Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
RE: திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?
Permalink  
 


இங்கே என்னைக் குறித்த அயலகத்தாரின் விமர்சனங்களை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன்; அதைக் குறித்த என்னுடைய தரப்பு விளக்கத்தைக் கொடுக்க எனக்கு நேரமில்லை; ஆனால் நான் வேலை வெட்டி இல்லாதவன் என்று உமிழ்கிறார், மிஸ்டர் சாந்தசீலர்..போகட்டும்,

நமது  தளத்தில் பின்நூட்டமிட்டுள்ள சகோ.எட்வின் அவர்களை பக்கத்து தளகாரர் இவ்வாறு விமர்சித்துள்ளார்.

chillsam wrote:

////எட்வின் சுதாகர் எனும் சிறுவன் இரைத்துச் சென்றிருப்பவை; இந்த கரிச்சான்குஞ்சு இப்படியாகக் கூவுகிறது;////


SUNDAR@Iraivan on 25.01.2011

சகோதரரே, இதை குறித்து நீங்கள் சற்றும் வருந்தபட வேண்டாம்  நம்மை மட்டுமல்ல சாது சுந்தர் செல்வராஜ், சாம்.செல்லதுரை, எசேக்கியா பிரான்சிஸ், ஆலன் பால், பால் தினகரன், ஜியாப்ரீ போன்ற மிகப்பெரிய போதகர்களே இவரால் பந்தாடப்ப்படும்போது நம்மை போன்ற சிறியவர்கள் இவருக்கு எம்மாத்திரம்.


இவர் பயன்படுத்துவது போல் பரியாச வார்த்தைகளையும் மட்டமான சொல்களையும் பயன்படுத்த நமக்கு தெரியாமலில்லை. ஆனால் அது நம்போன்ற கிறிஸ்த்தவனுக்கு ஏற்றதல்ல.மற்றும் இவரிடம் வாய் கொடுத்தால் நமக்குதான் அவமானம் என்று எண்ணி  விலக நினைக்கிறோம் ஆனால் "ஓடுகிறவனை கண்டால் துரத்துகிறவனுக்கு தொக்கு" என்றொரு பழமொழி உண்டு. அதுபோல் நாம் ஓட ஓட நம்மை துரத்துகிறார்  அராஜகத்தால் யாரையும் அமுக்கிவிட முடியாது என்பதையும் நமது இறைவன் எளியவனுக்காக வழக்காடுபவர் என்பதையும் அவர் விரைவில் உணரும் நாள் வரும்.

அவர்  தளத்தில் எழுதப்பட்டவைகளை இங்கு வைத்து விவாதிக்கவும்  விளக்கம் கூறவும் நமக்கு நேரமில்லை. நாமெல்லாம் அனேக வேலைகளின் மத்தியில் இந்த பதிவுகளை தருகிறோம்.  எனவே வேலையற்றவர்களின் வெட்டி பதிவுகளை  சற்றும் பொருள்படுத்த வேண்டாம் என்பதை அன்புடன் வேண்டுகிறேன்.


EDWIN SUDHAKAR@Iraivan on 25.01.2011

நீங்கள் சொல்வது போலவே நான் முன்போ முடிவு எடுத்து விட்டேன் அவர் என்ன சொன்னாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை; தள  நிர்வாகிக்கு  நன்றி

எட்வின் என்பவர் என்னை கழிவறையை சுத்தம் செய்யும் ' தோட்டி' யுடன் ஒப்பிட்டு எழுதியது எத்தனை இழிவான விமர்சனம் என்பதையும் அதன் தீவிரத்தையும் அவர் அறிந்திருக்கவில்லை; ' இப்ப வலிக்குதில்லே, இப்படி தானே எல்லோருக்கும் இருக்கும்' என்று சிலர் நொடிப்பதும் எனக்குத் தெரியும்; அதையும் கூட எனக்கு சாதகமானதாக எடுத்துக்கொண்டு ஏதோ ஒரு சிறுவன் செய்த தவறாக எண்ணியதாலேயே எட்வினை சிறுவன் என்று குறிப்பிட்டேன்; நான் எழுதி வருபவற்றின் ஆழங்களை அறியாத சிறுபிள்ளையை நான் மன்னிக்க ஆயத்தமாக இருக்கிறேன்; என்னுடைய எழுத்துக்கள் லேசாக அடையாளங் காட்டுவதுடன் நின்று விடும்; முழு விவரத்தையும் தருவது எனக்கடுத்ததல்ல; அது வாசகர் தேடியெடுக்க வேண்டிய முத்தாகும்; அப்படி பலரும் எதிர்பார்ப்பது போல ஒரு தனி மனிதனை எடுத்துக்கொண்டு முழுக்க முழுக்க அவனைக் குறித்தே நான் எழுதிக் கொண்டிருந்தால் அந்த குறிப்பிட்ட நபரை நான் இயேசுவானவரை விட முக்கியமானவராக நான் கருதுவதாக ஆகிவிடும்; ஆனாலும் என்னால் இயன்ற மட்டும் நான் இருதரப்புக்கும் பொதுவான விளக்கத்தைக் கொடுக்கவே முயற்சிக்கிறேன்; நான் ஆரம்பித்து வைத்த பல சர்ச்சைகளுக்கு எந்த தீர்வும் சொல்லாதது தவறுதான்; ஆனாலும் தீர்வு சொல்லாததால் மட்டுமே நான் எழுப்பிய பிரச்சினைகள் அடிப்படை ஆதாரமில்லாததாகிவிடாது; இல்லாவிட்டால் என்னுடைய எழுத்துக்களை யாரும் படிக்க மாட்டார்களே..?


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?
Permalink  
 


கீழ்க்காணும் வரிகள் இறைவன் தளத்தில் எட்வின் சுதாகர் எனும் சிறுவன் இரைத்துச் சென்றிருப்பவை;இந்த தம்பி அமைதியாக இருப்பதைப் பார்த்து எல்லாவற்றையும் உணர்ந்துவிட்டாரோ என சற்று அகமகிழ்ந்தேன்; ஆனாலும் நான் என்ன செய்ய‌..?

"நான் எழுதும் கட்டுரைகள் புரிவதில்லையா? " -என தலைவர் கேட்கிறார்;அதற்கொரு கருத்துக் கணிப்பைப் போடுகிறார்; அதற்கு இந்த கரிச்சான்குஞ்சு இப்படியாகக் கூவுகிறது;

// சகோதரர் சுந்தர் அவர்களே நீங்கள் எழுதும்  காரியங்கள் எல்லாம் நன்குபுரிகின்றது தேவனை பற்றியும் வேதத்தை பற்றியும் இருந்த அனேக சந்தேகங்கள் உங்கள் பதிவால் எனக்கு நீங்கி விட்டது கடவுளுக்கு நன்றிகள் பல; நீங்கள் சரி செய்து கொள்ள  தேவை இல்லை உங்கள் வார்த்தைககளை கேட்டு நாங்கள்தான் சரி செய்து கொள்ள வேண்டும்; இன்னும் ஒன்றை சொல்கின்றேன், உங்கள் வார்த்தைகளுக்கு குறை கூறி கொண்டு இருக்கும் ஒரு சகோதரர் அவர்களுக்கு உங்கள் வார்த்தைகள் எல்லாம் அதிகமாக புரியும் (எல்லாரையும் விட ) ஆனாலும் உங்களை எதிலே குற்றம் கண்டு பிடிக்கலாம் என்று எண்ணத்தோடு இருப்பதால் அதை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை அல்லது அவரால் ஏற்று கொள்ள முடிய வில்லை என்று தான் கூற வேண்டும்.

சகோ : அன்பு அவர்களும் மற்றும் சுந்தர் அவர்களும் வாதிட்டாலும் அவர்கள் வாதிட வாதிட பல காரியங்கள் அறிந்து கொள்ள முடிகின்றது அதாவது தோண்ட தோண்ட தான் தண்ணீர் வரும் என்பது போல.

ஆனால் ஒருவர் அப்படி இல்லாமல்  தன் கருத்துகளையும் சொல்லாமல் எப்பொழுதும்  குறை மட்டும் கூறி கொண்டு இருக்கிறார் அவருக்கு புரிய வைக்கவும் முடியாது அவர் யார் சொன்னாலும் கேட்க மாட்டார்.

எனக்கு தெரிந்து அவர் இப்பொழுது எந்த நிலைமையில் இருக்கின்றார் என்றால் ஒரு ஹவுஸ் கீப்பிங் பாத்தரும் உள்ளேயே வேலை செய்து கொண்டு  இருப்பதால் அவனிடம் சென்று பாத்தரும் நாற்றம் அடிக்கின்றது என்றால் அப்படியா என்று தான் கேட்பான் ஏனென்றால் அவனுக்கு அந்த நாற்றம் தெரியாது; அது அவன் மேல் உள்ள தவறு அல்ல, அவன் எப்பொழுது  பாத்தரும் உள்ளேயே இருப்பதால் அதில் அவன் பழகி போய்விட்டான் என்பது தான் உண்மை............................................

ஞானிகளுக்கு புரியும் என்று எண்ணுகின்றேன். //


-- Edited by EDWIN SUDHAKAR on Saturday 22nd of January 2011 01:40:43 PM

__________________
புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்   (நீதி-14-13 ).........................

இவர்களுக்காக தனி பகுதியையே உருவாக்கி எனது பொன்னான நேரத்தை செலவிட்டு அவர்கள் அங்கே விவாதிப்பதை விரும்பாததால் ஒவ்வொரு தலைப்பையும்  இங்கே விவாதித்து அதற்குரிய தொடுப்புகளை இங்கே நேர்மையுடன் பதித்து வைத்திருக்கும் என்னுடைய நன்முயற்சிகளை சற்றும் கவனத்தில் கொள்ளாமல் எட்வின் என்னைக் குறித்து வைத்துள்ள விமர்சனங்கள் வருந்தத்தக்கது; இதே நபர் முன்பு மன்னிப்பு கேட்டது என்ன , இப்போது அவரும் பாவத்தில் பங்கு போட்டுக்கொள்வதென்ன,எல்லாம் அந்த மீட்பருக்கே வெளிச்சம்..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?
Permalink  
 


ங்க எழுது, அங்க எழுது, இத நீக்கு, அங்க மாத்து என்ற தொல்லைகள் நடுவில் ஒன்றும் எழுத முடியாது.

எனவே posts delete செய்வது தங்களுக்கு கை வந்த கலை என்பதால் உங்களுக்கு பிடிக்காதவற்றை  delete செய்து விடலாம் அல்லது இடம்மாற்றி விடலாம்.

மேலும் தங்கள் விசுவாசம் என்ன என்பதையும், தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் நோக்கங்களையும் இங்கே கொஞ்சம் அறிமுகப்படுத்தினால் தங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் குறித்து அடியேன் தெளிவடைய உதவியாக இருக்கும்.

இப்படி பொடி வைத்து பேசும் மர்மம் என்னவோ?
ஏதாவது கேள்வி இருந்தால் நேரடியாக கேட்கவும்.

 





__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அன்புள்ள சகோதரிக்கு ஒரு தகவல்:
இது என்னுடைய தளமல்ல;இங்கு எல்லாவற்றையும் நானே செய்துவிடமுடியாது;குறிப்பாக ஒரு திரி முழுவதையும் இடம் மாற்றலாமே தவிர ஒரு குறிப்பிட்ட பின்னூட்டத்தை மாத்திரம் இடம் மாற்ற இயலாது;தங்கள் மேலான கருத்துக்களை நீக்கவோ இடம் மாற்றவோ எனக்கு விருப்பமில்லை;நான் அதை செய்தால் என் பெயரிலேயே பதிக்கப்படும்;நான் எந்தவொரு உறுப்பினரையும் இழக்க விரும்பாமல் இன்னும் இந்த தளத்தை வெற்றிகரமாக நடத்த உதவிகளையும் ஆலோசனைகளையும் எதிர்பார்த்தே இருக்கிறேன் என்பதை அறிய வேண்டுகிறேன்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 


You can do whatever you want to do with the posts made in your board.

Thanks.Bye.




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அன்புநிறை சகோதரிக்கு நான் தெளிவாகத் தொடுப்புடன் குறிப்பிட்ட வண்ணமாக இங்கே குறிப்பிட்ட இந்த திரிக்கு சம்பந்தமில்லாத விஷயங்களை நீங்களே நீக்கிவிட வேண்டுகிறேன்;

அதாவது தங்களைக் குறித்த பொதுவான அறிமுகத்தை எனக்கு பதில் சொல்வது போலல்லாமல் ஒரு தகவலாக எழுதுங்கள்;அடுத்து ஏஞ்சல் டிவி சம்பந்தமான தங்கள் அபிப்ராயங்களை தனி திரியாகத் துவங்கி இங்குள்ள விவரங்களை அதில் மாற்றி எழுதுங்கள்.

நன்றி..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[விசுவாசம் என்ன ]

இயேசுவே வழி சத்தியம் ஜீவன்.

[ஆவிக்குரிய வாழ்க்கையின் நோக்கங்களையும் ]

இது கடைசி காலம். ஆண்டவர் வரும் காலம். வருகைக்கு ஆயத்தமாக இருக்க வேண்டிய காலம்.

[கொடுக்க வேண்டிய மரியாதை]

கொடுங்கள் அப்பொழுது உஙகளுக்கு கொடுக்கப்படும்.




__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?
Permalink  
 


சகோதரி கோல்டா அவர்களே, இந்த குறிப்பிட்ட திரியானது சுந்தர் அவர்களின் "இறைவன்" தளம் சம்பந்தமான கருத்து வேறுபாடுகளுக்காக மட்டுமே துவக்கப்பட்டது என்பதை அறிவீர்கள்;ஆனாலும் நான் உதாரணத்துக்காகக் குறிப்பிட்ட ஏஞ்சல் டிவி சம்பந்தமான ஒரு சில வரிகள் இந்த விவாதம் வேறு திசையில் பயணிக்கக் காரணமாகிவிட்டது;எனவே தாங்கள் ஏஞ்சல் டிவி சம்பந்தமாக எழுத விரும்புபவற்றை தனி திரியாகத் தாங்களே துவங்கி எழுத வேண்டுகிறேன்;அதன் மூலமாக நாம் பல்வேறு உபதேசங்களுக்கு தீர்வு காணமுடியும்;இங்கே சுந்தர் அவர்களின் பு()லம்பல் குறித்த கருத்துக்கள் தொடரட்டும்...

மேலும் தங்கள் விசுவாசம் என்ன என்பதையும், தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையின் நோக்கங்களையும் இங்கே கொஞ்சம் அறிமுகப்படுத்தினால் தங்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையைக் குறித்து அடியேன் தெளிவடைய உதவியாக இருக்கும். அதற்கு நீங்கள் தொடரும் தொடுப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும்;யாராவது நம்மை வரவேற்றால் அதனை ஏற்று சில உபசார வார்த்தைகளைச் சொல்வோமல்லவா,
இதுவும் அதைப் போன்றதே.

http://chillsam.activeboard.com/index.spark?aBID=134567&p=41&topicID=39264208


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?
Permalink  
 


[கழுகைப் பிரதானப்படுத்தி கடந்த நூற்றாண்டில் ஒரு பெரிய ஊழியத்தைச் செய்தவருடைய பாதிப்பு நீங்கள் விரும்பும் ஏஞ்சல் டிவியின் சாது மற்றும் வின்சென்ட் செல்வகுமார் ஆகியோரிடம் உள்ளதைக் குறித்தும் அதினால் சபைகளில் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறித்தும் நேர்த்தியானதொரு ஆய்வு கட்டுரையை ஆயத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்]

அது யாரென்று எனக்கும் தெரியும்! பிறருடைய வெளிப்பாடுகளை நம்பித்தான் ஊழியம் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இவர்களுக்கு இல்லை. நல்ல சுய சிந்தையும், தேவ வெளிப்பாடுகளும் இவர்களுக்கு உண்டு.

மனிதர்கள் குறைவுள்ளவர்கள்தான். நமது அறிவு குறைவுள்ளது. நமது புரிதல் குறைவுள்ளது. மார்டின் லூத்தர் யூதர்களை விரோதிக்கவில்லையா?

நீங்கள் சொல்லும் அவர் ஆரம்பத்தில் நன்றாக ஊழியம் செய்து கடைசியில் வழிவிலகிப் போனார் என்றுதான் நான் நினைக்கிறேன். கடைசியில் வழிவிலகிப்போன சாலமோனின் வார்த்தைகளை நாம் இன்றும் வேத வசனமாகத்தான் வைத்திருக்கிறோம்!



__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[கடந்த 2007-ம் வருடம் ஜெருசலேம் நகரில்  நடந்த திறந்த வானம் தீர்க்கதரிசன மாநாட்டில் இதே போல தூதர்கள் இறங்கி வந்ததையும் அதற்கு ஆதாரமாக அந்த இடம் முழுவதும் ப்ராய்லர் கோழியின் சிறகுகள் சிதறிக் கிடந்ததையும் ஆதாரத்துடன் நிரூபித்தனர்; அது சம்பந்தமான செய்தி இன்னும் இணையத் தளத்தில் உள்ளது]

I'm not a visions or an experiences type of a person. I have not even seen one vision in my life so far and to tell the truth I'm not interested in seeing any! I'm not at all excited by visions of light/cloud/rain or gold dust or angel feathers and things like that. But I'm interested in receiving revelations from God.

When we say we have a relationship with God, there will be and there should be a two way communication between us and God and we must be able to receive revelations from God/ hear God.

In that sense, I say, both of them have excellent revelations from God about the Bible and End Times and I would say they are world class prophets. Of course they "see" a lot and also have experiences like Sadhu Sundar Singh, DGS Dhinakaran, Ezekiel and Apostle John. That is the way God interacts with them.

Intimacy with God is more important than seeing visions and dreams. In that sense also, imo, they are very very rich.


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[நான் சொல்ல வந்தது தூதர்களைப் படம் பிடிக்கும் காமிரா பற்றிய பீலா ... அதை இன்று கூட சாது செல்வராஜ் ஏஞ்சல் டிவியில் சொன்னார் ]

ஒருவர் சொல்லும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவசியம் கிடையாது.

Next step in physical dimension for Angel TV, as told by God, is to move to HD. Next step in spiritual dimension for Angel TV, as told by God, is that supernatural things could be seen, heard and felt by people through Angel TV. He links the two and says appearance of angels, their songs could be captured and recorded. Though with God anything is possible, I have difficulty in accepting this! I think even without recording such things, God can make people see and hear things.


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[மேலும் டிவி ஊழியங்களில் இறைக்கப்படும் திரளான பணங்கள் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் கேபிள் டிவிக்களை நடத்தும் உள்ளூர் ரௌடிகளுக்குமே போய்க் கொண்டிருக்கிறது; இன்று காலையில் அதையும் சாது வருத்தத்துடன் குறிப்பிட்டார்; ஒரு பெரிய ஒளிபரப்பு நிறுவனம் 2 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டு சில மாதங்களிலேயே இவர்களுடைய லிங்க்கை கட் பண்ணிவிட்டது; அந்த நியாயத்தை யார் கேட்பது, அது யாருடைய பணம், லஞ்சம் கொடுத்து முறைகேடான விதத்தில் ஊழியப் பணத்தை செலவிடும் உரிமையைக் கொடுத்தது யாரென்று கேட்க‌யாருக்காவது உரிமையுண்டா..?]

டிவி சேனல் நடத்துவது மக்கள் பார்ப்பதிற்கு தான். கையில் கத்தி வைத்துக்கொண்டு கொடுத்தால்தான் ஒளிபரப்புவேன் என்று அராஜகம் பண்ணும் போது இலஞ்சம் என்றாலும் கொடுக்கத்தானே வேண்டும்.

காணிக்கை சரியாக செலவு செய்யப்படவேண்டும். கணக்கு சரியாக காட்டப்பட வேண்டும்.ஊழியத்தில் ஆடம்பரம் தவிர்க்கப்பட வேண்டும்.ஊழியக்காரர்கள் எளிமையாக இருக்க வேண்டும்- என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து கிடையாது


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

[டிவி ஊழியத்தில் செலவிடப்படும் இலட்சக்கணக்கான பணத்தினால் ஆதாயப்படுத்தப்படும் ஆத்துமாக்களைவிட நண்பர் சுவிசேஷ ஜெபக் குழு போன்ற நேரடியாக ஆத்துமாக்களை சந்திக்கும் ஊழியங்களாலேயே இராஜ்யம் கட்டப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாத இரகசியமாகும்; ]

ஒவ்வொரு ஊழியத்தையும் ஆண்டவர் ஒவ்வொரு நோக்கத்திற்காக/ வேலைக்காக வைத்திருக்கிறார்.அவர்கள் 1000 ரூபாய் செலவு செய்து 100 ஆத்துமா இரட்சித்திருக்கிறார்கள் . நீங்கள் 10,000 ரூபாய் செலவு செய்து 10 ஆத்துமாதான் இரட்சித்திருக்கிறிர்கள் என்றெல்லாம் ஒப்பிடமுடியாது. கண் காது மாதிரி வேலை பார்க்காது. காது மூக்கு மாதிரி வேலை பார்க்காது. எனவே FMPB யையும் ஏஞ்சல் டிவி யையும் ஒப்பிட முடியாது.

10 ரூபாய் வைத்து ஊழியம் செய்கிறோமா அல்லது 10 இலட்சம் வைத்து ஊழியம் செய்கிறோமா என்பது முக்கியமல்ல. நம்மை தேவன் செய்யச்சொன்னதை செய்கிறோமா அல்லது நம் சுய சித்தத்தை செய்கிறோமா என்பதுதான் முக்கியம். தேவ சித்தம் எல்லாம் நல்ல விஷயம் தான். ஆனால் நல்ல விஷயம் எல்லாம் தேவ சித்தம் ஆகிவிடாது.

சில வகை ஊழியங்களுக்கு அதிக பணம் தேவைப்படாது. டிவி சேனல் நடத்துவதற்கு கோடிக்கணக்கில் பணம் தேவைப்படத்தான் செய்யும்.

இமயமலையில் பரதேசியாக சுற்றித் திரிந்த சாதுவை ஏஞ்சல் டிவி நடத்த அழைத்த போது இவர் மனமில்லாமல் இருந்ததாகவும், பின்பு தேவனால் கடிந்து கொள்ளப்பட்ட பிறகுதான் முழு மூச்சோடு இந்த வேலையில் ஈடுபட்டதாகவும் சொல்லியிருக்கிறார்.



__________________
ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
Permalink  
 

//தங்கள் மேலான கருத்துக்கு நன்றி நண்பரே..,இன்னும் சில நாட்களில் முக்கியமான சில முடிவுகளை எடுக்கப்போகிறேன்;அதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்..!

தங்களைக் குறித்த அறிமுகத்தையும் பின்னணியையும் அனுபவங்களையும் சாட்சிகளையும் உங்களுக்கு ஆட்சேபணையில்லாதிருந்தால் தாராளமாக இங்கே பகிர்ந்துகொள்ளலாம்.//

தங்களின் முடிவுகள் தேவனுக்குள்ளாக சரியாக இருக்குமாறு ஜெபித்துக் கொள்கிறேன் சகோதரரே. நான் ஒரு பாரம்பரிய கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்து வளர்ந்து பின்னர் தேவனை சரியாக அறிந்து ஏற்றுக்கொண்டேன். தேவன் அவரைப் பற்றி அறிந்து கொள்ள எனக்கு கொடுத்த ஞானத்திற்காகவும் அவரின் கிருபைக்காகவும்,இந்த வாழ்க்கைக்காகவும் அவருக்கு ஸ்தோத்திரம்.  







__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?
Permalink  
 


// All TV channels are moving to HD. That is what Angel TV is also doing. They are doing what God asked them to do. அதில் உங்களுக்கு என்ன கஷ்டம்? ஏஞ்சல் டிவி வருகை பற்றிய காரியங்களை/வெளிப்பாடுகளை பற்றி தெரிந்து கொள்ள நல்ல ஒரு அருமையான சேனல்... கழுகின் சத்தம் கேட்டவுடன், பாம்பு பதுங்கிகொள்ளும்.இது ஒரு தேவ மனிதருக்கு கர்த்தர் கொடுத்த வெளிப்பாடு! //

"எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து, நலமானதைப் பிடித்துக் கொள்ளுங்கள். " (1.தெசலோனிக்கேயர்.5:21)


அருமை சகோதரி அவர்களின் வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்;நான் எழுதியுள்ள கருத்துக்களை நிதானித்தீர்களா..? டிஆர்பி (DRB) ரேட்டிங் எனப்படும் பார்வையாளர் தர நிர்ணயம் சம்பந்தமான கணிப்புகள் தங்களுக்குத் தெரியுமா..? டிவி ஊழியத்தில் செலவிடப்படும் இலட்சக்கணக்கான பணத்தினால் ஆதாயப்படுத்தப்படும் ஆத்துமாக்களைவிட நண்பர் சுவிசேஷ ஜெபக் குழு போன்ற நேரடியாக ஆத்துமாக்களை சந்திக்கும் ஊழியங்களாலேயே இராஜ்யம் கட்டப்படுகிறது என்பது யாருக்கும் தெரியாத இரகசியமாகும்; மேலும் டிவி ஊழியங்களில் இறைக்கப்படும் திரளான பணங்கள் ஊழல் அரசியல்வாதிகளுக்கும் கேபிள் டிவிக்களை நடத்தும் உள்ளூர் ரௌடிகளுக்குமே போய்க் கொண்டிருக்கிறது; இன்று காலையில் அதையும் சாது வருத்தத்துடன் குறிப்பிட்டார்; ஒரு பெரிய ஒளிபரப்பு நிறுவனம் 2 கோடி ரூபாயைப் பெற்றுக்கொண்டு சில மாதங்களிலேயே இவர்களுடைய லிங்க்கை கட் பண்ணிவிட்டது; அந்த நியாயத்தை யார் கேட்பது, அது யாருடைய பணம், லஞ்சம் கொடுத்து முறைகேடான விதத்தில் ஊழியப் பணத்தை செலவிடும் உரிமையைக் கொடுத்தது யாரென்று கேட்க‌ யாருக்காவது உரிமையுண்டா..?

நான் சொல்ல வந்தது தூதர்களைப் படம் பிடிக்கும் காமிரா பற்றிய பீலா... அதை இன்று கூட சாது செல்வராஜ் ஏஞ்சல் டிவியில் சொன்னார்; கடந்த 2007-ம் வருடம் ஜெருசலேம் நகரில்  நடந்த திறந்த வானம் தீர்க்கதரிசன மாநாட்டில் இதே போல தூதர்கள் இறங்கி வந்ததையும் அதற்கு ஆதாரமாக அந்த இடம் முழுவதும் ப்ராய்லர் கோழியின் சிறகுகள் சிதறிக் கிடந்ததையும் ஆதாரத்துடன் நிரூபித்தனர்; அது சம்பந்தமான செய்தி இன்னும் இணையத் தளத்தில் உள்ளது; கழுகைப் பிரதானப்படுத்தி கடந்த நூற்றாண்டில் ஒரு பெரிய ஊழியத்தைச் செய்தவருடைய பாதிப்பு நீங்கள் விரும்பும் ஏஞ்சல் டிவியின் சாது மற்றும் வின்சென்ட் செல்வகுமார் ஆகியோரிடம் உள்ளதைக் குறித்தும் அதினால் சபைகளில் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறித்தும் நேர்த்தியானதொரு ஆய்வு கட்டுரையை ஆயத்தம் பண்ணிக்கொண்டிருக்கிறேன்; அது யாரும் எதிர்க்கக்கூடாதும் எதிர்பாராததுமாக இருக்கும்; அப்போது நீங்களே ஒவ்வொன்றாகத் தெரிந்துகொள்ளுவீர்கள்; எனவே அவசரப்படவேண்டாம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
RE: திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?
Permalink  
 


எனவே நமக்கு விரோதமாகவே  பரியாசம்பண்ணி எழுதிக்கொண்டிருக்கும் சகோதரரை  கர்த்தரே  எடுத்து விட்டிருப்பாரானால், நான் நிச்சயம் நிரந்தரமாக கருகலான சத்தியங்களை பதிவிடுவதை நிறுத்திவிடலாம் என்றே  முடிவெடுத்துள்ளேன்.


கழுகின் சத்தம் கேட்டவுடன், பாம்பு பதுங்கிகொள்ளும்.
இது ஒரு தேவ மனிதருக்கு கர்த்தர் கொடுத்த வெளிப்பாடு!


__________________


Guru>>>நிலைத்திருக்க..!

Status: Offline
Posts: 850
Date:
Permalink  
 

ஏஞ்சல் டிவிக்காரர் இப்படியே விசேஷித்த தேவ வெளிப்பாடு என்று வரைமுறையில்லாமல் ரீல் சுற்றி கோடிகளை கபளீகரம் செய்து கொண்டிருக்கிறார்; ஏழை எளிய மக்கள், இவருடைய பரதேசி வேஷத்தை நம்பி வயித்த வாயைக் கட்டி சம்பாதித்த பணங்களை அவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்; ஆனால் அந்த பணத்தைக் கொண்டு அவர்கள் செய்யப்போவதென்ன தெரியுமா? உலகிலேயே மிகச் சிறந்த தரமான டிஜிட்டல் கேமிராவை வாங்கி அவர்கள் நடத்தும் அபிஷேகக் கூட்டத்தில் பயன்படுத்தப் போகிறார்களாம்; காரணம், இவர்களெல்லாம் ஆடிப்பாடி குதித்துக்கொண்டிருக்கும் போது வானத்திலிருந்து தேவதூதர்கள் வந்து செல்லுகிறார்களாம்; அவர்களைப் படம் பிடிக்கவே, எந்தவொரு காட்சியையும் துல்லியமாகப் படமாக்கும் இந்த நவீன தானியங்கி காமிராவை வாங்கப்போகிறார்களாம்; என்ன ஒரு துரதிருஷ்டமென்றால் அந்த நவீன காமிரா தற்போது ரெண்டு கோடி ரூபாயாக விலையுயர்ந்துவிட்டது; ஆனாலும் அதை எப்படியாவது விசுவாசத்தில் வாங்கப்போகிறார்கள்..!


All TV channels are moving to HD. That is what Angel TV is also doing. They are doing what God asked them to do. அதில் உங்களுக்கு என்ன கஷ்டம்? ஏஞ்சல் டிவி வருகை பற்றிய காரியங்களை/வெளிப்பாடுகளை பற்றி தெரிந்து கொள்ள நல்ல ஒரு அருமையான சேனல்.

__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இது இறைவன் தள சுந்தரின் புலம்பல்; அவரைக் குறித்து அவர் மிகவும் மென்மையானவர் யாரையும் சபிக்கமாட்டார் என்றும் யாரையும் மனம் நோக பேசாத சாது என்றும் தூஷிக்கமாட்டார் என்றும் கூறப்படுவதுண்டு; ஆனால் இங்கே இருப்பதும் சரி இதற்கு முன்பும் சரி காரியம் அதுபோன்றதல்ல;ஒருவேளை சிலருக்கு வெளிப்படையாகத் தெரியாதிருக்கலாம்;ஆனாலும் அவருக்கு பல தலைப்புகளில் பல காரியங்களை எழுத விஷயங்களை எடுத்துக்கொடுத்ததே அடியேன் தான் என்பது பலருக்கும் தெரியாது;கொல்வின் போன்ற நண்பர்கள் இதற்கெல்லாம் நானே காரணம் என்பார்கள்;நான் ஏதோ கொடுத்து வாங்கிக்கொள்வதாகவும் ஒன்றுந் தெரியாத சாந்த சொரூபிகளை நான் கெடுத்து ஒரு மோசமான கலாச்சாரத்துக்கு காரணமாகி விட்டதாகவும் குறைகூறுவார்கள்; ஆனால் நான் இங்கே எதைச் செய்யப் பணிக்கப்பட்டேனோ அது இன்று வரையிலும் நிறைவேறி வருகிறது.

ஆம்,இந்த மும்மூர்த்திகளின் அனைத்து சூழ்ச்சிகளையும் சூட்சமங்களையும் அறிந்த நான் அடிக்கடி குறிக்கிட்டு, 'நீ இதைத் தானே சொல்லப்போறே ' என்று மடக்குவதால் இவர்கள் திடுக்கிட்டு தங்கள் திட்டம் நிறைவேறாத எரிச்சலில் என்மீது சீறுகிறார்கள்;ஆனால் நான் எழும்பாமல் அடங்கியிருந்தால் ஒருவேளை இவர்களுடன் நட்பாக இருந்திருக்கலாம்; ஆனாலும் எந்த காலத்திலும் மீட்க முடியாத பிசாசின் உபதேசங்களில் மதிமயங்கிவிட்ட இவர்களுடனான தேவையற்ற விவாதங்கள் பல்வேறு தவறான யூகங்களை எழுப்பும் தகவல்களை தோற்றுவித்து பலரும் குழம்பிப் போகவே காரணமாக இருந்திருக்கும்.

உம்மைப் போன்றவர்கள் வாயை மூடவேண்டும் என்றும் உம் வாயை அடக்கவேண்டும் என்றே வேதம் ஆலோசனை சொல்லுகிறது; "அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.' (தீத்து.1:11) எனவே நீர் வாயை மூட முடிவுசெய்திருப்பது குறித்து மிகவும் சந்தோஷம்.

தொடருவது சுந்தரின் வெற்றுப் புலம்பல்...

நமக்கு விரோதமாக எழும்பும் ஆவிகள்!

அன்பு சகோதர சகோதரிகளே!


தானியேல் 4:2 உன்னதமான தேவன் என்னிடத்தில் செய்த அடையாளங்களையும் அற்புதங்களையும் பிரசித்தப்படுத்துவது எனக்கு நன்மையாய்க் கண்டது. என்ற வார்த்தைகள்படி நான் இந்த தளத்தில் எழுதுவதற்க்கான காரணம் கீழ்கண்ட திரியில் இடம்பெற்றுள்ளது

பிரசித்தப்படுத்துவது நன்மையாய்க் கண்டது.

நான்  இந்த தளத்தில் எழுத ஆராம்பித்து ஒரு வருடம் ஆகிவிட்டது அதற்காக என் தேவனை ஸ்தோத்தரிகிறேன். நான் எழுத ஆரம்பித்ததில் இருந்தே நமக்கு விரோதமான சக்திகளும் தங்கள் வேலையே ஆரபித்து முடிந்தவரை  நம்மை மட்டம் தட்டவும் நமது வளர்ச்சியை தடுக்கவும் எவ்வளவோ முயன்று வருகின்றன என்பது நாம் அறிந்ததே.

முன்பெல்லாம் உள்ளே இருந்து முருமுருத்துகொண்டிருந்த அவைகள் இப்பொழுது பக்கத்து  வீட்டில் இருந்து நம்மையே கவனித்துகொண்டு என்ன எழுதுவான் எங்கு குற்றம் காணலாம் எப்படி பரியாசம் பண்ணலாம் என்பதில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றன.  நமக்கு அது மிகுந்த மன வேதனையை தருகிறது. நாமும் எவ்வளவோ சமாதானமாக போய்விட முயன்றும் முடியாத நிலையே உருவாகிறது பரியாசம் பண்ணுவதையும் சபிப்பதையும்   பண்பாய் கொண்டவர்களிடம் இனியும் நாம் நல்லுறவை எதிர்பார்ப்பது வீணே!

நாம் எதுவும் புதிய வெளிப்பாட்டை இங்கு எழுதவில்லை எழுதப்பட்டுள்ள வசனத்துக்கு சற்று மாறுபட விளக்கம் கொடுக்கிறேன் ஆனால் எந்த கருத்துக்கு வசனஆதாரம் மற்றும் விளக்கம் கொடுத்தாலும் நமது விளக்கங்கள் அவர்களின் பாரம்பரிய உபதேசத்துக்கு சற்று மாறுபடுவதால், ஜீரணிக்க முடியாமல் தவிப்பதும், கள்ள ஊழியர்களை கண்டுபிடிக்கிறேன் என்றொரு வெளிப்புற போர்வையை போர்த்திக்கொண்டு   நம்மேல் வீண்பழியை சுமத்தி எதையாவது எழுதுவதும், "மும்மூர்த்தி"  "பிரகஸ்பதி"  "சுந்தர  நபி"  "பேலியாள்"  போன்ற புதுபுது பட்டபெயர் வைத்து ஒன்றாம் வகுப்பு பையனை போல்  பரியாசம் பண்ணுவதும் அவரது பரியாசத்தை சிலர்  சரிதான்   என்று பாராட்டுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.

அவர்கள் பண்ணுவது மட்டும்தான் வியாக்கீனமாம் நாம் பண்ணினால் அது தவறான வெளிப்பாடாம், பொதுவாக வெளிப்பாடு எல்லாமே சாத்தானிடம் இருந்துதான் வருமாம்" ஆனால் திரித்துவம் என்ற வெளிப்பாடு மட்டும் தேவனிடம் இருந்து வந்ததாம். அதைப்பற்றி யாரும் சரியாக விளக்காமல் கமுக்கமாக வைத்துகோடு ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்லுவார்களாம்.

மரத்தை மேலிருந்து கீழ்நோக்கி பார்த்துகொண்டு வருவதற்கும்  வேரில் இருந்து மேல் நோக்கி பார்த்துகொண்டு போவதற்கும்  அதிக வேறுபாடு உண்டு. எதையும் வேரிலிருந்து ஆராயபவ்னுக்கே அனைத்து உண்மையும் தெரியும்!  மேலேயிருந்து ஆராய்ந்து வருபவனுக்கு சில மகிமையானவற்றை மேலேயே பார்த்து விடுவதால்  வேரின் மகிமை மற்றும் அதன் முக்கியத்துவம் தெரியாது ஆனால் வேறில்லை என்றால் மரம் மடிந்துவிடும் என்று உண்மையும் புரியாது!

அதுபோல் இன்றைய கிறிஸ்த்தவத்தில் அநேகருக்கு  பிறமதத்தவர் கேட்கும் பல்வேறு கேள்விகளுக்கு சரியான  பதில் தெரியவில்லை என்றாலும் சப்பைகட்டு கட்டி சமாளிக்கின்றனர் இன்னும் கொஞ்சம் அதிகம் கேட்டுவிட்டால் உங்கள் மதம் என்ன யோக்கியமா?  என்று கேட்டு  விரட்டுகின்றனர். ஆனாலும் அவர்களுக்கு அனைத்தையும் அறிந்துவிட்டோம் என்கிற பெருமை விட்டபாடில்லை! நாம் வேரில் இருந்து காரியங்களை எடுத்துரைத்தால்,  வேரை  அறியாத அவர்களுக்கு அது புரியாததால், நான் அறியாமல் ஏதோ புதியதாக எழுதுகிறேன் என்று என்னை மாறுபாடாக பார்க்கிறார்கள்.

ஆனால் அவர்களும் தேவனால் தாங்கப்படும் மரத்தின் ஒரு பகுதியாகையால் நம்மால்  அவர்கள் குற்றம் குறை சொல்ல முடிவதில்லை. நாம் என்னதான் எடுத்து சொன்னாலும் நம்மை குறைகூருவதிலேயே நோக்கமாக இருப்பதால் தேவன் யாருடைய இருதயத்தை திறக்கிறார்களோ அவர்களுக்கு மட்டுமே நான் எழுதுவது புரியம் என்றே கருதுகிறேன்.

ஆகினும் நாளை நான் தேவன் முன்னால் நிற்கும்போது எனக்கு ஒப்புவிக்கப்பட்டவைகளை நான் எழுதிவைக்கவில்லை என்ற அவப்பெயர் எனக்கு ஏற்ப்படாதபடிக்கு, வசனம் குறித்த வெளிப்பாடுகளில் முக்கியமான அனேக காரியங்களை இங்கு எழுதிவைத்து விட்டேன். இவைகளை நம்பாதவர்  ஆயிரம்பேர் இருந்தாலும்  இவ்வார்த்தைகளை நம்பி பின்தொடரும் ஒரு சிலர் இருந்தாலும அதுவே எனக்கு போதும் தேவனுக்கும் அந்த ஒருசிலரே வேண்டும்.

எனது பதிவுகளை படிக்கும் மனுபுத்திரர்களுக்கு சாத்தானின் தந்திரங்கள் என்ன வென்பது நிச்சயம் புரியும்! இன்னும் அவன் தனது தந்திரத்தால் உலகையே திசைதிருப்பி வைத்திருப்பதும் புரியவரும். ஏன் இந்த உலகம் இன்னும் முடிவில்லாம் போய்கொண்டு இருக்கிறது என்பது புரியவரும். ஏன் தேவன் கணக்கற்ற மக்களை  படைத்து கொண்டே இருக்கிறார் போன்ற கேள்விகளுக்கும் பதில் அறியவரும். "அது மறைவாய் இருக்கிறது"  "இது தெரியவில்லை" "இது தேவனுக்கே தெரியும்" என்று சொல்லும் எந்த பதிலும் கிடையாது!

தேவன் "என்னை கேள்" என்று சொல்லி  தனக்கு தெரிந்த எல்லாவற்றையும் தன்னிடம் கேட்பவகளுக்கு வெளிப்படுத்த சித்தமாயிருக்கிறார். எனவே  பதில் தெரியாத எந்த ஒரு கேள்விக்கும் அவரிடமிருந்து பதிலை  பெற முடியும்! தேவன் வார்த்தைமேல் விசுவாசம் இல்லாமல்  அவர்  "நம்பாதே" என்ற சொன்ன நம்மைபோல நாசியில் சுவாசமுள்ள பாஸ்டரை நம்பி, அவரிடம்  கேட்டால் அவர் மீண்டும் உங்களை அதே பழைய  பாதைக்குத்தான்  திருப்புவார்! நான் பல பாஸ்டர்களிடம் கேட்டு பதில் அறியமுடியாமல் போனதாலேயே சந்தேகம் என்று வந்தால் தேவனை தேடி ஓடுகிறேன்.

முக்கியமாக தேவனை பற்றி  எந்த மத சகோதரர்கள் கேட்கும் எல்லாவித கேள்விக்கும் என்னிடம் பதில் உண்டு! பதில் இல்லாத கேள்வி என்பது எதுவுமே இல்லை! அனால்  அதை பலருக்கு ஏற்க்க மனதில்லாத காரணத்தால்  இனி
சில செய்திகளை  பகிரங்கமாக எழுதாமல் தவிர்த்து, வேண்டுபவர்களுக்கு  தனி மடலில் மாத்திரம் அனுப்ப நினைக்கிறேன் தளத்தில் பொதுவான சத்தியங்களை மட்டுமே எழுதலாம் என்று கருதுகிறேன்!

இனி வசனங்களை பற்றிய வெளிப்பாட்டின் அடிப்படையிலான விளக்கங்கள் குறித்த பதிவுகளை மட்டும்  சில காலம் நிறுத்தி வைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

அதற்க்கு காரணம் இவர்களுக்கு பயந்து அல்ல!

கர்த்தரே பல கருகலான சத்தியங்களை எல்லோருக்கும் வெளிப்படுத்த சித்தம் இல்லாதவராய், நமக்கு விரோதமாக சிலரை எழுப்பி, நமது பதிவுகளை தொடர்ந்து குறைகூற அனுமதித்திருக்கலாம். ஒருவேளை அவ்வாறு இருக்குமாயின் தேவனுக்கு விரோதமாக நாம் செயல்படாதபடிக்கு அதன் உண்மை தன்மையை அறியும்படிக்கே இதை செய்கிறேன்.

எல்லாவற்றிக்குமே ஒரு முடிவு உண்டு! நான் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் வைப்பவன் அல்ல, எதிலும்  ஒரு முடிவற்றவனாய் தெளிவில்லாதவனாய் எதையும் தொடர்பவனும் அல்ல!  எனவே நமக்கு விரோதமாகவே  பரியாசம்பண்ணி எழுதிக்கொண்டிருக்கும் சகோதரரை  கர்த்தரே  எடுத்து விட்டிருப்பாரானால், நான் நிச்சயம் நிரந்தரமாக கருகலான சத்தியங்களை பதிவிடுவதை நிறுத்திவிடலாம் என்றே  முடிவெடுத்துள்ளேன்.

ஒருவேளை இச்செயல்கள் அகங்காரம் பிடித்த  தீய ஆவியால் உருவானது என்றால்!

நான் ஆராதிக்கும் தேவன் ஜீவனுள்ளவர்! அவர் எனக்காக வழக்காட முடியாதவர் அல்ல! அப்படி வழக்காட முடியாத ஒரு தேவனை நான் வணங்கவில்லை! எனவே அவர் இங்கு  இடைபட்டு தடைகளை தகர்த்து போடுகிறவராக எனக்கு முன்சென்று  தடைகளை தகர்த்துபோடுவாராக!

தேவன் தாமே இடைபட்டு தடைகளை நீக்கும்படி ஜெபிக்கிறேன்!

ஆனால் எல்லாம் சமாதானத்துடனே நடக்கும்படி மன்றாடுகிறேன்!

இது கர்த்தரின்  பணி! எனவே அவரின் கட்டளைப்படியே செய்ய வாஞ்சிக்கிறேன் அவருக்கு சித்தம் இல்லையாகில் பழைய ஊழியத்தை தொடரலாம் என்று கருதுகிறேன்! "தேவனுடைய சித்தத்தை அறிந்து எதையும் செய்யவில்லை என்றால்  செய்யும் எல்லாமே   வீண்" என்பது எனக்கு நன்றாக தெரியும் எனவேதான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன்!

தேவன் தாமே தமது சித்தத்தை வெளிப்ப்டுத்துவாராக!


நண்பர்களே, இங்கே நானோ அவரோ விஐபி அல்ல, நாங்கள் இருவருமே தேவ காரியங்களின் உக்கிராணத்துவத்தையும் பொறுப்பையும் இணையதளத்தில் நிறைவேற்ற அழைக்கப்பட்டவர்கள்; இருவரும் சாதாரண லேமென் எனப்படும் சுயாதீன தன்னார்வ முயற்சியாளர்கள் என்ற முறையில் இங்கு யாருக்கும் நாங்கள் கட்டுப்பட்டவர்களல்ல; ஆனாலும் எங்கள் இருவரையும் மீட்டு இரட்சித்து காத்து வழிநடத்தும் கர்த்தருக்கு கணக்கொப்புவிக்க வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது;அதிலும் நான் முழுக்க முழுக்க கர்த்தரை நம்பியே ஜீவிக்கிறேன்;எனது பிராட்பேண்ட் பில் ஆகட்டும் ஒரு நாளில் மூன்றில் ஒரு பகுதி இங்கே செலவிடப்படும் நேரத்தினால் உண்டாகும் சொந்த பாதிப்புகளாகட்டும் அனைத்தையும் நிர்வகித்து என்னையும் என் குடும்பத்தையும் போஷிப்பவர் அவரே;பல நண்பர்களைப் போல ஏதோவொரு அலுவலகத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு எனது அலுவலக  நேரத்தில் சிறப்பு அனுமதியின் பேரில் இந்த பணிகளைச் செய்யவில்லை;அதெல்லாம் சரியோ தவறோ நியாயந்தீர்க்க எனக்கு உரிமையில்லை;ஆனாலும் எனது நெருக்கமான பாதையினை விளக்கவே இதனைக் குறிப்பிடுகிறேன்;இங்கே அடியேன் பொழுதுபோக்கவும் வரவில்லை;கிறித்தவ தலைவர்களில் யாரும் ஒன்றையும் பாரமெடுத்து வெளிப்படையாகவும் நேர்மையாகவும்  செய்யாமல் அவரவர் தத்தமது ஸ்தாபனத்தை மட்டுமே முன்னேற்றுவதில் கவனமாக இருப்பதால் என்னைப் போன்ற சுயாதீனப் பணியாளர்கள் ஏதோவொன்றை செய்யவும் ஏதோவொன்றைத் தடுக்கவும் போராடிக்கொண்டிருக்கிறோம்;இந்த போராட்டத்தில் எதிர்பாரா வண்ணமாக ஏற்பட்ட கருத்துவேறுபாடுகள் மனக் கசப்பாகவும் தனிப்பட்ட விரோதமாகவும் மாறிவிட்ட மாயை தோன்றுகிறது;இதுவும் சத்துருவின் சூழ்ச்சியே;இது என்னைக் கிஞ்சித்தும் சங்கடப்படுத்தாது;தொடர்ந்து போராடுவேன்,கர்த்தர் அருளும் பெலத்தால் மேற்கொள்ளுவேன்..!

மற்றொரு முக்கிய குறிப்பு:

இங்கே தனக்கு வெளிப்படுத்தப்பட்டவையெல்லாவற்றையும் சேமித்துச் செல்லுவதாக சுந்தர் திருப்தியடையவேண்டாம்; நீர் எழுதிய மோசடியான வெளிப்பாடுகளைக் குறித்து ஒரு புதிய வெளிப்பாடு பயங்கர தேவனுடைய சந்திப்பினால் உமக்குக் கிடைத்து நீர் எச்சரிக்கப்படுவீர்;அன்றைக்கு உம்முடைய திருக்கரங்களாலே அனைத்தையும் நீரே வந்து அழிப்பீர்; அதன்பிறகு உம்மை வெளிப்படையாகக் கண்டித்து எழுதியவற்றை நானும் நீக்குவேன்;ஆனாலும் உம்மை மேற்கோள் காட்டி எழுதியவற்றையும் அதனால் உண்டாகக் கூடிய ஒரு தலைமுறையின் பாதிப்பையும் உம்மால் சரி செய்யமுடியாமற் போகலாம்;அதினிமித்தமாக உண்டாகும் வேதனை உம்மை நிச்சயமாகவே வாட்டி வதைக்கும்.

"மறைவான சிநேகத்தைப்பார்க்கிலும் வெளிப்படையான கடிந்துகொள்ளுதல் நல்லது.சிநேகிதன் அடிக்கும் அடிகள் உண்மையானவைகள்; சத்துரு இடும் முத்தங்களோ வஞ்சனையுள்ளவைகள்." (நீதிமொழிகள்.27:5,6 )


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

தங்கள் மேலான கருத்துக்கு நன்றி நண்பரே..,இன்னும் சில நாட்களில் முக்கியமான சில முடிவுகளை எடுக்கப்போகிறேன்;அதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்..!

தங்களைக் குறித்த அறிமுகத்தையும் பின்னணியையும் அனுபவங்களையும் சாட்சிகளையும் உங்களுக்கு ஆட்சேபணையில்லாதிருந்தால் தாராளமாக இங்கே பகிர்ந்துகொள்ளலாம்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

ebi


Veteran Member>>>கனி தருக..!

Status: Offline
Posts: 73
Date:
திரள் கூட்டத்தோடு சேராதவன் வஞ்சிக்கப்பட்டவனா?
Permalink  
 


ur points n writing style r very nice. ROFL at "சுந்தர நபிப் பெருமான்". Man where on earth u get such names? Regarding Sundarji he is open minded , open hearted n ready to accept  teachings out of Bible n sadly he doesn't do the same when people bring out points against his misinterpretation of Bible verses n also about his visions.

-- Edited by ebi on Thursday 13th of January 2011 04:32:55 PM

__________________
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard