இந்த பால்தினகரன் குறித்து விசுவாசிகள் மத்தியில் பெரிய ஈடுபாடில்லை. அங்குள்ளவர்களைப் போல் இங்குள்ளவர்கள் இல்லை. எதையும் தீர்க்கமாக ஆராய்வார்கள் பல இலட்சம் மக்கள் கூடியிருக்கதக்கதாக ஆவியானவர்தான் சொன்னார் என பொய்யை அவிழ்த்து விட்டார் இது எப்படிப்பட்ட கள்ளப்போதகம் என வந்திருந்த பலஇலட்சம் மக்கள் அறிந்து கொண்டனர். இதைதான் நான் எதிர்பார்த்திருந்தேன். இதைவிட இவர் கள்ளத்தீர்க்கதரிசி என்று நிருபிப்பதற்கு சான்று வேண்டுமா?
இங்கு அகஸ்டின் ஜெயகுமாரின் பிரசங்கங்களே முன்னிற்கின்றன. (அதிகம் விற்பனையாகின்றன) சகோ. மோகன் சி லாசரஸின் செய்திகளும் பரவாயில்லை.
//நல்லதொரு தியானக் குறிப்பு. தினமும் தொடர்வீர்களா? இதைக் குறித்து என்ன திட்டம் வைத்துள்ளீர்கள் என அறிய ஆவல்.//
இது மாத்திரமே எனக்கு மிகவும் விருப்பமான பணியாகும்; தமிழ்க் கிறித்தவ தளத்தில் நண்பர் ரமேஷ் அவர்களின் வேண்டுகோள் என் உள்ளத்தை அசைத்தது; உடனே நான் தொடர்பு கொள்ள வேண்டிய இடத்தில் உதவி நாடினேன்;நடத்துதல் கிடைத்தது;செயல்பட்டேன்.
இதன் பின்னணியானது மிக எளிமையானது;நேற்றிரவு அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஒரு சகோதரிக்கு (Dr.Hema) ஆலோசனை கூறி ஜெபித்துக்கொண்டிருந்த போது இதுபோல சொன்னேன்,"என்னம்மா ஒரு சாதாரண சினிமா ஹீரோ தன் இரசிகர்களை சந்தோஷப்படுத்த என்னென்ன செய்கிறான், இன்னும் டென்னிஸ் போன்ற விளையாட்டுகளில் வீரர்கள் தொடர்ந்து களத்திலேயே இருக்க எத்தனை பிரயாசப்படுகிறார்கள்? நம்முடைய ஆண்டவர் அவரையே சார்ந்திருக்கும் நம்மைக் கவரவும் சந்தோஷப்படுத்தவும் அவ்வப்போது ஏதாவதொரு அற்புதத்தை நிகழ்த்திக்கொண்டே இருப்பார்...கவலைப்படாதிருங்கள் , தைரியமாக இருங்கள் " என சாதாரணமாகச் சொன்னேன்;அதனை எனது சிந்தனைக் குறிப்புகளில் (Thoughts) எழுதியும் வைத்தேன்;அதுவே இங்கே தியானமாக மலர்ந்தது;அதற்கு ஆதாரமாக ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டேன்.
இதுபோலவே தினமும் ஒரு தியானத்தை எழுதுவது எனது நீண்டகால விருப்பமாகும்;ஆனாலும் ஆரம்பம் முதலே வாதங்களிலும் பின்னூட்டங்களிலும் அதற்கு பதிலளிப்பதிலுமே நான் சிக்கிக்கொண்டதால் என்னால் ஆக்கப்பூர்வமாக செயல்பட இயலவில்லை.
ஆனால் இந்த வருடத்தில் முதலாம் தேதியன்று ஒரே ஒரு திரியில்... ஒரு நீண்ட... காரசாரமான பதிலை... ஆயத்தம் செய்தும்... அதைப் பதிக்காமல் தவிர்த்த சந்தோஷம்... என் உள்ளத்தை நிறைத்தது..!
அது பால் தினகரன் குறித்த தமிழ்க் கிறித்தவ தளத்தின் செய்தி; "அடுத்த முதல்வரை இயேசு நியமிப்பார்! - பால் தினகரன் பேட்டி"- எனும் இந்த திரிக்கும் "என்ன தான் நடக்கிறது இலங்கையில்...." -எனும் இந்த திரிக்கும் பொதுவாக,அதில் நண்பர் இராஜ்குமாருக்கு எதிராகவும், உங்களை மறைமுகமாகத் தாக்கியும், பால் தினகரன் அவர்களின் மேல்மட்ட-அரசியல்ரீதியான - திரைமறைவு இரகசியங்களையும் - பொருளாதாரக் குற்றங்களையும் அம்பலப்படுத்தி ஒரு பின்னூட்டத்தை ஆயத்தம் செய்திருந்தேன்;ஆனாலும் அதனை நிறைவு செய்யாமலும் வேறொரு வேலை அழுத்தத்திலும் சென்றுவிட்டேன்;மீண்டும் இணையத்துக்கு வந்தபோதும் அது தேடுபொறியின் (browser) சேமிப்பில் இருந்தது;ஆனாலும் ஆவியானவருடைய தெளிவான நடத்துதல் காரணமாக இந்த விவாதத்தில் சிக்கிக்கொள்ளாமல் தடுக்கப்பட்டேன், தப்பிப் பிழைத்தேன்; ஒருவேளை நான் இடைபட்டிருந்தால் இந்த திரியானது இன்னும் வேகம் பெற்று ஹிட் ஆகியிருக்கும்;ஆனால் அந்த விவாதத்திலும் அது சம்பந்தமான சிந்தனையினாலும் அடியேன் இந்த மாதம் முழுமையும் கழித்திருக்க வேண்டியிருந்திருக்கும்;இது எனது இயல்பான குணாதிசயத்தையே மாற்றிவிடுகிறது:Thank God, Almighty..!
இது போதனை பகுதியானதால் விஷயத்துக்கு வருகிறேன்;ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் அதிசயங்களைக் காணப்பண்ண எப்போதும் ஆயத்தமாகவே இருக்கிறார்;ஆனாலும் அதனை அடைய நாம் தான் ஆயத்தமாக இருக்கிறதில்லை;இது தொடர்பாக இன்று கூட ஒரு குறிப்பிட்ட வசனத்தின் மூலம் ஆவியானவர் இடைபட்டார்;அதனை நாளைய தினத்தின் தியானமாக எழுதுவேன்.
மீண்டும் ஒருமுறை தங்கள் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகளுடன்...
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)
"நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே உன்னை அதிசயங்களைக் காணப்பண்ணுவேன்." (மீகா.7:15)
எனக்கு அருமையான கர்த்தருடைய பிள்ளைகளே, மேற்காணும் வசனத்தை நாம் முழுவதுமாக அறிந்திருக்காவிட்டாலும் அதன் பிற்பகுதியை அதிகமாக பலர் சொல்ல கேள்விபட்டிருப்போம்; ஆம், நம்முடைய தேவன் அதிசயங்களைக் காணப்பண்ணுகிறவர்.
தேவன் ஏன் அதிசயங்களைச் செய்யவேண்டும்? அதன்மூலமே தம்முடைய வல்லமையை நிரூபிக்கிறாரா?
இதைக் குறித்த ஒரு சிந்தனை: தேவன் அதிசயங்களைச் செய்கிறார் என்பது மனிதர்களாகிய நம்முடைய பார்வையாகும்; சர்வ வல்லவரும் சிருஷ்டிகருமாகிய தேவாதி தேவனுடைய ஒவ்வொரு இயல்பான செயல்பாடுமே மனிதனுடைய கிரகிக்கும் சக்திக்கு அப்பாற்பட்டதாகவே இருக்கிறபடியால் அது அதிசயமாகவே தோன்றுகிறது;ஆண்டவருக்கு அது சாதாரணமான காரியமாகும்.
இதிலிருந்து மற்றொரு கருத்து என்னவென்றால்,அதிசயங்களைச் செய்து தம்மையும் தம்முடைய வல்லமையையும் நிரூபிக்க வேண்டிய கர்த்தருக்கு இல்லை;ஆனாலும் தம்மைக் குறித்து உத்தம இருதயத்தோடு இருப்போருக்கு தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ண கர்த்தர் ஆயத்தமாக இருக்கிறார்.
இதற்கு உதாரணமாக ஒரு விளையாட்டு வீரரையோ அல்லது எந்த ஒரு சாதனையாளரையோ எடுத்துக்கொண்டால் அவன் தன்னை முதல் வரிசையிலேயே வைத்துக்கொள்ள தொடர்ந்து கடுமையான பயிற்சிகள் மூலம் செயல்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும்; காரணம், தன்னை ஆவலுடன் கவனித்துக் கொண்டிருக்கும் தனது அபிமானிகளைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டியது அவனுக்கு அவசியமாகும்; அதுபோலவே தான் மிகவும் நேசிக்கும் ஒரு தோழியை அவளுடைய நேசத்துக்குரியவன் எப்போதும் சந்தோஷப்படுத்திக் கொண்டிருக்கவே முயற்சிப்பான்.
இவையெல்லாம் மனிதப் பார்வையில் சாதாரணமான உதாரணங்களே; இவை எந்தவகையிலும் தேவாதி தேவனுடன் ஒப்பிடத்தக்கவைகளல்ல; ஆனாலும் இதைப் போலவே அல்லது அதற்கும் மேலாக நம்மை அதிகமாக நேசிக்கும் சர்வ வல்ல தேவன் நம்முடைய சார்ந்திருக்கும் தன்மையைப் பொறுத்து அதிசயங்களைச் செய்துகொண்டே இருக்கிறார்; இதன் மூலம் அவர் எதிர்பார்ப்பது வேறொன்றுமில்லை,நாம் அவரையே சார்ந்திருந்து அவரைப் புகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார் என்று கொள்ளலாம்.
ஏனென்றால் இதற்கு ஆதாரமாக மேற்கண்ட வசனத்தில் ஒரு மேற்கோளைக் காட்டுகிறார், "நீ எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் நடந்ததுபோலவே.." ஆம், இது அவருடைய மாறாத தன்மைக்கும் அக்கறைக்கும் கரிசனைக்கும் உதாரணமாகும்; எகிப்தில் அவர் அதிசயம் செய்ததும்கூட அதிசயம் அல்ல, அது தன் நேசத்துக்குரிய ஒரு மனிதனின் சந்ததியாரை பதற்றத்துடன் ஓடிச்சென்று மீட்டுக்கொள்ளும் அவசரமே; இதன்மூலம் தன் சிநேகிதனாகிய ஆபிரகாமுக்கு தாம் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றிவிட்டார்.
இதிலிருந்து நாம் அறியத் தகுந்தது என்னவென்றால், எந்த தலைமுறையிலும் எந்த சூழ்நிலையிலும் சர்வ வல்ல தேவன் இடைபட்டு இயற்கைக்கு மாறுபட்ட விதத்தில் செயல்பட்டு தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றுவார்.
ஜெபம்: எங்களை அதிகமாக நேசிக்கிற பரலோகப் பிதாவே, உம்முடைய பரிசுத்த நாமத்தை துதிக்கிறோம்; கர்த்தர் எங்களுக்கு உம்மோடு இணைந்த ஒரு வாழ்க்கை முறையைக் கொடுத்தமைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்; நாங்கள் எதிர்பார்த்திருக்கும் எந்தவொரு காரியத்தையும் நீர் எப்போது வேண்டுமானாலும் செய்ய வல்லவர் எனும் விசுவாசத்துடன் உம்மை ஸ்தோத்தரிக்கிறோம்; கர்த்தர் தாமே தம்மை சார்ந்திருக்கும் தம்முடைய ஜனத்துக்கு செய்யும் அதிசயங்களால் தம்முடைய நாமம் மகிமைப்படுவதாக.இரட்சகரும் மீட்பருமான இயேசுகிறித்துவின் நாமத்தில் ஜெபம் கேளும் பிதாவே, ஆமென்.
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)