இங்கே நண்பர் கொல்வின் அவர்களின் வேண்டுகோளை ஏற்று எத்தனை நட்புணர்வுடன் வெள்ளந்தியாகக் காத்திருக்கிறேன்;ஆனால் எனக்கு எந்த பதிலும் சொல்லாமல் நெஞ்சத்தில் வஞ்சத்துடன் அமைதியாக இருந்துவிட்டு நம்மையே குறைகூறி எச்சமிட்டிருக்கிறார்,மிகவும் வருத்தம்..!
இது பல தளங்கள் (multi forums) இணைந்த ஒரு தளமாகும்;உதாரணமாக யௌவன ஜனத்தின் பிரதான பக்கத்திலிருந்து போதனைகள் பகுதிக்குள் நுழைந்தால் அங்கே சர்ச்சைக்குரிய எதுவும் இருக்காது;மெய்யாகவே சகோதர உணர்வு இருக்கும் யாருமே இங்கே நுழைந்து தத்தமது கருத்துக்களைத் தெரிவிக்கமுடியும்;
உதாரணத்துக்கு கடந்த சில வாரங்கட்கு முன்னர் நண்பர் திருச்சிக்காரன் அவர்களுடைய வேண்டுகோள் காரணமாக ஒரு தனிப்பகுதியை அவருக்கென உருவாக்கினேன்;பொதுவான கட்டுரைகள் என்ற பெயர் அவர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே சூட்டப்பட்டுள்ளது;இது நமது பரந்த மனப்பான்மைக்கு ஒரு சான்றாகும்.
இன்று ஒரு நற்செய்தி ,அனுதினமும் வென்று நிற்க... அல்லது காலைக் குருவி ஆகிய தலைப்புகளில் ஒன்றையோ அல்லது தங்கள் மனதில் தோன்றும் ஒரு தலைப்பையோ தருவீர்களானால் நான் இப்போதே நீங்கள் சொன்னதை செய்துவிடுகிறேன்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
அன்பான நண்பர் கொல்வின் அவர்களின் ஊக்கப்படுத்தும் வார்த்தைகளுக்கு நன்றிகள் பல;தங்களுடைய யோசனைகள் ஏற்புடையதே;ஆனாலும் ஒரு குறிப்பிட்ட தியானத்துக்கு தங்களைப் போன்றோர் எழுப்பும் ஐயங்களுக்கும் பாராட்டுகளுக்கும் நடுவே மற்றொரு தியானம் கலந்துவிடுமே என்று யோசித்தேன்;ஆயினும் தற்போதைக்கு தங்களுடைய ஆலோசனையினை ஏற்றுக்கொள்ளுகிறேன்.
இதில் விமர்சனங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் அப்பாற்பட்ட விதத்தில் எழுத முயசித்திருக்கிறேன் என்பதை அறிவீர்கள் என்று எண்ணுகிறேன்;இதனால் தாங்களும் சங்டமில்லாமல் இணைந்துகொள்ளமுடியும் அல்லவா?
நம்முடன் மற்றொரு நண்பர் வந்து இணையும் வரை ஒன்று விட்டு ஒருநாள் என்ற ஒழுங்கைக் கடைபிடிக்கலாமா,அதாவது நாளைக்கு நீங்கள் எழுதவும் நாளை மறுநாள் நான் எழுதவும் செய்யலாமா என்று தயவுசெய்து கூறுங்கள்; கர்த்தருடைய பரிசுத்த நாமத்துக்கே மகிமை உண்டாவதாக..!
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
நல்லதொரு சிந்தனை தினமும் தொடர வாழ்த்துக்கள். இதற்கென தனியானதொரு பகுதி ஆரம்பித்து அதில் இந்த ஜெப குறிப்புகளை எழுதி வரவும். தினமும் தனிதனி பக்கங்களாக எழுதினால் மற்றைய பகுதிகள் விரைவில் முதற்பக்கங்களிலிருந்து (பார்வையிலிருந்து) நீக்கிவிடும்.
அப்பகுதிக்கு பொருத்தமான ஒரு பெயரினை இட்டு (எ-கா அனுதினமும் தேவனுடன்) அப்பிரிவுக்குள் தினசிந்தனையை பதிக்கவும் நண்பர்களிடமிருந்தும் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளுங்கள்.
நாட்களாக பிரித்து கொண்டு குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட நபர் எழுதுதல் என்ற அடிப்படையிலும் செயற்படலாம். நான் தயாராகவே உள்ளேன். நீங்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கும் பட்சததில் (எ-கா, புதன், வெள்ளி)
"சில கிளைகள் முறித்துப்போடப்பட்டிருக்க, காட்டொலிவமரமாகிய நீ அவைகள் இருந்த இடத்தில் ஒட்டவைக்கப்பட்டு, ஒலிவமரத்தின் வேருக்கும் சாரத்துக்கும் உடன்பங்காளியாயிருந்தாயானால், நீ அந்தக் கிளைகளுக்கு விரோதமாய்ப் பெருமை பாராட்டாதே; பெருமைபாராட்டுவாயானால், நீ வேரைச் சுமக்காமல், வேர் உன்னைச் சுமக்கிறதென்று நினைத்துக்கொள்." ( ரோமர்.11:17,18 )
சுமைஅல்லது பாரம் என்பது வாழ்க்கையின் தவிர்க்க இயலாத பாகமாகும்; இதனை தம் மீது வைத்துவிட ஆண்டவர் பலமுறை சொன்னாலும் ஏனோ பலருக்கும் அதில் விருப்பமில்லை அல்லது அதனை அவர்மீது வைக்கும் முறை தெரியவில்லை போலும்; ஒருவேளை ஆண்டவர் ஏற்கனவே சிலுவையை சுமந்துகொண்டிருக்கிறாரே நாமும் ஏன் அவர்மீது இன்னும் பாரத்தை ஏற்றவேண்டும் என்று ஆண்டவருக்காகப் பரிதபிக்கிறார்களோ என்னவோ? ஆனால் அவர் அனைத்தையும் சிலுவையில் ஒரே தரம் செய்து முடித்துவிட்டார் என்பதே உண்மையாகும்.
மேற்கண்ட வசனத்தின் மூலம் நாம் அறியவேண்டியது என்னவென்றால் நாம் பெற்றுள்ள இந்த விசுவாசத்தின் ஆதாரம் நம்முடைய முயற்சியல்ல,அவரே அதன் ஆதாரம்; நாம் இந்த விசுவாசத்தைக் காப்பாற்ற போராடவேண்டியதில்லை,மாறாக நாம் அந்த மாபெரும் மரத்தின் கிளையாக நிலைத்திருக்க வேண்டுமானால் வேரிலிருந்து பெறும் சாரத்துக்குத் தகுதியானவர்களாக நாமே நடந்துகொள்ள வேண்டும்.
இன்னும் மற்ற கிளைகளுடன் ஒப்பிட்டு பெருமை பாராட்டவும் ஒன்றுமில்லை; காரணம் நாம் பெற்றுள்ள இந்த இரட்சிப்பானது ஒட்டுக்கிளையின் வாய்ப்பைப் போன்றது; எந்த சூழ்நிலையிலும் வேரின் தன்மையே ஒரு கிளையை பாதிக்குமே தவிர மற்றொரு கிளை அல்ல; இங்கே வேர் எனப்படுபவர் இயேசுவானவரே;
"சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்." (வெளிப்படுத்தல்.22:16)
"ஈசாயென்னும் அடிமரத்திலிருந்து ஒரு துளிர் தோன்றி, அவன் வேர்களிலிருந்து ஒரு கிளை எழும்பிச் செழிக்கும்." (ஏசாயா.11:1)
இயல்பாகவே நாம் அறிந்தவண்ணமாக எந்தவொரு மரத்துக்கும் கிளைகளினாலல்ல;வேரினாலேயே பலனுண்டாகும்; அதன் சாரத்தினாலேயே செழிப்புண்டாகும்;ஒரு கிளை பட்டுப்போகுமானால் அது வீழ்ந்துபோகும் அல்லது வெட்டி வீழ்த்தப்படுமே தவிர அதனால் மற்றொரு கிளைக்கு எந்த ஆபத்துமில்லை.
இதன்படி கர்த்தர் மீதான விசுவாசத்தைக் கைக்கொள்வதனால் நாம் அவரைக் காப்பாற்றவில்லை மாறாக அந்த விசுவாசமானது நாம் காப்பாற்றப்படக் காரணமாக இருக்கிறது; எனவே நம்முடைய சூழ்நிலைகளைக் குறித்து மனதில் பாரமடைந்து சர்வவல்ல தேவன் இதற்கெல்லாம் ஒன்றும் செய்கிறதில்லையே என்று சோர்ந்துபோகவேண்டாம்;நம்மைச் சுற்றிலுமுள்ள மற்ற எந்தவொரு கிளையைக் குறித்தும் மனதில் பாரங்கொண்டு அதனுடன் நேரடியாகப் போராடவேண்டிய அவசியமில்லை.
அது பாவத்தில் உழலும் உலகமானாலும் சரி,அல்லது சபைக்குள்ளிலிருந்து இடறல்களையும் சங்கடத்தையும் உண்டாக்கும் உடன் பங்காளிகளானாலும் சரி அல்லது துருபதேசங்களைப் பரப்பும் பூப்பூக்கவோ கனிதர வாய்ப்பில்லாத மற்ற கிளைகளானாலு சரி,அதைக் குறித்து மாய்ந்துபோகவேண்டாம்; அவற்றை நாம் சுமக்கவில்லை,அவற்றுடன் நம்மையும் சேர்த்து சுமக்கும் வேரானவர் இயேசுகிறித்துவே;அதனை அறிந்திருந்தோமானால் கலங்கவேமாட்டோம்; தாறுமாறாக நீண்டு வளர்ந்துகொண்டிருக்கும் கிளைகள் எப்படியும் வீழ்த்தப்படும்;நன்மையைப் பலனாகத் தரும் கிளைகளோ வாழ்த்தப்படும்.
ஜெபம்: எங்களை அதிகமாக நேசிக்கிற நல்ல தகப்பனே,கர்த்தர் தாமே எங்களுக்கு வேராகவும் அதன் சாரமாகவும் இருக்கிறபடியால் உமக்கு நன்றிசெலுத்துகிறோம்;நாங்கள் உம்மில் நிலைத்திருந்து மிகுந்த கனிகளைத் தர உதவிசெய்யும்;எங்கள் கிரியைகளைக் குறித்து ஒருபோதும் பெருமை பாராட்டாதிருக்க உம்முடைய நல்ல ஆவி எம்மை செம்மையான வழியில் நடத்துவாராக;நாங்கள் உம்மை ஆதாரமாகவும் உம்மை நோக்கியும் வளர்ந்தோங்க கிருபை பாராட்டும்;நாங்கள் வேண்டிக்கொள்ளும் யாவற்றையும் எங்களுக்காக யாவற்றையும் செய்து முடித்த எங்கள் வேரும் சாரமுமான இயேசுகிறித்துவின் நாமத்தில் விண்ணப்பிக்கிறோம் பிதாவே, ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)