ஆவிக்குரிய தந்தை என அழைப்பது தவறல்ல, அது நம்மை வழிநடத்தும் மூப்பரை மரியாதையாகக் குறிக்கும் சொல் அவ்வளவே! அவர் பிதாவுக்கு நிகராக மாட்டார். "கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன். " (1.கொரிந்தியர்.4:15). இங்கு பவுல் விசுவாசிகளை மத்தேயு 23:90-ஐ மீறும்படி செய்கிறார் என குற்றஞ்சாட்டலாகுமா?
இந்த வசனத்தை நீங்கள் நேரடியாக அர்த்தங்கொள்வதாக இருந்தால் உங்கள் தகப்பனாரையே அப்பா என்று அழைப்பது குற்றம் என்பது போல் ஆகிவிடும். ஏனெனில் “பூமியிலே ஒருவனையும்” என்று இவ்வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே!
நான் பிற மதத்தைத் சேர்ந்தவர்களைக் கூட சகோதர சகோதரிகளாக அழைப்பது எனது வழக்கம் காரணம் அப்படி முறை வைத்துப் பழகுவது எங்கள் மதுரை வழக்கு. அண்ணே! என்று கூப்பிட்டாலே மதுரைக்காரன் என்று கண்டுபிடித்து விடுவார்கள். ஆனால் அவர்கள் எனக்குக் கிறிஸ்துவுக்குள்ளான சகோதர சகோதரிகளுக்கு இணையாக மாட்டார்கள். நான் அந்த வேறுபாட்டை அறிந்திருக்கிறேன்.
வருந்துகிறேன் கிருஸ்துவ சகோதரர்களே, உங்கள் வாக்கு வாதங்கள் தேவனை மகிமை படுத்துகிறதா என்று யோசியுங்கள். நான் யாரையும் குற்றம் சொல்ல துணியவில்லை, ஆனால் இந்த வாக்குவாதம் எனக்குள் வருத்தத்தையே உண்டாக்குகிறது.
பில்லி கிரஹாமின் சமீபத்திய பெட்டியை இங்கே தருகிறேன், உங்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் என்று நினைக்கிறேன்.
If you could, would you go back and do anything differently?
Yes, of course. I'd spend more time at home with my family, and I'd study more and preach less. I wouldn't have taken so many speaking engagements, including some of the things I did over the years that I probably didn't really need to do—weddings and funerals and building dedications, things like that. Whenever I counsel someone who feels called to be an evangelist, I always urge them to guard their time and not feel like they have to do everything.
I also would have steered clear of politics. I'm grateful for the opportunities God gave me to minister to people in high places; people in power have spiritual and personal needs like everyone else, and often they have no one to talk to. But looking back I know I sometimes crossed the line, and I wouldn't do that now.
ஒரு பெரிய ஊழியர், தான் பேசுவதை குறைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார். நாமும் நம் வார்த்தைகளுக்கு கணகொப்புவிக்க வேண்டும், அதனால், தேவனுடைய நாமம் தூஷிக்க படாதவாறு நம் வார்த்தைகள் இருந்தால் நலமாய் இருக்கும்.
Chillsam: ஆனாலும் இணைய தளத்தின் வழியாக நான் சாதுஜியின் தாடி முடியைக் குறித்து எப்படி நிரூபிக்க இயலும் என்று தெரியவில்லையே;நான் பொய்யன் என்பதில் உங்களுக்கு அத்தனை சந்தோஷமா?
Golda: அவருக்கு தாங்கள் டை அடித்து விட்டது போல் அல்லவா பேசினீர்கள். எல்லம் பொய்தானா?
Chillsam: இது வேண்டாமே, ஒருவருடைய தனிப்பட்ட விவரங்களைக் குறித்து அலசுவதை விட்டுவிடலாமா?
Golda: இது காலம் கடந்த ஞானோதயம்.
Chillsam: சாதுஜியின் வயது என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன்..?
Golda: 50? நரையில் பல வகை உண்டு.
Chillsam: சரி, அவர் பொய்யர் என்பதை நிரூபிக்கட்டுமா..?
Golda: Please Do! ஒரு முறை மூக்கில் காயம் பட்ட்து போதாதா?
Comment@TCS சாதுஜி என் கனவில் வந்து சொன்னது, " இவன் ரொம்ப நல்லவன்டா எவ்வளவு ரீல் சுத்தினாலும் சலிக்காம படிக்கிறான்... இவனை எப்படியாவது பரலோகத்துக்கு ஒரு டூர் கொண்டு போயிட வேண்டியதுதான்... ஆம்,விரைவில் ஒரு திட்டத்தை ஆவியானவர் சாதுஜிக்கு கொடுக்கப்போகிறார்; அவருடன் தங்கியிருந்து படுக்கையைப் பகிர்ந்து கொண்டு அதாவது ஜெப அறையிலிருக்கும் படுக்கையில் அவரோடு படுத்துக்கொண்டால் அவருடன் நேராக பரலோகத்துக்கு ஒரு டூர் அடித்துவிட்டு வரலாம்; இங்கே இருக்கிற ஏதோ ஒரு கிரகத்துக்கு ஒரே ஒரு ட்ரிப் அடிக்க இரஷ்யாக்காரன் எத்தனை கோடி செலவு பண்றான், நீங்கள் சாதுஜியுடன் தங்கியிருந்து படுக்கையைப் பகிர்ந்துகொண்டு பரலோக டூர் போக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாமே, ஆம்,இது தூதனே வந்து அறிவிக்கப்போகும் திட்டம். இதனை எதிர்த்து யாராவது பேசினால் நாக்குல நாக்கு பூச்சி கடிக்கும், சாதுஜியே வந்து ஜெபித்தாலும் அந்த புண் ஆறவே ஆறாது; அப்படியும் சிலர் எதிர்த்து பேசுவார்கள் என்பதையும் தூதன் ஏற்கனவே சொல்லிவிட்டான்; எனவே அந்த தூதனுடைய மனம் நோகாதிருக்கவாவது சிலர் எழும்பி சாதுஜிக்கும் அவருடைய உடன்பிறவா மதிப்பிற்குரிய தேவ மனிதருக்கும் எதிராகப் பேசிவைப்போம்'ணேன்...
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகோதரி அவர்களே, பெண்கள் என்றாலே மறுபெயர் சந்தேகம் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்;ஆனாலும் இணைய தளத்தின் வழியாக நான் சாதுஜியின் தாடி முடியைக் குறித்து எப்படி நிரூபிக்க இயலும் என்று தெரியவில்லையே;நான் பொய்யன் என்பதில் உங்களுக்கு அத்தனை சந்தோஷமா? இது வேண்டாமே, ஒருவருடைய தனிப்பட்ட விவரங்களைக் குறித்து அலசுவதை விட்டுவிடலாமா? சாதுஜியின் வயது என்ன என்று கொஞ்சம் சொல்லுங்களேன்..? அல்லது ஏஞ்சல் டிவிக்கு போன் போட்டு "ஆனந்து " கிட்ட சாதுஜியின் அப்பாயிண்ட்மெண்ட் கேளுங்கள், நானும் வர்றேன்,நேராகவே பாத்துட்டு வந்துடுவோம்,எப்படி வசதி..? நான் சொல்லும் எந்த யோசனையையும் ஏற்காமல் என்னை பொய்யன் என்று சொன்னீர்களானால் பொய்க்குப் பிதாவான சாதுஜியை என்னவென்று அழைப்பீர்கள்? சரி, அவர் பொய்யர் என்பதை நிரூபிக்கட்டுமா..?
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
சகோதரி, மேற்கண்ட எனது கூற்றை மீண்டும் ஒருமுறை வாசியுங்களேன். அதன் அடுத்த வரியிலேயே நிரூபித்துவிட்டேனே?
Golda:
!!!
Chillsam:
மேலும் அவருடைய பழைய படங்களைத் தொடர்ந்து கவனித்தால் இது உங்களுக்கு உண்மை தெரியவரும்;
Golda:
வயதானால் வெள்ளையாகும் என்று என்று உங்களுக்குத் தெரியாதோ?
Chillsam:
ஒரு மோசடியான நபரை அவர் மோசடியானவரே என்று நிரூபிப்பதன் மூலம் மாத்திரமே நான் என்னை உண்மையானவன் என்று நிரூபித்துக்கொள்ளவேண்டுமானால் அதைப் போன்ற கொடுமை வேறொன்றும் இருக்கமுடியாது.
Golda: கண்ணை மூடிக் கொண்டு பிறர் மீது சேறு வாரி இறைப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.
தக்க ஆதாரம் தரும்வரை உஙகள் பெயர் பொய்யர் லிஸ்டில் தான் இருக்கும்
//சில்சாம் அவர்களே! தமிழில் எழுதும் சிறப்பு சிந்தனையாளர்கள் பலர் உண்டு என்பதை நானும் பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன் // தாக்குகிறீர்களா, தூக்குகிறீர்களா என்று தெரியவில்லையே;எப்படியோ ரெண்டுமே நமக்கு அல்வா சாப்பிடற மாதிரி தான்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
[அன்புள்ள சகோதரி அவர்களே உங்கள் விடாப்பிடியான வாதத் திறமையைப் பார்த்தால் தாங்கள் ஒரு சகோதரி என்பதை நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது; வேதத்தைக் குறித்த போதனை சார்ந்த விவாதங்களில் சகோதரிகள் அத்தனை தீவிரமாக ஈடுபடும் வழக்கமில்லை;நீங்கள் மெய்யாகவே சகோதரி தான் எனில் அது நிச்சயமாகவே அதிசயம் தான்; எப்படியோ ஏதாவதொரு கட்டத்தில் எங்களையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்திவிடாதிருந்தால் சரிதான்]
எதைப் பற்றியும் கவலைப் படாமல் , கொஞ்சமும் பொறுப்பில்லாமல், ஆண்டவர் பாதத்தில் அமர்ந்து , அவர் வாயை ஆ வென்று வேடிக்கை பார்த்த மரியாள் கேள்விப்பட்டதில்லையா?
சில்சாம் அவர்களே! தமிழில் எழுதும் சிறப்பு சிந்தனையாளர்கள் பலர் உண்டு என்பதை நானும் பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன்
// ஆமான் காலில் பிறர் விழுந்து வணங்கியதாக எங்கே போட்டிருக்கிறது? கை கூப்பி வணங்குவதும் தவறுதான். அதை ஏன் செய்கிறீர்கள்? நம் கண்ணில் இருப்பது நமக்குத் தெரிவது இல்லை. காலை வணக்கம், மாலை வணக்கம் என்று சொல்வது கூட தவறு போல் தான் தெரிகிறது. //
அன்புள்ள சகோதரி அவர்களே உங்கள் விடாப்பிடியான வாதத் திறமையைப் பார்த்தால் தாங்கள் ஒரு சகோதரி என்பதை நம்புவதற்குக் கடினமாக இருக்கிறது; வேதத்தைக் குறித்த போதனை சார்ந்த விவாதங்களில் சகோதரிகள் அத்தனை தீவிரமாக ஈடுபடும் வழக்கமில்லை;நீங்கள் மெய்யாகவே சகோதரி தான் எனில் அது நிச்சயமாகவே அதிசயம் தான்; எப்படியோ ஏதாவதொரு கட்டத்தில் எங்களையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்திவிடாதிருந்தால் சரிதான்.
தொடர்ந்து செல்லுவோம், தாங்கள் ஆமானைக் குறித்து எழுப்பிய கேள்வியைக் குறித்த தெளிவைப் பெற விரும்பினால் அது இடம்பெற்றிருக்கும் எஸ்தர் புத்தகத்தின் மூன்றாம் அதிகாரத்தை வாசித்தறிய வேண்டுகிறேன்; அதிலிருந்து எனது வாதத்துக்கு வலுசேர்க்கும் ஒரு வசனத்தை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராய்வோம்.
"ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் எல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை." (எஸ்தர்.3:2)
-மேற்கண்ட வசனத்தில் கவனிக்கவேண்டிய இரு வார்த்தைகள் என்னவென்றால் "வணங்கவுமில்லை", "நமஸ்கரிக்கவுமில்லை" என்பதே; இந்த இரு வார்த்தைகளின் எபிரேயசொற்களையும் அதன் பொருளையும் கவனித்தால் நம்முடைய வாதத்தின் போக்கு முழுவதுமாக ஒரு தெளிவுக்கு வரக்கூடும்.
ஆங்கிலத்தில், "bowed " & "reverence" மற்றும் தமிழில், வணங்குதல் & நமஸ்கரித்தல் ஆகும்; இதன் எபிரேய மொழிச் சொற்கள் முறையே, kaw-rah' & shaw-khaw'என்பதாகும்;இதன் பொருள்,
H3766 כּרע kâra‛ kaw-rah' A primitive root; to bend the knee; by implication to sink, to prostrate: - bow (down, self), bring down (low), cast down, couch, fall, feeble, kneeling, sink, smite (stoop) down, subdue, X very.
H7812 שׁחה shâchâh shaw-khaw' A primitive root; to depress, that is, prostrate (especially reflexively in homage to royalty or God): - bow (self) down, crouch, fall down (flat), humbly beseech, do (make) obeisance, do reverence, make to stoop, worship.
உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருப்பதால் அதன் பொருளே நீங்களே ஆய்ந்தறிவிக்க வேண்டும்; சரி, ஆமான் புறசாதியான், ஆண்டவருடைய அடியவர்கள் புனிதர்களாச்சுதே, அவர்களையும் வணங்கக்கூடாதா என்பீர்களாகில் மேற்கண்ட செயல்களை யூதனாகிய மொர்தெகாய் தனது ஆசாரியருக்கே செய்ததில்லை; அன்றாடம் பலிசெலுத்தும் அவசியத்தில் இருந்த ஒரு யூதனே தனது ஆசாரியனைப் பணிந்ததில்லை எனில் ஆசாரியத்துவமே மாற்றப்பட்ட நிலையில் நாம் அதனைச் செய்வது தகுமா?
காலில் விழும் சடங்குக்கு இணையாக கத்தோலிக்கத்தில் முழங்காலிடும் வழக்கமும் அதனைத் தொடர்ந்து பெந்தெகொஸ்தே வட்டாரத்திலும் அது வழக்கத்தில் இருப்பதையும் நாம் கவனிக்கவேண்டும்; ஆராதனை பீடத்துக்கு நேராக முழங்காலிடுவதற்கும் ஒரு தனி மனிதன் அதாவது தான் மிகப் புனிதமானவராக நினைக்கும் ஊழியர் அல்லது பங்கு தந்தை முன்பு முழங்காலிடுவதற்கும் வித்தியாசமுண்டு.
இங்கே உயிருள்ளவரையே விழுந்து வணங்கக்கூடாது என்று வாதிடும் நாம் அன்றைக்கு உயிரற்ற ஒரு சிலையின் முன்பு விழுந்து வணங்குவதை மூன்றாம் நூற்றாண்டின் புனிதர்கள் முளையிலேயே எறியாததினாலேயே இன்றைக்கு இத்தனை பெரிதாக வளர்ந்திருக்கிறது என்பதை சற்று யோசிக்க வேண்டாமா?
மாதா வணக்கத்தார் வேத வெளிச்சமில்லாததால் அப்படி செய்கிறார்கள் எனில் அதிலிருந்து வெளியேறி சத்தியத்தை அறிந்து அறிவிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் சாதுக்கள் அதனை முளையிலேயே கிள்ளியெற வேண்டாமா?
பெருகி விட்ட மாதா வணக்கத்தைத் தடுக்க சாத்வீகமான முறையில் போராடுவதற்கும் பெருக ஆயத்தமாக இருக்கும் தனி மனித வணக்கத்தைத் தடுக்க சாத்வீகமாகப் போராடுவதற்கும் வித்தியாசமுண்டல்லவா?
ஆம், தாங்கள் குறிப்பிட்ட வண்ணமாக ஒருவரையொருவர் கைகூப்பி வணங்குவதும்கூட இந்திய பாரம்பரியம் சார்ந்ததே; அது ஜப்பானியர் இடுப்பை வளைத்து வணங்குவதைப் போன்று நம்முடைய கலாச்சாரம் சார்ந்த விடயமாகும்; அதுவும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதற்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசமுண்டு; எந்தவொரு செயலைக் காட்டிலும் அதன் நோக்கமே தேவ சங்கத்தில் கணிக்கப்படும்; உதட்டின் உச்சரிப்பைக் காட்டிலும் சிந்தையின் நிலைமைக்கே ஆண்டவர் மதிப்பளிக்கிறார் அல்லவா?
இதன்படி சாதுஜியின் காலில் விழுந்து வணங்கும் அப்பாவிகளை, அவர் இழுத்து அணைத்துக்கொண்டு நீயும் நானும் ஒரே தேவனால் சிருஷ்டிக்கப்பட்டவர்கள் அவரையே நாம் தொழுது சேவிக்கவேண்டும் என்று கூறுவாரானால் அதுவே சத்தியமாகும்; அதை விட்டுவிட்டு ஆவியானவரே இதனை அனுமதிக்கிறார் என்ற பொருளில் சாதுஜி சொல்வாரானால் அதற்கு வலு சேர்க்கும் ஒரு வசனத்தைக் கூட அவரால் கொடுக்க இயலாது. அது முழுவதும் உள்நோக்கத்துடன் கூடிய புரட்டான சத்தியமாகும்.
சாதுஜி (?!) தன்னை விழுந்து வணங்குவோரைத் தடுக்காமல் அவர்கள் சத்தியத்தில் தெளிவடையும் வரைக்கும் பொறுமையாக இருக்கவேண்டும் என்று சொல்லுவது தவறல்ல, அதனை ஆவியானவரே தனக்குச் சொன்னதாகச் சொல்லுவதே புரட்டு.
சில்சாம்: // ஒரு கிறித்தவ ஊழியர் சாமியார் போல வேடமிட்டுக் கொண்டு செய்யும் ஊழியத்தில் தன் காலில் விழுபவர்களைத் தடுக்காததுடன் அவர்களைத் தடுக்க வேண்டாம் என்று ஆவியானவர் கூறியதாகக் கூறியது எத்தனை துணிகரமான பொய் அல்லவா? அதைக் குறித்து என்ன சொல்லுகிறீர்கள்? //
கோல்டா: // பொய் என்று எவ்வளவு எளிதில் சொல்லிவிடுகிறீர்கள். என்ன ஒரு பொறுப்புணர்வு, அது உண்மை என்றால் என்ன செய்வீர்கள்? //
"...ஆவியானவர் வெளிப்படையாய்ச் சொல்லுகிறபடி, பிற்காலங்களிலே மனச்சாட்சியில் சூடுண்ட பொய்யருடைய மாயத்தினாலே சிலர் வஞ்சிக்கிற ஆவிகளுக்கும் பிசாசுகளின் உபதேசங்களுக்கும் செவிகொடுத்து, விசுவாசத்தை விட்டு விலகிப்போவார்கள்." (1.தீமோத்தேயு.4:1) பவுல் குறிப்பிடும் மேற்கண்ட போதகர்கள் யாரென்று நினைக்கிறீர்கள்? மனசாட்சியை விற்றுவிட்டு நூதனமானதைப் போதித்து ஜனங்களைக் கவர்ந்து மயக்கி வீழ்த்துவது ஒன்றையே மூலதனமாகக் கொண்டு செயல்படும் இவர்களைக் குறித்து இன்னும் விரிவாக என்னால் எழுதமுடியும்; ஆனாலும் அதற்கான காலம் இன்னும் கனியவில்லை; இவர்கள் இதையும் செய்வார்கள் இதற்கு மேலும் செய்வார்கள்; ஒரு இவர்களின் மாயத்தினால் தலைமுறையே கவிழ்க்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
இவர்களிடம் உண்மை இருக்குமானால் வேதத்துக்கு வெளியே சென்று அதில் கூறப்படாத காரியங்களைச் சொல்லி ஆவியானவருக்கு விரோதமாகக் கலகம் செய்யமாட்டார்கள்; ஆவியானவர் இவருடன் இதுபோன்ற வேதத்துக்கு விரோதமான ஒரு காரியத்தை, அதாவது " உன் காலில் எனது ஜனங்கள் விழுந்து வணங்குவதைத் தடுக்காதே, அவர்கள் உன்னை வணங்குவதாகப் பெருமையும் கொள்ளாதே,அவர்கள் உனக்குள் இருக்கும் என்னையே பணிந்து கொள்ளுகிறார்கள்" என்று சொல்லியிருப்பானால், நான் முகமது எனும் அரேபிய பாலைவன இளைஞனுடன் ஜிப்ரீல் எனும் தூதன் தோன்றி பேசியதையும் நம்பவேண்டியதாகும்; ஏனெனில் சாதுஜியுடன் ஆவியானவர் இடைபட்டு பேசியதற்கு எந்த நிரூபணமும் இல்லாதது போலவே முகமதுவுக்கும் வெளி ஆதாரம் எனப்படும் நிரூபணம் இல்லை; நான் சாதுஜியை நம்பினால் முகமதுவையும் நம்பவேண்டியதாகும்; இதே வாதத்தில் தேவனுடைய மனுஷனான மோசேயை இணைத்து யோசிப்போமானால் அங்கும் நிரூபணம் இல்லை; ஆனால் அதன்பிறகு நிகழ்ந்த சம்பவங்கள் மோசேயுடன் தேவனே இடைப்பட்டு சொன்னவற்றுக்கு கட்டியன் கூறியது; அதாவது தேவன் தமது வார்த்தைகளுக்கு தாமே முத்திரையாக இருந்து அதனைத் தமது அதிசயமான கிரியைகளின் மூலமாக ஜனங்கள் நிறைவேற்றி தம்மில் தாம் மகிமையடைந்து தம்முடைய அடியவர்களையும் மகிமைப்படுத்துகிறார்.
எனவே சாதுஜியுடன் ஆவியானவர் இடைப்பட்டு சாதுஜியின் காலில் பலரும் விழுவதன் மூலம் தொழப்படுகிறார் என்பது அப்பட்டமான வேதப்புரட்டு என்பதை எந்தவித சங்கடமுமில்லாமல் வலியுறுத்தி கூறுகிறேன்.
// சாமியார் வேடம் என்று எப்படி சொல்ல முடியும்? சாது சுந்தர் சிங் போல் காவி அணிந்து , முடி வெட்டாமல் ,shave பண்ணாமல் , செருப்புப் போடாமல் இருக்கும் படி தான் இவரை தேவன் அழைத்திருக்கிறார். கோட் போட்டால் தப்பு. கசங்கிய காவி அணிந்தாலும் தப்பா? என்ன உலகமடா இது?? //
சாதுஜி போடுவது வேடமே என்பதை அவருடன் தனிப்பட்ட முறையில் பழகுவோர் நன்கு அறிவர்; சாது சுந்தர் செல்வராஜ் அவர்கள் தன்னைத் தானே சாது சுந்தர் சிங்குடன் ஒப்பிட்டுக் கொள்வது அவலட்சணமானது; சாதுஜி என்ற சொல்லுக்கு முழுவதும் தகுதியானவர் சாது சுந்தர்சிங் அவர்கள் மட்டுமே; இன்றைக்கும் தமிழகத்தின் தென்மாவட்ட விசுவாசிகள் அவரைப் போல தனது பிள்ளை வரவேண்டும் என்ற தரிசனத்துடன் தங்கள் பிள்ளைகளுக்கு "சிங்" என்ற பெயரை ஏதாவது ஒரு வகையில் இணைத்து வைப்பதை அறிந்திருக்கிறோம்; அந்த அளவுக்கு சாது சுந்தர்சிங் அவர்களின் பாதிப்பு தமிழ்க் கிறித்தவர்களிடையே வேரூன்றியுள்ளது; அவரால் ஆரம்பிக்கப்பட்ட NMS மிஷினரி ஸ்தாபனம் இன்றைக்கும் பல்வேறு பொருளாதார சிக்கல்களின் மத்தியிலும் நூற்றாண்டைக் கடந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
சகோதரி அவர்கள் தயவுசெய்து சாது சுந்தர்சிங் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒருமுறை வாசித்துவிட்டு பிறகு அந்த மாபெரும் ஏழை ஊழியனை இன்றைய ஹைடெக் சாதுஜியின் ஒப்பிடுமாறு வேண்டுகிறேன்; சாது சுந்தர் மெய்யாகவே சாது சுந்தர் சிங் அவர்களை நேசிப்பாரானால் அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றி எளிமையானதொரு வாழ்க்கை முறையை மேற்கொண்டிருப்பார்; அவர் எப்படியும் போகட்டும், அவரை பரிதாபத்துக்குரிய ஏழை சாது என்று மட்டும் சொல்லாதிருங்கள்.
கோட் சூட்டை விட சாதுஜிக்காக விசேஷமாக தயாரிக்கப்படும் அங்கிக்கான செலவு அதிகம் என்பதையும் அதன் தரம் அத்தனை உயர்ந்தது என்பதையும் தாங்கள் அறிவீர்களா? மேலும் அவர் தனது படப்பிடிப்பு தளத்தில் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீ ஷர்டுடன் இருப்பது தங்களுக்குத் தெரியுமா? எனவே தான் கூறுகிறேன், அவர் போடுவது சாது வேடம் என்று; விரைவில் அனைத்து அந்தரங்கங்களும் அரங்கத்துக்கு வரும், வந்தே தீரும்.
சில்சாம்: // கருப்பு டை அடித்துக்கொள்பவர்கள் என்ன நோக்கத்துக்காக அதனை செய்கிறார்களோ அதே நோக்கத்துக்காகவே இவரும் வெள்ளை டை அடித்துக்கொள்ளுகிறார் என்கிறேன் //
கோல்டா: வெள்ளை டை என்று ஒன்று இருக்கிறதா என்ன? அவர் தாடி இயற்கையிலேயே அழகாய் ( அதாவது வெள்ளையாய்!!) ஏன் இருக்கக் கூடாது? அவர் தாடி மேல் இவ்வளவு பொறாமையா??
வெள்ளை நிறத்தில் மட்டுமல்ல சகோதரி, நீங்கள் விரும்பும் எந்த நிறத்திலும் அழகு நிலையத்திற்கு சென்றால் சாயம் கிடைக்கும்.
சில்சாம்: // அதனை நிரூபிக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்;கருப்பு டை அடித்துக்கொள்பவர்கள் என்ன நோக்கத்துக்காக அதனை செய்கிறார்களோ அதே நோக்கத்துக்காகவே இவரும் வெள்ளை டை அடித்துக்கொள்ளுகிறார் என்கிறேன் //
கோல்டா: Please, I would like to see the evidence. Prove that you are not a liar!
சகோதரி, மேற்கண்ட எனது கூற்றை மீண்டும் ஒருமுறை வாசியுங்களேன். அதன் அடுத்த வரியிலேயே நிரூபித்துவிட்டேனே? மேலும் அவருடைய பழைய படங்களைத் தொடர்ந்து கவனித்தால் இது உங்களுக்கு உண்மை தெரியவரும்; அதற்கு மேலும் தங்களுக்கு நிரூபணம் வேண்டுமானால் நீங்களே முன்வந்து சாதுஜியின் அப்பாயிண்ட்மெண்டைப் பெற்று அவருடன் சில நாட்கள் தங்கியிருந்தால் அனைத்தும் விளங்கிவிடும்; அது அத்தனை சீக்கிரத்தில் உங்களுக்குக் கிடைக்காது; அவர் எந்த தீவில் எந்த சொகுசு பங்களாவில் தரிசனங் கண்டுகொண்டிருப்பாரோ யாருக்குத் தெரியும்?
ஒரு மோசடியான நபரை அவர் மோசடியானவரே என்று நிரூபிப்பதன் மூலம் மாத்திரமே நான் என்னை உண்மையானவன் என்று நிரூபித்துக்கொள்ளவேண்டுமானால் அதைப் போன்ற கொடுமை வேறொன்றும் இருக்கமுடியாது.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஆமான் காலில் பிறர் விழுந்து வணங்கியதாக எங்கே போட்டிருக்கிறது?
கை கூப்பி வணங்குவதும் தவறுதான். அதை ஏன் செய்கிறீர்கள்? நம் கண்ணில் இருப்பது நமக்குத் தெரிவது இல்லை.
காலை வணக்கம், மாலை வணக்கம் என்று சொல்வது கூட தவறு போல் தான் தெரிகிறது.
[ஒரு கிறித்தவ ஊழியர் சாமியார் போல வேடமிட்டுக் கொண்டு செய்யும் ஊழியத்தில் தன் காலில் விழுபவர்களைத் தடுக்காததுடன் அவர்களைத் தடுக்க வேண்டாம் என்று ஆவியானவர் கூறியதாகக் கூறியது எத்தனை துணிகரமான பொய் அல்லவா? அதைக் குறித்து என்ன சொல்லுகிறீர்கள்?]
பொய் என்று எவ்வளவு எளிதில் சொல்லிவிடுகிறீர்கள். என்ன ஒரு பொறுப்புணர்வு! அது உண்மை என்றால் என்ன செய்வீர்கள்?
சாமியார் வேடம் என்று எப்படி சொல்ல முடியும்? சாது சுந்தர் சிங் போல் காவி அணிந்து , முடி வெட்டாமல் ,shave பண்ணாமல் , செருப்புப் போடாமல் இருக்கும் படி தான் இவரை தேவன் அழைத்திருக்கிறார்.
கோட் போட்டால் தப்பு. கசங்கிய காவி அணிந்தாலும் தப்பா? என்ன உலகமடா இது??
[கருப்பு டை அடித்துக்கொள்பவர்கள் என்ன நோக்கத்துக்காக அதனை செய்கிறார்களோ அதே நோக்கத்துக்காகவே இவரும் வெள்ளை டை அடித்துக்கொள்ளுகிறார் என்கிறேன்;]
வெள்ளை டை என்று ஒன்று இருக்கிறதா என்ன?
அவர் தாடி இயற்கையிலேயே அழகாய் ( அதாவது வெள்ளையாய்!!) ஏன் இருக்கக் கூடாது?
அவர் தாடி மேல் இவ்வளவு பொறாமையா??
[அதனைக் கண்டுகொள்ளாமல் விஜய் தளத்தின் காரியத்துக்கு தாவி விட்டீர்கள்;]
சாதுஜிக்கு ஒரு அளவு கோல், விஜய்ஜிக்கு வெறொரு அளவு கோலா என்று கண்டு கொள்ளத்தான் கேட்டேன்! 2 ஜி யும் எனக்குப் பிடித்தவர்கள்தான்!
ஆவிக்குரிய தந்தை என்று யாரையும் சொல்வது தவறு என்று தான் எனக்குப் படுகிறது.
ஏன் இந்த வசனம் ஞாபகத்திற்கு வர வில்லை? ம்த்தேயு 23:9
பூமியிலே ஒருவனையும் உங்கள் பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாயிருக்கிறார். -----
To Edwin: [தேவனாகிய கர்த்தரை பணிந்து கொண்டுஅவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று கூறினார் ]
சரிதான். கை கூப்பி வணக்கம் சொல்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
What do you think about folding hands and saying vanakkam?? Is that ok? You avoided this q.
[அதனை நிரூபிக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்;கருப்பு டை அடித்துக்கொள்பவர்கள் என்ன நோக்கத்துக்காக அதனை செய்கிறார்களோ அதே நோக்கத்துக்காகவே இவரும் வெள்ளை டை அடித்துக்கொள்ளுகிறார் என்கிறேன்;]
Please, I would like to see the evidence. Prove that you are not a liar!
[நான் ஒரு முன்னாள் சினிமாக்காரன் ...]
Interesting! What were you doing? If you do not mind pl. share.
சகோதரி கோல்டா அவர்களே தயவுசெய்து நேரமெடுத்து எமது எண்ணங்களை கிரகித்துக்கொண்டு பொறுப்புடன் பதிலளிக்கவும்;ஏனெனில் நாம் தேவக் காரியங்களைக் குறித்து அலசிக் கொண்டிருக்கிறோம் என்பதை மறந்துபோகவேண்டாம்;மற்றபடி தங்கள் பங்களிப்புக்காக நன்றி கூறுகிறேன்.
// காலில் விழுவதும், பலி செலுத்துவதும் ஒன்றாகிவிடுமா! // நான் பவுலடிகளைக் குறித்து மட்டுமா குறிப்பிட்டிருக்கிறேன்,மொர்தெகாய் என்பவரைக் குறித்து நான் குறிப்பிட்டுள்ளதைக் கண்டுகொள்ளமாட்டீர்களா? அது மாத்திரமல்ல தம்பி எட்வின் குறிப்பிட்டுள்ள வெளிப்படுத்தின விசேஷத்தின் தரிசனத்திலும் காலில் விழுவதைக் குறித்து அறியமுடியுமே? அதனைக் கண்டுகொள்ளாமல் விஜய் தளத்தின் காரியத்துக்கு தாவி விட்டீர்கள்;அதைக் குறித்து தனியாக விவாதிப்போம்.
//அம்மா காலில் விழுகின்றார்களே!// மு.மு.ஜெ அவர்கள் காலில் விழுபவர்கள் என்ன நோக்கத்தில் விழுகிறார்களோ, அதுவல்ல பிரச்சினை; ஒரு கிறித்தவ ஊழியர் சாமியார் போல வேடமிட்டுக் கொண்டு செய்யும் ஊழியத்தில் தன் காலில் விழுபவர்களைத் தடுக்காததுடன் அவர்களைத் தடுக்க வேண்டாம் என்று ஆவியானவர் கூறியதாகக் கூறியது எத்தனை துணிகரமான பொய் அல்லவா? அதைக் குறித்து என்ன சொல்லுகிறீர்கள்?
// இது நல்ல காமெடி. கருப்பு அடித்தாலாவது அர்த்தம் இருக்கிறது. // காமெடி அல்ல, சகோதரி உண்மையிலும், உண்மை; அதனை நிரூபிக்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்;கருப்பு டை அடித்துக்கொள்பவர்கள் என்ன நோக்கத்துக்காக அதனை செய்கிறார்களோ அதே நோக்கத்துக்காகவே இவரும் வெள்ளை டை அடித்துக்கொள்ளுகிறார் என்கிறேன்;நான் ஒரு முன்னாள் சினிமாக்காரன் என்ற முறையில் டை மாத்திரமல்ல இங்கே யார் யார் டோப்பா (பொய்யான தலைமுடி) வைத்துக்கொண்டு ஏமாற்றுகிறார்கள் என்பதையும் அறிவேன்;ஆனாலும் அது அவரவர் தனிப்பட்ட விவகாரம் என்பதால் அதனைப் பெரிதுபடுத்துவதில்லை;ஆனால் அதுவும் கூட கிறித்தவ ஒழுங்குமுறை குணாதிசயங்களுடன் இணைந்ததே.
// எங்களை ஜெபித்து வழிநடத்தும் எங்கள் ஆவிக்குரிய தந்தை ........அவர்களுக்காக தேவனைத் துதிக்கிறேன். இது விஜய் தளத்திலிருந்து எடுத்தது. இப்படி ஒருவரை ஆவிக்குரிய தந்தை என்பது வேதத்தின்படி சரியா, தவறா?? //
இதுபோலக் குறிப்பிடுவது வேதத்தின்படி தவறல்ல;ஏனெனில் பவுலடிகள், "கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன். " (1.கொரிந்தியர்.4:15) என்பதாகக் குறிப்பிடுவதே இதற்கு ஆதாரம்;
இதற்கு மூல பாஷையில் என்ன அர்த்தம், இந்த குறிப்பிட்ட வசனம் மூலப் பிரதியில் இருக்கிறதா என்றெல்லாம் எனக்குத் தெரியாது;ஆனால் ஆவிக்குரிய தந்தை என்ற பதம் சத்தியத்துக்கு விரோதமானது அல்ல என்றே எண்ணுகிறேன்;ஆனாலும் இந்த மேன்மையானது ஆரோக்கிய உபதேசத்தால் கிறித்துவின் சரீரமாகிய சபைக்கு உரமிடுவோருக்கே உரித்தானதாகும்.
தற்காலத்தில் பெற்றோர் காலிலேயே பிள்ளைகள் விழுந்து பணிவதில்லை; இந்து மார்க்கத்தில் மாத்திரமே இந்த நடைமுறை இன்னும் இருக்கிறது; அதுவும் நாகரீக உலகில் மாறிவருகிறது;காலில் விழும் முறைகளைக் குறித்தும் அதன் பலன்களாக நம்பப்படும் பாரம்பரியங்களைக் குறித்தும் அறிந்தவர்கள் இங்கே பகிர்ந்துகொண்டால் நாம் இந்த திரியை ஒரு முழுமையான விவாதமாகக் கொண்டு செல்ல உதவியாக இருக்கும்;நானும் முயற்சிக்கிறேன்.
இறுதியாக எட்வின் அவர்களின் சரியான வேதக் குறிப்புடன் கூறிய கருத்துக்காக நன்றி கூறிக்கொள்வதுடன் யோவான் தன் காலில் விழுவதைத் தடுத்த அந்த தூதன் யார் என்பதைக் குறித்து ஒரு விசேஷித்த இரகசியம் இருப்பது தங்களுக்குத் தெரியுமா என்று அறிய விரும்புகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
[சாதுஜி நம்மைப் போல சாதாரணமான மனிதனாக தோற்றமளித்தாரானால் அவரை யாராவது விழுந்து வணங்குவார்களா..? ]
அம்மா காலில் விழுகின்றார்களே!
[நாம் நமது நரைமுடியை மறைக்க கருமை நிற டை அடிப்பது போல சாதுஜி தன்னை மரியாதைக்குரிய பெரியவராகக் காட்டிக்கொள்ளதனது தாடிக்கு தலைமுடிக்கும் வெள்ளை டை அடிப்பது யாருக்காவது தெரியுமா..?]
இது நல்ல காமெடி. கருப்பு அடித்தாலாவது அர்த்தம் இருக்கிறது.
// வளர, வளர பழக்கம் மாறும்..// அன்புள்ள சகோதரி, தங்களது மென்மையான அணுகுமுறைக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்துகிறேன்;ஆனாலும் வேதம் இதுபோன்ற முன்மாதிரியைக் கற்பிக்கவில்லை;முளையிலே கிள்ளி எறிவதே புத்திசாலித்தனமாகும்; கர்த்தராகிய இயேசுகிறித்துவைத் தவிர வேறு யாரும் தன்னை விழுந்து பணிந்துகொண்டதை ஏற்றுக்கொண்டதில்லை;உதாரணத்துக்கு எஸ்தரின் சரித்திரத்தில் வரும் மொர்தெகாயின் வர்த்தமானத்தை கவனிக்கவும்.
புதிய ஏற்பாட்டிலும் பரிசுத்த பவுலின் ஊழியப் பயணத்தில் இதேபோன்றதொரு சூழ்நிலை ஏற்பட்டது;தற்காலத்திலுள்ளது போன்ற சாதாரண ஊழியமல்ல அது,அது எந்தவொரு ஜனக் கூட்டத்தையும் மிரட்சியில் ஆழ்த்தும் இயற்கைக்கு மாறுபட்ட நிகழ்வாகும்;ஆனால் அதுபோன்ற எந்த அதிசயத்தையும் நிகழ்த்திக்காட்டும் சக்தி இல்லாததாலேயே கண்கட்டு வித்தைக்காரனைப் போல,'இதோ அங்கே பார்க்கிறேன்,அதோ இங்கே பார்க்கிறேன் ' , என்று மோசடியான முறையில் தரிசனங்களைக் குறித்து ஆலாபனை செய்து கொண்டிருக்கிறார்கள்; சாத்தானும் தனக்குக் கொஞ்சகாலமே இருப்பதால் இவர்களுக்கு "பிலிம்" காட்டிக்கொண்டிருக்கிறான்;ஆனால் வேதத்திலுள்ள ஆதி அப்போஸ்தலர்கள் மெய்யான துறவியராக இருந்து செய்த காரியங்களுக்கு ஒரு உதாரணம் பின்வருமாறு...
பர்னபாவை யூப்பித்தர் என்றும், பவுல் பிரசங்கத்தை நடத்தினவனானபடியினால் அவனை மெர்க்கூரி என்றும் சொன்னார்கள்.
அல்லாமலும் பட்டணத்துக்கு முன்னே இருந்த யூப்பித்தருடைய கோவில் பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்:
மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்.
(அப்போஸ்தலர்.14:11 - 15)
இதனை வாசிக்கும் சாதுஜியின் இரசிகர்கள் அது அந்த காலம் என்பீர்களா,வேதத்தின் கட்டளைகளும் வழிகாட்டு நெறிகளும் எக்காலத்துக்கும் உரியது தானே..? சாதுஜி நம்மைப் போல சாதாரணமான மனிதனாக தோற்றமளித்தாரானால் அவரை யாராவது விழுந்து வணங்குவார்களா..? நாம் நமது நரைமுடியை மறைக்க கருமை நிற டை அடிப்பது போல சாதுஜி தன்னை மரியாதைக்குரிய பெரியவராகக் காட்டிக்கொள்ள தனது தாடிக்கு தலைமுடிக்கும் வெள்ளை டை அடிப்பது யாருக்காவது தெரியுமா..?
பகல் வேடதாரிகளிடம் மார்க்கம் சிக்கிக் கொண்டிருக்கிறதே என வேதனையுடன் எழுதும் என்னை யாரும் தவறாக எண்ணிவிடவேண்டாம்..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
ஒரு ஊழியக்காரர் ஒரு வீட்டிற்கு சென்ற் போது, பெற்றோர் தங்கள் மகனை அவரை சேவித்துக்கொள் என்றதாகவும், என்ன நடக்கிறது என்று புரியும் முன்னே, அந்த் பையன் சாஷ்டாங்கமாக த்ன் காலில் விழுந்து, தன்னை திகைக்க வைத்த்தாகவும் சொன்னதைக் கேட்டிருக்கிறேன்.
அதுதான் அவர்களுக்குத் தெரிந்த மரியாதை செலுத்தும் விதம்.
அப்படித்தான் அன்று நடந்த கூட்டத்தில் ஆண்டவர் சொன்னதாக சொன்னார். அதாவது "இப்பொழுது தங்களுக்குத் தெரிந்த விதத்தில் அவர்கள் எனக்கு மரியாதை செய்கிறர்கள். அதை தடுக்காதே. உன் மனதில் பெருமை கொள்ளாதே" என்று அறிவுறுத்தியதாக சொன்னார்.
அன்புள்ள சகோதரியின் கருத்துக்கு நன்றி; சாதுஜி, எனக்கு வேண்டாத மருமகள் அல்ல, என்பதை அறிய வேண்டுகிறேன்;அவருக்கும் எனக்கும் எந்த முன்விரோதமும் இல்லை;நீங்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்த்ததுண்டானால் நான் எழுதியுள்ளவற்றுக்கு வேதத்தின்படியான சரியான விளக்கத்தைத் தரவேண்டுகிறேன்;மற்றபடி புதிய விளக்கங்கள் எனக்கு அவசியமில்லை;இதன் காரணமாகவே நான் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறேன், "நான் அணுகும் பிரச்சினைகள் பெரும்பாலும் போதனை சார்ந்ததாகவே இருப்பதால் அதற்கான விளக்கத்தைத் தவறாக போதிப்பவரிடமே கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.." நாம் ஒரு மனுஷனுக்காக வக்காலத்து வாங்குவதைவிட பரிசுத்த வேதாகமத்துக்காகவும் அதன் மாறாத போதனைகளுக்காகவும் நிற்க வேண்டுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)