your blog is very good. It was very well authored and easy to understand. Unlike additional blogs I have read which are really not good. I also found your posts very interesting horse gelatin trick results
This is great content. You’ve loaded this with useful, informative content that any reader can understand. I enjoy reading articles that are so very well-written. Indo Cair
Nice to be visiting your blog once more, it has been months for me. Well this article that ive been waited for therefore long. i want this article to finish my assignment within the faculty, and it has same topic together with your article. Thanks, nice share. digital marketing companies in china
I’d must seek advice from you here. Which is not something Which i do! I love reading an article which will make people feel. Also, thank you for allowing me to comment! win 79
Youre so cool! I dont suppose Ive read anything similar to this just before. So nice to find somebody with original ideas on this subject. realy we appreciate you starting this up. this fabulous website is one thing that is required online, a person with some originality. beneficial job for bringing interesting things for the internet! ko66
Thank you so much as you have been willing to share information with us. We will forever admire all you have done here because you have made my work as easy as ABC. hello88.business
Researchers have prepared an animal model of major depressive disorder that is based on an unusual genetic mutation that appears to cause the condition in most of people who inherit it zing88.skin
Thanks for every other excellent post. The place else may just anyone get that kind of info in such an ideal manner of writing? I’ve a presentation subsequent week, and I am at the look for such information. m88vin.pics
I’ve recently started a blog, and the information you provide on this web site has helped me greatly. Thank you for all of your time & work. kubets.app
Please keep on posting such quality storys as this is a rare thing to find these days. I am always searching online for posts that can help me. watching forward to another great website. Good luck to the author! all the best! xnxx
You delivered such an impressive piece to read, giving every subject enlightenment for us to gain information. Thanks for sharing such information with us due to which my several concepts have been cleared. صالون نسائي
An impressive share, I just given this onto a colleague who had previously been performing a small analysis on this. And hubby in fact bought me breakfast simply because I found it for him.. smile. So permit me to reword that: Thnx for the treat! But yeah Thnkx for spending any time go over this, I find myself strongly regarding this and really like reading much more about this topic. If you can, as you grow expertise, does one mind updating your blog post with increased details? It can be extremely helpful for me. Massive thumb up with this blog post! win79
Hi there. Very nice blog!! Guy .. Beautiful .. Wonderful .. I’ll bookmark your web site and take the feeds additionally…I am happy to locate a lot of useful info here within the post. Thanks for sharing… gemwin
தேவனுக்கும்கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது: - யாக்கோபு 1:1
பல்வேறு போதனா குழப்பங்களும் உபதேசக் கோளாறுகளும் பெருகியிருக்கும் இக்காலத்தில் மேற்காணும் வசனத்தின் கருத்து சிந்திக்கத்தக்கது ஆகும். கிறிஸ்துவின் சொந்த சகோதரனும் அப்போஸ்தலனுமாகிய யாக்கோபு எழுதிய இந்த பொதுவான நிருபத்தின் ஆரம்பத்தில் முதல் இரண்டு வார்த்தைகளும் சத்திய வேதத்தின் மொத்த சாராம்சத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.
தேவனுக்கும்கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் - எனும் இவ்விரு வாக்கியங்களை நிதானமாக சிந்தித்தால் தேவத்துவத்தின் இருவேறு தன்மைகளையும் நாம் தியானித்து அறியமுடியும். இதன்படி தேவன் எனும் சொல்லானது பிதாவாகிய தேவனையும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அவரிலிருந்து வேறுபட்டவர் என்பதையும் இருவேறு நபர்கள் என்பதையும் நாம் அறியலாம். ஆனாலும் இருவரும் ஒருவராய் இருப்பதையும் வேதம் உறுதியாக எடுத்துரைக்கிறது. பிதாவை மறுதலித்து இயேசுவையே யெகோவா என்போரும் இயேசுவை மறுதலித்து அவர் பிதாவினால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றும் அவர் ஈடுபலி என்றும் அவரை நோக்கி நாம் ஜெபிக்கமுடியாது என்போரும் நம்மிடையே ஊடுறுவி குழப்பம் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில் திரித்துவ சத்தியத்துக்கு ஆதாரமாக விளங்கும் இதுபோன்ற வசனங்களை நாம் அறிந்திருக்கவேண்டும். மாத்திரமல்ல, நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் இதேபோன்று சொன்னதை நினைவில் கொள்ளுவது நல்லது. அது பின்வருமாறு...
உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். - யோவான் 14:1
இங்கே தேவன் எனும் சொல் மூல பாஷையின் படி ஏலோஹிம் - எங்கும் நிறைந்தவர் என்றும் அவரால் பாவப் பரிகார பலியாக அனுப்பப்பட்ட தேவ்குமாரனாகிய இயேசுகிறிஸ்து கர்த்தராக உயர்த்தப்பட்டதையும் வேதம் தெளிவாகவே எடுத்துரைக்கிறது. இதுகுறித்து அப்போஸ்தலனாகிய யோவான் எழுதும்போது...
வசனம் இத்தனைத் தெளிவாக இருந்தாலும் இதற்குள்ளும் புகுந்து வசனத்தைப் புரட்டி மந்தைகளை சாய்த்துக்கொண்டுசெல்ல சிலர் காத்திருக்கிறார்கள். இதுபோன்ற வசனங்களில் பழகி தியானித்து மீண்டும் தியானித்து அதையே ஒவ்வொருவரோடும் பகிர்ந்துகொண்டு ஆவியில் பெலங்கொண்டு ஆத்துமாவில் உறுதிபெற்று சத்தியத்தில் வேர்கொள்ளவே நாம் அழைக்கப்படுகிறோம். கர்த்தர் தாமே நம்மை அவருடைய பாதைகளில் - அவர்தம் அடிச்சுவடுகளில் நடத்திசெல்லுவாராக. ஆமென்.
ஆங்கில மொழி இலக்கணத்தின் உயிரெழுத்துக்களான (vowels)a e i o u ஆகிய ஐந்து எழுத்துக்களில் துவங்கும் வார்த்தைகளின் மூலம் யோவான் 15 -ஆம் அதிகாரத்திலிருந்து கர்த்தருடைய வார்த்தையை தியானித்துக் கொண்டிருக்கிறோம்;அந்த வரிசையில் இரண்டாம் எழுத்தான e = Enjoy எனும் வார்த்தையினை தியானிக்க யோவான்.15:11 -ஆம் வசனத்தை ஆதாரமாக எடுத்துக்கொள்வோம்.
அந்த வசனம் இப்படியாக உரைக்கிறது, "என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்." (யோவான்.15:11) இங்கே ஆண்டவர் சந்தோஷம் எனக் கூறுவது எப்படிப்பட்ட சந்தோஷம்? சந்தோஷம் என்பதன் விளக்கம் என்ன? சந்தோஷம் என்பது உண்டாகும் ஆதாரம் என்ன? என்றெல்லாம் யோசித்தால் பற்பல விளக்கங்களும் போதனைகளும் கிடைக்கக்கூடும்.
ஒரு ஆங்கில அகராதி "Joy" என்பதற்குப் பின்வருமாறு விளக்கங்கூற முயற்சிக்கிறது;
JOY, n. The passion or emotion excited by the acquisition or expectation of good; that excitement of pleasurable feelings which is caused by success, good fortune,the gratification of desire or some good possessed, or by a rational prospect of possessing what we love or desire; gladness; exultation; exhilaration of spirits.
Joy is a delight of the mind, from the consideration of the present or assured approaching possession of a good.
JOY, v.i. To rejoice; to be glad; to exult.
I will joy in the God of my salvation. Hab 3.
அடுத்து நாம் தியானத்துக்கு எடுத்துக்கொண்ட வார்த்தையான "Enjoy" எனும் வார்த்தைக்கான விளக்கத்தைப் பார்ப்போமானால்.,
Enjoy ENJOY', v.t. To feel or perceive with pleasure; to take pleasure or satisfaction in the possession or experience of. We enjoy the dainties of a feast,the conversation of friends, and our own meditations.
மேற்கண்ட விளக்கங்களின் முடிவு இயேசுவே; அவரே என் சந்தோஷத்தின் ஊற்றுக்கண்ணாக இருப்பாரானால்- அவரால் நான் நிரப்பப்படுவேனானால் - அதையே என் ஆதாரமாகக் கொண்டு அதன் மூலம் என்னைச் சார்ந்தோரை நான் சந்தோஷப்படுத்துவேன்.
இந்த வசனத்தில் இரண்டு விசேஷித்த காரியங்களை நம்முடைய ஆண்டவர் குறிப்பிடுகிறார்;அது,"நிலையான சந்தோஷம்" மற்றும் "நிறைவான சந்தோஷம்". இவ்விரண்டு ஒன்றுக்கொன்று இணையானதும் ஒன்றையொன்று சார்ந்ததாகும்; நிலையான சந்தோஷம் நிறைவாகவே இருக்கும்; நிறைவான சந்தோஷமானால் அது நிலையாகவே இருக்கும்;அது எப்படி?
"அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." (சங்கீதம்.1:3 )
நிறைவானதும் நிலையானதுமான சந்தோஷம் வேண்டுமானால் அப்படிப்பட்ட சந்தோஷத்தை விரும்பும் ஆத்துமாவானது வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டுமாம்; இதே வேதப்பகுதியில் நம்முடைய ஆண்டவர் சொல்லுகிறார், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." (யோவான்.15:7 )
மீட்கப்பட்ட ஒரு பாவியின் கவனம் முழுவதும் இரட்சகராகிய கிறித்துவின் மீதே பதிந்திருக்க வேண்டும் என்பதற்கு இதைவிட நேரடியானதும் சிறப்பானதுமான வசனம் இருக்கமுடியாது; இணைந்து இசைந்து வாழ்தலில் தொழுதல் ரெண்டாம் பட்சமாகிவிடுகிறது.
கடும் உழைப்பாளியான ஒருவன் தனது கடமைகளை நிறைவேற்றுவதையே தொழுகையாக நினைக்கிறான்;இதன் மூலமே "செய்யும் தொழிலே தெய்வம்" எனும் சொற்றொடர் பிறந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயமாகும்.
அப்படியானால் எஜமானுக்கு செய்யும் சேவையே, தொழுகை என்று ஆகிறது. " நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" என்கிறார்,யோசுவா.(24:15)
சேவித்தல் என்பது தான் ஏற்றுக்கொண்ட பணியை செய்து முடித்தல் என்பதாகும்;அப்படியானால் கர்த்தருடைய பிள்ளைகளான நாம் ஏற்றுக்கொண்ட அல்லது பெற்றிருக்கும் பிரதான கட்டளை எது? அது நமக்குள் ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்று யோசிப்போமானால், அதுவே நமக்கு மாறாத நிலையான நிறைவான நித்திய சந்தோஷத்தைக் கொடுப்பதற்கும் ஆதாரமாகும்; நான் பெறாததையோ அல்லது என்னிடம் இல்லாததையோ நான் எப்படி அடுத்தவருக்குக் கொடுக்க இயலும்? அதுவே Enjoy எனும் வார்த்தையின் விசேஷித்த பொருளாகும்;இந்த வார்த்தையின் சரியான அர்த்தமாவது தான் பெற்று தனக்குள்ளிருந்து தருவது; அப்படிப்பட்ட சந்தோஷத்தை இந்த உலகில் இயேசுவானவர் மட்டுமே தரமுடியும்;ஏனெனில் அது தேவ அன்பினால் உண்டான சந்தோஷமாகும்; பிதாவின் அன்பினால்நிறைந்த இயேசு நம்மை நிரப்பும்போது மட்டுமே அந்த சந்தோஷம் வெளிப்படும்; இயேசுபிதாவில் நிலைத்திருந்து அவரால் பெற்ற சந்தோஷத்தையே நமக்குக் கொடுக்கிறார்; இயேசுவானவர் மற்ற மகான்களைப் போல தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட்டு எங்கோ சென்று அமர்ந்துவிடவில்லை; இன்றைக்கும் நம்முடன் உறவாடி நம்மைப் போதித்து நடத்துகிறார்; நல்ல போதகராகிய அவரைத் தவிர்த்துவிட்டு நான் எங்கிருந்து பெற்று எதை போதிக்கமுடியும்? இயேசு எனக்குள்ளிருந்து என்னை சந்தோஷப்படுத்துகிறார்; அவரிடத்திலிருந்து பெறும் சந்தோஷத்தினால் நான் மகிழ்ந்து என் நண்பர்களையும் உற்சாகப்படுத்துகிறேன்; இதுவே என்னைக் குறித்து தேவனுடைய நோக்கமாகும்.
ஜெபம்: எங்களை அதிகமாக நேசிக்கிற பரலோகப்பிதாவே தம்முடைய அன்பின் குமாரனுக்குள் எம்மை உமக்காகத் தெரிந்து கொண்ட தமது அன்புக்காக உம்மை அகமகிழ்ந்து துதிக்கிறோம்; இந்த சந்தோஷத்தையே நாங்கள் மற்றவருக்கும் கொடுத்து தமது சித்தத்தை நிறைவேற்ற வேண்டுகிறோம்,இயேசுகிறித்துவின் நாமத்தில் எமது மன்றாட்டைக் கேட்பீராக,ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அண்மையில் பொங்கல் விடுமுறை காலத்தில் ஒரு மாணவர் விடுதிக்கு ஊழியத்தின் நிமித்தமாக சென்றிருந்தேன்;அங்கிருந்த மாணவ மணிகளுடன் கொஞ்ச நேரம் பாடல் பாடி ஆராதித்து உற்சாகப்படுத்தி விட்டு அவர்களுடைய புரிதலுக்கேற்ற வண்ணமாகவும் எளிமையாகவும் வேதத்திலிருந்து ஒரு ஆலோசனை சொல்லவேண்டுமே என்று யோசித்தபோது எனது பல்வேறு சிந்தனா மண்டலத்தில் பல்வேறு தடைகள் வந்தது;ஏனெனில் அவர்களுக்குத் தெரியாததே இல்லை எனும் அளவுக்கு அத்தனை அருமையாக வசனம் சொல்லுவதிலும் பைபிள் கதைகளைச் சொல்வதிலும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஆனாலும் வேறு வழியில்லையே,எவ்வளவு பெரிய போதகராக இருந்தாலும் அவர்கள் சொல்லுவது உலகின் எங்கோ ஒரு மூலையில் ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒருவருக்காவது சொல்லப்பட்டதாகவே இருக்குமல்லவா, எனவே நம்முடைய சொந்த முயற்சிகளை விட்டுவிட்டு ஆண்டவருடைய பரிபூரண நடத்துதலுக்காக வழக்கம் போலக் காத்திருந்தேன்;காத்திருந்தேன், என்பது சும்மாயிருந்தேன் என்பதல்ல,ஆவியானவரின் சரியான இடைபடுதல் வரும்வரை பொதுவான ஆலோசனைகளைக் கூறுவதிலும் பாடல் பாடி உற்சாகப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினேன்;இறுதியாக ஏற்கனவே மனதில் வந்து போன ஒரு கருத்தையே ஆதாரமாகப் பிடித்துக்கொண்டு அதன் அடிப்படையிலேயே எனது தியானத்தை அமைத்துக்கொண்டேன்; அதுவே இன்றைய தியானமாக எனதருமை வாசகர்களுக்காக...
மொழிக்கு ஆதாரமானது உயிரெழுத்துக்கள் எனப்படும் "வவல்ஸ் (vowels)" என்பது நாம் அறிந்ததே; தமிழில் உயிரெழுத்துக்கள் யாது..? அது யாருக்கு தெரியும் என்பீர்களாகில் சற்றே தெரிந்துகொள்ளுவோம்; நமது தாய்மொழியான தமிழுக்கு ஆதாரமாக விளங்குவது உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள் ஆகும்; இவையிணந்து பிறப்பதே உயிர்மெய் எழுத்துக்கள்; இவற்றைக் கொண்டே சொற்களும் வாக்கியங்களும் அமைகிறது என்பதை நாம் அறிந்திருப்போம்; இதில் உயிரெழுத்துக்களில் குறில் மற்றும் நெடில் ஆகிய இரண்டு வகை உண்டு; அதுபோலவே மெய்யெழுத்துக்களில் வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூன்று வகை உண்டு;அது தற்போது முக்கியம் அல்ல;தமிழில் உயிரெழுத்துக்களில் குறில் எனப்படும் எழுத்துக்கள் அ இ உ எ ஒ ஆகியனவாகும்;அதுபோலவே ஆங்கில இலக்கணத்தில் a e i o u ஆகிய எழுத்துக்கள் ஆதாரமாக இருக்கிறது;இவையின்றி எந்த ஒரு வார்த்தையையோ வாக்கியத்தையோ அமைத்திட இயலாது;அதுபோலவே கர்த்தரோடு இணைந்த வாழ்ந்த வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய வார்த்தைகளையும் அது குறித்த ஆலோசனையையும் சுருக்கமாக தியானிப்போமாக.
விசேஷமாக இந்த ஐந்து ஆங்கில வார்த்தைகளுக்கான ஆதார வசனங்களையும் யோவான் எழுதிய நற்செய்தி நூலின் 15 -ஆம் அதிகாரத்திலிருந்தே தியானத்துக்காக எடுத்துள்ளேன்;ஆம்,கர்த்தரோடு இணைந்த வாழ்க்கை முறையை தியானிக்க நம்முடைய ஆண்டவரே கூறிச் சென்ற இந்த குறிப்பிட்ட வேதப் பகுதியைவிட சிறந்தது வேறொன்றுமில்லை தானே..?
ஆங்கில மொழியின்"வவல்ஸ் (vowels)" எனப்படும் உயிரெழுத்துகள் ஐந்து உள்ளது என்பதையும் அவை a e i o u என்றும் பார்த்தோம்;இந்த ஐந்து எழுத்துக்களில் ஆரம்பிக்கும் ஐந்து வார்த்தைகளாவன:
a = Abide e = Enjoy i = Invite o= Outreach u = Undergo
Abide in me-என்னில் நிலைத்திரு
மேற்கண்ட வார்த்தைக்கு ஆதாரமான வசனமானது,"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். " (யோவான்.15:4)
நம்முடைய ஆண்டவர் சொன்ன "என்னில் நிலைத்திருங்கள்" எனும் வார்த்தையானது ஆங்கிலத்தில் நேரடியாகவே மிகச் சிறப்பாக Abide in me என்றே குறிப்பிடப்படுகிறது;இதனைப் புரிந்துகொள்ள எந்த மூலபாஷையின் உதவியோ பெரிய வேத ஞானமோ தேவைப்படாது அல்லவா? ஆம், இதனை எளிதாகப் புரிந்துகொள்ளவும் செயல்படுத்தவும் அதன் விளைவை ஆத்மார்த்தமாக அனுபவித்து உணரவுமே திராட்சைசெடியானது உவமைப் பொருளாகவும் அதன் உவமேயப் பொருளாக இயேசுவானவரும் திகழ்கின்றன(ர்).
ஆண்டவர் சொல்வதன் தீவிரத்தை அவரே இப்படிச் சொல்லுகிறார், "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." (15:5) அதன் பலனாக ஆண்டவர் சொல்லும் இரண்டு குறிப்புகளாவன: ஒன்று அதிக கனிகள் (more fruit) மற்றது மிகுந்த கனிகள் (much fruit)
"என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்."(15:2 )
"நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." (15:5 )
நாம் அதிகக் கனிகள் கொடுப்பது மட்டுமல்ல,மிகுந்த கனிகளைத் தருவதும் நம்மைக் குறித்து ஆண்டவருடைய திட்டமாகும்;எந்த மரமோ செடியோ கொடியோ அது தன்னைப் பயிரிட்டவரின் பிரயாசத்துக்குரிய பலனைத் தருவது சிருஷ்டிப்பின் பொதுவான விதியாகும்.அதில் மேன்மை ஏதுமில்லை;ஆனால் அதிகக் கனிகளும் மிகுந்த கனிகளுமே கொண்டாட்டத்துக்கும் சந்தோஷத்துக்கும் காரணமாகும்.
இந்த விசேஷித்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால் அந்த கொடியானது செடியுடன் இணைந்திருக்கவேண்டும்;அப்போதுதான் செடியின் தன்மையும் நன்மையும் கொடியில் விளங்கும்;உதாரணத்துக்கு சில கொடிகளைப் பார்த்தால் அது செடியின் கிளைகளை மட்டுமே சார்ந்திராமல் அருகிலிருக்கும் மற்ற மரங்களைத் தேடி நாடி ஓடிச்சென்று சுற்றிக்கொள்ளும்;அதன் விளைவு அந்த குறிப்பிட்ட கொடியானது தனது வளர்ச்சியையும் ஸ்தானத்தையும் இழப்பதுடன் ஒரு கட்டத்தில் அது தானே சென்று சுற்றிக்கொண்ட அந்நிய மரத்தினால் நெருக்கிப்போடப்படும்;அதன் முடிவு பயங்கரமாக இருக்கும்;சுட்டெரிக்கப்படுவதே அதன்முடிவாக இருக்கும்.
ஆனால் செடியான கிறித்துவுடன் இணைக்கப்பட்டும் பிணைக்கப்பட்டும் இருக்கும் கொடியின் பலன் விசேஷமாகவே இருக்கும்;அந்த கொடியானது தனது சாரத்தை செடியிலிருந்தே பெறுவதுடன் தனது பாரத்தைத் தான் சுமக்காமல் அதனை செடியின் மீது வைத்துவிடுகிறது;இதன் காரணமாக அந்த கொடியானது அதிகப் பலனாகவும் மிகுந்த பலனாகவும் மாற்றிக் கொடுக்கிறது.
Abide-எனும் ஆங்கில வார்த்தையானது தன்னை மறைத்துக்கொள்ளுதல், காத்திருத்தல், சந்திக்கும் வரை அமர்ந்திருத்தல் என பொருள் படுகிறது; நாமும் செடியில் இணைக்கப்பட்ட கொடியாக நம்மை பாவித்துக்கொண்டு கிறித்துவில் இணைந்து பிணைக்கப்பட்டிருப்போமாக.
"கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் ".( ஆதியாகமம்.12:1 & 2 )
மேற்கண்ட வாக்கியம் நாம் அதிகமாக கேள்விப்பட்டதும் நமக்கு மிகவும் பிரியமானதுமான வேத வசனமாகும்; இதன் பிற்பகுதியையே பலரும் பிரதானமாக எடுத்துரைப்பர்; ஆனாலும் அதன் முற்பகுதியே விசேஷமானதாகும்; ஏனெனில் அதுவே ஆண்டவர் முதன்முதலாக ஆபிரகாமிடம் பேசியதாகும்; ஒருவேளை முதலாம் வசனமானது இரண்டாம் வசனமாகவும் இரண்டாவது வசனமானது முதல் வசனமாகவும் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? ஆனால் அது மிகச் சரியாக தேவனுடைய இதயத் துடிப்பை ஒரு மனுஷன் அறியும் வண்ணமாக முதலாவதாக அமைந்துள்ளது.
இதனால் நாம் அறியக்கூடிய சேதி என்ன, தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற விரும்பும் எந்தவொரு ஆத்துமாவும் முதலாவது தன்னிடம் தேவன் விரும்பும் மாற்றத்துக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்; தேவன் விரும்பும் மாற்றத்துக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டபிறகே அவருடைய திட்டத்தின் வட்டத்துக்குள் அந்த ஆத்துமா நுழையமுடியும்.
எனவே இன்றைய தியானத்துக்கு இரண்டாம் வசனத்தையல்ல, முதலாம் வசனத்தை எடுத்துக்கொள்ளுவோம். "கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ ". ( ஆதியாகமம்.12:1 )
"விட்டுப் புறப்படுதல்" என்பது சாதாரணமான சவால் தானா, என்று யோசிப்போமானால் எந்தவொரு தனிமனிதனும் விட இயலாத மூன்று முக்கியமான அடையாளங்களைத் தொலைக்கச் சொல்லி கர்த்தர் ஆபிராமிடம் சொன்னது எத்தனை கடினமானது என்பது விளங்கும்; இதனை ஒவ்வொன்றாக தியானிப்போம்.
நீ உன் தேசத்தை விட்டுப் புறப்பட்டுப் போ..!
எந்த தேசத்துக்குச் சென்றாலும் தன்னுடைய தேசத்தைக் குறித்த மேன்மையை யாரால் இழக்க இயலும்? ஆனால் ஆபிராமுக்கு ஆண்டவர் கொடுத்த ஒரு சவால் என்னவென்றால் உன் தேசத்தை விட்டுப் போ என்பதே;ஏன் தேசத்தை விடவேண்டும்? தேசம் என்பது ஆட்சியாளரின் எண்ணங்களும் கொள்கைகளும்; அது ஜனநாயக நாடோ மன்னராட்சி நடைபெறும் நாடோ அதன் ஆட்சியாளரே தன் ஜனத்தின் வாழ்க்கை தரத்துக்கும் பாதுகாப்புக்கும் உத்திரவாதியாக இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே; ஆனால் தேவன் தான் தேர்ந்தெடுத்த மனுஷனுக்கு தாமே பாதுகாப்பாகவும் அடையாளமாகவும் இருக்க விரும்புகிறார்; மாத்திரமல்ல, ஆபிராம் என்ற சாதாரணக் குடியானவனையே, தேசப் பிதாவாக மாற்றும் மாபெரும் திட்டம் அவருடைய சிந்தையில் இருக்கிறது; இதனை இப்போதே அறிவிக்க முடியாது; அதனை ஏற்கும் மனநிலைக்கு அவன் இன்னும் ஆயத்தமாகவில்லை; ஆனாலும் தேவன் தம்முடைய திட்டத்தின் ஒரு பகுதியை சிறிய அளவில் அறிமுகப்படுத்துகிறார்; தாம் செய்யவிரும்பும் காரியத்தை நடைமுறைப்படுத்தும் முன்பதாக தம்முடைய தரிசனப் புருஷனிடம் சில மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறார்; இன்றைக்கு ஒரு தேசத்தை விட்டு மறுதேசத்துக்குச் சென்று மேன்மையடைந்தோருக்கெல்லாம் ஆபிராம் முன்னோடியாக இருக்கிறார்; ஆம், ஆபிராம் ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார் என்பதே அவரைக் குறித்த வரலாறு.
நீ உன் இனத்தை விட்டுப் புறப்பட்டுப் போ..!
ஒரு தேசத்தை விட்டாலும் விடுவோம், இனத்தை விடமுடியுமா? இனம் என்பது என்ன? நம்முடைய கலாச்சாரம், நம்முடைய வாழ்க்கை முறை, நம்முடைய மொழி, நம்முடைய உறவுகள்.., இத்தனையையும் ஒரு மனிதன் விடமுடியுமா?
இன்றைக்கு கர்த்தரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டும் தங்கள் குடும்பங்களையும் கலாச்சாரத்தையும் விடமுடியாது ரெட்டை வாழ்க்கை வாழும் கிறித்தவர்கள் எத்தனை பேர் உண்டல்லவா?
ஆனால் தேவ மனிதனான ஆபிராமுக்கு ஒரு மாபெரும் சவால் விடப்பட்டது, "நீ உன் இனத்தை விட்டுப் புறப்பட்டுப் போ..!" ஏன் இனத்தை விடமுடியாது? ஒரு தொழில் நிமித்தமாகவோ அவசர உதவிகள் நிமித்தமாகவோ நம்முடைய இன மக்களை நாம் ஆதாயப்படுத்திக் கொள்ள எண்ணுகிறோம்.
சென்னை போன்ற நகரங்களுக்குக் குடிபெயர்ந்த பிறகும் கூட தங்கள் தங்கள் இனத்தின் பெயரில் சங்கங்களை அமைத்துக் கொண்டு மத நம்பிக்கைகள் வேறுபட்டாலும் இன உணர்வால் சேர்ந்திருக்கவே எந்தவொரு இனமும் விரும்புகிறது அல்லவா?
ஆனால் ஆபிராமைத் தமக்காகத் தேர்ந்தெடுத்த ஆண்டவர் தன் தாசனாகிய ஆபிராம் தன்னுடைய எந்தவொரு தேவைக்கும் தம்மையே சார்ந்திருக்க சித்தங் கொண்டார்; ஒருவேளை தேசத்தை விட்டாலும் இனத்தை விடாதிருந்தால் அந்த உணர்வுடன் இசைந்திருக்கும் சிலருடைய உதவி ஒத்தாசைகள் ஆபிராமுக்குக் கிடைத்திருக்கலாம்; ஆனால் தன்னுடைய இனத்தையுங் கூட ஆபிராம் சார்ந்திருப்பது ஆண்டவருக்குப் பிரியமில்லை என்றறிகிறோம்.
நீ தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டுப் போ..!
இது யாருமே ஏற்க விரும்பாத மாபெரும் சவாலாகும்; உதாரணமாக தான் இன்ன இனத்தைச் சேர்ந்தவன் அல்லது இன்ன வகையறா அல்லது இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதே ஒரு மனிதனுக்குப் பாதுகாப்பாகும்;
அந்நாட்களில் மக்கள் கூட்டங் கூட்டமாக கூடாரங்களிலும் குச்சு வீடுகளிலும் வாழ்ந்தார்கள்; எந்தவொரு மனுஷன் எதிர்பட்டாலும் (இன்றைக்கும்) கேட்கப்படும் முதலாவது கேள்வி, என்னவென்றால் நீ எந்த ஊரான், எந்த இனத்தான், யாருடைய மகன் என்பது தான்; மற்றபடி யாரேனும் உளவாளிகள் வேற்று இன மக்களுக்குள் ஊடுறுவி அவர்களைக் கலைத்துப் போட்டு ஆக்கிரமித்து விடுவார்களோ என்ற அச்சம் ஒவ்வொரு இன மக்களுக்குள்ளும் இருந்தது.
உதாரணத்துக்கு சிந்துசமவெளி நாகரிகம்; இன்றைக்கும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நாகரீகத்தில் சிறந்து விளங்கிய அந்த கலாச்சாரம் யாரால் எப்படி அழிக்கப்பட்டது என்பதே இன்று வரை அறியப்படவில்லை; அப்படியே ஆபிராமின் காலத்திலும் இதே பதட்டமான சூழ்நிலை நிலவியிருக்கும்; அப்படிப்பட்ட கட்டுப்பாடான கலாச்சார பழக்க வழக்கங்களைவிட்டு வெளியேறி அதுவும் தன் தகப்பன் வீட்டையும் விட்டு வெளியேறி ஒரு மனுஷனால் எப்படி உயிர் தப்பி சௌக்கியமாக செல்வ செழிப்புடன் வாழமுடியும்?
நம்முடைய சொல்வழக்கில் சொல்வது போல "இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க" யார் தான் சம்மதிப்பார்? ஆனால் ஆபிராம் அந்த சவாலை ஏற்றுக்கொண்டார் என்பதே அவர்தம் வீரவரலாறு; 'தனி மரம் தோப்பாகாது ' என்பார்கள்; ஆனால் ஆபிராம் என்ற தனிமரம் தோப்பாக மாத்திரமல்ல,சிங்கார வனமாகவும் மாறியது.
"உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்." (ஏசாயா.51:2 ) "அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்." (ஆதியாகமம்.15:6 )
மேற்கண்ட வேத வசனத்தை வியாக்கியானம் செய்யும் தற்காலப் போதகர்கள் பலரும் ஆபிராமின் விசுவாசத்தைக் குறித்து சிலாகித்து பிரசங்கிப்பார்கள்; அது கேட்க நன்றாகவே இருக்கும்; ஆனாலும் இன்று ஒரு விசேஷித்த வெளிப்பாட்டை இந்த வசனத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளப்போகிறோம்.
நாம் பெரும்பாலும் அறிந்தவண்ணமாக ஆண்டவர் செய்வதாகச் சொன்ன ஏதோ ஒன்றின் மீதோ அல்லது அதையெல்லாம் ஆண்டவர் தனக்கு நிச்சயமாகவே செய்து தன்னை ஒரு மிகப் பெரிய செல்வந்தனாக்கிவிடுவார் என்பது ஆபிராமின் விசுவாசமாக இருந்திருக்கமுடியாது; ஆனால் இவ்வாறு தன்னுடன் பேசிய மகா தேவனை ஆபிராம் விசுவாசித்தார் என்பதே சத்தியமாக இருக்கமுடியும்; வேறு வார்த்தையில் சொல்வதானால் ஆபிராம் தன் தேவனுக்கு விசுவாசமாக நடந்துகொண்டார் எனலாம்.
இது ஒரு குறிப்பிட்டதொரு பொருளாதார ஆசீர்வாதத்தை இலக்காகக் கொண்டு ஆண்டவரை விசுவாசிப்பதைக் காட்டிலும் விசேஷமானது என்று கருதுகிறேன்; இது இராஜ விசுவாசம் சம்பந்தமான உயரிய நிலையாகும்; ஏனெனில் தன் தேசத்தையும் தன் இனத்தையும் தன் தகப்பன் வீட்டையும் விட்டு விட்டு அதற்கு மேலான ஒரு நிலைக்கு வரமுடியும் என்பது எந்தவொரு சாமான்ய மனிதனாலும் யோசிக்கமுடியாத விசேஷித்த சிந்தனையாகும்; அப்படிப்பட்ட விசேஷித்த சிந்தனையானது தன்னுடன் இடைபட்டவரின் மீதான அளவற்ற நம்பிக்கையே உருவாக்கமுடியுமே தவிர அவர் தருவதாகச் சொன்னவற்றால் ஏற்பட்ட சிந்தை மாற்றமாக இருக்கமுடியாது; அப்படிப்பட்ட வறிய நிலையிலோ பேராசை பிடித்தவராகவோ ஆபிராம் இருந்தது போலத் தெரியவில்லை.
எனவே கர்த்தரை விசுவாசிப்பது என்பது அவருக்காக மாத்திரம் , அவரோடு இருக்க, அவரை மட்டும் சார்ந்திருப்பது என்ற கருத்தை ஆபிராமின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளுவோமானால் நாம் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வையே மாறிவிடும் என்று எண்ணுகிறேன். நம்முடைய சபைகளுக்கு நாம் செல்லும் நோக்கங்களையும் மாற்றிவிடும்; நம்முடைய பீடங்களிலிருந்து நம்மை நோக்கி வரும் செய்திகளும் மாறிவிடும், எனக்கு அருமையானவர்களே; ஆம், நம்முடைய போதகர்கள் நமக்காகவே போதிக்கிறார்கள்; அவர்கள் நிலை பரிதாபமானது; நமக்கு ஏற்ற வண்ணமாக அவர்கள் பேசாவிட்டால் நாம் அவர்களைப் புறக்கணிக்கிறோம்; அதன் காரணமாகவே அவர்கள் கர்த்தரிடத்திலிருந்து பெற்று, கர்த்தருக்காகப் பேசாமல் நம்முடைய முகங்களைப் பார்த்தும், நம்முடைய முக மலர்ச்சியைப் பார்த்தும் நமக்காகவும் போலியாகப் பிரசங்கிக்கிறார்கள்.
இனி நம்முடைய பிரசங்கப் பீடங்கள் பொருளாதார செழிப்பைக் குறித்து பேசாமல் நமது ஆவிக்குரிய செழிப்பைக் குறித்து பேசுவதாக; இனி நம்முடைய போதகர்கள் ஆபிரகாமின் விசுவாசத்தைக் குறித்து தவறாகப் போதிக்காமால் கிறித்துவைக் குறித்த விசுவாசத்தில் நாம் கட்டப்படுவதைக் குறித்து போதிக்கட்டுமே; அந்த நாள் இன்ப நாள்..!
ஜெபம்: எங்களை நேசிக்கிற நல்ல பிதாவே, உம்முடைய பரிசுத்த பிள்ளையான இயேசுகிறித்துவைப் பற்றும் விசுவாசத்தை எமது உள்ளத்தில் இன்றைக்கு ஒருமுறையாக ஊற்றியருளும்; நாங்கள் எங்களுக்கானவைகளில் அல்ல, தமக்கானவைகளில் நாட்டம் கொள்ளும் புதிய இதயத்தை எங்களுக்குத் தாரும்;எங்கள் நேச மீட்பரான இயேசுகிறித்துவின் நாமத்தினால் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளுவீராக,ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
"நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." (பிலிப்பியர்.3:12)
மேற்காணும் வேத வசனத்தை ஒரு குழுவில் விளக்கிக் கொண்டிருந்த போது வெளியான சிந்தனைகளை இங்கே பகிருகிறேன்; இந்த வசனத்தில் பிடித்துக்கொள்ளும்படி, பிடிக்கப்பட்டேன் ஆகிய இரு வார்த்தைகளை தியானிப்போம்.
பிடிக்கப்பட்ட பவுலடிகள் இங்கே பவுலடிகள் தான் கிறித்து இயேசுவினால் ஏதோ ஒன்றுக்காகப் பிடிக்கப்பட்டதாகவும் தானும் ஏதோ ஒன்றை பிடித்துக் கொள்ளும்படியாகவும் தொடருவதாகக் கூறுகிறார்; தான் கிறித்து இயேசுவினால் பிடிக்கப்பட்டதாகக் கூறினாலும் அதைக் குறித்த வருத்தத்தையோ துக்கத்தையோ இங்கே குறிப்பிடாமல் ஆசையாய்த் தொடருவதாகவும் கூறுகிறார்; இதனால் கிறித்து இயேசுவினால் பிடிக்கப்பட்டது ஒரு சுயாதீனமற்ற அடிமை நிலை என்று கூற இயலாது; அவர் தாமே விருப்பத்துடன் இதில் இருக்கிறார்; இது பவுலடிகளின் வாழ்க்கையில் தான் பெற்றிருந்த அனைத்து மேன்மைகளையும் விட்டு விட்டு தொடரும்படியான ஒரு விசேஷித்த ஓட்டமாக இருக்கிறது; எனவே இதைக் குறித்த வருத்தம் அவரிடத்தில் இல்லை; அவரைப் பிடித்த இயேசுவானவரும் கூட அவரை ஆக்கிரமித்துவிடவில்லை; அவரை மேலான ஒன்றுக்காகத் தேர்ந்தெடுத்து அந்த மேலானதைக் குறித்த வாஞ்சையை அவருக்குக் கொடுத்திருந்தார்; அதன் காரணமாகவே அவருக்குத் தன்னைச் சுற்றிலுமிருந்த மற்றவையெல்லாம் குப்பையாகத் தெரிந்தது.
பவுல் எப்படி பிடிக்கப்பட்டார் என்பது தனியான தியானமாகும்; ஆனாலும் அவர் பீடிக்கப்படவில்லை என்பது திண்ணம்; பீடிக்கப்படுதல் என்றால் ஆக்கிரமிக்கப்படுதல் அல்லது அடிமைப்படுத்தப்படுதல் ஆகும்; ஆனால் அர்ப்பணம் என்ற நிலையில் இதற்கு அவசியமில்லை; இயல்பானதொரு மனமாற்றத்தினாலும் தன்னைக் கவர்ந்த ஒரு மேலான அன்பினாலும் கட்டப்பட்ட ஒருவர் தன் சுயாதீனத்தை இழந்தது போல இருந்தாலும் அதுவே சுதந்தரமாகவும் இருக்கிறது; இதன் காரணமாகவே "ஆசையாய்த் தொடருகிறேன்" எனும் அறிக்கை வெளிப்படுகிறது.
பிடித்துக்கொள்ளும்படி பவுலடிகள்
பவுலடிகளைப் பிடித்த ஆண்டவர் பவுலடிகள் பிடித்துகொள்ளும்படியான வேறு ஏதோ ஒன்றைக் காட்டியே அவரைப் பிடித்திருக்கிறார்; அவருக்குக் காட்டப்பட்ட விசேஷமானதொன்று பவுலடிகளுக்கும் பிடித்திருந்தது; அது பிடித்திருந்ததால் அதனைப் பிடித்துக்கொள்வதற்காக தான் ஆண்டவரால் பிடித்துக்கொள்ளப்பட முழுமனதுடன் சம்மதிக்கிறார்.
பவுலடிகள் தான் பிடித்துக் கொள்ளத் தொடரும் காரியத்தைப் பிடித்துவிட்டதாக எண்ணியிருந்தால் அதை நோக்கி ஆசையாய்த் தொடருகிறேன் என்று கூறியிருக்கமாட்டார் அல்லவா?
அப்படியானால் தான் கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி என்று பவுலடிகள் கூறும் இலக்கு எது, அதற்கான நோக்கம் என்ன என்று தியானிப்போமானால் அதுவே நம்முடைய இலக்காகவும் நோக்கமாகவும் ஆசையாகவும் மாறுவதால் நாமும் கிறித்து இயேசுவினால் பிடிக்கப்படவும் பிடிக்கப்பட்ட நோக்கத்தைப் பிடித்துக்கொள்ளவும் அர்ப்பணிப்போம்.
தியானத்துக்கு: நீங்கள் கிறித்து இயேசுவினால் எப்படி பிடிக்கப்பட்டீர்கள் அல்லது எப்படி பிடிக்கப்பட விரும்புகிறீர்களா..?
கிறித்து இயேசுவினால் பிடிக்கப்பட்ட நீங்கள் எதைப் பிடித்துக் கொள்வதை நோக்கி சென்று கொண்டிருக்கிறீர்கள் அல்லது நீங்கள் பிடித்திருப்பதாக நினைப்பது எது..?
ஜெபம்: எங்களை நேசிக்கிற பரலோகப் பிதாவே, மானிடராகிய எங்கள் மீது கொண்ட அன்பினால் தமது சொந்த குமாரனை எங்களுக்காக அனுப்பி, எங்களைத் தேடியெடுத்தமைக்காக தம்மைத் துதிக்கிறோம்; இந்த நாளிலும் கூட நாங்கள் உம்மால் பிடிக்கப்படவும் நாங்கள் பிடிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றவும் எமக்கு கிருபை பாராட்டும்; இரட்சகரும் மீட்பருமான இயேசுகிறித்துவின் நாமத்தில் பிதாவே,ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
கடந்த மூன்று நாட்களாக ஒரு ஆவிக்குரிய மனுஷன் பண்படுத்தப்படுதலில் அவசியப்படும் விசேஷித்த தெய்வீக குணாதிசயங்களைக் குறித்து தியானித்து வருகிறோம்;இதற்கு ஆதாரமாக வாக்கியமாக ''...நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.''(எசேக்கியேல்.36:9) - எனும் வசனத்தை எடுத்துக்கொண்டோம்.
''...நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.'' (எசேக்கியேல்.36:9) - எனும் வாக்கியத்தில் ஒரு கர்த்தருடைய பிள்ளை பண்படுவதற்கு ஆண்டவர் மூன்று முக்கியமான குணாதிசயங்களை ஆதாரமாக வைத்திருக்கிறார் என்று பார்த்தோம்; அதில் தேவனுடைய அன்பினால் நிறைந்த இருதயம் பண்பட்டதாக இருக்கும் மற்றும் கர்த்தருக்கு பயப்படும் பயத்தால் நிறைந்த இருதயம் பண்பட்டதாக இருக்கும் என்ற வரிசையில் இறுதியாக கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்த இருதயம் பண்பட்டதாக இருக்கும் என்பதை இன்று தியானிப்போமாக.
எந்த ஒரு தேவனுடைய பிள்ளையும் பண்பட இம்மூன்று மாத்திரமே போதும் என்பதல்ல, இந்த தியானத்தின் நோக்கம்; ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணமாக உபத்திரவம் கூட ஒரு தேவனுடைய பிள்ளையைப் பண்படுத்த உதவும்; ஆனால் அந்த உபத்திரவத்தை சகிக்க பொறுமை எனும் நற்குணம் அவசியம்; அப்படிப்பட்ட பொறுமையானது பூரணமாக கிரியை செய்ய தேவனுடைய அன்பினால் நிறைந்த இருதயம் வேண்டும்; இப்படி இந்த தியானம் தொடர்ந்துகொண்டே போகும்.
கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்த இருதயம் பண்பட்டதாக இருக்கும் அல்லது நாம் பண்பட்டவர்களாக விளங்க கர்த்தரை அறிகிற அறிவு அவசியம்; ஆம், அவரை அறிகிற அறிவு மாத்திரமே நமக்கு அமரிக்கையையும் நம்பிக்கையையும் பெருகப்பண்ணுகிறது.
"என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன். " (ஓசியா.4:6)
"என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள்." (ஓசியா.8:12)
"அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்." (தானியேல்.10:12)
மேற்காணும் மூன்று வசனங்களையும் நிதானமாக ஆராய்ந்து வாசித்தால் அறிவை அடைவதால் பெறக்கூடிய நன்மைகளையும் அதனை இழப்பதால் அல்லது அதைக் குறித்த கரிசனையில்லாததால் விளையக்கூடிய தீமைகளையும் தேவ கோபத்தையும் குறித்து பார்க்கிறோம்.
கர்த்தரை அறிகிற அறிவு என்பது என்ன? "அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்." (எரேமியா.22:16)
'இதுதானே அது' என்பதை விளக்க மேற்கண்ட வசனம் உதவுகிறது; ஆனாலும் நாம் சுருக்கமாக அறியவேண்டியது என்னவென்றால் கர்த்தருடைய உடன்படிக்கையை அறிந்து அதன்படி செய்வதே கர்த்தரை அறிகிற அறிவு எனலாம்; அவருடைய உடன்படிக்கை என்பது என்ன, அதனைக் கைக்கொள்வதன் பயன் என்ன என்பதைக் குறித்து சங்கீதம் 103-இல் முழுமையாக வாசித்தறியலாம்; அதன் மையமான வாக்கியத்தை தொடர்ந்து வாசிப்போம். "கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது." (சங்கீதம்.103:17,18)
கர்த்தரை அறிகிற அறிவைப் போதிக்கும் அவருடைய உடன்படிக்கை என்பது யாது ? மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாகிய இயேசுகிறித்துவைக் குறித்த தெளிவான அறிவே அந்த அறிவு.
கர்த்தரை அறிகிற அறிவுக்கு ஆதாரம் என்ன?
கர்த்தரை அறிகிற அறிவுக்கு நேராக நடத்துவது அர்ப்பணமே; பரபரப்பான இந்த உலகில் நாம் சன்மார்க்கமாகவும் உத்தமமாகவும் மட்டும் நடந்தால் போதும் என்று பற்பல விவாதங்களையும் நம்மைச் சுற்றிலும் நடக்கும் பல்வேறு மோசடிகளையும் கண்டுங்காணாமல் செல்லும் போக்கு நிலவுகிறது; ஆனால் அர்ப்பணத்துடன் - நிதானத்துடன் - உத்தமத்துடன் - அவரை அறிகிற அறிவிலும் நாம் பெருகவேண்டும் என்று பேதுரு ஆலோசனை கூறுகிறார்.
"இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது." (2.பேதுரு. 1:5 - 8 )
மேற்கண்ட வசனங்களின் படி நாம் உத்தமர்களாக விளங்குவது மாத்திரமல்ல, தேவன் நம்மை அழைத்த நோக்கம் நாம் அவரை அறிகிற அறிவில் பெருகி கனிதரும் ஜீவியத்தினால் இன்னும் பெருக வேண்டும் என்பதே தேவ திட்டமாகும்.
கர்த்தரை அறிகிற அறிவினால் உண்டாகும் நன்மைகள் என்ன?
கர்த்தரை அறிகிற அறிவினால் உண்டாகும் நன்மைகள் என்பது இம்மைக்குரிய காரியங்களைவிட மறுமைக்குரியவற்றில் இன்னும் அதிக மேன்மையானவைகளில் விளங்கும்; மேலும் நாம் வாழும் இந்த சமுதாயமானது கர்த்தரை அறிகிற அறிவினால் நிறையும்போது அவருடைய இராஜ்யம் விரைந்து வரும்.
கர்த்தரை அறிகிற அறிவினால் உண்டாகும் உடனடி நன்மைகள் யாதெனில் நம்முடைய குடும்பங்களில் சமாதானமும் சௌக்கியமும் நிறைந்திருக்கும்; ஞானத்தோடு கூடிய ஆசீர்வாதங்கள் தங்கியிருக்கும்.
"உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும். உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்." (நீதிமொழிகள். 3:5 - 10)
மேற்கண்ட வேதப் பகுதியிலிருந்து நாம் போதிக்கப்படுவது யாதெனில், கர்த்தரை அறிகிற அறிவினால் நம்முடைய நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்வதுடன் நம்முடைய சூழ்நிலையையும் வளப்படுத்திக் கொள்கிறோம்.
தவறான ஒரு காரியத்தை தவறாமல் ஊக்கத்துடனும் நேர்த்தியாகவும் செய்யும் மாற்று மார்க்கத்தவரிடம் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுகிறது; அதன் விளைவை நம்முடைய தேசத்தில் காண்கிறோம்; ஆனால் சரியான ஒரு காரியத்தை தவறாகவும் அசிரத்தையுடனும் ஒழுங்கீனமாகவும் செய்துகொண்டிருப்பதன் துக்கத்தையும் நம்முடைய சபைகளிலும் குடும்பங்களிலும் காண்கிறோம்; நாம் இந்த காலக் கட்டத்திலாவது உணர்வடைந்து எழுந்து கட்டுவோமானால் நம்முடைய பாழான ஸ்தலங்கள் கட்டப்பட்டு நம் மீதான நிந்தனையானது களையப்படும் என்பது நிச்சயம்.