Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தினம் தினம் தித்திக்கும் மன்னா..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 347
Date:
RE: தினம் தினம் தித்திக்கும் மன்னா..!
Permalink  
 


  • தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது: - யாக்கோபு 1:1

பல்வேறு போதனா குழப்பங்களும் உபதேசக் கோளாறுகளும் பெருகியிருக்கும் இக்காலத்தில் மேற்காணும் வசனத்தின் கருத்து சிந்திக்கத்தக்கது ஆகும். கிறிஸ்துவின் சொந்த சகோதரனும் அப்போஸ்தலனுமாகிய யாக்கோபு எழுதிய இந்த பொதுவான நிருபத்தின் ஆரம்பத்தில் முதல் இரண்டு வார்த்தைகளும் சத்திய வேதத்தின் மொத்த சாராம்சத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.

தேவனுக்கும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவுக்கும் - எனும் இவ்விரு வாக்கியங்களை நிதானமாக சிந்தித்தால் தேவத்துவத்தின் இருவேறு தன்மைகளையும் நாம் தியானித்து அறியமுடியும். இதன்படி தேவன் எனும் சொல்லானது பிதாவாகிய தேவனையும் கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அவரிலிருந்து வேறுபட்டவர் என்பதையும் இருவேறு நபர்கள் என்பதையும் நாம் அறியலாம். ஆனாலும் இருவரும் ஒருவராய் இருப்பதையும் வேதம் உறுதியாக எடுத்துரைக்கிறது. பிதாவை மறுதலித்து இயேசுவையே யெகோவா என்போரும் இயேசுவை மறுதலித்து அவர் பிதாவினால் சிருஷ்டிக்கப்பட்டவர் என்றும் அவர் ஈடுபலி என்றும் அவரை நோக்கி நாம் ஜெபிக்கமுடியாது என்போரும் நம்மிடையே ஊடுறுவி குழப்பம் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சூழலில் திரித்துவ சத்தியத்துக்கு ஆதாரமாக விளங்கும் இதுபோன்ற வசனங்களை நாம் அறிந்திருக்கவேண்டும். மாத்திரமல்ல, நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் இதேபோன்று சொன்னதை நினைவில் கொள்ளுவது நல்லது. அது பின்வருமாறு...

  • உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். - யோவான் 14:1

இங்கே தேவன் எனும் சொல் மூல பாஷையின் படி ஏலோஹிம் - எங்கும் நிறைந்தவர் என்றும் அவரால் பாவப் பரிகார பலியாக அனுப்பப்பட்ட தேவ்குமாரனாகிய இயேசுகிறிஸ்து கர்த்தராக உயர்த்தப்பட்டதையும் வேதம் தெளிவாகவே எடுத்துரைக்கிறது. இதுகுறித்து அப்போஸ்தலனாகிய யோவான் எழுதும்போது...

  • தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார். -யோவான் 1:18

அதேபோன்று பவுலடிகள் எழுதும்போது...

  • அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். -
    கொலோசெயர் 1:15

வசனம் இத்தனைத் தெளிவாக இருந்தாலும் இதற்குள்ளும் புகுந்து வசனத்தைப் புரட்டி மந்தைகளை சாய்த்துக்கொண்டுசெல்ல சிலர் காத்திருக்கிறார்கள். இதுபோன்ற வசனங்களில் பழகி தியானித்து மீண்டும் தியானித்து அதையே ஒவ்வொருவரோடும் பகிர்ந்துகொண்டு ஆவியில் பெலங்கொண்டு ஆத்துமாவில் உறுதிபெற்று சத்தியத்தில் வேர்கொள்ளவே நாம் அழைக்கப்படுகிறோம். கர்த்தர் தாமே நம்மை அவருடைய பாதைகளில் - அவர்தம் அடிச்சுவடுகளில் நடத்திசெல்லுவாராக. ஆமென். biggrin



__________________


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஆங்கில மொழி இலக்கணத்தின் உயிரெழுத்துக்களான (vowels) a e i o u ஆகிய ஐந்து எழுத்துக்களில் துவங்கும் வார்த்தைகளின் மூலம் யோவான் 15 -ஆம் அதிகாரத்திலிருந்து கர்த்தருடைய  வார்த்தையை தியானித்துக் கொண்டிருக்கிறோம்;அந்த வரிசையில் இரண்டாம் எழுத்தான e = Enjoy எனும் வார்த்தையினை தியானிக்க யோவான்.15:11 -ஆம் வசனத்தை ஆதாரமாக எடுத்துக்கொள்வோம்.

images?q=tbn:ANd9GcRyQMCgLtowXkkCfL4zGUZw0MV3KJtpt1whTwHESUUr5eH-64dA

அந்த வசனம் இப்படியாக உரைக்கிறது, "என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்."  (யோவான்.15:11) இங்கே ஆண்டவர் சந்தோஷம் எனக் கூறுவது எப்படிப்பட்ட சந்தோஷம்? சந்தோஷம் என்பதன் விளக்கம் என்ன? சந்தோஷம் என்பது உண்டாகும் ஆதாரம் என்ன? என்றெல்லாம் யோசித்தால் பற்பல விளக்கங்களும் போதனைகளும் கிடைக்கக்கூடும்.

ஒரு ஆங்கில அகராதி "Joy" என்பதற்குப் பின்வருமாறு விளக்கங்கூற முயற்சிக்கிறது;

JOY, n. The passion or emotion excited by the acquisition or expectation of good; that excitement of pleasurable feelings which is caused by success, good fortune,the gratification of desire or some good possessed, or by a rational prospect of possessing what we love or desire; gladness; exultation; exhilaration of spirits.

Joy is a delight of the mind, from the consideration of the present or assured approaching possession of a good.

JOY, v.i. To rejoice; to be glad; to exult.

I will joy in the God of my salvation. Hab 3.

images?q=tbn:ANd9GcRPDaGV2o-ZS9tLsKMx_pEjiY_ij9T2DjQGIlbVxTJnf40mZiQH

அடுத்து நாம் தியானத்துக்கு எடுத்துக்கொண்ட வார்த்தையான "Enjoy" எனும் வார்த்தைக்கான விளக்கத்தைப் பார்ப்போமானால்.,

Enjoy ENJOY', v.t.
To feel or perceive with pleasure; to take pleasure or satisfaction in the possession or experience of. We enjoy the dainties of a feast,the conversation of friends, and our own meditations.

images?q=tbn:ANd9GcSj7vju86DOalDSSJ3ScAAhD7q5Q3Z63tO-cnTO_tUgtasJ8a-_

மேற்கண்ட விளக்கங்களின் முடிவு இயேசுவே; அவரே என் சந்தோஷத்தின் ஊற்றுக்கண்ணாக இருப்பாரானால்- அவரால் நான் நிரப்
ப்படுவேனானால் - அதையே என் ஆதாரமாகக் கொண்டு அதன் மூலம் என்னைச் சார்ந்தோரை நான் சந்தோஷப்படுத்துவேன்.

"என்னுடைய சந்தோஷம் உங்களில் நிலைத்திருக்கும்படிக்கும், உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கும், இவைகளை உங்களுக்குச் சொன்னேன்." (யோவான்.15:11)

இந்த வசனத்தில் இரண்டு விசேஷித்த காரியங்களை நம்முடைய ஆண்டவர் குறிப்பிடுகிறார்;அது,"நிலையான சந்தோஷ‌ம்" மற்றும் "நிறைவான சந்தோஷம்". இவ்விரண்டு ஒன்றுக்கொன்று இணையானதும் ஒன்றையொன்று சார்ந்ததாகும்; நிலையான சந்தோஷம் நிறைவாகவே இருக்கும்; நிறைவான சந்தோஷமானால் அது நிலையாகவே இருக்கும்;அது எப்படி?

"அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்." (சங்கீதம்.1:3 )

யார்? எப்படி?

"கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்." (சங்கீதம்.1:2 )

நிறைவானதும் நிலையானதுமான சந்தோஷம் வேண்டுமானால் அப்படிப்பட்ட சந்தோஷத்தை விரும்பும் ஆத்துமாவானது வார்த்தையில் நிலைத்திருக்க வேண்டுமாம்; இதே வேதப்பகுதியில் நம்முடைய ஆண்டவர் சொல்லுகிறார், "நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்." (யோவான்.15:7 )

images?q=tbn:ANd9GcTiIjQDOoGMtK31E6QoMG_23fTsNPiatNY5qY2H04dUgcrKfypQactlkJxP

மீட்கப்பட்ட ஒரு பாவியின் கவனம் முழுவதும் இரட்சகராகிய கிறித்துவின் மீதே பதிந்திருக்க வேண்டும் என்பதற்கு இதைவிட நேரடியானதும் சிறப்பானதுமான வசனம் இருக்கமுடியாது; இணைந்து இசைந்து வாழ்தலில் தொழுதல் ரெண்டாம் பட்சமாகிவிடுகிறது.

கடும் உழைப்பாளியான ஒருவன் தனது கடமைகளை நிறைவேற்றுவதையே தொழுகையாக நினைக்கிறான்;இதன் மூலமே "செய்யும் தொழிலே தெய்வம்" எனும் சொற்றொடர் பிறந்திருக்கும் என்பது எனது தனிப்பட்ட அபிப்ராயமாகும்.

அப்படியானால் எஜமானுக்கு செய்யும் சேவையே, தொழுகை என்று ஆகிறது. " நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம்" என்கிறார்,யோசுவா.(24:15)

images?q=tbn:ANd9GcRc-Eb6YTszWTbbwlhvOoq4T9MU94e-9XmuC5ztmy_MR_dsIoMe

சேவித்தல் என்பது தான் ஏற்றுக்கொண்ட பணியை செய்து முடித்தல் என்பதாகும்;அப்படியானால் கர்த்தருடைய பிள்ளைகளான நாம் ஏற்றுக்கொண்ட அல்லது பெற்றிருக்கும் பிரதான கட்டளை எது? அது நமக்குள் ஏற்படுத்திய பாதிப்பு என்ன என்று யோசிப்போமானால், அதுவே நமக்கு மாறாத நிலையான நிறைவான நித்திய சந்தோஷத்தைக் கொடுப்பதற்கும் ஆதாரமாகும்; நான் பெறாததையோ அல்லது என்னிடம் இல்லாததையோ நான் எப்படி அடுத்தவருக்குக் கொடுக்க இயலும்? அதுவே Enjoy எனும் வார்த்தையின் விசேஷித்த பொருளாகும்;இந்த வார்த்தையின் சரியான அர்த்தமாவது தான் பெற்று தனக்குள்ளிருந்து தருவது; அப்படிப்பட்ட சந்தோஷத்தை இந்த உலகில் இயேசுவானவர் மட்டுமே தரமுடியும்;ஏனெனில் அது தேவ அன்பினால் உண்டான சந்தோஷமாகும்; பிதாவின் அன்பினால் நிறைந்த இயேசு நம்மை நிரப்பும்போது மட்டுமே அந்த சந்தோஷம் வெளிப்படும்; இயேசு பிதாவில் நிலைத்திருந்து அவரால் பெற்ற சந்தோஷத்தையே நமக்குக் கொடுக்கிறார்; இயேசுவானவர் மற்ற மகான்களைப் போல தாம் வந்த நோக்கத்தை நிறைவேற்றிவிட்டு எங்கோ சென்று அமர்ந்துவிடவில்லை; இன்றைக்கும் நம்முடன் உறவாடி நம்மைப் போதித்து நடத்துகிறார்; நல்ல போதகராகிய அவரைத் தவிர்த்துவிட்டு நான் எங்கிருந்து பெற்று எதை போதிக்கமுடியும்? இயேசு எனக்குள்ளிருந்து என்னை சந்தோஷப்படுத்துகிறார்; அவரிடத்திலிருந்து பெறும் சந்தோஷத்தினால் நான் மகிழ்ந்து என் நண்பர்களையும் உற்சாகப்படுத்துகிறேன்; இதுவே என்னைக் குறித்து தேவனுடைய நோக்கமாகும்.

images?q=tbn:ANd9GcRXMnK9b1uh3zqp89R0UXjVjqVbE1n8z35URLP5dFQ5UpR0nMDmTA

ஜெபம்:
எங்களை அதிகமாக நேசிக்கிற பரலோகப்பிதாவே தம்முடைய அன்பின் குமாரனுக்குள் எம்மை உமக்காகத் தெரிந்து கொண்ட தமது அன்புக்காக உம்மை அகமகிழ்ந்து துதிக்கிறோம்; இந்த சந்தோஷத்தையே நாங்கள் மற்றவருக்கும் கொடுத்து தமது சித்தத்தை நிறைவேற்ற வேண்டுகிறோம்,இயேசுகிறித்துவின் நாமத்தில் எமது மன்றாட்டைக் கேட்பீராக,ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

அண்மையில் பொங்கல் விடுமுறை காலத்தில் ஒரு மாணவர் விடுதிக்கு ஊழியத்தின் நிமித்தமாக சென்றிருந்தேன்;அங்கிருந்த மாணவ மணிகளுடன் கொஞ்ச நேரம் பாடல் பாடி ஆராதித்து உற்சாகப்படுத்தி விட்டு அவர்களுடைய புரிதலுக்கேற்ற வண்ணமாகவும் எளிமையாகவும் வேதத்திலிருந்து ஒரு ஆலோசனை சொல்லவேண்டுமே என்று யோசித்தபோது எனது பல்வேறு சிந்தனா மண்டலத்தில் பல்வேறு தடைகள் வந்தது;ஏனெனில் அவர்களுக்குத் தெரியாததே இல்லை எனும் அளவுக்கு அத்தனை அருமையாக வசனம் சொல்லுவதிலும் பைபிள் கதைகளைச் சொல்வதிலும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனாலும் வேறு வழியில்லையே,எவ்வளவு பெரிய போதகராக இருந்தாலும் அவர்கள் சொல்லுவது உலகின் எங்கோ ஒரு  மூலையில் ஏதோ ஒரு காலத்தில் யாரோ ஒருவருக்காவது சொல்லப்பட்டதாகவே இருக்குமல்லவா, எனவே நம்முடைய சொந்த முயற்சிகளை விட்டுவிட்டு ஆண்டவருடைய பரிபூரண நடத்துதலுக்காக வழக்கம் போலக் காத்திருந்தேன்;காத்திருந்தேன், என்பது சும்மாயிருந்தேன் என்பதல்ல,ஆவியானவரின் சரியான இடைபடுதல் வரும்வரை பொதுவான ஆலோசனைகளைக் கூறுவதிலும் பாடல் பாடி உற்சாகப்படுத்துவதிலும் கவனம் செலுத்தினேன்;இறுதியாக ஏற்கனவே மனதில் வந்து போன ஒரு கருத்தையே ஆதாரமாகப் பிடித்துக்கொண்டு அதன் அடிப்படையிலேயே எனது தியானத்தை அமைத்துக்கொண்டேன்; அதுவே இன்றைய தியானமாக எனதருமை வாசகர்களுக்காக‌...

மொழிக்கு ஆதாரமானது உயிரெழுத்துக்கள் எனப்படும் "வவல்ஸ் (vowels)" என்பது நாம் அறிந்ததே; தமிழில் உயிரெழுத்துக்கள் யாது..? அது யாருக்கு தெரியும் என்பீர்களாகில் சற்றே தெரிந்துகொள்ளுவோம்; நமது தாய்மொழியான தமிழுக்கு ஆதாரமாக விளங்குவது உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள் ஆகும்; இவையிணந்து பிறப்பதே உயிர்மெய் எழுத்துக்கள்; இவற்றைக் கொண்டே சொற்களும் வாக்கியங்களும் அமைகிறது என்பதை நாம் அறிந்திருப்போம்; இதில் உயிரெழுத்துக்களில் குறில் மற்றும் நெடில் ஆகிய இரண்டு வகை உண்டு; அதுபோலவே மெய்யெழுத்துக்களில் வல்லினம், மெல்லினம், இடையினம் ஆகிய மூன்று வகை உண்டு;அது தற்போது முக்கியம் அல்ல;தமிழில் உயிரெழுத்துக்களில் குறில் எனப்படும் எழுத்துக்கள் அ இ உ எ ஒ ஆகியனவாகும்;அதுபோலவே ஆங்கில இலக்கண‌த்தில் a e i o u ஆகிய எழுத்துக்கள் ஆதாரமாக இருக்கிறது;இவையின்றி எந்த ஒரு வார்த்தையையோ வாக்கியத்தையோ அமைத்திட இயலாது;அதுபோலவே கர்த்தரோடு இணைந்த வாழ்ந்த வாழ்வுக்கு ஆதாரமாக விளங்கக்கூடிய வார்த்தைகளையும் அது குறித்த ஆலோசனையையும் சுருக்கமாக தியானிப்போமாக.

விசேஷமாக இந்த ஐந்து ஆங்கில வார்த்தைகளுக்கான ஆதார வசனங்களையும் யோவான் எழுதிய நற்செய்தி நூலின் 15 -ஆம் அதிகாரத்திலிருந்தே தியானத்துக்காக எடுத்துள்ளேன்;ஆம்,கர்த்தரோடு இணைந்த வாழ்க்கை முறையை தியானிக்க நம்முடைய ஆண்டவரே கூறிச் சென்ற இந்த குறிப்பிட்ட வேதப் பகுதியைவிட சிறந்தது வேறொன்றுமில்லை தானே..?

ஆங்கில மொழியின்
"வவல்ஸ் (vowels)" எனப்படும் உயிரெழுத்துகள் ஐந்து உள்ளது என்பதையும் அவை a e i o u என்றும் பார்த்தோம்;இந்த ஐந்து எழுத்துக்களில் ஆரம்பிக்கும் ஐந்து வார்த்தைகளாவன:

a = Abide
e = Enjoy
i = Invite
o= Outreach
u = Undergo

Abide in me-என்னில் நிலைத்திரு

மேற்கண்ட வார்த்தைக்கு ஆதாரமான வசனமானது,"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்க மாட்டாதது போல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள். " (யோவான்.15:4)

images?q=tbn:ANd9GcQ33oPNx2KusO17BxaF-GDCnzkNIaEwIqsWyxOKp2WV2BkWgfPi

நம்முடைய ஆண்டவர் சொன்ன "என்னில் நிலைத்திருங்கள்" எனும் வார்த்தையானது ஆங்கிலத்தில் நேரடியாகவே மிகச் சிறப்பாக Abide in me என்றே குறிப்பிடப்படுகிறது;இதனைப் புரிந்துகொள்ள எந்த மூலபாஷையின் உதவியோ பெரிய வேத ஞானமோ தேவைப்படாது அல்லவா? ஆம், இதனை எளிதாகப் புரிந்துகொள்ளவும் செயல்படுத்தவும் அதன் விளைவை ஆத்மார்த்தமாக அனுபவித்து உணரவுமே திராட்சைசெடியானது உவமைப் பொருளாகவும் அதன் உவமேயப் பொருளாக இயேசுவானவரும் திகழ்கின்றன(ர்).

ஆண்டவர் சொல்வதன் தீவிரத்தை அவரே இப்படிச் சொல்லுகிறார், "என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." (15:5)
அதன் பலனாக ஆண்டவர் சொல்லும் இரண்டு குறிப்புகளாவன:
ஒன்று அதிக கனிகள் (more fruit) 
மற்றது மிகுந்த கனிகள் (much fruit)

"என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்."(15:2 )

"நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது." (15:5 )

images?q=tbn:ANd9GcQY8kCl30xfd1bWy_YKd9TQHiR7u782aQRa31m64Yyjg5GlTjiv4Q

நாம் அதிகக் கனிகள் கொடுப்பது மட்டுமல்ல,மிகுந்த கனிகளைத் தருவதும் நம்மைக் குறித்து ஆண்டவருடைய திட்டமாகும்;எந்த மரமோ செடியோ கொடியோ அது தன்னைப் பயிரிட்டவரின் பிரயாசத்துக்குரிய பலனைத் தருவது சிருஷ்டிப்பின் பொதுவான விதியாகும்.அதில் மேன்மை ஏதுமில்லை;ஆனால் அதிகக் கனிகளும் மிகுந்த கனிகளுமே கொண்டாட்டத்துக்கும் சந்தோஷத்துக்கும் காரணமாகும்.

இந்த விசேஷித்த நோக்கம் நிறைவேற வேண்டுமானால் அந்த கொடியானது செடியுடன் இணைந்திருக்கவேண்டும்;அப்போதுதான் செடியின் தன்மையும் நன்மையும் கொடியில் விளங்கும்;உதாரணத்துக்கு சில கொடிகளைப் பார்த்தால் அது செடியின் கிளைகளை மட்டுமே சார்ந்திராமல் அருகிலிருக்கும் மற்ற மரங்களைத் தேடி நாடி ஓடிச்சென்று சுற்றிக்கொள்ளும்;அதன் விளைவு அந்த குறிப்பிட்ட கொடியானது தனது வளர்ச்சியையும் ஸ்தானத்தையும் இழப்பதுடன் ஒரு கட்டத்தில் அது தானே சென்று சுற்றிக்கொண்ட அந்நிய மரத்தினால் நெருக்கிப்போடப்படும்;அதன் முடிவு பயங்க‌ரமாக இருக்கும்;சுட்டெரிக்கப்படுவதே அதன்முடிவாக இருக்கும்.

images?q=tbn:ANd9GcRqbc-AvGDwV_gHeVXCFSwuzrAVaIXFOIZEABK80UlLVWovZHaleA

ஆனால் செடியான கிறித்துவுடன் இணைக்கப்பட்டும் பிணைக்கப்பட்டும் இருக்கும் கொடியின் பலன் விசேஷமாகவே இருக்கும்;அந்த கொடியானது தனது சாரத்தை செடியிலிருந்தே பெறுவதுடன் தனது பாரத்தைத் தான் சுமக்காமல் அதனை செடியின் மீது வைத்துவிடுகிறது;இதன் காரணமாக அந்த கொடியானது அதிகப் பலனாகவும் மிகுந்த பலனாகவும் மாற்றிக் கொடுக்கிறது.

Abide-எனும் ஆங்கில வார்த்தையானது தன்னை மறைத்துக்கொள்ளுதல், காத்திருத்தல், சந்திக்கும் வரை அமர்ந்திருத்தல் என பொருள் படுகிறது; நாமும் செடியில் இணைக்கப்பட்ட கொடியாக நம்மை பாவித்துக்கொண்டு கிறித்துவில் இணைந்து பிணைக்கப்பட்டிருப்போமாக‌.

ஜெபம்:
எங்களை நேசிக்கிற நல்ல தகப்பனே,நாங்கள் செடியான இயேசுகிறித்துவில் கொடியாக நிலைத்திருக்க உதவிசெய்யும்;இதினிமித்தமாக தம்முடைய அனாதி நோக்கத்தை நிறைவேற்றிட கிருபை தாரும்;இயேசுகிறித்துவின் நாமத்தில் பிதாவே, ஆமென்
.

(தொடரும்..)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

விட்டுப் புறப்பட்டு..!

"கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் ".( ஆதியாகமம்.12:1 & 2 )

மேற்கண்ட வாக்கியம்  நாம் அதிகமாக கேள்விப்பட்டதும் நமக்கு மிகவும் பிரியமானதுமான வேத வசனமாகும்; இதன் பிற்பகுதியையே பலரும் பிரதானமாக எடுத்துரைப்பர்; ஆனாலும் அதன் முற்பகுதியே விசேஷமானதாகும்; ஏனெனில்
துவே ஆண்டவர் முதன்முதலாக ஆபிரகாமிடம் பேசியதாகும்; ஒருவேளை முதலாம் வசனமானது இரண்டாம் வசனமாகவும் இரண்டாவது வசனமானது முதல் வசனமாகவும் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? ஆனால் அது மிகச் சரியாக தேவனுடைய இதயத் துடிப்பை ஒரு மனுஷன் அறியும் வண்ணமாக முதலாவதாக அமைந்துள்ளது.

இதனால் நாம் அறியக்கூடிய சேதி என்ன, தேவனுடைய ஆசீர்வாதத்தைப் பெற விரும்பும் எந்தவொரு ஆத்துமாவும் முதலாவது தன்னிடம் தேவன் விரும்பும் மாற்றத்துக்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்; தேவன் விரும்பும் மாற்றத்துக்குத் தன்னை உட்படுத்திக் கொண்டபிறகே அவருடைய திட்டத்தின் வட்டத்துக்குள் அந்த ஆத்துமா நுழையமுடியும்.

எனவே இன்றைய தியானத்துக்கு இரண்டாம் வசனத்தையல்ல, முதலாம் வசனத்தை எடுத்துக்கொள்ளுவோம். "கர்த்தர் ஆபிராமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ ".
( ஆதியாகமம்.12:1 )

gen12v1_chart.bmp

"விட்டுப் புறப்படுதல்" என்பது சாதாரணமான சவால் தானா, என்று யோசிப்போமானால் எந்தவொரு தனிமனிதனும் விட இயலாத மூன்று முக்கியமான அடையாளங்களைத் தொலைக்கச் சொல்லி கர்த்தர் ஆபிராமிடம் சொன்னது எத்தனை கடினமானது என்பது விளங்கும்; இதனை ஒவ்வொன்றாக தியானிப்போம்.

நீ உன் தேசத்தை விட்டுப் புறப்பட்டுப் போ..!

எந்த தேசத்துக்குச் சென்றாலும் தன்னுடைய தேசத்தைக் குறித்த மேன்மையை யாரால் இழக்க இயலும்? ஆனால் ஆபிராமுக்கு ஆண்டவர் கொடுத்த ஒரு சவால் என்னவென்றால் உன் தேசத்தை விட்டுப் போ என்பதே; ஏன் தேசத்தை விடவேண்டும்? தேசம் என்பது ஆட்சியாளரின் எண்ணங்களும் கொள்கைகளும்; அது ஜனநாயக நாடோ மன்னராட்சி நடைபெறும் நாடோ அதன் ஆட்சியாளரே தன் ஜனத்தின் வாழ்க்கை தரத்துக்கும் பாதுகாப்புக்கும் உத்திரவாதியாக இருக்கிறார் என்பது நாம் அறிந்ததே; ஆனால் தேவன் தான் தேர்ந்தெடுத்த மனுஷனுக்கு தாமே பாதுகாப்பாகவும் அடையாளமாகவும் இருக்க விரும்புகிறார்; மாத்திரமல்ல, ஆபிராம் என்ற சாதாரணக் குடியானவனையே, தேசப் பிதாவாக மாற்றும் மாபெரும் திட்டம் அவருடைய சிந்தையில் இருக்கிறது; இதனை இப்போதே அறிவிக்க முடியாது; அதனை ஏற்கும் மனநிலைக்கு அவன் இன்னும் ஆயத்தமாகவில்லை; ஆனாலும் தேவன் தம்முடைய திட்டத்தின் ஒரு பகுதியை சிறிய அளவில் அறிமுகப்படுத்துகிறார்;  தாம் செய்யவிரும்பும் காரியத்தை நடைமுறைப்படுத்தும் முன்பதாக தம்முடைய தரிசனப் புருஷனிடம் சில மாற்றங்களை ஏற்படுத்த விரும்புகிறார்; இன்றைக்கு ஒரு தேசத்தை விட்டு மறுதேசத்துக்குச் சென்று மேன்மையடைந்தோருக்கெல்லாம் ஆபிராம் முன்னோடியாக இருக்கிறார்; ஆம், ஆபிராம் ஆண்டவருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்தார் என்பதே அவரைக் குறித்த வரலாறு.

gen_12.1.gif&t=1

நீ உன் இனத்தை விட்டுப் புறப்பட்டுப் போ..!

ஒரு தேசத்தை விட்டாலும் விடுவோம், இனத்தை விடமுடியுமா? இனம் என்பது என்ன? நம்முடைய கலாச்சாரம், நம்முடைய வாழ்க்கை முறை, நம்முடைய மொழி, நம்முடைய உறவுகள்.., இத்தனையையும் ஒரு மனிதன் விடமுடியுமா?

இன்றைக்கு கர்த்தரை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டும் தங்கள் குடும்பங்களையும் கலாச்சாரத்தையும் விடமுடியாது ரெட்டை வாழ்க்கை வாழும் கிறித்தவர்கள் எத்தனை பேர் உண்டல்லவா?

ஆனால் தேவ மனிதனான ஆபிராமுக்கு ஒரு மாபெரும் சவால் விடப்பட்டது, "நீ உன் இனத்தை விட்டுப் புறப்பட்டுப் போ..!" ஏன் இனத்தை விடமுடியாது? ஒரு தொழில் நிமித்தமாகவோ அவசர உதவிகள் நிமித்தமாகவோ நம்முடைய இன மக்களை நாம் ஆதாயப்படுத்திக் கொள்ள எண்ணுகிறோம்.

சென்னை போன்ற நகரங்களுக்குக் குடிபெயர்ந்த பிறகும் கூட தங்கள் தங்கள் இனத்தின் பெயரில் சங்கங்களை அமைத்துக் கொண்டு மத நம்பிக்கைகள் வேறுபட்டாலும் இன உணர்வால் சேர்ந்திருக்கவே எந்தவொரு இனமும் விரும்புகிறது அல்லவா?

ஆனால் ஆபிராமைத் தமக்காகத் தேர்ந்தெடுத்த ஆண்டவர் தன் தாசனாகிய ஆபிராம் தன்னுடைய எந்தவொரு தேவைக்கும் தம்மையே சார்ந்திருக்க சித்தங் கொண்டார்; ஒருவேளை தேசத்தை விட்டாலும் இனத்தை விடாதிருந்தால் அந்த உணர்வுடன் இசைந்திருக்கும் சிலருடைய உதவி ஒத்தாசைகள் ஆபிராமுக்குக் கிடைத்திருக்கலாம்; ஆனால் தன்னுடைய இனத்தையுங் கூட ஆபிராம் சார்ந்திருப்பது ஆண்டவருக்குப் பிரியமில்லை என்றறிகிறோம்.

images?q=tbn:ANd9GcQsv261zlAbrtG_nZfICqCzz7P32-CDcLLDo0fQJdWzPZw7rFASbw

நீ தகப்பனுடைய வீட்டையும்  விட்டுப் புறப்பட்டுப் போ..!

இது யாருமே ஏற்க விரும்பாத மாபெரும் சவாலாகும்; உதாரணமாக தான் இன்ன இனத்தைச் சேர்ந்தவன் அல்லது இன்ன வகையறா அல்லது இன்ன குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதே ஒரு மனிதனுக்குப் பாதுகாப்பாகும்;

அந்நாட்களில் மக்கள் கூட்டங் கூட்டமாக கூடாரங்களிலும் குச்சு வீடுகளிலும் வாழ்ந்தார்கள்; எந்தவொரு மனுஷன் எதிர்பட்டாலும் (இன்றைக்கும்) கேட்கப்படும் முதலாவது கேள்வி, என்னவென்றால் நீ எந்த ஊரான், எந்த இனத்தான், யாருடைய மகன் என்பது தான்; மற்றபடி யாரேனும் உளவாளிகள் வேற்று இன மக்களுக்குள் ஊடுறுவி அவர்களைக் கலைத்துப் போட்டு ஆக்கிரமித்து விடுவார்களோ என்ற அச்சம் ஒவ்வொரு இன மக்களுக்குள்ளும் இருந்தது.

உதாரணத்துக்கு சிந்துசமவெளி நாகரிகம்; இன்றைக்கும் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே நாகரீகத்தில் சிறந்து விளங்கிய அந்த கலாச்சாரம் யாரால் எப்படி அழிக்கப்பட்டது என்பதே இன்று வரை அறியப்படவில்லை; அப்படியே ஆபிராமின் காலத்திலும் இதே பதட்டமான‌ சூழ்நிலை நிலவியிருக்கும்; அப்படிப்பட்ட கட்டுப்பாடான கலாச்சார பழக்க வழக்கங்களைவிட்டு வெளியேறி அதுவும் தன் தகப்பன் வீட்டையும் விட்டு வெளியேறி ஒரு மனுஷனால் எப்படி உயிர் தப்பி சௌக்கியமாக செல்வ செழிப்புடன் வாழமுடியும்?

நம்முடைய சொல்வழக்கில் சொல்வது போல "இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க" யார் தான் சம்மதிப்பார்? ஆனால் ஆபிராம் அந்த சவாலை ஏற்றுக்கொண்டார் என்பதே அவர்தம் வீரவரலாறு; 'தனி மரம் தோப்பாகாது ' என்பார்கள்; ஆனால் ஆபிராம் என்ற தனிமரம் தோப்பாக மாத்திரமல்ல,சிங்கார வனமாகவும் மாறியது.

02%20-%20Israel%27s%20family%20tree.jpg458211388v6_225x225_Front.jpg

"உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப்பாருங்கள்; அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து, அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன்." (ஏசாயா.51:2 )

"அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்." (ஆதியாகமம்.15:6 )

மேற்கண்ட வேத வசனத்தை வியாக்கியானம் செய்யும் தற்காலப் போதகர்கள் பலரும் ஆபிராமின் விசுவாசத்தைக் குறித்து சிலாகித்து பிரசங்கிப்பார்கள்; அது கேட்க நன்றாகவே இருக்கும்; ஆனாலும் இன்று ஒரு விசேஷித்த வெளிப்பாட்டை இந்த வசனத்திலிருந்து நாம் பெற்றுக்கொள்ளப்போகிறோம்.

நாம் பெரும்பாலும் அறிந்தவண்ணமாக ஆண்டவர் செய்வதாகச் சொன்ன ஏதோ ஒன்றின் மீதோ அல்லது அதையெல்லாம் ஆண்டவர் தனக்கு நிச்சயமாகவே செய்து தன்னை ஒரு மிகப் பெரிய செல்வந்தனாக்கிவிடுவார் என்பது ஆபிராமின் விசுவாசமாக இருந்திருக்கமுடியாது; ஆனால் இவ்வாறு தன்னுடன் பேசிய மகா தேவனை ஆபிராம் விசுவாசித்தார் என்பதே சத்தியமாக இருக்கமுடியும்; வேறு வார்த்தையில் சொல்வதானால் ஆபிராம் தன் தேவனுக்கு விசுவாசமாக நடந்துகொண்டார் எனலாம்.

இது ஒரு குறிப்பிட்டதொரு பொருளாதார ஆசீர்வாதத்தை இலக்காகக் கொண்டு ஆண்டவரை விசுவாசிப்பதைக் காட்டிலும் விசேஷமானது  என்று கருதுகிறேன்; இது இராஜ விசுவாசம் சம்பந்தமான உயரிய நிலையாகும்; ஏனெனில் தன் தேசத்தையும் தன் இனத்தையும் தன் தகப்பன் வீட்டையும் விட்டு விட்டு அதற்கு மேலான ஒரு நிலைக்கு வரமுடியும் என்பது எந்தவொரு சாமான்ய மனிதனாலும் யோசிக்கமுடியாத விசேஷித்த சிந்தனையாகும்; அப்படிப்பட்ட விசேஷித்த சிந்தனையானது தன்னுடன் இடைபட்டவரின் மீதான அளவற்ற நம்பிக்கையே உருவாக்கமுடியுமே தவிர அவர் தருவதாகச் சொன்னவற்றால் ஏற்பட்ட சிந்தை மாற்றமாக இருக்கமுடியாது; அப்படிப்பட்ட வறிய நிலையிலோ பேராசை பிடித்தவராகவோ ஆபிராம் இருந்தது போலத் தெரியவில்லை.

எனவே கர்த்தரை விசுவாசிப்பது என்பது அவருக்காக மாத்திரம் , அவரோடு இருக்க, அவரை மட்டும் சார்ந்திருப்பது என்ற கருத்தை ஆபிராமின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளுவோமானால் நாம் இந்த உலகத்தைப் பார்க்கும் பார்வையே மாறிவிடும் என்று எண்ணுகிறேன். நம்முடைய சபைகளுக்கு நாம் செல்லும் நோக்கங்களையும் மாற்றிவிடும்; நம்முடைய பீடங்களிலிருந்து நம்மை நோக்கி வரும் செய்திகளும் மாறிவிடும், எனக்கு அருமையானவர்களே; ஆம், நம்முடைய போதகர்கள் நமக்காகவே போதிக்கிறார்கள்; அவர்கள் நிலை பரிதாபமானது; நமக்கு ஏற்ற வண்ணமாக அவர்கள் பேசாவிட்டால் நாம் அவர்களைப் புறக்கணிக்கிறோம்; அதன் காரணமாகவே அவர்கள் கர்த்தரிடத்திலிருந்து பெற்று, கர்த்தருக்காகப் பேசாமல் நம்முடைய முகங்களைப் பார்த்தும், நம்முடைய முக மலர்ச்சியைப் பார்த்தும் நமக்காகவும் போலியாகப் பிரசங்கிக்கிறார்கள்.

இனி நம்முடைய பிரசங்கப் பீடங்கள் பொருளாதார செழிப்பைக் குறித்து பேசாமல் நமது ஆவிக்குரிய செழிப்பைக் குறித்து  பேசுவதாக; இனி நம்முடைய போதகர்கள் ஆபிரகாமின் விசுவாசத்தைக் குறித்து தவறாகப் போதிக்காமால் கிறித்துவைக் குறித்த விசுவாசத்தில் நாம் கட்டப்படுவதைக் குறித்து போதிக்கட்டுமே; அந்த நாள் இன்ப நாள்..!

church_age.jpg

history_of_church%27s_ordinances.jpg

ஜெபம்:
எங்களை நேசிக்கிற நல்ல பிதாவே, உம்முடைய பரிசுத்த பிள்ளையான இயேசுகிறித்துவைப் பற்றும் விசுவாசத்தை எமது உள்ளத்தில் இன்றைக்கு ஒருமுறையாக ஊற்றியருளும்; நாங்கள் எங்களுக்கானவைகளில் அல்ல, தமக்கானவைகளில் நாட்டம் கொள்ளும் புதிய இதயத்தை எங்களுக்குத் தாரும்;எங்கள் நேச மீட்பரான இயேசுகிறித்துவின் நாமத்தினால் எங்கள் மன்றாட்டைக் கேட்டருளுவீராக,ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

பிடித்துக்கொள்ளும்படி, பிடிக்கப்பட்டேன்

"நான் அடைந்தாயிற்று, அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்." (பிலிப்பியர்.3:12)

phil3_12.jpg?w=500

மேற்காணும் வேத வசனத்தை ஒரு குழுவில் விளக்கிக் கொண்டிருந்த போது வெளியான சிந்தனைகளை இங்கே பகிருகிறேன்; இந்த வசனத்தில் பிடித்துக்கொள்ளும்படி, பிடிக்கப்பட்டேன் ஆகிய இரு வார்த்தைகளை தியானிப்போம்.

பிடிக்கப்பட்ட பவுலடிகள்

இங்கே பவுலடிகள் தான் கிறித்து இயேசுவினால் ஏதோ ஒன்றுக்காகப் பிடிக்கப்பட்டதாகவும் தானும் ஏதோ ஒன்றை பிடித்துக் கொள்ளும்படியாகவும் தொடருவதாகக் கூறுகிறார்; தான் கிறித்து இயேசுவினால் பிடிக்கப்பட்டதாகக் கூறினாலும் அதைக் குறித்த வருத்தத்தையோ துக்கத்தையோ இங்கே குறிப்பிடாமல் ஆசையாய்த் தொடருவதாகவும் கூறுகிறார்; இதனால் கிறித்து இயேசுவினால் பிடிக்கப்பட்டது ஒரு சுயாதீனமற்ற அடிமை நிலை என்று கூற இயலாது; அவர் தாமே விருப்பத்துடன் இதில் இருக்கிறார்; இது பவுலடிகளின் வாழ்க்கையில் தான் பெற்றிருந்த அனைத்து மேன்மைகளையும் விட்டு விட்டு தொடரும்படியான ஒரு விசேஷித்த ஓட்டமாக இருக்கிறது; எனவே இதைக் குறித்த வருத்தம் அவரிடத்தில் இல்லை; அவரைப் பிடித்த இயேசுவானவரும் கூட அவரை ஆக்கிரமித்துவிடவில்லை; அவரை மேலான ஒன்றுக்காகத் தேர்ந்தெடுத்து அந்த மேலானதைக் குறித்த வாஞ்சையை அவருக்குக் கொடுத்திருந்தார்; அதன் காரணமாகவே அவருக்குத் தன்னைச் சுற்றிலுமிருந்த மற்றவையெல்லாம் குப்பையாகத் தெரிந்தது.


பவுல் எப்படி பிடிக்கப்பட்டார் என்பது தனியான தியானமாகும்; ஆனாலும் அவர் பீடிக்கப்படவில்லை என்பது திண்ணம்; பீடிக்கப்படுதல் என்றால் ஆக்கிரமிக்கப்படுதல் அல்லது அடிமைப்படுத்தப்படுதல் ஆகும்; ஆனால் அர்ப்பணம் என்ற நிலையில் இதற்கு அவசியமில்லை; இயல்பானதொரு மனமாற்றத்தினாலும் தன்னைக் கவர்ந்த ஒரு மேலான அன்பினாலும் கட்டப்பட்ட ஒருவர் தன் சுயாதீனத்தை இழந்தது போல இருந்தாலும் அதுவே சுதந்தரமாகவும் இருக்கிறது; இதன் காரணமாகவே "ஆசையாய்த் தொடருகிறேன்" எனும் அறிக்கை வெளிப்படுகிறது.

hannah.jpg

பிடித்துக்கொள்ளும்படி பவுலடிகள்

பவுலடிகளைப் பிடித்த ஆண்டவர் பவுலடிகள் பிடித்துகொள்ளும்படியான வேறு ஏதோ ஒன்றைக் காட்டியே அவரைப் பிடித்திருக்கிறார்; அவருக்குக் காட்டப்பட்ட விசேஷமானதொன்று பவுலடிகளுக்கும் பிடித்திருந்தது; அது பிடித்திருந்ததால் அதனைப் பிடித்துக்கொள்வதற்காக தான் ஆண்டவரால் பிடித்துக்கொள்ளப்பட முழுமனதுடன் சம்மதிக்கிறார்.

பவுலடிகள் தான் பிடித்துக் கொள்ளத் தொடரும் காரியத்தைப் பிடித்துவிட்டதாக எண்ணியிருந்தால் அதை நோக்கி ஆசையாய்த் தொடருகிறேன் என்று கூறியிருக்கமாட்டார் அல்லவா?

அப்படியானால் தான் கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி என்று பவுலடிகள் கூறும் இலக்கு எது, அதற்கான நோக்கம் என்ன என்று தியானிப்போமானால் அதுவே நம்முடைய இலக்காகவும் நோக்கமாகவும் ஆசையாகவும் மாறுவதால் நாமும் கிறித்து இயேசுவினால் பிடிக்கப்படவும் பிடிக்கப்பட்ட நோக்கத்தைப் பிடித்து
க்கொள்ளவும் அர்ப்பணிப்போம்.

ThreeStagesSalvation1.jpg

தியானத்துக்கு:
நீங்கள் கிறித்து இயேசுவினால் எப்படி பிடிக்கப்பட்டீர்கள் அல்லது
எப்படி பிடிக்கப்பட விரும்புகிறீர்களா..?

கிறித்து இயேசுவினால் பிடிக்கப்பட்ட நீங்கள் எதைப் பிடித்துக் கொள்வதை நோக்கி சென்று கொண்
டிருக்கிறீர்கள் அல்லது நீங்கள் பிடித்திருப்பதாக நினைப்பது எது..?

images?q=tbn:ANd9GcRylGulw1BwWyTjciVaSqNNcnOOuTJdmIIegGhTBw-gomGbRHwgNA

ஜெபம்:
எங்களை நேசிக்கிற பரலோகப் பிதாவே, மானிடராகிய எங்கள் மீது கொண்ட அன்பினால் தமது சொந்த குமாரனை எங்களுக்காக அனுப்பி, எங்களைத் தேடியெடுத்தமைக்காக தம்மைத் துதிக்கிறோம்; இந்த நாளிலும் கூட நாங்கள் உம்மால் பிடிக்கப்படவும் நாங்கள் பிடிக்கப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றவும் எமக்கு கிருபை பாராட்டும்; இரட்சகரும் மீட்பருமான இயேசுகிறித்துவின் நாமத்தில் பிதாவே,ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கர்த்தரை அறிகிற அறிவு

கடந்த மூன்று நாட்களாக ஒரு ஆவிக்குரிய மனுஷன் பண்படுத்தப்படுதலில் அவசியப்படும் விசேஷித்த தெய்வீக குணாதிசயங்களைக் குறித்து தியானித்து வருகிறோம்;இதற்கு ஆதாரமாக வாக்கியமாக ''...நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.''(எசேக்கியேல்.36:9) - எனும் வசனத்தை எடுத்துக்கொண்டோம்.


''...நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.'' (எசேக்கியேல்.36:9) - எனும் வாக்கியத்தில் ஒரு கர்த்தருடைய பிள்ளை பண்படுவதற்கு ஆண்டவர் மூன்று முக்கியமான குணாதிசயங்களை ஆதாரமாக வைத்திருக்கிறார் என்று பார்த்தோம்; அதில் தேவனுடைய அன்பினால் நிறைந்த இருதயம் பண்பட்டதாக இருக்கும் மற்றும் கர்த்தருக்கு பயப்படும் பயத்தால் நிறைந்த இருதயம் பண்பட்டதாக இருக்கும் என்ற வரிசையில் இறுதியாக கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்த இருதயம் பண்பட்டதாக இருக்கும் என்பதை இன்று தியானிப்போமாக‌.

growing-in-christ-image1-300x201.gif

எந்த ஒரு தேவனுடைய பிள்ளையும் பண்பட இம்மூன்று மாத்திரமே போதும் என்பதல்ல, இந்த தியானத்தின் நோக்கம்; ஏற்கனவே குறிப்பிட்ட வண்ணமாக உபத்திரவம் கூட ஒரு தேவனுடைய பிள்ளையைப் பண்படுத்த உதவும்; ஆனால் அந்த உபத்திரவத்தை சகிக்க பொறுமை எனும் நற்குணம் அவசியம்; அப்படிப்பட்ட பொறுமையானது பூரணமாக கிரியை செய்ய தேவனுடைய அன்பினால் நிறைந்த இருதயம் வேண்டும்; இப்படி இந்த தியானம் தொடர்ந்துகொண்டே போகும்.

கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்த இருதயம் பண்பட்டதாக இருக்கும் அல்லது நாம் பண்பட்டவர்களாக விளங்க கர்த்தரை அறிகிற அறிவு அவசியம்; ஆம், அவரை அறிகிற அறிவு மாத்திரமே நமக்கு அமரிக்கையையும் நம்பிக்கையையும் பெருகப்பண்ணுகிறது.

"என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய், ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்; நீ உன் தேவனுடைய வேதத்தை மறந்தாய், ஆகையால் நானும் உன் பிள்ளைகளை மறந்துவிடுவேன். " (ஓசியா.4:6)

"என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நிய காரியமாக எண்ணினார்கள்."  (ஓசியா.8:12)

"அப்பொழுது அவன் என்னை நோக்கி: தானியேலே, பயப்படாதே; நீ அறிவை அடைகிறதற்கும், உன்னை உன்னுடைய தேவனுக்கு முன்பாகச் சிறுமைப்படுத்துகிறதற்கும், உன் மனதைச் செலுத்தின முதல்நாள் துவக்கி உன் வார்த்தைகள் கேட்கப்பட்டது; உன் வார்த்தைகளினிமித்தம் நான் வந்தேன்." (தானியேல்.10:12)

மேற்காணும் மூன்று வசனங்களையும் நிதானமாக ஆராய்ந்து வாசித்தால் அறிவை அடைவதால் பெறக்கூடிய நன்மைகளையும் அதனை இழப்பதால் அல்லது அதைக் குறித்த கரிசனையில்லாததால் விளையக்கூடிய தீமைகளையும் தேவ கோபத்தையும் குறித்து பார்க்கிறோம்.

கர்த்தரை அறிகிற அறிவு என்பது என்ன‌?

"அவன் சிறுமையும் எளிமையுமானவனுடைய நியாயத்தை விசாரித்தான்; அப்பொழுது சுகமாய் வாழ்ந்தான்; அப்படிச் செய்வதல்லவோ என்னை அறிகிற அறிவு என்று கர்த்தர் சொல்லுகிறார்." (எரேமியா.22:16)


'இதுதானே அது' என்பதை விளக்க மேற்கண்ட வசனம் உதவுகிறது; ஆனாலும் நாம் சுருக்கமாக அறியவேண்டியது என்னவென்றால் கர்த்தருடைய உடன்படிக்கையை அறிந்து அதன்படி செய்வதே கர்த்தரை அறிகிற அறிவு எனலாம்; அவருடைய உடன்படிக்கை என்பது என்ன, அதனைக் கைக்கொள்வதன் பயன் என்ன என்பதைக் குறித்து சங்கீதம் 103-இல் முழுமையாக வாசித்தறியலாம்; அதன் மையமான வாக்கியத்தை தொடர்ந்து வாசிப்போம்.

"கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.அவருடைய உடன்படிக்கையைக் கைக்கொண்டு, அவருடைய கட்டளைகளின்படி செய்ய நினைக்கிறவர்கள் மேலேயே உள்ளது." (சங்கீதம்.103:17,18)


கர்த்தரை அறிகிற அறிவைப் போதிக்கும் அவருடைய உடன்படிக்கை என்பது யாது ? மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாகிய இயேசுகிறித்துவைக் குறித்த தெளிவான அறிவே அந்த அறிவு.

கர்த்தரை அறிகிற அறிவுக்கு ஆதாரம் என்ன‌?

1-flower.jpg?w=429&h=321&t=1

கர்த்தரை அறிகிற அறிவுக்கு நேராக நடத்துவது அர்ப்பணமே; பரபரப்பான இந்த உலகில் நாம் சன்மார்க்கமாகவும் உத்தமமாகவும் மட்டும் நடந்தால் போதும் என்று பற்பல விவாதங்களையும் நம்மைச் சுற்றிலும் நடக்கும் பல்வேறு மோசடிகளையும் கண்டுங்காணாமல் செல்லும் போக்கு நிலவுகிறது; ஆனால் அர்ப்பணத்துடன் - நிதானத்துடன் - உத்தமத்துடன் - அவரை அறிகிற அறிவிலும் நாம் பெருகவேண்டும் என்று பேதுரு ஆலோசனை கூறுகிறார்.


"இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்கவொட்டாது." (2.
பேதுரு. 1:5 - 8 )

images?q=tbn:ANd9GcTpgyjWEDQ4cgxN2F3nr8G6Yvpe_SvHbxMuxTRklOgPGKTvUMEF

மேற்கண்ட வசனங்களின் படி நாம் உத்தமர்களாக விளங்குவது மாத்திரமல்ல, தேவன் நம்மை அழைத்த நோக்கம் நாம் அவரை அறிகிற அறிவில் பெருகி கனிதரும் ஜீவியத்தினால் இன்னும் பெருக வேண்டும் என்பதே தேவ திட்டமாகும்.

கர்த்தரை அறிகிற அறிவினால் உண்டாகும் நன்மைகள் என்ன‌?

images?q=tbn:ANd9GcTO1PBmDfrltrSeQUEAXPTQp4lzoXrs5nLRzL4HGdLLRXrlC0NoHw

கர்த்தரை அறிகிற அறிவினால் உண்டாகும் நன்மைகள் என்பது இம்மைக்குரிய காரியங்களைவிட மறுமைக்குரியவற்றில் இன்னும் அதிக மேன்மையானவைகளில் விளங்கும்; மேலும் நாம் வாழும் இந்த சமுதாயமானது கர்த்தரை அறிகிற அறிவினால் நிறையும்போது அவருடைய இராஜ்யம் விரைந்து வரும்.


கர்த்தரை அறிகிற அறிவினால் உண்டாகும் உடனடி நன்மைகள் யாதெனில் நம்முடைய குடும்பங்களில் சமாதானமும் சௌக்கியமும் நிறைந்திருக்கும்; ஞானத்தோடு கூடிய ஆசீர்வாதங்கள் தங்கியிருக்கும்.

"உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு. அது உன் நாபிக்கு ஆரோக்கியமும், உன் எலும்புகளுக்கு ஊனுமாகும். உன் பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற்பலனாலும் கர்த்தரைக் கனம்பண்ணு.அப்பொழுது உன் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பும்; உன் ஆலைகளில் திராட்சரசம் புரண்டோடும்." (நீதிமொழிகள். 3:5 - 10)

மேற்கண்ட வேதப் பகுதியிலிருந்து நாம் போதிக்கப்படுவது யாதெனில், கர்த்தரை அறிகிற அறிவினால் நம்முடைய நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்வதுடன் நம்முடைய சூழ்நிலையையும் வளப்படுத்திக் கொள்கிறோம்.

தவறான ஒரு காரியத்தை தவறாமல் ஊக்கத்துடனும் நேர்த்தியாகவும் செய்யும் மாற்று மார்க்கத்தவரிடம் இந்த திட்டம் வெற்றிகரமாக‌ செயல்படுகிறது; அதன் விளைவை நம்முடைய தேசத்தில் காண்கிறோம்; ஆனால் சரியான ஒரு காரியத்தை தவறாகவும் அசிரத்தையுடனும் ஒழுங்கீனமாகவும் செய்துகொண்டிருப்பதன் துக்கத்தையும் நம்முடைய சபைகளிலும் குடும்பங்களிலும் காண்கிறோம்; நாம் இந்த காலக் கட்டத்திலாவது உணர்வடைந்து எழுந்து கட்டுவோமானால் நம்முடைய பாழான ஸ்தலங்கள் கட்டப்பட்டு நம் மீதான நிந்தனையானது களையப்படும் என்பது நிச்சயம்.

"வீடு ஞானத்தினாலே கட்டப்பட்டு, விவேகத்தினாலே நிலைநிறுத்தப்படும்.அறிவினாலே அறைகளில் அருமையும் இனிமையுமான சகலவிதப் பொருள்களும் நிறைந்திருக்கும். ஞானமுள்ளவன் பெலமுள்ளவன்; அறிவுள்ளவன் தன் வல்லமையை அதிகரிக்கப்பண்ணுகிறான். நல்யோசனை செய்து யுத்தம்பண்ணு; ஆலோசனைக்காரர் அநேகரால் ஜெயங்கிடைக்கும்."
(நீதிமொழிகள். 24:3 - 6)

images?q=tbn:ANd9GcS1-SYxwUQlsog-wrUONLtwrB_ToiVkRoloh4GABxdupF4Rd-UL

ஜெபம்:
எங்களை நேசிக்கிற பரலோகப் பிதாவே தம்முடைய அன்பின் குமாரனைப் பற்றிய அறிவில் எங்களை நடத்தி வருவதற்காக தம்மைத் துதிக்கிறோம்;என்னையும் எங்களையும் தம்மை அறிகிற அறிவில் பெருகப் பண்ணி இந்த தேசத்தில் தம்முடைய பரிசுத்த நாமத்தை பிரஸ்தாபிக்கும்படியாக விண்ணப்பிக்கிறேன்; இவையாவையும் எமக்கு சுதந்தரமாக அருளிச் செய்த சௌந்தர ராஜனாகிய இயேசுகிறித்துவின் நாமத்தில் விண்ணப்பிக்கிறோம், நல்ல பிதாவே,
ஆமென்.

in_christ.gif


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கர்த்தருக்கு பயப்படும் பயம்

''...நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.''(எசேக்கியேல்.36:9) - எனும் இந்த வசனத்தை தியானிக்கையில் கர்த்தர் நம்மை பண்படுத்தும் விதம் எப்படியானது, அவர் எதன் மூலம் பண்படுத்துகிறார் என்று யோசித்ததன் விளைவாக மூன்று விசேஷித்த தெய்வீக குணாதிசயங்கள் நாம் பண்பட ஏதுவாகவும் அதற்கு ஆதாரமாகவும் இருப்பதான சிந்தனை வெளிப்பட்டது; அதில் முதலாவதாக நம்மைப் பண்படுத்துவதற்கு தேவன் தமது அன்பை ஆதாரமாக வைத்திருக்கிறார் என்று பார்த்தோம்; இன்று கர்த்தருக்கு பயப்படும் பயத்தினால் எப்படி ஒரு கர்த்தருடைய இருதயமானது பண்படுகிறது என்பதை தியானிக்கப் போகிறோம்.

images?q=tbn:ANd9GcRCNzUFyXxaKMgdz-RuhdP_w7-7h5BZijcDqkUEcykPcT7FbIYb

நம்மைச் சுற்றிலுமுள்ள மக்களிடையே தேவ பயமில்லை; அவர்கள் தங்களை பக்திமான்களைப் போலக் காட்டிக் கொண்டாலும் தங்கள் செயல்களால் அவரை வேதனைப்படுத்துகிறார்கள்; இதனால் தேவன் இல்லை,
இல்லை,இல்லவே இல்லை என்று தெருவுக்குத் தெரு பிரச்சாரம் செய்யும் நாத்திகர்களைவிட தேவனைக் குறித்த சிந்தனையோ அதன் பாதிப்போ தேவபயமோ இல்லாதோரே உண்மையில் தேவனை மறுதலிக்கிறார்கள்; தேவன் இல்லை என்று சொல்பவர்களல்ல, தங்கள் அன்றாட வாழ்க்கையில் கர்த்தருக்கு பயப்படும் பயமில்லாமல் துன்மார்க்கமாக வாழுவோரே அவரை மறுதலிப்போராவர்; இந்த காரியத்தில் கிறித்தவர்களும் விதிவிலக்கல்ல; அவர்களும் கூட தவறாமல் ஆலயத்துக்குச் செல்வோராகவும் அனைத்து மார்க்கக் கடமைகளையும் நேர்த்தியாகச் செய்வோராகவும் தங்களைக் காட்டிக்கொண்டாலும் தங்கள் செயல்களால் ஒவ்வொரு நாளும் அவரை சிலுவையிலறைகிறார்கள்.

காரியத்துக்கு வருவோம், நம்முடைய நிர்பந்தமான நிலைமைகளையறிந்த இரட்சகர் நம்மைப் பண்படுத்தி விதைக்க விரும்புகிறார்;அதற்கு ஏதுவாக கர்த்தருக்கு பயப்படும் பயம் எனும் விசேஷித்த குணாதிசயத்தை நம்மில் சிருஷ்டிக்க விரும்புகிறார்;கர்த்தருக்கு பயப்படும் தன்மையானது பயன்படும் நன்மையாக மாறும்; ஏனெனில் பொல்லாப்புகளும் தீயவழிகளுமே நம்மை தேவபயத்திலிருந்து தூரமாக்குகிறது எனில் நாம் அதை விட்டுவிட்டு கிருபையைப் பெற்றுக்கொள்ளவேண்டும்; கிருபை என்பது பாவத்திலிருந்து விலகுவதற்காகவே தரப்படுகிறதேயன்றி பாவத்தில் நிலைத்திருக்க அல்ல‌.

images?q=tbn:ANd9GcTfrRSQgFJY9zPxeTc5YVeimIT90leGOz_E_dnWbZ60tZSKVqV7

அரசாங்கம் தரும் விளம்பரங்களில், "தண்ணீரை வீணாக்காதீர், மின்சாரத்தை சேமிப்பது அதனை உற்பத்தி செய்வதற்கு சமானம்" என்றெல்லாம் கூறப்படுவதுண்டு; நாம் சொல்லுவோம், "பொய்யான மாயையைப் பற்றிக்கொள்ளுகிறவர்கள் தங்களுக்கு வரும் கிருபையைப் போக்கடிக்கிறார்கள்." (யோனா.2:8) ஆம், கிருபையைப் பெருகச் செய்யும் கிரியைகளில் கவனம் செலுத்தாமல் கிருபையைப் பயன்படுத்தி தப்பிக்கும் காரியங்களிலேயே கவனம் செலுத்துவோமானால் தலைதலைமுறைக்குமாக வாக்களிக்கப்பட்ட கிருபையின் நிலை என்னவாகும்?

கிருபையைப் பெருகச் செய்துகொள்ள உதவும் ஆதாரங்களில் பிரதானமானது கர்த்தருக்கு பயப்படும் பயமே; நாம் கர்த்தருக்கேற்றவிதமாகப் பண்படவும்  இது உதவுகிறது; இதோ சில வசனங்களின் அடிப்படையில் கர்த்தருக்கு பயப்படும் பயமாவது என்ன என்றும் அதன் பலன் என்ன என்றும் பார்ப்போம்.

images?q=tbn:ANd9GcRzz3KBw0nST-Hmd_yK_-y5cE9TlD7U4KIhPGwjNhySobDa8kul

"கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டை பண்ணுகிறார்கள்." (நீதிமொழிகள்.1:7)

"தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்.,"(நீதிமொழிகள்.8:13)

"கர்த்தருக்குப் பயப்படுதல் ஆயுசுநாட்களைப் பெருகப்பண்ணும்; துன்மார்க்கருடைய வருஷங்களோ குறுகிப்போம்." (நீதிமொழிகள்.10:27)

"கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்.கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்."  (நீதிமொழிகள்.14: 26, 27 )

"சஞ்சலத்தோடு கூடிய அதிகப்பொருளிலும், கர்த்தரைப் பற்றும் பயத்தோடு கூடிய கொஞ்சப்பொருளே உத்தமம்." (நீதிமொழிகள்.15:16  )

"கர்த்தருக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; மேன்மைக்கு முன்னானது தாழ்மை." (நீதிமொழிகள்.15:33  )

"கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்." (நீதிமொழிகள்.16:6)

"கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது."  (நீதிமொழிகள்.19:23 )

"தாழ்மைக்கும் கர்த்தருக்குப் பயப்படுதலுக்கும் வரும் பலன் ஐசுவரியமும் மகிமையும் ஜீவனுமாம். " (நீதிமொழிகள்.22:4 )

"மனுஷனுக்குப் பயப்படும் பயம் கண்ணியை வருவிக்கும்; கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கப்படுவான்." (நீதிமொழிகள். 29:25 )

மேற்கண்ட அனைத்து வசனங்களும் நீதிமொழிகளிலிருந்து மாத்திரமே எடுக்கப்பட்டிருக்கிறது; இந்த வசனங்களுக்கு எந்த விதமான தொடர்விளக்கங்களுக்கும் அவசியமிராது; இதனை நம்முடைய அன்றாட வாழ்வில் கைக்கொண்டு நடந்தோமானால் கர்த்தருக்கு பயப்படும் பயம் எனும் இந்த சிறப்பான குணாதிசயமே நம்மைக் கர்த்தருக்கேற்ற விதமாகப் பண்படுத்தும் என்பதில் எந்த ஐயமுமில்லை.

biblehands.jpg


ஜெபம்:
எங்களை அதிகமாக நேசிக்கிற பரலோகப் பிதாவே,கர்த்தர் தாமே எங்களைப் பண்படுத்த விரும்பி எங்களுக்குக் கொடுத்துள்ள தேவ பயத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்;இந்த நற்குணத்தினால் நாங்கள் சத்துருவின் சூழ்ச்சிகளிலிருந்து தப்பிப் பண்படவும் உமக்காக ஆயிரம் பதினாயிரமாகப் பெருகவும் உதவிசெய்வீராக;இயேசுகிறித்துவின் நாமத்தில் ஜெபங்கேளும் நல்ல தகப்பனே,ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

தேவ அன்பினால் பண்பட்ட இருதயம்..!

''...நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள்.'' (எசேக்கியேல்.36:9) எனும் நல்லதொரு வாக்கியத்தின் ஆதாரத்தில் தியானித்துக் கொண்டிருக்கிறோம்; விதைக்க ஆயத்தமாக்கப்பட்ட ஒரு நிலத்தில் பண்படுத்தப்பட்ட ஒரு விதையானது விதைக்கப்படுமானால் பலன் மிகுதி -யாக இருக்கும் என்பது பொதுவான பிரமாணமாகும்; அதனை விளையச் செய்வது சிருஷ்டிகருடைய அநுக்ரஹமாகும்; அதுபோலவே ஒரு கர்த்தருடைய பிள்ளையின் வாழ்க்கை பயனுள்ளதாக அமைய வேண்டுமானால் அவன் அல்லது அவளுடைய இருதயமானது பண்பட வேண்டும் என்பது ஆண்டவருடைய ஆலோசனையாகும்; நாம் பண்பட ஏதுவாக மூன்று விசேஷித்த காரியங்களை ஆதாரமாக தியானத்துக்கு எடுத்துக்கொண்டோம்; அதில் பிரதானமானது தேவனுடைய அன்பு.

elephant-heart-plum-seed.jpg

எந்தவொரு ஆத்துமாவையும் பண்படுத்த அவசியமானது தேவனுடைய அன்பாகும்; அன்பினால் மட்டுமே எந்தவொரு இருதயமும் பக்குவமடைகிறது; அன்பு நிறைந்த இருதயம் நன்மை வரும்வரை பொறுமையாகக் காத்திருக்கும்; அன்பு நிறைந்த இருதயம் மட்டுமே மன்னிக்கும் தன்மையால் நிறைந்திருக்கும்; அன்பு நிறைந்த இருதயம் மட்டுமே பாவத்தை விட்டு விலகி ஓடும்; இவையெல்லாம் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ள அல்லது பண்படுத்திக்கொள்ள விரும்பும் ஒரு ஆத்துமாவுக்காக தேவன் நியமித்துள்ள ஆதார அம்சங்களாகும்; இதற்கு ஆதாரமாக பவுலடிகள் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது, "கற்பனையின் பொருள் என்னவெனில், சுத்தமான இருதயத்திலும் நல்மனச்சாட்சியிலும் மாயமற்ற விசுவாசத்திலும் பிறக்கும் அன்பே." (1தீமோத்தேயு.1:5) என்று கூறுகிறார்;

இதன்படி ஒரு ஆத்துமா தன்னைப் பண்படுத்திக்கொள்ள ஏதுவாக தேவன் தமது அளவற்றை அன்பினால் ஒரு ஆவிக்குரிய மனுஷனுடைய இருதயத்தை நிறைக்கிறார்;அப்படிப்பட்ட அன்பு உருவாக தேவைப்படும் ஏதுகரங்களைக் குறித்து மேற்காணும் வாக்கியம் கூறுகிறது; அன்பினால் இருதயம் உருவாக்கப்ப‌டுகிறது, பண்படுகிறது, சிந்திக்கிறது, உறுதியாகிறது; இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட தேவ அன்பின் அடையாளமாவது, அது ஒருபோதும் வெட்கப்படுத்தாது; "மேலும் நமக்கு அருளப்பட்ட பரிசுத்த ஆவியினாலே தேவ அன்பு நம்முடைய இருதயங்களில் ஊற்றப்பட்டிருக்கிறபடியால், அந்த நம்பிக்கை நம்மை வெட்கப்படுத்தாது. " ( ரோமர்.5:5)

அது ஒருபோதும் பலன் சார்ந்ததாக இருக்காது; இந்த உலகிலுள்ள அன்பு எப்போதும் பிரதிபலன் சார்ந்ததாகவே இருக்கிறது; ஆனால் தேவனுடைய அன்பானது இயல்பாக வருகிறது;உதாரணத்துக்கு சாலையில் ஒரு மனுஷன் திடீரென ஒரு விபத்தில் சிக்கிவிட்டால் அவன் யார் என்ன சாதி என்றெல்லாம் பாராது இன்னொரு மனுஷன் ஓடிச் சென்று தூக்கினால் - உதவிசெய்தால் -முதலுதவி செய்தால் அது ஒவ்வொரு சிருஷ்டியிலும் கர்த்தர் வைத்துள்ள தமது அன்பின் வெளிப்பாடாகும்.

"அன்பில்லாதவன் தேவனை அறியான்; தேவன் அன்பாகவே இருக்கிறார்...அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்." (1.யோவான்.4:8,19)

இங்கே தேவனுடைய அன்பாக வேதம் சொல்லுவது சாதாரண மனிதப் புரிதலில் வழங்கப்படும் அன்பு அல்ல; அது ஏற்கனவே இங்கே அறியப்பட்ட வண்ணமாக பலன் சார்ந்ததாகவோ அல்லது பிரதியானதாகவோ இருக்கிறது; அதாவது நம்மை ஒருவர் நேசித்ததன் பாதிப்பில் அல்லது நாம் மற்றொருவரிடமிருந்து பெற்ற அல்லது பெறப்போகும் ஒரு நன்மையின் அடிப்படையில் அன்பு செலுத்துவது மனித அன்பாகும்; ஆனால் தேவனுடைய அன்பு நிபந்தனையற்றதாகவும், மாறிப்போகாததுமாயிருக் கிறது; இதன் காரணமாகவே பாவத்துக்குரிய தண்டனை என்பது மன்னிப்பாக மாறி அந்த தண்டனையைக் கர்த்தரே ஏற்றுக்கொண்டார்; இதுவே தேவ அன்பின் உச்சக்கட்டமாகும்; இதைப் போன்ற அன்பு நமக்குள்ளிருந்து வெளிப்படுவதே நாம் பண்படுகிறோம் என்பதற்கு அடையாளமாகும்.

1083.jpg

"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்." (யோவான்.12:24 )

இங்கே ஒரு விதையானது தேவ அன்பினால் பண்பட்டு தன்னை மறைத்துக்கொண்டு விதைக்கப்படுவதால் உண்டாகக்கூடிய பலனைக் குறித்து ஆண்டவர் சொல்லுகிறார்; அதன் பலன் மிகுதியாக இருக்குமாம்; கர்த்தர் தாமே நாம் இப்படிப்பட்ட தேவ அன்பில் பெலப்பட உதவி செய்வாராக‌.

ஜெபம்:
எங்களை நேசிக்கிற அன்பின் பிதாவே,தம்முடைய பெரிதான கிருபையால் எங்களை உமக்காகத் தெரிந்துகொண்டதற்காக நன்றி செலுத்துகிறோம்; நாங்கள் தமது அன்பில் வேரூன்றியவர்களாகவும்  அன்பில் பரிசுத்தமுள்ள வர்களாகவும் விளங்கி உமது அன்பினால் பண்பட உதவிசெய்யும்; மாயைக்கும் கபட்டுவசனிப்புக்கும் எங்கள் நாவை விலக்கிக் காத்துக் கொள்ளும்; நாங்கள் பண்பட்டு விதைக்கப்பட்டு மிகுந்த பலனை உமக்காகக் கொடுக்க பெலன் தாரும்; இயேசுகிறித்துவின் நாமத்தில் பிதாவே, ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

பண்படுத்தப்பட்டு...

''...நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள். '' (எசேக்கியேல்.36:9)


கர்த்தருக்குள் எனக்குப் பிரியமான வாசக நண்பர்களே,
நீங்கள் இந்த தியானப் பகுதியில் பங்கேற்காவிட்டாலும் - கருத்து எதுவும் சொல்லாவிட்டாலும் வாசித்துச் செல்லுகிறீர்கள் என்ற நம்பிக்கையுடன் கர்த்தருக்கு நன்றி செலுத்துகிறேன்; இந்த அன்றாட ஊழியத்தை தவறாது செய்ய எனது ஆரோக்கியமான மனநிலைக்காகவும் நல்ல தேவ ஆவியின் நடத்துதலுக்காகவும் தயவுசெய்து ஜெபித்துக்கொள்ளுங்கள்.

anointing%20oil%20card.gif

இன்றைய தியானத்துக்காக அடியேன் முன்வைத்துள்ள வாக்கியத்தை ஒரு குறிப்பிட்ட ஊழியத்தில் செய்தியினிடையே போகிற போக்கில் விவரித்தேன்; அது என் மனதுக்கு திருப்திகரமாக இருந்தமையால் அதனை இன்றைய தியான வாக்கியமாக ஆவியானவரின் துணையோடு எடுத்துக்கொண்டேன்.

வசனம் சொல்லுகிறது,''...நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள் ''. அதாவது எப்படி ஒரு விதையை பதப்படுத்தாவிட்டால் அதன் நோக்கம் நிறைவேறாதோ அதுபோலவே பண்படாத - பதப்படாத எந்தவொரு ஆத்துமாவும் தேவனுடைய சுதந்தரங்களை இறுதி செய்து - உறுதிசெய்து கொள்ளமுடியாது.

"விதையானது மண்கட்டிகளின் கீழ் மக்கிப்போயிற்று; பயிர் தீய்ந்து போகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோயின."(யோவேல்.1:17)

newsletterbanner-seedgrowthsq.jpg

இது சபையைக் குறித்த தேவனுடைய இருதயத்தின் இரத்தம் கசியும் குமுறல்; என்னை தேவன் தமக்காகத் தேர்ந்தெடுத்தபோது என்மீது எவ்வளவு எதிர்பார்ப்புகளுடனும் தரிசனத்துடனும் எனக்கு கிருபைகளைக் கொடுத்தார்; நான் அவற்றையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறேனா, அதைக் குறித்து கரிசனை கொண்டேனா? அல்லது என் தனிப்பட்ட காரியம் ஒன்று நிறைவேறுவதற்காக ஆண்டவரிடம் வந்த நான் அந்த காரியம் நிறைவேறியதும் அனைத்து அபிஷேகத்தையும் பொருத்தனையையும் விட்டு அகன்று போனேனா?

Jesus-sowing-seed.jpg

இதுவே ஆண்டவருடைய இருதயத்தின் பாரம்; ஆண்டவர் பிள்ளையில்லாத ஆபிரகாமுக்கு பிள்ளையை மாத்திரம் தரவில்லை, அவனுக்கு தரிசனத்தையும் கொடுத்தார்; ஆபிரகாம் பெற்ற பிள்ளையின் மூலம் நிறைவேற வேண்டிய ஆண்டவருடைய திட்டம் ஒன்றும் அதனுடன் இணைந்திருந்தது;அது ஈசாக்கின் வழியாக அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடந்துசென்றபோதெல்லாம் ஆண்டவர் மகிழ்ந்தார்; அந்த ஓட்டம் தடைபட்டபோதெல்லாம் கர்த்தருடைய இருதயம் தவித்தது; எப்படியாவது எழுந்துவிடமாட்டானா, உணர்வடைய மாட்டானா என்று ஆண்டவர் பற்பல தீர்க்கதரிசிகள் மூலமாக இடைபட்டுக் கொண்டே இருந்தார்.

இந்த கடைசி காலங்களில் தமது அன்பின் குமாரனின் வழியாக நம்முடன் நேரடியாகவே இடைபடுகிறார்; ''...நீங்கள் பண்படுத்தப்பட்டு விதைக்கப்படுவீர்கள். '' எனும் வாக்கியத்தின் மையப் பகுதியே பண்படுதல் என்பதே;அதன்பிறகே விதைக்கப்படுதலும் விளைச்சலும் மிகுதியான பலனும் உண்டாகும்.

ஒரு விசுவாசியை கர்த்தர் எப்படியாகப் பண்படுத்துகிறார் என்பதையே சுருக்கமாக தியானிக்கப்போகிறோம்; பண்படுதல் என்பதன் ஆவிக்குரிய பொருளில் ஒரு ஆத்துமா தேவனுக்காக ஆயத்தப்படுதல் என்று கொள்வோமானால் எந்தவொரு ஆத்துமாவும் பண்படுவதற்கு மூன்று முக்கிய அம்சங்களை ஆதாரமாக ஆவியானவர் வைத்திருக்கிறார்; இம்மூன்றின் மூலமே எந்தவொரு ஆத்துமாவும் தேவனுக்காகப் பிரகாசிக்கமுடியும்.

gardengrow.jpg

முதலாவது தேவனுடைய அன்பு
இரண்டாவது கர்த்தருக்கு பயப்படும் பயம்
மூன்றாவது கர்த்தரை அறிகிற அறிவு

இம்மூன்றையும் ஒரு சுருக்கமான குறிப்பாகவே எடுத்து தியானிக்கிறோம்; ஒரு ஆத்துமாவைப் பண்படுத்த இன்னும் பல ஆ
தாரங்களையும் கர்த்தர் வைத்திருக்கிறார்; உதாரணத்துக்கு உபத்திரவங்கள் கூட ஒரு ஆத்துமாவானது பண்பட ஏதுவாகும்.

இந்த தியானம் தொடருகிறது...


ஜெபம்:
எங்களை நேசிக்கிற நல்ல பிதாவே, இந்த நல்ல மனமகிழ்ச்சியின் நாளுக்காக தம்மைத் துதிக்கிறோம்; இந்த நாளில் என்னையும் எங்களையும் தமது சமூகத்தின் மகிழ்ச்சியினால் நிறைப்பீராக; நாங்கள் உம்முடைய நல்ல தயவினால் பண்படுத்தப்பட்டு உமக்கு புகழ்ச்சியாக விளங்க உதவிசெய்யும்; இரட்சகரும் மீட்பருமான இயேசுகிறித்துவின் நாமத்தில் வேண்டுகிறோம், பிதாவே; ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

சமாதானத்தை ஒரு நதியைப்போல...

"கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில் வைத்துத் தாலாட்டப்படுவீர்கள்." (ஏசாயா.66:12)


இது இந்த வருடத்துக்கான ஒரு விசேஷித்த தியான வாக்கியம்; வேதத்தில் எங்கெல்லாம், "கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்", "கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று", என்றெல்லாம் வருகிறதோ அது சொல்லப்பட்ட குறிப்பிட்ட செய்தியின் அச்சாரமாகவும் அதன் நம்பகத்தன்மைக்கு ஆதாரமாகவும் இருக்கிறது;அதன்படி இங்கே வாசிக்கிறோம், ஆண்டவர், சமாதானத்தை ஒரு நதியைப்போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப்போலவும் அவளிடமாகப் பாயும்படி செய்கிறேன்.." என்கிறார்;

இதிலிருந்து முக்கிய குறிப்புகளை தியானிப்போமானால் நதியையை சமாதானத்துக்கும் ஜாதிகளின் மகிமையைப் புரண்டோடுகிற ஆற்றுக்கும் ஒப்பிடுகிறார்; நம்முடைய தேவன் நமக்குச் சொல்லவரும் எந்தவொரு செய்திக்கும் உதாரணமாக நம்மைச் சுற்றிலுமுள்ள தம்முடைய சிருஷ்டிகளையே குறிப்பிடுகிறார்;காரணம் அவை கர்த்தரால் சிருஷ்டிக்கப்பட்டவை;இரண்டாவது அதன்மூலம் நாம் காரியத்தை விளங்கிக்கொள்வது எளிது;இது தகப்பனுடைய அன்பு.

நதி, ஆறு ஆகிய இவ்விரண்டையும் குறித்த பொதுவான தன்மைகளை கவனிப்போமானால் நதி என்பதோ ஆறு என்பதோ தேசங்களையும் எல்லைகளையும் கடந்ததாகும்; பலரும் அதனை சொந்தங்கொண்டாடினாலும் அது குறிப்பிட்ட யாருக்கும் கட்டுப்பட்டதல்ல; அதாவது நதிகளும் ஆறுகளும் சமுத்திரமும் ஏரிகளும் இயல்பானவை; அவை வான் மழையால் உருவாகி தான் நியமிக்காத பாதையில் இயல்பாக ஓடி அது செல்லுமிடங்களையெல்லாம் செழிப்பாக்குகிறது; ஆம்,ஒரு நதியானது தான் செல்ல வேண்டிய பாதையை அது தீர்மானிக்கிறதில்லையே;அதுபோலவே ஒரு ஆவிக்குரிய மனுஷனும் அப்படியே இருக்கிறான்;ஆண்டவர் நிக்கொதேமு என்ற மனுஷனிடம் இதே கருத்தை காற்றை மையமாக வைத்துப் பேசினார்.

"காற்றானது தனக்கு இஷ்டமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆகிலும் அது இன்ன இடத்திலிருந்து வருகிறதென்றும், இன்ன இடத்துக்குப் போகிறதென்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவனெவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார். " (யோவான்.3:8)

அப்படியே ஆண்டவர் தரும் சமாதானமானது இயல்பானதாக இருக்கும்; அதன் விளைவாக வரக்கூடிய மகிமை என்பது தேசங்களையும் தேசங்களின் எல்லைகளையும் கடந்த செழிப்புள்ள- சுகவாழ்வு ஆகும்; இதனைக் கொடுக்கவே ஆண்டவர் நம்மீது பிரியமாக இருக்கிறார்.

Rivers+of+living+water.jpg

"ஹாப்பி நியூ இயர்" (Happy New year) என்று ஒருவரையொருவர் வாழ்த்திக்கொண்டிருக்கிறோம்; இன்னும் இரண்டொரு வாரத்துக்காகிலும் இது தொடருமல்லவா? ஆனாலும் நம்முடைய வாழ்க்கையில் எது மகிழ்ச்சி? ஒரு நல்ல விருந்துக்கு செல்கிறோம், அது ஒரு இரவு மட்டுமே நினைவில் நிற்கும்;நல்லதொரு ப்ராண்டட் ஷர்ட் ஒன்றைப் பரிசாகப் பெறுகிறோம்; அது அழுக்காகி துவைத்தபின்னரும்  அது புதிய சட்டை என்று சொல்லப்படுவதில்லை;ஆசையுடன் வாங்கிய ஒரு செல்போனோ அல்லது பரிசாகப் பெற்ற எந்தவொரு பொருளுமே நிறைந்த குறையாத மகிழ்ச்சியைக் கொடுக்கிறதில்லை; ஆனால் ஆண்டவர் தரும் சமாதானத்தின் பலனாகிய சந்தோஷம் ஒருபோதும் குறையாதது, நிறைவானது, மிகவும் அவசியமானது.

குறையாத நிறைந்திருக்கும் வேறு சிலவும் நம்மைச் சுற்றிலும் இருக்கலாம்; உதாரணத்துக்கு நம்முடைய வீட்டு வாசலில் பழைய வீட்டை இடித்த ரபீஷ் எனப்படும் உபயோகமில்லாத கட்டிட உடைப்புகள் போடப்பட்டிருக்கும்; அவை குறையாதது, நிறைவாக இருக்கும்; ஆனால் அதனால் பெரிய பலன் ஏதுவுமில்லை.

காட்டிலே மான்கள் கோடைக்காலத்தில் தண்ணீருக்காக நீண்ட தூரம் ஓடுமாம்; பலசமயம் கானல் நீரைத் தொடர்ந்து ஓடி ஏமாந்து சுருண்டு விழுந்து மாண்டு போகுமாம்; அதுபோலவே இந்த  மனிதன் உலகிலுள்ள எதற்காக ஓடுகிறானோ,அதுவே அவன் அழிவுக்கும் காரணமாகிறது; பணத்துக்காக ஓடிய ஒரு வாலிபன் நிறைவான பணத்தை சேகரித்த பின்னர் வாழ்க்கையின் அர்த்தங்களையும் அதன் மதிப்பு மிகுந்த மற்ற பகுதிகளையும் குறித்து யோசிக்கிறான்; ஆனால் அதற்குள் அந்த முக்கிய பகுதிகளை அடையும் வாய்ப்பு கிடைக்காமலே இருக்கும் சூழ்நிலைக்குள் போலியாக வாழப் பழகிக்கொள்கிறான்.

ஆனால் ஆண்டவர் மிகுந்த அன்புடன் சொல்வது என்னவென்றால் சமாதானத்தை ஒரு நதியைப் போல பாயும்படி செய்கிறேன்;ஆம்,அவர் செய்கிறவர்; யாருக்கு? அவரை நோக்கி அவருடைய செயலுக்காகக் காத்திருப்போருக்கு; இருக்கும் ஒன்றை எடுத்துத் தருவது இலேசான காரியம்; ஆனால் இல்லாத ஒன்றை செய்து தான் தரவேண்டும்; ஆண்டவர் செய்து தர ஆயத்தமாக இருக்கிறார்; ஏனெனில் நேற்றைய சமாதானம் இன்றைக்கு உதவாது; நம்முடைய சூழ்நிலையைப் பொறுத்து நம்முடைய மனம் அமைதியடையக்கூடிய வேகமும் மாறுபடுகிறது.

இந்த காரியத்தில் பால் கொடுக்கிற தாயானவள் தன் பாலகனை சாந்தப்படுத்தி இளைப்பாறப்பண்ணுவது போன்ற கரிசனையுடன் ஆண்டவர் நம்மீது வாஞ்சையாக இருக்கிறாராம்;அவருடைய அன்பைப் புரிந்துகொண்டு அவரிடம் தங்கியிருப்போம்; அவரே அனைத்தும் செய்துமுடிப்பார்.

ஜெபம்:
எங்களை அதிகமாக நேசிக்கிற நல்ல தகப்பனே, எங்கள் வாழ்வில் பல்வேறு சூழ்நிலைகளில் சமாதானத்துக்காக ஏங்குகிறோம்; எங்களிடமும் பலர் சமாதானமடைய ஆவலோடு காத்திருக்கிறார்கள்; நதியைப் போன்று புர‌ண்டு வரும் உமது சமாதானத்துக்காக நாங்கள் காத்திருக்கிறோம்; கர்த்தர் எங்களுக்கு வாக்குபண்ணிய வண்ணமாக ஒருவரும் கொடுக்கவும் கெடுக்கவும் எடுக்கவுங்கூடாத ஒரு சமாதானத்தை எங்கள் உள்ளத்திலிருந்து வற்றாத நதியைப் போலப் பாயப்பண்ணும்படியாக எம்மைத் தாழ்த்தி விண்ணப்பிக்கிறோம்; இரட்சகரும் மீட்பருமான இயேசுகிறித்துவின் நாமத்தில் பிதாவே,ஆமென்.

கரையோர மரங்கள் ஏராளமாய்
கனிதரவேண்டும் தாராளமாய்
இலைகள் எல்லாம் மருந்தாகணும்
கனிகளெல்லாம் உணவாகும்,வாருமையா போதகரே..!


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

சர்ப்பங்களைப்போல...

"ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்."(மத்தேயு.10:16)

ஆடு, ஓநாய், சர்ப்பம், புறா இந்த நான்கு ஜீவன்களுமே நம்மைச் சுற்றிலும் வாழ்பவையே;இவைகள் நாட்டிலும் இருக்கிறது,காட்டிலும் இருக்கிறது;இதன் வழியே சத்தியத்தைக் கற்போம்;

இன்று முதலாவது
சர்ப்பங்களைப்போல...

இது நம்முடைய ஆண்டவர் நமக்குக் கொடுத்துள்ள எளிமையான ஆலோசனையாகும்;இதன் அடிப்படையிலேயே நாம் செயல்பட்டு வருகிறோம்;ஆனாலும் பலமுறை பேதையான புறாக்களைப் போல ஏமாற்றப்பட்டதும் உண்டு;சிலரை தவறாகக் கணித்து நமது வீடுகளுக்கு வரவழைத்து அதனால் ஏற்படும் பாதிப்புகளை சரிசெய்ய முடியாமலும் போய்விடுகிறது;யாரையும் நம்பாத சர்ப்பத்தின் தன்மையால் சில நல்ல உறவுகளை இழந்த அனுபவங்களும் நமது இருதயத்தை வாதித்துக் கொண்டிருக்கிறது.

dove1.jpg

"எப்பிராயீம் பேதையான புறாவைப்போல் இருக்கிறான், அவனுக்குப் புத்தியில்லை; எகிப்தியனைக் கூப்பிடுகிறார்கள்...:(ஓசியா.7:11)

"தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப்பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது."(ஆதியாகமம்.3:1)

ஆண்டவர் நம்மைப் புறாக்களைப் போல கபடற்றவர்களாக இருக்கச் சொன்னாலும் மேற்கண்ட இரு வசனங்களில் புறாக்களிடமுள்ள பொதுவான பெலவீனத்தையும் சர்ப்பத்திடம் இருக்கக்கூடிய தீயகுணத்தையும் கவனத்தில் கொள்ளவேண்டும்;புறாக்களின் கபடற்ற தன்மையானது எல்லை மீறும்போது அது பேதைத்தன்மையைக் கொண்டுவருகிறது.

"விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்து கொள்ளுகிறான்; பேதைகள் நெடுகப்போய்த் தண்டிக்கப்படுகிறார்கள்." (நீதிமொழிகள்.22:3)


அதுபோலவே சர்ப்பத்தைப் போல எச்சரிக்கையாக இருக்கும் தன்மையானது எல்லைமீறினால் அதுவே அதன் தந்திரகுணமாகிய எதையும் எதிர்க்கும் அல்லது வஞ்சிக்கும் தன்மையை நோக்கி நடத்திவிடும்.

"சர்ப்பங்களே, விரியன்பாம்புக் குட்டிகளே! நரகாக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்வீர்கள்? (மத்தேயு.23:33)

8146-northern_watersnake-nerodia_sipedon_sipedon.jpg

மேற்கண்ட வசனத்தில் ஆண்டவர் பரிசேயரைப் பார்த்து சர்ப்பங்களே என்று சாடுகிறார்;அப்படியானால் பாராட்டுகிறாரா, பழிக்கிறாரா..?

தமது சீடர்களிடம் சர்ப்பங்களைப் போல எச்சரிக்கையாக இருங்கள் என்றவர் மிகமிக எச்சரிக்கையாக இருந்து ஆண்டவரையே எதிர்த்த பரிசேயரைப் பாராட்ட வேண்டுமல்லவா?

ஆண்டவர் தம்முடைய சீடர்களிடம் சொல்லவருவது என்னவாக இருக்கவேண்டும் என்று ஆராய்ந்தோமானால் அவர் தம்மை எங்கு சென்றாலும் எதிர்த்து கேள்வி எழுப்பும் பரிசேயரை பாராட்டாமல் பாராட்டுகிறார்; அதாவது பரிசேயர் சத்தியத்துக்குக் குருடராக இருந்து தீமைக்கு ஞானிகளாக இருந்தனர்; இதைக் குறித்து அறிந்திருந்த ஆண்டவர் தம்முடைய சீடர்களும் இந்த காரியத்தில் கவனமாக இருந்து பரிசேயருடன் கலந்துவிடாமலும் சர்ப்பங்களைப் போல செயல்படும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லுகிறார்;அதற்கு ஆதாரமாக மற்றொரு வசனம்...

"அத்தருணத்திலே அநேகமாயிரம் ஜனங்கள் ஒருவரையொருவர் மிதிக்கத்தக்கதாகக் கூடிவந்திருக்கையில், அவர் முதலாவது தம்முடைய சீஷரை நோக்கி: நீங்கள் மாயமாகிய பரிசேயருடைய புளித்தமாவைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்."(லூக்கா.12:1)

பரிசேயர் = சர்ப்பங்கள்
சர்ப்பங்கள் = எச்சரிக்கை = வினா அல்லது கேள்வி

இதன்படி சர்ப்பங்களைப் போல அதாவது பரிசேயரைப் போல நீங்களும் எச்சரிக்கையாக இருங்கள்;ஆனாலும் அவர்களுடைய புளித்தமாவைப் போன்ற பழைய போதகங்களை நீங்களும் ஏற்றுக்கொண்டு அதற்கு சுவிசேடகர்களாகி விடவேண்டாம் என்கிறார்;ஆனால் நம்முடைய தலைவர்களில் பலரும் அந்த புளித்தமாவைப் பிசைந்து சமைப்பதில் அதிக ஆர்வமாக இருக்கிறார்களே.?

அதில் ஒன்று , ஒன்றான மெய்த் தெய்வமாகிய ஆதிதேவன் நியமித்த இரட்சகரை ஏற்றுக்கொள்ளாமல் அவரை தூதன் நிலைமைக்கு தாழ்த்திவிட்டு அல்லது ஒரு சீனியர் போல மரியாதை செலுத்துவதுடன் நிறுத்திக்கொண்டு நேரடியாக பிதாவைத் தேடிச் செல்கின்றனர்;யாவே எனும் அவருடைய நாமத்தைச் சொல்லவோ அதைச் சொல்லிப் பாடவோ இயேசு என்கிற இரட்சகருடைய நாமம் இல்லாவிட்டால் இங்கு யாருக்கும் எந்த தகுதியும் இல்லை;இவர் (
இயேசு ) வழியாக ஏறிப்பிடித்து அங்கே சென்று ஆராதிக்கச் சென்றாலும் அவர் இவரிடமே நம்மை நடத்துவார்;ஏனெனில்...

"கர்த்தாவே, தேவரீர்,
(இயேசு ) மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர்; நீரே (இயேசு ) சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள். (வெளிப்படுத்தல்.4:11)

" அந்தப் புஸ்தகத்தை அவர்
(இயேசு ) வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்கு (இயேசு ) முன்பாக வணக்கமாய் விழுந்து:தேவரீர் (இயேசு ) புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் (இயேசு ) அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களைத் தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு,எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோம் என்று புதிய பாட்டைப் பாடினார்கள்.பின்னும் நான் பார்த்தபோது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது. அவர்களும் மகா சத்தமிட்டு: அடிக்கப்பட்ட ஆட்டுக்குட்டியானவர் (இயேசு ) வல்லமையையும் ஐசுவரியத்தையும் ஞானத்தையும் பெலத்தையும் கனத்தையும் மகிமையையும் ஸ்தோத்திரத்தையும் பெற்றுக்கொள்ளப் பாத்திரராயிருக்கிறார் என்று சொன்னார்கள். (வெளிப்படுத்தல்.5:8-12 )

ஜெபம்: எங்களை நேசிக்கிற பரலோகப் பிதாவே உம்முடைய குமாரனாகிய இயேசுகிறித்துவை எமக்கு ஆண்டவராகவும் மேய்ப்பராகவும் கொடுத்ததற்காக தமக்கு ஸ்தோத்திரம்;எங்களைச் சுற்றிலும் இருக்கக்கூடிய பல்வேறு பரிசேயரின் புளித்தமாவைப் போன்ற பல்வேறு கள்ள உபதேசங்களுக்கு நாங்கள் எச்சரிக்கையாக இருக்க தம்முடைய நல்ல ஆவியானவர் எம்மை செம்மையான வழியில் நடத்த அருள்புரிவீராக; இரட்சகரும் மீட்பருமான இயேசுகிறித்துவின் நாமத்தில் பிதாவே,ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

கனத்துக்குரிய பாத்திரம்

"ஒரு பெரிய வீட்டிலே பொன்னும் வெள்ளியுமான பாத்திரங்களுமல்லாமல், மரமும் மண்ணுமான பாத்திரங்களுமுண்டு; அவைகளில் சில கனத்திற்கும் சில கனவீனத்திற்குமானவைகள். ஆகையால் ஒருவன் இவைகளை விட்டு, தன்னைச் சுத்திகரித்துக்கொண்டால், அவன் பரிசுத்தமாக்கப்பட்டதும், எஜமானுக்கு உபயோகமானதும், எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப் பட்டதுமான கனத்துக்குரிய பாத்திரமாயிருப்பான்."(2.தீமோத்தேயு.2:20,21)


Largest silver vessel in the world

Largest silver vessel in the world

எனது பள்ளிக்காலத்தில் ஒவ்வொரு வகுப்பு மாறும் போதும் எனது ஆசிரியர்களால் மிகவும் விரும்பப்பட்ட - அதிகம் கவனிக்கப்பட்ட‌ மாணவனாக இருந்தேன்; இதனால் ஆசிரியர் எந்தவொரு வேலைக்கும் என்னையே முதலாவது அழைப்பார்கள்; இதில் எனக்கு ஒரு பெருமை, மற்ற மாணவர்களுக்கு என்மீது பொறாமை.

அதுபோலவே என் தாய்க்கும் நான் பிரியமான பிள்ளையாக இருந்தேன்;எந்த வேலை கொடுத்தாலும் நானே பொறுப்புடனும் நேர்த்தியாகவும் செய்வேன் என்ற நம்பிக்கை எனது தாயாருக்கு என்மீது இருந்தது.

எனக்கும் கூட தனிப்பட்ட முறையில் சில விருப்பங்கள் இருந்தது; உதாரணமாக நான் விதவிதமான பேனாக்களை சேகரித்து வைத்திருக்கிறேன்; ஒரு பேனாவைக்கூட இதுவரை தூக்கியெறிந்ததில்லை; மேலும் ரோட்டில் கிடக்கும் பேனாக்களைக் கூட எந்தவித சிரமமோ வெட்கமோ பாராது எடுத்துவந்து விடுவேன்;இப்படி எத்தனை பேனாக்கள் என்னிடமிருந்தாலும் அதிலும் கூட எனக்குப் பிரியமான சில பேனாக்கள் உண்டு;அ
வை காணாமற் போனால் மிகவும் வருத்தமாக இருக்கும்; குறிப்பிட்ட சில பேனாக்களிலேயே எனக்கு நன்றாக கையெழுத்து வரும்.

எதற்கு இதையெல்லாம் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று யோசிக்கிறீர்களா? ஆம், இன்றைய தியானத்துக்காக நான் தேர்ந்தெடுத்த வேதவசனமும் கூட இதையே சொல்லுகிறது; "நீ ஒரு கனத்துக்குரிய பாத்திரமாக இருக்கவேண்டும் ".

நமது வீடுகளில் சமையலறையில் கவனித்தால் சில பாத்திரங்கள் அலமாரியிலும் சிலது பரணிலும் இருக்கும்;அவற்றில் பெரும்பாலானவை எப்போதாவது ஒரு முறை பண்டிகைக் காலங்களிலோ அல்லது விருந்தினர் வந்தாலோ மட்டுமே எடுத்து பயன்படுத்தப்படும்;ஆனால் சில பாத்திரங்கள் பயன்படுத்தப்பட்டு மீண்டும் பயன்படுத்துவதற்காக சுத்திகரிக்குமிடத்தில் இருக்கும்;அவை அந்த வீட்டின் சமையலறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் முக்கிய பாத்திரங்களாக இருக்கும்.

அதுபோலவே எஜமானனாகிய பரலோகப் பிதாவுக்கு முன்பாக நாம் கனத்துக்குரிய பாத்திரமாகத் திகழ வேண்டுமானால் நாம் எப்படிப்பட்ட பாத்திரமாக இருக்கவேண்டுமென பவுல் இங்கே தீமோத்தேயுவுக்கு எழுதின நிருபத்தின் மூலம் அறிய முடிகிறது; அது யாதெனில் முதலாவதாக நாம் பரிசுத்தமாக்கப்பட்ட பாத்திரமாக இருக்கவேண்டுமாம்;அடுத்து எஜமானால் அடிக்கடி பயன்படுத்தப்படும் உபயோகமான பாத்திரமாக இருக்கவேண்டுமாம்; மேலும் எந்த நற்கிரியைக்கும் ஆயத்தமாக்கப்பட்ட பாத்திரமாக இருக்கவேண்டுமாம்; இவையெல்லாம் இணைந்தால் கனத்துக்குரிய பாத்திரம் என்ற பெயர் நிலைக்கும்.

கனம்
அல்லது மரியாதை பாத்திரத்தின் தரத்தில் இல்லை,அது பயன்படும் விதத்தில் தான் இருக்கிறது;ஒருவேளை நீ பொன்னாலான பாத்திரமாக இருந்து மினுக்கான வேலைப்பாடுகளுடன் அரச மாளிகையின் காட்சிப் பொருளாகவும் இருக்கலாம், அல்லது அரசனால் விரும்பிப் பருகப்படும் பானபாத்திரமாகவும் இருக்கலாம்.

எனவே நான் மண்ணான பாத்திரம் என்ற தாழ்வு மனப்பான்மையும் நமக்கு வேண்டாம் அல்லது நான் பொன்னான பாத்திரம் என்ற பெருமையும் நமக்கு வேண்டாம்;நம்மில் யாருமே பிழைப்புக்காக அழைக்கப்படவில்லை; மாறாக நம்மை அழைத்தவராலே பிழைத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வோமாக.

ஜெபம்:
எங்களை அதிகமாக நேசிக்கிற பரலோகப் பிதாவே ஆசீர்வதிக்கப்பட்டதான இந்த நல்ல நாளுக்காக தம்மை ஸ்தோத்தரிக்கிறோம்; இந்த நாளின் தியானத்தின்படி நாங்கள் உமக்கு உகந்த பாத்திரமாக விளங்க எங்களை சுத்திகரியும்; நாங்கள் எங்களையே மேன்மைபடுத்தாமல் உமக்கு உபயோகமான பாத்திரங்களாக விளங்கிடவும் துலங்கிடவும் இலங்கிடவும் உதவி செய்வீராக; இரட்சகரும் மீட்பருமான இயேசுகிறித்துவின் நாமத்தில் ஜெபங்கேளும் பிதாவே, ஆமென்.


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

ஒரு வார்த்தை மாத்திரம்...

எனக்கு ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது; ஆனால் கீழ்க்கண்ட வசனமானது ஆங்கிலத்தில் எனது காதுகளில் தொனித்துக்கொண்டே இருந்தது; நண்பர்கள் என்னை கேலி செய்யாவிட்டால் சொல்லுகிறேன், ஊழியத்துக்காக வெளியே சென்றுவந்து சோர்வுடன் மாலை சுமார் 4 மணிக்குப் படுத்தேன்; உறக்கத்திலும் எழுந்தபிறகும் தொடர்ந்து இந்த வசனமானது எனக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது.


(KJV)  But he answered and said, It is written, Man shall not live by bread alone, but by every word that proceedeth out of the mouth of God.
(Matthew. 4:4)

அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.(மத்தேயு.4:4 )

IMG_0527.JPG

அதனைத் தொடர்ந்து நாளைய தினத்துக்கு என்ன எழுதலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோது கீழ்க்கண்ட வேதப் பகுதியானது எனது  மனதில் வந்துபோனது; நாம் தியானிக்கப்போவது ஒரு வசனமாக இருப்பினும் விதிவிலக்காகவும் புரிதலுக்காவும் கீழ்க்கண்ட வேதப் பகுதியை வாசித்துக்கொள்ள அன்புடன் வேண்டுகிறேன்.

"இயேசு கப்பர்நகூமில் பிரவேசித்தபோது, நூற்றுக்கு அதிபதி ஒருவன் அவரிடத்தில் வந்து:ஆண்டவரே! என் வேலைக்காரன் வீட்டிலே திமிர்வாதமாய்க் கிடந்து கொடிய வேதனைப்படுகிறான் என்று அவரை வேண்டிக்கொண்டான்.

அதற்கு இயேசு: நான் வந்து அவனைச் சொஸ்தமாக்குவேன் என்றார்.

நூற்றுக்கு அதிபதி பிரதியுத்தரமாக: ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்.நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்.

இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டு, தமக்குப் பின்செல்லுகிறவர்களை நோக்கி: இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.ராஜ்யத்தின் புத்திரரோ புறம்பான இருளிலே தள்ளப்படுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்குமென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

பின்பு இயேசு நூற்றுக்கு அதிபதியை நோக்கி: நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நாழிகையிலே அவன் வேலைக்காரன் சொஸ்தமானான். (மத்தேயு.8:5 முதல் 13 வரை)

மேற்கண்ட வேதப்பகுதியில் பல விசேஷித்த அம்சங்கள் உண்டு; நாம் தியானிக்க ஏற்ற சரியான மைய வாக்கியமானது,"ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்," என்பதே; கர்த்தருடைய வார்த்தை எத்தனை வல்லமையானது, எத்தனை மேன்மையானது என்பதை மட்டுமே நமது வாழ்நாள் முழுமையும் தியானித்தாலும் நமது ஆயுட்காலம் போதாது; ஆனால் இங்கே அந்த நூற்றுக்கு அதிபதியானவன் ஆண்டவரைக் குறித்து சிலாகித்துப் புகழவும் ஆண்டவர் அவனைப் பாராட்டவும் காரணமாக இருந்த கூற்று இன்னும் விசேஷமானது; அது தற்கால வேத வல்லுனர்களுக்கெல்லாம் கண்களைத் தெளிவிக்கும் அறிக்கையாகும்; அது பின்வருமாறு, "நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும், எனக்குக் கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு; நான் ஒருவனைப் போவென்றால் போகிறான், மற்றொருவனை வாவென்றால் வருகிறான், என் வேலைக்காரனை, இதைச் செய்யென்றால் செய்கிறான் என்றான்."

ஆண்டவரால் பாராட்டப்பட்ட மிகச் சிலரில் இந்த நூற்றுக்கதிபதியும் ஒருவனாகக் காரணமாக இருந்தது மேற்காணும் அறிக்கையே;இதில் "நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும்..." என்ற கூற்றானது மாம்சத்தில் வந்த இயேசுவானவரின் தெய்வத்தன்மைக்கு மிகச் சிறந்த நேரடியான உதாரணமாகும்; எனவேதான் ஆண்டவர் அவனைப் பாராட்டுகிறார்; இயேசுவானவரின் தெய்வத்தன்மையைக் குறித்து ஐயம் கொள்வோரின் மனக் கண்களைப் பிரகாசமாக்கும் இந்த கூற்றின்படி,"மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்பதற்கும் புதிய வெளிப்பாடுகள் கிடைக்கிறது.

"தேவனுடைய வாயிலிருந்து புறப்படும் வார்த்தை" மற்றும் "நீர் ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்" என்ற நூற்றுக்கு அதிபதியின் கூற்று ஆகிய இவ்விரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்; மேலும் "அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்.."(மத்தேயு.5:2) எனும் வசனத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கவும்; இத்துடன்,"கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று."(ஏசாயா.58:14) என்பதையும் ஒப்பிடவும்.

"தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்..." இந்த வார்த்தையை ஆண்டவர் கம்பீரமாக சாத்தானுக்கு எதிராகச் சொல்லும்போது அவன் நடுநடுங்கிப்போனான்; அந்த பராக்கிரம் மிகுந்த தேவனுடைய வார்த்தையானவரே அவர் தானே, அந்த உரிமையுடன் இயேசுவானவர் கர்த்தருடைய வார்த்தையை எடுத்துச் சொன்னபோது அது சாத்தானுக்கு எதிரான கல்லாகவும் அதை வாசித்த எனக்கு அப்பமாகவும் மாறினது; ஆம்,கல்லுகளால் ஆபிரகாமுக்குப்  பிள்ளைகளை உண்டாக்கக்கூடிய தேவனால் அந்த கல்லுகளை அப்பங்களாக்கவும் முடியுமே; பசியுடன் கேட்கும் ஆத்துமாவுக்கு அது அப்பமாகவும் சோதிக்க கேட்கும் சாத்தானுக்கு எதிரான கல்லாகவும் மாறும்; இதனால் சாத்தானின் கிண்டலான கேள்விக்கும் பதில் கொடுக்கப்பட்டது; அவன் சொன்னான், "நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் " என்பதாக‌. சிருஷ்டி கர்த்தாவான ஆண்டவரோ கர்த்தருடைய வார்த்தையை அப்பமாகவும் சாத்தானுக்கு எதிரான கல்லாகவும் மாற்றி விந்தை புரிந்தார்;கல்லை எடுப்பது போல‌ குனிந்தாலே ஓடும் நாயைப் போல சாத்தான் ஓடியே போனான்.

christcrucified.jpg

"இயேசு கிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையேயன்றி, வேறொன்றையும் உங்களுக்குள்ளே அறியாதிருக்கத் தீர்மானித்திருந்தேன்."(கொரிந்தியர்.2:2)

அடுத்து நூற்றுக்கதிபதியின் கூற்றை கவனிப்போமானால், அவனுடைய வேலைக்காரன் சுகமாக ஆண்டவர் நேரடியாக அங்கே செல்ல வேண்டியதில்லை; வார்த்தையே போதுமானது; ஏனெனில் ஆதியிலிருந்து உரைக்கப்பட்ட வார்த்தையினாலேயே அனைத்தும் சிருஷ்டிக்கப்பட்டது, சிருஷ்டிகள் போஷிக்கப்பட்டது, காப்பாற்றப்பட்டது, சொஸ்தமாக்கப்பட்டது; அந்த வார்த்தையின் வடிவானவர் இதோ எதிரே நிற்கிறார்; இப்போதும் அவர் சொல்லும் வார்த்தையே எங்கோ தூரத்திலிருக்கும் பிணியாளியை சுகமாக்கப் போதுமானது; காரணம் அவர் காணக்கூடாதிருந்த சர்வவல்ல தேவனே; அவர் மாம்சத்தில் தம்மை வெளிப்படுத்தின தேவன், எனவே அவர் சொல்லும் வார்த்தையானது இன்னும் விசேஷமானது.

இறுதியாக, இதே வார்த்தைகளை அதே அதிகாரத்துடன் பேசும் நாமும் ஆண்டவருக்கு சமமாக முடியுமா? அதில் தான் நூற்றுக்கதிபதியின் கூற்று சிறப்பிடம் பெறுகிறது; அவன் சொன்னது, "நான் அதிகாரத்துக்குக் கீழ்ப்பட்டவனாயிருந்தும்..." இதன்படி மாம்சத்தில் வெளிப்பட்ட தேவனாகிய இயேசுவானவர் தாம் மாம்சத்திலிருந்த நாட்களில் தம்முடைய அதிகாரத்தின் எல்லைகளை வரையறுத்துக் கொண்டவராக செயல்பட்டது நாம் அறிந்ததே; ஆனால் அந்த எல்லைகளைக் கடந்து வெளியே வந்து அற்புதம் செய்ய நூற்றுக்கதிபதி ஆண்டவரைத் தூண்டுகிறான்; மாம்சத்தில் வந்த இயேசுவானவர் பரலோகத்திலிருக்கிற தம்முடைய பிதாவுக்குக் கீழ்ப்பட்டவராக இருந்தாலும் இந்த பூமியில் இருக்கும்போது இம்மானுவேலராக அதாவது உடனுறை சர்வ வல்ல தேவனாக இருக்கிறபடியினால் அவர் சொல்லும் வார்த்தையும் பிதாவின் வார்த்தைக்கு சமமானது, ஏனெனில் அவர் பிதாவுக்கு சமமானவர், ஆயினும் தன்னைக் குறுக்கிக்கொண்டு மனிதனாக உலாவந்தார் என்பதே நூற்றுக்கதிபதியின் கூற்றாகும்; இதையே ஆண்டவர் மனதாரப் பாராட்டுகிறார்; இதன்படி ஆண்டவருடைய வார்த்தையை நாமும் அவர் நமக்கு கொடுத்த அதிகாரத்தின் எல்லையிலிருந்து பேசும்போது நமக்கும் காரியம் வாய்க்கும்;ஆனாலும் அதன் மகிமை முழுவதும் அவருக்கே சேரும்;அதாவது நூற்றுக்கதிபதியின் பார்வையில் அவனுக்கு கீழே பணிபுரிந்த நூறு பேரில் ஒருவனைப் போல நாம் இருக்கிறோம்;நம்முடைய அதிகார எல்லைகளை அறிந்து செயல்படுவது நம்மை விண்ணக அரசின் பணியில் நிலைத்திருக்கச் செய்யும் என்று அறிவோமாக‌.

ஜெபம்:

எங்களை அதிகமாக நேசிக்கிற பரலோகப் பிதாவே, தம்முடைய குமாரனாகிய இயேசுகிறித்துவின் நாமத்தில் அடியாருக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்காக உம்மைத் துதிக்கிறோம்;இருளின் அதிகாரத்திலிருக்கும் இந்த உலகில் வாழும் நாங்கள் தமது அன்பின் குமாரனுடைய இராஜ்யத்துக்குரியவர்களாக எம்மைக் காத்துக்கொள்ள உதவிசெய்யும்;எங்கள் அன்றாட செயல்பாடுகள் ஒவ்வொன்றின் மூலமாக விண்ணகம் மகிழ்வதாக;இரட்சகரும் இராஜாவுமான இயேசுகிறித்துவின் நாமத்தில் ஜெபங்கேளும் பிதாவே,ஆமென்.

{இந்த பதிவு சற்று(?) நீண்டுவிட்டது;பொறுத்துக்கொள்ளவும்.}


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2827
Date:
Permalink  
 

இந்த திரியில் ஒவ்வொரு நாளும் ஒரு வசனத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு தியானிக்கப் போகிறோம்;நண்பர்கள் அது சம்பந்தமான எந்த விவாதத்தையும் எழுப்பாமல் தங்கள் ஐயங்களை கேள்விகளாகவும் தங்கள் பாராட்டுகளை சாட்சியாகவும் தெரிவிக்க வேண்டுகிறோம்;ஆர்வமுள்ள ஒவ்வொரு தள நண்பரும் இதில் பங்காற்ற அன்புடன் அழைக்கிறோம்;நமக்குள் இணக்கமானதும் இசைவானதுமான சூழலை இந்த பகுதியானது உருவாக்க கர்த்தர் தாமே உதவிசெய்வாராக‌.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard