Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஏஞ்சல் டிவியின் துருபதேசம்: சாதுஜி காலில் விழு..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: ஏஞ்சல் டிவியின் துருபதேசம்: சாதுஜி காலில் விழு..!
Permalink  
 


chillsam wrote:
இன்று ஒரு சகோதரியின் வீட்டுக்கு எனது மனைவியுடன் நலன் விசாரிக்கச் சென்றிருந்தேன்;அப்போது அவர்கள் பகிர்ந்துகொண்டதொரு செய்தியானது எனக்கு அதிர்ச்சியாக‌ இருந்தது;அது ஏஞ்சல் டிவி-யிலிருந்து அவர் பெற்றுக்கொண்ட நூதன போதனையாகும்.

images?q=tbn:ANd9GcT_jtWSdQUSEkeKldqviUQxMBCm5VPBMnXOOicRyAoUO8dBNjSO6g

நம்முடைய சமுதாயத்தில் பெரும்பான்மையினரான இந்துக்கள் மார்க்க அறிஞர்களுக்கு மரியாதை செலுத்துவதுடன் ஒரு கட்டத்தில் அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுவது வழக்கமான ஒன்று தான்; அதிலும் அவர்கள் காவி உடையில் சன்னியாசி போலத் தோற்றமளித்தால் அவர்தம் காலைக் கழுவி குடிக்கவும் அவர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள்; இதில் பெண்களே முன்னணியில் இருக்கின்றனர்; அவர்கள் துறவியருக்கு இதுபோன்ற மரியாதையை செய்வதால் அவர்களது தாலி பாக்கியம் உறுதிபெறும் என்பது பாரம்பரியமான நம்பிக்கையாகும்.

அதுபோன்றதொரு அனுபவம் கிறித்தவ துறவி (வேடத்தில்) யாக இருக்கும் சாது சுந்தர் செல்வராஜ் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது;அவர் ஒரு முறை வடதேசத்தில் ஊழியத்தில் இருக்கும் போது அவருடைய காலில் பலரும் வந்து விழுகின்றனர்; உடனே இவர் மற்ற கிறித்தவ‌ ஊழியர்களைப் போலவே "ஜீவனுள்ள தேவனையே நீங்களெல்லாம் வணங்கவேண்டும்,நான் உங்களைப் போல சாதாரணமான மனுஷன் தான்" பதற்றத்துடன் தடுக்கிறார்;ஆனால் அவருக்குள்ளிருந்து ஆவியான‌வர் ஆவேசத்துடன், "அவர்கள் உன் காலில் விழுந்ததாக நீ எப்படி நினைக்கலாம்,நான் உனக்குள் இருக்கிறேன் அல்லவா,அவர்கள் உன் காலில் விழவில்லை உனக்குள்ளிருக்கும் என் காலில்தான் விழுகிறார்கள்,எனவே நீ உன் காலில் ஆசிபெற விழுபவர்களைத் தடுக்கக் கூடாது " என்று தெளிவாக எச்சரித்தாராம்;அதன்பிறகு அவர் தன் காலில் விழுகிறவர்களைத் தடுக்கிறதில்லையாம்.

images?q=tbn:ANd9GcRjA4houOps2bqfU7cl8uWquoM99E8r3hHlJiQ-tkAwjdaq7WcN

இதன் மூலம் சாதுஜி சொல்லவருவது என்ன‌..?
அவரை நான் சாதுஜி என்று அழைப்பதாக யாரும் தயவுசெய்து எடுத்துக்கொள்ளக்கூடாது;ஏனெனில் அவர் ஒரே நேரத்தில் இந்து துறவியரைப் போல வேடமிட்டு இந்து மக்களையும், வேதம் சொல்லாத ஒரு தன்னிச்சையான ஒரு நிலையை எடுத்துக்கொண்டு கிறித்தவ சமுதாயத்தையும் ஏமாற்றுகிறார்.

விஷயத்துக்கு வருவோம்,இனி சாதுஜியை எங்கே பார்த்தாலும் அவர் காலில் விழுந்து வணங்கி ஆசிபெற வேண்டும் மறைமுகமாக அறிவிக்கிறார்;மேலும் தான் வணக்கத்துக்குரிய புனிதர் என்று தம்மைத் தாமே உயர்த்திக்கொள்கிறார்;இந்த காரியத்தில் வேதப் புருஷர்களைவிட‌
சாதுஜி ஒருபடி  மேன்மையானவராகக் காட்சியளிக்கிறார்.

'பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ' என்பார்கள்;இன்னும் இதுபோல அடியேன் சேகரித்து வைத்திருக்கும் அத்தனையையும் இங்கே பதிக்க எனக்கு நேரமில்லை;ஆனாலும் இதுபோன்ற ஒரு சில காரியங்களைக் கொண்டே இவர்கள் யார் என்றும் இவர்களுடைய மற்ற போதனைகள் எப்படியிருக்கும் என்று தெரிந்துகொள்ளலாம்.

'இதிலென்ன தவறு இருக்கிறது ' என்போருக்காக நான் எதையும் எழுதுகிறதில்லை; 'சரியானது எது ' என்று தேடுவோருக்காக மட்டுமே பிரயாசப்படுகிறேன்; அல்லது சில அண்ணன்மார் அறிவுறுத்துவது போல முதலில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எழுதி கேட்டு சரியான விளக்கத்தைப் பதிக்கலாம்;ஆனால் அதுவே ஒருகட்டத்தில் நான் அவர்களை மிரட்டுவது போன்ற குற்றச்சாட்டுக்கு என்னை உள்ளாக்கும்;ஆனால் எனக்குத் தோன்றும் எந்த ஐயத்துக்கும் நான் சரியான விளக்கத்துக்கு பரிசுத்த வேதாகமத்தையே சார்ந்திருக்கிறேன்; நான் அணுகும் பிரச்சினைகள் பெரும்பாலும் போதனை சார்ந்ததாகவே இருப்பதால் அதற்கான விளக்கத்தைத் தவறாக போதிப்பவரிடமே கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை;மேலும் அவர்களுக்கு விளக்கம் கொடுக்கும் வாய்ப்பை நான் தரவில்லை என்றும் யாரும் சொல்லமுடியாது;ஏனெனில் அவர்கள் அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் கவனிக்கும் ஒரு ஊடகத்தில் வெளியிட்டுவிட்டதுடன் அதனை மறுஒளிபரப்பும் செய்கிறார்களே.

இறுதியாக நான் அறிவிப்பது என்னவென்றால்,சாதாரண மனிதன் ஒருவன் எத்தனை வரங்கள் பெற்றவனாகத் தன்னை அறிவித்துக்கொண்டாலும் சரி,அல்லது தன்னை ஒரு புனிதனாகவோ சந்நியாசியாகவோ காட்டிக்கொண்டாலும் சரி அவன் சாகும் வரை மனுஷனே;அவன் காலில் விழுதல் என்பது பரிசுத்த வேதாகமத்தின் போதனைக்கு விரோதமானது.

images?q=tbn:ANd9GcRcZmi0HBDBQaNxHwua-B1_j-LxLUy4m4U_ZxdrIaHdxfXUE5ui

குறிப்பிட்ட இந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை;ஆனால் இதுபோன்ற பல துருபதேசங்களை நான் தரவிறக்கம் (download) செய்து ஆதாரத்துடனே வைத்திருக்கிறேன்;ஆனாலும் அவர்களுடைய பணபலத்தையும் வெகுஜன செல்வாக்கையும் கண்டு ஒரு வித அச்சத்துடன் யோசித்துக் கொண்டிருக்கிறேன்;நான் அமர்ந்திருந்தாலும் ஏதோ ஒரு கல்லை ஆண்டவர் எழுப்புவார்.

சாதுஜி(?!) தன் காலில் விழுபவர்களைத் தடுக்கக் கூடாது என்று ஆவியானவர் கட்டளையிட்டதாகக் கூறிய நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள் எனக்கு நியாயம் சொல்லுங்கள்;இந்த தகவலை என்னிடம் கூறியவர்கள் மிகவும் பேதமையுள்ள ஒரு சகோதரி, தவறாமல் ஏஞ்சல் டிவிக்கு பணம் அனுப்புபவர்கள் என்பதால் இந்த தகவல் முழுவதும் உண்மையானது என்றே நம்புகிறேன்;எப்படியாகினும் காலில் விழுவது சம்பந்தமான காரியத்தில் வேதத்தின் போத‌னையை விசுவாசிகள் அறிய வேண்டுகிறேன்.


  "நான் அணுகும் பிரச்சினைகள் பெரும்பாலும் போதனை சார்ந்ததாகவே இருப்பதால் அதற்கான விளக்கத்தைத் தவறாக போதிப்பவரிடமே கேட்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.." நாம் ஒரு மனுஷனுக்காக வக்காலத்து வாங்குவதைவிட பரிசுத்த வேதாகமத்துக்காகவும் அதன் மாறாத போதனைகளுக்காகவும் நிற்க வேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

திரு சில்சாம்:

இதையெல்லாம் பார்க்கும் போது அனைத்து வேத வல்லுனர்களின் கணிப்புக்கும் மாறாக ஒரு புதிய மார்க்கத் தலைவன் தோன்றப்போகிறான்; அவன் அரசியலையும் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைப்பான்; அதில் தற்கால பெரும்பான்மை கிறித்தவர்களும் வஞ்சிக்கப்படுவார்கள்; பாலஸ்தீனாவில் கிறித்தவர்களிடையே யூதருக்கு எதிரான மனநிலையும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவான மனநிலையும் நிலவுவதே இதற்கு சான்றாகும்.

pgolda Wrote on 15-02-2011 17:37:54:

நீங்க நம்ப மாட்டீங்க! இதை பற்றி சகோ.வின்சென்ட் செல்வகுமார் ஏஞ்சல் டிவியில் ஒளிபரப்பான ஒரு தீர்க்கதரிசன மாநாட்டில் சொன்னார்.

அப்படியானால் வின்சென்ட் செல்வகுமாரும் நானும் ஒன்றாகிவிடமுடியுமா? ஏனெனில் நான் ஏஞ்சல் டிவியைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டவில்லை; நான் ஏஞ்சல் டிவியைக் குறித்து எழுதுவதெல்லாம் எனது பழைய அனுபவங்கள் மற்றும் ஒரு அரைமணிநேரம் இலவச பயன்பாட்டு நேரத்தில் (2am to 8am) இணையத்தின் மூலம் பார்ப்பதைக் கொண்டு மட்டுமே.

இந்நிலையில் நான் வின்சென்ட் செல்வகுமார் அளவுக்கு யோசிக்கிறேன் என்றால் இரண்டே காரணம் மட்டுமே இருக்கமுடியும்; ஒன்று நானும் ஒரு தீர்க்கதரிசியாக இருக்கவேண்டும் அல்லது உலக நடப்புகளைக் கூர்ந்து கவனிக்கும் மற்றும் வேத வார்த்தைகளை தியானித்து வாசிக்கும் புத்திசாலியாக இருக்கவேண்டும்.

மேலும் வின்சென்ட் செல்வகுமாருக்கு ஆனானப்பட்ட தூதனே வந்து சொல்லுவதை எனக்கு எழுதப்பட்ட வேத வார்த்தைகளும் நாட்டு நடப்புகளும் கற்பிக்கிறதென்றால் நான் பல மடங்கு வின்சென்ட் செல்வகுமாரை விட உயர்ந்து நிற்பதைக் குறித்து பெருமையடைகிறேன்.

ஏனெனில் முக்காலத்தையும் மூவுலகையும் அறிந்த தேவாதி தேவனின் பிரதிநிதிகளையே அசால்டாக சந்திக்கும் சாதுவும் வின்சென்ட் செல்வகுமாரும் சொல்வதை நான் இந்த அனுபவம் எதுவுமே இல்லாமல் அடைந்திருக்கிறேனே..!

ஒரு காமெடி ஷோவில் வடிவேலு குத்துசண்டையில் பலமாக அடிபட்டு தோற்றுப்போனாலும் சற்றும் சளைக்காமல் வெற்றி வீரனிடமிருந்து கோப்பையை சண்டைபோட்டு பறிப்பான்; ஏனெனில் அடித்தவனைவிட அடிவாங்கியவன் நிலையே பரிதாபம்; அதுபோலவே நீங்களும் எனக்காக எப்படியாவது வின்சென்ட் செல்வகுமாரிடமும் சாதுஜியிடமும் பேசி என்னையும் தீர்க்கதரிசி பட்டியலில் சேர்த்துக்கொள்ள சிபாரிசு செய்யுங்களேன்..!

கள்ளத்தீர்க்கதரிசி ப்ரன்ஹாமின் புத்தகங்களைப் படித்துவிட்டு ரீல் சுற்றும் அவர்களுக்கே இவ்வளவு இது இருந்தால் வேதத்தை மட்டுமே வாசிக்கும் எனக்கு எவ்..வளவு இருக்கும்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// இதுபோன்ற காரியங்களை ஒருவர் தொலைகாட்சியில் பேசியும் எப்படி ஜனங்கள் நம்புகிறார்கள் என்று எனக்கு புரியாத புதிராக இருக்கிறது..//

"பூனை செய்யுறதெல்லாம் குறும்பாம் அத அடிச்சா பாவமாம்..!" இந்திய சமுதாயத்தில் சாதுக்களுக்கு எப்போதுமே நல்ல மரியாதை உண்டு; ஏனெனில் அவர்கள் தெய்வ சொரூபிகளாகவும் சிவனடியர்களாகவும் தோற்றமளிப்பதால் அவர்களுக்கு செய்யும் சேவையானது கண்களுக்குத் தெரியாத இறைவனுக்கே செய்யும் தொண்டாக பாவிக்கப்படுகிறது;இந்த நுட்பமான உணர்வுகளைப் பயன்படுத்தி தங்கள் காம இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளும் திருட்டுப் பூனைகளும் உண்டு;அதற்கு இவர்கள் சொல்லும் காரணமாவது,இவர்களோடு ஒரு இரவு தங்கினால் அது இறைவனுடன் தங்குவது போன்றது என்றும் இறைவனுடன் கலப்பதற்கு இது ஒன்றே வழி என்றும் சொல்லுவார்கள்;அந்த வரிசையில் குடும்பம் பெண்டு பிள்ளை அனைத்து பந்தங்களையும் துறந்தவர்களாகவும் பரிதாபத்துக்குரியவர்களாகவும் மாபெரும் தியாகிகளாகவும் தோற்றமளிக்கும் இவர்களைத் தொழுவது அந்த பரம்பொருளையே தொழுவது போன்றது எனும் மாறாத இந்திய சமுதாயத்தினரின் மனப்பான்மையே கிறித்தவ சாதுக்களின் வேடத்துக்குக் காரணமாகும்;காவி உடை அணிந்து சாதுவாக பொருத்தனை எடுத்தவர்கள்,ஊருக்குள்ளேயே வரக்கூடாது,ஏஸி காரில் பயணிக்கவோ ஏஸி அறையில் தங்கவோ கூடாது;காபி,டீ,உப்பு,புளி,காரம்,வெங்காயம்,பூண்டு போன்ற  பாடுள்ள மனுஷர் பயன்படுத்தும் எந்த உணவு பொருளையும் பயன்படுத்தக்கூடாது;ஏனெனில் இவையெல்லாம் புலன்களில் பல்வேறு உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியவை என்று நம்பப்படுகிறது;அப்படியும் கூட கிறித்தவ போதனையின்படி காவி வேடமெல்லாம் சொல்லப்படவே இல்லை;இது கிறித்தவர்களையும் இந்துக்களையும் ஒரே நேரத்தில் ஏமாற்றும் வேலையாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 232
Date:
ஏஞ்சல் டிவியின் துருபதேசம்: சாதுஜி காலில் விழு..!
Permalink  
 


//'அவர்கள் உன்னை வணங்கவில்லை, உனக்குள் இருக்கும் என்னையே வணங்குகிறார்கள்' என்று ஆவியானவர் சொன்னதாகச் சொல்லுவது எத்தனை சூழ்ச்சியான துருபதேசம் என்று உணரமாட்டீர்களா? //

சாதுவிடம் இப்படி சொன்னது லுசிபாராகத்தான் இருக்க முடியும் ஏனென்றால் அவன்தான் ஆதாமிடம் நீங்கள் தேவர்களை போல் இருப்பீர்கள் என்று பொய் சொன்னவன்

  • "நீங்கள் இதைப் புசிக்கும் நாளிலே உங்கள் கண்கள் திறக்கப்படும் என்றும், நீங்கள் நன்மை தீமை அறிந்து தேவர்களைப்போல் இருப்பீர்கள் என்றும் தேவன் அறிவார் என்றது." (ஆதியாகமம் 3:5)

பரிசுத்த ஆவியானவர் என்ன சொல்லியிருப்பர் என்று பார்க்கலாமா? பவுல் தாயின் வயிற்றிலிருந்து பிறந்ததுமுதல் சப்பாணியாயிருந்த ஒருவனை சுகமாக்கின பின்பு..

  • "பவுல் செய்ததை ஜனங்கள் கண்டு, தேவர்கள் மனுஷரூபமெடுத்து நம்மிடத்தில் இறங்கிவந்திருக்கிறார்கள் என்று லிக்கவோனியா பாஷையிலே சத்தமிட்டுச் சொல்லி,.....பூஜாசாரி எருதுகளையும் பூமாலைகளையும் வாசலண்டையிலே கொண்டுவந்து, ஜனங்களோடேகூட அவர்களுக்குப் பலியிட மனதாயிருந்தான்.
    அப்போஸ்தலராகிய பர்னபாவும் பவுலும் அதைக் கேட்டபொழுது, தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய். மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; நீங்கள் இந்த வீணான தேவர்களைவிட்டு, வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவற்றையும் உண்டாக்கின ஜீவனுள்ள தேவனிடத்திற்குத் திரும்பவேண்டுமென்று உங்களுக்குப் பிரசங்கிக்கிறோம்." (
    அபோஸ்தலர் 14:11-15)


தேவன் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர். சாதுவை நம்பி மோசம் போவதா அல்லது பவுலை நம்பி தேவனை மாத்திரம் தொழுது கொள்வதா என்பதை அவரவருடைய முடிவுக்கு விட்டு விடுகிறேன்.

இது போன்ற காரியங்களை ஒருவர் தொலைகாட்சியில் பேசியும் எப்படி ஜனங்கள் நம்புகிறார்கள் என்று எனக்கு புரியாத புதிராக இருக்கிறது!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

pgolda Wrote@Tcs on 14-02-2011 00:05:50:

// என்டு டைமு ப்ராப்பஸ்ஸி என்டுக்கு வந்துட்ச்சி'ங்கோ...
//

இது முடிவல்ல. முடிவின் ஆரம்பம்..மத்திய கிழக்கிலும், ஆப்ரிக்காவிலும் சர்வாதிகார சாம்ராஜ்யங்கள் மறைந்து இஸ்லாமிய சாம்ராஜ்யம் எழும்புவதை பார்க்க முடிகிறதா?

அதையே நானும் சொல்ல வரேன், கடந்த 100 வருடமாக கத்தோலிக்க ஸ்தாபனத்தையும் அதன் சார்பு ஸ்தாபனங்களையும் ஐரோப்பிய யூனியனை மட்டுமே நோக்கிக் கொண்டிருந்து அங்கிருந்தே அந்திகிறித்து தோன்றுவான் என்று யூகித்து வேகமாக வளர்ந்து வரும் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை தீர்க்கதரிசன வியாக்கியானிகள் கவனிக்கவில்லை; ஒயாமல் போப் மார்க்கத்தையே பாபிலோனிய வேசி மார்க்கம் என்று தூஷித்துக்கொண்டிருந்தார்கள்; அது உண்மையோ பொய்யோ எனக்குத் தெரியாது; ஆனால் தேவன் எப்போதுமே தன்னுடைய செயல்பாடுகளை மனிதன் கணிப்பதற்கு அனுமதிக்கிறதில்லை; அவர் அந்தரங்கத்திலிருந்தே செயல்படுவார்; மனுஷ ஞானத்தைப் பொய்யாக்குவார்; நாம் கிழக்கை நோக்கிக் கொண்டிருந்தால் அவர் மேற்கிலிருந்து வருவார்; நாம் வடக்கை நோக்கி காத்திருந்தால் அவர் தெற்கிலிருந்து வருவார்; எனவே கடந்த 100 வருடத்துக்கு மேலாக கள்ள உபதேசம் செய்து அப்பாவிகளை வஞ்சித்து வரும் ப்ரன்ஹாம் போன்ற கள்ளத்தீர்க்கதரிசிகளானாலும் சரி, தற்காலத்து போலி வேடதாரியான ஏஞ்சல் டிவியின் சாதுஜி போன்ற கள்ளத்தீர்க்கதரிசிகளானாலும் சரி, வெட்கத்தினால் தலைகுனிந்து, மலைகளை நோக்கி, எங்கள் மீது விழுந்து எங்களை மூடிக்கொள்ளுங்கள் என்று கதறும் நாள் வரத்தான் போகிறது..!


இன்றைக்கு கிறித்தவம் வேகமாக அழிந்துகொண்டிருக்கிறது என்பதும் இஸ்லாம் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்; இந்தியா போன்ற சகிப்புத்தன்மை மிகுந்த நாடுகளில் தாக்குப்பிடிக்கும் கிறித்தவம் அமெரிக்கா,இங்கிலாந்து போன்ற அளவற்ற சுதந்தர மேற்கத்திய நாடுகளில் தடுமாறிக்கொண்டிருக்கிறது; சபைகள் மூடப்பட்டுக் கொண்டிருக்கிறது; ஆனால் இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டு செயல்படுவதால் அவர்கள் மீது எவ்வளவு தான் தீவிரவாதக் குற்றச்சாட்டு கூறப்பட்டாலும் மறுபுறம் அவர்களுக்கான ஆதரவு பெருகிவருகிறது; இதையெல்லாம் பார்க்கும் போது அனைத்து வேத வல்லுனர்களின் கணிப்புக்கும் மாறாக ஒரு புதிய மார்க்கத் தலைவன் தோன்றப்போகிறான்; அவன் அரசியலையும் பொருளாதாரத்தையும் ஆட்டிப்படைப்பான்; அதில் தற்கால பெரும்பான்மை கிறித்தவர்களும் வஞ்சிக்கப்படுவார்கள்; பாலஸ்தீனாவில் கிறித்தவர்களிடையே யூதருக்கு எதிரான மனநிலையும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாலஸ்தீன விடுதலை இயக்கங்களுக்கு ஆதரவான மனநிலையும் நிலவுவதே இதற்கு சான்றாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

sekarsamuel@Tcs:

// கிறித்தவ விசுவாசத்தில் நடுநிலையென்ற ஒன்று இருப்பதாகக் கருதுகிறீர்களா,சேகர்..? //

சகோ.சில்சாம் நடுநிலை என்றால நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ தெரியாது. நடு நிலைமை என்பது என்னைப் பொறுத்த வரையில் சமநிலை அல்லது சம நோக்குப் பார்வை. தராசில் முள் சரியாக நடுவில் இருந்தால் அதை சரியான எடை என்று சொல்லுகிறோமல்லவா, அது போலத்தான் எனது கூற்றும். மற்றபடி வேறு எதற்கும் (போதுமா! :) ) பதில் போடப் போவதில்லை.

வாதப் பிரதிவாதங்களை ஒருதலைப் பட்சமாக அணுகாது இரண்டையும் சமமானப் பார்வையில் அணுகுவதுதானே உண்மையான விவாதத்திற்கு அழகு. என்ன சொல்றேள்.



sekarsamuel@Tcs:

// மற்றபடி உங்கள் நக்கல் நையாண்டிகளுக்கு...//

Chillsam:

நீங்களுமா...? அப்ப நான் வரட்டா..?

sekarsamuel@Tcs:

உங்கள் மனம் புண்படவேண்டும் என்று எழுதவில்லை. பண்பட்ட உங்கள் மனது எல்லாரையும் பண்படுத்த வேண்டுமே என்ற ஆதங்கத்திலேயே சொன்னேன். பல விசயங்களை நீங்கள் அறிந்து வைத்திருக்கிறீர்கள் என உங்கள் பதிவிலிருந்து அறிய முடிகிறது. ஆனால் எழுதும்போது மட்டும் ஏன் அவற்றை வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக முன் வைக்காமல் உங்க்ள் தீர்ப்பை முதலிலேயே வைத்துவிடுகிறீர்கள். எந்த வழக்கிலும் முதலிலேயே தீர்ப்பு வழங்கப்படுவதில்லை என மதிப்பிற்குரிய நீதிபதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.


Chillsam:

என்னைப் பொறுத்தவரையிலும் எனது கிறித்தவ விசுவாசத்தில் நடுநிலை என்பதே கிடையாது'ங்கோ...

கிறித்துவை சிலுவையில் அறைந்தவன், அவரோடு அறையப்பட்டவன்;
சிலுவையை மறுப்பவன், சிலுவையை சுமப்பவன்;
கிறித்துவை விட்டு ஓடுபவன், கிறித்துவுக்காக ஓடுபவன்;
கிறித்துவை மறப்பவன், கிறித்துவுக்காக உலகை மறப்பவன்;
கிறித்து இல்லாமல் நஷ்டப்படுபவன், கிறித்துவுக்காக நஷ்டப்படுபவன்;
கர்த்தருடைய நாளில் கைவிடப்படுபவன், சேர்த்துக்கொள்ளப்படுபவன்...
இப்படி இரண்டு வகையினரை மட்டுமே அடியேன் எனது சிந்தையில் வரிசைப்படுத்தி வைத்திருக்கிறேன்; இது இன்னும் தொடரும்; இந்த கருத்தில் உடன்பாடில்லாவிட்டாலும் போகட்டும்;நான் உணர்வோடு எழுதிய கருத்தை நீர்த்துப்போகச் செய்துவிடாதீர்கள்,சேகர்..!

sekarsamuel@Tcs:

விவாதத்தில் நடுநிலை என்பதற்கும் விசுவாசத்தில் நடுநிலை என்பதற்கும் ரொம்ப வித்தியாசம் உண்டு என்பதை அறியீர்களா?
Any way I LIKE your approach. X-D

Chillsam:

// என மதிப்பிற்குரிய நீதிபதிக்கு...//

நான் யாரையும் தீர்ப்பு செய்ய இங்கு இல்லை,நண்பரே..!
நான் கிறித்துவின் கிருபைக்கு சாட்சி,
அவருடைய மகிமைக்கு புகழ்ச்சி,
அவர்தம் வருகைக்கு அத்தாட்சி...அவ்வளவே..!




__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: ஏஞ்சல் டிவியின் துருபதேசம்: சாதுஜி காலில் விழு..!
Permalink  
 


Tcs Comments...

robin Wrote on 01-02-2011 23:08:14:

For your information தினகரன் பரலோகக் கமிட்டியில் இருக்கிறாராம்.


chillsam Wrote on 28-01-2011 17:58:04:

சாதுஜி என் கனவில் வந்து சொன்னது, " இவன் ரொம்ப நல்லவன்டா எவ்வளவு ரீல் சுத்தினாலும் சலிக்காம படிக்கிறான்... இவனை எப்படியாவது பரலோகத்துக்கு ஒரு டூர் கொண்டு போயிட வேண்டியதுதான்...o.O


ramarn Wrote on 28-01-2011 18:10:13:

ஆகா!!! அப்படியா!!! எனக்கு இது முன்னமே தெரியாம போய்ச்சே...
இன்னும் நான் PASSPORT எடுக்கலயே...

rajkumar_s

இப்படிப்பட்ட ஆதாரமற்ற பரிகாசங்கள் தள நிர்வாகத்தின் பார்வையில் எப்படிப் பார்க்கப்படுகின்றன? இதைச் சம்பந்தப்பட்டவர்கள் படித்தால் அவர்கள் மனம் புன்படாது என்று தள நிர்வாகத்தால் உறுதி கூற முடியுமா?

புண்பட்ட காயத்துக்கு மருந்தாகவே எனது இந்த வரிகள் அமைந்திருக்கின்றன; புண்படக் காரணமானவர்கள் தங்கள் பண்படாத பண்பாட்டைக் கெடுக்கும் உபதேசத்தினால் சபையைக் கவிழ்த்துப் போடாதிருக்கவே தமிழ்க் கிறித்தவத்தின் நாடித் துடிப்பாக விளங்கும் இந்த தளத்திலிருந்து கூவிக் கொண்டிருக்கிறேன்; டிஜிஎஸ் போன்றவர்களை விமர்சிக்க எனக்குத் தகுதியிருப்பதாக நான் நினைக்கவில்லை; அவரால் ஏற்பட்ட சோதனைகளைக் காட்டிலும் அவர் சாதித்தவைகளும் அவரால் சாதித்தவர்களும் அதிகம்.

திரு.இராஜ்குமார் அவர்கள் என்னைப் புரிந்துகொண்டால் "ஆமென் " சொல்லட்டும்; சிருஷ்டிகர் உங்கள் அருகில் நிற்கிறார்..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

// சகோ.சில்சாம் நீங்கள் சாது மற்றும் சகோ.வின்செண்ட் செல்வகுமார் அவர்கள் குறித்து கூறும் குற்றச் சாட்டுகளை நீங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன் எனக் கூறும் ஆதாரங்களைக் கொடுத்தால் தான் நம்ப முடியும் என்பது சரிதானே! சரியான ஆதாரங்களைத் தாருங்கள். ஏஞ்சல் டீவி குறித்தும், ஆசீர்வாதம் டீவி குறித்தும் பல செய்திகள் சொல்லுகிறார்கள். ஒன்று உங்களைப் போல குற்றம் சாட்டுபவர்கள் அதற்கு ஆதாரங்களைத் தரவேண்டும். அல்லது சகோ.கோல்டா போன்ற ஆதரவாளர்கள் அவற்றிற்கு சரியான மறுப்பை திட்டாமல் தரவேண்டும். அப்படி இருந்தால்தான் நடுநிலைமையாளர்களாகிய நாங்கள் எதாவது புரிந்து கொள்ள முடியும். //

கிறித்தவ விசுவாசத்தில் நடுநிலையென்ற ஒன்று இருப்பதாகக் கருதுகிறீர்களா, சேகர்..?


அப்படியானால் அந்த நடுநிலையின் அப்போஸ்தலன் யார் என்பதை நாங்கள் அறியத் தருவீர்களா..?


வாதி - பிரதிவாதி என்ற தோரணையில் நடுநிலை என்பது நீதிபதி அல்லது நடுவரின் ஸ்தானமோ..?


"தேவனைக் குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்." (ரோமர்.1:19)

தேவனே வெளிப்படுத்தியிருக்கும் விசேஷங்களுக்கும் மேலாக‌ சாதுஜி போன்றவர்கள் மூலம் வெளிப்படுபவை மோசடியானவை என்பதற்கு ஆதாரம் ஒன்றும் தேவையில்லை; கையில் பைபிளை வைத்துக்கொண்டு ஒரு செம்பு தண்ணீரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ஒரு நாள் முழுவதும் ஏஞ்சல் டிவியை மட்டும் பாருங்கள், உபவாசத்துடன்..!

மற்ற அனைத்தையும் ஆவியானவர் பார்த்துக்கொள்ளுவார்; நான் அப்படியாக இரவெல்லாம் விழித்திருந்து அதிர்ச்சியுடன் ஏஞ்சல் டிவி பார்த்த (more than 5 Years) அனுபவத்திலிருந்து பேசுகிறேன்; "பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் " பார்த்தால் போதும் என்பர்; நானோ பானை சோற்றையும் பதம் பார்த்தவன்; தற்காலத்தில் இணைய வசதி இருப்பதால் ஏஞ்சல் டிவியின் நிகழ்ச்சிகளைப் பல தடைகளின் மத்தியிலும் பதிவு செய்து வைத்திருக்கிறேன்; அதன் அடிப்படையிலேயே ஆதாரத்துடன் எழுதுகிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ebs@TCS:

நண்பர்களே தேவகுமாரர்கள் பற்றிய தியரிகளை நாம் விட்டு விடலாமா? அதைப் பற்றி சரியாக இப்படித்தான் என்று தெரியாது, மேலும் அதனை விவாதிப்பதால் பயன் எதுவும் இருப்பதாக தோன்றவில்லை.

நோவாவின் காலத்தில் இருந்தது போல் மனுஷகுமாரன் வரும் நாளிலும் இருக்கும் என்றால் : நோவாவின் காலத்தில் தேவனுக்கு பிரியமானவர்களின் ப்ரொபோஷன் ரொம்ப ரொம்ப கம்மி .முழு உலகத்திலும் நோவா மாத்திரமே உத்தமனும் நீதிமானும் தேவனோடு சஞ்சரித்தவனுமாக இருந்தான். மனிதர்கள் தேவனற்றவர்களாக வாழ்வின் இன்பங்கள் என்று அவர்களுக்கு தோன்றியதை (தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களை) செய்துகொண்டு,நோவா வரும் அழிவுக்கு கப்பல் செய்வது தெரிந்தும் ஏற்றுக்கொள்ளாமல் அதனுள் செல்ல பிரியமில்லாமல் மடிந்து போனார்கள். மனுஷகுமாரன் வரும் காலத்திலும் இந்த மாதிரிதான் இருக்கும் :அதாவது தேவனுக்கு பிரியமானவர்களின் ப்ரொபோஷன், அதிக பாவம்,சுவிசேஷம் மற்றும் வருகையின் செய்தி கேட்டும் ஆயத்தமாகாமலிருத்தல் என்பது எனதறிவிற்கு எட்டியது.


// நோவாவின் காலத்தில் இருந்தது போல் மனுஷகுமாரன் வரும் நாளிலும் இருக்கும் ///

-என்பதாக நம்முடைய ஆண்டவர் ஒரே ஒருமுறை சொன்ன வரிகளுக்கு எத்தனையெத்தனை விளக்கங்களைக் கொடுத்து சபைகளைக் கவிழ்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை அறிவீர்களா?

நாம் நம்முடைய தளத்தை மெய்யாகவே ஆரோக்கிய உபதேசத்துக்கான தமிழ்க் கிறித்தவத்தின் அடையாளமாக உருவாக்க விரும்பினால் எந்தவொரு விவாதத்தையும் தவிர்க்கவே கூடாது; நண்பர்கள் மத்தியில் கோபதாபங்கள் ஏற்படுவது இயல்பு; ஆனாலும் சத்தியத்துக்காக நாம் உழைப்பது அதைவிட முக்கியம்; நண்பர்களின் கட்டுக்கோப்பைக் காக்கவேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய உபதேசங்களை ஆய்வு செய்வதை விட்டு நாம் விலகினால் அது பிசாசின் உபதேசத்துக்கே உரம் சேர்க்கும்.

ஒரு நூதனமான உபதேசத்தைக் கேட்கும் விசுவாசி அவன் 30 வருடமாக ஒரே சபைக்குப் போகிறவனாக இருப்பினும் ஒரே நாளில் கவிழ்க்கப்படுகிறான்; காரணம், நாமும் இவ்வளவு நாளாக சபைக்குப் போகிறோம், நம்முடைய சபையில் இதைக் குறித்து சொல்லவில்லையே,நம்முடைய போதகருக்கு வேத ஞானமும் இல்லை வெளிப்பாட்டு வரமும் இல்லை;இவரிடம் இனியும் இருந்தால் நாம் எதையும் கற்றுக்கொள்ளமுடியாது என்று பிரமிப்படைந்து வஞ்சிக்கப்படுகிறான்.

உதாரணத்துக்கு தேவகுமாரர்கள் தியரியையும் " நோவாவின் நாட்களில் நடந்ததுபோலவே " -எனும் சுவிசேஷ வாக்கியத்தையும் லிங்க் பண்ணி ஏஞ்சல் டிவியின் சாதுஜி தினமும் காலையிலும் மாலையிலும் பாலியல் கல்வி நடத்தாத குறையாக இன்னொரு பையனை வைத்துக்கொண்டு கண்ணுங்களுக்கும் செல்லங்களுக்கும் பாடம் எடுப்பது தங்களுக்குத் தெரியாதா? இதைக் குறித்து நாம் விழிப்புணர்வு உண்டாக்கி இதுபோன்ற துருபதேசத்தை உடனே நிறுத்த வேண்டும் என்று ஏஞ்சல் டிவிக்கு தந்தியடித்தால் அவர்கள் அதனை நிறுத்த மாட்டார்களா? அவர்கள் நிறுத்தாவிட்டால் நாம் அவர்களுக்கு காணிக்கை அனுப்புவதை நிறுத்தவேண்டும்; சபைகளில் இதுபோன்ற துருபதேசங்கள் பரவாதிருக்க சங்கிலி ஜெபங்களை ஏற்படுத்த வேண்டும்.

நான் கவனித்தவரை சாதுஜியின் முறைகேடான உபதேசத்தைக் குறித்து சொல்லியிருக்கிறேன்; அவர் டிவியில் பேசும்போது அவருடைய கால்களை நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள், அவருடைய கால் தரையில் தான் நிற்கிறதா, என்று; ஏனெனில் அவர் பெரும்பாலும் இந்த உலகத்திலேயே இருப்பதில்லை; சாதுஜியைப் பொறுத்தவரையில் தூதன் எப்படி மனுஷ ரூபத்தில் வந்து அழகான பெண்களை கர்ப்பவதியாக்கி இராட்சசர்கள் பெறப்படுவதற்குக் காரணமாக இருந்தானோ அதுபோலவே தற்போது சாத்தானும் மனுஷ ரூபமெடுத்து அதாவது பெண் சுகத்துக்காக தற்காலிகமாக ஒரு சில நிமிடம் வந்துவிட்டு மறைந்துவிடுகிறானாம்; இதனால் பல இளம்பெண்கள் கர்ப்பவதியாகிவிடுகின்றனராம்.

இதைப்பார்த்தால் சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தின் திருச்சூரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த இரயிலில் தனியே பயணித்த இளம் பெண்ணுக்கு நடந்த கொடூர சம்பவமே நினைவுக்கு வருகிறது;எங்கிருந்தோ ஒரு வாலிபன் திடீரென்று தோன்றி அவளைக் கற்பழித்துவிட்டு காணாமற் போய்விட்டான்; அது மட்டுமல்ல, அந்த பெண்ணையும் அவன் இரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டானாம்..! இப்படியே தொடர்ந்து சர்ச்சைக்குரிய துருபதேசங்களை நயவஞ்சகமாக சாதுஜி தினமும் போதித்துக்கொண்டிருக்கிறார்.

தேவகுமாரர் தியரி என்பது என்றைக்கோ நடந்தது, அதில் இருவேறு கருத்துக்கள் இருப்பதால் அதைக் குறித்து எதுவும் பேசவேண்டாம் என்பது சரியே; ஆனால் அதே காரியங்கள் மீண்டும் சம்பவிக்கப்போகிறது, அதையே இயேசுவானவர் சொன்னார் என்று உபதேசிப்பது எத்தனை கொடூரமானது அல்லவா..? இப்படியே போனால் மரியாளை சந்தித்த காபிரியேல் தூதனையே சந்தேகப்பட வைத்துவிடுவார்கள்; இந்த சர்ச்சைகளுக்கெல்லாம் காரணம், ஏஞ்சல் டிவியின் சாதுவும் அவருடைய கூட்டாளியான வின்சென்ட் செல்வகுமாரும் தான்; இருவரும் கள்ளத்தீர்க்கதரிசியான ப்ரன்ஹாம் போதகத்தால் வஞ்சிக்கப்பட்டு உலகமுழுவதும் இருக்கிற அவர்களுடைய நெட்வொர்க்கின் கட்டுப்பாட்டில் வேலை செய்பவர்களாவர்; விரைவில் அவர்களுடைய அனைத்து தொடர்புகளையும் ஆதாரத்துடன் அடியேன் வெளியிடும்போது நண்பர்கள் அதிர்ச்சியடையக்கூடாது..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

சில நாட்களுக்கு முன்பு காலை நேரத்தில் ஏஞ்சல் டிவியில் சாதுஜி தன்னுடைய சிஷ்யப் பிள்ளையான ஆனந்தூ'விடம் சொன்னது,சாதுஜி ஏஞ்சல் டிவிக்காக உழைக்கும் பிரயாசத்துக்கு ஏற்ற கூலி கிடைப்பதில்லையாம்; இதுகுறித்து சக தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளரிடம் சாதுஜி , தான் செய்யும் வேலைகளுக்கு 'தங்கள் நிறுவனத்தில் என்ன சம்பளம் கொடுக்கிறீர்கள் ', என்று கேட்டாராம்;அதற்கு அந்த தொலைக்காட்சி நிறுவன உரிமையாளர்,ஒரு மாதத்துக்கு ரூபாய் மூன்று இலட்சம் வரை ஊதியம் தரமுடியும் என்றாராம்;உடனே சாதுவின் மனதில் தோன்றியது,இங்கே நாம் எவ்வளவு வேலை செய்கிறோம்,ஆனால் அதற்கேற்ற வருமானம் இல்லையே,"என்ன ஆனந்து நீயே சொல்லு, இங்க நமக்கு அவ்வளவு பணமா கிடைக்கிறது..?ஆனாலும் ஆண்டவருக்காக நாம் தியாகமாகவே இருக்கவேண்டும்',என்பதாக‌.

சாதுஜி,பேசும் பேச்சும் அதன் நோக்கமும் யாருக்குப் புரிகிறதோ இல்லையோ எனக்குப் புரிகிறது,உங்களுக்கு..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ஆனால் அதனை இத்தனை நீ....ளமான விவாதமாக வளர்த்த பெருமை சகோதரி (எனப்படுகிற) கோல்டா அவர்களையே சாரும்

நன்றி! எல்லா பெருமையும் எனக்கே!
You are really funny Brother Chillsam!


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 196
Date:
Permalink  
 

காலில் விழுவது பற்றி சாது அவர்கள் சொல்லும் விளக்கம், இன்று விக்ரகத்தை வணங்கும் பலரும் சொல்லும் விளக்கத்தோடு ஒத்து போகிறதே அல்லாமல், வேதத்தோடு ஒத்து போகவில்லை.

அன்பர்கள், இந்த விவாதத்தை முடித்து வேறு ஏதாவது ஆக்க பூர்வமாக செய்யலாமே.

நன்றி,

அசோக்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

புரிதலுக்கும் கருத்துக்கும் நன்றி எபி அவர்களே..!

images?q=tbn:ANd9GcQUQFn-kLi6COGr4EdswSRACCmS2NfMnvH0NVrQZB7TAC_9Wgkm


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
ஏஞ்சல் டிவியின் துருபதேசம்: சாதுஜி காலில் விழு..!
Permalink  
 


காலில் விழுவது என்பது மரியாதையின் நிமித்தம் என்றே எண்ணியிருந்தேன். ஆனால் அது அவரை வணங்குவதற்கு சமம் என்பதை இப்போது அறிந்து கொண்டேன். ஒருவரை வணங்குவதன் மூலம்(காலில் விழுந்தோ அல்லது எப்படியோ) அவருக்குள் இருக்கும் ஆவியானவரை வணங்குவதாக சொல்வது ஒரு வகையில் விக்கிரக ஆராதனைக்கு சமமாகவே தோன்றுகிறது. வேதத்திலும் இந்த மாதிரி ஒரு கான்செப்ட் இல்லை. மேலும் இரட்சிக்கப்பட்ட ஒவ்வொருவருக்குள்ளும் ஆவியானவர் வாசம் செய்கிறாரே.

ஆவியானவரை காரணம் காட்டி ஒருவர் என்ன சொன்னாலும் செய்தாலும் அதனை அப்படியே நம்ப வேண்டும் என்றில்லை. ஆவியானவரின் பெயரை பயன்படுத்தினால் யாரும் கேள்வி கேட்கவோ அல்லது மறுக்கவோ பயப்படுவார்கள் என்பது பலருக்கும் வசதியாக போய்விட்டது.

இங்கு யாரும் சாதுவை எதிக்கவில்லை. அவரின் வேதத்திற்கு புறம்பான உபதேசமே எதிர்க்கப்படுகிறது.


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

எனது சிறுவயது பிராயத்திலிருந்து நாட்குறிப்பு (Diary) எழுதுவது எனது பொழுதுபோக்கு; அதனால் பல நன்மைகளையும் அதிக சங்கடங்களையும் அடைந்திருக்கிறேன்;அதன் பாதிப்பினாலேயே "அனுபவங்கள்" எனும் இந்த தொடரை ஆரம்பித்தேன்;அதில் காலில் விழுவது குறித்து சாதுஜி முன்வைத்த கருத்தையும் ஒரு பார்வையாளனைப் போல வெறுங் கேள்விகளுடன் யாருடைய மனமும் புண்படாத வண்ணமாகப் பகிர்ந்துகொண்டேன்;ஆனால் அதனை இத்தனை நீ....ளமான விவாதமாக வளர்த்த பெருமை சகோதரி (எனப்படுகிற) கோல்டா அவர்களையே சாரும்;என்ன ஒரு கொடுமை என்னவென்றால் இந்த திரியானது எந்த முடிவும் எட்டப்படாமல் ஆரம்பித்த இடத்துக்கே வந்து நிற்கிறது;இந்த பெருமையும் கோல்டாவையே சாரும்.

// காலில் விழுந்தவர்கள் மேல் தவறில்லை. அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் செய்தார்கள்; சாது மேல் தவறில்லை. விழ வேண்டாம் என்று தான் தடுத்திருக்கிறார்; அனுமதித்த ஆண்டவர் மேலும் தவறில்லை.விழுந்தவர்கள் மன நிலையையும், சாதுவின் மன நிலையையும் அறிந்திருந்தார்; இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை. //

இதை முதலிலேயே சொல்லியிருக்கலாமே, இதைப் போல பொறுப்பில்லாத பதில் ஏதாவது இருக்குமா? சகோதரியே, நான் சாதுஜிக்கு எதிராகப் பேசுவதாக நீங்களே கற்பனை செய்துகொண்டு ரொம்ப சிரமப்பட்டு சாதுஜியைக் காப்பாற்ற முயற்சிக்கிறீர்கள்;நான் சாதுஜிக்கு எதிராக அல்ல,ஆவியானவருக்கு ஆதரவாக நிற்கிறேன்.அதாவது ஆவியானவர் சொன்னதாக சாதுஜி சொன்ன பொய்க்கு எதிராக நிற்கிறேன்.

சாதுஜி காலில் யாரோ, எங்கேயோ விழுந்தார்கள்,அது விழுந்தவருக்கும் எழுந்தவருக்கும் விழச் செய்தவருக்கும் எழச் செய்தவருக்குமான பாடு;அதைக் குறித்து நமக்கு எந்த கவலையும் இல்லை;ஆனால் அதனை டிவியில் சொன்ன நோக்கம் என்ன, அதனால் நாம் அடைந்த பக்தி விருத்தியின் அளவு என்ன என்பதே, எனது கேள்வி.

டிவி என்பது எத்தனை வல்லமையான சாதனம் என்பது நாம் அறிந்ததே;அதில் ஒரு தவறான உபதேசத்தை ஒருவர் "ஜஸ்ட் லைக் தட் " (just like that..) என்று சொல்லிவிட்டுப் போனால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை யார் சரி செய்வது?

'அவர்கள் உன்னை வணங்கவில்லை, உனக்குள் இருக்கும் என்னையே வணங்குகிறார்கள்' என்று ஆவியானவர் சொன்னதாகச் சொல்லுவது எத்தனை சூழ்ச்சியான துருபதேசம் என்று உணரமாட்டீர்களா? வேதத்தில் எந்த பரிசுத்தவானுக்காகிலும் இந்த மேன்மை கிடைத்ததா,சொல்லுங்கள்..!

இவர் திபெத்திய பள்ளத்தாக்கில் சுற்றியலைந்ததாகச் சொல்லுவது உண்மையேயாயினும் சாது வேடமிட்டதும் அங்கே அடிபட்டு சாகாதிருக்கவே என்கிறேன். இந்திய பாரம்பரியத்தில் போற்றப்படும் காவியை புனித உடையாக வேதம் ஏற்றுக்கொள்ளுகிறதா, அது வேடமிடும் செயல் தானே..?

வடதேசத்தில் மிஷினரிப் பணிக்காக 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரைமறைவிலிருந்து உழைத்துக் கொண்டிருக்கும் தியாகமான ஊழியர்களை நான் அறிவேன்; அவர்களில் ஒவ்வொருவருக்குமே இந்த அனுபவம் நேரிட்டிருக்கலாம்;அல்லது தன் தோற்றத்தினால் தன்னை விசேஷித்தவனாகக் காட்டி மயக்குவதற்கு பயிற்சியில்லாத காரணத்தினால் அவர்கள் காலில் யாரும் விழாமலும் இருந்திருக்கலாம்; அவர்களில் பலர் அடிபட்டும் அடிக்கப்பட்டும் கொளுத்தப்பட்டும் துரத்தப்பட்டும் காற்றில் கரைந்தனர்.

அவர்களில் யாருக்குமே சாதுஜிக்கு தரிசனமான ஆவியானவர் தோன்றி மக்கள் அவர்கள் காலில் விழுவதை அனுமதிக்கும்படி சொல்லவில்லையா? அப்படி அனுமதித்திருந்தால் அவர்கள் அடிபட்டிருக்கமாட்டார்களே? அப்படி சாதுஜி காலில் மட்டும் விழுவதற்கு ஆவியானவர் விசேஷித்த அனுமதி கொடுத்தாரானால் சாதுஜி ஏதோ ஒரு வகையில் மற்றவரைக் காட்டிலும் விசேஷித்தவராகவும் ஆண்டவருக்கு இணையானவராகவும் இருந்திருக்கவேண்டும்; ஏனெனில் மக்களுடைய அறியாமைக்காக மட்டுமே ஆவியானவர் இதனை அனுமதிக்கச் சொல்லவில்லை;அவர் சாதுஜிக்குள் இருப்பதால் சாதுஜியின் வழியாக தாம் தொழப்படுவதை விரும்புகிறார் என்பதும் இதிலிருந்து விளங்குகிறது.

இந்நிலையில் நான் தேவையில்லாத சர்ச்சைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கிறேன்;பரந்துவிரிந்த பாரத தேசத்தில் என்னைப் போன்ற ஒருசில அடிப்படைவாதிகளைத் தவிர பெரும்பாலானோர்க்கு சாதுஜியின் கூற்று ஏற்புடையதே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: ஏஞ்சல் டிவியின் துருபதேசம்: சாதுஜி காலில் விழு..!
Permalink  
 


காலில் விழுந்தவர்கள் மேல் தவறில்லை. அவர்களுக்கு தெரிந்ததை அவர்கள் செய்தார்கள்.

சாது மேல் தவறில்லை. விழ வேண்டாம் என்று தான் தடுத்திருக்கிறார்.

அனுமதித்த ஆண்டவர் மேலும் தவறில்லை.விழுந்தவர்கள் மன நிலையையும், சாதுவின் மன நிலையையும் அறிந்திருந்தார்.

இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

சகோதரன் விஜய் அவர்களை சகோதரி கோல்டா அவர்கள் தேவ மனிதன் என்று விளித்ததை மறுத்து, விஜய் அவர்கள் முன்வைத்துள்ள கருத்துக்கு எதிர் கருத்தையுடையவர்களும் அவருக்கு பதிலளிக்க விரும்பும் நண்பர்களும் பின்வரும் தொடுப்பைத் தொடரவும்.

தேவ மனிதன் என்றழைக்கப்படுவது தவறா?

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40851559


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Member>>>முன்னேறிச் செல்க..!

Status: Offline
Posts: 22
Date:
Permalink  
 

தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி சகொதரி கோல்டா அவர்களே! நான் ஒரு சாதாரண விசுவாசி. என்னை மதிப்பிற்க்கும் மரியாதைக்கும் உரிய தேவமனிதர் என்றெல்லாம் அழைக்க வேண்டாம். நீங்கள் கிண்டலாக அதைச் செய்திருந்தால் கூட உங்கள் கருத்தை வாசிக்கும் என்னை அறியாத சகோதர சகோதரிகள் என்னைக் குறித்து மேன்மையாக நினைக்க வாய்ப்புண்டு. நான் நானாகவே இருக்க விரும்புகிறேன்.

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அப்படியானால் "தீர்க்கதரிசி" என்று ஒரு மனுஷனை அழைக்கலாமா, தேவன் ஒன்றையும் வெளிப்படுத்தாவிட்டால் அவன் வெற்று பாத்திரம் தானே?

"ஸ்திரீகளிடத்திலே பிறந்தவர்களில் யோவான்ஸ்நானனைப் பார்க்கிலும் பெரியவன் ஒருவனும் எழும்பினதில்லை.." (மத்தேயு.11:11) என்பதாக ஆண்டவரே சொல்லியிருக்க, எழுதப்பட்டவைகளையே எடுத்து வியாக்கியானம் செய்து சுயபெருமை பேசிக்கொண்டிருப்போரை நீங்கள் தீர்க்கதரிசி என்று புகழ்ந்துரைப்பது எப்படி சரியாக இருக்கும்?

பழைய ஏற்பாட்டில் பணியாற்றிய இறைவாக்கினர் எனப்படும் தீர்க்கதரிசிகளின் பணியானது யோவான் ஸ்நானன் காலத்துடன் முடிவுக்கு வருகிறது;மேலும் வேதம் எழுதிமுடிக்கப்பட்ட ஒரு விஷயமாகும்;இதில் இல்லாததையோ இதில் இருப்பதற்கு மாற்றாகவோ எவன் ஒருவன் போதித்தாலும் எழுதினாலும் அவன் கள்ளத் தீர்க்கதரிசியாக இருக்கிறான்;

கள்ளத்தீர்க்கதரிசி நீங்கள் நினைப்பது போல ரெண்டு கொம்புகளோடு பார்த்தவுடனே அடையாளம் காணும் தோற்றத்தில் சாத்தானைப் போல வரமாட்டான்;அவன் மிகவும் தெய்வீகமாகவும் சாந்தமாகவும் அழகாகவும் சிந்தையைக் கவரும் வண்ணமாக புத்திசாலித்தனத்தோடும் ஏகப்பட்ட உலக ஞானத்தோடும் எல்லாவற்றுக்கும் விஞ்ஞான அறிவுடனும் நம்மில் ஒருவனாகவே தோன்றுவான்;சுருக்கமாகச் சொல்லப்போனால் ஏஞ்சல் டிவியின் சாதுஜியைப் போலவே இருப்பான் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.

அவர் பகிரங்கமாக அறிவித்ததுபோல அவர் காலில் விழுந்து ஆவியானவரை சந்தோஷப்படுத்தப்போகிறீர்களா அல்லது அவர் போதிப்பது கள்ள உபதேசம் என்பதை உணரப்போகிறீர்களா..?

சாதுஜி தன் காலில் பக்தர்களை விழச் சொன்னது சரியா தவறா என்பதை ஒரே வரியில் சொல்லாமல் சுற்றி வளைத்து திசைதிருப்பிக்கொண்டிருக்கிறீர்களே..? அவர் எந்த நோக்கத்தில் சொன்னார்,அது ஆவியானவர் சொன்னாரா,என்ற விளக்கமெல்லாம் வேண்டாம்;காலில் விழுவது சரியா தவறா என்று மட்டுமாவது சொல்லுங்கள்..!

மற்றபடி தாங்கள் இந்த திரியில் துவங்கிய புதிய சர்ச்சையான ஆவிக்குரிய தகப்பன் என்று அழைக்கப்படுவதைக் குறித்த விவாதத்தை தனி திரியாகத் துவக்கியிருக்கிறேன்;அங்கே தொடரவும்.

ஆவிக்குரிய தகப்பன் என்றழைப்பது தவறா..?

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40843694

தள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்:
நாம் எடுத்துக்கொள்ளும் தலைப்புக்குப் பொருந்தாத செய்திகளை நீங்கள் விவாதத்தின் எந்த கட்டத்திலும் இடைபட்டு தனி திரியாகத் துவங்கிட அன்போடு வேண்டுகிறேன்;இதன்மூலம் நாம் ஒரு குறிப்பிட்ட பொருளில் விவாதித்த பயன்கிட்டும்.

உதாரணமாக, தீர்க்கதரிசிகளைக் குறித்து தொடர்ந்து விவாதிக்க விரும்பினால் அதனை இப்போதே தனி திரியாகத் துவங்கி அதில் என்னுடைய கருத்தை மேற்கோள் காட்டி தொடர்ந்து தங்கள் கருத்தை அதில் எழுதவும்.நன்றி..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய தேவ மனிதர் விஜய் அவர்களே!

Brother Vijay:
நான் பிற மதத்தைத் சேர்ந்தவர்களைக் கூட சகோதர சகோதரிகளாக அழைப்பது எனது வழக்கம் காரணம் அப்படி முறை வைத்துப் பழகுவது எங்கள் மதுரை வழக்கு.

Golda:

அது தவறல்ல! அப்பா, அம்மா, அத்தை, மாமா என்று கூட அழைக்கலாம்!

மத்தேயு 23:9 - உலக உறவு முறை பற்றி ஆண்டவர் இங்கு பேச வில்லை. ஊழியக்காரர்களை அழைக்கும் முறை பற்றித் தான் பேசுகிறார்.

பவுல் தகப்பனைப் போல் உங்களை நேசிக்கிறேன். தாய் போல் கர்ப்பவேதனைப் படுகிறேன் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார் என்பது உண்மைதான். பிரம்போடு வரட்டுமா என்று ஒரு கண்டிப்பான ஆசிரியர் போலவும், எல்லோருக்கும் நான் எல்லாமானேன் என்று ஒரு அடிமை போலும் தன்னை ஆக்கிக் கொள்கிறார்.என்றாலும் அவர்தான் தன்னை தகப்பன் என்று சொன்னாரே அன்றி, அவரை யாரும், ஆவிக்குரிய தந்தை என்று அழைத்ததாக தெரியவில்லை. ஆண்டவருக்கு எல்லாமே பிள்ளைகள் தான். பேரப் பிள்ளைகள் கிடையாது!

நமக்கு நல்ல முன் மாதிரி, ஒரே முன் மாதிரி இயேசு கிறிஸ்துதான். ஒரு மனிதனை ஆவிக்குரிய தந்தை என்று அழைக்கும் போது, அது ஆண்டவருக்குக் கொடுக்க வேண்டிய மகிமை, கனத்தில் கொஞ்சம் எடுத்து கொடுப்பது போல் தெரிகிறது.

ஆவிக்குரிய குழந்தையாய் இருக்கையில், ஒரு வேளை தகப்பன்மார் தேவைப்பட்டிருக்கலாம். வளர்ந்த பின் எல்லாம் சகோதரர்களே.(மத் 23:8)

நம் ஆண்டவர் எரிச்சலுள்ள தேவன். பார்த்துக்கொண்டே இருப்பார். அப்புறம் (தேவையற்ற உறவுகளை) கட் பண்ணி விட்டு விடுவார்!

எந்த வட்டத்திலும், கட்டத்திலும் சிக்கிக் கொள்ளாமல் இருந்தால், ஆண்டவர் இன்னும் உயரம் கொண்டு சென்று ,இன்னும் பல காரியங்களை நீங்கள் காணும்படி செய்வார்.


__________________
1 2 3  >  Last»  | Page of 3  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard