Yauwana Janam

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கோவை பெரியன்ஸ் கத்தோலிக்கத்தில் இணைந்தனர்..!


Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
கோவை பெரியன்ஸ் கத்தோலிக்கத்தில் இணைந்தனர்..!
Permalink  
 


// சில்சாம் தன் தளத்தில் நிறப்பிய சில தமாசான‌ பதிவுகள்...//

இந்த குறிப்பிட்ட திரியின் முதல் செய்திக்கு சம்பந்தப்பட்டவர்களின் எதிர்வினையானது மிக சுவாரசியமானது,நாம் கோமாளிகளாம்; தமாசு பண்ணுகிறவர்களாம்; பரவாயில்லை, இதனால் சிலருடைய நோய் தீர வாய்ப்புண்டாகும்; ஆனால் அவர்களுடைய கூற்று மடத்தனமாக அல்லவா இருக்கிறது; கத்தோலிக்கர்களை விமர்சிக்கும் நீ ஏன் அவர்கள் கொடுத்த புத்தாண்டுக்கு வாழ்த்துச் சொல்லவேண்டும் என்ற தர்க்கத்தைத் தானே அடியேன் முன்வைத்துள்ளேன்; இதனை மறுத்துக் கூற வக்கில்லாத சீமேயி வம்சத்தார் சமாளிப்புகளைக் கூறுகின்றனர்.

இவர்களை கர்த்தருடைய நாமத்தில் கடிந்துகொண்டாலும் சிலரால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை; நம்மை சபிக்கிறவர்கள் என்கிறார்கள்; ஆனால் தூஷிக்கிறவர்களுடன் தொடர்பிலிருந்து நேசம் பாராட்ட யாரும் தயங்குகிறதில்லை; மோசேயின் சரீரத்தைக் குறித்து பிசாசு தர்க்கித்தபோது அவனைக் கர்த்தருடைய நாமத்தில் கடிந்துகொண்ட தூதனைப் போலவே நாங்கள் செயல்படுகிறோம்.

இதோ கோவை பெரியன்ஸ் இந்த திரிக்கு எதிர்விளைவாகத் தந்த பதில்:

// புத்தாண்டை பெரிது படுத்த நான் விரும்பவில்லை, அதில் எனக்கு கவலையும் இல்லை, அல்லது புத்தாண்டு சென்டிமென்ட்ஸை எல்லாம் கடந்து வந்தவன் என்று சொல்லிவிட்டு, விக்கிரக ஆராதனைக்காரர்களை போல், கிறிஸ்துமஸிற்கு ஒரு படமும் புத்தான்டிற்கும் வாழ்த்து அட்டை போடும் அளவிற்கு நான் ஒன்றும் "முழு நேர ஊழியனும்" இல்லை!! //

ஆம்,ஐயா நான் கிறிஸ்மஸ் கொண்டாடும் கூட்டத்தைச் சேர்ந்தவந்தான், ஆனாலும் அவர்கள் செய்கைகளின்படி செய்பவனல்ல; இதற்கு ஆதாரமாகவே ஆண்டவர் தாறுமான தம்முடைய ஜனத்துடன் சேர்ந்து பஸ்கா பண்டிகையை ஆசரித்ததையும் பவுலடிகள் அதனைத் தொடர்ந்ததையும் குறிப்பிட்டுள்ளேன்;

விக்கிரத்துக்கும் சித்திரத்துக்கும் எனக்கு வித்தியாசம் தெரியும்;நான் என்னைக் குறித்து முழுநேர ஊழியன் என்று ஒருபோதும் சொன்னதுமில்லை;நான் சொன்ன புத்தாண்டு வாழ்த்தின் மதிப்பு எவ்வளவு என்று எனக்கு மட்டுமே தெரியும்;நான் இந்த உலகத்திலிருந்து நீங்கிப் போக விரும்பவில்லை;இங்கே இருந்து சத்தியத்தைப் போதித்து சிலரையாவது ஆதாயப்படுத்த விரும்புகிறேன்;இதற்காக யூதனுக்கு யூதனாகவும் கிரேக்கனுக்கு கிரேக்கனாகவும் பாவித்துக் கொள்ளுகிறேன்;உங்கள் கூட்டத்தார் எவ்வளவு போராடினாலும் என்னைக் குற்றப்படுத்த முடியாது;காரணம் நான் என்னுடைய சுயநீதியை சார்ந்திருக்கவில்லை;

புத்தாண்டு சென்டிமென்ஸ் ஆகிய தீர்மானங்களை எடுப்பது, பிறகு அதனை மீறிவிட்டு வருத்தப்படுவது போன்றவற்றை
நான் செய்பவனல்ல; ஒரு நண்பர் இந்த புதிய வருடத்திலிருந்து உம்மைப் போன்ற சைத்தான்களுடன் போராட வேண்டாமே அன்புடன் கூறிய ஆலோசனைக்கு பதிலாகவே அவ்வாறு குறிப்பிட்டேன்;

அவர் சொன்ன தீர்மானத்தை நான் எடுத்துவிட்டால் உங்களைப் போன்ற ஆட்களுடன் போராட ஆள் இருக்காதே, யாராவது ஒரு நண்பராவது  என்னுடன் இணைந்து போராட எழுந்து வரட்டும் அல்லது நான் எதிர்க்கும் மும்மூர்த்திகளான உங்களில் ஒருவராவது திருந்திய செய்தி எனக்கு வரட்டும்,பிறகே அதுபோன்றதொரு தீர்மானத்தை நான் எடுப்பேன்; ஆனாலும் இதைவிட உபயோகமான வேறு வேலைகளும் எனக்கு உண்டு.

// இந்த தளத்தை நான் கொண்டிருக்கும் விசுவாசம் உள்ளவர்கள் அநேகர் வந்து பார்க்கிறார்களே, மேலும் புத்தாண்டிற்கும் கிறிஸ்தவத்தற்கும் எந்த சம்பந்தமும் கிடையாதே!! இந்த தேதியை கிறிஸ்து பிறப்பிற்கு 45 வருடங்கள் முன்னமே நியமித்தார்கள் (ஜூலியன் காலண்டர்)!!

நான் ஒன்றும் பெந்தகோஸ்தே சபையார் போல் புது வருட "வாக்குத்தத்ததிற்கோ" அல்லது "வாக்குத்தத்த அட்டை" வாங்கவோ போவதில்லை!! அல்லது சில்சாம் எழுதியது போல், நான் கத்தோலிக்கனாக மாறி, கத்தோலிக்க சபையில் நல்லிரவு திருப்பலிக்கு செல்வதும் இல்லை!! அன்பர் அன்பு எழுதியது போல், இதுவும் தேவன் தந்த ஒரு புதிய நாள், ஆனால் உலகத்தார், இந்த நாளிற்கு ஒரு முக்கியத்துவம் கொடுப்பதால், இதை நம்புவோருக்கு ஒரு வாழ்த்து, அவ்வளவே!!

தீபாவளிக்கு வாழ்த்து, அல்லது பொங்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதால் அந்த மார்கத்திற்கு போய்விட்டோம் என்று சில்சாம் நினைத்தால் அது அவர் அறிவு, அவ்வளவே!! சில்சாம் அவர்களே முதலில் உங்கள் பெந்தகோஸ்த சபை குப்பைகளை நீக்கிவிட்டு பிறகு அடுத்தவர்களின் தூசியை துடைக்கலாம்!! //

அறிவைக் குறித்துப் பேசும் 
அரைவாளியே, நீர் முதலில் தமிழை முதலில் நன்கு கற்றுக்கொண்டு பிறகு வந்து எதைவேண்டுமானாலும் எழுதுங்கள் என்று உங்களை வேண்டிக்கேட்டுக்கொள்ளுகிறேன்; உமது கடித்துக் குதறும் அழகு தமிழால் இணையத்தை மாசுபடுத்தாதிரும்;அவற்றை வாசித்து வாசித்து எங்கள் கண்களெல்லாம் காய்ந்துபோகிறது;

இந்த இலட்சணத்தில் நீர் தமிழ் வேதாகமத்தின் மொழிபெயர்ப்பைக் குறைகூற எந்த தார்மீக உரிமையும் இல்லை என்று மீண்டும் எச்சரிக்கிறேன்;அது கிறித்துவை தெய்வமாகத் தொழுவோருக்காக கிறித்தவர்கள் எழுதி சொந்த செலவில் அச்சிட்டு சொற்ப விலையில் விநியோகிப்பது; உமக்கு அதில் ஒரு பங்குமில்லை, பாகமுமில்லை என்று தெரிகிறதே பிறகு அதைக் குறித்து ஏன் பேசவேண்டும்?

அரவாணிகள் தங்களை தனி இனமாக அறிவிக்கக் கோருவது போல சிறுத்த‌
(சிறுத்தையல்ல சிறுத்துப்போன‌)மந்தையான உங்கள் கூட்டத்தினரும் உங்களை தனிகுழுவாக அங்கீகரிக்க அரசாங்கத்துக்கு கோரிக்கை வையுங்கள்; உங்களைக் கிறித்தவர்கள் என்று சொல்லிக் கொள்ளாமலும் உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளியில் அதுபோலக் குறிப்பிடாமலுமிருந்து உங்கள் யெகோவா விசுவாசத்தை நிரூபியுங்கள்; இதேபோன்ற‌ கொள்கையோடு உலகத்தைக் கெடுக்கும் இஸ்லாமியர்களும் செயல்படுவதால் நீங்கள் அங்கே போய் சேர்ந்துகொள்வதே சரியான சாய்ஸ்..!

நீங்கள் நம்பாத கொண்டாத ஒரு பண்டிகைக்கு வாழ்த்துச் சொல்லுவதைப் போன்ற மோசடி ஏதாவது உண்டா? சாதாரண உலக மனுஷனிடமே இந்த சுபாவத்தைக் காணலாமே? உதாரணமாக தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் பகுத்தறிவுக்குட்படாத இந்துவிழாக்களுக்கு வாழ்த்து சொல்லாததால் விமர்சிக்கப்படுகிறதில்லையா?ஆனாலும் அதைக் குறித்து கவலைப்படாமல் கடைபிடிக்கிறதில்லையா?

நீர் பழக்கதோஷத்தில் செய்துபோட்ட அல்லது அறிவில் தெளிவில்லாமல் கைக்கொள்ளும் விசுவாசத்தை மாற்றிக்கொள்ள மனமில்லாமல் ச்சும்மாவேனும் சமாளிக்க வேண்டாமே..!

நீர் புத்தாண்டு வாழ்த்து சொன்னது அப்பட்டமான மோசடியாக்கும்;அதையே நானும் செய்ததால் நீர் செய்தது சரியாகிவிடுமா என்ன? காரணமில்லாமல் இடும் சாபம் தங்காது என்பதைப் போலவே நோக்கமில்லாமல் தரும் வாழ்த்தும் பலிக்காது என்பதுடன் பயனற்றது என்பதை நீர் உணர்ந்தால் எனக்கு சந்தோஷம்;இந்த விஷயத்தில் நீர் மாயக்காரன் என்பதை நீரூபித்துவிட்டீர்;

அப்புறம் ஒரு முக்கிய விஷயம்,என்னிடம் இனி எதற்கெடுத்தாலும் வசனம் கேட்கவேண்டாம்,காரணம் வேற்று மார்க்கத்தா
னான (..?!) என்னை உள்ளே நுழையவிடாமல் தடுக்கும் சாத்தானின் கூட்டத்தாராகிய நீங்கள் அந்த அரும்பெரும் பொக்கிஷத்தை திருடிச் சென்று விட்டீர்கள்;அதை மீட்கவே போராடிக்கொண்டிருக்கிறேன்.

__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: கோவை பெரியன்ஸ் கத்தோலிக்கத்தில் இணைந்தனர்..!
Permalink  
 


// இது உங்களின்  தவறான கணிப்பு; முன்னர் அப்படியிருந்தது உண்மை தான்.பிறகு என்னை மாற்றிக் கொண்டேன்.பகிரங்க மன்னிப்பு கூட தளத்தில் கேட்கத் தவறுவதில்லை. ஒரு சிறிய வித்தியாசம் என்னவென்றால் தனிப்பட்ட ரீதியில் எந்த உறவும் பேணமாட்டேன். தளத்துடன் சரி.நான் மன்னிப்புக் கேட்டுவிட்டால் நீங்கள் அதனை சுட்டிக் காட்டுவது தவறான செயல். இதுவரை சமீபகாலமாக என்னை அவர்கள் தவறான எந்த வார்த்தையாலும் அழைக்கவில்லை.  எனவே பகிரங்கமான குற்றசாட்டுக்களை கூறும்போது அவதானமாக இருங்கள். //

நீங்கள் உங்களை மாற்றிக்கொண்டது எனது கவனத்துக்கு வரவில்லை, நண்பரே; உங்களை நீங்கள் மாற்றிக்கொண்ட நிலைக்கும் அந்த நிலைக்கு நான் ஏறி வருவதற்கும் நிறைய இடைவெளி உண்டு;தனிப்பட்ட முறையில் ஒரு மனிதனை சீண்டினால் அந்த மனிதனுக்கு எவ்வளவு ரோஷமும் ஆக்ரோஷமும் கோபமும் வரும் என்பதற்கு தாங்களே நிரூபணம்; இதே கோபமும் வைராக்கியமும்  ஆண்டவருக்காக ஏற்படுமானால் அது யாரோ, அதுவே நான்; பேசவும் எழுதவும் ஆண்டவர் கொடுத்த கிருபையின் ஆதாரமே நம்முடைய தரப்பை விளக்கி உறவை ஏற்படுத்துவதும் பேணுவதும் தான் எனில் அதில் நான் பலமுறை தோற்றுப் போயிருக்கிறேன்; இதோ மீண்டும் உங்களிடம்..!

// இறுதியாக ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். மற்றைய சகோதர தளங்களுடனான எனது உறவை நானே தீர்மானிப்பேன்.//

நான் எந்த நிலையிலும் உங்களை எதற்கும் வற்புறுத்தவில்லை, நண்பரே; நீங்கள் இந்த தளத்தின் உறுப்பினராகத் தொடருவதும் பங்களிப்பதும் கூட உங்கள் தனிப்பட்ட தீர்மானமே;நான் என்மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுக்க முயற்சித்தேன்,அவ்வளவு தான்; நான் எழுதியவற்றில் பல வரிகள் மீண்டும் எழுதியது போலவே இருந்தது; அந்த அளவுக்கு நான் என்னைக் குறித்தே மீண்டும் மீண்டும் விளக்கம் கொடுத்துக் கொண்டிருப்பது எனக்கு சற்று வருத்தமாகவே இருக்கிறது.

உங்கள் வேளை எப்போதும் ஆயத்தமாக இருக்கிறது;நீங்கள் எப்போது வேண்டுமானாலும் எதையும் செய்யவும் தீர்மானிக்கவும் சுதந்தரவாளிகளாக்கும்;என்னுடைய நிலை அப்படியல்ல,நான் சிறுவயது முதலாக பல்வேறு பக்கங்களிலிருந்து அழுத்தப்பட்டு வந்திருக்கிறேன்; எனக்கு இயேசுவானவரின் பாத்திரத்தில் மட்டுமே பங்கு கிடைத்தாலும் போதும்; யூதாஸின் கூட்டத்தாருடன் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டேன்.

கிருபை உங்களோடு இருப்பதாக‌.

(ஒரு வேண்டுகோள்: இதற்கு மேல் ஏதாவது சொல்வதாக இருந்தால் தனிமடலில் அனுப்பவும்;தளத்துக்கு ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பைத் தொடர்ந்து நாடுகிறேன்.)


__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
கோவை பெரியன்ஸ் கத்தோலிக்கத்தில் இணைந்தனர்..!
Permalink  
 


//நீங்களும் கூட இஸ்லாமியருடன் புரியும் விவாதங்களில் கோபம் காட்டுவதில்லையா? அவர்களுடன் ஏன் உங்களால் நட்பாகவும் அன்பாகவும் இருக்க முடியவில்லை?//

இது உங்களின்  தவறான கணிப்பு. முன்னர் அப்படியிருந்தது உண்மைதான். பிறகு என்னை மாற்றிக் கொண்டேன். பகிரங்க மன்னிப்புக்கூட தளத்தில் கேட்கத் தவறுவதில்லை. ஒரு சிறிய வித்தியாசம் என்னவென்றால் தனிப்பட்ட ரீதியில் எந்த உறவும் பேணமாட்டேன். தளத்துடன் சரி.  நான் மன்னிப்புக் கேட்டுவிட்டால் நீங்கள் அதனை சுட்டிக் காட்டுவது தவறான செயல். இதுவரை சமீபகாலமாக என்னை அவர்கள் தவறான எந்த வார்த்தையாலும் அழைக்கவில்லை.  எனவே பகிரகங்கமான குற்றாட்டுக்களை கூறும்போது அவதானமாக இருங்கள்.

இறுதியாக ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். மற்றைய சகோதர தளங்களுடனான எனது உறவை நானே தீர்மானிப்பேன்.

இருப்பினும் உங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
RE: கோவை பெரியன்ஸ் கத்தோலிக்கத்தில் இணைந்தனர்..!
Permalink  
 


அருமை நண்பர் கொல்வின் அவர்களே, நீங்கள் நம்புவீர்களோ நம்பமாட்டீர்களோ அடியேன் அறியேன், நள்ளிரவில் படுக்கச் சென்றேன், இதோ மீண்டும் காலையில் சுமார் 07:40 -க்கு எழுந்தவன் குறிப்பிட்ட இந்த பின்னூட்டத்துக்குப் பிறகு "கிறித்தவர்கள் புத்தாண்டு கொண்டாடலாமா..?" -எனும் கட்டுரையை எழுதத் துவங்கி மதியம் சுமார் 01:40 -க்கு முடித்திருக்கிறேன்; இதனை எனது பரவலான விஷய ஞானத்திலிருந்து பொதுவான கட்டுரையாகவே எழுதியிருக்கிறேன்; அதையே ஒரு ஆய்வு கட்டுரையாகப் படைத்திருந்தால் பல்வேறு ஆதாரங்களை சமர்ப்பித்திருப்பேன்; இதனிடையே எனது காலைக் கடன்கள் தவிர‌ தனி வேலைகள் எதையும் பார்க்கவில்லை என்பதற்கு கர்த்தர் சாட்சியாக இருக்கிறார்; இந்த ஆறு மணிநேர உழைப்பினால் எனக்கோ என்னைச் சார்ந்தவர்களுக்கோ எந்த பலனும் இல்லை;காரணம் எனது தனிவிவரங்களை மறைத்துக்கொண்டு புனைப் பெயரிலேயே கர்த்தருடைய நாம மகிமைக்காக மட்டுமே எழுதி வருகிறேன்;எனக்கு யார் மீதும் எந்தவித விசேஷித்த அபிமானமோ அல்லது வெறுப்போ இருந்தது கிடையாது; யாரையும் ஆஹா ஓஹோ என்று பாராட்டவும் எனக்கு அவசியமில்லை; இனி தங்கள் கோரிக்கை கருத்து  மற்றும் ஆலோசனைகளைக் குறித்து ...

//உங்கள் தளத்தில் எழுதுவதால் நீங்கள் கூறிய அனைத்து விடயங்களையும் ஏற்றுக் கொள்கிறேன் என பொருள் கொள்ளலாமா? அல்லது நான் எழுதுவதால் எல்லாவற்றையும் நீங்கள் ஏற்கிறீர்கள் என கொள்ளலாமா? //

உங்கள் தளம் என்ற வார்த்தையே தவறானது;இது நான் அமைத்துத் தந்த மேடையாக இருப்பதால் என்னுடைய மேடையாகி விடாது; இந்த புரிதல் இல்லாததாலேயே பல நண்பர்கள் இங்கே பங்கேற்கிறதில்லை; நான் ஒரு வலைப்பூவில் எழுதுவது மட்டுமே என்னுடையதாக இருக்கும்; தளத்தின் நோக்கங்களையே சிதைப்பது போன்ற கருத்துக்கள் வேண்டாமே; நான் ஆரோக்கிய உபதேசத்துக்காக நிற்பவன் என்று கருதினால் இங்கே எழுதுங்கள்; யாருடைய கருத்துக்கும் யாரும் பொறுப்பேற்க முடியாது;அதே நேரத்தில் நீங்கள் மற்ற துருபதேசத் தளங்களில் எழுதினால் நான் நிச்சயம் வருத்தப்படுவேன்;ஏனெனில் நானும் அங்கே எழுதி அவர்கள் தெளிவடையப் போராடிய அனுபவ‌ங்கள் எனக்கே தெரியும்; கலந்துரையாடல் இல்லாத பட்சத்தில் அது ஒரு நண்பர்கள் தளமாக இருப்பதில் அர்த்தமே இல்லை;

//புரிந்தவர்கள் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியடைவேன். எல்லோருடனுடம் அன்பாகவும், நட்பாகவும் இருக்க ஆசைப்படுகிறேன். //

தங்களுடைய எண்ணமானது உயர்ந்ததாக இருந்தாலும் நான் பலமுறை குறிப்பிட்டது போல, "பாலுக்கும் காவல் நின்று பூனைக்கும் தோழனாக" இருப்பது என்னால் ஆகாத காரியமாகும்;இதற்கு மாறாகப் பரிசுத்த வேதாகமத்திலிருந்து ஒரு ஆதாரத்தைக் கூட உங்களால் காட்டமுடியாது.

எல்லா ஊழியர்களையும் பொத்தாம்பொதுவில் எதிரிகள் விமர்சிக்கும்போது நான் அதை அவர்கள் வழியிலேயே எதிர்க்கிறேன்; நீங்களும் கூட இஸ்லாமியருடன் புரியும் விவாதங்களில் கோபம் காட்டுவதில்லையா? அவர்களுடன் ஏன் உங்களால் நட்பாகவும் அன்பாகவும் இருக்க முடியவில்லை? அதே கோபம் தான் இந்த மூன்று (தற்போதைக்கு..!) எதிரிகளிடமும் எனக்கு ஏற்பட்டது; கொலை செய்தவனுக்கு தண்டனை கொலையாவது என்றால் அந்த கொலையை செய்பவன் செய்வதும் கொலை தானே ? ஆனால் நடைமுறையில் அப்படியில்லை; ஒன்று அநீதியினால் விளைந்தது; மற்றது நீதியை நிறைவேற்றுவது அல்லவா? அதுபோலவே சத்திய விரோதிகளை நான் தாக்குவதும் என்று கொள்ளவும்; எப்படியெனில் அவர்கள் ஊழியர்களையும் உபதேசங்களையும் குறித்து கேள்வி எழுப்பவில்லை,அறிந்துக்கொள்ளும் ஆர்வத்தில் எதையோ எழுதவில்லை;மாறாக தீர்மானமாக
வும் எல்லாம் அறிந்தவர்கள் போலவும் மார்க்க அறிஞர்கள் போலவும் ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார்கள்; அவர்களுடைய சூட்சமங்களையறிந்த நான் பதறுகிறேன்.

நானும் ஊழியர்களையும் ஊழியங்களையும் விமர்சிக்கிறேன், இது சீர்திருத்தும் நோக்கமுடையதே தவிர சிதைக்கும் நோக்கமுடையதல்ல; அவர்களுடைய நோக்கமானது சபையை விட்டே ஜனங்களை சிதறடித்துவிடும்; அதற்கு ஆதாரமாகவே "இயேசு தொழத்தக்க தெய்வமா?"
என்றுஒரு கேள்வியை எழுப்பினேன்,அதற்கு அவர்கள் முன்வைத்த கருத்துக்களிலிருந்தே நீங்கள் அவர்களை அறிந்திருக்கலாமே, உடனே அவர்களை விட்டு விலகும்படி தானே வேதம் சொல்லுகிறது; நீங்கள் என்னடாவென்றால் அந்த அழகிய பாம்பின் நீளத்தையும் நளினத்தையும் வர்ணித்துக்கொண்டிருக்கிறீர்கள்; சீக்கிரமே நீங்களும் அவர்களைப் போலவே மாறிவிடுவீர்களோ என்று அஞ்சுகிறோம்; இனிப்பைத் தடவிக் கொண்டு இதமாகப் பேசி தந்திரமாக உள்ளே நுழைவது ஆதிமுதலாக சாத்தான் செய்யும் தந்திரம் தானே?

// நான் அவர்களின் பதிவுகளை அவதானித்து வருகிறேன். கர்த்தருக்கு சித்தமானால் விரைவி்ல் பதில் எழுதுவேன். (திரித்துவம் குறித்துதான்) ஆனால் அது இத்தளமாக இருக்காது.  அது எதுவாக இருக்க வேண்டும் என்பது இன்னும் எனக்கு குழப்பமாகவே இருக்கிறது. //

நண்பரே, உங்களுக்கு ஏன் வீண் சிரமம் என்று தான் நான் முன்பே அவர்களுடைய கட்டுரைகளை வாசித்துவிட்டு முக்கியமான சர்ச்சைக்குரிய கட்டுரைகளையும் எனது விவாதத்துடன் கூடிய தொடுப்புகளுடன் இங்கே போட்டு வைத்திருக்கிறேனே..?

உங்கள் குழப்பமெல்லாம் சீக்கிரமே தீர நான் பிரார்த்திக்கிறேன்; உங்களைப் போன்றவர்கள் இங்கே வந்து இணைந்தால் இது நம்முடைய தளமாக இருக்கும்; மற்றபடி உங்கள் கூற்றின் படியும் இன்ன பிற நண்பர்களின் கூற்றின்படியும் இது என்னுடைய தளமாகவே தொடர‌ட்டும்;

// உங்களுக்கு நான் மீண்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுவது என்னவென்றால் அனைவரையும் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் பாவித்து எழுதுங்கள் என்பதே. வீண் விதாண்டாவாதங்கள் தேவையற்றவை. //

சகோதரன் எனும் வார்த்தைக்கு சக உதிரன் அதாவது உடன் இரத்தப்பிறப்பு என்று அர்த்தமாம்; கிறித்துவை மறுதலிக்கும் சத்திய விரோதிகளை "கள்ள சகோதரர்" என்று வேண்டுமானால் சொல்லலாம், நண்பரே; அவர்கள் சூழ்ச்சியுடனும் உள்நோக்கத்துடனும் தந்திரமாகக் கேள்விகளை எழுப்பிவிட்டு விஷ வித்துக்களைத் தூவாமல் உடனே நேரடியாக விஷயத்துக்கு வந்தால் அவர்களை நண்பர்கள் என்று சொல்லலாம்; இவர்களுடன் கடந்த 20 வருடமாகப் போராடிக் கொண்டிருக்கிறேன்; அந்த அனுபவத்திலிருந்து சொல்லுகிறேன்.

உதாரணத்துக்கு, நீங்கள் மாதா வணக்கம் தவறு என்று சொல்லாதவரை நீங்கள் நண்பராக இருந்தாலும் சகோதரராக முடியாது; அதை நியாயப்படுத்தினால் நீங்களும் எதிரிதான்; நான் விலகியிருந்து உங்கள் மனமாற்றத்துக்காக விண்ணப்பிப்பது எனது கடமை என்பதை மறுப்பதற்கில்லை;ஆனாலும் உங்கள் எழுத்துக்கள் மற்றொரு சகோதரனுடைய விசுவாசத்துக்கு தடுக்கலாக இருக்குமானால் அதனை நிச்சயம் நான் கடுமையாக எதிர்ப்பேன்;எனக்கு உங்கள் நட்பைவிட சத்தியமே பிரதானமானது;சத்தியத்தால் நாம் கொள்ளாத நட்பு வெளி வேடமே;

காரியம் இப்படியாயிருக்க என்னுடைய பிரயாசத்தில் எதை வீண் விதண்டாவாதம் என்று சொல்லுகிறீர்களோ தெரியவில்லை; மீண்டும் வேண்டுகிறேன், எனது எழுத்துக்களைக் கணிப்பிட‌வோ பாராட்டவோ வேண்டாம்; அதன் நோக்கங்களை மட்டும் புரிந்துக்கொள்ளுங்கள்,அதன் கருத்துக்களுக்கு மாற்று கருத்தைச் சொல்லுங்கள்.

// ஒருவர் மனநோக எழுதுவதும் பேசுவதும் பாவமாகும். ஆகையால் இதுபோன்ற உங்கள் செயல்களில் எனக்கு உடன்பாடில்லை. இப்பாத்திரத்தில் எனக்கு பங்கும் கி்டையாது. வரும் வருடத்திலிருந்தாவது எனது ஆலோசனையை கடைபிடிக்கலாமே. //

மனந்திரும்புதல் உண்டாகும் வரை இடித்துரைப்பது நான் ஏற்றுக்கொண்ட பாத்திரமாகும்;எனது பாத்திரத்தில் உங்களுக்குப் பங்கு வேண்டாமே; நீங்கள் திராட்சைரசக் கோப்பையாகவே இருங்கள்; நான் மிளகுரசக் கோப்பையாகவே இருக்கிறேன்; அதை பாவமாக வேதம் தீர்க்குமானால் நான் அங்கே எனது கணக்கை சரிசெய்து கொள்ளுகிறேன்;நான் புதுவருட சென்டிமென்டுகளைக் கடந்தவனாக்கும்.

// நீங்கள் சிலவேளை அவ்வாறு எழுதுவதால் தளத்தில் ஆக்கம் எழுதும் எங்களுக்கும் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. புரிந்துகொண்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன். //

நண்பரே, நீங்கள் அவ்வாறு அச்சத்தினாலோ அல்லது சிலருடைய அறிவுரையினாலோ அதுபோலத் தயங்குவீர்களானால் என்னால் ஒன்றும் செய்யமுடியாது; உங்களைப் போலவே நானும் இங்கே ஒரு உறுப்பினராகவே என்னை பாவித்து எழுதுகிறேன்; என்ன ஒரு சின்ன வித்தியாசம், அங்கெல்லாம் என்னைத் தூக்கி எறிவார்கள்; இங்கே ஒரு சின்ன சலுகை அவ்வளவே;ஆனாலும் நான் இங்கே உறுப்பினராக இல்லாதவர்களுடைய கருத்தையும் கூட பதித்து அதன் தொடுப்பையும் கொடுத்து எனது பெருந்தன்மையைக் காட்டுகிறேன். எனது ஒவ்வொரு வரியையும் மீண்டும் மீண்டும் வாசித்து பிழை திருத்தியபிறகே பதிக்கிறேன்; பல வரிகளை மாற்றியும் நீக்கியும் இறுதி செய்த பிறகே பதிக்கிறேன்; அவரவருக்கு என்ன மரியாதை தரவேண்டுமோ அவற்றை எல்லாவித சமுதாய நாகரீகத்துடன் கொடுத்து வருகிறேன் என்பதை ஆண்டவர் அறிவார்.



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
கோவை பெரியன்ஸ் கத்தோலிக்கத்தில் இணைந்தனர்..!
Permalink  
 


சகோ. சில்சாம்
உங்களுக்கு நான் மீண்டும் சொல்லிக் கொள்ள ஆசைப்படுவது என்னவென்றால் அனைவரையும் சகோதரர்களாகவும் நண்பர்களாகவும் பாவித்து எழுதுங்கள் என்பதே. வீண் விதாண்டாவாதங்கள் தேவையற்றவை.
ஒருவர் மனநோக எழுதுவதும் பேசுவதும் பாவமாகும். ஆகையால் இதுபோன்ற உங்கள் செயல்களில் எனக்கு உடன்பாடில்லை. இப்பாத்திரத்தில் எனக்கு பங்கும் கி்டையாது. வரும் வருடத்திலிருந்தாவது எனது ஆலோசனையை கடைபிடிக்கலாமே.
அதற்காக பதில் எழுத வேண்டாம் என்று சொல்வில்லை. ஆனால் எழுதும்போது எனது எழுத்துக்கள் தேவனுக்கு உகந்தவையானவையா என ஒருமுறை சிந்தித்துவிட்டு எழுதுங்கள். நீங்கள் சிலவேளை அவ்வாறு எழுதுவதால் தளத்தில் ஆக்கம் எழுதும் எங்களுக்கும் பல சிரமங்கள் ஏற்படுகின்றன. புரிந்துகொண்டிருப்பீர்கள் என எண்ணுகிறேன்.
கர்த்தர் துணை நிற்பார்.





__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 379
Date:
RE: கோவை பெரியன்ஸ் கத்தோலிக்கத்தில் இணைந்தனர்..!
Permalink  
 


தலைப்பைப் பார்த்தவுடன் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. விடயத்தை படித்தவுடன் தாங்க முடியாத சிரிப்பு ஏற்பட்டது.

நான் ஒன்றை சொல்ல அவர்கள் வேறு ஒன்றை நினைத்து விடுவார்கள். நீங்க வேறு சில சந்தரப்பங்களில் அவர்களை திட்டுவீர்கள். என்னைக் குறித்ததான சில தப்பான எண்ணங்களை மாற்றிக் கொண்டால் மகிழ்ச்சி அடைவேன்.

உங்கள் தளத்தில் எழுதுவதால் நீங்கள் கூறிய அனைத்து விடயங்களையும் ஏற்றுக் கொள்கிறேன் என பொருள் கொள்ளலாமா? அல்லது நான் எழுதுவதால் எல்லாவற்றையும் நீங்கள் ஏற்கிறீர்கள் என கொள்ளலாமா? புரிந்தவர்கள் புரிந்து கொண்டால் மகிழ்ச்சியடைவேன். எல்லோருடனுடம் அன்பாகவும், நட்பாகவும் இருக்க ஆசைப்படுகிறேன்.

நான் அவர்களின் பதிவுகளை அவதானித்து வருகிறேன். கர்த்தருக்கு சித்தமானால் விரைவி்ல் பதில் எழுதுவேன். (திரித்துவம் குறித்துதான்) ஆனால் அது இத்தளமாக இருக்காது.  அது எதுவாக இருக்க வேண்டும் என்பது இன்னும் எனக்கு குழப்பமாகவே இருக்கிறது.


__________________
"மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல,
தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது".(சங்கீதம் 42:1)



Senior Member>>>ஒளி வீசுக..!

Status: Offline
Posts: 2805
Date:
கோவை பெரியன்ஸ் கத்தோலிக்கத்தில் இணைந்தனர்..!
Permalink  
 


இதோ வருடத்தின் கடைசி நாளில் வந்து நிற்கிறோம்,
இன்னும் ஒரு புதிய ஆண்டு!!


தளத்தின் உறுப்பினர்கள், விருந்தினராக வரும் அன்பர்கள், நண்பர்கள், பதிவுகளை தந்திருப்போர், தராம‌ல் வாசித்து உற்சாக‌ ப‌டுத்துவோர், எங்க‌ளை நேசிப்ப‌வ‌ர், எங்க‌ளை தூஷிப்ப‌வ‌ர் யாவ‌ருக்கும்

தேவ‌ வ‌ழிந‌ட‌த்துத‌லோடு, அவ‌ரின் ஆசீர்வாத‌த்தோடு
கோவை பேரெய‌ன்ஸ் குழுவின‌ர் சார்பில்
இனிய‌, ந‌ண்மைக‌ள் நிறைந்த‌, ஆசீர்வாத‌மான‌
புத்தாண்டு (2011) வாழ்த்துக்க‌ள்!!

A New Year ahead!!

Hi,

Members, Friends and Visitors, those who have posted and even those who have read the posts and encouraged us, those who love us and even those who hate us,

In His Mercies and His Blessings
We,
The Kovai Bereans Team
Wish each one of you and
your family members,

A FUN FILLED, BLESSED
HAPPY NEW YEAR 2011!!

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

கோவை பெரியன்ஸ் இந்த வருடம் முழுவதும் ஆண்டவரும் கர்த்தருமான‌ இரட்சகரை வேதம் முழுவதும் நிறைந்திருக்கும் வேத நாயகரை இகழ்ந்தும் மறுத்தும் தூஷித்தும் வந்தனர்;அவற்றுக்கெல்லாம் அவர்கள் காரணமாகச் சொன்னது இயேசு தொழத் தக்க தேவனல்ல, திரித்துவக் கொள்கையினாலேயே இந்த குழப்பம் விளைந்தது, அதனை ஸ்தாபித்தோர் கத்தோலிக்க மதக் குருக்களே, அவர்களே சூரிய தேவதையின் நாளில் கிறிஸ்மஸ் கொண்டாடக் கட்டளையிட்டனர், எனவே அந்த விழாக்களெல்லாம் பாபிலோனிய வேசி மார்க்கத்தின் விழாக்கள் என்று பறைசாற்றி வந்தனர்.

ஆனால் இதோ எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும், என புத்தாண்டு வாழ்த்து கூறுகின்றனர்;அவர்கள் நம்மை வாழ்த்தினதாக நாம் நினைக்கவும் இல்லை இயேசுவை மறுதலிக்கும் அவர்களுக்கு நாம் வாழ்த்து சொல்லப் போவதுமில்லை ஆனாலும் வீட்டு உத்தரத்திலிருந்து சத்தமிட்டுக் கொண்டிருந்த பல்லியானது நழுவி கழுநீர் பானையில் விழுந்தது போல கத்தோலிக்க ஸ்தாபனத்தால் அல்லது உரோமையர்களால் அறிவிக்கப்பட்ட புத்தாண்டு தினத்தை இவர்கள் ஏற்றுக்கொண்டு அதற்கு வாழ்த்து சொல்லுவதும், ஜெபித்து உருகுவதும் ஆச்சரியமாக இருக்கிறது..!



__________________

"And the
God of peace shall bruise Satan under your feet shortly.
The grace of our
Lord Jesus Christbe with you. Amen."
(Romans.16:20)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard