Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மரி தாயே, மரித்தாயே..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
மரி தாயே, மரித்தாயே..!
Permalink  
 


சில்சாம்:
// இந்த அணுகுமுறையானது எத்தனை சாத்வீகமாக உள்ளது அல்லவா? //

கோல்டா:
// உண்மைதான் ஐயா, காலில் விழுவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று ஆவேசமாக பேச வேண்டும். மாதா வணக்கத்தை கண்டு கொள்ளத் தேவையில்லை. அது தானாய் மறைந்து விடும். அப்படித்தானே? சாத்வீக அணுகுமுறை பற்றி நீங்கள் பேசுவது தான் ஆச்சர்யமாக இருக்கிறது! //

சில்சாம்:

அன்பு சகோதரி அவர்களே, இதுபோன்ற கலந்துரையாடல் தளத்தில் (forum) பின்னூட்டமிடும் போது மேற்கண்ட மாதிரியைப் பின்பற்ற வேண்டுகிறேன்; அதாவது // (...) // இந்த குறிக்குள் மேற்கோள் காட்டி இயன்ற மட்டும் அது யாருடைய கருத்து என்றறிய அவர்தம் பெயரையும் குறிப்பிடுவது வாசகருக்கு நம்முடைய கருத்து சென்று சேர உதவும்; இதனை நான் தமிழ்க் கிறித்தவ தளத்தின் சகோதரர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்.

இனி தங்கள் மேலான கருத்து தொடர்பாக‌...

காலில் விழுவது குறித்து நான்,"முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்" என்று சொன்னது மெய்யே; அதைக் குறித்த எனது கருத்தை அது சம்பந்தமான திரியிலேயே தெரிவித்திருக்கிறேன்.
http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=3&topicID=40713603

ஆனால்  "மாதா வணக்கத்தை கண்டு கொள்ளத் தேவையில்லை " என்று நான் எழுதினேனா என்பதை தயவுசெய்து மீண்டும் கவனியுங்கள்.


இன்றைக்கு உலகத்தில் கிறித்தவர்கள் என்றாலே அது கத்தோலிக்கர்களே என்பதை அறிவீர்களா? இஸ்லாத்துக்கு இணையாக உலக முழுவதும் பரவியிருக்கும் ஒரு மாபெரும் மார்க்கம், கத்தோலிக்க மார்க்கம்; அதன் பிரச்சினை மாதா வணக்கம் மட்டுமல்ல என்பதையும் அறிவீர்கள்;அதன் பல்வேறு முரண்பாடுகளில் மாதா வணக்கமும் ஒன்று அவ்வளவே.

பரிசுத்த வேதாகமத்தைக் குறித்த அறிவு அடைபட்டிருந்த இருண்ட காலத்தினைக் கிழித்துக்கொண்டு கீழ்வானம் சிவந்து ஆதவனாக பரிசுத்த வேதாகமம் ஆராயப்படத் துவங்கியதிலிருந்து கிறித்துவின் சபையானது மீட்கப்பட்டு மீண்டும் தன் ஆதிநிலையை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறது.

இந்த நிலையில் இருண்ட காலத்தில் சிறைபட்டிருந்த நம்முடைய சகோதரர்களை வெளிப்படச் செய்வது நம்முடைய கடமை அல்லவா? அதற்குரிய அணுகுமுறையினையே சாத்வீக அணுகுமுறை என்று நான் குறிப்பிட்டேன்;"அறிவு விரிவு செய்" என்றானே கவிஞன்;ஆம், வேதத்தைக் குறித்த அறிவை அடைந்தாலே மாதா வணக்கம் இயல்பாக மறைந்து போகும் என்கிறேன். (இதே அணுகுமுறையினை காலில் விழுவதில் எப்படி கடைபிடிப்பது என்பதை முன்னணி திரை, ஸாரி இறை நட்சத்திரங்கள் வகுத்துத் தரவேண்டும்)

காலஞ்சென்ற பழம்பெரும் திரைப்பட நடிகர் இராஜ்குமார் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கடத்தப்பட்டார்;அவரை உயிருடன் மீட்பது உடனடி பிரச்சினை;கடத்தல்காரனைப் பிறகு தண்டிக்கலாம்;எனவே அவனுடன் சமாதானம் பேச ஒரு நடுநிலையாளரை பேச்சுவார்த்தைக்கு அனுப்பி எப்படியோ நடிகரை மீட்டுக்கொண்டுவந்தார்கள்;அதன்பிறகு அதே வழிமுறைகளைப் பின்பற்றி குற்றவாளியையும் வெளியே வரச் செய்து அழித்தார்கள்.

அதுபோலவே கிறித்துவின் சபையானது ஒரு தவறான அமைப்பின் கீழ் சிறைப்பட்டிருக்கிறது;அதனை எந்த சேதாரமும் இல்லாமல் மீட்பதே நமது இலக்கானால் அதனை தூஷணத்தின் மூலம் சாதிக்கமுடியாது;ஆனால் இங்கே மீட்கப்பட்டு வந்தோர் மத்தியில் கலகம் விளைவிக்கும் சத்துருவை முழுப் பகையாக நான் பகைக்கிறேன்;இது வேறு, அது வேறு..!

கிறித்துவின் சரீரமாகிய சபையை மீட்பது குறித்து மற்றொரு உதாரணம்;எகிப்தில் அடிமைப்பட்டிருந்த இஸ்ரவேலர்;அவர்கள் மத்தியில் தோன்றிய தலைவனாகிய மோசே நினைத்திருந்தால் தான் பார்வோனின் குமாரத்தியின் மகனாகவே தொடர்ந்து இராஜ்யத்தைக் கைப்பற்றி தனது ஜனத்துக்கு சுதந்தரம் வழங்கியிருக்கலாம்;ஆனால் தேவனுடைய திட்டம் என்னவோ அதற்கு மோசே தன்னைத் தாழ்த்தினார்; அதுபோலவே உள்ளிருந்து கலகம் செய்வதல்ல,வெளியேறி அரசமைப்பதே தெய்வீக திட்டமாகும்.

முட்புதரில் சிக்கிக்கொண்ட ஆட்டை விடுவிப்பதற்கும் ஆட்டின் காலில் குத்திய முள்ளை பிடுங்கியெறிவதற்கும் வித்தியாசமுண்டல்லவா?

//I think , AntiChrist will unite all churches under Pope -thus creating a one world church and Pope will align with Islam thus creating a one world religion.//

இதுபோன்ற யூகங்களுக்கு முடிவே இல்லை,சகோதரி; வெறும் 22 அதிகாரம் மட்டுமே கொண்ட வெளிப்படுத்தின விசேஷத்துக்கு எத்தனையெத்தனை உலகங் கொள்ளா வியாக்கியான புத்தகங்கள்; இதான் அது என்று ஒருவர் வந்து சொல்லும் காலம் வரைக்கும் அல்லது அவை சம்பவிக்கும் வரைக்கும் அதான் இது பலரும் சொல்லி வேகமாக கல்லா கட்டுவார்கள்; இதனை யாரும் தடுக்க இயலாது; தற்கால தரிசனப் புருஷர்களுக்கு மாத்திரமல்ல‌,ஹாலிவுட் முதலைகளுக்குங் கூட நம்முடைய வேதமே வரும் யுகத்துக்கான கதைக் களமாக இருப்பது நாம் அறிந்ததே.

எனவே என்னைப் பொறுத்தவரை நாள்தோறும் ஒவ்வொரு புதுப் புது கணிப்புகளும் போதனைகளும் புற்றீசல் போலப் பெருகி வருவதால் நான் எதையும் சார்ந்திராமல் கிறித்துவையும் அவர் வெளிப்படையாக -நேரடியாக சொல்லிச் சென்றவற்றின் மீது மாத்திரமே எனது நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.

அருமை நண்பர் eloi4u அவர்களது விலைமதிப்பற்ற கருத்துக்களுக்காக நன்றி கூறுகிறேன்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

Ok then. No Problem!  smile.gif

__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

golda wrote:

Atleast we true christinans must know the dangers of Mary Worship and having Pope as the powerful head of the RC Church. Imo, Mary(or "kali" or " any female goddess") worshipping Catholics cannot be called Christians.

I think , AntiChrist will unite all churches under Pope -thus creating a one world church and Pope will align with Islam thus creating a one world religion.



நானும் இதைத்தான் நினைக்கிறேன்

 



__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

உண்மையை சொல்வதோ, மறைந்திருக்கும் ஆபத்தை சொல்வதோ இகழ்வதாக ஆகாது.

Atleast we true christinans must know the dangers of Mary Worship and having Pope as the powerful head of the RC Church. Imo, Mary(or "kali" or " any female goddess") worshipping Catholics cannot be called Christians.

I think , AntiChrist will unite all churches under Pope -thus creating a one world church and Pope will align with Islam thus creating a one world religion.



__________________


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

கடவுளுக்கு எதிரான விசயத்தில் சாத்வீகம் என்ற பேச்சுக்கே இடமில்லை, காலில் விழச்செய்தாலும் சரி மரியாள் வணக்கத்தை ஆதரித்தாலும் அது ஏற்றுக்கொள்ளக்கூடாததே,

ஆனால் அதே நேரத்தில் கி.பி300க்கு பிறகு காண்ஸ்டாண்டைன் மன்னனால் தோற்றுவிக்கப்பட்ட மதமான கத்தோலிக்க மதம் தான் இன்றைக்கு நாம் கிறிஸ்தவர்களாக இருப்பதற்கான அடிப்படை என்பது என் கருத்து,

இன்றைய சுயாதீன சபைகள் பாரம்பரிய சபைகளை செத்த சபை என்று ஏளணம் செய்வது போல நாம் கத்தோலிக்கர்களை ஏளணம் செய்யக்கூடாது மாறாக எங்கே தவறுகிறார்கள் என்று சுட்டிக்காட்டி அவர்களை நல்வழிப்படுத்தவேண்டும்,

இன்றைக்கு பெரும்பாலான கத்தோலிக்கர்கள் இந்துக்களாக வலம்வருகின்றனர், ஜாதகத்தில் ஆரம்பித்து சகுணம் பார்ப்பது வரை எல்லாவற்றையும் செய்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம் வேதம் வாசிக்காமை தான் அதை செய்ய வைத்து இயேசுவை காட்டினாலே அவர்களாக புரிந்துகொண்டு ஆண்டவரை ஏற்றுக் கொள்வார்கள்.

பழைய ஏற்பாடு இல்லாமல் புதிய உடன்படிக்கை இல்லாதிருப்பது எப்படியோ அப்படியே கத்தோலிக்கம் இல்லாமல் இன்றைய சபைகள் இல்லை, 15 நூற்றாண்டுகளில் போர்ச்சுகீசியர்கள் இந்தியாவின் மேற்கு கரைக்கு வந்திறங்கியபோது மாரியம்மன் கோவில் பூசாரிகளை மேரியம்மா கோவில் பாதிரிகள் என்றே நினைத்தார்கள் என்று குறிப்புகள் சொல்லுகின்றன. இதற்காக கத்தோலிக்கம் சரி என்று சொல்லவில்லை, அதை ஆதரிக்கவும் இல்லை, ஆனால் அவர்களை இகழ்வது ஒரு தொடர் ஓட்டத்தில் ஒவ்வொரு பிரிவாக ஓடி வருபவர் கொண்டுவந்து தரும் குச்சியை வாங்கி ஓடவேண்டிய ஒருவர் தன்னிடம் வந்து குச்சியைக் கொடுத்தவரை இகழ்வதும் எதிர்ப்பதும் எவ்வளவு நகைப்புக்குரியதாக இருக்குமோ அதே போலதான் கத்தோலிக்கர்களை புரட்சியாள கிறிஸ்தவர்கள் கிண்டல் செய்வதும், பாரம்பரிய சபைகளை சுயாதீன சபைகள் செத்த சபை என்று இகழ்வதும் இருக்கிறது,

என்னைப் பொறுத்தவரை மூன்று விசயங்கள் முக்கியமானது அது இயேசு, இயேசு இயேசு மட்டும்தான், மற்றபடி கத்தோலிக்கமோ, பாரம்பரியச் சபையோ, சுயாதீன சபையோ, இரண்டாம் பட்சம் தான்


__________________
க‌ர்த்த‌ர் என் மேய்ப்ப‌ராய் இருக்கிறார்


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

இந்த அணுகுமுறையானது எத்தனை சாத்வீகமாக உள்ளது அல்லவா?


உண்மைதான் ஐயா!

காலில் விழுவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று ஆவேசமாக பேச வேண்டும்.

மாதா வண்க்கத்தை கண்டு கொள்ளத் தேவையில்லை. அது தானாய் மறைந்து விடும். அப்படித்தானே!

சாத்வீக அணுகுமுறை பற்றி நீங்கள் பேசுவது தான் ஆச்சர்யமாக இருக்கிறது!


__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

// மரியாள் வணக்கத்தின் பின்னிருப்பது அஸ்தரோத்தின் ஆவி என்று சொன்னால் அது மிகையாகாது என்று நினைக்கிறேன் //

தற்காலத்தில் மாதா வணக்கத்தைக் குறித்த விழிப்புணர்வு கத்தோலிக்க மார்க்கத்தில் பெருகி வருகிறது; ஆனாலும் ஒருவருடைய நம்பிக்கையை அவதூறு செய்யும்போது எந்த ஒரு மனிதனுக்குள்ளிருந்தும் எழும் வைராக்கியமானது இன்னும் மாதா வணக்கத்திலிருந்து வேறுபலரும் வெளியேறாமல் அல்லது மாதா சம்பந்தமான துதி தோத்திரங்களை விலக்காமல் தொடரக் காரணமாக இருக்கிறது.

எதையோ கண்டுபிடித்துவிட்டதாக அலறிக் கொண்டிருக்கும் பரிசுத்தவான்கள் சிறிது அமைதி காத்தால் இன்னும் பலரும் கிருபாசனத்தண்டையில் வரும் வாய்ப்பு உண்டாகும்.

இந்த சூழலில் கத்தோலிக்கத்திலிருந்து வெளியேறி ஆவிக்குரிய (?!) வட்டாரத்தில் புகழ்பெற்ற தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் வழிமுறையே சிறப்பானது;அவர் மிக மென்மையாக ஒரு முறை ஒரு குறிப்பிட்ட ஆராதனையில் சொன்னது, "அன்னை மரியாளுக்கு மரியாதை செய்வோம், ஆண்டவரை ஆராதிப்போம்" என்றார்; இந்த அணுகுமுறையானது எத்தனை சாத்வீகமாக உள்ளது அல்லவா?

கன்னி மரியாள் என்று தவறாகப் புனையப்பட்ட மாதாவை அன்னை என்று குறிப்பிட்டதால் சொல்லவேண்டிய செய்தியும் சொல்லப்பட்டது,அவரை ஆராதிப்பது தவறு என்பதும் மறைமுகமாகப் புண்படாமல் அறிவிக்கப்பட்டுவிட்டது.

அதை விட்டு விட்டு மாதாவையும் அஸ்தரோத்தையும் ஒப்பிட்டு எழுதுவதால் சாமான்யனுக்கு குழப்பமே மிஞ்சும்;படிப்பறிவில்லாத ஒரு கிராமத்தானுக்கு மாதா என்பவர் இயேசு ஆண்டவரை ஈன்றெடுத்தவர் அவ்வளவே;மற்ற இறையியல் விளக்கங்களும் முடிவில்லாத வம்ச வரலாற்று விவரங்களும் அவன் மண்டையில் ஏறவே ஏறாது.

அவனுக்கு புத்தி புகட்ட இயேசுவைக் குறித்த செய்திகளால் அவன் சிந்தையை நிரப்பவேண்டும்;அவரைப் புகழ்ந்து பாடும் துதிபாடல்களால் அவன் மனதை ஆட்கொள்ளவேண்டும்;மற்றவற்றை கிறித்துவின் ஆவியானவர் பார்த்துக்கொள்ளுவார்; மாதா இருந்த இடத்தில் இயல்பாகவே ஆண்டவர் வந்து அமர்ந்துகொள்ளுவார்.

"நிறைவானது வரும்போது குறைவானது ஒழிந்துபோம்." (1.கொரிந்தியர்.13:10) என்று பவுல் குறிப்பிட்டது இன்னதென்று நாம் அறிந்தோமா?

மாதா வணக்கத்தைக் குறை சொல்வோர் வசனத்தை மட்டுமே சார்ந்திருக்கிறார்களா என்ன? அவர்களும் கூட‌ தரிசனங்களையும் சொப்பனங்களையும் வெளிப்பாடுகளையும் தூதர்களையும் பரலோகத்தையும் நரகத்தையும் குறித்து ரீல் ஓட்டுவதில்லையா..?

எந்தவொரு ஜீவனும் அல்லது வியாபார நிறுவனமும் இயக்கமும் தன்னை விசேஷித்துக் காட்டவும் தன் தனித்துவத்தைப் பிரதானப்படுத்திக் காட்டவும் போராடுகிறது;அது தான் இது..!

//ஆரம்பத்தில் உங்களை உற்சாகப்படுத்தியதே நான்தான்//

கொல்வின்,எனது தியானங்கள் எந்த அளவுக்கு வாசிக்கப்பட்டதாகக் கருதுகிறீர்கள்;வழக்கமான சில உபச்சார வார்த்தைகளானாலும் அவை குறிப்பிட்ட திரியானது கவனத்துக்குரியதாக மாறுவதற்கு உதவும் என்பது தாங்கள் அறிந்ததே;அப்படியே சிறப்பானதாகத் தோன்றும் கட்டுரைகளை எனது அனுமதியுடன் தமிழ்க் கிறித்தவ தளத்தில் வெளியிடலாமே? இவையெல்லாம் என்னைத் தனிமைப்படுத்துகிறது;ஆனாலும் "நான் தனித்திரேன்"(யோவான்.16:32), ஆண்டவர் என்னை பெலப்படுத்துகிறார்.(பிலிப்பியர்.4:13)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

மரியாள் வணக்கத்தின் பின்னிருப்பது அஸ்தரோத்தின் ஆவி என்று சொன்னால் அது மிகையாகாது என்று நினைக்கிறேன்



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

என்னைத் தூண்டிய கொல்வின் உட்பட யாரும் அதில் எந்த கருத்தையும் (Or) சர்ச்சைக்குரிய கேள்வியையும் எழுப்பி என்னை ஊக்கப்படுத்தவில்லை

இது உங்களின் தவறான கணிப்பு. ஆரம்பத்தில் உங்களை உற்சாகப்படுத்தியதே நான்தான். தியானத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை எப்படி எழுத முடியும். ஆய்வு சம்பந்தமான அல்லது சர்ச்சைக்குரிய விடயங்கள் பற்றி எழுதுங்கள். அப்போது நான் எழுதுகிறேன்.

உங்கள் விமர்சனங்கள் பலதடவைகள் சரியானவையாக இருந்த போதிலும் அவை கண்டிப்பாக சுட்டிக்காட்டப்பட வேண்டியவையாக இருந்த போதிலும் பாவிக்கப்படும் சொற்கள் நீங்கள் கூறவரும் கருத்துக்களை இல்லாது செய்துவிடுகிறது. அது உங்களுக்கு விளங்காமல் இருக்கலாம். படிக்கும் எங்களுக்கு நன்றாக விளக்குகின்றது. இதில் மட்டும்தான் நான் உங்களுக்கு முரண்படுகிறேன். கள்ளப்போதங்களை சுட்டிக்காட்ட வேண்டும் என ஆர்வம் எனக்கும் அதிகமாகவே உள்ளது.
விரைவில்  எழுத பிரயாசப்படுகிறேன். காலம் அவற்றுக்கு பதில் சொல்லும்.

இப்போதும் நான் உங்களை அதிகமாக நேசிக்கிறேன்.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 

//தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.//

நம்ம பஞ்சாயத்திலே தேவனை ஏன் சம்பந்தமில்லாமல் சம்பந்தப்படுத்துகிறீர்கள்,கொல்வின்? இனிப்பும் கசப்பும் ஒரே ஊற்றிலிருந்து தோன்றுமா என்ன‌? நீங்கள் எவ்வளவு தான் முயற்சித்தாலும் என்னை கோபப்படுத்தவே முடியாது;ஏனெனில் நம்முடைய ஆண்டவருங் கூட பரிசேயரிடமும் வேதபாரகரிடமும் மட்டுமே கடுமையாக நடந்துகொண்டாரே தவிர எளிமையானவர்களிடம் அல்ல.

நீங்கள் இதுவரை உங்கள் படைப்பாக எதையும் முன்னிறுத்தாமலும் சர்ச்சைக்குரியதான காரியங்களில் புதுப்புது வெளிப்பாடுகளை அறிவிக்காமலும் இருக்கும் பட்சத்தில் நான் ஏன் உங்களை தாக்கப்போகிறேன்? தனிப்பட்ட கோபதாபங்களுக்கு அடிமைப்பட்டவன் நானில்லை;அதை எப்படியே சிலுவையின் மீது தூக்கியெறிந்து விடுவேன்.

நீங்கள் எடுத்திருக்கும் புதிய அவதாரத்தின் ஆபத்து தங்களுக்குத் தெரியவரும்வரை இப்படியே நீங்கள் தொடர்வது தான் எனக்கும் விருப்பம்..! இதுவரை யார் யாருக்காகவோ நீங்கள் வரிந்து கட்டிக்கொண்டு வந்தபோதெல்லாம் நீண்ட விளக்கங்களையே கொடுத்து வந்தேனே தவிர உங்களைப் புண்படுத்தும் வண்ணமாக எதையும் எழுதியதில்லை; காரணம்,அப்பாவியான உங்கள் நட்பை நான் விரும்பியதே;பொறுத்திருந்து பார்ப்போம்..!


எனது அருமை வாசகர்களுக்கு...

இங்கே ஏன் மாதா படத்தைப் போட்டேன் என்பதற்கான காரணத்தை கொல்வின் கேட்கிறார்;நான் மாதாவைத் தொழுபவனல்ல;மாதாவைத் தொழுவோருக்கு எதிரியுமல்ல;உண்மையான இறைத் தொண்டர்களையும் சமுதாயத் தொண்டர்களையும் உருவாக்கித் தந்தது கத்தோலிக்க மார்க்கமே;அவ்வளவு ஏன், நாமெல்லாம் மாய்ந்து மாய்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கும் பரிசுத்த வேதாகமத்தையுங்கூட இஸ்லாமியரின் பயங்கரவாத சூழ்ச்சிகளின் மத்தியிலும் காப்பாற்றிக் கொடுத்தது கத்தோலிக்கமே என்று நினைக்கிறேன்;அதுவும் பல்வேறு சாம்ராஜ்யங்களைப் போல தேவன் தமது ஜனத்தை ஆயத்தப்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்டு - அனுமதிக்கப்பட்ட இராஜ்யமே;அதனால் அது தேவனுடைய இராஜ்யத்திற்கான சாம்ராஜ்யம் என்பதல்ல பொருள்,ஆனால் ஆசீரிய பாபிலோனிய கிரேக்க சாம்ராஜ்யங்களின் வரிசையில் தேவனால் அனுமதிக்கப்பட்ட ஒரு சாம்ராஜ்யமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்; அதிலிருந்து தம்முடைய ஜனத்தைப் பிரித்தெடுக்க தேவன் சித்தங் கொண்டார்.


இங்கே மாதாவின் படத்தைப் பிரசுரிக்கக் காரணம், சுவையான தத்துவ மொழிகள் பகுதியில் அதிகம் எழுதமுடியாது,ஆனால் அதில் நிறைவு தெரியவேண்டும்;எனவே அழகு கூட்டவும் சிந்தையைக் கவரவுமே மாதாவின் படத்தைப் போட்டேன்;மற்றபடி அவர்கள் படத்தைப் போட்டு விட்டு அவர்களை நான் தூஷிக்கவில்லை;வேதத்தில் எனக்குப் பிடித்தமானவர்களும் நான் எனது பிரார்த்தனைப் பணியில் அதிகமாக மேற்கோள் காட்டுபவரும் அவரே.

தமிழ் இலக்கணத்தில் சிலேடை மற்றும் எதுகை மோனை ஆகியன எனக்கு மிகவும் பிடித்தமானது;அது தொடர்பாகவே மொழி இரசனையை மனதிற் கொண்டு இந்த வாக்கியங்களை அடியேன் அமைத்தேன்; இரசிக்காவிட்டாலும் வையாதிருக்கலாமே;ஆனாலும் இது ஒரு விவாதமாகுமானால் இதனை விவாதப்பகுதிக்கு மாற்றிவிடுகிறேன்.

நானும் கவனித்து வருகிறேன், அடியேன் பிரயாசப்பட்டு எழுதும் உபயோகமான காரியங்களெல்லாம் கருத்தில் கொள்ளப்படாமல் குறைவான பார்வையாளர் எண்ணிக்கையுடன் இருக்கிறது;தினமும் தியானம் எழுத வேண்டுமென்று என்னைத் தூண்டிய கொல்வின் உட்பட யாரும் அதில் எந்த கருத்தையும் (Or) சர்ச்சைக்குரிய கேள்வியையும் எழுப்பி என்னை ஊக்கப்படுத்தவில்லை.

இப்படிப்பட்ட போக்கின் காரணமாக, உங்கள் உணவு எது என்பதை நீங்களே தீர்மானிக்கும் நிலை உருவாகியிருக்கிறது; நாங்கள் பல்சுவை உணவினை ஆயத்தம் செய்து வைத்திருக்கிறோம்; உங்கள் விருப்பம் எதுவோ அதுவே இங்கே அதிகம் சமைக்கப்படுகிறது.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

சகோ. ebi நான் நன்றாக விளங்கிக் கொண்டுதான் எழுதினேன். அது அவருக்கு மட்டும் ஏன் என்று புரியும். மாதா படத்தை இங்கு போட வேண்டிய அவசியம் என்ன? ஒரு உள்ளர்த்ததுடன் தான் இதை எழுதியுள்ளார். அவரையே ஏன் இப்படி செய்தீர்கள் என கேளுங்கள்.

மற்றபடி அவரின் விசுவாசம் என்ன என்பது எனக்கு நன்கு புரியும் சகோதரரே. சில விடயங்களை எழுதும்போது பகிரங்கமாக எழுதமுடியாத விடயங்களை சுட்டிக் காட்ட கையாளப்படும் முறை அடிப்படையில்தான் எழுதினேன் அதன் அடிப்படையில்தான் இதனை நோக்க வேண்டும்.

இவரின் பதிவுகளை தொடர்ச்சியாக வாசிப்பவர்களுக்கு புரியும் இவரின் வார்ததைகளைப் பற்றி.

அன்பு சகோதரரே இவரின் மீது சில கருத்துமுரண்பாடுகள் உள்ளது என்பதை நான் எந்த சந்தர்ப்பத்திலும் மறைத்ததில்லை. தகுதிக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதை கண்டிப்பது வருபவன் நான். ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகவே அப்படி எழுதினேன்.

ஆயினும் தாங்கள் சுட்டிக் காட்டிய விடயங்களை கருத்திற் கொள்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

கொல்வின் நீங்கள் கருத்து சொல்வதற்கு முன் நன்கு வாசித்து அர்த்தம் புரிந்து விளங்கிக்கொண்டு பிறகு எழுதுங்கள்.கருத்தை சரியான நோக்கோடு சரியானபடி விமர்சியுங்கள். சில்சாமின் இந்த பதிவிற்கும் உங்கள் பதில் பதிவிற்கும் சம்பந்தமே இல்லை.

//இப்படி வேதத்திற்கு புறம்பான கத்தோலிக்க நடைமுறைகளை, சடாச்சாரங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சகோ. சில்சாம் மோட்சம் செல்ல முடியும் என நினைப்பாராயின் அது அவரது முட்டாள்தனம் என்றே நினைக்க வேண்டியுள்ளது. அன்னாருக்கு நினைவூட்ட வேண்டியது இரட்சிப்பு எம் இரட்கராகிய இயேசுவின் மூலமே.//

கிறிஸ்துவே எனக்காக மரித்தார்,மாதாவை வணங்குவது தவறு என்று அர்த்தம் தருவதாகவே அவரின் பதிவு உள்ளது. நீங்கள் மேற்கூறியது போல் அர்த்தம் தருவதாக எங்கும் இல்லை. அவர் மேல் உள்ள தனிப்பட்ட கோபத்தில் எழுதியிருப்பது நன்கு தெரிகிறது. அவர் சொல்லத ஒன்றை சொன்னதாக கூறி முட்டாள்தனம் என்று வேறு சொல்லியிருக்கிறீர்கள்.கவனம் சகோதரரே. இது உங்களுக்கு தான் நல்லதல்ல.


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

வில்லன் நடிகராக அல்லது ஸ்ட்ன்ட் மாஸ்டராக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்

!



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
Permalink  
 

மாதா பாடலை தனது தளத்தில் பிரசுரித்துமில்லாமல். மாதா படத்தினை அதுவும் 3 பேருக்கு காட்சிக் கொடுக்கும் படத்தினை (அப்படியொரு சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே தோன்றியிருந்தாலும் அது யாரென்று வேதத்தின் வெளிச்சத்தில் பார்த்தால் விளங்கும்) பிரசுரித்து தனது மாதா பக்தியை நிரூபித்த சில்சாமிற்கு எனது நன்றிகள்.

ஒருவேளை தனது பிரார்த்தனைகள் கேட்கப்படாத நிலையில் மரியாளின் மூலமாக கேட்கப்படும் என நினைக்கிறார் போலும். படத்தினை நன்கு கவனியுங்கள். விடயம் புரியும்

இப்படி வேதத்திற்கு புறம்பான கத்தோலிக்க நடைமுறைகளை, சடாச்சாரங்களை கடைப்பிடிப்பதன் மூலம் சகோ. சில்சாம் மோட்சம் செல்ல முடியும் என நினைப்பாராயின் அது அவரது முட்டாள்தனம் என்றே நினைக்க வேண்டியுள்ளது. அன்னாருக்கு நினைவூட்ட வேண்டியது இரட்சிப்பு எம் இரட்கராகிய இயேசுவின் மூலமே.



__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
Permalink  
 


images?q=tbn:ANd9GcQjMQt4-0WrpHF5P29YR-ONR7_mNZLlKyZNorxbTnoWlah1W8M-

"என்னையாளும் மரி தாயே" என்றொரு கத்தோலிக்கப் பாடல் என் காதுகளில் ஒலித்தபோது எனக்குள் மற்றொரு குரல் ஒலித்தது, "நீயும் அன்று மரித்தாயே, நீ எனக்காக மரித்தாயா..? இயேசு தானே எனக்காக மரித்துயிர்த்தார்; அவர் தானே என்னை ஆளமுடியும்..?" என்பதாக‌..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard