Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மகர ஜோதி என்பது ஒரு மோசடி


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
மகர ஜோதி என்பது ஒரு மோசடி
Permalink  
 


இந்த மகர ஜோதி என்பது ஒரு மோசடி _ பித்தலாட்டம் - தானாகத் தோன்றுவது கிடையாது. கேரள மின்வாரியத் துறையைச் சேர்ந்தவர்கள் செய்யும் திருகுதாளம் என்பதை கேரளப் பகுத்தறிவாளர்கள் இன்றைக்கு 29 ஆண்டுகளுக்கு முன்பே நேரில் சென்று நிரூபித்துக் காட்டி விட்டார்களே.

அவர்களின் கண்டுபிடிப்பைப் பட விளக்கத்துடன் பிளிட்ஸ் ஏடு விலாவாரியாக வெளியிட்டதே (16.1.1982 பிளிட்ஸ்) பிளிட்ஸ் இதழ் வெளியிட்ட தகவல்: மகரஜோதி கேரளாவில் சபரிமலை கோயிலின் எதிர்புறமுள்ள 2000 அடி உயரமுள்ள மலையில் சமதரையில் குளிர்காலமான டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் தோன்றுமாம்.

இந்தக் கேலிக்கூத்தை வெட்ட வெளிச்சமாக்கும் வகையில் பகுத்தறிவாளர்கள், இதன் பின்னணி என்ன? என்பதைப் பல ஆண்டுகளாக நிரூபித்து வருகிறார்கள்.

மகர விளக்கு என்று சொல்லப்படும் வெளிச்சத்தைக் கடந்த 10 வருடங் களாக உண்டாக்கிய மனிதனை கேரளப் பகுத்தறிவாளர்கள் கண்டு பிடித்துவிட்டனர். அவர் பெயர் கோபி. இவர் கேரள மின் துறையில் ஓட்டு நராகப் பணியாற்றி வருகிறார். அவர் பொன்னம்பலமேடு என்ற இடத்தில் சூடத்தைப் பானையில் நிரப்பி, அதை கொளுத்தி, கொழுந்துவிட்டு எரியச் செய்து மகரஜோதியை உற்பத்தி செய்கிறார் என்பதையும் கண்டுபிடித் துள்ளனர்.

மேலும் சிறிய மகரஜோதி, புனித ஜோதி என்பதெல்லாம், பந்தங்களின் ஒளியும், பட்டாசுகளின் ஒளியும், சத் தமும் ஆகும் என்பது வெட்ட வெளியாகியிருக்கிறது.

இந்தப் புரட்டை கேரள பகுத்தறிவாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். யாரும் அணுக முடியாத அந்தப் பொன்னம்பலமேடு என்ற இடத்தை மாட்டு வண்டியில் பயணம் செய்து பல்வேறு இடர்ப்பாடுகளை அனுபவித்த பிறகே பகுத்தறிவாளர்கள் அடைந் தார்கள்.

அங்கே சென்றபோது வியப்பு காத்திருந்தது! 500 பேர் அங்கே குழுமியிருந் தனர். அரசாங்கத்தின் பல்வேறு துறை களைச் சார்ந்த ஜீப்களும், தேவஸ் தானத்தைச் சேர்ந்தவர்களும் அங்கே இருந்தார்கள். இதிலிருந்து அரசாங்கமே இந்த ஏமாற்று மோசடியை பின்னணியில் இருந்து இயக்குகிறது என்பதை அறியலாம்.

அவர்களின் ஆலோசனைப்படி கோபி என்கிற கோபிநாதன் (கேரள மாநில மின்துறையின் ஓட்டுநர்) பானையில் உள்ள சூடத்தைக் கொளுத்தி, பக்தர்கள் ஜோதியை தரிசிக்கக் கூடி காத்திருக்கும் சபரிமலை இருக்கும் பக்கத்தில் மூன்றுமுறை தூக்கிக் காட்டுவாராம் (கடந்த 10 ஆண்டுகளாக இந்த ஓட்டுநர்தான் இந்த மோசடியை செய்து வருகிறார். அனுபவம் காரணமாக இந்தத் தொழிலுக்கு தொடர்ந்து அவரே நியமிக்கப்பட்டு வருகிறார்).

1979 ஆம் வருடம் இந்த மகரஜோதி தோன்றவில்லை. மகரஜோதிக் கடவுள் வேறு எங்காவது முக்கியமான வேலையில் ஈடுபட்டது இதற்குக் காரணமல்ல; கோபி என்ற கோபிநாத நாயர் பொன்னம்பல மேட்டிற்குச் செல்லாததே காரணமாகும்.

இந்த மகரஜோதி கேலிக்கூத்து 40 வருடங்களுக்கு முன்பே தொடங்கிய தாகும். கேரள மின்துறை பம்பா திட்டத்திற்காக காடுகளை அழிப்பதற்கு முன்பு காடர், மலையர் என்ற மலைவாசிகள் அந்தக் காட்டை ஆக்கிரமித்து இருந்தனர். இவர்கள் தங்களை குளிரில் இருந்து பாதுகாக்கவும், மாமிசத்தை வேக வைக்கவும் நெருப்பை உண்டாக் கினர். ஆனால், இந்த வெளிச்சத்தை சபரிமலையில் உள்ள கடவுளின் பெயரால் மக்களைச் சுரண்டும் கூட்டம் இதனைத் தங்களுக்குச் சாதகமாகப் பணம் திரட்டும் வழியாகப் பயன் படுத்திக் கொண்டனர். அதை மகர ஜோதி என்றனர். அதன்பின் ஒரு மோசடிக் கூட்டம் இத்தகைய ஒரு மோசடியைத் திட்டம் போட்டுச் செய்து வந்தது. கேரள பகுத்தறிவாளர்கள் கழ கம் கேரள அரசுக்கு இந்த மோசடியை அம்பலப்படுத்தி விசாரணைக் கமிஷன் வைக்கவேண்டுமென்று கோரிக்கை விட்டார்கள்.

ஆனால், அரசாங்கம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. கோரிக்கை மனு தூக்கி எறியப்பட்டுவிட்டது. எளிதில் ஏமாறும் அப்பாவி மக்கள் சபரிமலைக்கு வந்து ஜோதி தரிசித்து ஏமாறும், ஏமாற்று வித்தை நாடகம் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. (பிளிட்ஸ் 16.1.1982).

தெகல்கா இதழ் தரும் தகவல்கள்

தெகல்கா ஆங்கில இதழ் (21.6.2008) இதுபற்றி என்ன கூறுகிறது?

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு தானாகத் தெரியும் என்றனர். சபரிமலைக் கோயிலின் காப்பாளர் பந்தளம் மகாராஜா குடும்பம்; இக்குடும்பத்தின் பி.ரவிவர்மா சொல்கிறார்:

எங்கள் வீட்டுப் பெரியவர்கள் மூன்று தடவை கொளுத்தவேண்டும் என்று கூறி ஆள்களை அனுப்புவார் கள் என்று ஒப்புக் கொண்டுள்ளார்.

மேலும், தெகல்கா இதழ் வெளிப் படுத்தும் உண்மைகள்.

இந்தியா விடுதலை பெற்ற பிறகுதான் காட்டு இலாகாவும், மின்சாரத் துறையும் சேர்ந்து மோசடியை ஆரம்பித்தனர். கற்பூரத்தை மூட்டை மூட்டையாகத் கொட்டி கொளுத்தி மகரவிளக்கு என்று காட்டுவார்கள். இதற்கான சைகை மாலை 6.30 மணிக்கு கோயிலிருந்து அனுப்பப்படுகிறது.

பொன்னம்பல மோசடியை அம்பலப்படுத்திடப் பகுத்தறிவாளர்கள் முயன்றனர். 1973-இல் 24 பேர்கள் கொல்லத்திலிருந்து பொன்னம்பல மேட்டுக்கு வந்து குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் பட்டாசுகளை வெடித்து பக்தர்களின் குழப்பத்தைத் தெளிவிக்க முயற்சி செய்தனர். கைது செய்து வழக்குத் தொடுத்தது, கேரள மாநில அரசு. இந்தியக் குற்றச்சட்டப் படி எந்தக் குற்றமும் பகுத்தறிவாளர்கள் செய்யவில்லை என்று வழக்கைத் தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.

1980-ஆம் ஆண்டில் திருச்சூரிலிருந்து பொன்னம்பலமேடு வந்து, வழக்கமான திசைக்கு எதிர்த்திசையில் விளக்கைக் கொளுத்திக் காட்டி அம்பலப்படுத்தினர் பகுத்தறிவாளர்கள்.

இப்போது அய்யப்பன் கோயில் தலைமைப் பூசாரி கண்டரரு மகேஸ் வரரு, ஆமாம், ஆமாம், மகர விளக்கை மனிதன்தான் கொளுத்துகிறார் என்று ஒப்புக்கொண்டார்; தேவஸ்வம்போர்டு தலைவர் கி.கே.குப்தனும் இதனை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு மேலாக அறநிலையத் துறை அமைச்சர் ஜி.சுதாகரன் அவர்களும் ஆமாம் என்று ஆமோதித்துவிட்டார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ன கூறுகிறது?

இதுநாள்வரை தெய்வீக அற்புதம் என்று கருதி வரப்பட்ட, புகழ் பெற்ற, சபரிமலை மகர விளக்கு, மனிதரால் ஏற்றப்படுவதுதான் என்று இறுதியாக சான்றளிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக் கான மக்களை பரவசப்படுத்தி வந்த, ஆண்டுதோறும் மகர மாத முதல் நாள் அன்று மூன்று முறை ஒளிவிடும் ஒளிப் பிழம்பிற்குப் பின்னால் தெய்வீகத் தன்மை கொண்டது எதுவுமில்லை என்று கோயில் பரம்பரை பூசாரி கண்டரரு மகேஸ்வரரு மற்றும் கோயில் விவகாரங்களுக்கான அமைச்சர் ஜி.சுதாகரன் இருவரும் உறுதிப்படுத்தி யுள்ளார்கள். மூட நம்பிக்கையின் சாயல் சிறிது இருந்தாலும், அதனை எதிர்த்துப் போராடுவது என்பது அலைபோல பெருகிவரும் இந்த நேரத்தைவிட இந்த அறிவிப்புக்கு வேறு நேரம் பொருத்த மாக இருக்க முடியாது. கேரளாவில் பொதுமக்களின் பெரும் ரகசியங்களில் ஒன்றாக விளங்கும் மகர விளக்கைப் பற்றிய இந்த அறிக்கை பாராட்டத் தக்கதே. மூட நம்பிக்கையின் கடைசிக் கோட்டை இடிந்து விழுந்ததற்காக அல்ல இந்தப் பாட்டு; இந்த மகர விளக்கு நிகழ்ச்சியில் அரசுக்கும் பங்கு இருந்தது என்பதை ஒப்புக்கொண்ட நேர்மைக்குத்தான் இந்தப் பாராட்டு. மகர தொடக்க நாளுக்கு தெய்வீக மதிப்பைச் சேர்ப்பதற்காக நடத்தப்படும் இந்த மகர விளக்கு நிகழ்ச்சி ஒரு ஆன்மிக மோசடியே என்று பரவலாக மக்களாலும், குறிப்பாக பகுத்தறிவாளர் கள், நாத்திகர்களாலும் வெளிக் கொண்டு வர முயன்ற பல முயற்சிகள் காவல் துறையினராலும், பவனத் துறையினராலும் காட்டுத்தனமாக நசுக்கப்பட்டன.

தினமலர் சொல்லுவது என்ன?

இந்த மகர விளக்கு பொன்னம்பலம் மலைப் பகுதியில் மூன்று முறை ஒளிர்ந்து மறையும். இதைக் கண்ட பின்புதான் அய்யப்பப் பக்தர்கள் வீடு திரும்புவர். மலைப் பகுதியில் தெரியும் இந்த மகர விளக்குத் தரிசனம் இயற்கையானது என பக்தர்கள் நம்புகின்றனர். அதனால், அந்த விளக்கு ஒளிரும்போது சாமியே சரணம் அய்யப்பா என்ற கோஷம் அந்தப் பகுதியையே அதிர வைக்கும்.

ஆனால், இந்த மகர விளக்கு இயற்கையானது அல்ல; செயற்கையானது. தேவஸ்வம் போர்டு அதிகாரிகளால் ஏற்றப்படுகிறது என, இக்கோயில் தலைமைத் தந்திரியின் குடும்பத்தினரும், திருவாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் ராமன் நாயரும் தெரிவித்துள்ளனர். (தினமலர், 29.5.2008)

இந்தியப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ஜோசப் எடமருகு சார்பில் கோயிலில் நடக்கும் இந்த மோசடி குறித்து கேரள மாநில முதலமைச்சர் ஈ.கே.நாயனாரிடம் கூறியதாக ஜோசப் எடமருகு கூறினார். (ஜோசப் எடமருகு பேட்டி, விடுதலை 21.2.1993)

டில்லியில் இருந்த இந்தியப் பகுத்தறிவாளர் சங்கத்தில் தலைவர் ஜோசப் எடமருகினை நேரில் அழைத்தவரே டில்லிக்கு வந்திருந்த கேரள மாநில முதல் அமைச்சர் ஈ.கே. நாயனார்தான்; அப்பொழுதுதான் இதுபற்றிக் கூறினார்.

மகர ஜோதி மோசடிதான். எங்களுக்கே தெரியும். அந்த இடத் திற்குப் போக முயற்சிக்க வேண்டாம் என்று கூறினர் என்று எடமருகு பேட்டியில் பதிவு செய்துள்ளார் (விடுதலை 21.2.1993 பக்கம் 1)

மத சம்பந்தப்பட்ட விவகாரம் என்று கேரள மாநில உயர்நீதிமன்ற நீதிபதி களுக்குத் தெரியாதா? தெரிந்துதானே வினாவைத் தொடுத்துள்ளார்கள். மகரஜோதி உண்மையானதுதானா? மனிதர்களால் காட்டப்படுகிறதா? என்று நீதிபதிகளே கேட்ட பிறகு இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று ஒரு மார்க்ஸிஸ்ட் முதல் அமைச்சர் மகர ஜோதி மோசடியை அம்பலப்படுத் திட முன் வந்திருக்க வேண்டாமா?

இந்த மகரஜோதி மோசடி காரணமாகத்தானே கூட்ட நெரிசலில் மக்கள் பலியாகிறார்கள்? சிந்திக்க வேண்டாமா?

மதம் ஒரு அபின் என்று மார்க்ஸ் சொன்னதை நிரூபிக்கக் கிடைத்திட்ட கிடைத்தற்கரிய வாய்ப்பு என்று துள்ளிக் குதித்து மளமளவென்று காரியத்தில் இறங்கி இருக்க வேண்டாமா?

கொள்கைக் கோட்பாடுகளில், சித்தாந்தங்களில் ஆழ்ந்த பிடிப்பும், ஈடுபாடும், லட்சியத்திற்காக உயிரையும் கொடுப்போம் என்ற உறுதிப்பாடும் இருந்திருந்தால் இந்த நிலைக்கு ஆளாகியிருப்பார்களா?

சாதாரண - மிக மிகச் சாதாரண அரசியல் அபிலாஷைகளுக்கும், பதவிப் பித்துக்கும் பலியானவர்களிடம் இதனை எதிர்ப்பார்க்க முடியுமா?

மக்களிடம் பகுத்தறிவுப் பிரச்சாரமும் செய்ய மாட்டார்கள், சட்ட ரீதியாக வாய்ப்பு இருந்தும், அதிகாரத்தில் இருந்தும் அதனையும் பயன்படுத்திக் கொள்ள மாட்டார்கள் என்றால் இதன் தன்மை என்ன?

இந்தநாட்டில் இந்து மதம் இருக்கும் வரைக்கும் இங்கு கம்யூனிசம் பரவி விடும் என்ற பயம் யாருக்கும் வேண்டாம் என்று சர் சி.பி. ராமசாமி அய்யர் சொன்னது சரியாகத்தான் போய் விட்டது.

மகர ஜோதி அற்புதமா? மோசடியா?

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதி அன்று சபரிமலை அய்யப்பன் கோயிலுக்குக் கிழக்கே மலை நடுவில் தோன்றும் ஒளிக் கற்றையை மகர ஜோதி என்று கூறி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முண்டியடித்துக் கொண்டு வழிபடுவது வழக்கம். இது தெய்வச் செயலால் தோன்றும் ஜோதி என்றே இது வரை கதைக்கப்பட்டு வந்தது.

இந்த ஜோதி தோன்றும் ஒரு சில நிமிட நேரத்திற்கு கூடியிருக்கும் லட்சக் கணக்கான பக்தர்கள் பக்தி வெறியுடன் சாமியே சரணம் அய்யப்பா என்று ஒன்று போலக் குலவையிடுவர். சிறிது நேரத்தில் ஜோதி மறைந்ததும் அமைதி திரும்பி விடும்.

இந்த மகரஜோதி நிகழ்ச்சியினால் திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு நல்ல வருமானம். கடந்த பத்து ஆண்டுகளில் போர்டின் வருமான உயர்வுக்கு இந்த மகரஜோதியும் ஒரு காரணம். தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் சபரி மலை வருகின்றனர்.

இந்த மகரஜோதி மனிதர்களால் குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட நேரத் திற்கு ஏற்றப்படுகிறது; இது தெய்வ அருளால் தோன்றுவதல்ல; இது மக்களை ஏமாற்றும் ஒரு வேலையே என்று பகுத்தறிவாளர்கள் கூறிவந்தது மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

இந்த மகரஜோதி இயற்கையாகத் தோன்றுவது அல்ல; செயற்கையாக மனிதர்களால் ஏற்றப்படுவதே என்று அண்மையில் தேவசம் போர்டும், கேரள சமய அறநிலையத் துறை அமைச்சரும் ஒப்புக் கொண்டனர். என்றாலும் இந்த மகரஜோதி நிகழ்ச்சியை நிறுத்த அவர்கள் தயாராக இல்லை. பொய்ம் மையையே வைத்து வியாபாரம் செய்து வரும் மத வியாபாரிகள் அவ்வளவு எளிதாக தங்கள் வியாபாரத்தைக் கை விடுவார்களா?



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard