"வருஷத்தில் மூன்றுதரம் புளிப்பில்லாத அப்பப் பண்டிகையிலும், வாரங்களின் பண்டிகையிலும், கூடாரப்பண்டிகையிலும், உன் ஆண்மக்கள் எல்லாரும் உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்துகொள்ளும் ஸ்தானத்திலே, அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து காணப்படக்கடவர்கள்." (உபாகமம்.16:16)
பண்டிகைகளை கர்த்தரே நியமித்தார்; அதன் வெவ்வேறான பரிமாணங்களும் பரிணாமங்களுமே தற்கால விழாக்கள்; ஆனாலும் ஆண்டவர் நியமித்த பண்டிகைகளின் நோக்கங்களுக்கும் தற்கால சூழ்நிலைகளுக்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு; கர்த்தருடைய பிள்ளைகளான நாம் இந்த வித்தியாசங்களை அறிந்து கருத்துடன் பண்டிகைகளை ஆசரிக்க வேண்டும்.
"ஆதலால் பழைய புளித்தமாவோடேஅல்ல, துர்க்குணம் பொல்லாப்பு என்னும் புளித்தமாவோடும் அல்ல, துப்புரவு உண்மை என்னும் புளிப்பில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக்கடவோம்." (1.கொரிந்தியர். 5: 8 )
"இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்." (2.கொரிந்தியர்.7:1)
பண்டிகைகளின் ஆதார நோக்கமே கர்த்தரைக் கிட்டிச்சேருவதே; இந்த வருடத்துக்கான காலண்டரை அச்சிட கொடுக்கும் போது அதில் இந்த வருடத்துக்கான மையப் பொருளாக ஆவியானவர் கொடுத்த சொற்றொடர் இதுவே... "செவிகொடுக்கச் சேரும் வருடம்-2011" இதன் ஆதார வாக்கியமாக அடியேன் பெற்றுக்கொண்ட வசனமாவது, "நம்முடைய தேவனாகிய கர்த்தரைத் தேடினோம்... காரியம் வாய்த்தது. " (2.நாளாகமம்.14:7)
இஸ்ரவேலர் வருடத்தில் மூன்றுமுறை கர்த்தரை சந்திக்கும்படி கட்டளை பெற்றனர்; அதுவே பண்டிகையாக மாறினது; அதில் பிரதானமான இரண்டு பண்டிகைகள் உண்டு; ஒன்று பஸ்கா பண்டிகை மற்றது எக்காள பண்டிகையாகும்; இவ்விரண்டுக்கும் இடைபட்டது பெந்தெகொஸ்தே பண்டிகையாகும்; பஸ்கா பண்டிகையானது மீட்பின் அடையாளமாகவும் எக்காளப் பண்டிகையானது சேர்க்கப்படுதலின் அடையாளமாகவும் விளங்குகிறது; இதற்கு இடைப்பட்ட பெந்தெகொஸ்தே பண்டிகையானது காத்திருந்து பெலப்படுதலின் அடையாளமாகவும் விளங்குகிறது.
இவை யாவும் கிறித்துவில் நிறைவேறியபிறகும் அதைக் குறித்த போதனையை நாம் சரியாகப் பெற்றுக்கொள்ளாத காரணத்தால் மாயையான பல்வேறு போதனைகளில் சிக்கி விசுவாசமாகிய கப்பலையும் அதன் நங்கூரத்தையும் சேதப்படுத்திக் கொண்டிருக்கிறோம்; தற்போதய மாயமான உலகின் வேடந்தரியாமல் கிறித்துவின் சாயல் நமக்குள் வந்தால் மாத்திரமே சத்துருவின் சூழ்ச்சிகளிலிருந்து கர்த்தருடைய ஜனம் தப்பமுடியும்.
பஸ்கா பண்டிகையின் அனுபவத்தையும் பெந்தெகொஸ்தே பண்டிகையின் அனுபவத்தையும் நாம் ஒருவேளை கடந்திருக்கலாம்; ஆனால் எக்காளப் பண்டிகையின் அனுபவங்களை நாம் கடந்திருக்கமுடியாது; ஏனெனில் பண்டிகைகள் கிறித்துவில் நிறைவேறியதாக சொல்லப்பட்டாலும் எக்காளப் பண்டிகை தொடர்பான நிழலாட்டங்கள் இன்னும் நிஜத்தை அடையவில்லை; அது கிறித்துவின் இரண்டாம் வருகையிலேயே நிறைவேறக் காத்திருக்கிறது; அப்படியானால் விசுவாசிகளாகிய நாம் செய்யவேண்டியது என்ன, கர்த்தருடைய வருகைக்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொள்ளவேண்டும்.
"நீஆயத்தப்படு, உன்னுடனே கூடின உன் எல்லாக் கூட்டத்தையும் ஆயத்தப்படுத்து; நீ அவர்களுக்குக் காவலாளனாயிரு.” (எசேக்கியேல்.38:7) "...உன்தேவனைச்சந்திக்கும்படிஆயத்தப்படு." (ஆமோஸ்.4:12)
"ஆகையால் நீங்கள் இளைப்புள்ளவர்களாய் உங்கள் ஆத்துமாக்களில் சோர்ந்துபோகாதபடிக்கு..." (எபிரெயர்.12:3)
“உங்கள் இருதயங்கள் பெருந்திண்டியினாலும் வெறியினாலும் லவுகீக கவலைகளினாலும் பாரமடையாதபடிக்கும், நீங்கள் நினையாத நேரத்தில் அந்தநாள் உங்கள்மேல் வராதபடிக்கும் எச்சரிக்கையாயிருங்கள்.”(லூக்கா.21:34)
இவையெல்லாம் நம்மை அவரை நோக்கி இழுத்துக்கொள்ளவேண்டி கர்த்தர் சொன்ன ஆலோசனைகளாம்; இந்த பின்னணியில் ஆண்டவர் இந்த வருடத்துக்காகக் கொடுத்துள்ள வாக்குதத்தமானது,
"கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் சமாதானத்தை ஒரு நதியைப் போலவும், ஜாதிகளின் மகிமையைப் புரண்டு ஓடுகிற ஆற்றைப் போலவும் அவளிடமாகப் பாயும்படிசெய்கிறேன்; அப்பொழுது நீங்கள் முலைப்பால் குடிப்பீர்கள்; இடுப்பில் வைத்துச் சுமக்கப்படுவீர்கள்; முழங்காலில்வைத்துத்தாலாட்டப்படுவீர்கள். (ஏசாயா.66:12)
இந்த குறிப்பிட்ட வாக்குத்தத்தத்தை சில வாரங்கட்கு முன்பதாக தேவையுள்ள ஒரு சகோதரிக்காக ஜெபித்தபோது ஆவியானவர் வெளிப்படுத்தினார்; அதனைத் தொடர்ந்து பல்வேறு வசனங்கள் மூலமாக ஆவியானவர் இதனை உறுதிப்படுத்திக் கொண்டே வந்ததால் இந்த புதிய வருடத்தில் கர்த்தருடைய ஜனத்துக்கான வாக்குத்தத்தமாக ஆவியானவரின் துணையோடு அறிவிக்கிறேன்; இந்த வசனத்தை வாக்குத்தத்தமாக ஆவியானவர் கொடுக்க ஆதாரமான வெளிப்பாடானது "இந்த வருடத்தில் நீசுமப்பதில்லை, சுமக்கப்படுவாய்" என்பதே.
கடந்த வருடம் முழுவதும் பல்வேறு சுமைகளை சுமந்து நீ ஒருவேளை இளைத்துப்போயிருக்கலாம், ஆனால் இந்த புதிய வருடத்தில் கர்த்தர் உன்னை இளைப்பாறப்பண்ணுவார்.
எனக்கன்பான தேவஜனமே, இந்த புதிய வருடத்தில் உன் கைகள் தளர்ந்து போகாபடிக்கு உன் கைகளை கூடைக்கும் உன் தோளை சுமைக்கும் கர்த்தர் விலக்குவார். (மத்தேயு.11 : 28, சங்கீதம். 51: 22 , ஏசாயா. 35: 3 )
நாம் செய்யவேண்டியது என்ன?
அவரை நோக்கி திரும்பவேண்டும்,
அவருடைய சத்தம் கேட்க வேண்டும்,
அவருடைய சித்தம் செய்யவேண்டும்.
அதன்பலாபலன்கள்என்ன?
நம்மீதான நுகத்தை நீக்கிப் போடுவார்,
சுமைகளை விலக்குவார்,
நிமிர்ந்து நடக்கச்செய்வார்,
நம்முடைய சுமையானது விலக்கப்பட்டு நாம் ஆண்டவரால் சுமக்கப்படும்போது அடையும்பாக்கியம்என்ன?
நம் மூலம் தேசத்தில் தேவனுடைய பயங்கரமான செய்கைகள் விளங்கும்.
இந்த வருடத்தின் வாக்குத்தத்த வசனத்திலிருந்து...
"அவள்" என்பது எருசலேம் நகரம்; அது நம்முடைய சபை ஐக்கியத்தைக் குறிக்கும்; கர்த்தருடைய ஜனத்துக்கு சபையில் மட்டுமே சமாதானமும் மகிமையும் இளைப்பாறுதலும் அமைதியும் கிடைக்கும்; சபையை இங்கே தாய்க்கு ஒப்பிட்டு ஆவியானவர் பேசுகிறார்; விரைவில் இந்த பகுதி முழுமையும் கர்த்தருடைய வருகையில் நிறைவேறக் காத்திருக்கிறது; கர்த்தருடைய வருகைக்கு ஆயத்தப்படுவோமாக, மாரநாதா, அல்லேலூயா, கர்த்தர் வருகிறார்..!
“யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினது முதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானது முதல் உங்களைத் தாங்கினேன். உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச்செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச்செய்து வந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன். (ஏசாயா.46:3, 4)
Wish you a Prosperous Happy New Year- 2011
Mail@chillsam@rocketmail.com
__________________
"And the God of peaceshall bruiseSatanunder your feet shortly. The grace of our Lord Jesus Christbe with you. Amen." (Romans.16:20)