பிட்டு சவலைக் குழந்தையாக எலும்பும் தோலுமாக ஆகிவிடுவதுண்டு;அதன் சரீர வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன் திட உணவை நன்கு சுவைத்து மென்று சாப்பிடுவதற்காகவே வளரும் அதன் பற்களும் சொத்தையாகிவிடுவதுண்டு; ஆனால் நெய் பருப்பு சாதத்தை சாப்பிட்ட பிள்ளையோ கொழுகொழுவென்று இருக்கும்.
ஒரு குழந்தைக்கு ஒரே ஒரு தாய்;அந்த தாயின் ஒரே நோக்கம், தன்னுடைய குழந்தைக்கு எப்படியாவது சத்துள்ள உணவைக் கொடுத்து அந்த குழந்தையை திடகாத்திரமாகவும் ஆரோக்கியமாகவும் வளர்க்கவேண்டும் என்பதே.ஆனால் அந்த குழந்தையைக் கவருவதோ இனிப்பு மாத்திரமே; எனவே அந்த குழந்தையானது சத்துள்ள உணவைக் கொடுக்க ஆயத்தமாக இருக்கும் அன்னையை விட்டுவிட்டு சாக்லெட் வாங்கித் தரும் மாமாக்களிடமே அதிக நேரம் இருக்க விரும்புகிறது.இன்னும் சில குழந்தைகள் பெற்ற தாயைவிட்டு மாற்றாந்தாயின் மார்பில் சுகம் காண்கிறது. இதிலிருந்து நாம் அறியக்கூடிய சத்தியம் என்ன?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)