வாயை மூடி திறப்பது போல், தன் காதுகளை காதால் மூடித்திறக்கும் சிறுவனின் செயலை பொதுமக்கள் அதிசயமாக பார்க்கின்றனர்.கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ளது ஈட்டியார் எஸ்டேட். இங்கு தொழிலாளியாக வேலை செய்து வருபவர் கிருஷ்ணன். இவரது மகன் பிரேம்குமார்(9), அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கிறார். இந்த மாணவர், தன் இரண்டு காதுகளையும் காதுக்குள் சொருகிய நிலையில் சக மாணவர்களை அசர வைக்கிறார். இரவு நேரத்தில் இரண்டு காதுகளை மூடிய நிலையில் தூங்கிவிட்டு, காலையில் எழும் போது காது தானாக திறந்துவிடுகிறது.சிறுவன் எப்போது வேண்டுமானாலும் காதை காதுக்குள் சொருகி வைத்துவிட்டு, தன் படிப்பை முழு கவனத்துடன் படிக்கிறான்.மற்ற மாணவர்களிடம் இருந்து தனித்திறமை கொண்ட இந்த மாணவனின் செயலை சக மாணவர்கள் மட்டுமின்றி, அந்த பகுதியில் உள்ள பொதுமக்களும் பொழுது போக்காக வேடிக்கை பார்க்கின்றனர்.