Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?
Permalink  
 


டக்டக்'குனு மாத்தறாங்க., நீக்கறாங்க., திருத்தறாங்க., ஒரே பேஜாராக்கீது... அதான் அப்பப்ப நாமும் ஒரு பிரதியெடுத்து வெச்சுக்குறது நல்லது'ன்னு... அங்கேயிருந்து...


// திரளான கூட்டம்  கைகோர்த்து  ஒரு காரியத்தை சொன்னால் அதுவே சரியான ஒரு கருத்து ஆகிவிடாது. அதை  ஏற்க்க  வேண்டிய அவசியம் எதுவும் இல்லை! அதுபோல் திரளான கூட்டத்தோடு சேர்ந்து கொண்டால் தப்பித்துடுவிடலாம் என்று எண்ணவும் கூடாது

நீதிமொழிகள் 16:5 மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.என்று வேதம் சொல்கிறதே. எனவே கூட்டத்தோடு சேர்ந்துவிட்டால் தப்பித்து விடவும் முடியாது. பெரியகூட்டம் இருப்பதால் அவர்கள் சொல்வது  எல்லாம் சரி என்று ஏற்றுவிடவும் முடியாது.

இறைவன் ஒரு கூட்டத்தை கூட்டி வெளிப்பாடுகளை கொடுத்ததை விட தனி மனிதனை அழைத்துதான் அனேக வெளிப்பாடுகளை தந்திருக்கிறார் எனவே "பெரும்பாலோனோர் தவறவிட்ட ஒரு வெளிப்பாடு தனக்கு கிடைத்து விட்டதென எண்ணுபவன் வஞ்சிக்கப்படவன்" என்பது போன்ற  முழுக்க முழுக்க ஆதாரமற்ற மனித கூற்றை எல்லாம் யாரும் உண்மையென்று நம்பவேண்டிய அவசியம் இல்லை.

சீனாய் மலைக்கு மோசேயை அழைத்த கர்த்தர்  அவனை தனியாகவே அழைத்த்தார்!

20. கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.

21. அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஜனங்கள் பார்க்கிறதற்கு எல்லையைக் கடந்து கர்த்தரிடத்தில் வராதபடிக்கும், அவர்களில் அநேகர் அழிந்து போகாதபடிக்கும், நீ இறங்கிப்போய், அவர்களை உறுதியாக எச்சரி. என்றே கட்டளையிட்டார்


அதுபோல் சிறைபட்டுப்போன எத்தனையோபேர் இருந்தும் அவர்கள் நடுவில் இருந்த  எசேக்கியேலுக்கு மட்டுமே இறைவன் வெளிப்பாடுகளை கொடுத்தார்.

அவரின் செயல்பாடுஎல்லாமே அப்படித்தான் இருக்கும் என்றே நான் கருதுகிறேன். "இறைவன் அன்று அப்படி செய்தார் இன்று வேறுமாதிரி செய்வார்" போன்ற கருத்துக்கள் அவரை சரியாக அறியாதவர்கள் அவருக்கே பாடம் புகட்டும்படிக்கு பிதற்றுவது .

எனவே இதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்து கொள்ளவே வேண்டாம்!

{ஆமாண்ணே, நீங்களும் சீக்கிரமே "சுந்தர நபிப் பெருமான் " என்ற பெயருடன் சீரும் சிறப்பும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்..!

சின்னப்பசங்க... விஷயம் தெரியாம பொறாமையில ஏதோ பெனாத்துறாங்க‌.., நீங்க ஒண்ணும் கண்டுக்கிடாதீங்க‌.., ஆமா...}



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 


mycoimbatore Wrote @TCS on 11-01-2011 22:18:10:
கிறிஸ்துவுக்குள் அன்பான போதகர் சில்சாம் அவர்களுக்கு சுந்தர் அவர்களுக்கு உங்களின் பதில் அருமை.நன்றி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

சுந்தர் அவர்களே இப்பொழுது உங்களுக்கு ஒரு சில வெளிப்பாடுகள் வருமானால் அது வேதவசனத்துக்கு வெளியே இருந்தால் அது தேவனுடைய வெளிப்பாடு அல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள்.


மதிப்பிற்குரிய சகோதரர் மைகோவை அவர்களுக்கு வாழ்த்துக்கள்; சிரமம் பாராது எனது எழுத்துக்களை வாசித்து கருத்து சொன்னமைக்கு மிக்க நன்றி;

சுந்தர் அவர்களுடைய வெளிப்பாடு வரம் குறித்து...
மென்மையான குணங் கொண்டோர் ஏதாவது கனா கண்டு கொண்டே இருப்பார்கள்; அதனை அவர்கள் பகிர்ந்துகொள்ளும் முதலாவது நபர் பெரும்பாலும் அவருடைய மனைவி அல்லது கணவராகவே இருப்பார்; அவர்கள் அந்த கனாவுக்கு சரியான விளக்கத்தைச் சொல்லாவிட்டாலோ அல்லது புறக்கணித்தாலோ கனா கண்டவருக்கு சொல்லொண்ணா துயரம் ஏற்படும்; அந்த மன அழுத்தத்தின் காரணமாகவே அந்த கனா அடுத்த கட்டத்தை அடையும்; அது இன்னும் தீவிரமாக இருக்கும்;

உதாரணமாக கிராமத்து பூசாரி ஒருவர், ஒரே நாளில் பெறும் வெளிப்பாடு காரணமாக தன்னை "ஆத்தா"வின் மறுபிறவியாக நினைத்துக்கொண்டு சேலை கட்டிக் கொண்டு குறிசொல்லுகிறார்; அதற்குப் பிறகு மற்ற மனிதருடன் பேசுவதையும் குறைத்துக் கொண்டு தனிமையிலும், தனக்குத் தானே ஏதேதோ பேசிக் கொண்டும் வாழத் துவங்குகிறார்; இப்படிப்பட்ட குணாதிசயங் கொண்டோர் இயேசுவிடம் வந்தால் எப்படியிருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்; அவர்கள் விகர்ப்பமானதும் கலப்படமானதுமானவற்றையே தரிசித்து அதனை நியாயப்படுத்த வேத வசனங்களையும் மேற்கோள் காட்டுவார்கள்; அதுபோலவே நீங்கள் குறிப்பிட்டது போல சுந்தர் தனக்குக் கிடைக்கும் வெளிப்பாடுகளுக்கும் வேத வசனத்தைக் குறிப்பிடுகிறார்; ஆனால் அந்த வேத வசனங்கள் குறிப்பிட்ட சம்பவங்களின் நிறைவேறுதலுடனே முடிந்துபோனதை உணராமல் அன்றைக்கு அந்த சொப்பனம் நிறைவேறியதே, அன்றைக்குக் கூட எல்லாரும் எதிர்த்தார்களே, அதுபோலவே எனக்கு நேருகிறது என்று தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டு தங்கள் தவறான நிலையைத் தொடருகிறார்கள்; இன்னும் சற்று காரமாக இவர்கள் நம்மீது சீற்றத்துடன்,' நீ காணாததைக் குறித்து எதுவும் கருத்து கூறாதே,' என்பதாகும்;

எனவே நாம் காணும் எந்த கனவுக்கும் தரிசனத்துக்கும் அல்லது வெளிப்பாட்டுக்கும் ஏற்ற ஒரு வசனத்தைக் குறிப்பிடுவது பெரிய காரியமல்ல; அது ஏற்கனவே யாரோ ஒருவர்- வேறு ஏதோ ஒன்றைப் பெற்ற பாதிப்பினால் கிடைத்து அதே போல எனக்கும் கிடைக்கக்கூடாதா என்று வாதம் செய்தால் அதனைத் தடுக்க முடியாது; ஆனால் இதையெல்லாம் ஒரு போதனையாக நிறுவாமல் தனிப்பட்ட அனுபவங்களாக மாத்திரம் அணுகினால் ஒருவேளை குழப்பம் ஓரளவு தீரலாம்; மேலும் அந்த சொப்பனங்களையும் தரிசனங்களையும் வெளிப்பாடுகளையும் குறித்து இதுபோன்ற தளங்களில் வெளியிட்டு மற்ற மூத்த உறுப்பினர்களின் கருத்து என்ன என்பதைக் கேட்டால் நாம் நிச்சயமாக உதவிசெய்யலாம்; அல்லது அவருக்கு நெருக்கமான வட்டங்களிலுள்ள நல்ல ஆவிக்குரிய நண்பர்களின் உதவியையும் நாடலாம்;

பொதுவாகவே இனி எந்த தீர்க்கதரிசனத்துக்கும் புதிய வெளிப்பாட்டுக்கும் தேவையில்லை என்ற அளவில் அனைத்தும் வெளியாக்கப்பட்டுவிட்டது; ஆரோக்கிய உபதேசத்துக்கும் இறையியல் கொள்கைக்கும் ஊறுவிளைவிக்கும் வண்ணமாக யார் எழுதி பேசினாலும் தெரிந்துகொள்ள‌ப்பட்டவர்கள் அதினால் வஞ்சிக்கப்படாதிருக்கும் வண்ணம் எச்சரிக்க வேண்டியது நம் மேல் விழுந்த கடமையாகும்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?
Permalink  
 


" திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா? " எனும் தலைப்பில் "சுந்தர பிரஹஸ்பதி " ஒரு கருத்தை வெளியிட்டிருக்கிறார்; அது பின்வருமாறு:

வஞ்சிக்கப்பட்டதற்கு அடையாளமாக சில காரியங்களை தமிழ் கிறிஸ்த்தவ தளத்தில் பதிவிட்டுள்ளனர். அதில் முதல் அடையாளமாக கீழண்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன!

/// மற்ற யாருக்கும் கிடைக்காத அல்லது பெரும்பாலோனோர் தவறவிட்ட ஒரு வெளிப்பாடு தனக்கு கிடைத்து விட்டதென அவன் எண்ணுகிறான்.///

வேத நடபடிகளின் அடிப்படையில் ஆராய்ந்து பார்த்தால் நோவாவில் இருந்து பவுல்வரை எல்லோருமே திரள் கூட்டத்தார் தவறவிட்ட வெளிப்பாட்டை பெற்றவர்கள்தான் என்று இருக்கும்போது, எதன் அடிப்படையில் இப்படியொரு வரிகளை எழுதுகிறார்கள் என்பது தெரியவில்லை. அதாவது அநேகர் வைத்திருக்கும் நம்பிக்கை பாரம்பரியம் இவற்றில் இருந்து யாரும் வெளியேறி உண்மையை அறிந்துகொள்ளகூடாது என்ற எண்ணத்தினாலேயே இக்கருத்து உருவானது என்றே நான் கருதுகிறேன்!

தேவனுக்கு தேவை திரள் கூட்டமா? அல்லது தன்னை உறுதியாக பின்பற்றும் ஒருசிலரா? என்பதை வேத புத்தகம் முழுவதும் ஆராய்ந்து பார்த்தாலும் கிடைக்கும் பதில் தேவனை உறுதியாக பின்பற்றும் ஒருசிலரே  என்ற பதில்தான் கிடைக்கும்.

ஒரு உதாரணத்துக்கு கானான் தேசத்தை சுற்றிபார்க்க போன இஸ்ரவேல் கோத்திரத்தில் 12 பேரில்  திரள் கூட்டத்தாராகிய 10௦ பேர் துர்செய்தியையே பரப்பினர் சொற்ப மனிதர்களாகிய  2 பேர் மாத்திரமே விசுவாசத்தில் நல்ல செய்திகளை கூறினார்கள் அவர்களே அந்த நல்ல தேசத்தில் பிரவேசிக்கவும் முடிந்து.

அதுபோல் வேத புத்தகம் முழுவதும் அனேக சம்பவங்களில் திரள் கூட்டத்தை தேவன் தள்ளிவிட்டு ஒருவரையோ அல்லது சொற்ப மனிதரையோ தேர்ந்தெடுத்த சம்பவங்கள் அநேகம் உண்டு. அதை மேலேயுள்ள பதிவில் படித்து அறிந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்.

எனவே அன்பானவர்களே!  தவறான வெளிப்பாட்டை பெற்று வஞ்சிக்கப்பட்டவர் ஒரு சிலர் இருக்கலாம். அனால் "அநேகர் தவறவிட்ட வெளிப்பாட்டை பெற்று தேவனின் சித்தத்தை  சரியாக நிறைவேற்றியவர்களே அநேகர்" என்பதை வேத புத்தகத்தின் மூலமே நாம் தெரிந்துகொள்ளலாம்!

//  "அநேகர் தவறவிட்ட வெளிப்பாட்டை பெற்று தேவனின் சித்தத்தை  சரியாக நிறைவேற்றியவர்களே அநேகர்" // அது என்ன இரகசியமோ எல்லா கள்ள உபதேசியும் ஒரே மாதிரியான நியாயத்தைத் தனது விகர்ப்பமான கொள்கைகளுக்கு விளக்கமாகக் கொடுக்கிறான்; இதோ நம்ம ஆளும் அதே ரூட்டிலே பயணிக்கிறார் பாருங்கள்; அப்படியே இவருக்குக் கொடுக்கப்பட்டது விசேஷித்த வெளிப்பாடானால் இவர் என்ன செய்யவேண்டும், நேரடியாக முதலமைச்சருக்கோ கவர்னருக்கோ தந்தியடித்து அதனைத் தெரிவித்தால் இவருக்கு உரிய மரியாதை செய்யப்படுமே, அல்லது குறைந்த பட்சம் இங்கே உட்கார்ந்து கலகம் செய்துகொண்டிராமல் தான் கலந்துகொள்ளும் சென்னை நகரத்தின் மிகப் பெரிய சபையின் போதகருக்கு அதை தெரிவிக்கலாமே? ஓஹோ ஏற்றுக்கொள்ளமாட்டார்களல்லவா, அப்படியானால் வேதப் புருஷரையெல்லாம் விட இவர் பெற்றிருப்பது அத்தனை விசேஷமான வெளிப்பாடு போலும்;

வேதம் தெளிவாகச் சொல்லிவிட்டது, "சகோதரரே, எழுதப்பட்டதற்கு மிஞ்சி எண்ணவேண்டாமென்று நீங்கள் எங்களாலே கற்றுக்கொள்ளவும், ஒருவனும் ஒருவனிமித்தம் மற்றொருவனுக்கு விரோதமாய் இறுமாப்படையாதிருக்கவும், நான் உங்கள்நிமித்தம் என்னையும் அப்பொல்லோவையும் திருஷ்டாந்தமாக வைத்து, இவைகளை எழுதினேன்.அன்றியும் உன்னை விசேஷித்தவனாகும்படி செய்கிறவர் யார்? உனக்கு உண்டாயிருக்கிறவைகளில் நீ பெற்றுக்கொள்ளாதது யாது? நீ பெற்றுக்கொண்டவனானால் பெற்றுக்கொள்ளாதவன்போல் ஏன் மேன்மைபாராட்டுகிறாய்? " (1.கொரிந்தியர்.4:6,7 )

"அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்." (ரோமர்.12:3)

- இந்த மூலாதாரமான வசனங்களையெல்லாம் விட்டுவிட்டு பழைய அம்புலிமாமா கதைகளையெல்லாம் படித்த பாதிப்பில் ஏதேதோ கனவுகளைக் கண்டு இதையெல்லாம் தேவன் எனக்கு வெளிப்படுத்தினார் என்று எவனாவது கூறித் திரிந்தால் அவன் பின்னாலும் ஒரு கூட்டம் போகும்; ஆனாலும் அப்படிப்பட்ட மனுஷனால் கர்த்தருடைய சபைக்கு ஒரு பிரயோஜனமும் இராது; இப்படிப்பட்டவர்களை விட அருமையாக யோசித்து கதை எழுதி கோடாடி கோடியாக சம்பாதித்தவர்கள் ஹாலிவுட்டில் உண்டு; அவர்களெல்லாம் விசேஷித்த தேவ வெளிப்பாட்டைப் பெற்றவர்களா?

ஏஞ்சல் டிவிக்காரர் இப்படியே விசேஷித்த தேவ வெளிப்பாடு என்று வரைமுறையில்லாமல் ரீல் சுற்றி கோடிகளை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்; ஏழை எளிய மக்கள், இவருடைய பரதேசி வேஷத்தை நம்பி வயித்த வாயைக் கட்டி சம்பாதித்த பணங்களை அவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அந்த பணத்தைக் கொண்டு அவர்கள் செய்யப்போவதென்ன தெரியுமா? உலகிலேயே மிகச் சிறந்த தரமான டிஜிட்டல் கேமிராவை வாங்கி அவர்கள் நடத்தும் அபிஷேகக் கூட்டத்தில் பயன்படுத்தப் போகிறார்களாம்; காரணம், இவர்களெல்லாம் ஆடிப்பாடி குதித்துக்கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து தேவதூதர்கள் வந்து செல்லுகிறார்களாம்; அவர்களைப் படம் பிடிக்கவே, எந்தவொரு காட்சியையும் துல்லியமாகப் படமாக்கும் இந்த நவீன தானியங்கி காமிராவை வாங்கப்போகிறார்களாம்; என்ன ஒரு துரதிருஷ்டமென்றால் அந்த நவீன காமிரா தற்போது ரெண்டு கோடி ரூபாயாக விலையுயர்ந்துவிட்டது; ஆனாலும் அதை எப்படியாவது விசுவாசத்தில் வாங்கப்போகிறார்கள்..!


இவர்கள் தன்னுடைய துஷ்டத்தனமான சொந்த வெளிப்பாடுகளை நியாயப்படுத்த கொஞ்சமும் பயமில்லாமல் துணிகரமாக வேதப் புருஷர்களைத் துணைக்கு அழைப்பது அக்கிரமானதாகும்; //  "அநேகர் தவறவிட்ட வெளிப்பாட்டை பெற்று தேவனின் சித்தத்தை  சரியாக நிறைவேற்றியவர்களே அநேகர்" // - இங்கே சுந்தரப் புருஷனானவர் முன்வைத்திருக்கும் கருத்தானது 'நச்' சென்றும் 'பளிச்' சென்றும் கவர்ச்சியாகவும் தத்துவம் போல ஜொலிக்கிறது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இருக்கமுடியாது; ஆனாலும் இவருடைய துஷ்டத் தனம் எங்கே வெளிப்படுகிறதென்றால் வேதப் புருஷர்களுக்கே கிடைக்காத வெளிப்பாடுகள் தனக்கு கிடைப்பதாகச் சொல்லும்போதே அது வெளிப்படுகிறது; காரணம், இது கடைசி காலமாம்; அநேகர் தவறவிட்ட வெளிப்பாடு என்பதில் அநேகரில் தற்கால பரிசுத்தவான்கள் மட்டுமல்ல, பவுல் போன்ற பரிசுத்தவான்களும் அடங்குவர்; ஏனெனில் அந்த வெளிப்பாட்டை அவர்கள் பெற்றிருந்தால் அது சத்திய வேதத்தில் இடம் பெற்றிருக்கவேண்டுமே; அப்படியானால் பவுலைப் போன்ற பரிசுத்தவான்களுக்கே கிடைக்காத வெளிப்பாடுகளைப் பெற்றுள்ள இவர்கள் எத்தனை பெரிய மனிதர்களாக இருக்கவேண்டும்? ஆனாலும் பாவம், மிகவும் தாழ்மையாகவும் (?) பொறுமையாகவும்
(?) இருந்து தேவ பயத்துடன் (?) வாழ்ந்து யாருக்கும் கட்டுப்படாமல் (?) தங்களைத் தாங்களே மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்..!?

கேவலம் தன் பெயரில் வெளியான ஒரு பின்னூட்டத்தைக் குறித்த வெளிப்பாட்டையே பெற இயலாத காகிதப் புலிகள் - கூரை ஏறி தன் வீட்டு கோழியைப் பிடிக்க இயலாத புல் தடுக்கும் பயில்வான்கள் வானத்துக்கு ஏறி தேவ இரகசியத்தையெல்லாம் பெற்றுவிட்டார்களாம்; என்னுடைய வலைப்பூவுக்கு சுந்தர் என்ற பெயரில் ஒருவர் மோசடியாக பின்னூட்டம் ஒன்றை பதித்திருந்தார்; அது குறித்து நானே அதிர்ச்சியடைந்து அதன்  IP எண் முதலாகக் கண்டுபிடித்து பகிரங்கமாக இங்கே தளத்தில் வெளியிட்டபிறகும் என் மீது அவதூறாக ஒரு கருத்தை நீர் சொல்லும்போதே உம்முடைய ஆவி எப்படிப்பட்டது என்று விளங்கிவிட்டது; சாதாரணமான மனுஷனுக்கு தேவனால் கொடுக்கப்பட்ட பகுத்தறிவு எனப்படும் நுண்ணறிவு கூட இல்லாமல் சொந்த சகோதரன் என்றும் பாராமல் ஒரு கல்லைத் தூக்கியெறிந்துவிட்டு அதற்கு ஒரு வேத வசனத்தையும் குறிப்பிட்டுவிட்டால் நான் அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சொல்லி  கீழ்த்தரமான விதத்தில் இங்கே பணியாற்றுவதாக ஆகிவிடுமா? உம்மைப் போன்றவர்கள் வசனத்தை எடுத்தும் ஆளும் துணிகரத்தைப் பார்த்தால் எனக்கு வசனங்களை மேற்கோள் காட்டவே அச்சமாக இருக்கிறது., "அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாயாக; கொடுமையுள்ள சாட்சிக்காரனாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக. " (யாத்திராகமம்.23:1) முதற்பகுதியை மட்டுமே நீர் எனக்கு எதிராகப் பிரயோகித்தீர், ஆனால் அதன் அடுத்தப் பகுதியோ உம்மைப் போன்ற கள்ளசாட்சிகளுடன் கலவாதிருக்கச் சொல்கிறதே நான் என்ன செய்ய? என்மீது நீர் வைத்த அபாண்டமான குற்றச்சாட்டு எத்தனை ஆபத்தானது தெரியுமா? தற்போது உம்மீதே எனக்கு சந்தேகம் வருகிறது; நீங்களெல்லாம் புதுப்புது வெளிப்பாடுகளைக் குறித்து நியாயப்படுத்தி பேசவந்துவிட்டீர்களே, அது தான் வேதனையின் உச்சக்கட்டம்..!

உம்மை இறுதியாக எச்சரிக்கிறேன், உம்ம வெளிப்பாட்டையெல்லாம் உம்மோடு வைத்துக்கொள்ளும், அதற்கு வேதப் புருஷர்களையெல்லாம் துணைக்கு அழைத்துக்கொண்டு அவர்களுக்கே கிடைக்காத வெளிப்பாடு உமக்குக் கிடைத்ததாக இனி பிதற்றக்கூடாது; வேத வசனத்தைப் பயன்படுத்தாமல் நீர் ஒரு பொதுவான பெயரில் எதையாவது உளறினால் நமக்கு எந்த பிரச்சினையுமில்லை; ஆனால் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு எழுதி வைக்கப்பட்டு கிறித்துவில் நிறைவேறிவிட்ட அல்லது நிறைவேறிக்கொண்டிருக்கும் காரியங்களுக்கு மாறாக நீர் ஏதாவது குழப்பம் விளைவிக்கும் கருத்துக்களை இங்கே கிறித்தவத்தின் நம்பிக்கைகளுக்கு விரோதமாகத் தூவிக் கொண்டிருந்தால் அவற்றை நாங்கள் முளையிலேயே கிள்ளியெறிய இங்கே இரவும் பகலும் ஆயத்தமாக விழித்திருக்கிறோம்; நீர் உண்மையிலேயே யார் என்பதையும் உம்முடைய ஞானப் போதகன் யார் என்பதையும் இன்னும் உம்மிடம் இதுபோல அந்தரங்கமாக இருக்கும் புதுப்புது சரக்குகள் என்னென்ன என்பதையும் ஒரே மூச்சில் சொல்லிவிட்டால் பலரும் எச்சரிப்படைய ஏதுவாக இருக்கும்; அநேகமாக நீர் யாகவா முனிவரின் மறுபிறவியாகவே இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன், என்ன நான் சொல்றது சரிதானே..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard